All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபதி கோவையின் "மணிமாறனும் மனமாற்றமும்" - ஒரு பக்க சிறுகதை திரி :-

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது நான் எழுதிய முதல் சிறுகதை(2014-இல்).


மணிமாறனும் மனமாற்றமும் :-
============== ==================



மனிதனின் மன ஓட்டங்கள் தான் அவன் இறுதியை தீர்மானிக்கின்றது .

நாம் நமது எண்ண ஓட்டங்களை சீர் செய்வதன் மூலம் நமது பாதை அறத்தை நோக்கி பயணிக்க வழி செய்யலாம். அதற்கு சரியான தூண்டுதல் அவசியமாகின்றது.

அத்தகைய தூண்டுதல் இல்லாமலும் ,வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ‘மணிமாறன்’ என்கின்ற இளைஞனைப் பற்றித்தான் இந்தக் கதை பயணிக்கின்றது.

பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாமலும், மனதளவில் பல சிக்கல்களினாலும் பாதிக்கப்பட்டு, தன்னம்பிக்கையில்லாமல் சென்று கொண்டிருந்த அவனுக்கு, நமது பாரத நாட்டால் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏறபடுகிறது.

கடைசியில்

குற்றவாளியாகக் கைதாகி சிறை செல்கின்றான். அவனுக்கு இரட்டை ஆயுள்தண்டனையை நீதிமன்றம் பரிசாக அளிக்கிறது.

சிறையில் நாட்கள் பல உருண்டோடின.

அவன் தன் வாழ்க்கையின் கடந்தகாலத்தை அசைபோட்டுக்கொண்டே காலத்தை கழிக்கலானான்..

சிறைச்சாலையின் சுவர்கள் அவனுக்கு, வாழ்க்கையிழந்த பலருடைய கொடுமையான வரலாறுகளை படம் பிடித்துக் காட்டியது.

ஆனாலும் மணிமாறனின் மனம் அவன் செய்த குற்றத்தை உணர மறுத்தது.

வருங்காலத்தை அவன் சிறையில் கழிப்பதை விரும்பவில்லை.
ஒவ்வொரு முறையும் அவன் தப்பிப்பதற்கான சந்தர்பத்தை எதிர்நோக்கியிருந்தான்.


ஒரு நாள் உணவு விடுதிக்குச் சென்று விட்டு வரும்போது அவனுடய பார்வை அந்த விடுதியின் பின்னால் இருக்கின்ற உயர்ந்த மரத்தை நோக்கி சென்றது.

அந்த மரத்தின் உயரம், இ்வனை வியப்பில் ஆழ்த்தியது . காரணம் அதன் உயரம் சிறைச்சாலையின் மதில் சுவர்களுக்கு நெருங்கியே இருந்தது.

இவ்வளவு நாள் இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோமே என்கின்ற ஆதங்கம் அவனுள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. இருப்பினும் இவ்வளவு உயரத்தில் ஏறும்போது ,மற்றவர்களின் பார்வை நம்மீது பட்டுவிடுமே என்கின்ற சந்தேகம் எழுந்தது.

ஒரு மார்க்கம் என்னவெனில், மழைக் காலங்களில் மட்டுமே இது சாத்தியம் என்று அவனுடைய உள்ளுணர்வு அவனுக்கு உரைத்தது.

மழை வேண்டி காத்திருக்கும் விவசாயியைப் போல் அவன் ஒவ்வொரு நாளும் காத்திருந்தான்.

சிறைச்சாலையின் செய்தித்தாள்களில் வானிலை அறிக்கையை மட்டும் கவனமாக வாசிப்பான்.

வானிலை ஆய்வு மையத்தின் வார்த்தைகள் பல நேரங்களில் பொய்த்தாலும் நம்பிக்கையோடு காத்திருந்தான்.

அவன் நினைத்தவாறே சில மாதங்களில் வருண பகவான் வழிகாட்டினார். பலத்த சூறைக் காற்றுடன் நாள் முழுக்க பேய் மழை பெய்தது. அதிர்ஷ்ட வசமாக அங்கே கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு கை கலப்பில் சென்று ரத்த ஆறாக ஓடிக்கொண்டிருந்தது.

அந்த சமயம் எல்லோருடைய கண்களும் அந்த சலசலப்பில் இருக்க , இதுதான் சரியான சமயம் என்று நினைத்து உணவு விடுதியை நோக்கி நடை போட்டான் .

