All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிதுவின் "மிட்டாய் கனவுகள்" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

ரிது

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோஸ்த்ஸ்... எல்லாரும் நலமா? நான் ரிது... புதிதாக கதை எழுத முளைத்துள்ளவள்... இனி என் மண்டைக்குள் இருப்பவையெல்லாம் "மிட்டாய் கனவுகள்" வழியே உங்களை அடையும்...

கேட்டவுடன் கதை திரி அமைத்துக் கொடுத்த ஸ்ரீகலா அக்காவிற்கு மிக்க நன்றி😍😍😍
 

ரிது

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிட்டாய் கனவு டீசர் 1:

"இந்தா பொண்ணே… 2 சரம் போலோ, 2 சரம் நூடுல்ஸ் பாக்கெட், 10 அட்டை எலந்தவடை, 15 பாக்கெட் தேன் மிட்டாய், 5 பாக்கெட் பால்பன் இதெல்லாம் வேணும் கொடு…" என தோரணையாக அந்த முறுக்கு மீசைகாரர் கேட்டார்.

"ஏன் இந்த எள்ளடை, முறுக்கு, அதிரசம் பாக்கெட்டெல்லாம் வேணாமா?" என நக்கலாக அவள் கேட்டாள்.

அவள் அடித்த நக்கல் புரியாமல் "அதெல்லாம் வேணும்னா நாங்களே கேட்டு வாங்குவோம்… நேரமாகுதுல்ல கேட்டத சீக்கிரம் குடும்மா…" என அதட்டினார் அவளை.

பக்கத்து கடையில் இருந்த சாயபு 'நேரம் சரியில்லை' என நினைத்துக் கொண்டார்.(யாருக்கு????)

"இந்த கையில் காச வைங்க அந்த கையில சரக்கை எடுத்துட்டு போங்க…" என்றாள்.

நுவலி பேசியதை கேட்டவருக்கு கோபம் வர

"சின்னப்பிள்ள வெள்ளாம வீடு சேராதுன்றது சரி தான் போல… உன் அப்பா காலத்துல இருந்து நான் வியாவாரி மா… பொருள் வித்தாதான் காசு… தெரியும்ல்ல.." என்றார்.

"அதெல்லாம் எனக்கு எதுக்குங்க… காசு கொடுத்தா தான் சரக்கு கிடைக்கும்… முழு காசும் கொடுக்காட்டியும் பாதி காசும் கொடுத்தா தான் சரக்கு…" என காரமாக பேசினாள் மிட்டாய் கடைக்காரி.


சிறு பெண் தானே ஏமாற்றி எல்லாவற்றையும் கடனுக்கு வாங்கி செல்லலாம் என நினைத்தார் அவர். ஆனால் நுவலி அவர் எதிர்பார்த்ததை போல் இல்லாது இருக்கவும் மறுபடியும் வேறு ஒரு முயற்சியில் இறங்கினார்.

"ஏம்மா… நான் உன் அப்பா காலத்துல இருந்து வியாவாரம் பாக்குறேன் என் மேல நம்பிக்கை கிடையாதா??" என சென்டிமென்டலாய் ஒரு போடு போட்டார்.

"எங்க அப்பா காலத்துல எல்லாரும் நல்லவங்களா நம்பிக்கைக்கு உரியவங்களா இருந்தாங்க… என் காலத்துல அப்படி யாரையும் நான் பாக்கல… காச கொடுங்க சரக்க எடுங்க…" என்றாள் முடிவாக.

தன் பப்பு இவளிடம் வேகாது எனப் புரிந்தவர் மொத்தமாக காசை கொடுத்து சரக்கை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்.

##################

புத்தாண்டு அன்று முதல் அத்தியாயத்துடன் வருகிறேன் தோஸ்த்ஸ்... டீசரை படித்து விட்டு பிடித்திருக்கின்றதா என ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செல்லுங்கள்...
 

ரிது

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் இனிய தோஸ்த்களுக்கு இனிய காலை வணக்கம்மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. சொன்னது போலவே புத்தாண்டு அன்று என் புது கதையோட முதல் அத்தியாயத்தோட வந்துட்டேன் தோஸ்த்ஸ்.படிச்சுட்டு உங்க கருத்தை கருத்தா சொல்லிட்டு போங்க..

அத்தியாயம் 1

திருச்சிராப்பள்ளி
காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. இதைப் பொதுவாகத் திருச்சி(Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்று.

இங்கு பெல் (BHEL),துப்பாக்கி தொழிற்சாலை, பாய்லர் தொழிற்சாலை என தொழிற்சாலைகளுக்கு குறைவு இல்லை.

மேலும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கமும் இங்கு தான் அமையப் பெற்றுள்ளது.

திருச்சி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மலைக்கோட்டை தான். தாயுமானவரையும் உச்சி பிள்ளையாரையும் ஒருங்கே ஓரிடத்தில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இடமே மலைக்கோட்டை.

