All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வனிதா கண்ணனின் ‘ ஜி(எ)த்தனின் சஹியிவள்’ - கதை திரி

Status
Not open for further replies.

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-21


மயங்கி விழும் போதே அவளைத் தாங்கி கொண்டவன் கங்காவிடம் தண்ணீர் எடுத்து வர சொல்ல அவளை தண்ணீர் தெளித்து எழுப்பி விட முயலும் போதே மூர்த்தி கோபத்துடன் சஹியின் கையைப் பிடித்து " வாம்மா.. இவன் கிட்ட எதுவுமே உண்மையா இல்லை... அவசரப்பட்டு உன் வாழ்க்கையை பாழ்படுத்திட்டேன்" என்று அந்த இடத்தை விட்டு ஒரு அடி எடுத்து வைக்க அதற்குள் அபிஜித் சஹியின் கையைப் பிடித்து இழுக்க அவனின் நெஞ்சில் மோதி நின்றாள் அவள்….

மூர்த்தி பல்லைக் கடித்து " டேய்! அவ என் பொண்ணு...அவளை நான் யாருக்கு வேண்டுமானாலும் கட்டி வைப்பேன்... அவசரப்பட்டு உன்னைப் பற்றி தெரியாம அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்ச என்னை சொல்லணும்.."என்று கத்தினார்..

தன் காதை குடைந்து கொண்டே" ஸ்ஸ்..என்னா சவுண்டு.. ஹான் எப்படி? எப்படி? உன் பொண்ணா இருக்கறப்ப நீ யாருக்கு வேண்டுமானாலும் அவளை கல்யாணம் பண்ணி தர உனக்கு உரிமை இருக்கு... என் பொண்டாட்டிக்கு கல்யாணம் பண்ணி வைக்க உனக்கு உரிமை இல்லை" என்று நிதானமாக கூறினான்..

நடப்பதை எல்லாம் திருமணத்திற்கு வந்திருந்த உறவுகள் சுவாரசியமாகப் பார்த்திருக்க இப்போது பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்த பார்வதி, " டேய்..என்னடா பேசுற…இத்தனை பேரு முன்னாடி… எதுவா இருந்தாலும் மருமகளை கூட்டிட்டு வீட்டுக்கு வா… அங்கே பேசிக்கலாம்" என்று சொல்ல அபிஜித் சஹியின் முகத்தைப் பார்க்க அவளோ மனதில் ' இவ்வளோ நடக்குது.. ஒரு வார்த்தை மன்னிப்பாச்சும் கேட்கறானா? இல்லை ஏதாவது விளக்கம் எதுவும் சொல்றானா?' என்று புகைந்து கொண்டிருந்தாள்…

"ஒரு நிமிஷம்" என்று மூர்த்தி கூறிக்கொண்டே கபிலன் முன் வந்து நின்று " எல்லாமே பொய்யா? நீங்க அபிஜித் அப்பா இல்லையா? நீங்களும் இதுக்கு உடந்தையா? நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்றேன்… வா சஹி… இவன் கூட வாழணும்னு உனக்கு அவசியம் இல்லை...வாம்மா போகலாம்" என்று சஹியைக் கூட்டிக் கொண்டு விறுவிறுவென்று நடக்க கங்கா மூர்த்தியின் முன் வந்து நின்று " ஒரு பொண்ணுக்கு தாலி ஏறி அந்த மஞ்சள் கூட காயாது இருக்கறப்ப அவளை வாழாவெட்டியாய் ஆக்க பார்க்கீறீங்களே "என்று ஆக்ரோஷமாக கத்தினார்…

அவரின் ஆக்ரோஷத்தை கண்டு அங்கிருந்தவர்கள் மிரண்டாலும் அவருக்கு அதைப் பற்றி கவலையில்லாது சஹியை பார்த்து " இனிமேல் நீ நம்ம வீட்டுக்கு வரும்போது உன் புருஷன் கூடத் தான் வர்ற... இல்லைனா வராதே"என்று கூறிவிட்டு ஒரு ஓரமாக நின்றிருந்த பார்வதி மற்றும் நாச்சியாரிடம் சென்று அவர்களின் கைகளை பற்றி " இனி என் பொண்ணு பார்வதிக்கு மருமகளா, நாச்சியார் பேத்தியா தான் இருப்பா...நீ இப்போ அவளைக் கூட்டிப் போ..பார்வதி.. நாங்கள் மூன்றாம் நாள் வந்து மறுவீடு அழைச்சிட்டு வரேன்.."என்று அந்த மண்டபத்தில் இருந்து வெளியேற அவரைத் தொடர்ந்து மூர்த்தியும் வெளியேறினார்…

கபிலன், ஜீவிகா, கதிர் ஒரு புறமும், பார்வதி, நாச்சியார், வானதி, அபிஜித் மறுபுறமும் நிற்க இருவருக்கும் இடையே சஹி நின்றிருந்தாள்…

அனைவரும் திருநெல்வேலிக்கு போகலாம் என்று முடிவு செய்திருக்க அபிஜித் " அம்மா.. நான் திருச்சியிலேயே சொந்த வீடு வாங்கியிருக்கேன்… அங்கே போய் தங்கலாம்.. நாளைக்கு நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று சர்வ சாதாரணமாக சொல்ல அனைவரும் அதிர்ந்தாலும் பார்வதி கோபமாக " என்னடா..இது.. என்ன பண்ணி வச்சிருக்க? எல்லாமே உன் முடிவா இருந்தா அப்பறம் நாங்க எதுக்கு? எதுவும் எங்ககிட்ட சொல்றது இல்லை.. எல்லாம் உன் முடிவு தான்" என்று வருத்தமாக சொன்னார்..

அதை அனைவரும் ஆதரித்தாலும் அபிஜித் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க எல்லாரும் காரில் ஏறி அமர சஹியும் அவர்களுடன் அமரப் போனாள்.. அதற்குள் அவளது கையைப் பிடித்த அபிஜித் " நம்ம இரண்டு பேருக்கும் ஸ்பெஷலா புதுக்காரு வாங்கியிருக்கேன்...அதுல தான் நாம் போகணும்..வா.."என்று அவளை இழுக்க அவன் செய்து வைத்திருக்கும் வேலைக்கு அவளுள் கோபம் இருந்தாலும் அவனுடன் காரில் ஏறினாள்…

டிரைவரிடம் அட்ரெஸை சொல்லிவிட்டு பின்சீட்டில் அமர ஏற்கெனவே அங்கே உட்கார்ந்திருந்த சஹி இவனைக் கண்டு இன்னும் தள்ளி அமர்ந்தாள்..அவனோ மனதுக்குள் 'ஹ்க்கும்.. ரொம்பதான்டி' என்று நினைக்கையிலே சிரிப்பு வர அதை மறைத்து விட்டு " ஏன்? காருக்கு வெளியே குஷன் போட சொல்றேன்.. அப்படியே தொத்திட்டு வா.. என் பக்கத்துல நெருங்கி உட்கார்ந்து மேடம் வர மாட்டிங்களாமா? ஹ்ம்ம்" என்று கேள்வி கேட்க சஹி அவனருகில் நெருங்கி அமர்ந்தாள்…

காரின் கதவை மேலோட்டமாக ஏதோ ஒரு நினைவில் அவள் சாத்தியிருக்க அபிஜித் கார் லாக் செய்யாமல் இருப்பதை கவனித்து அவளின் புறம் நகர்ந்து லாக் செய்ய சஹிக்கு அவனின் செய்கையில் மூச்சை அடைத்தது.ஏனெனில் அவள் அவனுக்கு வலதுபுறமாக அமர்ந்திருக்க அவன் கை அவளின் நெஞ்சில் அழுத்தமாக உராய்ந்து கார் கதவை லாக் செய்தது.. அவனின் உராய்வில் சஹிக்கு தன்னிலை அடைய சிறிது நேரம் ஆகவும், அதைப் பற்றி ஏதும் அறியாத அபிஜித் அவளின் முகம் பார்த்து கண் சிமிட்ட அவள் சட்டென்று கண் மூடிக் கொண்டாள்…பின் அவளின் தோளில் கைப் போட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டு அவனும் கண் மூடினான்..

அபிஜித்தின் கார் அவனின் வீட்டில் நுழைய அங்கே ஜீவிகா ஆரத்தியுடன் நின்றிருக்க அபிஜித், சஹி இருவரும் சேர்ந்து நிற்க அவர்களுக்கு திருஷ்டி சுத்தி வீட்டின் உள்ளே நுழைய பார்வதி அபிஜித் தை ரெஸ்ட் எடுக்க சொல்ல சஹியை பால் காய்ச்ச வர சொல்ல அவளுக்கு கழுத்தில் இருந்த மாலையை அபிஜித் வாங்கி கொண்டு " போ" என்று தலையாட்ட அவள் அங்கு பாலைக் காய்ச்ச பார்வதி அவளுக்கு உதவ வானதி அவள் கையில் இரு தம்ளரில் பாலை கொடுத்தாள்.

அபிஜித்தின் ரூமிற்கு ஜீவிகா சென்று அவனை அழைத்து ஹாலில் சஹியுடன் அமர வைத்து பாலும் பழமும் கொடுக்க சஹி முதலில் பாலைக் குடித்து விட்டு அவனிடம் குடுக்க அவளை பார்த்துக் கொண்டே குடித்து முடிக்க அதே மாதிரி பழத்தை சஹி வாங்கப் போக அபிஜித் அதைக் கைப்பற்றி முதலில் அவன் சாப்பிட்டு விட்டு கொடுக்க சஹி அதை வாங்கினாலும் சாப்பிடாமல் இருக்க ஜீவிகா அதைப் பார்த்து விட்டு " சீக்கிரம் சாப்பிடுமா.. இதெல்லாம் சம்பிரதாயம்.."என்று சொல்லவும் அபிஜித் " மாம்! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்களேன்..ப்ளீஸ்!" என்று கெஞ்ச அவர் தண்ணீர் எடுத்துவர சென்ற நொடி அவளைப் பார்த்து "என்னடி..தயக்கம்.. என் எச்சிலை நீ சாப்பிட மாட்டியா?" என்று கடுப்புடன் கேட்டான்.

அதற்கு பதிலளித்த சஹி " சாப்பிட முடியாது...இதை தூக்கி போடலாம் என்று நினைக்கிறேன்…" என்று சொல்லிக் கொண்டே கையை தூக்க அதற்குள் அபி அவளின் வாயில் திணித்து விட்டு அவளின் வாயில் மீது இருந்த பழத்தை இவன் கடித்து தின்ன அவள் விழிகள் இரண்டும் விரிய நடந்த நிகழ்வில் அவளும் அதை விழுங்கி இருந்தாள்…

ஜீவிகா தண்ணீர் கொண்டு வர அதை சஹிக்கு குடிக்க தர அதை மடமடவென குடித்தாள்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜீவிகா " அவ்ளோ தண்ணீர் தாகமா? இன்னும் கொஞ்சம் கொண்டு வரட்டாமா?" என்று கேட்டு வானதியை அழைக்க அபிஜித் " அதெல்லாம் வேண்டாம் மாம்! எனக்கு வெளியே வேலை இருக்கு.. நம்ம வீட்டு பழக்க வழக்கத்தை சொல்லிக் குடுங்க.." என்று கதிரை கூட்டிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்…

அவன் வெளியேறிய பின்னர் சஹியை பார்வதி அழைக்க அவர் முன் வந்து நின்றவளை பார்த்து " உன் ரூமுக்கு போய் ஃப்ரெஷ் ஆகிட்டு லாமா... உன் கிட்ட கொஞ்சம் பேசணும்"என்று அவளுடன் வானதியையும் அனுப்பி வைத்தார்.

வானதி " அண்ணி! வாங்க... ஏன்? அமைதியா இருக்கீங்க? என் மேல் ஏதும் கோபமா?" என்று சிறு கவலையுடன் கேட்க சஹியோ " அப்படி எல்லாம் இல்லை டா... நடந்தது கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சு... அதனால் தான் கொஞ்சம் அமைதி..வேற ஒன்னும் இல்லை" என்று கூறிவிட்டு " நீ இங்கேயே இருடா.. நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.." என்று குளியலறைக்குள் நுழைந்தாள்…

அதற்கு பிறகு கபிலன், ஜீவிதா, பார்வதி, நாச்சியார், வானதி என அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க சஹி மட்டும் எதிலும் ஒன்றாமல் இருக்க அவளை அப்படியே விடாது அவளையும் அவர்களுடன் பேச வைத்தனர்… சஹிக்கு பிடித்த மாதிரி அனைவரும் பேச அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அதை உரியவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டு அமர்ந்திருக்க அவளின் முகத்தை பார்த்த நாச்சியார் " அம்மாடி…சஹி! உன் மனசுல கேள்விகள் பல இருந்தாலும் அதற்கு பதில் எங்களுக்கு தெரியும்... ஆனால் இப்போது எதையும் சொல்ற அளவு எங்க மனநிலை இல்லை… நீ இனிமேல் எதுவா இருந்தாலும் உன் புருஷன்ட்ட கேளு! அவன் பதில் சொல்ல கடமைப் பட்டவன்... நீ கேள்வி கேட்க உரிமையுள்ளவள்… அதனால் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இப்ப போய் தூங்கு டா…" என்று அவளை ரூமிற்கு அனுப்பினார்.

இரவு மணி எட்டு என்று கடிகாரம் காட்ட நன்கு தூக்கத்தில் இருந்த சஹிக்கு மூர்த்தியின் இருந்து கால் வர அதை எடுத்தவள் மறுபுறம் கேட்ட கங்காவின் குரலில் " அம்மா!" என்று தவிப்புடன் அழைக்க அவரோ நிதானமாக " என்னடா? எதுக்கு இந்த தவிப்பு?"என்று கவலையுடன் கேட்டார்.

" ஏன் மா? என்னை அப்படியே மண்டபத்திலேயே விட்டுட்டு வந்துட்ட? நான் எப்படி ஃபீல் பண்ணேன் தெரியுமா? யாருமே இல்லாத மாதிரி? " என்று அழுகுரலில் சொன்னாள்…

" சஹிமா! அம்மா உன்னை அப்படியே விட்டு வர அளவு நடந்துருக்கேனா உன் புருஷன் வீட்டுக்காரங்க என்னை விட உன்னை நல்லா பார்த்துக்குவாங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கப் போய் தான் நான் வந்தேன்" என்று திடமான குரலில் சொல்ல அந்த குரல் தந்த தைரியத்தை சஹி உணர்ந்தாள்…

" அம்மா! அப்போ உங்களுக்கு என் மாமியை தெரியுமா?" என்று ஆவலாய் கேட்க அவள் கேட்ட கேள்வியில் கங்கா சிறு சிரிப்புடன் " யாரை தேடி இவ்வளோ நாள் நான் இருந்தேனோ, கையில் கிடைத்த வைரத்தை கண்டுக்காம அதைத் தொலைச்சிட்டு தீடிர்னு இப்ப எதிர்பாராத விதமாக உன் மூலமா கிடைச்சிருக்குடா… அவ என்னோட பார்வதி..என்னோட நெருங்கிய தோழி! அவ உன்னை நல்லாவே பார்த்துப்பா… எனக்கு ஏதாவது செய்யணும்னா கடைசி வரை நீ அவளுக்கு மருமகளா அந்த வீட்டுப் பொண்ணா தான் இருக்கணும்..சரியா? " என்று கட்டளையுடன் கெஞ்ச ". ஹ்ம்ம்.. சரி…நான் இங்கே உங்க விருப்பப்படி கவனிச்சிக்கிறேன்" என்று வாக்கு கொடுத்து போனை வைத்தாள்…

அதேவேளை சஹி தனது கடைசி வார்த்தையை முடிக்கும் தருவாயில் உள்ளே நுழைந்த அபிஜித் அதைக் கேட்டு விட்டு ' நீ என்னை என்ன கவனிக்கிறது... நான் கவனிக்கிறேன் பாரு உன்னை செமத்தியா..' என்று மனதில் நினைத்து கொண்டே " சாப்பிட வரச் சொல்றாங்க உன்னை..வா" என்று அவளின் கையை பிடித்து கொண்டே ரூமிலிருந்து வெளியேற சஹி அவனின் கையை தட்டிவிட்டு " எனக்கு நடக்க தெரியும்" என்று நடந்தாள்…

அவனோ " என்னடி! இவ்வளோ நேரம் அமைதியா இருந்துட்டு இப்ப தைரியமா பேசுற? வா.. எனக்கு ஹாப்பி தான்.." என்று டைனிங் டேபிளில் சென்று அமர இருவருக்கும் பார்வதி பரிமாற அபிஜித் குரலை செருமிக் கொண்டே " அம்மா இனிமேல் இவ தான் எல்லா வீட்டு வேலைகளையும் செய்யணும்… நீங்க என்னை கவனிக்கிற மாதிரி இவளும் என்னை கவனிக்கணும்" என்று சொல்லி உணவை சுவைத்தான்…

சஹியோ மனதுக்குள்' இவன் பழிவாங்குறேன்னு படுத்தி எடுக்குறானே' என்று நினைத்து கொண்டு சாப்பிட ஆரம்பிக்க அவளருகே அமர்ந்திருந்த நாச்சியார் அபிஜித்திடம் " பெர்ரி! நாளைக்கு காலையில் நாம எல்லோரும் திருநெல்வேலி போகணும்.. சீக்கிரம் போய் தூங்குங்க.."என்று கூற சஹி " ஏன் ? நாம திருநெல்வேலி போகணும்.. அங்கே யாரிருக்கா?" என்று கேட்டு விட்டு அபிஜித்தை பார்க்க அவனோ " ஹ்ம் உன் மாமனோட ஊரு திருநெல்வேலிடி…அப்போ அங்கே தானே போகணும்…" என்று சொல்ல பின் அவளின் காதில் குனிந்து " ஏன்? செழியனா இருந்தப்போ எல்லா விஷயத்தையும் சொன்னேனே.. கவனிக்கலையா?" என்று புருவமுயர்த்தி மெதுவான குரலில் கேட்க அவளோ அதே குரலில் " கவனிச்சிருந்தா.. நீங்க பொய் சொல்றதை அப்பவே கண்டுட்டு விலகிப் போயிருப்பேன்…" என்று வெறுப்பாக கூறினாள்…

அவளது கோபம் அவனுக்கு தன் மீது பட்டு தெறிக்கும் மழைத் துளி போன்றது… ரசனைக்குரியது. ஆனால் அவளது வெறுப்போ மீன் தொட்டியிலிருந்து நழுவி விழுந்த மீன் தண்ணீருக்காக துடிதுடிக்கும் நிலை போன்றது… அவள் ஏன்? எதற்கு? இப்படி செய்தாய்? என்று அவனிடம் கேட்டு சண்டை போடுவாள் என அவன் நினைத்திருக்க இதுவரை அவள் அவனிடம் எதையும் கேட்கவில்லை… அவன் தாலி கட்டும் போது அவன் முகத்தை பார்த்ததோடு சரி.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை... தெரிந்தாலும் அதை அவன் கண்டு கொள்ள போவது இல்லை…

" ஏன்டி? இப்படி முகத்தை வெறுப்பா வச்சிக்கிற…இது மாதிரி என்கிட்ட இருக்காத.. அப்பறம் நான் நானா இருக்க மாட்டேன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே " எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… நான் தூங்க போறேன்.." என்று கூறிவிட்டு அவனது அறைக்குள் செல்ல அவள் பின்னாலேயே வந்த அபிஜித் " ஹேய்… என்னடி தூங்கறேன்னு சொல்ற.. இன்னிக்கு நமக்கு.." என்று அவன் ஆரம்பிக்க " என்ன? என்ன நமக்கு? படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு நானே கடுப்புல இருக்கேன்..இதுல இது வேற.." என்று பல்லைக் கடித்து கொண்டே கூறிவிட்டு பட்டென்று படுத்துக் கொண்டாள்... அவனும் காலை சீக்கிரம் எழ வேண்டுமாயின் அவளருகே அவள் முகம் பார்த்து படுத்துக் கொண்டான்... அவள் அவனை பார்த்துவிட்டு திரும்பி படுக்க அவளது இடுப்பில் கைக் கொடுத்து அவனுக்கு இடதுபுறம் இருந்தவளை வலதுபுறமாக தூக்கி படுக்க வைத்து விட்டு அவளை நோக்கி " கடைசியா சொல்றேன்.. என்கிட்ட முகம் திருப்பாத… மீறினால் இதே மாதிரி நிறைய விஷயம் நடக்கும்… ஹ்ம்…. சாம்பிள் இது… தூங்கு.." என்று படுத்து விட்டான்… அவளும் அவனது கூற்றை ஏற்றுக் கொண்டு அவன் முகம் பார்த்தே படுத்தாள்…

மறுநாள் காலை அனைவரும் திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டு அங்கேயிருந்து தூத்துக்குடிக்கு சென்று திருநெல்வேலி அடைந்தனர்...

அபிஜித், சஹியை வேறொரு காரில் வருமாறு பணித்துவிட்டு மற்றவர்கள் வீட்டிற்கு பயணிக்க அபிஜித், சஹி சில நிமிடங்கள் கழித்து வீட்டை அடைந்தனர்…

சஹிக்கு அதிகாலை சீக்கிரம் எழுந்ததில் தூக்கம் கண்களை சுழற்ற அருகில் அமர்ந்திருந்தவனின் தோளில் வாகாக தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்… அது அவளை விட அவனுக்கு தான் வாகாக பொருந்தியது…

வீட்டை அடைந்த பொழுது சஹியை எழுப்பிய அபிஜித் " எந்திரிச்சி... அப்பறம் தூங்குவ… வீட்டு உள்ளே போகலாம்.." என்று அவளை எழுப்ப சஹி கண்ணை கசக்கி கொண்டே எதிரில் இருந்த வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்... ஏனெனில் அது அவளது வீட்டைப் போன்று அப்படியே இருந்தது.. அவளது முகபாவனைகளை கவனித்து கொண்டிருந்த அபிஜித் " எதுக்குடி இவ்வளோ ஷாக் ஆகுற? இதுக்கெல்லாம் பதில் உனக்கு சீக்கிரம் தெரிய வரும்.. வா" என்று அவள் காதில் ஹஸ்கி வாய்ஸில் சொல்லிவிட்டு ஆராத்தி எடுக்க வீட்டினுள் நுழைந்தனர்…

அபியின் அறைக்கு சஹியை அவன் கூட்டிச் செல்ல முற்பட ஜீவிகா, நாச்சியார் இருவரும் " டேய்.. மருமகளை எங்க கூட கொஞ்சம் பேச விடுடா" என்று அவனை ரூமிற்கு அனுப்ப அவனை நமட்டு சிரிப்புடன் சஹி பார்க்க " அவள் இல்லாமல் ரூமில நான் என்ன பண்றது?" என்று சட்டென்று கேட்க " அடேய்" என்று நாச்சியார் சத்தமிட ஜீவிகா அவனது தலையில் கொட்டினார்..

சஹிக்கு அந்த சூழ்நிலையை சமாளிக்க வழி தெரியாததால் யாரையும் பார்க்காமல் தலை குனிந்து அமர்ந்திருக்க அபிஜித் அவளின் சங்கடம் உணர்ந்து அறைக்குள் சென்றான்…

நாச்சியார் " இங்கே பாருமா.. என் பெர்ரிக்கு இரண்டு அம்மா, அப்பா...ஒன்னு பெத்தவங்க.. இன்னொன்று வளர்த்தவங்க… அதே மாதிரி காலையில் எழுந்து நீதான் வாசல் தெளித்து கோலம் போடணும்... இந்த வீட்டு மஹாலட்சுமி நீதான் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரணும்.." என்று கூற சஹிக்கு அது திக்கென்று இருக்க ஜீவிகா அவளது தலையை தடவிவிட்டு " எதுக்கு மா இப்படி முழிக்கிற? உனக்கு நாங்கள் இருக்கோம்" என்று நம்பிக்கை கொடுத்து அறைக்குள் அனுப்பினார்…

அபிஜித் ரூமிற்குள் சஹி நுழைய அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் " ஹேய்... ஏதாச்சும் கேளுடி… ஏன் இப்படி பண்ணீங்க? என்ன வேண்டும் ? இது மாதிரி ஏதாவது என்கிட்ட கேட்கணும்னு தோணலையா?" என்று கேட்டவன் அவளுக்கு நேராக வந்து நின்று அவளின் கண்களை நேராகப் பார்த்து கேட்க அவளோ " ஏதாவது காரணம் இருக்கப் போய் தானே இப்படி பண்றீங்க… அது எப்போ எனக்கு தெரியணுமோ, அப்ப தெரியட்டும்… " என்று அவனைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தாள்…

சஹிக்கு தன் எதிரியுடன் திருமணம் ஆகிவிட்டதை அறிந்த யோகேஷ் அதைக் கேட்க மூர்த்திக்கு அழைத்த நொடி அவனின் அழைப்பை ஏற்று " சொல்லு யோகேஷ்.." என்று தொடங்கிய வேளை அவன் அவரிடம் " உங்களை நம்புனது என் தப்பு தான்… நான் விரும்புனது எதுவும் இதுவரை எனக்கு கிடைக்காம இருந்ததில்லை…. உங்க பொண்ணை ராணி மாதிரி நான் வச்சிக்கலாம்னு இருந்தேன்… கடைசில எவனுக்கோ தாரை வார்த்து கொடுத்திட்டு இப்ப வந்து என்ன? ஏதுன்னு கேட்கறீங்க" என்று கோபமாக கேட்டான்…

" உனக்கே தெரியும்... அந்த ஆச்சார்யா தான் அவனுக்கு எல்லா சப்போர்ட்டும்..அவரை மீறி என்ன பண்றது? " என்று ஆதங்கமாக கேட்க யோகேஷ், " ஆச்சார்யா மட்டும் இதுல இல்லை... உங்க கன்ஸ்ட்ரெக்ஷன்லயே ஒரு கருப்பு ஆடு இருக்குது… அதை முதலில் கண்டுபிடிங்க… அப்பறம் என்ன செய்யறதுன்னு நான் சொல்றேன்… இப்ப எனக்கு வேலை இருக்கு…" என்று போனை வைத்தான்….

மூர்த்தி 'அது யாரது தமக்கு துரோகம் செய்தது கூட இருந்து கொண்டே ..அது யாராக இருந்தாலும் அவனுக்கு தண்டனை இந்த மூர்த்தி கிட்ட கிடைச்சே தீரும் ' மனதில் நினைத்து கொண்டார்…

அதேவேளை அந்த கருப்பு ஆடாக யோகேஷால் சொல்லப் பட்டவன் ஒரு பெண்ணின் போட்டோவை வைத்து கொண்டு " உனக்காக தான்டி இதை செஞ்சேன்.." என்று பெண்ணிவளின் பிம்பத்திடம் கூறினான்...

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-22

அதிகாலை நன்கு உறக்கத்தின் பிடியில் இருந்த சஹிக்கு உறக்கம் கலைய கண்ணை மூடிக்கொண்டே தன் மொபைலில் நேரத்தை பார்க்க அது மணி நான்கு என்று காட்ட ' ஹ்ம்..நாலு மணி தானே ஆகுது... இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவோம்' என்று மனதில் நினைத்து கண்ணை மூடும் வேளை நேற்றைய இரவில் அபிஜித் சொன்னது அந்த வேளையில் நினைவு வந்தது..