மழை விடாது பெய்துகொண்டிருந்தது.

தனது முடிவை மாற்றிக் கொள்ளலாமா ? வேண்டாமா? என்கின்ற கலக்கம் வேறு அவன் மனதில்.

அந்த மரத்தின் உயரம், இவன் மன உறுதியையே குழைத்து விடும் போல் இருந்தது.

இருந்தாலும் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தவன் திடீரென்று மரத்தில் ஏறத் தொடங்கினான் .

அடை மழையின் கோரமும் , மரத்தின் வழுவழுப்பு தன்மையும் அவனுடைய முயற்சியை முட்டுக்கட்டை போடத்துவங்கின.

இருப்பினும் மனம் தளராமல் அவன் ஏறத் தொடங்கினான்.

கடைசியாக அந்த மரத்தின் உச்சியை அடைந்த அவன்,

மதில் சுவருக்கு வெளியே எட்டிப் பார்த்தான்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை மிகப்பெரிய இருண்ட காடு அது.

செய்வதறியாது திகைத்த அவன் அந்த மரத்தின் நாணலைப் பிடித்துக்கொண்டே மதில் சுவரைத் தாண்டி வெளியே குதித்தான்.

மிக உயரத்தில் இருந்து குதித்த அவனுக்கு கீழே இருந்த கற்களும், முற்செடிகளும் அவன் கண்ணுக்கு புலப்படவில்லை போலும்.

அதன் மேல் விழுந்து பல சாறு காயங்களை தன் உடலில் மீது வாங்கிகொண்டு வழியால் துடித்தவாறே தன் ஓட்டத்தை ஆரம்பித்தான்.

வழி நெடுகிலும் எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. மின்மினிப்பூச்சிகளும்,

விட்டில் பூச்சிகளும், மின்னிக் கொண்டு ஒரு வித்தியாசமான ஒலியை எழுப்புகின்றன.

இரவு நேரப்பறவைகள் தன பங்கிற்கு அவனை பயத்தில் உறைய வைக்கின்றது.

போகும் இடம் தெரியாமல் கடிவாளம் போட்ட குதிரை பக்கவாட்டில் எங்கும் திரும்பிப் பார்க்காதவாறு வேகமாக ஓடினான்.

பயத்தால் பல மையில் தூரம் கடந்திருப்பான்.

அதற்குள் இந்த செய்தி சிறை முழுவதும் காட்டுத் தீ போல் பரவி இருந்தது. சிறை அதிகாரிகள் இவனைப் பிடிப்பதற்காக நாலப்புறமும் ஆட்களை அனுப்பினர்.

இந்தக் காட்டுப் பகுதியை மையமாக வைத்து மட்டும் ஒரு தனிப் படை புறப்படுகிறது. சோர்வும் ,மிகுந்த களைப்பாலும், அவனுடைய ஓட்டத்தின்

வேகம் சற்று தளர்ந்தது . களைப்பால் இளைப்பார ஒரு இடம் தேடினான்.

ஒரு மரத்தின் அடியில் சற்று கண்ணயர்ந்தான் . அந்தகாரம் சென்று அதிகாலை புலர்ந்தது. அதிகாலை குயிலின் ஓசையும், பறவைகளின்

சப்தங்களும் அவனை துயில் எழுப்பியது . கண் விழித்த அவன் பயத்தால்

சுற்றும் முற்றும் பார்த்தான் . மானிட காலடி சத்தம் அவனை நெருங்கி வருவதை அவன் உணர்ந்தான் . மரத்தின் மீது ஏறிப் பார்த்த ஒரு நொடி -

அவன் இருதயமே வெடித்து விடும் போல் இருந்தது. ஆம், காவலதிகாரிகள்

தொலைநோக்கிகளோடு செடிகொடிகளின் ஊடே வேகமாகப் பரவி வருவதை அவன் கண்டான். உடனே மரத்தின் இருந்தது குதித்து மீண்டும்

வேகமாக ஓடினான் . காவலர்களின் வேகம் இவனுடைய வேகத்தை விட பன்மடங்கு இருந்தது. ஒரு கட்டத்தில் தொலைநோக்கியின் வாயிலாக இவன் ஓடுவதைக் காண்கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் வேகத்தை

துரிதப்படுத்துகிறார்கள் . அடர்ந்த காட்டின் மறுபக்கத்தை அடைந்த அவன்

அங்கே ஒரு ஆசிரமம் இருப்பதை அறிகிறான் . பல தொலைவுகளை அந்த ஆசிரமம் ஆக்கிமித்திருக்கின்றது ஆசிரமத்தின் உள்ளே மிகப்பெரிய ஜனக்கூட்டம் இருந்தது . இனி நம்மால் ஓட முடியாது , இந்த ஜன சங்கமத்தில் கலந்து தப்பிக்கலாம் என்று முடிவெடுத்தான்.

