All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரியங்கா ராஜாவின், “வெண்மேகமாய் தாலாட்ட வா" - கதைத்திரி

Status
Not open for further replies.

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே
நான் பிரியங்கா ராஜா...

எனது புதிய வெண்மேகமாய் தாலாட்ட வா என்னும் கதைகளத்தோடு பயணிக்க அனைத்து நல் உள்ளங்களையும் அழைக்கிறேன்...
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தங்கங்களே...
29337
என்னடா இவ காத்திருந்த தேவதைன்னு ஒரு கதைய ஆரம்பிச்சு அதை பாதியிலேயே விட்டுட்டு போயிட்டு சத்தமே இல்லாம இப்போ புது கதைய ஆரம்பிக்குறேன்னு வந்து நிக்குறான்னு நினைப்பிங்க...

ஆமாங்க... காத்திருந்த தேவதை என்னோட ஒரு கனவுக்கதை... என்ன நேரமோ காலமோ அத எழுத முடியாமலே அடுத்தடுத்து சதி மேல சதியா நடந்துடுச்சு...

அந்த கதையை இப்போ என்னால தொடர முடியுமான்னு சுத்தமா தெரியல, ஏதேதோ தடுத்து என்ன டிஸ்டர்ப் பண்ணுது... அதான் வேறு ஒரு புதிய கதைக்களத்தோடயும், மெருகேற்றப்பட்ட என்னோட எழுத்து நடையோடயும் திரும்பவும் வந்துட்டேன்...

இந்த கதை எங்கேயும் தொய்வில்லாம அழகா உங்க எல்லோரையும் ஈர்க்கும் விதத்துல போகும்குற நம்பிக்கைல வந்துட்டேன்...

என்னடா சும்மா சும்மா வந்துட்டேன் வந்துட்டேன்னு மட்டுமே சொல்லுறாளே ஒரு எபியோ டீசரோ போட மாட்டுறாளேன்னு யோசிக்காதிங்க... அடுத்து அதே தான்... டீசர படிச்சிட்டு கதை எப்படி போகும்குற உங்க அனுமானத்தை சொல்லுங்க... ம்ம்ம்...

இப்படிக்கு
நான்
பிரியங்கா ராஜா
கற்பனைகளின் இளவரசி
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29339
“இந்தாப்ள மேகா...” என்று முதுகிலேயே நச்சென்று ஒன்று வைத்துவிட்டு இடுப்பில் கைவைத்தபடி முறைத்தபடி நின்றவளை, திரும்பி பார்த்தவள் ஒன்றும் நடவாதது போல புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டு வைக்க, அதற்கும் அவளிடத்தில் இருந்து முறைப்பே பதிலாய் கிடைத்தது…

“என்ன குட்டி கூப்ட இப்ப ஏதுஞ்சொல்லாம மொறச்சுக்குன்னே இருக்க? என்ன சேதி?...” என்றவள் தலையிலேயே நங்கென்று குட்டு வைத்தவள்,

“இந்த எடத்துலயே வந்து ஒக்காராத ஒக்காராதன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்… ஏம்ப்ள என் பேச்சயே கேக்கமாட்டேங்கிறவ? இத்தன ஒசரத்துல வந்து ஒக்காரத்தேன் ஒனக்கு புடுச்சுருக்காக்கும்? கீழ குனிஞ்சு பாத்தாலே பயமா இருக்குது… கொஞ்சங்கூட பயமே இல்லாம இங்கன உக்காந்துட்டு இருக்க…" என்று சொன்னவளின் வார்த்தைகளை கேட்க இவளுக்கு சிரிக்கத்தான் தோன்றியது…

“என்னது ஒனக்கு பயமா இருக்கா?...ஏன் ஏன் பயமாருக்கு?...” என்று மொட்டைமாடியின் சுற்றுச்சுவரில் அமர்ந்து கால்களை ஆட்டியபடியே அவள் கேட்க, இவளோ தலையில் அடித்துக்கொண்டாள்…

“ம்ம்ம் ஏ தாயே கேக்கமாட்ட நீயி… நாலடுக்கு இருக்க கட்டிடத்தோட மொட்டமாடியில ஒக்காந்துட்டு காலாட்ட ஒனக்கு வேணா பயமில்லாம இருக்கலாம்… எனக்கு பயமா இருக்குப்பா… இதுலருந்து கீழ வுழுந்தா என்னாவும் தெரியும்ல? கொடல் குந்தாணியெல்லா சட்னியாயிப்புடும்… முதல்ல நீ இங்குட்டு எறங்கு… ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்...” என்று தோழியின் கைப்பிடித்து இந்த பக்கமாக இறக்கிவிட, அவளும் இதற்கு மேலும் இவளை பயமுறுத்த வேண்டாம் என்று இறங்கி நின்று அவளை பார்க்க, ஏதோ சரியில்லாதது போல் இருந்தது…

😊😊😊😊😊😊😇😇😇😊😊😊😊😊😊😊😊

ஒங்களுக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்ல தானே!...” என்று சிறிதும் யோசியாமல் சட்டென்று கேட்டவளை திரும்பி பார்க்க, அவளோ கூண்டிற்கு அருகே வந்து கைகளை கட்டியபடியே நின்றிருந்தாள்…

“ஆமா அதெப்படி ஒங்களுக்கு?... சாரி...” என்றவாறு நிற்க,

“ப்ச்… அட விடுங்கங்க… எனக்கே மேரேஜ் பண்ணிக்கவெல்லா இப்போ இன்ரெஸ்டேயில்ல… மேல படிக்கணும்னு தான் ஆசை... அப்ளே பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… எங்கப்பத்தா கெழவி தான் சும்மா இல்லாம ஒங்க அம்மா அவங்களுக்கு ஒன்னோ ரெண்டோ விட்ட தூரத்து மக ஒறவுன்னு ஒங்கள கூப்பிட்டு வச்சுருக்கு…” என்று கூலாய் சொல்ல, இவனுக்கு அத்தனையும் சுலபமாய் போனதை போன்றதொரு உணர்வு…

“அதுசரி… ஆமா ஒங்களுக்கு எப்படி எனக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்லையின்னு தெரிஞ்சது?...” என்று நேரடியாகவே கேட்க,

“ஒரு கெஸ்ஸிங் தான்… கார்ல இருந்து இறங்கும் போதே எல்லாருக்கும் கடைசியா தான் இறங்குனிங்க… வீட்டுக்குள்ள வந்த போதும் யாரையும் அவ்ளோவா கவனிச்ச மாதிரி தெரியல… எல்லாத்துக்கும் முக்கியமா என்ன நீங்க நிமிர்ந்து பார்க்கவேயில்லை… தனியா பேசுறிங்களான்னு கேட்டப்ப கூட வேண்டாமுன்னு தான் தலை அசைச்சிங்களே தவிர எழுந்துக்க நினைக்கல… இங்க வந்துமே...” என்று படபடவென அடுக்கடுக்காய் ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே போக, கேட்டுக்கொண்டிருந்த இவனுக்கு தான் இதழ்கள் தானாய் விரிந்தது…

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெண்மேகமாய் தாலாட்டவா

மேகம் 1

29347
உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து,
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்…

வேளைவரும் போது விடுதலை செய்து,

வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்…

நிலவு மகளின் குளுமை பரப்பிய வெளிச்சமழையில் பெண்ணவளின் மெல்லிய அதரங்கள் தான் ஒவ்வொரு வார்த்தைகளையும் செவிவழி பாய்ந்த இன்னிசையோடு சேர்த்து முணுமுணுத்தபடி இருந்தது… விழிகளின் ஓரம் கசிய இதழ்களோ புன்னகைப் பூவை சூடிக்கொள்ள விழிகளோ சுற்றுப்புறத்தை ஆவலாய் நோக்கியபடி இருந்தது…

இன்னும் அரைமணிநேரத்தில் இந்த வருடத்திற்கான காதலர் தினம் துவங்கிவிடும்… காதலர் தினத்தை வரவேற்பதற்காய் தான் பார்க்கும் இடம் யாவும் இரவை பகலாக்கும் முயற்சியில் வண்ண வண்ண விளக்குகளும், மலர் அலங்காரங்களும், பலூன்களின் அணிவகுப்புகளும் என ஊரே திருவிழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது… ஜோடி ஜோடியாய் ஆடவரும் பெண்டிரும் தங்கள் காதலை கொண்டாடும் விதமாய் கரங்கள் கோர்த்தபடி, ஒட்டிக்கொண்டும், கட்டிக்கொண்டும் நடனமாடி குதூகளித்தபடி இருந்தனர்… அவர்களின் நடனத்திற்கென ஒலிப்பெருக்கியில் இசைத்த பாடலைத் தான் இவளது இதழ்களும் அசைபோட்டபடி இருந்தது…

