All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழரவனின் ‘நிலவழகி’ கதை திரி

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி- அத்தியாயம் - 9

நிலவழகியைக் காணவில்லை என்ற செய்தியை கேட்டதிலிருந்து வசந்தின் மனம் காட்டில் நிலை கொள்ளாது அவளை தேடிச் செல்ல அவனை வற்புறுத்தியது.

வசந்தும் நிலவழகியை தேடிச் செல்ல எத்தனித்தான். அதற்கு முன் அவளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவள் தாத்தாவைப் பார்க்க முடிவு செய்து பெங்களூரு நோக்கிச் சென்றான்.

மிகவும் கலங்கியிருந்த வசந்தின் சிந்தனைகள் வரிகளாய்…. உள்ளங்கவர்ந்த பெண்ணொருத்தி என் உடலைக் கவராமல் மறைந்து விடுவாளோ?
"என் விழியில் விழ வழி தேடி வந்து; என் கனவு தேவதையை உயிர்ப்பித்தவளே...
உன்னோடு சேர்ந்து வாழ ஆசையாய்
மனதோடு நான் கட்டிய கூட்டை வெறும் பிம்பமாக்கி சென்று விட்டதேன்...................."

"இந்தக் கேள்விகளை உன் கண்களைப் பார்த்துக் கேட்காமல் நான் சாக மாட்டேன். என் சகியே நீ இந்த பிரபஞ்சத்தில் எங்கு மறைந்திருந்தாலும், உன்னைத் தேடி உனக்காக நான் வருவேன்" என்று கலங்கிய தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான் வசந்த்.

இன்பம், துன்பம், கோபம், சாந்தம், வெறுப்பு, ஆசை, ஈர்ப்பு, நிராசை இவையெல்லாம் வெறும் மாயை. இவைகளைத் தாண்டி விட்டால் ஒருவன் வாழ்வின் உன்னத நிலையை அடைந்து விடலாம் என சில நூல்களில் படித்ததுண்டு.

ஒரு காலத்தில் மாயையைத் தாண்டி உன்னத நிலையை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணிய என் மனம் இன்று நிலவழகிக்காக வருந்துவது மாயையின் நிழல் என்று தெரிந்தும் அதை விடுத்துச் செல்ல (மனம்) மறுக்கின்றது.

நிலவழகி, உன்னை துறந்து சென்றால் தான் உன்னத நிலையை அடைய முடியுமென்றால், எனக்கு உன்னத நிலை வேண்டாம். உன் நிழல் வாழ்வு போதும்!

இத்தகைய மன ஓட்டங்களுடன் வானூர்தியின் ஓட்டமும் சேர்ந்து வசந்தை பெங்களூரு கொண்டு வந்து சேர்த்தது.
அங்கு ஆகாஷ் ஷர்மாவின் வீட்டை அடைந்த வசந்த் அவரிடம் சென்று தன் நிலையை சொன்னால் தனக்காக பரிதாபப்படுவாரா இல்லை தன்னை மனநிலை சரியில்லாதவன் என புறக்கணித்து விடுவாரோ, என்று எண்ணினான், எதுவாகயிருந்தாலும் அவரிடம் பேசிவிடுவது என்று முடிவு செய்து அழைப்பு மணியை அழுத்தினான்.

அழைப்பு மணி அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பதனை சிறிது நேரம் காத்திருந்ததில் தெரிந்து கொண்ட வசந்த் மீண்டும் அழைப்பு மணியை இயக்கினான். ஆளரவமற்ற அந்தப் பகுதியில் அழைப்பு மணியின் ஓசை வீட்டினுள் பட்டு எதிரொலித்தது. இம்முறையும் யாரும் வரவில்லை.

சரி, கதவை தட்டி அழைத்துப் பார்ப்போம் என்று நினைத்த வசந்த் கதவில் சென்று கை வைத்தான். கதவு திறந்திருந்தது.
உள்ளே செல்வதா வேண்டாமா என்று ஒரு விநாடி தயங்கிய வசந்த்தை அவன் நிலவழகியின் மேல் கொண்ட ஈர்ப்பு உள்ளிழுத்துச் சென்றது. உள்ளே சென்று பலமாக ஆகாஷ் சர்மா என்று அழைத்தான். உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆதலால் அவன் அழைத்துக் கொண்டே வீட்டினுள் சென்றான்.

அங்கு நிலவழகியின் புகைப்படத்தைப் பார்த்த அவனது உள்ளுணர்வு அவளை நிச்சயமாக விரைவில் காணப்போகிறாய் என்று அவனுக்கு உணர்த்தியது. அவன் வீடு முழுவதும் சென்று பார்த்து விட்டான். உள்ளே யாரும் இல்லாததைக் கண்டு மிகவும் ஏமாற்றமடைந்தான்.

மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அவனின் கவனத்தை அந்த வீட்டின் ஒரு ஓரத்தில் முற்றிலும் இருள் சூழ்ந்த ஒரு அறை ஈர்த்தது.

மனிதனுக்கு சில நேரங்களில் சில நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே இது இப்படித்தான் நடக்கும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை ஏற்படும். சில நேரங்களில் அது அப்படியே நடந்து விடுவதும் உண்டு. அந்த இருள் சூழ்ந்த அறைக்குள் சென்றால் மேலே விண்வெளியில் தொலைந்து போன நிலவழகியிடம் சென்று விடலாம் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை வசந்த்திற்கு வந்தது.
அந்த நினைப்பு தந்த பரவசத்தினால் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்த அறையை நோக்கி ஓடினான், வசந்த் வந்த வேகத்தில் அந்த அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் இடித்து தலைகீழாக விழுந்தான்.

விழுந்தவன் தரையில் விழவில்லை ஒரு குழியில் விழுந்து படியில் உருண்டான். மேலே விண்வெளிக்கு கொண்டு சேர்க்கும் என்று நினைத்த அவனை அந்த அறை குழியின் வழியாக அதல பாதாளத்திற்குக் கொண்டு சேர்த்தது.
எதிர்பாராமல் இப்படி விழுந்ததில் தடுமாறிப் போன வசந்த் சுதாரித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். சுற்றிலும் இருள் சூழ்ந்து எங்கு இருக்கிறோம் என்று அறிய முடியாமல் தவித்த வசந்த்தின் கண்களுக்கு இருள் பழகப் பழக அது ஒரு சுரங்கம் என்று தெரிந்தது.
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி- அத்தியாயம் - 10

அக்வா - 373 ல் ஜெஸி, நினைவுகள் மறு ஏற்றம் (MEMORY RELOAD) முறையின் அபாயங்களை தெரிந்திருந்தும் அதனைச் செயல்படுத்திப் பார்க்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

சிறிய வட்ட வடிவிலான வெள்ளி முலாம் பூசப்பட்ட மூன்று கண்ணாடியிழைகளை 3D வரைபடத்தில் காட்டியவாறு சரியாக அந்தந்த LOBE - களின் மேல் நேர்த்தியாக பொருத்தினாள். ஆனால் LIMBIC SYSTEM த்தின் மேல் பொருத்துவது மற்றும் மிகவும் கடினமாக இருந்தது. சிறிது நேர முயற்சிக்குப் பின் மிகவும் பிரயத்தனப்பட்டு தெளிவாகப் பொருத்தினாள்.

