All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரியாத வரம் வேண்டும் 2

AnuJey

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சேரி மா நான் யோசிச்சிட்டு சொல்றேன் என்றாள் சகுந்தலா. சேரி என்று காலை கட் செய்தவளுக்கு ஏனோ இருந்த ஒரே நம்பிக்கையும் போனது. வங்கியில் இருந்து வீட்டிற்கு வரவே ஏழு மணி ஆகிறது அதற்காகவே வேலையை விட்டாள் இப்போது வீட்டோடு இருக்கிற வேலை என்றால் அவன் பள்ளி விட்டு வந்தவுடன் வேலை முடியும் வரை அவளோடவே வைத்துக் கொள்ளலாம் இப்படி இருந்தாள் தான் அவள் வாழ்க்கை முறைக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தாள்.

ஒரு வாரம் சென்றது சகுந்தலா அம்மா விடம் இருந்து கால் வந்தது. "மா பிரியா நல்லா இருக்கியா" என்று விசாரித்த பின்னர் "நீ என்னமா படிச்சிருக்க" என்று கேட்டாள். "நான் பிஎஸ்சி படிச்சிரிக்கேன்மா ஆனா எந்த வேலைனாலும் பரவாயில்லை" என்றாள்.
அது வந்துமா என் பேத்திக்கு கேர் டேக்கர் பார்த்துட்டு இருக்கோம் அவளுக்கு வயசு இரண்டு ஆகுது என்றாள்.

எனக்கு என்ன வேலைனாலும் ஒகே தான் மா மனப்பூர்வ சம்மதம் என்றாள்." இந்த வேலையைப் பொறுத்த வரைக்கும் நீ இங்க நம்ம வீட்டிலேயே தங்குற மாதிரி தான் இருக்கும்மா ஏனா நீ தான் சார்விய ஃபுல்லா பார்த்துக்கணும் என்றாள். சேரி அம்மா நான் யோசிச்சிட்டு கால் பண்றேன் என்றாள்.

தன் தாய் தந்தை யிடம் இதைப் பற்றி சொன்னவளுக்கு குழப்பமாக இருந்தது. "எனக்கு ஆர்யாவை பார்க்கனும்பா என் கண் முன்னாடி அவன் இருக்கனும் ஆனா நீங்களும் அம்மாவும் இல்லாம எப்படிபா" என்று யோசித்தாள். "நீ எங்களுக்காக யோசிக்காத பிரியா ஆனா இரவு அங்கயே தங்கனும்னா இந்த மாதிரி வேலை லாம் வேண்டாம்மா பழைய மாதிரி நாங்களே ஆர்யாவை பார்த்து க்கிறோம் நீ வேற வேலைக்கு முயற்சி பண்ணு" என்றாள் பிரியாவின் தாய்.

" முடியாதுமா ஆறு வருஷம் முன்னாடி நான் பண்ணிட்டு வந்த வேலைக்கு நீங்க என்னையும் என் குழந்தையும் வெச்சி பாத்துருகீங்க என்னால நீங்க பட்ட அவமானம் அசிங்கம் வேதனை இதெல்லாம் என்னால மறக்கவே முடியாதுமா. சகுந்தலா அம்மா ரொம்ப நல்லவங்கமா அவங்க கூட இருந்தா சேஃபா தான் இருப்ப அப்படி எனக்கு எதாவது பிரச்சனை வந்தா என்னால என்ன காப்பாத்திக்க முடியும் அதையும் மீறி என் கைய மீறி பொய்டுச்சுனா வேலையும் வேண்டாம்னு வந்திடுவேன் அதனால நீங்க கவலைப்படாதீங்க. ஆர்யாக்கு இப்போ ஐந்து வயசாகுது அவனுக்கு எட்டு வயசு ஆகிடுச்சுனா கொஞ்சம் மெட்சூரிட்டி வரும் அது வரைக்கும் இந்த மாதிரி வேலை தான்மா நல்லது இங்க வீட்டு வேலைக்கு வரும் பட்டம்மாள் அம்மாவே சமையலுக்கும் பேசிடலாம் மாசம் ஐந்து ஆயிரம் அது நான் தரேன்மா. நீங்களும் அப்பாவும் நிம்மதியா இருங்க" என்று முடிவெடுத்தவளாக சகுந்தலா அம்மாவிற்கு கால் செய்தாள் " சகுந்தலா அம்மா எனக்கு சம்மதம்" என்றாள்." அப்புறம் உன்னோட வீட்டுக்காரருக்கு இதுல பிரச்சனை இல்லையாம்மா? " என்று கேட்டார்." அம்மா அவர் துபாய்ல இருக்காரு ஒன்னும் பிரச்சினை இல்லை" என்று பொய் சொன்னாள்.