இன்றைய தினமதை நினைத்தால் அத்தனை இளசுகளின் இதயமும் துள்ளலிடுவதைப் போலத்தான் இவளது இதயமும் ஒருகாலத்தில் துள்ளல் போட்டது… விடியல் துவங்கும் சமயம் தன் வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடரும் என்று நினைத்து ஆசை ஆசையாய் இரவுபொழுதை இதே போல, இதே இடத்திலேயே அமர்ந்து நெட்டித்தள்ளிவிட்டு காத்திருக்க, அவளே எதிர்பாரா நொடிதனில் வாழ்வே சூன்யமானதை என்றுமே மறக்கமுடியாது… சூன்யமாக்கியவர்களை மன்னிக்கவும் முடியாது…

பழைய நினைவுகளில் மூழ்கி, தன்னிலை மொத்தமும் மறந்து பாடல் வரிகளிலேயே தன்னைத் தொலைத்தவளாய் அமர்ந்திருந்தவளை அவளது தோழியின் தொடுகையுடன் கூடிய குரலே நனவுலகம் மீட்டுக்கொண்டு வந்தது…

“இந்தாப்ள மேகா...” என்று முதுகிலேயே நச்சென்று ஒன்று வைத்துவிட்டு இடுப்பில் கைவைத்தபடி முறைத்தபடி நின்றவளை, திரும்பி பார்த்தவள் ஒன்றும் நடவாதது போல புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டு வைக்க, அதற்கும் அவளிடத்தில் இருந்து முறைப்பே பதிலாய் கிடைத்தது…

“என்ன குட்டி கூப்ட இப்ப ஏதுஞ்சொல்லாம மொறச்சுக்குன்னே இருக்க? என்ன சேதி?...” என்றவள் தலையிலேயே நங்கென்று குட்டு வைத்தவள்,

“இந்த எடத்துலயே வந்து ஒக்காராத ஒக்காராதன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்… ஏம்ப்ள என் பேச்சயே கேக்கமாட்டேங்கிறவ? இத்தன ஒசரத்துல வந்து ஒக்காரத்தேன் ஒனக்கு புடுச்சுருக்காக்கும்? கீழ குனிஞ்சு பாத்தாலே பயமா இருக்குது… கொஞ்சங்கூட பயமே இல்லாம இங்கன உக்காந்துட்டு இருக்க…" என்று சொன்னவளின் வார்த்தைகளை கேட்க இவளுக்கு சிரிக்கத்தான் தோன்றியது…

“என்னது ஒனக்கு பயமா இருக்கா?...ஏன் ஏன் பயமாருக்கு?...” என்று மொட்டைமாடியின் சுற்றுச்சுவரில் அமர்ந்து கால்களை ஆட்டியபடியே அவள் கேட்க, இவளோ தலையில் அடித்துக்கொண்டாள்…

“ம்ம்ம் ஏ தாயே கேக்கமாட்ட நீயி… நாலடுக்கு இருக்க கட்டிடத்தோட மொட்டமாடியில ஒக்காந்துட்டு காலாட்ட ஒனக்கு வேணா பயமில்லாம இருக்கலாம்… எனக்கு பயமா இருக்குப்பா… இதுலருந்து கீழ வுழுந்தா என்னாவும் தெரியும்ல? கொடல் குந்தாணியெல்லா சட்னியாயிப்புடும்… முதல்ல நீ இங்குட்டு எறங்கு… ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்...” என்று தோழியின் கைப்பிடித்து இந்த பக்கமாக இறக்கிவிட, அவளும் இதற்கு மேலும் இவளை பயமுறுத்த வேண்டாம் என்று இறங்கி நின்று அவளை பார்க்க, ஏதோ சரியில்லாதது போல் இருந்தது…

என்றுமில்லா திருநாளாய் தழையத்தழைய பட்டுப்புடவை கட்டி, மல்லிகைப்பூ சரம் தோள்களில் புரள, மஞ்சள் பூசிய முகத்துடனும், கண்ணாடி வளையலுகளுடனும் நின்றவளை மேலிருந்து கீழாக ஒற்றைப் பார்வை பார்த்தவள், தோழியின் விழிகளையும் கவனிக்க மறந்தாள் இல்லை…

“என்னப்ள சீவி சிங்காரிச்சு எங்கயோ கெளம்பிருக்காப்புல இருக்கு? கண்ணெல்லா வேற செவந்து போய் கெடக்கு… எங்கன போறவ?...” என்ற மேகாவின் தோற்றத்தையும் ஒரு பார்த்தவள், சிறு தயக்கத்துடனே!

“அதுவந்து வீட்டுக்குத்தாம்ள… நீயும் வாரியல்ல…” என்று கேட்டு வைக்க, அவள் வார்த்தைகளை கேட்டவளுக்கு தான் கோபம் பொத்துக்கொண்டு வந்தது…

“இந்தாபாரு தேனு… ஒனக்கு ஓ வீட்டாளுவள பாக்கணும் போவணும் வரணுமுன்னா போ வா… நான் எப்பயும் ஒன்ன தடுக்கவு மாட்டேன் ஏன் எதுக்குனு கேக்கவு மாட்டேன்… ஆனா என்னையும் வா போன்னு ஏதாவது சொல்லிக்கிட்டு திரிஞ்ச, அப்பறம் என்ன மனுசியாவே பாக்கமாட்ட சொல்லிப்புட்டேன்…” என்று கடுகடு முகத்தோடு முகம் சிவக்க பேசிவிட்டு, விருவிருவென்று முகத்தை திருப்பிக்கொண்டு சென்றவளை ஏனோ இவளுக்கும் தடுக்கவோ! சமாதானப்படுத்தவோ தோன்றவேயில்லை…

“மனுசியா பாக்கமாட்டோமாமுல்ல… ஆளப்பாரு இப்ப மட்டுமா மனுசியாட்டமா இருக்கா? ராட்சசி... இவளுக்காவ தானே ஆத்தா அப்பன்னு யாரையும் பாக்கப்போகமா கெடக்கேன்… ஆளும் மண்டையும்… இவள… போயிட்டு வந்து வெச்சுக்கிடுதேன்…” என்றுவிட்டு இவளும் சிட்டாய் மாறி பறக்க, இவளுங்க பேசிகுகிறத பார்த்தா நமக்குமே எங்கேயோ இடிக்கிறாப்புல இருக்குல… இடிக்கட்டும் இடிக்கட்டும் அதெல்லா என்ன சேதிண்டு பொறவு பொறுமையா பாத்துப்போம்… இப்போதைக்கு இன்னொரு எடத்துக்கு போவோம்…

கீச்கீச் என்று ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, என பல வண்ணங்களின் நிற்பதும் பறப்பதுமாய் இருந்த காதல் பறவைகளை கூண்டிற்கு வெளியே நின்றபடி ரசித்துக்கொண்டிருந்தான் அவன்… சிலுசிலுக்கும் தென்றல் காற்று கேசம் கலைத்தாட வெகுதூரமாய் தெரிந்த கடலும், கரையை வந்து சத்தமின்றி முத்தமிட்டு ஓடும் கடல் அலையும், பறவைகளின் கீச் கீச் ஒலியும் அவனை உற்சாகமாய் வைத்திருந்தது…

புதிய இடம் என்ற சிறு சங்கோஜத்தை தவிர வேறு எந்த அசௌகரியமும் அவனுள் எழவேயில்லை… வரவில்லை, பிடிக்கவில்லை, வேண்டாம் என்று விடாமல் தாயிடம் பிடித்த பிடிவாதம் ஒன்றுக்குமே செல்லுபடியாகமல் போக, அதன் பயனாய் தான் இன்று இப்படியொரு சூழலில் வந்து நிற்பதும்… சுற்றுப்புறம் உண்மைக்குமே பிடித்திருக்கிறது அழகாய் இருக்கிறது என்று எதார்த்தமாய் சொல்லிவிட்டால் கூட அது அவனை எங்கெங்கோ கூட்டி செல்லும் என அமைதியாக காத்திருந்தான்… ஆம் அந்த நிமிடம் அவன் காத்திருக்க தான் செய்கிறான்… அதுவும் ஒரு பெண்ணுக்காக…

தன்னை நினைக்கவே கொஞ்சம் சிரிக்கத்தான் தோன்றியது… திருமணம் என்ற ஒன்றே தன் வாழ்வில் இருக்காது, இருக்கவும் கூடாது என்று ஒரு முடிவோடு வலம் வருகையில் பெற்றவர்களின் பிடிவாதத்திற்காக இந்த பெண் பார்க்கும் படலம் எல்லாம் அவசியம் தானா! என்று தோன்றியது… அநாவசியமாய் தன் விருப்பமின்றி அம்மா ஏதோ வாக்கு கொடுத்துவிட்டார், உறவுகளில் மத்தியில் அவருக்கு அவமானமாய் போய்விடும் என்று அவருக்காக வந்து நிற்பது தன் முடிவில் ஏற்பட்ட முதல் சறுக்கலோ என்றும் தோன்றியது…

