All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"முரட்டு பலாவின் மென்மை கனியே!!"கதை திரி

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் 2:


"சொன்னா கேளுங்க வீர்... இப்போ ரவி அலுவலகத்திலிருந்து திரும்பும் நேரம். அவர் வரும் போது நீங்க இங்கே இருந்தா பெரிய பிரச்சினை ஆயிடும்..."



"இனி..." தயவுசஞ்சு நான் சொல்வதைக் கேள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த ராட்சசன் கிட்ட கொடுமையை அனுபவிக்க போற... என்கூட வா அடுத்த இரண்டு மாதத்திலேயே இவனை டைவர்ஸ் பண்ணு.அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் கவனித்துக் கொள்கிறேன். அதன்பிறகு நீயும் நானும் ஒன்றாக சேர்ந்து திருமணம் செய்து கொள்வோம். நாம் விரும்பிய வாழ்வை இனிதே வாழ்வோம் இனி. தயவுசெய்து என்னுடன் வந்துவிடு என கெஞ்சிக் கொண்டிருந்தான் மிகப்பெரிய தொழிலதிபர் மகன் தண்வீர்.



" சொல்வதைக் கேட்காமல் லூசு மாதிரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்காமல் கிளம்புங்கள். என் புருஷன் வர நேரமாகிவிட்டது."


நீ சொன்னா எல்லாம் கேட்க மாட்டாய் என அவள் கையை பிடித்து இழுத்த நேரம் "அம்மா..."என அலறியபடியே கீழே விழுந்தான் தன்வீர்.



**************************************


நீ என்னை விட்டுப் போய்விடு. உன்னைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. நீ செஞ்ச காரியத்துக்கு கண்டிப்பா உனக்கு தண்டனை உண்டு என கண்களில் வன்மம் தெறிக்க கூறியவன் "நீ செஞ்ச தப்புக்கு கண்டிப்பா உனக்கு தண்டனை கொடுக்கணும்" என்ன தண்டனை கொடுக்கலாம் சொல்லுங்கள் திருமதிஇஷானி ரன்வீர்.


கைகளில் பழுக்கக் காய்ச்சிய கம்பியை உடன் கொண்டு வந்தவன் இன்னைக்கு உனக்குக் கொடுக்கிற தண்டனையைப் பார்த்து நீ எப்பவுமே தவறு செய்யக்கூடாது.



வேண்டாம் ரவி இப்படி பண்ணாத..எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே பழுக்க காய்ச்சிய கம்பியை வைக்கவும் துடித்துப் போனாள் இஷானி. அந்தக் கம்பியினால் உண்டான காயம் அவள் உடம்பில் ஏற்பட்டிருந்தாலும் பொறுத்துக் கொள்ள இயலும். ஆனால் அவன் அவனுக்கே சூடு வைத்துக் கொண்டான். அதைத் தாங்க அவளால் இயலுமா??


***********************************



"சே இந்த ரவிக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.வீட்ல பொண்டாட்டி ஒருத்தி இருக்காளே கொஞ்சமாச்சும் ஞாபகம் இருக்கா உனக்கு. போடா உன் பேச்சு கா என்ன விட்டு தனியாக போய் பத்து நாள் ஆச்சு. ஒரு போன் இல்லை" என புலம்பியவளுக்கு சங்ககாலத் தலைவியின் பசலை நோய் வந்தது போன்று இந்தப் பத்து நாட்களில், தனது தலைவனை எண்ணி மிகவும் ஏங்கிப் போக தலைவனும் அவள் முன்னே வந்து நிற்க,


எதிர்பாராது அவனைக் கண்டவள் திகைத்துப் போனாள்."அச்சச்சோ... ஒருவேளை நான் பேசியதெல்லாம் கேட்டிருப்பபனோ சீ சீ கேட்டு இருப்பாரோ"எனக் குழம்பியவளை கண்டுகொள்ளாமல் நேராக தனது அறையை நோக்கி சென்றான்.


