All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவிராமின் "கையில் நான் ஏந்தும் காதல் நீதானே !" - கதை திரி

Status
Not open for further replies.

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே🤗



"மறப்பதில்லை நெஞ்சே ! நெஞ்சே ! " அடுத்த வாரத்திற்குள் முடிவு பெற உள்ளது மக்களே !

அதன் தொடர் நாவல்
"நெஞ்சில் இன்னும் நீயடி "(நிலாவின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வு) ...
தற்பொழுது புது நாவல் எழுதிக் கொண்டு இருப்பதால் இதனைப் பின்னர் தொடர்கிறேன். மன்னிக்கவும்.

தற்பொழுது நான் எழுதிக் கொண்டு இருக்கும் புது நாவல் பெயர்...

"கையில் நான் ஏந்தும் காதல் நீதானே "

17091


திருமண பந்தம் ♥

ஹீரோ - அமுதன்
ஹீரோயின் - ராஜஸ்ரீ

கதை பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் மக்களே 🤗


தங்களின் ஆதரவினை என்றும் எதிர்பார்க்கும் உங்களின் நிவி😘
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17093

Welcome to all💞💞💞💞😘😘😘😘😘😘♥♥♥♥♥


அத்தியாயம் 1


பொன்மாலைப் பொழுது கரைந்து இருள் லேசாக படரும் நேரம்... மிகப் பெரிய அரண்மனை போன்ற வீடு. வீட்டில் விருந்தினர் அனைவரும் பங்கேற்க..



தன் நிறத்திற்கு எடுப்பான அடர் சிவப்பு நிற சோலி அணிந்து வெள்ளை நிற அணிகலனில் முகம் முழுவதும் ஆனந்தத்துடன் பால்நிற மேனியவள் தேவதையாய் திகழ்ந்தாள் ராஜி எனும் ராஜஸ்ரீ.



வெள்ளை வேஸ்டி சட்டையில் கனக்கச்சிதமான உடலமைப்புடன் அடர்ந்த மீசையுடன் கூர்மையான விழிகளுடன் ஹீரோ என்று கூறுவதற்கு அடையாளமாய் திகழும் அமுதன் அவள் அருகில் நின்று இருந்தான்.



அமுதன் தன் முன் அழகின் மொத்த உருவமாய் திகழும் ராஜியின் பொன்னான பஞ்சு போன்ற கரங்களினைப் பற்றி விரல்களில் நிச்சய மோதிரம் அணிவிக்க சுற்றிலும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராஜியும் மோதிரம் அணிவிக்க முயற்சிக்கும் முன் அவன் முகத்தினை நிமிர்ந்து பார்த்தாள். மருந்திற்கும் அவன் முகத்தில் சிரிப்பில்லை. மனம் உருத்தினாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு மனம் முழுவதும் தன் அண்ணன் மேலான நம்பிக்கையுடன் அமுதனுக்கு அணிவித்தாள்.



அடுத்த நொடி அவன் வேறு புறம் திரும்பிக் கொண்டான். அவளும் எதுவும் நடக்காதது போன்று தோழிகளுடன் பேசத் தொடங்கினாள். ரம்யா அவளை சீண்ட... வெட்கினாள். இதெல்லாம் பார்த்த வேதா(வேதராஜ்) தங்கையின் வாழ்க்கை நல்லவன் கையில் சேர்க்கப்படும் என்பதில் நிம்மதி அடைந்தான்.



உடன்பிறப்புகள் அனைவரும் போட்டோ எடுக்க அழைக்கப்பட அமுதன் அவர்களிடம் இருந்து தள்ளிச் சென்று அவன் தம்பியை அழைத்து வர.. வேதா பொறுமை ஆக இருந்தான்.



அமுதன் ஹாலில் இருந்த அனைவரையும் அழைத்து போட்டோ எடுக்க... கடைசியில் வேறு யாரும் இல்லை என்ற நிலையில் வேதா அவன் தம்பி யுவா(யுவராஜ்), ரம்யா மற்றும் சசிகலா அனைவரும் போட்டோ எடுத்தனர்.



அமுதன் வேதாவை அர்த்தமாக பார்க்க.. வேதா மெல்லிதாக புன்னகைத்து தன் தங்கை ராஜியை அணைத்துக் கொண்டான். அமுதன் எந்தவித உணர்வும் முகத்தில் காட்டாமல் இருக்க யுவா பலமான யோசனையில் இருந்தான்.



இங்கு நடப்பது அனைத்தும் ஒருவித ஒட்டுதல் இல்லாமல் நடப்பது போன்று உணர்ந்தான் பரணி(பரணிதரன்).
மோதிரம் மாட்டியதும் சசிகலா மற்றும் பரணிதரன் இருவரும் குடும்ப உறுப்பினர்களின் கட்டாயத்தினால் பாடத் தொடங்கினர். ரம்யா மற்றும் சசிகலா இருவரும் ராஜியின் உயிர் தோழிகள். சசி நன்றாக பாடுவாள். அதே போன்று பரணியும் பாடுவதில் சிறந்தவன். பாடல் ரம்யா தேர்ந்தெடுக்க இருவரும் தொடங்கினர்.



பரணி: தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா



சசி: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
சசி : உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
பரணி: நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
சசி : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
பரணி : இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே



ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ
(தானா....)



பரணி : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
சசி : நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
பரணி : வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
சசி: வாழ் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே
பரணி : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்.
சசி : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்



பரணி : பூந்தளிரே......எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
சசி : என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது மீளுதே
பரணி: யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
சசி : ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பரணி : பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
சசி : காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
சசி & பரணி : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ ....



பரணி : (தானா....)



சசி : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
பரணி : நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
சசி : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
பரணி &சசி : என்ன புதுமை...
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
பரணி : (தானா....)



சசி மற்றும் பரணி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். விழிகளில் மொழி பரிமாறிக் கொண்டனர்.
குழுமியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து…



அனைவரும் நிச்சயம் முடிந்ததும் வீடு திரும்ப... அமுதன் மற்றும் வேதா குடும்பம் மட்டுமே இருந்தது.



அமுதன் தான் மூத்தவன். அவன் தம்பி பரணிதரன் மற்றும் தங்கை சுமி. தந்தை தாய் இருவரும் ரயிலில் பயணம் செய்யும்பொழுது விபத்தில் உயிர் விட்டனர். அன்றிலிருந்து தாயும் தந்தையுமாய் அமுதன் தான் குடும்பப் பொறுப்பினை ஏற்று மிக நல்ல முறையில் வழிநடத்தி வருகின்றான். அவனுக்கு இருக்கும் ஒரே கவலை தன் தங்கை தான். சுமி கோமா நிலையில் இருக்க... தனக்கு கல்யாணம் அவசியமா என யோசித்தும் கண்டிப்பாக இந்தத் திருமணம் அவசியம் என்று ஒரு முடிவுக்கு வந்து இன்று நிச்சயம் செய்துள்ளான். ஷேர் மார்கெட்டில் ஆன்லைன் ட்ரேடிங் மூலம் இவன் உச்சிக்கு அளவே இல்லை. அனைத்து உயர் வகுப்பினர்களும் வியக்கும் வகையில் உச்சத்தில் இருந்தான். என்றும் அவனுக்கு லாஸ் என்று இதுவரை எதிலும் இல்லை. ஆனால் தங்கை வாழ்க்கையில் வெற்றி கிடைக்குமா..?



வேதராஜ் தங்கை ராஜஸ்ரீ மற்றும் தம்பி யுவராஜ். இவர்களின் பெற்றோர் அதே ரயிலில் பயணித்து உயிரை நீத்தவர்கள். அமுதன் எப்படியோ அதே போன்று தான் வேதாவும். ஆனால் வேதா தந்தையின் நகைக்கடையினைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான். இவனும் பெரிய அளவில் கடைகளை விரிவுப்படுத்தி அனைவரிடமும் பிரபலமானவன். 27 வயதில் உச்சம் தொட்டவர்கள் என்ற அளவில் யாருக்கும் அமுதன் மற்றும் வேதாவிடம் ஒரு மறியாதை உண்டு.



இரு குடும்பத்தினருக்கும் லாயர் சங்கர் தேவன். இவர் முயற்சியில் தான் இன்று நிச்சயம் நடைபெறுகின்றது. இருவரிடமும் விருப்பம் கேட்க... அமுதன் சரி என்க.. வேதா மட்டும் தங்கையிடம் கேட்க வேண்டும் என.. அவள் தன் அண்ணன் மேல் இருக்கும் நம்பிக்கையில் சம்மதம் எனக் கூற.. திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமுதன் மற்றும் ராஜி இன்றுவரை இருவரும் பேசிக் கொண்டது இல்லை.



வேதா குடும்பம் அனைவரும் வீட்டிற்குக் கிளம்பத் தயாராக அமுதன் வழியனுப்பினான்.



ராஜியிடம் வேதா அமுதனின் போன் நம்பரைத் தர அவள் பத்திரப் படுத்திக் கொண்டாள்.



கையில் ஏந்துவான்...!




ஹாய் நட்புக்களே🤗🤗🤗... புதுத் தொடர் தொடர்கிறேன்... உங்களின் ஆதரவினை நல்கிட வேண்டுகிறேன். நிறை குறை எதனையும் கூறத் தயங்க வேண்டாம். என்றும் பிரியமுடன் உங்களின் நிவி😍

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17206

💞💞💞💞💞💞💞💞💞💞🔥🔥🔥🔥💔💔💔💕💕💕❤❤❤❤😍😍😍

அத்தியாயம் 2


நள்ளிரவு ராஜி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.


நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து,
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்,
கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில், (சாப்போ!)
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ, (ஷப்போபோ!)
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த, (சாப்போ!)
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ, (ஷப்போபோ!)
உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சரணம்,


மொபைலில் ரிங்டோன் அடிக்க விழி பிரிக்காது கைகளில் அனைத்தவள் திரும்ப தூங்கத் தொடங்கினாள். ஆனால் அழைப்பு உன்னைத் தூங்க விடுவேனா என்றவாறு திரும்ப தொடங்க..


எழுந்து கண்களினைக் கசக்கி யார் எனப் பார்த்தவள் அதிர்ந்து மொபைலை பெட்டில் போட்டு பின் ஆசுவாசம் ஆகி எடுப்பதற்குள் கட் ஆனது. அவள் அழைக்கலாமா வேண்டாமா என்று நினைக்க மீண்டும் அலறியது. சரி எடுப்போம் என நினைத்தவள் காதில் வைக்க...


"நாளைக்கு உன்ன மீட் பன்னனும். ஸ்டார் காபி கார்னர் வந்திடு. டைம் மெசெஜ் பன்றென். பை", அமுதன்.


அவள் பதில் சொல்லும் முன்பு கால் கட் செய்யப்பட்டது. சரியான சிஎம். நம்ம பதில் சொல்லனும் நினைக்குறதில்ல. மொபைலைப் பார்த்தாள். அதில் அம்மு என்று ஒளிர்ந்தது. அதில் அம்மு சிஎம் என பதித்து இரவை தூங்கா இரவாக மாற்றிக் கொண்டாள்.


ராஜி வீட்டில் உணவு நேரத்தில் அனைவரும் உணவு மேஜையில் இருக்க வேண்டும். எழுதப்படாத சட்டம். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் முதல் கொண்டு அதே நேரத்தில் உணவு உட்கொள்வர். சமையல் வேலை செய்யும் காவேரி மட்டும் இவர்களுக்குப் பரிமாறிவிட்டு சாப்பிடுவாள்.


யுவா, வேதா இருவரும் ராஜிக்கு காத்திருக்க... ராஜி டார்க் பின்க் நிற ஸ்லீவ்லெஸ் சுடி டாப் மற்றும் அடர் நீல நிற சல்வார் அணிந்து முகம் முழுவதும் தூங்காததின் விளைவாய் சிறிது சிவந்து இருக்க படிகளில் இரங்கிக் கொண்டு இருந்தாள். இருந்தும் முகத்தில் என்றும் நிறைந்த புன்னகையுடன் குட்மார்னிங் சொல்லி சாப்பிட அமர.. அனைவரும் சாப்பிடத் தொடங்கினர்.


"அண்ணா அவர் கால் பண்ணார். காபி கார்னர்ல மீட் பண்ணனும் சொன்னார்", ராஜி.


"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமே இல்லை. அவருக்கு கல்யாணம் விருப்பம் இல்லை சொல்லிட்டு இப்படி பன்றார். இது எனக்கு சந்தேகமா இருக்கு", யுவா.