அந்தி மாலை ஆதவன் மறையும் ஏகாந்த வேலையில் சில்லென்று காவேரியை உரசி வரும் காற்றிறோடு மலைக் கோட்டையின் உச்சியிலிருந்து பார்க்கும் போது தெரியும் மொத்த திருச்சி மாநகரத்தின் எழிலை வர்ணிக்க வார்த்தைகள் ஏது!!

ஷபாஆஆஆ போதும்மா உன் வர்ணனை.ரொம்ப போர் அடிக்குது அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழுந்ததால் நாம திருச்சியோட அருமை பெருமையை இத்தோடு நிப்பாட்டிட்டு கதைக்குள் போலாம்.

திருச்சி கன்டோன்மென்ட் சாலையில் முற்பகல் பதினொரு மணி.வாகனங்கள் சர் சர்ரென்று வேகமாய் சென்று கொண்டிருக்க கிடைக்கும் சிறு இடைவெளியில் சாலையை கடக்க பொதுமக்கள் முயன்று கொண்டிருக்க போக்குவரத்தை ஒழுங்கு செய்ய வந்தேன் என்ற பெயரில் திடீரென்று வந்து நின்ற போக்குவரத்து காவலர் கன்டோன்மென்ட் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களை நிறுத்தி ஓரங்கட்ட செய்தார்.

"சார் ஆபிஸ்க்கு லேட் ஆச்சு சார். லைசன்ஸ், ஆர்.சி புக் எல்லாம் கரெக்டா இருக்கு சார் .ஹெல்மெட் கூட போட்டு இருக்கேன்‌.விட்ருங்க சார்" என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.

"எல்லாம் ஒழுங்கா பண்ண நீ வேகமா வந்துட்டியே பா. இவ்வளவு வேகம் தப்பு தம்பி‌. ஒழுங்கா ஃபைன் கட்டு" என்று தன்னை ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்று காட்டினார் அந்த போக்குவரத்து காவலர்.

"சார் நூறு ரூவா தான் சார் இருக்கு. இதை வச்சுக்கோங்க சார்"

"என்னய்யா உன்னோட ரோதனையா போச்சு.சரி சரி குடுத்துட்டு போ" என்று அதை வாங்கி தன் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டவர் அடுத்த வண்டியை நிறுத்தி

"ஏன் ஹெல்மெட்டு போடலை.கட்டுய்யா ஃபைனை" என்று கடமை,கண்ணியம் ,கட்டுப்பாட்டை அந்த டூவீலர் காரனிடம் காட்டிக் கொண்டிருக்க அவனோ அந்த மாநிலத்தை ஆளும் ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர் என்ற அடையாள அட்டையை காட்ட அடுத்த நிமிடம் காவல்துறை தன் கடமையை செய்தது.

அந்த கடமை என்னவென்றால் டூவீலரை சல்யூட் அடிக்காத குறையாக அப்படியே அனுப்பி விடுவது தான்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவர்களை விட அதிகாரத்தில் இருப்பவர்களிடம் தவறே செய்திருந்தாலும் சரியென்று ஏற்று கொள்வார்கள். அடிமட்ட சாதாரண மக்கள் செய்யும் சின்ன தவறையும் பெரிதாக காட்டி புரட்டி எடுத்துடுவிடுவார்கள். இதெல்லாம் இங்க காலம் காலமா நடப்பவை தானே.

நம்ம ஆபிசர் வேறு இன்றைக்கு இத்தனை பேருக்கு ஃபைன் போட்டே ஆக வேண்டும் என உறுதிமொழி எடுத்தவர் போல் போற வர வண்டியை எல்லாம் நிறுத்தி ஃபைன் போடுவேன் ஃபைன் போடுவேன்னு பந்தா காட்டுறாரே தவிர ஒருமுறை கூட அந்த ஃபைன் புக்கை திறந்தது என் கண்ணுல கூட படவில்லை. (நீங்க பாத்தா சொல்லுங்க)

இதுல என்ன கொடுமையென்றால் நடக்கும் அனைத்தையும் வீடியோவா ரெகார்ட் பண்ணிட்டு இருக்கு ஒரு கும்பல்.பாவம் இது ஆபிசருக்கு தெரியல. இன்னிக்கு என்ன ஆக போறாரோ!! (ம்ம்ம்… சிக்கினா சிதறு தேங்காதான்)

"எம்மா ஏய் நிறுத்தும்மா..பீக் ஹவர்ஸ்ல இப்படியா வேகமா வருவ" என்று பச்சை கலர் டி.வி.எஸ் எக்சலில் வந்த அந்த பச்சைக்கிளியை நிறுத்தினார் அந்த ஆபிசர்.

இன்னிக்கு அவருக்கு ஏழரை உச்சத்துல இருக்கு போல..யாரு கிட்ட என்ன பண்ணுறோம்னு தெரியாமயே பண்ணுறாரு.

தன்னை நிறுத்திய போக்குவரத்து காவலரையும் அதற்கு அவர் சொன்ன காரணத்தையும் கேட்டு "லூசாப்பா நீ" என்று பார்த்தாள் அந்த பச்சைக்கிளி.

பின்னே டி.வி.எஸ்.எக்சலில் ஹை ஸ்பீடில் வந்தாய் என்று சொன்னால் இது அந்த ஹூண்டாய் கம்பெனிக் காரனுக்காவது அடுக்குமா?

