All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவிராமின் "கையில் நான் ஏந்தும் காதல் நீதானே !" - கதை திரி

Status
Not open for further replies.

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
19062


💓❤💔💕💕💖💖💕💕💔💓💓💔💔💕💖💖💕💔💔💓💓❤❤💓💔💔💕💕💖💖💕💓


அத்தியாயம் 10


வேதா கடைக்குள் நுழையும் நேரம் தான் ரம்யா ஹீட்டெரினை சரி பார்த்துக் கொண்டு இருப்பதனைக் கவனித்தான். அவள் கரம் ப்ளக்கின் கம்பியினைத் தொடும் நேரம் அவனுக்கு நடக்க இருக்கும் விபரீதம் புரிந்து அவளை தள்ளிவிடும் முன் அவள் கம்பியினைத் தொட்டு இருந்தாள். அவன் அவளினை இழுத்ததில் அவனும் கீழே விழ அவளும் அவனது மடியினிலேயே விழுந்தாள். அவன் எழுந்து அவளைக் காண அவனது மடியினில் மயங்கிக் கிடந்தாள். நடந்த நிகழ்வில் அதிர்ந்த ராஜி அவளினை எழுப்பக் கரம் கொண்டு கன்னத்தில் தட்ட... சசி ஒடிச் சென்றுத் தண்ணீரினை எடுத்து வந்தாள். சசியிடம் நீரினை வாங்கிய ராஜி ரம்யாவின் முகத்தினில் தெளிக்க சிறிது முகம் அசைக்க... கண் திறந்தாள். அவளின் கரம் கொண்டு தன் ஷாக் அடித்தக் கரத்தினைத் தொட்டவள் உடல் சிலிர்த்தது. அவளின் உடல் மொழியினை அறிந்த வேதா அவளினை ஆறுதலாகத் தோளில் கரம் பதித்து அழுத்தினான்.
அவனின் கரம் தீண்டலில் தான்... தான் எங்கு இருக்கிறோம் என்று அவள் பார்க்க வேதாவின் மடியினில் சாய்ந்து இருந்தாள். வேகமாக அவள் எழ முயற்சிக்க முடியவில்லை. வேதாவே அவளைக் கரங்களில் தாங்கி எழுப்பி அருகில் அமர்த்தினான்.
அதன் பின் வேதா அவளை முறைத்துப் பார்க்கவும் ரம்யாவிற்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது. ராஜி தான் அவள் அருகில் வந்தவள் நீரினைப் பருகக் கொடுத்தாள்.
"நாளைக்கே ஹாஸ்டல்ல ரிலீவ் ஆக பர்மிஷன் கேளு. ஒரு வாரத்துல நமக்குக் கல்யாணம்", என்று ரம்யாவினைப் பார்த்து அடிக் குரலில் கூறியவன் ராஜியிடம் திரும்பி "நான் நாளைக்கு வரேன்டா... வீட்டுக்கு", என்றவன் ராஜி புன்னகைத்து தலயினை அசைக்கவும் வேதா ராஜியின் தலையினைக் கோதியவன் சென்று விட்டான்.

ராஜியும் சசியும் ஆனந்தத்தில் ரம்யாவினை அணைத்துக் கொண்டு மகிழ.. ரம்யாவிற்கு மனதில் மகிழ்ச்சி இல்லை.

அவளின் முக பாவனையில் ராஜி யோசித்தாளும் ஷாக் ஆனதில் அப்படி இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டாள்.

அதன் பின் அவர்கள் அவரவர் வேலையினை முடிக்க நேரம் கடந்தது... கிளம்பும் நேரம் அவர்களுக்கு அருகில் ஒரு பெண்ணிடம் ஒருவன் வம்பு இழுத்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.. சசி அவனை நோக்கிச் செல்ல... அந்த நேரம் யுவா ராஜிக்கு அழைக்கவும் மொபைலை எடுத்துக் கொண்டு ஓரமாக நகர்ந்தாள்.

சசி அந்த இடத்தினை நோக்கிச் செல்ல ரம்யா அவளினைத் தடுத்தாள். சசி அவளைக் கண்களிலேயே முறைத்துப் பார்த்தவள் அவனின் அருகில் செல்ல... அவன் அப்பெண்ணிடம் வழி மறைத்தது மட்டும் இல்லாமல் அவளினைத் தொட்டு சிரித்துக் கொண்டே இருக்க.. அந்தப் பெண் அவனிடம் வழி விடச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டு இருப்பது தெரிந்தது..

அவனின் செயலில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றவள் அவனை தோளில் கை வைத்து திருப்பினாள். அவனைப் பார்த்து என்ன நடந்து உள்ளது என்று ஒரு நொடியில் அறிந்தவள் அருகில் ஒருவர் டீ குடித்துக் கொண்டு இருப்பதினைப் பார்த்து அவரருகில் சென்றவள் அதனைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்தவள் அவனின் மார்பில் இருந்து கீழ் வரை டீயினை ஊற்ற... ஒரு நொடியில் இது நடக்க... அவன் சிறிது அதிர்ந்து பார்த்தான்.

அதன் பின் தான் அவனுக்கு புத்தி உரைக்க... ஷிட் என்றவன் அவளினை அடிக்கக் கரம் ஓங்க அவன் கரத்தினை தட்டி விட்டவள் அவனது கன்னத்தில் இவள் அறைந்து இருந்தாள். அங்கிருந்த அனைவரும் ஷாக் அகிப் பார்க்க... அவன் அத்தனை பேரின் முன்னிலையில் அவள் அறைந்ததில் கோபத்தினைக் கட்டுப்படுத்திக் கொண்டு திரும்பி விட்டான். அந்தப் பெண் அவள் வைத்திருந்த டீயினை அவன் திடீரென்று எதிரில் வரவும் தவறி அவன் மேல் கொட்டி இருக்க.. அதற்குத் தான் அவன் அப்படி நடந்து கொண்டு இருந்தான். அப்பெண்ணும் ஆயிரம் முறை சாரி கேட்டும் விட்டபாடில்லை.


"யாரும் எனக்கென்னனு இருக்கப்போ நீங்கள் தைரியமா அவனை அடித்தது கிரேட் சிஸ்டர். நானே இதை செய்து இருப்பேன்... எல்லாம் அம்மாவல" என்று அந்தப் பெண்ணினைத் தடுத்து நிறுத்தியத் தன் தாயினை முறைத்த வண்ணம் சசியிடம் ஒரு பெண் வந்து கூறிக் கொண்டு இருந்தாள்.
தலையினை மட்டும் அசைத்து அப்பெண்ணிடம் இருந்து திரும்பியவள் அவன் கோபமாக செல்வதைத் தான் பார்த்தாள். வழி மறைத்து வம்பு செய்யப்பட்டப் பெண் சசியிடம் வந்து நன்றி தெரிவிக்க... அவளினை ஆறுதலாக அணைத்து வழி அனுப்பி வைத்தாள்.
அனைத்தும் முடிந்து இருக்க.. அப்பொழுதும் ரம்யா சசியினை நினைத்து தான் வருந்தினாள். அவன் கோபமாகச் செல்வதினை பார்த்தால் இதனை லேசில் விடமாட்டான் போலவே என்று நினைத்தவள் மனதிற்குள் பயபந்து உருண்டது. ஆனால் அதற்கு நேர் எதிர் சசி மனம் அவனின் மேல் ஆத்திரமாக இருப்பது மட்டும் அல்லாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும் நபர்களின் மேல் அடங்காத கோபம் வர விருவிருவென்று ரம்யாவின் கரத்தினைப் பற்றி அந்த இடம் விட்டு நகர்ந்தாள். ராஜிக்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியாது... அவள் யுவாவிடம் பேசிவிட்டு அப்பொழுதுதான் வர அவளினை அழைத்துக் கொண்டு மூவரும் வீட்டினை அடைந்தனர்.


ராஜி வீட்டிற்கு வர பரணி மட்டும் டிவி பார்த்துக் கொண்டு இருக்க.. அவள் வரவினை அறிந்தவன் டீ கொண்டு வந்து தர அதனைப் பருகிக் கொண்டே இருவரும் டீவி பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் செய்தியினைப் பார்த்துக் கொண்டு இருக்க... அமுதன் அப்பொழுது தான் கீழே வந்தான். அவனை ஓரக் கண்ணில் பார்த்தவள் அமைதியாக டீவியினைப் பார்த்துக் கொண்டு இருக்க... பரணி அவனுக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து தர அமுதன் ராஜி அமர்ந்திருந்த சோபாவில் அமராமல் அவர்களுக்கு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் செய்தியினை ஆர்வமாக கவனித்துக் கொண்டு இருக்க... பரணியும் ராஜியும் அங்கேயே தூங்கி விட்டிருந்தனர்.
அவர்களினைப் பார்த்த அமுதனுக்கு இருவரும் குழந்தையாகவே தெரிய... இனி ராஜியின் வாழ்க்கை சுழலும் நிலையினை நினைத்து மனதில் சிறிது வலி எழ... இருப்பினும் அவன் அவனது முடிவினை மாற்றினான் இல்லை. பெரும் மூச்சு ஒன்றினை எடுத்துவிட்டவன் பரணியினை எழுப்பி அறைக்குச் செல்ல சொல்லிக் கூறியவன் ராஜியினைக் கரங்களில் ஏந்தியவன் அறையில் உறங்க வைத்தான். அவளின் மாசு மருவற்ற முகத்தினை மிக அருகில் பார்த்துக் கொண்டே இருந்தவன்... பின் பால்கனிக்குச் சென்று விட்டான்.