நமக்கு மட்டும் மத்த பொண்ணுங்களுக்கு இருக்கிற மாதிரி வாழ்க்கை அமைஞ்சிருந்தா இவ்வளவு கஷ்டம் தேவையா இவ்வளவு பொய்கள் தேவையா என்று தன்னையே கேள்வி கேட்டவளுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை.

மனது எட்டு வருடங்கள் பின்னோக்கி சென்றது. பிரியதர்ஷிணி ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். ப்ளஸ் டூ வில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவளுக்கு இன்ஜினியரிங் சேரனும் என்பது தான் அவளின் குறிக்கோள். ஆனால் அவள் மதிப்பெண் அதிகம் என்றாலுமே அவளுக்கு அரசு இன்ஜினியரிங் காலேஜில் கட் ஆஃப் கம்மியானதால் கிடைக்கவில்லை "சேரிப்பா நான் பிஎஸ்சி படிக்கிறேன்" என்றாள். "இல்லம்மா எங்களுக்கு இருக்கிறது நீ ஒரே பொண்ணு நீ இன்ஜினியரிங் படிக்கணும்னு ஆசைப்பட்ட அதை நிறைவேற்றலனா எனக்கு மனசு நிம்மதியாக இருக்காதுமா" என்றார். இல்லப்பா இன்ஜினியரிங் மட்டும் தான் படிப்புனு இல்லை நான் பிஎஸ்சி கணிதம் எடுக்தக்குறேன்பா" என்றாள்

பெற்றவர்கள் எவ்வளவு சொல்லிப் பார்த்தும் பிரியா பிஎஸ்சியே சேர்கிறேன் என்று பிடிவாதமாக இருந்தாள். சென்னையில் உள்ள அந்த பிரபலமான ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்தாள் பிரியதர்ஷிணி.

பிரியதர்ஷிணி சேர்ந்த முதல் நாள் ரொம்ப பதற்றமாக இருந்தாள் பணக்கார பெண்கள் பெரும்பாலும் படிக்கும் அந்த கல்லூரியில் முதல் நாள் சென்ற போது ராகிங் எதாவது இருக்குமா என்று பயந்தாள் ஆனால் அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என்பதால் நிம்மதியாக படித்தாள் அவளுக்கு கீதா விமலா என்று இரு பெண்கள் உயிர்த் தோழி ஆனார்கள் அவர்களும் இவளைப் போல நடுத்தர குடும்பத்து பெண்கள் தான். சரஸ்வதி இவளைக் கல்லூரிக்கு அனுப்பும் போதே பணக்காரர்கள் கூட சகவாசம் வைக்காதே என்று தான் அறிவுரைத்து அனுப்பினார். அதன்படி இவளும் யாரோடும் ஒன்ற மாட்டாள் அப்படி பட்ட சமயத்தில் தான் ஏழை மாணவிகளுக்கான மற்றும் மதிப்பெண் அதிகமாய் வைத்து இருக்கும் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டம் கொண்டு வந்தார்கள் அந்த பட்டியலில் அவளோடு கீதாவும் விமலாவும் பங்குபெற்றனர் அதுவரை ஒரே வகுப்பில் பயனித்தாலும் மூன்று பேர் படித்தோமா போனோமா என்று தான் இருப்பார்கள். ஸ்காலர்ஷிப் மூவருக்கும் கிடைத்தது அதன்பின் மூன்று பேரும் சேர்ந்தே படித்தார்கள் அரட்டையும் அடிப்பார்கள்.

