All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாரதியின் 'உயிர் உருகும் ஓசை கேளாயோ' கதை திரி

Status
Not open for further replies.

Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் எனது இரண்டாவது கதையோடு உங்களை சந்திக்க வந்திட்டேன்...முதல் கதையைப் போலவே இதற்கும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன் 😍😍😍🙏🙏🙏

உங்கள்
பாரதி
 

Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

உயிர் உருகும் ஓசை கேளாயோ இது குறுநாவல் போட்டிக்காக எழுத ஆரம்பித்தது...எதிர்பாராது போட்டி நின்றதால் கதையை நிறுத்தியிருந்தேன்.இப்போது மீண்டும் ஆரம்பித்து விட்டேன்.. படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

அத்தியாயம் 1


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு


அடுக்கடுக்காக போடப்பட்டிருந்த மரத்துண்டுகளை கோடாரியால் சிறிய விறகுகளாக வெட்டிக் கொண்டிருந்தான் கதிர்.வேட்டியை மடித்துக் கட்டியிருக்க கையில்லாத பனியன் அணிந்திருந்தான்.செய்துக் கொண்டிருந்த கடினமான வேலையால் வியர்வை ஆறாக வழிந்தது அவனின் திடகாத்திர உடலில்.சுற்றுப்புற நினைவில்லாமல் வேலையில் முழுகி இருந்தவனை இமைக்காமல் பார்த்திருந்தது இருவேல் விழிகள்.


அந்த வேல்விழிகளை கொண்டவள் அம்மு...விக்னேஸ்வரன் சுசீலா தம்பதிகளின் ஒரே மகள்.பதினேழு வயதுக்கேற்ற அவளின் இளமை அழகு கவரும் விதமாக இருந்தது.தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்தவள்.மனதில் நினைப்பதை பின்விளைவை யோசிக்காமல் செய்து விடுவாள்.ஆனால் அவள் தைரியமெல்லாம் கதிரிடம் மட்டும் பத்து மைல் தொலைவுக்கு ஓடிவிடும்.


கதிருக்கும் அவர்களுக்கும் இருக்கும் பந்தம் விசித்திரமானது.வகைப் பிரிக்க முடியாதது.அவன் இவர்கள் வீட்டிற்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிறது.


அம்மு எழு வயது சிறுமியாக இருந்த போது பக்கத்து டவுனுக்கு சென்ற அவள் தந்தை இரவு ஏறியும் வீட்டிற்கு வரவில்லை.கவலையில் தவித்துப் போய்விட்டார் சுசீலா.அப்போது அவர்களிடம் கைபேசிக் கூட இல்லை.


அவர்கள் வீடு இருந்த இடம் ஊரை விட்டு ஒதுக்குபுறமாக வயல்களின் அருகே இருந்தது.அதனால் அவசரம் என்றால் கூட யாரையும் அழைக்க முடியாது.அந்த இருட்டு வேளையில் மகளை அழைத்துக் கொண்டு செல்லவும் பயமாக இருந்தது.நேரம் செல்ல செல்ல இனி தாங்காது என்று அம்முவோடு அவர் வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்பட வாயிலில் ஆட்டோ சத்தம் கேட்டு ஓடி வந்தார்.அங்கே அதிலிருந்து கணவர் இறங்கவும் நிம்மதி மூச்சு வர அவர் கையில் மயங்கிய நிலையில் இருந்த சிறுவனைக் கண்டு பதறிவிட்டார்.


"என்னங்க இது யாரு பையன்? ஐய்யோ ரொம்ப அடிப்பட்டுருக்கே!முதல்ல உள்ள வாங்க!"என்று கணவர் பின் மகளோடு உள்ளே நுழைந்தவர் படுக்கையை வசதியாக தட்டிப் போட்டார்.அதில் அந்த சிறுவனை படுக்க வைத்தவர்‌ அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.அவரின் சோர்ந்த முகம் கண்டு வேகமாக சமையலறைக்கு சென்றவர் நொடியில் சூடான காப்பியோடு வந்தார் அவரின் மனமறிந்த மனையாள்.காபியை ஒரே மடக்கில் குடித்தவர் சிறிது தெம்பு வந்தவராக,