"யுவா. என்ன பேசுர", அமைதியாக இருக்கும்படி வேதா கண்களில் எச்சரிக்க..


"என்ன சந்தேகம் யுவா", ராஜி


"அது... திடீர்னு ஓகே சொல்லிட்டார்... அதான்", யுவா.


"அண்ணா நீங்க என்ன சொல்றீங்க...", ராஜி.


"எனக்கு முழு சம்மதம். ஒரு துளி சந்தேகமும் இல்லை. ஆனால் உன் விருப்பம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்", வேதா.


"உங்கள் விருப்பம் தான் என் விருப்பம். எனக்கு யுவாக்கு நீங்க தான் அம்மாவும் அப்பாவும். நாங்க நீங்க சொல்றத தான் கேட்போம்", ராஜி.


"சரிமா. நீ அமுதன பார்த்துட்டு வா. நான் திருமண வேலைகளைப் பார்க்கணும். யுவா நீ மண்டபம் அட்வான்ஸ் கொடுக்க ரெடி ஆகிடு", வேதா.


"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் அண்ணா", யுவா.


"ம்ம்ம். மாடிக்கு வா", வேதா.


ராஜி தன் தோழிகளிடம் கூறிவிட்டு அமுதனைப் பார்க்கச் சென்றாள்.


"அண்ணா ராஜிக்கு வேறு பையன பார்க்கலாமே. உங்களுக்கு எல்லாம் தெரியும் தான... அவங்க இந்தத் திருமணத்திற்கு ஒத்துகிட்டது எனக்கு சரியாப் படல.. இதுக்குப் பின்னாடி", யுவா...


"போதும். திருமணம் பத்தி இதுக்கு அப்புறம் நீ பேசாத. ராஜி அமுதனை தான் கட்டிக்கனும். எனக்கு எல்லாம் தெரியும். அதான் நான் இந்த திருமணம் நடக்குறதுல உறுதியா இருக்கேன். இதுக்கு மேலே இதை பத்தி பேச வேண்டாம். வேற", வேதா.


"நீங்கள் சொல்லி நாங்க இதுவரை எதை கேட்காம இருக்கோம். இதையும் கேட்கிறேன். அட்வான்ஸ் கொடுத்துட்டு வரென் அண்ணா", யுவா.


"என்னை நம்பு யுவா. நல்லது தான் நடக்கும்",என்ற வேதா யுவாவை அணைத்துக் கொண்டான்.


"நான் உங்களை தான் அண்ணா நம்புறேன்", என்றான் யுவா.




"சாரி. ட்ராபிக் ல மாட்டிக்கிட்டேன்", ராஜி.


"ஓகே. வாட் டூ யூ வான்ட். காபி ஐஸ்க்ரீம் ...?", அமுதன்.


"காபி ஓகே", ராஜி.


இருவருக்கும் காபி ஆர்டர் செய்தவன் அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவளும் பல எண்ணங்களில் இருக்க...


"உங்களுக்கு இந்த திருமணம் விருப்பத்தோட தான் நடக்குதா.. விருப்பம் இல்லைனா முன்னாடியே சொல்லிடுங்க..", அமுதன்.


"நம்ம பேச வேண்டியதுலாம் இவன் பேசுறான். நீ தான்டா எனக்கென்னனு இருக்க. அங்க பாரு அந்த ஜோடி எப்படி சிரிச்சு பேசிக்கிறாங்க. நீயும் தான் இருக்கியே", ராஜியின் மைண்டு வாய்ஸ்.


"சம்மதம் இல்லனா சொல்லுங்க... இப்படி அமைதியா இருந்தா நான் என்ன நினைக்க", அமுதன்.


"எனக்கு சம்மதம். உங்களுக்கு", என ராஜி தொடங்க...


"ஓகே எனப். விருப்பம் இல்லாமல் கல்யாணம் செய்யக் கூடாது. உங்களுக்கு சம்மதம் சொல்லிடீங்க.. இனி கலயாணத்தன்னைக்கு மீட் பண்ணலாம். பை", அமுதன்.


"ஆனால் நான் இன்னும்..", ராஜி.


"பை. ஆள்ரெடி நீங்க லேட் செய்து டைம் ஆச்சு. நான் இப்போ போய் ஆகனும்", அமுதன்.


"ஓகே", எனத் தொடங்கும் முன் அவன் சென்று இருந்தான்.


உனக்கு நான் சம்மதம் சொல்லிட்டேன். ஆனால் நீ எனக்கு சொல்லவே இல்லையே. என்ன வாழ்க்கை டா இது. உன்னை வச்சுக்கிறேன் டா கல்யாணத்துக்கு அப்புறம் என சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.


இதெல்லாம் மறைவில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த யுவா அண்ணன் எடுத்த முடிவில் இது தவறாகிவிடுமோ என்ற கேள்வியில் நின்றான்.


ராஜி கலகலப்பான, துடிப்பான எதையும் எதிர்த்து போராடும் குணம் கொண்டவள். எதற்கும் அழுது வடியும் ரகம் அல்ல. ஆனால் அவளுக்கு நேர் எதிராய் அவள் தோழி ரம்யா. எதற்கும் அஞ்சும் குணம் கொண்டவள். சிறிதாக அதட்டினால் கூட அழும் குணம். சசி, நல்லவனுக்கு நல்லவள் கெட்டவனுக்குக் கெட்டவள். எதிலும் புரட்சி செய்ய வேண்டும் என்ற தீவிர நடவடிக்கை எடுக்கும் குணம்.


மூவரும் பேஷன் டிஷைனிங் முடித்தனர். ரம்யா ஆசிரமத்தில் வளர்ந்தவள். அவளுக்கு உறவு என்றால் அது ராஜி மற்றும் சசி மட்டுமே. ராஜி எவ்வளவு தான் வற்புறுத்தினாலும் ரம்யா அவள் வீட்டில் தங்க மாட்டாள். ராஜி அவளைத் தங்க வைக்கக் காரணம் வேதா. வேதாவும் ரம்யாவும் பரிமாறிக் கொள்ளும் காதல் ராஜி அறிந்த ஒன்று. ஆனால் அவர்கள் இருவரும் அதை உணரவில்லை. ரம்யாவிற்கு பயம். வேதாவிற்கு தம்பி தங்கை தான் காரணம். ராஜி கல்யாணத்திற்கு இப்பொழுது ஒத்துக் கொண்டதற்கு காரணமும் வேதா தான். சசி வீட்டில் ஒரே பெண். தந்தை ஆசிரியர். தாய் குடும்பத் தலைவி.


வேதாவுக்கும் யுவாவுக்கும் 3 வருட வித்தியாசம். யுவா மற்றும் ராஜிக்கு 2 வருட வித்தியாசம். வேதா கல்லூரி முடித்து கடையினைத் தொடங்கி 5வருடம் ஓடியது. யுவா கல்லூரி முடித்து 2வருடம் ஆனது. தன் அண்ணன் உடன் வேலை செய்கிறான். ராஜி இப்பொழுதுதான் கல்லூரி முடித்தாள்.


வேதாவுக்கும் யுவாவுக்கும் தங்கை என்றால் உயிர். ராஜிக்கு சிறிய காயம் என்றாலும் பதறி விடுவர். ஒரு சொல் கூட இதுவரை திட்டியதில்லை. பொக்கிஷம் போன்று காத்து வந்தனர். வேதா அமுதனுக்குக் கல்யாணம் செய்து வைப்பதும் அமுதன் அவளைக் காதலால் கைகளில் ஏந்துவான் என்பதினாலே தான்.


கையில் ஏந்துவான்...!!!



தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி😊

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17376




அத்தியாயம் 3



💕❣💕❣💕❣🌹❤🌹❤🌹❤💞🌹💞❤😊💕❣💕💞🌹❤💞💕❣🌹❤💞💕❣🌹❤💞💖💖💖❤❤

கோதை இல்லம்...


மாளிகை போன்ற வீட்டின் கேட்டின் அருகில் ஒரு பெரிய பலகையில் கோதை இல்லம் என்ற பெயர் வீற்று இருந்தது. வீட்டினைச் சுற்றிலும் கோட்டைச் சுவரும் அதன் நுனியில் கண்ணாடிச் சில்கள் பொருத்தப்பட்டும் இருந்தது. கோட்டைக்கு அருகில் தென்னை, வேம்பு, மாதுளை, நெல்லி, பப்பாளி, வாழை, மா எனப் பல மரங்களும் வரிசையாக பாத்தி கட்டியது போன்று பலப் பூச்செடிகளும் நிறைந்து காணப்பட்டது. வீட்டின் வாசலுக்கும் கேட்டிற்கும் இடையில் வட்ட வடிவில் தொட்டி அமைக்கப்பட்டு அதில் ஒரு பெண் கையில் குடம் கொண்டு பிள்ளையாருக்கு நீர் ஊற்றுமாறு ஒரு சிலையும் குடத்திலிருந்து நீர் ஊற்றிக் கொண்டு இருக்குமாறும் செட் செய்து இருந்தனர். பிள்ளையாரிடம் இருந்து வரும் நீர் அனைத்துப் பூச்செடிகளுக்கும் செல்லுமாரு அமைக்கப் பட்டும் இருந்தது. வீட்டின் இடது புறம் காரினை நிறுத்த செட்டும் இருந்தது. வீட்டின் அமைப்பும் மிக அழகாகப் பார்ப்போரைக் கவரும் வண்ணம் இருந்தது.


கணியன் மற்றும் கோதை இருவருக்கும் காதல் திருமணம். வீட்டினை எதிர்த்து நடந்தது என்பதால் சொல்லிக் கொள்ளும்படி சொந்தம் யாரும் இல்லை. அவர்கள் ஒன்றும் இல்லாமல் சென்னை வந்து சேர்ந்தனர். கணியனின் முழு உழைப்பின் காரணமாய் ஐந்து வருடத்தில் பெரிய ஹோட்டெல் ஆரம்பித்து நல்லபடியாக்ச் சென்றது. அதன் பலனாய் தனது அன்பு மனைவிக்குப் பரிசாய் இந்த மாளிகை போன்ற வீட்டினையும் கட்டி முடித்தார். வீட்டினக் கட்ட பல லட்சங்கள் ஆக அதற்கு கடன் பெற்று ஒரு வழியாய் வீட்டினைக் கட்டி முடித்தார். அப்பொழுது அவருக்கு அமுதனும் அதன் பின் பரணியும் பிறந்தனர். பெண் குழந்தை வேண்டும் என்ற தவத்தின் பலனாய் சுமி பரணிக்குப் பின் இரண்டு வருடத்தில் பிறந்தாள். அமுதனுக்கு பத்து வயது எனும் பொழுது ரயில் விபத்தில் பெற்றோர் இழந்தவன் ஏதும் அறியாத அந்த வயதிலும் தன் உடன்பிறப்பினை நல்ல முறையிலேயே வளர்த்தான். தந்தை வாங்கிய கடன் அனைத்தையும் தான் திருப்பித் தருவதாகக் கூறியவன் வீட்டின் பத்திரத்தினை அடகு வைத்து கடன்கள் அனைத்தையும் கட்டி முடித்து தன் படிப்பையும் நிறுத்தாமல் அமுதனும் பரணியும் கல்லூரிப் படிப்பை முடித்தனர். அதிலும் மூவரும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினர். சங்கர் தேவன் அமுதனுடனே இருந்து அனைத்து நல்லது கெட்டது அனைத்திற்கும் உதவினார். சங்கர் உதவியால் தான் வேதாவின் தந்தையான கனகராஜிடம் வீட்டினை அடகு வைத்து பணம் பெற்றான். இப்படி பல படிகளைக் கடந்து இன்று மிகப் பெரும் பணக் காரர்களில் ஒருவனாகத் திகழ்கிறான்.


வீட்டினுள் அதி வேகத்தில் வந்து சர்ரென பிரேக் போட்டபடி சீரியபடி வந்து நின்றது மாருதி ஸ்விஃப்ட். அதிலிருந்து அமுதனும் அவனைத் தொடர்ந்து பரணியும் வெளியேறினர். அமுதன் கர்வமான நடையுடன் வீட்டினுள் நுழைந்தவன் நேரே சென்றது அவனின் தங்கை சுமியின் அறை. பரணி சமையல் அறைக்குச் சென்று சமையல் செய்யும் ராணியிடம் ஒரு கிண்ணத்தில் கஞ்சித் தண்ணீரை வாங்கியவன் அவன் அண்ணனிடம் சென்றான்.