ஆமா டி.வி‌.எஸ் க்கும் ஹூண்டாய்க்கும் என்ன கனெக்சன்னு தானே கேட்குறீங்க?அது எதுக்கு நமக்கு?ஒரு ஃப்ளோல சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது சரியா?(ஷபாஆஆ எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)

"என்னம்மா என்ன அப்படி பாக்குற.எடு லைசன்சை" கடமை கண்ணாயிரமாய் கேட்க

புருவத்தை ஒற்றை விரல் கொண்டு தேய்த்துக் கொண்டே முகத்தை சுருக்கிய அந்த பச்சைக்கிளி தன் லைசன்சை எடுத்து நீட்ட அதை சரிபார்த்தவர் "ஆர்.சி புக் எடுமா' "இன்ஷூரன்ஸ் எடும்மா" என்று அவளை பட்டுப் புடவை எடுக்க சொன்னது போல் பாடாய் படுத்தி வைத்தார்.

"இன்ஷூரன்ஸ் வீட்ல இருக்கு சார்.கொஞ்சம் இருங்க என் தம்பியை எடுத்துட்டு வர சொல்றேன்" என்று அவள் போனை எடுக்க

"இன்ஷூரன்ஸ் வீட்ல இருக்குன்னா நீயும் வீட்லயே இருந்துக்க வேண்டியது தானே.எதுக்கு வெளியே வர" என்று அலட்டியவர் "சரி சரி பாக்க பாவமா இருக்கு.ஒரு ஐநூறு ரூவா குடு" என்று கேட்டார்.

"சரிதான்.நான் வீட்டுலயே இருந்து இருந்தா உங்களுக்கு இன்னிக்கு ஐநூறு ரூவா கிடைச்சு இருக்காதுல்ல.யாரு பெத்த பிள்ளைக்கோ தர்மம் பண்ணனும்னு எனக்கு எழுதி இருக்கு"தோள்பட்டையில் முகத்தை இடித்து கொண்டே சொன்னாள்.

"என்னம்மா தர்மம் அது இதுங்குற"என்று ஆபிசர் எகிற

"ரசீது கொடுத்து வாங்குனா அதுக்கு பேரு ஃபைன்‌.ரசீது கொடுக்காம வாங்குனா அதுக்கு பேரு தர்மம்.நான் சரியா தான் சொல்லி இருக்கேன்.சரி இப்ப நீங்க சொல்லுங்க ஃபைன் வேணுமா தர்மம் வேணுமா"

அவளை ஆவென்று வாயைப் பிளந்து பார்த்தார் ஆபிசர்.யாரும் இப்படி அவரின் முன்னால் பேசியது இல்லையே!

ரசீது கொடுத்து வாங்கினால் அது டிபார்ட்மென்ட்க்கு சென்று விடும்‌.ரசீது கொடுக்காமல் வாங்கினால் பாக்கெட்டுக்குள் பாதுகாப்பாக சென்று விடும்.

ஒன் ப்ளஸ் ஒன் ஈக்வல்ஸ் டு டூ என்று கணக்கு போட்டவர் "நீ தர்மமே பண்ணும்மா" என்று தயங்காமல் கேட்டார்.

அவரை கேவலமாக ஒரு லுக்கு விட்ட நம் பச்சைக்கிளி "ஐநூறு ரூவா தர்மம் பண்ணுறதுக்கு நான் ஒன்னும் அம்பானி பரம்பரையில பொறந்து வளரலை.இருநூறு ரூவா தான் இருக்கு.வேணுமா வேணாமா?" என்று பேரம் பேச

மூஞ்சி மூஞ்சூறு போல் சுருங்கினாலும் "சரி கொடும்மா" என்று கையை நீட்டவே செய்தார்.

அவர் நீட்டிய கையைப் பார்த்து சிரித்தவள் "ஒத்த கையை மட்டும் நீட்டுனா எப்படி.ரெண்டு கையும் நீட்டுங்க" என்று அவரின்‌‌ இரு கையையும் யாசகம் கேட்பது போல் வைத்தவள் தன் எக்சலின் முன் கம்பியில் மாட்டி இருந்த கட்டைப் பையினுள் கை விட்டு எடுத்தாள் அந்த பொட்டலத்தை.

"கிண் கிண் கிணிங்" என்று சில்லரைச் சத்தம் கேட்க வெயிட்டான அந்த சில்லரைகளை சேர்த்து வைத்திருந்த பொட்டலத்தை கவிழ்த்து காவலரின் கையில் கொட்டினாள் பச்சைக்கிளி.

"யம்மா என்னம்மா என்ன பிச்சக்காரனாவே மாத்திட்ட" என்று பரிதாபமாய் கேட்டார் ஆபிசர்.