இப்படியே மூன்று வருடங்கள் முடியும் தருவாயில் வந்தது. பிரியதர்ஷிணி க்கு ஒரு பெரிய பிரைவேட் வங்கியில் காம்பஸில் வேலை கிடைத்தது. வீட்டிலே அனைவருக்கும் சந்தோஷம். அவளுக்கும் பாங்க் வேலை நல்ல வேலை என்று நிம்மதி ஆனாள். செமஸ்டர் எக்ஸ்சாம்ஸ் எல்லாம் முடியும் போது தான் அவளுடைய க்ளாஸ்மேட் ரியா திருமணம் என்று பத்திரிகை யோடு வந்தாள்.

கொடைக்கானலைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள ரியா சென்னையில் இவர்களோடு பிஎஸ்சி பிடித்தாள் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி மூன்று வருடங்கள் படித்தவள் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். கொடைக்கானலில் இருக்கும் பெரும்பாலான எஸ்டேட்ஸ் இவளுடைய குடும்பத்துடையது தான்.

ரியா பிரியா விற்கு நெருக்கமில்லை ஆனால் ரியா ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் பார்க்காமல் நன்றாக பழகுவாள் அதற்கே ரியாவின் மீது அவளுக்கு மிகுந்த மதிப்பு உண்டு.

ரியா அவளுடைய வகுப்புத் தோழிகள் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்து விட்டு அனைவரையும் கண்டிப்பாக வருமாறு அழைத்தாள். மொத்தம் முப்பது பேர் கொண்ட பெண்கள் வகுப்பையே திருமணத்திற்கு அழைத்தாள். அனைவருக்கும் அவளே ரூம் அரேன்ஜ் பண்ணுவதாகவும் கூறினாள்.

முதலில் வரமறுத்த பிரியாவை கீதா மற்றும் விமலா போலாம் போலாம் என்று நச்சரித்துக் கொண்டிருந்தனர். வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் பிரியாவை பொத்தி பொத்தி வளர்த்தனர் அவளுடைய பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் போது சுற்றுலாக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் பிரியாவும் படிப்பு வீடு என்றே இருந்ததால் அவளுக்கு சுற்றுலாவிற்கு செல்வதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. காலேஜில் கூட அனைவரும் சுற்றுலா சென்ற சமயம் இவள் செல்லவில்லை அதற்கே கீதா மற்றும் விமலா இவளோடு கோவித்துக்கொண்டு ஒரு வாரம் பேசவில்லை.

இன்னும் இரண்டு எக்ஸ்சாம் முடிந்தால் கல்லூரி வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற சமயத்தில் தான் அடுத்த மாதம் கல்யாணம் என்று அழைத்தாள் ரியா. கீதா விற்கும் விமலா விற்கும் பெங்களூரில் வேலை கிடைத்தது அவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் டிரைனிங் தொடங்க உள்ளது. பிரியா விற்கும் பெங்களூரில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது ஆனால் அவளின் பெற்றோர்கள் அனுமதிக்க வில்லை. அதனால் சென்னையிலேயே ஒரு பெரிய வங்கியில் வேலை கிடைத்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தாள்.

தான் வரவில்லை என்று எவ்வளவு சொல்லியும் பரிட்சை முடிஞ்ச கையோடு கீதா மற்றும் விமலா பிரியாவின் வீட்டிற்குச் சென்றனர். அவளுடைய பெற்றோர்களிடம் இருவரும் பிரியாவை கொடைக்கானலுக்கு அனுப்புமாறு கெஞ்சினார்கள்.

ஆனால் அவளுடைய அம்மா அசரவே இல்லை பின் சோமசுந்தரத்திற்கு தன் மகளை நினைத்து பாவமாக இருந்தது இதுவரை பிரியா படிப்பை தவிர எதுவும் அனுபவிக்கவில்லை அவள் தோழிகளும் கெஞ்சிக் கொண்டே இருந்ததால் கொடைக்கானல் செல்ல அனுமதித்தார்.
 
Top