விருப்பமேயில்லாமல் உறவுகள் படை சூழ கிளம்பி வந்து, சபையில் அசடு வலிய அமர்ந்து, காபியோடு வந்த பெண்ணை நிமிர்ந்தும் பாராமல் கடனேயென வாங்கி கொஞ்சமாய் உறிஞ்சிவிட்டு இதோ கிளம்பிவிடுவோம் என காத்திருக்க, தேவையேயில்லாமல் அந்த பெண்ணோடு தனிமையில் சிறிதுநேரம் பேச சொன்னால் என்னவென்று சொல்வது? சபை நடுவே மறுத்துப் பேசமுடியாமல் தாயையும் தந்தையும் பார்த்து முறைத்து வைக்க, அவர்களோ விழிகளால் இறைஞ்சியபடி தான் இருந்தனர்… வேறுவழியே இல்லாமல் எழுந்து அவர்கள் காட்டிய மாடிப்படியில் ஏறிவந்து நின்றால் அந்த பெண் அங்கிருந்து அவனை ஈர்த்தாளோ! இல்லையோ! காணும் இடம் யாவும் அவனை அவன்பால் ஈர்த்துவிட்டது…

சில மணித்துளிகள் பறவைகளை பார்த்தபடியே அமைதியாய் நின்றிருப்பான், திடிரென்று மல்லிகையின் மணத்தோடு, கலகலவென்ற வளையல்களின் சப்தமும், கொலுசொலியும் கேட்க, திரும்பிப் பார்த்தால் அவள் நின்றிருந்தாள் கொஞ்சமே கொஞ்சம் வெட்கப்பூக்களை சூடியபடி…

“ஓ… ஹலோ… வந்து ரொம்ப நேரமாச்சா?...” என்றவனின் கேள்விக்கு உதட்டை சுழித்து இல்லை என்பது போல் கொஞ்சமாய் தலையாட்ட, அவளின் தலையாட்டலில் காதில் கிடந்த குடை சிமிக்கியும் அழகாய் நர்த்தனமாடியது… இயற்கையை இயல்பாய் ரசிப்பவன் அதனையும் ரசிக்கமாட்டானா, விழிகளில் பொதித்துக் கொள்ளத்தான் செய்தான்… அதன்பிறகு இருவரும் என்ன பேசுவதென்று புரியாமல் அமைதியாகிவிட, அவனே தான் அவர்களின் மௌனத்தையும் உடைத்தான்… பின்னே அவனுக்கு காரியம் ஆக வேண்டுமே… பேசினால் தானே எல்லாம் என்று அவளை பார்த்தவன்,

“இங்கயிருந்து கடல் எவ்ளோ தூரத்துல இருக்கும்?...” என்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஏனோ கழுத்தை வலிப்பது போலத்தான் இருந்தது…

'யப்பா இவ்ளோ உயரமா? இவருக்கு நான் ஷோல்டருக்கு தான் இருப்பேன் போலயே…' என்று அவனது உயரத்தை விழிகளில் அளக்க, அவனோ அவள் முன் சொடுக்கிட்டு அவளது கவனத்தை திருப்பினான்…

“ஹலோ… எக்ஸ்யூஸ்மீ… என்னாச்சு?... நான் மட்டும்தான் பேசிட்டே இருக்கேன் நீங்க ஏதுமே பேச மாட்டுறிங்க?...” என்க, உதட்டிற்குள்ளே புன்னகையை தேக்கியவளோ!

“தௌசண்ட் மீட்டர்ஸ்க்குள்ள தான் இருக்கும்...” என்க, அவனோ கடலை பார்த்தபடியே,

“ஓ…” என்றுவிட்டு அமைதியாய் பறவைகளை பார்த்தபடியே அவளிடத்தில் எப்படி உண்மையை சொல்வது என்று தயங்கியபடியே நிற்க அவளது குரலே அவனை திசை திருப்பியது…

“ஒங்களுக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்ல தானே!...” என்று சிறிதும் யோசியாமல் சட்டென்று கேட்டவளை திரும்பி பார்க்க, அவளோ கூண்டிற்கு அருகே வந்து கைகளை கட்டியபடியே நின்றிருந்தாள்…

“ஆமா அதெப்படி ஒங்களுக்கு?... சாரி...” என்றவாறு நிற்க,

“ப்ச்… அட விடுங்கங்க… எனக்கே மேரேஜ் பண்ணிக்கவெல்லா இப்போ இன்ரெஸ்டேயில்ல… மேல படிக்கணும்னு தான் ஆசை... அப்ளே பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… எங்கப்பத்தா கெழவி தான் சும்மா இல்லாம ஒங்க அம்மா அவங்களுக்கு ஒன்னோ ரெண்டோ விட்ட தூரத்து மக ஒறவுன்னு ஒங்கள கூப்பிட்டு வச்சுருக்கு…” என்று கூலாய் சொல்ல, இவனுக்கு அத்தனையும் சுலபமாய் போனதை போன்றதொரு உணர்வு…

“அதுசரி… ஆமா ஒங்களுக்கு எப்படி எனக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்லையின்னு தெரிஞ்சது?...” என்று நேரடியாகவே கேட்க,

“ஒரு கெஸ்ஸிங் தான்… கார்ல இருந்து இறங்கும் போதே எல்லாருக்கும் கடைசியா தான் இறங்குனிங்க… வீட்டுக்குள்ள வந்த போதும் யாரையும் அவ்ளோவா கவனிச்ச மாதிரி தெரியல… எல்லாத்துக்கும் முக்கியமா என்ன நீங்க நிமிர்ந்து பார்க்கவேயில்லை… தனியா பேசுறிங்களான்னு கேட்டப்ப கூட வேண்டாமுன்னு தான் தலை அசைச்சிங்களே தவிர எழுந்துக்க நினைக்கல… இங்க வந்துமே...” என்று படபடவென அடுக்கடுக்காய் ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே போக, கேட்டுக்கொண்டிருந்த இவனுக்கு தான் இதழ்கள் தானாய் விரிந்தது…
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்...
கருத்து திரி ஓபன் ஆகுதான்னு மட்டும் பார்த்து சொல்லுறிங்களா? ப்ளீஸ்...
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெண்மேகமாய் தாலாட்ட வா

மேகம் 2

29359
நீ இருக்கும் எடம் தான் எனக்கு கோவிலையா....
மனச தொறந்து பேசு சொல்ல வாயில்லையா...

சொல்லா கதை உள்ள கெடக்கு
இல்லாதது எங்க இருக்கு?
எனக்கு முடியல
உன்னைவிட்டா போக வழியுமில்ல

ஒத்தையில நாச்சொல்ல விதியில்ல...


அவளின் விடாத அடைமழையான பேச்சில் இதழ்கள் தவழும் புன்னகையோடு அவளை பார்த்தவன்,

“உன் பேரென்ன?...” என்க, அவனை அதிசயமாய் பார்த்தவளோ!

“பேரு என்னன்னு கூட கேட்காமலா பொண்ணு பாக்க வந்திங்க?...” என்று கேட்டு வைக்க,
புன்னகையோடு முன்நெற்றியில் சரிந்த முடிக்கற்றையை கோதிவிட்டவன்,

“ப்ச்... ப்ச்…” என்று தோளைக்குலுக்கிவிட்டு, “பேர சொல்லுறியா?...” என்று கேட்டு வைத்தான்… இவள் பதில் சொல்வதற்காக வாயைத் திறக்கயிலேயே அவர்கள் இருந்த புறமாக ஒரு பெண் வர, இருவரின் பார்வையுமே அந்த பெண்ணின் புறம் திரும்பியது…

“நம்மள கூப்புட ஆள் வந்துட்டாங்கன்னு நெனைக்குறேன்...” என்றவனை பார்த்து விழிகள் சுருங்க புன்னகைத்தவள், அவன்புறம் கையை நீட்டி,

“நைஸ் டூ மீட்டிங் யு மிஸ்டர்.விக்ரமாதித்யன்... எப்படியும் இந்த கல்யாணம் நடக்கப்போறது இல்ல… ரயில் சிநேகிதம் போல பார்த்தோம், பேசுனோம், பிரிஞ்சோம்னு இல்லாம, பார்க்கும் போதெல்லா ஹாய் ஹலோன்னு பேசிப்போம்...” என்க, இவனுமே சிரித்தபடி அவள் கையை பற்றி குலுக்க, அந்த பெண்ணும் வந்து நின்றிருந்தாள்…

“என்ன தம்பி என்ன சொல்லுறா என் நாத்துனாகாரி...” என்ற பெண்ணை பார்த்து புன்னகைத்தவன்,

“சும்மா பேசிட்டு இருந்தோம் சிஸ்டர்...” என்க, அவளோ!