இரவில் உண்ண ராணி அழைக்க....சாப்பிட்டு அதன்பின் அனைவரும் உறங்கிவிட்டிருக்க.. ராஜி அமுதனின் ஆழ்ந்தத் தூக்கத்தினை கவனித்து அவனின் பக்கம் இருந்த வாலட்டினை கையில் எடுத்தவள் அதில் சாவியினைத் தேடினாள். அவளின் கரத்திற்கு ஒரு பெண்டன்ட் மட்டும் அழகாய் தெரிய அதனைக் கையில் எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டு மிக நுண்ணிய ஊசி போன்று இருந்த அந்த சாவியினைக் கையில் எடுத்தவள் அதனின் வடிவில் கொஞ்சம் ஷாக் ஆகத் தான் செய்தாள். இப்படியும் ஒரு சாவியா என்று...


பின்னே வாட்றோப் பின் ஒரு அறை உண்டு என்று பரணி சொல்லியும் அவள் கண்ணுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.. என்னடா இது என்று யோசித்தவள் காலையில் அவன் குளிக்கச் சென்ற நேரம் தான் அவள் கண்ணுக்கு மிக நுண்ணிய ஓட்டை அந்த சுவற்றினில் இருப்பது தெரிந்தது... என்னவாக இருக்கும் என்று பல முறை ஆராய்ச்சி செய்ய அமுதன் கதவு திறக்கும் சப்தம் கேட்டு மாயமனாள். அதனை யுவா மாலையில் அழைக்க அவனிடம் மிக நுண்ணிய ஓட்டை அறையில் வைப்பார்களா என கேட்க.. அவனும் ஆம் அதற்கு டிஜிட்டல் லாக் செய்யப் பட்டு கீ கொடுத்து இருப்பாங்க எனவும்... அதன்படி தான் அவளும் அவனின் வாலட்டினை எடுத்து சாவியினைக் கையில் எடுத்து இருந்தாள். அதன்பின் சமத்தாக உறங்கியும் போனாள்...

அவனறியவில்லை என்று அவள் உறங்க அனைத்தினையும் அறிந்தவன் எதுவும் தெரியாதவாறு உறங்கிக் கொண்டு இருந்தான்....


முதலும் காதலாய் மாறுமோ
காதலும் கடந்து செல்லுமோ
கடந்துசெல்ல பிரிவும் உண்டோ
பிரிவும் வலியில் சேருமோ !!!




கையில் ஏந்துவான் !



💓💔💓💓❤💓💕💖💖💕💓💓❤💔💕💖💖💔💓💓💔💔


தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி😍



Sryyy for the late😁

ini crct ah daily update kudukaren... illana neenga enna tharalama thittalam😉
Anaal me paavam😌

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
19965


அத்தியாயம் 11


💕💞💞❤💓💓💕💕💓❤💗💚💛💙🧡💙💓💕💖🧡💜💜🧡🧡💕💕💖💖


ரம்யா தனது ஹாஸ்டலில் சிந்தனையுடன் அமர்ந்து இருந்தாள். திடீரென்று அவன் அழைத்ததும் தான் போக வேண்டுமா என்று நினைத்தவள்... மனம் போக தானே கூறுகின்றது என எண்ணியவள் தனது தயக்கங்கள் தாண்டி


ரு முடிவுடன் ரம்யா ஹாஸ்டலில் சொல்லிக் கொண்டு கிளம்பும் தருணம் வெளியில் வேதாவின் கார் நின்றது.. அவளுக்கே ஆச்சர்யம் தான் என்றாலும் அவனின் முகம் பார்க்க துணிவு இன்றி அவன் முன் பக்கக் கதவினைத் திறந்துவிடவும் அமர்ந்தவள் அதன் பின் வாயினைத் திறக்கவில்லை. காரில் ரேடியோவினை ஆன் செய்ய... அந்த சூழலுக்குத் தகுந்த பாடல் அவர்களின் மன நிலையினை எடுத்துக் காட்டியது....

......

தொலைவில் தொடு வான் கரையை தொடும் தொடும்
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனதில் ஏனொ அடம் அடம்
ஓருவர் பார்த்தால் மூடும் உடைபடும்

ஏ பெண்மையே கர்வம் ஏனடி வாய் வரை வந்தாலும்
வார்தை மரிப்பது ஏனொ ஏனொ ஏனொ
ஏ ஸ்வாசமே உடல் மேல் ஊடலா
என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாததே
நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்

ஓ காதலா
உன் பேர் மௌனமா
சொல்லொன்று இல்லாமல்
மொழியும் காதலன் இல்லை இல்லை இல்லை

ஓ காதலா
ஓர் வார்த்தை சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால்
நான் மறு வார்த்தை சொல்வேன்
நான் தினம் சொல்வேன்
எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்

.......

(ithu entha movie song kandu pidinka drss... without using google search...)

வேதாவும் அவளிடம் எதுவும் பேசவில்லை. நேரே வீட்டினை அடைந்தவர்கள் யுவா வரவும் ரம்யா அவனிடம் சாதாரணமாக பேசிக் கொண்டே உள்ளே சென்று விட்டாள். யுவாவும் ரம்யாவிற்கான அறையினைக் காட்டிப் பின் ராஜியினைச் சந்திக்கச் செல்ல முடிவு எடுத்து சங்கர் தேவனுக்கு கால் செய்து பேசி கிளம்பினர்.

காலையில் சீக்கிரம் எழுந்த அமுதன் ராஜியின் தூக்கம் கலையாத வண்ணம் கிளம்பி இன்று சந்திக்க வேண்டிய கிளைண்டினை பார்க்கக் கிளம்பிக் கொண்டு இருந்தான். இது பரணியின் ஏற்பாடு தான். தொழில் சம்பந்தமாக நேரில் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் ராஜிக்கு உதவும் படி ஆனதால் கிளைண்டினை தானாகக் கேட்டு மீட்டிங்கினை உறுதி செய்து இருந்தான். மாலை வரையிலும் எந்த இடையூறும் இருக்காது என்று ராஜியிடம் வாக்கு அளித்தபடி அமுதனும் பரணியும் கிளம்பி இருந்தனர். அவர்கள் அதிகாலையில் கிளம்புவது அறிந்த ராஜியும் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து இருக்க.. அதன்படி ஆறு மணிக்கு எழுந்தவள் தன்னை சுத்தம் செய்வது கூட இயலாது அவள் நேரே சென்ற இடம் வாட்ரோப் அருகில் தான். சுற்றிலும் கண்களினை விட்டவள் தான் பத்திரப் படுத்தி வைத்த அந்த குட்டி சாவி கொண்டு உள்ளே நுழைக்க அதில் திறப்பு வெளியில் வந்த்து... அதில் டிஜிட்டல் முறையில் பட்டன் இருக்க... என்ன டா இது என்று யோசித்தவள் அதன் பின் அதனை அறியப் பல வழிகளினை யோசித்தாள். என்னதான் முயன்றும் அவளுக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை. கீழே காரின் சபதம் கேட்க இந்த நேரத்தில் யாரு என யோசித்தவள் வேகமாக தன்னை சுத்தம் செய்து கீழே செல்ல வேதா யுவா ரம்யா தான் வந்திருந்தனர். அனைவரையும் இன்முகமக வரவேற்றவள் ரம்யாவுக்கும் தனக்கும் நாளையே திருமணம் வைப்பதாக வேதா அறிவிக்க... அங்கிருந்த அனைவருக்கும் அது அதிர்ச்சியே... ரம்யா அவன் கூறியதுமே அதிர்ச்சியில் எழுந்தே விட்டால் சோஃபாவிலிருந்து... ராஜி "அண்ணா நாளைக்கே வா... ஏன் இவ்வளவு சீக்கிரம்...", கூறினாள்.

"எப்படியும் பண்ணிதான ஆகனும் டா.. அதான் நாளைக்கு நல்ல நாள்தான். அதான் வேற யோசிக்கல... உங்களுக்கு இதில் விருப்பம் இல்லைனா வேண்டாம் என்று வேதா வர்த்தமாக இருந்தாலும் வெளியில் புன்னைகைப்பதனை அறிந்த யுவா ராஜியிடம் கண்களில் கேட்க.. ராஜிக்குத் தெரியாதா அண்ணனின் மனநிலை.. "அப்போ நிறைய வேலை இருக்கே... சீக்கிரம் எல்லாம் செய்யனும்... அவர் வேற மீட்டிங்குக்கு போய்ட்டார்", ராஜி.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ராஜி. அமுதன் தான் நாளைக்கு தேதி நல்லா இருக்கு நாளைக்கே வைங்கன்னு சொன்னது... அப்புறம் வேலை எதுவும் இல்லை... எல்லாம் அமுதனே பாத்துட்டான்... நாளைக்கு மட்டும் தான் நமக்கு வேலை... இப்போ உங்க சம்மதம் மட்டும் தான். அதான் இங்கே வந்தோம்", என்று கூறிக் கொண்டே சங்கர் வீட்டினுள் நுழைந்தவர் யுவாவின் அருகில் அமர்ந்தார்.

ராஜிக்கு வியப்பில் விழிகள் விரிந்தது. அமுதனா இதற்குக் காரணம்.. திருமணம் என்ற ஒன்றுக்கு என்று சம்மதம் கூறியதோட சரி... முறைப்படி நடக்க வேண்டிய எந்த சம்பிரதாயமும் இதுவரை நடக்கவில்லை... ஏன் தனது தமயனும் அதனைப் பற்றி கேட்கவில்லை... சுமிதான் காரணம் என்றாலும் வார்த்தையாகக் கூட இதுவரை தனது தமையன்களுடன் கூடி கலந்து பேசி பார்க்கவில்லை. எதுவும் கூறினாலும் சங்கர் அங்கிளிடம் மட்டுமே தான்... அப்படி இருக்க... இதெல்லாம் எப்படி என்று ஆச்சர்யத்தில் நிற்க.. வேதா "சரி நாளைக்கு வரோம் டா.. இன்னைக்கு வேலை முடிச்சா தான் நாலைக்கு விடுப்பு எடுக்க முடியும்.. போய்ட்டு வரோம்" என்று எழ ராணி டீ கொண்டு வர அதனைப் பருகியவர்கள் ரம்யாவும் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறி ராஜியே அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டாள். யுவா வேதா மற்றும் ரம்யா சென்றுவிட... சங்கர் ராஜியிடம் டீ கப்பினைக் கொடுத்தவர்..