"சுசி!நா டவுனுக்கு போயிட்டு சாமானெல்லாம் வாங்கிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு நேராமாச்சேன்னு குறுக்கு வழில வந்தேன்.அப்போ தூரத்துல ஐய்யோ அடிங்காதீங்கன்னு கத்தல் கேட்டுச்சு...ஓடிப் போயி பாத்தா இந்த பையனை அடிச்சுக்கிட்டு இருந்தவங்க என்னை பாத்ததும் கார்ல ஏறி ஓடிட்டாங்க...இருட்டுல கார் நம்பரை பாக்க முடியல...இவனை ஆஸ்பத்திரி கூட்டி போயி காயத்துக்கு சிகிச்சை செஞ்சு கூட்டிட்டு வந்தேன்...இவன் பத்தி தெரியாம போலீஸுக்கு போக தயக்கமா இருந்தது"என்று நடந்ததையெல்லாம் விவரித்தார்.


"சுசி!உன்னை கேட்காம.."என்று அவர் முடிப்பதற்குள் கையசைத்து தடுத்த சுசீலா,


"நீங்க எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்...அவங்க அம்மா அப்பா பத்தி தெரியற வரைக்கும் தம்பி இங்கேயே இருக்கட்டும்..."என்று கூற தன்னை போலவே தன் மனைவியும் என்றதில் பெருமிதம் கொண்டார்.


சிறுவன் கண்விழித்த மேல்தான் தெரிந்தது அவன் யாருமற்ற அனாதை என்று.கதிர் அதுதான் அவன் கூறிய பெயர்...சிறிய வயதிலேயே பெற்றோரை ஒருவர் பின் ஒருவராக இழந்தவனுக்கு சொந்த பந்தம் என்று யாருமில்லை.அவன் நிலையறிந்து அவனை அங்கேயே இருத்திக் கொண்டனர் அந்த அன்பு தம்பதிகள்.


அதுவரை அன்பென்பதையே அதிகமறிந்திராத கதிருக்கு அவர்கள் பொழியும் அன்பு முதலில் தயக்கத்தை தந்தாலும் நாளடைவில் அவர்களோடு ஒன்றிப் போனான் அவன்.அதிலும் அவர்களின் மகள் அம்மு அவனின் உயிரானாள்.


முதலில் அவளிடமிருந்து சிறிது ஒதுங்கியே இருந்தான் தான்.ஆனால் ஒரே மகவாக அதுவரை தனிமையில் தவித்தவளுக்கு விளையாட்டு தோழனாக அதற்கு தகுதி படைத்தவனை காணாவும் சும்மா விட்டுவிடுவாளா?


அன்போடு சேர்ந்த ருசியான உணவை சுசிலா பரிமாற சாப்பிட்டுக் கொண்டிருந்த கதிர் அங்கே வந்து ஓரமாக தன் பொம்மையோடு முக்காலியில் அமர்ந்து ஓரக்கண்ணால் அவனையே பார்க்கும் அம்முவை கண்டு எழுந்த சிரிப்பை வாயிள்ளேயே அடக்கிக் கொண்டான்.மறந்தே போயிருந்த சிரிப்பு அவளை கண்டு மீண்டும் துளிர்த்தது அவனுக்கே ஆச்சரியமானது.


அவனுக்கு கெட்டியான தயிரை பரிமாறி நிமிர்ந்த சுசிலா அங்கே பேசாமல் அமர்ந்திருந்த மகளைக் கண்டு,


"அம்மு!ஏன்டா மூலைல உட்கார்ந்திருக்க?என்னடா வேணும்?"


