All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நுஹா மர்யமின் "உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..." - கதைத் திரி

Status
Not open for further replies.

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
என்னோட முதல் கதை... ஆல்ரெடி முடிஞ்சிடுச்சு... பட் இந்த சைட்ல இப்போ தான் போட போறேன்... உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்... படிச்சிட்டு மறக்காம உங்க கருத்த சொல்லுங்க ☺
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைதி - அத்தியாயம் 1
New York City - North America


விடிந்தும் விடியாததுமாய் இருந்த அந்த அதிகாலைப்பொழுதில் குளிர் காற்று முகத்தை இதமாக வருட கையில் ஆவி பறக்கும் காபி கோப்பையுடன் பால்கனியில் வந்து நின்றாள் அவள்.


அந்த பரந்து விரிந்த வானில் வெய்யோனின் உதயத்தை ரசிப்பதில் அவளுக்கு ஒரு அலாதிப் பிரியம். மேற்படிப்புக்காக வேண்டி நியுயார்க் வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. வந்த முதல் நாளிலே ஆரம்பித்த பழக்கம் இது. எழுந்ததும் சூரிய உதயத்தை ரசிக்கும் போது ஏனோ அந்த நாளே நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் என ஒரு எண்ணம்.


இன்றும் அதற்காகவே பால்கனியில் வந்து காத்துக்கொண்டு இருக்கிறாள் அவள். சிதாரா...


பேரழகு என்று வர்ணிப்பதற்கு இல்லாவிட்டாலும் பார்ப்போரை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. அந்த இதமான காலை வேளையின் எழிலை ரசித்துக் கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளின் கைப்பேசி ஓசை.


"இந்த நேரத்துல யாரு கால் பண்றது.." என நினைத்தபடி மொபைலை எடுத்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சி.
ஏனென்றால் அழைத்திருந்தது அவளுடைய ஆருயிர் தோழிகளல்லவா.


"ஹேய்.. வாட் அ சப்ரைஸ்டி.. ரொம்ப நாள் கழிச்சி ரெண்டு பேரும் சேர்ந்து வீடியோ கால் பண்ணி இருக்கீங்க.. ஆமா ரொம்ப அதிசயமா இருக்கு.. ரெண்டு கும்பகர்ணிகளும் முழிச்சிட்டு இருக்கீங்க.. இந்தியால இப்போ டைம் ஆஃப்டர்நூன் 3.30 ஆ இருக்குமே.. இது ரெண்டு பேரும் வயிறு முட்ட சாப்ட்டு தூங்குர டைம் ஆச்சே..." என விடாமல் பேசிக்கொண்டு இருந்தவளை தடுத்தாள் அக்ஷரா.

"அம்மா தாயே.. தயவு செஞ்சி அந்த வாய மூடுறியா.. எங்களையும் கொஞ்சம் பேச விடும்மா.. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த சொல்லத்தான் கால் பண்ணோம்.. முதல்ல நீ எப்போ இந்தியா வர போறாய் அத சொல்லு.." என்றவளின் கேள்விக்கு பதிலில்லை.


"என்னடி பதில காணோம்.. ஏதாச்சும் சொல்லு.." "நீ தானே வாய மூடிக்கிட்டு இருக்க சொன்னாய் அச்சு.." என அப்பாவி போல் பதிலளித்தவளை வெட்டவா குத்தவா என பார்த்தாள் அக்ஷரா. அதற்கு ஒரு படி மேலே சென்று தலையிலே அடித்துக் கொண்டாள் லாவண்யா.

"நீ இன்னுமே இந்த மொக்க ஜோக் அடிக்கிற பழக்கத்த விடலயா சித்து" என‌ கடுப்பாக கேட்டவளிடம், "ஈஈஈ...‌அதெல்லாம் ஜீன்லயே‌ இருக்கிறது வனி... மாத்திக்க எல்லாம் முடியாது..சரி‌ நேரா விஷயத்துக்கு வாங்க...ஆமா எதுக்காக எப்போ இந்தியா வரேன்னு கேட்டீங்க.. இப்போ செமஸ்டர் லீவ்.. நான் கூட வந்து கொஞ்சம் நாள் ஸ்டே பண்ணிட்டு போலாம்னு தான்‌ யோசிச்சிட்டு இருக்கேன்..‌ இன்னும் டேட் ஃபிக்ஸ் இல்ல" என்றதும் தான்‌ அவர்களுக்கு எதற்காக அழைத்தோம் என்பதே ஞாபகம் வந்தது.


"ஆஹ்.. நல்லதா போச்சி அப்போ.. நம்ம ஃப்ரென்ஸ் எல்லாம் சேர்ந்து ஊட்டிக்கு டூர் போலாம்னு ப்ளேன்‌ ‍பண்ணி இருக்கோம்.. எல்லாரும் சந்திச்சி ரொம்ப நாள் ஆகுது.. அதனால் எல்லாருக்குமே ஓக்கே தான்.. நீ மட்டும் தான் மிஸ்ஸிங்.." என லாவண்யா‌ அழைத்ததற்கான விளக்கம் அளிக்க சிதாரா யோசிப்பதைக் கண்டதும் அக்ஷரா அவசரமாக, "இதுல யோசிக்க எதுவுமே இல்ல சித்து.. நீ ஆல்ரெடி இந்தியா வர தானே ஐடியா பண்ணாய்.. சோ நெக்ஸ்ட் ஃப்ரைடே இங்க இருக்கிற மாதிரி கிளம்பி வா.. ஓக்கே தானே உனக்கு" என்க, "வர‌ முடியாதுன்னு சொன்னா மட்டும் விடவா போறீங்க.. நான்‌ இன்னைக்கே டிக்கட் புக் பண்ணுறேன்.. ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு எல்லோரையும் பார்க்க.." என கேலியில் ஆரம்பித்து பின் சந்தோஷமாக பேசி மூவரும் பொழுதைக் கழித்தனர்.


அரட்டை அடித்து முடித்து காலை கட் பண்ணும் போது நன்றாகவே விடிந்து இருந்தது. பின் ஏனைய வேலைகளை முடித்துவிட்டு ஆன்லைனில் இந்தியா செல்வதற்கான டிக்கட்டை புக் செய்தவள் வீட்டாருக்கு அழைத்து வரும் தகவலை தெரிவித்தாள்.


பின் "2 யேர்ஸ் கழிச்சி இந்தியா போறோம். முதல்ல ஷாப்பிங் போய் எல்லாருக்கும் கொண்டு போக ஏதாச்சும் பர்ச்சேஸ் பண்ணலாம்" என நினைத்தவள் தயாராகி கிளம்பினாள்.


Chennai - India


பூஞ்சோலை கிராமம்

காலையிலிருந்தே அந்த வீடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பெண்கள் அனைவரும் ஓடியோடி வேலை செய்து கொண்டிருந்தனர். முற்றத்தில் நின்று மொபைலில் யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தவனை நோக்கி வந்தாள் லாவண்யா. அவள் வந்தது அறிந்ததும் "நான் அப்புறம் பேசுறேன்.. நீங்க எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சிருங்க..." என்று விட்டு மொபைலை பாக்கட்டில் வைத்தவாறு திரும்பினான் ஆதர்ஷ்.



"நீ இன்னும் கிளம்பலயா ஆது" எனக் கேட்டவளிடம், "எங்க கிளம்பலயான்னு கேக்குற நியா" என வினவினான் ஆதர்ஷ்.



தன்னால் இயன்ற மட்டும் அவனை முறைத்த லாவண்யா, "உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லயா ஆது.. நைட் அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே.. சித்து யூ.எஸ்ல இருந்து த்ரூவா இங்க தான் வரா.. சோ அவள பிக்கப் பண்ணிக்க போன்னு..." என்க தலையில் கை வைத்தவன், "ஓஹ்.... சோரி‌ நியா முக்கியமான வேலையொன்னு வந்திடுச்சி..‌அதான் மறந்துட்டேன்.. இரு‌ நான் இப்பதே யாரு கிட்டயாச்சும் சொல்றேன்" என அவசரமாக மொபைலை கையில் எடுத்தான்.



" நீ இப்ப சொல்லி என்ன ஆக போகுது..‌ அவள் ஆல்ரெடி ரீச் ஆகிட்டாள்.. ஏர்போட்ல இருந்து வெளிய வந்து கால் பண்றதா சொன்னாள்.." என கோவமாக பேசினாள் லாவண்யா.



ஆதர்ஷ், "சரி சரி நீ கோவபடாதே நான்‌ ஏதாச்சும் பண்ணுறேன்.." எனக் கூறியும் லாவண்யா சமாதானம் ஆகவில்லை. அந்நேரம் "என்ன மச்சான் ப்ராப்ளம்" எனக் கேட்டவாறு வந்தான் அபினவ்.



அவனிடம் விஷயத்தை விளக்க தான் பார்த்துக் கொள்வதாக கூறிச் சென்றான். பின் யாரையோ மொபைலில் அழைத்த அபினவ், "மச்சான் நீ மீனம்பாக்கத்துக்கு தானே ஏதோ வேலையா போனாய்.. ஏர்போட்ல ஒருத்தங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ அவங்கள பிக்கப் பண்ணி இங்க கூட்டிட்டு வரியா" என்க "சரி நீ நேம் என்ட் எப்படி இருப்பாங்கன்னு சொல்லு" எனக்‌ கேட்டவனுக்கு அபினவ் பதில் சொல்லப்போக அதற்குள் அவனை யாரோ அழைக்கவும், "மச்சான் நீ போய் கால் ஒன்னு தா.. அவங்களே வருவாங்க.. சரிடா இங்க சின்ன வேலையொன்னு.. பாய்..." என அழைப்பைத் துண்டித்து விட்டான்.



அந்தப்பக்கம் இருந்தவனின் கத்தல் எதுவும் அபினவ்வின்‌ செவியை அடையவில்லை. "ப்ச்.. இவன் வேற யாருன்னு டீட்டைல்ஸ் சொல்லாம கட் பண்ணிட்டான்.. எல்லாம் முடிஞ்சி கடைசில என்ன ட்ரைவர் வேலையையும் பார்க்க வெச்சிட்டான்.. எல்லாம் என்‌ தலையெழுத்து.." எனக் கூறிவிட்டு காரை‌ உயிர்ப்பித்தான்‌ பிரணவ்.


Chennai International Airport


இரண்டு வருடங்களுக்கு பின் தாய் மண்ணை மிதித்த சிதாரா மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள்.
இந்த காலத்து பெண் என்பதை நிரூபிக்கும் விதமாகவே உடனே செல்ஃபி எடுத்து Back to India என்ற மெசேஜ்ஜுடன் யாருக்கோ அனுப்பியவள் கையோடு வாட்சப்பில் ஸ்டேட்டஸும் வைத்து விட்டாள்.


பின் லாவண்யாவுக்கு அழைத்தவள் அழைப்பு ஏற்கப்பட்டதும் "நான் ஏர்போட்டுக்கு வெளிய வந்துட்டேன் வனி.. தர்ஷ் அண்ணா எங்க இருக்காரு" என்க "சித்து சோரிடி.. ஆதுக்கு அவசரமா வேலையொன்னு வந்திடுச்சி.. சோ ஆதுவோட ஃப்ரென்ட் யாரோ தான் உன்ன பிக்கப் பண்ணிக்க வந்திருக்காரு... XXXXX இதான் கார் நம்பர்.. ப்ளீஸ்மா கோச்சிக்காதே..." என லாவண்யா கெஞ்ச, "உன்ன வந்து கவனிச்சிக்குறேன்.." எனக் கடுப்புடன் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் சிதாரா. பின் கார் எண்ணைக் கண்டுபிடித்து அதனை நோக்கி சென்றவளின் நடை அங்கிருந்தவனைக் கண்டதும் தடைப்பட்டது.


ஏர்போட்டை அடைந்தவன் அபினவ்வுக்கு அழைத்து, "நான் வந்துட்டேன்..எங்க இருக்காங்கடா" என்க "உன்னோட கார் நம்பர் குடுத்து இருக்கேன்டா.. வெய்ட் பண்ணு வருவாங்க.." என்றான் அபினவ்.
பின் காரிலிருந்து இறங்கி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.


சிறிது நேரத்தில் தன் முன் நிழலாட மொபைலிலிருந்து பார்வையை அகற்றியவன் தன் முன்னே யாரென்றே அடையாளம் தெரியாதவாறு லக்கேஜ்ஜுடன் விரித்து விட்ட கூந்தல், கண்ணில் சன் கிளாஸ் அணிந்து மாஸ்க் போட்டு கறுப்பு ஷேர்ட், ஜீன்ஸ் அணிந்து கையில் ஓவர்கோட், ஹேன்ட்பேக் சகிதம் நின்றிருந்தவளை கேள்வியாய் நோக்கினான்.


❤❤❤❤❤




- Nuha Maryam -
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைதி - அத்தியாயம் 2
தன் முன்னே நின்று கொண்டிருந்தவளை கேள்வியாய் நோக்கியவன்‌ பின் நினைவு வந்தவனாக "நீங்க தான் அபினவ் சொன்னவங்களா... வாங்க கிளம்பலாம்.. உங்க லக்கேஜ குடுங்க.. நான் எடுத்து வெக்கிறேன்.." என்றதும் தான்‌ தன்னிலையை அடைந்தாள் சிதாரா.


"மாஸ்க் போட்டு இருக்கிறதனால அவனுக்கு நம்மள அடையாளம் தெரியல போல... அதுவும் நல்லதா போச்சி... வனி.... இன்னெக்கி உனக்கு இருக்கு..." என நினைத்துக்கொண்டு காரில் ஏறினாள்.


காரில் ஏறியதுமே செய்த முதல் காரியம் லாவண்யாவுக்கு மெசேஜ் அனுப்பியது தான்.


"யாரடி பிக்கப் பண்ண அனுப்பி வெச்சி இருக்காய்... கொஞ்சம் கூட அறிவே இல்லயா... யார என்னோட வாழ்க்கைல திரும்ப சந்திக்க கூடாதுன்னு நெனச்சேனோ அவனயே அனுப்பி வெச்சி இருக்காய்.." என அனுப்பினாள்.


அங்கு வீட்டில் அக்ஷராவுடன் சேர்ந்து அடுத்த நாள் டூர் செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்த லாவண்யா சிதாராவின் மெசேஜ்ஜைப் பார்த்ததும் எதுவும் புரியாமல் விழித்தாள்.


அக்ஷரா, "என்னாச்சு வனி.. என்ன யோசிக்கிறாய்.." என்க அவளிடம் மெசேஜை காட்டினாள் லாவண்யா.


சில நொடிகளில் இருவரும் ஒரே சமயத்தில் "பிரணவ் அண்ணா" என்றனர்.


உடனே இருவரும் ஆதர்ஷையும் அபினவ்வையும் தேடிச்சென்று விசாரித்ததில் அபிணவ் சொன்ன தகவலைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டனர்.


ஆதர்ஷ் அவசரமாக, "சத்தியமா எனக்கு தெரியல நியாமா.. இவன் நான் பார்த்துக்குறேன்னு சொன்னதும் நானும் பிசியாகி பேசாம விட்டுட்டேன்.. இவன் இப்படி செய்வான்னு நெனக்கல.." என்றதும் தோழிகளின் பார்வை அபினவ்வை நோக்கியது.


மூவரையும் பார்த்து இளித்து வைத்தவன், "நான் அத பத்தி யோசிக்கவே இல்ல மச்சான்.. அவசரம்னு நீங்க சொன்னதும் அவன தான் எனக்கு ஞாபகம் வந்துச்சி.. ஏதும் ப்ராப்ளம் இல்லன்னு நெனக்கிறேன்.. நான் பிரணவ்வுக்கு கால் பண்ணி பார்க்குறேன்.." என அங்கிருந்து நழுவினான். இல்லாவிட்டால் யார் மூவரிடமும் அடி வாங்குவது...


இங்கு காரில் ஏறி சிறிது நேரத்திலே சிதாராவின் மொபைல் ஓசை எழுப்பியது.


திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் இவ்வளவு நேரம் காணாமல் போன உற்சாகம் மீண்டும் அவளைத் தொற்றிக் கொண்டது.


இவள் அழைப்பை ஏற்றதும் அந்தப் பக்கம், "ஹேய் மினியன்... உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லாம நீ பாட்டுக்கு கிளம்பி இந்தியா வந்திருக்காய்... நான் வரும் போது கூட நீ சொல்லவே இல்ல.." என்க, "உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் வளர்ந்து கெட்டவனே.. சரி நீ என்ன பண்ணுறாய்.. நா இல்லாம ரொம்ப ஹேப்பியா இருக்காய் போல.." என சிதாரா பேச ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தவனின் நெற்றியில் யோசனை முடிச்சுகள்.


பிரணவ் மனதில், "இந்த வாய்ஸ் நம்ம ரொம்ப கேட்டு பழக்கப்பட்ட வாய்ஸா இருக்கே...யாரா‌ இருக்கும் என யோசித்த வண்ணம் ஃப்ரொன்ட் மிரர் வழியாக சிதாராவை பார்த்தான். மாஸ்க் போட்டு இருந்ததால் அவனால் அடையாளம் காண இயலவில்லை.


"ப்ச், யாரா இருந்தா நமக்கென்ன" என மீண்டும் பாதையில் கவனம் செலுத்தினான். சிதாராவோ அழைப்பில் மூழ்கி இருந்தாள்.


அந் நேரம் தான் அபினவ் பிரணவ்வை தொடர்பு கொண்டான். எடுத்ததும், "மச்சான் ஆல் ஓக்கே தானே.. எதுவும் பிரச்சினை இல்லல்ல... எங்க இருக்கீங்க.." என அபினவ் பதற்றமாக கேக்க, பிரணவ் "எதுக்கு மச்சான் இவ்ளோ டென்ஷனா இருக்காய்.. பக்கத்துல வந்துட்டோம்... ஆல் ஓக்கே.. என்ன பிரச்சினை வர போகுது... நீ கூட்டிட்டு வர சொன்னவங்கட முகத்த கூட நான் பாக்கல இன்னும்.." என்க அந்தப்பக்கம் அபிணவ் பெருமூச்சு விடுவது நன்றாகவே கேட்டது.


பின் அபினவ், "சரி மச்சான். நீ சீக்கிரமா வந்து சேரு.. நாம அப்புறமா பேசலாம்.." என பிரணவ் மேலும் கேள்விகளை அடுக்கு முன் அவசரமாக அழைப்பை துண்டித்தான்.


பிரணவோ, "என்னாச்சு இவனுக்கு..‌எதயுமே முழுசா சொல்லுறான்‌ இல்ல.." என சலிப்பாக கூறிக் கொண்டான்.


சிறிது நேரத்தில் கார் கிராமத்தை‌ அடைந்தது. கார் நிறுத்தப்பட்டதும் யன்னல் வழியாக வீட்டைக் கண்டவள் மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.


பயணம் முழுவதும் அவளுடன் பேசிக்கொண்டு இருந்தவனைக் கூட மறந்து விட்டாள்.


