All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லக்குட்டீஸ்:love:,

என்னோட முதல் கதை இது..எல்லாரும் எனக்கு ஆதரவு தருவீங்கனு நம்புறேன்.எதாச்சும் தப்பு இருந்துச்சுனா அதையும் தயங்காம சொல்லுங்க திருத்திக்கிறேன்.என்னை நம்பி இந்த கதை எழுத த்ரெட் ஆரம்பித்து கொடுத்த ஸ்ரீமா க்கு மிக்க நன்றி.இந்த கதை உங்களுக்கு பிடிக்கும்ங்குற நம்பிக்கைல இதோ முதல் அத்தியாயத்தை பதிவிடுறேன்.நன்றி :D:D
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாளைக்கு எபில இருந்து ஒரு குட்டி டீஸர்:love::love:

"ப்ரோ swiggy or zomato??? சீக்கிரம் சொல்லு..ஆல்ரெடி பசி தாங்காம என்னோட வயிறு உள்ளிருக்க குடல் ,குந்தானி எல்லாத்தையும் குஸ்கா மாதிரி சாப்பிட ஆரம்பிச்சிருச்சு..என்னையே சாப்பிட்டு அது ஏப்பம் விடுறதுக்குள்ள சீக்கிரம் என்ன ஆர்டர் பண்ணன்னு சொல்லு" என கார்த்திக் ஹரியிடம் வினவினான்.

"கொழுந்தனாரே நான் வேணும்னா சமைக்கட்டுமா" என ஹரியை முந்திக் கொண்டு பதிலளித்த ஸ்ரீயை கண்டு கையெடுத்து கும்பிட்ட கார்த்திக்,"நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் அண்ணியாரே..காலைல நீங்க பாலை பொங்க வச்சதுல இருந்தே நீங்க சமையல்ல எவ்வளவு பெரிய புலின்னு எனக்கு தெரிஞ்சிருச்சு..உனக்கு சோதனை எலி வேண்டும்னா உன் புருஷன வச்சுக்கோ..என்னையும் என் பொண்டாட்டியையும் ஆளை விடு..நாங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கலை" என் வர்ஷூவை பார்த்து ஏக்கமாக கூறினான் கார்த்திக்.

அவனை முறைத்த வர்ஷூ,'அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வந்து நிக்கிது பக்கி' என முனுமுனுத்தவள்,"எதுக்கு வெளியில ஆர்டர் பண்ணனும் ,அதான் நான் இருக்கேன்ல நான் சமைக்கிறேன்" என்று கார்த்திக்கை பார்க்காமல் கூறியவளை கண்டு வாயை பிழந்த கார்த்திக், ஹரியை பார்த்து நக்கலாக ,"டேய் அண்ணா பார்த்தியா?? என் பொண்டாட்டிய ..அவ சமைக்கிறாளாம்..சமைக்க தெரிஞ்ச பொண்டாட்டி கிடைக்கலாம் ஒரு குடுப்பனை வேண்டும் டா.. உனக்குலாம் அது இந்த ஜென்மத்துல கிடைக்காது..

'கோபாலன் படைச்சான் என் கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்
என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்'" என ஹரியிடம் தொடங்கி வர்ஷூவிடம் முடித்தவனை கொலைவெறியுடன் நோக்கியவள்,"உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் அப்பாவை பேர் சொல்லி கூப்பிட்டதும் இல்லாம,அவன் இவன்னு வேற சொல்லுவ??மவனே என் கிட்ட மாட்டாமையா போவ அப்போ நீ கைமா தான் டி" என அவனை எச்சரித்தவள் ,"நான் போய் சமைக்கிறேன்" என பொதுவாக அனைவரிடமும் சொல்லிவிட்டு எதிரில் இருந்த தங்கள் ஃப்ளாட்டிற்கு சென்றாள்.


அவள் போவதையே ஆவென்று பார்த்திருந்த ஸ்ரீயின் வாயை மூடிய கார்த்திக்,"ரொம்ப பொறாமை படாதீங்க அண்ணியாரே!!! அப்பறம் என்னோட வைரக்கட்டிக்கு எதாச்சும் ஆய்ரப் போகுது..சரி என் ஜிங்கிலி அங்க தனியா கஷ்ட பட போறா நான் போய் ஹெல்ப் பண்ணிட்டு வரேன்..பார்க்க பாவமா வேற இருக்கீங்க சோ இன்னைக்கு மட்டும் உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என பெருந்தன்மையாக கூறிய கார்த்திக்கை ஸ்ரீ கொலை வெறியுடன் பார்க்க, அவள் கணவனோ ,'எல்லாம் உன்னால தான்..காலையில ஒரு பால் காய்ச்சுறேன்னு இப்படி இந்த பன்னாடை எல்லாம் என்ன காய்ச்சுற அளவுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட..' என அவளை பாசப் பார்வை பார்த்தவன்,


"ஓவரா ஆடாத டா..எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ என் பொண்டாட்டியும் நல்லா சமைச்சு எனக்கு போடுவா" என மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசியவனை கண்டு,"வாய்ப்பில்லை ராஜா" என கார்த்திக் கிண்டலடித்தான்.

