All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

யாழ்விழியின் "உன் தினம் எதிர்ப்பார்த்தேன்" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

karthukamuthupandi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோதரிகளே...

எனது முதல் கதையான “உனை தினம் எதிர்ப்பார்த்தேன்”.
இந்த கதைக்கு உங்கள் ஆதரவும், அன்பும் என்றும் எதிர்பார்க்கிறேன் சகோதரிகளே. தவறுகள் எதுவும் இருந்தால் தயங்காமல் கூறலாம். கதையின் இண்ட்ரோ இதோ.... முதல் அத்தியாயம் வெள்ளி கிழமை போடுகிறேன் சகோதரிகளே.


உனை தினம் எதிர்ப்பார்தேன்

”நிறுத்துங்க….” அந்த கல்யாண மண்டபமே அதிர கத்தினான்…நாயகன். (ரத்னேஷ்”)

“யாருப்பா… நீ தாலி கட்டப்போற நேரத்துல அபசகுணமா நிறுத்த சொல்லுற கல்யாணத்தை…” அங்குள்ள பெரியவர் கேட்க.

‘ஏன்னா, கல்யாணப்பொண்ணு, என்கூட ஒரு நாள் முழுக்க தனியா, ஒரே அறையில இருந்திருக்கா,..அதுக்கான சாட்சி அவள் வயிற்ற வளர்கிற குழந்தை சாட்சி’

“என்ன இது புதுசா ஒரு பிரச்சனை…”

‘எனகென்னமோ அந்த பையன் சொல்லுறது சரிதான் போல, பொண்ணு முகத்துல சோர்வா இருக்கு’ என பலரும் அவர்களுக்குள் பேசிகொண்டிருக்க, பதில் சொல்ல வேண்டியவளோ அமைதியாக இருந்தாள்.

“இல்லை, எனக்கு ராதிக்க மேல நம்பிக்கை இருக்கு, அவளோட வயிற்றில் வளரும் குழந்தை என்னுடையது…” மாலையுடன் எழுந்து இரண்டாவது நாயகனுக்கு (சக்திபிரகாஷ்) பதில் கூறினான் ….

“இரண்டு பேரும் சண்டை போடுறதை நிப்பாட்டுங்கப்பா.., நீங்க இரண்டு சொன்னா அதை நாங்க நம்பிடுவோமா…, பதில் சொல்லவேண்டிய பொண்ணு அங்க அமைதியா அமர்ந்திருக்கு, அந்த பொண்ணு சொல்லட்டும், உண்மையை… அப்புறம் கல்யாண மாப்பிள்ளை சொல்லறது உண்மையா, இல்லை அந்த தம்பி (நாயகன்) சொல்லுறது உண்மையானு பார்க்கலாம்..”

‘ஏம்மா, கல்யாணபொண்ணு நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம், பதில் சொல்லுமா…, இங்க நடக்குற பிரச்சனைக்கு நீ தான் தீர்வு சொல்லனும், சொல்லுமா…, இந்த இரண்டு தம்பிங்களல யார் சொல்லுறது உண்மை… சொல்லுமா…” அந்த பெரியவர் கேட்க…

“அவளோ…, நாயகனின் முகத்தையும்,மாலையுடன் தன் பக்கதில் இருக்கும் இரண்டாம் நாயகனின் முகத்தையும் பார்த்தாள்..,., ஒருமுடிவுடன் “ஆமாம் அவர்கூட நான் ஒரு நாள் முழுக்க இருந்தேன்.., என் வயித்துல வளர்ர குழந்தை அவருடையது தான்..” அவளின் மனதை கல்லாக்கிகொண்டு அங்கு இருப்பவர்களிடம் பதில் கூறினால்..

’தன் கற்பை தொலைத்தவனிடத்திலேயே தன் கழுத்தில் தாலியயும் ஏற்றுகொண்டாள், பெண்ணவள்…,’
இனி அவனுடன் வாழ்நாள் முழுவதும் வாழ்வாளா, இல்லை, வாழ்க்கையை தொலைப்பாளா…??????
 

karthukamuthupandi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உனை தினம் எதிர்ப்பார்த்தேன் 1

“மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...”
” இளைராஜாவின் இன்னிசை பாட்டை கேட்டுக்கொண்டே தனது காரை ஓட்டிகொண்டிருந்தான் சக்தி.


