All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகளிர் மட்டும் Version 2.o Story Thread

Status
Not open for further replies.

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் ஹாய் செல்லக்குட்டீஸ்:love::love::love:,


இன்னைக்கு மகளிர் தினம்ல நான் வாழ்த்து சொல்லலைனா எப்படி அதான் ஓடோடி வந்துட்டேன்.(வந்துட்டாயா வந்துட்டாயா னு வடிவேலு ஸ்டைல்ல நீங்க பொலம்புறது கேக்குது..நீங்க எங்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது கண்ணா இதான் விதி:LOL::LOL:)..ஓகே ஓகே வாழ்த்தனும் ல. அத பண்ணிட்டு வரேன்...

இன்னைக்கு ஸ்கூல கட் அடிக்கிறதுக்கு வயத்த வலினு சொல்லலாமா இல்ல காய்ச்சல்னு சொல்லலாமா என தீவிரமாக திட்டம் தீட்டும் மகள்களே(மழைலைகளே),
யூ கேம் ல எடுத்தத போஸ்ட் பண்ணலாமா இல்ல B612 ல எடுத்தத போஸ்ட் பண்ணலாமா எத போட்டா லைக்ஸ் பிச்சுக்கும் என மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கும் பருவ மங்கைகளே,
கத்திரிக்காய் சாம்பார் வைக்கலாமா இல்ல முருங்கைக்காய் சாம்பார் வைக்கலாமா சிகப்பு சேலை வாங்கலாமா இல்லை பச்சையா ?? என ஒரே நேரத்தில் ஓராயிரம் மல்டிடாஸ்க் செய்யும் மாஸ்டர் பிரைன் கொண்ட மனைவிமார்களே,
அய்யோ இன்னைக்கு என்ன வம்ப விலைக்கு வாங்கிட்டு வர போறாங்களோ என தங்கள் குழந்தைகளை நினைத்து ஆல் டைம் அலர்ட்டாக இருக்கும் அன்னைமார்களே,


அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.(இதெல்லாம் சும்மா ஜுஜுபி க்கு நீங்க எல்லாம் சாதனையாளர்கள்னு எனக்கு தெரியும் ஓகே வா இத படிச்சுட்டு என்னை முறைக்க கூடாது)

எல்லா இடத்துலயும் மகளிர் தின விழாவ நல்ல கொண்டாடுறாங்களே நம்ம இப்படி இருந்தா நம்ம டார்லிங்க்ஸ் லாம் ஃபீல் பண்ணுவாங்கனு என வேகமா என் மூளை கிட்ட போய் "மைண்டே மைண்டே மக்கள் லாம் ஜம்முனு மகளிர் டே கொண்டாடுறாங்க நம்ம மட்டும் ஏன் கம்முனு இருக்க? எதாச்சும் ஐடியா குடுனு சொன்ன என் மைண்ட் உம்முனு இருக்கு" என்ன டா இது நம்ம ஒன்னும் பண்ணலைனா நம்ம டார்லிங்க்ஸ் ஃபீல் பண்ணுவாங்களேனு அங்க இங்க சுட்டு சர்ப்ரைஸோட வந்துட்டேன்ல "குமுதா ஹேப்பி அண்ணாச்சி!!!" (ரோபொ சங்கர் மாதிரி அண்ணாச்சி இவ ஐடியாலாம் சுட்டுட்டு வந்துருக்காலாம் போலிஸ் கேஸ் ஆக போகுதுனு பயப்பட வேண்டாம் இது என் மனசுகிட்ட இருந்து சுட்டுட்டேன் சொ காபிரைட்ஸ் கேட்டு யாரும் வரமாட்டாங்க)

ஓகே என்ன சர்ப்ரஸ்னு தான கேக்குறீங்க உங்களுக்காக என்னோட அடுத்த கதை கொண்டு வந்துட்டேன்:love::LOL:(ஒன்னே முடிக்கலை அடுத்த தலைவலியானு தான புலம்புறீங்க ) ரொம்ப பயப்படாதீங்க இது இப்போ எழுத போறது இல்ல இன்னைக்கு சும்மா டைட்டிலும் கதையோட இன்ட்ரோ மட்டும் தான்.பட் ஈசியா உங்க கிட்ட அத சொல்லிட்டா கிக் இருக்காதுல..சோ அது மாலை தான் சொல்லுவேன்..நீங்க அது வரைக்கும் அது எந்த மாதிரி ஸ்டோரி னு உங்களுக்கு தோணுறத Fun unlimited threadல போடுங்க கரெக்ட்டா கெஸ் பண்ணுறவங்களுக்கு ஒரு பரிசு இருக்கு:p:p...