"என்னா பண்றது சார்?இருக்கறதை தானே கொடுக்க முடியும்.வேணாட்டி போங்க" என்று சில்லரையை கொட்டுவதை நிறுத்த

"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ கோபப்படுற.சரி சரி அந்த பொட்டலத்தோட குடும்மா" என்று கூச்சமே படாமல் கேட்க

"அஸ்கு புஸ்கு.‌இருநூறு ஓவா உங்களுக்கு தர்மம் பண்ணுறதும் இல்லாம பொட்டலத்தை வேற கொடுக்கனுமோ.அதுக்கு வேற ஆளைப் பாருங்க" என்றவள் அவரின் இரு கைகளும் கொள்ளாத அளவிற்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்,ஐந்து ரூபாய்,பத்து ரூபாய் சில்லரைகளை கொட்டினாள்.

ஆபிசர் அதை கோவில் பிரசாதத்தை கையில் ஏந்துவது போல் பயபக்தியுடன் ஏந்த அதை அழகாய் படம் பிடித்துக் கொண்டது அந்த கேமரா.

"ஏம்மா எண்ணிக்கை சரியா இருக்குமா?"

"அவ்ளோ சந்தேகம் இருந்தா இங்கேயே உக்கார்ந்து எண்ணுங்க" என்று ஏத்தமாய் பச்சைக்கிளி பதில் கொடுக்க

"எனக்கு இது தேவை தான் " என்று மானசீகமாக மனதில் நொந்தவர் " ஆத்தா மகமாயி நீ கிளம்பு தாயே மொதோ" என்று கையெடுத்து கும்பிடாத குறையாக கெஞ்சினார்.(கை முழுக்க சில்லறைய வச்சிருக்கீங்களே ஆபிசர்.அப்புறம் எப்படி கையெடுத்து கும்பிடுவீங்க)

"அது!!" என்பது போல் பார்த்தவள் தன் எக்சலை எட்டி உதைத்து கிளம்பி சென்றாள் வேகமாக ஆபிசருக்கு டாட்டா காட்டிக் கொண்டே.

இவ்வளவு நேரம் இங்கு நடந்த கூத்தை சுவாரசியமாய் பார்த்த அந்த இரு விழிகளும் தங்களின் கேமராவினுள் அதை பத்திரமாய் பதுக்கி கொண்டவர்கள் தங்களின் இருப்பிடம் நோக்கி செல்ல நாம் நம் பச்சைக்கிளியை பின்தொடர்வோம்.

ஆமா அது என்ன சும்மா அந்த பிள்ளையை பச்சைக்கிளின்னே சொல்ற.ஏன் அதுக்கு பேரு இல்லையான்னு தானே கேட்குறீங்க.இதோ கொஞ்ச நேரத்துல அது தெரிஞ்சுடும்.

கன்டோன்மெண்ட் சாலையை புயல் வேகத்தில் கடந்து ஆர்‌.ஜே‌‌.நகர் இரண்டாவது குறுக்கு தெருவினுள் நுழைந்த எக்சல் அந்த தெருவிலுள்ள வெள்ளை பெயிண்ட் அடித்த ஆறாவது வீட்டின் வாயிலின் முன் அமர்த்தலாய் நின்றது.

ஒற்றை மாடியுடன் கூடிய அந்த வீட்டை அண்ணாந்து பார்த்தவள் "ரெங்கநாயகி இல்லம்" என்று எழுதி இருந்ததைப் பார்த்து வழக்கம் போல் மனதில் ஒலித்த "ரங்கு ரங்கம்மா ‌‌..எங்க ரத்தம் உரியும் ரங்கம்மா" என்ற பாடலை தனக்கேற்றவாறு பாடிக் கொண்டே உள்நுழைந்தாள்.

"வாடியம்மா நுவலிஈஈஈ..இப்ப தான் என் வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு தெரிஞ்சுச்சா வழி..சீக்கிரம் உன் அக்காவை கூட்டிட்டு இங்க இருந்து போய் ஒழி" என்று அடுக்கு வசனம் பேசினார் ரெங்கம்மாள்.(ஓ அந்த ரங்கு ரங்கம்மா..நீங்க தானா?அம்மையார் டீ.ஆர் ரசிகையோ)

அவருக்குப் பதில் சொல்லாமல் மேலும் கீழும் அவரைப் பார்த்தவள் "என்னைப் பேச வைக்காதே‌‌..நான் கண்டபடி பேசி புடுவேன்" என்று பாட்டாலேயே அவருக்குப் பதில் கொடுத்து விட்டு சாவகாசமாக வீட்டினுள் நுழைந்தாள்.

"இவளுக்கு திமிரு மட்டும் குறையுதான்னு பாரு" என்று புசு புசுவென்று மூச்சு விட்ட ரெங்கம்மாள் அவள் பின்னேயே சென்றார்.

அங்கோ நுவலியின் அக்கா யாழிசை கண்ணை கசக்குவதோடு மட்டுமல்லாமல் கையில் சுருட்டி வைத்திருந்த புடவை முந்தானையையும் கசக்கிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

நுவலியைக் கண்டதும் கரும்புக் காட்டை கண்ட யானையைப் போல் மகிழ்வு பாதி நிம்மதி மீதியாய் நுவலியைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள் யாழிசை‌.