ஆசிரமத்தின் உள்ளே நுழைகின்றான் .இவனுடைய கிழிந்த சிறை உடையும், உடம்பின் காயங்களையும் பார்த்த ஆசிரம பாதுகாவலர்கள்

இவனை ஆசிரமத்தின் ஆஸ்தான பெரியவரிடம் ஒப்படைக்கின்றார்கள்

பெரியவர் இவனின் தோற்றத்தைக் கண்டு, நடந்தவற்றை யூகத்தால் அறிந்து , இவனை ஒரு அறையில் அடைக்க உத்தரவிடுகிறார் . அந்த

ஆசிரமம் முழுவதும் விசேஷமாக சிறு சிறு அறைகளால் நிரம்பியிருந்தது.

அறை முழுவதும் ஒரே நிசப்தம்.

மணி மாறனின் கை கால்களில் இனம் புரியாத ஒரு நடுக்கம் .

அந்த பெரியவர் நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவாரோ ? எதற்கு நம்மை இங்கு அடைத்து வைத்திருக்கிறார் என்ற பல கேள்விகள் அவன் மனதை அரித்தன .

திடீரென்று அந்த அறையில் இருந்த ஒரு ஒலிபெருக்கியில் இருந்து ஒரு குரல் ஒலித்தது.

அதிர்ந்து போன அவன் அதை உற்று கவனித்தான் .அது அந்த ஆஸ்தான பெரியவரின் குரல். அந்த குரலின் வார்த்தைகள் பின்வருமாறு ,



“ இந்த ஆஸ்ரமத்தின் தனித்தனி அறைகளில், தனியாக அமர்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய வணக்கம் !.

ஒரு மிகப்பெரிய கூட்டத்தின் முன்னே ,மேடையில் நின்று பேசுவதை விட , ஒவ்வொருவரையும் தனித்தனி அறைகளில் வைத்து , எங்களின் கருத்துக்களை உங்களிடம் கொண்டுசேர்ப்பது ஒரு வித்தியாசமான புதிய முயற்சி.

இன்றைய தினம் செப்டம்பர் மாதம் பதினொன்றாம் தேதி.

பொதுவாக இன்றைய தினத்தைப் பற்றி என்னும்போது உங்கள் மனதில்

தோன்றுகின்ற சம்பவம் ,அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு.

பல ஆயிரக்கணக்கான மக்களைப் பழி வாங்கிய அந்த சம்பவம, இன்னும் நம் மனதை விட்டு நீங்காத ஒன்று . தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத்

தாக்குதலுக்குப் பிறகு, வாஷிங்டன் நகரமே சோகத்தில் மூழ்கிய நாள் இந்த நாள் என்றுதான் நமக்கு தோன்றும். ஆனால் இதே நாளில் சில வருடங்களுக்கு முன்பு இன்னொரு தகர்ப்பும் நடந்திருக்கின்றது .

ஆம் 1893 ஆம் ஆண்டு ,செப்டம்பர் திங்கள் 11ஆம் நாள் இந்த உலகமே

வியந்த சர்வ சமய மகா சபை கருத்தரங்கம் நடைபெற்றது. மதங்களுக்கு இடையே நிலவிய வேறுபாடுகளை களைவதற்காக அமெரிக்கா எடுத்த இந்த முயற்சியில் தான் அந்த தகர்ப்பும் நடந்திருக்கின்றது. உலகின் பல்வேறு தேசங்களில் இருந்தது பல சமய போதகர்கள் பங்கேற்றார்கள்.

அந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டவர் யார் தெரியுமா ? வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் . “

இதுவரை விடை தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த மணிமாறன்

மெல்ல மெல்ல , அந்த பெரியவரின் பேச்சில் மறைந்திருந்த நிதர்சனத்தை

நோக்கி தன கற்பனை குதிரையை நகர்த்தினான். . அந்த பெரியவர் தொடர்ந்தார் .