நேற்று இரவில் தூங்க செல்லும் முன் இப்பவாவது எதற்காக இப்படி செய்தான் என்று கூறுவான்... என்று அவள் நினைத்திருக்க அவனோ " இங்கே பாருடி...இது உன் அப்பன் வீடு மாதிரி இல்லை.. உன் புருஷனோட வீடு… மருமகளா நீ பொறுப்பா நடந்துக்கணும்..‌ முக்கியமா காலை எழுந்து எனக்கு தேவையானது எல்லாம் நீதான் செய்யணும்… " அத்துடன் பேச்சு முடிந்தது என்று உறங்க முற்பட அந்த நேரத்தில் மூர்த்தி போனில் அவளை அழைக்க அதை அவள் எடுத்து பேச அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அவளின் பதில் " ஓகேப்பா… நீங்க சொன்னால் செய்யறேன் பா" என்று மட்டும் அபிஜித்திற்கு கேட்டது…

அவனோ மனதுக்குள் ' முதலில் இவ அப்பன் கூட இவளை பேச வைக்க கூடாது..' என்று நினைத்து கொண்டான்… இவன் இப்படி நினைத்தது அவளுக்கு தெரியவில்லை…

அதிகாலை இருளை பிரித்து ஒளியாய் ஆதவன் ஊடுருவும் வேளை தன் கண்களை இறுக மூடிக் திறந்த சஹி, புதுமணப் பெண்ணுக்கு உரிய பொலிவுடன் மங்களகரமான தாலி கழுத்தில் மினுக்க அது அவளுக்கு புது சோபையை தந்தது…அதை அவள் உணராமல் எழுந்து தலைக் குளித்து விட்டு வாசலில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து தெளித்து வாசலை கூட்டி, கோலமிட்டாள்… காலை நேரக் காற்று முகத்தில் மோதி புத்துணர்வை கொடுக்க அந்த ஏகாந்த சூழலை ரசித்தவளின் மனமோ ' பரவாயில்லை.. இது கூட நல்லாத்தான் இருக்கு… எதற்கும் முதல் அனுபவம் உண்டுங்கற மாதிரி எனக்கு இது ஒரு அனுபவமா இருக்கட்டும்..' என்று நினைத்து கொண்டாள்…

ஹ்ம்ம்… வாசல் தெளித்து கோலம் போட்டாச்சு... அடுத்து காஃபி எல்லாருக்கும் தரணும்ல.. எத்தனை சீரியல் பார்த்திருப்போம்…இப்படி தானே பண்ணுவாங்க ' என்று அடுப்படியில் நுழைந்து காஃபியை போட்டு முடிக்கும் தருவாயில் பார்வதி அடுக்களையில் நுழைந்தார்… அவர் அங்கே நின்றிருந்த சஹியை எதிர்பாராது திகைத்து விட்டு " இங்கே என்னமா பண்ற? அதுவும் தலைக்கு குளித்து முடியை உலர்த்தாம" என்று கேள்வி கேட்டார்…

சஹிக்கு அவரின் கேள்விக்கு பதிலளிக்க எண்ணி " இல்... இல்லை..மாமி! " என்று திக்கி திணற " சரி.. உனக்கும் உன் வீட்டுக்காரனுக்கும் எடுத்து போ.." என்று அவளை அனுப்பி வைத்தார்…

சஹி,அவர்களின் அறையில் நுழையும் வேளை அதேநேரம் அபிஜித்தும் கதவை திறந்த நொடி இருவரும் மோதிக் கொள்ள சஹியின் கையில் கொதிக்க கொதிக்க வைத்திருந்த காஃபி அவனின் வெற்று உடம்பை பதம் பார்க்க அவனோ சூடு தாங்காது அவளை பளாரென்று அறைந்திருந்தான்.. அறைந்த வேகத்தில் அங்கிருந்த அணியில் அவள் மோதிக் கொள்ள அவள் தலையில் இரத்தம் வந்துவிட்டது…

அவன் அவளைக் கோபமாக திட்ட தொடங்க ஆரம்பிக்க அவள் தலையில் வரும் இரத்தத்தை கண்டு உறைந்து நின்றான்…

மாடியில் வந்த சத்தத்தைக் கேட்டு நாச்சியாரும், பார்வதியும் அங்கே போய் பார்த்த நொடி சற்றும் யோசிக்காமல் பார்வதி அபிஜித்தை அறைத்திருந்தார்… நாச்சியார் தடுக்க போக சஹியோ செய்வதறியாது திகைக்க " விடுங்க..மாமி! இவனை நான் இப்படி தான் வளர்த்தேனா? ஒரு பொண்ணு மேல கையை வைக்க எவ்ளோ தைரியம் வேணும் இவனுக்கு… கட்டுனவ மேல கையை வைக்கிற அளவுக்கு என்ன கோபம்…யாரோ செய்த தப்புக்கு இவளை ஏன் தண்டிக்கிறான்? " கோபாவேசத்துடன் நாச்சியாரிடம் பார்வதி கேட்க அபிஜித் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்க அவனை நிறுத்துமாறு கையை காட்டினார்…

" பாருங்க..மாமி! இவன் செய்த தவறுக்கு இன்னைக்கு முழுசா அவளுக்கு இவன் தான் உதவி செய்யணும்… இது தான் என் முடிவு... அதுக்கு முன்னாடி இப்ப அவள் காயத்துக்கு மருந்து போட்டு விட சொல்லுங்க.." என்று சொல்லி சென்று விட நாச்சியார் " கேட்டியா… பெர்ரி! " என்று அவரும் கீழே சென்றார்…

அபிஜித் ஒரு பெருமூச்சுடன் சஹியைப் பார்க்க அவளோ தரையை பார்த்துக் கொண்டிருந்தாள்…

அவன் உள்ளே சென்று பஞ்சை எடுத்து வந்து அவள் இரத்தத்தை துடைக்க அவனிடம் இருந்து விலகி சென்று முகத்தை கழுவி வர அவளை தடுத்தவன் " நில்லுடி… மருந்து போட சொல்லி சொல்லிட்டு போனது கேட்கலை யா? நீ பாட்டுக்கு யாருக்கோ சொன்னது மாதிரி போற" என்று கேட்டான்..

அவனைத் தீப்பார்வை பார்த்த சஹி அவனை சட்டை செய்யாமல் செல்ல அவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன் " சொல்லிட்டு இருக்கேன்ல.." என்று கூற சஹி " ஓஹோ! அப்போ உங்க அம்மா சொல்ற எதையும் நீங்க செய்வீங்க… அப்படி தானே! " எனவும் அதற்கு அவன் தலையை ஆட்ட " அப்போ… எனக்கு உதவி செய்ய சொல்லிட்டு போனாங்க… செய்ங்க…" என்று பதிலாக சொன்னாள்…

"சரி! இப்ப நான் என்ன செய்யணும்" என்று கேள்வியுடன் அவன் பார்க்க அவளோ கன்னத்தை தேய்த்து கொண்டே " அடிக்க மட்டும் தெரிஞ்சுதுல்ல… கீழே கொட்டுனதை எல்லாம் யார் சுத்தம் பண்றது... அதனால எல்லாத்தையும் கிளீன் பண்ணி வைடா பட்டரு…" என்று சொல்லி விட்டு பார்க்க அவன் அவள் சொன்னதை உணர்வதற்குள் சிட்டாக கீழே சென்றிருந்தாள்… அவனோ அவள் சென்ற திசையை சிரிப்புடன் நோக்கி விட்டு அவள் சொன்னதை செய்தான்…

அபிஜித் கீழே வரும் போது அங்கே பார்வதி, நாச்சியார் இருவரும் கலக்கத்துடன் அபி வரும் வழியை பார்த்திருக்க சஹி, வானதி கையைப் பற்றிக் கொண்டு பயத்துடன் அவனை பார்த்திருந்தாள்….

அவன் யோசனையுடன் தாடையை தட்டிக் கொண்டே என்னவென்று புருவம் உயர்த்தி அவளைப் பார்க்க அவளோ ஹாலில் அமர்ந்து இருந்தவர்களை கண்களால் காட்டினாள்…

அங்கே மூர்த்தியும், கங்காவும் அபிஜித்தைக் கண்டவுடன் எழுந்து நிற்க அவனோ பார்வதியை பார்த்து " யாரைக் கேட்டு இவங்க உள்ளே வந்தாங்க? வெளியே போக சொல்லுங்க…" என்று சத்தம் போட மூர்த்தி " யாரைக் கேட்கணும்? என் பொண்ணு வீட்டுக்கு வர எனக்கு எல்லா உரிமையும் இருக்கு?" என்று பதிலுக்கு அவரும் சத்தம் போட்டார்….

" எது? பொண்ணு வீடா? " என்று கடுப்புடன் கேட்டு விட்டு " என்னடா... இன்னும் உங்க புத்தியை காட்டலன்னு நினைச்சேன்… ஏன்? மூர்த்தி சார்... இந்த வீட்டையும் எங்ககிட்ட இருந்து எழுதி வாங்கலாம்ன்னு நினைக்கிறீர்களோ?" என்று நக்கலாக கேட்டான்…

அவனது கேள்வியில் கங்கா கூனிப் போய் நின்றாலும் மூர்த்தி உனது கேள்வி எதுவும் என்னை பாதிக்கலை என்ற ரீதியில் அமர்ந்திருந்தார்…

அபிஜித்தின் அருகே வந்து அவனது கையை பற்றிய சஹி நடுக்கத்துடன் " என்னங்க.. சொல்றீங்க! நாங்க ஏன் உங்க வீட்டை எழுதி வாங்கப் போறோம்" என்று தந்தியடிக்கும் குரலில் கேட்க அவளுக்கு பதில் சொல்வதற்கு முன் கங்காவிடம் சென்று " சாரி மாமி! நான் பேசுனதை நீங்க மனசுல வைச்சிருக்காதீங்க" என்று கூறிவிட்டு அனைவர் முன்னும் " நாங்க யார் வீட்டுக்கும் வர மாதிரி இல்லை… நீங்க கிளம்பலாம்.." என்று மூர்த்தியை பார்த்து வாசலை கைக் காட்டினான்…

அவனின் அந்த செய்கையில் சஹிக்கு எரிச்சல் உண்டானாலும் அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதில் சந்தேகத்தை விதைத்திருக்க மூர்த்தியை பார்த்து " டாடி… மாம்! நீங்க இப்போ கிளம்புங்க.. நிலைமை சரியானதும் நாங்க கண்டிப்பாக அங்கே வர்றோம்…" என்று கங்காவிடம் சொல்லிவிட்டு மூர்த்தியை கிளம்புமாறு தலையாட்ட அவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத அளவு விருட்டென்று வெளியேற கங்காவோ சஹியின் தலையில் ஆசீர்வாதம் செய்து விட்டு வெளியேறினார்…

போகும் அவர்களை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு அபிஜித்தை பார்க்க அவனோ அவர்கள் அறையை நோக்கி போக சஹியும் பின் தொடர்ந்தாள்.. அவள் கேள்வி கேட்க தொடங்கும் முன் அவனோ வெளியில் செல்ல கார் கீயை எடுக்க " ஒரு நிமிஷம்" என்று அவள் தொடங்க அவனோ காது கேளாதது போல் அவளுக்கு பதிலளிக்காது சென்று விட்டான்.

சஹிக்கு அவன் செய்கை பெருத்த கோபத்தை உண்டாக்க கண்களை மூடி திறக்கையில் அவளது கண்களுக்கு அவனது ஸ்கேட்டிங் ஷூ பட விறுவிறுவென அதை காலில் மாட்டி நிமிர்ந்து பார்க்க அங்கே நாச்சியார் நின்றிருந்தார்.

சஹிக்கு அவரைக் கண்டு பயம் வந்தாலும் அவர் பேரனின் பேச்சுக்கு எதுவும் சொல்லாதது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது... ஆதலால் அவர் நிற்பதை கண்டு கொள்ளாமல் ஷூவை அணிந்து கொண்டு எழப் போக நாச்சியார் பதற்றத்துடன் " ஏட்டி! என்ன பண்ணுற? அவன் பொருளை தொட்டாலே அவனுக்கு பிடிக்காது...முதல்ல அதை கழட்டு… " என்று அதட்ட சஹி கோபமாக அவரிடம் "ஹ்ம்ம்.. எதுக்கு கழட்டணும்?..ஒருத்தி ஏதோ சொல்ல வர்றாளேன்னு அதை காது கொடுத்து கேட்போம். ‌..‌ அப்படின்னு நினைக்காம உங்கள் பேரன் பாட்டுக்கு போறான்… அதை நீங்கள் ஏன்னு கேட்டிங்களா? இது அவன் ஷூ தானே? இதை நான் போட்டு படுத்தறதுல அவன் அலறணும்" என்று கூறிவிட்டு ஷூவை போட்டு கொண்டு திரும்பும் வேளையில் அங்கே அபிஜித் கதவில் சாய்ந்து இருவரையும் பார்த்து கொண்டிருந்தான்…

நாச்சியார் இருவருக்கும் நடுவில் நாம் எதற்கு என்று நகர அவரை போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்த சஹி எழவும் சரியான பிடிமானம் இல்லாது எழுந்த வேகத்தில் வழுக்கி கொண்டே எதிரில் இருந்த அபிஜித் மேல் மோத அவனும் சாதாரணமாக நின்றிருந்ததால் நிலை தடுமாற சஹி அவனின் மேல் விழுந்தாள்…
இதை பார்த்த நாச்சியாருக்கு வெட்கம் வர அங்கிருந்து ஓடி விட்டார்…

சட்டென்று நிகழ்ந்த நிகழ்வில் அபிஜித்தின் மேல் சஹி விழுந்து கிடக்க அவள் எழுந்திடுவாள் என்று அவன் நினைத்திருக்க அவளோ எழ முடியாமல் டைல்ஸ் தரை சதி செய்ய அவளை நகர்த்தி எழுந்தமர்ந்த அவன் கடுப்புடன் " எதுக்குடி… என்னோட திங்ஸை எடுத்த… இப்ப அதை டேமேஜ் பண்ணிருக்க…" என்று கத்த அவளோ கூலாக தனது பாதங்களை பார்த்து கொண்டிருக்க அவளின் பாதங்களில் மாட்டியிருந்த ஷூவை கழட்ட அவன் எத்தனிக்கும் போதே அவள் " தப்பு செஞ்சீட்டு இப்ப காலை பிடிச்சா நான் உடனே உங்களை மன்னிச்சிரனுமா?" என்று அவனின் கைகளைப் பிடித்து கொண்டே கேட்க அவன் " யாருடி... இப்ப மன்னிப்பு கேட்க காலை பிடிச்சேன்னு சொன்னது… என் ஷூவை கழட்டுடி…" என்று அவன் கழட்டினான்…

சஹியோ அவன் கழட்டும் வரை அமைதியாக இருந்துவிட்டு பல்லி சத்தமிடுமாறு சத்தம் எழுப்பிக் கொண்டே " என்ன இருந்தாலும் கடைசில பொண்டாட்டி காலை தான் பிடிக்கணும்...ஓ..மை..காட்" என்று நக்கலாக கூறினாள்.

அவள் பேசும் போது சுழித்து விரிந்த உதடுகளை அவன் கொத்தாகப் பிடித்து " காலை மட்டும் இல்லைடி... உதட்டையும் பிடிப்பேன்... இன்னொரு தடவை இப்படி பேசின கடிச்சு வச்சிருவேன்…" என்று கூறிவிட்டு " ஹ்ம்… நாளைக்கு காலையில் ரெடியா இரு... திருச்சி போகலாம்…" என்று சொல்லவும் சஹி சந்தோஷமாக " ஹை… அப்போ மறுவீடு போறோமா…" என்று கேட்டு விட்டு அவனின் முகம் பார்க்க அவனோ " ஹ்ம்… ஆமா.. போறோம்... ஆனால் உங்க அப்பா வீட்டுக்கு இல்லை…திருச்சியில் இருக்குற என்னோட வீட்டுக்கு…" என்று கூறிவிட்டு அவளின் முகத்தை பார்க்க அவளுக்கோ முகத்தில் ஈயாடாமல் அவனை வெறித்து பார்த்தாள்…

அவளை சமாதானம் செய்யும் பொருட்டு " சரி..நீ வேணா அவங்களை பார்த்துவிட்டு வா... ஆனால் நான் வர மாட்டேன்…" என்று முடிக்க " தேவையில்லை…" என்று ஒற்றை வரியில் அவனை நிறுத்தி விட்டு வெளியேறி விட்டாள்…

அதே நேரத்தில் மூர்த்தி, யோகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் வேளை ஜீவா அடுத்த வாரம் நடக்க இருக்கும் டெண்டர் பற்றி சொல்லவும்..யோகேஷ்க்கு இதில் கண்டிப்பாக அபிஜித் பங்கெடுக்க வைத்து அவனை தோற்கடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினான்... அதற்கு மூலதனமாக மூர்த்தியை பயன்படுத்திக்க எண்ணினான்…இந்த டெண்டரில் மூர்த்தி பங்கெடுக்குமாறு அவன் கூற மூர்த்தி அதை மறுத்தார்…

" இல்லை... யோகேஷ்… இந்த டெண்டரில் அபிஜித் கலந்துக்கிட்டா நான் கலந்துக் கொள்ள மாட்டேன்…" என்று நிதானமாக கூற யோகேஷோ மனதுக்குள் ' அய்யோ.. இப்படி நீ நினைக்க கூடாதே மூர்த்தி... உன் மூலமா தானே நான் அடைய வேண்டியது நிறைய இருக்கு... அதெப்படி அவ்ளோ ஈசியா விடுவேன்' என்று நினைத்து கொண்டு " இல்லை அங்கிள்… இது மூலமாக அபிஜித்துக்கு டெண்டரில் நம்ம கம்பெனி கோட் பண்ற அமௌண்ட் யார் மூலமாக போகுதுன்னு கண்டுபிடிக்க தான்... " என்று ஜீவாவை குறிப்பாக பார்க்க அவன் கண் போன திசையில் மூர்த்தியும் பார்க்க அவர்கள் இருவரையும் ஜீவா நேருக்கு நேர் பார்த்து " கண்டுபிடிங்க யோகேஷ் சார்… சொல்லிட்டு தான் இருக்கீங்க.. செயல் ஒன்றையும் காணோம்" என்று நக்கலடிக்க அவனை முறைத்த யோகேஷ் " அங்கிள் தொழில் வேற.. குடும்பம் வேற... நீங்கள் கலந்தே ஆகணும்… ஆல் மோஸ்ட் அந்த கருப்பு ஆட்டை நெருங்கிட்டேன்... சீக்கிரம் உங்க கண் முன்னாடி கொண்டு வரேன்" என்று வெளியேறினான்…

அவன் வெளியேறியதும் மூர்த்தி, ஜீவாவை பார்த்து " டெண்டருக்கு அப்ளை பண்ணு… இந்த டெண்டரில ஆச்சும் ஜெயிக்கணும்" என்று உத்தரவிட்டார்… அவரின் உத்தரவை நிறைவேற்ற ஜீவாவும் தயாரானான்…

*******************************************
அபிஜித் சொன்னபடி இரவே திருநெல்வேலியில் இருந்து கிளம்பி விடியற்காலை திருச்சி வந்து சேர்ந்தனர் தம்பதியராய்….

புது வீட்டினுள் நுழைந்த சஹி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க அவள் தோளில் கைப் போட்டு கொண்டு " என்னடி…இங்கேயே நிற்கிற உத்தேசமா? போய் தூங்கலாம்.. வா…" என்றான்..

" இல்லை… காலைக்கு சமைக்கணும்… டயர்டா இருக்கு..என்ன பண்றதுன்னு தெரியல…" என்று அவன் முகம் பார்க்க அவனோ " ஹ்க்கும்..காபி போட்டு கொடுக்கறது தான் உங்க வீட்ல சமையலாக்கும்… நீ வா... வேலைக்கு ஆள் வருவாங்க.. அவங்க பார்த்துப்பாங்க…" என்று அவனுடன் அவளையும் படுக்க வைத்தான்…

நன்றாக தூங்கி கொண்டிருந்த சஹிக்கு அருகில் அவளது போன் ஒலிக்க அதை தூக்க கலக்கத்தில் எடுத்து " ஹலோ " என்று கூற மறுபக்கம் பயங்கர சத்தமாக " வெல்கம் டூ திருச்சி" என்று விஷான், தர்ஷினி, பிரியா என மூவரும் கத்த சஹியும் " யாஹூ" என்று கத்திவிட்டு தன் பக்கத்தில் பார்க்க அங்கே அபிஜித் இல்லை... அதனால் விளைந்த நிம்மதியில் " என்ன மூணு பேரும் ஒரே கோரஸா பேசுறீங்க…என்ன விஷயம்?" என்று கேட்க விஷான் " ஹே..சஹி…. இன்னிக்கு நம்ம காலேஜ்ல பெஸ்ட் பிராஜெக்ட் செலக்ட் செஞ்சி வந்துருக்கிற கன்ஸ்ட்ரெக்ஷன்லயே வேலை தராங்களாம்…. சீக்கிரம் கிளம்பி வா... அப்பறம் பேசிக்கலாம்...பை" என்று கூறிவிட்டு போனை வைக்க சஹி எழுந்து தயாரானாள்.

அவள் கிளம்பி ரெடியாகி நிற்க அபிஜித்தும் அறையினுள் நுழைந்தான்… அவளை கண்களில் ரசனையோடு பார்க்க அவள் நிமிர்ந்து இவனை பார்க்க அதற்குள் அவனது கண்கள் கேள்வியோடு நோக்கியது…

" நான் காலேஜ் போகணும்…"- சஹி...

" அதுக்கு... நான் என்ன பண்ணனும்.."- அபிஜித்..

" இல்லை… உங்ககிட்ட சொன்னேன்…"

" சரி..நீ எப்பவும் ஃப்ரெண்ட்ஸ் கூட தானே போவ…அவங்க கூட போ…"என்று அபி கூற சஹி மனதுக்குள் ' காலேஜ்ல வந்து விட்டால் தான் என்ன' என்று நினைத்து விட்டு " ஹ்க்கும்.. எங்களுக்கு போக தெரியும்" என்று சொல்லி நகர அவள் கைகளை பற்றி அபிஜித் " சரி... சாப்பிட்டு போடி… பசி தாங்க மாட்ட…" என்று அக்கறையுடன் சொல்ல அவளோ " ஒன்னும் தேவையில்லை... நான் வரேன்"என்று தன் கைப்பையை எடுத்து கொண்டு கீழே சென்றாள்..

அபிஜித் அவளின் பின்னால் வந்து அவளது கையை பற்றி இழுக்க அவள் போட்டிருந்த சுடிதாரின் ஷால் மேலேறி அவளது வரி வடிவத்தை காட்ட அவளுக்கு அது தெரியாமல் இருக்க அவனின் கண்கள் அவளது நிலைமையை கண்டு இமைக்காது பார்த்து அவளது ஷாலை சரி செய்து அவளிடம் " காலையிலேயே என்னை டெம்ப்ட் பண்ணாதே டி… சின்ன பையன் தாங்க மாட்டேன்…" என்று அவளிடம் வம்பிழுக்க அவள் முறைத்தாள்.. அவள் முறைப்பதை சட்டை செய்யாமல் " நான் சொன்னால் கேட்கணும்... இல்லைனா கேட்க வைப்பேன்… கிளம்பு… ஆல் தி பெஸ்ட்" என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவளை வழியனுப்பினான்….

சஹிக்கு அவன் முத்தமிட்டது பல உணர்வுகளை எழுப்பினாலும் எதையும் காட்டி கொள்ளாமல் தன் நட்புகளுடன் காலேஜ் சென்றாள்…

அங்கே பெஸ்ட் பிராஜெக்ட்டில் செலக்ட் ஆனவர்களின் பட்டியல் ஒட்டிருக்க நட்புகள் நால்வர் பெயரும் அதிலிருக்க அதை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த வேளை அவர்களது பெயர் ஒவ்வொரு கன்ஸ்ட்ரெக்ஷனுக்கும் தனியாக ஒதுக்கப்பட்ட கேபினுக்கு வருமாறு அழைப்பு விடுக்க அனைவரும் அங்கே சென்றனர்…

விஷான், பிரியா இருவரும் மூர்த்தி கன்ஸ்ட்ரெக்ஷன்லயே செலக்ட் ஆகி விட்டனர்... தர்ஷினி, சஹி இருவரும் செலக்ட் செய்ய பட்டிருந்தாலும் அவர்களை செலக்ட் செய்த கன்ஸ்ட்ரெக்ஷன் பெயர் வெளியிடப்படாத நிலையில் சஹி அங்கே இருந்த கேபினுள் அழைக்கப் பட்டாள்….

அவளுக்கு கொடுக்க பட்ட படிவத்தில் அவளது விவரங்களை நிரப்பி முடித்த வேலை அங்கே அந்த கன்ஸ்ட்ரெக்ஷன் மேனேஜர், அவளை உள்ளே அனுப்ப அங்கே நுழைந்தவளுக்கோ "வெல்கம்… மை டியர் பொண்டாட்டி…" என்று கூறியவாறு சுழல் நாற்காலியில் திரும்பினான் அபிஜித்….

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 23

அவனது குரலில் சஹி கண்ணை தேய்த்துவிட்டு பார்க்க அவனோ சிரித்து கொண்டே " நம்புடி... நான் தான்…" என்று சொல்ல அவளோ " நீங்க இங்க ஏன் வந்துருக்கீங்க…" என்று சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே வினவினாள்… அவளது பார்வையை கண்டு கடுப்பாக பேச வாய் திறக்கையில் மேனேஜர் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார்…

" குட் மார்னிங் சார்... இவங்க… " என்று சஹியின் பக்கம் கையைக் காட்டி விளக்கம் சொல்ல முற்படுகையில் அவனை நிறுத்துமாறு சைகை செய்து விட்டு அவனே தொடர்ந்தான்…

" இவங்க பெயர் சாஹித்யா… சுருக்கமாக சஹி… பி.ஆர்க் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்… இப்ப செலக்ட் பண்ண பிராஜெக்ட்ல இவங்களோடதும் ஒன்று… கரெக்டா?..." என்று அவனுக்கு பதில் சொல்ல மேனஜரோ " வாவ்...ரியலி யூ ஆர் கிரேட் சார்… எல்லா டீடெயில்ஸூம் தெரிஞ்சி வைத்துக்கிறீங்க…" என்று பாராட்ட சஹி உதட்டை பிதுக்கிவிட்டு வேறு பக்கம் பார்க்க மேனேஜரை அனுப்பி விட்டு எம்.டி என்ற முறையில் " ஓகே… மிஸஸ்.அபிஜித்… உங்களுக்கு வேலை கொடுப்பதற்கு முன் நீங்க ஒன்னு பண்ணனுமே…" என்று சொல்ல சஹி,அதை வேறு மாதிரி புரிந்து கொண்டு " அதெல்லாம் முடியாது… அதுவும் இந்த மாதிரி இன்டர்வியூ நடக்கற நேரத்தில்... " என்று சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே கூற அவள் சொல்ல அவள் கூறிய வார்த்தைகளை கிரகித்து விட்டு அவனோ "ஏண்டி.. நான் உன்னை சாப்பிட வைக்கலாம் னு பிளான் பண்ணா… நீ என்னடி உன்னை நான் சாப்பிடுற மாதிரி நினைக்கிற…" என்று பட்டென்று கேட்க அவளோ அசடு வழிந்தாள்…

பின்னர் அவனது அறைக்கு உணவை வரவழைத்து அவளை சாப்பிட வைத்தான்… அவளோ அவனை முறைத்து பார்த்து " நீங்க நினைச்சதை நடத்தி காட்டணும்..அவ்ளோ பிடிவாதம்…" என்று கூற அபிஜித்" பிடிவாதம் இருக்கணும்... நம்ம லைஃப்ல... அப்போது தான் ஜெயிக்க முடியும்…" என்று திமிராக கூறினான்…

" எல்லா இடத்திலும் பிடிவாதம் ஜெயிக்காது... தெரியும் தானே…" என்று கேள்வி கேட்க

" ஹ்ம்... ஆனால் அந்த பிடிவாதத்தால் தான் இந்த நிலையில் இருக்கேன்…நிறைய இழந்திட்டேன்…. ஆனால் இருக்கிறதை தக்க வைக்க எனக்கு பிடிவாதம் தேவை…" என்று பதிலளித்தான்…

" இதெல்லாம் சரிதான்… ஆனால் இன்னும் எனக்கு சில விஷயங்களுக்கு விளக்கம் எப்போ சொல்லப் போறீங்க…" என்று அடுத்த கேள்வி கேட்க...அவனோ " நேரம் வரப்போ உனக்கு தெரியவரும்... அதுவரை சமத்து பொண்டாட்டியா நீ இருப்பீயாம்…." என்று கண்களில் குறும்பும் குரலில் அழுத்தமுமாக கூறிவிட்டு " பை தி பை… உனக்கு என்ன வேலைனா.. நீதான் இனி என்னோட பி.ஏ…" என்று சொல்ல

சஹி " ஹ்க்கும்... வீட்டுல இந்த முகத்தை பார்ப்பது பத்தாதுன்னு இப்ப ஆபிஸ்ல வேற பக்கத்திலேயே வச்சிக்கணுமா… ஓ மை பெருமாளே…" என்று முணுமுணுப்புடன் கூற அவள் முணுமுணுப்பை அபிஜித் கவனித்து விட்டு " நீ எப்பவும் என் கூடவே இருக்கணும்... அதுனால தான் பி.ஏ. வா போட்டுருக்கேன்டி… இப்ப நீ கிளம்பலாம்… " என்று கூறிவிட்டு அடுத்த கேண்டிடேட் யார் என்று பார்க்க தொடங்கினான்…

சஹியின் நேர்காணலை முடித்து விட்டு வரவும் அவளின் நட்புகளும் அங்கே வர அனைவரும் நேர்காணல் அனுபவத்தை பேசிக் கொண்டே வீடு சென்றனர்…

நேர்காணல் முடிந்த அடுத்த வாரம்……

தூங்கிக் கொண்டிருந்த அபிஜித்திற்கு விழிப்பு தட்ட அவன் திரும்பி படுத்து கண்களை மூட போகும் நேரம் சஹி குளித்து முடித்து பாத்ரூமிலிருந்து வெளி வர அவளை இமைக்காது பார்த்து விட்டு இவனை நோக்கி அவள் திரும்பிய வேளை டப்பென தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்…

அவளோ, இவனை நோக்கி வர அபிஜித் மனதிலோ ' ஐயோ! நான் பார்த்ததை ஒரு வேளை பார்த்திட்டாளோ…' என்று புலம்ப சஹி, அவன் அசந்து தூங்கிட்டு இருப்பதாக நினைத்து கொண்டு " ஏன்டா….. நானே இன்னைக்கு முதல் நாள் வேலைக்கு போறதால அவசரம் அவசரமா கிளம்பி கிட்டு இருக்கேன்… ஒரு கன்ஸ்ட்ரெக்ஷனுக்கு ஓனரா இருந்து கிட்டு எனக்கு முன்னாடியே நீ கிளம்பாம...தூங்கிகிட்டு இருந்தா எப்படி அந்த கன்ஸ்ட்ரெக்ஷன் உருப்படும்... ஹ்ம்ம்…" என்று பெருமூச்சுடன் அவனைப் பார்த்து கொண்டே கூறி விட்டு தலையில் கட்டியிருந்த துண்டினை அவிழ்க்க அதிலிருந்து சிந்திய நீர்த்துளிகள் அவன் முகத்தில் பட்டு தெறித்தன…. அப்போதும் எழாது இருப்பவனை அவள் " ஓஹோ! இதெல்லாம் பூகம்பமே வந்தாலும் எழுந்துக்காத கேஸா…" என்று முணுமுணுத்தாள்…

இதற்கு மேல் தூங்குவது போல நடிக்க முடியாதவன் அவளது இடுப்பை பிடித்து இழுக்க அவன் மேல் சாய்ந்தாள்… அவளை எழ விடாது…. கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டான்…

" ஹான்… இப்ப சொல்லுங்க மிஸஸ்.அபிஜித்…நேத்து நீங்க எப்ப தூங்குனீங்க…"

" ஒன்பதரை மணிக்கு…."