"இதோ பார் உன் போன்ல இன்னைக்கு ரிமைண்டர் போட்டு வச்சுக்கோ இன்னும் எண்ணி ஒரே மாசத்துல உன் பொண்டாட்டிய விட நல்லா சமைச்சு,உன் வாயலையே எனக்கு சமைச்சு கொடு ஸ்ரீனு சொல்ல வைக்கிறேன்..இது என் புருஷன் மேல சத்தியம்..அது வரைக்கும் உன் பொண்டாட்டி சமைக்கிறது ஒன்னும் எங்களுக்கு வேண்டாம்" என ஹரியின் உயிருக்கே உலை வைத்தாள் அவனின் தர்மபத்தினி.

'அட சனியன் பிடிச்சவளே..நீ பணயம் வைக்க என் உயிர் தான் கிடைச்சுச்சா' என ஹரி நொந்து கொள்ள,

"நல்ல சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டேன்னு ஃபீல் பண்ண போறீங்க...உங்க தலையெழுத்து அதான்னு இருக்கப்போ யார் மாத்த முடியும்..உங்களுக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்..அண்ட் ப்ரோ இப்பவே உன்ன நல்லா பார்த்துக்கிறேன் டா ..இன்னும் ஒரு மாசம் கழிச்சு இருப்பியோ இருக்க மாட்டியோ..உனக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் டா அண்ணா " என்று கூறியவன் சிட்டாக தன் வீட்டிற்கு பறந்து விட்டான்.

தன் வீட்டினுள் நுழைந்த கார்த்திக் ,சமயலறையை எட்டிப் பார்க்க அங்கு வர்ஷூ தீயாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அதைக் கண்டு மனைவியை மனதிற்குள் மெச்சியவன்,'உனக்கு சமைக்க தெரியும்னு இத்தனை நாளா தெரியாம போச்சே என் சர்க்கரைக் கட்டி!!!!' என கொஞ்சிக் கொண்டான்.

இவன் வந்துவிட்டதை உணர்ந்த வர்ஷூ,"வந்துட்டியா !!! உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..பூரி செய்யலாம்னு எல்லாம் ரெடி பண்ணிட்டேன்..ஒரே கச கசன்னு இருக்கு போய் குளிச்சிட்டு வந்துருறேன்..நீ என்ன பண்ற பூரியை குக்கர்ல வச்சிருக்கேன் 3 விசில் வந்ததும் ஆஃப் பண்ணிரு மறந்துராத" என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

முதலில் ஒன்றும் புரியாமல் முழித்தவன் புரிந்த பின்போ,"என்னாதூஊஊ பூரிய குக்கர்ல வச்சிருக்கியாஆஆஆ!!!!!" என அதிர்ந்து போய் அங்கேயே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் கார்த்திக்....

20190404_184717.jpg
 
Last edited:

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பின் குறிப்பு:

நேயர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க,வர்ஷூவிடம் கேட்டு குக்கரில் பூரியை செய்வது எப்படி என்பதை இங்கு கூறப் போகிறேன்..

தேவையானவை:

1.கோதுமை மாவு,(எந்த மாவு கைக்கு சிக்குதோ அது கூட ஓகே)
2.தண்ணீர்
3.உப்பு(உப்பு மாதிரி என்ன இருந்தாலும் ஓகே .for example.பெருங்காயம்,அஜினமோட்டோ,சோடாப்பூ)
4.உருளைக் கிழங்கு.
5.கீரை
6.அனைத்து விதமான கலர் கலர் பொடிகள்(கோலப் பொடி இருந்தா கூட ஓகே)


செய்முறை:


முதலில் அடுப்பை பற்ற வைக்கவும்.

அதன்பின் குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

பின் கோதுமை மாவை பால் மாதிரி உருட்டி அதில் போடவும்..சிறிது நேரம் கழித்து உருளைக் கிழங்கை கோதுமை பால் சிதைந்து விடாமல் உள்ளே போடவும்.

அதைத் தோடர்ந்து உப்பு,கலர் பொடிகள் போட்டு விட்டு இறுதியாக கைக்கு சிக்கிய பச்சை கலர் இலைகளை உள்ளே போட்டு கிண்டி விட்டு குக்கர மூடி வெய்ட்டரை போடவும்..சரியாக மூன்று விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவு,

10 நிமிடம் கழித்து சுடச்சுட பூரியும் உருளை மசாலாவும் பரிமாறி உண்ணவும் ..

நன்மைகள்:

இந்த முறையில் பூரி,குருமா செய்வதின் மூலம்,நேரம் மிச்சமாவதுடன்,எண்ணெய் பயன்படுத்தாமல் செய்வதால் உடலின் ஆரோக்கியமும் கூடும்..மேலும் கேசை சேமிக்கலாம்..

