All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழிகளின் அருகினில் வானம் - கதை திரி

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க எல்லாரும்... மறுபடியும் ஒரு புதுக்கதையுடன் வந்து விட்டேன். கண்டிப்பா நம்புங்க இந்த கதையை சீக்கிரம் முடிச்சுடுவேன். வாரத்திற்கு கண்டிப்பாக இரு யூடியுடன் வருகிறேன். முதல் இரு கதைகளுக்கு தந்த ஆதரவை இந்த கதைகளுக்கும் தருமாறு கேட்டு கொள்கிறேன்.
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகளின் அருகினில் வானம்



அத்தியாயம் – 1

ஓம் அன்னையவள் கோசலையின் திருமகனே ஸ்ரீ ராமச்சந்திரா

செந்நிறத்தில் கீழ்வானம் சிவப்புடனே புலர்கின்றதே

தன்குரலில் சேவலினம் தாரணியை எழுப்பிடுதே

கண்மலர்கள் தான் மலர ஸ்ரீ வெங்கடேஷனே துயிலெழுவாய்..


என்று அதிகாலை 4 மணிக்கே அந்த வீடெங்கும் தமிழில் சுப்ரபாதம் ஒலித்து கொண்டிருந்தது. அதை கேட்டு கொண்டே மாடியிலிருந்து இறங்கி கொண்டிருந்தான் வெற்றிவேல் ஐபிஎஸ்.

அதே சமயம் அந்த வீட்டின் பூஜையறையில் இருந்து வெளிவந்தார் அந்த வீட்டின் மஹாலட்சுமி. அவரின் பெயர் கூட அதுவே. அதற்கேற்றவாறே அந்த அதிகாலை வேளையில் தலை குளித்து ஈர முடியின் நுனியில் சிறு முடிச்சிட்டு மஞ்சள் பூசிய அம்முகத்தில் நெற்றியில் குங்குமமும் திருநீறும் வீற்றிருக்க கைகளில் பூஜை செய்ததன் அடையாளமாய் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார் மஹாலட்சுமி.

படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த தன் மகனை இமை சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். எப்பொழுதும் கம்பீரமும் ஆண்மையின் இலக்கணமாய் இருப்பவனை இன்னும் மெருகேற்றி காட்டியது அந்த காக்கி உடை. தன் மகனை அவ்வுடையில் ரசித்து கொண்டிருந்தவரின் அருகில் வந்தார் அவரது துணைவரும் இவ்வீட்டின் தலைவருமான சீனிவாசன்.

“மஹா உனக்கே கொஞ்சம் ஒவரா தெரியல. இந்த நேரத்துல சுப்ரபாதம் போட்டு ஊரையே எழுப்பி விட்டுட்டு இருக்க.”

அவரின் கேள்வியில் “நான் பூஜை பண்றது உங்களுக்கு ஊரையே எழுப்பி விடுற மாதிரி தெரியுதா..” என்று கேட்டார்.

அதற்குள் அவர்களின் அருகினில் வந்த வெற்றிவேல் “ம்மா… அப்பா சொல்றதுல என்ன தப்பு இருக்கு?? நான் போறதே என்கவுன்ட்டருக்கு நாலு பேர கொலை பண்ண போறேன். நீங்க என்னடானா மைக்செட்ல அந்த நாய்களுக்கே கேட்கற மாதிரி இப்படி சுப்ரபாதம் போட்டு இருக்கீங்க..” என்றான்.

“அப்படி சொல்லுடா என் மகனே..” என்றார் அவனின் தந்தை.

இருவரையும் முறைத்து பார்த்த மஹா “என் பையன் செய்ய போற காரியம் எல்லாம் வெற்றியா முடியனும் அதுக்கு தான் இந்த பூஜை எல்லாம். நீ என்ன நல்லவங்களையா கொலை செய்ய போற தப்பு செஞ்சவங்களை கேடு கெட்டவனங்களை தானே அழிக்க போற அதுக்கு பேரு கொலை செய்யறது இல்லை வதம் செய்யறது தான் சரியா. அந்த கடவுள் நேரடியா செய்யாம என் பையன் மூலமா செய்ய வைக்கிறார். அதுக்கு அவர் ஆசிர்வாதமும் வேணுமல்ல.” என்றார் சிலாகித்து.

அவரின் பதிலில் இருவருமே சிரித்து கொண்டனர்.

“அம்மா நீங்க என்ன வேணா பேர் வச்சுக்குங்க ஆனா இந்த டைம்ல எதுக்கு எழுந்து இப்படி தலைக்கு குளிச்சு உங்க ஹெல்த்த கெடுத்துக்குறீங்க. ஏற்கனவே வீசிங் இருக்கு உங்களுக்கு.” என்றான் வருத்தமாக.

“அதெல்லாம் ஒன்னுமில்ல. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எழுந்து குளிக்கறதுனால ஒன்னுமாகாது. மாத்திரை எல்லாம் கைவசம் வச்சுருக்கேன்.” என்றவர் தனது கைகளில் இருந்த தட்டில் இருந்து திருநீறு எடுத்து தனது மகனின் நெற்றியில் பூசிவிட்டார்.

“உங்க ஹெல்த்துக்கு ஒன்னும் ஆகலைனா சந்தோஷம் தான்.” என்றவன் மறக்காது அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். அதே போல் தனது தந்தையிடமும் ஆசிர்வாதம் வாங்கினான்.

அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தவன் தனக்காக காத்திருந்த வாகனத்தில் ஏறி சென்றான்.

செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்த சீனிவாசனோ தனது மனைவியில் தோளில் கை வைத்து “மஹா நீ வெளியே சொல்லலைனாலும் உன்னோட பயம் எனக்கு புரியுது. இந்த மாதிரி நேரத்துல அவனுக்கு எதுவும் ஆக கூடாதுனு பயப்படுற அப்படி தானே. அவனுக்கு எதுவும் ஆகாது.” என்றார் தனது மனைவியை புரிந்து கொண்டு.

அவரது கண்கள் சிறிது கலங்கியது. “இந்த மாதிரி சமயத்துல மட்டும் இல்லைங்க தினமும் அவன் வேலைக்கு போகும் போது எனக்கு பயமா தான் இருக்கும். ஆனா அவன் இந்த வேலையை ரொம்ப விரும்பி செய்யறான். என் பையனோட ஆசைய என்னால தவிர்க்க முடியல. அதனால வேலையையும் விட சொல்ல முடியல. என்ன இருந்தாலும் என் பையன் கடமை தவறாத ஒரு போலீஸ் தானே அதுல எனக்கு எப்பவுமே ஒரு பெருமை தான்..” என்றார் சிரித்து கொண்டே தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே.

“சரி.. சரி… உன் பையன பத்தி பேச ஆரம்பிச்சா கனவுலகத்துக்கு போயுடுவயே.. எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்கறேன். ஒரு ஏழு இல்லனா எட்டு மணிக்கு சூடா காபியோட எழுப்பி விடு..” என்றார் தங்களது அறையை நோக்கி.

“ஹலோ எங்க போறீங்க… சின்ன பையன் அவனே ஒரு கப் டீ கூட குடிக்காம நாலு மணிக்கே எழுந்து போறான் உங்களுக்கு என்ன??”

“ஏய் அவனுக்கு அது வேலை அதனால போறான். எனக்கு என்ன வேலை இருக்கு இந்நேரத்துக்கு.. யூ நோ ஐ அம் இன் ரிடையர்மன்ட். இந்த வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிக்க வேண்டாமா…”

“இந்த வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிக்கனும்னா நோய் நொடி இல்லாம இருக்கனும். இப்பவே உங்களுக்கு சர்க்கரை வியாதி பார்டர்ல இருக்கறதா டாக்டர் சொன்னாரு. அதனால ஜாகிங் போய்ட்டு வாங்க..”

“என்னது 4 மணிக்கு ஜாகிங்கா… இந்த நேரத்துல காக்கா குருவி கூட எழுந்திருக்காது. இப்ப போக சொல்ற.. எனக்கு ரொம்ப குளிரடிக்குது மா… நான் கொஞ்ச நேரம் போய் தூங்கறேனே..”

“அதெல்லாம் முடியாது. போங்க போய் பல் விளக்கிட்டு வாங்க…”

“வந்த உடனே காபி கொடுப்பயா..” என்றார் ஆர்வமாக…

“காபியா.. அதெல்லாம் இல்ல.. யோகா பண்ணுங்க.. அதுக்கப்புறம் அஞ்சு மணிக்கு மேல ஜாகிங் ஒரு மணி நேரம் போய்ட்டு வாங்க வந்த பின்னாடி சத்து மாவு கஞ்சி தர்ரேன்..” என்றார் அசால்ட்டாக.

“என்னது யோகா, ஜாகிங்க் அதுக்கப்புறம் சத்து மாவு கஞ்சியா…” என்று முகம் சுளித்தவர் “மஹா.. மஹா ப்ளீஸ் இப்ப ஜாகிங் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் காபி கொடுக்கறயா…” என்றார் கெஞ்சுதலாக.

“யாராவது ஜாகிங் போறதுக்கு முன்னாடி காபி குடிப்பாங்களா???”

“அதெல்லாம் நான் குடிப்பேன்.”

“நீங்க குடிப்பீங்க.. ஆனா யார் போட்டு தருவாங்க.. நானெல்லாம் போட மாட்டேன்.”

“நீ போடாட்டி என்ன??? எனக்கு காபி போட தெரியாதா??”

“அதுக்கு பால் வேணும்.. பால் இல்ல.. பால் வாங்கனும்னா ஜாகிங் போய் தான் ஆகனும்”

“ஐயோ…” என்றார் தலையில் கைவைத்த படி…

“ஹலோ இப்படியே எவ்வளவு நேரத்துக்கு நிக்குற மாதிரி ஐடியா… போங்க.. போய் நான் சொன்ன மாதிரி செய்யுங்க..”

“வேற வழியே இல்லையா மஹா மா…”

தனது தலையை இட வலமாக ஆட்டியவர் உதட்டை பிதுக்கி காட்டினார்.

அவரின் பதிலில் தலையை தொங்க போட்டு கொண்டு குளியலறை நோக்கி சென்றார் சீனிவாசன்.

அவரை கண்டு சிரித்து விட்டு நகர்ந்தார் மஹாலட்சுமி.

சீனிவாசன் பொதுத்துறை வங்கியில் மேலாளராக இருந்து பணியிலிருந்து விடுபட்டவர். மஹாலட்சுமி பொறுப்பான ஒரு குடும்பத்தலைவியாக இருந்து குடும்பத்தை வழிநடத்தி கொண்டிருப்பவர். வெற்றிவேல் பிறந்த பின்னால் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் கருத்தரித்தார் அந்த சமயம் மாடியிலிருந்து இறங்கி வரும் பொழுது கால் தவறி விழுந்து அவருடைய கற்பப்பையில் அடிபட்டதன் விளைவாக கருவும் கலைந்து கற்பப்பையை எடுக்க வேண்டியதாயிற்று. ஆசைக்கு ஒரு மகள் இல்லையே என்ற கவலை இன்றளவும் இருவருக்குமே உண்டு.

வெற்றிவேலிற்கு ஓரளவிற்கு எல்லாம் புரிந்த பின்பு அவனும் தனது தாயை வாடாமல் பார்த்து கொண்டிருக்கின்றான். அவர்கள் குடும்பத்தில் இதுவரைக்கும் யாரும் போலீஸ் துறையில் பணிபுரிந்தவர்கள் இல்லை. வெற்றிவேல் ஐபிஎஸ் படிக்கின்றேன் என்று வந்து நின்ற பொழுது ஒரே மகனின் ஆசைக்கு இணங்கவும் முடியாமல் அதே சமயம் அவனது ஆசையை நிறைவேற்றவும் முடியாமல் தடுமாறி நின்று பின்பு மகனின் ஆசை தான் முக்கியம் என்று தங்களது பயத்தை வெளியே காட்டி கொள்ளாமல் சம்மதித்தனர்.

அவர்களின் பயத்தை வெளியே சொல்லாமால் தனது ஆசைக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் ஒத்து கொண்டதை நினைத்து சந்தோஷம் இருந்தாலும் ஒரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது. அதனாலயே பெரிய பெரிய ஆட்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான கேஸ்களை பற்றி வீட்டிற்கு தெரியாமல் பார்த்து கொள்வான்.

ஜீப்பில் சென்று கொண்டிருந்த வெற்றிவேலோ அவனுக்கு கீழே வேலை செய்யும் இன்ஸ்பெக்டருக்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தான்.

“எல்லாரும் எங்க இருக்கீங்க சேகர்?”

“நானும் இன்ஸ்பெக்டர் மதிவாணனும் ஸ்பாட்டுக்கு வந்துட்டோம் சார். அந்த இடம் முழுவதும் இப்ப நம்ம கன்ட்ரோல் தான் சார் இருக்கு..”

“குட்… நான் இன்னும் பத்து நிமிஷத்துல ரீச் ஆகிடுவேன்.”

ஊருக்கு ஒதுக்கு புறமாக காடுகள் நிறைந்த அந்த இடத்தில் ஒரு ஓட்டு வீடு இருந்தது. அந்த வீட்டினுள் பத்து பேர் சாப்பிடும் சாப்பாட்டினை ஒருவனே சாப்பிட்டு உடம்பினை வளர்த்து கொண்டவன் போல் உடலமைப்பை கொண்ட ஐந்து பேர் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர்ந்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். அங்கிருந்த மற்றொரு அறையினுள் ஐந்து வயதுடைய ஒரு ஆண் குழந்தை மயக்கத்துடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

“டேய் பாஸ் வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்குது. அதுக்குள்ள ஒரு கட்டிங் போடலாமா… நேத்து இந்த பையன கடத்துனதுல இருந்து இன்னும் தண்ணி அடிக்காம ஒரு மாதிரி இருக்குடா..” என்றான் ஒருவன்.

“ஆமாடா ஒரே ஒரு கட்டிங் மட்டும் போட்டுக்கலாமா..” என்றான் மற்றொருவன்.

“ஏய்.. இந்த மாதிரி வேலைல இருக்கறப்ப தண்ணி போதை எதுவும் இருக்க கூடாதுனு பாஸ் சொல்லி இருக்காரல்ல.. அது நமக்கும் டேஞ்சர் தெரியாதா உனக்கு. போலீஸ் மட்டும் மோப்பம் புடிச்சு வந்துருச்சுனா தப்பிச்சு போகனும். அப்படி போலீஸ் வரலைனாலும் பாஸ் வந்துட்டா பிரச்சனை நமக்கு தான். அப்புறம் அடுத்த டைம் இந்த மாதிரி வேலை தரமாட்டாரு.. நமக்கு வருமானம் தர்றதே இந்த மாதிரி கடத்தல்ல தான். அவர் வந்து இந்த பையன கூட்டிட்டு போற வரைக்கும் எதுவும் இல்ல அமைதியா இரு..” என்றான் மூன்றாமவன்.

“போடா பாஸ் வர்றதுக்கு இன்னும் மூணு நாலு மணி நேரமாவது ஆகும். அதுவும் இல்லாம அந்த பையன் தூங்கிட்டு தானே இருக்கான்.” என்று முதலாமவன் பேசி கொண்டிருக்கும் போதே கதவை சடாரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அவன். அவன் பெயர் காலிங்கராயன். மற்றவர்களுக்கு ராயன். அடியாட்களுக்கு ராயன் அண்ணா.

“என்னடா ஏதோ பெரிய விவாதம் நடந்துட்டு இருக்கும் போல இருக்கு..” என்று அங்கே இருந்த மர இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தான்.

“அதெல்லாம் ஒன்னுமில்லனா… சும்மா தான் பேசிட்டு இருந்தோம்..”

“ஒன்னுமில்லனா நல்லது தான்..” என்றவன் “எங்கடா அந்த சின்ன பையன்?”

“தோ.. அந்த ரூம்ல மயக்கத்துல இருக்காண்ணா…”

“ம்… மயக்கம் தெளிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்.”