மறுமுனையில் மினி.. மினி.. எனக் கத்தவும் "பாய்டா.. நான் உன் கூட அப்புறம் பேசுறேன்.." என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் சிதாரா.


வண்டியிலிருந்து இறங்கியவள் லக்கேஜ்ஜை கூட எடுக்காமல் அவனிடம் எதுவும் சொல்லாமல் நேராக வீட்டை நோக்கி நடந்தாள்.


அவள் செல்வதைக் கண்ட‌ பிரணவ், "அவ்வளவு தூரம் ஓசில இந்தப் பொண்ணுக்கு ட்ரைவர் வேலை பாத்திருக்கேன்.. ஒரு தேங்ஸ் கூட சொல்லாம போறத்த பாரு.. இதுக்கெல்லாம் அந்த அபினவ்வ சொல்லனும்..." என எப்போதும் போல் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.


பூஞ்சோலை கிராமம்


லாவண்யா பிறந்து வளர்ந்த இடமே பூஞ்சோலை கிராமம். சென்னையிலிருந்து சற்று தொலைவிலே இவ்வூர் அமைந்துள்ளது (கற்பனை). இயற்கை வளங்களுக்கு குறைவில்லாத கிராமம். லாவண்யாவின் குடும்பம் உயர் நடுத்தர வர்க்கமாகும். அவர்களின் வீடு தான் அவ்வூரிலே ஓரளவு பெரியது. பழைமை மாறாது கட்டப்பட்ட அவ் வீட்டை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.


அங்கு தான் இன்று நண்பர்கள்‌ அனைவரும் கூடி உள்ளனர். அனைவரும் வீட்டினுள் அமர்ந்து வெகு நாட்களுக்கு பின் சந்தித்ததால் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி‌ பேசிக்கொண்டு இருந்தனர். எனவே யாரும் சிதாரா வந்து இறங்கியதை அறியவில்லை.


வீட்டு வாசற்படியில் அமர்ந்து வெற்றிலை மென்று‌ கொண்டிருந்த லாவண்யாவின் பாட்டி தன்னை நோக்கி வந்த பெண்ணை கண்ணாடியை அணிந்து யாரென பார்த்தார்.


பின், "யாரும்மா நீ.. ஏதாச்சும் உதவி கேட்டு வந்திருக்கியா.. " எனக் கேட்டு விட்டு வீட்டினுள் எட்டிப் பார்த்து "எலேய் முத்து... உங்க ஐயாவ கூப்புடுல... " எனக் குரல் கொடுத்தார்.


சிதாரா முகத்திலிருந்த மாஸ்க் மற்றும் சன்கிளாஸை கழற்றியவள் அவரை பார்த்து "நல்லா பாரு லட்சுமி..‌என்ன தெரியலயா" என்க தன்னையே பெயர் சொல்லி அழைத்ததும் "யாரும்மா நீ.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னயே‌ பேரச் சொல்லி பேசுவாய்.." என வயதானவர்களுக்கே உரித்தான கோவத்தில் கேட்க சிதாரா சிரிக்கவும் இன்னும் கடுப்பானார்.


வாசலில் தன் பாட்டி கோவமாக யாருடனோ பேசுவதைக் கேட்டதும் அக்ஷராவுடன் வெளியே வந்து பார்த்த லாவண்யா சிதாராவைக் கண்டதும் மகிழ்ச்சியில் அவளை அணைத்துக் கொள்ள அக்ஷராவும் அவர்களுடன்‌ இணைந்தாள்.


அக்ஷரா, "எப்போ வந்தாய் சித்து " என்கவும் "இப்போ‌ தான்டி" என்றவள் இன்னும் சிரிப்பதை நிறுத்தவில்லை. தன்னை பெயர் சொல்லி அழைத்த பெண்ணை தன் பேத்தி அணைத்திருப்பதைக் கண்டவர் லாவண்யாவிடம், "யாரு கண்ணு இது என்னயே பேரச் சொல்லி கூப்பிட்றா.. உன்னோட சினேகிதியா " எனக் கேட்க அவருக்கு பதில் கூறச் சென்றவளை தடுத்த சிதாரா தோழிகளை விடுத்து பாட்டியின் தோளில் கை போட்டவள் "இந்த வீட்டு மகாலட்சுமிய பேர சொல்லி கூப்பிட்ற தைரியம் என்ன தவிர யாருக்கு இருக்கும் லட்சு" என்க சிதாராவை அடையாளம் கண்டு கொண்டவர் "சீதா கண்ணு.. எப்படிடா இருக்காய்.. உனக்கு இப்ப தான் இந்த பாட்டிய பாக்கனும்னு தோணுச்சா.." எனக் கவலையாக கேட்க, அதற்குள் லாவண்யா "அச்சோ பாட்டி.. அவ பேரு சிதாரா.. சீதா இல்ல.." என்கவும் சிதாரா "நீங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்ல வேணாம்.. என்னோட லட்சுக்கு மட்டும் நான் எப்பவும் சீதா தான்.." என அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.


பாட்டி, "சீதா தான் அழகா இருக்கு.. அந்த பேரு என்னமோ என் வாய்லயே வரமாட்டேங்குது...அவ கெடக்குறா... நீ சொல்லு கண்ணு.. என்ன இவ்ளோ எலச்சி போயிருக்காய்.. அந்த வெளிநாட்டுல நல்ல சாப்பாடு கெடயாதா.. கண்டதயும் திண்ணுட்டு எப்படி இருக்காய் பாரு.. போதாக்கொறெக்கி என்ன ட்ரெஸ் இது.. பையனாட்டம் பேண்ட்டு சட்டன்னு.. கூந்தல வேற விரிச்சு விட்டுட்டு வந்திருக்காய்..." என அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டபடி கூறியவரைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட அக்ஷரா, "அது தான்‌ ஃபேஷன் பாட்டி.. அதுவுமில்லாம யூ.எஸ்ல இங்க போல ட்ரெஸ் பண்ணினா சுத்தி இருக்கிறவங்க சிரிப்பாங்க.." என்கவும் "என்ன கன்றாவி பேஷனோ.. நான் ஒருத்தி கூறு கெட்டவ.. தங்கத்த வாசல்லயே வெச்சி பேசிட்டு இருக்கேன்.. நீ வா கண்ணு உள்ள.. இன்னிக்கு உனக்கு என் கையாலயே சமச்சி பரிமாறுறேன்.." என பாட்டி அவளை உள்ளே அழைக்க, "வனி.. அச்சு.. என்னோட லக்கேஜ்ஜ கார்லயே விட்டுட்டு வந்துட்டேன்.. அத கொஞ்சம் உள்ள எடுத்துட்டு வாங்க" என்று விட்டு பாட்டியுடன் உள்ளே சென்றாள் சிதாரா.


போகும் வழியில் பாட்டி "எலேய் முத்து.. நம்ம தோட்டத்துல இருந்து நல்ல இளனிய வெட்டி எடுத்துட்டு வா" என வேலைக்காரரிடம் கட்டளையிட்டு விட்டே சென்றார்.


அவர்கள் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்க்க பின் அக்ஷரா, "ஏன் வனி.. எனக்கு ஒரு டவுட்டு.. இவ நம்ம ஃப்ரென்டா இல்ல அவங்க ஃப்ரென்டா.. நம்மள கொஞ்சம் கூட மதிக்கவே இல்ல " என்க "எனக்கும் அதான் டவுட்டு அச்சு.. சரி வா அவ லக்கேஜ்ஜ எடுத்துட்டு வருவோம்.." என்று விட்டு இருவரும் காரை நோக்கி சென்றனர்.


❤❤❤❤❤


ரெண்டாவது அத்தியாயம் பதிவிட்டுட்டேன் மக்களே... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க... நன்றி


- Nuha Maryam -
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைதி - அத்தியாயம் 3
அக்ஷராவும் லாவண்யாவும் வண்டியிலிருந்த சிதாராவின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டிருக்க மொபைலில் அழைப்பொன்றில் இருந்த பிரணவ் பேசி முடித்து விட்டு அவர்களிடம் வந்தான்.


பிரணவ், "யாரு வனிம்மா அந்த பொண்ணு.. உங்க ப்ரென்டா.. சரியான திமிரு பிடிச்சவலா இருப்பா போல..‌ ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அவ பாட்டுக்கு போறா..." என்க அக்ஷராவும் லாவண்யாவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


எங்கே அவனுக்கு அடையாளம் தெரிய. அவள் தான் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு இருந்தாளே.


"என்னண்ணா இப்படி‌ கேக்குறீங்க... நெஜமாலுமே அவள உங்களுக்கு அடையாளம் தெரியலயா..." என‌ அக்ஷரா கேட்க அவளுக்கு இல்லை என்பதாய் இட வலமாக தலையசைத்தான்.


லாவண்யா, "என்ன எங்க கூட விளையாடுரீங்களாண்ணா.. உங்களுக்கு அவள பிடிக்காதுன்றத்துக்காக நீங்க சித்துவ பத்தி இப்படியெல்லாம் பேச‌ வேணாம் அண்ணா.." என்று‌ விட்டு வேகமாக அங்கிருந்து அகன்றனர்.


அவர்கள்‌ கோவமாக சென்றது எதுவும் பிரணவ்வின்‌ கருத்தில் பதியவில்லை.


அவன் தான் 'சித்து' என்ற பெயரிலே விழி விரித்து சிலையாகி நின்றானே.


இங்கு வீட்டினுள்‌ நுழைந்த சிதாராவுக்கோ பலத்த வரவேற்பு.


லாவண்யாவின் குடும்பத்தினர் எப்போதும் சிதாராவை தங்கள் வீட்டில் ஒருவராகவே எண்ணுவர்.


சிறு வயதிலிருந்தே இருவரும் தோழிகள். அக்ஷராவுடனான பழக்கம் பள்ளிப்பருவத்தில் ஆரம்பமானது.


அன்றிலிருந்தே மூவரும் நல்ல நண்பர்கள். அவர்களுக்குள் எந்த ரகசியமும் இருக்காது.


ஏனைய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட்டிருந்த சிதாராவிடம் வந்த லாவண்யாவும் அக்ஷராவும் தொண்டையை செறுமி தங்கள் வரவை வெளிப்படுத்தினர்.


அவர்கள் பக்கம் திரும்பி‌ ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என வினவ அவளைப் பார்த்து இருவரும் இளித்து வைத்தனர்.


பின் சிதாரா எதுவும் சொல்லாமல் அங்கிருந்த அறையொன்றினுள் நுழைந்து கொள்ள இங்கோ இருவரின் மைன்ட் வாய்ஸுமே ஒன்றாக இருந்தது.


"ஆத்தி... இவ பார்வையே சரியில்லயே... உள்ள போனா நம்மள கும்மு கும்முன்னு கும்மி எடுத்துருவாளோ... சரி.. எதுன்னாலும் தாங்கிப்போம்.." என இருவரும் அவளை பின் தொடர்ந்தனர்.


அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த சிதாரா தோழிகள் நுழைந்ததும் அவர்களை கேள்வியாய் ஏறிட்டாள்.


ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்தது இல்லாமல் சிதாராவோ அமைதியான குரலில், "ஏன்டி இப்படி பேய பாக்குறது போல பயந்து பாத்துட்டு இருக்கீங்க..." என வினவ, அக்ஷரா, "உனக்கு நெஜமாலுமே எங்க மேல கோவம் இல்லயா சித்து" என்க "நான் எதுக்குடி உங்க மேல கோவபடனும்.. ஓஹ்... அந்த மெஸேஜ்ஜ சொல்றீங்களா.. அது உங்க எல்லாரையும் பாக்க ரொம்ப சந்தோஷமா வந்தேனா, யார என் லைஃப்ல பாக்கவே கூடாதுன்னு நெனச்சிட்டு இருந்தவன பாத்ததும் என்னோட மூடே ஸ்பொய்ல் ஆகிடுச்சி.. அந்த கோவத்துல தான்‌ மெஸேஜ் போட்டேன்... அப்புறம் யோசிச்சு பாத்ததும் தான் புரிஞ்சுச்சி.. நான் எதுக்கு யாரோ ஒருத்தனுக்காக எல்லாம் என்னோட ஃப்ரென்ட்ஸ் கூட கோவிச்சிட்டு இருக்கனும்.. அதுவுமில்லாம நீங்க ரெண்டு பேருமே எப்போதுமே எனக்கு பிடிக்காத விஷயத்த செய்ய மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை.. சோ ஐம் ஓக்கே நவ்... இப்பவாச்சும் கொஞ்சம் சிரிங்கடி.." என சிரித்தபடி கூறினாள் சிதாரா.


அதைக் கேட்ட தோழிகள் இருவருமே அவளை கட்டியணைத்து இரு கன்னத்திலும் முத்தமிட, "ச்சீச்சீ.. இதெல்லாம் உங்க ஆளுங்களுக்கு குடுங்க.." என கன்னத்தைத் துடைத்தபடி சிதாரா சொல்ல மூவரும் சிரித்தனர்.


அந்த சமயம் அங்கு வந்த லாவண்யாவின் தாய் காயத்ரி, "உங்க பாச மழை எல்லாம் முடிஞ்சிச்சினா சாப்பிட வரீங்களா மூனு பேரும்.. அத்த ரொம்ப நேரமா சித்துவ தேடுறாங்க.." என்று‌ விட்டு செல்ல மூவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.


இங்கோ அதிர்ச்சியில் விழி விரித்து நின்றவனை கலைத்தது ஆதர்ஷின் அழைப்பு.


"இங்க என்னடா பண்ற தனியா.. வா உள்ள போலாம்.."


"மச்சான்.. நான் தாரா கூட பேசனும்டா.. ப்ளீஸ்டா.." என்ற பிரணவ்வின் பதிலில் அவனை ஆழ நோக்கினான் ஆதர்ஷ்.


அதற்குள் அபினவ்வும் அங்கு வந்து சேர்ந்தான்.


பின் நிதானமாக குரலில் கடுமையை தேக்கி வைத்து, "இங்க பாரு பிரணவ்.. நான் உனக்கு இது முதலும் கடைசியுமா சொல்றேன்.. உனக்கும் சித்துவுக்குமான உறவு எப்பயோ முடிஞ்சி போச்சி.. இல்ல இல்ல.. நீ தான் முடிச்சி வெச்சாய்... உன்னால அவ ரொம்ப கஷ்டப்பட்டுடா.. அகைன் உன்னால அவ கஷ்டப்படுறத நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்... நீ எனக்கு ஃப்ரென்டா இருக்கலாம்.. இதுக்கு முன்னாடி நீ பண்ண தப்புக்கு எதுவும் சொல்லலன்னு நீ பண்ற எல்லா விஷயத்துக்கும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு எதிர்ப்பாக்காதே... இப்ப இருக்கிறது உன்னோட தாரா இல்ல.. ஜஸ்ட் சிதாரா.. எங்க எல்லாருக்கும் சித்து.. அவ்ளோ தான்... உன்னால அவளுக்கு மட்டும் ஏதாச்சும் பிரச்சினை வந்தால் நீ இந்த ஆதர்ஷ ஃப்ரெண்டா மட்டும் தானே பாத்திருக்காய்.. அதுக்கப்புறம் சித்துக்கு அண்ணனா பார்ப்பாய்.." என்று விட்டு உள்ளே சென்று விட்டான் ஆதர்ஷ்.


அபினவ்வோ, "ஆதர்ஷ் சொல்லிட்டு போறதெல்லாம் நீ மைன்ட் பண்ணிக்காத மச்சான்.. அவன் சித்து மேல உள்ள பாசத்துல பேசிட்டு போறான்.. கோவம் கொறஞ்சதும் அவனாவே வந்து பேசுவான்.. வா நாம உள்ள போலாம்.." என பிரணவ்வை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.


வீட்டினுள் பாட்டியின் சமையலை அனைவரும் வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தனர்.


சிதாரா, "ஆமா.. கேக்கனும்னே இருந்தேன்.. ரெண்டு பேரும் கால் பண்ணப்போ நம்ம ஃப்ரென்ட்ஸ் கூட தானே டூர் அரேன்ஞ் பண்ணி இருக்குன்னு சொன்னீங்க.. இங்க வந்து பாத்தா பாதி பேரே கப்பிள்ஸா வந்து இருக்காங்க.."


"ஃப்ரென்ட்ஸ் டூர் தான் சித்து.. பட் நம்ம எல்லோருமே பொண்ணுங்க.. நாம மட்டும் தனியா போறோம்னு சொன்னா வீட்டுல இருக்கிறவங்க பாதுகாப்பு அது இதுன்னு சொல்லி வேணாம்னு சொல்லிருவாங்க... அதான் நம்ம சீனியர்ஸ்னு சொல்லி ஆது, அபி அண்ணா அவங்க ஃப்ரெண்ட்ஸ்னு கொஞ்சம் பேர வர வெச்சோம்.. நமக்கும் நம்ம ஆளுங்க கூட சுத்தினது போலவும் இருக்கும்.." என கண்ணடித்து கூறினாள் லாவண்யா.


"அது சரி.. நீங்க எல்லாரும் கப்பிளா சுத்துங்க.. நடுவுல எதுக்கு எங்கள மாதிரி சிங்கிள்ஸ்.." என சிதாரா சலிப்பாக சொல்ல, "அப்படி எதுவுமில்ல சித்து.. அவ சும்மா உன்ன கலாய்க்கிறா.. நெஜமாலுமே நம்ம பாதுகாப்புக்கு தான் பசங்க வந்திருக்காங்க.. அதுவுமில்லாம நமக்கு எப்பவும் ஃப்ரென்ட்ஸ் தான் முக்கியம்.." என்றாள் அக்ஷரா.


சிதாரா, "ஓஹ்... அதயும் பாக்கலாம் உங்க பேச்சு எவ்வளவு தூரத்துக்கு உண்மையா இருக்குன்னு.. அதெல்லாம் சரி.. நம்மளோட சீனியர் பசங்க வரது ஓக்கே.. மத்தவங்களுக்கு இங்க என்ன வேலை..." என்க இருவருக்குமே அவள் யாரைக் குறிப்பிடுகிறாள் எனப் புரிந்தது.


"அபி, தர்ஷ் அண்ணா ரெண்டு பேருமே நம்ம கூட வராங்க.. பிரணவ் அண்ணாவும் அவங்க கூட தான் இருக்காங்க.. சோ அவரயும் கூட்டிட்டு வரோம்னு சொன்னாங்க.. எங்களுக்கும் வேணாம்னு சொல்ல முடியல.." என அக்ஷரா பதிலலிக்க ம்ம்ம் என்றதோடு முடித்துக் கொண்டாள்.


மறுநாள் அதிகாலையிலே செல்ல இருப்பதால் அன்று இரவு யாருமே உறங்கவில்லை.


எனவே அனைவரும் வெளியே தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.


ஒரு பக்கம் பெண்களும் மறுபக்கம் ஆண்களும் என இருக்க பிரணவ்வின் பார்வை முழுவதும் சிதாராவிடமே இருந்தது.