பொதுவாக ஒருவன் முக்கியமான நேரத்தில் முக்கியமில்லாத வேலையைச் செய்ய முற்பட்டால் அதைச் செய்வதற்கு முன் அவனுக்கு சற்று தயக்கம் இருக்கும். ஆனால் அதை அவன் பிரச்சனை எதுவும் இல்லாமல் முடித்து விட்டால் அதற்கு அடுத்து அந்த மாதிரி வேலைகளை செய்வதில் அவனுக்கு தயக்கம் இருக்காது.

அதே போல்தான் ஜெஸியும் தன் முதல் வேலையை எந்திரம் சரியாக செய்து விட்டதால் அடுத்த வேலையையும் அதனிடமே விடுத்து, பின் வரப்போகும் விபரீதம் அறியாமல் MR (MEMORY RELOAD) முறையை செயல்படுத்திப் பார்க்க முனைந்தாள்.

கண்ணாடி இழைகளைச் சரியாக பொருத்தி விட்ட ஜெஸி அதன் பின்னர் நுண்சில்லும், நுண்ணலை கதிர்வீச்சும் பொருத்தப்பட்டுள்ள தொடுதிரையில் செய்முறையைப் படித்தாள்.

முதலில் நுண்சில்லில் பதியப்பட்டிருக்கும் புரோகிராமை தொடுத்திரையில் இயக்க வேண்டும். இயக்கிய உடனே இதனுடன் பொருத்தப்பட்டுள்ள நுண்ணலை கதிர்வீச்சு பரவ ஆரம்பிக்கும். பின் தலையில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியிழையில் உள்ள ரிசீவரால் கதிர்வீச்சு உள்வாங்கப்பட்டு OCCIPITAL, PARIETAL மற்றும் LIMBIC SYSTEM - களில் மெலிதான அதிர்வைக் கொடுக்கும்.
பின்னர் புரோகிராம் செய்யப்பட்ட காட்சிகள் தொடுதிரையில் வரும் போது முறையே இடங்கள் உள்ளடக்கிய காட்சிகள் வந்தால் OCCIPITAL LOBE லும், உருவம் முகம் உள்ளடக்கிய காட்சிகள் வந்தால் PARIETAL LOBE லும், இதனைப் பற்றிய செய்திகள் மற்றும் உணர்ச்சிகள் LIMBIC SYSTEM மிலும் பதியப்படும்.

இதில் நூலளவு தவறு ஏற்பட்டாலும் ஒன்று நினைவுகள் குழம்பி பைத்தியமாகி விடுவோம் அல்லது புரோகிராம் செய்யப்பட்ட நினைவுகள் தவிர்த்து மற்ற நினைவுகளெல்லாம் அழிந்துவிடும். இதனைத் தெரிந்தும், தவறில்லாமல் செய்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜெஸி புரோகிராமை இயக்கினாள்..............!

புரோகிராமை இயக்கியவுடன் நுண்ணலை கதிர்வீச்சு தந்த முதல் அதிர்வு ஜெஸியை ஒரு அரை மயக்க நிலைக்குக் கொண்டு சென்றது.

அதன் பின் தொடுதிரையில் வந்த காட்சிகள் அவள் கண் வழியாக உள் சென்று நினைவுகளில் உயிர் பெற்று அவள் மனதில் படர்ந்தது.
இந்த பரிசோதனையில் ஜெஸியை தனித்து விடாமல் நாமும் அவளுள் சென்று அவளின் அழிந்த நினைவுகளை தெரிந்து கொள்வோம். அந்த நிகழ்வானது.........

ஜெஸி Aerospace இன்ஜினியரிங் முடித்து சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக வேலைக்குச் சேர்ந்து ஒரு வார கால விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த ஒரு நாளில் அவளின் தாத்தா சிறு வயது முதல் அவளுக்கு கற்றுத்தந்த கருந்துளை பற்றிய மொத்தப் பாடத்தையும் மையமாக வைத்து ஒரு செய்முறைத் தேர்வை ஜெஸிக்கு
வைத்தார்.

அந்த தேர்வில் ஜெஸியின் செயல்திறன் அவர் எதிர்பார்த்தது போல் இல்லை. அதனால் கோபத்தில் அவளை கடினமான சொற்களால் திட்டிவிட்டார். இதில் மனம் உடைந்து போன ஜெஸி தனக்கு தன் தாத்தாவின் கனவை நிறைவேற்றக்கூடிய தகுதி இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டாள்.

அவள் தாத்தா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் சமாதானமாகாத ஜெஸியை தேற்றுவதற்கு மனித வாசமில்லாத ஏதேனும் காட்டிற்குக் கூட்டிச் சென்று இயற்கையின் ஸ்பரிசத்தில் அமைதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று முடிவு செய்து அவளைப் பாபநாசம் அழைத்துச் சென்றார்.

அங்கு வானம் மலையின் மேல் தான் கொண்ட காதலை மழையாக மலையின் மீது தெளிக்க; அந்த மலை தன் மேல் விழுந்த துளிகளை எல்லாம் இணைத்து காட்டின் மீது தனக்கு உள்ள காதலை அருவியாக வெளிப்படுத்த; அந்த காடு தனக்கு கிடைத்த காதலால் புளங்காகிதமடைந்து இதமான தென்றலைப் படரவிட்டது.
இத்தகைய எழில்மிகு காட்சிகளும் மென்மையான தென்றலின் ஸ்பரிசமும் ஜெஸியின் உள்ளத்தைக் கவரவில்லை.
அவளது எண்ணம் எல்லாம் அவள் தாத்தா அவளிடம் வைத்திருக்கும் நம்பிக்கை பற்றியே இருந்தது. இதனையறிந்த அவள் தாத்தா அவளை சிறிது நேரம் தனிமையில் விட முடிவு செய்து, அவளை கொஞ்சம் சீக்கிரம் காருக்கு வந்து விடச் சொல்லி விட்டு அவர் காருக்குச் சென்று விட்டார்.