“இன்னும் நாலு மணி நேரம் ஆகும்னா…”

“ம்… சரி நான் கொண்டு போய் சேத்துற வரைக்கும் தாங்குனா போதும்.”

இதுவரை அங்கே இருந்த ஐவரில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறிய ஒருவன் மட்டுமே ராயனுக்கு பதிலளித்து கொண்டிருந்தான். மற்றவர்கள் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்.

அதில் ஒருவன் மட்டும் வாயை திறந்து அண்ணா இந்த சின்ன பையன கடத்தி நமக்கு என்னனா பயன். காசும் வாங்க மாட்டீங்குறீங்க..” என்று அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டான்.

அதை கேட்ட ராயன் கெட்ட வார்த்தைகளில் அவனை அர்ச்சித்து “சொல்ற வேலையை மட்டும் நீ செஞ்சினா போதும். இந்த மாதிரி தேவையில்லாத கேள்வி கேட்ட அப்புறம் கேள்வி கேட்கறதுக்கு நீ உயிரோட இருக்க மாட்ட.. என்றான்.

அவனின் பதிலில் அனைவரும் அமைதியாகினர்.

இவர்கள் பேசி கொண்டிருக்கும் அதே சமயத்தில் வெளியில் சேகர் மற்றும் இரு போலீஸார் அவர்களது இடத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். வெற்றிவேலோ அவனது வாகனத்தை ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தி வைத்து விட்டு சிறு சத்தம் கூட கொடுக்காமல் அவர்களின் அருகினில் வந்தான்.

“என்ன சேகர் எல்லாம் ஒகே தானே நம்மளோட ப்ளான் படி எல்லாம் பண்ணிடலாம் தானே..”

“அதெல்லாம் ஒகே சார். ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னே காலிங்கராயன் உள்ளே நுழைஞ்சான் சார். எதுக்கு என்னனு தெரியல.. இன்னும் அவன் வெளிய வரல…”

“ம்… அவன் சம்பந்தப்பட்டிருக்கானா விஷயம் ஏதோ பெரிசுனு தான் நினைக்குறேன். பணத்துக்காக அந்த பையன கடத்தி இருந்தாங்கனா இந்நேரம் வரைக்கும் ஒரு போன் கூட பண்ணாமயா இருப்பானுங்க இதுல வேற என்னமோ இருக்குது சேகர். பட் எதுவாயிருந்தாலும் நமக்கு அந்த பையன காப்பாத்தறது தான் முத வேலை. அது எவன் உள்ளே இருந்தாலும் பரவாயில்ல நம்ம ப்ளான் படி எல்லாம் நடக்கனும் ஒகே..”

“ஓகே சார்..”

தன்னோடு வந்திருந்த காவலர்களையும் அந்த இடத்தை சுற்றி வளைக்க சொன்னான்.

அதே சமயம் உள்ளே இருந்த ராயனோ அந்த சின்ன பையனை தூக்கி கொண்டு வந்து வண்டியில் ஏற்றினான்.

அவன் பின்னேயே அவனை தொடர்ந்து மற்றவர்களும் வந்தனர்.

அதை கவனித்த வெற்றிவேலோ தன்னுடன் வந்தவர்களுக்கு கண்காட்டி விட்டு அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தான்.

அவர்கள் சுட ஆரம்பித்ததும் ஒரு நொடி அதிர்ந்து தங்களது துப்பாக்கிகளை எடுத்து வெற்றிவேல் மற்றும் அவர்களது ஆட்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் சுற்று இருந்த மரங்களுக்கு இடையே ஒளிந்து இருந்ததால் குறிபார்த்து சுட முடியாமல் குத்து மதிப்பாக சுட ஆரம்பித்தனர்.

பாதுகாப்பிற்காக மீண்டும் வீட்டிற்குள் ஓட முயன்றவர்களை நோக்கி போலீஸார் சுட ஆரம்பித்ததில் அவர்கள் ஒவ்வொருவராக மடிந்தனர்.

ஆனால் ராயன் மட்டும் கொஞ்சம் உஷாராகி தனது வாகனத்தில் ஏறி அந்த இடத்தை விட்ட புறப்பட பார்த்தான். ஆனால் வெற்றியோ அவனது கைகளில் சுட்டு அவனை வண்டி ஓட்டவிடாமல் செய்து மீண்டும் காலில் சுட்டான் அதில் பலத்த காயமடைந்தவனால் மேலும் முன்னேற முடியவில்லை.

அவனது அருகினில் வந்து அவனது தலையில் தனது துப்பாக்கியினை திருப்பி ஒரு அடி அடித்தான். அதில் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து விட்டான் ராயன்.

அதன் பிறகு அந்த சிறுவனை மீட்டு பாதுகாப்பாக அவனது பெற்றோரிடம் கொடுத்தவன் பணத்திற்காக அவர்களை கடத்தினார்கள். கடத்தினவர்களை அச்சிறுவனை மீட்கும் சமயத்தில் நடந்த கலவரத்தில் சுடவேண்டியாதாகி விட்டது என்றும் அவர்களின் புகைப்படம் முதற்கொண்டு அனைத்தையும் செய்தி மற்றும் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தான்.

ராயன் இதில் சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் தெளிவாக மறைந்திருந்தனர்.

கமிஷனரின் அலுவலகத்தில்,

“ஏன் வெற்றி ராயன் இந்த கிட்னாப்பிங்க் கேஸ்ல சம்பந்தப்பட்டிருப்பத சொல்ல வேணாம்னு சொன்னீங்க..”

“சார், எனக்கு என்னவோ இது பணத்துக்காக கடத்தப்பட்ட விஷயமா தெரியல. அந்த இடத்துல ராயன பார்த்த உடனேயே இத புரிஞ்சுகிட்டேன். அந்த பையன கடத்தனது மட்டும் தான் அந்த ரவுடி கும்பல் ஆனா கடத்த சொன்னது இந்த ராயனா தான் இருக்கனும். நாங்க அவங்கள டார்கெட் பண்ணும் போது அவன் இந்த பையன அவன் கார்ல கொண்டு போக பார்த்தான். அதுமட்டுமில்லாம அவன இப்ப கைது செய்து இருக்கோம்னு மீடியாவுக்கு தெரிஞ்சா நமக்கு தான் அரசியல்வாதி சைட்ல இருந்து நிறைய ப்ரஷர் கொடுப்பாங்க. அவன வெளியவும் எடுத்து கேஸ ஒன்னுமில்லாம பண்ணிடுவாங்க அதனால அவன் எப்படி வெளிய தெரியாம இத பண்ணினானோ அப்படியே இருக்கட்டும் சார். அவன யாருக்கும் தெரியாம வச்சு விசாரிக்கலாம்.”

“ம்… உங்க யூகமும் கரெக்ட் தான்.. ஒகே வெற்றி விசாரியுங்க.. இது ஒரு சீக்ரெட் ஆப்ரேஷனாவே இருக்கட்டும். எங்க எப்படி இருந்து ஆரம்பிக்கறதுனு நீங்க தான் முடிவு பண்ணனும்.” என்றார் கமிஷனர்.

“தேங்க்யூ சார்..” என்றவன் எழுந்து நின்று சல்யூட் அடித்து விட்டு வெளியேறினான்.





இக்கதைக்கான கருத்து திரி :

https://www.srikalatamilnovel.com/community/threads/விழிகளின்-அருகினில்-வானம்-கருத்து-திரி.2996/
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 2

எல்லாம் முடிந்து வீட்டிற்குள் நுழையும் பொழுதே அவ்வீட்டின் சமையலறையில் இருந்து நெய்யின் மணம் வீசியது.

“அம்மா… அம்மா..”

“இதோ இருடா வர்ரேன்.. ஏன் உள்ள நுழைஞ்ச உடனேயே என்ன ஏலம் போடுற??”

“அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு என்ன விசேஷம் வீட்டுக்குள்ள நுழையும் போதே நெய் வாசம் ஆள தூக்குது. என்ன ஸ்வீட் செஞ்சுருக்கீங்க???”

“வாசம் வருதா… உனக்கு பிடிக்குமேனு பால் பாயாசம், அவல் கேசரி அப்புறம் ரவா லட்டு எல்லாம் பண்ணி இருக்கேன்.”

“இப்ப எதுக்கு இத்தன ஸ்வீட் செஞ்சு வச்சுருக்கீங்க”

“அப்புறம் இன்னைக்கு எல்லா நியூஸ் சேனலும் உன்ன பத்தி தானே பேசிட்டு இருக்காங்க. அந்த ரவுடிகள சுட்டு அந்த பையன காப்பாத்தினனு அத கொண்டாட வேண்டாமா அதுக்கு தான்.”

“அம்மா…” என்று சலித்து கொண்டான்.

“மஹா ரவைய நெய்யுல தானே வருத்த. அப்புறம் கேசரி, பாயாசம் எல்லாத்துலயும் முந்திரி, பாதாம் எல்லாம் போட்டு இருக்க தானே.” என்று முக்கியமான கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார் சீனிவாசன்.

தாயும் மகனும் ஒருசேர அவரை முறைத்தனர்.



இருவரின் முறைப்பை கண்டு “எதுக்கு இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து முறைக்குறீங்க. எல்லாம் கரெக்டா போட்டியானு தானே கேட்டேன். இல்லனா டேஸ்ட் இருக்காது. அதான் ஒரு டவுட்..” என்று உள்ளிறங்கிய குரலில் வினவினார்.

“ஏன் இப்ப சுகர் மட்டும் தான் வந்துருக்கு கூடவே கொழுப்பும் அதிகமா வரணுமா… உங்களுக்கு யார் இப்ப இந்த் ஸ்வீட் எல்லாம் தர்ரேனு சொன்னாங்க..” என்று வினவினார் அவரின் மனைவி.

“மஹா என்ன சொல்ற.. நீ செய்ய ஆரம்பிச்சதுல இருந்து இந்த இடத்த விட்டு அசையாம அந்த வாசனைய பிடிச்சுட்டு உட்கார்ந்து இருக்கேன். அப்பவே கிச்சனுக்குல்ள வந்துருப்பேன் டேஸ்ட் பார்க்க. நீ முதல்ல உன் பையனுக்கு தான் கொடுப்பேனு சொல்லுவ அதனால் தான் அவன் வரும் வழிய பார்த்துட்டு ஹால்லயே உட்கார்ந்துருக்கேன். என்ன நீ பொசுக்குனு இப்படி தரமாட்டேனு சொல்லிட்ட…”

“என்ன விளையாடுறீங்களா??? அதெல்லாம் முடியாது. எல்லாம் என் மகனுக்கு மட்டும் தான்.” என்று கூறி சமையலறையின் உள்ளே சென்றவர் கொஞ்சம் பெரிய ஒரே அளவிலான மூன்று கண்ணாடி பாத்திரத்தில் தான் செய்த இனிப்புகளையும் அதை சுவை பார்ப்பதற்கான சிறிய ஸ்பூனையும் ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தார்.

அதை பார்த்த சீனிவாசனுக்கோ நாவில் எச்சில் ஊறி தனது கண்களில் அதை சாப்பிடும் ஆசையை வெளிக்காட்டினார். வெற்றியோ ஐயோ என்று தனது நெஞ்சில் கைவைத்து கொண்டு கண்களில் அதிர்ச்சியை காட்டினான்.

“இந்தாப்பா சப்பிடு”

“ஐயோ அம்மா இவ்வளவா???”

“கொஞ்சமா தாண்டா இருக்கு சாப்பிடு..”

“என்னால முடியாதுமா…”

தன் மகனுக்கென்று ஆசை ஆசையாய் செய்த இனிப்பை உண்ண மாட்டேன் என்று கூறியதும் அவரது முகம் சுருங்கியது.

அதை பார்த்த வெற்றியோ “ஐயோ அம்மா… எதுக்கு இப்ப முகம் ஃப்யூஸ் போன பல்பாட்டம் ஆகுது.. இது எல்லாத்தையும் முழுசா சாப்பிட மாட்டேனு தான் சொன்னேன் தவிர சாப்பிடவே மாட்டேனு சொல்லலயே..“ என்றவன் எல்லா இனிப்புகளையும் எடுத்து இரண்டு மூன்று வாய்கள் சாப்பிட்டான்.

“போதும் மா… இப்ப உங்களுக்கு ஹாப்பியா??”

“டேய் இன்னும் கொஞ்சம் சாப்பிடு டா..”

“போதும் மா… ரொம்ப திகட்டும். இன்னும் சாப்பிட்டா அப்பா மாதிரி எனக்கும் சுகர் வந்துரும்.”

“அதெல்லாம் ஒன்னும் வராது. நீ தான் டெய்லியும் உடற்பயிற்சி செய்யறயல்ல.. உனக்கு ஒன்னும் வராது. நீ என்ன உங்க அப்பா மாதிரி சும்மா தின்னுட்டு தின்னுட்டு தூங்கறயா…” என்று அவரது கணவனை வாரினார்.

“இங்க பாரு மஹா உன் பையன புகழ்ந்து பேசறதுனா பேசு அதுக்காக என்ன மட்டம் தட்டாத.. நான் முப்பத்தைஞ்சு வருஷமா வேலை செஞ்சுட்டு இப்ப ஒய்வா இருக்கேன். ச்சா.. ரிட்டையர்டானா யாருமே என்ன மதிக்க மாட்டேங்குறாங்க…”

“அம்மா… சும்மா சும்மா அப்பாவ கலாய்க்காதீங்க.. இங்க பாருங்க ரொம்ப ஃபீல் பண்றாரு.”

“ஆமா உங்க அப்பா நான் சொன்னதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிட்டு இருக்க மாட்டாரு. இப்ப இந்த ஸ்வீட் தருவனா தரமாட்டனானு நினைச்சுட்டு இருப்பாரு.”

“விடுங்க மா.. பாவம் அப்பா.. கொஞ்சமா கொடுங்க ஒன்னும் தப்பில்ல… ஸ்வீட் அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக்கலாம்.. கொடுங்க.” என்றான் தனது தந்தைக்காக.

“தேங்கஸ் மகனே… நீ சொன்னா தான் உங்க அம்மா கேட்பா…”

“சரிமா.. நான் போய் குளிச்சுட்டு வர்ரேன். சாப்பாடு எடுத்து வைங்க.” என்றவன் தனது அறை நோக்கி சென்றான்.

அடுத்த நாள், அதற்கடுத்த நாட்களும் அவர்களின் வீடே கலகலப்பாக சென்று கொண்டிருந்தது.

இவ்வாறு ஒரு வாரம் கடந்த நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் வெற்றிவேல் நின்று கொண்டிருந்தான்.

“என்ன வெற்றி ராயன் ஏதாவது வாயை திறந்தானா??” என்று கமிஷனர் தியாகு அவனிடம் விசாரித்து கொண்டிருந்தார்.

“இல்ல சார் அவன் எதுக்குமே வாய திறக்க மாட்டேங்குறான் எதுக்கு அந்த பையன கடத்தினானு???”

“ஏதாவது செஞ்சு அவங்கிட்ட இருந்து உண்மைய வரவைங்க. ரொம்ப நாள் அவன அடச்சு வச்சுருக்க முடியாது. அவன் பின்புலம் ரொம்ப பெருசு. இதுவரைக்கும் நம்மளுக்கு அவன காணோம் கண்டுபிடியுங்கனு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்காம இருக்கறாங்கனா இன்னும் அவங்களுக்கு ஏதும் தெரியலனு தான் அர்த்தம். அவன் அண்ணன் யாருனு தெரியுமல்ல மத்திய தொழில்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன். அவன் இவன விட கேடி. சீக்கிரமா ராயன் கிட்ட இருந்து விஷயத்த கறக்குற வழிய பாருங்க..”

“கண்டிப்பா சார்… எவ்வளவு சீக்கிரம் உண்மைய அவன் வாயில இருந்து வரவைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்குறேன்.” என்றவன் அவரிடம் விரைப்பாக சல்யூட் அடித்து விட்டு நகர்ந்தான்.