"நாளைக்கு நல்ல நாள் சொல்லி அமுதன் சொன்னபோது எனக்கு தெரிலமா.. இப்போ தான் நியாபகம் வருது.. அவன் அம்மா பிறந்த நாள்... சரிமா நான் வரேன்", சங்கர் சென்றுவிட...

நாளைக்கு என்ன தேதி... மே 5... நமக்கும் நாளைக்கு தான் பிறந்த நாளே... அப்போ அத்தைக்கும் அப்போ தான் பிறந்த நாளா..??

மனதில் மின்னல் அடிக்க... வேகமாக படிகளில் துள்ளி குதித்து ஓடினாள்....


கையில் ஏந்துவான்😍



Hiiii drssss... ellarum en mela romba kovathula irupinga... terriblyy sryyyy and thanks drssss enna thedunathuku...

Ini 2 days once kandippa ud kudupen.. ithu unmai😊.. nambalam...🤝...

Aprom konjam special ah twist undu.... niraya surprise kooda irukku😉...

Idaila ques kooda kepen.. so silent readers ans panitu than poganum ok va😁...

Enna unga close frnd ah ninachu enkita unga comment ah share pannunga.. unga comments than na ud poda boost ah irukku... hearttttyyy thanks❤.... love u all 💞

Waiting for ur comments🤗


Nivi😍

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
20874


❤❤💓💔💕💕💖💔💓❤💔💕💕💖💔💓❤💕💕💖💖💖


அத்தியாயம் 12



படிகளில் துள்ளிக் குதித்து ஓடியவள் நேராகச் சென்று நின்றது வாட்ரோபின் முன்னர் தான். ஏதோ அவளுக்குத் தெரிந்த மூளையினைக் கொண்டு யோசித்து அவள் அறிந்த அந்த எண்ணினை டிஜிட்டல் லாக்கில் ப்ரஷ் செய்ய என்ன ஆச்சர்யம் திறந்து கொண்டது... யாஹூ என்று குதித்தவள் நிதானமாக அதனை ஓபன் செய்ய கதவு திறந்தது... உள்ளே சென்றவள் கண்டது... அது ஒரு குட்டி அறை மற்றும் அதனுள்ளே சிறிய ரேக்.. அனைத்தும் புத்தகங்களில் நிரம்பி இருக்கத் தனது தேடுதல் வேட்டையினைத் தொடங்கினாள். அவளின் தேடுதல் பல மணி நேரங்கள் கடந்து செல்ல... கடைசியில் மேலே இருந்த இளஞ்சிவப்பு வண்ணக் குட்டிப் பெட்டிக் கண்ணில் பட்டது. அதனை எடுத்தவள் திறக்க முயற்சிக்க.. அதனுடைய அமைப்பு அன்று அமுதனின் பர்சில் எடுத்த பெண்டன்ட் போல் இருக்க.. அவளிடம் இருந்த அந்தப் பெண்டன்டினை எடுத்து அதனைத் திறக்க... அதுவும் திறந்து கொண்டது.

திறந்தவள் கண்ணில் முதலில் பட்டது கருப்பு நிற பிஸ்டல். அதனைப் பார்த்து அதிர்ந்தவள் அதனைத் தொடவே பயந்து அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டாள். அதன் பின் மூச்சினைச் சீர்படுத்தி பிஸ்டலினை வெளியில் எடுத்து வைத்துவிட்டு உள்ளே காண அதில் இளஞ்சிவப்பு வண்ண டைரி இருந்தது... டைரியினைக் கையில் எடுத்தவள் பிரித்து முதல் பக்கம் பார்க்க... அதில் இரண்டு கண்கள்...

அவை ஒரு மங்கையின் கண்கள்... அவ்விரு விழிகளின் அழகினில் மயங்கி ராஜியே சிறிது நேரம் ஸ்தம்பித்தாள். அவளது விழிகளினையே அந்த இரு விழிகள் கயிற்றினால் கட்டிப் போட்டது... ஆசையாக வருடியவள் அதன் கீழ் இருந்த பெயரினைப் படிக்க முயற்சிக்க அது அவளுக்குப் புரியவில்லை.

பக்கங்களினைத் திருப்ப...

அமுதனின் கல்லூரி விழா நிகழ்விலிருந்து எழுதப்பட்டிருந்தது...

அந்தி வேளை... கல்லூரி முழுவதும் கோலாகலமாய் திகழ்ந்தது... மாணவர்கள் அவரவர் வேலைகளினை செய்து கொண்டும் விளையாட்டில் கலந்து கொண்டும் நண்பர்களுடன் உரையாடிக் கோண்டும் இருந்தனர்.

அமுதனும் அவனது நண்பனின் வேண்டுகோளின்படி நண்பனின் தங்கையினைக் காண டாமின் உருவ உடையினை அணிந்து டாமின் முகம் பொருந்திய தொப்பி கொண்டு முகத்தினை மூடி இருந்தவன் சென்றான். நண்பன் கூரிய இடத்தினை அமுதன் அடைய அங்கு திரும்பி நின்றிருந்த பெண் மட்டுமே தெரிந்தாள். அவளின் பின்னிருந்தே கண்ட அமுதன் அவளின் தோளினைத் தொட அதிர்ந்து திரும்பிய அப்பெண் அங்கு டாமின் உருவில் நின்றிருந்த அவனைக் கண்டு கேள்வியாகப் புருவம் உயர்த்தி விழிகளில் என்ன என மொழிய அந்த இரு விழி அவனை முழுவதும் சிறை செய்தது... அவன் சிலையாய் நின்றிருக்கக் கண்ட அப்பெண் அவன் முகத்தின் முன் கரங்களினை அசைத்து நினைவிற்குக் கொண்டு வர அப்பொழுதுதான் சுய நினைவினை அடைந்த அமுதன் அவளின் முன் கரம் நீட்ட அவளும் கரம் நீட்ட யோசித்துப் பின் அவணை அணைக்க அமுதனுக்கு மனம் தாளம் தப்பியது. அவன் மனம் காதலில் அந்த நொடி விழுந்தது... காதலின் உணர்வுகள் அவனை அந்த நொடி வந்து சேற அப்பெண் அணைத்திருந்த அந்த பத்து மணித்துளிகள் அவனுக்கு சொர்க்கம் கையில் வந்து சேர்ந்த உணர்வு... அவளைக் கையில் ஏந்த மனம் உந்த கடினப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான். அவளின் தமையன் வந்து அழைக்க அவனிடம் இருந்து பிரிந்தவள் திரும்ப முனைய அப்பெண்ணினை இழுத்து கன்னத்தில் முத்தம் பதித்தான் டாமின் தொப்பி அணிந்தவாறே... அதில் அவள் தமையன் அதிர்ச்சியில் நின்றான் என்றால் அப்பெண் அவனுக்கு கன்னத்தில் முத்தம் தரவும் அவளின் தமையன் உச்சகட்ட அதிர்ச்சிக்குச் சென்றான். அவனுக்குத் தெரியும் அந்த டாமின் உருவம் அமுதன் என்று. ஆனால் அப்பெண்ணிற்கு அது அமுதன் என்று தெரியாதே....

நண்பனைப் பற்றி அறிந்தவன் அவனின் மன உணர்வுகளினை உணர்ந்து ஒன்றும் சொல்லாமல் தங்கையினை அழைத்துச் செல்ல.. அமுதனுக்கும் அந்த நொடிதான் தனது செயலின் தவறு உணர்ந்தான். நண்பனின் முகத்தில் இனி எப்படி விழிப்பது என்ற யோசனையில் அன்றைய தினம் இரவினை அடைய.... இரவில் நண்பனின் சம்மதம் மகிழ்ச்சியில் உறைய வைக்க... காதலை பிறகு சொல்வேன் என்று நண்பனிடம் உறுதி வாங்கி அன்றிலிருந்து சொல்லாக் காதல் சுகம் என்பதினை அனுபவிக்க ஆரம்பித்தான் அமுதன்... அன்றிலிருந்து அப்பெண்ணின் நிழலாக தொடங்கிய வாழ்வில் தங்கையினை கவனிக்க மறந்துவிட அவன் வாழ்வில் நிகழந்த பல நிகழ்வுகள் இப்பொழுது இருக்கும் இந்நிலைக்குத் தள்ளியது. இவ்வாறு டைரியில் யார் பெயரும் குறிப்பிடாமல் சிறு குறிப்பாக காதலினை விவரித்து இருந்தான் அமுதன்.

அடுத்தப் பக்கத்தினைப் புரட்டினாள்....

அப்பக்கங்களில் இருந்த வரிகள்....

"மயிரியாய் அலைந்தேன் நானும்

உன்னைக் கண்ட நாள் முதலே

உன் கரம் தீண்டிடவே

மெய்யும் சிலிர்க்கக் கண்டேன்

காதல் சொல்லும் தருணம்

காலம் கொண்டு காத்திருக்க

முடிவின்றி வாழ்வும் தொடர

கைக்கொள்ள முயற்சிக்கிறேன்

நேசத்தினை மனம் பகிரும்

வேளை என்னை அடையுமுன்னே

இழப்பு ஒன்று வேதனையாய்

நேசத்தினைப் புதைக்கிறேன்

மனமெனும் கல்லறையிலே "

இந்த வரிகளினைக் கண்டவள் விழிகளிலே விழிநீர் வடிந்தது... அவளது மனம் அறிந்த செய்தி... "காதல் கொண்டவர் காதலியிடம் காதலினைப் பகிரும் முன் இழப்பினை அடைந்துள்ளார் எனில் அவருக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும்???... "........