அவள் தாத்தா சென்ற பிறகு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்த ஜெஸி பின் சற்று நடக்கலாம் என்று முடிவு செய்து கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பாள், திடீரென்று அவளுக்கு துன்பத்தின் கரங்களில் சிக்கிக்கொண்டு தவித்த தன் மனது இன்பத்தை தேடி எங்கோ திக்கு தெரியாமல் பறப்பது போல் இருந்தது. சற்று நேரத்திற்கு முன் அவள் கண்டு கொள்ளாத காட்டிற்கே உரிய ரம்மியமான காட்சிகள் எல்லாம் தற்போது அவளுக்காகவே நடப்பது போல் தோன்றியது.
ஜெஸியின் திடீர் மனமாற்றத்திற்கான காரணம் அவள் சந்தித்த இரு கண்கள். அவள் பெண்மையின் அர்த்தத்தை சொன்ன; வாழ்வை முழுமையடைய செய்த; அவளின் மொத்த உணர்ச்சிகளின் தொகுப்பையும் உணர்ந்து பார்க்கச் செய்த அந்த கண்கள் வசந்த்தினுடையது.
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி-
அத்தியாயம் - 11

ஜெஸி நினைவுகள் மறு ஏற்றம் முறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது அவளுடன் சென்ற சக உதவி விஞ்ஞானி அவள் கனவிலும், நினைத்திராத, அவள் கனவை சுக்கு நூறாக்கும், செயல் ஒன்றைச் செய்து கொண்டிருந்தான்.

அணுக்களின் தொகுப்பை ஏவுவதற்கான ஏவுதளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவனின் சிந்தனையில் பலவிதமான எண்ணங்கள் வந்து போயின. புதிய அண்டத்தின் அடர்த்தியைப் பார்த்த அவனுக்கு அவர்கள் வந்த காரியம் கானல் நீராகத் தெரிந்தது.

அதனால் யாருக்கும் தெரியாமல் அனாதையாக இங்கு இறப்பதை விட மீண்டும் தன் அண்டத்திற்கு திரும்பினால் கிடைக்கும் புகழை எண்ணி தான் மட்டும் வீடு திரும்ப இருக்கும் சாத்தியக்கூறுகளை எல்லாம் ஆராய்ந்து ஒரு திட்டம் தீட்டினான்.

அக்வா - 373 கருந்துளையில் இருந்து வெளியேறிய வேகம் மனித சக்தியின் கற்பனைக்கும் எட்டாதது. அப்படிப்பட்ட வேகத்தை எதிர்கொண்டு சமாளித்து விண்கலத்தைச் செலுத்த முடியுமா என்பதில் சந்தேகமிருந்தாலும், கருந்துளையின் ஆற்றலைப் பற்றி முழுமையாக அறியாத உதவி விஞ்ஞானி அதை எதிர்கொள்ள மிகவும் சக்தி வாய்ந்த எரிபொருளைத் தயாரிக்க ஆயத்தமானான்.

எரிபொருளுக்குத் தேவையான சக்திகளை கணக்கிடுவதற்கு முன் அவன் தன் மாமா மதன்குமாரிடம், விடைபெறும் போது அவர் கூறியதை நினைவு கூர்ந்தான். "டேய் ஆதித்யா நீ அங்க போய் என்ன செய்ற என்பது முக்கியமில்லை. நீ திரும்பி வந்து பல்லண்டத்தைப் பற்றி சொன்னால் மட்டும் போதும்" என்று அவர் கூறியிருந்தார். அதை மனதில் கொண்டு வேலையைத் தொடங்கினான்.

அவர்கள் புதிய அண்டத்தை நோக்கி செலுத்துவதற்காக வைத்திருக்கும் ஏவுகணையின் எரிபொருள் உட்பட அனைத்து எரிபொருளையும், சேர்த்தால் கூட அது கருந்துளையில் விண்கலம் செலுத்துவதற்கு வேண்டிய மொத்த ஆற்றலில் 5% கூட போதாமல் இருந்தது.

இதனால் என்ன செய்வது என்பதறியாமல் குழப்பத்தில் இருந்த ஆதித்யாவுக்கு அந்த விபரீதமான எண்ணம் தோன்றியது. அது அவர்களிடம் உள்ள அணுவைக் கொண்டு அணுக்கரு பிளவின் மூலம் வெடிக்கச் செய்யும் அணுகுண்டுவை தயாரித்து, அதை வெடிக்கச் செய்து அந்த ஆற்றலை எரிபொருளாக மாற்றுவது.

சிறிது நேரம் மாற்று வழி இருக்கின்றதா என்று சிந்தித்த ஆதித்யா எதுவும் புலப்படாததால் அணுக்கரு வெடிப்பையே ஆற்றலுக்குப் பயன்படுத்த முடிவு செய்தான்.

இந்த திட்டத்தை ஜெஸியிடம் எப்படி சொல்வது? சொன்னால் இதை அவள் ஏற்றுக்கொள்வாளா? மறுத்தால் என்ன செய்வது என்று அவனுக்கவனே கேள்வி எழுப்பிக் கொண்ட ஆதித்யா, மறுத்தால் வற்புறுத்துவது என முடிவு செய்து, இவர்கள் புதிய அண்டத்தை நோக்கிச் செலுத்த வைத்திருக்கும்

ஏவுகணையுடன் விண்கலத்தைப் பொருத்துவது பற்றிய விளக்கப்படத்தை வரைந்து கொண்டிருந்தான். திடீரென்று தன் முடிவை மாற்றிக் கொண்ட ஆதித்யா ஜெஸியைக் கொன்று விடுவது என்று தீர்மானித்தான்.

இப்பொழுது அக்வா - 373 இல் தன் நினைவுகளின் காதலால் முழுவதும் ஆட்கொள்ளப்பட்டிருந்த ஜெஸியின் நினைவுகளைப் பின்தொடர்வோம்......

ஜெஸி உண்மையில் வசந்தின் கண்களைப் பார்த்த அந்த நொடியில் மிகவும் பிரம்மிப்படைந்திருந்தாள். சில நிமிடங்களுக்கு முன் தன் மனதை மிகவும் பாரமாக அழுத்திய சோகம், வந்த சுவடு தெரியாமல் எப்படி மறைந்தது. தான் பிறந்தது முதல் அனுபவித்திராத இத்தகைய புத்துணர்ச்சி எப்படி வந்தது. தன் அடிவயிற்றில் நெஞ்சாங்குழியில் முதன்முறையாக வலியா, இன்பமா என்று தெரியாத உணர்ச்சிகள் எவ்வாறு பிறந்தது.

இவ்வனைத்தையும் நிகழ்த்திய அந்த கண்களின் பார்வையில் என்ன மாயம் உள்ளது என வியப்பில் ஆழ்ந்த ஜெஸியின் பிரமிப்பு நீங்குவதற்குள் அவள் தாத்தா அவளைத் தேடி வந்து விட்டார்.