" ஹ்ம்ம்... நான் எப்போ தூங்க வந்தேன்…."

" எனக்கு தெரியாது… நான் தான் தூங்கிட்டு இருந்தேன்ல…" என்று அப்பாவியாக கூற

" புருஷன்காரன் எப்ப வர்றான்னு கூட தெரியாமல் நீ தூங்கிட்டு பேச்சாடி பேசுற… நான் நைட் ஒரு மீட்டிங் முடிச்சுட்டு வந்து படுக்க ஒரு மணி ஆச்சு... அதெல்லாம் உனக்கு தெரியாது... ஆனால் நான் சீக்கிரம் எழுந்துக்கலன்னு மட்டும் உள்ளுக்குள்ளே பொங்க தெரியும்…" என்று அவளது தலையில் தட்டி விட்டு குளிக்க சென்றான்…

அபிஜித் ரெடியாகி வர சஹி டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள்… இருவரும் பேச்சு ஏதுமின்றி சாப்பிட்டு முடித்து விட்டு கை கழுவும் போது சஹி, " நான் போய் பேக் எடுத்து வரேன்…நீங்க கார்ல வெயிட் பண்ணுங்க…" என்று சொல்ல அவனோ " எதுக்கு" என்று புருவம் உயர்த்த " இன்னிக்கு நானும் உங்ககூட கன்ஸ்ட்ரெக்ஷன் வரணும்ல… இரண்டு பேரும் ஒரே இடத்திற்கு தானே போறோம்…அதுதான் சேர்ந்து போகலாமேன்னு சொன்னேன்…." என்று அவன் முகம் பார்க்காமல் கூறினாள்….

" அந்த கன்ஸ்ட்ரெக்ஷன்ல நான் யாருடி…"

" நீங்க தான் ஓனர்…"

" நீ யாரு.."

" நான் வேலைக்கு புதுசா சேர போறவள்… உங்க எம்ப்ளாயி…"

" ஹ்ம்ம்...ஓனரும் எம்ப்ளாயியும் ஒண்ணா கார்ல போய் இறங்குனா நல்லாயிருக்காது...நீ பஸ்ல வா…" என்று சொல்ல

சஹி அவன் பதிலில் கடுப்பாகி " அப்ப நான் எங்கப்பா கார்ல வரேன்.." என்று சொல்லி முடிப்பதற்குள் அபிஜித் " ஏய்…" என்று கர்ஜித்து விட்டான்…

" நமக்கு கல்யாணம் ஆன அப்பவே சொன்னேன்... உனக்கு இனி அப்பன் வீடுன்னு எதுவும் இல்லை… மீறி இதையே பேசிக்கிட்டு இருந்தேன்னு வை... என் உரிமை எதுவரைக்கும் இருக்குன்னு காட்ட வேண்டி வரும்..என்னை அந்த நிலைக்கு கொண்டு வந்துறாத… புரிஞ்சதா?" என்று சற்று காட்டமாகவே கேட்க சஹி " உங்களுக்கும் அப்பாவுக்கும் இடையில் என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியாது… ஆனால் அந்த பிரச்சினை என்னன்னு தெரிஞ்சா என்னால் நிவர்த்தி செய்ய முடியும்னு தோணுது…"என்று நிதானமாக கூறவும் அதைவிட நிதானமாக அவன் குரல் " உன்னால் அதை பண்ண முடியும் தான்... ஆனால் அதுக்கு இன்னும் நேரம் வரலை... இப்ப நீ கிளம்பி போ…" என்று அவன் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்….. அவளோ அவன் கிளம்பி சென்றதை பார்த்து விட்டு " ஹ்க்கும்... என்னை கிளம்பி போன்னு சொல்லிட்டு அவன் கிளம்பி போய்ட்டான்… " என்று சத்தமாக கத்தினாள்….

அவன் கன்ஸ்ட்ரெக்ஷனில் நுழைந்து அரைமணி நேரமாக அப்போது தான் சஹி உள்ளே நுழைந்தாள். அவளை அங்கிருந்த ஜன்னலின் வழியே பார்த்து கொண்டிருந்தான்… அவள் உள்ளே நுழைந்து எங்கு செல்வது, எவ்வாறு செல்வது என்று கண்களை சுழற்ற அவள் குழம்பிய வேளை அவளைப் பார்த்த வரவேற்பு பெண் அவளை எம்.டி.என்று நியான் எழுத்துக்களால் ஒட்டப் பட்டிருந்த அறையை காட்ட சஹியும் ஹ்ம் என்று தலையசைத்து அந்த அறைக்கு நடந்தாள்….

அறையின் முன்னால் நின்று கதவைத் தட்ட அவளை உள்ளே வருமாறு அழைப்பு வந்தது… அங்கே யாரையும் காணாது போக அவளின் பின்னால் நின்று " வாங்க மேடம்... முதல் நாளே லேட்டா வந்தீங்கன்னா அப்பறம் எப்படி வேலை கத்துக்குவீங்க…. எனக்கு நேரம் தவறாமையா இருக்கிற ஸ்டாப் தான் வேணும்...இனி இது தான் லாஸ்ட் வார்னிங்…" என்று கூற அவளோ மனதுக்குள் ' ரொம்ப ஓவரா போறான்' என்று நினைத்து விட்டு " ஸாரி சார் நாளையில் இருந்து என் புருஷரை கார்ல ட்ராப் பண்ண சொல்றேன்… இனி லேட் ஆகாது... இப்ப எனக்கு என்ன வேலை இருக்கு சார்" என்று பவ்யமாக கேட்டாள்….

அதற்குள் கதவை திறந்து கொண்டு கதிர் உள்ளே வர அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு " மீட் மிஸ்டர்.கதிர்… மை பர்சனல் செகரட்டரி…" என்று அவனை அறிமுகப்படுத்த சஹியோ " ஹ்ம்... தெரியுமே… கல்யாணத்துல பார்த்துருக்கேன்… " என்று நக்கலாக கூற அதை விட அபிஜித் படுநக்கலாக " ஹ்க்கும்.. நீயே பாதி மயங்கி கிடந்த...இதுல எங்க நீ பார்த்துருக்க போற.." என்று காலை வாரினான்…

கதிர் " டேய்… சீக்கிரம் கிளம்புடா… டெண்டர் இந்த தடவையும் நம்ம கைக்கு கிடைக்கணும்… அதை முடிச்ச அப்பறம் நீங்க சண்டை போட்டுக்கங்க… வாங்க.." என்று கூறிவிட்டு அபிஜித் தை பார்க்க அவனோ சஹியை பார்த்து" நீயும் வாடி…முதலில் இதை எல்லாம் கவனிக்க பழகு…" என்று அவளையும் உடன் அழைத்துச் சென்றான்….

மூவரும் உள்ளே நுழையும் போதே அந்த இடம் ஒரே கூட்டமாகவும் சத்தமாகவும் இருந்தது.. அபிஜித் மற்றும் கதிருக்கு அந்த இடம் பழகிப் போனதால் அவர்கள் சாதரணமாக அமர்ந்திருந்தனர்… ஆனால் சஹிக்கோ காதில் வலி வரும் அளவிற்கு இருக்க அவள் காதைத் தேய்த்துவிட்டு சுற்றிலும் பார்க்கையில் அங்கே மூர்த்தி, ஜீவா, மற்றும் யோகேஷ் என்று மூவரும் வர சஹிக்கு அதிர்ச்சியாக இருக்கவும் அவளை முதலில் கவனியாது சென்ற மூர்த்தி அபிஜித்திற்கு வலதுபுறமாக அமர்ந்து அவனை ஏறெடுத்துப் பார்த்தார்…

அவனோ முகத்தில் கேலி புன்னகை தவழ அவரைப் பார்க்க அவர் பார்வை அவனருகில் அமர்ந்திருந்த சஹியை பார்த்து அதிர்ச்சியை காட்டியது… சஹிக்கும் அவரது நிலைமை தான்…

பல கன்ஸ்ட்ரெக்ஷன்களுக்கு இடையே நிலவிய டெண்டர் அபிஜித் கோட் பண்ணிய ரூபாயை விட அதிகமாக இருந்ததால் அவனது கைக்கு கிடைத்தது…

சஹிக்கு தனது கணவனின் வெற்றி கண்டு மகிழ்ச்சியாகவும் தனது தந்தையின் தோல்வி கண்டு வருத்தமாகவும் இருக்க… அவள் மௌனமானாள்…

மூர்த்தியை வெறுப்பேற்ற நினைத்த அபிஜித் சஹியின் காதில் " ஏண்டி… உன் ஆளு ஜெயிச்சிட்டேன்…. எனக்கு வாழ்த்து சொல்ல மாட்டியா? " என்று வினவ அவள் பேச தடுமாறினாள்…

அவளின் தடுமாற்றத்தை கண்டு அவளை சகஜமாக்கும் விதம் " சரி… நானே இந்த வெற்றிக்கு உன்கிட்ட இருந்து பரிசு வாங்கிக்கிறேன்…. " என்று அவள் காதில் ரகசியமாக கூற " உங்க கிட்ட கொடுக்க என்கிட்ட எந்த பரிசும் இல்லை… " என்று அவள் தயங்கி கொண்டே... அவனோ மயக்கும் குரலில் அவளிடம் " உன் கிட்ட இல்லைன்னு யாருடி சொன்னா? நீயே போதும்டி…. என் வாழ்க்கை முழுதும் கிடைத்த பரிசாக…" என்று கூறினான்….

அவனின் அந்த வார்த்தைகள் சஹிக்கு ஜில்லென்ற உணர்வை தந்து கன்னத்தை சிவக்க செய்தது….

டெண்டர் பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து கிளம்பும் வேளை சஹி தயங்கி நிற்க அபி " என்ன?" என்று புருவம் உயர்த்தி வினவ சஹி " அண்ணன்கிட்டயாவது நான் பேசிட்டு வரேன்… ப்ளீஸ்.." என்று அனுமதி கேட்க " எனக்கு மாமனார் மேல் தான் பகை… மச்சான் மேல் இல்லை… நீ உங்க அண்ணன் கிட்ட பேசு…. நான் உங்க அப்பா கிட்ட பேசிட்டு வரேன்…" என்று அனுப்பி வைத்தான்…

சஹி தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஜீவா தயங்கி நிற்க அதைக் கண்டு கொள்ளாத அவளோ " எப்படி அண்ணா இருக்க?…." என்று சாதாரணமாக கேட்டாள்… அவனோ தவிப்புடன் " நீ எப்படிடா இருக்க..‌. அவர் உன்னை நல்லா பார்த்துக்கறாரா?" என்று எதிர் கேள்வி கேட்டான்….

இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த அபிஜித் கண்ணுக்கு எட்டாத சிரிப்புடன் " அப்புறம்..மாமனாரே! ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல… பொண்ணை பார்த்த சந்தோஷமா? " என்று புருவம் உயர்த்தி வினவ மூர்த்தியின் மனமோ அவரை எச்சரிக்கை விடுத்தது…

' நாம எதை நினைச்சி சொன்னாலும் ஏதாவது அதுக்கு எதிராக தான் செய்வான்… அலெர்ட்டா இரு மூர்த்தி' என்று மனம் நினைத்ததை செயல் படுத்த அமைதியாக இருந்தார்…

ஆனால் அவனோ, 'விடுவேனா அவ்ளோ சீக்கிரம் உன்னை ' என்று நினைத்திருப்பான் போல… அவரது வாயிலிருந்து வார்த்தையை பிடுங்கியே ஆக வேண்டும் என்று நினைத்து " உங்க பொண்ணை எதுக்கு இந்த இடத்தில் வர வைச்சிருக்கேன் தெரியுமா? " என்று அவன் கேள்வி கேட்க மூர்த்தி அவனது கேள்வியில் உள்ளுக்குள் பதறினாலும் வெளியில் அமைதியாக " இல்லை" என்று தலையாட்டினார்…

அவரது பதிலில் கேலியாக புருவம் உயர்த்திய அபிஜித் " பழமொழி ஒன்று கேள்வி பட்டுருக்கீங்களா… தன் கையைக் கொண்டே தன் கண்ணை குத்துறது… ஹ்ம் " என்று கேள்வி கேட்க மூர்த்தி அவனை அதிர்ந்து பார்த்தார்…

அவரது அதிர்ச்சியில் அவருக்கு தான் சொல்ல வந்தது தெளிவாக புரிந்து விட்டது என்பதை அறிந்தவனோ மாயக் கண்ணனாக குறும்புடன் அவரைப் பார்த்து கண்ணடிக்க " எஸ்! அதே தான்... இனிமேல் உங்ககூட மோதப் போறது... மிஸஸ். சாஹித்யா அபிஜித்…" என்று கூறிவிட்டு அங்கே ஜீவாவுடன் பேசி முடித்து விட்டு நின்ற சஹியுடன் வெளியேற மூர்த்திக்கோ முகம் வெளிறிப் போய் இருந்தது..

காரில் சென்று கொண்டிருந்தனர் அபிஜித்தும், சாஹித்யாவும்…

இருவரும் ஏதும் பேசாமல் அமைதியாக யோசனையில் வந்துக் கொண்டிருந்தனர்…

அவர்களுக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த கதிர், திரும்பி பார்க்க இருவரும் தீவிர சிந்தனையில் இருப்பதை அறிந்து காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூற அவர் நிறுத்திய வேகத்தில் அபிஜித் சுதாரித்தாலும் சஹியால் சுதாரிக்க முடியாமல் முன்னிருக்கையில் மோத செல்ல அபிஜித் அவளை மோத விடாமல் வளைத்து பிடிக்கும் வேளை இருவரும் கட்டியணைத்த நிலையில் இருந்தனர்….

கதிர், அபியிடம் மன்னிப்பு கேட்பதற்கு திரும்ப இருவரும் இருந்த நிலைக் கண்டு வேகமாக முன்னால் திரும்பிக் கொண்டான்…

அபிஜித் , தொண்டையை செருமிக் கொண்டு " இங்கே ஏன்டா நிறுத்துன" என்று கேட்க கதிரோ " ரெண்டு பேரும் சாப்பிடாமல் எவ்ளோ நேரம் இருப்பீங்க… போய் சாப்பிட்டு வாங்க…" என்று அங்கிருந்த ஹோட்டலை நோக்கி கைக்காட்டினான்….

இருவரும் உள்ளே நுழைந்து தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்து சாப்பிட்டு வெளிவர அப்போது அபிஜித் தை நோக்கி வந்த ஒருவன் அவனிடம் கைக்குலுக்கி பேச சஹி சற்று நகர்ந்து போய் இருவரையும் பார்க்க சஹிக்கு அபிஜித்துடன் நின்றிருந்த அவனை எங்கோ பார்த்தது போல் இருக்க அவளது மூளை படு வேகமாக சிந்தித்தது… எங்கே? இவனை பார்த்தோம் என்று நினைவடுக்கில் தேட அவள் நினைவு சொன்ன விஷயம் அவள் தலையில் இடி விழுந்த உணர்வை ஏற்படுத்தியது…

" அப்போ… செழியன் சொல்லித் தான் என்னை இவன் கடத்துனானா? " என்று மனம் அதிர இருவரையும் பார்த்து கொண்டிருந்தாள்….

அவளின் அதிர்ந்த பார்வையைக் கண்ட அபிஜித்தின் மனம் ஏதோ சரியில்லை என்று உரைக்க அவளது கையைப் பிடிக்க எத்தனிக்க அவனது கையைத் தட்டி விட்டு விட்டு விறுவிறுவென வெளியேறினாள்…

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-24

அவளின் உதாசீனத்தை அபிஜித்தால் தாங்க முடியாமல் போக விறுவிறுவென நடந்து செல்லும் அவளை நோக்கி சென்றவன் வழி மறித்தாற் போல் நின்று கொண்டு அவளது கண்களை அழுத்தமாக பார்த்து விட்டு " உன்கிட்ட பலதடவை சொல்லிருக்கேன்… எக்காரணம் கொண்டும் முகத்தை திருப்பக் கூடாது… எதுவாக இருந்தாலும் நேரடியாக கேட்டு தெளிவுப் படுத்திக்கோன்னு சொல்லி இருக்கேனா ? இல்லையா ?... இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்த? இப்ப என்னாச்சு? " என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சஹிக்கும் அவன் மேல் கோபம் வந்தது…

அவனது கேள்விக்கு பதிலுரைக்காமல் அவளது முறைப்பை கண்டவனோ " ஹ்ம்.. கேட்கறேனே? சொல்லுடி.." என்று அதட்டினான்.

சஹியோ நிதானமாக அவனது கண்களை ஊடுருவி பார்க்க " நிஜமாகவே நீங்க என்னை செழியனா இருக்கும் போது காதலிச்சீங்களா?"

அவளது கேள்விக்கு பதில் கொடுப்பதற்கு முன் அவனது முகத்தில் பல வகை உணர்ச்சி கலவைகள் வந்து போக… அதை எல்லாம் உணர்ச்சியற்ற முகத்துடன் சஹி பார்த்தாலும் அவளது கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நின்றாள்…

" என்னடி… கேள்வி இது...பிடிக்காம ஒரு பொண்ணு கழுத்தில் தாலி கட்டி விருப்பமில்லாத வாழ்க்கை வாழ என்னால் முடியாது...உன்னை காதலிச்சது உண்மை தான்டி…" என்று ஏறக்குறைய கத்தினான்…

அவனது பதிலில் சிறிது மகிழ்ந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தனது அடுத்த கேள்வியை கேட்டாள்…..

" சரி... நீங்க என்னை காதலிச்சீங்களோ? இல்லையோ? ஆனால் நான் உங்களை மனமார தான் காதலிச்சேன்… எங்கப்பா உங்களுக்கு எதிரின்னு எனக்கு புரியுது... அதுக்கு என்னை கடத்தி தான் அவரை பிளாக் மெயில் பண்ணணுமா? இப்படி செய்ய வெட்கமா இல்லை…" என்று ஆக்ரோசமாக கேட்ட… அடுத்த நொடி பளார் என்று அறைந்திருந்தான்..

" பொண்ணு மேல கையை வைச்ச எவனும் ஜெயிச்சதா சரித்திரமே இல்லை… அதும் நான் காதலிக்கிற பொண்ணு மேல கையை வைக்க எவனையும் விடமாட்டேன்…அப்படி கையை வைச்சவனையும் உயிரோட விடமாட்டேன்…." - அபிஜித்..

"அப்போ நீங்க என்னை கடத்தலைனா வேற யாரு அதை செய்திருக்க போறாங்க...எங்க அப்பாவா" என்றவாறே நக்கலாக புருவத்தை ஏற்றி இறக்கியவளை ஒரு நிமிடம் ரசித்தவன் அவளைப் போலவே புருவம் உயர்த்தி " இருக்கலாம்… யார் கண்டது?" என்று அசால்டாக கூறினான்…

இருவருக்கும் காரசாரமாக விவாதம் நடந்துக் கொண்டிருந்த வேளை டெல்லியில் கபிலனுக்கும் ஜீவிகாவுக்கும் இடையேயும் விவாதம் நடந்துக் கொண்டிருந்தது…

" இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற ஜீவி… ஏற்கனவே நான் சொன்னது போல நாம தான் ஜித்துவை விட்டு தள்ளி இருக்கணும்… அவனை பெத்தவகிட்ட நல்லபடியா சேர்த்தாச்சு… இனி நாம் ஒதுங்கி நின்று அவன் நல்லா வாழுறதை பார்க்கணும்…" என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் வேளையில் ஜீவிகா விசும்பும் சத்தம் கேட்டு தனது பேச்சை நிறுத்திவிட்டு தனது மனையாளை உற்று நோக்கினார்….

அவரது பார்வை ஜீவிகாவை ஏதோ செய்ய " ஏன்? இப்படி பார்க்கறீங்க? " என்று கேள்வி கேட்க கபிலனோ " நிலைமை இப்படி தான் இருக்கும்னு தெரிஞ்சும் நீ இப்படி இருக்கிறது சரியா ஜீவி? ஜித்துவை நம்ம கையில வாங்கினப்போ நம்ம இரண்டு பேரும் சேர்ந்து என்ன முடிவு பண்ணோம்னு யோசி… நமக்கு கதிர் இருக்கான்... ஆனால் பார்வதிக்கு ஜித்து மட்டுமே சொந்தம்...அவனை அவன் அம்மாகிட்ட இருந்து பிரிக்கிற பாவம் வேண்டாம்... ஏற்கனவே பார்வதி இழந்தது எல்லாம் போதும்…" என்று பொறுமையாக எடுத்துக் கூறினார்.

"நீங்க என்ன சொன்னாலும் பெத்தவளை விட வளர்த்தவளுக்கு பாசம் அதிகம்… ஜித்துவுக்கு என் மேல்தான் அதிக பாசம் இருக்கும்… இதை அவனால் மறுக்க முடியாத உண்மை…" என்று அழுதுகொண்டே கூறினாள் ஜீவிகா…

" இங்கே பாரு ஜீவி... நமக்கு நம்ம பையன் கதிர் இருக்கான்...அவனை நினைச்சி பாரு…. ஜித்துவுக்கு இனி நம்ம கூட இருக்க வாய்ப்பு இல்லை...இனி நம்ம கூட காலம் பூரா நம்ம பையன் கதிர் இருப்பான்...அவனை கவனி…" என்று சொல்லி முடிப்பதற்குள் ஜீவிகா " ஜித்து…. கதிர் கூட இருக்கிற தைரியத்துல தான் நான் அவனைக் கண்டுக்கல... ஏனெனில் ஜித்துவோட அக்கறை கதிர் மேல் சிறு துரும்பு கூட பட விடாமல் பத்திரமா பார்த்துக்குவான்னு நம்பிக்கைத் தான்… ஆனால் இப்ப அப்படி நிலைமை இல்லை...ஜித்துக்கு கல்யாணம் ஆகி பொறுப்பு இன்னும் கூடியிருக்கு... அதனால் அவனை ஃப்ரீயா இருக்க விடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்…" என்று இத்துடன் பேச்சு முடிந்தது என்று கிளம்பி வெளியே சென்று விட்டார்…

இவர்களது வாக்குவாதம் முடிந்தாலும் அங்கே அபிஜித்- சஹியின் வாக்குவாதம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது…

" இப்ப என்னதான் டி சொல்ற… எதையாவது விதண்டாவாதமா பேசிக்கிட்டு இருக்க…இப்ப நான் அந்த டெண்டர் சக்சஸ்புல்லா முடிஞ்சதுக்கு போய் கதிர்கிட்ட டாக்குமெண்ட் ரெடி பண்ண சொன்னேன்… அதை நான் முடிச்சுட்டு வந்து உன்கிட்ட பேசிக்கிறேன்… வரேன்" என்று ஓடி விட்டான்.

சஹிக்கு அவன் செய்கை சிரிப்பை வரவைத்தாலும் அவள் மனதை கணவனது எண்ணம் மட்டுமே ஆக்கிரமித்தது…

அவளது எண்ணம் போகும் போக்கை கலைக்கும் விதமாக வானதியின் எண்ணிலிருந்து அழைப்பு வர சஹி, அதை ஏற்றாள்….

" அண்ணி " என்று கதறலுடன் அழைக்க சஹி அதிர்ச்சியாகி " என்ன ஆச்சு….வானு… ஏன் இப்படி அழுகிற? யாருக்கு என்ன ஆச்சு? எல்லாரும் அங்கே நலம் தானே? " என்று வானதியின் அழுகைக்கு சஹி ஏதும் காரணம் தெரியாமல் பதற்றமாக கேட்டாள்…

" அண்ணி! உங்க அண்ணன் கிட்ட பேசிட்டு இருந்தேன்...அப்போ அவர் பேசிட்டு இருந்தப்ப அம்மான்னு கத்திட்டு போனை கீழே போட்ட சத்தம் கேட்டது… அவரை யாரோ பின்னாலிருந்து அடிச்சாங்க… அவங்க பேசுனப்போ உங்க அப்பா பேரை சொல்லி ஏதோ இப்ப கட்டிட்டு இருக்க பதினெட்டு மாடி பில்டிங்கிட்ட கூட்டிட்டு போகணும்னு பேசுனாங்க... எனக்கு பயமா இருக்கு… சீக்கிரம் இந்த விஷயத்தை அண்ணா கிட்ட சொல்லுங்க… நான் கால் பண்ணா அண்ணா போனை எடுக்கவே இல்லை..பிஸி போல… ப்ளீஸ்... அண்ணி.. என் உயிரை எப்படியாச்சும் காப்பாத்துங்க… " என்று கெஞ்சி கொண்டிருந்தாள் வானதி…

சஹிக்கு அவளது இறைஞ்சல் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் வானதி சொன்ன விஷயம் அதிர்ச்சி ஏற்படுத்த சட்டென்று சஹியின் மூளை வேலை நிறுத்தம் செய்தது…

வானதி, " ஹலோ... அண்ணி… ஏதாவது சொல்லுங்க… சீக்கிரம் அண்ணனை அவரை காப்பாத்த சொல்லுங்க...ப்ளீஸ்.." என்று அழுகையுடன் கூறவும் சஹி " ஹ்ம்... நான் பார்த்துக்கிறேன்… நீ ரிலாக்ஸாக இரு... நானே கால் பண்றேன்… வெயிட் பண்ணு…" என்று போனை கட் செய்து விட்டு அபிஜித்திற்கு அழைத்தாள்….

இவளது ரிங் போன அடுத்த நொடியே அபிஜித் காலை அட்டெண்ட் செய்ய மடமடவென இவள் கூறிய விஷயத்தை கிரகிக்கவே அவனுக்கு நிமிடங்கள் தேவைப் பட்டது…

" உங்க மச்சானை காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு… சீக்கிரம் அண்ணனை கூட்டிட்டு வாங்க…" என்று கட்டளை இட்டாள்.

அதற்கடுத்து ஆக வேண்டியவற்றை அபிஜித் கதிருக்கு போனில் கட்டளையிட ஜீவாவை கடத்தி வைத்திருக்கும் இடத்தை இருவரும் அரைமணி நேரத்தில் கண்டுப்பிடித்து விட்டனர்…

சஹிக்கு ஜீவாவின் நிலைமை பற்றி ஏதும் தகவல் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் வானதியின் நிலைமையும் அதே போல் தான் இருந்தது….