“ நள்ளிரவு முன்றை தொட்டுகொண்டிருந்த அந்த நேரத்தில், அவன் மட்டும் அந்த சாலையில் பயணத்திக்கொண்டிருந்தான். ஒரு சாலையை கடந்து அடுத்த சாலைக்கு தன் காரை திருப்ப முற்படும் போது யாரோ ஒரு பெண் அவன் காரின் முன் விழ, இவனோ சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான். நல்லவேளை அடுத்த சாலையை கடக்க போவதால் அவன் மெதுவாக ஓட்டினான்.”


“தன் காரின் முன் விழுந்த பெண்ணிற்க்கு ஏதவதென்று ஆகிவிட்டதோ என பயந்துகொண்டு வேகமாக கீழிறங்கினான். கீழே விழுந்த பெண்ணின் அருகில் சென்று அவளை தூக்கி, திருப்பினான். நெற்றியில் கொஞ்சம் பலமான அடி இரத்தம் நிற்க்காமல் வந்துகொண்டிருந்தது. அதை தனது கைக்குட்டையால் அழுத்திப்பிடித்துக்கொண்டு மற்ற இடத்தில் அடிப்பட்டு இருக்கா என அவளின் உடல் முழுவது சோதித்தான்.”


“அப்பொழுது தான் அவளை நன்றாக பார்த்தான். பட்டுசேலை கட்டி இருந்தால். கழுத்தில் சின்ன விநாயகர் டாலருடன் இருந்த ஜெயின். தலை முழுவதும் மல்லிகைப்பூ மட்டும் அதிகமா இருந்தது போல ஆனால் அதுவும் நாறு நாறாக உதிர்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்த்தவன் மனதில் ‘ஒரு வேளை புதுசா கல்யாணம் ஆனா பொண்ணோ, ஆனா ஏன் இந்த நேரத்துல இங்க’ என அவன் குழம்பினான்.


“அதன் பின் தான் கழுத்தில் தாலி இருந்ததா என பார்வையால் சோதித்தான் ஆனால் இல்லை. அப்போ புது பொண்ணும் இல்லை, யாரு இந்த பொண்ணு” அவன் யோசிக்க

”அவன் யோசனையை தடை செய்வது போல அவள் தலையில் இருந்து ரத்தம் வழிந்து அவனை உணர்வுக்கு கொண்டு வந்தது.”


“யோசிக்க நேரமில்லை என முடிவு செய்துகொண்டு அவனது ஹாஸ்பிட்டலுக்கு போன் செய்தான். அடுத்த நொடி அவன் முன் அவனது ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.”


“அவளை அவன் கைகளிலே தூக்கிகொண்டு அந்த ஆம்புலன்ஸ் டெக்சரில் படுக்க வைத்தான். அவளின் நாடி பிடித்து எல்லாம் சரியாக இருக்கா, இல்லை பல்ஸ் இரங்கி இருக்கா என் ஒரு மருத்துவனாய் சோதிக்க ஆரம்பித்தான்.”


“அவள் உடலில், நெற்றியில் மட்டுமே அடிப்பட்டது தவிர மற்ற இடத்தில் எந்த காயமும் இல்லை. அடிபட்டதில் இருந்து மயக்கத்தில் இருக்கிறால் போல” என எண்ணிக்கொண்டான்.


“ஹாஸ்பிட்டலில், அவள் காயத்திற்க்கு மருந்திட்டு, அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றினான். அப்பொழுது தான் அவளின் முகத்தை பார்த்தான். நிலா போன்ற முகம், வானவில் போன்ற புருவம் வளைந்து அழகாக இருந்தது, இளம் குமரியின் முகம் அவளை இருபத்திரண்டு வயது பெண் என சொல்லாமல சொல்லியது.”


“அடிப்பட்ட பெண்ணை நான் இப்படி ரசிப்பது சரியல்ல. பாவம் அவளே எந்த நிலையில் இருந்தாளோ. ஆனால் இவள் யார், எங்கு இருக்கிறால், என ஒரு தகவலும் எனக்கு தெரியாது. அவளே எழுந்து சொன்னால் தான் உண்டு.” என எண்ணிகொண்டே அவள் அருகில் அமர்ந்திருந்தான்.


“பாவம் அவனும் என்ன செய்வான், காலையில் இருந்து இரண்டு ஆப்ரேஷன் முடித்துவிட்டு, கிளம்பும் சமயத்தில் டீனுடன் மீட்டிங்க் அட்டென் செய்துவிட்டு அவன் கிளம்ப நேரம் பதினெரு மணி. அதன் பின்பு அவன் இல்லத்திற்க்கு செல்ல குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும்.”