தாயின் கேள்விக்கு பதிலாக கதிரையும் தன் பொம்மையையும் மாறி மாறி பார்த்தவள் ஏதும் பேசாமல் மவுனமாகவே இருந்தாள்.மகளின் மனதை ஒரு நொடியில் படித்தவர்,


"என்னடா கதிரோட விளையாடனுமா?என்று கேட்க ஆமாம் என்று இல்லாமலும் இல்லை என்று இல்லாமலும் தலையசைத்தது அந்த வாண்டு.அதில் பக்கென்று எழுந்த சிரிப்பில் உணவு புரையேறிவிட்டது கதிருக்கு.பதறியபடி அவன் தலையைத் தட்டி நீரை குடிக்க செய்தார் சுசிலா.அதுவரை தூரமாக இருந்தவளோ அவனின் இருமலில் அங்கே அருகில் வந்து கவலையோடு அவனைப் பார்த்தாள்.


அந்த சின்னஞ்சிறு முகத்தில் தனக்காக தோன்றிய கவலை அவனின் புண்பட்ட மனதிற்கு மருந்தானது.முதலில் சிறிது தயங்கினாலும் நாளடைவில் இருவரும் ஒன்றாக விளையாடத் தொடங்கி விட்டனர்.


அம்மு படிக்கும் பள்ளியிலேயே கதிரையும் சேர்த்துவிட்டார் விக்னேஸ்வரன்.காலையில் இருவரும் ஒன்றாக பள்ளி சென்று வந்து மாலை பேசியபடி வீட்டுப்பாடம் முடித்தப்பின் வேறென்ன வேலை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.


குறுகிய காலத்தில் அந்த வீட்டின் பிரிக்க முடியாத அங்கமானான் கதிர்.அதிலும் அம்முவிற்கு சகலமும் அவனே ஆயினான்.கால சக்கரம் செல்ல வளர்ந்து இளமை பருவத்தை எய்தினர் இருவரும்.


நட்பு அப்படியே இருந்தாலும் அவர்களே அறியாமல் காதல் காற்று அடிக்கத் தொடங்கியது அவர்கள் மனதில்.ஆதரவு கொடுத்த வீட்டினரின் நம்பிக்கையை அழிக்கக் கூடாது என தன் மனதை பூட்டியே வைத்தான் கதிர்.ஆனால் அதே காரணத்துக்காகவே அம்முவின் கோபத்திற்கு ஆளானான்.எங்கே மனதில் பொங்கிய காதல் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவளிடமிருந்து ஒதுங்கத் தொடங்க அவன் விலகலை தாங்கமாட்டாமல் துடித்தாள் அந்த பாவை.


அதிலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பிருந்து அவனுக்கு சோதனை காலம் தொடங்கிவிட்டது.அம்முவிற்கு பள்ளிக்காலம் முடிந்து காலேஜ் திறப்பதற்காக காத்திருக்க கதிர் மேல்படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருந்தான்.


ஐந்து ஆண்டுகளாக இருவரும் ஒரே இடத்தில் இருப்பது குறைந்து தான் இருந்தது.படிப்பின் அழுத்தம் அதிகரிக்க லைப்ரரி தோழன் வீட்டில் க்ரூப் ஸ்டடி என்று அவனும் ட்யூஷன் ஸ்பெஷல் க்ளாஸ் என அவளும் வீட்டில் இருக்கும் நேரம் மிக மிக குறைவு.ஆனால் இப்போது அப்படி வெளியிலேயே இருக்க முடியாமல் விக்னேஸ்வரனின் உடல்நிலை சற்று பின்னேற அவருக்கு ஓய்வுக் கொடுக்க வேண்டியிருந்ததால் வயல் தோப்பு என எல்லா வேலையும் இவனே செய்தான்.


வீட்டில் காபியிலிருந்து உணவு வரை சுசீலாவை தடுத்து அம்முவே அவனுக்கு உபசரித்தாள்.தோட்டத்திற்கோ வயலுக்கோ சென்றால் மதிய உணவோடு வந்து நின்றாள்.பல்துலக்க பிரஷ்ஷில் பேஸ்ட் வைப்பது,வெந்நீர் விளாவி வைப்பது,துடைக்கும் துண்டு கூட ஸ்டாண்டில் தயாராக இருக்க பொறுமையின் எல்லைக்கே போனான்.