வானதி, நிலைக் கொள்ளாமல் சஹிக்கு அழைக்க, சட்டென்று அவளது அழைப்பை ஏற்ற சஹி, " ஹலோ… வானதி.." என்று தான் கூறியிருப்பாள்…. அதற்குள் வானதி தவிப்புடன் " அண்ணி…உங்க அண்ணனை பற்றி ஏதும் தகவல் கிடைச்சதா? அண்ணா கால் பண்ணாங்களா? " என்று சஹியை பதிலளிக்க விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்க… சஹி " ஸ்டாப் இட்… வானதி…" என்று கத்திவிட்டாள்…

" நீ பாட்டுக்கு கால் பண்ணி என்னாச்சு? ஏதாச்சுன்னு கேட்டுகிட்டு இருக்க… எனக்கு தகவல் தெரிஞ்சா தானே நான் சொல்ல முடியும்….நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்ன மாதிரி நான் கேட்குறதுக்கு நீ முதலில் பதில் சொல்லு… " என்று அதட்டலாக சொல்ல வானதியோ அவளது குரலில் பயந்துபோய் " கேளுங்க அண்ணி… " என்று உதறலாக கூறினாள்….

" ஹம்ம்…. முதலில் உனக்கு எப்படி எங்க அண்ணன் ஜீவாவை தெரியும்?... சொல்லு…" என்று நிதானமாக கேட்க வானதி பதிலளிக்கும் சமயம் ஜீவாவும் அபிஜித்தின் பெயரை முனங்க தொடங்கினான்….

அபிஜித் அங்கே புதிதாக கட்டப்பட்டு வரும் அறையில் நிதானமாக நடக்க தொடங்க அவனைப் பின்பற்றி வந்த கதிர், அபிஜித் தின் கையைப் பிடித்து தீடிரென்று இழுக்க அபிஜித் புருவமுயர்த்தி என்னடா... என்று கேட்டான்… கதிர் அதற்கு பதிலளிக்காமல் திரும்பி பார்க்குமாறு சைகையால் சொல்ல அங்கே தன் அடியாளுகளுடன் வந்த யோகேஷை பார்த்தான்….

" யோகேஷ் ஏண்டா…. இவனை கடத்துனான்..?" என்று கதிரிடம் அபி கேட்க " ஹ்ம்… கொஞ்சம் இரு... நான் போய் அவன்கிட்டயே கேட்டுட்டு வரேன்…" என்று நக்கலாக கூறிவிட்டு அபிஜித் திடம் அடி வாங்கினான்…

அபிஜித்திற்கு ஒன்று மட்டும் உறுத்தியது… அது என்னவென்றால் ஜீவாவை கடத்தியிருக்கிறான் என்றால் அவனுக்கு தன்னைப் பற்றிய ரகசியங்கள் தெரிந்திருக்கலாம்… அல்லது ஜீவா பற்றிய உண்மை அறிந்திருக்கலாம் என்று அவனது உள் மனது கூறியது…

அவனது இன்னொரு மனமோ ' எப்படி இருந்தாலும் தெரியத்தானே போகிறது… விடு… வர்றதை பார்த்துக்கலாம்' என்று உரைத்தது…

அபிஜித்தின் சிந்தனையை கலைக்கும் விதமாக ஜீவாவின் அலறல் சத்தம் கேட்க அங்கே யோகேஷ் அவனது தோளில் கத்தியை அழுத்தி பிடித்து கொண்டு " கதறுடா.. நல்லா கதறு… உன் கதறலைக் கேட்டு நீ தோள் கொடுத்தவன் வர்றானான்னு பார்க்கணும்… என்று சத்தமாக கத்திக் கொண்டே அவனது தோளில் கத்தியை ஆழமாக இறக்கும் வேளை யோகேஷ் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து கிடந்தான்….

அவன் கீழே விழுந்த சத்தத்தில் ஜீவா அதிர்ந்து பார்க்க அவன் முன்னால் அபிஜித் கோபமான முகத்துடன் நின்றிருந்தான்….

பொறி கலங்கிய முகத்துடன் யோகேஷ் எழுந்தும் நிற்க முடியாமல் இருக்க அவன் தனது தலையை இருபுறமும் அசைக்க அவனுக்கு நிதானம் திரும்பியது… அவன் ஆக்ரோஷமாக அபிஜித் புறம் திரும்பி " வாடா… இவனை என்று ஜீவா புறம் கையைக் காட்டி இவனை தொட்டா நீ வருவன்னு எனக்கு தெரியும்… ஆனால் இவ்ளோ சீக்கிரமா வந்து நிப்பன்னு நினைக்கலடா…. அவ்ளோ பாசமாடா உன் மச்சான் மேல…" என்று நக்கலடிக்க அபிஜித், ஜீவா முகத்தைப் பார்த்துவிட்டு அமைதியாக நின்றான்….

" இங்கே என்ன நடக்குது…." என்ற குரல் கேட்கவும் நின்றிருந்தவர்கள் திரும்பி பார்க்க அங்கே மூர்த்தி நின்றிருந்தார்…

யோகேஷோ அவனது அடியாளிடம் தாழ்ந்த குரலில் " இந்தாளு எப்படி இங்கே வந்தான்" என்று கடிந்து விட்டு தனது முக மாற்றத்தை ஒழுங்கு படுத்தி " வாங்க அங்கிள்… சரியான நேரத்தில தான் வந்துருக்கீங்க… இதோ இங்கே நிக்குறானுங்களே…. உங்க சொந்தக்காரனுக இவங்க பண்ண வேலை தெரியுமா? உங்களுக்கு…" என்று மூர்த்தியிடம் ஆக்ரோஷமாக கேட்க அவரோ கண்களில் கேள்வியுடன் யோகேஷைப் பார்த்தார்.

அவர் என்ன கேட்பார் என்று தெரியாதா அவனுக்கு? இருந்தாலும் அவர்களை இன்னும் அதிகமாக சித்தரித்து அவனுக்கு வேண்டியதை லாவகமாக அடைய வேண்டிய அவசியம் இருப்பதால் அவர்களின் தவறை மிகைப் படுத்தி காட்ட எண்ணினான்….

" நம்ம கன்ஸ்ட்ரெக்ஷன்ல நாம டெண்டருக்கு கோட் பண்ணிய அமௌண்ட் மற்றும் நம்மளோட அடுத்த மூவ் என்னன்னு இதோ நிக்குறானே இந்த அபிஜித் அதாவது உங்க மாப்பிள்ளை அவன்கிட்ட சொல்றது, நம்ம கன்ஸ்ட்ரெக்ஷன்ல இதுவரை நடந்த எல்லா வகையான தோல்விக்கு காரணம் அந்த கருப்பு ஆடு தான்… அதை நான் கண்டுபிடிக்கிறேன்னு சொன்னேன்ல அங்கிள்…. அந்த கருப்பு ஆடு வேற யாரும் இல்லை… இதோ இங்கே நிக்குறானே இந்த ஜீவா… இவன் தான் அந்த கருப்பு ஆடு…." என்று யோகேஷ் சொல்லிய மறுநொடி மூர்த்தி பலமாக அதிர்ச்சி அடைந்து நின்றிருந்தார்….

இருந்தாலும் யோகேஷ் சொன்னது மூர்த்திக்கு நம்ப முடியாது போக அவர் நிதானமாக ஜீவாவை நோக்கி " யோகேஷ் சொல்றது உண்மையா ஜீவா" என்று உதடு துடிக்க கேட்க அவனோ அவரது கண்களை நேராக பார்த்து விட்டு " ஆமாம்... என் நண்பனுக்கு நான் தான் இங்கே நடக்கிற எல்லாத்தையும் சொன்னேன்…" என்று கூறிவிட்டு திமிராக நின்றான்… ஜீவா என்கிற ஜீவ மித்ரன்….

அபிஜித் அவனது தோளில் கையைப் போட்டு மூர்த்தியைப் பார்க்க மூர்த்திக்கு தன் கையைக் கொண்டே தன் கண்ணை குத்திய உணர்வு. பொறுக்க மாட்டாமல் ஜீவா மேல் பாய்ந்தவர் " ஏன்டா? ஏன் இப்படி பண்ண? பிள்ளை மாதிரி உன்னை நினைச்சேனேடா…" என்று கோபமாக அவனை அடிக்க கையை ஓங்க " நிறுத்துடா… என் பையன் மேல கையை வைச்ச நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…" என்று ஜீவாவின் அப்பா ஈஸ்வரன் அங்கே பிரசன்னமாக மூர்த்தி அவரை நம்ப முடியாது பார்த்தார்.
ஏனென்றால் ஈஸ்வரன் மூர்த்தியின் பேசி பல வருடங்கள் ஆகிற்று..

" இவன் என்ன பண்ணான்னு தெரியாம பேசாத ஈஸ்வர்… " என்று கடுமையாக மூர்த்தி கூற ஈஸ்வரோ " டேய்… அவனை அப்படி மாத்துனதே நான் தான் டா " என்று கூறியவாறே அபிஜித்தை கட்டியணைத்து விட்டு மூர்த்தியை எகத்தாளமாக பார்த்தார்…

அதே வேளையில் அங்கே கங்கா, சஹி, கபிலன், கதிர் என வந்து நிற்க மூர்த்திக்கோ தலை சுற்றும் உணர்வு…

" இங்கே என்ன நடக்குது… நீங்க எல்லாரும் என்னை கவிழ்க்க கூட்டா..…" என்று கத்தினார்.

" என்ன மூர்த்தி? இதுக்கே நீங்க ஷாக்கான எப்படி? இனிமேல் தான் இருக்கு … அதுக்கு முன்னாடி இவனை என்று யோகேஷின் புறம் திரும்பி அவன் முகத்தில் ஓங்கி குத்திய வேகத்தில் யோகேஷின் மூக்கு, வாயில் ரத்தம் வர மயங்கி சரிந்த வேளை அவனது அடியாள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

" ம்.. சரிங்க மிஸ்டர் மூர்த்தி..! நடந்தது எல்லாம் ஒரே குழப்பமா ஏன்? எதுக்கு ? என்று தலையைப் பிச்சிக்கிற மாதிரி இருக்கா? அப்போ ஃப்ளாஷ் பேக் போலாமா? நீ என்ன பண்ண, அதனால் நான் எதையெல்லாம் இழந்தேன்னு இங்கே இருக்கிறவங்களுக்கு தெரிய வேண்டாமா?" என்று புருவம் உயர்த்தி வினவ மூர்த்திக்கு வியர்க்க தொடங்கியது.

ஏனென்றால் நடந்தது எல்லாவற்றையும் கங்காவிடம் மறைத்து நாடகமாடிக் கொண்டிருக்கும் மூர்த்திக்கு இந்த உண்மை கங்காவுக்கு தெரிய வந்தால் அவரது நிலைமையை நினைத்து அவருக்கு பேரச்சம் எழுந்தது….

அவரது பேயறைந்த முகம் அபிஜித்துக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் கங்காவின் கண்களில் வரப் போகும் அதிர்ச்சியை தாங்கும் சக்தி இல்லை.. என்று புரிந்து கொண்டான்… இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த ஈஸ்வர் நடந்ததை சொல்ல தொடங்கினார்...
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-25

சிறுவயதிலிருந்தே ஈஸ்வரும், அபிஜித்தின் தந்தை நெடுஞ்செழியனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள்… இதில் ஈஸ்வரின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம் தான்.. ஆனால் நெடுஞ்செழியனுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி அருகில் தென்காசி... அவரது தந்தை மற்றும் தாய் சொந்த ஊரில் வசித்தாலும் நெடுஞ்செழியன் தனது படிப்புக்காக தனது மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார்… நெடுஞ்செழியனுக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தாலும் சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற ஆர்வம் கொண்டிருந்தார்… அதே சமயம் அவருக்கு தன்னம்பிக்கையும் அதிகம்… ஒரு செயலை செய்வதற்கு முன் பல நேரம் யோசித்து அதை எவ்வாறு வெற்றிக்கரமாக முடிப்பது என்று திட்டமிட்டு அதில் வெற்றி பெறுபவர்….

நெடுஞ்செழியனுக்கு கட்டடக்கலை வடிவமைப்பில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அவர் அதற்கான கல்லூரியில் சேர, ஈஸ்வர் தன் நண்பனை பிரியாதிருக்க தன் நண்பன் சேர்ந்த கல்லூரியிலேயே சேர்ந்தார்...

மகேஸ்வர மூர்த்திக்கு இவர்களின் நட்பு வெறுப்பாக இருந்தாலும் தனது அண்ணனுக்காக தனது வெறுப்பினை காட்டாது அமைதியாக இவர்களின் நட்பை எப்படி பிரிப்பது என்று யோசித்து கொண்டிருந்தார்…. ஏனெனில் தனது அண்ணன் தன்னை விட நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமில்லாமல் தன் முன்னாலேயே நெடுஞ்செழியனின் திறமைகளை கூறி தன்னை மட்டம் தட்டுவதை கண்டும் அவருக்கு பயங்கர வன்மம் அவர் மேல் இருந்தது.

இது ஒருபுறமிருக்க நெடுஞ்செழியனின் மாமா மகளும் அவரது முறைப் பெண்ணுமாகிய பார்வதி அவருக்கு பக்கபலமாக இருந்து அவருக்கு தான் சேர்த்து வைத்த பணத்திலிருந்து அவரது படிப்புக்கு உதவி செய்தார்… சிறுவயதிலிருந்தே தனது கணவனாக மனதில் பதிந்த நெடுஞ்செழியனுக்கு சரிபாதியாக இருந்தார். ஆனால் நெடுஞ்செழியனுக்கு பார்வதி மற்றும் பெரியவர்கள் மனது புரிந்தாலும் தனது மனதை தெரிவிக்க அவர் இப்போது விரும்பவில்லை… அவரது கனவு சொந்த கட்டுமான நிறுவனம் தொடங்கி புகழ் பெற வேண்டும் என்பதே அவரது லட்சியம்… அதை எப்பாடுபட்டாவது சாதித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்க விதியோ வேறொன்று நினைத்திருந்தது.

நாட்கள் அதன்படி நகர நெடுஞ்செழியனும் ஈஸ்வரும் இளங்கலை படிப்பை முடித்து முதுகலைப் படிப்பில் சேர மகேஸ்வர மூர்த்தி தனது முதலாம் ஆண்டு படிப்பை அவர்கள் இருவரும் எடுத்த அதே படிப்பை இவரும் எடுத்தார்… நெடுஞ்செழியனை விட தான் உயர்வானவன் என்ற எண்ணம் ஈஸ்வருக்கு வர வேண்டும் என்று நெடுஞ்செழியனுடன் போட்டி போட்டார்.. ஆனால் இந்த விஷயம் அதாவது தனக்கு போட்டியாக நெடுஞ் செழியனை நினைப்பது வேறொருவருக்கும் தெரியாது பார்த்துக் கொண்டார்.

ஆனால் மூர்த்தி அவ்வாறு நினைக்க தன் தம்பியின் எண்ணத்தை ஏற்கெனவே அறிந்திருந்த ஈஸ்வர், காலப் போக்கில் தன் தம்பி மூர்த்தி திருந்திடுவான் , அவன் எண்ணத்தை மாற்றிக் கொள்வான் என்று ஈஸ்வர் நினைத்திருக்க பாவம் அவருக்கு தெரிந்திருக்கவில்லை… சிறுத்தை தன் புள்ளிகளை ஒரு போதும் மாற்றிக் கொள்ளாதென்று….

காலம் ஒரு போதும் நமக்காக காத்திருக்காது என்பதற்கேற்ப ஈஸ்வரும் நெடுஞ் செழியனும் தனது படிப்பை முடித்து விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்க அதுவரை வெட்டியாக இல்லாமல் தனது கனவினை நனவாக்கும் எண்ணத்தோடு ஒரு சிறிய கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனி ஆரம்பிக்க தனது மாமாவின் வீட்டிற்கு அருகிலேயே இடம் பார்த்து அங்கே சிறிய அறையில் நிறைய ப்ளான்களின் வடிவமைப்பை உருவாக்க தொடங்கினார்.

அவரது முயற்சியில் உருவான வடிவமைப்புகளை எடுத்துக் கொண்டு தன்னை தனது முயற்சியை விளம்பரப் படுத்த எண்ணிப் பல நிறுவனங்களுக்கு அவரது வடிவமைப்பை காட்ட தினந்தோறும் பல நிறுவனங்களுக்கு படியேறினார்.

வாய்ப்பு கிடைக்காமல் நம்மை இந்த உலகுக்கு நிரூபிக்க முடியாது… எல்லாருக்கும் வாய்ப்பு அமையாது…. அப்படி அமைந்தால் அதை சரி வர பயன்படுத்தி உயர்வடைவது சிலரே. ஏதும் அமையாமல் மூன்று மாதங்களுக்கு பிறகு அவரது முதுநிலை தேர்வு முடிவுகள் வர அதில் கல்லூரியில் முதலிடம் பிடித்தார்…

பார்வதிக்கு, இந்த செய்தி கேட்டு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருக்கு சிறப்பான வாய்ப்பு ஏதும் அமையாமல் இருப்பதை நினைத்து மனம் வருந்தினார். இருப்பினும் தன்னவனுக்கு வாழ்த்துக் கூறலாம் என்று நினைத்து நெடுஞ்செழியனை காண செல்ல அங்கே அவர் அமர்ந்திருந்த விதம் பார்வதியை உருக வைத்தது.

தயக்கத்துடன் அவரருகே சென்றவரை அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த நெடுஞ் செழியன் உற்சாகத்துடன் " என்ன காத்து இந்த பக்கம் அடிக்குது… தேவியார் என்னை காண வந்ததன் நோக்கம் என்னவோ ?" என்று உள்ளுக்குள் மகிழ்ச்சி ததும்ப வெளியில் கிண்டலாக கேட்பது போல் கேட்டார்.

அவரது ஒவ்வொரு முகபாவமும் அவரது எண்ணங்களின் போக்கும் பார்வதிக்கு அத்துப்படி… ஆகையால் அவரைக் கண்டதும் எப்போதும் தலையைக் குனிந்துக் கொள்ளும் பார்வதி, அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்து
" வாழ்த்துகள் மாமா… கல்லூரியில் முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துகள்…" என்று நெடுஞ்செழியனை பார்த்துக் கொண்டே கூறவும் அவரோ சாதாரணமாக 'நன்றி ' உரைக்க பார்வதியோ மனதிற்குள் ' ஹ்க்கும்… படிப்பைத் தவிர வேற எதுவுமே தெரியலையே இந்த தத்திக்கு..' என்று மானசீகமாக தலையிலடிப்பதாக எண்ணி வெளிப்படையாகவே தலையிலடிக்க சட்டென்று பார்வதியை நிமிர்ந்து பார்த்த நெடுஞ்செழியன் " என்ன தேவியாரே! என்னை பற்றி என்ன நினைச்சிங்க? இப்படி நொந்து போய் தலையிலடிக்கிற அளவுக்கு…. என்று இழுத்துக் கூறவும் பார்வதியோ உள்ளுக்குள் பதறினாலும் வெளியில் " அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மாமா.." என்று தலையசைத்து கூறினார்.

அவரை மெல்லிய சிரிப்புடன் பார்த்துக் கொண்டே எழுந்து நின்றவர் " நான் பரீட்சையில் முதலிடம் வாங்கி எனக்கு ப்ரோயஜனம் இருக்கோ இல்லையோ ஆனால் நீ சொன்ன ஒற்றை சொல்லில் என் மனம் கச்சசைக் கட்டி பறக்குதுடி…. மாமான்னு நீ சொன்னதை நான் கவனிக்கலன்னு நீ நினைச்சா அது தப்பு… முதல் தடவை நான் ஏங்குற ஒரு வார்த்தையை நீ சொல்லிருக்க… அந்த கணத்தை மனதுக்குள் பொத்தி வைக்க ஆசைப்பட்டு அமைதியாக இருந்தேன்டி…" என்று மிகவும் உணர்ச்சி பொங்க கூற பார்வதியோ " என்ன மாமா இது… ஒரு சாதாரண வார்த்தைக்கு போய் இப்படி உணர்ச்சி வசப் போடுறீங்க…" என்று கேட்டார்.

நெடுஞ்செழியனோ " உனக்கு வேண்டுமானால் அது சாதாரண ஒரு உறவை குறிக்கும் வார்த்தையா இருக்கலாம்… ஆனால் எனக்கு மனம் விரும்புற பொண்ணுக்கிட்ட இருந்து எல்லா ஆண்களும் எதிர்பார்க்குற ஒரு வார்த்தை இது…" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது பார்வதியின் தந்தை அங்கே ஓடி வந்தார்.

மூச்சு வாங்க இருவரும் நிற்குமிடத்தில் ஓடி வந்தவர் இருவரையும் பார்க்க பார்வதியோ " என்னப்பா? எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க.. " என்று பதற்றத்துடன் கேட்க நெடுஞ்செழியனும் " என்னாச்சு? மாமா… ஏதும் முக்கியமான விஷயமா? " என்று அவரும் பதற்றத்துடன் வினவினார்.

மூச்சு வாங்கிக் கொண்டே பார்வதியின் தந்தை குமரன், " ஆமாங்க மாப்பிள்ளை… உங்களைத் தேடி ஆசான் வந்துருக்காரு…" என்று கூறவும் நெடுஞ்செழியன் " ஆசானா?...அது யாரு? " என்று குழப்பத்துடன் கேட்க பார்வதியோ அவரது விலாவில் இடித்து " அப்படியென்றால் உங்களுக்கு பாடம் நடத்திய டீச்சர்னு அர்த்தம்…" என்று மெல்லிய குரலில் கூறினாள்.

தன்னை தேடி தனது பேராசிரியர் வந்தது நெடுஞ்செழியனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க அவரைக் காண விரைவாக சென்று அவரின் முன்னால் நின்றார்.

நெடுஞ்செழியனைக் கண்டதும் அவரை கட்டியணைத்து வாழ்த்துகள் கூறியவர் "செழியா…. எப்போதும் நான் சொல்றது தான்… படிப்பிருந்தால் பணிவு இருக்கும்… அந்த பணிவிருந்தால் நமக்கு வேண்டியது வேண்டிய நேரத்தில் யார் மூலமாவது கிடைக்கும்னு ... நான் சொல்லிருக்கேன்ல.. இப்போ உன்னுடைய இந்த பணிவு தான் உனக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்குடா…" என்றவர் மகிழ்ச்சியாக அணைத்துக் கொள்ள நெடுஞ்செழியனுக்கு ஒன்றும் புரியவில்லை….

" என்னங்க சார்… சொல்றீங்க… வாய்ப்பு கிடைச்சிருக்கா?"

" ஆமாடா.. நீ உன்னுடைய டிசைன் பிளானை எல்லா கம்பெனிக்கும் எடுத்துட்டுப் போய் காட்டுனீயே! ஞாபகம் இருக்கா?"

" அதை எப்படி சார் மறக்க முடியும்… எத்தனை கம்பெனி ஏறி இறங்கியிருப்பேன்… என் திறமையை எப்படியாவது வெளிப்படுத்த வாய்ப்பு அமையாதான்னு எவ்வளோ ஏங்கியிருப்பேன்…"

" அதுதான் டா… இப்ப அந்த கடவுள் நீ சோர்ந்து போன நேரம் பார்த்து உனக்கு வாய்ப்பை தந்து இந்த உலகத்துக்கு உன் திறமையை நிரூபிக்க வாய்ப்பு தந்துருக்காரு… அதும் நம்ம காலேஜ் சேர்மன் மூலம் தான் அதுவும் அமைஞ்சிருக்கு… நாளைக்கு நீ போய் அவரைப் பாரு… நீ டிசைன் பண்ண அந்த அபார்ட்மெண்ட் ப்ளான் அவருக்கு பிடிச்சிருக்கு… அதைப் பற்றி பேச வர சொல்லிருக்காரு..."

இதைக் கேட்டவுடன் நெடுஞ்செழியன் மட்டுமல்லாது குமரன் மற்றும் பார்வதியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க அவர் நெடுஞ்செழியனிடம் விடைப்பெற்று செல்ல குமரனும் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்…

பார்வதியும், நெடுஞ்செழியனும் இருவர் மட்டுமே தனித்து நின்றனர்…

" இன்றைய நாள் நல்லா விடிஞ்சிருக்கு… " என்று சிரித்துக்கொண்டே சொல்ல " ஆமா.. மாமா… இனி எல்லாம் நல்ல நாள் தான்…" என்று பதிலுக்கு பார்வதி கூற " எல்லாம் தேவியார் என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு ஆசையாக மாமான்னு கூப்பிட்டதால தான் "என்று கூறிக்கொண்டே பார்வதியின் நெற்றியில் தனது முதல் முத்தத்தினை பதிக்க பார்வதியோ " அய்யோ! போங்க மாமா…" என்று அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.

அடுத்த நாள் காலை….

தனது கல்லூரியின் சேர்மனை சந்திக்க அந்த சந்திப்பு அவரது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. நெடுஞ்செழியன் சிலபல இக்கட்டுக்களுக்கு மத்தியில் சேர்மனின் பதினைந்து மாடி கொண்ட அபார்ட்மெண்டை ஈஸ்வரனுடன் சேர்ந்து வெற்றிகரமாக முடித்தார்…

அபார்ட்மெண்ட் கட்டி முடித்த பின்னர் அதற்கான விளம்பரங்களை சேர்மன் செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி என்று விளம்பரப் படுத்த இதன் மூலம் அந்த அபார்ட்மெண்ட் எந்த வித குறையுமின்றி அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்ததால் சேர்மனிடம் வடிவமைப்பாளர் பற்றி தகவல்களை அவரது நண்பர்கள் திரட்ட அதன் பிறகு நெடுஞ்செழியனும் ஈஸ்வரனும் வீட்டிற்கு வர முடியாத அளவு பிசியாக இருக்க நேர்ந்தது.

அப்போது தான் பார்வதி இருவரையும் காண மதியசாப்பாட்டை எடுத்துக் கொண்டு நெடுஞ்செழியனின் கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனியிலுள்ள சின்ன அறைக்குள் நுழைய அங்கே இருவரும் தமது கையில் ஆளுக்கொரு ப்ளானை வடிவமைத்துக் கொண்டிருந்தனர்.

பார்வதி தான் இருவரிடமும் " இன்னைக்கு உங்களை தேடி ஒருத்தர் வந்தாரு…உங்க கம்பெனிக்கு பெயர் ஏதும் வைக்காததால் அவரு உங்க பெயரை சொல்லி கேட்டாரு… முதலில் கம்பெனிக்கு பெயர் வைங்க…" என்று திட்டவும்

" ஏன்டா! செழியா? இது நமக்கு தோணலையே? தங்கச்சி சொல்றது சரிதான்… நம்ம கம்பெனி பெயர் என்ன முடிவு பண்ணிருக்க?ஹ்ம்"என்று ஈஸ்வரன் வினவ

" நான் ஏற்கெனவே முடிவு பண்ணிட்டேன்டா.. ஆனால்…" என்று நெடுஞ்செழியன் இழுக்க ஈஸ்வரன் " பரவாயில்லை… எந்த பெயர் என்றாலும் சொல்லு" என்று இதமாக கூறினார்.

" நான் பி.என்.என். கன்ஸ்ட்ரெக்ஷன் என்று முடிவு பண்ணிருக்கேன்டா" என்று நெடுஞ்செழியன் கூற ஈஸ்வரன் கைத்தட்டி " சூப்பர்டா" என்றாலும் ஏனோ பார்வதியோ " அது என்ன? பி.என்.என்." என்று சந்தேகம் கேட்டாள்.

"அதுவா அதோட அர்த்தம் பார்வதி நெடுஞ்செழியன் என்பதோட முதல் இரண்டு எழுத்து கடைசியில் வர என் இன்ஷியல் ஈஸ்வரன் பெயருல கடைசில வர எழுத்து…" என்று விளக்கம் கொடுக்க ஈஸ்வரன் " இவ்வளோ தானாடா விளக்கம்… எனக்கென்னவோ இதுல ஏதோ சிறப்பா யோசிச்சு தான் வச்சிருக்கன்னு தோணுது" என்று தன் நண்பனை அறிந்தவராக கூற அவரது தோளில் தட்டிய நெடுஞ்செழியன் " மச்சான்…. எப்படிடா? அதென்னவோ உண்மை தான்… பார்வதி எனக்கு முதன்மையானவ… அதேசமயம் நீயும் எனக்கு முதன்மையான வன்… நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு தூண்… அதை நினைச்சு தான் இந்த பேரை வைச்சிருக்கேன் டா…" என்று விளக்கம் கொடுக்க நண்பனை கட்டியணைத்து கொண்டான் ஈஸ்வரன்.