அங்கு ஜெஸியிடம் புத்துணர்ச்சி கலந்த மாற்றத்தை கண்ட அவர் வசந்தத்தையும், பார்த்துவிட்டார். அதனால் ஜெஸியின் மனமாற்றம் தனக்கு சந்தோஷத்தைத் தருமா? இல்லை வருத்தத்தைத் தருமா? என்ற குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்தார்.

அதற்கு அடுத்து அவள் தாத்தா சர்மா வைத்த தேர்வுகளிளெல்லாம் திறம்பட செயல்பட்ட ஜெஸியின் ஒரு சில நடவடிக்கைகள் அவரை வருத்தப்படவே செய்தது.

அதுநாள் வரையில் புதிய அண்டம் படைப்பதே தன் வாழ்க்கை என்று வாழ்ந்து வந்த ஜெஸி அந்த காட்டுப் பயணத்திற்குப் பின் புதிய அண்டம் படைக்கும் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு வந்த பின்பு தான், தன் வாழ்வு (காட்டில்) தொடங்கப் போவதாகக் கருதினாள். அவள் காட்டில் பார்த்த அந்த கண்களின் ஈர்ப்பைக் காணத் துடிக்கும் அவள் உணர்ச்சிகளை, வெகு நேரம் கண்ணாடி முன் நின்று தன் கண்களைப் பார்த்தே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
ஜெஸியின் இத்தகைய செயல்களால் சற்று வருத்தமடைந்த அவள் தாத்தா, அவளின் கவனச்சிதறலைத் தடுக்க மிகப்பெரிய அபாயகரமான செயல் ஒன்றைச் செய்யத் துணிந்தார்.
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி -
அத்தியாயம் - 12


சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பகத்தின் வரியில் (தமிழ் மொழியில் உள்ள ழ போல) மிகப் பெரிய புதிருக்கான விடை இருப்பதாக லீ -யின் உள்ளுணர்வு உணர்த்தியதால் அவள் ஆர்வமாக செஸ் விளையாடிய இடத்தை நோக்கி விரைந்தாள்.

அவள் நினைப்பது சரியா தவறா இல்லை சுத்த பைத்தியக்காரத்தனமா என்று சிந்திப்பதற்கெல்லாம் துளியும் இடம் தராத லீ -யின் உள்ளுணர்வு அவளை பம்பரமாக சுழற்றியது. லீ -க்கு தமிழ்மொழி பேசிப் பழக்கமிருந்தாலும் எழுத்துக்கள் ஒன்றிரண்டை விட அவ்வளவாக தெரியாது.

பகத் சொன்ன "ழ" என்ற எழுத்தை எங்கேயோ பார்த்ததாக சிந்தனையில் கொண்டு வர முயன்ற லீ -யின் மனத்திரையில் தமிழ் என்ற எழுத்தில் என்று தோன்றினாலும், திடீரென்று வேறொன்றும் குறுக்கிட்டது. அது அக்வா - 373 ல் இருந்து வந்த சமிஞ்கை பற்றி இவள் கண்டுபிடித்திருக்கும் குறியீடு.

அவர்கள் செஸ் விளையாடிய இடத்திற்கு வந்த லீ இணையதளத்தில் தமிழ் எழுத்துக்களைப் பதிவிறக்கம் செய்து அதை அந்தக் குறியீட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள்.

முதலில் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின்னர் பொறுமையாக உட்கார்ந்து ஒவ்வொரு எழுத்தையும் குறியீட்டுடன் தொடர்புபடுத்திப் பார்த்தாள். கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகிய லீ இறுதியில் மிகப்பெரிய பிரமிப்பிற்குள்ளானாள். தான் காண்பது கனவல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட லீ குறியீட்டை மாற்றி அமைத்தாள்.

இதற்கிடையே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள தொழிற்சாலைக்கு, சமீப காலத்திற்குள் அக்வா - 373 ல் உள்ள புரோகிராமிற்கும், கேமராவிற்கும், ஏதேனும் சிக்கல்கள் வந்திருக்கின்றதா என்று பார்க்கச் சென்ற பகத்துக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அக்வா 373 - ன் மாதிரி வரைபடத்தை எடுத்துக்கொண்டு அதைப்பற்றி விசாரிக்கச் சென்ற பகத்திற்கு அக்வா 373 விண்கலமே அங்கு காட்சியளித்தது. சற்று குழம்பிப்போன பகத் தொழிற்சாலையின் தலைவரிடம் போய் விசாரித்தான். அதில்
அக்வா - 373 புரோகிராமில் அடிக்கடி சிக்கல் ஏற்படுவதால் அதை நிறுத்திவிட்டு அதைவிட அதிக தொழில் நுட்பங்களை கொண்ட ஒரு விண்கலம் அதன் பெயரில் செலுத்தப்பட்டதாகவும், அது சோதனை ஓட்டம் என்பதால் அந்த விண்கலத்தின் புரோகிராம் அமைப்பதில் ஈடுபட்ட ஆதித்யா என்ற விஞ்ஞானி விண்கலத்தை இயக்க உதவுவதற்கு உடன் சென்று இருப்பதாகவும் தெரிந்து கொண்டான்.

இதில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்த பகத் பழைய அக்வா 373-ன் சிக்கல்களைப் பற்றி ஆராய்ந்தான். அந்த சிக்கல்கள் இயற்கையாக ஏற்பட வாய்ப்பிருந்தாலும் 85% செயற்கையாக ஏற்படுத்தத் தகுந்தவை என்பதை அறிந்தபோது பகத்திற்கு மேலும் சந்தேகம் வலுத்தது.

அக்வா 373 காணாமல் போன செயல் இன்று நடந்ததல்ல. அது என்றைக்கோ அடிக்கோடிட்டு இன்று நிறைவேற்றப்பட்டிருப்பதாக அவன் உள்ளுணர்வு உணர்த்தியது. இதில் தொடர்புடையவர்களாக அவன் சந்தேகிக்கும் தொழிற்சாலையின் தலைவர், விண்கல தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் - ஆதித்யா மற்றும் ஜெசி ஆகியோருடைய முழு விபரத்தையும் சேகரித்தான்.

லீ தனது அறையில் குறியீடுகளை தமிழ் எழுத்துக்களுடன் தொடர்புபடுத்திப் பார்த்தபோது அளப்பறிய பிரம்மி(மை)ப்பிற்குள்ளானாள். தான் கண்டுபிடித்தது மட்டும் சரி என்றால்
இந்த சமிஞ்கையை பரிமாற்றியவன் மிகப்பெரிய புத்திசாலியாக இருக்க வேண்டும் என எண்ணினாள்.