வெற்றி வெளியே வந்தவுடன் அவனுடன் அவனுக்காக காத்திருந்த சேகர் “சார் ராயன் சொன்னதெல்லாம் கமிஷனர்கிட்ட ரிப்போர்ட் பண்ணிடலாமா???” என்றான் அவனுடன் நடந்து கொண்டே.

“இல்ல.. இல்ல சேகர் இப்போதைக்கு ஏதும் சொல்ல வேண்டாம். அவன் சொன்ன விஷயத்த பார்க்கும் பொழுது பெரிய ஆளுங்க சம்பந்தப்பட்டிருப்பாங்களோனு ஒரு டவுட் இருக்கு. ஆனாலும் அவன் அதைய பத்தி வாய தொறக்கவே இல்லையே. எல்லாமே கலெக்ட் பண்ணிட்டு தான் ரிப்போர்ட் பண்ணனும். அதுவரைக்கும் உங்கள என்னய தவிர இந்த விஷயம் வெளிய போக கூடாது. ஒகே”

“ஓகே சார்.”

அவர்கள் சென்றது என்னவோ மறுபடியும் அவனை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு தான்.

அடுத்த நாள் காலையில் சென்னை விமான நிலையம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தொண்டர்கள் புடை சூழ வாழ்க வாழ்க என்ற கோஷங்களுடன் மாலை மரியாதையுடன் வெளியே வந்தார் அமைச்சர் ராதாகிருஷ்ணன். அவரை நோக்கி பத்திரிக்கையாளர் கூட்டம் வந்தது.

“சார்.. உங்களோட வெளிநாட்டு பயணம் எப்படி இருந்துச்சு?” என்றார் ஒரு பத்திரிக்கையாளர்.

“என்ன தம்பி நான் ஏதோ ஊரை சுத்தி பார்க்க போன மாதிரி பேசுறீங்க. நான் அங்க போனது தொழில்துறை மாநாட்டுல கலந்துக்க தான் அதோட பல வெளிநாட்டு கம்பெனிகள இந்தியாவுல முதலீடு பண்ண சொல்ல அவங்களோட பேச்சு வார்த்தை நடத்த தான் போனேன்.”

“அதில்ல ஸார் உங்களோட உங்க குடும்பமும் வந்ததா கேள்விப்பட்டோம் அதான்.”

“தம்பி என் குடும்பம் என் கூட வரல அவங்க எனக்கு முன்னாடியே அங்க சுற்றுலா போயிருந்தாங்க. நானும் அங்க போனப்ப அவங்கள சந்திச்சேன் கொஞ்சம் நேரம் என் குடும்பத்து கூட செலவிட்டேன் அவ்வளவு தான்.”

“என்ன சார் எல்லாரும் ஒரே குடும்பம் தானே அப்புறம் உங்களுக்கு தெரியாம எல்லாம் நடந்திருக்குமா??”

“அமைச்சர் குடும்பம்னா சுற்றுலா போக கூடாதுனு விதி இருக்கா என்ன??? அதே சமயம் அவங்க என் சொந்த செலவுல தான் அங்க போனாங்களே தவிர அரசாங்க செலவுல இல்ல.. புரியுதா. வேற ஏதாவது அரசியல் சம்பந்தமாவோ இல்ல அங்க நடந்த மீட்டிங்க் சம்பந்தமா ஏதாவது கேட்கனும்னா கேளுங்க. அத விட்டுட்டு பெர்ஷனல் விஷயம் கேட்காதீங்க.” என்றவரை மற்ற செய்தியாளர்கள் அங்கு நடந்த கூட்டத்தை பற்றி கேள்வி கேட்டனர்.

அனைத்துக்கு பதில் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து தனது காரில் ஏறி அமர்ந்தார் ராதாகிருஷ்ணன். அவரின் காரியதரிசி மோகனும் அதே காரில் முன்னே ஏறி அமர்ந்தார்.

“என்ன பார்த்து இத்தன கேள்வி கேட்ட அந்த பத்திரிக்கையாளனோட எல்லா டீடெய்ல்ஷும் இன்னும் அரை மணி நேரத்துல எனக்கு வந்தாகணும் ஒகே.”

“ஓகே சார்.” என்ற மோகன் அவர் கூறியதை கேட்பதற்காக யாருக்கோ அழைப்பு விடுத்து பேசினான்.

அவன் பேசி முடித்ததும் “என்ன ராயன பத்தி ஏதும் விஷயம் தெரிஞ்சுதா??”

“இல்ல சார்.. நம்ம பசங்க எல்லா பக்கமும் தேடிட்டானுங்க. எங்கேயும் கிடைக்கல.”

“ம்…” என்று யோசித்தவர் “அவன் கடைசியா எங்க போனானு யாருக்காவது தெரியுமா…” என்றார்.

“இல்ல சார். பசங்க கூட வர்ரேனு சொன்னதுக்கு கூட வேண்டாம் ஒரு அரை மணி நேரத்துல நானே வந்துடறேனு சொல்லிட்டு போயிருக்கார்.”

“சரி ஏதாவது ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலமா தேடி பார்க்கலாமா…”

“ஸார் நான் சொல்றேனு தப்பா நினைக்காதீங்க. நம்ம டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமா தேடறதுக்கு பதிலா ஏன் கமிஷனர்ட்ட சொல்லி அன் அஃபீஸியலா தேட கூடாது.”

“யாரு நம்ம தமிழ்நாட்டு போலீஸா அவனுங்க இன்னும் நான் யாரு என்னென்ன தொழில் பண்றேனு கண்டுபிடிக்காம இருக்கானுங்க இதுல என் தம்பிய வேற தேடி கண்டுபிடிச்சுருவானுங்களா..” என்றான் நக்கலாக.

“சார். எதுக்கும் முயற்சி பண்ணி பார்க்கலாமே நீங்க மத்திய தொழில்துறை அமைச்சர் வேற அதனால சீக்கிரமா கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கல்ல…”

“ம்… ஏதோ சொல்ற சரி அந்த கமிஷனருக்கு போன் பண்ணு..”

சரி எனும் விதமாய் தலையாட்டியவன் அடுத்து கமிஷனருக்கு அழைத்தான்.

“ஹலோ… கமிஷனர் தியாகு பேசறேன்.”

“நான் ராமகிருஷ்ணன். மத்திய தொழில்துறை அமைச்சர் பேசறேன்.”

“குட்மார்னிங்க் சார். சொல்லுங்க ஏதாவது முக்கியமான விஷயமா.. நீங்களே கூப்பிட்டு இருக்கீங்க.”

“ஆமா… எனக்கு உங்க டிபார்ட்மென்ட்னால ஒரு காரியம் ஆகனும்.”

“சொல்லுங்க சார்.” என்ற தியாகுவிற்கு அவர் கூறப்போகும் விஷயம் முன்பே தெரியும் ஆனாலும் எதுவுமே தெரியாதது போல காட்டி கொண்டிருந்தார்.

“என் தம்பி ராயன ஒரு வாரமா காணல அவன் எங்க போனான் என்ன ஆனானு எனக்கு தெரியல. நானும் பத்து நாளா வெளிநாடு போயிருந்தேன் அதனால இங்க என்ன நடந்துச்சுனு தெரியல. நீங்க தான் உங்க டிபார்ட்மென்ட்ல இருக்கற திறமையான ஆட்கள வச்சு கண்டுபிடிச்சு தரனும்”

“கண்டிப்பா சார்.”

“இன்னொரு முக்கியமான விஷயம் இது யாருக்கும் வெளிய தெரிய கூடாது. என்னோட அரசியல் வாழ்க்கைய ரொம்ப பாதிக்கும். எனக்கு எதிரிங்க ரொம்ப அதிகம்.”

“ஒகே சார். நம்பிக்கைக்கு உரிய அதே சமயம் திறமையான ஒரு போலீஸ் ஆஃபிஸர நியமிக்கறேன் சார்”

“ம்… எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமோ என் தம்பிய கண்டுபிடியுங்க..” என்றவர் இணைப்பை துண்டித்தார்.

“எங்கடா ராயா சொல்லாம போன???” என்று புலம்பியவரின் கார் அவரது தம்பியின் வீட்டினுள் நுழைந்தது.

வெற்றி மற்றும் சேகர் இரண்டு பேரும் சென்ற வாகனம் சென்னையை தாண்டி ஒதுக்குபுறமான வளர்ந்து வரும் ஒரு பகுதியை சென்றடைந்தது.

ஆங்காங்கே வீடுகள் அமைந்திருந்தது. அங்கே பெரிய பங்களா போன்ற ஒரு பெரிய வீட்டின் முன்னே வாகனத்தை நிறுத்தி அதன் கேட்டை சேகர் திறக்க வண்டியை உள்ளே விட்டான் வெற்றி.

இருவரும் பூட்டியிருந்த அந்த வீட்டினுள் நுழைந்து அங்கே மாடிப்படியின் கீழே உள்ள அலமாரியை திறந்து அதன் கீழுள்ள படிக்கட்டில் இறங்கினர் வெற்றியும், சேகரும். அந்த படிகள் முடியும் தருவாயில் அறைக்கதவு ஒன்று இருந்தது. அதையும் சாவி கொண்டு திறந்து உள்ளே நுழைந்தவுடன் கதவின் இடது பக்கத்தில் பல்பை ஒளிர்விக்க கூடிய பொத்தானை அழுத்தினான். அதன் பயனாக இருளாக இருந்த அறையில் ஒளி பரவியது.

அறையின் நடுவே உள்ள ஒரு இருக்கையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயக்கத்துடன் அமர்ந்திருந்தான் ராயன். அவனுடைய வாயும் கட்டப்பட்டு இருந்தது. வெற்றியின் துப்பாக்கியின் விளைவாக அவனது கை மற்றும் கால்களில் இருந்த காயத்திற்கு மருந்திடப்பட்டு இருந்தது.

சேகர் அங்கே இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை திறந்து மயக்கத்தில் இருந்தவனின் முகத்தில் தெளித்தான். அந்த குளிர்ந்த நீரின் உதவியால் சற்று தெளிந்தவன் எதிரே இருந்த வெற்றியின் முகத்தை பார்த்தான்.

“நான் தான் எல்லாம் சொல்லிட்டேனே டா.. இன்னும் ஏன் என்னய கட்டி வச்சுருக்க? என் மேல கேஸ் போட்டு கோர்ட்டுக்கு கொண்டு போ.. அத விட்டுட்டு ஏன் இப்படி கட்டி வச்சுருக்க??”

“நீ சொன்னதெல்லாம் உண்மையா இருந்தா நான் உன் மேல கேஸ் போட்டு உள்ள தள்ள ஏற்பாடு பண்ணுவேன் ஆனா நீ இன்னமும் பொய் தானே சொல்ற?? முதல்ல காசுக்காக கடத்தினேனு சொன்ன அத நான் நம்பலைனதும் வெளிநாட்டுக்கு விக்கறதுக்கு ஆனா வாங்குறவுங்க என்ன செய்வாங்கனு தெரியாதுனு சொல்ற? இதுல வேற யாருமே சம்பந்தப்படலைனும் சொல்ற.. இதெல்லாம் நம்பும் படியாவா இருக்கு நீயே சொல்லு.”

“நான் சொல்றது உண்மை தான்.” என்று திக்கி திணறினான் ராயன்.

“சேகர் அவன் காயம் ஆறிடுச்சானு பாருங்க…”

அவனது காயத்தை கட்டவிழ்த்து பார்த்த சேகர் “ஒரளவிற்கு ஆறிடுச்சு போல சார்..” என்றான்.

“ம்… குட்..” என்றவன்.

“வாங்கிட்டு வந்துருக்கோமே சாப்பாடு அத குடுங்க. ஒரு வேளை சாப்பாடு மட்டும் போதும். இவன் உயிர் வாழணும் அதுவும் உண்மைய சொல்றதுக்காக மட்டுமே.” என்றவன் ராயனை பார்த்தான்.

இந்த ஒரு வாரமும் தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்திருந்தான். அவன் அன்று காயப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகே சிகிச்சை கொடுக்கப்பட்டது அதுவும் வெற்றிவேலால். வேறு யாருக்கும் அவன் இங்கிருப்பது தெரியாது. காயத்தின் உதிர போக்கு அதோடு ஒரு வேளை சாப்பாடு அளவான தண்ணீர், தனிமை, இருட்டு இவற்றின் காரணமாக சோர்ந்து காணப்பட்டான். அதனால் இவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற எண்ணமே இல்லாமல் இருந்தான்.

உணவை கண்டதும் வெறி பிடித்தவன் போல் உண்டான். உணவு உள்ளே சென்ற பின்பு சிறிது திடமும் தெளிவும் பிறந்தது. இவர்களிடமிருந்து எப்படியும் தப்பிக்க முடியாது என்று நினைத்தவன் “உங்க ரெண்டு பேருக்கு எவ்வளவு காசு வேணும்னாலும் தர்ரேன். என்னைய வெளிய விட்டுடங்களேன் டா..” என்றான் கெஞ்சுதலாக.

“என்ன கொஞ்சம் சாப்பிட்ட உடனே கொஞ்சம் தெளிவு வந்து யோசிக்க ஆரம்பிச்சுட்ட போலயே. இது நல்லதுக்கு இல்லையே” என்ற வெற்றிவேல் “சேகர்..” என்றான்.

அவனுடைய விழிப்பின் அர்தத்தை புரிந்து கொண்ட சேகரும் வெற்றியிடம் ஒரு ஊசியை நீட்டினான்.

அதில் பதறிய ராயனோ “டேய் என்னடா இது??” என்றான் அதிர்ச்சியாக.

“கொஞ்சமே கொஞ்சம் போதை மருந்து.”

“ஏய் எனக்கு இதெல்லாம் பழக்கமே இல்ல..”

“தெரியுமே நீ தான் உத்தமவில்லனாச்சே.. அதான் வில்லனுக்கு இந்த பழக்கம் இல்லாம இருக்க கூடாது பாரு” என்றவன் ராயனின் கைகளில் நரம்புகளினூடே அதை செலுத்தினான்.

“இனி நாங்க காலைல இதே நேரத்துக்கு வரும் வரை இப்படியே போதையிலேயே இரு.. நாளை சந்திப்போம்.” என்றவன் சேகருடன் வெளியேறி இருந்தான்.

“சார் இவனுக்கு ஏன் இப்படி ஒரு ட்ரீட்மென்ட் கொடுக்கறீங்க. அவனுக்கு மருந்தெல்லாம் போட்டு குணப்படுத்தினீங்க இப்ப போதை மருந்து கொடுத்திருக்கறீங்க.. ஏன்???”

“சேகர் உங்களுக்கு இவன பத்தி தெரியாது. முழுசா தெரியறப்ப இதெல்லாம் இவனுக்கு பத்தாதுனு சொல்லுவீங்க. நேரம் வரும் போது எல்லாம் சொல்றேன்.”

இருவரும் அலுவலகத்திற்கு வந்து வேறு சில வழக்குகளை பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தனர்.

சிறிது நேரத்தில் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அவரை சந்திக்கும்படி அழைப்பு வந்தது வெற்றிவேலுக்கு.

அடுத்த ஒரு மணி நேரம் கழித்து கமிஷனர் அறையில் அவரின் முன்பு நின்று கொண்டிருந்தான் வெற்றி.

“உட்காருங்க வெற்றி. உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசனும்.”

“சொல்லுங்க சார்.”

“காலைல மத்திய தொழில்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசனாரு. அவர் யாருனு உங்களுக்கு தெரியுமல்ல. ராயனோட அண்ணா. இன்னைக்கு தான் வெளிநாட்டுல இருந்து இங்க வந்திருக்கார். ராயன காணோம்னு அன் அஃபீஸியலா கம்ப்ளைன் கொடுத்திருக்காரு. என்ன பண்றதுனு யோசனையிலேயே இருந்தேன் காலைல இருந்து.”