அன்று விறகை வெட்டுவதில் கவனம் இருந்தாலும் எங்கிருந்தோ...எங்கிருந்தோ என்ன அவள் அறையின் ஜன்னலில் இருந்து தன்னைத்தான் விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவன் அறிந்தே இருந்தான்.அவன் நினைத்ததே சரியென்பது போல வேலை முடியவும் சொம்பு நிறைய மோரோடு வந்து நின்றிருந்தாள் அவள்.


பேசாமல் அதை வாங்கி பருகியவன் சொம்போடு உள்ளே சென்று விட,


'திமிருடா உனக்கு...!அவ்வளவும் திமிரு!ஒருத்தி விழுந்து விழுந்து கவனிக்கறாளேன்னு கொஞ்சமாச்சும் இருக்கா உனக்கு!பெரிய நன்றியின் திருவுரு இவுரு..
நெஞ்சு பூரா காதல் இருக்குமாம் ஆனா காட்ட மாட்டாராம்...எவ்ளோ நாள் உள்ளையே வெச்சிருப்பே...உன் வாயாலையே அதை சொல்ல வைக்கல நா உன்னோட அம்முவே இல்ல'என்று மனதிற்குள் அவனை திட்டித் தீர்த்ததோடு சபதமும் செய்தாள்.


மதிய உணவோடு சுசீலா கதிருக்கு பிடிக்குமே என்று பாயசம் செய்ய உணவுக்கு பின் அவனுக்காக அதை டம்ளரில் வார்த்தவர் யாரோ வாயிலில் அழைக்கும் குரல் கேட்கவே வெளியே சென்று விட்டார்.அவர் போவதற்கே காத்திருந்தாற் போல சமையலறையில் நுழைந்த அம்மு சாமான் நடுவில் இருந்த உப்பை எடுத்தவள் கை நிறைய அள்ளி அதில் போட்டு நன்றாக கலக்கி விட்டாள்.


'குடிடா இதை...என்னையா அவாய்ட் பண்ற குடி நல்லா குடி!'என்று நன்றாக கலக்கியவள் மறைந்து நின்றுக் கொண்டாள்.


திரும்பி வந்த சுசீலா தன் அறையில் ஓய்வாக அமர்ந்தவனுக்கு அதை கொடுக்க கதவின் இடுக்கால் அதைப் பார்த்திருந்தாள் ஆர்வமாக.


ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைத்தவன் திடுக்கிட அறை வாயிலில் நிழலாட அது அம்முவின் திருவிளையாடலே என்று அறிந்தவன் மறு யோசனை இல்லாமல் ஒரே மூச்சில் அவ்வளவு பாயசத்தையும் குடித்துவிட்டான்.


அதைக் கண்டு கண்களை அகல விரித்த அம்முவின் கண்கள் சிந்தியது காதல் கண்ணீரை.
 

Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2


திருமுருகன்பட்டியின் மலைக்கோயில் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தியானது.ஊருக்கு பெயர் கொடுத்த முருகன் தம்பதி சமேதராகக் காட்சியளித்தார்.சுவாமி தரிசனமெல்லாம் முடிந்து அம்முவும் அவள் உயிர் தோழி ரம்யாவும் கோயிலை சுற்றி ஆளுயரத்தில் இருந்த மதில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்தனர்.


அம்மு பேச வேண்டும் எனவும் ரம்யா தான் கோயிலைத் தேர்ந்தெடுத்தாள்.வருடத்தில் ஒரு முறை நடக்கும் திருவிழாவை தவிர அங்கு மக்கள் வருவது அபூர்வம்.நூற்றி ஐம்பது படிகளை ஏற வேண்டுமென்பதே அதன் முக்கிய காரணம்.கடவுள் தரிசனத்தோடு உடற்பயிற்சியும் கிடைக்கட்டும் என்றுதான் முன்பு நம் முன்னோர்கள் அநேக கோவில்களை உயரத்தில் கட்டி வைத்தனர்.ஆனால் அதேயே காரணம் கூறி மக்கள் வருகை குறைவது என்பது வேதனையான விஷயம்.ஆனால் அந்த பதினேழு வயது பெண்களுக்கு அதன் உயரம் பொருட்டல்ல என்பதால் இருவரும் தனியாக பேச விரும்பினால் அங்குதான் வருவர்.