“சக்தியின் வீடு பாண்டிசேரியில் இருக்கிறது. அவன் தந்தையின் ஹாஸ்பிட்டலான மற்றொரு ப்ராஞ்ச் தான் சென்னையில் இருக்கிறது. தந்தை வரமுடியாத காரணாத்தால் தான் அவன் வர நேர்ந்தது.”

“சேரில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டான். சூரியன் கிழக்கில் உதிக்க ஆயுத்தமான நிலையில் இருக்க, அவர்களின் அறையில் சூரிய வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்தது.”


“சூரிய வெளிச்சத்தில் முதலில் கண் முழித்தது, சக்தி தான். எழுந்தது அவளின் நிலையை ஆராய்ந்து பார்த்தான். அதே மயக்க நிலையில் தான் இருக்கிறால்.எந்த முன்னேற்றமும் இல்லை.”


“அவளின் கன்னத்தில் கை வைத்து தட்டின்னான். ‘இங்க பாருங்க... அய்யோ இவ பேருகூட எனக்கு தெரியாதே.’ வாய்விட்டு புலம்பினான்.”


“அவன் புலம்பியது அவளுக்கு கேட்டதோ இல்லையோ, அவன் அன்னைக்கு கேட்டுவிட்டது போல. அவன் கைப்பேசி அழைக்க ஆரம்பித்தது.”


“ நேற்றில் இருந்து, அன்னை இருபது முறை அழைத்துவிட்டார். ஆனால் அவனின் பதில் முக்கியமான வேலை என்றே இருந்தது. இப்போது எந்த வேலையை சொல்லுவான்.”

“சொல்லுங்கம்மா..”


“இல்லைமா, காருல வரும் போது ஒரு பொண்ணை இடிச்சுட்டேன். என நேற்று நடந்தை சொன்னான்.”
“அவளை காப்பாற்றி, நமது மருத்துவமனையில் சேர்த்து, அவளின் பக்கதில் நேற்றில் இருந்து இருப்பதை சொன்னான். ஆனால் அவள் மயக்கம் மட்டும் இன்னும் தெளியவில்லை என்பதையும் கொஞ்சம் தயங்கி கூறினான்.”



“அவன் அன்னையோ, ‘என்ன டாக்டர் டா நீ... ஒரு பொண்ணு எதுக்காக மயக்கமா இருக்கானு கூட தெரியாதவேன் எப்படி படிச்சு கோல்டு மெடல் வாங்குன. உன்னை எல்லாம் டாக்டர்க்கு படிக்க வச்ச உன் அப்பாவ சொல்லனும்.” தனது மகனால் காரில் அடிப்பட்ட பெண்ணிற்க்கு ஏது நேர்ந்துவிட்டால், என பயத்தில் பேசினார்.


“அம்மா... அம்மா... அவளுக்கு ஒன்னு ஆகலை இன்னும் மயக்கத்தில தான் இருக்கா. நீங்க ஒன்னும் பயப்படாதீங்க.” அவன் அன்னையை சமாதானம் செய்தான்.


“அவன், அன்னையிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் கண்விழித்தால். அதனை கவனிக்காமல் தன் அன்னையிடமே பேசிக்கொண்டிருந்தான்.”

“முதலில் விழித்தவள் தான் எங்கு இருக்கிறோம் என உணரவே நேரம் பிடித்தது. பின் தான் ஒரு மருத்துவமனையில் இருப்பது லேசாக பிடிபட, அடுத்த நொடி எழுந்திரிக்க முயன்றால். அவளின் அசையை உணர்ந்தது போல் அவளின் பக்கம் திரும்பினான்.”


“அம்மா, அவ கண்முழிச்சுட்டா... நான் அப்புறம் கூப்பிடுறேன். அன்னையின் போனை கட் செய்தவிட்டு அவள் அருகில் சென்றான்.”

“இப்போ எப்படி இருக்கு, ஏன் எழுந்திரிக்குற.” என கேட்டபடி அவள் எழுவதற்க்கு உதவி செய்தான்.


“பர... பரவாயில்ல... நீங்க யார்??? நான் எப்படி இங்க வந்தேன்” அவள் கேட்க.

“அதை நான் தான் கேட்கனும். நீ தான் நேத்து என் காருல குறுக்க வந்து விழுந்த. ஜெஸ்ட் மிஸ், லேசா அடிபட்டுச்சு இல்லைனா இன்நேரம் உனக்கு சங்கு தான் ஊதிட்டு இருப்பாங்க” அவன் கொஞ்சம் கேலியாகவும், தீவிரமாகவும் சொன்னான்.