ஓகே கொஞ்சம் சீரியசாவும் பேசுவோமா( அதெல்லாம் உனக்கு வருமா??? ஹிஹி நான் இல்ல நீங்க தான் பேச போறது)..நீங்க உங்க ரியல் லைப் ல பாத்த சாதனைப் பெண்களை பத்தி சொல்லணும்னா சொல்லுங்க இல்லனா பெண்ணியத்தை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது தோணுறத சொல்லுங்க உங்களுக்கு புதுசா வேற எதாச்சும் ஐடியா இருந்தாலும் சொல்லுங்க ...எல்லாத்தையுமே fun thread லயே சொல்லுங்க..ஏன்னா புதுசு புதுசா thread ஓபன் பண்ணி database ஃபுல் பண்ணிட்டேன்னு அட்மின் பிராது குடுத்துட்டா ஸ்ரீமா என்ன சைட்ட விட்டு ஓதுக்கி வைச்சுருவாங்க:ROFLMAO::ROFLMAO: ...

ஓகே ஓகே கடைசியா இந்த கொடுமையும் படிச்சுட்டு போங்க

மழலை சிரிப்பால் மனதை மயக்கி
பருவம் வந்ததும் பிரிந்து செல்லும்(இடத்தால் மட்டும்)
மகளாய்,
துன்பம் என்று வந்த போது தோள் குடுத்து
தவறு செய்த போது கண்டித்து நல்வழி படுத்தும்
தோழியாய்,
வாழ்க்கை துணையாய் வந்து முள் பாதைகளையும் தன் அன்பால் மலர் பாதையாய் மாற்றி வாழ்வெங்கும்
வழித்துணையாய் கூடே வரும்
மனைவியாய்,
பத்துமாதம் கருவறையிலும் வாழும் நாட்கள் யாவும் மனதிலும்
பிள்ளைகளை சுமந்து அன்பில் நிமிர்ந்து நிற்கும்
அன்னையாய்,
இப்படி யாதுமாகி வாழ்க்கையை சிறப்பித்து கொண்டிருக்கும்
அனைத்து தாய்குலங்களுக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.


நன்றிங்கோ:love::love:

womansday1.jpg
 
Last edited:

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் டார்லிஸ்:love::love:,

சஸ்பென்ஸ் ஓவர்...கதை டைட்டில் மகளிர் மட்டும் Version 2.o நீங்க சொன்ன மாதிரி கனமான கதைலாம் இல்ல ஜாலியான கதை..உங்க வீட்ல நடக்குறதை கொஞ்சம் கமெடியா சொல்ல போறேன்..ரொம்ப பயப்படாதீங்க இப்போ இல்ல. எப்படி டைட்டில சர்வதேச மகளிர் தினத்தன்னைக்கு வெளியிட்டேனோ கதை டீஸர் இன்னொரு சர்வதேச உலகமே கொண்டாடுற தினத்தன்னைக்கு தான் வெளியிடப்படும்.. அப்படி என்ன தினம்னு கேக்குறீங்களா ஹிஹி என்னோட பிறந்த நாள் தான்:LOL::LOL::LOL:...