“ மாநாட்டில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தங்கள் மதத்தின் நிறைகளை மிகப் பிரமாண்டமாக , பெருமையாக எடுத்துரைத்தனர்.

அங்கு வந்திருந்தவர்கள் காலையில் இருந்து பல பிரசங்கங்களை தொடர்ச்சியாகக் கேட்டதால், சற்று தளர்ச்சியாகக் காணப்பட்டனர்.

கடைசியில் விவேகானந்தரின் வாய்ப்பு வந்தது .

விவேகானந்தர் அந்த ஒலி வாங்கியின் முன் நின்று பேசலானார் .

அவர் தமது முதல் வார்த்தையாக , “ அமெரிக்க சகோதர சகோதரிகளே ! “ என்று கூறினார் .

maxresdefault-1505105587.jpg

அந்த அவையில் கூடியிருந்த அத்தனை அறிஞர்களும் எழுந்து நின்று வரவேற்ற முதல் இளைஞன் சுவாமி விவேகானந்தர் என்பதில் இந்தியர்களாகிய நம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும் என்று அந்த பெரியவர் கூறினார்.

அங்கே அமர்ந்திருந்த அனைவரும் ஆச்சர்யத்தின் எல்லைக்கே போய்விட்டனர் நம் மணிமாறனையும் சேர்த்து .

நமது நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை என அனைத்தையும் அமெரிக்க மண்ணில் அரங்கேற்றி விட்டார் விவேகானந்தர் .

விவேகானந்தரைப் பற்றி முதன்முறையாக கேள்வியுறுகின்றான் மணிமாறன்.

“எந்த ஒரு நாட்டில் ஆன்மிகம் கீழ்நோக்கி செல்கின்றதோ அப்பொழுதே அந்த நாட்டின் அழிவு ஆரம்பமாகிறது .

தோல்வியை கண்டு துவண்டு விடாதே .

உன்னிடம் மலைபோன்ற உறுதியிருந்தால் பாம்பின் விஷம் கூட உன் முன் சக்தியற்றதாகிவிடும்.

விவேகானந்தரின் ஒவ்வொரு வார்த்தையும் ,மணிமாறனின் உடம்பில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது .

நமது நாட்டின் தொன்று தொட்ட பாரம்பரியத்தை அந்த பெரியவரின் வாயிலாக அவன் அறிந்து கொல்கின்றான்.

இவ்வளவு பெருமையுள்ள நமது நாட்டை நாம் கட்டாயம் நேசிக்க வேண்டும்.

இன்று நம் உலகில் பயங்கரவாதம் தலை தூக்கியிருப்பதற்கு, காரணம் என்ன? .மக்களிடையே சகோதரத்துவம் இல்லாமல் இருப்பதே காரணம்.

அந்த சகோதரத்துவத்தை வலியுறுத்தி , அன்றே அமெரிக்காவில் சிகாகோ சர்வ சமய மாநாட்டில், ‘தனி ஒரு இந்தியனாக’ அவர்களுக்கு உணர்த்தினார் .

முன்பு இந்தியாவைப் பார்த்து கை அசைத்த நாடுகள் அவரின் வீர உரையை கேட்ட பிறகு அதன் மூக்கின் மேல் விரல் வைக்கும் காலம் வந்து விட்டது.

நாம் அனைவரும் இந்தியர்களாக இருக்க பெருமை கொள்ள வேண்டும் . நமது நாட்டின் பண்பாடுகளையும் , மரபுகளையும் படியுங்கள். முடிந்தால் மற்றவருக்கு போதியுங்கள்.

மணிமாறன் முதன் முதலாக தன்னை மூளைச்சலவை செய்த தீவிரவாத இயக்கத்தின் மறுபக்கத்தை பற்றி யோசிக்கலானான் .

தன் தவறை மெல்ல மெல்ல உணர்ந்த அவனுக்கு சிறைச்சாலையின் நினைவுகள் வெறும் வேடிக்கையாகத் தான் தோன்றியது.