பேச வேண்டுமென்றவள் மவுனமாக எதிரே தெரிந்த மலைமுகட்டை வெறுத்தபடி இருக்கவும் ரம்யாவே,


"என்னடி பேசனும்னு சொல்லிட்டு இப்படி சும்மா இருந்தா என்ன அர்த்தம்?..எந்த காலேஜ்ல சேர்றதுன்னு கன்ஃப்யூஸா?"


"ம்ப்ச் அதெல்லாம் இல்ல!"


"பின்ன அம்மா திட்டிட்டாங்களா?அம்மா திட்றதெல்லாம் நமக்கு புதுசா என்ன?"


"அதுவும் இல்ல!"என்று சிறிது கோபமாகக் கூறினாள் அம்மு.


"ம்..இரு இரு!உன் ஹீரோ உன்னை புடிக்கலைன்னு சொல்லிட்டான்...கரெக்டா!"


"அவன் புடிக்கலைன்னு சொன்னாத்தான் போடா புண்ணாக்குன்னு சொல்லிடுவேனே... புடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு...உப்பைக் கொட்டி நான் கொடுத்த பாயசத்தை கொஞ்சம் கூட முகம் சுழிக்காம குடிக்கற அளவு என்னை பிடிச்சிருக்கு..ஆனா அப்பாம்மா அவனுக்கு செஞ்சத்துக்கு நன்றி காட்றேன் பேர்வழின்னு என் காதலை நிராகரிக்கிறான்... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல சீக்கிரம் இதை சரி பண்ணலேன்னா வேலை கிடைச்சதுன்னு எங்காவது போயிடுவான்...ரமி! நீதான் இதுக்கு ஏதாவது
ஐடியா சொல்லனும்...என்ன பண்ணா அவன் மனசுல மூடி மறைக்கிற காதல் வெளியே வரும்?"என்று தோழியை வினவ தீவிரமாக யோசித்த ரம்யா திடிரென துள்ளிக் குதித்து நின்றவள்,


"அம்மு! சூப்பர் ஐடியா வந்துடுச்சு...இதை மட்டும் நீ பண்ணேன்னு வை... கண்டிப்பா‌ கதிர் கதறிக் கிட்டு தன் மனசுல இருக்கற சொல்லிடுவான்!"என்று உற்சாகத்த்தில் ஆர்பரிக்க,


"என்னடி அது.. சீக்கிரம் சொல்லு"என்று அம்மு பரபரக்க சுற்றும்முற்றும் ஒருமுறை பார்வையை சுழற்றிய ரம்யா அம்முவின் காதில் ஏதோ கூற கண்களை அகல விரித்தாள் அவள்.


"ம்ஹூம் நா மாட்டேன்...இது இது சரிவராது...என்னால முடியாது"என்று அவள் மறுக்க,


"இத பாரு அம்மு!கதிரை தன் மனசுல இருக்கிறத சொல்ல வைக்க இது ஒண்ணு தான் வழி...மயிலே மயிலேன்னா இறகு போடாது தெரிஞ்சிக்க"என்க,


"அதுக்காக இப்படியா!!!வேண்டாம்டி வேற ஏதாவது ஐடியா சொல்லு...அவன் இதுனால என்னை கோவிச்சிக்கிட்டு வெறுத்துட்டா என்னால அதை தாங்கவே முடியாது!"


"ஐய்யே அவன் ஏன் கோவிச்சுக்குவான்...க்ளீன் போல்ட் ஆயிடுவான்...சொல்றத கேளு இதுதான் பெஸ்ட் ஐடியா!"என்று இன்னும் அவள் வற்புறுத்த அரைமனதாக ஒப்பினாள் அம்மு.