என்றும் போல் இன்றும் அமுதனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. பெற்றோர் தவம் இருந்து பெற்ற ஒரே மகள் சுமி. வீட்டில் துள்ளி விளையாடும் தனது தங்கை இப்படி ஒரு வருடமாக படுத்த படுக்கையாக இருப்பதைக் காணக் காண அமுதனுக்கு உயிர் போகும் வலி ஏற்பட்டது. ஹாய் அம்மு என்று கூறித் தன் கழுத்தினை சுற்றிக் கொள்ளும் தன் தங்கையைக் காண மனம் ஏங்கியது. எப்படியும் மீண்டு வருவாள் என்று ஒரு ஓரத்தில் அமுதனின் மனம் கதறிக் கொண்டு தான் இருந்தது.


வாடிய மலர் போன்று படுக்கையில் உணர்வுகள் எதுவும் இன்றி அழகின் மொத்த உருவமாய் முன்பு இருந்தவள் அதற்கு முற்றிலும் மாறாய் கிடந்தாள். எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியாயிற்று. ஆனால் சரி ஆன பாடில்லை. என்ன என்னவோ செய்து விட்டான் அமுதன். பலன் சிறிதும் இல்லை,. பரணிக்கு தன் தங்கையின் நிலை ஒரு வருத்தம் என்றால் அமுதனின் நிலை அதற்கு ஈடாய். சரியாக உணவு உண்பது இல்லை. முழுவதும் அவன் அறைக்குள்ளே அடைந்து கிடப்பது. சுமிக்கு உணவு அளிப்பதற்காக வெளியில் வருதல் இல்லை பரணியிடம் அளிக்கச் சொல்வது. உடன்பிறந்த இருவரும் ஒவ்வொரு நிலையில் இருக்க என்ன செய்வது என்ற மனநிலையில் இருந்தான் பரணி. பரணி சங்கர் தேவனிடம் கெட்டுக் கொண்டதின் பெயரில் தான் இந்தத் திருமணப் பேச்சு எழுந்தது. முதலில் திருமணத்திற்கு மறுத்துக் கொண்டெ இருந்த அண்ணன் எப்படி இதற்கு ஒத்துக் கொண்டான் என்று சிறிய நெருடல் இருந்தாலும் அதனை பரணி பெரிது படுத்தவில்லை. இந்தத் திருமணம் நடந்தால் தங்களின் வாழ்வில் சிறிதேனும் மாற்றம் வராதா என்று இறைவனை வேண்டினான் பரணி.


பரணியின் வேண்டுதல் இறைவனின் செவிகளை அடைந்ததோ என்னவோ... இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருக்கின்றது.


தன் தங்கையை கைகளில் தாங்கி உணவினை அளித்தவன் மற்றதை ப்பரணியிடம் கூறிவிட்டு என்றும் போல் அவன் அறைக்குச் சென்று கதவினை அடைத்துக் கொண்டு கட்டிலில் சரிந்தவன் விழிகளில் நீர் ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடியது.


மனதில் முழுவதும் அவனின் துள்ளித் திரிந்த தங்கையின் நினைவுகளே....


கையில் ஏந்துவான்...


தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗🤗🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1779117792


🌺🌹💕❤💕❤💕❤💕💕💕💕❣💕💕💕💕💕💕❣💕❣💕❣🌺🌹🌺

அத்தியாயம் 4


ரம்யா, சசி மற்றும் ராஜி மூவரும் ஒரு கடையில் அமர்ந்திருந்தனர். அந்தக் கடை ஓனர் அவர்களிடம் இடத்தினைச் சுற்றிக் காட்டிக் கொண்டு இருந்தார். மூவருக்கும் அவ்விடம் மிகவும் பிடித்து இருந்தது. அந்த இடம் பல மால்களுக்கு அருகிலும் எப்பொழுதும் கூட்டமாய் இருக்கும் இடமாகவும் இருந்தது. பார்லர் ஓபன் செய்ய சிறந்த இடம். மூவரும் இணைந்து அட்வான்ஸ் கொடுத்து அந்த இடத்தினை வாங்கி இருந்தனர்.

பல இடம் தேடியும் கிடைக்காமல் கடைசியில் இவரே வந்து கடை தருவதாகக் கூற... மூவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி. இடம் கிடைத்த மகிழ்ச்சியில் விரைவாக வேதாவிடம் சென்று கூற.. அவனும் மகிழ்ச்சியினைத் தெரிவித்தான்.

இனி தேவையானப் பொருள்கள் மட்டுமே வாங்க வேண்டியது. அதன்பின் இவர்களுக்குச் சொந்தமான தொழில். மூவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தில் யுவா மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென அனைத்து வேலைகளையும் அவனே பார்த்துப் பார்த்துச் செய்தான்.

நாட்கள் அப்படியே ஓடியது. ஆனால் அமுதன் மற்றும் ராஜி வாழ்வில் சிறிதும் மாற்றம் இல்லை. ஆனால் ராஜி அதனைப் பற்றி எந்தவித வருத்தமும் கொள்ளவில்லை.

திருமண நாளும் அருகில் வந்தது. நாளை திருமணம். அதற்கு முதல் நாள்
சடங்கு நடந்தது. அமுதன் எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் புன்னகை முகமாகவே நடந்து கொண்டான். வேதாவும் மனநிறைவுடன் விளங்கினான். மண்டபத்தில் அனைத்துச் சடங்குகளும் முடிந்து அனைவரும் உறங்கத் தொடங்க... ராஜி மட்டும் தூக்கம் வராமல் நடந்து கொண்டு இருந்தாள். சரி மேலே சென்று வருவோம் என மாடிக்குச் செல்ல... அங்கு யுவா தனியாக வானத்தினைப் பார்த்து நின்று கொண்டு இருந்தான். அவன் தோள் தொட... திரும்பியவன் கண்கள் கலங்கி இருந்தது. அதனைக் கண்டவள் துடித்தாள்.

"என்ன ஆச்சு யுவி. என்ன பிரச்சினை சொல்லு", ராஜி.

"உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைனா சொல்லு டா. நான் பார்த்துக்குறேன்", யுவா.

"எனக்கு அண்ணா மேல் முழு நம்பிக்கை இருக்கு யுவி. நம்ம நல்லத மட்டுமே யோசிப்பார். அவருக்காக நான் யார வேனும்னாலும் கல்யாணம் செய்வேன். அதற்கு உன் கண் ஏன் கலங்குது", ராஜி.

"உன்னை நினைச்சுதான். அவர் உன்னை நல்லாப் பார்த்துப்பாரா.. நீ எனக்கு உயிர்டா... உனக்கு ஒன்னுனா என்னால் தாங்க முடியாது", யுவா.

"யுவி... நீ எந்த வருத்தமும் படாத... அவர் என்னை விரும்புவார். இல்லை விரும்ப வைப்பேன். என்னைப் பற்றிய கவலையை விடு. எனக்குத் தெரியும் உங்க ரெண்டு பேருக்கும் மனசு முழுக்க எங்கிட்ட தான் இருக்கும் அப்படினு. நான் நல்லா இருப்பேன். இப்போ சிரிடா ப்ளீஸ்", ராஜி.

அவள் தலையினை சரித்து அழகாக கேட்ட விதத்தில் யுவா சிரித்தான்.

அருகில் சப்தம் கேட்க... என்னவென்று இருவரும் திரும்பிப் பார்க்க அங்கு யாரும் இல்லை. பூந்தொட்டி மட்டும் உடைந்தது தெரிந்தது. எப்படி என்று யுவா அருகில் சென்று பார்க்க யாரும் இல்லை. பின் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கீழே வந்தனர்.

திருமண நாள்...

அதிகாலை மணப்பெண் அலங்காரம் சசி மற்றும் ரம்யாவே பார்த்துக் கொண்டனர். மாப்பிள்ளை தோழனாக வேதா அருகில் இருந்தும் அமுதன் ஒன்றும் சொல்லவில்லை. அமுதன் உறவென்று வந்தவர்கள் அனைவரும் ராஜியைப் பார்த்து ஆச்சர்யம் கொண்டனர். அவ்வளவு அழகு. அமுதன் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை தோரணத்தில் மின்னினான். அனைவரிடமும் இருகரம் குவித்து வணக்கம் தெரிவித்தவன் பரணியிடம் கண் அசைக்க பரணி அவன் தங்கை இருக்கும் வீடியோவை ஆன் செய்தான். திருமணக் கோலத்தில் மாம்பச்சை நிறத்தில் பட்டு உடுத்தி பலவித அலங்காரங்களுடன் தேவதையாய் நடந்து வந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து அமுதன் அருகில் வந்து அமர்ந்தாள் ராஜி. இருவருக்கும் மனதில் பல எண்ணங்கள். வேதாவினால் மட்டுமே இந்தத் திருமணம் நடக்கின்றது.

இருவரும் அழகில் பொறுத்தமான தம்பதிகளாக
மணமேடையில் வீற்று இருந்தனர். மனம் மட்டும் இருவருக்கும் ஒன்றவில்லை. பின்னாளில் மாற்றம் கொள்ளுமா... இல்லையா...
அதற்கு ராஜி போராட வேண்டுமா...

மேல தாள ஓசை ஒருபுறம், உறவினர் நண்பர்களின் உரையாடல்கள்...

"மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா


கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்"


புரோகிதரும் இந்த மந்திரத்தின் அர்த்தததையோ, அதன் முக்கியத்துவத்தையோ சொல்லிக் கொடுப்பதில்லை.

இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை. இந்த மந்திரம் மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்கு இன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக, மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது. இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.


இந்திய சமுதாயத்தில் ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக உள்ளது எது என்றால் அது அவன் மனைவியே! மற்ற ஆட்சி, அதிகாரம், செல்வங்கள் , நில புலம், காடு , கழனி, வாய்க்கால் வரப்பு, தோட்டம் தொரவு... உள்ளிட்ட எல்லாவற்றை யும் இழந்து அவன் நடுத் தெருவிற்கு வந்தாலும் அவனை அன்பு செய்து அர்ப்பணித்த மனைவி அவன் அருகில் இருந்தால் அவன் கடைத்தேறி விடுவான்.



"கெட்டி மேளம், கெட்டி மேளம்" என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். இருக்கை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர் உறவினர்கள்.


மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மேடையின் அருகாமைக்கு விரைகின்றனர். வீடியோகிராபரும், போட்டோகிராபரும் மணமக்களை சுற்றி சூழ்ந்து இருக்கும் உறவினர் நண்பர்களிடம் "சார் , கொஞ்சம் வியூ கொடுங்க" என்று கோருகின்றனர்.


ராஜியின் சங்குக் கழுத்தில் தாலியைக் கட்டித் தனது மனைவி எனும் அங்கீகாரம் அளிக்கிறான் அமுதன்.



வேதாவிற்குச் சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டோம் என்ற பூரிப்பில் கண்கள் கலங்க.. யுவாவிற்குத் தன் தங்கை வாழ்க்கை நல்ல படியாக அமைய வேண்டும் என்று கண் கலங்க... பரணி, சசி, ரம்யா மூவரும் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் அர்ச்சதைத் தூவினர். சங்கர் தேவனுக்கும் வேதாவின் எண்ணங்களே !


ஆயிரங்காலத்துப் பயிர் என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண பந்தத்தில் அமுதனும் ராஜியும் இணைந்தனர்.

கையில் ஏந்துவான்...

தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17901

💕💕💕💕💔💕💔💕💔💓💖💕💔❤💔❤💔❤💓💕❤💖❤💖💔❤💓❤❤💔💔


அத்தியாயம் 5

ராஜி குடும்பமும் அமுதனின் குடும்பம் மட்டுமே இருந்தது அமுதனின் வீட்டில்...

இரவு நேரம் அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டனர். வேதாவின் மனம் தவிப்பில் இருந்தது. இனித் தன் தங்கை தன்னுடன் இருக்க மாட்டாள் ஏன்பதில். ஆனால் பெண்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று. மாற்றம் ஆகாதே..

ரம்யா மற்றும் சசி இருவரும் ராஜியினை அலங்காரம் செய்து தேவதையாக அமுதனின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

எல்லா மணப்பெண் தோழிகள் போன்றே இவர்களும் கிண்டல் செய்து அவளை உள்ளே அனுப்பினர்.

இங்கு வேதா, யுவா, சங்கர் மூவரும் பரணியிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.

"சுமிக்கு இப்பொழுது எப்படி உள்ளது... எதுவும் முன்னேற்றம் இருக்கின்றதா... ", வேதா.