“இதுல என்ன யோசனை சார். கண்டுபிடிச்சு தந்துடுவோம்.” என்றான் சாவகாசமாக.

அவரோ அதிர்ச்சியுடன் “வெற்றி என்ன சொல்றீங்க… அவன் நம்மகிட்ட தான் இருக்கானு தெரிஞ்சா அவ்வளவு தான்.” என்றார் தியாகு.

“சார். என்மேல நம்பிக்கை வைங்க.. இதை நான் சால்வ் பண்றேன். அப்புறம் இந்த கேஸ நானே எடுத்து நடத்துறேன்.”

“உங்க மேல நம்பிக்கை இல்லாமயா நான் இந்த பொறுப்பை கொடுத்திருக்கேன். இந்த வேலைக்கு உங்கள தவிர பொருத்தமான ஒருத்தர் யாருமே இல்ல.”

“தேங்க்யூ சார்.” என்றவன் அடுத்து கிளம்பிய இடம் என்னவோ ராயனின் வீட்டிற்கு தான்.




போன யூடிக்கு லைக்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி. லைக்ஸ் மட்டுமில்ல உங்களோட கருத்துக்களும் பூஸ்டர் தான் எனக்கு. so please உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

https://www.srikalatamilnovel.com/community/threads/விழிகளின்-அருகினில்-வானம்-கருத்து-திரி.2996/
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 3

“இங்க பாரு உன் கிட்ட கண்டிப்பா என் தம்பி சொல்லிட்டு போயிருக்க மாட்டான் எனக்கு நல்லா தெரியும் ஆனா காலைல நேரத்துலயே கிளம்பி இருக்கான். அப்ப யார்கூடயாவது அங்க வர்ரேனு அப்படினு ஏதாவது சொன்னானா???” என்று தன் முன்னால் நின்றிருந்த ராயனின் மனைவி தேவதர்ஷினியிடம் கேட்டு கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன்.

அதற்கு அவளிடமிருந்து இல்லை எனும் விதமாக சிறு தலையசைப்பு மட்டுமே இருந்தது.

“ம்க்கும்.. இவ வாய தொறந்து பேசிட்டானா அவ்வளவு தான். எப்படி தான் நம்ம தம்பி இவ கூட குடும்பம் நடத்துச்சோ தெரியல. ச்ச.. நம்ம தம்பிக்கு எவ்வளவு பெரிய இடத்துல இருந்தெல்லாம் சம்பந்தம் வந்துச்சு அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இந்த பீடைய போய் கல்யாணம் பண்ணினார் பாரு…” என்று புலம்பிக்கொண்டே அவளின் கன்னத்தில் அறைந்திருந்தார் ராதாகிருஷ்ணனின் மனைவி அகிலாண்டம்.

தர்ஷினியின் கன்னத்தில் அகிலாண்டத்தில் ஐந்து விரல்களும் பதிந்திருந்தது. அதிலிருந்தே எவ்வளவு வேகமாக அடித்திருப்பார் என்பதை சுற்றி அங்கு நின்று கொண்டிருந்த வீட்டு வேலையாட்கள் பார்த்து கொண்டிருந்தனர். அவர்களின் மனதிலோ அப்பெண்ணை நினைத்து பரிதாபம் பிறந்தது. ஆனால் அடி வாங்கியவளோ அத்தனை வலியையும் பொறுத்து கொண்டு கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் கூட விடாமல் இருந்தாள்.

அதை பார்த்த அகிலாண்டத்திற்கோ ஆத்திரம் பொங்கி மறுபடியும் அவளை அடிக்க நெருங்கினார் அதற்குள் அந்த பெரிய வீட்டின் கேட்டினுள் போலீஸ் வாகனம் நுழைந்தது.

“அகிலா ராயன காணோம்னு காலைல கமிஷனர்கிட்ட பேசியிருந்தேன் அதுக்காக தான் வந்திருக்காங்கனு நினைக்குறேன் நீ இவள கூட்டிட்டு உள்ள போ..” என்றான் ராதாகிருஷ்ணன்.

அதன் பிறகு இருவரும் அறைக்குள் நுழைய வெற்றிவேலும் சேகரும் வாகனத்திலிருந்து இறங்கினர்.

உள்ளே நுழைந்ததும் “குட்ஈவினிங்க் சார். ஐ அம் வெற்றிவேல். கமிஷனர் உங்க தம்பிய தேடற பொறுப்பை எங்க கிட்ட தான் கொடுத்திருக்காரு..” என்று அமைச்சரின் முன் சல்யூட் அடித்து நின்றான். சேகரும் சல்யூட் அடித்தான்.

“ம்… உங்க கமிஷனர்கிட்ட காலைல சொன்னேன் ஆனா உங்கள இப்ப தான் அனுப்பி இருக்காரு. ரொம்ப வேகமா தான் இருக்கீங்க போல வேலையில. அமைச்சரோட தம்பிக்கே இந்த கதினா சாதாரண மக்களுக்கு என்ன கதியோ” என்று நக்கலாக கேட்டான்.

“அமைச்சர் தம்பியோட உயிர் மட்டும் என்ன வெல்லக்கட்டியா சார். எங்களுக்கு எல்லாருமே ஒன்னு தான். உங்க தம்பிய காணோம்னே அவர் காணாம போய் ஒரு வாரம் கழிச்சு தான் சொல்லி இருக்கீங்க அதுவும் முறைப்படி எந்த கேஸும் கொடுக்காம அவர தேட சொல்லி இருக்கீங்க. உங்களுக்கு முன்னாடி எத்தன கொலை கொள்ளை கேஸ் வந்திருக்கும் எங்களுக்கு. அவங்களோடதெல்லாம் விசாரிக்காம அப்படியே விட்டுட்டா வர முடியும் அமைச்சர் தம்பிங்கற ஓரே காரணத்துக்காக.” என்று அதே நக்கல் குரலில் வினவினான் வெற்றி.

அதைக் கேட்ட ராதாகிருஷ்ணனுக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது. ஆனால் எப்பொழுதும் தனது உணர்வுகளை வெளியே காட்டி கொள்ளாமல் காரியம் மட்டும் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தேர்ந்த நடிகனை போல் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைச்சருக்கு அந்த கோபத்தை மறைப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயமாக இல்லை. தனக்கு தன் தம்பி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் வெளியே சிரித்து கொண்டிருந்தான். கமிஷனர் இவன் பெயரை சொல்லி இவனுடைய திறமையையும் பற்றி கூறியிருந்ததால் இவன் மூலம் தன் தம்பி கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கையுடன் பொறுமை காத்தான்.

“தம்பி நேர்மையான, டெடிகேஷனோட வேலை செய்யற போலீஸ் ஆஃபிஸர் போல. அதான் உங்க டிபார்ட்மென்ட பத்தி சொன்ன உடனே கோபம் வந்திருச்சு. சரி சரி விடுங்க நீங்க உங்க வேலைய பாருங்க. எனக்கு என் தம்பி கிடைச்சா போதும்.”

அவரை பார்த்த இதழ் வளைத்த சிரிப்புடன் அமைச்சரின் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து “ஸார் நான் உங்ககிட்டே இருந்தே என்னோட இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.” என்றான் தெனாவெட்டாக.

“என்ன வெற்றிவேல் இது தான்” ஏதோ பழமொழி இருக்குமே என்று யோசித்தவனின் கூற்றை புரிந்து கொண்ட வெற்றி “தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பதம் பார்க்குறதுனு” என்று முடித்தான்.

“ம்… அதே தான்… ரொம்ப நாள் முன்னாடி படிச்சது மறந்துருச்சு. நான் தான் என் தம்பிய காணோம்னு கேஸ் கொடுத்து இருக்கேன் நீங்க என்னையே சந்தேக படுறீங்களா??”

“என்ன சார் பண்றது போலீஸ்காரன் புத்தியே சந்தேக படுறது தானே.”

“அதுக்காக நான் மத்திய அமைச்சர். அதோட அவன் என் தம்பி..”

“எனக்கு பிரதமராவே இருந்தாலும் என் கிட்டகேஸ்னு வந்துட்டா எல்லாரும் ஒன்னு தான். சந்தேகமா இருந்தா யார வேணாலும் கேள்வி கேட்பேன்.”

அவனது பேச்சு மேலும் மேலும் கோபத்தையே கிளறியது ராதாகிருஷ்ணனுக்கு. “சரி என்ன கேள்வி கேட்கனுமோ கேளுங்க” என்றான்.

“ம்… ஏன் சார் உங்க தம்பி காணாம போய் ஒரு வாரம் ஆச்சு இப்ப தான் காணோம்னு கம்ப்ளைண் பண்ணி இருக்கீங்க?”

“அது ஊருக்கே தெரியுமே சார். நான் வெளிநாடு போய் கிட்டத்தட்ட பதினைஞ்சு நாள் ஆச்சு. இன்னைக்கு காலைல தான் வெளிநாட்டுல இருந்து வந்தேன். டெல்லி போய் பிரதமர கூட பார்க்காம இங்க என் தம்பிய காணோம்னு வந்திருக்கேன்.”

“உங்களுக்கு எப்படி தோணுச்சு உங்க தம்பிய காணோம்னு அவர் எங்கயாவது வெளியூரோ அல்லது வெளிநாடோ கூட போய் இருக்கலாமே.”

“இல்ல சார் எவ்வளவு தூரம் போனாலும் எங்கிட்ட பேசாம ஒரு நாள் கூட இருக்க மாட்டான். அதோட எனக்கு தெரியாம எந்த வேலையும் செய்ய மாட்டான். எந்த ஊருக்கும் போகவும் மாட்டான்.”

“சரி உங்க குடும்பமும் வெளிநாடு வந்திருச்சா??”

“ஆமா. ஆனா எனக்கு முன்னாடியே அவங்க போய்ட்டாங்க. நாங்க அங்க மீட் பண்ணிகிட்டோம் அவ்வளவு தான்.”

“ம்.. அவர் உங்க சொந்த தம்பியில்லையே”

அவனின் கேள்வி ராதாகிருஷ்ணனுக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் சிறு அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒரே ஒரு நிமிடம் அவருடைய கண்கள் அதை வெளிப்படுத்தியது.

அதை கண்டு கொண்டவன் “இல்ல சார் அவர் உங்க அப்பாவோட ரெண்டாவது மனைவியோட பையன் தானே. அத தான் கேட்டேன்.” என்றான்.

“யாருக்குமே தெரியாத விஷயம் உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது.” அவரால் இந்த கேள்வியை அவனிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“எங்கிட்ட இந்த கேஸ் கொடுத்தப்பவே எல்லா டீடெய்லும் கலெக்ட் பண்ணிட்டேன்.”

“ம்… அம்மா வேற வேற தான். ரெண்டு பேருக்குமே அப்பா ஒருத்தர் தான். அவன என்னோட தம்பியா நானும் என் பொண்டாட்டியும் பார்த்தது இல்ல என்னோட மூத்த பையனா தான் பார்க்குறேன். எங்க குடும்பத்துல யாரையுமே இதுல நீங்க சந்தேகபட முடியாது.”

“அதெப்படி சார். உங்க அப்பாவுக்கு அவர்னா ரொம்ப பிடிக்குமாம் அதனால சொத்துல சரிபாதிய உங்க தம்பி பேருக்கு எழுதி வச்சுட்டதா கேள்விப்பட்டேன். அதனால கூட அவர நீங்க கொலை பண்ண ஏற்பாடு பண்ணியிருக்கலாமே அதோட இந்த சமயம் நீங்க ஊர்ல வேற இல்ல இதவச்சே நீங்க தப்பிச்சிருக்க ப்ளான் பண்ணியிருக்கலாமே.”

“ம்… கதை எல்லாம் நல்லா தான் சொல்றீங்க தம்பி ஆனா உண்மை தான் இல்லை. அப்படி அவன நான் சொத்துக்காக கொலை செய்யறதா இருந்தா இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே. பாருங்க.”

“ம் அதுவும் சரிதான். அதான் சொன்னேனே சார் போலீஸ்காரன் புத்தியே சந்தேக புத்தினு. உங்களுக்கு வேற யார்மேலயாவது சந்தேகம் இருக்கா…”

“உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்லையே தம்பி அரசியல் வாழ்க்கையில நண்பர்கள விட எதிரிகளும் துரோகிகளும் தானே அதிகம். இதுல யாரைனு நான் சொல்றது.”

“சார் உங்க தம்பியோட நண்பர்கள் அவருடைய தொழில் முறை எதிரிகள் யாராவது உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா சொல்லுங்க அவங்க எல்லாரிடமும் விசாரணை பண்ணனும். இங்க உங்க தம்பி மட்டும் தனியாவா தங்கி இருந்தாரு.” என்று கேட்டு கொண்டே வீட்டை ஒருமுறை நோட்டம் விட்டான்.

“இல்ல தம்பி அவனொட மனைவி கூட தான் இருந்தான். அதோட வேலை செய்றவங்க ஆனா அவங்க யாருமே இங்க தங்க மாட்டாங்க. எல்லாரும் காலைல வந்துட்டு சாயங்காலம் போய்டுவாங்க.”

“ஓ…” என்றவனின் நினைப்பு ராயனுக்கு கல்யாணம் ஆகி மனைவி வேற இருக்கா. இந்த கேடு கெட்டவனையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி இருக்குது பாரு ஆனா நமக்கு ஒருத்தி கூட செட் ஆகல என்ன கொடுமை சரவணா இது என்றவன் குரலை செருமிக் கொண்டே “அவரோட மனைவிய கொஞ்சம் கூப்பிடுங்க அவங்கள விசாரிக்கனும். அதோட இந்த வீட்ல வேலை செய்யற ஒவ்வொருத்தரையும் தனித்தனியா விசாரிக்கனும்” என்றவன் வீட்டை சுற்றி பார்த்து கொண்டே அங்கிருந்த தோட்டத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான். எதிரே இருந்த இருக்கையில் ராதாகிருஷ்ணன் அமர்ந்திருந்தார்.

தனது அறையிலிருந்து வெளிவந்த தேவதர்ஷினியோ தோட்டத்தில் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி சென்றாள். நடையில் தொய்வு, ஓய்ந்த தோற்றம், கலைந்த தலைமுடிகள், கண்கள் அவளது உடலின் சோர்வினை மட்டுமில்லாது உள்ளத்தின் சோர்வையும் அப்பட்டமாக எடுத்து காட்டிகொண்டிருந்தது. அதோடு கன்னத்தில் கைவிரல்களின் தடயங்களோடு தனது சேலை முந்தானையின் நுனியை கைகளால் திருகிக் கொண்டு மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தாள்.

தூரத்தில் அவள் வந்து கொண்டிருப்பதை சிறு புருவ முடிச்சுடன் பார்த்து கொண்டே தனது கண்களில் கண்ணாடியை அணிவித்து கொண்டான்.

அவளின் உச்சி முதல் பாதம் வரை அவனது பார்வை பதிந்தது. அவனது எதிரே வந்து நின்ற பொழுது ஏதோ பேச வாயெடுத்த ராதாகிருஷ்ணனிடம் அவனது காரியதரிசி வந்து “ஸார் பிரதமர் உங்க கூட பேச லைன்ல இருக்கார்.” என்று கூறி கைப்பேசியை கொடுத்தான்.

“தம்பி ஒரு முக்கியமான கால்.. விசாரிச்சுட்டு இருங்க. நான் வந்துடறேன்” என்று கூறி எழுந்து சென்றார்.

அமைச்சர் கூறியதோ எழுந்து சென்றதோ எதுவுமே வெற்றியின் எண்ணத்தில் பதியவில்லை. அவனது எண்ணம் முழுவதையும் எதிரே நின்று கொண்டிருந்த தேவதர்ஷினியே ஆட்கொண்டிருந்தாள்.

மறுபடியும் உச்சி முதல் பாதம் வரை அவளை ஆராய்ந்து பின் குரலை செருமிக் கொண்டு “நீங்க நீங்க தான் ராயன் சாரோட மனைவியா?” என்றான்.