இதனைக் கவனித்த அபினவ் பிரணவ்வை நெருங்கி அவன் காதில் மெதுவாக, "டேய்.. எனக்கென்னவோ நீ இன்னிக்கி ஆதர்ஷ் கிட்ட அடி வாங்காம இருக்க மாட்டாய் போல.." என்றான்.


அவன் கூறியது பிரணவ்வின் செவிகளை எட்டினால் தானே. அபினவ்வால் தலையில் அடித்துக்கொள்ள மட்டும் தான் முடிந்தது.


பிரணவ்வின் பார்வை தன் மீதே இருப்பதை சிதாராவாலும் உணர முடிந்தது.


அவளுக்கு ஏதோ நெருப்பின் மேல் அமர்ந்து இருப்பது போல் இருந்தது.


ஓரளவுக்கு மேல் முடியாமல் அங்கிருந்து எழுந்தவள் அனைவரிடமும் பொதுவாக, "எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு.. நான் உள்ள போறேன்.." என்று விட்டு யாருடைய பதிலையும் எதிர்ப்பாராமல் வீட்டை நோக்கி நடந்தாள்.


வீட்டினுள் நுழையச் செல்லும் நேரம் சரியாக அவளை மோதுவது போல் வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு கார்.


கார் அவளை நோக்கி மோதுவது போல் வரவும் தோட்டத்திலிருந்த அனைவரும் பயந்து அவளின் திசை பார்க்க பிரணவ்வோ, "தாரா.. கார்..." எனக் கத்தினான்.


கார் தன்னை நோக்கி வந்ததும் சிதாராவின் இதயமே ஒரு நிமிடம் நின்றது. அதனால் பிரணவ் அவளை அழைத்ததை அவள் கவனிக்கவில்லை. அது நிறுத்தப்பட்டதும் தான் போன உயிர் திரும்ப வந்தது.


அவ்வளவு நேரம் இருந்த பதட்டம் அகன்று கோவம் அவ்விடத்தை நிரப்பியது.


அதே வேகத்தில் காரிடம் சென்றவள் அதன் ஜன்னலைத் தட்டி கோவமாக, "ஹேய்.. யூ இடியட்... ஓபன் தி டோர்.." என்க கார் ஜன்னலை மெதுவாக கீழிறக்கி அவளைப் பார்த்து சிரித்தான் ஆர்யான்.



அவனை அவ்விடத்தில் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள் சிதாரா.


காரிலிருந்து இறங்கிய ஆர்யான் சிதாராவின் முன் வந்து நின்று அவள் முகத்தின் முன் கை ஆட்ட தன்னிலை மீண்ட சிதாரா ஜிராஃபி என அவனை அணைத்துக் கொண்டாள்.



லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வர தோட்டத்தில் இருந்த ஏனையோர் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.


பிரணவ்வோ சிதாரா யாரோ ஒரு ஆடவனைக் கட்டியணைத்ததும் சொல்லொனா மனநிலையில் இருந்தான்.


ஆர்யானை விட்டு விலகிய சிதாரா, "நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுறாய் ஜிராஃபி.." எனக் கேட்கும் போதே அக்ஷராவும் லாவண்யாவும் அவ்விடத்தை அடைந்தனர்.


ஆர்யானோ லாவண்யாவைப் பார்த்து, "என்ன சிஸ்டர் நீங்க மினி கிட்ட எதுவும் சொல்லலயா.." என்க சிதாரா லாவண்யாவை கேள்வியாய் நோக்கினாள்.


"நீ ஈவ்னிங் குளிச்சிட்டு இருக்கும் போது இவரு கிட்ட இருந்து கால் வந்துச்சி.. நீ ஆல்ரெடி யூ.எஸ் ல இருக்க கிட்ட இவர பத்தி சொல்லி இருந்ததால நான் தான் பேசினேன். அப்போ தான் இவரையும் டூர் வர சொன்னா நல்லா இருக்கும்னு தோணுச்சி.. உனக்கும் ஹேப்பியா இருக்கும்.. நம்ம கூட தான் பசங்களும் வராங்களே.. சோ இவர் வரதுல யாருக்கும் பிரச்சினை இருக்காது. அதான் இவர் கிட்ட கேட்டேன்.. இவருக்கும் ஓக்கே உன் கிட்ட சொல்ல வேணாம் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொன்னாரு.. அதான்டி.." என விளக்கம் அளித்தாள் லாவண்யா.


அதைக் கேட்ட சிதாரா ஆர்யானிடம், "நல்ல நேரம் ஜிராஃபி நீ வந்தது. நான் கூட யோசிச்சிட்டே இருந்தேன் இந்த பக்கிங்க டூர் போய்ட்டு நம்மள கழட்டி விட்டுட்டு அவங்க ஆளுங்க கூட சுத்தினா நமக்கு யாரு கம்பனி குடுப்பான்னு.. சரியா நீ வந்துட்டாய்.." என்க, "நான் இருக்கும் போது என்னோட மினியனுக்கு என்ன தனிமை.. உனக்கு ஆல் டைம் கம்பனி குடுக்கத்தான் நான் இருக்கேனே.." என பெருந்தன்மையாக ஆர்யான் சொல்ல, "அதுவும் சரி தான்.." என சிரித்தபடி கூறினாள் சிதாரா.


அக்ஷரா, "சரி சித்து நம்ம ஃப்ரெண்ட்ஸ் என்ட் சீனியர்ஸ்க்கு இவர இன்ட்ரூ பண்ணி வை.. இப்போதே எல்லோரும் பழகிக்கட்டும்.. அப்போ தான் நாளெக்கி டூர் போனா இவருக்கும் கம்ஃபர்டபிளா இருக்கும்" என்றாள்.


"இன்னும் என்ன சிஸ்டர் அவரு இவருன்னுட்டு இருக்கீங்க.. மை நேம் இஸ் ஆர்யான்.. கால் மீ ஆர்யன் ஆர் அண்ணா. ஆர் சம்திங் எல்ஸ் ஏஸ் யுவர் விஷ்.." என அவர்கள் இருவருக்கும் கட்டளை இட்டான் ஆர்யான்.


இருவருமே ஒரே சமயத்தில், "ஓக்கே அண்ணா.. இப்போ அங்க போலாமா.." என அழைக்க சந்தோஷமாக அவர்களைப் பின் தொடர்ந்தனர் சிதாரா மற்றும் ஆர்யான்.


❤❤❤❤❤




- Nuha Maryam -
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைதி - அத்தியாயம் 3
அக்ஷராவும் லாவண்யாவும் வண்டியிலிருந்த சிதாராவின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டிருக்க மொபைலில் அழைப்பொன்றில் இருந்த பிரணவ் பேசி முடித்து விட்டு அவர்களிடம் வந்தான்.


பிரணவ், "யாரு வனிம்மா அந்த பொண்ணு.. உங்க ப்ரென்டா.. சரியான திமிரு பிடிச்சவலா இருப்பா போல..‌ ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அவ பாட்டுக்கு போறா..." என்க அக்ஷராவும் லாவண்யாவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


எங்கே அவனுக்கு அடையாளம் தெரிய. அவள் தான் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு இருந்தாளே.


"என்னண்ணா இப்படி‌ கேக்குறீங்க... நெஜமாலுமே அவள உங்களுக்கு அடையாளம் தெரியலயா..." என‌ அக்ஷரா கேட்க அவளுக்கு இல்லை என்பதாய் இட வலமாக தலையசைத்தான்.


லாவண்யா, "என்ன எங்க கூட விளையாடுரீங்களாண்ணா.. உங்களுக்கு அவள பிடிக்காதுன்றத்துக்காக நீங்க சித்துவ பத்தி இப்படியெல்லாம் பேச‌ வேணாம் அண்ணா.." என்று‌ விட்டு வேகமாக அங்கிருந்து அகன்றனர்.


அவர்கள்‌ கோவமாக சென்றது எதுவும் பிரணவ்வின்‌ கருத்தில் பதியவில்லை.


அவன் தான் 'சித்து' என்ற பெயரிலே விழி விரித்து சிலையாகி நின்றானே.


இங்கு வீட்டினுள்‌ நுழைந்த சிதாராவுக்கோ பலத்த வரவேற்பு.


லாவண்யாவின் குடும்பத்தினர் எப்போதும் சிதாராவை தங்கள் வீட்டில் ஒருவராகவே எண்ணுவர்.


சிறு வயதிலிருந்தே இருவரும் தோழிகள். அக்ஷராவுடனான பழக்கம் பள்ளிப்பருவத்தில் ஆரம்பமானது.


அன்றிலிருந்தே மூவரும் நல்ல நண்பர்கள். அவர்களுக்குள் எந்த ரகசியமும் இருக்காது.


ஏனைய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட்டிருந்த சிதாராவிடம் வந்த லாவண்யாவும் அக்ஷராவும் தொண்டையை செறுமி தங்கள் வரவை வெளிப்படுத்தினர்.


அவர்கள் பக்கம் திரும்பி‌ ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என வினவ அவளைப் பார்த்து இருவரும் இளித்து வைத்தனர்.


பின் சிதாரா எதுவும் சொல்லாமல் அங்கிருந்த அறையொன்றினுள் நுழைந்து கொள்ள இங்கோ இருவரின் மைன்ட் வாய்ஸுமே ஒன்றாக இருந்தது.


"ஆத்தி... இவ பார்வையே சரியில்லயே... உள்ள போனா நம்மள கும்மு கும்முன்னு கும்மி எடுத்துருவாளோ... சரி.. எதுன்னாலும் தாங்கிப்போம்.." என இருவரும் அவளை பின் தொடர்ந்தனர்.


அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த சிதாரா தோழிகள் நுழைந்ததும் அவர்களை கேள்வியாய் ஏறிட்டாள்.


ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்தது இல்லாமல் சிதாராவோ அமைதியான குரலில், "ஏன்டி இப்படி பேய பாக்குறது போல பயந்து பாத்துட்டு இருக்கீங்க..." என வினவ, அக்ஷரா, "உனக்கு நெஜமாலுமே எங்க மேல கோவம் இல்லயா சித்து" என்க "நான் எதுக்குடி உங்க மேல கோவபடனும்.. ஓஹ்... அந்த மெஸேஜ்ஜ சொல்றீங்களா.. அது உங்க எல்லாரையும் பாக்க ரொம்ப சந்தோஷமா வந்தேனா, யார என் லைஃப்ல பாக்கவே கூடாதுன்னு நெனச்சிட்டு இருந்தவன பாத்ததும் என்னோட மூடே ஸ்பொய்ல் ஆகிடுச்சி.. அந்த கோவத்துல தான்‌ மெஸேஜ் போட்டேன்... அப்புறம் யோசிச்சு பாத்ததும் தான் புரிஞ்சுச்சி.. நான் எதுக்கு யாரோ ஒருத்தனுக்காக எல்லாம் என்னோட ஃப்ரென்ட்ஸ் கூட கோவிச்சிட்டு இருக்கனும்.. அதுவுமில்லாம நீங்க ரெண்டு பேருமே எப்போதுமே எனக்கு பிடிக்காத விஷயத்த செய்ய மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை.. சோ ஐம் ஓக்கே நவ்... இப்பவாச்சும் கொஞ்சம் சிரிங்கடி.." என சிரித்தபடி கூறினாள் சிதாரா.


அதைக் கேட்ட தோழிகள் இருவருமே அவளை கட்டியணைத்து இரு கன்னத்திலும் முத்தமிட, "ச்சீச்சீ.. இதெல்லாம் உங்க ஆளுங்களுக்கு குடுங்க.." என கன்னத்தைத் துடைத்தபடி சிதாரா சொல்ல மூவரும் சிரித்தனர்.


அந்த சமயம் அங்கு வந்த லாவண்யாவின் தாய் காயத்ரி, "உங்க பாச மழை எல்லாம் முடிஞ்சிச்சினா சாப்பிட வரீங்களா மூனு பேரும்.. அத்த ரொம்ப நேரமா சித்துவ தேடுறாங்க.." என்று‌ விட்டு செல்ல மூவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.


இங்கோ அதிர்ச்சியில் விழி விரித்து நின்றவனை கலைத்தது ஆதர்ஷின் அழைப்பு.


"இங்க என்னடா பண்ற தனியா.. வா உள்ள போலாம்.."


"மச்சான்.. நான் தாரா கூட பேசனும்டா.. ப்ளீஸ்டா.." என்ற பிரணவ்வின் பதிலில் அவனை ஆழ நோக்கினான் ஆதர்ஷ்.


அதற்குள் அபினவ்வும் அங்கு வந்து சேர்ந்தான்.


பின் நிதானமாக குரலில் கடுமையை தேக்கி வைத்து, "இங்க பாரு பிரணவ்.. நான் உனக்கு இது முதலும் கடைசியுமா சொல்றேன்.. உனக்கும் சித்துவுக்குமான உறவு எப்பயோ முடிஞ்சி போச்சி.. இல்ல இல்ல.. நீ தான் முடிச்சி வெச்சாய்... உன்னால அவ ரொம்ப கஷ்டப்பட்டுடா.. அகைன் உன்னால அவ கஷ்டப்படுறத நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்... நீ எனக்கு ஃப்ரென்டா இருக்கலாம்.. இதுக்கு முன்னாடி நீ பண்ண தப்புக்கு எதுவும் சொல்லலன்னு நீ பண்ற எல்லா விஷயத்துக்கும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு எதிர்ப்பாக்காதே... இப்ப இருக்கிறது உன்னோட தாரா இல்ல.. ஜஸ்ட் சிதாரா.. எங்க எல்லாருக்கும் சித்து.. அவ்ளோ தான்... உன்னால அவளுக்கு மட்டும் ஏதாச்சும் பிரச்சினை வந்தால் நீ இந்த ஆதர்ஷ ஃப்ரெண்டா மட்டும் தானே பாத்திருக்காய்.. அதுக்கப்புறம் சித்துக்கு அண்ணனா பார்ப்பாய்.." என்று விட்டு உள்ளே சென்று விட்டான் ஆதர்ஷ்.


அபினவ்வோ, "ஆதர்ஷ் சொல்லிட்டு போறதெல்லாம் நீ மைன்ட் பண்ணிக்காத மச்சான்.. அவன் சித்து மேல உள்ள பாசத்துல பேசிட்டு போறான்.. கோவம் கொறஞ்சதும் அவனாவே வந்து பேசுவான்.. வா நாம உள்ள போலாம்.." என பிரணவ்வை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.


வீட்டினுள் பாட்டியின் சமையலை அனைவரும் வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தனர்.


சிதாரா, "ஆமா.. கேக்கனும்னே இருந்தேன்.. ரெண்டு பேரும் கால் பண்ணப்போ நம்ம ஃப்ரென்ட்ஸ் கூட தானே டூர் அரேன்ஞ் பண்ணி இருக்குன்னு சொன்னீங்க.. இங்க வந்து பாத்தா பாதி பேரே கப்பிள்ஸா வந்து இருக்காங்க.."


"ஃப்ரென்ட்ஸ் டூர் தான் சித்து.. பட் நம்ம எல்லோருமே பொண்ணுங்க.. நாம மட்டும் தனியா போறோம்னு சொன்னா வீட்டுல இருக்கிறவங்க பாதுகாப்பு அது இதுன்னு சொல்லி வேணாம்னு சொல்லிருவாங்க... அதான் நம்ம சீனியர்ஸ்னு சொல்லி ஆது, அபி அண்ணா அவங்க ஃப்ரெண்ட்ஸ்னு கொஞ்சம் பேர வர வெச்சோம்.. நமக்கும் நம்ம ஆளுங்க கூட சுத்தினது போலவும் இருக்கும்.." என கண்ணடித்து கூறினாள் லாவண்யா.


"அது சரி.. நீங்க எல்லாரும் கப்பிளா சுத்துங்க.. நடுவுல எதுக்கு எங்கள மாதிரி சிங்கிள்ஸ்.." என சிதாரா சலிப்பாக சொல்ல, "அப்படி எதுவுமில்ல சித்து.. அவ சும்மா உன்ன கலாய்க்கிறா.. நெஜமாலுமே நம்ம பாதுகாப்புக்கு தான் பசங்க வந்திருக்காங்க.. அதுவுமில்லாம நமக்கு எப்பவும் ஃப்ரென்ட்ஸ் தான் முக்கியம்.." என்றாள் அக்ஷரா.


சிதாரா, "ஓஹ்... அதயும் பாக்கலாம் உங்க பேச்சு எவ்வளவு தூரத்துக்கு உண்மையா இருக்குன்னு.. அதெல்லாம் சரி.. நம்மளோட சீனியர் பசங்க வரது ஓக்கே.. மத்தவங்களுக்கு இங்க என்ன வேலை..." என்க இருவருக்குமே அவள் யாரைக் குறிப்பிடுகிறாள் எனப் புரிந்தது.


"அபி, தர்ஷ் அண்ணா ரெண்டு பேருமே நம்ம கூட வராங்க.. பிரணவ் அண்ணாவும் அவங்க கூட தான் இருக்காங்க.. சோ அவரயும் கூட்டிட்டு வரோம்னு சொன்னாங்க.. எங்களுக்கும் வேணாம்னு சொல்ல முடியல.." என அக்ஷரா பதிலலிக்க ம்ம்ம் என்றதோடு முடித்துக் கொண்டாள்.


மறுநாள் அதிகாலையிலே செல்ல இருப்பதால் அன்று இரவு யாருமே உறங்கவில்லை.


எனவே அனைவரும் வெளியே தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.


ஒரு பக்கம் பெண்களும் மறுபக்கம் ஆண்களும் என இருக்க பிரணவ்வின் பார்வை முழுவதும் சிதாராவிடமே இருந்தது.


இதனைக் கவனித்த அபினவ் பிரணவ்வை நெருங்கி அவன் காதில் மெதுவாக, "டேய்.. எனக்கென்னவோ நீ இன்னிக்கி ஆதர்ஷ் கிட்ட அடி வாங்காம இருக்க மாட்டாய் போல.." என்றான்.


அவன் கூறியது பிரணவ்வின் செவிகளை எட்டினால் தானே. அபினவ்வால் தலையில் அடித்துக்கொள்ள மட்டும் தான் முடிந்தது.


பிரணவ்வின் பார்வை தன் மீதே இருப்பதை சிதாராவாலும் உணர முடிந்தது.


அவளுக்கு ஏதோ நெருப்பின் மேல் அமர்ந்து இருப்பது போல் இருந்தது.


ஓரளவுக்கு மேல் முடியாமல் அங்கிருந்து எழுந்தவள் அனைவரிடமும் பொதுவாக, "எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு.. நான் உள்ள போறேன்.." என்று விட்டு யாருடைய பதிலையும் எதிர்ப்பாராமல் வீட்டை நோக்கி நடந்தாள்.


வீட்டினுள் நுழையச் செல்லும் நேரம் சரியாக அவளை மோதுவது போல் வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு கார்.


கார் அவளை நோக்கி மோதுவது போல் வரவும் தோட்டத்திலிருந்த அனைவரும் பயந்து அவளின் திசை பார்க்க பிரணவ்வோ, "தாரா.. கார்..." எனக் கத்தினான்.