"இல்லை... சார்... அவளுக்கு ட்ரீட்மென்ட் போய்ட்டு தான் இருக்கு... எப்போ வேணும்னாலும் குணமாகலாம் அப்படின்னு டாக்டர் சொன்னார். அவள் சரி ஆகுற வரைக்கும் அண்ணன் இப்படித்தான் இருப்பார். நீங்க எதுவும் நினைக்காதீங்க சார்", பரணி.

"என்னை மாமான்னே கூப்பிடு பரணி. எனக்கு அமுதனப் பத்தி நல்லா தெரியும். அவனை நினைச்சு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சுமி வாழ்க்கை தான் எனக்கும் முக்கியம். இனி சுமி எனக்கு தங்கை தான்", வேதா.

"மாமா... ஆனால் அண்ணா சுமிய நீங்க யாரும் பார்க்க ஒத்துக்க மாட்டாங்க... அது", பரணி.

"எனக்கு அவன் மனநிலை புரியும் பரணி. ஒரு நாள் எல்லாம் மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது. எனக்கு நம்பிக்கை இருக்கு", வேதா

"அண்ணா ரம்யா சசி வந்தாச்சு.. நம்ம போகலாமா", யுவா.

"நாங்க வரோம் பரணி. சுமியப் பார்த்துக்கோங்க", வேதா.

"சரிங்க மாமா.. ராஜி எனக்கு அண்ணி மட்டும் இல்லை. அம்மா மாதிரி.. அவங்களுக்கு இங்கே எந்த பிரச்சினையும் இல்லாமப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு", பரணி.

"எனக்குத் தெரியும் பரணி", என்றவன் பரணியை அணைத்துக் கொண்டான்.

பின் அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

அமுதனின் அறையில் ராஜி நுழைய... உள்ளே அமுதன் இல்லை...

நிம்மதியாக உணர்ந்தவள் அவன் வருவதற்குள் உறங்கி விடுவோம் என எண்ணி உள்ளே நுழைய அமுதன் பால்கனியில் நின்று இருந்தான்.

ராஜியும் அமுதனுக்குக் காத்திருக்க வேண்டும் என்று அவனுக்காக மேஜையின் அருகிலேயே நின்று கொண்டு இருக்க... அமுதனும் பால்கனியிலேயே சுமார் இரண்டு மணி நேரம் நின்று கொண்டு இருந்தான். இவளுக்கு கல்யாண மேடையில் நின்று கொண்டு இருந்ததே கால் வலிக்க.. அதற்கு மேல் தாங்காதவள் கீழேயே எந்த விரிப்பும் இல்லாமல் உட்கார்ந்தவாறு துயில் கொள்ளத் தொடங்கினாள்...

"ஹேய்", என்ற கடுமையான சத்தத்தில் அலறி எழ அமுதன் தான் அவள் முன் நின்று இருந்தான்.

தூக்கம் கலைந்த ராஜி பாவமாக அவனைப் பார்க்க..

ராஜியின் பயம் கலந்த முகம் கூட அவனை ஒன்றும் செய்யவில்லை.

"மகாராணி தூங்கினதும் உங்களை நாங்க வந்து மெத்தைல படுக்க வைக்கனுமா... மரியாதையா மேலே ஏறி படு", என்க..

அவன் கூறிய அடுத்த நொடி மேலே ஏறிப் படுத்தவள் அசையாது படுத்திருந்தாள். அவன் கத்தியதில் மிரண்டு தான் போயிருந்தாள்.

கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது. பொங்கி வந்த கேவலை கரம் கொண்டு பொத்தியவள் அசையக் கூட இல்லை. அவள் அசையாததினைக் கண்டவன் அவள் இன்னும் உறங்கவில்லை என அறிந்து பால்கனி சென்று எப்எம் ஐ ஆன் செய்து பாடல் கேட்கத் தொடங்கினான்.

பாடல்...

மலை ஓரம்வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா, ,
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா, ,
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா
மலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

வான் பரந்த தென் சிட்டு நான் புடிக்கவாராத
கள்ளிருக்கும் ரோசாபு கை கை கலக்ககூடாதா
ராபோது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேன் முள் மீது தூங்கினேனே
இல்லாதா பாரம் எல்லாம் நெஞ்சோடு தான்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

மலை ஓரம் வீசும் காற்று மனதோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

குத்தாலத்து தென் அருவி சிதாட நான்கட்டான
சிதாட தான் கட்டி இள...

இருவரும் பாடல் முடிய உறக்கம் தழுவினர்.


கையில் ஏந்துவான்...


தங்களின் கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி🤗


 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18268

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💛💚💛💚💛💜💖❤❤❤❤❤💕💕💕💕💕❤💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💕


அத்தியாயம் 6


சூரிய ஒளி பால்கனியின் கண்ணாடிச் சுவர் வழியிலிருந்துத் தன்னைத் தீண்டுவதினை உணர்ந்து ராஜி கண் விழிக்க சுற்றுப்புறம் உணரச் சில நொடிகள் எடுத்தது.

உணர்ந்த அடுத்த நொடி அமுதனை விழிகளில் தேட... அவன் அங்கு இல்லை. அப்பாடா.. என நினைத்த ராஜி வேகமாகத் தன்னை சுத்தம் செய்ய டவளை எடுத்துக் கொண்டு பாத்ரூம் செல்ல...

அமுதன் அப்பொழுதுதான் தனது உடற்பயிற்சி முடிந்து அறைக்குள் நுழைந்தான். வந்தவன் குளியலைறையில் அவள் இருப்பதை அறிந்து தனக்கு மட்டும் எடுத்து வந்த டீயினைப் பருகத் தொடங்கினான்.

தன்னை சுத்தம் செய்து வெளியில் வந்தவள் சோபாவில் அமுதன் டீ பருகுவதனைப் பார்த்துத் தனக்கும் எடுத்து வந்துள்ளானா எனப் பார்க்க ஏமாற்றமே மிஞ்சியது. அவளின் செயலைப் பார்த்த அமுதன் டீ பருகிய தம்ளரினை அங்கு வைத்து விட்டுத் தயராக வைத்திருந்த ஷர்ட் பேன்ட் டவல் எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்று விட்டான்.

பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டவள் அவன் பருகிய டம்ளரினை எடுத்துக் கொண்டு கீழே செல்ல... கையில் டீயுடன் வந்த பரணி..

"அண்ணி... ஹாப்பி மார்னிங். உங்களுக்கு தான் டீ எடுத்துட்டு வந்தேன்... நீங்க தூங்குறீங்கனு அண்ணன் சொன்னார்", பரணி.

"ஹாப்பி மார்னிங்... உங்களுக்கு ஏன் வீண் சிரமம். நானே வந்து எடுத்துப்பனே", ராஜி அவனிடம் கூறிக் கொண்டே தம்ளரினை வாங்கிக் கொண்டாள்.

"அண்ணி என்னை பரணினு கூப்பிடுங்க.. ப்லீஸ். இங்கே எப்பவும் நான் தான் டீ போடுவேன். ஸோ... டீ எப்பவும் என் கையில் தான் நீங்க குடிச்சு ஆகனும்", என்று சொல்லி புன்னகைத்தான்.

"சரி... நீயும் என்னை பேர் சொல்லி கூப்பிடு. உனக்கும் வயசு கூட தான... ", ராஜி.

"அண்ணி நீங்க... உங்களை எப்படி", பரணி தடுமாற

"அப்போ நான் நீங்க போட்ட டீயும் குடிக்கல...", ராஜி.

"சரி அண்ணி.. சாரி... ராஜி...", பரணி.

"குட். நான் போய் சமையலுக்கு ஹெல்ப் பன்றென். பை", ராஜி.

சமையலறையில் ராணி மட்டுமே இருக்க...

"அக்கா... என்ன சமைக்கனும் சொல்லுங்க நான் சமைக்குறேன்.. ப்லீஸ்..", ராஜி.

"ஐயோ உனக்கு எதுக்கு பாப்பா வீண் சிரமம்.. நான் பார்த்துக்குறேன்.. ", ராணி.

"எனக்கு சமைக்க ஆசையா இருக்கு அக்கா.. நீங்க வேற வேலை செய்யுங்களேன்.. எனக்கும் நேரம் போகும்ல", ராஜி..

"நானும் ராஜியும் சமைக்குறோம் அக்கா.. நீங்க வேற வேலை பாருங்க... ", பரணி.

"சரிங்க தம்பி", ராணி.

பரணி ராஜி இருவரும் கதை பேசிக் கொண்டே காலை டிபனுக்கு பூரியும் உருளைக் கிழங்க்கு மசாலாவும் செய்து முடிக்க...

"கஞ்சி செய்து கொண்டு போகனும் ராஜி.. நான் ராணி அக்காவ வர சொல்லுரே செய்ய..", பரணி.

"எதுக்கு பரணி கஞ்சி.. யாருக்கு உடல் சரியில்லை", ராஜி.

"சுமிக்கு கஞ்சி தான் தரனும் ராஜி.. உனக்கு தெரியும் தான", பரணி.

"கஞ்சி மட்டும் குடிச்ச எப்படி உடம்பில் வலு இருக்கும்.. இப்படி சாப்பிட்டு எப்போ குணமாகிறது", ராஜி.

"டாக்டர் தான சொன்னாங்க.. நீர் ஆகாரம் தான் எடுக்கனும்னு", பரணி.

"அது சரி நீர் ஆகாரம்னா கஞ்சி மட்டும் தானா... சுமி எங்கே? என்னை அழைச்சிட்டுப் போ", ராஜி.

"அண்ணா என்னையும் அவரையும் நர்ஸையும் தவிர உள்ளே யாரையும் அலோவ் பண்ணமாட்டார்", பரணி.

"நான் பார்க்கனும்... அவள் அறைக்கு என்னை கூட்டிப் போறியா இல்லை.. நானே போகவா", ராஜி.

வேறு வழியின்றி அமுதன் இப்பொழுது எப்படியும் கீழே வரத் தாமதமாகும் என உறுதி செய்து சுமியின் அறைக்கு அழைத்துச் சென்றான்...

ராஜி அறையின் உள்ளே சென்று கண்டது.... அவளைச் சுற்றிலும் மாத்திரைகளும் குளுக்கோஸ் பாட்டிலும் தான்.. அவளின் உருவம் கண்டவள் அதிர்ந்தாள்.. இப்படி வாடியக் கொடியாய் கிடப்பவளின் முகம் காண வலி தான் மிஞ்சியது...

ஒரு முடிவுடன் வெளியில் செல்ல திரும்பும் நேரம் அமுதன் உள்ளே வர அப்படியே நின்றாள்.

உள்ளே வந்த அமுதன் பரணியினைப் பார்வையினால் எரித்து விடுவது போல் பார்க்க... "அண்ணா சுமியப் பார்க்கனும்னு ராஜி தான் ", அமுதன் அவனை ஆழமாகப் பார்க்க "சாரி அண்ணா அண்ணி தான் சொன்னாங்க.. அதான்", பரணி.

அவன் சுமியினைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.. நேராக சுமியின் அருகில் சென்றவன் பரணியிடம் கரத்தினை நீட்ட.. பரணி அவனைப் பாவமாக பார்த்தான்... வெகு நேரம் ஆகியும் பரணி அமைதியாக இருக்க அமுதன் அவனைத் திரும்பிப் பார்க்கவும் "கஞ்சி இன்னும் ரெடி பண்ணலனா.. அது", பரணி கூறத் தொடங்க..

"ராணி அக்கா... அக்கா", என்று அமுதன் கத்தவும் ராணி ஓடி வந்தார். "கஞ்சி ரெடி பண்ணாம ஏன் இருந்தீங்க.. இது சுமிக்கு சாப்பிடும் நேரம் தெரியும் தான", அமுதன் அவரை பார்த்து அழுத்தமாகக் கேட்க...

"தம்பி... அது.. அது வந்து.. இப்போ ரெடி பண்ணிக் கொண்டு வந்திடுறேன் தம்பி", ராணி.

"இப்போ ஏன் பண்ணல அப்படின்றது தான் என் கேள்வி... ", அமுதன்.

"மன்னிச்சிடுங்க தம்பி.. என் தப்பு தான்.. நான் போய் பன்றேன்", ராணி.