அக்குரலில் அவ்வளவு மென்மை கலந்திருந்தது.

“ம்…” எனும் விதமாக தலையாட்டினாள்.

வெற்றியின் மனதிற்குள் கத்தியை கொண்டு பாய்ச்சிய ஒரு உணர்வு. தனது உணர்வுகளை சட்டென்று வெளிக்காட்டி விடுவோமே என்று பயந்து தானே தனது கண்ணாடியை எடுத்து அணிவித்து அதை மற்றவர்களிடமிருந்து மறைந்து கொண்டான்.

ஒரு பெருமூச்சு விட்டபடி தனது உணர்வுகளை மறைத்து குரலை சரிசெய்து கொண்டு பழைய மிடுக்குடன் பேசினான். “சரி.. உட்காருங்க. ராயன் காணாம போன விஷயமா உங்க கூட கொஞ்சம் விசாரிக்கனும்” என்றான்.

“இ… இல்ல…. ப..பரவாயில்லை.” என்றாள் அவளுக்கே கேட்காத ஒரு குரலில்.

“ப்ளீஸ் உட்காருங்க மேடம்.”

அதற்கு தலையாட்டி விட்டு இருக்கையின் நுனியில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததை பார்த்து விட்டு. “நல்லா உட்காருங்க.. கீழ விழுந்துடாதீங்க.” என்றான் வெற்றி.

இருக்கையில் கொஞ்சம் உள்ளே தள்ளி அமர்ந்தாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி எத்தனை வருஷமாச்சு.”

“4 வருஷமாச்சு.”

“ம்… குழந்தை ஏதாவது…”

“இல்ல…” என்று கூறும் பொழுதே அவளது குரல் சிறிது தளுதளுத்தது.

“ம்.. ஒகே. ராயன் கடைசியா எப்ப வீட்ல இருந்து கிளம்பினார்.”

“போன வாரம் புதன் கிழமை காலைல.”

“காலைலனா எத்தனை மணிக்கு?”

“நேரமே காலைல ஒரு மூணு நாலு மணி இருக்கும்..”

“ஓ.. எப்பவும் இப்படி தான் காலைல நேரத்துல எங்காவது கிளம்புவாரா??”

“எப்பவுமே கிடையாது. எப்பவாவது தான் போவாரு”

“ஓகே… அப்படி அன்னைக்கு அவர் போகும் யார் கூடயாவது போன் பேசிட்டு இங்க வர்ற அங்க வர்றனு சொன்னாரா??”

“இல்ல சார் யார் கூடவும் பேசல”

“ஷ்யூரா தெரியுமா”

“என் முன்னாடி பேசல சார்.”

“சரி.. ராயன் காணாம போய் ஒரு வாரம் ஆச்சு ஏன் இது வரைக்கும் போலீஸ் கம்பளைண் பண்ணல நீங்க”

“அது… அது… அவர் அடிக்கடி வெளியூர் போவார் அதான் சொல்லல”

“வெளியூர் போகும் போதெல்லம் உங்க கிட்ட சொல்லிட்டு தானே போயிருப்பாரு. அப்ப உங்களுக்கு சந்தேகம் வரலயா???”

அவனின் கேள்வியில் சற்றே தயங்கியவள் “அ…. அவர் எங்க போனாலும் சொல்லிட்டு போக மாட்டாரு..” என்று கூறினாள்.

அவளின் வார்த்தைகளில் அவன் மனதினுள் ஏதோ சந்தேகம் நுழைந்தது.

“ஓ… சரி அவர் என்ன வேலை செய்யறாரு??”

“ஸ்கூல், காலேஜ் நடத்துறாரு.”

“உங்கள எல்லாம் அங்க கூட்டிட்டு போவாரா..”

“இல்ல… அங்க எல்லாம் போக மாட்டேன்.”

“யாராவது ராயன கடத்திட்டு போயிருப்பாங்களோனு சந்தேகபடறீங்களா? ஐ மீன் அவருடைய எதிரிகள்னு யாராவது இருக்காங்களா தெரியுமா”

அவனின் கேள்வியில் ஒரு நிமிடம் நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்தவள் “தெரியாது” என்று இடவலமாக தனது தலையை அசைத்தாள்.

“ம்… சரி நீங்க போகலாம். எப்ப வேணாலும் மறுபடியும் வருவேன்”

“ம்…” என்று மட்டும் கூறி அதற்கும் தலையாட்டியவள் செல்வதற்காக எழுந்தாள்.

“உங்க பேர் என்ன??”

“தேவதர்ஷினி”

அவளது பெயரை மனதிற்குள் ஒரு முறை உச்சரித்து பார்த்தவன் “தர்ஷினி என்ன உங்க கன்னத்துல யாரோ அடிச்ச மாதிரி இருக்கு” என்றான் கேள்வியாக.

“ஒன்னுமில்ல சார்..” என்றவள் மடமடவென்று வீட்டினுள் நுழைந்தாள்.

செல்லும் அவளையே யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான் வெற்றி.

பிரதமரிடம் பேசி முடித்து விட்டு அருகே வந்த ராதாகிருஷ்ணன் “என்ன சார் என்கொயரி எல்லாம் முடிஞ்சுதா??” என்று கேட்டு கொண்டே அவனருகில் அமர்ந்தார்.

“இப்ப தான் தேவதர்ஷினி மேடத்துகிட்ட கேள்வி கேட்டேன். இன்னும் இங்க வேலை செய்யறவங்ககிட்ட விசாரிக்கனும்”

“ம்… எப்படியோ சீக்கிரம் என் தம்பிய கண்டுபிடிச்சு கொடுங்க சார். நான் நாளைக்கே டெல்லி போகனும். எனக்கு வேலை நிறைய இருக்கு. உங்கள நம்பி தான் போறேன்.”

“ம்.. நீங்க உங்க வேலைய பாருங்க சார். நான் உங்க தம்பி கேஸ சீக்கிரமா முடிச்சுடறேன்.” என்றவன் சிரித்து கொண்டே எழுந்து சென்று அங்கே வேலை செய்பவர்களை விசாரித்து கொண்டிருந்தான்.

எல்லாம் முடிந்து அவனது வாகனத்தில் ஏறும் பொழுது “எப்படி சார் இப்படி நடிக்கிறீங்க..” என்றான்.

“சேகர் என்ன பார்த்தா நடிகன் மாதிரியா தெரியுது?? முக்கியமான கேஸ் இன்வெஸ்டிகேஷன் போய்ட்டு இருக்கு நீங்க என்னமோ என்னைய நடிகன் அப்படி இப்படினு சொல்றீங்க. உங்களுக்கு ஏதாவது தோணுதா.. யார் இத செஞ்சுருப்பாங்கனு” என்றான் முகத்தை இருக்கமாக வைத்து கொண்டு.

வெற்றியின் கேள்வியில் “வேற யாராவது செஞ்சுருப்பாங்களானு நம்மளையே கேட்கறாரு. இவருக்கு எல்லாமே மறந்துடுச்சா இல்ல நமக்கு தான் நடந்தது உண்மை மாதிரி தெரியுதா..” என்று நினைத்து கொண்டே வாகனத்தில் ஏறியவர்கள் அவர்களது அலுவலகத்தை நோக்கி சென்றனர்.

“என்ன சார் எல்லாம் மறந்துட்டீங்களா? இல்ல எனக்கு தான் எல்லாம் கனவு மாதிரி தோணுதா?? நம்ம கஷ்டடியில தானே சார் ராயன் இருக்கான். நீங்க என்ன இப்படி கேள்வி கேட்கறீங்க.”

“ராதாகிருஷ்ணனுக்கு நம்ம மேல டவுட் இருக்கு தெரியுமா உங்களுக்கு??”

அவனது கேள்வியில் அதிர்ச்சியான சேகர்.. “என்ன சார் சொல்றீங்க??? அப்ப நாம தான் கடத்தி வச்சுருக்கோம்னு தெரிஞ்சுருச்சா” என்றான்.

சேகரின் அதிர்ச்சியை கண்டு சிரித்து கொண்டே “அது அந்த டவுட் இல்ல சேகர். அவருடைய தம்பிய நம்ம கண்டுபிடிச்சு தருவோம்னு சுத்தமா நம்பிக்கை இல்லாம இருக்காரு அந்த டவுட் தான் நம்ம மேல..” என்றான்.

“அப்பாடா. இப்ப தான் சார் உயிரே வந்துச்சு எனக்கு”

“ஏன் சேகர் இப்படி பயப்படுறீங்க”

“அப்புறம் என்ன சார். இவனெல்லாம் பக்கா கிரிமனல்.. கேடு கெட்ட அயோக்கியன். நம்ம இவனுக்கு எதிரா ஏதாவது செய்யறோம்னு தெரிஞ்சா இருந்த இடமே தெரியாம புதைச்சுடுவான். நீங்க தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி வந்து ஆறு மாசம் தானே ஆச்சு. நான் இவனுங்கள எல்லாம் என் சர்வீஸ்ல சேர்ந்த நாளுல இருந்து பார்த்துட்டு இருக்கேன். எல்லாம் பதவி இருக்கற திமிர்ல ஆடிட்டு இருக்கான் சார். அந்த பதவி போச்சுனா அவன் ஒன்னுமில்ல. ஆனா அந்த பதவிய தக்க வச்சுக்க எந்த எல்லைக்கும் போவான் இவன். எல்லார்கிட்டயும் நல்லவன் மாதிரி நடிப்பான் சார் ஆனா பினாமி பேர்ல நிறைய இல்லீகல் பிஸினெஸ் பண்ணுறான். ஆனா எதுக்குமே தகுந்த சாட்சியமோ, ஆதாரமோ எதுவும் இல்ல. அதனால தான் இவன் தப்பிச்சுட்டு வர்றான்.”

மௌனமாக சேகரின் பேச்சை உள்வாங்கியவனின் மனதினுள் ஆயிரம் யோசனைகள் குடிகொண்டது.




உங்களது கருத்துக்களை கீழ்கண்ட திரியில் பதிவு செய்யவும்

https://www.srikalatamilnovel.com/community/threads/விழிகளின்-அருகினில்-வானம்-கருத்து-திரி.2996/
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க. இந்த கதையாவது எந்தவிதமான தடங்கலும் இல்லாம கொடுக்கனும்னு நினைச்சேன். ஆனா முடியல. வீட்ல எல்லாரையும் காய்ச்சல் வச்சு செய்யுது. முதல்ல என் பொண்ணு அப்புறம் எனக்கு இப்ப என் வீட்டுக்காரருக்கு ஆனா இன்னும் யாருக்கும் முழுசா குணமாகல அதான் யூடி கொடுக்க முடியல. இப்ப கொடுக்கற யூடியே போன சனிக்கிழமையே எழுதனது. அதை தான் இப்ப கொடுத்துருக்கேன். சின்ன யூடி தான் அட்ஜஸ் பண்ணிக்கோங்க. கண்டிப்பா அடுத்த வாரத்தலிருந்து ரெகுலரா வந்துருவேன். நம்புங்க. நம்பிக்கை தான் வாழ்க்கை. அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள் கதை படிக்கறீங்க தெரியுது ஆனா எப்படி இருக்குதுனு சொல்லாமயே போனா என்ன அர்த்தம் சொல்லுங்க. அந்த கருத்து திரி எதுக்கு ஒபன் பண்ணி இருக்கேனு தெரியல... கொஞ்சம் சொல்லிட்டு போங்களே நட்புக்களே. அப்பதானே கதை எழுத எனக்கும் கொஞ்சம் ஆர்வம் பிறக்கும்.
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 4

மூன்று நாட்கள் கடந்த நிலையில் ராயனின் தொழில் பங்குதாரர்கள் முதற்கொண்டு அவன் பள்ளி மற்றும் கல்லூரியில் வேலை செய்யும் அனைவரிடமும் விசாரணை செய்து கொண்டிருந்தான் வெற்றி.

“சார் இப்ப இவங்க எல்லாரிடமும் விசாரணை பண்ணி என்ன பண்றது?” என்றான் சேகர்.

அவனை விசித்தரமாக பார்த்த வெற்றியோ “என்ன சேகர் இப்படி சொல்லிட்டீங்க. ராயன கண்டு பிடிக்க வேண்டாமா.. மிகப்பெரிய தொழிலதிபர், அமைச்சரோட தம்பி அப்படியேவா விட சொல்றீங்க” என்று நக்கல் குரலில் கேட்டான் சேகரிடம்.

“சார். அவன் நம்ம கஷ்டடியில தான் இருக்காங்கறத அடிக்கடி மறந்துடறீங்க நீங்க”

“சேகர் அதை ஏன் நியாபக வச்சுக்கனும் சொல்லுங்க. அதை நான் எப்படி மறந்தேனோ அப்படியே நீங்களும் மறந்துடுங்க சரியா.. ஒரு குறிப்பிட்ட டைம் மட்டும் அந்த நியாபகம் வந்தா சரி”

“என்னமோ சார். உங்க ப்ளானே என்னனு தெரியல எனக்கு. எனிவே அடுத்து எங்க போகனும்னு சொன்னீங்கனா போகலாம் எப்பவும் போல உங்க பின்னாடி மௌனியா நின்னுக்குறேன்”

“ம்… இது அழகு.” என்று சொன்னவன் ஒரு முகவரியை கூறி அங்கே சென்றான்.

அவன் கூறிய முகவரியில் வண்டியை நிறுத்தியவன் அதிலிருந்து இறங்கி அந்த வீட்டை பார்த்து கொண்டே “இது யாரோட வீடு சார்?” என்றான் சேகர்.

“வாங்க உள்ள போனா தெரிஞ்சற போகுது..” என்று ஒற்றை படுக்கையறை கொண்ட அந்த சிறிய வீட்டினுள் நுழைந்தனர் இருவரும்.

அங்கே வரவேற்பறையில் சாய்வு நாற்காலியில் ஓய்ந்து போன தோற்றத்துடன் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தார் ஒர் பெரியவர். வெளியே வாகன சத்தமும் வீட்டினுள் யாரோ வந்த அரவமும் கேட்டு சமையலறையில் இருந்து தான் கட்டிய மடிசாரில் கைகளை துடைத்து கொண்டே வெளியே வந்தார் கலாவதி. அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த கலாவதி அங்கே அமர்ந்திருந்த தனது கணவரின் அருகில் சென்று அவரின் தோள் தொட்டு உலுக்கி “ஏன்னா… ஏன்னா எழுந்திருங்கோ… நம்மாத்துக்கு போலீஸ்காரங்க எல்லாம் வந்துருக்காங்க.” என்றார்.

அவரின் அழைப்பில் திடுக்கிட்டு எழுந்தார். ராமானுஜம் அவர் பெயர். எழுந்தவர் தன் கண்முன்னே நின்றிருந்த இருவரையும் பார்த்து முழித்து கொண்டு எழுந்து நின்று “என்ன சார் என்ன விஷயமா எங்களை பார்க்க வந்திருக்கீங்க” என்றார்.

“என்ன சார் இது வீட்டுக்கு வந்தவங்கள வாங்கனு கூப்பிட மாட்டீங்க உட்கார சொல்லவும் மாட்டீங்களா. இது தான் வீட்டுக்கு வந்தவங்கள உபசரிக்கும் பழக்கமா..” என்றான் வெற்றி.

“மன்னிச்சுடுங்க சார். ஆத்துக்கு திடீர்னு போலீஸ் வரவும் பயந்துட்டோம். உட்காருங்க” என்று அருகில் இருந்த நீளிருக்கையை காட்டினார்.

“ம்… ராயன் காணாம போய்ட்டார் அதான் அத பத்தி விசாரிக்கலாம்னு வந்தோம்.”

“அவன் காணாம போனா அத ஏன் எங்ககிட்ட வந்து விசாரிக்கறீங்க சார்” என்றார் கோபமாக கலாவதி.