“சரி தம்பி… கீழ கூப்பிட்டாங்க அதான் வந்தேன்… போலாமாடி…” என்று வந்த வேலையை செவ்வனே முடித்துவிட்டு அவளையும் அழைத்துக்கொண்டு கிளம்ப, போகும் அவளையே பார்த்தபடி நின்றவன் என்ன நினைத்தானோ!

“பேரு என்னன்னு சொல்லாமலே போற?...” என்று கேட்டுவைக்க, அவன் புறம் நோக்கியவளோ!

“மித்து… இல்ல மித்ரா… இல்லல்ல மேகமித்ரா… மேகான்னும் கூப்பிடலாம்… உங்களுக்கு எப்படி கூப்புட தோணுதோ அப்படியே கூப்புடுங்க…” என்றுவிட்டு ஓட, இவனுக்கு தான் அவள் பெயரை கேட்ட பிறகு திக்கென்று
எங்கேயோ இடிப்பதைப் போலானது…

எல்லாம் தனது தாயின் திருவிளையாடல் தான் என்பதனை உணர்ந்தவன், வீட்டிற்கு சென்றதும் வைத்துக்கொள்வோம் கச்சேரியை என்றபடி கடுகடு முகத்துடனே சிறிதுநேரம் வரைக்கும் அங்கேயே நின்றுவிட்டு கீழிறங்கி சென்றிருந்தான்..

இரண்டு நாட்கள் அழகாய் கடந்திருக்கும்… வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சென்ற தேன்மொழி இன்னுமே வந்து சேராத காரணத்தினால், கோபத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தாள் தேன்மொழியின் ஆறுயிர் தோழியிவள்… கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலமாக ஒரே அறைக்குள் ஓருயிர் ஈருயிராய் வாழ்பவர்கள்… நட்பிற்கு இலக்கணம், இலக்கியம் என எது உண்டென்றாலும் இவர்களை எடுத்துக்காட்டாய் சொல்லும் அளவிற்கு ஒன்றாகவே திரிபவர்கள்… இருவருக்கும் ஒருமித்த எண்ணமோ கருத்தோ இல்லையென்றாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு மற்றொருவர் என்றுமே துணையாய் தான் இருப்பர் ஒரு விசயத்தை தவிர…

தேன்மொழி என்ன தான் முட்டி மோதினாலும், மேகா என்கின்ற மேகவதியை அவள் வீட்டிற்கு அழைத்து செல்லவே முடியாது… கடந்த சில வருடங்களில் அதனாலேயே இருவருக்குள்ளும் சிறுசிறு முரண்பாடுகள் ஏற்பட்டதென்னவோ உண்மை தான்… தனிமை பல சமயங்களில் இனிமையாய் தோன்றினாலும் தோழியை விட்டு பிரிந்திருந்த இரு தினங்களும் வெறுமையாகவே தோன்றி மனதை வதைத்தது… அறைக்குள்ளேயே அங்கும் இங்கும் அழைந்துவிட்டு இன்றும் வரவில்லையே என்று சிறு கோபத்துடன் அறையை விட்டு வெளியேற கவலை தோய்ந்த முகத்துடனே வந்து கொண்டிருந்தாள் தேன்மொழி…

அவளது முகத்தை பார்க்கும் பொழுதே என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் நன்றாகவே யூகிக்கமுடிந்தது… இப்படி தான் நடக்கும் என்று தெரிந்தபடியால் தானே போகாதே என்று ஒவ்வொரு முறையும் தடுப்பதுமே என்று நினைத்தவள், தன் மன உணர்வுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தேன்மொழியிடம் சென்றாள்…

“என்னப்ள இப்புடி வாரவ… இதுக்குத்தானே போகாத போகாதன்னு தலையா அடிச்சுக்குறேன்…” என்க, கண்ணீர் வழிய முயற்சிக்கும் முகத்துடனே மேகாவை அணைத்துக்கொண்டாள்…

“தேனு… என்னப்ள? அழுக நெனைக்காதன்னு எத்தனவாட்டி சொல்லியிருக்கேன்… நம்மளால சிரிக்கமுடியுமே தவிர அழ முடியுமா? கண்ணீரே வராம அழறதால நம்மளால ரொம்ப நேரம் இங்க உலாவ முடியாதுங்குறத மறந்துடுறியா? வலிய மனசுக்குள்ளேயே போட்டு மறச்சுக்குடுந்த… தேனு… தேனு…” என்று தேற்ற, அவள் சொல்வதில் இருந்த உண்மை உரைக்க, சட்டென்று மேகவதியிடம் இருந்து விலகியவள், வராத கண்ணீரை கன்னம் தொட்டு அவசரமாய் துடைத்துவிட்டு,

“மன்னிச்சுடு மேகா… இனிமே அப்படி பண்ணவே மாட்டேன்...” என்றாள்…

“ப்ச் சரி விடு… வா எதுவா இருந்தாலும் உள்ளார போய் பேசுவோம்...” என்று அவர்களின் அறைக்குள் நுழைய, அவர்கள் இருவரையும் இடித்துக்கொண்டு இல்லை இல்லை அவர்களின் உருவத்திற்குள்ளாகவே புகுந்து இரண்டு பேர் அறைக்குள் நுழைய, இவர்கள் இருவருக்கும் சர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது… அவ்வளவு நேரமும் அழகு வதனமாய் தெரிந்த முகம் ரத்தச்சிவப்பாய் மாறியிருக்க, அவர்கள் அணிந்திருந்த உடையோ இமைமூடி திறப்பதற்குள் கிழிந்து நைந்து போனதாய் மாறியிருந்தது… பட்டுப்போல் படிய வாரியிருந்த தலைமுடியுமே சிக்குண்டது போல் அலங்கோலமாய் காற்றில் பறக்க, தலையில் நிறைய இடங்கள் மொட்டையாய் தான் காட்சியளித்தது…

“யாரு குட்டி இவைய்ங்கல்லாம்? என்ன தெனாவட்டு இருந்தா, யாரக்கேட்டு நம்ப எடத்துக்குள்ள நுழையிறாய்ங்க...” என்று புஸ் புஸ்ஸென்ற மூச்சுக்காற்றை ஊதியபடியே தேன்மொழி கர்ஜிக்க,

“பொறு தேனு... என்ன பண்ணுறாய்ங்கன்னு பாத்துப்புட்டு பொறவு பேசுவோம்...” என்ற மேகாவோ தன் உருவம்தனை பழையபடி மாற்றி தோழியின் தோளில் கைவைக்க, அவள் உருவமும் பழையபடி மாறியிருந்தது....

இருவருமாய் அடிமேல் அடிவைத்து அறைக்குள் நுழைந்து ஏற்கனவே உள்நுழைந்த இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என அவர்கள் அருகில் நின்றே கவனிக்க ஆரம்பித்திருந்தனர்…

பெண்பார்க்கும் படலம் முடிந்து வீட்டிற்கு திரும்பியிருந்த விக்ரமோ தனது பெற்றவர்களின் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்தான்… முக்கிய உறவுகள் வீட்டை விட்டு கிளம்பும் வரைக்கும் பொறுமையாய் அறைக்குள் முடங்கிக்கிடந்தவன், அனைவரும் கிளம்பிவிட்டனர் என்பதனை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் அதுநேரம் வரைக்கும் கட்டுப்படுத்தியிருந்த கோபம் தனை மொத்தமாய் கொட்ட ஆரம்பித்துவிட்டான்…

“என்ன நெனச்சுக்குட்டு இருக்கிங்க எல்லாரும்? வேணாம் வேணாம்னு சொன்னா யாருக்குமே புரியாதா? சொல்ல சொல்ல கேட்காம பொண்ணு பார்க்குற அளவுக்கு இறங்கிருப்பிங்க?...” என்று வீடே அதிரும்படி இவன் சப்தமிட, அவன் அதட்டலும் உருட்டலும் அவனை பெற்ற நாச்சியாரையும், ரெங்கநாதனையும் பாதித்தால் தானே!