நண்பன் தினேஷ் வீட்டில் இருந்த கணிணியில் வேலைவாய்ப்பு செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்தான் கதிர்.இதுவரை பார்த்ததில் இரண்டு மூன்று வேலை அவனுக்கு திருப்திகரமாக இருந்தது.ஆனால் அவை எல்லாமும் மும்பை டெல்லி என்று இருந்தது.பெற்ற தாய் தந்தை இருந்தால் கூட அவனை இவ்வளவு அன்போடு பார்த்துக் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே!ஒட்டுறவு எதுவும் இல்லாத ஒருவனை உண்ண உணவு உறைவிடம் தரமான கல்வி என குறைவில்லாமல் கொடுத்த விக்னேஸ்வரன் சுசீலா தம்பதிகளை விட்டு பிரிவது அவனால் முடியாத விஷயம்.அதைவிட அவன் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் அவனின் உயிரான அம்முவை ஒருகணம் பிரியவும் அவனுக்கு மனமில்லை.தூர ஊரில் இருக்கும் வேலைகளை ஒதுக்கி பக்கத்தில் எங்கே இருக்கிறது என்று அவன் தேடிய போது அவனின் சின்னஞ்சிறு கைபேசி கிணுகிணுத்து அழைத்தது.


திரையில் அம்முவின் எண்ணை கண்டு ஆச்சரியமானான்.ஏனெனில் நேரே எவ்வளவு அவனை வம்புக்கிழுத்தாலும் போனில் அழைத்து இதுவரை எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை அவள்.இப்போது ஏதோ அவசரமாக இருக்குமோ என பதறியவன் பதில் பொத்தானை அமுக்கி,


"என்ன விஷயம்? எதுக்கு போன் பண்ண?"என்று முயன்று தோரணையாக அவன் கேட்க மறுபுறத்தில் அவன் அம்முவோ,


"கதிர்! சீக்கிரம் அணைக்கட்டுக்கு பக்கத்துல இருக்கிற மாயமான் காட்டுக்கு வா! நானும் அப்பாவும் இங்க காட்டு இலாகா ஆபிசர பாக்க வந்தோம்..அவர் இல்ல ஆபிஸ் பூட்டியிருந்தது...திரும்ப கெளம்பும் போது அப்பா மயங்கிட்டாரு...நீ சீக்கிரம் வாயேன் எனக்கு பயமாயிருக்கு!"என்று அழ திடுக்கிட்ட கதிர்,


"அம்மு!அழாதடா! நான் இப்பவே அங்க வரேன்...அப்பா முகத்துல தண்ணி தெளி...கை காலை தேச்சு விடு... நான் அரைமணில அங்க இருப்பேன்...பயப்படாதடா... நான் இருக்கேன்ல...இதோ கிளம்பிட்டேன்"என்று போனில் அவளுக்கு தைரியம் அளித்தபடியே தன் பைக்கை அடைந்தவன் அதில் தாவி ஏறி மின்னலாக அவள் கூறிய இடத்தை நோக்கி விரைந்தான்.


சொன்ன நேரத்தை விட பத்து நிமிடம் முன்னதாகவே அங்கு வந்து சேர்ந்துவிட்டான் கதிர்.


மோயாறின் மேல் கட்டப்பட்ட சிறு அணைக்கட்டு அது... சுற்றிலும் இருந்த காடு காட்டிலக்காவால் பாதுகாக்கப்பட்டு வந்தது.அங்கு மக்கள் நடமாட்டம் மிக மிக குறைவு.கோடை விடுமுறையில் மட்டும் சிறிது சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் இருக்கும்.மீதி நாட்களில் காட்டு இலாகா அதிகாரிகள் இரண்டு மூன்று பேரை தவிர அந்த இடம் அமைதியாக இருக்கும்.


காட்டிலாக்கா ஆபிஸ் அருகே வந்து தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய கதிர் அம்முவையும் விக்னேஸ்வரனையும் பதட்டத்தோடு தேடினான்.ஆனால் அவர்கள் இருந்த சுவடே இல்லை.அம்மு கூறியது போல அந்த ஆபிஸ் பூட்டியிருந்தது.இன்னும் சிறிது போய் பார்க்கலாம் என்று காட்டிற்குள் முன்னேறினான்.