ஓகே இந்த கதையோட ஸ்பெஷல் ஐட்டமே நீங்க எல்லாரும் தான் அதுல வர போறீங்க..யெஸ் இதுல வர கேரக்டர் எல்லாமே என்னோட டார்லிஸ் நீங்க தான்.. என்ன மாதிரியே பேர் மாற்றம் செய்யனும் இந்த பேர கதைல யூஸ் பண்ண வேணாம்னு சொல்லுறவங்க ping me ...நீங்க எல்லாம் வரப்போ நான் வராம இருப்பேனா நானும் வருவேன் பட் குட்டி கெஸ்ட் அப்பியரன்ஸ் தான் நீங்க தான் ஹீரோயின்ஸ்:love::love::cool::cool:....

நம்பி வாங்க சந்தோஷமா போங்க:D
:smiley36:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க????

ஹேப்பி ஹேப்பி நண்பர்கள் டே!!!!

நம்ம எல்லா நண்பர்கள் சேர்ந்து கும்மியடிக்கப் போற இந்த கதைக்கு நண்பர்கள் தினத்தன்னைக்கே முதல் டீசரை இறக்கலாம்னு வந்துட்டேன்..

முதல்லையே சொன்ன மாதிரி நீங்க தான் ஹீரோ ஹீரோயின்ஸ், பட் உங்க உண்மையான பேர் இதுல போட மாட்டேன், அந்த அந்த கேரக்டரை வச்சு நீங்களே அது யாரு யாருன்னு கெஸ் பண்ணுங்க!!! லெட்ஸ் சீ யார் உங்களை நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னு பார்க்கலாம்..

சரி வாங்க டீசருக்கு போகலாம்...




"ஹேய் லாவ்ஸ் எங்க அந்த குரங்கு கூட்டம் இன்னும் ஃபைவ் மினிட்ஸ் தான் இருக்கு" என பதற்றமான குரலில் லாவ்ஸ் எனப்படும் லாவண்யாவிடம் வினவிக் கொண்டிருந்தாள் இலக்கியா.

"எனக்கு என்ன தெரியும் எங்கயாச்சும் நிஜமான குரங்குக கூட ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கும் ஹாஹாஹா" என சிரித்துக் கொண்டே லாவண்யா பதிலளிக்க, அந்த நடுநசியில் அவளின் சிரிப்பு இலக்கியாவிற்கு ஒருவித பயத்தைத் தோற்றுவித்தது

எனவே அவளிடம் ,"ஹேய் நீ ஒன்னு பேசிட்டு சிரி இல்லை சிரிச்சுட்டு பேசு.. இப்படி ரெண்டையும் ஒரே நேரத்துல பண்ணி என்னை பயமுறுத்தாம அவங்களை போய் தேடு" எனக் கூற,

அதற்கும் சிரித்த லாவண்யா ,"சரி சரி" எனக் கூறிக்கொண்டே நகர சரியாக அப்போது மரத்திலிருந்து குதித்தாள் அந்த குரங்கு கூட்டத்தின் முதல் குரங்கு மெலினா.

அவள் குதித்ததில் பயந்து போன இருவரும் , அங்கு சிரித்துக் கொண்டிருந்த மெலினாவை எரித்து விடுவது போல் பார்க்க, அவளோ அதை தூசு போல் தட்டிவிட்டு ,"ஆமா என்ன இன்னும் ஒரு பொறுப்பே இல்லாம இங்க நிக்குறீங்க ரெண்டு பேரும்.. இன்னும் த்ரீ மினிட்ஸ் தான் இருக்கு .. அப்பறம் முக்கியமான விஷயம் எல்லாம் முடிஞ்சதும் மறக்காம ட்ரீட் வச்சிருங்க ரெண்டு பேரும்" என கூறிக்கொண்டே அவள் முன்னால் நடக்க,

"குட்டிக் குரங்கே குரங்குன்னு சரியா ப்ரூவ் பண்ற!! ட்ரீட் தான நீ வீட்டுக்கு வா வச்சிரலாம் " என தன் ஆஸ்தானா டயலாக்கை கூறிய இலக்கியா அவளைப் பின் தொடர்ந்து செல்ல, லாவண்யாவும் சிரித்துக் கொண்டே அவர்களை பின் தொடர்ந்தாள்.