நாட்கள் அதன் பாட்டுக்கு நகர பி.என்.என் கன்ஸ்ட்ரெக்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து வந்துகொண்டிருந்த வேளையில் தனது படிப்பை முடித்த மகேஸ்வர மூர்த்திக்கு தனது அண்ணன் கூட சேர்ந்து வேலைப் பார்க்க ஆசையாக இருந்தது… அவனது விருப்பத்தை ஈஸ்வரனிடம் சொல்ல அதில் அவருக்கு தன் தம்பியின் விருப்பத்தைக் கண்டு அவரது முகம் மாறியது.

ஏனெனில் தன் தம்பியின் பொறாமை குணத்தை அறிந்தவராயிற்றே…. அவனுக்கு தன் நண்பனின் மேல் உள்ள பொறாமையை கண்டுக் கொள்ளாமல் அவன் வயதின் காரணத்தால் இதெல்லாம் சிறுப்பிள்ளைத் தனமாக நினைத்திருக்க பின் வரும் காலங்களில் அது மிகப் பெரிய வன்மமாக மாற போவது தெரியாமல் நெடுஞ்செழியனிடம் தன் தம்பியின் விருப்பத்தை தெரிவிக்க நெடுஞ்செழியனும் மூர்த்தியை தங்களது கன்ஸ்ட்ரெக்ஷனில் வேலைக்கு தேர்ந்தெடுத்தனர்.

இவ்விஷயத்தை கேள்விப்பட்டு பார்வதிக்கு மனதின் ஓரத்தில் முணுக்கென்று ஒருவித பய உணர்வு வர, அதைப் பொருட்படுத்தாமல் எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டு அதை ஏற்றுக் கொண்டாள்.

சில விஷயங்கள் பேசும் போதோ அல்லது சில விஷயங்கள் நடக்கும் போதோ நமது மனது சில பயங்களை உண்டாக்கும்… அதை ஏதாவது ஒரு விதத்தில் அறிகுறியாக காட்டும்… பார்வதிக்கு மூர்த்தியை பிடிக்காதென்றாலும் அவனால் ஏதும் நிகழ்த்த முடியாது என்று மூவரும் நினைக்க விதி வேறொன்றை நிகழ்த்த போவது அறியாமல் இருந்தனர்.

இரண்டு வருடங்கள் கழித்து… நெடுஞ்செழியனுக்கு திருமணம் செய்து பார்க்க அவனது பெற்றோர் ஆசைப்பட்ட சமயம் பார்வதியின் தந்தையும் தனது மகளுக்கு திருமணம் நடத்திப் பார்க்க ஆசைப்பட இருவீட்டாரும் கலந்து பேசி வருகின்ற சுபமுகூர்த்த நாளில் முன்னிரவில் நிச்சயமும் அதற்கடுத்த நாள் கல்யாணமும் செய்யலாம் என்று பேசி வைத்தனர்….

அதேப் போன்று ஈஸ்வரனுக்கு திருமணம் நடந்து ஒரு மாதம் சென்றிருந்தது…

தனது திருமணப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு தனது பேராசிரியர் வீட்டிற்கு பார்வதியும் நெடுஞ்செழியனும் செல்ல அங்கே அவரது மகன் கபிலனிடமும் அவரது மருமகள் ஜீவிதாவிடமும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்…

" சார்! உள்ளே வரலாமா? " என்று நெடுஞ்செழியன் கேட்க " வாடா! வாடா! செழியா…. என்ன இந்த பக்கம்? இப்ப தான் உனக்கு என் ஞாபகம் வந்துச்சா? " என்று உரிமையுடன் அதட்டிய மாதிரி கேட்டார்…

அவர் அதட்டிய விதம் கண்டு நெடுஞ்செழியன் சிரித்தாலும் கபிலனோ நேராக தன் தந்தையிடம் " என்னப்பா? நீங்க… இப்படி தான் அதட்டுவீங்களா? அவங்க என்ன நினைப்பாங்க?" என்று அவரைக் கடிந்து கொண்டான்…

" அய்யோ! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை… சார் என்னுடன் உரிமையா எப்போதும் உரிமையா தான் பேசுவார்… நான் எதுவும் நினைக்கல" என்று நெடுஞ்செழியன் தன்மையாக கூறினார்.

கபிலனுக்கு அவரது இந்த தன்மையான பண்பு பெரும் வியப்பைக் கொடுத்தாலும் அதுவே நெடுஞ்செழியனின் மதிப்பையும் நட்பையும் வழங்கியது… அங்கிருந்த அனைவருக்கும் தனது திருமண பத்திரிக்கையை பூ, பழம், துணி, காசு என்று வைத்துக் கொடுத்துவிட்டு அனைவரையும் இருகரம் கூப்பி பார்வதியும் நெடுஞ்செழியனும் அழைக்க கபிலன், பார்வதியை தனது தங்கையாக உளமார ஏற்றுக் கொண்டார்….

குறிப்பிட்ட நாளில் நெடுஞ்செழியன்- பார்வதி திருமணம் நடைபெற்றது… அன்றிரவு வீட்டிலேயே அவர்களது சாந்தி முகூர்த்தம் நடக்க வேண்டி திருநெல்வேலிக்கு இருவரும் கிளம்ப ஆயத்தமாக கபிலன் நெடுஞ்செழியனுக்கு திருமண பரிசாக காரினை அளித்திருக்க அதில் இருவரும் பயணம் செய்தனர்… நெடுஞ்செழியன் சில நாட்கள் கன்ஸ்ட்ரெக்ஷனுக்கு வர முடியாத காரணத்தால் அந்த பொறுப்பை ஈஸ்வரனிடம் ஒப்படைக்க அது மூர்த்திக்கு வசதியாக போயிற்று….

கபிலன் அளித்த திருமண பரிசைக் கண்ட மூர்த்தி ஈஸ்வரனிடம் " யாருண்ணா… இவன் ? இவ்வளோ காஸ்ட்லியான கிஃப்ட் தர அளவுக்கு இவன் எப்போ நட்பானான்? " என்று வினவ

ஈஸ்வரனோ " நட்பா இருக்கிறவங்க தான் கிஃப்ட் தரணும்னு இல்லை… ஒருத்தரோட கேரக்டரோ அல்லது அவங்களோட பண்போ பிடிச்சிருந்தா யார் வேண்டுமானாலும் அவங்களுக்கு செய்வாங்க… அன்புன்னு அவங்க காட்டுறது பொருளோ, பணமோ இல்லாமல் ஒரு சின்ன கட்டியணைப்பா கூட இருக்கலாம்… கபிலனுக்கு நெடுஞ்செழியனை பிடிக்க காரணம் என்னவேண்டுமானாலும் இருக்கலாம்… அது எனக்கு தெரியாது… ஆனால் கபிலன் அளித்த பரிசு நெடுஞ்செழியன் மேல் கொண்ட அன்பின் வெளிப்பாடு மட்டுமே…" என்று கூறிவிட்டு தம்பதியராய் நின்ற மணமக்களை வழியனுப்ப தம் மனைவியுடன் சென்றார்.

மூர்த்தியோ மனதினுள் ' இந்த நெடுஞ்செழியனுக்கு மட்டும் எப்படி தான் இப்படி அதிர்ஷ்டலட்சுமி அமையுதோ? நமக்கு ஒன்னுமே அமைய மாட்டுதே…' என்று ஏக்க பெருமூச்சு விட்டான்.

திருநெல்வேலியில் மண மக்களுக்கு ஆரத்தி எடுக்கவும் அங்கிருந்த நெடுஞ்செழியனின் உறவினர்கள் சிலர் வீட்டிற்கு வந்திருக்கும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து அவர்களின் அறைக்குள் போகச் சொல்ல இருவரும் தமது அறையில் நுழைந்தனர்….

நெடுஞ்செழியன் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவராயினும் தனது தந்தையின் காசில் ஏதும் வாங்ககூடாது என்ற கொள்கையில் இருந்தவர் கபிலன் கொடுத்த பரிசை ஏற்றுக் கொண்டது பார்வதிக்கு ஆச்சரியமாக இருந்தது…

அவளது முகத்தில் குழப்பத்துடன் கேள்வியும் தொக்கி நிற்க அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தவளை நோக்கி நெடுஞ்செழியன் வர,

" என்ன தேவியாரே! போய் முகத்தை அலம்பிட்டு வராமல் இங்கே இப்படியே அமர்ந்திருக்க உத்தேசமா…."

" இல்லைங்க… நான் யோசிச்சுட்டு இருந்தேன்…" என்றார் பார்வதி..

" யோசிச்சுட்டு இருந்தியா... எதைப் பற்றி?" அவன் வினவ

" ஹ்ம்..நம்ம முதலிரவைப் பற்றி தான்…" என்று அவள் இழுக்க

நெடுஞ்செழியனோ " அடிக்கள்ளி! அதுக்குள்ள என்ன அவசரம்…" என்று கிண்டலாக கேட்க

பார்வதிக்கு வந்ததே கோபம்… அவர் கையில் பட்டென்று அடி வைக்க அவரோ போலியாக அலறிக் கொண்டே " என்னாடி! கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட ஆகலை... இந்த அடி அடிக்கிறே?..." என்று சிரித்துக்கொண்டே தன் தேவியாரை பார்க்க பார்வதியின் முகம் கலக்கத்தை சுமந்திருந்தது…

அவளது முகத்தைப் பற்றிக் கொண்டவர் " என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?..." என்றவரின் நேரடிக் கேள்விக்கு அவளும்

" மூர்த்தி கிட்ட பொறுப்பை ஒப்படைத்து விட்டு வந்துருக்கீங்களே!... அவனை நம்ப வேண்டாம்னு என் மனசு சொல்லுது.." என்று தனது மனதை அரித்து கொண்டிருந்த எண்ணத்தை சொல்ல

நெடுஞ்செழியன் " நான் மூர்த்தியை நம்பி பொறுப்பை ஒப்படைச்சிட்டு வரலை… என் நண்பன் ஈஸ்வரனை நம்பிதான் அங்கே இருக்க பொறுப்பை விட்டுட்டு வந்துருக்கேன்… அவன் பாத்துக்குவான்…" என்று உறுதியுடன் கூறிக் கொண்டு இருந்தார்….

பாவம்! அவர் அறியவில்லை மூர்த்தியின் குள்ளநரி தனத்தை… கொட்டி கொடுத்தாலும் புத்தியை காட்டும் ஜென்மங்கள் சூழ்ந்த உலகில்… அவர்களின் குணத்தில் பாதியாவது தனக்கும் இருக்க வேண்டும் என்று….

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-26

"சரி.. சொல்லு… நம்ம முதலிரவைப் பற்றி என்ன நினைச்ச… தேவியாரே?"

பார்வதியோ மனதுக்குள் ' அய்யோ! ஏதோ வாய்ல வந்ததை சொல்லப் போய் அது முதலிரவை நினைச்சேன்னு சும்மா சொன்னால் இந்த மனுசன் அதையே பிடிச்சு தொங்கிக்கொண்டு இருக்கிறாரே ' என்று நினைத்துக் கொண்டே முகத்தில் பல வித உணர்வுகளை காட்டினாள்…

" என்னடி! நீ உட்கார்ந்து யோசிக்கிறதைப் பார்த்தால் அப்படி எல்லாம் யோசிக்கலை போல…."

" ஹ்ம்… ஆமா மாமா…. நான் அதைப் பற்றி யோசிக்கலை… நம்ம கம்பெனிப் பொறுப்பு பற்றி தான் யோசிச்சிட்டு இருந்தேன்…." என்று உண்மையைக் கூற நெடுஞ்செழியன் அங்கிருந்த சொம்பில் வைக்கப்பட்டிருந்த பாலை மடமடவென குடித்தான்… அதை புரியாமல் பார்த்த பார்வதி " என்னாச்சு மாமா? தீடிர்னு இப்படி நடந்துக்கீறிங்க…"

" ஏண்டி? மனுசன் எவ்ளோ அவஸ்தையில இருக்கேன்… அதைப் பற்றி யோசிக்காம உப்புசப்பு இல்லாததைப் பற்றி யோசிச்சிட்டு இருக்க? உன்னை யோசிக்க விட்டு இருக்கவே கூடாதுடி…" என்று படுக்கையில் அவளை சாய்க்க கூடவே இவனும் சாய்ந்தான்….

" மாமா!..." என்று தன்னவள் சிணுங்க அதை ரசித்துக் கொண்டே "என்னமா?" என்று சிரிப்பு குரலில் கூற பார்வதியோ " கொஞ்சம் பேசிட்டு இருக்கலாமே" என்று கண்ணில் சிரிப்புடன் கூற

" களத்தில இறங்கி வேலை செஞ்சுட்டு பேசலாமேடி…."

" களமா? " என்று கேள்வியுடன் வாயை பிளக்க அவள் இதழில் முத்தமிட்டு தனது வேலையை அவன் பார்க்க அவளும் இணைந்து வேலைப் பார்க்க தொடங்கினாள்…

இரு கைகள் தட்டினால் தானே ஓசை வரும்….

மறுவீடு எல்லாம் சென்றுவிட்டு தம்பதியர் இருவரும் அன்றிரவு ஊருக்கு செல்லும் நாள்… விருந்து எல்லாம் தடபுடலாக இருந்தது. தம்பதியர் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கபிலன் பரிசளித்த காரில் கிளம்பினர்…

நெடுஞ்செழியன் காரை ஓட்ட பார்வதி அவருக்கு இடதுபுறம் அமர்ந்து வழவழவென்று பேசிக்கொண்டு வந்தாள்.

அவளது சிரிக்கும் உதடுகளை கடித்துவிடுவதைப் போல பார்த்தவன் " என்னாடி! இப்படி என்னை ஈர்க்குற மாதிரி இருந்தா எப்படி நான் கார் ஓட்டுறது? " அவன் அவளை முறைத்து கொண்டே கூறினாலும் புது மனைவியின் அருகாமை அவனை பித்தம் கொள்ள வைத்தது…

மாதங்கள் சில கடந்து பார்வதியின் வயிற்றில் கரு உண்டாகியிருக்கும் நேரம் நாச்சியாரும் அவரது கணவரும் மகனுடனும் மருமகளுடனும் சிறிது நாட்கள் தங்கியிருக்க விருப்பப்பட்டு வந்திருந்தனர். அவர்கள் வந்த சமயம் பார்வதி தலையை இருகைகளாலும் தாங்கி வாந்தியெடுத்து கொண்டிருந்தாள்… அவளை அந்த நிலையில் கண்ட நாச்சியார் தனது கையிலிருந்த பைகளை கீழே போட்டு விட்டு ஓடி வந்து அவளது தலையை தாங்க நெடுஞ்செழியனின் தந்தை அவளுக்கு முகம் கழுவ நீரை எடுத்து கொடுத்தார்…

" என்ன செய்யுது மருமகளே! நாள் எதுவும் தள்ளிப் போயிருக்கா?" என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்க கேட்க அவள் " ஆமா அத்தை… இரண்டு மாசம்… உங்க மகனுக்கு இன்னும் சொல்லல…" என்று தகவலளிக்க " நீயே உன்ற வீட்டுக்காரனுக்கு சொல்லிக்கோ" என்று அவளை தம்பதியர் இருவரும் ஆசீர்வதித்தனர்.

அன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்த நெடுஞ்செழியன் தனது தாய் தந்தையரை நலம் விசாரித்துவிட்டு தனது அறையில் இருந்து பார்வதியை அழைக்க அவளோ அவன் முன்னே வர கூச்சங்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்…

அவனோ பலமுறை அவளை அழைக்க அவள் ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அவர்களது அறையை நோக்கி செல்ல, அவள் ஆடி அசைந்து வருவதை பார்த்து பல்லைக் கடித்தான்.

" ஏண்டி? இவ்வளோ மெதுவா ஆடி அசைஞ்சு வர? மனுசன் என்ன அவசரத்துக்கு கூப்பிடுறான்னு தெரியாம வந்துகிட்டு இருக்க?" என்று கூறிக் கொண்டே அவளது பின்னால் பார்க்க அங்கே புதிதாக ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது… அதை ஆழ்ந்து பார்த்தவன் குழப்பத்துடன் அவளது முகத்தை பார்த்து விட்டு மீண்டும் அதைப் பார்க்க அவனால் புரிந்து கொண்ட விஷயம் அவனை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது….

ஏனெனில் அந்த படத்தில் கதவை திறந்து கொண்டு குழந்தை ஒன்று வெளிவர அதை தாயும் தந்தையும் தமது கையை நீட்டி வரவேற்கிற மாதிரி அந்த படம் அமைந்திருந்தது.

"தேவியாரே! " என்று உணர்ச்சிப் பெருக்கில் அழைத்தவர் அவளது முகத்தை தனது கைகளில் ஏந்தி அவள் கண்களோடு தன் கண்கள் கலங்க " உண்மையாவா? எனக்கு புரமோஷனா கொடுத்துருக்க?" என்று கண்ணில் நீர் வழிய கேட்க பார்வதி அவரது கண்ணீரை துடைத்து விட்டு அவரை இறுக அணைத்து " நான் எங்கே புரமோஷன் குடுத்தேன்… உங்களோட கடின உழைப்பு தான் அந்த புரமோஷனை கொடுத்துருக்கு" என்று சொல்லிக்கொண்டே அவரது முகத்தை நிமிர்த்தி கண் சிமிட்ட அப்போதே அவளைக் கொண்டாட நினைத்து தங்களது அறைக்கு தூக்கி செல்ல பின் நிதானமாக " இனிமேல் பார்த்து கவனமாக நடந்து கொள்ளணும் நாம்…" என்று அவளது தலையை தடவிக் கொடுத்தான்.

பார்வதியின் வயிற்றில் கரு வளர வளர நெடுஞ்செழியனின் தொழிலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது.

சரியாக ஒன்பதாம் மாதம் வளைகாப்பு நடத்த திட்டமிட தனது தாய், தந்தை, மாமா,அத்தை, தன் நண்பன் ஈஸ்வரன் என எல்லோருடனும் அமர்ந்திருந்த நெடுஞ்செழியன் அதை பெரிய விழாவாக நடத்த திட்டமிட்டு அதை சிறப்பாக செயல்படுத்தினான்.

அடுத்த ஒரு வாரத்தில் பார்வதிக்கு ஆண் குழந்தை பிறக்க அவள் பிரசவத்தின் போது அலறிய அலறல் எல்லாம் தனது மகனைக் கையிலேந்தும் போது காணாமல் போனது…

நெடுஞ்செழியன் தனது மகனை கையிலேந்தி அவன் தலையில் முத்தமிட்டு அப்படியே பார்வதிக்கும் கொடுக்க அவளோ " எப்படா இவளுக்கு முத்தம் கொடுக்க சான்ஸ் கிடைக்கும்னு அலைவீங்களோ? " என்று மெல்லிய குரலில் கூறிக்கொண்டே தனது கன்னத்தை துடைத்தாள்…

" ஹே! என்னடி நான் கன்னத்தை எச்சில் பண்ணதுக்கு துடைக்கிற? இன்னிக்கு மட்டும் புதுசா பண்ற?"

" குழந்தை இருக்கான்... கொஞ்சம் தள்ளியே இருங்க.." என்று நமட்டு சிரிப்புடன் கூற அவன் " எவ்ளோ நாளைக்குடி?.." என்று கண்ணடித்து கேட்க " சுமார் ஆறு மாசத்துக்காம்டா" என்று நாச்சியாருடன் அவரது கணவரும் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைய பார்வதியின் தந்தை குமரனும் அதே நேரத்தில் நுழைந்து தனது பேரனை காண ஆவலுடன் உள்ளே நுழைந்தார்.

அனைவரும் பிறந்திருக்கும் தமது குலக்கொழுந்தை கொஞ்சிக் கொண்டும் மிகுந்த மகிழ்ச்சியோடும் இருந்தனர்.

அதேசமயம் ஈஸ்வரனுக்கும் அதே மருத்துவமனையில் ஆண் மகன் பிறந்தான்.சில மணி நேரமே இருவருடைய மகன்களும் பூமியில் அவதரித்தனர்.

மூன்று மாதங்கள் கழித்து குழந்தைக்கு பெயர் வைக்க நெடுஞ்செழியன் தம்பதியினர் ஏற்பாடு செய்திருக்க ஈஸ்வரன் தம்பதியர் தனது மகனுக்கு 'ஜீவமித்ரன்' என்று பெயரிட்டனர்.

நெடுஞ்செழியன் தனது மகனின் பெயர் சூட்டும் விழாவிற்கு தடபுடலாக விருந்தினை ஏற்பாடு செய்திருக்க தனது பேர் சொல்லும் பேரனின் பெயரை அறிந்துகொள்ள தாத்தா பாட்டி இருவரும் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

தனது மகனை இருவரும் சேர்ந்து தொட்டிலிலிட்டு அவனது காதில் ' அபிஜித் இளஞ்செழியன்' என்று மூன்று முறை கூறி விட்டு சர்க்கரைத் தண்ணீரை வாயில் தொட்டு வைத்தனர்…

அப்போது அங்கேயிருந்த நெடுஞ்செழியனின் தூரத்து சொந்தமான பெரியவர் ஒருவர் " ஏப்பு.. இதென்னது? சீமையில இல்லாத ஒரு பெயரா வைச்சுருக்கீக…" என்று அங்கலாய்த்து கொண்டிருக்க அவரை பார்த்தவன் புன்சிரிப்புடன் " பெரியப்பா… அபிஜித் அப்படினா இருபத்தி ஏழு நட்சத்திரத்தில் ஒரு நட்சத்திரமா இருப்பவன்… பகவான் கிருஷ்ணரோட பெயரை குறிப்பவன்… அதோட அவன் வாழ்க்கையில் நிதானமாக, கொள்கையோடு என்றைக்கும் வெற்றி பெறுபவனா இருக்கணும்னு தான் இந்த பெயரை வைத்தோம்…"என்று பார்வதியின் தோளில் கைப்போட்டு தனது மகனின் காலை நீவிக்கொண்டே கூறினான்…

அவரது பதிலைக் கேட்டுக் கொண்டே கபிலனும் ஜீவிகாவும் உள்ளே நுழைய அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஜீவிகா, பார்வதியின் கையிலிருந்த குழந்தையின் அழகில் லயித்திருக்க குழந்தை அவளை நோக்கி கை காலை ஆட்டி சிரித்தது.

அதில் மனம் மயங்கியவள் " தன்னிடம் குழந்தையை தருமாறு பார்வதியிடம் கேட்க ஜீவிகாவின் கண்களில் தெரிந்த தவிப்பில் பரிவுடன் அவளது கைகளில் தனது மகனை வைக்க ஜீவிகா குழந்தையின் முகம் காண காண அவளுக்கு தனது மகன் இவன் என்ற எண்ணம் தோன்ற வைத்தது.. அவனை கையிலேந்தும் போது தன்னை பார்த்து சிரித்த சிரிப்பில் மனம் மயங்கி நின்றவள் நிஜமாகவே மயங்கி சரிய அப்போதும் குழந்தைக்கு ஏதுமாகாமலிருக்க அவனை தாங்கிக் கொண்டே விழும் சமயம் அவளருகே நின்ற பார்வதி அவளை தாங்கிக் கொண்டாள்.

உடனே அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொள்ள நாச்சியார் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து நாடி பிடித்து பார்க்க அவரது முகம் மகிழ்ச்சியடைந்தது.

எல்லோரும் பதற்றத்துடன் அவரது முகத்தை காண " அய்யா! கபிலா… உன் பேர் சொல்ல உனக்கு பிள்ளை வந்துட்டான்…" என்று சொன்ன அடுத்த வினாடியே ஜீவிகாவை கட்டியணைத்து முத்தமிட அவள் வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.

திருமணமான இந்த மூன்று வருடங்களில் குழந்தை இல்லை என்ற ஏளன பேச்சுகளில் கணவன் மனைவி இருவரும் நொந்து போயிருந்தனர்.

நெடுஞ்செழியன் பார்வதியிடம், "தங்கச்சியை உள்ளே கூட்டிப் போய் ஏதாவது குடிக்க குடுடி… கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்…" என்று சொல்ல பார்வதி தன் கணவன் சொல்படி நடந்தார்.

பின் கபிலனுக்கும் ஜீவிகா விற்கும் தனிமை கொடுக்க… தனது தோளில் மனைவியை சாய்த்த கபிலன் " கடவுள் நம்ம காத்திருப்பதை பார்த்து கைவிடலை ஜீவி!" என்று நெற்றி முத்தமிட அவள் வெட்கத்துடன் " ஆமாங்க! அதும் அபிஜித்தை கையில் வாங்கி அப்ப தான் நினைச்சேன்… எனக்கும் இதே போல ஒரு குழந்தை என் வயித்துல எப்ப உருவாகும்னு நினைச்சேன்… என் ஏக்கம் கடவுளுக்கு தெரிஞ்சதோ இல்லை குழந்தைக்கு புரிந்ததோ… கிடைச்சிருச்சு எனக்கு கையில்…" என்று மகிழ்ச்சியாக கூறினார்.

சில அறிவுரைகள் நாச்சியார் ஜீவிகாவிடம் கூற அதை கபிலன் புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

பிறகு அனைவரும் ஊருக்கு திரும்ப, இங்கே நெடுஞ்செழியனின் தொழிலும் முன்னேறிக் கொண்டிருந்தது…

ஒரு வருடம் கழித்து தனது மகனின் முதல் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொண்டாட முடிவு செய்திருந்தனர்….

இதற்கிடையில் கபிலனுக்கும் மகன் பிறந்து இரண்டு மாதமாகியிருக்க அபிஜித்தை காண ஜீவிகா ஆர்வமாக இருந்த காரணத்தால் கைக்குழந்தையுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தார்…

ஏனெனில் ஜீவிகா, அவளுக்கு கரு உண்டான நாளிலிருந்து அபிஜித்தை காண காண அவளுள் தாய்மை பெருக்கெடுத்து ' இவனே என் மூத்த மகன் ' என்ற எண்ணம் அவளுள் தோன்றியது…

இப்போதும் தன் கையிலிருந்த தனது மகனை பார்வதியிடம் கொடுத்து விட்டு அவளிடமிருந்து அபிஜித்தை வாங்கி கொஞ்சிக் கொண்டே " இவனை என்கிட்டேயே கொடுத்துருங்க அண்ணி! நான் வளர்க்கிறேன் இவனை…." என்று விளையாட்டாக கேட்க பார்வதியோ தன் கையிலிருந்த குழந்தையை பார்த்துக் கொண்டே " அப்போ… இவனை யார் பார்த்துப்பா? அண்ணி…. " என்று சொல்லிக்கொண்டே அவளை பார்க்க அவளும் நொடிகூட தயங்காமல் " அபிஜித் என் குழந்தையை பார்த்துப்பான்" என்று சிரித்துக்கொண்டே கூறினாள்.

தன் சொல் பின்னொரு காலத்தில் பலிக்கப் போவதை அறியாமல் இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அத்தோடு அபிஜித்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள்….

அவ்விழாவிற்கு மூர்த்தியும் பணிபுரிபவர்கள் அனைவரும் அழைக்கப் பட்டுருக்க மூர்த்தியின் மனதுக்குள் அபிஜித்தை காண காண கொலைவெறி எழுந்தது… சிறு குழந்தை என்றும் பாராமல்….

பத்து வருடம் கழித்து….

நெடுஞ்செழியன், தனது மனையாளுக்கு தங்களது திருமணபரிசாக அவன் மனைவி அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் சொல்லை நிறைவேற்ற எண்ணிணான்.

அந்த வார்த்தை " கோபுரத்தை எல்லா நேரமும் நான் தரிசிக்கணும்…. கோபுரம் பார்க்க கோடி புண்ணியம்னு மூத்தோர் சொல்லிருக்காங்க… தெரியுமா?" என்று கேள்வி கேட்க நெடுஞ்செழியன் வியப்பாக புருவத்தை உயர்த்தினான்…

"ஏன்? இப்ப மட்டும் கோபுரம் இங்கேயிருந்து பார்க்கும் போது தெரியலையா?" என்று அவன் எதிர்கேள்வி கேட்க அவள் " எனக்குன்னு இருக்கிற ஒரு ஆசையை உங்ககிட்ட சொன்னது ஒரு குத்தமாங்க?"

" குத்தமில்லைங்க தேவியாரே! உங்கள் ஆசையை நான் கண்டிப்பா நிறைவேத்துறேன்… இப்ப என் ஆசையை நீ நிறைவேத்துடி…." என்று கணவனாக நெருங்க " அய்யே! என்ன உங்க ஆசையாம்? "

" எனக்கு உன்னை மாதிரியே ஒரு பொண்ணை பெத்துக் கொடுடி!" என்று உரிமையுடன் அவளது மேனியில் கைவைக்க அவள் சிலிர்த்து போய் " அட.. இதுக்கு தான் இந்த பீடிகையா?" என்று அவள் அலுத்துக் கொண்டாலும் அவனுக்குள் அவள் அடங்கினாள்.