கவிதையினை வாசித்த ராஜிக்கு அமுதனின் மேல் காதல் துளிர்த்தது... அவளின் ஆழ் மன எண்ணங்கள் அவளின் காதலுக்குத் தூபம் போட இக்கவிதை அதற்கு பன்னீர் சிந்தியது.... அவளின் விழியில் நிற்காது நீர் வடிய அதனைத் துடைக்கக் கூடத் தோன்றாது அப்படியே கவிதையில் மெய் மறந்து இருந்தாள்...

வெளியில் கார் சப்தம் வரவே வேகமாய் அனைத்தையும் இருந்த இடத்தில் வைத்தவள் அதன்பின் அறையினை மூடி வெளியில் வரும் சமயம் அமுதன் அறைக்குள் நுழைந்தான். உள்லே நுழைந்தவன் முகம் கேள்வியாக ராஜியினைப் பார்க்க... ராஜியின் கண்களில் வலி... காதல்... மகிழ்ச்சி... எனப் பலவித உணர்வுகள் வந்து போக அமுதன் அவளின் விழிவழி செய்தியில் தடுமாறினான். ராஜி அவனை இமைக்காது பார்க்க அமுதன் தான் தன்னை மீறி எதுவும் நடந்துவிடும் என்று சுத்தம் செய்ய குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். ராஜிக்கு அவன் சென்றது கூட நல்லது தான் என எண்ணி பால்கனிக்குச் சென்று விட்டாள் தனிமை வேண்டி......



கையில் ஏந்துவான்💜



தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி😍


Hiiii drs...

Frst sry to all... mudincha varaikum secram ud poda try panra.. exam studies pokuthu.. athan late.. really sry to all..

Aprom story ud kettu neenga msg panrathu enaku romba happyy.. kandippa free time la type pani ud kudukuren.. kochikathinga drssss.. love u all😍😍😍😍


Thanks a lot💜


 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
21802

ஹாய் மக்களே😁

என் மேல் கோபம் இருந்தா வரும் தீப ஒளி திருநாள் முன்னிட்டு மறப்போம் மன்னிப்போம் 😉

அமுதனும் ராஜியும் உங்களை தீபாவளிக்கு பாக்க வராங்க😅...

ரீடர்ஸ் : ஒரு நாளைக்கு எதுக்கு இந்த சீன்😏

அமுதன் : அப்படித்தான்.. கெத்து முக்கியம்😎

ராஜி to அமுதன் : ஓரமா போங்க நீங்க😬...

ராஜி : மக்களே வாரம் ஒரு நாள் (எந்த கிழமை டி தங்கம் 😆... மீ☺: புதன் அக்கா😁)

ஆஹ்ன் இனி புதன் வருவோம்😉...

அட்வான்ஸ் தீப ஒளி வாழ்த்துகள் 🔥

நன்றி மக்களே🙏
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22363


அத்தியாயம் 13


பால்கனியில் நின்று கொண்டிருந்த ராஜியின் மனதினிலே ஆயிரமாயிரம் யோசனைகள்...! தன் காதலினை அறிந்து முழுதாக ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. ஆனால் அவளின் மன ஓட்டங்கள் அமுதனின் காதல் பற்றியே இருந்தது.. காதலில், தான் காதலிப்பவரின் வலி மட்டுமே பிரதானமாய் இருக்குமல்லவா??

அப்படித்தான் ராஜியின் காதல் அமுதனின் வலியினை எண்ணி மனதிற்குள் கலங்கியது...
வெளியில் வந்த அமுதன் ராஜி இன்னும் பால்கனியில் நின்றிருக்கக் கண்டு அவனும் அவ்விடம் செல்ல... எங்கே தானிருக்கும் மனநிலையில் அவனை அணைத்துக் கதறி விடுவோமோ என்று எண்ணியவள் அவன் முகம் பார்க்காது உள்ளே சென்று விட்டாள்.

அமுதனுக்கு அவளின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தாலும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அடுத்த நாள் வேதாவின் திருமணம் செல்லும் வரையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது.


இடையில் தானறிந்த விவரங்களினை பரணியிடம் கூறிய ராஜி தனது காதலினை மட்டும் மறைத்துவிட்டாள். அதனை அறிந்த பரணி அண்ணனின் நடவடிக்கைகளுக்கு முழுதாகக் காரணம் அறிந்து கொண்டான். ஆனால் அவனுக்கு இன்னும் புரியாத ஒன்று யாரையும் கட்டிக் கொள்ள மறுத்த தமையன் ராஜியினை மட்டும் கட்டிக் கொள்ள சம்மதித்தது தான். அதனை மேலும் யோசிக்காது கிடப்பில் போட்டவன் "அப்பெண் யாரென தெரிந்ததா ராஜி", எனக் கேட்டான்.


"உன் அண்ணன் விவரமா யாரு பெயரும் போடல.. ஆனால் அந்த பெண் இப்போ உயிரோட இல்லைன்னு மட்டும் தெரியுது.. அவரோட வலியும் புரியுது", ராஜி கூறினாள்.


"அண்ணாவோட மனசை மாத்துறது என் பொறுப்பு ராஜி. அவருடைய மனசில் இருக்க வலியைக் கண்டிப்பா குறைப்பேன்", பரணி கூற ராஜி அவனை அணைத்துக் கொண்டாள்.


வேதாவின் வீட்டில் யுவா அவனறையில் கிளம்பிக் கொண்டு இருக்க... ரம்யா, யாருக்கோ திருமணம் என்ற இயந்திர கதியில் கிளம்பிக் கொண்டு இருக்க.. வேதா மனம் நிம்மதியில் இருந்தாலும் பலவித குழப்பமான இந்த சூழ்நிலையில் திருமணம் நடப்பதினை நினைத்து வருந்தவே செய்தான்.


மணப்பெண் கோலத்தில் இருந்த ரம்யாவினைக் கண்ட சசி அவளுக்கு நெட்டி முறித்து கன்னத்தில் அஞ்சனம் இட்டாள். அந்த சமயம் யுவா உள்ளே நுழைந்தவன் "ரம்யா ஹாசம்.. சாரி அண்ணி அழகா இருக்கீங்க", என சிரித்துக் கொண்டே கூற முறைக்க முயன்று தோற்றாள் ரம்யா.


ரம்யாவிற்கு யுவா, அவளின் தோழிகள் போன்று நெருங்கிய தோழன். அவனுடன் இயல்பில் வரும் இணக்கம் வேதாவுடன் வந்ததில்லை. இது நட்பில் உண்டான பழக்கம். ஆனால் வேதாவிடம் இன்னதென்று அறியாததால் அதிகம் பேச மாட்டாள். அவள் வேதாவினைக் காதலிப்பதினை அறிந்த நாள் இன்றும் மனக் கண்ணில் வந்து போனது.....!!!


கல்லூரி படிக்கும் சமயம் ராஜியுடன் ரம்யா சசி ஊட்டி செல்லத் திட்டமிட வேதா தான் அவர்களினை அழைத்துச் செல்கிறேன் என்று கூறி அழைத்துச் சென்றான். அவ்விடம் பல உரையாடல்கள் விளையாட்டுகள் புகைப்படம் எடுத்தல் என அழகாக செல்ல... இரவு ஹோட்டலில் மூன்று பெண்களும் ஒரு அறையில் இருக்க.. பக்கத்து அறையில் வேதா தங்கி இருந்தான். மூவரையும் பின் தொடர்ந்தான் ஒரு இளவயது ஆண் அவனின் இரு நண்பர்களுடன். வேதா அறியாத வண்ணம் அவர்கள் பின் தொடர்ந்தனர்.


அவர்களினை வேதா கவனித்தாலும் அப்பொழுது பெரிதாக நினைக்கவில்லை. இரவு நேரம் தூக்கம் கலைந்த ரம்யா ஜன்னலின் அருகில் நின்று வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளின் அறைக் கதவு தட்டப்பட இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று நினைத்து ரம்யா கதவினைத் திறக்க அங்கு யாரும் இல்லை.

யோசித்தவண்ணம் கதவினை அடைக்கச் செல்ல.. குழந்தை அழும் குரல் கேட்டது.
திடீரென குழந்தையின் குரல் கேட்டு கதவினைத் திறந்தவள் குரல் வரும் திசையில் நடக்கலானாள். அவளின் கொலுசு சத்தமும் குழந்தையின் அழுகுரல் மட்டுமே அவ்விடம் நிரம்பி இருந்தது.
அந்த ஹோட்டல் முழுவதும் நைட் லேம்பில் இருந்தாலும் அடையாளம் காணும்படி தான் வெளிச்சம் இருந்தது. ரம்யா செல்ல செல்ல குரல் தூரம் சென்று கொண்டே இருந்தது. அவள் கடைசியாய் வந்து நின்றது அந்த ஹோட்டலின் கார் செட்டின் அருகில்.

குழந்தையின் அழுகுரல் நின்று இருந்தது. சுற்றிலும் தேடியவள் அதன் தாயிடம் சென்று விட்டது போலும் என்று எண்ணி திரும்ப அவளின் வாயினைப் பொத்திய வண்ணம் ஒரு கரம் அவளை வளைத்து காரினுள் செலுத்த...

அவளுக்கு ஒரு நொடியில் என்ன நடக்கின்றது என்று ஒன்றும் புரியவில்லை... அவளை காரினுள் செலுத்தியவன் அவளின் பின் புறம் இருக்க, அவளின் முன்புறம் மற்றொருவன் வந்தான். அவளைப் பார்த்தவன் "ஹேய் இவள் இல்லைடா", எனக் கூற.. அதற்குள் அவளின் வலிமை கொண்டு முன்னிருந்தவனின் அடிவயிற்றில் எட்டி உதைக்க.. அதில் சினம் கொண்டவன் அவளினை அறைந்ததில் மயங்கி பின்னிருந்தவன் கரத்தினில் மயங்கினாள்.