ராணி தன் மேல் பலி போட அதனை பார்த்துக் கொண்டு இருப்பது பரணிக்குத் தவறாகப் பட... "இல்லை அண்ணா.. இன்னைக்கு நான் சமைக்குறேன்னு அக்கா கிட்ட நான் தான் சொன்னேன். அதனால அக்கா தோட்ட வேலைய கவனிக்க வெளியில் போய்ருந்தாங்க.. நான் பண்ண லேட் ஆகிட்டு.. இப்போ ரெடி பண்ணிடுறேன்", பரணி சொல்லிக் கொண்டுத் திரும்ப..

அவனின் கரத்தினைப் பற்றிய ராஜி தன்னருகில் நிறுத்தி அமுதனை நேருக்கு சந்தித்து "எல்லாரும் என்னைக் காப்பாற்ற பொய் சொல்றாங்க", எனக் கூற அமுதன் அவர்கள் இருவரினையும் கோபமாக முறைத்தான்.. பரணி அவளினை பாவமாகப் பார்க்க...

"அவங்களை ஏன் முறைக்குறீங்க.. நான் தான் அக்காவ வேற வேலை பாருங்க நான் சமைக்குறேன்னு சொன்னேன்.. அப்புறம் பரணியும் எனக்கு ஹெல்ப் பன்றேன்னு சொன்னார்.. அவரும் நானும் சமைக்கும் போது தான் சுமிக்கு கஞ்சி செய்யனும் சொல்ல.. நான் எதுக்கு கஞ்சி அவங்க நோயாளியான்னு கேட்டேன்", அவள் முடிக்கவில்லை அமுதனின் கரங்கள் அவளின் கன்னத்தினைப் பதம் பார்த்திருக்க ஒரு நொடி அவளுக்கு என்ன நடந்தது என்று ஊகிக்க முடியவில்லை... இடப்பக்க காது அவளுக்கு ஏதோ ஓசை எழுப்பியது...அவனின் செயலில் பரணியும் ராணியும் அதிர்ந்து இருக்க...

"வெளிய போ.. இனி ஒரு முறை நான் இங்கே பார்த்தேன்... கொன்னுடுவேன்", என்று கர்ஜித்தவன் தனது கரத்தினை மூடிக் கொண்டு சுமியின் அருகில் அமர... ராஜி அழுது கொண்டே அவளறைக்கு ஓடினாள்.. பரணிக்கும் இது அதிர்ச்சிதான்... அண்ணன் இப்படிக் கை நீட்டும் குணம் உள்ளவன் கிடையாதே... ராஜி கூற வந்தது பரணிக்குத் தெளிவாகப் புரிந்தது.. அண்ணன் அவசரப் பட்டுவிட்டார் என்று எண்ணியவன் தலையினைக் கோதிக் கொண்டு கோபமாக வெளியில் சென்று விட..

"அக்கா கஞ்சி கிடைக்குமா இல்லை.. நான் தான் இனிப் பார்த்துக்கனுமா", அமுதன்.

"இல்லை தம்பி இதோ நான் கொண்டு வறேன்", என்று கூறி ராணி கஞ்சியுடன் வந்தார். அவனும் கஞ்சியினை சுமிக்கு அளித்து நிமிர நர்ஸும் வந்து சுமியினைச் செக் செய்து அமுதனிடம் வழக்கம் போல் "முன்னேற்றம் இல்லை", என்று அவன் மனதினை இறுக்கமாக்கி விட்டுச் சென்றார்.

அமுதனுக்கு அவன் இல்லத்தில் தான் பணி.. அலுவலக அறையில்... அவனும் அலுவலக அறைக்குச் சென்று பணியினைத் தொடர அப்பொழுதுதான் கவனித்தான்... பரணி அங்கு இல்லை.. அவனும் எதுவும் நினைக்காமல் பணியினைத் தொடங்க..

அவனது அறைக்கு முன் வந்து நின்ற ராணி "தம்பி சாப்பிட வாங்க.. சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்கு..", அமுதன்.

"அப்படியே இருக்கா.. அவங்க சாப்பிடலயா அக்கா.", அமுதன்.

"கூப்பிட்டேன் தம்பி... பாப்பா கதவ திறக்கக் கூட இல்லை.. பரணி தம்பி எனக்கு வேண்டாம் சொல்லிட்டாரு", ராணி.

"நான் கூப்பிட்டேன் சொல்லி வர சொல்லுங்க அக்கா.. நான் கீழே வறேன்", அமுதன்.

ராணி வந்து எவ்வளவு கூறியும் இருவரும் மறுக்க அதற்கு மேல் பொறுமை இழந்தவன் சாப்பாடு மேஜைக்கு அருகில் நாற்காலியில் இருந்து எழுந்தவன் மேலே செல்லத் தொடங்கும் முன் "வாங்க தம்பி.. உள்ளே வாங்க", ராணி.

அப்பொழுதுதான் திரும்பிப் பார்த்தான் அமுதன். வேதாவும் யுவாவும் நின்று இருக்க அவர்களினை பார்த்து தலையினை மட்டும் அசைத்து வரவேற்க.. அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர். அவர்களையும் சாப்பிட அமர வைக்க ராணியிடம் சைகை செய்ய..

"இந்த பொருட்களை ராஜிகிட்டக் கொடுகனும் அக்கா.. அதான்", வேதா கூற

"முதலில் சாப்பிடுங்க தம்பி... அதை அப்புறம் பேசலாம்.. உட்காருங்க", ராணி..

"இல்லை.. சாப்பிட்டு தான் வந்தோம்க்கா.. நீங்க சாப்பிடுங்க.. ", யுவா கூற..

"சாப்பிடுங்க.. இன்னும் யாரும் சாப்பிடல.. இவங்க வந்திருக்காங்கன்னு ரெண்டு பேருகிட்டயும் சொல்லிக் கூப்பிடுங்க அக்கா.. வருவாங்க", அமுதன்.

அமுதன் அழுத்தமாகக் கூர அதற்கு மேல் மறுக்க முடியாது... இருவரும் கை சுத்தம் செய்து வந்து அமர..

அதற்குள் ராஜி மற்றும் பரணி இருவரும் கீழே இறங்கி இருந்தனர்.

அமுதன் அவர்கள் இருவரும் தன் பேச்சுக்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதில் கோபமாக இருக்க... பரணி வேதாவினையும் யுவாவினையும் அணைத்து மகிழ.. ராஜி தன் அண்ணன்களைப் பார்த்த்தும் நடந்த அனைத்தினையும் மறந்தாள்..

அதுவரையிலும் ராஜியினைப் பார்க்காத வேதாவும் யுவாவும் அதன் பின்னர் தான் ராஜியினைப் பார்த்தனர்..

ராஜிக்கு அவர்கள் இருவரினையும் பார்த்து மகிழ்ச்சி என்றால்.. அவர்களின் இருவரின் முகமும் வலியினைப் பிரதிபலிக்க.. ராஜிக் குழப்பத்தில் இருந்தாள்..

வேதா தான் சூழ்நிலை உணர்ந்து அவளின் இடது கன்னத்தினை மெலிதாக வருட.. அவளுக்கு அப்பொழுதுதான் புரிந்தது அவளின் கன்னச்சிவப்பு தான் காரணம் என்று.. அவனின் வலியினைத் தாங்காது அவன் கரத்தினைப் பற்றி அழுத்த.. அவளின் உணர்வு புரிந்தவன் அமர சொல்ல..

யுவாவின் மனநிலையினைச் சொல்லவும் வேண்டுமா.. அவன் முகம் வலியிலும் ஆத்திரத்திலும் இருக்க. அவ்னைப் பற்றி அறிந்த வேதாவும் யுவாவினை அழுத்தமாகப் பார்க்க.. அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.. பரணிக்கும் அவர்களின் வலி புரிந்தது.. அவன் தன் அண்ணனினை முறைத்துக் கொண்டு இருக்க.. ராஜி வேதாவின் அருகில் அமர.. ராஜியின் அருகில் பரணி அமர.. ராணி அனைவருக்கும் பூரியினையும் மசாலாவினையும் பரிமாறினார்.. யாருக்கும் ஒரு வாய் கூட உள்ளே இறங்கவில்லை.. அனைவரும் தட்டினை மட்டுமே குனிந்து பார்த்தபடி அமர... தான் சாப்பிடாமல் அண்ணங்கள் சாப்பிட மாட்டார்கள் என்று அறிந்த ராஜி முழுவதும் இரண்டு பூரியினை தொண்டையினை கஷ்டப் பட்டு அடக்கி உள்ளே திணிக்க.. அதே தான் அவர்கள் இருவருக்கும்... பரணியும் ராஜி சாப்பிட்டப் பின்னரே சாப்பிட ஆரம்பிக்க.. அனைவரும் சப்பிட்டு முடிக்க...

அமுதனின் தட்டில் வைத்த இரண்டு பூரியில் ஒரு துண்டு கூட அவன் வாய்க்குள் செல்லவில்லை.. அப்படியே கைகழுவி விட்டு எழுந்து கொண்டான்.

கையில் ஏந்துவான்!

தங்களின் கருத்துக்களினைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி😍😍😍

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18327


💞💕💞💕💞💕💞💕💞💕💕💕💕💞💞💔💕💔💖❤💓❤💓💔❤💔💕💓❤💔💕💓💞💕💞💕💞💕💞💕💔❤💔💔💕💓💕💞💕💞💕💞💕


அத்தியாயம் 7


அமுதன் சாப்பிடாமல் செல்லவும் ராணி பரணியினைப் பார்க்க.. பரணி அவனைக் கண்டு கொள்ளவில்லை. ராஜிக்கு அவன் சாப்பிடாமல் சென்றது மனதில் சிறு வலி தர... அவள் அண்ணனிடம் சிறிது நேரம் பேசிய பின்னர் பரணியும் கலந்து கொண்டான்.. யுவா மட்டும் இறுக்கமாக இருப்பதைக் கண்ட பரணி அவனின் கரத்தினைப் பற்றிக் கொள்ள அவனும் அமைதியாகினான்.

பின் இருவரும் அமுதனிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப... ராஜிக்குக் கண்களில் குளம் கட்டியது... அவர்களுக்கும் அதே நிலை.. ஆனால் ஆண் மகன் என்ற ஒரே காரணம் அவர்களின் விழிநீர் சிந்தவில்லை. இருவரும் மனதில் ஏறிய பாரத்துடன் திரும்பிச் சென்றனர். ராஜியின் அருகில் வந்த பரணி அவளின் கரத்தினைப் பற்றிக் கொள்ள... அவளும் அவனின் கரத்தினைப் பற்றிக் கொண்டாள். இதனை மேல் இருந்து பார்த்த அமுதன் அதன் பின் அலுவலக அறைக்குள் சென்றுவிட்டான்.

பரணி அவளிடம் கதை பேசத் தொடங்க அவளும் அந்த மனநிலையில் இருந்து வெளிவந்தாள். அமுதன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் மேலும் பொறுமை தாங்காமல் மாடியின் முனையில் வந்து நின்று "பரணி வேலை பார்க்குற எண்ணம் இருக்கா.. இல்லை இப்படியே அரட்டை அடித்துக் கொண்டு இருக்கப் போரியா??", அமுதன்.

"வறேன் அண்ணா", என்றவன் எழுந்து செல்ல... அவன் முகம் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை ராஜி. அவளின் முகம் காணா போக்கினைக் கண்டவன் நமக்கென்ன என்ற ரீதியில் உள்ளே நுழைந்துவிட..

இனி தான் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன எனப் பட்டியிலிடத் தொடங்கினாள்...

முதலில் அவள் தோழி ரம்யாவுக்கு அழைக்க அவள் எடுக்காமல் போகவும் பின் சசிக்கு அழைத்தாள். சிறிது நேரத்தில் மறுமுனையில் அணைப்பு இணைக்கப்பட... "நம்ம பார்லர் விசயம் என்ன ஆச்சு டி.. ரம்யாவும் கால் அட்டண்ட் பண்ணல.. ", ராஜி.

"ஏண்டி கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகி இருக்கு.. அதுக்குள்ள உனக்கு பார்லர்... இதெல்லாம் உனக்கு அந்நியாயமா தெரிலையா", சசி.

"ஆதனால் என்ன.. நாம நாளைக்கு போறோம்.. என்ன செய்யலாம்னு நாளைக்குப் பார்க்கலாம். சரியா", ராஜி.

அதன் பின் அவளுக்கு ரம்யா அழைக்க.. அவளிடமும் அதையே கூறியவள் வேதாவிடம் விவரம் கூறிப் பின் அயர்வாக அதே சோபாவில் உறங்கி விட்டாள். மதிய நேரம் ராணி அவள் உறங்குவதனைப் பார்த்து அமைதியாக அவரது இல்லம் சென்றுவிட... அந்த வேளை கீழே வந்த பரணி சாப்பிட செல்லும் முன் அங்கு ராஜி உறங்குவதனைப் பார்த்து அவளை எழுப்பித் தூக்கத்தினைக் கெடுக்கக்கூடாது என்று உணவினைப் போட்டுக் கொண்டு அவனறைக்குச் சென்றுவிட்டான்.