“என்ன மாமி நீங்க தானே தேவதர்ஷினியோட அம்மா, அப்பா. அப்புறம் உங்ககிட்டயும் தானே நாங்க விசாரிக்கனும்”

“சார் என்னோட பொண்ணு செத்துட்டா. அவ உயிரோட இல்ல. நீங்க சொல்ற ராயன் தேவதர்ஷினி எல்லாரும் யாருனே தெரியாது எங்களுக்கு” என்றார் கலாவதி.

“நீங்க இல்லைனு சொன்னாலும் அதெல்லாம் உண்மை ஆகிடுமா என்ன???”

“சார் இப்ப உங்களுக்கு என்ன வேணும்? என்ன விசாரணை பண்ணனும்?” என்றார் ராமானுஜம்.

“ராயன் சார இரண்டு வாரமா காணோம் அதான் உங்களுக்கு அத பத்தி ஏதாவது தெரியுமானு கேட்கலாம்னு வந்தோம்.”

“சார் எப்ப தர்ஷினி வந்து அவன கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னாளோ அப்பவே அவளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு அந்திருச்சு. அவங்கள பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்ககிட்ட எதுவும் கேட்காதீங்க.” என்றார் ராமானுஜம்.

“சோ.. உங்க பொண்ணு உங்க இஷ்டம் இல்லாம தான் கல்யாணம் பண்ணிகிட்டாங்க ரைட்.”

“ஆமா சார்.”

“அப்ப ஏன் நீங்க அவர கடத்தி வச்சுட்டு நாடகம் ஆட கூடாது”

“சார் எங்கள பார்த்தா அப்படியா தெரியுது. ஏதோ அந்த பெருமாளுக்கு கைங்கரியம் பண்ணிட்டு அதுல வர்ற காச வச்சு எங்க ஜீவிதம் போக்கிட்டு இருக்கோம். அது பொறுக்கலையா உங்களுக்கு. ஐயோ பெருமாளே இன்னும் எத்தன சோதனை தான் எங்களுக்கு வச்சுருக்க. எங்கமேல உங்களுக்கு கருணையே இல்லையா??” என்று கண்ணீர் விட்டு அழுதார் கலாவதி.

“சார் நான் கோவில்ல அர்ச்சகரா இருக்கேன். இப்படி போலீஸ் எல்லாம் வீட்டுக்கு வந்தது தெரிஞ்சா அக்கம் பக்கத்திலுள்ளவரெல்லாம் ஒரு மாதிரி பேசுவாங்க. ப்ளீஸ் போய்டுங்கோ. மறுபடியும் ஒரு அவமானத்தை தாங்குற சக்தியெல்லாம் எங்களுக்கு இல்ல.. ப்ளீஸ் போய்டுங்கோ..” என்று கையெடுத்து கும்பிட்டு கூறினார் ராமானுஜம்.

அவர்களின் வேதனையான பேச்சும், அழுகையும் வெற்றிக்கும் சேகருக்குமே ஒரு மாதிரி இருக்க எதுவும் கூறாமல் அவ்வீட்டை விட்டு வெளியேறினர் இருவரும்.

வண்டியில் ஏறிய சேகரோ “சார் அவங்கள பார்த்தாலே பாவமா இருக்கு. எதுக்கு இங்க வந்து அவங்கள இவ்வளவு சங்கடப்படுத்தனும்” என்றான் வெற்றியிடம்.

“கொஞ்சம் அவங்கள பத்தி தெரிஞ்சக்கனும் அதுக்கு தான் வந்தேன். தெரிஞ்சுகிட்டேன்.” என்று கூறியவன் யோசித்து கொண்டே “அந்த ராதாகிருஷ்ணனும் அவன் ஃபேமிலி ஆட்கள் எல்லாரும் எங்க இருக்காங்க?” என்றான்.

“அமைச்சர் டெல்லி போய்ட்டாரு சார். அவங்க ஃபேமிலி மெம்பர்ஷும் யாரும் இங்க இல்லனு நினைக்குறேன்.”

“ம்.. அப்ப தேவதர்ஷினி மட்டும் தான் இருப்பாங்க. ரைட். வண்டிய ராயன் வீட்டுக்கு விடு.”

“அவங்கள எதுக்கு சார் இப்ப மீட் பண்ணனும். அதான் அன்னைக்கே என்கொயரி பண்ணியாச்சே அவங்ககிட்ட”

ஏற்கனவே மனதிற்குள் புகைந்து கொண்டிருந்தவனுக்கு சேகரின் கேள்விகள் மேலும் அவனுக்கு சினத்தை தூண்டியது. “கேள்வி மேல கேள்வி கேட்காம சொன்னத மட்டும் செய்.” என்று கட்டளையிடும் விதமாக கூறி கொண்டு அமர்ந்து விட்டான் வெற்றி.

சேகர் அவனிடம் வேலைக்கு வந்ததிலிருந்து இதுவரை இப்படி ஒரு அவதாரத்தை அவனிடம் கண்டதில்லை. எந்த ஒரு நிலையிலும் நிதானம் தவறாதவன், கோபத்தை வெளிப்படுத்தாதவன் இன்று இவ்வாறு பேசுவதை கண்டு அமைதியடைந்து ராயனின் வீட்டிற்கு சென்றான்.

ராயனின் வீட்டிற்கு வந்ததும் “சேகர் இங்க இருக்கற ஒவ்வொரு வேலையாட்களிடமும் எப்ப இருந்து இங்க வேலை செய்யறாங்க அண்ட் அவங்களோட பெர்ஷனல் டீடெய்ல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணுங்க. அதோட ராயன் வீட்டுக்கு யார் வருவாங்க போவாங்க அதையெல்லாம் விசாரிங்க” என்றவன் அருகே நின்றிருந்த மற்றொரு வேலையாளை அழைத்து “தேவதர்ஷினி எங்க?” என்றான்.

“சின்னம்மா தோட்டத்துல இருக்காங்க சார். கூப்பிடவா”

“வேண்டாம் எங்கேனு சொல்லுங்க நானே போய் பார்த்துக்கறேன்” என்றவன் தோட்டத்தை நோக்கி சென்றான்.

சுற்றிலும் சிறு சிறு தொட்டிகளில் ரோஜா பூக்கள் பலநிற வண்ணங்களில் பூத்து குலுங்க அதன் அருகே செண்பக மரத்தின் அடியில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்து அங்கே பூத்து குலுங்கிய அந்த மலர்களையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். அவளின் தோற்றம் அவனது மனதை கலங்க செய்ய முயன்று அதை ஒதுக்கியவன் அவள் அருகே சென்று தொண்டையை செருமினான்.

அதில் நினைவு திரும்பியவள் சடாரென்று எழுந்து தடுமாறி நின்றாள்.

“பார்த்து விழுந்தடாத. உட்கார்.”

“என்ன சார் வேணும். அமைச்சர் சார் கூட ஊர்ல இல்லையே” என்றாள் தடுமாறி.

“நான் உங்கள பார்க்கத்தான் வந்தேன். கொஞ்சம் விசாரிக்கனும்”

அவனது பதிலில் கேள்வியாய் அவன் முகம் நோக்கியவள் “நான் எனக்கு தெரிஞ்சது எல்லாமே சொல்லிட்டேனே அன்னைக்கே இன்னும் என்ன” என்றாள்.

“ம்.. இன்னைக்கு உங்க வீட்டுக்கு போய் உங்க அம்மா அப்பாவ விசாரிச்சேன்.”

அதில் திகைப்படைந்தவள் “சார். அங்க எதுக்கு போனீங்க? அவங்களுக்கு எதுவுமே தெரியாது.” என்றாள்.

“அதை நாங்க விசாரணை பண்ணி தானே தெரிஞ்சுக்கனும். அவங்க பேசனத வச்சு பார்க்கும் பொழுது எனக்கு அவங்க தான் ராயன கடத்தி இருப்பாங்களோனு சந்தேகம் அதிகமாகுது” என்றான் தன் தாடையை தடவிக் கொண்டே.

அதில் மேலும் அதிர்ந்தவள் “சார். சத்தியமா என் அம்மா அப்பா ஒரு ஈ, எறும்புக்கு கூட துரோகம் பண்ண மாட்டாங்க அவங்கள சந்தேகப்படாதீங்க ப்ளீஸ்” என்றாள் கண்களில் கண்ணீருடனே.

“அதெப்படி மேடம். அவங்க சம்மதம் இல்லாம நீங்க ராயன விரும்பி கல்யாணம் செஞ்சுட்டதா சொன்னாங்க. அப்ப அவங்கள மீறி நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்க அதனால ராயன ஏதாவது பண்ணியிருக்க சான்ஸ் இருக்கல்ல. அப்ப அவங்கள நான் சந்தேகப்படறது தப்பில்லையல்ல.”

“சார் அவங்க அப்படிப்பட்டவங்க இல்ல..”

“உங்களோட அம்மா, அப்பானாலும் நீங்க ஆசைப்பட்டு காதலிச்சு கல்யாணம் பண்ணினவர காணோம்னு வர்ரப்ப கொஞ்சம் கூட பதட்டப்படாம அவங்க அதெல்லாம் பண்றவங்க கிடையாதுனு மனசாட்சி இல்லாம அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க?? என்ன மேடம்” என்றான் கிண்டலாக.

“சார் அவங்களுக்கு அதெல்லாம் தெரியாது.”

“அவங்க பண்ணலைனாலும் வேற யார்கிட்டயாவது சொல்லி பணத்தை கொடுத்து செய்ய வச்சுருக்கலாமே. அவங்கள மறுபடியும் என்கொயரி பண்ண வருவேனு சொல்லிட்டு தான் வந்துருக்கேன். அவங்க மேல தான் எனக்கு முழு சந்தேகமும்” என்றான் வேண்டுமென்றே.

அதில் அவளது மனம் உடைந்து அழுது கொண்டே “சார் ப்ளீஸ் ஏற்கனவே என்னால அவங்க ரொம்ப மனம் உடைஞ்சு போயிருப்பாங்க. அவங்கள மறுபடியும் வேதனைக்கு உள்ளாக்காதீங்க” என்றாள்.

“லவ் பண்ணி கல்யாணம் பண்றதென்ன அவ்வளவு பெரிய தப்பா…” வேண்டுமென்றே அவளது மனதை அறிய வேண்டும் என்பதற்காகவே நோண்டி கொண்டிருந்தான்.

“சார் நான் லவ் பண்ணவே இல்ல..” என்றாள் அழுத்தமாக.

“லவ் பண்ணாம கல்யாணம். பெற்றோரும் பார்த்து வைத்ததுமில்ல அப்புறம் எப்படி… நீங்க சொல்றத பார்த்தா ஏதோ ஒரு கட்டாயத்துல அவர கல்யாணம் பண்ணி இருப்பீங்க போல..”

ஏதோ ஒரு உந்துதலில் தனது மனதில் உள்ளதை கூறிவிட்டால் அதன் பின்பே தான் கூறியதை எங்கே இவன் அந்த அமைச்சரிடமும் ராயனிடமும் சொல்லி விடுவானோ என்ற பயத்தை கண்களில் தேக்கி கொண்டி அவனை நோக்கினாள். அதில் அவளின் மனதினை நன்கு உணர்ந்தவனாக “கவலைப்படாதீங்க சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.” என்றான் மென்மையாக.

இருந்தாலும் அடிபட்ட மனது அவனை நம்ப மறுத்தது. இவனும் அவர்களுடைய கூட்டாளியோ என்று சந்தேகமடைந்து அவனை பார்த்தாள்.

அவளின் பார்வையில் சந்தேகத்தை உணர்ந்தவன் “இங்க பாரு தர்ஷினி நீ நினைக்கற மாதிரி நான் அவங்க ஆள் இல்ல. என்னை நம்பு. உன்னைய மிரட்டி இங்க இருக்க வச்சுருக்காங்கனா கண்டிப்பா என்னால என்ன செய்ய முடியுமோ அத செஞ்சு உன்ன காப்பாத்தறேன். இப்போதைக்கு என்னால வெறும் வாய் வார்த்தையா தான் உனக்கு நம்பிக்கை தரமுடியும். இங்க வேலை செய்யுற ஆளுங்கல பாதி பேர் அந்த அமைச்சருக்கு விசுவாசியா தான் இருப்பானுங்கனு தோணுது. சோ உனக்கு என்ன நடந்துச்சுனு சீக்கிரமா சொல்லு.” என்றான்.

ஏதோ ஒன்று அவனை நம்ப சொல்லி கூறியது. அவளும் யாரிடமும் பகிராத விஷயங்களை அவனிடம் கூற ஆரம்பித்தாள்.

என்னோட சொந்த ஊர் காஞ்சிபுரம். நான் என் அம்மா, அப்பாக்கு ஒரே பொண்ணு. அதனாலயே வீட்ல ரொம்ப செல்லம் அதிகம். அளவுக்கதிகமா குறும்பு பண்ணுவேன். அப்பா அங்க இருந்த ஒரு கோவில்ல குருக்களா இருந்தார். அம்மா நல்லா பாட்டு பாடுவாங்க. நாங்க இருந்த அக்கிரஹாரத்துல மட்டுமில்லாம வெளியிலிருந்து நிறைய பசங்க வந்து பாட்டு கத்துக்குவாங்க. இவங்க வருமானமே போதுமானதா இருந்துச்சு. அம்மா என்னோட படிப்பு, கல்யாணம்னு எல்லாத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சாங்க. எங்க குடும்பத்துல எப்பவும் சந்தோஷம் நிலைச்சு இருக்கும். நாங்க இருந்த அக்கிரஹாரம் முழுக்க எங்க குடும்பத்த பார்த்து பெருமையா பேசுவாங்க.

அப்ப நான் பணிரெண்டாவது முடிச்சுட்டு கே.ஆர் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தேன். நான் தேர்ந்தெடுத்த காலேஜ் தான் நான் பண்ணின முதல் தப்பு. வீட்ல எப்படி குறும்பு பண்ணிட்டு இருப்பனோ அதே மாதிரி தான் காலேஜ்லயும். கூட படிக்கற பசங்க முதற்கொண்டு அங்க எங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கற எல்லாருக்கும் நான் ரொம்ப பெட்.

அப்ப தான் முதல் பருவத்தேர்வு மற்றும் அதற்கான விடுமுறை முடிந்து அடுத்த பருவத்திற்கான வகுப்புகள் ஆரம்பமாகி இருந்தது.

அன்று பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரியினுள் நுழைந்து கொண்டிருந்தாள் தர்ஷினி.

முன்னாள் சென்று கொண்டிருந்த கவிதாவை அழைத்து “ஏய் கவிதா கொஞ்சம் நில்லுடி.” என்று அவளை நோக்கி ஒடிவந்தாள் தர்ஷினி.

“ஏய் எங்கடி ப்ரியாவ ஒரு வாரமா காணோம். உங்க பக்கத்து வீடு தானே உனக்கு தெரியலயா?”

“தெரியலடி. அவங்க வீட்டுக்கு போனா எப்ப பார்த்தாலும் படுத்து தூங்கிட்டு இருக்கா. முழிச்சிருக்கறப்ப கேட்டா கொஞ்சம் உடம்பு சரியில்லைனு சொல்றா. என்னனு தெரியல அவங்க அம்மாவும் புலம்பிட்டு இருந்தாங்கனு எங்க அம்மா சொன்னாங்க.”

“ஓ.. அப்படியா. அவளுக்கு என்ன ஆச்சு..”

“தெரியலடி. சரி நான் என் கிளாஸ்க்கு போறேன். பை.” என்றவள் நகர்ந்து சென்றாள். இருவரும் வேறு வேறு பாடப்பிரிவில் படிப்பவர்கள். இருவருக்கும் பொதுவான தோழி தான் பிரியா. பிரியாவும் தர்ஷினியும் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே தோழிகள். இயல்பாகவே இருவருக்குள்ளும் ஒரு நட்பு அமைந்திருந்தது. தனது நெருங்கிய தோழி வராமல் இருப்பதால் மிகுந்த கவலையுடன் இருந்தாள் தர்ஷினி.

தனது தோழியை பற்றிய யோசனையுடனேயே வகுப்பிற்கு நுழைந்தவள் தனது பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாள்.