தன்னை அணைத்துக் கொண்டு மறுபடியுமாய் கண்ணைக் கசக்கத் தொடங்கிய யாழிசையைப் பார்த்து "அக்கா ஏன் அழறே..அழாதே அதான் நான் வந்துட்டேன் இல்ல.எல்லாம் சரியாகிடும்" என்று ஆறுதல் சொன்னாள் என்று நீங்கள் எண்ணினால் அது மிகவும் தவறு.

"இங்காரு உன் புடவையை கசக்குனதோட இல்லாம என் சுடிதாரையும் கசக்க ஆரம்பிச்சுட்டியா.மொதோ விலகி நில்லு நீ‌.போன தீவாளிக்கு எடுத்த துணி நீ இந்த கசக்கு கசக்குனீனா என்ன ஆவுறது அது?" என்று அக்காவை அதட்டியவள்

"எல்லாம் எடுத்து வச்சிட்டியா?அப்படின்னா கிளம்பு போலாம்.எனக்கு வேலை கெடக்கு" என்று யாழிசையின் கையைப் பற்றி நடக்க துவங்க தான் எதிர்பார்த்தது நடக்காததால் கோபத்தில் கொதித்த ரெங்கம்மாள் "ஏ நில்லு நில்லு‌.என்ன நீ பாட்டுக்கு வந்த உங்கொக்கா கையைப் பிடிச்சு இழுத்துட்டு போற.நான் எதுக்காக அவளை வந்து கூட்டிட்டு போவ சொன்னேன்னு கேட்க மாட்டியா?" என்று அதிகாரமாய் கேட்க

"ஏன் கேட்கனும்ங்குறேன்.மாசமா இருக்க பொண்ணு அம்மாவைப் பாக்க ஆசைப்பட்டு இருப்பா.அதான் வந்து கூட்டிட்டு போவ சொல்லி இருக்கீங்க.இதைக் கேட்டு வேற நான் தெரிஞ்சுக்கனுமாக்கும் " என்று நுவலி நொடிக்க

"வித்தாரக்கள்ளி கதையவே மாத்திப் புட்டாளே" என்று வியந்தவர்

"நான் ஒன்னும் அதுக்காக அனுப்பலை.எதுக்கு அனுப்புறேன்னா" என்று இவர் ஆரம்பிக்க "போதும்" என்பது போல் கையை உயர்த்தி அவர் பேச்சை தடை செய்த நுவலி

"எப்படியும் ஒரு திரைக்கதை எழுதி இருப்பீங்க.அதை எதுக்கு தனியா சொல்லிக்கிட்டு.சாயங்காலம் உங்க மவனைக் கூட்டிட்டு சாவகாசமா எங்க வீடு தேடி வந்து அம்மாவும் மகனுமா சொல்லுங்க.நாங்க ஊம் கொட்டி கேட்குறோம்.இப்ப எனக்கு நிறைய வேலை கெடக்கு" என்றவள் அங்கு மேலும் நிற்காமல் தன் அக்காவை இழுத்து எக்சலில் அமர வைத்து போயே விட்டாள்.

ரெங்கம்மாள் தான் "அவள் பறந்து போனாளே..என் பேச்சைக் கேட்காமல் போனாளே " என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தார்.

பின்னர் மனதை தேற்றயவராய் "இருடி மகளே‌.சாயங்காலமா என் மகனைக் கூட்டிட்டு வந்து வச்சுக்குறேன் கச்சேரியை "என்று கருவிக் கொண்டு உள்ளே சென்றார்.

ஆக மொத்தம் சாயங்காலம் ஒரு கதாகலேட்சபம் இருக்குன்னு சொல்லுங்க.

கருத்துத் திரி
 

ரிது

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிட்டாய் கனவுகளின் இரண்டாவது அத்தியாயத்துடன் வந்துட்டேன் தோஸ்த்ஸ் 😘

அத்தியாயம் 2

கையில் இருந்த மொபைலில் மூன்றாவது முறையாக அந்த வீடியோவை பாஸ் பண்ணி பாஸ் பண்ணி சிரித்துக் கொண்டிருந்தனர் அந்த அறையில் இருந்த அனைவரும்.

அவர்கள் சிரிப்பதை தனியாக சேரில் அமர்ந்துக் கொண்டு விரிந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் நவிலோன். அந்தக் காணொளியை எடுத்தவன்.

அந்த காணொளியில் விறைப்பாய் பேசிக் கொண்டிருந்த போலீஸ் ஆபிசர் ஒருவர் கை நிறைய சில்லறைக் காசோடு நின்றுக் கொண்டிருந்தார். ஆம் நீங்கள் நினைப்பது சரியே.

பச்சைக் கிளியோடு மல்லுக்கட்டி நொந்து நூலாகிப் போன அந்த கண்ணியமிகு காவல் அதிகாரி தான் அது. நுவலி சில்லரையை அவர் கையில் கொட்டியபடி இருந்த இடத்தை நிறுத்திவிட்டு அனைவரும் வெடி சிரிப்பு சிரித்தனர்.

"டேய் அடங்குங்கடா… எடிட் வந்தர்ற போறாரு…" என்றான் மெதுவாக.