ஏற்கனவே அவள் கண்டுபிடித்துள்ள ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய குறியீடானது,




இதில் வரும் ஆங்கில எழுத்துக்களில் எந்த வார்த்தையும் கிடைக்கவில்லை. மற்றும் இந்த தொடர்பில்லாத அக்வா 373 - ன் வரைபட இணைப்பும் விளங்கவில்லை. ஆனால் லீ இந்த படத்தை தமிழ் எழுத்துக்களுடன் ஒப்பிட்டபோது அவளுக்குக் கிடைத்த குறியீடு,





இந்த எழுத்துக்களிலும் (ழ , ங , ஞ , ஐ, ஒ) தொடர்பில்லை என்றாலும் இருப்பதாக லீ கேள்விப்பட்டிருந்தாள்.

இந்த சமிஞ்கை சாத்தியமானதாகத் தோன்றியது. மேலும் அக்வா 373 -ல் சென்ற பெண் (ஜெஸி) தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்பது லீ -யின் கண்டுபிடிப்பின் சாத்தியக்கூறுகளை மேலும் வலுப்படுத்தியது.

எனவே லீ, ஜெஸியின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஜெஸிக்கு உதவக்கூடியவர்கள் என எல்லாவிதமான ஜெஸியைப் பற்றிய விவரங்களை சேகரித்து ஒரு தாளில் எழுதி வந்தாள்.

அக்வா - 373 காணாமல் போன நிகழ்வில் தொடர்புடையவர்களாக தான் சந்தேகிக்கும் நபர்களையெல்லாம் வரிசைப்படுத்திக் கொண்டே பகத் தொழிற்சாலையிலிருந்து லீ -யின் அறை நோக்கி நடந்தான்.

அக்வா - 373 விண்கலத்தை இயக்க உதவிக்கு சென்றிருக்கும் ஆதித்யாவின் அப்பா தான் தொழிற்சாலையின் தலைவர், செல்வபிரகாஷ். அது தெரிந்ததும் செல்வபிரகாஷ் மீது பகத்திற்கு சந்தேகம் வலித்தது. ஆனால் இதில் அவர் ஈடுபட்டிருந்தாலும் அவரிடம் இருந்து எந்த விஷயத்தையும் வாங்க முடியாது என்பதை அவருடன் பேசியதிலிருந்து பகத் தெரிந்து கொண்டான். அதனால் அவன் அடுத்ததாக ஜெஸியின் குடும்பத்தைப் பற்றி ஆராய்ந்தான்.

இணையதளத்தில் அது பற்றி பார்த்துக் கொண்டே நடந்த பகத் லீ -யின் அறைக்கு வந்து சேர்ந்தான். அங்கு லீ தீவிரமாக எதையோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பகத் அவளை இடையூறு செய்யாமல் தன் வேலையைத் தொடர்ந்தான்.

ஜெஸிக்கு நண்பர்கள், ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து உதவக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட லீ ஜெஸியின் குடும்பத்தைப் பற்றி விவரங்களைச் சேகரித்தாள். அதில் ஜெஸிக்கு அப்பா , அம்மா இல்லை என்றும், தாத்தாவின் அரவணைப்பில் தான் வாழ்கிறாள் என்றும், தெரிந்து கொண்டாள். அவள் தாத்தா இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் (ISRO) வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பது, லீக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனென்றால் சமீப காலத்திய நாட்டிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்த லீ க்கு ஜெஸியின் தாத்தாவைப் பற்றித் தெரியாமல் போயிருந்ததே அது.

அதனால் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள நினைத்த லீ ISRO -வின் தரவு தளத்திற்கு சென்று அவரைப் பற்றிய முழு விவரங்களையும் தேடினாள். அதில் அவர் தானாக ஓய்வு பெற்ற சர்ச்சையைப் பற்றித் தெரிந்து கொண்ட லீ, அந்த சர்ச்சைக்குக் காரணமான ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க முடிவு செய்தாள்.

ஜெஸியின் குடும்பத்தை பற்றி ஆராய்ந்த பகத் அவளுக்கு தாத்தா மட்டுமே இருப்பதை தெரிந்து கொண்டதால், அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல், விண்கலத் தயாரிப்பில் ஈடுபட்டவர்களைப் பற்றி ஆராய்ந்தான். புது விண்கலத் தயாரிப்பில் ஈடுபட்ட ஒவ்வொரு நபர்களைப் பற்றியும் தனித்தனியாக முழுமையாக தெரிந்து கொண்ட பகத் அவர்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை என்பதை அறிந்து கொண்டான்.

தான் எழுதிய குறிப்புகளை மறுபடியும் திருப்பி பார்த்து, அதில் விண்கலம் காணாமல் போனது தொடர்பாக தனக்கு ஏதேனும் தகவல் கிடைக்குமென்றால் அது இவரிடத்தில் தான் என்று ஒரு பெயரை வட்டமிட்ட பகத்தும், ஆய்வறிக்கையை முழுமையாகப் படித்த லீ -யும் ஒரே நேரத்தில் ஒரே குரலில் சொன்னார்கள்....


"ஆகாஷ் ஷர்மா!!!"
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி -
அத்தியாயம் - 13

வெறும் கதைகளால் ஆன உணரும் தன்மை பெற்ற எந்திரம் போல் வாழ்ந்து வந்த ஜெஸியிடம் பாபநாசம்க் காட்டுப் பயணம் ஒரு புதுவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது. அதை நினைவுகள் மறு ஏற்ற முறையில் லயித்திருக்கும் ஜெஸியின் நினைவுகள் வழியாகவே காண்போம்.

அடடே இதென்ன.... நான் காட்டிலிருந்து வந்தது முதல் என் சிந்தனை, செயல்கள் இரண்டும் எனக்கே விநோதமாக இருக்கிறதே! நான் பிறந்தது முதல் தவழ்ந்து தடுமாறி நடக்கக் கற்றேன்; கொஞ்சிக் குழறிப் பேசப் பயின்றேன்; பருவம் பெற பதின்மூன்று ஆண்டுகள் பொறுத்தேன்; இப்படி எல்லாமே படிப்படியாக நடந்து இருக்கையில் வர்ணிப்பதற்கு வார்த்தைகளற்ற எண்ணிக்கையில் அடங்காத அந்த உணர்ச்சிகள் மட்டும் அவன் விழி தந்த ஒரு நொடியில் எப்படிப் பெற்றேன்?? உண்மையில் வியக்கிறேன்..