அவன் சென்றதைப் பார்த்ததும் புஸ்சென்று ஆகிப்போனது அவளுக்கு.


"சரியான ஜடமாக இருப்பான் போல... பொண்டாட்டிய பத்தி கொஞ்சமாச்சும் கவலை இருக்கா??"என புலம்பிக் கொண்டிருந்தவளை தன்னை நோக்கி வேகமாக இழுத்தவன் அவள் இதழில் தன் இதழை புதைக்கவும், அதிர்ச்சியில் கண்கள் விரிய கணவனை பார்த்தவள் அப்படியே நிற்க, அவளை விட்டு விலகியவன்


"காது எனக்கு நல்லாவே கேட்கும்..."என்று அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு விட்டுச்செல்ல மீண்டும் அதிர்ந்து நின்றாள்.



தமிழ் வருடப்பறப்பன்று முதல் அத்தியாயம் பதியப்படும். இந்த கதையின் சிறப்பு ஆங்கிலம் கலக்காத முழுமையான தமிழில் தமிழைக் கலந்து தர இருக்கிறேன்.



தமிழ் புத்தாண்டை நோக்கி காத்திருக்கிறேன். யாரெல்லாம் காத்திருக்கிறீர்கள் என அறிய காத்திருக்கிறேன். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாக...



நன்றி வாழ்க வளமுடன். 😍😍😘😘😘😘
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:


"டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா பிள்ளை தில்லானா"





என்ற பாடலை அதிகபட்ச சத்தத்தில் ஒலிக்க விட்டார் அங்கிருந்த ஒருவர். அவருக்கு குறைந்தபட்சம் 60 வயதைத் தொட்டிருக்கும்.


அங்கிருக்கும் யாரும் வயது பாரபட்சமின்றி, ஜோடி சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.


இதில் இன்னும் சில பேர் எல்லை மீறிக் கொண்டும், சிலர் பார்ட்டி என்ற பெயரில் அசிங்கத்தை செய்துகொண்டிருந்தனர்.



வெளிநாட்டு வாசம் அல்லவா... அதனால், பார்ப்பதற்கு அவர் வயதான தோற்றம் உடையவராக இருந்தாலும் 40 வயது இளைஞராக தோற்றம் கொண்டிருந்தவர் தான் அந்தப் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தவர்.


அவரைப் பார்த்ததுமே அவரின் பணச் செழுமை நன்றாக தெரிந்தது. அவர்தான், அமெரிக்காவில் வாழும் பணக்காரர்களின் நான்காவது இடத்தில் இருப்பவர் முதல் இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக செய்த செயலில் வெற்றி பெற்றதற்காக இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார்.



அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசிக்கும் அந்த மேல்தட்டு வர்க்கத்தினர் எல்லாம் இது ஒரு சாதாரண விஷயமே. அதனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.



போதையில் நின்ற அந்த மனிதர் கையையும் காலையும் நீட்டி ஆட்டியபடியே தனக்கு அருகில் நின்றிருந்த 18 வயதுப் பெண்ணை நெருங்கியவர் அவளின் கைகள் பற்றி இழுத்ததும், நொடியில் தன்மீது விழுந்தவளை யாரும் அறியாத வண்ணம் கைகளில் அள்ளிக் கொண்டவர் அங்கிருந்த மறைவான தனது அறைக்கு தூக்கிச் சென்றார்.



பாடலின் இசைக்கேற்ப, வயது பேதமின்றி அனைவரும் அதில் மூழ்கி போய் இருந்ததால் யாரும் அதனை கவனிக்கவும் இல்லை. அப்படியே கவனித்தாலும் அந்த நாட்டினரை பொருத்தவரை இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை.