அடுத்த இரண்டு நாட்களும் பிரியா வராமல் போக நாளை எப்படியும் அவள் வீட்டிற்கு சென்று வர வேண்டும் என்று நினைத்து கொண்டாள் தர்ஷினி. ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் அடுத்த நாள் பிரியா கல்லூரி வந்தாள்.

கண்கள் இரண்டும் சிவப்பாக ஏதோ போதையில் இருப்பவளை போன்று காணப்பட்டது. கண்களை சுற்றிலும் கருவளையம் தோன்றி இருந்தது. மற்றபடி எந்த விதமான மாறுதலும் அவளிடம் இல்லை.

“ஏய் ஏன்டி இப்படி இருக்க. கண்ணெல்லாம் சிவந்து இருக்கு. நைட் எல்லாம் தூங்கவே இல்லையா??? ஆனா கவிதா நீ எப்ப பார்த்தாலும் தூங்கிட்டு இருந்தனு சொன்னா.. என்னடி ஆச்சு உனக்கு நல்லா தானே இருக்க” என்று அவளது கழுத்து, நெற்றி எல்லாம் தொட்டு பார்த்தாள் தர்ஷினி.

“ஏய் ஒன்னுமில்ல நான் நல்லா தான் இருக்கேன். கைய எடு..” என்றாள் கோபமாக.

“எதுக்குடி இப்படி கோபப்படுற.. சரி சரி வா கிளாஸ்க்கு போகலாம் இந்த செம்கான வகுப்பு எல்லாம் ஆரம்பிச்சு பாடம் எல்லாம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. எழுதறதுக்கு நிறைய இருக்கு வா வா…” என்று அவளை இழுத்து கொண்டு வகுப்பிற்கு சென்றாள்.

பிரியாவும் அவளின் இழுப்பிற்கு கூட சென்றாள்.

முதல் வகுப்பு பாடம் முடிந்தவுடன் பிரியா கழிவறை செல்வதாக எழுந்து சென்றாள். அடுத்த வகுப்பிற்கான ஆசிரியர் வந்த பிறகும் கூட பிரியா வரவில்லை. அதற்கடுத்த வகுப்பிற்கு இதே நிலை நீடித்தது. மதிய உணவு இடைவெளியின் போதே தர்ஷினி எழுந்து பிரியாவை தேடி சென்றாள். கல்லூரியையே அலசி தேடியும் பிரியாவை காணவில்லை.

பிரியாவை காணவில்லை என்று தனது வகுப்பு ஆசிரியரிடம் புகாரளிக்க அவரது அறை நோக்கி சென்ற பொழுது எதிரே அவர்களுடனே பேருந்தில் பயணிக்கும் வேறொரு பிரிவினை சேர்ந்த மாணவி ஒருத்தி “ஏய் என்னடி ஆச்சு… எங்க இப்படி பரபரப்பா போற?” என்றாள்.

“இல்லடி பிரியா காலைல காலேஜ் வந்து ஒரு கிளாஸ் தான் அட்டெண் பண்ணினா. அப்புறம் பாத்ரூம் போறேனு போய்ட்டு வரவே இல்ல. காலேஜ்ல எல்லா டிபார்ட்மென்டும் அலசிட்டேன் எங்கயுமே இல்ல அவ அதான் என் கிளாஸ் இன்சார்ஜ்கிட்ட சொல்ல போறேன்” என்றாள் படபடப்பாக.

“பிரியாவா காலைல அவ காலேஜ் பின்னாடி இருக்கற அந்த பழைய இடிஞ்ச கட்டிடம் பக்கம் போனத பார்த்தேன் அப்பவே கேட்கனும்னு தோணுச்சு அதுக்குள்ள சார் என்ன கூப்பிட்டாருனு போய்ட்டேன். அங்க போய் பாரு..”


“தேங்க்ஸ்டி..” என்றவள் விரைவாக அந்த இடத்தை நோக்கி சென்றாள்.


கருத்து திரி:
https://www.srikalatamilnovel.com/community/threads/விழிகளின்-அருகினில்-வானம்-கருத்து-திரி.2996/
 
Last edited:

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

முதல்ல உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் யூடி கொடுக்க முடியாததற்கு. காரணமும் சொல்லிடறேன் என்னுடைய மாமனார் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால மருத்துவமனை வீடுனு அலைஞ்சுட்டு இருக்கேன் இதற்கிடையில் பொண்ணுக்கு தேர்வு நடக்குது அவ கூடவும் நேரம் செலவழிக்கனும் இப்படி நிற்க நேரமில்லாமல் போய்ட்டு இருக்கேன். யூடி எழுத நேரம் இல்லை அதே நேரம் மனநிலையும் இல்லை. என் மாமனாரின் உடல்நிலை சற்றுக் கவலைக்கிடமாக தான் உள்ளது. முடிந்த அளவு கூடிய விரைவில் யூடியுடன் வருகிறேன் மன்னிக்கவும் தோழீஸ்
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 5

அங்கே மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் அந்த பாழடைந்த கட்டிடத்தின் உள்ளே அமர்ந்து போதை பொருள் நிறைந்த புகைபிடிக்கும் பொருளை மாறி மாறி ஊதி கொண்டிருந்தனர்.

தன் தோழியை தேடி சென்றவளுக்கோ அங்கே அவள் இருந்த கோலத்தை பார்த்தவுடன் பெண்ணவளுக்கு முகத்தில் ஒரு அருவருப்பு தோன்றியது.

“ஏய் பிரியா என்னடி இது??? என்ன கருமத்தை எல்லாரும் மாறி மாறி ஊதிட்டு இருக்கீங்க??” என்று அவள் அருகில் சென்று ஊதி கொண்டிருந்ததை தட்டி விட்டாள்.

“ஏய்… எதுக்குடி தட்டி விட்ட அத??? எவ்வளவு சுகமா இருந்துச்சு தெரியுமா??” என்று போதையில் கூறினாள் பிரியா.

அவள் அருகில் இருந்த அந்த ஆணவனோ “ஏய் நீ யாரு எதுக்கு இங்க வந்து எங்கள தொல்லை பண்ற??? போ முதல்ல இங்கிருந்து” என்று அவள் தனக்கு சுகம் தரும் ஒரு பொருளை கீழே தட்டிவிட்ட எரிச்சலில் கத்தினான்.

அதை பொருட்படுத்தாத தர்ஷினியோ “பிரியா எழுந்து வா நாம போலாம். இதெல்லாம் வேணாம்டி.. சொன்னா கேளுடி.. இந்த பழக்கத்தை யாரு உனக்கு பழக்கி விட்டது???” என்றாள்.

“எனக்கு இது தான் வேணும் போடி… சொர்க்கம் மாதிரி இருக்குது தெரியுமா…. நீ போ முதல்ல… ஏய் எனக்கு ஒன்னு கொடுடா இவ கீழ தட்டி விட்டுட்டா” என்று தனக்கு அருகில் இருந்த மற்றொருவன் ஊதி கொண்டிருந்ததை பிடுங்கி ஊதினாள் பிரியா.

இதை எல்லாம் பார்த்த தர்ஷினியோ “ஏய் காலேஜ்குள்ள எப்படி இதெல்லாம் வந்துச்சு.. யாரு கொடுத்தாங்க உங்களுக்கு? இரு நான் பிரின்ஸ்பல்கிட்ட போய் சொல்றேன்..” என்றவள் கல்லூரியின் முதல்வரின் அறைக்கு சென்றாள்.

“என்ன கண்ணப்பன்… நம்ம திட்டம் எல்லாம் எப்படி போகுது? யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வரலையே” என்று முதல்வரின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் ராயன்.

“எல்லாம் ரவி மூலமா பக்காவா போய்ட்டு இருக்கு. பின்புலம் இல்லாத பசங்களா முதல் ஆண்டுல படிக்கறவங்களா பார்த்து கொடுத்துட்டு இருக்கோம். அவங்களும் ஓரளவுக்கு அடிமை ஆகிட்டாங்க. இவ்வளவு நாள் ஊசி போட்டுட்டு இருந்தவங்களுக்கு இப்ப தான் புகையிலை மூலமா கொடுக்கறத கத்து கொடுத்துட்டு இருக்கோம்.” என்றான் அந்த கல்லூரியின் முதல்வன் கண்ணப்பன்.

“ம்… எந்த வித சந்தேகமும் வர கூடாது. அவங்க அந்த போதை பொருளுக்கு அடிமையாகி அந்த சுகத்துக்காக என்ன வேணாலும் செய்யலாம் அப்படிங்கற நிலைமைக்கு கொண்டு வரணும் புரியுதா”

“ம்.. புரியுது சார்..”

இதற்கிடையில் வெளியே காவலாளியுடன் தர்ஷினி வாதம் செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது.

“சொன்னா கேளு மா இப்ப சார பார்க்க முடியாது. நம்ம காலேஜோட கரெஸ்பான்டென்ட் ராயன் சார் வந்திருக்காரு அவரு கூட மீட்டிங்க் போய்கிட்டு இருக்கு. உள்ள யாரையும் அனுமதிக்க கூடாதுனு சொல்லியிருக்காங்க” என்று அவளை தடுத்து கொண்டிருந்தான் காவலாளி.

அவனை அழைப்பதற்காக அழைப்பு மணியை அழுத்தினான் ராயன்.

அந்த சப்தம் கேட்டு “இங்கேயே இருமா… சார் கூப்பிடுறாரு..” என்று உள்ளே நுழைய அவனின் பின்னேயே உள்ளே நுழைந்திருந்தாள் தர்ஷினி.

“சார்.. சார்..” என்று அவர்களின் முன்னால் நின்றிருந்தாள்.

அந்த நேரத்தில் இப்படி ஒரு பெண்ணின் வரவை எதிர்ப்பார்த்திராத ராயனும் கண்ணப்பனும் அங்கே நின்றிருந்த காவலாளியை முறைத்தனர்.

அவர்களின் பார்வையில் அந்த காவலாளியின் நெஞ்சில் நீர் வற்றிப் போனது.

“இல்ல சார்… இந்த பொண்ணுகிட்ட எவ்வளவோ சொல்லியும் கேட்காம வந்துருச்சு… மன்னிச்சுருங்க சார்..”

ராயனோ அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “சொல்லு மா உனக்கு என்ன வேணும். எதுக்கு இப்படி சொல்ல சொல்ல கேட்காம உள்ள வந்த?” என்றான் தன் குரலில் இலகுத்தன்மையை கொண்டு வந்து.

“சார்.. நம்ம காலேஜ்ல முதல் வருஷம் படிக்கறவங்கல சில பேர் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகி இருக்காங்க சார். இப்ப கூட நம்ம காலேஜ்ல பின்னாடி இருக்கற அந்த பில்டிங்ல போதைல இருக்காங்க சார். ப்ளீஸ் அவங்கள எப்படியாவது காப்பாத்துங்க. என் ஃப்ரண்ட் ப்ரியாவும் அதுல ஒருத்தி. எப்படியாவது நீங்க இதுக்கு காரணமானவங்க யாருனு கண்டுபிடிச்சு தண்டனை கொடுக்கனும்” என்று அரக்கனிடமே நியாயம் கேட்டு நின்றாள்.

அதை கேட்டு போலியாக அதிர்ச்சியாகியவன் “அப்படியா??? கண்ணப்பன் என்ன நடக்குது இங்க?? நம்ம காலேஜ்குள்ள எப்படி போதை பொருள் எல்லாம் உள்ள வந்துச்சு? இதுதான் நீங்க காலேஜ நிர்வாகம் பண்ற லட்சணமா?? இதுக்கு காரணம் யாருனு நீங்க தான் கண்டுபிடிக்கனும். உங்கள நம்பி உங்க பொறுப்புல இந்த காலேஜ விட்டதுக்கு என்ன சொல்லனும்” என்று கண்ணப்பனை திட்டி கொண்டே “வாமா… அந்த பசங்க எல்லாம் எங்க இருக்காங்கனு கொஞ்சம் சொல்லு” என்றவன் தர்ஷினியை அழைத்து கொண்டு அவ்விடம் நோக்கி விரைந்தான்.

அங்கே அவர்களோ சுற்றியும் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்றே தெரியாமல் போதை உலகத்தில் சுழன்று கொண்டிருந்தனர்.

ராயன் மற்றும் கண்ணப்பன் இருவருடனும் வந்த தர்ஷினியோ “சார்… சார் இங்க பாருங்க சார்.. எல்லாரும் எப்படி போதையில இருக்காங்க.. இவ தான் சார் என் தோழி பிரியா… இவ குடும்பம் ரொம்ப ஏழ்மையானது சார். இப்படி இந்த மாதிரி பழக்கத்துக்கு அடிமையாகிட்டானு தெரிஞ்சா இவங்க குடும்பம் ரொம்ப பாதிக்கப்படும் சார். அதோட இவ எதிர்காலமும் பாதிக்கப்படும்.” என்று கண்களில் கண்ணீர் வழிய தனது தோழியையும் மற்றவர்களையும் பார்த்து கொண்டே கூறினாள்.

அவர்களின் நிலையை பார்த்தே அவர்கள் எந்த அளவிற்கு அடிமையாகி இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்ட ராயனோ இவங்கள எல்லாம் சமாளிச்சடலாம் ஆனா இவள எப்படி என்றவனின் எண்ணமும், பார்வையும் கண்ணில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த தர்ஷினியின் மேல் விழுந்தது.

“சார் எப்படியாவது இவங்கள காப்பாத்தி நல்வழிப்படுத்துங்க ப்ளீஸ்…” என்றவள் ராயனின் அருகில் வந்து அவனின் கைகளை பற்றி கொண்டாள்.

சட்டத்திற்கு புறம்பான எல்லா தொழில்களையும் செய்பவன், பணம் என்ற ஒன்றே வாழ்வின் குறிக்கோளாக வைத்து வாழ்பவன் ராயன்.

அந்த பணத்தை ஈட்டுவதற்காக பல உயிர்களை காவு வாங்கியவன். மிருகங்கள் எப்படி தனது பசிக்காக இன்னொரு இனத்தை காவு வாங்குமோ அதே போல் தனக்கு எந்த வகையிலாவது பணம் வரும் என்று தெரிந்தால் அதை செய்ய தயங்காதவன் இந்த அரக்கன்.

அவனால் மது மற்றும் மாதுக்கு மயங்கி தனது பொருட்களை, செல்வங்களை இழந்தவர்கள் ஏராளமானோர். அதனாலே என்னவோ இரண்டையும் தனது பக்கம் கூட நெருங்க விடாதவன்.

எத்தனையோ பெண்கள் அவனிடம் இருக்கும் பணத்திற்கு மயங்கி அவனை தங்களது வலைக்குள் சிக்க வைக்க போராடினர். ஆனால் யாரிடமும் மயங்கி நின்றதில்லை.

அப்பேற்பட்டவனின் பார்வை விழுந்தது என்னவோ இந்த மென்மையான குணம் கொண்ட பெண் என்ற சிறுமானிடம் தான். இது அந்த பெண்ணவளுக்கு நல்லதில்லையே. எல்லோரையும் நல்லவர்களாக பார்க்கும் பெண்ணவளுக்கு இங்கு மனித உருவில் உள்ளது ராட்சஷன் என்பதை பாவம் அவள் அறியவில்லை.

சாதாரண மனிதர்களிடத்தில் ஒரு மான் சிக்கியிருப்பதே ஆபத்து. அப்படியிருக்க இந்த அசுரனிடம் இருந்து எப்படி தப்பிப்பாள்.