“இப்ப எதுக்குடா இந்த குதி குதிக்கிறவன்? பொண்ணு தானே பாக்கப்போனோம்? கல்யாணமேவா பண்ணி வச்சுப்புட்டோம்?...” என்று ரெங்கநாதன் அசராமல் கேட்க, நாச்சியாருமே,

“அதானே... எதோ கொலக்குத்தம் பண்ணி வச்சவைங்கள விசாரிக்கிறாப்புல இல்ல விசாரிச்சுட்டு இருக்க.. வேணாம் வேணாம்னு சொன்னவன் என்னத்துக்கு நாங்க கூப்புட்டா வர்ற? முடியவே முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே…” கேட்டுக்கொண்டு இருந்தவனுக்கோ பற்றிக்கொண்டு எரிந்தது…

“ம்மா என்ன ரெண்டு பேரும் வெளையாடிட்டு இருக்கிங்களா? நான் எத்தனவாட்டி படிச்சு படிச்சு சொன்னேன் நான் வரல வரலன்னுட்டு… அத்த, மாமான்னு அத்தன ஒறவையும் கூப்புட்டுப்புட்டோம், பொண்ணு வீட்டுல வாரோம்னு சொல்லி வாக்கு குடுத்துப்புட்டோம் எல்லாருமா போவலைன்னா மானமே போயிடும் சும்மா பேச்சுக்கு வந்துடு ராசான்னு யாரு கெஞ்சுனது?… இப்ப காரியம் ஆனதும் பேச்சமாத்துறியளா?...” என்க, அசடு வலிய திருதிருவென விழித்த நாச்சியாரோ!

“அப்புடியா சொன்னேன்… சொல்லிருப்பேன் சொல்லிருப்பேன்…” என்றுவிட்டு நகரப்போக இவனோ தலையில் அடித்துக்கொண்டான்…

“சும்மா பாத்துட்டு வரலாமுன்னு சொல்லி அத்தன அழிச்சாட்டியம் பண்ணி கூட்டிக்கிட்டு போறப்பவே நெனச்சேன் என்னவோ இருக்குன்னு... அங்க போயிட்டு பொண்ணு கூட தனியா பேசுன்னு வேற கெளப்பி விடுறிங்க… இல்ல தெரியாம தான் கேட்குறேன் என்ன நடக்கணும்னு இந்த ப்ளான் எல்லாம்? இங்க பாரும்மா… நீயும் அப்பாவும் எதுக்காக இதெல்லா பண்ணுறிங்கன்னு எனக்கு நல்லாவே புரியுது… ஆனா நீங்க நெனைக்குற எதுவும் நடக்காது… அவ்ளோ தான் சொல்லுவேன்...” என்றுவிட்டு கோபமாய் சென்று அறைக்குள் முடங்கிக்கொள்ள கேட்டுக்கொண்டிருந்த நாச்சியாருக்கும் ரெங்கநாதனுக்கும் தான் மனம் பதைப்பாய் இருந்தது…
 

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெண்மேகமாய் தாலாட்ட வா

மேகம் 3

29378
“என்னங்க இப்படி சொல்லிட்டு போறான்…” என்று கவலை தோய்ந்த முகத்துடனேயே நாச்சியார் கேட்க, மௌனமாய் நிற்கத்தான் ரெங்கநாதனால் முடிந்தது…

“என்னங்க எதுவுமே பேசாம அமைதியா நிக்குறிங்க? அந்த பொண்ணு வீட்டுல வேற போயிட்டு தகவல் சொல்லுறோம்னு சொல்லிப்புட்டு வந்துட்டோமே… அந்த புள்ளயப் போயி புடிக்கலைன்னு சொன்னா யாராச்சும் நம்புவாகளா?...” என்று மேலும் புலம்ப ஆரம்பிக்க,

“கொஞ்ச நேரம் பொலம்பாம இரு நாச்சியா… என்ன பண்ணுறதுன்னு தானே நானும் யோசிச்சுக்குட்டு கெடக்கேன்… நாலஞ்சு வருசம் போனா சரியாயிடுவான் எல்லாத்தையும் மறந்துடுவான்னு நெனச்சேன்… ஆனா இவன் என்னடான்னா இன்னும் எதையோ மறக்காம மனசுக்குள்ளயே போட்டு மருகிக்கிட்டு கெடக்கான்... ப்ச்...” என்று நெற்றியை தேய்க்க, நாச்சியாரோ கைகளை பிசைந்துகொண்டு நிற்க, ரெங்கநாதனே மௌனம் கலைத்தார்…

“கெளம்பி வா… தம்பி பய வீடு வரைக்கும் போயிட்டு வந்துருவோம்… அவன்ங்கிட்ட பேசுனாத்தான் சரியா வரும்… இவன சரிக்கட்ட அவனும் அவன் பொஞ்சாதியும் தான் சரி...” என்றுவிட்டு செல்ல, கணவன் சொல்வதும் சரி தான் என்று நாச்சியாரும் கிளம்பிவிட்டார்…

இவர்கள் இருவரும் இப்படியொரு முடிவெடுத்து செல்ல, பெற்றவர்களிடத்தில் கோபமாய் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அறைக்குள் நுழைந்து தாழிட்டவனோ வழமை போலவே தனக்குள்ளாகவே மருகிக்கொண்டிருந்தான்…

'என்ன நெனச்சுட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்? எல்லாத்தையும் ஒடனே மறந்திடுவேன்னு எப்படி நெனச்சாங்க? சட்டுன்னு மறந்துட்டு எனக்கான வாழ்க்கைய வாழணும்னா எப்படி முடியும்? எங்கடி போன நீ? என்ன விட்டுட்டு போக உன்னால எப்படி முடிஞ்சது? உன்ன பாக்கணும் போல இருக்குடி… உன் குரல கேட்கணும் போல இருக்குடி..' என்று தனக்குள்ளாகவே புலம்பிக்கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ! விழிகளை அங்கும் இங்கும் சுழலவிட்டவனாய், அவசரமாய் போய் பீரோவை திறந்து உள்ளேயிருந்து அப்பொருளை எடுத்தான்…

அறைக்குள் நுழைந்த இரு ஆடவர்களையும் பின்தொடர்ந்து வந்த மேகாவதியும் தேன்மொழியும் எதுவும் பேசாமல் ஆளுக்கொரு கதவின் ஓரமாய் நின்றபடி அவ்விருவரையும் கவனிக்க ஆரம்பித்திருந்தனர்…

“என்னடா இது அஞ்சாறு வருசமா பூட்டியே கெடக்குற ரூமுன்னு சொன்னாங்க, இங்க பாத்தா கதவென்னமோ தொறந்து கிடக்கு...” என்று ஒருவன் சொல்ல, மற்றொருவனோ!

“ஒருவேள நாம வருவோம்னு தொறந்து வச்சுருப்பாங்க போலண்ணே...” என்க, அமைதியாய் அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தான் முதலாமவன்… அங்கிருந்த கட்டில் அதன் மேல் கிடந்த மெத்தை, கப்போர்ட், டேபிள் ட்ராயர் என அனைத்தையும் தட்டி தட்டி, திறந்து பார்த்தபடி நின்றுவிட்டு பாத்ரூம் கதவையும் திறந்து உள்ளே ஒரு பார்வை பார்த்துவிட்டு நின்றனர்…

“என்னண்ணே எல்லாமே தொடச்சு வச்சாப்புல சுத்தமா கெடக்கு...”
என்றவனின் பேச்சை கேட்டுவிட்டு மேகாவும் தேனுவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்…

“எனக்கும் அதான்டா புரியல… யூஸ் பண்ணாத ரூம் எப்படி சுத்தமா கெடக்கும்? தூசி நூலாம்படையின்னு ஒன்னத்தையுமே காணலையே… கதவ தொறந்துவிட்டவைங்க சுத்தம் பண்ணிட்டு போயிருப்பாங்களோ!...”

“நானும் அப்படி தாண்ணே நெனைக்குறேன்…”

“என்னவோடா! நமக்கு வேல மிச்சம்… ஆமா மத்த ரூமையெல்லா பயலுவல விட்டு பாக்க சொல்லு… ஒப்புக்கு ஒருக்கா தூசி அடிச்சு விட்டுப்புட்டு பளிச்சுன்னு பெயிண்ட அடிச்சு விட்டுடலாம்… இன்னும் ஒருவாரத்துல லீவு முடிஞ்சு புள்ளைங்க எல்லா வந்துருங்கலாம்… வெரசா வேலைய பாக்கணும்...” என்று பேசியபடியே அறையை விட்டு வெளியேற, தலையை தலையை அசைத்தபடியே மற்றொருவனும் பின்னேயே செல்ல, அவர்களின் பேச்சுவார்த்தைகளை வைத்தே என்ன தான் நடக்கிறது என்பது அரூபமாய் நின்றிருந்த இருவருக்கும் தெளிவாக புரிந்துவிட்டது…

“ஷோ… ஒரு வழியா இந்த ப்ளாக்க திரும்பி தெறக்க போறாய்ங்க போல தேனு…” என்று கைகளை கட்டியபடி மேகா சொல்ல,

“நானும் அப்படிதான்ம்ள நெனைக்கிறேன்… ஆனா எனக்கொரு டவுட்டு மேகா.. இத்தினி வருசமா சும்மாவே கெடந்த ப்ளாக்க இப்ப எப்புடி தெறப்பாய்ங்க... ம்ம்ம்… எங்கேயோ இடிக்குதே... வெயிட் அண்ட் வாட்ச் அப்டி போயிட்டு இப்டி வந்துடுறேன்…” என்று சட்டென்று மறைந்துவிட, இவளோ சிந்தனைவயப்பட்டவளாகவே சிறிதுநேரம் வரைக்கும் நின்றிருந்தாள்…