அந்த வயதானவரின் கண்கள் அந்த பார்ட்டி ஆரம்பித்ததிலிருந்து, அந்த சிறு பெண் மீதே இருந்தது."எப்படியாவது அவளை தன்வச மாகிய தீரவேண்டும்" என்று வெறி கொண்ட மிருகம் சிறிதும் யோசிக்காமல் அந்த சிறுமி குடித்திருந்த ஜூஸில் போதை மருந்தை கலந்து இருந்தவர், அருகில் வந்த சர்வரை அழைத்து "இதை அந்த பெண்ணிடம் கொடுத்து விடுங்கள். ஆனால் யாருக்கும் இது நான்தான் கொடுத்தது என்று தெரியக்கூடாது... மீறி வெளியில் தெரிந்தால் நீ இந்த உலகத்தை விட்டே போய் விடுவாய்"என்று எச்சரித்தார்.


அதில் குலை நடுங்கிய அந்த சர்வரும்"சரிங்க சார்.."என அந்த ஜூசை கரெக்டா அங்கிருந்த அந்த சிறுமியிடம் கொண்டு போய் சேர்த்து இருந்தான்.



பொதுவாக வெளிநாட்டில் வாழும் பெற்றோர்கள் யாவருமே குறிப்பிட்ட வயதிற்கு மேல் தங்களது பிள்ளைகள் மீது ஆர்வம் செலுத்த மாட்டார்கள் என்பதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் டிம்.


அறைக்குள் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க, போதையில் இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு தனது கற்ப்பு களவாடப்பட போகிறது என்பது புரிந்ததோ...!!


அரைகுறை மயக்கத்தில் "டேய்... யார்ரா நீ? என்னை என்ன பண்ண போற தயவு செஞ்சு என்னை எதுவும் பண்ணிராத... நான் இங்கே தெரியாம வந்துட்டேன் என்னை விட்டுவிடு" என கெஞ்சவும்,



"உன்ன விடுவதற்காக வா தூக்கிக் கொண்டு வந்தேன். ஒழுங்கு மரியாதையா நான் சொல்றதை கேளு... அமைதியா இருந்தாள் உனக்கும் எந்த சேதமும் இல்லை எனக்கும் சந்தோஷம் மீறினால், உன்னை கொன்றுவிடுவேன்"என மிரட்டி அவன் அவளிடம் எல்லை மீற தொடங்கவும்,



முடிந்தவரை அந்த சிறு பெண்ணும், அவனைத் தள்ள முயற்ச்சிக்க அரைகுறை போதை உடன் மயக்கமும் சேர்ந்து கொள்ள மிகவும் பலவீனமான நிலையில் போராடவும், எங்கே தான் எதிர்பார்த்த விஷயம் கிடைக்காதோ என வெறி ஆனவன் கோபத்தில் அவள் கண்ணத்தில் மாற்றி மாற்றி அறிந்து அவளுடைய உடையில் கை வைத்து கிழிக்க ஆரம்பித்த நொடி புயலென அந்த கதவை உடைத்துக் கொண்டு வந்தான் ரன்வீர்.


டிம் செய்து கொண்டிருந்ததைக் கண்டு, அவனிடம் வேகமாக சென்று ஒரே இழுப்பில் தன்னை நோக்கி இழுத்தவாறு வயிற்றில் ஒரு உதை விடவும், அங்கிருந்த மேஜையை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தான் அந்த மிருகம்.


இருந்தும் இன்னும் கோபம் தீராதவன் கீழே விழுந்தவனை தூக்கி நிறுத்தியவன் "பிளடி ராஸ்கல் உன்னோட வீரத்தை போயும் போயும் உனக்கு மகள் வயதாகும் இல்லை இல்லை உன் பேத்தி வயதாகும் அந்த சிறு பெண்ணை காயப்படுத்த நினைக்கிறாயே... நீ எல்லாம் பெரிய ஆளுன்னு வெளில சொல்லி கொள்ளாதே...உன்னை இப்படி எத்தனையோ முறை எச்சரித்து விட்டேன்.


"இனிமேலும் உன்னை விட்டு வைத்தால் நீ கொஞ்சம் கூட திருந்த மாட்டடா... "உன்னை என்ன பண்றேன் பொறுத்திருந்து பார்!