அளப்பரிய பிரகாசம் அவன் உள்ளத்தையும், உடலையும் ஆக்கிரமித்திருந்தது. வருங்கால வாழ்கையைப்

பற்றிய கவலை துளி கூட இல்லாத அவன் , காவலர்களிடம் சரணடைந்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டான்.
இறுதியாக அந்த பெரியவர் ,


நமது நாட்டின் கலாசாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ? ராமாயணம் மற்றும் மகாபாரத போன்ற இதிகாசங்களை படியுங்கள் . வருங்கால சந்ததிகளுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக திகழுங்கள் , இது தான் எங்கள் ஆசிரமத்தின் அன்பான வேண்டுகோள் ! மற்றும் மதிய உணவு உங்களுக்காக தயாராகி விட்டது , பக்தர்கள் பயன்படுத்திகொள்ளுங்கள் ! நன்றி வணக்கம் ! என்று தன் உரையை முடித்தார்.

பொதுமக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் அறையை விட்டு வெளிய வந்தனர் .

மணிமாறனின் அறை திறக்கப் பட்டது .

மணிமாறன் வெளியே வருகின்றான். காவலதிகாரிகள் அந்த ஆசிரமப் பெரியவரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

பிரகாசமான முகத்தோடு மணிமாறன் காவலதிகாரிகளின் முன்னே தன்னுடைய கையை நீட்டிக்கொண்டு சரணடைய வந்துகொண்டிருக்கின்றான் .

காவலதிகாரிகளுக்கு ஒரே அதிர்ச்சி. இவ்வளவு நேரம் தங்களை அலைக்கழிக்க வைத்துவிட்டானே என்கிற கடுங்கோபத்துடன் அவனை அடித்து இழுத்து செல்ல எத்தனிக்கின்றனர் .

அந்த அடிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மணிமாறன் அந்த ஆஸ்தான பெரியவரின் ஒளி வீசும் முகத்தைப் பார்த்தான் .

அந்த பெரியவர் மணிமாறனைப் பார்த்து புன்னகைகிறார். பதிலுக்கு மணிமாறனும் ஆத்ம திருப்தியால் மகிழ்ச்சிப் புன்னகையை வெளிப்படுத்துகிறான்.

காவலர்கள் அவனை சிறைச்சாலையை நோக்கி இழுத்துச் செல்கின்றனர் .அந்த பெரியவரின் வார்த்தைகளை அசை போட்டுக்கொண்டே அவன் முன் செல்கின்றான் .


download (1).jpgdownload.jpg

- முற்றும் -
பூபதி -கோவை .
boopathycovai@gmail.com
7299543057
 
Last edited:

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice story .....

“எந்த ஒரு நாட்டில் ஆன்மிகம் கீழ்நோக்கி செல்கின்றதோ அப்பொழுதே அந்த நாட்டின் அழிவு ஆரம்பமாகிறது .
especially this line....

thank u for giving such a wonderful story...
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice story .....

“எந்த ஒரு நாட்டில் ஆன்மிகம் கீழ்நோக்கி செல்கின்றதோ அப்பொழுதே அந்த நாட்டின் அழிவு ஆரம்பமாகிறது .
especially this line....

thank u for giving such a wonderful story...
Thanks sathya.. this is one of the famous quote of swami vivekananda...
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை அருமை பூபதி. உண்மையில் விவேகானந்தர் மதத்தை கடந்தவர். அவர் ஆன்மீகத்தை நல் அறத்தை தான் போதித்தார். ஒரு நாளும் அவர் அவருடைய மதத்தை போதித்தது இல்லை. எனக்கு மிகவும் பிடித்தவர்களுள் இவரும் ஒருவர். அருமையான கதை. படிக்கும் போது ஒரு உத்வேகம் நமக்கும் தோன்ற தான் செய்கிறது. நன்றி.
 

BoopathyCovai

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை அருமை பூபதி. உண்மையில் விவேகானந்தர் மதத்தை கடந்தவர். அவர் ஆன்மீகத்தை நல் அறத்தை தான் போதித்தார். ஒரு நாளும் அவர் அவருடைய மதத்தை போதித்தது இல்லை. எனக்கு மிகவும் பிடித்தவர்களுள் இவரும் ஒருவர். அருமையான கதை. படிக்கும் போது ஒரு உத்வேகம் நமக்கும் தோன்ற தான் செய்கிறது. நன்றி.
நன்றி வான்மதி.. என்னுடைய பிற நாவல்களையும் படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Top