கார் தன்னை நோக்கி வந்ததும் சிதாராவின் இதயமே ஒரு நிமிடம் நின்றது. அதனால் பிரணவ் அவளை அழைத்ததை அவள் கவனிக்கவில்லை. அது நிறுத்தப்பட்டதும் தான் போன உயிர் திரும்ப வந்தது.


அவ்வளவு நேரம் இருந்த பதட்டம் அகன்று கோவம் அவ்விடத்தை நிரப்பியது.


அதே வேகத்தில் காரிடம் சென்றவள் அதன் ஜன்னலைத் தட்டி கோவமாக, "ஹேய்.. யூ இடியட்... ஓபன் தி டோர்.." என்க கார் ஜன்னலை மெதுவாக கீழிறக்கி அவளைப் பார்த்து சிரித்தான் ஆர்யான்.



அவனை அவ்விடத்தில் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள் சிதாரா.


காரிலிருந்து இறங்கிய ஆர்யான் சிதாராவின் முன் வந்து நின்று அவள் முகத்தின் முன் கை ஆட்ட தன்னிலை மீண்ட சிதாரா ஜிராஃபி என அவனை அணைத்துக் கொண்டாள்.



லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வர தோட்டத்தில் இருந்த ஏனையோர் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.


பிரணவ்வோ சிதாரா யாரோ ஒரு ஆடவனைக் கட்டியணைத்ததும் சொல்லொனா மனநிலையில் இருந்தான்.


ஆர்யானை விட்டு விலகிய சிதாரா, "நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுறாய் ஜிராஃபி.." எனக் கேட்கும் போதே அக்ஷராவும் லாவண்யாவும் அவ்விடத்தை அடைந்தனர்.


ஆர்யானோ லாவண்யாவைப் பார்த்து, "என்ன சிஸ்டர் நீங்க மினி கிட்ட எதுவும் சொல்லலயா.." என்க சிதாரா லாவண்யாவை கேள்வியாய் நோக்கினாள்.


"நீ ஈவ்னிங் குளிச்சிட்டு இருக்கும் போது இவரு கிட்ட இருந்து கால் வந்துச்சி.. நீ ஆல்ரெடி யூ.எஸ் ல இருக்க கிட்ட இவர பத்தி சொல்லி இருந்ததால நான் தான் பேசினேன். அப்போ தான் இவரையும் டூர் வர சொன்னா நல்லா இருக்கும்னு தோணுச்சி.. உனக்கும் ஹேப்பியா இருக்கும்.. நம்ம கூட தான் பசங்களும் வராங்களே.. சோ இவர் வரதுல யாருக்கும் பிரச்சினை இருக்காது. அதான் இவர் கிட்ட கேட்டேன்.. இவருக்கும் ஓக்கே உன் கிட்ட சொல்ல வேணாம் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொன்னாரு.. அதான்டி.." என விளக்கம் அளித்தாள் லாவண்யா.


அதைக் கேட்ட சிதாரா ஆர்யானிடம், "நல்ல நேரம் ஜிராஃபி நீ வந்தது. நான் கூட யோசிச்சிட்டே இருந்தேன் இந்த பக்கிங்க டூர் போய்ட்டு நம்மள கழட்டி விட்டுட்டு அவங்க ஆளுங்க கூட சுத்தினா நமக்கு யாரு கம்பனி குடுப்பான்னு.. சரியா நீ வந்துட்டாய்.." என்க, "நான் இருக்கும் போது என்னோட மினியனுக்கு என்ன தனிமை.. உனக்கு ஆல் டைம் கம்பனி குடுக்கத்தான் நான் இருக்கேனே.." என பெருந்தன்மையாக ஆர்யான் சொல்ல, "அதுவும் சரி தான்.." என சிரித்தபடி கூறினாள் சிதாரா.


அக்ஷரா, "சரி சித்து நம்ம ஃப்ரெண்ட்ஸ் என்ட் சீனியர்ஸ்க்கு இவர இன்ட்ரூ பண்ணி வை.. இப்போதே எல்லோரும் பழகிக்கட்டும்.. அப்போ தான் நாளெக்கி டூர் போனா இவருக்கும் கம்ஃபர்டபிளா இருக்கும்" என்றாள்.


"இன்னும் என்ன சிஸ்டர் அவரு இவருன்னுட்டு இருக்கீங்க.. மை நேம் இஸ் ஆர்யான்.. கால் மீ ஆர்யன் ஆர் அண்ணா. ஆர் சம்திங் எல்ஸ் ஏஸ் யுவர் விஷ்.." என அவர்கள் இருவருக்கும் கட்டளை இட்டான் ஆர்யான்.


இருவருமே ஒரே சமயத்தில், "ஓக்கே அண்ணா.. இப்போ அங்க போலாமா.." என அழைக்க சந்தோஷமாக அவர்களைப் பின் தொடர்ந்தனர் சிதாரா மற்றும் ஆர்யான்.


❤❤❤❤❤




- Nuha Maryam -
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைதி - அத்தியாயம் 4
அனைவரும் தோட்டத்தில் ஒன்று‌ கூடியிருக்க சிதாராவுடன் அவ்விடத்தை அடைந்தான் ஆர்யான்.


சிதாரா முதலில் ஏனைய நண்பர்கள் மற்றும் அவர்களது சினியர்ஸ்ஸை அறிமுகப்படுத்தினாள்.


அனைவருடனும் ஆர்யான் இன்முகத்துடனும் ஜாலியாகவும் பேச அனைவருக்கும் அவனைப் பிடித்தது.


பின் அபினவ் மற்றும் ஆதர்ஷை அறிமுகப்படுத்தச் செல்ல அவளைத் தடுத்தவன், "வெய்ட் வெய்ட் மினி.. நானே சொல்றேன்.." என்க அவனுக்கு சம்மதமாய் தலையாட்டினாள்.


ஆர்யான் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வை நோக்கி, "இவங்க ஆதர்ஷ் அப்புறம் அபினவ்.. மினியோட சீனியர்ஸ்.. எல்லாத்துக்கும் மேல அவளோட ஸ்வீட் ப்ரதர்ஸ்.. மினிக்கு என்ன பிரச்சினைனாலும் முன்னாடி வந்து சப்போர்ட் பண்ணுவாங்க.." என்க இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.


"ஐம் ஆர்யான்.. நைஸ் டு மீட் யூ காய்ஸ்.." என அவர்களை அணைத்து விடுவித்தான்.


பின்‌ பிரணவ்விடம் திரும்பியவன், "இவரு...." என‌ சற்று நேரம் யோசிக்க, "இது பிரணவ் அண்ணா.. அபி என்ட் தர்ஷ் அண்ணாவோட ஃப்ரெண்ட்.." என அக்ஷரா அவசரமாக பதிலளித்தாள்.


"ஓஹ்.. சாரி டியுட்... மினி இவங்கள பத்தி தன்னோட லைஃப்ல ரொம்ப முக்கியமான பர்சன்ஸ்னு சொல்லிருக்கா.. அதனால தான் அவங்கள முன்னாடியே தெரியும்.." என ஆர்யான் பிரணவ்விடம் மன்னிப்பு வேண்டும் விதமாக கூற, சிதாராவின் உதடுகள் தானாகவே "அடப்பாவி... என்னமா நடிக்கிறான்.." என முனுமுனுத்தன.


ஆதர்ஷ் மற்றும் அபினவ் இருவருக்குமே தர்மசங்கடமான ஒரு நிலை உருவாகியது.


பிரணவ்வுக்கோ உள்ளே புகைந்தது. மனதிற்குள்ளேயே, "நான்‌ அவளுக்கு வேண்டாதவனா... என்ன பத்தி எதுவுமே இவன் கிட்ட சொல்லலயா இவ..." என அவர்களை வறுத்தெடுத்தான்.


லாவண்யா மெதுவாக அக்ஷராவின் காதில், "ஏன்டி அச்சு.. நிஜமாலுமே சித்து பிரணவ் அண்ணா பத்தி ஆர்யான் அண்ணா கிட்ட எதுவுமே சொல்லாம இருந்து இருப்பாளா.." என்க "எனக்கென்னவோ இவரு வேணும்னே செய்றாரு போல இருக்கு வனி.. " என அவளுக்கு பதில் அளித்தாள் அக்ஷரா.


பின் அச் சூழ்நிலையை இலகுவாக்கும் விதமாக அபினவ், "சித்து.. நீ ஆர்யான உள்ள கூட்டிட்டுப்போ.. ரொம்ப தூரத்திலிருந்து டிராவல் பண்ணி வந்ததுல டையர்டா இருப்பாரு.. அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. அக்ஷு வனி நீங்களும் அவ கூட போங்க.. ஆர்யானுக்கு ரூம் அரேன்ஜ் பண்ணி குடுங்க.." என்றான்.


சிறிது நேரத்தில் ஆதர்ஷ் அபினவ் உட்பட அனைவருமே தத்தம் வேலையை கவனிக்க உள்ளே சென்று விட பிரணவ் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டான்.


அவனோ, "யாரிந்த புதுசா வந்து சேர்ந்து இருக்கிறவன்.. வார்த்தைக்கு வார்த்தை என்னோட மினி என்னோட‌ மினினு வேற சொல்றான்.. இத இப்படியே விடக்கூடாது.. ஏதாச்சும் பண்ணனும்.." என யோசனையிலிருந்தான்.


ஆர்யானுக்கென வழங்கப்பட்ட அறையில் சிதாராவும் ஆர்யானும் பேசிக்கொண்டிருந்தனர்.


சிதாரா, "டேய்.. உண்மைய சொல்லு.. உனக்கு அவன தெரியாது? " எனக் கேட்க கள்ளச் சிரிபொன்றை உதிர்த்தான் ஆர்யான்.


பின் ஆர்யான், "சரி மினி அதெல்லாம் விடு.. உன்ன அம்மா பாக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. டூர் முடிஞ்சி நேரா எங்க வீட்டுக்கு வரனும் ஓக்கேயா.." என்க "ஆன்ட்டி எதுக்கு சடன்னா என்ன பாக்கனும்னு சொன்னாங்க... நீ அவங்க கிட்ட ஏதாச்சும் ஏடாகூடமா சொல்லி வெச்சியா ஜிராஃபி" என பதில் கேள்வி கேட்டாள் சிதாரா.


மீண்டும் ஆர்யானிடம் அதே கள்ளப்புன்னகை வெளிப்படவும் சிதாராவுக்கு அனைத்தும் புரிந்து விட்டது.


"உனக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சாச்சிடா... உன்ன இன்னிக்கு சும்மா விட மாட்டேன்.." என கட்டிலிலிருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க அவளிடமிருந்து விடுபட்ட ஆர்யான், "ஏய் மினி.. வாழ வேண்டிய பையன்டி.. இன்னும் எதுவுமே பாக்கல நான்.. அதுக்குள்ள போட்டு தள்ளிராதமா.." என பயந்தது போல் நடித்தபடி அறையைச் சுற்றி ஓடினான்.


சிதாராவும் முடிந்தளவு அவனை விரட்டிக்கொண்டு ஓட ஒரு கட்டத்தில் இருவருமே களைப்புற்று கட்டிலில் வந்து அமர்ந்து பெருமூச்சு வாங்கினர்.


ஆர்யானும் சிதாராவும் ஒருவரை ஒருவர் பொய்யாக முறைத்தவாறு பார்க்க இருவருக்குமே சிரிப்பு வந்தது.


இருவரின் சிரிப்பு சத்தமும் அறையைத் தாண்டி வெளியே கேட்க சரியாக அந்நேரம் தோட்டத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த பிரணவ்வின் செவியையும் அடைந்தது.


ஒரு நிமிடம் அறை வாசலில் நின்று அறைக் கதவை வெறித்தவன் பின் வேகமாக அங்கிருந்து சென்றான்.


சிதாரா, "சரி ஜிராஃபி நான் போய் தூங்குறேன்.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சி.. இதுக்கு மேலயும் தூங்காம இருந்தா டூர் ஃபுல்லா தூங்கிட்டு தான் இருக்கனும்.. ஒரு என்ஜாய்மன்ட்டும் பண்ண முடியாது.." என்றாள்.


"ஓக்கே மினி..‌நீ போய் தூங்கு.. காலைல மீட் பண்ணலாம்.. குட் நைட்.." என் ஆர்யானுக்கு புன்னகையொன்றை வழங்கிவிட்டு சென்றாள் சிதாரா.


நேராக லாவண்யா மற்றும் அக்ஷரா உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றவள் அவர்கள் இருவரும் ஒரே கட்டிலில் ஒரு ஓரமாய் சிதாராவுக்கு இடம் விட்டு உறங்கிக் கொண்டிருக்க அவளோ இருவருக்கும் நடுவில் போய் விழுந்து இருவர் மீதும் கை போட்டுக் கொண்டாள்.


அவர்களும் அவளுக்கு இடம் விட்டு தள்ளிப் படுக்க மூவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காதவாறு அணைத்துக் கொண்டு உறங்கினர்.


மறுநாள் அதிகாலையிலேயே அனைவரும் தயாராகி பஸ்ஸில் ஏறினர்.


சிதாரா, அக்ஷரா மற்றும் லாவண்யா மூவருமே முதலிலே சென்று கடைசி சீட்டைப் பிடித்துக் கொண்டனர்.


டூர் செல்லும் போது கடைசி சீட்டில் இருக்கும் சுகமே தனி அல்லவா.


பஸ்ஸில் ஏறியதுமே மூவருக்குள்ளும் ஜன்னல் சீட்டிற்கு சண்டை ஏற்பட்டது.


ஒரு ஜன்னல் சீட்டு தான் இருந்தது.


மற்றையதில் ஏற்கனவே அவர்களின் தோழிகளில் ஒருத்தி அமர்ந்து இருந்தாள்.


ஒருவர் மாறி ஒருவர் நான் நான் என சண்டையிட கடைசியாக பஸ்ஸில் ஏறிய ஆர்யான் நேராக அவர்களிடம் வந்தான்.


ஏற்கனவே கடைசிக்கு முந்திய சீட்டில் ஆதர்ஷ், அபினவ் மற்றும் பிரணவ் அமர்ந்திருந்தனர்.


ஆர்யான் தோழிகள் மூவரையும் நோக்கி, "ச்சீச்சீ.. என்ன இது சின்ன பசங்க மாறி வின்டோ சீட்டுக்கு சண்ட போடுறீங்க.. இருங்க என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. முதல்ல மூணு பேரும் ஒரே இடத்துல இப்படி நெருங்கிட்டு இருக்காம இந்தப் பக்கம் வாங்க.." என்க மூவருமே அவனை நம்பி அங்கிருந்து அவனது ஐடியாவைக் கேட்க வந்தனர்.


உடனே ஆர்யான் வேகமாக ஜன்னல் சீட்டில் தனது பையுடன் நன்றாக காலை நீட்டி உட்கார்ந்து கொண்டான்.


மூவருமே இதை எதிர்ப்பார்க்கவில்லை. தம்மால் இயன்ற மட்டும் அவனை முறைத்தனர்.


அவனோ அவை எதையும் கணக்கெடுக்காமல் மேலே பார்த்து உச்சுக் கொட்டியபடி, "அடடா... இந்த விண்டோ சீட்டுல உக்காந்துட்டு போற சுகமே தனி தான்..." என்றவன் மூவரையும் பார்த்து, "அட.. இன்னுமா நீங்க மூணு பேரும் நின்னுட்டு இருக்கீங்க.. வாங்க சீக்கிரமா வந்து உக்காருங்க.. பஸ் ஸ்டார்ட் பண்ண போறாங்க..." என்கவும் மூவரும் தரையில் காலை உதைத்தவர்கள் வந்து உட்கார்ந்தனர்.


ஆர்யானின் பக்கத்தில் சிதாராவும் அவளைத் தொடர்ந்து அக்ஷரா, லாவண்யா என அமர்ந்தனர்.


சிதாராவின் முகத்தைக் கண்ட ஆர்யானிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.


தன் முனங்கையால் அவன் இடுப்பில் சிதாரா இடிக்கவும் தான் அவன் அமைதியானான்.


கடைசி சீட்டில் இடது பக்கமாகவே இவர்கள் அமர்ந்து இருந்தனர். வலது பக்கமாக கடைசிக்கு முந்தைய சீட்டில் ஓரத்தில் அமர்ந்திருந்த பிரணவ்வும் இவர்களின் கூத்தைப் பார்த்துக்கொண்டு..இல்லை இல்லை முறைத்துக்கொண்டு இருந்தான்.


ஆனால் அவன் தான் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருந்தானே.


ஆடல் பாடலுடன் அவர்களின் ஊட்டியை நோக்கிய பயணம் அதிகாலை 4 மணியளவில் ஆரம்பமானது.


சில மணி நேரம் கழித்து அபினவ், "ஓக்கே காய்ஸ்.. கொஞ்சம் எல்லாரும் அமைதியாகி நான் சொல்றத்த கேட்டுக்கோங்க... நாம ஊட்டி போய் சேர எப்டியும் டென் டு டுவல்வ் ஹவர்ஸ் எடுக்கும்... சோ ஃபர்ஸ்ட் நம்ம போக போற இடம்...." என இழுத்து அனைவரையும் பார்த்துக் கூற அனைவருமே அவன் கூறும் பதிலுக்கு ஆர்வமாக காத்திருந்தனர்.


"வேற என்னங்க.. நமக்கு சோறு தானே முக்கியம்.. சோ ஃபர்ஸ்ட் போற வழில இருக்குற ஒரு ஹோட்டல்ல நிறுத்தி ப்ரெக்ஃபாஸ்ட்ட எடுத்துட்டு அங்க இருந்து நம்ம ஃப்ரெஷ்ஷா ஸ்டார்ட் பண்ணலாம்.. ஓக்கே காய்ஸ் யூ கன்ட்னியு.." என்றதும் அனைவரும் மீண்டும் உற்சாகமாக இருந்தனர்.


அபினவ் அமர்ந்ததும் அவனைப் பார்த்து பிரணவ்வும் ஆதர்ஷும் கேவலமாக ஒரு லுக்கு விட்டனர்.


அப் பார்வை சொல்லாமலே சொல்லியது, " இத சொல்லத்தான் நீ இவ்ளோ பில்டப் குடுத்தியா..." .


"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.." என கூறிவிட்டு திரும்பிக் கொண்டான்‌.


லாவண்யா மற்றும் அக்ஷராவுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சிதாரா சிறிது நேரம் கழித்து தன்னிடத்தில் வந்தமர்ந்தாள்.


"என்னாச்சி மினி..‌ வந்து உக்காந்துட்டாய்... அவங்க கூட சேர்ந்து என்ஜாய் பண்ணலயா.." என ஆர்யான் கேட்க, "இல்லடா கொஞ்சம் டையர்டா இருக்கு அதான்.." என்று விட்டு சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.


அதன் பின் ஆர்யானும் அவளை எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு தெரியும் அவளாகவே எதுவாக இருந்தாலும் அவனிடம் சொல்வாள் என்று.