"டேய் சத்தியமா முடில மச்சான்… ஆனா செம்ம தில்லுடா இந்த பொண்ணுக்கு…" என கண்களில் சிரித்து சிரித்து நீர் வர வயிற்றை பிடித்துக் கொண்டு சொன்னான் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

"யார்ரா இந்தப் பொண்ணு??? ஷப்பா முடியல…" என சிரித்துக் கொண்டே ஒரு பெண்ணும் கேட்டாள்.

"யாருக்கு தெரியும்?? வீடியோ எடுக்கும் போது அதா வந்துச்சு…" என்றவன் எக்கி ஒரு முறை அவளை வீடியோவில் பார்த்தான்.

"ஆனாலும் பொண்ணு செம்மையா இருக்கால்ல…" என்க அந்த அறையே அமைதியை தத்தெடுத்தது. மொபைலை எக்கி கையில் எடுத்தவன்

"ம்ம்ம் சும்மா சொல்லுக் கூடாது பச்சைக்கிளி அழகாவே இருக்கு…" என்றான் கண்களில் ரசனையுடன். அங்கிருந்த மொத்த பேரும் அவனை பரிதாபமாக பார்த்தனர்.

"மிஸ்டர். நவிலோன் கம் டூ மை கேபின் வித் தட் வீடியோ…" எனக் கடுமையாக ஒரு குரல் ஒலிக்க அவன் திரும்பி பார்க்க அங்கே அவனால் எடிட் என அழைக்கப் பட்டவர் நின்றுக் கொண்டிருந்தார்.

நாற்பதுகளின் மத்திமத்தில் பார்மல் லுக்கில் படு புரொபசனலாக இருந்தார் சம்பத் (எடிட்). பார்த்த உடனே தெரிந்தது ஆள் ஸ்ரெயிட் பார்வர்ட் என்று. அவரின் பின்னே பம்மிக் கொண்டு போனான் நவிலோன்.

"கிவ் மி தட் வீடியோ…" என கையை எடிட் நீட்ட பயபக்தியுடன் தன் செல்போனை நீட்டினான் நவி.

வீடியோவை ஓட விட்டு பார்த்தவர் சில்லறையை கொட்டும் இடம் வந்ததும் அவராலும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து வைத்துவிட்டார்.

"ஷ்ஷ்ஷ்ஷ்… மெதுவா எடிட்… வெளில எல்லாரும் உன்ன ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்னு நினைச்சிட்டு இருக்காங்க…" என சம்பத்திடம் கூறியவாறே ஸ்டைலாக ரோலிங் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான் நவிலோன்.

"சீராய் மலர்"

சீராய் மலர் திருச்சி வட்டாரத்தின் வாராந்திர நாளேடு. வாரம் இருமுறை பிரசுகரிக்கப்படும். இது ஒரு நடுநிலையான பத்திரிக்கை என்பதால் திருச்சியில் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளது. அதில் தான் நம் கதாநாயகன் பத்திரிக்கையாளனாக பணி புரிகின்றான். அதன் எடிட்டர் தான் சம்பத்.

மற்றவர்களிடம் ஸ்ரிக்ட் ஆபிசராக நடந்து கொண்டாளும் நம் நவிக்கு மட்டும் பாசமிகு அண்ணன். இரத்த பந்தம் இருவருக்கும் இடையே இல்லையென்றாலும் ஒத்த அலைவரிசையினால் இருவரும் அண்ணன், தம்பி போல பழகுவார்கள். ஆனால் இதை ஒரு போதும் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

"எடிட் இந்த வார தலையங்கத்தில இதை போட்டறலாம்…" என்றான் நவி.

"தலையங்கத்துல வர்ற அளவிக்கு இது இம்பார்ட்டன்ட் இல்ல நவி…" என்றார் சம்பத் கண்ணாடியை லேசாக சரி செய்துக் கொண்டு.

"இம்பார்ட்டன்ட் தான் எடிட்…" என்றான் நவி அழுத்தமாய்.

சம்பத் எதுவும் பேசாது அவனையே பார்த்தார். நவிலோனிடம் பாசமாக பழகினாலும் வேலை விசயத்தில் சம்பத் கொஞ்சம் கறார் தான். ஒரு சாதாரண விசயம் தலையங்கத்தில் இடம் பெற வேண்டுமா? என்பது போல் பார்த்தார் சம்பத்.

இராதா பின்னே. தலையங்கம் என்பது ஒவ்வொரு பத்திரிக்கையிலும் முக்கியமானது ஆகும். இந்த தலையங்கத்திற்கெனவே வாசகர் வட்டமும் உண்டு. இந்த தலையங்கமானது கருப்பொருள், விளக்கம், முடிவு என மூன்றாய் பிரிக்கப்படும். இதையும் விட முக்கியமான விசயம் அந்த பத்திரிக்கையின் எடிட்டரும் சாமானிய வாசகரும் சந்தித்துக் கொள்ளும் பகுதி இது தான். ஆகையாலே இதற்கு இத்தனை முக்கியத்துவம்.