அப்பாஸ் இவனை அழைத்துக்கொண்டு நம்மளோட அந்த சிகரெட்டை இடத்துக்கு கொண்டு போய் கட்டி வையுங்கள்.


"எஸ் சார்" என பவ்யமாக கூறினான் அப்பாஸ் என்றழைக்கப்படும் ரவியின்
தனிப்பட்ட செயலாளர்.


அந்த வயதானவரை அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த இடத்தைவிட்டு காலி செய்து இருந்தவன் அங்கிருந்த பெண்ணை அருகில் சென்று தொட்டுப் பார்த்தவன் உடனே டாக்டருக்கு கால் செய்து வருமாறு கூறவும் அடுத்து ஐந்து நிமிடங்களில் அங்கிருந்தார் மருத்துவர்.



"இந்த பொண்ணு செக் பண்ணுங்க... இவளை எப்படியாவது இன்னும் ஒரு மணி நேரத்தில் சுய நினைவிற்கு வர வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு".


இதுதான் அவன் யாரிடமும் எந்த வேலையையும் செய்யுங்கள் என்று பணிக்க மாட்டான். நீங்கள் எந்த வேலையை செய்தே ஆக வேண்டும் என கட்டளை மட்டுமே பிறப்பிப்பான்.



"எஸ் சார் நீங்க கொஞ்ச நேரம் வெளியில் இருந்தீங்கனா, நான் சோதித்து முடித்துவிடுவேன்"என்று அந்த மருத்துவர் தயக்கத்துடன் கூறவும்,


அறையிலிருந்து வெளியேறியவன் போனில் ஒரு நம்பரை டயல் செய்து என்ன சொன்னானோ அந்தப் பக்கத்தில் இருந்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் அவன் முன்பு மூச்சுவாங்க கையில் பத்திரத்துடன் நின்றான்.



அதற்குள் அந்த டாக்டரும், வெளியில் வந்தவர்"சார்... அந்த பொண்ணு இப்போ நல்லா இருக்காங்க... கொஞ்சம் போதை தெளிந்தது. இருந்தாலும் இன்னும் போதை முழுவதுமாக தெளிய கொஞ்ச நேரம் ஆகும் சார்"என பயந்து கொண்டே கூற,


"அவுட்..."என்ற ஒரு வார்த்தையில், தப்பித்தால் பிழைத்தால் போதுமென்று அந்த டாக்டர் ஓடியே விட்டார்.


"ரன்வீர் சார்... நீங்கள் சொன்னது மாதிரி என்னோட பிசினஸ் டாக்குமெண்ட் சைன் பண்ணி கொண்டு வந்திருக்கிறேன். இதை வாங்கிக்கொண்டு தயவுசெய்து என் மகளை விட்டுவிடுங்கள்"



அவள் சின்னப் பெண் சார் தயவுசெய்து என்னுடன் அனுப்பி வைத்து விடுங்கள்.



உதட்டில் கேலி புன்னகை தவல விட்டவன் பத்திரத்தை வாங்கி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து முடித்ததும், பளார் என இரண்டு அறை விழுந்தது எதிரில் நின்றவனுக்கு,



அவன் கேட்டதைக் கொடுத்ததும் தன் மகளை விட்டு விடுவான் என எதிர்பார்த்திருக்க கன்னத்தில் விழுந்த அறை ஒவ்வொன்றும் விரல் தடம் பதிந்து நன்றாக சிவந்து கன்னிப்போய் இருந்தது.


"சார்... நீங்கள் சொன்ன மாதிரியே தான் கொடுத்து விட்டேனே! அப்புறம் எதுக்கு சார் அடிக்கிறீங்க..."என கோபத்துடன் கேட்கவும்,


நொடியும் தாமதிக்காது அவன் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தி அவன் ஸ்டிக்கரை அழுத்துப்போக,


"சார்... வேண்டாம் சார் உங்களை பற்றி தெரிந்தும் இப்படி கேட்டது என் தவறுதான் தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் சார்"என நைந்த குரலில் கூறினான் அந்த சிறு பெண்ணின் தகப்பன்.