ஆனால் அவள் அங்கிருந்து வந்த காரணமே வேறு.


பயணம் ஆரம்பித்ததிலிருந்து பிரணவ்வின் பார்வை அவளிடமே இருந்தது.


முதலில் சிதாரா அதைக் கவனிக்கவில்லை. பின் ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தவள் பிரணவ்வைக் கண்டு கொண்டாள்.


அங்கிருக்க விருப்பமில்லாமல் உடனே அவள் வந்து அமரவும் பிரணவ்விற்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது. அவனும் கோவமாக திரும்பிக் கொண்டான்.


சற்று நேரம் கழித்து சிதாரா ஆர்யானின் கையிலே தூங்கி விழவும் அவன் சிதாராவுக்கு வசதியாக சீட்டில் சற்று சாய்ந்து அமர்ந்து அவளை தன்‌ தோளில் தாங்கிக் கொண்டான்.


அவளையே சற்று நேரம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ஆயிரம் கேள்விகள்.


பின் எல்லாம் தூர எறிந்து விட்டு சிதாராவின் தோளில் தலை சாய்த்து அவனும் கண் மூடினான்.



பிரணவ் கோவமாக திரும்பிக் கொண்டவன் அதன் பின் அவர்கள் பக்கம் திரும்பவில்லை.


மணி காலை எட்டை நெருங்க பஸ் ஒரு ஹோட்டலின் முன் நின்றது. அனைவருமே இறங்கி சென்றனர்.


பஸ் நிறுத்தப்பட்டதும் விழிப்புத் தட்டிய சிதாரா அதன் பின்னே தான் இவ்வளவு நேரம் எங்கு தூங்கிக் கொண்டிருந்தோம் என்றே விளங்கியது.


ஆர்யான் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க அவனைக் கண்டு புன்னகைத்தவள் பின் முகத்தில் பொய்க் கோபத்தை பூசிக்கொண்டு அவனை உலுக்கியவள், "டேய்‌ வளர்ந்து கெட்டவனே.. எந்திரிடா... கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே.. உடனே நல்லா சொகுசா படுத்துக்குவாய்.." என்றாள்.


அவள் உலுக்கியதும் உறக்கம் களைந்தவன் அவள் பேச்சில், "யாரு.. நான் நல்லா சொகுசா தூங்கினேன்... மேடம் என்ன பண்ணீங்க.." என்ற ஆர்யானின் கேள்வியில் சிதாரா ஒரு நொடி அமைதியாகி விட்டு பின் சமாளிப்பாக, "அது... நான் ஏதோ கொஞ்சம் தூக்கத்துல தெரியாம உன் கைல சாஞ்சிட்டேன்.. அதுக்காக நீயும் அதே பண்ணுவியா.. நான் ஒன்னும் வேணும்னு பண்ண இல்லயே..." என்ற சிதாராவின் பதிலில் அவளின் மனசாட்சியே அவளை காரித் துப்பியது.


ஆர்யான் எதுவும் கூறாமல் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளை ஒரு பார்வை பார்த்தான்.


அத்துடன் வாயை மூடிக் கொண்டவள் மனதில், "இதுக்கு மேல ஏதாச்சும் சொன்னா நாமளே தான் அசிங்கப்படனும்.. பேசாம இருந்துருவோம்.." என்றவள் அவனை நோக்கி, "சரி சரி வா போலாம்.. அதுங்க ரெண்டும் இந் நேரம் என் பங்கையும் சேர்த்து சாப்பிட ஆரம்பிச்சி இருப்பாங்க.." என்றாள்.


பின் இருவருமே இறங்கி ஹோட்டலுக்குள் செல்ல சிதாரா தன் தோழிகளுடன் இணைய ஆர்யான் ஆண்களுடன் இணைந்து கொண்டான்.


❤❤❤❤❤





- Nuha Maryam -
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைதி - அத்தியாயம் 5
ஹோட்டலில் இருந்து கிளம்பியவர்கள் ஊட்டியை சென்றடையவே மதியமானது.

அவர்கள் முதலில் சென்ற இடம் ஊட்டி வெக்ஸ் வேர்ல்ட் (Wax World).

மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், அன்னை தெரேசா, டாக்டர்.அப்துல் கலாம் மற்றும் பல சிறந்த ஆளுமைகளின் மெழுகுச் சிலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் மெழுகுச் சிலைகளும் இங்கு காணலாம்.

அனைத்தையும் பார்த்து முடித்து வெளிவரவே நேரம் சென்றது.

அன்றைய பாதி நாளே பயணத்தில் கழிந்ததால் அடுத்து காமராஜ் சாகர் அணை சென்று பார்வையிட்டு பின் இரவு அனைவருக்கும் தங்க ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர்.

சுற்றுலா மற்றும் திரைப்பட படப்பிடிப்புக்கு பிரபலமான இடம் காமராஜ் சாகர் அணை.

ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அணை சாண்டிநல்லா நீர்த்தேக்கம் என்ற பெயரிலும் அழைக்கப்படும்.

மிகவும் அமைதியான சூழல் மட்டுமன்றி பல்வேறுபட்ட பறவைகளையும் இங்கு காணலாம்.

மாலையை நெருங்க அங்கிருந்து கிளம்பி ஊட்டி ரெட் ஹவுஸ் சென்றனர்.

இங்கு தான் அவர்கள் டூர் முடியும் வரை தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.


அத்தியாவசியமான அனைத்து வசதிகளும் அங்கு செய்து தரப்படும்.


சுற்றி கண்ணைக் கவரும் வண்ணப் பூக்களுடன் கூடிய தோட்டம் என அழகான இடம்.


அன்றைய களைப்பு தீர குளித்தவர்கள் தோட்டத்தில் நடுவில் நெருப்பு மூட்டி சுற்றி வட்ட வடிவமாக அமர்ந்து கதையளந்தனர்.


லாவண்யா, அக்ஷராவுடன் பேசிக் கொண்டிருந்த சிதாரா தமக்கு சரி நேராக அமர்ந்திருந்த அவளின் மற்ற தோழிகள் சிலரின் பார்வை அவர்கள் பக்கமிருக்க கேள்வியுடன் அவர்கள் பார்வை இருந்த திக்கைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.


அவளுக்கு பக்கத்தில் ஆண்களுடன் அமர்ந்திருந்த ஆர்யான் ஆதர்ஷ், அபினவ்வுடன் பேசி பேசி அடிக்கடி அவர்களைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்தான்.


இதனைக் கண்டவளின் மனதில் ஒரு திட்டம் உதயமாகியது.


மெதுவாக ஆர்யானின் பக்கம் நெருங்கி அமர்ந்தவள் அவனின் வலது புஜத்தைக் கட்டிக் கொண்டு மெதுவாக அவன் காதில், "சேர் என்ன பண்றீங்க.." என்றாள்.


அவள் செயலால் அங்கு ஒருவனின் பீபி ஏறிக்கொண்டு இருந்ததை சிதாரா அறியவில்லை.


அதுவரை அப் பெண்களைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்தவன் திடீரென அவர்கள் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு மறுபக்கம் திரும்பிக் கொள்ள எதுவும் புரியாமல் விளித்தவன் அப்போது தான் சிதாராவின் கேள்வியில்,


"அடப் பாதகத்தி... உன் வேலையா இது... நான் கூட என்னடா இதுங்க நம்மள இப்படி கேவலமா லுக்கு விடுதுங்களேன்னு பாத்தா நீ இப்படி இருந்தா அதுங்க வேற என்ன பண்ணும்..." என்க சிதாரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.


அதில் கடுப்பான ஆர்யான் அவள் கையை உதறி விட்டு, "உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா மினியன்.. நான் சொன்ன விஷயத்த பத்தி நீ எதுவுமே சொல்லல... அங்க உன்னோட மூஞ்சயே பாத்து பாத்து சலிச்சிட்டேன்.. சரி இங்க இருக்கும் வர இந்த பொண்ணுங்கள சைட் அடிக்கலாம்னு பாத்தா அதுக்கும் நல்ல வேட்டா வெச்சிட்டாய்..." என்க,


அதைக் காதிலே போட்டுக் கொள்ளாத சிதாரா தன் பாட்டில் லாவண்யாவுடன் பேச ஆரம்பித்தாள்.


தன்னால் இயன்ற மட்டும் அவளை முறைத்தவன் பின் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.


சிறிது நேரம் கழித்து தன்னிடத்தில் இருந்து எழுந்த சிதாரா, "இப்படி ஆளாளுக்கு தனியா பேசிட்டு இருக்கவா நம்ம டூர் வந்தோம்... ஏதாச்சும் கேம் ப்ளே பண்ணலாமா ஃப்ரென்ட்ஸ்.. " என்க,


நண்பர் பட்டாளத்தில் சாரு, "என் கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு.." என்க அனைவரும் அவள் சொல்வதைக் கேட்க தயாராகினர்.


எழுந்து நின்றவள், " இது ட்ரூத் ஆர் டேர் கேம் தான்.. பட் கொஞ்சம் டிஃபரன்ட்டா இருக்கும்.. பாட்டில் சுத்தாம ரெண்டு பாக்ஸ் வெச்சி இருப்போம்.. ஒரு பாக்ஸ்ல எல்லாரோட நேமும் எழுதி போட்டு இருக்கும்.. என்ட் மத்த பாக்ஸ்ல கொஞ்சம் டேர்ஸ் எழுதி போட்டு இருக்கும்.. ஒவ்வொருத்தர் கிட்டயும் நாம நேம் பாக்ஸ தருவோம்.. அதுல ஏதாச்சும் ஒரு சீட்டு எடுத்து அந்த சீட்டுல இருக்குறவங்க கிட்ட ட்ரூத் ஆர் டேர்னு கேப்போம்.. ட்ரூத்னா நேம் செலக்ட் பண்ணவரு மத்தவர் கிட்ட அவங்களுக்கு பிடிச்ச என்ன கேள்வின்னாலும் கேக்கலாம்.. டேர்னு சொன்னா மத்த பாக்ஸ்ல இருக்குற சீட்டுல ஒன்ன எடுத்து அதுல இருக்குற டேர செய்யனும்.. ரெண்டயுமே செய்யாதவங்களுக்கு நாம பனிஷ்மன்ட் குடுக்கலாம் பட் ஃபனியா..." என்க அனைவரும் சம்மதித்தனர்.


முதலில் சாருவிடமிருந்தே ஆரம்பித்தனர்.


அவளிடம் நேம் பாக்ஸ் நீட்டப்பட அதிலிருந்து ஒரு துண்டை எடுத்தாள்.


அனைவரும் யாரு.. யாரு எனக் கத்த சீட்டைப் பிரித்துக் காட்டினாள்.


மதன் என்ற பெயர் வந்திருக்க மதன் டேர் செலக்ட் பண்ணினான். 'மனதிலுள்ள காதலை உரியவரிடம் வெளிப்படுத்த வேண்டும்' என வந்திருந்தது.


அவனோ அங்கிருந்தவர்களில் தன் மனதிற்குரியவளைத் தேடி அவளைக் கைப்பிடித்து அழைத்து வந்தான்.


அனைவருமே யாழு... யாழு.. எனக் கத்த யாழினி என்றவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.‌


அனைவரும் ஆவலோடு அவர்களை பார்த்துக் கொண்டிருக்க மதனோ யாரும் எதிர்ப்பாரா வண்ணம் பட்டென ஒற்றைக் கால் நிலத்தில் ஊன்றி மண்டியிட்டவன், "எனக்கு ப்ரபோஸ் எல்லாம் பண்ண தெரியல யாழ்.. பட் ஒன்னு மட்டும் நல்லா தெரியும் நான் உன்ன ரொம்ப நல்லா பாத்துப்பேன்.. ஐ லவ் யூ.. " என்க அவன் சாதாரணமாக சொன்னதும் யாழினிக்கு புஸ் என்றானது.


பெண்களின் பக்கமிருந்து, "யாழு நோ..‌ யாழு நோ.." எனக் குரல் வர அதிர்ச்சியில் எழுந்த மதன் அவர்களைப் பார்த்து, "என்னம்மா நீங்க... இப்படி பண்றீங்களேம்மா..." என்க,


அக்ஷரா, "பின்ன என்ன சீனியர் நீங்க... எவ்ளோ ரொமான்ட்டிக்கா சொல்லுவீங்கன்னு பாத்தா இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்க.." என்றாள்.


"ஆமா.. அக்ஷரா சொல்றது கரெக்ட்.. இதுக்காகவே உங்க ப்ரபோசல நான் ரிஜக்ட் பண்றேன்.. ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணுங்க.. அப்ப யோசிக்கலாம்.." என்று விட்டு செல்ல மதனும் அவள் பின்னே கெஞ்சிக் கொண்டு அவளைத் தொடர்ந்து சென்றான்.


பின் ஒவ்வொருவராக மாற்றி மாற்றி தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலையும் வழங்கப்பட்ட டேரையும் சிலர் பனிஷ்மன்ட் பெற்றும் விளையாடினர்.


லாவண்யாவுக்கு ஆதர்ஷுடன் கப்பிள் டான்ஸ் ஆட வர இருவருமே தமக்குள் மெய் மறந்து ஆடினர்.


அக்ஷரா ட்ரூத் செலக்ட் பண்ண பாடசாலையில் இருக்கும் போது இருந்த சீக்ரட் க்ரஷ் பற்றி கேட்க அவளும் அந்த நாட்களைப் பற்றி ரசனையுடன் ஏற்ற இறக்கத்தோடு கூற அபினவ்வுக்கோ காதில் புகை வராத குறை.


மீண்டும் அவள் தன்னிடத்துக்கு செல்லும் போது அபினவ் அவளைப் பார்த்து முறைக்க, அக்ஷராவோ அவனுக்கு கண்ணடித்து விட்டுச் சென்றாள்.


அக்ஷரா க்ரஷ் பற்றிக் கூறினாலே தவிர பெயர் கூறவில்லை.


அதனால் அபினவ் அறியாத ஒன்று அக்ஷராவின் சீக்ரட் க்ரஷ்ஷே தான் தான் என்று.


அவள் இடத்துக்கு வந்ததும் அவளைப் பிடித்துக் கொண்ட லாவண்யா சிதாராவிடம், "பாருடி இவள.. அவ்ளோ இருந்தும் நம்ம கிட்ட கூட சொல்லல.. நம்ம தான் சொல்லிட்டு திரியுரோம் நம்ம மூணு பேருக்கும் இடைல எந்த சீக்ரட்டும் இல்லன்னு.." என்க அக்ஷரா அவர்களைப் பார்த்து சமாளிப்பாக இளித்து வைத்தாள்.


மீண்டும் கேம் ஆரம்பமாக அனைவரும் அதில் கவனம் பதித்தனர்.


தொடர்ந்து பிரணவ்விடம் வர அவன் தேர்ந்தெடுத்த பெயரை அவனே எதிர்ப்பார்க்கவில்லை.


அவன் யாரென்று பெயரைக் கூறாமல் அமைதியாக இருக்க, அபினவ் கையிலிருந்த சீட்டை வாங்கிப் படித்தவன் சிதாராவை நோக்கி, "சித்து.. நீ தான்.. வா.." என்று விட்டு தன்னிடம் சென்றமர்ந்தான்.


ஆர்யான் அதிர்ச்சியில் சிதாராவின் முகம் பார்க்க அவளோ புன்னகையுடன் பிரணவ்விடம் சென்று நிற்கவும், பிரணவ் அவள் கண்களைப் பார்த்து "ட்ரூத் ஆர் டேர்" என்றான்.


சிதாரா பதிலுக்கு அவன் கண்களை நேராகப் பார்த்து, "அஃப்கோர்ஸ்.. ட்ரூத்..." என்றாள்.


பிரணவ் மனதில்,"நல்ல வாய்ப்பு கெடச்சி இருக்குடா... கேக்க வேண்டியத்த கேட்டுரு.." என நினைத்தவன்,


"யாருக்காக இந்த மாற்றம்.. ஐ மீன் எல்லா விஷயத்துலயும்.." என மனதில் சிரித்த வண்ணம் அவளிடம் கேட்டான்.


அவன் என்னவோ எதிர்ப்பார்த்தபடி கேட்டான்.


ஆனால் சிதாரா யோசிக்காமல் உடனே பதிலளித்தாள்.


"யாருக்காகன்னா.... ஓஹ் யாரையாச்சும் இம்ப்ரஸ் பண்ணுறத்துக்காக என்னோட ட்ரஸிங் ஸ்டைல் எல்லாம் சேன்ஜ் பண்ணி இருக்கேனான்னா.. ஐம் ரியலி சாரி... அப்படி எந்த விதமான நோக்கமும் எனக்கில்ல... ஃபர்ஸ்ட் அப்ரோட் போய் படிக்க கிட்ட நான் மட்டும் தனியா எங்க ஊரு பொண்ணுங்க போல இருந்தா எல்லாரும் என்னமோ ஏலியன பார்க்குற மாதிரி பார்ப்பாங்க.. என்ட் எனக்கு அங்க இருக்குற மத்த பசங்க கூட ஒரு ஒட்டாத தன்மை ஏற்படலாம்... அதனால தான் அந்த இடத்துக்கு ஏத்தது போல என்ன மாத்திக்கிட்டேன்.. அதுக்காக நான் ஒன்னும் நம்மோட கல்ச்சர விட்டு குடுக்கலயே.. ஒரு பொண்ணு ட்ரெஸ்ஸிங் ஸ்டைல மாத்தினா கல்ச்சரயே மாத்திட்டதா எண்ணினா அது சுத்த முட்டாள்த்தனம்..‌ என்ட் ஃபைனலி நான் யாருக்காகவும் என்ன மாத்திக்கனும்னு அவசியமில்ல... எனக்கு எப்படி இருக்க தோணுதோ அப்படி தான் நான் எப்போதும் இருப்பேன்.." எனக் கூறி பிரணவ்வின் எதிர்ப்பார்ப்பில் மண்ணள்ளிப் போட்டாள்.


அங்கிருந்த அனைவருக்கும் பாதி புரிந்தும் புரியாத நிலை.


ஆனால் புரிய வேண்டியவனுக்கோ நன்றாக புரிந்தது.


அவன் அவசரமாக, "அப்போ எதுக்காக..." என ஏதோ கேட்க ஆரம்பிக்கும் போதே "ஒரு கேள்வி தான் கேக்க முடியும்னு நெனக்கிறேன்.." என கூறி விட்டு தன்னிடத்தில் சென்று அமர்ந்தாள்.


அவள் அமர்ந்ததும் ஆர்யான் அவள் கையை அழுத்தி அவளைப் பார்த்து கண்களை மூடித் திறந்தான்.


அவனுக்கு புன்னகையைப் பதிலாக அளித்தாள் சிதாரா.


தொடர்ந்து அனைவரும் தமக்கு வந்ததை செய்ய கேம் முடிந்தது.


மணி நள்ளிரவை எட்ட தமக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றனர்.


சிதாரா, லாவண்யா, அக்ஷரா மாத்திரம் தோட்டத்தில் இருந்தனர்.