முன் சீட்டில் அமர்ந்து இருந்தவன் அவர்களினை சில கெட்ட வார்த்தைகளினில் திட்டி, இவளை வெளியில் கொண்டு போய் போடுங்கடா எனக் கூற.. மற்ற இருவரும் ரம்யாவினை வெளியில் கொண்டு வந்து செட்டினை தாண்டும் சமயம் அங்கு வந்து சேர்ந்த வேதா ரம்யாவின் நிலையினைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்தவன் அடுத்த நொடி அவர்களினை நோக்கி ஓட.. வேதாவினைக் கண்ட இருவரும் அவளினைக் கீழே போட்டுவிட்டு ஓட அந்த நிலையில் அவர்களினை ஹோட்டலின் வெளியில் வரை துரத்தியவன் அவர்கள் வெகு தூரம் ஓடிவிட்டது அறிந்து...

ரம்யாவினை அப்படியே விட்டுவந்த தன்னையே நொந்து கொண்டான். ரம்யாவினை தன் கரங்க்களில் ஏந்தியவன் இந்த இரவில் தங்கைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடாது என எண்ணியவன் அவனறைக்கு அவளை தூக்கிச் சென்று விழிக்க வைக்க.. முதலில் தெளிவில்லாது இருந்தவள் அதன் பின் நடந்தது நினைவில் வர உடலில் நடுக்கம் வர ஆரம்பித்தது. வேதா அவளையே பார்த்த வண்ணம் இருக்க வேகமாக அவனை அடைந்தவள் இருக்க அணைத்துக் கொண்டாள்.

நடந்தவற்றினை வேதாவும் கேட்கவில்லை. ரம்யாவும் அவனிடம் எதுவும் கூறவில்லை.
ரம்யாவிற்கு உறவென ஒருவரும் இல்லை. அவளின் தனிமையில் பல அதிர்ச்சி தரும் கனவுகள் வந்து இருக்கின்றன. அன்றெல்லாம் அவளுக்கு அணைக்க அருகில் ஒருவரும் இருந்தது இல்லை. மகிழ்ச்சியினை மட்டுமே வெளிப்படையாய் காட்டிக் கொள்ளும் ரம்யா துன்பங்களினை யாரிடமும் காட்டியதில்லை. இன்று அவளின் ஆழ் மனதில் வேதாவின் மேல் இருந்த அன்பா.. காதலா.. ஏதோ ஒன்று அவளை உந்த அவனை அணைத்து இருந்தாள். அவளின் அணைப்பில் எதனையும் அறியாத வேதா அவளை இயல்பாய் அணைத்து ஆறுதல் அளித்து அவளது அறைக்கு செல்லுமாறு கூறினான்..

நடந்தவற்றினை நண்பனிடம் கூறி அது சம்பந்தமாய் தகவல் திரட்ட அவனுக்குக் கிடைத்த பதில்... தூக்கி வந்த இருவரில் ஒருவனது காதலி என எண்ணி ரம்யாவினை பின்னிருந்து இழுக்க.. கோபம் கொண்ட ரம்யா அவனை உதைக்க.. அதில் அவன் அவளை அறைய ரம்யா மயங்கி விட்டாள் என்பது தான் அவனுக்குத் தெரிவிக்கப்பட்ட பாதி உண்மையும் பல மறைக்கப்பட்டவையும். அதனை அறிந்த வேதா அந்நிகழ்வினை அதோடு விட்டுவிட.. ரம்யாவும் அதனை தோழிகளிடம் தெரியப்படுத்தாமல் இருந்தாள்..

அன்றிலிருந்து ரம்யா வேதாவினை விரும்பத் தொடங்கி இருந்தாள்...


அவர்கள் யாருக்கும் தெரியவில்லை... அன்று சரியாக விவரம் தெரிந்து உண்மை களைந்து இருந்தால் இவர்களின் வாழ்வில் நடந்த?? இனி நடக்க இருக்கும் பல சம்பவங்கள் இல்லாது நிம்மதியாய் இருந்து இருக்கும்... ஆனால் விதி யாரை தான் விட்டது???,....

கையில் ஏந்துவான்!!

hii drsss..
ini every week wednesday கையில் நான் ஏந்தும் காதல் நீதானே ud kandippa undu!!
tq and love you all!!
kandippa comment pannunga drs...

 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22889



அத்தியாயம் 14



வேதா, யுவா இருவரும் பட்டு வேஷ்டி சட்டையிலும், சசி ஆகாய வண்ண நிறத்தில் கோல்டன் வொர்கிங் செய்த புடவையும், ரம்யா மணப்பெண்ணுக்கான வேலைப்பாடுடன் ஆன தங்க நிற ஜரிகை உடைய புடவையிலும் என வீட்டின் வெளியில் வர… சங்கர்தேவன் அந்த நேரத்திற்கு வரவும் அனைவரும் ஒரு காரில் ரிஜிஷ்டர் ஆபிசிற்குச் சென்றனர். அங்கு இவர்களுக்கு முன்னரே வருகை தந்திருந்தனர் ராஜி அமுதன் பரணி மூவரும்.


அமுதன் வெண்மை நிற சட்டை மற்றும் கருநீல நிற ஜீன்ஸ் சகிதம் கம்பீரமாய் நிற்க.. ராஜி மயில் வண்ண வொயிட் ஸ்டோன் பதிந்த பட்டுப் புடவையில் புன்னகை உருவாய் நின்றிருந்தாள். பரணி ரெட் வித் பிளாக் என இருக்க சசியின் ரெட் வித் பிளாக் சாரியில் உள்ளே சிரித்துக் கொண்டான். ரம்யாவினைக் கண்ட ராஜி ஓடி அவளை அணைத்துக் கொள்ள அந்த நொடியில் ரம்யாவிற்கு மனதில் இருந்த சஞ்சலம் யாவும் அகன்று முழுமனதுடன் வேதாவினைக் மணந்து கொள்ள உடன் நடந்தாள்.
வேதா அமுதனை அர்த்தத்துடன் பார்க்க அமுதன் வேதாவின் விழிகளினை மட்டுமே அழுத்தமாய் பார்த்துவிட்டு ரிஜிஸ்டரிடம் திரும்பி உரையாட.. வேதா ரம்யாவின் முகத்தினை இதில் உனக்கு சம்மதம் தானே எனும் படி நோக்க.. ரம்யா அவனை முகம் சுளித்தால்.. வேதா அவளின் சுளிப்பில் புன்னகை வரவும் தனது முகத்தினை கீழே குனிந்து கட்டுப்படுத்தவும்.. ராஜி, “ஹேய் என்ன டி என் அண்ணாவ சைட் அடிக்குற..” எனக் கூற திரும்பிய ரம்யா ராஜியினை முறைக்கவும்.. ராஜி ரம்யாவின் பார்வையினைக் கண்டு தப்பிக்கும் வண்ணம் அவளை அறியாது அமுதனின் அருகில் அவனை நெருங்கிய வண்ணம் நின்று “எல்லாம் முடிஞ்சதா.. இனி கையெழுத்து போட்டா ஓவர் தானே “, எனக் கூற அமுதன் அவளின் செயலில் சுற்றி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு “என்ன பன்ற” என அடிக்குரலில் சீறினான்.
அவனின் குரலில் இருந்த பேதத்தினை உணராதவள் “இன்னும் என்ன பன்றீங்க? குடுங்க கையெழுத்து போடனும்ல” எனக் கூறிக் கொண்டே அமுதனைக் காண.. அவன் முகத்தில் இருந்த செய்தியில் கீழே குனிந்தாள்.
அமுதன் மேஜையில் குனிந்த வண்ணம் சரிபார்த்துக் கொண்டு இருக்க அவனது கரத்தினைப் பற்றி புத்தகத்தினை எடுக்க விடாது செய்தது மட்டுமின்றி அவன் குனியவும் அவன் தோளில் மற்றொரு கரத்தினைப் பதித்து இருந்தாள். அந்த நிலையினை கண்ட ராஜி அவனை திரும்ப பார்க்கும் சக்தி இன்றி மற்றவர்களினை நோக்கி சன்னமாக அசடு சிரிப்பு சிரித்துக் கொண்டு சசியின் அருகில் நின்று கொண்டாள்.


வேதாவிடம் கையெழுத்து போட அமுதன் கொடுக்கவும் அதனை கையில் வாங்கிய வேதா ரம்யாவினைத் திரும்பி பார்த்தான். அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாது போக வேதாவினைக் கையெழுத்துப் போடும்படி சங்கர் கூற.. வேதா புத்தகத்தில் பேனாவினை வைத்தவன் அதற்கு மேல் எழுத மனம் வரவில்லை..
வேதாவின் இடது கரத்தில் திடீரென பிணைப்பினை உணர்ந்தவன் குனிந்து பார்க்க.. ரம்யாவின் வலது கைவிரல்கள் வேதாவின் இடது ஐவிரலுடன் பிணைக்கப் பட்டிருந்தது.. வேதா ரம்யாவின் முகத்தினைக் காண எந்த உணர்வும் இல்லை. ஆனால் அவளின் கரத்தின் அழுத்தம் சம்மதம் கூற வேறு எதனையும் யோசிக்காத வேதா தனது திருமண கையெழுத்தினை அச்சிட அவனைத் தொடர்ந்து ரம்யா அச்சிட என அவர்களின் திருமணம் அனைவரின் மகிழ்ச்சியுடன் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.