கூடல் முடிந்து நெடுஞ்செழியன் அவளை அணைத்து கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அவனின் மௌனம் பார்வதியை யோசிக்க செய்ய " மாமா! ஏதும் பிரச்சனையா? " என்று கேட்டாள்.

" அப்படியெல்லாம் இல்லைடி… யோசிச்சுட்டு‌ இருந்தேன்… மனசு குழப்பமா இருக்கு"

" என்கிட்ட என்னன்னு சொல்லுங்க… என்னால முடிஞ்சா அந்த குழப்பத்துக்கு தீர்வு சொல்றேன்"என்று அவனது தலையை கோதியவாறே கேட்க…

இன்று காலையில் ஈஸ்வரனும், மகேந்திர மூர்த்தியும் தமது கன்ஸ்ட்ரெக்ஷனில் பேசியதை நினைத்து பார்த்தான்.

" வாடா… ஈஸ்வர்! என்ன இரண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்துருக்கீங்க… " என்று கேட்க ஈஸ்வர், அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு " உனக்கே தெரியும்… மூர்த்திக்கு கல்யாணம் தடைப் பட்டுட்டே வந்தது… இப்ப தான் இவனுக்கு ஒரு பொண்ணு அமைஞ்சிருக்கு…
பொண்ணு வீட்ல இவனோட படிப்பு, வேலை எல்லாம் பிடிச்சி சம்மதம் சொல்லிட்டாங்க… ஆனால் இவன் தான் ஏதும் சொல்லாமல் வந்துட்டான்… கேட்டா உன்கிட்ட பேசணும்னு சொல்றான்" என்று கையை பிசைந்து கொண்டே கூறவும் நெடுஞ்செழியன் தனது தாடையை தடவிக் கொண்டே " மூர்த்தி! என்கிட்டே பேச என்ன இருக்கு?" என்று கேள்வி கேட்டான்.

மூர்த்தி, ஈஸ்வரை வெளியே போக சொல்ல நெடுஞ்செழியன் திகைத்து போய் மூர்த்தியை பார்க்க " இது எனக்கு ரொம்ப முக்கியமான விஷயம்! நான் ஒரு உதவி வேண்டி வந்திருக்கேன்…" என்று தயங்கி கொண்டே கூற ஈஸ்வர் அவ்வறையை விட்டு வெளியேறினான்.

அவன் போவதை பார்த்த நெடுஞ்செழியன் பின் தனக்கு நேரெதிரில் நின்ற மூர்த்தியிடம் " சொல்லுங்க… என்ன விஷயம்?" என்று கேட்க அவன் நேரடியாக விஷயத்தை பற்றி பேசலானான்.

" எனக்கும் ஒரு கனவு இருக்கு… மத்தவங்க மாதிரி முன்னேறணும்… வாழ்க்கையில் நம்பர் ஒன்னா வரணும்"

" சரி! அதுக்கு நான் என்ன பண்ணனும்…" - நெடுஞ்செழியன்.

" எனக்கு இப்ப நீங்க கட்டப் போற பில்டிங் கை நான் ப்ளான் போட்டு என் தலைமையில கட்ட அனுமதிச்சா என்னோட மதிப்பு, எங்க மாமனார் வீட்டில கூடும்… என்னோட தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.." என்று நயவஞ்சக சிரிப்புடன் முகத்தை பரிதாபமாக வைத்து கொண்டு கேட்டான்.

அவனது முகத்தை பார்த்த நெடுஞ் செழியனின் மூளையோ 'அவனை நம்பவேண்டாம்..' என்று எச்சரிக்கை செய்ய அவன் மனதோ மூர்த்தியின் மீது இரக்கம் கொண்டு சரியென்று சொல்ல வைத்தது..

" சரி! மூர்த்தி… நான் இப்ப பில்டிங் கட்டல.. பார்வதியோட ஆசைப்படி ஒரு வீடு கட்டி அவளுக்கு இன்ப அதிர்ச்சி குடுக்கணும்னு நினைச்சிருக்கேன்… அதை வேண்டுமானால் நீ கட்டிக் குடு…" என்று யோசனை சொல்ல மூர்த்தியின் மனதில் கள்ளம் புகுந்தது.

" இன்ப அதிர்ச்சியா… நீங்க யார்க்கிட்டேயும் இந்த விஷயத்தை சொல்லலையா?"- மூர்த்தி.

" இல்லை…. என் மனைவி என்கிட்ட அவளோட ஆசையை சொல்லும் போது எனக்கு அதை நிறைவேற்ற வசதியில்லாமல் இருந்துச்சு… என் மனைவி ஆசையை இப்ப என்கிட்ட இருக்கிற வசதிக்கு அவங்க நினைச்சிப் பார்க்க முடியாத அளவு பிரமாண்டமா அவளுக்கே அவளுக்குன்னு நான் உருவாக்க ஆசைப்படுறேன்… எங்களது பத்தாவது திருமண நாள் இன்னும் எட்டு மாசத்துல வருது… என்னோட திருமண பரிசா அவங்க விருப்பப்படி நான் கொடுக்க ஆசைப்படுறது இந்த வீடு…." என்று ஒரே மூச்சாக கூறி முடித்தான்….

மூர்த்தியின் திருமணம் ஒரு மாதத்தில் நடக்கவிருப்பதால் அவன் ஐந்து நாட்களுக்கு மட்டும் விடுப்பு எடுத்திருந்தான்…. அவனது வேலையின் திறனைக் கண்ட நெடுஞ்செழியன் அவனுக்கு சம்பளத்துடன் பதினைந்து நாட்கள் விடுப்பு கொடுத்து விட்டு தானே வீடு கட்டும் இடத்திற்கு சென்று வேலையாட்களை வேலை வாங்கினாலும், அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் தவறவில்லை.

இதில் நெடுஞ்செழியன் செய்த தவறு தன் நண்பன் தன் மனைவியிடம் அவளது விருப்பத்தை தான் நிறைவேற்ற இருப்பதை பேச்சுவாக்கில் கூறிவிடுவான்… ஆதலால் தன் மனைவி, மகன், தன் நண்பன் எல்லோருக்கும் தான் கட்டும் வீட்டை பார்த்து இன்ப அதிர்ச்சி அடையவேண்டும்… என்று யாரிடமும் ஏதும் சொல்லாமல் விட்டுவிட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள மூர்த்தி நினைத்தான்.

மூர்த்தியின் திருமணம் முடிந்த ஐந்து மாதங்கள் அவன் அப்பா ஆகப் போகும் மகிழ்ச்சியில் தன் குழந்தை இப்பூமியில் ' பார்ன் வித் அன் சில்வர் ஸ்பூனாக 'வரவேண்டும் என்று நினைத்து தன் திட்டத்தை நிறைவேற்ற அவசர அவசரமாக மூளையை தீட்டி வழி கண்டுபிடித்தான்.

பார்வதிக்கு மூர்த்தியின் மனைவி கங்காவை மிகவும் பிடித்தது. அதைப் போல் கங்காவிற்கு அபிஜித்தின் துறுதுறு விழிகளும் அவனது சுட்டித்தனமும் மிகவும் பிடித்துப் போய் தனது வயிற்றில் இருந்த மகவிடம் பேச சொல்வாள்… அவனும் தன் தாய் வயிற்றில் தன் பாப்பாவிடம் பேசுவது போல் பேசுவான்…

இதே சமயத்தில் பார்வதியின் வயிற்றில் இரட்டைக்கரு வளர்வதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் அவள் தனது கணவனுக்கு போனில் அழைக்க அதே நேரம் மூர்த்தி தன் பெயரில் நெடுஞ்செழியன் கட்டும் வீடு, கன்ஸ்ட்ரெக்ஷனை தன் பெயரில் மாற்றி எழுதிக் கொண்டு அதை நெடுஞ்செழியனே கொடுப்பது மாதிரி பத்திரத்தை எழுதியிருந்தான்….

நெடுஞ்செழியன் தனது கம்பெனியின் அவனுக்கென்று அமைக்க பட்டிருந்த அறையில் சில பைல்களை பார்வையிட்டு கொண்டிருக்க மூர்த்தி அவனெதிரில் நின்றிருக்க அவனை நிமிர்ந்து பார்த்தவன் " சொல்லு மூர்த்தி!... என்ன விஷயம்? " என்று கேட்க பத்திரத்தை நீட்ட அவன் அதை வாசிக்கும் கணத்தில் பார்வதி அந்த நேரம் அவனுக்கு அழைப்பு விடுத்து இரட்டைக்கரு பற்றி சொன்ன செய்தியில் மகிழ்ச்சி முகத்தில் தாண்டவமாட அவளைக் காண விரைந்தோட எண்ணி எல்லாவற்றிலும் கையெழுத்து இட்டான்…

விதி அவனைப் பரிதாபமாக பார்க்க மூர்த்தியோ விகாரமாக தன் முகத்தை வைத்து கொண்டு அவனை உள்ளுக்குள் எள்ளி நகையாடினான்….

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 27

சரியாக மூர்த்திக்கு மகள் பிறந்த நேரம் பார்வதிக்கு ஏழு மாதங்கள் தொடங்கியது….

ஒரு வேலை விஷயமாக நெடுஞ்செழியனும், ஈஸ்வரனும் மும்பை கிளம்ப ஆயத்தமாக அவர்களுடன் பார்வதியும், அபிஜித்தும் வருவேன் என்று அடம் பிடித்தனர்.

ஈஸ்வரனின் மகனுக்கு ஊருக்கு கிளம்பும் நாளில் ஜன்னி வர அவனுக்கு பதிலாக மூர்த்தியை கூட அனுப்ப எண்ணி அவனுக்கு தகவல் தெரிவிக்க அவன் மனதில் தனது திட்டத்தை நிறைவேற்ற அருமையான சந்தர்ப்பம் இது என்று எண்ணி மிகுந்த மகிழ்ச்சியுடன் நெடுஞ் செழியனின் குடும்பத்தினருடன் மும்பை கிளம்பினான்.

கங்காவிற்கு சில நாட்களாக தனது கணவனின் செயல்பாடுகள் ஏதோ தவறாகப்பட அதை அவனிடம் கேட்க அவளது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.

மும்பை சென்று இறங்கிய வேளை எல்லோருக்கும் அந்த பரபரப்பு புதிதான அனுபவத்தை தர, அதை ரசித்துக் கொண்டே அவர்கள் புக் செய்திருந்த தனிதனி அறைக்குள் நெடுஞ்செழியன் மற்றும் மூர்த்தி நுழைந்தனர்.

நெடுஞ்செழியன் தான் வந்த வேலை சீக்கிரமாக முடித்து விட்டு ஊருக்கு கிளம்பும் முன் தனது குடும்பத்துடனும் மற்றும் மூர்த்தியுடனும் சுற்றி பார்க்க எண்ணி ஹோட்டல் செல்லும் வழி மூர்த்தி தான் கார் ஓட்டுவதாக கூறி இருட்டாக இருந்த இடத்தில் காரை நிறுத்த என்னவென்று நெடுஞ்செழியன் உணரும் முன் அவனை தான் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்க அவன் மயக்கமடைந்தான்.

பின் சீட்டில் அமர்ந்திருந்த பார்வதிக்கு அதிர்ந்து போய் கத்த அபிஜித் தனது தந்தையின் நிலைக் கண்டு அவனை எழுப்பினான்….

" அப்பா! அப்பா! எழுந்திரிங்கப்பா!"
என்று கதறியழ அவனை பார்த்து சிரித்த மூர்த்தி " நீயும் உங்கப்பா கூடவே போயிரு…" என்று அவனை சிறுபிள்ளை என்றும் பாராமல் அவனது தலையிலடிக்க அந்த அடி அவனது தலையில் மெதுவாக பட்டு காரின் இருக்கையில் வேகமாக பட அபிஜித் மயங்கி விழுந்தான்.

தான் அமர்ந்திருந்த சீட்டின் பின் திரும்பிய மூர்த்தி, பார்வதியிடம் அசைவு ஏதும் இல்லாமல் இருப்பதை உணர்ந்து அவளை ஒரு இடத்திற்கு காரில் அழைத்துச் சென்றான்… அதுவரை அவளது மூளை ஏதும் உணராமலிருக்க நெடுஞ்செழியன் மெதுவான குரலில் முனகும் சத்தம் கேட்டு சுயநினைவு அடைந்தாள்.

அவனை பார்த்து கதறிக் கொண்டே " மாமா! இந்த பாவியை நம்பாதீங்க… நம்பாதீங்கன்னு சொன்னேனே! இவன் குள்ளநரி தனத்தை நம்மக்கிட்ட காட்டிட்டான்… பாருங்க! " என்று தலையில் அடித்து கொண்டே அழ நெடுஞ்செழியனுக்கு தன்னவள் அழுகையை துடைக்க கூட முடியாத தன் அவலநிலையை எண்ணி மனம் கலங்கிய வேளை மூர்த்தியின் கழுத்தை அந்த மயக்கத்திலும் தனது தலையை உதறி இறுக்கமாக நெறிக்க மூர்த்தி மூச்சு விட முடியாமல் தவித்தான்.

மூர்த்தியின் தலையை காரின் ஸ்டியரிங்கில் மோத அவனுக்கு இரத்தம் வழிய வழிய ஓங்கி அடித்தான்… வலி தாங்க முடியாத மூர்த்தி தீடிரென்று தனது காலால் அவனை உதைக்க நிலைதடுமாறி யவனை இரும்பு கம்பியால் தனது ஆத்திரம் தீரும் வரை அடித்தான்.

பார்வதியை கர்ப்பிணி என்றும் பாராமல் மும்பையில் இருக்கும் சிவப்பு ஏரியாவில் ஏற்கெனவே தான் பார்த்து பேசிய புரோக்கர் ஒருவனிடம் அவளை தரதரவென இழுத்து செல்ல பார்வதிக்கு அங்கேயே தன் உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டோமா? என்று தோன்ற அவள் " மாமா! இந்த பாவிக்கிட்ட இருந்து உங்க தேவியாரை காப்பாற்றிருங்க மாமா… " என்று கதறியழ மூர்த்தி " இனிமே நீ தேவியார் இல்லைடி… ஊரே இனி சொல்லும் நீ ஒரு தே****" என்று சொல்லிக் கொண்டே அவளை அவன் கையில் ஒப்படைத்து விட்டு நெடுஞ்செழியனையும் அவனது மகனையும் பார்க்க அவர்களோ அசைவற்று கிடைப்பதை பார்த்து இருவரும் இறந்து விட்டனர் என்று முடிவெடுத்து அவர்களை அங்கே இருந்த புதரில் தள்ளிவிட்டு கிளம்பினான்….

தனது மனைவியை இன்னொருவன் தொட கையை நீட்ட அதுவரை மூச்சடக்கி படுத்திருந்த நெடுஞ்செழியன் அவனது கையை கண் மூடி திறக்கும் வேளை ஒடித்திருக்க அவனது காலையும் சேர்த்து ஒடித்திருந்தான்.

பார்வதிக்கு நடந்த பயங்கரத்தை எண்ணி நெடுஞ்செழியன் உடல் நடுங்க பார்வதிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி சேர்ந்ததால் அவளின் காலுக்கு கீழே இரத்தம் வழிந்தது.

தனது குடும்பத்தின் நிலைமையை கண்டு நெடுஞ்செழியன் மனம் கலங்கிப் போய் கதறி அழுத நொடி கடவுள் அவர்களின் மீது இரக்கங்கொண்டு அந்த வழியாக ஒரு கார் வர தனது தலையில் வழியும் இரத்தத்துடன் அதை நிறுத்த அந்த காரிலிருந்து இறங்கியவனோ அதிர்ச்சியாக பார்க்க நெடுஞ்செழியன் பார்வதியை நோக்கி கைக் காட்டினான்.

பார்வதியின் நிலையை உணர்ந்த அந்த கார்காரன் யாரென்றால் அது கபிலன் ‌தான்…

நிலைமையை புரிந்து கொண்டு சிறிதும் தாமதிக்காமல் அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கே பார்வதிக்கும் நெடுஞ்செழியனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது.

காரில் மயங்கிய நிலையிலிருந்த அபிஜித்தை கண்டவன் அவனுக்கு அங்கிருந்த மருத்துவர் பரிசோதித்து அவன் நலம் என்று உரைக்க பார்வதிக்கு " இரு பெண் குழந்தைகள் பிறக்க... ஒரு குழந்தை இறந்து பிறந்திருக்க மறு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது…

பார்வதி அடுத்த ஐந்து மணி நேரத்தில் தனது குழந்தைகளின் நிலையை பார்த்து கதறியழ பிஞ்சு உடம்பு காரி அழுக கூடாதுன்னு என்று அங்கிருந்தோர் கூற அவள் கொஞ்சம் அடங்கினாள்.

அதே சமயம், நெடுஞ்செழியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது. அவன் கண்முழித்த சிறிது நேரத்தில் அவனின் குழந்தைகள் நிலைமையை விசாரிக்க அங்கிருந்த நர்ஸ் பார்வதி இருக்கும் அறையில் நின்றிருந்த கபிலனை வரவழைத்து அவனுக்கு பக்குவமாக நிலையை எடுத்துரைத்து அவனை நிதானப் படுத்தினான்.

கதறி அழுக தெம்பில்லாமல் இருந்த நெடுஞ்செழியன், கபிலனை இறைஞ்சும் பார்வைப் பார்க்க அவனை புரிந்து கொண்டவன் பார்வதி இருக்கும் அறைக்கு அவனை அழைத்து செல்ல அங்கே பார்வதி கண்ணீருடன் வெறித்து பார்த்திருக்க அவளது முகத்தை தொட்ட நெடுஞ்செழியன் " என்னை மன்னிச்சிடு டி! " என்று கூறி விட்டு அவளது முகத்தை பார்க்க அவனது நிலையை கண்டு அவளுக்கு இரத்த கண்ணீர் வந்தது.

இருந்தாலும் நிலைமையை சமாளிக்க எண்ணி " மாமா! நம்ம குழந்தை... நீங்க கேட்ட மாதிரியே பெண் குழந்தை தான் பிறந்திருக்கு...என்னை மாதிரி தான் இருக்கு…" என்று சந்தோஷமாக கூறினாலும் மறு குழந்தையை எண்ணி விம்மினாள்.

கபிலன் சிறிது நேரம் கழித்து நெடுஞ்செழியன் இருந்த அறையில் அவனை படுக்க வைக்க நடந்த அனைத்தையும் மிக மெதுவான குரலில் கபிலனுக்கு தெரிவிக்க அதைக் கேட்டவனின் இரத்தம் கொதித்தது.

ஆத்திரமாக மூர்த்தியின் கொடூர செயலை எண்ணி அவனை உண்டு இல்லை என்றாக்க கபிலன் நினைக்க அவனது கையை பிடித்த நெடுஞ்செழியன் தனது தலையை ஒற்றை கையால் பிடித்து கொண்டு " தே… தேவியார் பார்க்கணும்" என்று மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டே கூற கபிலன் அவனது நிலைமை உணர்ந்து "டாக்டர்" என்று பலமாக கத்தினான்.

அவனது நிலைமை பார்வதிக்கு தெரிவிக்க அவள் கையில் பிஞ்சுக் குழந்தையோடு தன்னவனை பார்க்க ஓடினாள்.

அவள் வரும் வழியை விழி அகலாது பார்த்த நெடுஞ்செழியன் முகத்தில் சிறு வலியுடன் கூடிய சிரிப்புடன் " நம்ம குழந்தைகளை பார்த்துக்க தேவியாரே! எல்லாத்தையும் கபிலன் பார்த்துக்குவான்! தைரியமா இரு!" என்று அவன் பேசியதை கேட்ட பார்வதிக்கு மனதுக்குள் கலக்கம் சூழ்ந்தாலும் திடமனதோடு " ஏன்? ஏன் மா...மா… இப்படி சொல்றீங்க? நீங்க இல்லாம நான் மட்டும் என்னப் பண்ணப்போறேன்" என்று கண்ணீருடன் கூறிக் கொண்டிருக்கையிலே " நான் வரேன்! பாத்துக்க கபிலா உன் தங்கச்சியை" என்று சொல்லி விட்டு உயிரை நீத்தான்.

பேரறியா ஊரில் தன் கணவனை இழந்தவள் அன்று கதறிய கதறலில் அந்த மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் நெஞ்சம் பிசைந்தது…

" இப்படி என்னை தவிக்க விட்டு போறதுக்கா நீங்க இங்க வந்தீங்க! இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா இந்த பாவிமக உங்களை தடுத்துருப்பேனே! அய்யோ நம்ம பிள்ளைகளை எப்படி வளர்க்க போறேன்…. நீங்க என்கூட தானே காலம் முழுவதும் இருக்கப் போறீங்கன்னு நான் விவரம் தெரியாம இருந்துட்டேனே! உங்க மகனுக்கு என்ன பதிலை சொல்லப் போறேன்…. உங்க பொண்ணை நெஞ்சில சுமக்க ஆசைப்பட்டிங்களே! அய்யோ எல்லாம் போச்சே…." என்று உயிரற்ற சடலமாக இருந்த நெடுஞ்செழியனிடம் கேட்டு கொண்டே அங்கே ஓடிவந்த அபிஜித்தை பார்த்தவள் " செழிப்பா! அப்பா நம்மள விட்டு போய்ட்டாருடா" என்று அவனை அணைத்து கொண்டு கதற கபிலனுக்கு அழுகை பீறிட்டு கிளம்ப அபிஜித்தோ விவரமறிந்து நெடுஞ்செழியனை கட்டிக் கொண்டு அவனை எழுமாறு கெஞ்சினான். அங்கே இருந்தோர்க்கு இந்த காட்சி கண்ணில் இரத்தம் வர வைத்தது.

ஊருக்கு தகவல் தெரிவிக்க எண்ணி கபிலன் நினைக்க பார்வதி தனது மாமனார், மாமியாருக்கும் தனது தந்தை குமரனுக்கு மட்டும் தகவல் தெரிவிக்க சொல்ல அவர்கள் அடித்து பிடித்து கொண்டு வந்து சேர்ந்தனர்.

நெடுஞ்செழியனின் தந்தை " ஏன்டா! நீ எனக்கு கொள்ளி வைப்பன்னு நினைச்சா… நான் உனக்கு கொள்ளி வைக்கிற நிலைமை வந்துருச்சே! " என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க கபிலன் நெடுஞ்செழியனின் சடலத்தை அவனது சொந்த ஊருக்கு கொண்டு போகாமல் டெல்லியிலேயே இறுதி காரியத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தான்.

மூன்றாம் நாள் காலை தலைவிரி கோலமாக பார்வதி விட்டத்தை பார்த்து வெறித்திருக்க ஜீவிகா அவளது எண்ணத்தை மாற்ற எண்ணி அவளருகில் குழந்தையை நீட்ட குழந்தைக்கு பசியாற்றி மீண்டும் அவளிடமே தர ஜீவிகா செய்வதறியாது கையை பிசைந்தாள்.

அந்த நேரத்தில் கபிலன் வர கண்களால் பார்வதியின் நிலையை காட்டியவள், அவனிடம் 'ஏதாவது செய் ' என்று கெஞ்ச அவன் குரலை செருமிக் கொண்டு " இங்கே பாருங்க! நீங்க எல்லாரும் இப்ப திருச்சியோ, திருநெல்வேலியோ போனா ஆபத்து…" அதனால் நீங்க ஆறு மாசம் இங்கேயே இருங்கள்… நிலைமை சரியானதும் அங்கே போங்க" என்று தன்மையாக கூறினான்.அவன் கூற்றை அனைவரும் ஆமோதித்தனர்.

ஆறு மாதங்கள் கழித்து….

அபிஜித்தின் கையை பிடித்து விறுவிறுவென கபிலன்- ஜீவிகா முன் வந்து நின்ற பார்வதி, " அண்ணன், அண்ணி " இனி இவனுக்கு அம்மா, அப்பா நீங்க தான்...இனி இவனுக்கு எல்லாம் நீங்கள் தான் நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கணும்… என் மகளை மட்டும் நான் வளர்க்கிறேன்… இவனை மூத்த மகனா நீங்க வளர்க்கிறீங்களா? இவனையும் அந்த மூர்த்தி ஏதாவது பண்ணிட்டா என்னால் தாங்க முடியாது… தயவுசெய்து சரின்னு சொல்லுங்க...ப்ளீஸ்" என்று கெஞ்ச இருவரும் சேர்ந்து அவளது கெஞ்சலுக்கு காது கொடுத்தனர்.

அன்றிலிருந்து இளஞ்செழியனாக பார்வதிக்கும், ஜித்தனாக ஜீவிகாவிற்கும் இருந்தான்.

ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் கன்ஸ்ட்ரெக்ஷன் தொடங்க அபிஜித் விரும்ப கபிலன் அவனுக்கு பழையதை நினைவூட்டினார்.

ஏனெனில் ஒவ்வொரு இரவும் அவன் அலறிக் கொண்டே தூக்கத்தில் எழுவதை பார்ப்பவர் நடந்த அத்தனையும் கூறி மூர்த்தியை பழிவாங்க அவனை ஆயுதமாக உருவாக்கினார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் மூர்த்தியோ, அவனது அண்ணன் ஈஸ்வரனை நம்ப வைத்து நெடுஞ்செழியன் தனக்கு கொடுத்த மாதிரி அவனது கன்ஸ்ட்ரெக்ஷன் மற்றும் வீட்டை அவனது பெயருக்கு மாற்றி எழுதியிருப்பதாக காட்டினான்…

ஆனால் அவனை நம்பாத பார்வை பார்த்த ஈஸ்வரன் " உன்னோட தானே அவன் குடும்பத்தோடு மும்பை வந்தான்" என்று குழப்பத்துடன் கேட்க அவனை சமாளிக்க எண்ணி " அவன் என் கூட மும்பை வந்தான்... ஆனால் அப்பறம் அவன் பொண்டாட்டிக்கு வலியெடுக்கவும் என்னை ஊருக்கு போய் தகவல் சொல்லிட்டு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் அங்கே இருக்கு… அதை கண்டிப்பாக நீ ஏத்துக்கணும்னு சொன்னான்" என்று பொய்க்கு மேல் பொய்யாக அடித்து விட்டான்.

ஆனால் மும்பையில் இருந்து வந்தது முதல் மூர்த்தி நெடுஞ்செழியன் ஆரம்பித்த கன்ஸ்ட்ரெக்ஷனில் தான் எம்.டி ஆக பொறுப்பேற்று அதை திறம்பட நடத்த ஈஸ்வரனுக்கு நெடுஞ்செழியன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை…. அவனுக்கு தெரிந்த அனைத்து இடங்களிலும் விசாரிக்க ஈஸ்வரனின் செய்கை மூர்த்திக்கு கோபத்தை தூண்ட அவன் பொய்யாக செய்தித்தாளில் நெடுஞ்செழியன் குடும்பத்துடன் பலியென தகவல் பரப்பி ஈஸ்வரனை நம்ப செய்தான்.

அதோடு ஈஸ்வரன் இனிமேல் தன் நண்பன் இல்லாத இடத்தில் தான் இருக்க மாட்டேன் என்று சென்னை சென்று அங்கு வாழ ஆரம்பித்தான்.

காலங்கள் ஓட மூர்த்தி இந்தியாவிலே பெரிய கன்ஸ்ட்ரெக்ஷன் ஓனராக பெயரெடுத்தான்.

அபிஜித் டெல்லியில் கபிலன், ஜீவிகா, ஜீவா என அவர்களுடன் இருந்தாலும் தனது விடுமுறை நாட்களில் தனது அம்மா, பாட்டி, தங்கச்சி என அவர்களை காண விரைந்தோடி விடுவான்.

நெடுஞ்செழியன் போன பிறகு யாருடனும் தொடர்பில்லாது இருந்த பார்வதி , தன் மாமனாரின் மறைவுக்குப் பின் தன் கூட்டில் இருந்து வெளி வந்து, தன் மகளை தன் மாமியாரை பார்த்து கொள்ளும் கடமை இருப்பதால் நடந்த சம்பவங்களை நினைக்காமல் குடும்பத்தில் கவனம் செலுத்தினாள்.