புல்வெளியில் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சற்று நேரத்திலெல்லாம் அக்ஷரா சிதாராவின் மடியில் தலை வைத்து லாவண்யாவின் மடியில் கால் நீட்டி உறங்கி இருந்தாள்.


இருவரும் வெகுநேரம் வெண்மதியின் எழிலைக் கண்களால் பருகிக் கொண்டிருக்க, லாவண்யாவே அவ் அமைதியைக் களைத்தாள்.


"சித்து.. நான் ஒன்னு கேட்டா உண்மைய மட்டும் சொல்லுவியா.." என்ற லாவண்யாவின் கேள்விக்கு நிலவை வெறித்த வண்ணமே ஹ்ம்ம் என சம்மதித்தாள்.


"ஒன்ன வேணாம்னு தூக்கி போட்டுட்டு போனவங்க திரும்ப உன் லைஃப்ல வந்த நீ என்ன பண்ணுவாய்.. அவங்கள ஏத்துக்குவியா.." என்க,


சிதாரா, "அது ஒவ்வொருத்தரையும் பொறுத்தது வனி.. ஏதோ ஒரு இக்கட்டான சிச்சுவேஷன்ல நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க வேற வழியே இல்லாம நம்ம லைஃப விட்டு போய்ட்டு அப்புறம் அந்த சிச்சுவேஷன் ஒழுங்கானத்துக்கு அப்புறம் திரும்ப நம்மல தேடி வந்தா நாம அவங்கள நம்ம லைஃப் உள்ள அனுமதிக்காம பிடிவாதம் பிடிச்சா அது அவங்களையும் கஷ்டப்படுத்தும்.. நம்மளையும் கஷ்டப்படுத்தும்.. நம்மளால ரொம்ப நாளெக்கி நாம பாசம் வெச்சவங்கள வெறுத்து ஒதுக்கவும் முடியாது... ரெண்டு பக்கமுமே அன்பும் பாசமும் நம்பிக்கையும் ஒருத்தொருக்கொருத்தர் உண்மையாவும் இருக்குறவங்களுக்கு இது பொருந்தும்...


இதே நாம எவ்வளவு தான் உண்மையாவும் அன்பு, பாசம், நம்பிக்கை எல்லாத்தையும் அவங்க மேல கொட்டி வெச்சி இருந்தாலும் நம்ம கூட தேவைக்கு மட்டும் பழகி பாசமா இருக்குற மாதிரி நடிச்சி எங்கடா வாய்ப்பு கெடக்கும் நம்மள தூக்கி போட்டுட்டு போறத்துக்குன்னு இருக்குறவங்க நம்மள விட்டு போனா அவங்கள அப்படியே விடுறது தான் நமக்கு நல்லது... நாம உண்மையான அன்போட தான் இருந்திருப்போம்.. அதனால நிச்சயமா அவங்களோட பிரிவு கஷ்டத்த கொடுக்கும்... திரும்ப அவங்க நம்ம லைஃப்ல வர ட்ரை பண்றது கூட ஏதோ நம்ம கிட்ட அவங்களுக்கு வேண்டியது இருக்குறதால மட்டும் தான்...


அதனால அப்படிப்பட்ட மனுஷங்களுக்கு நிச்சயமா என் லைஃப்ல திரும்ப இடம் கொடுக்க மாட்டேன்.."


இதை சொல்லி முடிக்கும் போதே அவள் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.


அவளை பக்கவாட்டில் அணைத்த லாவண்யா, "எதுக்காக இந்த பொய்யான வேஷம் சித்து... நீ முன்ன இருந்து மாதிரி இப்ப இல்ல.. ரொம்ப மாறிட்ட.." என்க,


அவளைப் புரியாமல் நோக்கிய சிதாரா, "இது பொய்யான வேஷம் இல்ல வனி.. நான் மாறிடேங்குறது உண்மை தான்.. இல்லன்னு சொல்லல... பட் அதுக்கு காரணம் என்னோட கஷ்டத்தையோ கவலையையோ மறைக்கனும்னு இல்ல... திரும்பவும் ஒருத்தர் என்ன கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான்.. அதுக்காக என்ன நானே மாத்திக்கிட்டேன்... யாருக்கிட்டயும் எந்த எதிர்ப்பார்ப்பும் வெச்சிடக்கூடாதுன்னு எனக்கு நானே சொல்லி சொல்லி மாத்திக்கிட்டேன்... இப்போ யாருக்கா இருந்தாலும் அவ்வளவு ஈஸியா என்ன ஹர்ட் பண்ண முடியாது... ஏன்னா என்னோட இதயத்த இரும்பா மாத்தி இருக்கேன் நான்..." என முகத்தில் ஒரு வித தெளிவுடன் கூறியவளை அணைத்துக் கொண்டாள் லாவண்யா.


இங்கு தனது அறை ஜன்னல் வழியாக சிதாராவையே பார்த்துக் கொண்டிருந்த பிரணவ் மனதில், "நாளைக்கு நிச்சயமா இதெல்லாத்துக்கும் ஒரு முடிவ கொண்டு வந்தே தீருவேன் தாரா... யாராலையும் உன்ன என்ன விட்டு பிரிக்க முடியாது.." என தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டான்.


இவை எது பற்றியுமே அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஆர்யான்.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க பார்க்கலாம் விதி நாளை இவர்களுக்கு என்ன கொடுக்க காத்திருக்கிறது என்று.


❤❤❤❤❤




- Nuha Maryam -
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைதி - அத்தியாயம் 6
அன்றைய காலை பல்வேறு திருப்பங்களைத் தர விடிந்தது.


ஆண்கள் அனைவரும் ஹாலில் கூடியிருக்க அங்கு வந்த அக்ஷரா,


"சீனியர்ஸ்... இன்னிக்கி என்ன ப்ளேன்.." எனக் கேட்டாள்.


ஆதர்ஷ், "முதல்ல பைகாரா வாட்டர்ஃபால் போலாம்னு இருக்கோம் அக்ஷு... அதுக்கப்புறம் மத்த ப்ளேஸஸ் விசிட் பண்ணிட்டு நைட் ஒன்பது பத்து மணிக்கெல்லாம் இங்க வந்துருவோம்.. நீ போய் கர்ள்ஸ் எல்லாரையும் சீக்கிரம் ரெடி ஆகி கீழ வர சொல்லு.." என்க அக்ஷரா சரி என்று விட்டு சென்றாள்.


அனைவரும் தயாராகி கீழே வர சிதாரா, லாவண்யா, அக்ஷரா மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.


அபினவ் ஆதர்ஷிடம், "இதுங்க இன்னும் வராம என்ன பண்ணுதுங்க.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சி.. இப்பவே போனா தான் கரக்ட் டைம்ல எல்லாம் பாத்துட்டு வந்துர முடியும்.." என்க ஆர்யான் தான் பார்த்து விட்டு வருவதாக கூறி மேலே சென்றான்.


பிரணவ் மனதில், "ஆமா இவரு போலன்னா அவங்க கீழ வர மாட்டாங்க.. ரொம்பத்தான் பண்றான்.. எப்ப பாரு தாரா கூடவே சுத்திட்டு இருக்கான்.." என ஆர்யானை வருத்தெடுத்துக் கொண்டிருந்தான்.


மேலே அறையில், "ப்ளீஸ் சித்து.. இதுக்காக தான் வந்தியா.. ஓக்கேனு சொல்லேன்.." என அக்ஷரா சிதாராவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அங்கு வந்த ஆர்யான்,


"என்னாச்சி கர்ள்ஸ்.. ஏன் இன்னும் கீழ வரல மூணு பேரும்.." எனக் கேட்டான்.


"நீங்களே கேளுங்கண்ணா.. இவ்வளோ கஷ்டப்பட்டு பேரன்ட்ஸ சம்மதிக்க வெச்சி டூர் வந்தா இவ என்னன்னா வர மாட்டாளாம்.. எங்கள மட்டும் போக சொல்றா.." என லாவண்யா கூற சிதாராவை கேள்வியாய் ஏறிட்டான் ஆர்யான்.


சிதாரா, "இல்லடா காலைல எந்திரிச்சத்துல இருந்து மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு... அந்த ஃபீல எப்படி சொல்லன்னு தெரியல... அதான் நான் இன்னெக்கி இங்கயே இருக்கேன்னு இவங்க ரெண்டு பேரையுப் போய்ட்டு வர சொல்லிட்டு இருந்தேன்.." என்க,


"நீ சும்மா எதையாச்சும் போட்டு மனச கொழப்பிக்காதே மினி.. எதுவும் ஆக போறதில்ல.. ஏதாச்சும்னா உனக்கு துணையா நாங்க மூணு பேரும் இருக்கோம்.. உன்னோட அண்ணனுங்க இருக்காங்க.." என ஆர்யான் அவளை சமாதானப்படுத்த,


"அதில்லடா நான்..." என சிதாரா ஏதோ கூற வர அவளைத் தடுத்தவன், "நீ எதுவும் சொல்ல வேணாம்.. ஒரு பேச்சும் இல்ல.. நீ எங்க கூட வர.." என்றதும் சிதாரா அவர்களுக்காக சம்மதித்தாள்.


சற்று நேரத்திலே அனைவரும் கிளம்பி பைகாரா நீர்வீழ்ச்சி சென்றனர்.

நீர்வீழ்ச்சியுடன் சேர்த்து சுற்றியுள்ள பசுமையான இயற்கை அழகை ரசித்தபடி ஓய்வெடுக்க சிறந்த இடம்‌.


அருகிலே போட் ஹவுஸும் ரெஸ்டூரன்ட் ஒன்றும் காணப்படும்‌.


அனைவரும் நீர்வீழ்ச்சியை சுற்றிப் பார்க்க முன்னே செல்ல கடைசியாக லாவண்யா, அக்ஷரா செல்ல அவர்களுக்குப் பின்னே சிதாராவும் ஆர்யானும் வந்தனர்.


ஆர்யான் ஏதோ கூற அதற்கு சிதாரா சிரிக்க சரியாக அவ்விடம் வந்தாள் அவர்களின் தோழிகளில் ஒருவரான மயூரி.


சிதாரா அவளை நோக்கி, "என்னாச்சு மயூ.." என்க அவள் ஏதோ கூற வருவதும் தயங்குவதுமாக இருக்க ஆர்யானும் சிதாராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


ஆர்யான் சிதாராவைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தி என்ன என கேட்க அவளும் தோளைக் குலுக்கி சைகையாலே தெரியல என்றாள்.


பின் மயூரி தைரியம் வரப் பெற்றவளாக சிதாராவிடம், "சித்து நான் உன் ஃப்ரன்ட் கூட கொஞ்சம் தனியா பேசனும்.." என்க ஆர்யான் அதிர்ந்தான்.


சித்து ஆர்யானைப் பார்த்து வாயை மூடி சிரிக்க, ஆர்யான் கண்களாலே அவளிடம் வேண்டாம் எனக் கூறினான்.


சிதாராவோ மயூரியிடம், "அதுக்கென்ன மயூ.. நீ தாராளமா அவன் கூட பேசலாம்... நான் முன்னாடி போறேன்.." என்றவள் பின் ஆர்யானிடம் திரும்பி, "நீ பேசிட்டு வா ஜிராஃபி.. நல்லா டைம் எடுத்து பேசு.." என நக்கலாக கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.


அவள் சென்றதும் ஆர்யான் எதுவும் செய்ய முடியாமல் மயூரியைப் பார்த்து இளித்து வைத்தான்.


மயூரி, "அது வந்துங்க... நான்.. அது... நீங்க..." என சொல்லாமல் இழுக்க,


ஆர்யான் அவசரமாக, "ஒன்னும் பிரச்சினை இல்லங்க.. நீங்க நிதானமா அப்புறம் சொல்லுங்க.." என அங்கிருந்து செல்லப் பார்க்க,


"இல்ல இல்ல.. நான் சொல்ல வந்த விஷயத்த இப்பதே சொல்லிட்றேன்..." என அவனை நிறுத்தினான் மயூரி‌.


மயூரி, "ஆர்யான்.. அது வந்து.. உங்கள பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி.. உங்க ஹியுமர்சென்ஸ் என்ட் நீங்க சித்துவுக்காக கேர் பண்ற விதம் எல்லாமே என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி.. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ.." என ஆர்யானுக்கு மினி ஹார்ட் அட்டேக் ஒன்றையே ஏற்படுத்தினாள்.


அதிர்ச்சியில் வாயடைத்து நின்ற ஆர்யான் பின் மயூரியிடம்,


"மயூரி.. எனக்கு உங்க கிட்ட என்ன சொல்லன்னே புரியல... உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... நேத்து நைட் கூட நீங்க என்னயே பாத்துட்டு இருந்தத்த நான் பாத்தேன்... உங்கள கல்யாணம் பண்ணிக்க குடுத்து வெச்சிருக்கனும்... எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு..." என்றான்.


ஆர்யானிடம் பேசக் கூறி விட்டு சற்று முன்னால் வந்த சிதாரா நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள். பின் சிறிது நேரத்தில் ஆர்யான் மற்றும் மயூரி இருந்த பக்கம் திரும்பிப் பார்க்க, மயூரி ஏதோ கூற ஆர்யான் வெட்கப்படுவதைக் கண்டவள் புன்னகைத்தாள்.


திடீரென யாரோ அவள் கரம் பற்றி இழுக்க திரும்பிப் பார்த்தவள் பிரணவ்வைக் கண்டதும் அவசரமாக கையை இழுக்க முயற்சித்தாள்.


ஆனால் பிரணவ் அவளின் கையை அழுத்திப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று யாருமற்ற மறைவான இடமொன்றில் அவளை நிறுத்தினான்.


அவன் விட்டதும் அவன் அழுத்திப் பிடித்த இடம் சிவந்திருக்க வலியில் கையைப் பிடித்துக் கொண்டு சிதாரா, "ஹவ் டேர் யூ... யாரு உங்களுக்கு என் கைய பிடிச்சு இழுத்துட்டு வர இவ்வளோ ரைட்ஸ குடுத்தது..." என ஆவேசமாகக் கேட்டு விட்டு அங்கிருந்து செல்லப் பார்க்க,


மீண்டும் அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் விடாமலே, "ஏன் நான் பிடிச்சா மட்டும் உனக்கு வெறுப்பா இருக்கா தாரா... நான் பிடிக்காம உன் கூட வந்தானே ஒருத்தன் எப்பப்பாரு உன்னையே ஒட்டிக்கிட்டு... அவன் பிடிச்சா மட்டும் சுகமா இருக்...." என அவன் முடிக்கும் முன்னே அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது சிதாராவின் கைகள்.


சிதாரா, "அவன பத்தி என்ன தெரியும்னு இவ்வளோ அசிங்கமா பேசுறாய்... அது சரி.. உன் புத்தியே இதானே.. அது எப்படி மாறும்.." என்க,


"ச...சாரி தாரா... அது உன் மேல உள்ள லவ்வுல பேசிட்டேன்... அவன் யாரு என் தாராவ தொட்டு பேசன்னு ஒரு பொசசிவ்னஸ்ல பேசிட்டேன்.. ஐம் சாரி தாரா..." என பிரணவ் அவளிடம் கெஞ்ச,


அவன் கூறியதைக் கேட்டு கத்தி சிரித்தாள் சிதாரா.


பின், "உனக்கு என் மேல லவ்வு... இதுல பொசசிவ்னஸ் வேறயாம்.. ச்சீ.. இப்படி சொல்லவே உனக்கு அசிங்கமா இல்ல... உன்ன பாத்தாவே வெறுப்பா இருக்கு.." என்றாள்.


அவள் தோள்களைப் பற்றிக் கொண்ட பிரணவ், "நீ பொய் சொல்லுற தாரா... எனக்கு தெரியும் நீ எனக்காக தான் இவ்வளவு மாறி‌ இருக்கன்னு... உனக்கு என் மேல இன்னும் லவ் இருக்கு.." என்க,


அவன் கரங்களைத் தட்டி விட்டவள் ஆவேசமாக, "இல்ல.. இல்ல... இல்ல... நான் உன்ன வெறுக்குறேன்... அடியோட வெறுக்குறேன்... உன்ன எந்தளவு காதலிச்சேனோ அத விட பல மடங்கு உன்ன நான் வெறுக்குறேன்... உன் பார்வை என் மேல படுறதயே நான் அசிங்கமா நெனக்கிறேன்..." என கத்தினாள்.


அவ்வளவு நாளும் கட்டுப்படுத்தி வைத்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டது.


அவள் சத்தம் கேட்டு அனைவரும் அவ்விடம் வரப்பார்க்க அவர்களை தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி அனுப்பிய அபினவ்வும் ஆதர்ஷும் அங்கு வந்தனர்.


அவர்களைத் தொடர்ந்து லாவண்யா, அக்ஷரா மற்றும் ஆர்யான் வந்தனர்.


ஆர்யான் அங்கு வந்ததுமே அவசரமாக சிதாராவிடம் சென்று, "மினி கூல்.. அமைதியா இரு.. எதா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்.." என அவளை சமாதானப்படுத்தப் பார்க்க அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பிரணவ்,


"நீ யார்ரா எங்களுக்குள்ள வர... அவ என் தாரா.. அவ என்ன பத்தி என்ன வேணாலும் பேசுவா.. உனக்கென்னடா வந்தது.." என்றான்.


அக்ஷராவும் லாவண்யாவும் சிதாராவின் அழுகையை நிறுத்தப் போராட மேலும் மேலும் அவள் அழுகை அதிகமானது.


அவன் தன்னை தள்ளி விட்டதைக் கூட பொருட்படுத்தாத ஆர்யான், "ப்ளீஸ் பிரணவ்.. நீங்க என் கூட எப்ப வேணாலும் சண்ட போடுங்க... ப்ளீஸ்... இப்ப மினிய எதுவும் கேக்க வேணாம்.." எனக் கெஞ்ச,


"இவ்வளவு சொல்றேன் திரும்ப திரும்ப மினி மினின்னுட்டு வராய்... அவ என் தாரா.. எனக்கும் அவளுக்கும் இடைல ஆயிரம் இருக்கும்.. நீ யார்ரா அத பத்தி பேச.." என பிரணவ் மீண்டும் ஆர்யானை அடிக்கப் பாய,


ஆதர்ஷும் அபினவ்வும் அவனைத் தடுக்க முன் வர அதற்குள் சிதாரா, "நிறுத்துங்க..." எனக் கத்தியதும் பிரணவ் அப்படியே நின்றான்.


பின் பிரணவ்வை நோக்கி சிதாரா வர, ஆர்யான், "மினி.. வேணாம் ப்ளீஸ்டா..." என்க அவன் முன் கை நீட்டி தடுத்தவள் தன் கண்களைத் துடைத்து கொண்டு பிரணவ்விடம் திரும்பி,


"சொல்லு.. நீ யாரு எனக்கு.. வார்த்தைக்கு வார்த்தை என் தாரா என் தாரானு சொல்லுறாய்... எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.." என்க,


பிரணவ், "தாரா நீ ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்.. நான் உன்னோட பிரணவ்.. நானும் நீயும் ரெண்டு வருஷமா காதலிச்சோம்... " என்றான்.