மூவரும் நடந்து கொண்டே அந்த அருவி கொட்டும் இடத்திற்கு அருகில் வந்துவிட,அப்போது திடீரென அகோரமான முகத்தைக் கொண்ட ஒரு மாஸ்கை அணிந்து கொண்டு அவர்கள் எதிரே தோன்றினாள் ரித்தி எனப்படும் கிருத்திகா.

மூவருக்கும் ஒரு நிமிடம் மூச்சே நின்று விட, அப்படியே சிலையாய் நின்றனர்.

அவர்களின் தோற்றத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் முகமூடியை கழட்டிய ரித்தி ,"ஹாஹாஹா ஹாஹா இதுக்கெல்லாம் பயந்துட்டிங்களே ஹய்யய்யோயோ" என விழுந்து விழுந்து சிரிக்க,

"அடியே பேய் குட்டி நீ மாஸ்க் போடாம வந்திருந்தாலே நாங்க பயந்திருப்போம் இதுல இது வேற எதுக்கு" என லாவண்யா கடுப்புடன் அதை பிடுங்கி வீச,

ரித்தியோ இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தாள்.

'சரியான பைத்தியக்கார கும்பல் கூட என்னை கோர்த்து விட்டுட்டியே பெருமாளே' என புலம்பியது சாட்சாத் நம் இலக்கியாவே தான்.

பின் நால்வரும் சேர்ந்து அங்கு மின் விளக்குகளாலும் மலர்களாலும் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த அந்த இடத்தை அடையும் போது அங்கு கேக்கையே வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியைக் கண்டனர்.

'அய்யோ இவ கட் பண்றதுக்கு முன்னாடியே எடுத்து சாப்பிட்றுவாளே முதல்ல கேக்கை இவகிட்ட இருந்து காப்பாத்தனும்" என நினைத்த மெலினா ," அஞ்சு குட்டி இந்த தண்ணீ இருக்கே அதோட கெமிக்கல் ஃபார்முலா என்ன??" எனக் கேட்க,

பளீச் என ஸ்விட்ச் போட்டது போல் அஞ்சலியின் முகம் ஒளிர்ந்தது , வேகமாக மெலினா அருகில் வந்த அஞ்சலி "இதோட ஃபார்முலா h2o என ஆரம்பித்து அதை வைத்து செய்யும் கெமிக்கல் ரியாக்ஷன் தொடங்கி அங்குள்ள மரம் செடி கொடி என அவைகளின் வரலாற்றை கூற ஆரம்பித்து விட,

மற்ற மூவரும் மெலினாவைப் பார்த்து 'செத்தான் சிவநாண்டி' என வாயை மூடி சிரித்துக் கொண்டிருந்தனர்.

கைகளில் மலர்களையும் இலைகளையும் வைத்து செய்த க்ரீடத்தை எடுத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்த சைத்தன்யா அவர்களின் தலையில் அதை மாட்டிவிட்டு அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க, "இவளுக்கு வேற வேலை இல்லை" என அவள் மண்டையிலே கொட்டியவர்கள் ," எங்க நேஹா, அன்பு, மலர், கயல் அப்பறம் முக்கியமா நம்ம காது பேபி?" எனக் கேட்க,

"நேஹா 'சொம்புல' தண்ணி எடுத்துட்டு வர போய்ருக்கா" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் தலையில் அந்த ஜில்லென்ற தண்ணீரால் அபிஷேகம் செய்தாள் நேஹா.

சைத்தன்யா அவளை அடிக்கத் துரத்த, அங்கு வந்த மலர் ," இன்னும் 30 செகன்ட்ஸ் தான் இருக்கு" என எல்லார் கவனத்தையும் திருப்ப,

அனைவரும் காது பேபியைத் தேடினர்.

அப்போது அந்த மரத்தின் நடுவே இருந்து கயலுடன் நடந்து வந்த காது பேபியைக் கண்டு முதலில் திகைத்த அனைவரும் பின் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அங்கே காட்டுவாசி போய் அவருக்கு உடைஅலங்காரம் செய்து தலையில் பெரிய க்ரீடத்தையும் வைத்து விட்டு இரண்டு பக்கமும் இரண்டு பாதுகாவலர்கள் போல் நடந்து வந்து கொண்டிருந்தனர் அன்பழகியும், கயல்விழியும்.