எப்படி இவ்வளவு விரைவாகவும், மற்றும் எளிதாகவும், இந்த உணர்ச்சிகள் எனக்குள் சங்கமித்துக் கொண்டது? இந்த உணர்ச்சிகளின் தாக்கத்தை ஆழ் மனதிலும் ஏன் அடி வயிற்றிலும் கூடத் தெளிவாக உணர முடிகின்றதே!!!!

அவன் விழி எனக்கு தந்த இந்த உணர்ச்சிகளை என் விழி அவனுக்குத் தந்திருக்குமா? தெரியவில்லை, தராமல் விட்டிருந்தாலும் கவலையில்லை.. நான் அனுபவித்த இந்த இன்ப வேதனைகளை அவனுக்குக் கடிதத்தின் துணைகொண்டு தெரியப்படுத்துகிறேன்.

(மனிதனின் முதல் தகவல் பரிமாற்ற முறை கடிதம் ( ஓலை ) என்பதால் அதன் ஞாபகார்த்தமாக இந்த நூற்றாண்டு வரை கடிதப் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது.)

ஜெஸி தன் எண்ணங்களை எல்லாம் எழுத்துக்களாக உருமாற்றி ஓர் அழகிய கடிதம் விரைந்தாள். அந்த கடிதத்தின் முடிவில் "நான் என் வேலைகளை முடித்துவிட்டு உன்னுடன் வாழ உன்னைத் தேடி வருவேன். காத்திரு..." என்று எழுதிவிட்டு அவன் முகவரியைப் பற்றி தெரிந்து கொள்ள அவள் தாத்தாவின் அறையை நோக்கி நடந்தாள்.

அறையில் அவள் தாத்தாவைக் காணவில்லை. அதனால் சிறிது நேரம் கழித்து வரலாம் என்று திரும்பி செல்ல முற்பட்ட ஜெஸியின் கவனத்தை அந்த அறையில் உள்ள மேசை ஈர்த்தது. எப்பொழுதும் நேர்த்தியாக ஒதுங்க வைக்கப்பட்டிருக்கும் அந்த மேசையில் இன்று புத்தகங்கள் சிதறிக் கிடந்தது. அந்த மேசையில் ஒரு பொருள் இடம் மாறி இருந்தாலும் அவ்வளவு கோபப்படும் தாத்தா இன்று ஏன் இப்படிப் போட்டு வைத்திருக்கிறார் என்று புரியாமல் மேசையை அடுக்க முற்பட்டாள்.

அந்த மேசையின் மீதிருந்த புத்தகத்தை எல்லாம் பார்த்த ஜெஸிக்கு உள்ளுக்குள் லேசாக உறுத்தியது. ஏனென்றால் எல்லாப் புத்தகங்களும் நினைவுகள் பற்றியது. அனைத்து புத்தகங்களையும் ஆச்சரியத்தோடு பார்த்து வந்த ஜெஸி மேசையின் விளிம்பில் குறிப்புகள் அடங்கிய கோப்பு (FILE) ஒன்றிருப்பதைப் பார்த்தாள். அதை திறந்து பார்த்த ஜெஸி ஒருவித பயத்தை அடைந்தாள். அதில் நினைவுகளை அழித்தல் (Memory Mutilation) என்று எழுதியிருந்தது.

மேலும் அதில் ஜெஸியின் பாபநாசக் காட்டுப் பயணத்திலிருந்து இன்றுவரை அவளின் செயல்களும் அது சம்பந்தப்பட்டிருக்கும் லோப்களும், (Brain Lobes) எழுதி அதை அழிக்கும் முறையும், விவரிக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த ஜெஸியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு நின்றது.

அந்த குறிப்புகளை அங்கேயே வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்ற ஜெஸி மிகவும் தேம்பித் தேம்பி அழுதாள். தான் தாயாகவும், தந்தையாகவும், ஏன் கடவுளாகவும், பாவித்த தன்னுடைய தாத்தா தன் உணர்ச்சிகளை மதிக்காமல் இவ்வளவு சுயநலமாக செயல்படுவார் என்று கனவிலும் நினைக்காத ஜெஸி மிகவும் மனமுடைந்து போனாள்.

ஒரு சிலந்தி வலையை விரித்து தன் இரைக்காக காத்துக் கொண்டிருந்தது. தன் கண்களில் நீர் வற்றியது கூட தெரியாமல் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், ஜெஸி. சுமார் 2 மணி நேரம் சிலை போல் அப்படியே உட்கார்ந்திருந்த அவள் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவள் போல் தீர்மானமாய் எழுந்து செயல்படத் தொடங்கினாள்.

விதியின் பெயரில் பாரத்தை போட்டு தான் எழுதிய கடிதம் எப்படியும் தன் மனம் கவர்ந்தவனை சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில், முகவரி முழுவதும் தெரியாததால், வனத்துறை அதிகாரி, பாபநாசம், திருநெல்வேலி என்ற முகவரிக்குக் கடிதத்தை அனுப்பினாள்.

ஜெஸி நினைவுகள் அழித்தல் (MM) என்ற முறை பற்றி கேள்விப்பட்டிருந்தாள். கூடவே அது முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும், பாதுகாப்பற்றது என்பதையும் தெரிந்து வைத்திருந்தாள். மேலும் இதன் தொடர்ச்சியாக நினைவுகள் மறு ஏற்றம் முறையும் கண்டுபிடிக்கப்பட இருப்பதாக அறிந்து கொண்ட ஜெஸி இவைகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிவு செய்தாள்.

அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவளைக் காண அவள் தாத்தா வந்தார்.
 
  • Like
Reactions: Ums

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி - அத்தியாயம் - 14

ஜெஸியை காண அவள் அறைக்குச் சென்ற ஆகாஷ் சர்மா அங்கு
அவளின் முக பாவனைகளை வைத்து அவளிடம், "என்ன ஜெஸி? ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கிறாய் போல" என்று கேட்டார்.

திடீரென்று அவர் வரவை எதிர்பாராத ஜெஸி சுதாரித்துக் கொண்டு, "வேறொன்றுமில்லை தாத்தா, நமது திட்டம் எப்பொழுது செயல்படும் என்று தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்" என்றாள்.

"அதுக்கென்ன ஜெஸி சீக்கிரமே நமது திட்டம் அரங்கேறப் போகிறது. அரங்கேற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்பவன் நான், அரங்கேற்றுபவள் நீ....... ஆம் வெகு விரைவில் நம் திட்டம் உயிர் பெறப்போகிறது" என்று கூறிய ஆகாஷ் சர்மாவின் கண்களில் திட்டத்தை நிறைவேற்றும் ஒரு மிதமிஞ்சிய வெறி தெரிந்தது.