“ நான் நேத்து உங்க காருல வேணுமுனு விழுகல. என்னை துரத்திட்டு வந்தாங்க, அவங்களை திரும்பி திரும்பி பார்த்துட்டே வந்ததால உங்க கார் வர்ரத கவனிக்கலை” அவளி நிலை எடுத்துச்சொன்னால்.


“சரி எப்படியோ என் கார் முன்னாடி விழுந்து என் கார்தான் டேமேஜ் ஆகிருச்சு. அதுமில்லாம, அடிப்பட உனக்கு வைத்தியம் பார்த்து, இரவு முழுக்க கண்விழிச்சுருக்கேன் அதுக்கெல்லாம் சேர்த்து எனக்கு பில் கட்டிட்டு போ” அவன் கோவமாக சொல்ல.


“அவன் கோவத்தை பார்த்து பயந்து போனவள். ‘என்கிட்ட காசு இல்லையே,”


“அவளின் பயத்தையும் கொஞ்சம் ரசித்து பார்த்தவன், அவளி பதிலில் இன்னும் அவளை ரசிக்க ஆரம்பித்தான்.”

“அவனுக்கு எதுக்குமா, காசு கொடுக்கனும். நானே அவனுக்கு சம்பளம் தர்ரதில்லை.” அவளுக்கு பதில் சொல்லிய படி உள்ளே வந்தார் சசிதரன்.”


“அவரின், பேச்சில் அவள் இன்னும் அதிகமாக பயந்து போனால். இவரு யாரு.” என அவள் யோசிக்க.


“என்னம்மா, நான் யாருனு பார்க்குறையா. இந்த வீனா போன டாக்டர் பெத்தவன் தான்மா”

“அப்பா, நான் வீனா போனவனா. என்னை பற்றி கேட்டுப்பாருங்க ஹாஸ்ப்பிட்டல.” அவன் வீராப்பாய் சொல்ல.


“ நீ பேசாதே டா.. ஒரு பொண்ண ஆக்ஸிடன் பண்ணிருக்க... இப்போ அந்த பொண்ணவே நீ மிரட்டிட்டு இருக்கியா”

“அப்பா, நான் அவளை மிரட்டுனதை நீங்க பார்த்தேங்களா.”


“ நான் பார்க்கலை தான், நான் வரும் போது அந்த பொண்ணுகிட்ட பில் கட்டிட்டு போனும்னு நீ தானே சொல்லிட்டு இருந்த.”


“அய்யோ அப்பா, சும்மா பேசிட்டு இருந்ததை நீங்க மிரட்டுனதா எடுத்துக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா.”
“சரி அந்த பொண்ணுகிட்ட கேட்கலாம், ‘ நீ சொல்லுமா அவன் உன்னை மிரட்டுனான, இல்லையா’ அவளை பார்த்துக்கேட்க.



“சொல்லும்மா, நான் உன்னை மிரட்டுனேனா,” அவள் கண்ணை பார்த்து அவன் கேட்க.


“அவளோ, இருவரிம் முகத்தையும் மாறி மாறி பார்த்துகொண்டு இருந்தால், அதில் உஷரான அவனோ, அவளை பார்த்து இல்லைனு சொல்லு” என வாயசைவில் சொல்லிகொண்டிருந்தான்.


“அவளோ, அவனின் வாயசைவில் அவரிடம், ‘ அவங்க என்னை மிரட்டலைங்க’ என அவனின் தந்தையிடம் பொய் கூறினால்.


“ம்ம்... நீ சொல்லறதால அவனை சும்மா விடுறேன்ம்மா... போடா போய் உன் ரூம்ல ரெப்ரஸ் ஆகிட்டு வா, நான் இந்த பொண்ணை பார்த்துகிறேன்.” அவனை அனுப்பிவைத்தார்.


“மறக்காம அவளை செக் பண்ணுங்கப்பா. நான் இன்னும் அவளை செக் பண்ணலை” போற போக்கில் சொல்லிக்கொண்டு போனான்.


“இப்போ எப்படி இருக்கும்மா, என அவளிடம் கேட்டுக்கொண்டே அவளை பரிசோதனை செய்தார். எல்லாம் நார்மலாக இருந்தது. ஆனாலும் அவளின் உடம்பில் ஏதோ வித்தியாசம் தென்பட்டது. அதை உணர்ந்தவர் அடிப்பட்டதில் ஏற்ப்பட்டு இருக்கும் காயமாக கூட இருக்கலாம் என அவரே முடிவு செய்தார்.”