இதனை கண்டும் காணாமலும் இருந்த அமுதன் அதன் பின்னர் ஆல்ரெடி புக் செய்து இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவினை முடித்தவுடன் வேதாவின் இல்லம் நோக்கி பயணித்தனர். ரம்யா வேதாவுக்கு சம்மதத்தினை செய்கையினில் உணர்த்தி இருந்தாலும் அதன் பின் அவனிடம் துளியும் உரையாடவில்லை. வேதாவும் அவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இரவு வரையிலும் ராஜி பரணி ரம்யா மற்றும் யுவா நால்வரும் உரையாடிக் கொண்டு நேரம் அப்படியே கழிய.. வெளியில் சென்று இருந்த அமுதன் ராஜியினையும் பரணியினையும் அழைத்துக் கொண்டு புறப்பட.. ராஜி ரம்யாவினை கட்டி அணைத்தவள் தமையனிடம் விழிகளில் மொழி பரிமாறிக் கொண்டு கிளம்பினாள்.
பரணி சசியினை பார்க்கும் பார்வையினில் வேறுபாடு அறிந்த யுவா மனதிற்குள் மென்மையாய் புன்னகைத்துக் கொண்டான். என்னதான் சசி கலகலப்பான குணமாயினும் காதல் என்பதிலெல்லாம அவளுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. ஏன் வீட்டில் கூட இவளை திருமணம் செய்து கொள்ள இன்றுவரை தயங்குகின்றனர். இவளின் அதிரடி குணமே காரணம். என்னதான் விருப்பப் படி பேசனிங் படித்தாலும் க்ரைம் நாவல் எழுதும் ஒரு சிறந்த எழுத்தாளர். பேஷனிங் எவ்வளவு பிடிக்குமோ அதுக்கு மேல் ஒரு படி எழுத்துத்துறையினை விரும்புபவள். அவள் எழுத்துக்களில் அடிமையாய் உள்ள யாவருக்கும் இவள் தான் எழுத்தாளர் என்று தெரியாது. தெரிந்த மூன்றே ஜீவன்கள் யுவா ராஜி மற்றும் ரம்யா. ஆனால் இன்னொரு ஜீவன் அதனை அறிந்துவிட்டது என அவளறியாள். அது வேறு யாருமல்ல பரணிதான். (காரணம் அவனே சசிகிட்ட லவ் சீன்ல சொல்லுவான் அப்போ தெரிஞ்சிக்கோங்க)


அனைவரும் கிளம்பியபின் யுவா ரம்யாவிடம் கூறிக் கொண்டு அவனறைக்குச் சென்றுவிட சசியும் அந்த சூழ்நிலையில் எதுவும் கூற தோன்றாமல் பை மட்டும் கூறிக் கொண்டு சென்று விட்டாள். ரம்யா அவளறைக்குச் செல்ல வேதா அங்கு தான் இருந்தான். ரம்யா தயங்கி கதவின் வாசலிலேயே நிற்க.. வேதா அருகில் வரும்படி இமைகளை அசைத்தான்.
ரம்யா அவனசைவில் மெய்மறந்து அவனருகில் செல்ல.. உனக்கு எப்போ என்னை முழுமனசோட ஏத்துக்க தோணுதோ அப்போ நம்ம அறைக்கு வரலாம். நான் உன்னை போர்ஷ் பண்ண மாட்டேன். ஆனால் நீ என்னோட மனைவி அதை எப்பவும் மனசுல வச்சுக்க. என்று கூறியவன் அவளின் பதிலை எதிர்பாராது அவளின் பயமும் தயக்கமும் நிரம்பி வழிந்த கன்னங்களினைப் பற்றி நுதலில் இதழ் பதிக்க.. ரம்யாவின் குண்டு விழிகளிரண்டும் வியப்பில் விரிய.. வேதா அவளினை ஆழ்ந்து பார்த்து “இதுக்குலாம் நான் பர்மிஷன் கேட்க மாட்டேன்” எனக் கூறி புன்னகைத்துக் கொண்டு செல்லவும் அவனின் புன்னகையில் என்றும் போல் விழுந்து தனது நுதலின் ஈரத்தினை வலது விரல்கள் கொண்டு உணர்ந்தவள் அவனின் காலம் கடந்த புன்னகையினை மனதில் நினைத்துக் கொண்டே உறங்கிப் போனாள்.



வீட்டினை அடைந்த அமுதன் யாருக்கும் நிற்காமல் அவனறைக்கு விரைந்து சென்றுவிட.. பரணியும் ராஜியும் ராணியுடன் சிறிது உரையாடிக் கொண்டு சுமியினை பார்த்து சிறிது நேரம் அவளுக்கு கேட்காதென்றாலும் அவளிடம் உரையாடுவதனை நிறுத்தவில்லை ராஜி. அமுதனறியாமல் தான் ராஜி இந்த செயல்களினை செய்வது. பரணியும் ராஜியுடன் இணைந்து இந்த செயல்களில் பங்கு கொண்டான். இதன் விளைவு ராஜிக்கு வீட்டில் இரு நண்பர்கள். பரணி மற்றும் சுமி. ராஜி அவளது அமுதனின் மீதான காதலையும் சுமியிடம் மட்டுமே கூறி இருந்தாள். ஆனால் அதில் பயனில்லையே..


இரவு பரணியிடம் உரையாடிவிட்டு அறைக்குள் வந்தவள் கண்டது.. அமுதனின் ஏறி இறங்கும் ஆழ்ந்த மூச்சினை.. உறங்கியவனின் சிகையினில் படர்ந்திருந்த முடிக் கற்றைகளினை சீர் படுத்தியவள்.. அவனின் அருகில் அவன் முகம் பார்த்தவண்ணம் காதல் கொண்ட மனதுடன் நீண்ட நேரம் கழித்து உறங்க்கிப் போனாள்.


அன்றிரவு யாருக்கும் காத்திராமல் வானம் ஆழ்ந்து கருமை கொள்ள பின் அடுத்த நாளினை ஆதவனின் வருகை வண்ணமயமாக்கியது… ஆனால் இவர்களின் வாழ்க்கை ஆழ்கருமை படிகளினிலே முதல் படியினில் அடி எடுத்து வைக்கின்றது…

கதை இனிதான் சுவாரஷ்யத்துடன் நகரும் என்பதால் இரண்டு நாளுக்கு ஒரு அத்தியாயம் என செல்லும்.. “நீ சொல்ல மட்டும் தான் செய்வ” எனக் கேட்கும் உங்கள் மைண்டு வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன். முடிந்தவரை என் ஸ்டடிஸ் ஓட இதை கண்டினியூ பன்றேன்.. இதுவரைக்கும் ஆதரவு தந்தவர்களுக்கு மிக்க நன்றி. முக்கியமா அடுத்த யூடி கேட்டு என்னை டைப் செய்யத் தூண்டும் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி…


 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23136


அத்தியாயம் 15

அதிகாலை பனி சூழ்ந்துள்ள வேலை அமுதன் வீட்டின் வெளிப்புறத்தில் ஜாக்கிங் செய்யும் நேரம் பால்கனி அருகில் வந்த ராஜி அவனைக் கண்டாள். மெல்லிய கிரீம் கலர் டீசர்ட் மற்றும் கருநீலநிற லோயர் சகிதம் கைகளில் ஸ்டாப் வாட்சுடன் தலையில் ஸ்கார்ப் உடன் வந்தவன் அருகில் இருந்த கல்மேடையில் அமர்ந்தான். சிறிது நேரம் வானம் பார்த்து மேகங்களின் அழகினிலே தன்னை தொலைத்தவன் கதிரவனின் ஒளி இல்லாது போக குளிருக்கு இதமாய் அருகில் செந்தழலாய் எரிந்து கொண்டிருந்த தீமூட்டலில் விழிகளினைச் செலுத்தினான். அந்த நொடி அவனது இதழில் மழைத்துளி பட்டுச் சிதறியது. சிதறிய துளிகளினை உணர்ந்தவன் என்றும் தன்னை தழுவி இருக்கும் இறுக்கம் தளர்ந்து புயத்தினை லேசாக்கி விழிகளினை மென்மையாக்கி கரங்களினை வான் நோக்கி உயர்த்தி ஆழ்ந்து அனுபவிக்கத் தொடங்கினான். தூரத்தில் இருந்த பார்த்துக் கொண்டிருந்தவள் மழை வரத் தொடங்கியதை உணர்ந்து அவனை உள்ளே வர சொல்லி அழைக்க படிகளில் ஓடினாள். ராஜி படிகளில் ஓடுவதினைக் கண்ட பரணி, அண்ணனைப் போல் இவளுக்கும் மழை என்றால் பிரியம் போல என எண்ணி "ராஜி அப்போ உனக்கும் ரெயின்ஸ்நாக் எடுத்து வைக்கவா" எனக் கேட்க.. ராஜியும் "ஆஹ்ன் எனக்கும் வேணும் சூடா.. எடுத்து வை", என்று கூறிவிட்டு அவனிடம் நிற்காது ஓடி விட்டாள்.