"ஜெஸி...நமது திட்டம் சம்பந்தமாக உனக்கு இரண்டு நாட்களில் ஒரு பரிசோதனை உள்ளது. அதற்கு தயாராக இரு. அது விஷயமாக நான் இன்று இரவு வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது. அதை சொல்வதற்காகத் தான் வந்தேன். நீ கவனமாக இருந்து கொள்" என்று ஆகாஷ் சர்மா ஜெஸியிடம் கூறிவிட்டுச் சென்றார்.

காட்டில் பார்த்த அந்த ஒரு ஜோடி கண்களின் ஈர்ப்பு, அந்த ஈர்ப்பிலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கும் மனது, அந்த மனதை ரணமாக்கும் ஆகாஷ் சர்மாவின் சுயநலம், இத்தகைய உள்ளக் குமுறல்களால் உயிரற்ற சிலை போல் வெகு நேர உட்கார்ந்திருந்த ஜெஸி ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் எழுந்தாள்.

அன்றிறவு ஆகாஷ் சர்மா வெளியில் சென்றதும் ஜெஸி, தனக்கு செய்யவிருக்கும் பரிசோதனையைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவரின் அறைக்குச் சென்றாள். அங்கு நினைவுகள் அழித்தல் முறையைப் பற்றிய முழு விவரமும் அதனை கணினி வாயிலாக செயல்படுத்துவதற்கான புரோகிராமும் இருந்தது. அதில் தனக்குத் தேவையான விவரங்களை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்ட ஜெஸி தன் அறைக்குச் சென்றாள்.

தன் மனதில் உள்ள காயங்களை எல்லாம் மறந்து மனதை ஒருநிலைப்படுத்திய ஜெஸி தன் தாத்தா பின்னிய வலையில் எப்படி சிக்காமல் தப்பிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தாள். நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு ஜெஸி இதிலிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது என்று தீர்மானித்தாள். ஒன்று தாத்தாவின் புரோகிராமை அவருக்குத் தெரியாமல் மாற்றி அமைப்பது, மற்றொன்று அவரிடம் இதைப் பண்ண வேண்டாம் என்று கெஞ்சுவது.

ஆகாஷ் ஷர்மா தன் குறிக்கோளில்
உறுதியாக இருப்பவர். ஆதலால் அவரிடம் கெஞ்சி ஒரு பயனும் இல்லை. சரி, புரோகிராமிங்கில் ஏதாவது பிழை ஏற்படுத்தலாம் என்றால் தன்னைவிட தன் தாத்தா அதிகம் தெரிந்தவர் எளிதில் சரி பண்ணி விடுவார். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற ஜெஸி இறுதியாக புரோகிராமை மாற்றி அமைப்பதையே முயன்று பார்க்கத் தீர்மானித்தாள்.

எப்படியாவது புரோகிராமில் பிழை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் தன் தாத்தாவின் அறைக்குச் சென்ற ஜெஸி அங்குள்ள கணினியின் தொடுதிரையை இயக்கி அதில் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தப் போகும் செயலியை (Application)
ஆராய்ந்தாள். மிகவும் குறுகிய காலத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட செயலியைக் கண்டு தன் தாத்தாவின் திறமையை மிகவும் வியந்தாள்.
இந்தப் பயன்பாட்டை செயலிழக்கச் செய்ய ஏதேனும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்பதைத் தெரிந்து கொள்ள அதன் மூலக்குறியீடுகளை (Source Code) ஆராய்ந்தாள்.

மூலக்குறியீடுகளை முழுமையாக ஆராய்ந்த ஜெஸி ஒருவித பிரமிப்பு கலந்த அதிர்ச்சிக்குள்ளானாள். ஏனென்றால் குறியீடுகள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வரும் எந்த குறியீடுகளாலும் எழுதப்படவில்லை. VAL (Variable Assembly Language ) மொழியை அடிப்படையாகக் கொண்டு சொந்தமாக ஒரு குறியீடு தொகுப்புகளை உருவாக்கி அந்தப் பயன்பாட்டை (Application) அவள் தாத்தா வடிவமைத்திருந்தார்.

VAL என்பது முதன்முதலாக மனிதன் எந்திரத்தை இயக்க எழுதப்பட்ட மொழி, 20 -ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது பார்ப்பதற்கு எளிமையாக தெரிந்தாலும், மிகவும் சிக்கல்கள் நிறைந்தது. இதில் எவ்வளவு பெரிய தவறை ஏற்படுத்தினாலும் தாத்தா எளிதில் சரி பண்ணி விடுவார் என்ற எண்ணிய ஜெஸி புரோகிராமை மாற்றி அமைக்கும் யோசனையைக் கைவிட்டாள்.

மிக நீண்ட நேர குழப்பமான யோசனைக்குப்பின் முடிவில் ஜெஸிக்கு ஒரு தெளிவான உண்மை புலனாயிற்று. அது, அவளை பரிசோதனைக்கு உட்படுத்தவிருக்கும் கருவியிலும் சரி, அதன் புரோகிராமிலும் சரி, அதில் எவ்வளவு பெரிய குழப்பத்தை உண்டாக்கினாலும் அதை சரி செய்வது தன் தாத்தாவிற்கு பெரிய காரியமல்ல.

அது மட்டும் இல்லாமல் இவை அவரின் திட்டத்தை நான் தெரிந்து கொண்டு விட்டேனோ என்ற சந்தேகத்தை அவருக்கு ஏற்படுத்தி விடும். அது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்பதால் ஜெஸி அனைத்து சிந்தனைகளையும், மறந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தாள்.
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி -
அத்தியாயம் - 15

பொதுவாக எந்த ஒரு பிரச்சனை அல்லது காரியத்தை முன்னிறுத்தி மனதை ஒரு நிலைப்படுத்தினால் மனது அதன் மூளை சேகரித்து வைத்துள்ள அனைத்து தகவல்களையும், ஆராய்ந்து அந்த பிரச்சனைக்குரிய தீர்வுக்கான சாத்தியக்கூறுகளை தெளிவுப்படுத்தும்.

ஜெஸியின் மனதும் அவளது பிரச்சனைக்குரிய தீர்வுகளை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று அவள் மூளையை சல்லடை போட்டு தேடியது. ஆனாலும் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இவ்வாறு ஜெஸி இந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் அவளின் ஆழ்மனதில் உதித்த ஒரு யோசனை, அதன் பால் ஜெஸியின் கவனத்தை ஈர்க்க போராடிக் கொண்டிருந்தது. தன் போராட்டத்தில் சிறிது சிறிதாக வெற்றி பெற்றுக் கொண்டிருந்த அந்த யோசனை இன்றைய அறிவியலின் அசாத்திய வளர்ச்சிக்கு அடிக்கோடிட்ட விஞ்ஞானிகளுள் ஒருவரான சர் ஐசக் நியூட்டனால் 16 -ஆம் நூற்றாண்டிலேயே வரையறுக்கப்பட்ட "எந்த ஒரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு" என்பதே ஆகும்.