“ம்ம்.. எல்லாம் நார்மலா இருக்குமா... உன் வீடு எங்கனு சொல்லு அங்க நாங்களே கொண்டு போய் விடுறோம் என அவளிடம் கேட்க.


“என் வீடு... அவள் சிந்திக்கையில் உடல் தூக்கிவாரி போட்டது. இனி எப்படி என் அம்மாவின் முகத்தில் விழிப்பது. அவரின் கேள்வியால் நான் அல்லவா பாதிக்கபடுவேன், நான் மட்டுமா என் குடும்பமே பாதிக்கப்படும்.” அவள் கவலைகொள்ள.


“என்னமா வீடு எங்க இருக்குனு யோசிக்கிறயை??”


“இல்லை... எனக்கு யாரும் இல்லை... ஒருத்தவங்களுக்கு நான் பாரமா இருக்க கூடாதுனு தான் அவங்களைவிட்டு விலகி வந்தேன். இனிமே தான் எங்க போகனும், எந்த வேலை பார்க்கனும் முடிவு பண்ணனும்”


“அவளின் பேச்சில் அவரின் முகம் யோசனையாய் சுருங்கியது. அடுத்த நிமிடம் ‘ சரிம்மா, பராவாயில்ல... நான் உனக்கு ஒரு வேலை வாங்கி தரேன், அப்படியே நீ தங்குறதுக்கு ஒரு வீடு இருக்கு நீ எங்க கூட வருவியாம்மா”
அவரின் பதில் மகிழ்ச்சி கொண்டாலும் இந்த காலத்தில் எவரை நம்புவது என தெரியாமல் அமைதி காத்தால்.



“என்னமா, நாங்க எல்லாம் நல்லவங்களா, இல்லையானு யோசிக்கிறையா...”


“அவளும், நேரடியாகவே ஒப்புக்கொண்டால், ஆமாம்” என தலையாட்டினால்.


“எங்கூட ஒரு நாள் வந்து தங்கி பாரம்மா, அப்புறம் உனக்கு பிடிக்கலைனா, நீ பாதுக்காப்பான இடத்துல நானே உன்னை சேர்த்துவிடுறேன்.”


“அவரின் பதிலில், அவர் மீது இருந்த யோசனை எல்லாம் உடைந்து போனது, ‘சரிங்க நான் வரேன்’. அவளின் பதில் அவர் மகிழ்ந்தாரோ இல்லையோ, அவன் மகிழ்ந்தான்.”


“அப்பா, கிளம்பலாம... சரிடா... நீ இந்த பொண்ண கூப்பிட்டு முன்னாடி போ, நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்.” அவளை அவனுடன் அனுப்பி வைத்தார்.”


“ம்ம்...சரிப்பா...”


“சென்னையில் இருந்து, பாண்டிச்சேரிக்கு பயணமானாள். வழி நெடுக்கிலும் பயம் இருந்தாலும், அவளின் பயம் தேவையில்லாதது என சொல்லாமல் சொல்லியது மனது.”


“உன் பெயர் கூட எனக்கு தெரியாதேம்மா... உன் பெயர் என்ன... அவர் காரில் சென்றுகொண்டிருக்கும் போது கேட்க.”

“என் பேர்... ராதா..”

“ரொம்ப அருமையான பெயர்... என் மனைவிக்கு பிடித்தமான பெயர்.” அவர் சொன்னதும், அவளுக்கு வேறு மாதிரியான நினைவலைகள் தாக்கியது.


“உன்னை ராதானு கூப்பிட்டா தான் எனக்கு பிடிக்கும்” ஒருவன் சொல்லியது இன்னும் நீங்கவில்லை அவள் மனதில் இருந்து.


“எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தா ராதானு பெயர் வைக்கலாமுனு இருந்தோம் , “ஆனா எங்க வாழ்க்கையில நான் ஒருத்தன் தான் பிள்ளையாய் பிற்ப்பேனு சொல்லிருந்ததால என்னை என் அம்மா, பாரட்டி, சீராட்டி வளர்த்தாங்க. ஆனா என் அப்பா மட்டும் என்னை திட்டிட்டே இருப்பாங்க” சசிதரன் பாதி பேசிகொண்டிருக்கும் போதே இடையிட்டு, பிரகாஷ் மீதிய அவளிடம் சொல்லி முடித்தான்.”