தேனு சொன்னதைப் போலவே சிலநொடிகளில் அப்படி போய்விட்டு இப்படி சட்டென்று வந்து நின்றவள் மூச்சு வாங்க,

“மேகா மேகா சேதி கேட்டியா? இந்த ப்ளாக்க திரும்பவும் தொறக்க போறாய்ங்களாம்… ஒங்கப்பாரு காலேஜ கைமாத்திப்புட்டாராம்...” என்க, மேகாவிற்கோ அதிர்ச்சியாய் ஆனது…

“வாட்? என்ன சொல்லுற நீயி?... நல்லா விசாரிச்சுப்புட்டு தான் வந்தியா?... யாரக்கேட்டு கைமாத்துனாரு? இவர் இஷ்டத்துக்கு வித்துட்டு போக இதென்ன அவரு சம்பாத்தியத்துல உருவானதா?.. அந்தாள...”என்று முகமெல்லாம் வெளிறிப்போய் கோபமாய் கேட்டு வைக்க, எதிரே நின்றவளுக்கோ திக்கென்றானது… அவசரமாய் அவள் தோளில் கைவைத்து உலுக்கியவள்,

“இந்தாப்ள எதுக்கு இப்ப டென்சன் ஆகி என்னையும் சேத்து சுட்டுப்பொசுக்குற? சும்மாவே கொஞ்ச நேரம் விட்டா உடம்பெல்லா கருகுன வாடை வர ஆரம்பிச்சுடுது… நீ வேற கோபத்துல இன்னும் இன்னும் எரிக்குற?...” என்று அங்கலாய்க்க, அவள் முன் நின்றவளின் முகமானது கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்கு மாற ஆரம்பித்தது…

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?.....
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக….
என்னாச்சு எனக்கே தெரியவில்லை.
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை...
அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்….

இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்?

செவிகளில் துள்ளலான இசையோடு கேட்ட அவனவளின் தேன்மதுரக் குரலில் அதுநேரமும் இருந்த மனபாரம் யாவும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைய ஆரம்பித்தது விக்ரமாதித்யனுக்கு… இமைமூடி படிக்கையில் இரு கைகளையும் விரித்தபடி கிடந்தவனின் செவிகளில் அவள் குரல் விடாது ஒலிக்க, இதழோரம் அரும்பிய புன்னகையோடு சேர்த்து, இமையோரம் துளிர்த்த நீரும் அவனவளை நினைவு படுத்தியபடியே தான் இருந்தது…

மனதிற்கினியவளை மறந்திருந்தால் தானே நினைப்பதற்கு? கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை எவராவது ஒருகாலத்தில் நீ இப்படியெல்லாம் இருப்பாய் என்று சொல்லியிருந்தால்! அவர்களை முட்டாள்களை பார்ப்பது போல தான் பார்த்து வைத்திருப்பான்… ஆனால் இன்று அத்தகைய நிலையில் இருப்பதை நினைக்க நினைக்க மனம் சுகமாய் ஒரு வலியை உணரவும் செய்தது… காத்திருப்பில் எவ்வளவு தான் வலி இருந்தாலும் அதில் உள்ள சுகமதனை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.. அதே சுகத்தை தான் தற்பொழுது விக்ரமும் அனுபவித்துக் கொண்டிருந்தான்… ஆனால் அந்த காத்திருப்பும் சுகமும் எதற்காக என்பதில் தான் கொஞ்சம் அதிகமாய் வலித்தது…

இமையோரம் துளிர்த்த கண்ணீரை சுட்டுவிரல் கொண்டு சுண்டி எறிந்தவன், ஹேட்போனை அவிழ்க்காமலேயே மறுபடியும் முதலில் இருந்து பாடலை சப்தமாய் ஒலிக்கவிட, மனமானது அவள் குரலோடு சேர்த்து அவள் இந்த பாடலை பாடிய தருணத்திற்கு போய் நின்றது…

மேகநாதன் கல்வி நிறுவனங்களில் மேகநாதன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் மேகநாதன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் மிகவும் முக்கியமான பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனமாகும்... மேலாண்மை பிரிவில் பி.ஹெச்.டி ரிசர்ச் ஸ்காலராக சேர்ந்திருந்தான்… கல்லூரியில் தன் பணியை துவங்கி ஒன்றிரண்டு வாரங்கள் தான் கடந்திருக்கும், அன்றைய தினம் கல்லூரியே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளித்தது…

கல்லூரிக்குள் நுழைந்து தனது பைக்கை பார்க்கிங்கில் போடும் பொழுதே, ஒரு ஆடவனின் குரல் ஒலித்து வைத்தது மெல்லிய இசையினுடனே…

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே….
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே….
ஓ ஓ ஓ ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்...

என்ற ஆடவனின் குரலில் இவனது இதழுகள் புன்னகையையே சூடிக்கொண்டது… ஏதோ புதிதாய் பாடப் பழகும் இளைஞன் போல, வார்த்தைகளும் சரி குரலும் சரி ஏனோதானோவென்று இருக்க மாணவர்களின் கரகோஷமும், கூச்சலும், அதிகப்படியான இரைச்சலை கொடுக்க, அவனுக்குள்ளும் கல்லூரி கால நினைவு வந்து சென்றது… எத்தனை பேரை மேடையில் ஏறி ஒழுங்காக பாடவில்லையென கலாய்த்து தள்ளியிருக்கிறோம் என்று நினைத்து புன்னகையுடனே தனது டிபார்ட்மெண்டை நோக்கி நடக்க, அடுத்ததாய் கேட்ட பெண்ணின் குரல் அவனை அசைய விடாமல் அப்படியே நிறுத்தியிருந்தது…

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?.....
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக….
என்னாச்சு எனக்கே தெரியவில்லை.
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை...
அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்….
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்?

என்ற பெண்ணின் குரல் தொடர்ந்து ஒலித்தபடி இருக்க, சிலையாய் இவனை
சமைந்து நிற்கவைத்திருந்தது..., அத்துனை நேரமும் கேட்ட கூச்சலும் ஆரவாரமும் சட்டென்று சுவிட்ச் போட்டதை போல மொத்தமாய் அடங்க, அந்த குரலுக்கு உரிமையானவளை ஒருமுறை பார்த்துவிடுவோமே என்று நடக்க ஆரம்பித்தான் ஆடிட்டோரியத்தை நோக்கி…

செவிகளில் அவள் குரலிலும், முன்னே கேட்ட ஆடவனின் குரலிலும் பாடல் விடாமல் ஒலித்தபடியே இருக்க, இவனின் நடையின் வேகம் அதிகமாகியது… ஆனால் அவனது நேரமோ என்னவோ அவன் ஆடிட்டோரிய வாயிலில் போய் நின்ற பொழுது பாடல் முடிந்து பாடியவர்களும் இறங்கி சென்றிருந்தனர்…
 
Last edited:

Priyanka Raja

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மேகம் 4
29727
தோழனின் தோள்களும்
அன்னை மடி...
அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி...
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான்
உயர்ந்தது பத்து படி...
உன் நட்பை நாங்கள் பெற்றோம்...
அதனாலே யாவும் கற்றோம்...
மேலே மேலே சென்றோம்....
வான் மேகம் போலே நின்றோம்….

கல்லூரி கலையரங்கத்தின் வாயிலில் விக்ரம் போய் நிற்கும் பொழுதில் மேடையில் ஒலித்த பாடலும் நிறைவுற்றிருந்தது… பாடியவர்கள் அனைவரும் கீழிறங்கி சென்றிருக்க, கலையரங்கம் முழுவதிலும் பலத்த கரகோஷம் ஒன்றே பெரிதாக கேட்டது…

“ச்சே இறங்கி போயிட்டாங்களா? இன்னும் கொஞ்சம் வேகமா வந்துருக்கணுமோ! ப்ச்... யாரு பாடுனதுன்னு தெரியலையே...” என்று விக்ரம் வாய்விட்டே புலம்ப, அடுத்த நொடி அவன் செவிகளில் அவ்வார்த்தைகள் விழுந்தது…

“அட அட அட… எவ்வளவு கைத்தட்டல்கள்… மேகவதியோட குரலுக்கு நம்ம காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் அத்தனை பேருமே அடிமையப்பா… இல்லையா முகில்?...” என்று மேடையில் புடவை அணிந்தபடி நின்றிருந்த பெண்ணொருத்தி கேட்க,

“பின்ன இருக்காதா? நம்ம மேகா தான் இன்னொரு சரஸ்வதி ஆச்சே… வீணைய தூக்கிட்டு உக்கார்ந்தா…” என்று அவன் சொல்ல,

“போதும்டா அவ மொறைக்குறா பாரு… மன்னிச்சுடு தங்கமே… சரி ஓகே அழகான பாடலோட விழாவை ஆரம்பிச்சு வச்சாச்சு இப்போ அடுத்ததா நாம பார்க்கப்போறது” என்று அவள் புன்னகையுடனே நிறுத்த,

“நடனம் தான்...” என்று அந்த முகில் என்ற பெயருக்கு உரிமையானவனும் தொடரலானான்...