உங்கள் வீட்டில் இதை செய்து பார்த்துவிட்டு கருத்துகளை பகிரவும்..நன்றி..
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் செல்லக்குட்டிஸ்,

அத்தை பெத்த பூங்குயிலே - என்னுடைய முதல் முயற்சி ஒரு எழுத்தாளரா.. எனக்கே நம்ப முடியலை..ஸ்கூல்ல தமிழ் இரண்டாம் தாள்ல வர கதையை கூட எழுத சோம்பேறிதனம் பட்டுட்டு கொஞ்சம் மட்டும் கிறுக்கிட்டு வருவேன்.. அப்படி இருந்த நான் இன்னைக்கு ஒரு கதை எழுதி முடிச்சுட்டேன்னு என்னாலையே நம்ப முடியலை..

முதல்ல நான் எழுத கேட்டதும் உடனே த்ரெட் ஆரம்பிச்சு கொடுத்து எனக்கு பல சமயங்களில் உறுதுணையாக இருந்த ஸ்ரீ மாக்கு என்னுடைய முதல் நன்றிகள். ரொம்ப ரொம்ப நன்றி ஸ்ரீ மா..

அடுத்து கதை தொடங்கியதுல இருந்து இப்போ வரை எனக்கு லைக்ஸ் போட்டு கமென்ட்ஸ் போட்டு என்னை எப்போவுமே ஜாலியாவே வச்சிருக்கும் என்னோட அக்காஸ் அன்ட் மை செல்லக்குட்டிஸ், சித்ரா மா, புனிதா கா, சரண்யா கா, சஞ்சு கா, ஹேமா , ஃபாத்தி பேபி, நுமா,தோஷி, தாமரை அக்கா, சுமி அக்கா, ப்ரியா கா, கவிதா கா,ஸ்ரீ அக்கா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்,

பாதியில வந்து ஜாயின் பண்ணாலும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்த அக்காஸ் அன்ட் பேபிஸ்க்கும் ரொம்ப தேங்க்ஸ்..

லைக்ஸ் மட்டும் போட்டு செல்லும் அன்பு உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி, சைலன்ட் ரீடர்ஸ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள் மா...


யாரையாவது விட்டிருந்தா இந்த சின்ன பிள்ளையை மன்னிச்சுருங்க பா


என்னோட சின்ன ஆசை, கதையே முடிஞ்சுரிச்சு இப்போவாச்சும் சைலன்ட் ரீடர்ஸ் கதை எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா நான் அடுத்து திருத்திக்க பயனுள்ளதா இருக்கும்.. முடிஞ்சா சொல்லிட்டு போங்க ..

எனக்கு இந்த கதை ரொம்ப ஸ்பெஷல், ஃபர்ஸ்ட் கதைன்னு சொல்லலை, ஆனா இதுதான் எனக்கு ஒரு ஹோம் மாதிரி.. i got manyy friends they are become families now.. அன்ட் ஹரி, கார்த்திக், ஸ்ரீ , வர்ஷூ இவங்க எல்லாருமே ஒரு கதாபாத்திரம்னு நினைக்கவே தோணலை, எனக்கு அவங்கெல்லாம் நிஜமா இருக்க மாதிரி தான் தோணும்..

Definetely gonna miss them all..

உங்க சப்போர்ட் இல்லாம எதுவுமே சாத்தியம் இல்லை..ஒன்ஸ் அகைன் ரொம்ப நன்றி அனைவருக்கும்..

லவ் யூ ஆல்..
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க???

உங்கள் எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ்❤❤

நம்ம முதல் கதை "அத்தை பெத்த பூங்குயிலே" வரும் அக்டோபரில் புத்தகமாக வெளிவர உள்ளது..

நெக்ஸ்ட்.....


இன்னைக்கு எனக்கு பொறந்த நாள்ல சோ எல்லாருக்கும் கிஃப்ட் கொண்டு வந்திருக்கேன்..

என்னன்னு கேட்டுட்டு காரித் துப்பக்கூடாது..

என்னுடைய முதல் கதையான "அத்தை பெத்த பூங்குயிலே" கதையை கிண்டில்ல போட்டிருக்கேன்..

எல்லாரும் போய் வாங்கி படிங்க.. படிக்காதவங்க படிச்சுப் பார்த்துட்டு கதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

சில சில மாற்றங்கள் கதையில பண்ணிருக்கேன்.. சோ முன்னாடி படிச்சவங்களும் இதை படிச்சுப் பார்த்துட்டு இந்த மாற்றம் ஓகேவான்னு சொல்லுங்கோ..

உங்க கமென்ட்ஸ்க்கு மீ வெய்ட்டிங்க்..

பேர்த்டே பேபியை வெய்ட் பண்ண வைக்கக் கூடாது ஓகேவா..

மிக்க நன்றி மக்களே..



IMG-20190816-WA0002.jpg
 
Status
Not open for further replies.
Top