“அவனின் பேச்சில் சின்ன புன்னை வந்தாலும், அதை அவர்களு முன் காட்டாமல் அவளுள்ளே வைத்துகொண்டால்.”


“டேய் உன்னை பத்தி நீயே புகழ்ந்துக்ககூடாது. அதை எல்லாம் நான் சொல்லனும்”

“ஆமா, அப்படியே நீங்க சொல்லிட்டாலும், என்னை நீங்க போட்டியா தானே நினைக்குறீங்க... நீங்க வாங்காத கோல்டுமெடலை நான் வாங்கிட்டேனு உங்களுக்கு புறாமை” துளியும் பொறாமை இல்லாத தனது தந்தை வம்பிழுத்தான்.


”இவன் சொல்லறதை நம்பாதம்மா, என்னை பார்த்தா பொறாமை படுறவன் மாதிரியா தெரியது” என அவளை பார்த்து கேட்டார்.


“அவளோ, இல்லை” என தலையாட்டினால்.


“பார்த்துக்கோடா... அந்த பொண்ணு என்னை தான் நம்புது.” அவர் கூறியதில்.


“முன்னிருக்கையில், அமர்ந்திருந்தவன் அவள் அமர்ந்திருக்கும் பின்னிருக்கை திரும்பி பார்த்தான். அவன் பார்ப்பதை உணர்ந்தவள் தலையை குனிந்துகொண்டால்.”

“இப்படியே அவர்களின் பயணம் முடிவுக்கு வந்தது. சசிதரன் முன்கூட்டியே, அவரின் மனைவிடம் அந்த பெண்ணை அழைத்து வருவதாய் கூறினார். அவர்களுக்காகவே காத்திருந்தார் போல் வாசலிலே அவர்களை வரவேற்றார்.


“காரில் இருந்து தயங்கிகொண்டே இறங்கியவள். அவளின் தயக்கம் தேவை இல்லை என்பது போல் அவள் அருகில் வந்தார் சசிதரனின் மனைவி விசலாட்சி.”


“வாம்மா, வலி அதிகமா இருக்காம்மா, இப்போ உனக்கு ஒன்னும் இல்லையே...” அவரின் பாசத்திலான கேள்வியில் அவள், அவர் மீது மிகவும் மரியதை வந்தது.”


“வலி அதிகமா இல்லைம்மா, இப்போ நல்லா இருக்கு.”


”வா... வாம்மா... வாசல்ல நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் வாம்மா” அவளை அணைத்துகொண்டு அழைத்து சென்றார்.


“அம்மா, நேத்திருந்து பிள்ளையை காணமேனு கொஞ்சமாச்சும் கவலை இருக்கா, இப்போ வந்த பொண்ணு தான் உங்களுக்கு முக்கியமா போனலா..” அவனை கவனிக்காத அன்னையின் மீது கோவம் கொண்டான்.


“ அதான் நீ காரை விட்டு இறங்கின உடனே பார்த்தேன் டா.. நீ நல்லா இருக்க, உன்னால அடிப்பட்ட பொண்ணு தான் இப்ப எனக்கு முக்கியம்... உள்ள வாடா அரட்டை” அவனின் போலியான கோவத்தை கண்டு கொண்டு பேசினார்.


“ம்ம்ம்… பார்க்கிறேன்... இன்னும் எத்தனை நாள்னு அவ மேல பாசம்னு.” எப்பொழுதும் தன் மேலே பாசம் வைத்திருக்கும் அன்னை, இப்பொழுது இடையில் வந்தவள் மேல் பாசத்தை காட்டினால் அவனுக்கும் கோவம் வரும் தானே.”


” அவர்களுக்கு தெரியாது இவள் எதனால் இவர்களிடம் தஞ்சம் அடைந்தால் என்று. ஆனால் அடுதடுத்த சோதனையில் பெரிது பாதிக்கப்படுவது சக்தியா, ராதாவா???”