அவன் சொன்னதைக் கேட்டு கை தட்டி சிரித்த சிதாரா, "ஓஹ்... காதலிச்சது உண்மை தான்.. பட் நான் மட்டும் தான் காதலிச்சேன்... நீ..... ச்சீ.. சொல்லவே அசிங்கமா இருக்கு.." என்க,


"ஓக்கே தாரா... எல்லாம் விடு... இந்த நிமிஷம் நான் உன்ன லவ் பண்றேன்... எனக்கு தெரியும் நீயும் என்ன இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்காய்..." என பிரணவ் கூற,


சிதாரா, "நான் எப்படி பிரணவ் நீ சொல்றத்த நம்புவேன்.. எவ்வளவு சீப்பான ரீசன் சொல்லிட்டு விட்டுப் போனாய்..." என அவள் சொல்லி முடிக்கும் முன்னே கண்ணீர் அவள் கன்னத்தைத் தாண்டி ஓடியது.


ஆர்யான், "போதும் மினி.. இதுக்கு மேல எதுவும் சொல்லாதே.. ப்ளீஸ்..." என்றவனைத் தடுத்தவள்,


"இல்லடா.. நான் இன்னெக்கி பேசியே ஆகனும்.. எவ்வளவு நாளெக்கி தான் என் மனசுலயே எல்லாம் வெச்சிட்டு இருப்பேன்... இதுக்கு ஒரு முடிவு வேணாம்.." என்ற சிதாரா அழுதவாறே பேசினாள்.


"உன் கிட்ட அன்னெக்கி எவ்வளவு கெஞ்சினேன்... என்ன விட்டுப் போகாதேன்னு... உன் கால்ல கூட விழுந்தேன்..." என உடைந்த குரலில் கூறியவள் திடீரென பிரணவ்வின் சட்டையைப் பிடித்து,


"ஆனா நீ... என்ன வார்த்தையெல்லாம் சொன்னாய்.. இப்ப கூட அதப் பத்தி நெனச்சா..." என சொல்லும் போதே அவளுக்கு மூச்சு வாங்க அனைவரும் அவர்களின் பின்னே நின்றதால் அவர்களுக்கு அவள் முகம் தெரியவில்லை.


பிரணவ் மாத்திரம் அவள் வேகமாக மூச்சு வாங்குவதைக் கண்டவன், தாரா என ஏதோ சொல்ல வர அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவள், "ச்சீ... இனி என்ன அப்படி கூப்பிடாதே... உனக்கு அந்த தகுதி கூட இல்ல... உன் வாய்ல இருந்து என் பேரு வரதே அசிங்கமா நெனக்கிறேன்.. " என்றவள்,


பின் அவன் முன் விரல் நீட்டி, "திரும்ப என் லைஃப்ல என்டர் ஆகனும்னு நெனச்ச... அசிங்கமாகிரும்... திஸ் இஸ் மை லாஸ்ட் வார்னிங்..." என்றாள்.


சிதாராவின் பேச்சிலே பிரணவ் தன் தவறு உணர்ந்திருந்தான்.


எதுவுமே கூறாது அவளைத் தடுக்க வழியற்று கண்களில் சோகத்தைத் தேக்கி கல்லாக சமைந்திருந்தான்.


சிதாரா நேராக ஆர்யானிடம் சென்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.


அங்கிருந்த யாரும் எதுவுமே பேசவில்லை.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.


தன் நெஞ்சு சூடாவதையும், அணிந்திருந்த டீ ஷர்ட் ஈரமாவதையும் வைத்து‌ சிதாரா அழுகிறாள் என உணர்ந்த ஆர்யான் அவனும் அவளை ஆறுதலாக அணைக்க, "இங்கிருந்து போய்றலாம் ரயன்.. என்னால முடியல..." என்க, சிதாராவின் பேச்சே அவள் எவ்வளவு மன உளைச்சலில் உள்ளாள் எனக் கூறியது.


ஏனென்றால் அவள் அதிக கவலையில் உள்ள போதோ அல்லது மன உளைச்சலில் உள்ள போதோ அல்லது அதிகம் உணர்ச்சி வசப்படும் போதோ மட்டும் தான் அவனை ரயன் என அழைப்பாள்.


மற்ற நேரமெல்லாம் ஜிராஃபி தான். இல்லாவிட்டால் பெயர் சொல்லி அழைப்பாள்.


திடீரென தன் கை பாரமாக குனிந்து சிதாராவைப் பார்த்தவன் அதிர்ந்தான்.


வேகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தவள் கொஞ்சம் கொஞ்சமாக தலையும் கையும் ஒரு பக்கம் உதர வாயில் நுரை தள்ள அவன் கைகளில் சரிந்து கொண்டிருந்தாள்.


❤❤❤❤❤





- Nuha Maryam -
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைதி - அத்தியாயம் 7
S M Hospital - Ooty



ஆதர்ஷ், அபினவ், பிரணவ், ஆர்யான், லாவண்யா, அக்ஷரா என அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.



தன்னை அணைத்தபடி இருந்தவள் திடீரென வலிப்பு வந்து தன் கரங்களிலே சரிய அதிர்ந்த ஆர்யான் "மினி...." எனக் கத்த,



அவன் கத்தலில் திரும்பியவர்கள் சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்து அவசரமாக அவளிடம் ஓடினர்.



பிரணவ், "தாரா.." என அவளிடம் செல்லப் பார்க்க அவன் கையை யாரோ பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தவன் யாரெனப் பார்க்க, ஆதர்ஷ் தான் அவனை செல்ல விடாமல் பிடித்திருந்தான்.



ஆதர்ஷ், "நீ பண்ணது எல்லாம் போதும்... தயவு செஞ்சி இங்கயே இரு.." என கோவமாகக் கூறியவன் சிதாராவிடம் விரைந்தான்.



பிரணவ் எதுவும் செய்ய முடியாமல் அங்கு நின்றே கவலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.



சிதாரா வலிப்பு வந்து துடிக்க ஆர்யான் அவசரமாக அருகிலிருந்த இரும்புக் கம்பியொன்றை எடுத்து அவள் உள்ளங்கையில் வைத்து மடித்து அழுத்தினான்.



மெதுவாக அவளது வலிப்பு நிற்க சிதாராவை கரங்களில் ஏந்திய ஆர்யான் யாரிடம் எதுவும் கூறாது ஓடிச் சென்று டாக்சி பிடிக்க அக்ஷராவும் லாவண்யாவும் அவனுடன் சென்றனர்.



ஏனையோரிடம் தகவலைக் கூறி அவர்களை ரெட் ஹவுஸ் செல்லக் கூறிய அபினவ் இன்னொரு டாக்சி பிடித்து ஆதர்ஷ், பிரணவ்வுடன் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.



ஹாஸ்பிடலில் அனைவரும் டாக்டர் சிதாராவைப் பரிசோதித்து விட்டு வரும் வரை தவிப்புடன் இருக்க,



பிரணவ் அங்கு ஒரு ஓரமாக கை கட்டி நிற்பதைப் பார்த்த ஆர்யான் பிரணவ்விடம் சென்று அவன் சட்டையைப் பிடித்து,



"எதுக்குடா இன்னும் இங்க நின்னுட்டு இருக்காய்... இன்னும் என்ன வேணும் உனக்கு... அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே இப்ப எதையும் பேச வேணாம் நிறுத்து நிறுத்துன்னு... கேட்டியாடா... இப்ப பாரு மினி எந்த நிலைல இருக்கான்னு... இதுக்கெல்லாம் நீ மட்டும் தான்டா காரணம்... உன்ன...." என கோபத்தில் கத்தி விட்டு பிரணவ்வை அடிக்கக் கை ஓங்க,



அபினவ் அவனைத் தடுக்க முயற்சிக்க, சிதாராவைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த டாக்டர் அவர்களைக் கண்டு,



"நிறுத்துங்க... இங்க என்ன நடக்குது... இது என்ன ரௌடிசம் பண்ணுற இடம்னு நெனச்சீங்களா... பேஷன்ட்ஸ் இருக்குற இடம்... திரும்ப இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்திங்கனா நான் போலிஸ கூப்பிட்டுருவேன்... மைன்ட் இட்..." என அவர்களைத் திட்ட,



பிரணவ்வை விட்டு டாக்டரிடம் ஓடி வந்த ஆர்யான், "சாரி.. சாரி டாக்டர்... மினி இப்போ எப்படி இருக்கா... நல்லா இருக்கால்ல... " என பதட்டமாய்க் கேட்டான்.



டாக்டர், "ப்ளீஸ் பீ காம் சார்... அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க... டோன்ட் வொரி... அவங்களுக்கு இதுக்கு முன்னாடி ஃபிட்ஸ் வந்து இருக்கா..." என்க,



லாவண்யா இல்லை என சொல்ல வர,



"ஆமா டாக்டர்... இது தேர்ட் டைம்..." என ஆர்யானிடமிருந்து பதில் வர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.



டாக்டர், "ஆஹ் ஓக்கே... ஏதோ ஒரு விஷயம் அவங்க மனச ரொம்ப பாதிச்சிருக்கு... அத ஞாபகப்படுத்துற விதமா ஏதாச்சும் நடந்தா தான் இப்படி ஃபிட்ஸ் வருது இவங்களுக்கு... ஐ திங்க் இன்னெக்கி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்து இருக்காங்க... அதனால தான் இன்னும் கான்ஷியஸ் வரல... நாங்க ட்ரீட்மன்ட் பண்ணி இருக்கோம்... சோ ஒரு டூ த்ரீ ஹவர்ஸ்ல கண்ணு முழிச்சிருவாங்க... அவங்கள வார்டுக்கு சேன்ஜ் பண்ணுறோம்... அதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம்.." என்க,



ஆர்யான், "தேங்க் யூ டாக்டர்.." என்றதும் அவர் சென்றார்.



சிதாராவை வார்டுக்கு மாற்ற ஆர்யான் முதலிலே உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்து அவள் கையை தன் கைக்குள் வைத்து பிடித்துக் கொண்டவன் கண்கள் அவனையும் அளியாமல் கண்ணீர் சிந்த யாரும் காணாதிருக்க அவசரமாக துடைத்துக் கொண்டான்.



ஆனால் சிதாராவைக் காண உள்ளே வந்த லாவண்யா அதனைக் கண்டு கொண்டாள்.



பின் அனைவரும் உள்ளே வர லாவண்யா ஆர்யானிடம் சென்று,



"அண்ணா ப்ளீஸ்... உண்மைய சொல்லுங்க.. சித்துக்கு இதுக்கு முன்னால ஃபிட்ஸ் வந்திருக்கா... எப்படி வந்தது... இது வரைக்கும் அவ என் கிட்டயும் அச்சு கிட்டயும் இத பத்தி எதுவுமே சொல்லி இல்லயே... அவளுக்கு என்னாச்சி.. ஏன் இப்படி மாறி இருக்கா.." என்க,



"ஆமாண்ணா.. ப்ளீஸ் எதையும் மறைக்காம சொல்லுங்க... எங்க ஃப்ரெண்டுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருந்திருக்கு... ஆனா இது வரைக்கும் நாம யாரும் அத பத்தி தெரிஞ்சிக்காம இருந்திருக்கோம்..." என கவலையாக கூறினாள் அக்ஷரா.



ஆர்யான், "சொல்றேன்மா... இதுக்கு மேல மறைச்சி என்ன பிரயோஜனம்..." என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு,



"மினிக்கு ஃபர்ஸ்ட் டைம் ஃபிட்ஸ் வந்தப்போ தான் எனக்கும் மினிக்கும் இடைல ஃப்ரென்ட்ஷிப் உருவானது..." என்க, அனைவரும் அவன் கூறுவதைக் கேட்க தயாரானார்கள்.



2 வருடங்களுக்கு முன்...



Fordham University - New York


யுனிவர்சிட்டி ஆடிட்டோரியமே அன்று பரபரப்பாக காணப்பட்டது.

ஏனென்றால் அன்று முதலாம் வருடத்திற்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் தினமாகும்.


மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க நான்காம் ஆண்டு பயிலும் ஆர்யான் அங்கிருந்த பெஞ்ச்சில் தன் நண்பர்களுடன் அமர்ந்து வந்து செல்லும் மாணவர்களை கலாய்த்துக் கொண்டிருந்தான்.


அந்த நேரம் சரியாக யுனிவர்சிட்டியினுள் நுழைந்தாள் சிதாரா.


நீல நிற குர்த்தி அணிந்து கழுத்தை சுற்றி ஷால் போட்டு கண்களில் பெரிய கண்ணாடி, நெற்றியில் சிறிய பொட்டு, தோளில் பையுடன் ஒரு வித படபடப்புடன் நுழைந்தாள்.

சுற்றி எப்போதுமே மார்டன் ட்ரஸ் அணிந்த நவ நாகரீக பெண்களையே பார்த்து இருந்தவனின் கண்களில் முழங்காலையும் தாண்டிய குர்த்தி அணிந்து ஷால் போட்டு பதட்டத்துடன் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு வந்த சிதாராவைக் கண்டதும் விழிகளில் ரசனையுடன் அவளை ஏறிட்டான்.


இந்தியாவிலே பிறந்து வளர்ந்து படிப்பிற்காக வேண்டி நியுயார்க் வந்த ஆர்யானுக்கு இந்த ஐந்து வருடங்களாக மாடர்ன் ஆடை அணிந்த அல்லது முழங்காலுக்கு மேலேறிய ஆடை அணிந்த பெண்களே கண்ணுக்கு தென்பட இருப்பதால் அவர்களைக் கண்டாலே எரிச்சல் வரும்.


ஆனால் அது அந் நாட்டு பழக்க வழக்கம் என்பதால் உடன் பயிலும் பெண்களுடன் பழகினாலும் ஒரு இடைவெழியைக் கடைபிடிப்பான்.


அப்படிப்பட்டவனுக்கு சிதாராவைக் கண்டதும் ரசனை ஏற்பட்டது ஆச்சர்யம் இல்லை.


அவள் கண்களில் தெரிந்த பதட்டத்தைக் கண்டதும் இவனின் வழக்கமான குறும்புக் குணம் வெளிப்பட்டு விட்டது.


சிதாரா அவர்கள் இருந்த இடத்தை கடந்து செல்லப் பார்க்க ஆர்யான்,


"ஓய் சோடா புட்டி..." என அவளை அழைக்க,


அதே இடத்தில் நின்றவள் அவர்களைப் பார்த்து விட்டு தன்னையா அழைத்தான் என சுற்றிப் பார்க்க,


"உன்ன தான்மா... இங்க வா..." என மீண்டும் அழைத்தான் ஆர்யான்.


சிதாரா பயந்து பயந்து அவர்களை நோக்கி மெதுவாக அடியெடுத்து வர, ஆர்யான் அவள் வரும் வரை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அவர்களை நெருங்கியதும் பொய்க் கோபத்துடன்,


"கூப்டதும் வர மாட்டியா... என்ன புகுந்த வீட்டுக்கா போற.. இவ்வளோ மெதுவா வர... சீனியர்ஸ்க்கு ஒரு மரியாதை இல்ல..." என்றதும் அவள் பயந்து தலை குனிந்த படியே இட வலமாக தலையசைத்தாள்.


ஆர்யானின் நண்பர்களுக்கு தமிழ் தெரியாததால் அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தனர்.


சிதாரா பயந்து நடுங்க ஆர்யானுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.


மெதுவாக வாயை மூடிய படி சிரித்தவன்,


"காசு ஏதாச்சும் விழுந்துடிச்சா சோடா புட்டி.." என்க தலையைத் தூக்கி அவனைப் புரியாமல் நோக்கினாள் சிதாரா.


ஆர்யான், "இல்ல ரொம்ப நேரமா கீழ பார்த்து ஏதோ தேடிட்டு இருந்தியே.. அதான் கேட்டேன்..." என்க அவசரமாக இல்லை என தலை அசைத்தாள் சிதாரா.


"ஆமா என்ன இது ட்ரஸ்... இவ்வளவு நீளமா போட்டு கழுத்துல ஷால்... இதுல ஆள விடப் பெரிய கண்ணாடி வேற... இன்னுமே அந்தக் காலத்துல இருக்க... இங்க வர கிட்ட எப்படி ட்ரஸ் பண்ணிட்டு வரனும்னு யாரும் சொல்லி தரலயா..." என ஆர்யான் விளையாட்டாக கலாய்த்திட,


இதை அறியாத சிதாராவோ அவனின் வார்த்தைகளைக் கேட்டதும் திடீரென தலை பாரமாக தன் சமநிலையை இழப்பது போல் இருக்க அப்படியே வலிப்பு வந்து அவன் காலின் அருகே விழுந்தாள்.


ஆர்யான் அதிர்ச்சியில் இருக்க அவன் நண்பர்கள் அனைவரும் பதட்டமாகி ஒருவன், "ஹேய் வட் ஹெப்பன்ட் மேன்.." என்க,


தன்னிலை பெற்ற ஆர்யான், "டோன்ட் நோ.. ப்ளீஸ் ஹெல்ப் மீ டு டேக் ஹர் டு த மெடிக்கல் ரூம்..." என்றவன் நண்பர்களின் உதவியுடன் அவசரமாக சிதாராவை முதலுதவி அளிக்க எடுத்துச் சென்றான்.


சற்று நேரத்தில் கண் விழித்த சிதாரா தான் எங்கிருக்கிறோம் என கண்களால் அலச,


அவள் கண் விழிக்கும் வரை தனியாக அங்கே காத்திருந்த ஆர்யான் பதட்டமாக, "ஏங்க நீங்க நல்லா இருக்கீங்கல்ல... " என்க ஆம் என தலையசைத்தாள் சிதாரா.


ஆர்யான், "சாரிங்க.. சீரியஸ்லி உங்கள ஹர்ட் பண்ணனும்னு எதுவும் சொல்லல... ஜஸ்ட் ரேக்கிங் பண்ண தான் பாத்தோம்..." என்க,


"இட்ஸ் ஓக்கே.." என்றாள் சிதாரா.


"இதுக்கு முன்னாடி உங்களுக்கு இப்படி ஃபிட்ஸ் வந்திருக்கா.." என்க இல்லை என தலையசைத்தாள்.


ஆர்யான், "என்னங்க நீங்க... நானும் ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்... நீங்க தலையை மட்டும் ஆட்டுரீங்க... ஒரு வேளை நீங்க இன்னும் என்ன மன்னிக்கலயா... அகைன் சாரிங்க..." என்றான்.


சிதாரா அவசரமாக, "இல்ல.. இல்லங்க... நீங்க எதுவும் தப்பு பண்ணலயே... ஜஸ்ட் விளையாட்டுக்கு தானே பண்ணீங்க... அதனால சாரி கேக்காதீங்க..." என்க,


மகிழ்ந்த ஆர்யான், "ஹப்பாடா.. ஒரு வழியா பேசிட்டீங்க... நான் கூட உங்களுக்கு பேச வராதோன்னு சந்தேகப்பட்டேன்.." என்க அவனைப் பொய்யாக முறைத்தாள் சிதாரா.