பரணி சென்று பத்து நிமிடம் கழித்து வந்த அமுதனின் கண்கள் தூக்கத்தில் சொருகக... அவனறைக்குச் செல்லத் திரும்பும் முன் அவன கண்ணில் ராஜி பட்டாள். அவன் நன்றாக கண்களினை கசக்கி தூக்கத்தினைக் கட்டுப் படுத்தியவன் கீழே இறங்கி வந்து அவளினைக் கைகளில் ஏந்தியவன் அவனறைக்கு சென்று கட்டிலின் ஒரு ஓரத்தில் கிடத்தியவன் மறு ஓரத்தில் அவன் உறங்கலானான்.

இரண்டு மணி நேரம் கழித்து துயில் கலைந்த ராஜி முதலில் ஒன்றும் புரியாமல் விழிக்கப் பின் தான் அவள் சோபாவில் தூங்கியது நினைவில் வந்தது... எப்படி இங்கு என்று யோசித்து எழ.. அவளருகில் அமுதன் படுத்திருக்கக் கண்டவள் இவனது வேலையாக இருக்குமோ என்று எண்ணி தன் தலையில் அடித்துக் கொண்டாள். அதன் பின் தான் அவளுக்குப் பசி உணர்வு தோன்ற... கீழே சென்று உணவினை தனக்கு எடுத்துக் கொண்டு வெளியில் டீவியின் முன் அமர்ந்து உண்ணத் தொடங்க... டீவி சட்டென ஆப் ஆக கடுப்பானாள். என்ன எனப் பார்க்க.. அமுதன் தான் ஆப் செய்திருந்தான். அவனை கேள்வியாக அவள் நோக்க.. "சாப்பாடு மேஜையில வந்து உட்கார்ந்து சாப்பிடு... இது என்னப் பழக்கம்.. ", என்று அழுத்தமாக அவளினைப் பார்த்துக் கேட்க..

அவள் அப்படித்தான் பார்ப்பேன் என்ற ரீதியில் எழுந்து சென்று டிவியினை ஆன் செய்ய.. அமுதன் மீண்டும் அதனை ஆப் செய்ய.. கடைசியில் டிவியின் ரிமோட்டினைப் பிடுங்கி கீழே எறிந்த அமுதன் அவளைக் கோபமாக பார்க்க... ஒரு நொடி பயந்தவள் அதன் பின் நிமிர்வுடன் தட்டினை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றவள் உணவினை சாப்பிடாமல் வெளியில் பப்பிக்கு எடுத்துச் செல்ல... அவளின் செயலில் அவனுக்கு வந்த ஆத்திரத்திற்கு அங்கு நின்று இருந்தாள் அவளை மீண்டும் அடித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை என்று எண்ணியவன் அங்கிருந்து சென்றுவிட்டான். அதுவரையிலும் அவள் பப்பிக்கு உணவு பரிமாறிக் கொண்டே யோசனையில் இருந்தாள்.

அறைக்குள் வந்தவனும் யோசனையில் தான் இருந்தான். அவனுக்கு என்ன மனநிலை என்று அவனுக்கே தெரியவில்லை. அவளை எதற்கு காலையில் அடித்தோம் என்று பல ஆயிரம் முறை யோசித்துவிட்டான்.. அவனை அறியாமல் அவள் மேல் கோபம் வந்து அடித்து விட்டாலும் வருந்திக் கொண்டு தான் இருந்தான்.. ஆனால் அவனுக்கு அதனை விட அவளின் அண்ணன் முகத்தில் இருந்த வலியினைக் காணவும் இது பெரிதாய் தெரியவில்லை...

பாத்திரங்களினை சுத்தம் செய்து வைத்தவள் திரும்பவும் அவன் முகம் பார்க்க வேண்டுமே என்று எண்ணி தோட்டம் சென்று அங்கிருக்கும் மலர்களுடன் உலாவினாள். அங்கிருக்கும் மலர்களினைப் பார்த்து அவளுக்கு அவள் வீட்டின் நினைவு வந்தது.. அவளுக்குப் பிடித்த மலர்வகைகள் அனைத்தும் வீட்டினைச் சுற்றிலும் இருந்தது.. இப்படி தானே தன் அண்ணனும் தனக்குப் பிடித்த மலரினை வீட்டினைச் சுற்றிலும் தனக்காக வளர்த்தார்... அவளுக்கு அவளின் குடும்பம் நினைவில் வர கண்கள் கலங்கி அங்கு அமர்ந்துவிட்டாள். அவளின் ஆசை அனைத்தும் நிறைவேற்றும் தன் அண்ணனின் பாசம் அவளுக்கு அமுதனுடன் போராடும் தைரியத்தினைக் கொடுத்தது.

அவளின் அருகில் யாரோ வரும் சத்தம் கேட்க... பரணிதான் அவளருகில் வந்து அமர்ந்தான். அவளின் முகம் சாதரணமாக இருக்க..

"உனக்கும் இந்த இடம் பிடிச்சிருக்கா ராஜி", பரணி.

"உனக்கும்னா,...உனக்கும் பிடிக்குமா", ராஜி.

"ம்ம்ம்... எனக்கு ரொம்ப பிடிக்கும்... அண்ணா காலேஜ் படிக்கும் பொழுதுதான் இந்த செடிகள் எல்லாம் ஆசையா வாங்கி வந்து வச்சார்.. அன்னையில் இருந்து இப்போ வரைக்கும் அவருக்கு இந்த இடத்தின் மேல் ஒரு தனி ஈர்ப்பு... எனக்கும் இந்த இடம் பழக பழக ரொம்ப பிடிச்சது", பரணி.

"அண்ணாவும் எனக்குப் பிடிக்கும் சொல்லி நான் சின்ன வயசில் இருக்கும்பொழுதே எனக்காக இங்க இருக்கிற எல்லா மலர்களையும் வீட்டில் வாங்கி வச்சார். அதில் மலர் வந்ததும் எப்போவும் எங்கிட்ட தான் முதல் சொல்வார்", ராஜி.

"மாமாக்கு நல்ல மனசு ராஜி.. சுமியும் என் தங்கை மாதிரின்னு சொன்னார். உன் வாழ்க்கை பத்தி இனி கவலை இல்லனும் சுமிக்காவும் வருந்தினார். இன்னைக்கு காலையில் அவர் முகத்தில் தெரிந்த வலி தான் என்னால தாங்கிக்க முடியல.. ", பரணி. "நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்திருக்கக் கூடாதோன்னு எனக்குத் தோணுது ராஜி", பரணி.

"அண்ணா என்ன பண்ணாலும் என் நல்லதுக்கு தான் பரணி. அவருக்காக தான் நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. எனக்கு எது நல்லதுன்னு அவருக்கு தான் தெரியும். அவர் நினைச்சிருந்தா... வா வீட்டுக்குப் போகலாம்னு சொல்லி அழைச்சிட்டுப் போயிருப்பார். ஆனால் அவர் என்னை அப்படி எதும் சொல்லாதப்போவே எனக்குப் புரிந்தது,.. நான் நல்லா இருப்பேன்னு அவர் நினைக்குறார்... நான் நல்லா இருப்பேன்", சிரித்த முகத்துடன் கூற

பரணிக்கு அவளின் நல்ல மனம் புரிய அவனுக்கு ராஜி இன்னும் நெருக்கம் ஆனாள்.

"அண்ணா எப்பவும் இப்படி இல்லை ராஜி.. அவர் இப்படி மாறக் காரணம் சுமிதான். அதுவரை அவருக்கு இப்படி முகம் இறுக்கமா வைக்கலாம் தெரியாது. எப்பவும் சிரிச்ச முகமாதான் இருப்பார். இப்படி வீட்டிலேயே அடைந்து கிடக்கவும் மாட்டார். எப்பவும் வெளியில் எங்களை அழைச்சிட்டு தான் போவார். ஆனால் சிறு கண்டிப்பும் இருக்கும்.. அது அன்பான கண்டிப்பு... ஆனால் இப்போ அவர் அவராவே இல்லை.. மாறுவார்னு நான் நம்புறேன்.. நீ அவரை மாத்திடுவன்னு நான் நம்புறேன்", பரணி.

வந்த இரண்டு நாளில் தன் மேல் இவ்வளவு நம்பிக்கை வைக்கும் பரணி மீது ராஜிக்கு பாசம் பெருகியது..

அன்றைய நாள் இரவு ராணி அனைவருக்கும் சாப்பாடு பரிமாற அமைதியாக மூவரும் சாப்பிட்டு எழுந்து செல்ல.. தனது அறையின் கட்டிலில் தலையினைச் சாய்த்த பரணி அவன் மனம் கவர்ந்தவளின் நினைவில் மூழ்கினான்...

இங்கு அமுதன் ராஜி இருவரும் வராதத் தூக்கத்தினை வாவா என்ற வண்ணம் அழைப்பு விடுத்துக் கொண்டு இருந்தனர்.. ஆனால் பாவம் இருவருக்கும் துயில் வர மறுக்க... நீண்ட இரவில் வெகு நேரம் பின் இருவரும் உறங்கத் தொடங்கினர்.

வழக்கம் போல் ராஜி காலை கண்விழிக்க அருகில் அமுதன் இல்லை. அவளும் சுத்தம் செய்து வந்து மணியினை பார்க்க மணி ஒன்பது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டமா என எண்ணியவள் தன்னையே நொந்து கொண்டு கீழே செல்ல ராணி சாப்பாட்டினை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்.

"ரொம்ப நேரம் தூங்கிட்டேன் மன்னிச்சிடுங்க அக்கா... பரணியை நான் அழைச்சிட்டு வரேன்", ராஜி கூற

"பாப்பா எங்கிட்ட மன்னிப்புன்னு பெரிய வார்த்தைலாம் பேசாதடா.. பரணி தம்பி தோட்டத்தில் இருக்கார்டா.. நான் பெரிய தம்பிய கூட்டிட்டு வரேன்டா", ராணி.

"சரிங்க அக்கா", ராஜி.

ராஜி வெளியில் தோட்டத்திற்கு சென்று பார்க்க... கையில் மொபைலுடன் எதனையோ ரசித்த வண்ணம் இருந்தான் பரணி.. ராஜி அருகில் வந்ததும் அதிர்ந்தவன மொபைலினை ஆப் செய்து அவளை சாதரணமாக காண்பது போல் புன்னகை புரிய.. ராஜியும் அவனை சாப்பிட அழைத்துச் சென்றாள்.

இருவரும் உள்ளே வர அமுதனும் சாப்பிட அமர்ந்திருந்தான். பரணி கொஞ்சம் நார்மலாக ஆகி இருந்தான் அண்ணன் மீது. மூவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் வேலையில் கவனமாக... ராஜிக்கு அமுதனிடம் பார்லர் விஷயமாக எப்படி அனுமதி வாங்க என்பதில் குழப்பமாக அமர்ந்திருந்தாள். அவள் தோழிகள் வருகிறோம் எனக் கூற இவளும் சரி எனக் கூறிவிட்டாள்... அவனிடம் அனுமதிக்கு ஒத்திகை நடத்திக் கொண்டு இருக்க.. அதிலேயே நேரம் போக பின் வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் அலுவலக அறை நோக்கிச் சென்றாள்........

கையில் ஏந்துவான் !


தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி😍

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18464



💕💕💕💔💓💔❤💓💔❤💔💕💕💔❤💓💔❤💓💓💔💕❤💔❤💓💔💕❤💓💔💓💓💓💓💔❤💔❤❤💔💓💓💔❤❤💕💕💕💕💕💕💕💕💕

அத்தியாயம் 8

ராஜி அறைவாயிலில் நிற்பதனை முதலில் கண்ட பரணி அவளினைப் புருவம் உயர்த்தி என்ன எனக் கேட்க.. அவள் அமுதனை விழிகளில் சைகை செய்ய.. பரணி தலையினை அசைத்து எழுந்து வெளியில் சென்று விட்டான். அதுவரையிலும் அமுதன் நிமிரவே இல்லை. ராஜி தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைய..

"என்ன சொல்லு", அமுதன் நிமிராமலேயே கூறவும்.. ராஜி அவன் கேட்கவும் வார்த்தை வராமல் தடுமாறினாள்.