தன் தாத்தாவின் சூழ்ச்சியிலிருந்து விடுபட எந்த ஒரு வழியும் கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த ஜெஸிக்கு இந்த யோசனை சற்று ஆறுதலாக இருந்தது. எனவே சற்றும் தாமதிக்காமல் இந்த யோசனைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தாள்.

அந்த வழிமுறைகள் அவள் நினைத்தவாறு அவ்வளவு எளிதாக இல்லை. அதில் அவளுக்குத் தெரியாத விஷயங்கள் பல இருந்தன. பல அபாயகரமான செயல்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

தன் தாத்தாவைப் போன்ற அனுபவம் வாய்ந்த அறிவாளியை வெல்ல வேண்டும் என்றால் பல கடினமான சவால்களை சமாளித்து பல இன்னல்களைக் கடந்தால்தான் அது சாத்தியமாகும் என்று நினைப்பில் ஜெஸி எத்தகைய அபாயகரமான செயல்களையும் செய்யத் துணிந்தாள்.

ஆகாஷ் சர்மா புதிதாக கண்டுபிடித்துள்ள நினைவுகள் அழித்தல், முறைக்கு நேர் எதிரானது என்றால் அது நினைவுகளை மறு உருவாக்கம் செய்வது, ஆதலால் ஜெஸி தன் புதிய திட்டத்திற்கு நினைவுகள் மறு ஏற்றம் என்று பெயரிட்டு வேலையைத் தொடங்கினாள்.

பொதுவாக ஒருவருக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டும் என்றால் வாய்மொழியாக சொல்வதை விட வரைந்து காட்சிப்படுத்திச் சொன்னால் இன்னும் எளிதாக இருக்கும். தன் தாத்தா நினைவுகள் அழித்தல் முறையில் மூளையின் நினைவாற்றலுக்கே சென்று நினைவுகளை அழித்து விடுவதால் மூளையின் நினைவாற்றலில் அழிந்த நினைவுகளைக் காட்சிப்படுத்த வேண்டும். தன் திட்டத்தின் முதற்கட்டமாக ஜெஸி மேற்கூறிய செயலை செய்துவிடத் தீர்மானித்தாள்.

அவள் பாபநாசக் காட்டில் இருந்து வந்தது (ஜூன் - 2) முதல் அன்று வரை அவள் மறக்கக்கூடாது என்று நினைக்கும் நினைவுகளை மட்டும் காட்சிகளாக வரைந்து அதை 5-D முறையில் மிகவும் தத்ரூபமாக கணினியிலும் வரைந்தாள். அதை ஒரு நுண் சில்லில் பதித்து வைத்து விட்டு அதை இயக்கத் தேவையான புரோகிராமை வடிவமைப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினாள்.

முதலில் மூளையையும், அதன் Lobes -ஐ பற்றியும் தெரிந்து கொண்டால் வேலை எளிதாகி விடும் என்று எண்ணிய ஜெஸி அதனைப் பற்றி இணையத்தில் படிக்கத் தொடங்கினாள். Lobes -ன் வகைகளிலிருந்து அதன் தனித்தனி பயன்பாடு மற்றும் பல சிறு நுணுக்கங்களையும் படித்து அறிந்த ஜெஸி அதனைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் முறையையும், அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் தெரிந்து கொண்டாள்.

தன் திட்டத்தைச் செயல்படுத்த Lobes -ஐ பற்றி மற்றும் தெரிந்து கொண்டால் போதும் என்று எண்ணி இருந்த ஜெஸிக்கு அதற்கு பின்னர் தான் தெரிந்தது அவள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஏராளம் என்று. அவை உயர் அதிர்வெண் நுண்ணலை கதிர்வீச்சு, அதனை அளவிடும் கருவி, கண்ணாடியிழை என்று நீண்டு கொண்டே சென்றது.

இவை அனைத்தையும் படிப்பது ஜெஸி நினைத்த மாதிரி அவ்வளவு எளிதாக இல்லை. மிகவும் கடினமாக இருந்தது. சில நேரங்களில் இந்த திட்டத்தை செயல்தபடுத்துவது சாத்தியமாகுமா என்ற சந்தேகம் தோன்றியது. இப்படி ஜெஸி மனம் தளரும் நேரத்தில் எல்லாம் அவளை உற்சாகப்படுத்தியது வசந்தத்தின் அந்த இரு கண்கள்.

ஜெஸி தன் திட்டத்திற்கு தேவையான முழுத் தகவல்களையும் ஒவ்வொன்றாக இணையத்திலிருந்து குறிப்பெடுத்துக் கொண்டாள். இணையத்தில் எல்லாவற்றைப் பற்றியும் படித்து அதில் தேவையானவற்றை மட்டும் நேர்த்தியாகவும் விரைவாகவும் குறிப்பெடுத்தாள்.

அவள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த நுண்சில்லுவில் தற்போது வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பதிந்து வைத்தாள். இணையத்தில் படித்து குறிப்பு எழுதி வைத்திருந்தவற்றில் இருந்து திட்டத்திற்கு தேவையான பொருள்களை சேகரித்தாள். இவைகளைக் கொண்டு மிகவும் திறம்பட மிக மிக தெளிவாக நினைவுகள் மறு ஏற்றம் முறைக்கு உயிர் கொடுத்தாள்.............

ஜெஸி அக்வா 373-ல் இவ்வாறான நினைவுகளில் மூழ்கி இருந்தபோது அவளின் உதவி விஞ்ஞானி ஆதித்யா அவளைக் கொன்று அவளிடமுள்ள ஆக்ஸிஜன் கேப்ஸ்யூலைக் கைப்பற்றும் எண்ணத்தோடு விண்கலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தான். தன்னைப் பார்த்து கோபமுற்று தன்னிடம் சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்து வந்த ஆதித்யாவுக்கு ஜெஸி ஏதோ ஒரு சாதனத்தைப் பொருத்தி மயக்கமாக கிடந்தது ஆச்சரியமாக இருந்தது.

அரை நிமிட நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா அவளை கொன்று நேரத்தை விரயமாக்குவதை விட ஆக்ஸிஜன் கேப்ஸ்யூலையும், அணுக்களின் தொகுப்புகள் அடங்கியுள்ள கலத்தையும் எடுத்துச் சென்று விட்டால் அவளே இறந்து விடுவாள் என்று எண்ணி காரியத்தில்
இறங்கினான்.
 
Top