மூர்த்திக்கு முதல் ஆறு மாதங்களில் நெடுஞ்செழியனின் குடும்பத்தை தேடிக் கொண்டு இருக்கும் செய்தி கபிலனை அடைய அவன் அவர்களை ஒரு வருடம் வரை டெல்லியிலே தங்க சொல்ல ஆறுமாதங்களுக்கு மேல் நிலைமை சரியான பிறகே பார்வதி திருநெல்வேலிக்கு வந்தாள்.

டெல்லியில் தனது கல்லூரி படிப்பை படிக்க அபிஜித் விண்ணப்பித்த கல்லூரியில் ஈஸ்வரன் மகன் ஜீவாவிற்கும் சீட் கிடைக்க அங்கே யாரென்று தெரியாமலே அவர்களது நட்பு வளர்ந்தது.

ஒருசமயம் ஜீவாவை காண ஈஸ்வரன் டெல்லிக்கு குடும்பத்தோடு வர அங்கே அவனுடன் அபிஜித் நின்றிருக்க அவனை கண்டு அதிர்ந்தவர், தனது நண்பனை போல் தோற்றம் கொண்டவனை கட்டி கொண்டவர் " அவன் யார்? எவர்? " என்று விசாரிக்க அபிஜித் ஏதும் சொல்லாது அமைதியாக இருக்க அந்நேரம் கபிலன் அபிஜித்தை பிக்கப் பண்ண வந்தவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன் நெடுஞ்செழியனுக்கு நடந்ததை அறிந்து கதறியழுதார்….

ஏனெனில் தன் நண்பன் ஏதோ ஒரு இடத்தில் உயிருடன் இருப்பான் என்று நம்பியவர் அந்த நினைப்பு பொய்யாகி போனதை நினைத்தும் தன் தம்பியே தனது நண்பனுக்கு எமனாகி போனதை நினைத்து ஆத்திரம் கொண்டு அபிஜித்திற்கு மூர்த்தியை பழிவாங்க துணை நின்றார்….

அபிஜித் தனது படிப்பை படித்து கொண்டே கபிலனுடன் கன்ஸ்ட்ரெக்ஷன் வொர்க்கை பார்க்க தங்களது திட்டத்தின் படி ஈஸ்வரன் தனது மகனை மூர்த்தியிடம் சமாதானமாக பேசி அவனது நடவடிக்கைகள் என்ன அவனை எப்படி வீழ்த்தலாம் என்று தகவல் சொல்ல ஜீவாவை எம்.எம். கன்ஸ்ட்ரெக்ஷன் உள்ளே நுழைய வைத்தனர்.

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-28

ஈஸ்வரன், தனது நண்பன் மற்றும் அபிஜித்தின் கடந்த கால வாழ்க்கையை கூறி முடிக்க அங்கு குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு மெளனம் நிலவியது…
அங்கே நின்றிருந்த அபிஜித், ஜீவா, ஈஸ்வரன், மூர்த்தி, சாஹித்யா என அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கங்கா, கபிலன், கதிர் மூவரும் எந்த வித உணர்வுகளையும் முகத்தில் காட்டாமல் அமைதியாக இருந்தனர்.

கங்கா ஏதும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாலும் அவளது மனம் தனது கணவனின் ஈனச் செயலை நினைத்து மனம் நொந்து போய் இருந்தாள்.

" எல்லாத்தையும் இங்கேயே பேசி முடிவு செய்ய வேண்டாம்… வாங்க வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… ரொம்ப நேரம் இந்த இடத்தில் இருக்க வேண்டாம்…." என்று கபிலன் தன்மையாக கூற அனைவரும் அவரது கூற்றை ஆமோதித்து அமைதியாக அவரவர் காரில் ஏறினர்.

கபிலனது காரில் அவருடன் கதிர், ஜீவா மற்றும் ஈஸ்வரன் ஏற, மூர்த்தியின் காரில் கங்கா அமைதியாக ஏற சஹியும் தன் தந்தையின் காரில் ஏற முயல அபிஜித் அவளது கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டவன் தனது காரை நோக்கி போக அவள் " நான் எங்கப்பா கூட போறேன்…" என்று சட்டென கூறிவிட அவன் அவளது கையை விட்டு விட்டான்….

" போடி… அப்படியே உங்க அப்பன் கூடவே போயிரு" என்று தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்ப சஹி தனது தந்தையின் காரை நோக்கி போக அது கிளம்பி நேரமாகிவிட்டது…

சஹி, " அய்யோ… " என்று கத்திவிட்டு பின்னர் சுற்றுப் புறம் உணர்ந்து மானசீகமாக மெல்லிய குரலில் " அவன் தான் கூப்பிடுறானே! அப்பவே நான் போயிருக்க கூடாதா… வீராப்பா பேசி இப்ப தெருவுல நின்னுகிட்டு இருக்கேனே!... அது என்னங்கடா ஆளு இல்லாத இடமா பார்த்து யாருடா உங்களை அடைச்சி வைக்க சொன்னது…' என்று வாய் விட்டு சொல்ல அவளுக்கு மிக அருகில் " இப்படியே இங்கேயே நின்னுகிட்டு இருக்க உத்தேசமா? " என்று குரல் கேட்டது.

அந்த குரலை இனம் கண்டு கொண்டவள் மனதுக்குள் ' அப்பாடா… வந்துட்டான்…' என்று நிம்மதியாக உணர்ந்தாலும் வெளியே கடுகடு முகத்துடன் " போனவர் அப்படியே போக வேண்டியது தானே… ஏன் வந்தீங்க…" என்று வசைபாட அவன் " இப்பவாச்சும் தெரிஞ்சிக்கடி… புருஷன் எப்பவும் கூட இருப்பான்னு… கடைசி வரை உன் கூட வரப் போறது நான் தான்…" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.

காரில் ஏறியவர்கள் அவன் காரைக் கிளப்பும் வரை அமைதியாக இருந்தவள் ஆரம்பித்து விட்டாள்…

"புருஷன் கூட வர்றானோ இல்லையோ புள்ளைக கூட வருவாங்க" என்று அவனுக்கு அவள் பதிலளிக்க அவளது பதில் அவனுக்கு முகத்தில் சிறு சிரிப்பை வரவழைத்தது. அதே சிரிப்புடன் " அப்படிங்களா மேடம்… ஆனால் உங்களுக்கு அந்த புள்ளையே நான் தான் கொடுக்கணும்…. இவ்வளோ நீ பேசுனதுக்கு அப்பறம் அந்த வரத்தை கொடுத்துட வேண்டியது தான்…" என்று ரோட்டை பார்த்து கொண்டு கூறினான்… அவன் பதிலில் அவள் தான் வாயை மூடிக்கொண்டு ' இவன் சரியான எத்தன்… இவன் கிட்ட போய் வாயை குடுத்தீயேடி சஹி ! ' என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

அவன் கார் மூர்த்தியின் வீட்டை நோக்கி செல்ல சாஹித்யா அவனது தோளினை சுரண்டி" ஏன் எங்க வீட்டுக்கு போறீங்க?" என்று கேட்க அபிஜித் " இனிமேல்தான் சீனே இருக்கு...கம்முன்னு வாடி…" என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே நுழைய அனைவரும் அங்கே இவர்களுக்காக காத்திருந்தனர்.

இன்னும் பிரச்சினை எதுவும் முடியவில்லை… பேசிக் தீர்க்க வேண்டியது அவசியம்… பகையை வளர்த்து கொண்டே போவது நல்லதல்ல.

மூர்த்தியே தனது பேச்சினை ஆரம்பித்தார்.

" நடந்த எல்லா சம்பவத்துக்கும் நான் தான் காரணம்… அப்போ சூழ்நிலை எல்லாம் எனக்கு சாதகமாக அமைந்ததால நான் பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியாது இருந்துட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க எல்லாரும்…" என்று அனைவர் முன்னிலையிலும் கைக் கூப்பி மன்னிப்பை கேட்க சஹியை தவிர அனைவரும் முகம் இறுகி நின்றனர்…

சஹி தனது தந்தையின் செயலை எண்ணி அவளுக்கு வருத்தமாக இருந்தாலும் அவள் தந்தைக்கு ஆதரவாக அவருடன் இணைந்து நின்றாள்…

கங்காவிற்கு தன் கணவனின் சுயரூபம் முன்னே தெரிந்திருந்தாலும் இப்போது அவள் கற்பனை செய்திராத அளவு மூர்த்தி ஒரு கொலையாளியாக அவள் மனதுக்குள் பதிந்து விட்டபடியால் அவளால் சஹி தனது தந்தையின் பின் ஆதரவாக நிற்பது சுத்தமாக பிடிக்கவில்லை.

அபிஜித், சஹியை எரிக்கும் பார்வை பார்க்க அவள் அவன் பார்வையை தவிர்த்து விட்டு தனது தந்தைக்காக பேச தொடங்கினாள்.

" பெரியவங்க மத்தியில் நான் பேசுறது தப்பா கூட இருக்கலாம்… மன்னிச்சிடுங்க… எங்கப்பா எப்போதோ செஞ்ச தப்புக்கு இவ்வளோ வருஷங்கள் கழித்து பழிவாங்குறது எல்லாம் நியாயமா?..." என்று கேள்வி கேட்க

அவளுக்கு அபிஜித் பதிலளிப்பதற்கு முன் பார்வதி அவளுக்கு பதிலளித்தார்.

" வருஷங்கள் கடந்தாலும் இழப்பு இழப்பு தான்… என் கணவர் இயற்கையான முறையில் செத்திருந்தா அந்த வேதனை சில வருஷத்துல மறைந்திருக்கலாம் சஹிம்மா… ஆனால் என் கண் முன்னே அவரை கொடுமைப் படுத்தி கொன்னுட்டான் உங்கப்பா...‌ ஒரு குடும்பபெண் நுழைய விரும்புவாளா சிகப்பு விளக்கு ஏரியால… உங்க அப்பா என்னை கர்ப்பிணி என்றும் பாராமல் என் கையை பிடித்து இழுத்துட்டு போய் அவன் கையில் கொடுத்து என்னை விற்க துணிஞ்சது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க சஹியிடத்தில் பதிலில்லை….

அதைத் தொடர்ந்து அபிஜித் " ஒரு பெண்ணோட அதிகபட்ச ஆசை கடைசிவரை நம்ம கணவனோடு சேர்ந்து நல்லபடியாக குழந்தைகளை வளர்க்கணும்… அவங்க வளர்ச்சியை கண்டு நாம் பெருமிதப்படணும்… அந்த ஆசையைக் கூட எங்கம்மா அனுபவிக்கலடி… " என்று வலியுடன் சொல்ல,

சஹி, " நீங்க சொல்ற நியாயம் எல்லாம் சரிதான்… அவரவர்க்கு அவங்க அவங்க பக்கம் நியாயம் இருக்கும்" என்று தத்துவம் பேச அபிஜித்தின் பொறுமை எல்லைக் கடந்தது.

" சரிடி… என் பொண்டாட்டி…. உங்க அப்பன் பக்கம் என்ன நியாயம் இருக்கும்னு எங்க எல்லாருக்கும் புளிப் போட்டு விளக்குறீயா?" என்று அவன் குரல் ஏகத்துக்கும் நக்கலாக கேட்க அவனின் குரல் வித்தியாசம் சஹிக்கு நன்கு உணர்த்தினாலும் அவனை கடுப்புடன் பார்த்துக் கொண்டே ஈஸ்வரனிடம் " பெரியப்பா… எங்கப்பாவுக்கு மாமா மேல் பொறாமை இருக்குன்னு தெரிஞ்சிருக்குல…. அப்பறம் ஏன் அவர் மனசை நீங்க மாத்தி நல்வழிப் படுத்தல?" என்று கேட்டாள்….

அவள் கேள்வியில் அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க அபிஜித் அசந்து போய் நின்றான்.

அவன் மனதில் ' மூர்த்தியோட ரத்தம் தானேடி நீ... நெஞ்சில் ஈரமே இல்லாம அப்படி தான்டி பேசுவ… போடி… போ… உன் நியாயம் எதுவரை போகுதுன்னு நானும் பார்க்கறேன்' என்று விட்டால் அவளை சாம்பல் ஆக்கிவிடும் பார்வையால் எரித்தான்.

அவனது பார்வையை அவள் உணர்ந்தாலும் வெளிக்காட்டாது தைரியமாக நின்றிருக்க மூர்த்தி பேசலானார்.

" எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க… நான் செஞ்ச தப்புக்கு எவ்ளோ பிராயச்சித்தம் பண்ணாலும் ஈடாகாது… பின்விளைவுகள் பற்றி யோசிக்காது நான் அவசரப்பட்டு செஞ்ச ஒரு காரியம் எவ்ளோ பாதிச்சிருக்குன்னு இப்ப புரியுது… என்னை மன்னிச்சிடுங்க…" என்று மூர்த்தி மன்னிப்பு வேண்ட சஹி அவரது கைகளை ஆதரவாகப் பற்ற அபிஜித் அவளை கடுப்புடன் பார்த்துக் கொண்டே " அதெப்படி மூர்த்தி சார்! எனக்கு வரக் கோபத்துக்கு உங்களை நாலு அறை அறைஞ்சுட்டு மன்னிப்பு கேட்டா மன்னிப்பிங்களா?" என்று ஏகத்துக்கும் குரலிலேயே கடுமை காட்டினான்.

சஹியோ, " அதெப்படி நீங்க அடிச்சா… நாங்க ஏன் மன்னிக்கணும்… அதே மாதிரி அறைஞ்சா தானே உங்களுக்கு வலி எப்படி இருக்கும்னு தெரியவரும்…" என்று தந்தைக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று வகையாக வாய் கொடுத்து மாட்டினாள்.

அபிஜித் " இப்ப சொன்னீயே இது பாய்ண்ட்.. ஒருத்தர் அனுபவிச்ச வலி எப்படின்னு அதை கொடுத்தவருக்கு திருப்பி கொடுத்தா தான் தெரியும் என்று சொல்றீயே அப்ப என்னோட வலி எப்படி இருக்கும் என்று உங்க அப்பனுக்கு டெமோ காட்டப் போறேன் டி.." என்று கர்ஜித்தான்.

" ஏன்? இதுவரை பண்ணது பத்தாதா? இதுக்கு மேல என்ன டெமோ காட்ட வேண்டி இருக்கு…." என்று பதிலுக்கு சாஹித்யா காட்டமாக கேட்க

" நான் இன்னும் ஒன்னுமே பண்ணலடி… " என்று அவளிடம் வியப்பாக வாயசைத்து கூறிவிட்டு பின் தன் குரலை செருமி அனைவரையும் பார்த்து, " ஒரு தந்தையோட அரவணைப்பு மகனுக்கு அவனோட சிறுவயதில் புரியாது… அவன் வளர்ந்த பின் ஒரு பக்குவம் வந்து தன் தந்தையை கௌரவப் படுத்துவான்… ஆனால் என்னோட பத்து வயசுலேயே தந்தையை இழந்து அதும் அவரோட மரணம் இயற்கையா இருந்திருந்தா எனக்கு பாதிப்பு ஏற்படுத்தினாலும் சில வருஷத்துல அதை மறந்துருப்பேன்… ஆனால் அவரோட மரணம் அப்படி இல்லையே! என்னோட உடலும் மனமும் நிம்மதியாக இருக்க வேண்டிய வயசுல நிம்மதி இழந்து என் அம்மா, தங்கச்சி, ஆச்சி, தாத்தா என அவ்ளோ சொந்தம் இருந்தும் அவங்களை விட்டு பிரிஞ்சு தொலைவில் நிம்மதியே இல்லாமல் எவ்ளோ நாள் தூக்கம் இல்லாமல் கலங்கிப் போய் உட்கார்ந்து இருப்பேன் தெரியுமா?" என்று ஆக்ரோஷமாக மூர்த்தியைப் பார்க்க அவன் பார்வையில் அவரின் தேகம் நடுங்க ஆரம்பித்தது…

அபிஜித் கூறிய வார்த்தைகளில் கபிலன் மற்றும் பார்வதிக்கு துக்கம் பொங்கி வழிய தன் கணவனின் பால்ய பருவத்தில் அவன் எவ்வளவு கஷ்டம் அனுபவித்திருப்பான் என்று சஹி நினைக்கையில் அவளது கண்கள் கலங்க தொடங்கியது…

பேசிக் கொண்டே கபிலனிடம் வந்தவன் அவரது கைகளைப் பிடித்து கொண்டு " கடவுள் என் மேல் இரக்கப்பட்டு எனக்கு கொடுத்த அழகான வரம் நீங்களும் ஜீவி அம்மாவும் அதோட இன்னொரு குட்டி வரம் இவன்…" என்று கதிரின் தலையை தடவிவிட்டு " இது மாதிரி வேற யாருக்கு அமையும்…. எனக்கு அமைஞ்சிருக்கே… அதுவும் பெத்த மகனை விட ஒரு படி மேலே என்னை நீங்க தாங்குனீங்க…" என்று உணர்ச்சிப் பெருக்கில் அவர்களை கட்டிக்கொண்டு கதற….

மூர்த்தி அவர்களை இளக்காரமாக பார்த்து கொண்டே ஈஸ்வரனிடம் " ஏன்டா அண்ணா! நீ இப்படி ஏமாந்த இழிச்சவாயா இருந்துட்டு உன் நண்பனோட சொத்தை என் பெயருக்கு எழுதிட்டான்னு சொன்னதும் நம்பிட்டு இப்ப இவன் கூட சேர்ந்து என்னை அழிக்க ப்ளான் பண்றீயா? வெட்கமா இல்லை…" என்று பாய்ந்தார்.

"நான் ஏன்டா வெட்கப்படணும்… ஈனத்தனமான காரியத்தை நீ பண்ணிட்டு நீயே வெட்கம் இல்லாமல் இருக்கும் போது நம்பி ஏமாந்த நான் இளிச்சவாயன் தான் டா" என்று கத்தினார்.

" நீயே சொல்லிட்டியே… நான் என்ன சொன்னாலும் நம்புவீங்களா இரத்தமே ! " என்று மூர்த்தி நக்கலாக கேட்க

அவரை விட படுநக்கலுடன் " நான் உன்னை நம்பினேன்னு என்னை இளக்காரமா சொல்றீயே? ஏன் உன்னை நம்பினேன் தெரியுமா? என் நண்பனுக்காக மட்டுமே உன்னை நம்பினேன்… அவன் தான் சொன்னான்… இப்ப புதுசா கல்யாணம் ஆகிருக்க மூர்த்திக்கு ஏகப்பட்ட கனவு இருக்கும்… அதை நீ அண்ணனா நிறைவேத்துறியோ இல்லையோ நான் அவனுக்கு ஏதாவது கொடுக்கணும்னு ஆசைப்படறேன்… மும்பை போய்ட்டு வரும் போது அது என்ன கிஃப்ட் அப்படின்னு உனக்கு தெரியும்னு சொன்னான்…. ஆனால் அவன் திரும்பியே வரல… அதனால் தான் நீ சொன்னபடி நான் நம்பினேன்… ஆனால் முழுசா உன்னை நம்பலை… உனக்கு நீ செஞ்சதை திருப்பி செய்ய இவ்ளோ காலம் ஆகிருக்கு எங்களுக்கு…" என்று பெருமூச்சுடன் முடிக்க

நான் அடங்குவேனோ என்று மூர்த்தி கங்கணம் கட்டிக் கொண்டவராக " இவ்ளோ வருஷம் என்ன ஏதும் செய்ய முடியல… ஐ மீன் நான் செடியா இருக்கும் போதே என்னை ஏதும் செய்ய முடியலை… இப்ப நான் ஆலமரம் மாதிரி வளர்ந்துருக்கேன்…. இப்ப மட்டும் என்ன செய்ய முடியும்? வாய் சொல் மட்டும் தான் உங்ககிட்ட… " என்று நக்கலாக கேட்க

ஹ்ம்… வெல்… மிஸ்டர்.மூர்த்தி ! நீங்கள் பண்ணியதுக்கு அப்ப எனக்கோ எங்க அம்மாவுக்கோ ஆள்பலமோ தைரியமோ இல்லாமல் இருந்தோம்… ஆனால் காலம் சாக்கடை மாதிரி நிற்காமல் நதி போல ஓடிக் கொண்டிருக்கிற மாதிரி இப்ப உன்னை எதிர்க்க என்னால் முடியும்… உனக்கு தண்டனை வாங்கி தர இரண்டு நிமிடம் போதாது…. எங்கம்மா அத்தைக்காக அதை செய்யலை… இப்ப உன்னை வச்சி செய்ய நான் வந்துட்டேன்…" என்று குரலில் வருவித்த நிதானத்துடன் பேசினான்….

அவன் பேசிய பேச்சில் ஏதோ உள் குத்து இருப்பதைப் போல அனைவரும் உணர்ந்தாலும் ஏதோ தடுக்க முதலில் வாயைத் திறந்த மூர்த்தி " இனி ஒரு நிமிடம் கூட யாரும் இங்கே நிற்க கூடாது… கிளம்புங்க…. கெட் அவுட்" என்று கர்ஜிக்க " ஷ்ஷ்… சவுண்டை குறைங்க மூர்த்தி…! நீங்க கத்துவது உங்களுக்கு நல்லதில்லை…" என்று தனது நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டே மூர்த்தியை பார்த்தவன் " ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டிங்க…. இது உங்க வீடு கிடையாது… நீங்க தான் முதலில் வெளியே போகணும்… கிளம்புறீங்களா?" என்று நக்கல் சிரிப்புடன் கூற மூர்த்தியின் முகம் அதிர்ச்சியை பிரதிபலிக்க சஹியோ அபிஜித்தை கூர்மையாக பார்த்தாள்.

அவளை கிண்டல் பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தவனை மூர்த்தி சட்டையை பிடித்திழுக்க அபிஜித் நிலைதடுமாறி சஹியின் கழுத்தில் முகம் புதைக்க அவனது அருகாமையில் அவள் மிரண்டு போனாள்.

மூர்த்தி வேகமாக அவனருகில் வந்து " என்னடா சொல்ற?... எப்படிடா இது சாத்தியம்? " என்று கூச்சலிட அங்கிருந்தவர்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க….

அபிஜித், " அதெப்படின்னு கொஞ்சம் யோசிங்க மூர்த்தி! அடுத்தவர்களுக்கு நாம் செய்யற துரோகம் நமக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிற மாதிரி இருக்கும்… ஆனால் அதே வினை நமக்கு நடக்கும் போது வரும் பாருங்க ஒரு வலி தாங்கவே முடியாது… அதுக்கு எந்த மருந்தும் இல்லை… " என்று ஜீவாவை பார்த்து கண்ணடிக்க அவனும் புன்னகைத்தான்.

மூர்த்தி, ஜீவாவின் மேல் பாய்ந்து " ஏன்டா? என் கூடவே இருந்து எப்படிடா இதை செஞ்ச… உனக்கு கொஞ்சம் கூட எனக்கு உண்மையா இல்லையேன்னு கூட உனக்கு தோணலையா?" என்று ஆத்திரத்துடன் கேட்க ஜீவா பதில் சொல்லும் முன் ஈஸ்வரன் " அவனை உன்கிட்ட கையெழுத்து வாங்கி அபிகிட்ட கொடுக்க சொன்னதே நான் தான் டா… அவனுக்கு உரியதை அவன்கிட்ட சேர்த்தோம்… இதில் என்ன தவறு இருக்கப் போவுது?" என்று நிதானமாக கூறினார்….

சஹிக்கு தன் தந்தையின் நிலையை எண்ணி வருத்தம் மேலோங்கியது…. தவறு செய்தாலும் அவர் பக்கம் நின்று அவருக்கான நியாயத்தை தேட…. அந்தோ பரிதாபம்…. அது தேடினாலும் கிடைக்காது என்று பேதை உணரவில்லை….

தந்தை மற்றும் தாயுடன் சஹி கிளம்ப ஆயத்தமாக அவளைத் தடுத்த பார்வதி " நில்லுமா…. சஹி! நீ எங்க வீட்டு பொண்ணு … நீ இங்கே இல்லாமல் அதாவது கணவன் கூட தான் இருக்கணும்…. போகாதேடா! " என்று தன் நிலையில் இருந்து கெஞ்ச கங்காவும் அதை ஆமோதித்தார்.

அபிஜித் இதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.. நாச்சியார் அவனிடம் " பெர்ரி! தப்புக்கு மிகப் பெரிய தண்டனை மன்னிப்பு தான்… அதை அவனுக்கு நீ கொடுத்தால் நான் சந்தோஷப் படுவேன்… அவனை தண்டிக்கப் போய் உன் பொண்டாட்டியை தண்டிக்காதேடா!..... " என்று ஒரு பக்கம் கெஞ்ச அவன் " அவள் போனால் போகட்டும்… அவளை எப்படி அடிச்சு பிடிச்சு என்கிட்ட வர வைக்கணும்னு எனக்கு தெரியும்… யூ டோண்ட் வொர்ரி கிரானி!" மெதுவாக கூறிக் கொண்டிருக்கும் போதே சஹி தன் பெற்றோருடன் கிளம்ப ஆயத்தமாக அவள் முன் அபி‌ஜித் சொடக்கிட அவள் நிமிர்ந்து பார்த்தாள்….

அவன் கங்கா அருகில் வந்து " சாரி மாமி! நான் செஞ்சதுக்கு உங்ககிட்ட மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்கணும்…" என்று வருத்தத்துடன் கூற அவரோ மூர்த்தி மற்றும் சஹியை பார்த்துக் கொண்டே " மன்னிப்பு கேட்டது உன் பெருந்தன்மையா இருக்கலாம்…. அபி… ஆனால் நானும் என் புருஷன் சொன்னதை நம்பி எதையும் ஆராயாமல் இருந்தது தப்பு…. அதேவேளை இந்த வீடு எப்ப இருந்தாலும் உன் கையில் தான் ஒப்படைச்சிருப்பேன்… "என்று அவனது தலையில் கைவைத்து கூறி " வாங்க... போகலாம்" என்று மகள், மற்றும் கணவருடன் வெளியேறினார்….

அவர்கள் செல்வதை தடுக்காது அனைவரும் அமைதியாக நிற்க ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை கண்ட அபிஜித் " ஏன்? இன்னும் இங்கேயே நிற்கிறீங்க? எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க… அப்பறம் பேசலாம்" என்று அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து தன்னவளை தன்னிடம் வரவழைக்க யோசிக்க சட்டென்று தோன்றிய ஐடியாவை செயல்படுத்த எண்ணினான்.

அதன்படி இரு நாட்கள் கழித்து வக்கீல் மூலமாக சஹிக்கு நோட்டிஸை அனுப்ப, அது அவளது கையில் கிடைத்த நொடியை அறிந்தவன் மென்னகை புரிய சஹியின் முகத்தில் கலவரம் தோன்றியது….

*********************************************
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 29

கையில் தனக்கு வந்த வக்கீல் நோட்டீஸை பிரித்து பார்க்காமல் சஹி அதையே வெறித்து பார்த்திருக்க அப்போது அங்கே வந்த கங்கா, " என்னடா சஹி…. ஏன் இப்படி முகமெல்லாம் வியர்த்துப் போய் இருக்கு?... என்ன விஷயம்?" என்று அவளது முகத்தை தன் முந்தானையால் துடைத்து விட்டு ஆதுரமாக கேட்க சஹிக்கு தனது தாயின் செயலைக் கண்டு மனதுக்குள் " எவ்ளோ வயசானாலும் அம்மாவுக்கு பிள்ளைக எல்லாம் குழந்தை தான்" என்று மனம் பூரிக்க கங்காவின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருந்தாள்…. அவளது மௌனத்தை கலைக்க மனமில்லாது அவளது தலையை வருடிவிட்ட கங்கா " சொல்லுடா? ஏதாவது பிரச்சினையா…. " என்று மறுபடியும் கேட்க அவரது முகத்தை நிமிர்ந்து பார்த்த சஹி, " அம்மா உன் மாப்பிள்ளை வக்கீல்நோட்டீஸ் அனுப்பி இருக்காரு…."என்று நைந்த குரலில் கூறினாள்….

அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்து " பிரிச்சு பார்த்தியா சஹி…என்ன தகவல் வந்துருக்குன்னு" என்று நிதானமாக கேட்க " வேற என்ன இருக்கப் போகுது… என்கிட்ட டைவர்ஸ் கேட்டு தான் அனுப்பியிருப்பாரு…" என்று மெதுவாக கூற கங்கா அதை மறுத்தார்.