சம்பத்தின் பார்வையை உணர்ந்த நவிலோன் தன் தரப்பு விளக்கத்தை கூறலானான்.

"நம்ம நாட்டுல லஞ்சம் வாங்குறதோ, இல்ல லஞ்சம் குடுக்கறதோ பெரிய விசயமில்ல… அதை குடுக்கிற விதத்துல இந்த நியூஸ் இம்பார்ட்டன்ட்டா இருக்கு… பொதுவா இந்த மாதிரி லஞ்சம் வாங்குறவங்க தான் தான் பெரிய ஆள்னு நடந்துப்பாங்க… ஆனா இந்தப் பொண்ணு கொஞ்சம் கூட பயப்படாம அந்த ஆளை பிச்சக்காரன் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணிருக்கா… இட்ஸ் குவைட் டிப்பரன்ட் எடிட்… சோ இதையே தலையங்கமா போடலாம்…" என்றவன் இன்னும் விதவிதமாய் பேசி சம்பத்தை சம்மதிக்க வைத்தான்.

"இவ்வளவு சொன்னியே இதுக்கு பேரையும் நீயே சொல்லிடு டா…" என சம்பத் சிரித்துக் கொண்டே சொல்ல

"நவீன பிச்சைக்காரர்" என அசராமல் சொன்னான் நவி.

"சரிதான்டா… ஒரு முடிவுடோ தான் இருக்க…" என சிரித்துக் கொண்டே சொன்ன சம்பத் "வரவர ஓவரா சைட் அடிக்கற… அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பாக்க சொல்லவா???" என கிண்டலாக கேட்டார்.

"நான் கொஞ்சம் ப்ரீயா இருக்கறது உங்களுக்கு பொறுக்கலையா தெய்வமே" என வேறு யாராவது இருந்தால் சொல்லியிருப்பார்கள் ஆனால் நம் நவி அப்படி சொல்லக் கூடிய ஆளா என்ன?

"சீக்கிரம் அதை செய்யுங்க… எவ்வளவு நாள் தான் ஒத்தையா சுத்துறது… சிங்கிள் டூ மிங்கிள் ஆக வேண்டாமா?? அவன் அவன் பிள்ளக்குட்டியோட சுத்திட்டு இருக்கான் இப்ப தான் எனக்கு பொண்ணு பாக்கப் போறேன்றிங்க அப்பறம் எப்படி இந்தியா வல்லரசாகவும்… சோ டிஸ்கஸ்டிங்…" என நவி பேசிக் கொண்டே செல்ல

"போடா போய் வேலைய பாரு…" என்றுவிட்டு சம்பத் வேறு வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

"எடிட்…" என நவி கூவ

"வேலை பாக்கிறியா இல்ல பியூனா கூப்பிடவா??" என சம்பத் கேட்க சத்தமில்லாமல் வேலையை பார்க்க சென்று விட்டான் நவிலோன்.

யாழிசையை கொண்டு போய் தன் வீட்டில் விட்ட நுவலி சின்னகடைத் தெருவில் உள்ள தன் கடைக்கு சென்றாள்.

யாழிசையை கண்டு பதறிய தன் அன்னை சாந்தமதியிடம் "எதா இருந்தாலும் சாயங்காலம் பேசிக்கலாம் இப்ப கடைக்கு போறேன்… மதியத்துக்கு ஓவியன்கிட்ட குடுத்து விடு கிளம்பறேன்…" என்றுவிட்டு கடைக்கு கிளம்பி விட்டாள்.

"நிலவறை"

சின்னக் கடைவீதியிலிருக்கும் நம் ஹீரோயின் நுவலியின் மிட்டாய் கடை. மிட்டாய் கடையென்றால் மிட்டாய் மட்டுமல்ல கார வகைகளும் இன்னும் சில சில்லரை சாமான்களும் அங்கு விற்கப்படும்.

தந்தை இறந்த பிறகு வாழ்க்கையில் சிலரை நம்பி ஏமாந்த பின் குடும்பத்திற்காக படிப்பை நிறுத்தி விட்டு கடையில் அமர்ந்து விட்டாள் நுவலி. பள்ளி படிப்போடு நின்று விட்டாள் அவள்.

தேன் மிட்டாய் பாக்கெட்டுகளை நுவலி எடுத்து அடுக்கிக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளை வேட்டி சட்டையில் முறுக்கு மீசையுடன் ஆஜான பாகுவாய் ஒருத்தவர் வந்தார். வந்தவர் அவளிடம்

"இந்தா பொண்ணே… 2 சரம் போலோ, 2 சரம் நூடுல்ஸ் பாக்கெட், 10 அட்டை எலந்தவடை, 15 பாக்கெட் தேன் மிட்டாய், 5 பாக்கெட் பால்பன் இதெல்லாம் வேணும் கொடு…" என தோரணையாக அந்த முறுக்கு மீசைகாரர் கேட்டார்.

"ஏன் இந்த எள்ளடை, முறுக்கு, அதிரசம் பாக்கெட்டெல்லாம் வேணாமா?" என நக்கலாக அவள் கேட்டாள்.