வாயில் மென்று சுவிங்கத்தை அவன் முகத்திலேயே துப்பினான் ரன்வீர்.


இந்த அறை எதற்கு என்றுதான் யோசிக்கிறே... நீ பெத்து வச்சதே என்ன பண்ணுதுன்னு கூட தெரியாமல், இருந்ததுக்கு தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் மகள் போதை தெளிந்து விடுவாள் கூட்டிட்டு போ என அவ்விடத்தை காலி செய்தான்.



அரை மணி நேரத்திற்கு முன்பு, உன் மகள் வேண்டுமென்றால் அந்த ஹோட்டல் ஓட டாக்குமெண்ட் எடுத்துக்கொண்டு வா என கட்டளையிட,



மகள் மீது அன்பு கொண்ட அந்த தந்தையும், பத்திரத்தை எடுத்து கொண்டு ஓடி வந்து இருந்தான்.



கிட்டத்தட்ட அவனை மிரட்டி அந்த இடத்தை தனது பெயரில் மாற்றி இருந்தான் ரன்பீர்.



செல்லும் அவனை இவன் நல்லவனா கெட்டவனா என புரியாமல் நின்றவன் இதற்கு மேலும் நின்றாள் ஆபத்து என்று மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்.



அவ்விடத்தை காலி செய்தவன் அடுத்து வந்திருந்தது தனது செயலாளர் அப்பாஸ்ஸிடம் கூறியிருந்த இடத்திற்கு,



"ஏ... ரன்வீர் நீ யார் மேல கைய வச்சி இருக்கேன் உனக்கு தெரியுதா?"உன்னை என்ன செய்கிறேன் பொறுத்திருந்து பாருடா...



உன்னோட மொத்த பிசினஸ் வேட்டு வைத்து, உன்னை கதர கதர ஓட விடு வேண்டா இந்த டிம்.


"ஏய்... எவ்வளவு தைரியம் இருந்தா சாரை எதுத்து பேசுற..." தன் முதலாளியை மிரட்டியவர் வாயிலேயே கட்டையால் ஒரு போடு போடவும், பொல பொலவென கொட்டியது ரத்தம்.



அவன் கூறியதை எல்லாம் கேட்டு சாவகாசமாக காதை குடைந்தவன் போனில் மெசேஜ் வந்ததற்கான அடையாளமாக அதற்கென்று பிரத்தியேகமாக இருக்கும் ரிங்டோன் ஒலிக்கவும் தனது ட்ரேட்மார்க் கேலி புன்னகை தவழ விட்டான் ரன்வீர்.


டிம்மின் போன் இசைக்கவும், காதில் எடுத்து வைக்க போனவனை தடுத்து நிறுத்தினான் அங்கிருந்த அடியாள்.


அவனை ஒரு பார்வை ரன்வீர் பார்க்க, தானாகவே அவன் கையை விலகிக் கொண்டான்.


போனை காதில் வைத்தவன் அந்தப் பக்கம் சிறிது நேரத்திற்கு முன்பு அந்த ஆள் ரன்விரை என்ன செய்யப் போகிறேன் என்று கூறியிருந்தானோ அவன் வாயில் கூறியதை செயலில் காட்டி இருந்தான் ரவி.


ஆம். டிம்மின் மொத்த பிஸ்னஸ், ப்ராப்பர்ட்டீஸ் என அனைத்தையும் கண்மூடித் திறப்பதற்குள் அழித்திருந்தான் ரன்வீர்.



டிம் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்து இருக்க, அவன் முகத்தில் தனது ஷு காலால் உதைத்தவன் அங்கிருந்து தனது நடையைக்கட்டினான்.



சில நாட்களுக்குப் பிறகு,


அலுவலகத்தில் தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த ரவிக்கு என்னையும் கவனி என்று சிணுங்கிய செல்லை எடுத்து காதில் வைக்கவும் அந்தப்பக்கம் கூறப்பட்ட செய்தியில் கேலிப் புன்னகையுடன் கண்களில் வஞ்சகம் மின்னியது.