பல நொடிகள் அமைதியில் கழிய அமுதன் அவனது மடிக்கணினியினை மூடியவன் அவளினைக் கூர்ந்து நோக்கவும்..

'இதுக்கு அவன் கீழே குனிந்து இருக்கும்போதே சொல்லிருக்கலாம்' என்றுத் தன்னையே நொந்தவள் அவளும் அவன் விழிகளினைக் கண்டாள்.

"நான் என் ப்ரண்ட்ஸ் கூட வெளியில் போய்ட்டு வரேன். அதான் உங்க கிட்ட", ராஜி.

"உன் விருப்பம்", அமுதன்.

"அப்புறம்", ராஜி இழுக்க..

"அப்புறம்", அமுதன்.

"பார்லர் வைக்கலாம்னு நாங்க ப்ளான் பண்ணோம்.. அதான் நீங்க சரின்னு சொன்னா வைக்குறேன்", ராஜி தயங்கிக் கொண்டே கூற...

"எங்கே? ", அமுதன்.

"ராம் நகர்ல ஒரு இடம்.. அங்கே தான்", ராஜி.

"ரெடி ஆகு.. நான் வரேன்", அமுதன்.

"ம்ம்ம்ம்..", என்று சந்தோசமாக வெளியேறினாள்.

அப்பொழுதுதான் ரம்யா, சசி இருவரும் வீட்டினுள் நுழைய வெளியில் அமர்ந்திருந்த பரணியின் விழிகள் தன்னவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தது.

தன்னவளின் விழிகளும் தன் மேல் ஆர்வத்துடன் படிவதனைக் கண்டவன் காற்றில் மிதந்தான் என்றே கூறலாம்.

வந்தவர்களினை உள்ளே வரவேற்றவன் ராஜி கீழே வரவும் டீ போடச் சென்றுவிட்டான்.

"அவரும் வரேன் சொன்னார் டி. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க", ராஜி.

"பரணி சிறிது நேரத்தில் டீ உடன் வர டீயினைப் பருகிய சசி "என்ன பாஸ்.. டீ நீங்க தான் போட்டீங்களா.. இப்படி இருக்கு", எனவும்

"ஏண்டி நல்லா தான இருக்கு", ரம்யா

"இல்லை இவ்வளவு அருமையா இருக்கேன்னு தான் கேட்டேன். இது நீங்க போட்டது தானா", சசி.

"இல்லை என் ஆவி போட்டது.. பாரு ஆவி கூட மேலே பறக்குது", பரணி.

"ப்ஃபூ ப்ஃபூ... இப்போ பாருங்க உங்க ஆவி காணாம போய்ட்டு", சசி சொல்லி சிரிக்க..

ராஜி அவளினை ஒரு மார்க்கமாக பார்த்தாள் என்றாள்.. ரம்யா அவளினை விசித்திரமாகப் பார்த்தாள். பின்னே யாரிடமும் அவளாக சென்று பேசும் பழக்கம் இல்லை. பின்னே பரணியிடம் அவளாகவே பேசுவதனைப் பார்த்தால் ஆச்சர்யப் படுவதில் தவறில்லையே...

பரணியும் சிறு புன்னகை உடன் உள்ளே சென்றுவிட்டான்.

அமுதனும் கீழே வர... நால்வரும் கடைக்குப் பயணமானார்கள். அமுதன் சசி மற்றும் ரம்யாவிடம் சாதரணமாக தொழில் சம்மந்தமாக பேச.. ராஜிக்கு தான் நம்மிடம் மட்டும் பேச வருத்தம் போல என்று முகத்தினை சுளித்துக் கொண்டாள். அமுதனும் அவர்களிடம் தொழில் சம்மந்தமான அனைத்துக் கேள்விகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். நகருக்கு வந்ததும் காரினை செட்டில் நிறுத்திவிட்டு இவர்களுடன் நடக்க..

தனக்காகத் தான் இங்கு வரை வந்திருக்கின்றான் என்று எண்ணி ராஜி மகிழ்ச்சியில் அவள் கடைக்குச் செல்லும் திசையில் அமுதனை அழைத்துச்செல்ல... அவன் கடைக்குள் கூட நுழையவில்லை..

"சரி வொர்க் முடிஞ்சதும் சொல்லு. எனக்கு இங்கே தான் வொர்க் இருக்கு..பை சசி அண்டு ரம்யா", அமுதன்.

அவளிடம் பதில் கேட்கக் கூட இல்லை. அவன் கூறிவிட்டுச் சென்றுவிட... இவளுக்குத் தான் அவனை போய் நல்லவிதமாக நினைத்தோமே என்று தோணியது..

மூவரும் கடையினை சுத்தம் செய்யத் தயாராகினர்.

அது பெரிய மால் இருக்கும் இடம் என்பதால் அங்கு பெரியக் கூட்டம் இருந்து கொண்டு தான் இருந்தது.

மூவரும் ஒரு வழியாக இடம் முழுவதும் சுத்தம் செய்து அங்கு இருந்த அனைத்துப் பொருள்களினையும் அதற்குரிய இடத்தில் வைத்து அலங்காரப் புகைப்படம் பலவற்றினை ஒட்டிக் கடைசியில் தூசியாய் கிடந்த அவ்விடத்தினை அவ்வளவு அழகாக மாற்றினர்.

சுத்தம் செய்து முடிக்கவே மதிய நேரம் கடந்தது. அமுதனுக்கு அழைக்கலாம் என்று அழைக்கும் நேரம் பரணி அங்கு வந்து சேர... அதன் பின் பரணியுடன் மூவரும் வீடு வந்தனர்.

ரம்யா சசி இருவரும் சிறிது நேரத்தில் சென்றுவிட.. அதன் பின் தான் அமுதன் அலுவலக அறையில் இருப்பது அவளுக்குத் தெரிந்தது.

"உங்க அண்ணன் அவர் வேலை முடிஞ்சதும் என்னை மறந்துட்டாரா... நான் கூட என்னை தான் அக்கரையா அழைச்சிட்டுப் போறார்னு நினச்சேன்... ஆனால் அவர்... அவர் வேலைக்கு தான் வந்து இருப்பார் போல", என்று மனத் தாங்கலாக ராஜி கூற...

"என்ன சொல்ற நீ... அண்ணாக்கு அங்க என்ன வேலை.. வொர்க்லாம் அண்ணா சிஸ்டம்லயே முடிச்சிடுவார். அவருக்கு போய் பார்க்க வேண்டிய வேலை எல்லாம் எதுவும் கிடையாது... எதுவும் பார்ட்டினாலும் அவர் வெளியில் போக மாட்டார். நான் தான் பார்மாலிட்டிக்கு டென் மினிட்ஸ் அங்கே போய்ட்டு வருவேன்", பரணி.

"அப்போ என்கிட்ட வேலை இருக்குன்னு போய் பார்க்குறேன் சொன்னது??? எதுக்கு பொய் சொல்லனும்", ராஜி.

"அதான் தெரில... சீக்கிரம் கண்டு பிடிக்கனும்", பரணி.

"என்னடா கண்டு பிடிக்கப் போற...", ராஜி.

"என்னது டாவா???? ", பரணி.

"ஆமாடா... நீ டா தான்... நீ இப்போ எனக்கு ப்ரண்டு... சொல்லு என்ன கண்டு பிடிக்கனும்", ராஜி.

"அது சரி... எல்லாம் என் நேரம்... ", பரணி புலம்ப

"வெட்டியா பேசி டைம் வேஸ்ட் பண்ணாம விஷயத்துக்கு வா", ராஜி.

"அண்ணாக்கு உன் மேல அக்கரை இருக்கு... அப்போ லவ் இருக்குமா...???", பரணி

"லூசுத்தனமா எதுவும் பேசாம அமைதியா இரு.. உன் அண்ணனுக்கு லவ்வா... வாய்ப்பே இல்லை", ராஜி.

"என்ன இப்படி கேட்குற.. என் அண்ணனுக்கு லவ் இருந்துச்சு... பட் பாஸ்ட் அது", பரணி.

ராஜி விழி விரியப் பார்க்க.. அவளின் முக பாவனையில் சிரித்தவன்..

"நம்ப மாட்டியா.. இங்கே பாரு... இந்த ப்ரோகிராமில", என்று கூறியவன் ரெக்கார்டு செய்து வைத்திருந்த ஒரு வீடியோவினை ஆன் செய்து விட அதில்...

ஒரு ப்ரொக்ராமிற்கு அங்கு கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தனர்... அப்பொழுது அமுதனிடம் மைக் கொண்டு சென்ற ஒரு பெண்..

"நீங்க சொல்லுங்க சார்.. நீங்க யாரையாவது லவ் பன்றீங்களா..???", அந்தப் பெண்.

அவன் தலையினைக் கோதி அழகாக முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் முகத்தில் அப்படி ஒரு வெட்கம் கலந்த காதல்... அந்த சிரிப்பினில் ராஜி சிறிது தடுமாறினாள் என்று தான் கூற வேண்டும்...

"எஸ் ஐம் இன் லவ்", என்று அவன் கூற.. இவளுக்கு சிறிதாக நெஞ்சில் வலி.. அது தானில்லையே என்று..

"வாவ் அப்போ மேரேஜ் எப்பொ சார்... ", அந்தப் பெண்.

அமுதன் அருகில் இருந்தவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு அந்தப் பெண்ணிடம் திரும்பி.."இன்னும் நான் அவகிட்ட சொல்லல... சொன்னா தான் மேரேஜ் ", அமுதன் கூற

"வாவ் இன்ட்ரஸ்டிங்... அப்போ சீக்கிரம் லவ் சொல்லி மேரேஜ் பண்ணுங்க சார்.. வாழ்த்துக்கள்", அந்தப் பெண்.

"ஸ்யூர்", அமுதன் சிரித்துக் கொண்டே செல்ல...

இவனுக்கு இப்படியெல்லாம் சிரிக்கத் தெரியுமா என்று மனதில் கேள்வி எழும்ப.... அந்த வீடியோ உண்மை ஆம் என்று கூறியது..

ராஜி அதிலேயே மூழ்கி இருக்க.. பரணி தான் அவளை அசைத்து நினைவிற்கு கொண்டு வந்தான்.

"இப்போ என்ன சொல்ற... அண்ணாவப் பத்தி", பரணி.

"அதெல்லாம் சரி.. அப்புறம் என்ன ஆச்சு.. அந்தப் பொண்ணுகிட்ட லவ் சொன்னாரா இல்லையா???", ராஜி.

"லவ் சொன்னாரா என்னனு தெரில.. சுமிக்கு இப்படி ஆனதும் நாங்க அதப் பத்திலாம் யோசிக்கல..

அண்ணாக்குக் கல்யாணம் பற்றி நான் பேசவும் தான் அண்ணா நடந்தத சொன்னார்..

சங்கர் தேவன் மூலமாக பேசலாம் என்று எண்ணிய பரணி அவருடன் நின்று "அண்ணா உங்க லவ் பத்தி சொன்னீங்க ஒரு ஸோல.. அந்தப் பொண்ணு யாருன்னு சொன்னீங்கன்ன.." என்று கேட்க

அமுதன் அவனை அழுத்தமாகப் பார்க்க.. "இல்ல அமுதா நான் தான் கேட்க சொன்னேன்.. நீ என்ன சொல்றப்பா", சங்கர்.

"இப்போ என்ன அவசரம்", என்று அதே அழுத்தத்துடன் கேட்க..

"அப்பா இருந்தா இவ்வளவு நாள் விடமாட்டார்ல அமுதா.. என்னையும் அப்பான்னு தான் நினைக்குறத சொல்ற.. எனக்கு சீக்கிரம் பண்ணி வைக்கனும்னு தோணுது..." சங்கர்.

அவர்கள் இருவரினையும் பார்த்தவன் பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டு "இல்லை. அந்தப் பொண்ணுக்கு மேரேஜ் ஆகிட்டு.. இப்போ அது முடிந்த விஷயம்", என்று அமுதன் கூற

அதன் பின் இருவரும் அது பற்றிப் பேசவே இல்லை.

நடந்ததினை பரணி ராஜியிடம் கூற... ராஜிக்கு மகிழ்ச்சியே... அப்பாடா என்று இருந்தது... ஏன் என்று அவள் மனம் கேட்க.. "அப்படித்தான்" என்று அவள் கூறிக் கொண்டாள்.