அவள் அடித்த நக்கல் புரியாமல் "அதெல்லாம் வேணும்னா நாங்களே கேட்டு வாங்குவோம்… நேரமாகுதுல்ல கேட்டத சீக்கிரம் குடும்மா…" என அதட்டினார் அவளை.

பக்கத்து கடையில் இருந்த சாயபு 'நேரம் சரியில்லை' என நினைத்துக் கொண்டார்.(யாருக்கு????)

"இந்த கையில் காச வைங்க அந்த கையில சரக்கை எடுத்துட்டு போங்க…" என்றாள்.

நுவலி பேசியதை கேட்டவருக்கு கோபம் வர

"சின்னப்பிள்ள வெள்ளாம வீடு சேராதுன்றது சரி தான் போல… உன் அப்பா காலத்துல இருந்து நான் வியாவாரி மா… பொருள் வித்தாதான் காசு… தெரியும்ல்ல.." என்றார்.

"அதெல்லாம் எனக்கு எதுக்குங்க… காசு கொடுத்தா தான் சரக்கு கிடைக்கும்… முழு காசும் கொடுக்காட்டியும் பாதி காசும் கொடுத்தா தான் சரக்கு…" என காரமாக பேசினாள் மிட்டாய் கடைக்காரி.


சிறு பெண் தானே ஏமாற்றி எல்லாவற்றையும் கடனுக்கு வாங்கி செல்லலாம் என நினைத்தார் அவர். ஆனால் நுவலி அவர் எதிர்பார்த்ததை போல் இல்லாது இருக்கவும் மறுபடியும் வேறு ஒரு முயற்சியில் இறங்கினார்.

"ஏம்மா… நான் உன் அப்பா காலத்துல இருந்து வியாவாரம் பாக்குறேன் என் மேல நம்பிக்கை கிடையாதா??" என சென்டிமென்டலாய் ஒரு போடு போட்டார்.

"எங்க அப்பா காலத்துல எல்லாரும் நல்லவங்களா நம்பிக்கைக்கு உரியவங்களா இருந்தாங்க… என் காலத்துல அப்படி யாரையும் நான் பாக்கல… காச கொடுங்க சரக்க எடுங்க…" என்றாள் முடிவாக.


தன் பப்பு இவளிடம் வேகாது எனப் புரிந்தவர் மொத்தமாக காசை கொடுத்து சரக்கை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்.

ஆரம்பத்தில் யார் கடன் கேட்டாலும் கொடுத்துவிட்டு பணத்தை வசூலிக்க தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள் அறியாப் பெண். அப்பொழுதெல்லாம் பக்கத்து கடை சாயபு தான் யார் யாரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் எப்படி பேச வேண்டும் என சொல்லிக் கொடுத்ததெல்லாம். சுருங்கச் சொன்னால் நுவலிக்கு தொழில் முறை குரு சாயபு தான்.

சாயபு நுவலிக்கு எதிரில் தான் வாசனை திரவியக்கடை வைத்துள்ளார். 26 வருடங்களாக கடை நடத்தும் வியாபரி. ஒருவரை பார்த்த மாத்திரத்திலே அவர் அந்த பொருளை வாங்குவாரா மாட்டாரா என சொல்லி விடுவார். மேலும் ஒருவரது குணாதிசயத்தை கூட கணித்து விடுவார். எல்லாம் அனுபவம் தந்த பாடம் தான் அவருக்கு. நாள்தோறும் அன்றாட மக்களிடம் பழகி பழகி அவர்களது மனநிலையை மனோதத்துவம் படிக்காமலே புரிந்து வைத்திருந்தார் சாயபு. அவரிடம் இருந்து தான் மனிதர்களை படிக்க கற்றுக் கொண்டாள் நுவலி.

"சாயபு கொஞ்சம் பாத்துக்கோங்க… சாப்டு வரேன்…" என்ற நுவலி சாயபு சின்னதாய் தலையசைக்கவும் சாப்பிட சென்றாள்.

சாப்பிட சென்றாள் என்றாள் சாப்பிட வீட்டிற்கெல்லாம் செல்லவில்லை. கடையிலே மூலையில் சற்று மறைவாக இருக்கும் இடத்தில் தான் சாப்பிட சென்றாள். சாப்பிட வீட்டிற்கெல்லாம் செல்ல முடியாது. யாரவது வீட்டிலிருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்லுவதை கடையில் வைத்து தான் சாப்பிட வேண்டும்.

கடையில் அமர்ந்து சாப்பிடுவதற்க்கு இத்தனை பில்டப்பா என நீங்கள் யோசிக்கலாம். ஆள் இல்லாத கடை தானே என ஆட்டைய போடும் ஆட்களும் ஆள் இல்லை என வியாபாரிகள் கடை மாறும் ஆபாயமும் உள்ளது. சாப்பிடும் நேரத்தில் எத்தனை பேர் வந்திட போகிறார்கள் என யோசித்தாலும் ஒருவர் வந்தாலும் இவர்களை போல சிறு வியாபாரிகளுக்கு அது முக்கியமே.

கனவுகள் தொடரும்...

கருத்துத் திரி

 
Status
Not open for further replies.
Top