மூவரும் அங்கே வருவதற்கும் மணி பன்னிரெண்டு ஆவதற்கும் சரியாக இருக்க, அனைவரும் கோரசாக ,"ஹேப்பி பேர்த் டே காது பேபி அன்ட் ஹேப்பி ஃப்ரெண்ட்ஷ்ப் டே" என அந்த காடே அதிரும் வகையில் கத்தியவர்கள் பின் தங்கள் கையில் வைத்திருந்த மலர்களை அனைவரின் மேலும் தூவி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதன்பின் கேக்கை வெட்டி அதை சாப்பிடாமல் ஒருவர் முகத்தில் இன்னொருவர் பூசி மகிழ்ந்து , பாட்டு கூத்து கேலி என உலகத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் அந்த நிமிடத்தை அனுபவித்து தங்களுக்கு பிடித்த வகையில் கழித்துக் கொண்டிருக்க, தன் போனை செல்பி ஸ்டிக்கில் பொருத்திய மெலினா அதை வீடியோ மோடுக்கு மாத்தி விட்டு அனைவரிடமும் ,"இப்போ நாம எப்படி இருக்கோம்" எனக் கேட்க,

அனைவரும் கோரசாக,"சந்தோஷமா " எனக் குரல் கொடுத்தனர்,

"எப்படி இருக்கோம்" என அவல் மீண்டும் கேட்க,

"சந்தோஷமாஆஆஆ!!!" என இன்னும் சப்தமாக கத்தினர்,

அவள் மீண்டும் ,"எப்படி இருக்கோம்???" எனக் கேட்க,

இந்த முறை அந்த காட்டையே அதிர வைக்கும் வகையில் ,"சந்தோஷமாஆஆஆஆஆஆஆ இருக்கோம்!!" என முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அவர்கள் கத்த, அந்த வீடியோவை சேமித்து வைத்துக் கொண்டாள்.

அவர்கள் முகம் முழுக்க, சாக்லேட் க்ரீமோடு அந்த இருட்டில் பார்ப்பதற்கே பயமாக இருந்தாலும் அவர்கள் அனைவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவர்களை பேரழகிகளாய் காட்டியது.

சிரிப்பு தான் உலகிலே அழகான ஆபரணம் என்ற வாசகம் இங்கு நிஜமாகியது, உலகில் யாரைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இந்த வாழ்க்கை தாங்கள் வாழ்வதற்கே என சிரித்து அருவியில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தவர்களின் சந்தோஷத்தைப் பார்த்து அந்த இயற்கை கூட பொறாமைப் பட்டது!!!!!






இதுல இருக்கவங்களை மோஸ்ட்லி கெஸ் பண்ணியிருப்பீங்க, இப்போதைக்கு இதுல யார் யார் இருக்கான்னா

@Puneet
@Chitra Balaji
@Sanjana rishi
@fathima nuhasa
@Hema Sriram
@Saranya srinivas
@Poornima
@Thoshi
@Numa
@வாசுகி
@Mithu😍

சோ இவங்கெல்லாம் இதுல யார் யார்னு கெஸ் பண்ணுங்க, அப்பறம் இன்னும் கமென்ட்ஸ் பண்ண கவிதாக்கா, பானுக்கா, தனு, கண்ணம்மாக்கா,நிலா பேபி இவங்களை பத்தி எனக்கு இன்னும் ஒன்னுமே தெரியாததால டீசர்ல போடலை சோ கோச்சுக்காதீங்க.. யூடி போடுறதுக்குள்ல உங்களை பத்தி தெரிஞ்சுக்கிறேன் பேபிஸ்...

அப்பறம் டீசர் எப்படி இருந்துச்சு , கதையை படிப்பீங்களா நீங்களும் இந்த கதையில வரணும்னு நினைக்கிறவங்களும் கமென்ட்ஸ் பண்ணுங்க ..ஐ வில் பி வெய்ட்டிங்க்!!!

friendship-day_feature.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top