ஓடியவள் கண்டது.. தான் எந்த இடத்தில் பார்த்தமோ அதே இடத்தில் அமர்ந்து இருக்கிறானே என எண்ணியவள் வேகமாய் அவனிடம் சென்று அவன் சிகைக்கு தனது புடவையினை குடையாக பிடிக்க.. ஒருவித போதையினில் ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டு இருந்தவன் திடீரென தலை உயர்த்திப் பார்க்க.. செந்நிற உடை தான் விழிகளுக்குத் தெரிந்தது.. குனிந்து பார்க்க ராஜியின் முகம் அவன் முகம் அருகில் இருக்க.. ஒரு நொடி அவனது விழியில் மின்னல் வர.. அது பிரம்மையோ எனும்படி மறைந்தும் போனது.. அவ்விடத்தினை சினம் ஆட்கொண்டது.. அவனின் மின்னல் விழிகளினை பார்க்கத் தவறிய ராஜி சினம் கொண்ட விழிகளினை பார்க்கத் தவறினாளில்லை. அவனின் விழிகளின் வீரியம் தாங்காமல் பின்னே நகர.. நகர்ந்தவள் கீழெ இருந்த தோட்டம் அமைக்கும் சின்ன திட்டினை மறந்து இடரி விழ.. விழுந்தவள் அமுதனின் தலையில் பொருத்திய புடவையுனூடே அமுதனின் கழுத்தினை கீழே விழும் உந்தலில் பிடித்தபடி சரிய.. அவளின் உடனடி தாக்குதலில் தாங்கும் சக்தி இல்லாது அமுதனும் அவள் மேலேயே சரிந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளினை சங்கமித்த வண்ணம் இருக்க.. மழைத்துளிகள் அளவு பெரிதாக மாறி மழை வலுத்தது.. அவளினை மழை நனைக்கா வண்ணம் அமுதன் குடையாய் இருக்க.. அமுதனின் விழியினில் தன்னைத் தொலைத்தவளுக்கு எழ மனம் வரவில்லை. மழை நீர் தன் உடலினை முழுவதும் நனைத்த பின்னர் உணர்ந்த ராஜி.. "அய்யோ மழை.. இப்படி நீங்க நனையுறதும் இல்லாம என்னையும் நனைய வச்சீட்டீங்களே.. எழுந்திரீங்க" என மெல்லிய குரலில் முணுங்க.. அதுவரை அவளது விழிகளில் மட்டுமே தன்னை நிலைத்திருந்தவன் அதன் பின்னரே சுயம் கொண்டு அவளை விட்டு எழுந்து நின்றவன் திரும்ப அவனமர்ந்து இருந்த இடத்திற்கு நகர... "உள்ளே வாங்க.. ஜுரம் வந்துடும்", எனக் கூறியவளின் அடுத்த வார்த்தைகள் அமுதனின் சுடும் விழிப்பார்வையில் தாமாக மூடிக் கொண்டது. "உள்ளே போ" என கட்டளையிடும் தொனியில் கூறிவிட்டு அவன் விட்ட பணியினை.. அதாவது வான் நோக்கி முகம் சாய்த்து விழிகள் மூடி மழையினை ஆழ்ந்து அனுபவிக்கத் தொடங்கினான்.

நேரம் கழிய, மழை மிக வலுத்ததே அன்றி குறைந்தபாடில்லை. அமுதனின் கனவுலகத்தினில் சிணுங்களுடன் சப்தம் கேட்க முதலில் ஏதோ என நினைத்து விட்டுவிட்டான். அவ்வொலி அதிகமாக விழி திறந்தவன் கண்டது.. ராஜி, நின்றிருந்த இடத்தில் மழையின் வீரியம் தாங்காது குளிர் தாங்காது அப்படியே நின்று இருந்தாள். குளிரில் பற்கள் ஒலி எழுப்ப, உடல் நடுங்க விழிகளினை மூடிய வண்ணம் நின்று இருந்தாள். அவளினை அந்நிலையில் கண்டவன் சடுதியில் கரங்களினைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டினுள் விட்டான். பரணி, அமுதன் உள்ளே வரக் கண்டு துணிடினைத் தர, அதனை வாங்கிய அமுதன் ராஜியின் தலயினைத் துவட்டி பின் மற்றொரு துண்டினை வாங்கியவன் அவளின் முகத்தில் அறைந்து சாற்றிவிட்டு அறைக்குத் திரும்பினான். சுயமில்லாது நின்றிருந்த ராஜி அவனின் துண்டின் வீரியத்தில் சுயம் அடைந்து நிமிர அதீத கோபத்துடன் படிகளில் ஏறிக் கொண்டு இருக்கும் அமுதன் தான் விழிகளில் தென்பட்டான். அதுவரையிலும் பார்வையாளனாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த பரணி ராஜியினை உடை மாற்றி வருமாறு பணிக்க... திரும்ப அவன் முன்பு நின்றால் தன்னை அறைந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை என எண்ணி பாவமாக முழிக்க.. அவளின் உணர்வினைப் படித்த பரணி சுமியின் அறைக்கு அழைத்துச் சென்று அவளது உடையினை எடுத்துக் கொடுக்க.. அதனை மாற்றியவள் ஹீட்டர் கொண்டு தலையினை சீர் செய்து பரணியுடன் தொலைக்காட்சி முன்பு வந்து அமர்ந்தாள்.

"ஹேய் ரெய்னிஸ்நாக் கொண்டு வாடா.. லைட் ஆ பசிக்குது", என ராஜி கூற.. சரி எனக் கூறியவன் ஃபிரிட்ஜில் இருந்து இரண்டு ஸ்கூப் சாக்லெட் பிலேவர் ஐஸ் கிரீமினை எடுத்துக் கொண்டு வந்து ராஜியிடம் கொடுக்க.. பீங்கான் குவளையில் வாங்கியவள் தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டே ஒரு ஸ்பூன் எடுத்து வைத்தவள் அந்த ஜில்னஸில் வாயினை ஊதிக் கொண்டே சோபாவில் இருந்து எழ.. பீங்கான் குவளை அவளது மடியில் இருந்து விழுந்து உடையும் ஒலி வீட்டின் நாலாபுறமும் கேட்டது.. பரணி என்னவானது இவளுக்கு என்ற ரீதியில் பார்க்க..

"ஏண்டா.. நீங்களாம் மனுசனா.. ஒருத்தன் என்னடான்னா பேய் மழையில ஏதோ சொர்க்கத்தில மிதக்குற மாதிரி ஆக்டிங் குடுக்குறான். அதுமட்டுமில்லாம என்னையும் நனைய விட்டு குலைநடுங்கி வீட்டுக்குள்ள உயிரைக் கையில் பிடுச்சி வந்தா.. இருக்க கொஞ்ச உயிரையும் ஐஸ் குடுத்து எடுத்துடுவ போல என கத்த.. அமுதன் அவள் கூறிய அனைத்தினையும் மாடிப்படிகளினில் கேட்ட படியே வந்தவன் அவளினைக் காணாது அவனுக்கு இரண்டு ஸ்கூப் எடுத்து சுவைத்தபடியே மாடிப்படியில் ஏறத் தொடங்க... இந்நாளில் இரண்டாவது முறையாக "இவன் மனுசன் தானா", என ஆழ்மனதில் கேட்டுக் கொண்டாள் ராஜி. அவன் சென்ற பின்னர் தான் பேசிய வார்த்தைகளின் உண்மையினை உணரத் தொடங்கினாள். அவன் முறைக்கவும், தானாய் தான் மழையில் நின்றோம், மழை தனக்கு பிடிக்காது என்றாலும் நின்றது தனது தவறு தான். அதுமட்டுமில்லாமல் தன்னை உள்ளே அழைத்து வந்ததும் அவன் தான். அவனைக் காரணமின்றி திட்டியது தெரிந்தும் ஒன்றும் கூறாமல் ஏன் தன்னைப் பார்க்காது கூட சென்றவனை நினைத்து கொஞ்சம் நிம்மதி அடைந்து.. இருந்த ஒட்டு மொத்த கோபமும் பரணி மீது திரும்ப.. அவளின் முகத்தில் ஜொலிக்கும் கோபம் கண்டு அவனறைக்கு சென்று கதவினைத் தாழிட்டுக் கொண்டான். அவனின் செயலில் நிம்மதியாய் வாய்விட்டு சிரித்து கீழே கொட்டியவற்றினைத் தானே சுத்த செய்து ராணியிடம் சூடாய் பலகாரம் கேட்டு சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்ல... கதவினைத் திறந்தவள் உள்ளே நுழைந்து பின் தாழிட்டுத் திரும்ப.. அவளினை இருகரம் இழுத்து அணைத்துக் கொண்டது. அமுதன் குலுங்கும் இதயத்துடன் நொடிக்குள் அணைத்திருக்க, அவள் நடப்பதினை உணர்வதற்குள் "சுமி.. நீ திரும்ப வருவன்னு எனக்கு தெரியும்.. எனக்கு தெரியும்" எனக் கூறிக் கொண்டே நிமிர்ந்தவன் கண்டது ராஜியினை...

அறையின் மூலையில் தனது கன்னத்தினை பொத்தியவண்ணம் தேம்பிக் கொண்டு இருந்தாள் ராஜி.. ராஜியின் குண்டு கன்னங்களிலே அமுதன் கரத்தின் ஐவிரல்களின் தடம் ஆழ்ந்து பதிந்து இருந்தது..

ஹாய் ஆல்...

தொடர்ந்து ஆதரவு அளிக்கும் நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி

அடுத்த பதிவு நேரம் கிடைக்கும் பொழுது...
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16