எதிர்ப்பார்க்கிறேன்……உன்னை…..???
 

karthukamuthupandi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோதரிகளே முதல் அத்தியாயம் போட்டுவிட்டேன் படித்துவிட்டு கருத்துகளை தயங்காமல் கூறலாம். சகோதரிகளே வேலை அதிகமாக இருக்கிறதால் வாரத்திற்க்கு ஒரு அத்தியாயம் தான் கொடுக்க முடியும்.
 

karthukamuthupandi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,..... சாரிப்பா வேலை அதிகம் அதனால் என்னால் யூடி கொடுக்க முடியவில்லை.....
இதோ அடுத்த யூடி.... மறக்காமல் கருத்தை சொல்லுங்க மக்களே....
 

karthukamuthupandi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்ப்பார்த்தேன் 2

“புது இடம், வீடு, ஆட்கள், பழகாத ஊர் என அவளின் கண்களுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. ஆனால் அவளின் நினைவுகள் மட்டும் பழயதை நினைத்துகொண்டே இருந்தது. பழகிய ஊரை விட்டு, புது ஊருக்கு, அதுவும் சொந்தமில்லாத உறவுகள், தன்னை அவர்களின் வீட்டு பெண் போல பார்த்துகொண்டிருக்கும் இவர்களின் அன்பை பார்க்கும் போது அவளது அன்னை தான் நினைவுக்கு வந்தார்.”


“என்னமா இங்க உக்கார்ந்திருக்க...” அவளின் நினைவுகளை தடை செய்தார் விசலாட்சி.


“அது... அது ஒன்னுமில்லாம்மா... இந்த இடம் பார்க்க ரொம்ப அழகாக இருக்கு அதான் பார்த்துட்டே உக்கார்ந்திருந்தேன்.


“அப்படியா... இந்த கார்டன் அழகாக பராமரிக்குறது என் மகன் தான். அவனுக்கு டெர்ஸா இருந்தா இங்க வந்திருவான், அந்த செடிகிட்டயும், ரோஜாகிட்டையும் அவன் மனதில் எந்த அழுத்தம் அதிகமா இருக்குமோ, அதை மனசு திறந்து பேசுவான். அப்போ தான் அவனுக்கு மனசுக்கு இலேசா இருக்கும்னு சொல்லுவான்.”


“அப்படியே, அவனுகு பழகிருச்சு... இன்னும் அப்படி தான் இருக்கான்”
“ஒரு மருத்துவனுக்குள் இப்படி ஒரு கலைஞனா என்பது போல் அவளது பார்வை. ஏன்னென்றால் அந்த தோட்டம் அழகாக இருந்தது.”



“என்னம்மா, வந்ததில இருந்து இவங்ககிட்டயே பேசிட்டு இருக்கேங்க. அப்போ உங்க கண்ணுக்கு நான் தெரியலையா.”


“டேய்... வீட்டுக்கு வந்திருக்க பொண்ணுக்கு புதுசா இருக்கும் இந்த இடம் ஊரு... அதான் என்னனு கேட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ள உன் மூக்கு வேர்த்திருச்சா.”


“ம்ம்ம்... அந்த பொண்ண உள்ள கூப்பிட்டு வாங்க. ஹெல்த் செக் பண்ணனும். ட்ரெஸிங் பண்ணிவிடனும் அதுக்கு தான் அவங்க தேடி அவங்க ரூம்க்கு போனேன். அங்க இல்லை, எப்படியும் என் கை வண்ணத்தில் உருவான என் தோட்டதை பார்க்க தான் இந்த பொண்ண கூப்பிட்டு வந்திருப்பேங்கனு கெஸ் பண்ணேன் கரெக்டா இருக்கீங்க.”


“ நான் எதுக்குடா போயும் போயும் இங்க அழைச்சுட்டு வரப்போறேன். பாவம் இந்த பொண்ணு தெரியாம இங்க வந்துட்டா அதான் இங்க எல்லாம் வந்தா கருப்பு அடிச்சிரும் சொல்லி கூப்பிட்டு போக வந்தேன். அவர் சிரிக்காமல் சொல்ல. அதை கேட்ட ராதா தான் சிரித்துகொண்டிருந்தால். அவளின் சிரிப்பில் இருவரும் ஒரு நிமிடம் வியப்பாய் பார்த்தனர்.”



“வந்த நாளில் இருந்து அமைதியாகவே காட்சியளித்தவள் இன்று தான் வாய்விட்டு சிரிக்கிறால். அதை பார்த்து தான் இருவரும் வியந்து நின்றனர்.”




“ நீ சிரிச்சா, அழகா இருக்கம்மா... எப்பவும் நீ இதே மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும்.” அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தார்.”



“அவரின், வார்த்தையில் தன்னை மறந்து அவரேயே பார்த்துகொண்டிருந்தால். நான் சிரித்து பேசிய நாட்கள் கடந்து வெகு நாளாகிவிட்டது.”



“அன்னையின் வார்த்தையில் அவள் முகம் ஏன் மாறுகிறது என புரியாமல் அவளேயே பார்த்தான். அவளது முகத்தில் ஏதோ ஒரு வேதனை அது என்னவாக இருக்கும்.” அவன் யோசிக்க ஆரம்பித்தான்.