பின், "அப்படியே உங்க பேரையும் சொன்னா நல்லா இருக்கும்... ரொம்ப நேரமா நானும் வாங்க போங்கன்னு பேசி எனக்கே என்னவோ போல இருக்கு.." என்க புன்னகைத்தவள் சிதாரா என்றாள்.


ஆர்யான், "ஓக்கே தாரா.. ஐம் ஆர்யான்... உனக்கு எப்படி வேணாலும் கூப்பிடலாம்... நான் ஃபைனல் யேர் படிக்கிறேன்... உனக்கு சீனியர்... என்ன ஹெல்ப் வேணாலும் என் கிட்ட கேளு..." என்க சிதாராவிடமிருந்து பதில் வராமல் போக அவளைக் கேள்வியாய் நோக்கினான்.


ஆனால் சிதாராவோ அவ்வளவு நேரம் இருந்த புன்னகை மறைந்து கை இரண்டையும் அழுத்த மூடி ஒரு வித பதட்டத்தில் இருந்தாள்.


ஆர்யான் மீண்டும் 'தாரா' என அவளை அழைக்க,


"வேணாம்.. அப்படி கூப்டாதீங்க... வேணாம்.. எனக்கு பிடிக்கல..." என கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூறினாள்.


"ஓக்கே ஓக்கே... கூல்... நான் இனி அப்படி கூப்பிடல..." என்கவும் அமைதியாகினாள் சிதாரா.


ஆர்யான், "சரி நான் இனி உன்ன அப்படி கூப்பிடல... பட் வன் கன்டிஷன்..." என்க அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.


ஆர்யான் புன்னகையுடன் அவள் முன் ஒரு கரம் நீட்டி, "ஃப்ரென்ட்ஸ்..." என்கவும் சிதாரா சிறிது தயங்க ஆர்யான் முகம் வாடினான்.


பின் சட்டென அவன் கரத்துடன் தன் கரம் சேர்த்தவள் புன்னகையுடன் பதிலுக்கு, "ஃப்ரென்ட்ஸ்..." என்றாள்.


ஆர்யானுக்கு வந்த சந்தோஷத்தில், "தேங்க்ஸ் மினி... தேங்க்ஸ் அ லாட்... நான் கூட நீ என்ன தப்பா நெனச்சி என் ஃப்ரென்ட்ஷிப்ப எக்சப்ட் பண்ணிக்க மாட்டியோன்னு நெனச்சேன்..." என்க,


அவன் மினி என அழைத்ததும் அவள் அவனைப் புரியாமல் பார்க்க அப்போது தான் அவன் மினி என அழைத்தது நினைவில் வந்தது.


"அது ஒன்னுமில்ல... நீ என்ன விட ரொம்ப குட்டையா இருக்கல்ல.. அதான் செல்லமா மினியன்.. அத கொஞ்சம் ஷார்ட் பண்ணி மினி... " என ஆர்யான் விளக்கம் அளிக்க,


சிதாரா பட்டென, "ஓக்கே ஜிராஃபி.." என்க ஆர்யான் சிரிக்க அவனுடன் அவளும் இணைந்தாள்.


❤❤❤❤❤


- Nuha Maryam -
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைதி - அத்தியாயம் 8
மருத்துவ அறையிலிருந்து சிதாராவை தன் நண்பர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆர்யான் அனைவருக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தான்.


அனைவருடனும் கை குலுக்கி இன்முகத்துடன் பேச அவர்களுக்கும் அவளைப் பிடித்து விட்டது.


சிதாராவை ஆடிட்டோரியத்துக்கு அழைத்துச் சென்று வகுப்பில் சேர தேவையான அனைத்தையும் விளக்கினான்.


அதன் பின் வந்த நாட்களில் நீ.. வா... போ.. என கூறும் அளவுக்கு இருவரும் நல்ல நண்பர்கள் ஆகினர்.


வகுப்பிலுள்ள சக மாணவர்களுடனும் நட்பு பாராட்டிய சிதாராவுக்கு யுனிவர்சிட்டி வாழ்க்கை புது பிறவி எடுத்து வந்தது போல் இருந்தது.


நாட்கள் இவ்வாறு செல்ல ஒரு நாள் யுனிவர்சிட்டிக்கு அருகிலுள்ள பார்க்கில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.


அப்போது சிதாரா, "ஜிராஃபி எனக்கொரு ஹெல்ப் பண்றியா..." என்க,


"சொல்லு மினி... பணம் ஏதாவது தேவையா..." என ஆர்யான் கேட்க,


"இல்ல... அதெல்லாம் அப்பா தாராளமாவே அக்கவுன்ட்ல போட்டு வெச்சி இருக்காரு... ஈவ்னிங் என் கூட கொஞ்சம் ஷாப்பிங் வரியா..." எனக் கேட்டாள்.


ஆர்யான், "புக்ஸ் ஏதாவது வாங்கனுமா மினி... சொல்லு நான் வாங்கிட்டு வரேன்... நீ அலைய வேணாம்..." என்கவும்,


"இல்ல ஜிராஃபி... எனக்கு கொஞ்சம் ட்ரஸ் பர்ச்சேஸ் பண்ணனும்... அப்படியே பார்லருக்கு போய்ட்டு வரணும்... தனியா போக எனக்கு இன்னும் இங்க அவ்வளவா பழகல... அதான் உன்ன கூப்ட்டேன்..." என்றாள் சிதாரா.


ஆர்யான், "ட்ரஸ் வாங்கனும் ஓக்கே... நீ எதுக்கு பார்லர்க்கு போகனும்னு சொல்ற... நீ அங்கெல்லாம் போக மாட்டியே..." என்க அவனை முறைத்த சிதாரா,


"எதுக்கு இவ்வளவு கேள்வி கேக்குற... உனக்கு என் கூட வர முடியுமா முடியாதா... முடியாதுன்னா சொல்லு நான் அந்த ஜோன் கூட போறேன்..." என்க,


"இல்ல இல்ல நானே வரேன்... நீ எங்க போனும்னு சொன்னாலும் ஓக்கே‌... அந்த ஜோனோட மூஞ்சியும் முகரகட்டையும்... என்னமோ இதுக்கு முன்னாடி பொண்ணுங்களயே பார்க்காதது போல உன்ன பாக்குறான் ஒரு பார்வை..." என தன் பாட்டிற்கு ஜோன் என்பவனை வசைபாட சிரித்த சிதாரா அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.


மாலை ஆனதும் எப்போதும் போல நீண்ட குர்த்தி, கழுத்தை சுற்றி ஷால், கண்ணில் கண்ணாடி, நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு என தயாரானவள் ஆர்யான் வந்து ஹார்ன் அடிக்கவும் அவனுடன் பைக்கில் ஏறி கிளம்பினாள்.


ATM சென்று பணம் எடுத்துக் கொண்டவள் ஆர்யானுடன் அங்கிருந்த காம்ப்ளக்ஸிற்கு சென்றாள்.


பல்வேறுபட்ட கடைகளை ஒரே இடத்தில் கொண்டதே காம்ளக்ஸ் ஆகும்‌.


முதலில் ட்ரஸ் செக்ஷனிற்கு இருவரும் சென்றனர்.


ஆர்யான் அங்கு வேலைக்கிருந்த பெண்ணிடம்,


"லைட் கலர் சிம்பள் குர்த்தி டிசைன்ஸ் காட்டுங்க..." என்கவும் சிதாரா,


"இல்ல இல்ல லாங் ஸ்கர்ட் பிளவுஸ் என்ட் டீ ஷர்ட் ஜீன்ஸ் டிசைன் காட்டுங்க.." எனக் கூற அவளை கேள்வியாய் நோக்கினான் ஆர்யான்.


சிதாரா எப்போதும் அதிக வேலைப்பாடற்ற கண்ணுக்கு கூசாத நிறங்களில் குர்த்தி மட்டுமே அணிந்து கண்டுள்ளதால் தான் அவனே அவற்றை எடுத்துக் காட்ட சொன்னான்.


பணிப்பெண் காட்டியவற்றில் தனக்குப் பிடித்தவற்றை வாங்கியவள் அடுத்து பார்லருக்கு சென்றாள்.


ஆர்யான் எதுவும் கூறாமல் அவள் செய்பவற்றை அமைதியாக பார்வையிட்டான்.


பார்லரினுள் நுழைந்தவள் பார்லர் பெண்ணிடம், "ஹேர் ஷார்ட் பண்ணனும்... அப்படியே கொஞ்சமா கேர்ள் பண்ணிடுங்க.." என்கவும் ஆர்யான் அதிர்ந்தான்.


"என்னாச்சி மினி... எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்க... இவ்வளவு நல்ல முடிய யாராச்சும் கட் பண்ணுவாங்களா..." என கோவமாக ஆர்யான் வினவ,


சிதாரா, "ப்ளீஸ்டா... நான் உன் கிட்ட அப்புறமா சொல்றேன்... இப்போ என்ன தடுக்காதே..." என்க கோவமாக வெளியே சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஆர்யான்.


சில மணி நேரம் கழித்து சிதாரா வெளியே வர ஆர்யான் விழி விரித்து நின்றான்.

சற்று முன் வாங்கிய லாங் ஸ்கர்ட் பிளவுஸ் அணிந்து முடியை கேர்ள் செய்து எப்போதும் அணிந்திருக்கும் கண்ணாடி இல்லாமல் வந்தாள் சிதாரா.


ஒரு நிமிடம் தான் விழி விரித்து நின்றான் ஆர்யான்.


பின் ஏற்கனவே இருந்த கோபத்துடன்,


"இன்னும் எங்கயாச்சும் போகனுமா மேடம்..." என்க,


"ஐ கேர் சென்டர் போகனும்.." என்றாள் சிதாரா.


அவளை கோவமாக ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாது முன்னே நடக்க அவனைப் பின் தொடர்ந்தாள் சிதாரா.


அங்கிருந்து ஐ கேர் சென்டர் சென்றவள் தன் கண்களுக்கு பொருத்தமான கான்டேக்ட் லென்சை ஆர்டர் செய்து விட்டு நேராக சிதாரா தங்கியிருந்த ப்ளாட்டை அடைந்தனர்.


சிதாராவைத் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் அவள் வாங்கியவற்றை வைத்து விட்டு கோவமாக அமர்ந்தான்.


சிதாரா உள் நுழைந்தவள் மனதில், "ஆத்தீ... ஜிராஃபி ரொம்ப கோவமா இருக்கான் போல... நாமளே முதல்ல ஆரம்பிச்சிரலாம்.." என நினைத்தவள் ஆர்யானைப் பார்த்து,


"நான் எப்படி இருக்கேன் ஜிராஃபி... அழகா இருக்கேனா..." என தன்னை சுற்றிக் காட்ட,


"ஏன் ஏதாச்சும் எக்சிபிஷன்க்கு ஷோ கேஸ் பொம்மையா வரேன்னு சைன் பண்ணி குடுத்திருக்கியா.." என கோவமாக ஆர்யான் வினவ தலை குனிந்தாள் சிதாரா.


ஆர்யான் எழுந்து அவளை நோக்கி வந்தவன்,


"மினி.. நீ எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்கன்னு நிஜமாலுமே எனக்கு புரியல... நீ ஃபர்ஸ்ட் டே இங்க வந்தப்போ நான் உன்னோட ட்ரஸிங் ஸ்டைல வெச்சி உன்ன கலாய்ச்சேன்... அது ஜஸ்ட் ரேக்கிங் பண்ண தான்... பட் நீ உள்ள வரும் போதே நான் உன்ன ரசிச்சி பாத்துட்டு இருந்தேன் தெரியுமா... ஏன்னா நீ அழகா இருக்கன்னு இல்ல... சுத்தி எப்பவுமே மாடர்ன் ட்ரஸ் உடுத்த பொண்ணுங்களையே பாத்து பாத்து பழகின எனக்கு ஃபர்ஸ்ட் டைம் ட்ரெடிஷனல் ட்ரஸ்ல உன்ன பாத்ததும் ஒரு டிஃபரன்ட் ஆன ஃபீல்... அப்புறம் ரேக்கிங் பண்ணலாம்னு தான் அப்படி எல்லாம் பொய் சொன்னேன்... உண்மைய சொன்னா நீ ட்ரெடிஷனல் ட்ரஸ்ல தேவதை மாறி இருப்ப... ஒரு வேளை அதுக்காக தான் நீ இப்படி எல்லாம் பண்றியா..." என்றான்.


அது வரை அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் விழிகளில் அவளையும் அறியாது கண்ணீர்.


ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தவள், "ஃபர்ஸ்ட் டைம் ஒருத்தங்க இப்படி சொல்லி கேக்குறேன்..." என்கவும்,


அவள் கண்ணீரைப் பார்த்து பதறிய ஆர்யான் அவசரமாக அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன்,


"ஹேய் மினி... நீ எப்படி இருந்தாலும் அழகா தான் இருப்ப... அழாதே... சாரி... நீ எதுவும் சொல்ல வேணா... நான் இனிமே உன் மேல கோவப்பட மாட்டேன்..." என்றான்.


சிதாரா, "ஜிராஃபி...நான் உன் கிட்ட என்ன பத்தி சில விஷயம் சொல்லனும்... " என்க,


"நீ உன்ன பத்தி சொல்லி தான் நான் தெரிஞ்சிக்கனும்னு இல்ல மினி... உன்னோட பாஸ்ட் என்னவா இருந்தாலும் நான் உன் கூட இருப்பேன் எப்பவுமே..." எனக் கூறி புன்னகைத்தான் ஆர்யான்.


"இல்ல ஜிராஃபி... ரொம்ப நாளா இதெல்லாம் என் மனச போட்டு அறுக்குது... இத யாருக்கிட்டயாச்சும் சொல்லனும்னு தோணுது..." என்றவள் அவனிடம் தன் கடந்த காலத்தை கூற ஆரம்பித்தாள்.


ஆர்யான் பால்கனியில் சென்று நின்றவன் அவள் கூறுவதைக் கேட்க கேட்க பால்கனி கம்பி மீதிருந்த அவன் கையின் பிடி இறுகிக்கொண்டே சென்றது.


சிதாரா பிரணவ்வுடனான தன் கடந்த காலத்தை ஆர்யானிடம் கூறி முடிக்க அவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.


சட்டென ஏதோ விழுந்து உடையும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்தான்.


வாயில் நுரை தள்ள கை கால்கள் வெட்ட கீழே விழுந்து கிடந்தாள் சிதாரா.


அவள் பக்கத்தில் அங்கு மேசையில் அழகுக்கு வைத்திருந்த பூச்சாடி உடைந்து கிடைந்தது.


அவளிடம் ஓடியவன் தன்னிடமிருந்த பைக் சாவியை அவள் கைகளில் வைத்து அழுத்த அவள் அமைதியாகினாள்.


அவசரமாக டாக்டருக்கு அழைத்து வர சொன்னவன் அவளை அறைக்குள் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் மெதுவாகக் கண் விழித்தாள் சிதாரா.


"ஆர் யூ ஓக்கே மினி... இந்த தண்ணிய குடி..." என்க ஆம் எனத் தலையசைத்தவள் நீரை வாங்கிப் பருகினாள்.


சரியாக அந் நேரம் டாக்டர் வர அவளைப் பரிசோதித்து விட்டு, "இப்போதக்கி இந்த டேப்லட்ட போட்டுட்டு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா.." என்று விட்டு அறையிலிருந்து வெளியேறினார்.


சிதாராவுக்கு மருந்தையும் நீரையும் கொடுத்து குடிக்க வைத்த ஆர்யான் டாக்டரைப் பின் தொடர்ந்தான்.


ஆர்யான் வந்ததும் டாக்டர், "என்னாச்சி சடன்னா.. இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கா.." என்க,


ஆர்யான் அன்று யுனிவர்சிட்டியில் நடந்ததையும் இப்போது நடந்தவற்றையும் கூறினான்.


"அப்டின்னா அந்த விஷயம் அவங்கள மனசளவுல ரொம்ப பாதிச்சிருக்கு... அதை பத்தி அவங்க நிறைய நேரம் திங்க் பண்ணி இருக்காங்க... அதனால தான் அவங்க ரொம்ப எமோஷனல் ஆகுறப்போ எல்லாம் அவங்களுக்கு ஃபிட்ஸ் வருது.." என டாக்டர் கூற,


ஆர்யான், "இதை கியுர் பண்ண முடியாதா டாக்டர்.." எனக் கேட்க,


"கியுர் பண்ணலாம்.. ஃபிட்ஸ் வர நிறைய ரீசன்ஸ் இருக்கு.. இது அவங்க மனசு சம்பந்தப்பட்டது...மருந்தினால அவங்கள கியுர் பண்ண முடியாது... அதனால அவங்க மனச பாதிக்கிற அந்த விஷயத்த அவங்க தலைல இருந்து எடுக்கனும்... அத பத்தியே அவங்க மறக்கனும்...இல்லன்னா அது சாதாரண விஷயம்னு அவங்க அத கடந்து போற மனநிலைக்கு வரனும்... இத விட்டா வேற வழி இல்ல.." என்க, நன்றி கூறி அவரை அனுப்பி வைத்தான்.


அறைக்குள் நுழைந்த ஆர்யான் சிதாரா எடுத்த ஆடைகளை கட்டிலில் விரித்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் அவளைப் பார்த்து முறைக்க, அவளோ புரியாது விளித்தாள்‌.


ஆர்யான், "எவனோ ஒருத்தன் உன்ன பத்தி புரிஞ்சிக்காம உன்ன தப்பா பேசினான்னு நீ எதுக்கு உன்ன மாத்திக்கனும்..." என்க,


இப்போது முறைப்பது அவளானது.


"டேய் வளந்து கெட்டவனே.. எவனோ சொன்னங்குறதுக்காக நான் மாறனும்னா அப்போவே மாறி இருப்பேனே... க்ளாஸ்ல நான் மட்டும் தனியா தெரியக் கிட்ட எல்லாரும் என்னையே பாக்குற போல ஒரு‌ ஃபீல்... என்ட் நான் ஒன்னும் அரை குறையா ட்ரஸ் போடல்லயே... இப்போ க்ளாஸ்ல மத்த பசங்க கூட பழகும் போது எனக்கு அன்கம்ஃபிடபிளா இருக்காது... ஏன்னா நானும் இப்போ அவங்கள போல தானே இருக்கேன்... போதாத்துக்கு அந்த ஜோன் வேற ஒரு மார்க்கமா பாக்குறான்னு சொன்னியே.. இனி அவனும் அப்படி பாக்க மாட்டான்..." என்க,


"ஏதோ நீ சொல்ற... நானும் நம்புறேன்..." என்றவன் அதன் பின் இருவரும் வேறு கதைகள் பேசினர்.


❤❤❤❤❤


- Nuha Maryam -
 
Status
Not open for further replies.
Top