அவர்கள் இருவரின் பேச்சை கவனித்தவன் சிறுபுன்னகையுடனே அப்பாடலை பாடிய பெண்ணின் பெயரை மனதில் பதித்தவாறு “மே...க...வதி… ம்ம் நைஸ் நேம்...” என்று முணுமுணுத்தபடியே திரும்பி நடக்க ஆரம்பிக்க,

“மாப்பி…” என்று இடித்துக்கொண்டு வந்து நின்றது ஓர் உருவம்… மாப்பி என்ற அழைப்பிலேயே வந்து நின்றவனின் நினைவிலும் வரவிலும் உள்ளம் மகிழ்ந்தவன், ஒரு பார்வை பார்த்தபடியே புன்னகை முகமாய்,

“என்ன கௌதம் இந்த பக்கம்?...” என்று ஆர்வமாய் கேட்க, விக்ரமை பார்த்து முறைத்தான் அவன்...

“எல்லா நீ பார்த்த வேலை தான்டா.. அயோக்கிய ராஸ்கோல்..” கௌதம் சொன்ன தோரணையில்,

“நான் என்ன பங்கு வேல பார்த்தேன்… ஆமா என்ன ஒரு மார்க்கமா வந்து நிக்குற? ஓஹோ! ஓஹோஹோ!... புரிஞ்சு போச்சு… புரிஞ்சு போச்சு… ஹா ஹா ஹா… ஹுஹுஹுஹு…" என்று வாய்விட்டே வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க, தலையில் அடித்துக்கொண்டான் அவன்…

“ஆனா நீயெல்லா நல்லாவே இருக்க மாட்டடா… படிக்க மாட்டேன்னு சொல்லுறவன் சாபம் சட்டுன்னு பலிக்கும் பாரு...” என்று புலம்ப ஆரம்பிக்க, விக்ரமால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை…

“சரி சரி… என் செல்லக்குட்டி... பட்டுக்குட்டி… வெண்ணவெட்டி...” என்று கொஞ்சுவது போல ஆரம்பித்து காலை வார ஆரம்பிக்க, விழிகளை சுருக்கியபடியே முறைத்து வைத்தவன்,

“எதே… வெண்ணவெட்டியா? மவனே இன்னிக்கு ஒன்ன கண்டந்துண்டமா வெட்டியெடுக்கல… நான் கௌதமே இல்லடா..” என்று அடிக்கத்துரத்த அவனும் சிரித்தபடியே சிறுபிள்ளையாய் மாறி ஓட ஆரம்பித்திருந்தான்…

அன்றைய தினமதின் நினைவு இன்றும் அவன் இதழில் புன்னகையைத் தான் வரவழைத்தது… எத்தனை காலங்கள் கடந்தால் தான் என்ன? நண்பனின் நினைவினில் துளிர்த்தெழும் கண்ணீரும், மலரும் புன்னகையும் சுகமான சுவையாகவே நெஞ்சில் எழுகின்றன…

தன்னவளின் நினைவினில் அவள் குரலை கேட்கவென்று ஒலிக்கவிடப்பட்ட
பாடல், இப்பொழுது நண்பனின் நினைவை அள்ளித்தெளித்து 'நான் ஒருவன் இருபது நினைவில்லையா?...' என்று கேட்டுவிட்டு சென்றது… மனம் நெருஞ்சிமுள்ளாய் குத்த நண்பனின் நினைவில் ஓரமாய் கிடந்த செல்போனை எடுத்து உயிர்ப்பித்து கௌதமின் எண்ணை தேட ஆரம்பித்தான்…

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

“மாப்புளகிட்ட ரொம்ப நேரமா சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தியே… என்னடி சொன்னாரு அவரு? ஒன்ன பிடிச்சுருக்குன்னு சொன்னாரா?...” என்று மாப்பிள்ளை வீட்டார்கள் கிளம்பி சென்ற இரண்டு நிமிடத்திற்குள் ஐந்து தடவைக்கும் மேல் கேட்டுவிட்டு தனது பதிலுக்காய் காத்திருந்த அண்ணியை நினைக்கவே சிரிக்கத் தான் தோன்றியது…. தன்னை பற்றி முழுக்க முழுக்க அறிந்திருந்த தன் உடன்பிறந்தோனான ஆதவனின் மனைவி கண்மணி இன்று ஏன் ஒன்றும் அறியாதவளைப் போல் திரும்ப திரும்ப கேட்கிறாளோ! என்று ஆயாசமாய் தான் வந்தது இவளுக்கு…

அவளின் கேள்விகளை காதிலேயே வாங்காதவளாக அணிந்திருந்த நகை நட்டுகளை கழட்டி அப்படி அப்படியே ட்ரெஸிங் டேபிளில் வைக்க, அப்பொழுதும் அவளின் அண்ணியாகப்பட்ட கண்மணி தான் வந்து ஒவ்வொன்றையும் பத்திரமாய் எடுத்து வைத்தபடி புலம்பிக்கொண்டிருந்தாள்…

“கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா மித்து ஒனக்கு? தங்க நகைகள கழட்டி இப்படி தான் கண்டமேனிக்கு போடுறதா? அத்தை மட்டும் வந்து பார்த்தாங்கன்னா வச்சுக்கோ! என்ன நாத்துனாகாரிய வளர்த்து வச்சுருக்கன்னு பொறிஞ்சு தள்ளிடுவாங்க… அந்த பெட்டியை முதல்ல எடு...” என்று வேலை ஏவிவிட்டு அவள் கை மெது மெதுவாய் நீண்டு எடுப்பதற்குள்ளாகவே இவளே தலையில் அடித்துக்கொண்டு, எட்டி எடுத்து நகைகளை பத்திரப்படுத்த, சிரித்தபடியே சென்று படுக்கையில் பொத்தென்று விழுந்தாள் இவள்…

“பொறுப்பே இல்லன்னு தெரிஞ்சுமே எதுக்கு மணி இந்த பொண்ணு பார்க்குற வேலையெல்லா? இப்ப பாரு எல்லாத்தையுமே ஒத்த ஆளா நீயே பார்க்கவேண்டி வருது… கோவிச்சுக்காம அந்த புடவையையும் எடுத்து அழகா மடிச்சு வச்சுடே…” என்று கண்களை சிமிட்டி சொல்லிவிட்டு படுக்கையில் குப்புறப்படுத்துக்கொண்டு காலாட்டியபடியே அவள் சொல்ல, வேகமாய் வந்து உச்சந்தலையிலேயே நச்சென்று ஒன்று வைத்தாள் அவள்...

“அண்ணன கட்டிக்கிட்டவளாச்சேன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா ஒனக்கு? எப்பப்பாரு மணி மணின்னுட்டு…” என்று கண்மணி அவளருகில் அமர, உருண்டு வந்து அவள் மடியிலேயே தலை வைத்து படுத்தவள்,

“அண்ணன கட்டிக்கிட்டவளா மட்டும் இருந்திருந்தா நான் ஏன் மணி மணின்னு கூப்புடப்போறேன்? அத்த மகளாவும் போயிட்டியே… சின்னப் புள்ளையில இருந்து மணி மணின்னு கூப்புட்டுப்புட்டு இப்ப அண்ணின்னு கூப்புட சொன்னா எப்படி? மெல்ல மெல்ல கூப்டுக்கலாம்..” என்று கண்களை மூடிக்கொண்டு சொல்ல, கண்மணியின் இதழ்களில் புன்னகை இழையோடியது…

இருவருக்கும் இரண்டு மூன்று வயதுகள் தான் வித்தியாசமே… ஆனாலும் சிறு வயதில் இருந்து ஒன்றாகவே வளர்ந்ததால் இருவருக்குள்ளும் பெயர் சொல்லி போடி வாடி என்று அழைக்கும் அளவிற்கு நெருக்கம் இருந்தது… அது மட்டுமல்லாது கண்மணி பிறந்த பொழுதே அவள் ஆதவனுக்கு தான் என்று பெரியவர்கள் ஒப்புக்காய் பேசி வைத்திருக்க, இளையவர்களும் வளர வளர தங்களுக்குள் நேச வலையை பின்னிக்கொண்டனர்… அதன் பலனாய் ஆதவனுக்கும் கண்மணிக்கும் இடையே நிறையவே காதல் லீலைகள் அரங்கேறியிருக்கிறது… அவர்களின் காதல் விளையாட்டுகளில் முழுக்க முழுக்க துணைநின்றது மேகமித்ரா தான்… ஆதவனுக்கும் கண்மணிக்கும் இடையே காதல் கடிதங்களை கொண்டு சென்று பாலமாகவே செயல்பட்டு அவர்களின் காதலை வளர்த்தவளாதலால் என்றுமே மேகமித்ராவை கண்மணிக்கு நிரம்பவே பிடிக்கும்…