அங்கே மரங்கள் அடர்ந்த பகுதியில் அம்மு அணிந்திருந்த தாவணி கண்ணில் பட வேகமாக அருகே சென்றான்.நீண்டு வளர்ந்திருந்த மரமொன்றால் சாய்ந்து நின்றிருந்த அம்முவைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.அவள் அருகே சென்று நின்றவன்,


"அம்மு!அப்பா எங்கே?கண்ணு முழுச்சாங்களா?"என்று வினவ பதில் கூறாமல் தலைக்குனிந்து நின்றிருந்தாள் அம்மு.


"அம்மு!அப்பா எங்கே?ஏன் பேசாம இருக்க?"என்று மீண்டும் அவன் கேட்க அவள் மவுனம் தொடரவும் கண்கள் இடுங்கியது அவனுக்கு.


"ஓ... அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு பொய் சொன்னது என்னை இங்க வரவழைக்க...ம்..என்ன விஷயம்? இந்தளவு பொய் சொல்ற அளவுக்கு?"


"அது உனக்கே தெரியும்தானே!"


"இல்ல.. எனக்கு தெரியலை..தெரியவும் வேண்டாம்"


"கதி!எங்கே என் முகம் பார்த்து சொல்லு...உனக்கு தெரியலைன்னு..."என்று அவனை தன்புறம் திருப்பினாள்.தன் கையைப் பிடித்திருந்த அவள் கையை உதறியவன்,


"பார் அம்மு! இதெல்லாம் நல்லதில்ல...பேசாம வா... வீட்டுக்கு போலாம்"என்று முன்னே நடக்கத் தொடங்கினான்.


மீண்டும் அவன் கையைப் பற்றி தன் தன்புறம் திருப்பியவள்,


"நிஜமா உனக்கு ஒண்ணுமே தெரியாது இல்ல...எப்போ என் முகத்தை பார்த்து உன்னால இல்லேன்னு சொல்ல முடியலையோ...அப்பவே ஏதோ இருக்குன்னு தானே அர்த்தம்...வெட்டி யோசனைய விட்டு உண்மையை ஒத்துக்க"என்று அவள் பேச அதில் கோபமுற்ற கதிர்,


"ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல... எல்லாம் உன் தப்பு கற்பனை... அதையெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு...படிச்சு முன்னேற வழியைப் பாரு!"


"என்ன சொன்ன...தப்பு கற்பனையா...எது தப்பு எது சரின்னு இப்ப தெரியும்"என்று அவன் முன்பு சென்று நின்றவள் அவன் சுதாரிக்கும் முன் அவன் உயரத்திற்கு எம்பி தன் இதழை அவன் இதழோடு பொருத்தி விட்டாள்.


முதலில் அதிர்ந்து விட்ட கதிருக்கு இத்தனை காலம் மனதின் ஆழத்தில் அமுங்கிக் கிடந்த காதல் மேலெழும்ப தன்னவளின் முதல் முத்தத்தை அனுப்பிக்க தொடங்கினான்... ஆனால் சில நொடி தான் விக்னேஸ்வரனும் சுசீலாவும் அவன் மனக்கண்ணில் தோன்ற அன்னமிட்டவருக்கு துரோகம் செய்வதா என்று துடித்து அம்முவை தன்னிடமிருந்து தள்ளியவன் அவள் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.


முத்தத்தில் மயங்கியிருந்த அம்மு கதிர் தன் தள்ளியதும் அல்லாமல் அறையவும் செய்யவே அதிர்ந்து நின்று விட்டாள்.


"சே... இதுதான் அப்பாம்மா உனக்கு சொல்லிக் கொடுத்ததா பண்பாடா?... இவ்வளவு தூரம் நீ போவேன்னு நான் நினைக்கவே இல்ல...உன் முகத்துல விழிக்கவே எனக்கு பிடிக்கல..."என்று சரமாரியாக அவளை திட்டியவன் விடுவிடுவென அங்கிருந்து அகல சிறிதே தூரம் அவன் சென்ற போது தொப்பென நீரில் ஏதோ விழும் சத்தம் கேட்டு அவன் ஓடி வந்த போது அம்முவின் கை மட்டுமே தண்ணீரின் மேல் அவனுக்கு தெரிந்தது.
 
Status
Not open for further replies.
Top