“அவனது யோசனையை தடை செய்வது போல, அவனது அவனை அழைத்தார். ‘பார்த்து ட்ரெஸிங் பண்ணிவிடு டா... வலிக்க போகுது அந்த பொண்ணுக்கு.”


“ம்ம்ம்... சரிம்மா... ‘ நீ வா...’ அவளை அழைத்துவிட்டு முன்னே நடந்தான்.

“ நெற்றியில் இருந்த காயத்துக்கு மருந்திட்டு, பேண்டேஜ் போட்டு வலிக்காமல் ஒட்டினான். வெளி காயத்தின் வலியை போகிய அவனால், அவளின் மனக்காயத்தில் இருக்கும் வலியை அவனால் போக்க முடியுமா...”


“உனக்கு என்ன பிரச்சனை...” அவனின் திடுமென குரலில் அவள், அவனை நிமிர்ந்து பார்த்தால்.


“எ... என்ன... பிரச்சனை.”


“உனக்குள்ள இருக்குற பிரச்சனைய தான் கேட்டேன்.”


“அதெல்லாம்... ஒன்னுமில்லை” அவள் மறைக்க.


“அப்போ ஏன் உன் முகம் இவ்வளவு சோகமா இருக்கு”


“சிறு புன்னகையுடன், அவனைப் பார்த்து ‘என் சோகம், என்னுடையே போகட்டும்’

.
“ஒகே, உன் விருப்பம்.... ஆனா மனசுக்குள்ளயே எதையும் வச்சு பீல் பண்ணாத... அது உன் ஹெல்த்துக்கு நல்லதில்ல.”


“ம்ம்ம்...” அவன் அறையைவிட்டு வெளியே வந்தால்.



“இன்றோடு அவள் காணாமல் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. எந்த தகவலும் இல்லை அவளைப்பற்றி, எங்கு சென்றால், நன்றாக இருக்கிறாலா... இல்லை வேறு யாரிடமும் மாட்டிகொண்டு துன்ப்படுகிறாலா. என ஒன்றும் தெரியவில்லை.”




“அன்று இரவும் மட்டுமே அவளை சந்தித்த கடைசி இரவு. அதற்க்கு பின் கண்விழிக்கையில் அவள் என் கண்ணில் படவில்லை. பாவம் அந்த சூழ்நிலையிலும், அவள் தான் கொடுத்த அத்தனை பொருளையும் அங்கயே வைத்துவிட்டு சென்றால்.”



“மனம் முழுவதிலும் அவளது நினைவுகள் மட்டுமே. பெரிய தவறு செய்துவிட்டேன் நான். இனி என் கண்ணில் படுவாளா... இல்லையா. என தெரியவில்லை.”



“தினேஷ்... இன்னும் ஆபீஸ் கிளம்பலயாப்பா???” என கேட்டபடி வந்தார் கோமதி. அவனது பிரியமுள்ள பாட்டி, அன்னை.



“அவனோ அவரிடம் எதுவும் பேசாமல் தன் வேளையிலேயே கவன் கொண்டான்.”



“இன்னும் எங்க மேல கோவம் போகலையப்பா... பாட்டி செஞ்சது தப்பு தான்... ஆனா உன் வாழ்க்கை நாங்க பார்க்கனும்னு ஆசையில அப்படி ஒரு தப்பை நாங்க செஞ்சுட்டோம்.” அவர் கவலையில் சொல்ல.


“அவனுக்கோ, இன்னும் வருத்தமாக இருந்தது. அதை வெளிக்காட்டாமல் அமைதியாக ஆபீஸ் கிளம்பினான்.”



“வாசலில் அருகில் வந்ததும், எப்பொழுது திரும்பிப்பார்க்கு ரோஜா செடியை பார்த்தான். என்றும் அவள் அதன் பக்கத்திலே தான் இருப்பாள். ஆனால் இன்று ரோஜா செடி மட்டும் தான் இருக்கிறது, அவள் இல்லை.”



“இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த கோமதியும், வரதனும் இன்னும் வருத்தமானார்கள். எல்லாம் தங்களால் தான், தங்களது பேரனுக்கு ஏற்ப்பட்ட மனக்கவலை. இதை எப்படி சரி செய்வது என தெரியாமல் இருவரும் கவலையுடன் இருந்தனர்.”



எதிர்ப்பார்க்கிறேன்…….. உன்னை….

 
Status
Not open for further replies.
Top