மித்து மித்து என்று உயிரை விடுவாள்… அவள் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் கண்மணிக்கு பிடிக்கும்… திருமணத்திற்கு முன்பே அப்படியென்றால், திருமணத்திற்கு பிறகு இவர்களின் உறவை சாதாரணமாகவா சொல்ல வேண்டும்? திருமணமாகிய இந்த இரண்டு வருடங்களில் அவ்வீட்டில் இவர்களின் அரட்டைக்கச்சேரிகளும், விளையாட்டும், சிரிப்பும் தான் அதிகமாகவே கேட்கும்… மித்து மித்து என்று கண்மணியும், மணி மணி என்று மித்ராவும் இரட்டைவால் குருவிகளைப்போல சப்தமிட்டபடியே தான் சுற்றிக்கொண்டிருப்பர்…

ஆதவன் கூட அடிக்கடி அவர்களுக்கான தனிமையான தருணங்களில், “ஏன்டி பொண்டாட்டி நீ என்ன கல்யாணம் பண்ணியா இல்ல என் தங்கச்சிய பண்ணியா? எப்பப்பாரு அவ கூடவே சுத்திட்டு இருக்க? என்னையும் கொஞ்சம் கவனிடி…” என்று குழைந்திருக்கிறான் தான்… அப்பொழுதெல்லாம் முத்துப்பற்களை இதழில் தேக்கி வெட்கப்புன்னகை பூப்பவள்,

“தங்கச்சி மேலேயே பொறாமை படுறிங்க பாருங்க...” என்று அவன் நெற்றியில் முட்டி சிரித்து வைப்பாள்…

தங்கைக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் உறவைப் பார்த்து பொறாமைபடும் அளவிற்கு அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பு இருக்க, அதுவே கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும் இவர்கள் இருவருக்கும்… இருவருக்கும் இடையினிலே இந்நாள் வரைக்கும் எவ்வித ஒழிவுமறைவும் இல்லாமல் இருப்பது இருவரின் நட்பிற்கும் அணிகலனாய் இருக்க நாத்தனாரின் தலையை புன்னகையுடன் கோதியபடியே இருந்தவள் திரும்பவும் நினைவு வந்தவளாக ஆறாம் முறையாய் அக்கேள்வியை கேட்டாள் வேறு விதமாய்…

“அடியே மித்து… எத்தன தடவ கேட்டுட்டே இருக்கேன்… மாப்புள கூட என்ன பேசுனன்னு? இதுவே நானும் உன் அண்ணனும் கல்யாணத்துக்கு முன்ன மீட் பண்ணயில பேசுனத எல்லாம் சொல்லாம விட்டுருந்தா சும்மா விட்டுருப்பியா? கேட்டுட்டே இருக்கேன் மழுப்பிக்கிட்டே இருக்க… என்னடி சொன்னாரு?...” என்று திரும்பவும் கேட்க, இதழோர புன்னகையை வலியவிட்டவள் சட்டென்று எழுந்து அமர்ந்தவளாக,

“என்ன பேசிருப்பேன்னு தெரியாத மாதிரி கேட்குற பாத்தியா? அங்க நிக்குற மணி நீ… ஆமா இந்த குந்தாணிக் கெழவிக்கு எவ்ளோ தைரியம் பாரேன்… நெனச்சத நெனச்சபடியே நிறைவேத்திக்கிது… நான் கூட என்ன பெத்த தகப்பனுக்கு எம்மேல தான் பாசம் நேசம்லா அதிகமா இருக்கும் நம்ம பேச்ச தான் கேப்பாருன்னு நெனச்சேன்… ஆனா இப்போ பாத்தியா சைடு கேப்புல ஆத்தாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு என்ன டீலுல விட்டுட்டாரு…" என்க, சிரித்துவிட்டாள் அவளின் மணி…

“அம்மாச்சியெல்லா அந்த காலத்து மனுசி மித்து… அவுங்க எல்லா அப்புடி தான் இருப்பாங்க… என்னையெல்லா பத்தாங்கிளாஸோடவே நிறுத்த பாத்தாங்களே அத மறந்துட்டியா? நல்ல வேலையா மாமாவும் ஒங்கண்ணனும் ஒரு டிகிரியையாச்சும் முடிக்காம கல்யாணத்த பண்ணி வைக்க கூடாதுன்னு தீர்க்கமா சொன்னதும் தான் ஏனோதானோன்னு படிக்க விட்டாங்க.. அவங்களுக்கெல்லா நாம கல்யாணம் பண்ணி புள்ளக்குட்டி கூட இருந்தா தான் நிறைவான வாழ்க்கையே வாழுறோம்னு நம்புறவங்க மித்து… இப்ப நீ அத நெனச்சு எல்லாம் குழப்பிக்கிட்டு இருக்காத… படிக்கணும்னு நெனைக்குறியா படி… கல்யாணம் பண்ணிக்க விரும்புறியா பண்ணிக்கோ… எது நடக்குறதா இருந்தாலும் நீயே முடிவெடு… உனக்கு துணையா என்னைக்குமே நான் இருப்பேன்...” என்க, ஆசையாசையாய் கட்டிக்கொண்டாள்…

😊😊😊😊😊😉😊😊😊😊😊😊😊😊😊😊😊

அதிகப்படியான வெறுப்பையும் கோபத்தையும் விழிகளில் தேக்கியவளாக மொட்டைமாடி சுற்றுச்சுவரில் அமர்ந்து காலை ஆட்டியபடி வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் மேகா… கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் தெரிந்த கட்டிடங்கள் எல்லாம் இது நாள் வரைக்கும் இல்லாத வண்ணத்தில் பளிச் பளிச்சென்று மாறிக்கொண்டிருந்தது…

எத்தனையோ வருடங்களுக்கு முன்பாகவே தனது
பாட்டனாரின் முழு உழைப்பால் வெறும் பொட்டல்காடாக இருந்த இவ்விடம்
கல்லூரியாக அவதாரம் எடுத்து நின்றது… எத்தனை எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு குறைந்த செலவில் நிறைவான கல்வியை கிராமப்புற மாணவ மாணவிகள் கற்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கல்லூரி விடுதியோடு சேர்த்து துவங்கப்பட்டது…

மாணவனோ மாணவியோ இக்கல்லூரியில் படிக்க வேண்டும் என்று வந்து விட்டால் விடுதியில் தங்கி மட்டும்தான் படிக்க முடியும்… ஊரை விட்டு வெகு தொலைவினில் இருந்ததனால் தினமும் வீட்டிற்கும் கல்லூரிக்கும் பயணப்பட்டுக் கொண்டு மட்டும் இருந்தால் எப்பொழுது அவர்கள் படிப்பது என்று எண்ணித்தான் ஆண்பாலர் பெண்பாலர் என இருவருக்குமாக சேர்த்து விடுதி வசதியோடு அக்கல்லூரியை துவங்கியிருந்தனர்…

கல்லூரி துவங்கிய ஆரம்ப காலம் முதல் கல்வி சேவைக்கெனவே நடந்துகொண்டிருந்த கல்லூரி என்று இவளை பெற்றவரின் மேற்பார்வைக்கு கீழ் வந்ததோ அன்றே அனைத்தும் முடிவுபெற்றது என்று தான் சொல்ல வேண்டும்…

தனக்குத் தெரிந்த வகையில் ஏதேதோ தகிடுதத்தம் எல்லாம் செய்து தான் கல்லூரியை நடத்தி வருகிறார் என்பது மேகா அறிந்ததே… ஆனால் இன்று என்னவாயிற்று என்று கல்லூரியை கைமாற்றியிருக்கிறார் என்று தான் அவளுக்கு கொஞ்சமும் புரியவேயில்லை… பெரிய அளவில் பெயரும் புகழும் வாங்கிய கல்லூரி தானே! வருமானத்தில் ஏதேனும் குறை வந்ததா! இல்லை வேறு ஏதேனும் காரணமா?.. என்ற சிந்தையுடனேயே இமைக்கவும் மறந்து வேடிக்கை பார்க்க, அவளின் தோளின் மேல் தேன்மொழியின் கரம் விழுந்து அவளை திசை திருப்பியது...
 
Status
Not open for further replies.
Top