" ச்சே...ச்சே.. அப்படி எல்லாம் இருக்காது… என் மருமகன் அந்த அளவுக்கு போக கூடிய ஆள் இல்லை… நீயா ஏதும் நினைச்சிட்டு சொல்லாதடா" என்று அபிஜித்தின் பக்கம் நின்று கங்கா பேசியதை கேட்டு சஹி " ஹ்க்கும்… ரொம்பத்தான்…"என்று பழிப்பு காட்டிவிட்டு அந்த நோட்டீஸை படபடக்கும் மனத்துடன் பிரித்து படித்தவள் சிறு சிரிப்புடன் கங்காவிடம் நீட்ட அவரோ அதை ஒரு வரிவிடாமல் படித்து விட்டு அவளது தலையில் தட்டி " இப்ப புரியுதா நான் உன்னை விட மாப்பிள்ளையை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்னு " என்று கேட்க " அட போம்மா… அவரை என்னால புரிஞ்சுக்க முடியல" என்று தன்னையே நொந்துக்கொண்டே கூறினாள்.

அவளது புலம்பலை சிரிப்புடன் பார்த்த கங்கா " இரு சஹிம்மா… உனக்கு டீ கொண்டு வரேன்… கொஞ்சம் நிதானமா இருக்க அது உதவும்…" என்று செல்ல சஹி பக்கத்தில் யாரும் இல்லாத தைரியத்தில் வாய் விட்டே புலம்பினாள்….

'ச்சே! இவனைப் பத்தி தெரிஞ்சும் இவன் நமக்கு டைவர்ஸ் நோட்டீஸை தான் அனுப்பிருக்கான்னு பயந்தா கடைசில வேலைக்கு இன்னும் இரண்டு நாள்ல வந்து ஜாயின் பண்ணலைனா சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்னு அனுப்பிருக்கான்… வா, வா அப்படின்னு கூப்பிட்டு அப்பறம் ஏதும் அசிங்கப்படுத்துவானோ' என்று கற்பனை செய்தவள் அடுத்த நாளே அவனது கன்ஸ்ட்ரெக்ஷனுக்கு நோட்டீஸூடன் சென்றாள்.

அபிஜித்தின் கன்ஸ்ட்ரெக்ஷனில் சஹி உள்ளே நுழையும் போதே அவளைக் கவனித்த ஜீவா ஓடி வர சஹி அவனை கண்டும் காணாமல் அபிஜித்தின் அறையை நோக்கி செல்ல ஜீவா, " சஹிம்மா!" என்று ஏக்கத்துடன் அழைக்க அவள் " என்ன என்ன சஹிம்மா, தஹிம்மான்னு கூப்பிட வேண்டி இருக்கு… போ போய் உன் நண்பன் கூட சேர்ந்துகிட்டு இன்னும் என்கிட்ட எதெல்லாம் மறைக்கலாம்னு போய் யோசி போ" என்று கடுப்பாக கூறிக் கொண்டே அபிஜித்தின் அறைக்கதவை தட்ட போகையில் அவன் கதவு திறந்து கொண்டு கதிர் வெளியே வந்தான்.

அவளைக் கண்டதும் முகம் முழுவதும் சிரிப்புடன் " அண்ணி! வாங்க அண்ணி! நீங்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி…" என்று தனது அருகே நின்றிருந்த ஜீவாவின் தோளில் கையைப் போட்டு அவனை தனியே அழைத்துச் சென்று விட்டான்.

தனித்து நின்றிருந்த சஹிக்கு அபிஜித்தை பார்க்க தயக்கமாக இருந்தாலும் அவள் வேறு வழியின்றி கதவை தட்டப் போக அவனும் கதவை திறந்து வெளியே வர அவள் மேல் மோதி விட்டான். அவன் மோதிய வேகத்தில் கீழே விழ இருந்தவளை இறுக்கமாக அணைத்தவன் இதுதான் சாக்கு என்று அவளது கழுத்தில் இதழ் பதிக்க அவள் கண்கள் விரிந்து கொண்டன.

அவன் மெதுவாக அவளது காதில் " உள்ளே வா" என்று கூறிவிட்டு செல்ல அவளும் பின் தொடர்ந்தாள்.

உள்ளே நுழைந்தவள் முகத்தை கடுப்புடன் வைத்திருக்க அவனுக்கு அவளது உணர்வுகள் புரிந்தாலும் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

" இந்த கன்ஸ்ட்ரெக்ஷனில் ஒரு வருஷம் கண்டிப்பா வேலை செய்தே ஆகணும்ன்னு தானே ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ல சைன் பண்ணிருக்க… வேலையை நீ ரிசைன் பண்ற ஐடியாவுல ஏதும் இருக்கன்னா ஐயம் வெரி சாரி…. சாஹித்யா… இப்ப உங்களால வேலையை விட்டு போக முடியாது…." என்று சொல்ல அவளும் " நானும் வேலையை விட்டு போற ஐடியால இல்லை…" என்று முறைப்புடன் சொன்னாள்.

" ரொம்ப சந்தோஷம்… போங்க… உங்க டேபிள்ல இந்த வாரம் நடக்கப்போற டெண்டர் டீடைல்ஸ், இப்ப கட்டி முடிச்ச ஆச்சார்யா சாருக்கு சொந்தமான பில்டிங் டீடைல்ஸ் எல்லாம் ஈவினிங் எனக்கு ப்ராபர் எக்ஸ்பௌன் பண்ணுங்க… யூ மே கோ நவ்" என்று அவனது இருக்கையில் அமர்ந்து கொண்டு கணினியை பார்க்க தொடங்கினான்.

சஹிக்கோ தலையை பிய்த்து கொள்ளாத நிலை… ' என்ன இவரு எதுவும் கேட்கல… வேலையை பார்க்க சொல்றாரு… என்கிட்ட பேச வேற எதுவும் இல்லையா? அவ்ளோ தானா?' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவன் கட்டளையிட்ட வேலையை முடித்து விட்டு நிமிர அதற்குள் பல வேலைகள் அவளை ஆக்ரமித்தது…

சஹி எல்லாவற்றையும் சரி பார்த்து பிரிண்ட் அவுட் போட்டு முடிக்கவே மணி ஏழரை ஆனது… அப்போது தான் அவளுக்கு மதியம் உணவு உண்ணாதது ஞாபகம் வர தன்னையே நொந்து கொள்ள அவன் அவளை அழைக்க இவளும் நொடியில் கையில் வைத்திருந்த அனைத்து டீடைல்ஸையும் சமர்பித்து விட்டு தகுந்த விளக்கம் கொடுத்து விட்டு வெளியேறினாள்.

அபிஜித்தும் தனது வேலையை முடித்து விட்டு கிளம்ப ஆயத்தமாக சஹி லிஃப்ட்டில் நுழைய இவனும் அவளும் மட்டும் லிஃப்டில் இருந்தனர்.

சஹியை வம்பிழுக்க நினைத்தவன் " எப்ப வீட்டுக்கு வர்றதா உத்தேசம்?" என்று கேள்வி எழுப்ப அவனை முறைத்து பார்த்தவள் " நான் ஏன் சார்? உங்க வீட்டுக்கு வர்றணும்?" என்று எதிர்கேள்வி கேட்டாள்…

அவளின் கூற்றில் லிஃப்ட்டை ஹோல்டில் வைத்தவன் அவள் என்னவென்று உணரும் முன்னே அவள் போட்டிருந்த ஷாலை விலக்கி அவளது தாலியை வெளியே எடுத்து அவளிடம் காட்டி " இது இரண்டு பேருக்கும் உள்ள பந்தம்… இது உன் கழுத்தில் இருக்கும் வரை என் கூட தான் கடைசி வரை இருக்கணும்…" என்று கூறியவனின் கைகள் அவளது நெஞ்சின் மீது நிலைத்திருக்க அவள் சங்கடமாக நெளிந்தாள்… அவனுக்கு ஏதோ பஞ்சு பொதியின் மேல் கைவைத்து இருப்பது போல் உணர்வு தோன்ற அவளை குனிந்து பார்க்க இருவரின் கண்களும் சந்தித்து மீண்டன.

அவன் நிதானமாக அவளது தாலியை சுடிதாரில் நுழைக்க போக அவனது கையைப் பிடித்தவள் " நானே போட்டுக்கறேன்… விடுங்க" என்று கூறினாலும் அவளது சொல்லை கேட்காமல் அவன் சுடிதாரில் தாலியை போட்டு விட்டவன் கண்ணில் இலைமறை காயாக அவளது அங்கங்கள் தெரிய அவள் பார்வை உணர்ந்து அவன் உணர்வற்றது போல் அவளை பார்த்து விட்டு வெளியேறினான்.

தனது காரில் ஏறியவன் சஹி அமைதியாக வெளியே பஸ் ஸ்டாண்டிற்கு போவதை பார்த்துவிட்டு வழிமறித்தவன் " வா… நான் டிராப் பண்றேன்.." என்று அமைதியாக கூறியவனை " பரவாயில்லை… நான் அப்பாவை வரச் சொல்லி போய்க்கறேன்… கிளம்புங்க… " என்று வீம்புடன் கூறிக் கொண்டிருக்கையில் சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது…

சட்டென்று காரினுள் நுழைந்தவளை சிறு சிரிப்புடன் பார்த்தவன் " இதுக்கு தான்டி நான் சொன்னால் கேட்கணும்…. எப்படி நனைஞ்சிட்ட பாரு…" என்று கடிந்தவன் கார் போர்டில் இருந்து டவலை எடுத்து அவளை துடைத்து விட்டான்… அவனது சிறு செயலைக் கண்டு உள்ளுக்குள் காதல் பெருகினாலும் அதை வெளிக்காட்டாது அமைதியாக இருந்தவள் அவனது தோளில் தலைசாய்க்க அப்படியே மயங்கினாள்.

அபிஜித்" ஹேய்… சஹி… " என்று பதற்றத்துடன் அவளது கன்னத்தை தட்ட அவள் கண்ணை திறப்பது போல் இல்லை… அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தெளிக்க அதில் மயக்கம் தெளிந்தவளை விசாரித்தவன் பல்லைக் கடித்துக் கொண்டு " அப்படி என்னடி சாப்பிடாம வேலை செஞ்ச… " அவளை திட்டிவிட்டு யாருக்கோ கால் பண்ணினான்.

அந்த பக்கம் எடுத்தவுடன் " மாமி! நான் அபிஜித் பேசறேன்… சஹியை என்கூட அழைச்சிட்டு போறேன்… இனி என் கூட தான் அவ இருப்பா…" என்று கங்காவிடம் கூற அவர் என்ன கூறினாரோ?... பேசிக்கொண்டே சஹியை பார்த்தவன் புருவமுயர்த்த அவளோ அவனிடம் இருந்து போனை வாங்கி " அம்மா! என்னால இவர் கூட எல்லாம் போக முடியாது…நான் நம்ம வீட்டுக்கு வரேன்… " அவள் பேசி முடிக்கையில் அவளது கையிலிருந்து போனை வாங்கியவன் " மாமி! உங்க பொண்ணு சொல்றதை எல்லாம் நம்பாதீங்க… இனி அவ என் கூட தான் இருப்பா…வைக்கிறேன் மாமி!" என்று போனை வைத்து விட்டு காரை திருப்பினான்.

அவன் சட்டென்று காரை திருப்பவும் அவன் புறம் திரும்பி அமர்ந்திருந்தவள் இதை எதிர் பார்க்காததால் அவன் மேல் விழுந்தாள்.

தன் மடியில் விழுந்தவளை கண்டு புன்சிரிப்புடன் பார்த்தவன் அவள் எழாததை கண்டு " என்னடி.. மாமன் மடியில விழுந்தா எழுந்துக்க மாட்டியா?..." விடாப்பிடியாக அவளை வம்பிழுத்துக் கொண்டே வந்தவன் அவளின் பசியறிந்து அங்கேயிருந்த ஹோட்டலில் தனது காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த அதே சமயம் மூர்த்தியும் தனது காரிலிருந்து இறங்கி கொண்டிருந்தார்….

அவரைப் பார்த்த சஹி, அபிஜித்திடம் " அப்பா…எங்கப்பா வந்துருக்காரு...பாருங்க… " என்றவள் நேரே மூர்த்தியிடம் சென்று நிற்க அவளை வியப்பாக பார்த்தவர் " நீ இங்கே என்னம்மா பண்ற" கேள்வி கேட்டுக் கொண்டே மூர்த்தி அவளை கையைப் பிடிக்க வர அவரது கையை விலக்கிவிட்டு அபிஜித் " அவ என் கூட சாப்பிட இங்கே வந்துருக்கா… வா சஹி போகலாம்…" கூறிக் கொண்டே கையைப் பிடித்து அவன் பக்கம் இழுக்க மூர்த்தி சஹியின் மறுகையை பிடித்து அவர் பக்கம் இழுத்தார்.

சஹிக்கு யார்பக்கம் செல்வது என்று தர்ம சங்கடமான நிலை ஏற்பட மூர்த்தி அபிஜித்திடம் " விடுடா… என் பொண்ணு கையை விடுடா.." அவனது கையை தட்டிவிட அபிஜித் சஹியின் விரல்களோடு தனது கையை பிணைத்து இறுக்கிக் கொண்டு " அவளை கல்யாணம் பண்ணும் போதே எக்காரணம் கொண்டும் கைவிட மாட்டேன்னு சொல்லிட்டு தான் அவள் கழுத்துல தாலி கட்டுனேன்.. நீங்க கையை எடுங்க முதல்ல…" என்று அவர் கையை கட்டி விட்டான்…

அவனது செயலில் மூர்த்திக்கு எரிச்சல் ஏற்பட தனது காரை எடுத்துக் கொண்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்தார்.

சஹி போகும் அவரை பரிதாபமாக பார்க்க 'ஹ்க்கும்' என்ற கனைப்பில் நிமிர்ந்தவள் " என்ன?" என்று கடுப்பாக கேட்டவளிடம் " சாப்பிட போகலாம் " என சைகை செய்தவனிடம் " எனக்கு பசிக்கல… எங்க வீட்டுக்கு போகணும்" கூறிக்கொண்டே ஹோட்டலின் உள்ளே சென்று அமர்ந்தவளை கண்டவன் மனதினுள் ' என்னடா… இவ பசிக்கலன்னு சொல்லிட்டு முதல்ல நுழையறா… அடேய் ஜித்தா… உனக்கு வாய்ச்ச பொண்டாட்டி மாதிரி அமையறது எல்லாம் வரமடா… வரம் " என்று அவனது மனசாட்சி பங்கமா வச்சி செஞ்சது.

உள்ளே நுழைந்தவன் கண்ணில் மெனு கார்டை புரட்டிக் கொண்டிருந்த சஹியை கண்டவன் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கியவன் " உனக்கு என்ன வேணுமோ அதை ஆர்டர் பண்ணு" சொல்லிக் கொண்டே அவன் தனக்கு வேண்டியதை ஆர்டர் பண்ண சஹியும் தனக்கு வேண்டியதை ஆர்டர் பண்ண இருவரும் அமைதியாக உண்டனர்…

பில் தொகையை அபிஜித் செலுத்த போகையில் அவனது கையை பிடித்தவள் தனது கார்டை எடுத்து அவன் கையில் திணித்தவாறே " இன்னிக்கு நான் சாப்பிட்டதுக்கு நானே பில் பே பண்ணிக்கிறேன்…." தொடர்ந்து பேச போனவளை கையமர்த்தியவன் " சரிங்க பொண்டாட்டி… எனக்கும் அப்படியே பில் பே பண்ணிட்டிங்கன்னா நாம கிளம்பலாம்.." இத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் அழுத்தமாக அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

பதில் எதுவும் பேசாமல் சஹி பில் பே பண்ண இருவரும் கிளம்பிய வேளை கபிலனிடமிருந்து அவனுக்கு போன் வந்தது…

" ஹலோ… ஜித்தா… எப்படி இருக்கப்பா?"

" நான் நல்லா இருக்கேன் டாடி… நீங்க அம்மா, கதிர் எல்லாம் எப்படி இருக்கீங்க?"

" நாங்க எல்லாம் எப்படி இருக்கோம்னு வீட்ல வந்து தெரிஞ்சிக்க…." பதில் கூறிவிட்டு கபிலன் சிரிக்க அபிஜித் " வாவ் டாடி... இன்னும் டென் மினிட்ஸ் நான் வீட்டில இருப்பேன்…ஓகே.." காரை விரைவில் சஹியின் வீட்டில் நிறுத்தி விட்டு அவளைப் பார்க்க அவளது கேள்வி சுமந்த விழிகளை கண்டவன் சிரித்து கொண்டே காரை எடுத்தான்.

அபிஜித்தின் வீடு….

ஹாலில் நாச்சியார், பார்வதி, கபிலன், ஜீவிகா என அனைவரும் அமர்ந்திருக்க நாச்சியாரின் தோளில் வானதி சாய்ந்து அமர்ந்திருந்தாள். கதிர் ஹாலின் ஓரத்தில் அமைதியாக தன் லாப்டாப்பில் ஆழ்ந்திருந்தான்.

வீட்டின் உள்ளே நுழையும் போதே அபிஜித்தின் முகம் களையாக இருக்க அவனது முகத்தை கண்டு அங்கிருந்தவர்களின் முகமும் மகிழ்ச்சியில் புன்சிரிப்பாக மாறியது.

" வாங்க வாங்க… டாடி, மாம்…. வா கதிர்…" என்று ஆனந்தமாக வரவேற்க கபிலன் மற்றும் ஜீவிகா இருவருக்கும் நடுவில் அமர அவனின் அந்த உரிமையுணர்வில் ஜீவிகாவிற்கு மனம் நிறைந்தது…

" எல்லாரும் சாப்பிட்டிங்களா?… "

"ஹ்ம்.. சாப்பிட்டு தான் எல்லாம் உட்கார்ந்து இருக்கோம்… நீ சாப்பிட்டியாப்பா…" ஆதுரமாக ஜீவிகா பதிலளிக்க

" நான் உங்க மருமக கூட தான் ஹோட்டல்ல சாப்பிட்டு வரேன் ஜீவி…" எந்த பதிலை சொன்னால் அங்கிருப்போர் மனம் மகிழும் என தெரிந்தே விளக்கமாக கூறினான் அவன்… அதில் அவர்கள் எல்லோரும் கேட்க நினைத்த கேள்விக்கு முன்னரே பதிலை தந்தான்…

நாச்சியார், வானதி இருவரும் தூக்கம் வருகிறதென்று அவர்கள் அறைக்குள் செல்ல அபிஜித் " சொல்லுங்க டாடி…முக்கியமான விஷயம் பேச தான் தூங்காம கூட எனக்காக வெயிட் பண்றீங்கன்னா எவ்வளவு முக்கியம் அந்த விஷயம்… சொல்லுங்கப்பா… என்னன்னு?" கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டான்…

கபிலன், " அதுக்கு ஏன்டா நீ பதட்டப்படுற… என்ன விஷயம்னு பார்வதி கிட்ட கேளு…"

அவர் சொல்லியதும் கேள்வியாக தனது அம்மாவை அவன் பார்க்க " நம்ம வானுக்குட்டிக்கு கல்யாணம் பண்ணி வைக்க சரியான நேரம் அமைஞ்சிருக்கு… அதைப்பத்தி பேசணும்னு நினைச்சு தான் உனக்காக காத்திருந்தோம்… வானதி மனசுல என்ன இருக்குன்னு இங்கே எல்லாருக்கும் தெரியும் போது இதுக்கும் மேல அவ கல்யாணத்தை தள்ளிப் போட விருப்பமில்லை செழிப்பா…" கூறி முடித்து விட்டு அபிஜித் என்ன சொல்லப் போகிறான்… என்று அனைவரின் முகத்திலும் ஆவல் இருந்தாலும் அமைதியாக பார்த்திருந்தனர்….

அவனுக்கும் வானதி- ஜீவா இருவரது காதலை பற்றி அறிந்திருந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த பேச்சை தவிர்த்திருந்தான். முதலில் ஜீவாவிடம் பேசிவிட்டு பின்னர் இதற்கு பதிலை கூற நினைத்து விட்டு அதை பார்வதியிடமும் கூற அனைவரும் அவனது பதிலை ஏற்றுக் கொண்டனர்.

பின், ஜீவிகா மற்றும் பார்வதி இருவரும் அபிஜித்தை பார்ப்பதும் கண்களால் ஏதோ சொல்வதையும் அவன் உணர்ந்திருந்தாலும் அவர்களே கேட்கட்டும் என்று கண்டும் காணாமல் இருக்க ஜீவிகா பேச்சை ஆரம்பித்தார்.

"ஜித்தா! எப்போ மருமகளை இங்கே கூட்டிட்டு வரப்போற?"

" இப்போதைக்கு அவ இங்கே வர வேண்டாம்மா… நான் அவளுக்கு கொஞ்சம் என் நிலையை புரிய வைக்கணும்.. அவளுக்கு என் மேல் சில வருத்தங்களும் குழப்பங்களும் இருக்கு.. நாங்க எங்க வாழ்க்கையை தொடங்கும் போது மனசுல எந்தவித சங்கடங்களும் இல்லாமல் ஆரம்பிக்க நினைக்கிறேன்… அதுக்கு கொஞ்சம் காலம் தேவைப்படும்… அதேசமயம் என்கிட்ட தான் அவ வேலை பார்ப்பா...அவ தனிச்சு நின்னு ஜெயிக்க நான் பக்கபலமா இருக்க நினைக்கிறேன்… " இதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை என்கிற ரீதியில் அமைதியாக இருந்தவனை கபிலன் தட்டிக் கொடுத்தார்.

சிறிது நேரம் எதுவும் பேசாது அமைதியாக இருந்தவர் பின்னர் அவனிடம் " இன்னும் உன் மாமனார் மேல் உள்ள கோபம் போகலையா?... ஏன் கேட்கிறேன்னா பார்வதியே எல்லாத்தையும் மறந்துட்டு இனிமேலாவது எல்லாரும் ஒன்னா சேர்ந்து இருக்கணும்னு விரும்பறாப்பல…. இன்னும் அதே பழி வாங்குற எண்ணத்தை விட்டு விட்டு உன் வாழ்க்கையை வாழுடா ஜித்தா!" வேதனையான குரலில் கூறினார்…

" மறக்க கூடிய காரியத்தை என் மாமனார் செய்யலையே?டாடி…"

" சில கசப்பான விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்குறதை நம்மால தடுக்க முடியாது செழிப்பா!.. ஆனால் நமக்கு நினைக்கும் போது எந்த விஷயம் அதிக கோபத்தையும், அதிக கவலையையும் தருதோ அதை நாம மறந்துடுடலாம்… ஒரு உயிரை எடுத்ததுக்கு விலை மறு உயிர் தான் என்றால் இங்கே யாரும் மன நிம்மதியோட ஒரு நாளை கூட கடத்த முடியாது… உங்கப்பா இறந்தது இயற்கை முறையில் இல்லையென்றாலும் என் கண் முன்னே நடந்த விஷயத்தை மறக்க என்னால முடியல தான்... ஆனால் என் பிள்ளையோட வாழ்க்கைக்காக அந்த மூர்த்தியை நான் மன்னிக்கிறேன்.. அவர் செய்ததை மறக்க முயற்சிக்கிறேன்… சஹியை நாளைக்கே அவங்க வீட்டில் இருந்து கூட்டிட்டு வந்துடு செழிப்பா" இறைஞ்சலான குரலில் கூறினார்…

" சரிம்மா… உங்க எல்லாரோட விருப்பமும் அதுதான்னா நான் அதை செய்யறேன் மா… ஆனால் அதுக்கு முன்னாடி நான் ஜீவா கிட்டயும், ஈஸ்வரன் அங்கிள்கிட்டேயும் நாளைக்கு பேசிடுறேன்… " அவனின் பதிலில் அனைவரும் நிம்மதியாக தூங்க சென்றனர்….

அபிஜித் சொன்னமாதிரி ஈஸ்வரனிடமும், ஜீவாவிடமும் தனது தங்கையின் ஜாதகத்தை பற்றி கூறிவிட்டு வீட்டு பெரியவர்களை கூட்டி வந்து சம்பந்தம் பேச வானதிக்கும் ஜீவாவிற்கும் நிச்சயதார்த்தம் இந்த மாத கடைசியில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது…

ஈஸ்வரன் முறைப்படி தனது தம்பியான மூர்த்தி குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்க அவரின் வீட்டுக்கு செல்ல மூர்த்திக்கு ஈஸ்வரனின் முகத்தை பார்க்காது எங்கோ பார்த்துக் கொண்டிருக்க அவரருகில் நின்றிருந்த கங்கா அவரது விலாவில் தன் கைமுட்டி கொண்டு குத்த சட்டென்று மனைவியை பார்த்து முறைத்தவருக்கு கங்கா முன்னால் நின்றிருந்தவர்களை வாங்க என்று அழைக்குமாறு கண்களால் சைகை செய்ய மூர்த்தியும் வேண்டாவெறுப்பாக "வாங்க" தலையசைத்தார்.

கங்கா வந்தவர்களுக்கு ஜூஸை கொண்டு வர செல்ல சஹி தனது அறையிலிருந்து வெளியே வந்தவள் உட்கார்ந்து இருந்தவர்களை " வாங்க பெரியப்பா… வாங்க பெரியம்மா… எல்லாரும் எப்படி இருக்கீங்க" எந்தவித தயக்கமும் இல்லாமல் வந்தவர்களை வரவேற்று பெரியப்பா மற்றும் பெரியம்மாவிற்கு நடுவில் அமர்ந்தாள்…

அவளின் அந்த உரிமையை கண்டு ஈஸ்வரனுக்கும் அவரது மனைவிக்கும் மனம் நெகிழ்ந்தாலும் அங்கே அமர்ந்திருந்த ஜீவா சஹியை மன வருத்தத்துடன் பார்த்திருந்தான். அவனது பார்வையை அவள் உணர்ந்தாலும் அவன் புறம் திரும்பவே இல்லை… இன்னும் அவன் மேல் கோபம் போகவே இல்லை அவளுக்கு…

வந்திருந்தவர்கள் தனது மகனின் நிச்சயதார்த்தம் பற்றி பேச ஆரம்பிக்க அதை நினைத்து சஹிக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

" சஹி! வாடா… அவங்க பேசிட்டு இருக்கட்டும்… நாம பால்கனியில போய் பேசலாம்… எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும்…" அவள் மறுப்பு தெரிவிக்கும் முன் அவளது கையை பிடித்து எழுப்பி விட அவளைக் கூட்டிக் கொண்டு வெளியில் சென்றான்.

" ஏன்டா..சஹி! இன்னும் கோபம் போகலையா? இந்த அண்ணன் மேல…" ஆதங்கமாக கேட்க

" கோபமெல்லாம் இல்லை… வருத்தம் தான்… என் புருஷன் கூட சேர்ந்து நீயும் என்னை ஏமாத்திட்டியே …" சொல்லும் போதே கண்ணீர் வழிய அவளது கண்ணீரை துடைத்து விட்டு " யாரும் யாரையும் ஏமாத்தல சஹிம்மா!.. சந்தர்ப்பங்கள் கொஞ்சம் அப்படி அமைஞ்சிருச்சு… ஒவ்வொரு சூழ்நிலையும் ஒருத்தருக்கு சாதகமாகவும் இன்னொருத்தருக்கு பாதகமாகவும் அமையலாம் …. அந்த மாதிரி தான் இப்ப உனக்கும் மாப்பிள்ளைக்கும் அமைந்திருக்கு… கொஞ்சம் யோசி சஹி!" பொறுமையாக எடுத்து கூறிவிட்டு அவளது முகம் பார்த்தான்….

" அதுக்கு எதுக்கு என்னை லவ் பண்ற மாதிரி நடிச்சி ஏமாத்தணும்… என்னோட லவ் கானல் நீரைப் போல ஆகிருச்சு…. நம்பி ஏமாத்துனதுக்கு உன் ப்ரெண்ட் அதுதான் என் புருஷன் பதில் சொல்லி தான் ஆகணும்…" விரைப்பாக சொல்லி முடிக்க ஜீவாவும் " உன் புருஷனை நீ கேட்காம வேற யாரு கேட்பா… அவன் சட்டையை பிடிச்சி சண்டை போடற உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு… முடிஞ்சா அவனைக் கேளு…" தன் போக்குக்கு அவளை உசுப்பேத்தி விட " நான் கேட்கறப்ப ஒழுங்கா மட்டும் செழியன் பதில் சொல்லல... அவனுக்கு இருக்கு" சொல்லிக் கொண்டே தனது ஷாலை உதறிவிட்டு உள்ளே சென்று விட்டாள் சஹி…

" டேய் மச்சான்.. என் தங்கச்சியை சமாளிக்க போய் உன்னை மாட்டி விட்டுட்டேன்டா… மன்னிச்சிக்கோ…" மானசீகமாக அபிஜித்திடம் மனதிற்குள் மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டிற்குள் சென்றான்.
*********************************************
 
Status
Not open for further replies.
Top