அதிகாலை எழுந்த ரம்யா வீட்டின் அனைத்து வேலைகளினையும் முடித்து யுவாவிற்கு தேநீர் கொடுத்துப் பின் வேதாவின் அறைக்குச் செல்ல, வேதா அங்கில்லை. எங்கு சென்றான் என அறையினை சுற்றி வலம் வந்தவள் கண்டது.. வேதா, அறையுனுள் இருக்கும் குட்டியானத் தனிப்பட்ட அறையில் கையில் ஃபைலும் காதில் இயர்போனுமாய் தீவிரமாய் யாருடனோ உரையாடிக் கொண்டு இருந்தான். அவனின் உரையாடலில் கவனம் செலுத்தாமல் தேநீர் கப்பினை டம்மென மேஜையில் வைக்க.. சப்தம் கேட்ட வேதா அவளினை நோக்கி வேகமாக காலினை கட் செய்தபடி வந்தான்.. வந்தவன் புது மணப்பெண்ணாக கழுத்தில் தொங்கும் மாங்கல்யம் தலையில் சூடிய ஒற்றை செந்நிற ரோஜா என அழகாக மிளிர.. ஏதோ ஒன்று குறைவாய் படவும் ஆழ்ந்து பார்த்தான். அவனின் பார்வைகளினைப் பார்த்துக் கொண்டே இருந்தவள் ஆழ்ந்து பார்க்கவும் விழிகளினை சந்திக்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.
எதனையோ அறிந்துவிட்ட பாவனையில் முகத்தினை மாற்றியவன் அவளின் வலது கரத்தின் விரல்களினைப் பற்றியவாறு கீழே இழுத்துச் சென்றான். அவனின் இழுப்பிற்கு ஓடியவள் என்ன செய்கிறான் என அறியும் முன்னரே பூஜை அறையில் இருந்த குங்குமத்தினை பெருவிரலும் நடுவிரலும் சேர்ந்தபடி எடுத்து அவளது நுதலில் பொறுத்தியவன் மார்பினில் தொங்கிய தாலியினை கையில் எடுத்து அதிலும் திலகமிட்டான். ரம்யா அதுவரையிலும் ஒரு மாய லோகத்தில் இருந்தபடி இருந்துவிட்டு தாலியில் திலகமிட்டது கொண்ட உணர்வில் இம்மியும் இடைவெளியின்றி வேதாவினை நெருங்கி அணைத்தவள் தேம்பி அழத் தொடங்க... அவளின் அழுகையினை எதிர்பார்த்த வேதா உச்சியினில் இதழ் பதித்து முதுகினைத் தடவி ஆறுதலாக இரு கரம் கொண்டு அணைத்துக் கொண்டான்.
பல நிமிடங்கள் கழித்து ரம்யா, ஆசுவாசம் அடைந்தவள் அவனின் முகம் நோக்கி விழிகளில் மன்னிப்பினை யாசிக்க.. வேண்டியதில்லை எனும்படி விழிகளில் உணர்த்தியவன் அவளினை இருக்கையில் அமர்த்தி அருகில் அவளது வலது விரல்களினைப் பிடித்துக் கொண்டே சிலவற்றினை உரைக்கவும் வியப்பில் விழி உயர்த்தியவள் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் துளிகள்.. மொத்தமாய் கூறி முடித்தவன் அவளினை தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள.. ஆழமாய் அவனுக்குள் புதைந்தவள் அவனை நினைத்து நெகிழ்ந்து தான் போனாள்...
கன்னங்களினைப் பொத்திய வண்ணம் அறையின் மூலையில் இருந்த ராஜிக்கு அவனின் மேல் கோபம் மட்டும் வரவில்லை.. மாறாக அவனின் தங்க்கை பாசம் நிழலாட.. எப்படியாவது முயற்சி செய்து சுமியினை இயல்பாய் கொண்டு வரவேண்டும் என மனதினில் நினைத்துக் கொண்டாள்...
அவளினை காயப் படுத்திவிட்டு பால்கனிக்குச் சென்ற அமுதன், தன் கோபத்தினைக் கட்டுப் படுத்தும் வழி அறியாமல் தடுமாறினான்.இனி இந்த தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு இருக்க.. அவனுக்கு அழைப்பு வந்தது.. அழைப்பினை இணைத்தவன் மறுபுறம் கூறிய மொழிகளில் இதுதான் தக்க சமயம் என எண்ணி பிரிவின் முடிவினைத் தொடங்கினான்.
காலை வேளை ஆதலால் ராஜி அவனை சந்திக்க மனமில்லாமல் பரணியிடம் சென்று கன்னத்தின் சிவப்பினை ஏதோ கூறி சமாளித்து உரையாடிக் கொண்டு இருக்க... பரணிக்கு தெரியாத ஒன்றா... இப்பொழுதே அண்ணனின் மனதினில் என்ன இருக்கிறது என்று கேட்டு அறிய வேண்டும் என நினைத்துக் கொண்டவன், இயல்பாய் அவளிடம் உரையாடினான். பின் சமையல் முடிந்து அனைவரும் உண்டு முடித்து அவரவர் வேலையினை பார்க்கத் தொடங்க.. பரனி அலுவலக அறையில் அண்ணனின் முகத்தினை கவனித்தான். இறுக்கம் தளராமல் இருக்க... "அண்ணா, உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கனும்", என்று இழுக்க.. "ம்ம்ம்.. சொல்லு", என அமுதன் கூறவும்
ஆரம்பிப்பதில் தடுமாறிய பரணி ஒருவாறு கேட்டு முடித்து இருந்தான். "அது வந்து.. அண்ணா... நீங்க விரும்பின பொண்ணு யாருன்னு சொல்ல வேண்டாம்... ஆனால் அது யாரா இருந்தாலும் இப்ப உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சி.. அதையே நினைச்சி நீங்களும் வாழாம ராஜியும் நிம்மதி இல்லாம இருக்குறது சரிவராது... இதுக்கு ஒரு முடிவு வேண்டும் அண்ணா?????" எனக் கேள்வியாய் முடித்திருக்க..
பரணியின் கேள்வியினை உள்வாங்கியவன் சற்றும் யோசிக்காமல்... தீர்க்கமாய் "நீ இப்ப எதுக்கு இதை கேக்குறன்னு எனக்குப் புரியுது.. இனி இந்த மாதிரியான செயல் எங்கிட்ட நடக்க வாய்ப்பில்லை.. நான் கொஞ்சம் வேலையா கனடா போக வேண்டி இருக்கு.. அதனால் உன் தோழிய நான் காயப் படுத்த வாய்ப்பில்லை...", இடையில் ஏதோ பரணி கூற வரவும் "இல்லை.. நான் எல்லாம் சொல்லி முடிக்கும் வரைக்கும் நடுவில் பேசாத' என்ற அமுதன், "என் மனசுல என்னைக்கும் என் அவளுக்கு மட்டும் தான் இடம்.. என்னோட காதல் என்னைக்கும் அழியாது.. ஆனால் அதுக்கு உன் தோழிய காயப் படுத்துவேன்னு மட்டும் நினைக்காத.. இந்த கனடா ட்ரிப் முடிஞ்சு வந்ததும் உன் தோழிக்கு தேவையான நல்ல வாழ்க்கைய நான் அமைச்சி தருவேன்.. அதில் டவுட்டே வேணாம்", எனக் கூற.. "அப்போ நீங்க்க விரும்புற பொண்ணு உயிரோட தான் இருக்காங்களா அண்ணா???" வியப்பாய் பரணி கேட்க... "இது என்ன சம்பந்தமில்லாத கேள்வி என எண்ணிய அமுதன் "கண்டிப்பா அவளுக்கு என்னை தாண்டி எதுவும் நடக்க விட மாட்டேன்.. அவளுக்கு எதுவும் ஒன்னுன்னா அவளுக்கு முன்னாடி நான் தான் நிற்பேன்", எனக் கூற..
நடந்த உரையாடல்கள் அனைத்தினையும் கையில் தேநீர் கோப்பையுடன் வந்த ராஜி கேட்டுவிட.. உள்ளே நுழைந்தவள் இருவருக்கும் தேநீரினைக் கொடுத்துவிட்டு செல்ல எத்தனிக்க.. அமுதன் "நாளைக்கு கனடா போறேன்.. உனக்கு உன் அண்ணன் வீட்டில் இருக்க விருப்பம் அப்படின்னா நீ தாராளமா இருக்கலாம்.. வேலை முடிந்து வந்ததும் மத்ததெல்லாம் பேசிக்கலாம். அப்புறம் உன்னை அடிச்சது தப்பு தான். ஆனால் நீ சுமியோட டிரஸ் போட்டதும் தப்பு தான்.. இனி இந்த தப்ப செய்யாத.. இப்ப போ" எனக் கூற..
பரணியின் விழிகளில் ராஜியின் விழிநீர் தப்பவில்லை.. அவனறிந்து கொண்டான்.. அண்ணனின் பதிலினை ராஜியும் கேட்டு விட்டாள் என்று அதுமட்டுமல்ல அவள் அழுகையில் ஒன்றினை உணர்ந்து கொண்டான்.. ராஜி அமுதனை ஆழமாக விரும்புகிறாள் என்று..
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ராஜியினை நினைத்து வருந்துவதா.. இல்லை அண்ணனை நினைத்து கவலை கொள்வதா எனக் குழப்பத்தில் ஆழ்ந்தான் பரணி...
அமுதன் கனடாவிற்கு அடுத்த நாளே அனைவரிடமும் விடை பெற்று சென்றான். நாட்கள் அதன்படி செல்ல... ராஜியின் பலவித யோசனைகளின்படி பரணியும் உடனினைந்து சுமியின் வழக்கத்தினில் மாற்ரம் கொண்டு வந்து வெளியில் அழைத்து சென்று உலகம் அறியும்படி உலாவத் தொடங்கினர். முக்கியமாக இவ்விவரம் அமுதனுக்குத் தெரியாதபடி கமுக்கமாக நடந்து கொண்டனர். சுமியின் அசைவுகளில் எந்த மாற்றமும் இல்லையானாலும் அவர்களின் செயலை மட்டும் நிறுத்தவில்லை.. ஆனால் ஒரு இட்த்தினை மட்டுமே பார்த்த வண்னம் நிலைத்து இருக்கும் கருவிழிகளில் சிறிது அசைவு தெரிந்தது... அதனை அவர்களின் முயற்சிக்கு கிடைத்த கடுகு அளவு பரிசானாலும் சந்தோசமாகவே ஏற்றுக் கொண்டனர்.
இப்படியே சென்று கொண்டிருந்த ஒரு நாள்... ரம்யாவினை வேதா கடைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறியதால், அன்று சசி தனியாக வீட்டிற்கு பயணிக்கும்படி ஆனது... ராஜியினை அவளின் வீட்டில் விட்டவள் அவளது ஸ்கூட்டியினை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல... அவள் செல்லும் வழியில் ஒரு லாரி இடைமறித்து நின்றது... அந்த பக்கம் யாரும் வரவில்லை.. இங்கிருந்து ஹார்ன் அடித்து பார்த்தவள் யாரும் இல்லை போல என எண்ணி இறங்கி பக்கத்தில் யாராவது இருக்கின்றனரா என லாரி அருகில் செல்ல அவளின் முகத்தினில் கர்சிப் வைத்து ஒரு கரம் மூடி அவளின் திமிறல்களை மற்ற கையினில் அடக்கியவன் நொடிக்குள் அவளை கடத்தி இருந்தான்....!


வணக்கம் மக்களே🤗
தங்களின் ஆதரவில் என்றும் அன்புடன் நிவி🤩

 
Status
Not open for further replies.
Top