"இன்னும் விவரமா தெரியனும்னா... உங்க ரூமில் வாட்ரோப் பின்னாடி ஒரு ரூம் இருக்கும்.. அங்க தான் விவரம் இருக்கும்னு நினைக்குறேன்.. அங்க பாத்தீன்னா தெரியும்", பரணி.

"அங்க எங்கடா ரூம் இருக்கு... எனக்குத் தெரியாம", ராஜி.

"இருக்கு... போய் நல்லா பாரு", பரணி.

"சரி பாப்போம்", ராஜி.

அண்ணாக்குத் தெரியாம செய்.. அப்புறம் பின் விளைவு என்று அவன் கன்னத்தினைத் தடவிக் காட்ட.... "ஒரு தடவை தான் அப்படி.. இனியெல்லாம் நாங்க உஷாரா இருப்போம்ல", ராஜி.

அவள் தலையினை லேசாகத் தட்டியவன் "நீ திருந்த மாட்ட", பரணி.

அதன் பின் எப்பொழுதும் போல் சுமியினைக் கவனித்துவிட்டு அமுதன் அவனது அறைக்கு வர இரவு நெருங்கி இருந்தது..

ராஜி அவளது இடத்தில் கால்களினைச் சுருக்கி நன்றாக உறங்கியவாறு இருக்க.. அமுதனும் உறங்கத் தொடங்கினான்.

வெகு நேரம் பின் விழியினைத் திறந்த ராஜி திரும்பி அமுதன் உறங்கி விட்டானா என்று பார்க்க.. அவன் அந்த புறம் திரும்பி உறங்கி இருக்க.. மெதுவாக எழுந்தவள் வாட்ரோப் அருகில் சென்றாள்......!!!

கையில் ஏந்துவான் !


💕💓💕💓💕💓💕💓💔❤💓💓💔💓💔❤❤❤💔💕💔❤💓💓💓💔❤❤💓💓💔💓💔

தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி😍

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18714


💕💕💓💓💔💖💔💓💕❤❤💕💓💔💖💕❤❤❤💕💕❤💕💓💓💔💕💕❤💕💓💔💕💕💓💕💓💓💕💕❤💕💕💕

அத்தியாயம் 9



அமுதன் உறங்கி விட்டானா என அவனை எட்டிப் பார்த்த ராஜி அவன் உறங்கி விட்டான் என்பதனை உறுதி செய்து கொண்டு மெதுவாகக் கட்டிலில் இருந்து இறங்கினாள். அவள் எழும் ஓசை கேட்டு அமுதன் சிறிது அசையவும் அப்படியே அமர்ந்து விட்டாள். அவன் பின் தூங்கவும் அதன் பின்னே வாட்ரோப் அருகில் சென்று சுற்றிலும் கண்களால் துலாவினாள். ஆனால் அவள் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் கட்டிலுக்கு வலது மூலையில் தான் வாட்ரொப் இருந்தது.

அறையில் நைட் லேம்ப் மட்டுமே எரிய... அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவள் டார்ச் கிடைக்குமா என்று தேடிப் போனாள். அந்த அறையில் அவளுக்கு எதுவும் பழக்கம் ஆகவில்லை. எப்படியாவது தேடுவொம் என்று நினைத்து சுற்றி அலைந்து பார்த்தாள். ஆனால் கடைசி வரையிலும் அவளுக்கு ஒன்றும் கிடைக்கவே இல்லை. என்ன செய்ய என்று யோசித்தவளுக்கு திடீரென்று விக்கல் எடுக்க... அதனை அமுதனுக்குக் கேட்காமல் இருக்கக் கரங்களால் மூடிக் கட்டுப்படுத்த முயற்சித்தாள். ஆனால் அது முடியாது போக... அவளது முகத்திற்கு முன் தண்ணீர் குவளை இருக்க.. வேகமாக அதனைப் பருகியவள் அப்பொழுதுதான் நிற்கவும் உஃப் என்று திரும்பி எழுந்தாள். அவள் முன் அமுதன் தான் அவளை ஆழமாகப் பார்த்தவாறு நின்று இருந்தான். அவனது பார்வையில் இதயம் பலவாறுத் துடிக்க... அவனது கரத்தில் இருந்தக் குவளையினைப் பார்த்தவளுக்கு எங்காவது முட்டிக்கலாம் போல் இருந்தது.

"இங்கே என்ன பண்ணிட்டு இருக்க", அமுதன்.

"ம்ம்ம்.. அது...", ராஜி தடுமாற

"ம்ம் சொல்லு", அமுதன்.

"பூச்சி பூச்சி இருந்தது.. அதுதான்", ராஜி.

அவன் நம்பாமல் பார்க்கவும் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தாள். அவளது திரு திரு முழியினைக் கண்டு என்ன நினைத்தானோ

"போய் படு டென்சன் பண்ணாம", அமுதன்.

அவ்வளவுதான் விரைவாகச் சென்றவள் நொடிக்குள் கண் அயர்ந்து ஆழ்ந்து உறங்கியும் போனாள்.

வழக்கம் போல் அவளுக்கு முன் அமுதன் எழுந்திருக்க... ரெடியாகி ராணியுடன் சமையல் செய்து பரணியிடம் தான் செய்ய வேண்டியதனைப் பற்றிக் கூறிப் பின் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

"வெளியில் ஸ்கூட்டி நிக்கும். இனி அதில் போகலாம். என்னை தொந்தரவு செய்யக் கூடாது", என்று கூறியவன் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றுவிட...

"ஏண்டா உங்க அண்ணனுக்கு மண்டை குளம்பி எதுவும் போச்சா... நார்மலா இருக்கவே மாட்டாரா... ", ராஜி பரணியிடம் கேட்க

"ஏன் அப்படிக் கேட்குற", பரணி.

"நான் என்னமோ அவரை தான் வந்து என்னை கடையில் விடனும்னு சொன்ன போல நடந்துக்கிறாரு... அவரா வந்தாரு.. திருப்பி அழைச்சிட்டுப் போக நீ வந்த... நான் யாரையும் கூப்பிடலையே", ராஜி.

"இப்போ என்ன நீயா போயிக்குவ அப்படிதான... அண்ணா கிட்ட ஸ்கூட்டி வேண்டாம்னு சொல்லிடலாம்", பரணி.

"டேய் நான் எப்போ அப்படி சொன்னேன். ஏதோ என்னையும் மனுசியா மதிச்சு உங்கண்ணே ஸ்கூட்டிலாம் வாங்கி தந்திருக்கார். அதையும் நீ கெடுத்து விட்டுடுவ போலயே..", ராஜி.

"உன் அண்ணனுக்கு மூஞ்சிய எப்ப பாரு சிடு சிடுன்னு வச்சே பழக்கம் ஆகிட்டு.. என்னைக்காவது சிரிக்கனும்னு தோணுதா.. சரியான சிஎம். ", ராஜி கூற பரணி எழுந்து நிற்கவும்

"நீ எண்டா எழுந்து நிக்குற.. மறியாதை மனசுல இருந்தா போதும் எழுந்துலாம் மறியாதை குடுக்க அவசியம் இல்லை.", ராஜி.

பரணியின் விழி நம்மை நோக்காது பின் புறம் இருக்க என்ன என்று திரும்பியவள் அவள் கையில் இருந்த டம்ளரினை கீழே போடப் போக அவளருகில் வந்த அமுதன் அதனை அவள் கீழே போடும் முன் பிடித்து இருந்தான்.

"கொஞ்சம் கூட அறிவில்லை உனக்கு. இதில் வாய் மட்டும் அளவில்லா நீளத்துக்குப் பேசரது", என்று சிடுசிடுத்தவன் வேகமாகப் படிகளில் ஏறி சென்றுவிட்டான்.

"அப்பா.. மழை பேஞ்சி ஓஞ்ச மாதிரி இருக்கு டா... உன் அண்ணன் பிறந்ததுல இருந்து இப்படித்தானா இல்லை இப்போ தான் இப்படியா... பார்வையிலேயே எரிக்கிறது... ஷப்பா முடியல", ராஜி.

"அதான் சொல்றேன்ல உனக்கு விடை அந்த ரூம்ல தான் இருக்கு", பரணி.

"அதான் இன்னைக்கு பிளான் போட்டு இருக்கேன்ல.. நடத்திடுவோம்", ராஜி.

"நடத்திடுவோம் இல்லை. நடத்திடு,.. நான் இதுல ஒன்னும் பண்ண முடியாது", பரணி.

"சரி நான் சொல்றத மட்டும் செய். மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்", ராஜி.

"சரி. டீல் ஓகே", பரணி.

பரணி அவன் வேலையினைப் பார்க்க மாடி சென்றுவிட... ராஜி அவளது அண்ணன்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு ரம்யா, சசி வரவும் அவர்களுடன் கடைக்குச் சென்றாள். சசி அவளது ஸ்கூட்டியில் தான் ரம்யாவினை அழைத்து வந்திருந்தாள்.

மூவரும் கடைக்குச் செல்ல.. ராஜியினை அவளது தோழிகள் புதுப் பெண்ணினைக் கலாய்ப்பது போல் கலாய்த்தாலும் தனக்கும் அமுதனுக்கும் இடையில் என்ன உள்ளது என்று அவர்களிடம் கூறவில்லை.

எதிர்பாராமல் மதிய நேரம் கடைக்கு யுவா வரவும் ராஜி மகிழ்ச்சியாக அவனுடன் உரையாடிக் கொண்டு இருந்தாள். மற்ற இருவரும் அவரவர் வேலையினை பார்த்தனர். அவள் வீட்டினர் அனைவரைப் பற்றியும் விசாரித்தவன் ராஜி சுமி பற்றிக் கூறவும்... "நீ சுமியப் பாத்தியா ராஜி. அவள் நல்லா இருக்காளா...", யுவா.

"இல்ல யுவா. அவளுக்கு ட்ரீட்மென்ட் குடுக்குறேன் சொல்லி அவளை சரியா கவனிக்கல... டாக்டர்ஸ் என்ன சொன்னாலும் நம்மலும் அவளை கவனிச்சிக்கனும் இல்லையா... அதை சொல்லிப் புரிய வைக்கவும் விட மாட்றாங்க.. ஒரு பொண்ணா எனக்கு தோணுறது... அவளை நாமக் கூட இருந்துப் பாத்துக்கனும்.. மருந்து மட்டும் அதுக்கு யூஸ் இல்லை. அதுக்கு நான் சீக்கிரமே ஒரு வழி பண்ணனும்..", ராஜி.

"நீ நல்லா பாத்துக்கடா. நீயும் இனி அடி வங்க்குறதுலாம் இல்லாம பாத்துக்க.. பின்ன நான் மனுசனா இருக்க மாட்டேன். உன் வாழ்க்கை நல்லா இருக்கனும் அந்த ஒன்னு தான் நான் சும்ம இருக்கக் காரணம்", யுவா கூறவும் அவனின் கரத்தினை அழுத்திப் பிடித்தவள் லேசாக புன்னகைத்தாள்.

"நீ எப்போவும் சிரித்த முகமாவே இருக்கனும்டா... உன் கண் கலங்க நாங்க விட மாட்டோம்", யுவா அவள் தலையினைக் கோதி கூறவும்... "அண்ணா மதியம் மேலே வரேன் சொன்னாங்கக ராஜி. நான் இப்போ போறேன்.. நான் கடையில் இருக்கும் பொழுது அண்ணா வருவாங்க", யுவா.

"ம்ம்ம் சரி யுவா", ராஜி.

அவளும் அவனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அவன் செல்கிறேன் என்று கூறவும் வழி அனுப்பியவள் தனக்கு இனிதான் வேலை அதிகமாக இருக்கின்றது என மனதில் நினைத்துக் கொண்டாள்.

மதிய நேரம் மூவரும் உணவு அருந்திப் பின் அவரவர் வேலையினை செய்யத் தொடங்கினர். ஆரம்பம் என்பதால் கடையிலும் கூட்டம் அதிகம் இல்லை. நாளையிலிருந்து விளம்பரம் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வேலையினை தொடங்கினர்.

ரம்யா ஹீட்டெரினை எடுத்துச் சரி பார்த்துக் கொண்டு இருந்தவள் தெரியாமல் அங்கிருந்த ப்ளக்கில் இருந்த கம்பியினில் கையினை வைத்துவிட அவள் ஷாக் அடித்துக் கீழே விழும் முன் அவளினை இரண்டு கரங்கள் தாங்கி இருந்தது...




கையில் ஏந்துவான்💕

💕💖💕💕💔💓❤💕💖💖💔💓💓💕💕💖💖💔💔💓💔💖

தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி😍



 
Status
Not open for further replies.
Top