அவன் உதடுகள் மெதுவாக முணுமுணுத்தது.


"இஷானி இனி உன் வாழ்க்கையில் பல புயல்கள் சந்திக்க போறேடி, உன்னை படுத்துற கொடுமையில் அந்த ஆள் என் காலில் வந்து விழுவான்" ஹாஹா என அந்த இடமே அதிரும்படி சிரித்தான்.


தன்னை ஒருவன் பழிவாங்க காத்திருப்பது அறியாத இஷாணி நாளை தன்வீருடன் நடக்க இருக்கும் நிச்சயதார்த்த விழாவை எண்ணி முகம் சிவக்க அமர்ந்திருந்தாள்.


இதுதான் அவளது வாழ்க்கையில் கடைசியாக சிந்தும் புன்சிரிப்போ...


"யாருக்கும் அசையாத இரும்பென இருப்பவன் நான்...



உன் மொத்த வாழ்க்கையையும், புயலாய் மாற்றி,



தென்றலாய் இருக்கும் உன்னை என் உள்ளடக்கிய தீருவேன் அடி பெண்ணே..."


Comment please

 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர்:


"தன் வயிற்றில் சுமந்த 10 மாத குழந்தையை, ஒரு தாயின் கையில் கிடைக்கும்போது அந்த சந்தோஷத்திற்கு ஈடு இவ்வுலகத்தில் எதுவுமே இருக்காது ஷாலினி"


ஆனால் என்னோட விஷயத்தில் என்ன நடந்தது. குழந்தை பிறந்து 2 நாள் கூட ஆகவில்லை. சிறுகுழந்தை என் உதிரத்தில் ரணித்தது என்று கூட பார்க்காமல் இந்தக் குழந்தையை கொன்று விடுங்கள் என்று சொன்ன கொடும்பாவி மட்டும் நன்றாக இவ்வுலகத்தில் இருக்கிறார்.



அந்தக் குழந்தையை கொள்ள வாங்கிச் சென்றவர், அதீத குடிபோதையில் இருந்ததால் அருகிலிருந்த முள் மரத்தில் வீசி எறிந்து சென்றுவிட்டார். இரண்டு நாள் ஆன பச்சை குழந்தைக்கு எப்படி அந்த வலி இருந்திருக்கும்.



விட மாட்டேன் யாரையும் விடமாட்டேன், அந்தக் குழந்தை அனுபவித்த வலி ஒவ்வொன்றையும் கண்கூடாக பார்த்த நான் வஞ்சம் வைத்து பழி வாங்குவேன்டி.



அதுக்கு முதல் கட்டமாக, உன்னை அதே முள் செடிக்குள் தள்ளி விடுகிறேன். நீ இந்த வழியில் துடிக்கும்போது உன் மீது பாசம் வைத்துள்ள அந்த நபரும், உன்னை விட இரண்டு மடங்கு துடித்துப் போவார்.


"வேண்டாம் வேண்டாம் ரவி, யாரோ செய்த தவறுக்கு என்னை ஏன் பழிவாங்க நினைக்கிறீர்கள்"


போதும் இனிமேல் நீ பேசாதே, இரண்டே எட்டுக்கள் வைத்து மனைவியை நெருங்கியவன், அவள் சொல்வதை காதில் கூட வாங்காது அந்த அடர்ந்த கருவை மரத்திற்குள் தள்ளி விட்டான்.


அந்தக் குழந்தை யார்? அந்தக் குழந்தைக்காக இவன் ஏன் பழி வாங்குகிறான்? அந்தத்தாய் ஏன் அப்படி செய்தாள்? அவருக்கும் ஷாலினிக்கும் என்ன சம்பந்தம்? அந்த குழந்தைக்கு என்ன ஆனது? உங்களின் பல கேள்விகளுக்கு, அத்தியாயத்தில் விடையுடன் வருகிறேன்.


நன்றி.



உங்கள் கருத்திற்கு விரைவிலேயே பதில் அளித்து விடுகிறேன். இதைப் படித்துவிட்டு உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Teaser 2:



"இங்க பாரு நான்தான் சொல்லிக்கிட்டே இருக்கேன் இல்ல... எனக்கு இந்த தண்ணி எல்லாம் கண்டால் சுத்தமாக அலர்ஜி... ஒழுங்கு மரியாதையாக நீ போய் விளையாடுவது என்றால் விளையாடி கொள் என்னை விட்டுவிடு..."


இடுப்பில் இருக்கைகளை வைத்தவாறு கணவனை முறைத்துப் பார்த்தவாறு அவனிடம் நெருங்கியவள் ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்க அவள் பார்வையில் தெரிந்த உணர்வில் ஈரடி பின்னே வைத்தவன் மூன்றாவது அடிக்கு அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் விழ அதை பார்த்து கைகொட்டி சிரித்தாள் இஷானி.


"ஷாலு என்னை காப்பாத்து எனக்கு நீச்சல் தெரியாது..."தண்ணிக்குள் மூழ்கி போனவாறு கத்திக் கொண்டிருந்த ரவியின் குரலில் திடுக்கிட்டுப் போன இஷாணி அவனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் தண்ணீருக்குள் குதித்த மறுவினாடி கணவனின் கைகளில் மூச்சுவிட முடியாதபடி இருந்தாள்.


#############



"இங்கே பாருடா இந்த குழந்தையை விட்டால் நம்மால் காசு சம்பாதிக்க முடியாது... இந்த குழந்தையை வெளிநாட்டில் கொடுத்துவட்டால் இதனுடைய ரத்தம், மூளை, பிளாஸ்மா, சிறுநீரகம் எல்லாம் எடுத்துக்கொண்டு நமக்கு ஏராளமான காசு கொடுப்பார்கள்... இந்த குழந்தையை விடக்கூடாது என்று காசுக்காக பிணத்தைத் திங்கக் கூடிய அந்த பிணந்தின்னிகள் அந்தக் குழந்தையை நெருங்கின.


"வேண்டாம் என எதுவும் செய்து விடாதீர்கள்... நான் அம்மாகிட்டே போறேன்..."என்று அழுதது அந்த மூன்றுவயது குழந்தை.


நீ அம்மா கிட்ட போகணும்னா எங்கள் கூடவா... அதன் கையை பிடித்து இழுக்க அழுதுகொண்டே வரமாட்டேன் என்றது அந்த குழந்தையை.


ஒரு கட்டத்தில் அந்த குழந்தை தன்னை பிடித்து இழுத்து அவன் கையை கடிக்க, வலியில் துடித்த அந்த கயவன் அந்தக் குழந்தையின் கன்னத்தில் ஒரு அடியை போட வலியில் சுருண்டு விழுந்தது குழந்தை மேலும் அந்தக் குழந்தையை அந்த கயவன் நெருங்க "ஏய்..."என்ற குரலில் பயந்து போனார்கள்.


அவர்கள் பயந்து நடுங்கினார்கள் என்றால் அந்தக் குழந்தை அந்தக் குரலை அடையாளம் கண்டு கொண்டு "அம்மா..."என்று அழைத்துக் கொண்டு அங்கு நின்ற பெண்ணை கட்டிக் கொள்ள "சி அங்கிட்டு போ..."குழந்தையை தள்ளி விட்டவள் அங்கு நின்று கொண்டிருந்த அந்த கடத்தல் கும்பலை பார்த்து "இந்த குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்... ஆனால் அதில் பாதி தொகை எனக்கு வர வேண்டும்..."நிபந்தனை போட அந்தக் கயவர்கள் கண்ணில் சிரிப்பு வர,அந்த குழந்தை பயத்துடன் அவர்களை பார்த்தது.


கனி ஆகும்.



Comment please
 
Status
Not open for further replies.
Top