அரக்கனோ, அசுரனோ யாராக இருந்தாலும் செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அதை யார் மூலமாக செய்வது என்பதையும் கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தன் கைகளை பற்றிய பாவையவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். பிரம்மனின் படைப்பில் செப்பு சிலை போல் இருந்தாள். இடை வரை நீண்டிருந்த கூந்தல் அழகாய் பின்னப்பட்டிருந்தது. காலையில் கல்லூரி கிளம்பும் பொழுது அவளது அன்னை வைத்து விட்ட மல்லிகைப்பூ சற்றே வாடியிருந்தது அவளது முகத்தை போன்று. முடிகள் கலைந்து ஒரிரண்டு அவளின் நெற்றி மற்றும் கன்னம் தொட்டு விளையாடி கொண்டிருந்தது. அவள் தலையாட்டி பேசி கொண்டிருக்கும் பொழுது அவளுடைய காதில் தொங்கிய ஜிமிக்கியோ கன்னம் தீண்டி கொண்டிருந்தது. அழுது அழுது சிவந்த நாசியில் ஒற்றை சிவப்புகல் பதித்த சிறிய மூக்குத்தி ஜொலித்தது. எதையோ கூறி கொண்டிருந்த அவளது அதரங்கள் வறண்டு போயிருந்தது. இன்னும் என்னென்ன நினைத்திருப்பானோ ஆனால் அவளுடைய கைகள் அவனை பிடித்து ஆட்டியதில் சுயநினைவுக்கு வந்தவன் அவளது கைகளின் மீது தனது கைகளை வைத்து தட்டி கொடுத்து “ரிலாக்ஸ் மா… ரிலாக்ஸ்.. உங்க பெயர் என்ன??” என்றான்.

“தேவதர்ஷினி சார்”

“இங்க பாருங்க தேவதர்ஷினி எப்படி ஒரு போதை பொருள் நம்ம காலேஜ்குள்ள வந்துச்சுனு எனக்கு தெரியல நான் என்ன ஏதுனு விசாரிச்சு இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துக்குறேன்.”

“ரொம்ப தேங்க்ஸ் சார்..” என்றவள் கையெடுத்து கும்பிட்டாள் அவனை பார்த்து.

அவளது கைகளை பிடித்தவன் “என்ன இது இதுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு” என்றவன் அவளது கைகளை பிடித்து அழுத்தினான். அப்பொழுது தான் இதுவரை தான் வேறொரு ஆடவனின் கைகளை பற்றியிருந்தோம் என்ற நினைவே அவளுக்கு உறைத்தது. உணர்ச்சி வசப்பட்டால் இப்படியா வேற்று ஆடவனின் கைகளை வெட்கமே இல்லாமல் பிடிப்பேன் இது தான் தன் அன்னை தனக்கு போதித்ததா என்று நினைத்து மருகியவள் அவனது கைகளிலிருந்து தனது கைகளை விடுவித்து கொண்டாள்.

அவன் அதை கவனித்தாலும் நல்லவன் வேஷம் போட்டாச்சு அதுக்கேத்த மாதிரி நடிக்க தானே வேண்டும் என்று நினைத்தவன் “மன்னிச்சுடு மா..” என்றவன் மேலும், “இவங்கள் இந்த போதை பழக்கத்திலிருந்து வெளிய கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு அதுக்கான எல்லா ஏற்பாடும் செஞ்சரலாம். ஆனா அவங்க பெற்றோர்களை வரவைச்சு அவங்க சம்மதம் சொல்லனும். இதுல நான் ஏதும் தனித்து முடிவெடுக்க முடியாது தேவதர்ஷினி. கண்ணப்பன் இப்பவே இவங்க பெற்றோர்களை அழைச்சு வர சொல்லுங்க. நானே அவங்ககிட்ட பேசறேன்.” என்றான்.

“ரொம்ப ரொம்ப நன்றி சார். உங்கள மாதிரி ஒரு நல்லவர் காலேஜ்ல படிக்கறதுல நான் ரொம்ப பெருமை படறேன்” என்றாள்.

“இதுல என்ன இருக்கு தேவதர்ஷினி. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இங்க நடந்தது எதுவும் மற்ற பசங்க கிட்ட சொல்லிடாதீங்க. ஒரு சிலர் செய்யற தப்புனால காலேஜ் பேர் கெட்டு போறது எனக்கு விருப்பம் இல்ல.” என்றான்.

“கண்டிப்பா சொல்ல மாட்டேன் சார். ஆனா இனி இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கோங்க சார். இதுக்கு காரணமானவங்களுக்கு கண்டிப்பா நீங்க தண்டனை வாங்கி கொடுக்கனும்.”

“கண்டிப்பா இனி இந்த மாதிரி நடக்காது.”

இந்த இடத்தில் இதே விஷயத்தை ஒரு ஆணோ அல்லது வேறு ஒரு பெண்ணோ வந்து கூறியிருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும். ஆனால் முதல் பார்வையிலேயே தனது உள்ளம் கவர்ந்தவளிடம் நல்லவனாக நடிக்க மட்டுமே முடிந்தது அவனால்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் போதையில் இருந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் பேசி தானே ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுவதாகவும் அதற்கு உண்டான செலவை தானே ஏற்று கொள்வதாகவும் கூறினான். அவர்களும் தங்களது பிள்ளைகள் இந்த பழக்கத்திலிருந்து வெளியே வந்தால் போதும் என்று நினைத்து ஒத்து கொண்டனர்.

அடுத்து வந்த ஒரு மாதத்தில் ராயன் அடிக்கடி அந்த கல்லூரிக்கு வந்தான் வேண்டுமென்றே தேவதர்ஷினியை ஏதேச்சயாக சந்திப்பது போல் சந்தித்தான். அவளிடம் நல்ல முறையிலேயே பேசி கல்லூரியின் குறைகளை கேட்டறிந்து அதை அப்பொழுதே நிவர்த்தி செய்தும் கொடுத்தான். மொத்தத்தில் தேவதர்ஷினியின் கண்களுக்கு அவன் மிக மிக நல்லவன் போல் தோற்றத்தை உருவாக்கி கொண்டிருந்தான் ராயன்.

உண்மையாக ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருந்தால் அவளுக்காக தன்னுடைய கொள்கை, விருப்பு, வெறுப்பு, தன்னுடைய அகந்தை, அகங்காரம் என்று அனைத்தும் துறந்து அவளுக்காக வாழ வேண்டும். அப்படி பார்த்தால் இவன் காதல் என்று உருவகப்படுத்தியது அதில் சேர்த்தியாகாதே.

இவனுடைய நல்லவன் வேஷத்திற்கும் முடிவு கட்டும் நாள் ஒன்றும் வந்தது. அன்றே பட்டாம்பூச்சியை போல் மகிழ்ச்சியாக சிறகை விரித்து பறந்தாடும் இந்த பேதையவளின் வாழ்க்கையும் சிறகொடித்து கூண்டுக்குள் அடைபட்டது.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமும் தினமும் ஏதாவது ரகளை செய்து கொண்டிருந்தனர். இன்று அவர்களின் சேட்டைகள் கொஞ்சம் எல்லை மீற சில பெண்களிடம் ரகளை செய்து கொண்டிருந்தனர். எல்லாரும் பெரிய இடத்து பசங்க என்பதால் அவள் நேரே சென்று ராயனிடம் புகார் தெரிவிக்க நினைத்தாள்.

அவனின் அறைக்கதவை தட்டி விட்டு அனுமதிக்காக காத்திருக்க, விடை கிடைக்காமல் போக சிறிது நிமிடங்களில் உள்ளே நுழைந்தாள். யாருமற்ற அந்த அறையை கண்களால் அலசினாள். யாருமில்லை என்று வெளியே செல்ல நினைத்த நொடி ஒரு சிலர் பேசும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்ட திசை நோக்கி சென்றாள் அங்கே ஒரு கதவு ஒன்று இருந்தது. அதனுள்ளே ராயனும் கண்ணப்பனும் பேசி கொண்டிருந்தனர்.

“இங்க பாரு போன தடவை அந்த தேவதர்ஷினி இடையில் வந்தனால நம்ம போட்ட திட்டம் எல்லாம் கொஞ்சம் தாமதமாகிடுச்சு. ஆனால் இந்த தடவை அப்படி ஏதும் நடக்காம பார்த்துக்கனும். போன தடவை அந்த பசங்கள மறுவாழ்வு மையத்துல சேர்க்கற மாதிரி சேர்த்துட்டு அதுக்கப்புறம் அவங்க தப்பிச்சுட்டாங்கனு அவங்க பெத்தவங்களை எல்லாம் நம்ப வச்சு நம்ம ப்ளான செயல்படுத்துறதுக்குள்ள ரொம்ப தாமதமாகிடுச்சு. அங்க வெளிநாட்டுல எல்லாம் காச கொடுத்துட்டு பொருள் எப்ப கிடைக்கும்னு எதிர்பார்த்துட்டு இருந்தானுங்க. அதனால் இப்ப ரொம்ப ஜாக்கிரதயா இருக்கனும்” என்றான்.

ராயனின் வேலையே அவன் கல்லூரியில் படிக்கும் வசதியற்ற மாணவர்களில் பல பேரை தேர்ந்தெடுத்து அவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி போதையில்லாமல் அவர்களால் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வரும் பொழுது அவர்களுக்கு தெரியாமலலேயே அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து வெளிநாட்டிற்கு விற்று விடுவான். ஆண்களை இப்படி பயன்படுத்தினான் என்றால் பெண்களை அங்கே அடிமைகள் போல விற்று கொண்டிருந்தான். அவர்களை வாங்குபவர்கள் கொஞ்ச காலம் அவர்களை அனுபவித்து விட்டு அங்கே விலை மாதர்களாக்கப்படுவர். இப்படி இவன் பிடியில் சிக்கி போதைக்கு அடிமையாகி அவர்களின் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளமானோர்.

இப்படி சில விசயங்களை மறைமுகமாகவும் சிலதை நேரடியாகவும் கண்ணப்பனிடம் கூறிக் கொண்டே வந்து கதவை திறந்தவனை வரவேற்றது என்னவோ தேவதர்ஷினியின் அதிர்ந்து நின்ற தோற்றம் தான்.

ஒரு நிமிடம் அவனும் அதிர்ந்தான். ஆனால் அந்த அதிர்வு அடுத்த நிமிடமே மறைந்து அவனின் முகத்தில் ஒரு ஏளன புன்னகை வந்தது.

“ஹே… தேவதர்ஷினி…. இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க… என்ன வேணும் ஏதும் பிரச்சனையா??” என்று அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். அவன் அவளை நெருங்க நெருங்க அவள் பின்னோக்கி நகர்ந்தாள்.

அவளின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை சொட்டுகள் வடிந்தது. அதை பார்த்து “ஏய் என்ன இப்படி வேர்க்குது. இந்த ஏசி ரூம்லயும் இப்படி வேர்க்குதே பாரு உனக்கு..” என்றவன் அவளது முகத்தை தன் கைக்குட்டையால் துடைக்க சென்றான்.

அவளோ முகத்தை திருப்பி கொண்டாள். அவளது முகத்திருப்பலில் கோபம் வந்தாலும் அவனின் இதழ் ஏளனப் புன்னகை ஒன்று சிந்தியது.

“சோ…. நீ நாங்க பேசுன எல்லாத்தையும் கேட்டுட்ட ரைட்… அப்ப வெளிய போய் எல்லார்கிட்டயும் இங்க என்ன நடந்துச்சுனு சொல்ல போற அப்படித்தானே.” அவனின் அந்த கேள்வியில் என்னை மீறி சொல்லி விடுவாயா என்ற மிரட்டலும் தொக்கி இருந்தது.

அதை அறிந்து கொண்டவளோ அவனது முகத்தை அச்சத்துடன் பார்த்தாள்.

“என்னடா இவன் ரொம்ப நல்லவன் மாதிரி நடந்துகிட்டானே இப்ப இப்படி வில்லன் மாதிரி நடந்துக்கறானேனு சந்தேகமா இருக்கா பேபி… நான் எப்பவுமே கெட்டவன் தான் ஆனா என்னமோ தெரியல நீ அன்னைக்கு என் கைய பிடிச்சு தொட்டு பேசன உடனே உள்ளே என்னமோ பண்ணிடுச்சு. அதுக்கப்புறம் தான் உன்னை நல்லா கவனிச்சேன் என்ன அழகுமா நீ.. அச்சோ… இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் திரும்பி பார்த்ததுமில்ல என் பக்கத்துல நெருங்க விட்டதுமில்ல. ஆனா நீ ஏதோ கொஞ்சம் ஸ்பெஷலாகிட்ட எனக்கு… அதான் உங்கிட்ட நல்லவன் வேசம் போட வேண்டியதா போச்சு.. இதே அந்த இடத்துல வேற யாராவது இருந்திருந்தா அன்னைக்கு நடந்ததே வேறயா இருக்கும். இதுவரைக்கும் யார்கிட்டயும் இவ்வளவு விளக்கம் சொல்லாதவன் உன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன் பாரு… எவ்ளோ மாத்திட்ட பேபி என்னைய..” என்றவன் மிக அருகில் நெருங்கி நின்றான். இருவரது மூச்சுக் காற்றும் தொட்டு கொண்டிருக்கும் தூரம் அவளோ அருவருப்பும் அவஸ்தையும் கலந்த உணர்வுடன் நின்றிருந்தாள்.

“இப்ப என்ன பண்ணலாம் பேபி.. உன்ன கொல்லவும் மனசு வரலையே பேபிமா… அதே சமயம் சரி பொளச்சு போனு வெளிய விட்டா கண்டிப்பா இங்க நடந்தத எல்லாம் வெளிய சொல்லிடுவ.. என்ன பண்றது” என்று சிறிது நேரம் சிந்திப்பது போல் பாவனை செய்தவன் “நீ மாமி தானே.. சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் தெரிஞ்சவ.. எனக்கும் உன்னைய ரொம்ப பிடிச்சிருக்கு வேற சோ..” என்று இழுத்தவன் “நம்ம ரெண்டு பேருக்கும் இப்பவே கல்யாணம் நடக்குமாம். என்னைய விட்டு நீயும் போக மாட்ட.. அப்புறம் போலீஸ்கிட்டயும் காட்டி கொடுக்க மாட்ட ஏனா நான் தான் உன் புருஷன் ஆகிடுவேனே.. புருஷன், பதி பக்தி ப்ளா, ப்ளா என்னென்னமோ சொல்லிவீங்களே நீங்க. சோ எனக்கும் பாதுகாப்பு.. எப்படி எல்லாத்துக்கும் ஒரே கயித்துல தீர்வு வந்துடுச்சா..” என்றான் சிரித்து கொண்டே.

அவனின் அப்பேச்சை கேட்டவளுக்கோ உலகமே ஸ்தம்பித்த உணர்வு. எப்படி ஒரு கேடு கெட்டவன், ஒரு கொலைகாரனை கணவனாக ஏற்று கொள்வது இதற்கு அவன் தன்னை கொலை செய்திருந்தால் கூட பரவாயில்லை என்றே தோன்றியது அவளுக்கு.

கண்களில் நீர் வழிய அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு “ப்ளீஸ் சார்.. என்னைய விட்டுடுங்க.. எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம். நான் சத்தியமா யார்கிட்டயும் இங்க நடந்தத வெளியே சொல்ல மாட்டேன். ப்ளீஸ்.. ப்ளீஸ்” என்று கதறினாள்.

அவளின் கதறல் எல்லாம் அவனுக்கு கேட்கவே இல்லை. அவனின் உதவியாளரை அழைத்தவன் திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்ய சொன்னான்.

இதை கேட்ட அவளுக்கோ அவனுடனான அவளின் திருமணம் என்பது தினம் தினம் நரக வேதனை அனுபவிப்பது போன்றது அதற்கு தான் இவ்வுலகை விட்டு செல்வதே மேல் என்று நினைத்தவள் அருகே அழகுக்காக வைத்திருந்த கண்ணாடி குடுவையை எடுத்து உடைத்தவள் அதன் கூர்மையான பகுதியை தனது வயிற்றின் உள்ளே ஏற்றியிருந்தாள். அதில் அவளது வயிற்று பகுதியிலிருந்து உதிரம் பெருக தன் மனதினுள் தாய் தந்தையரிடம் மன்னிப்பை கேட்டு கொண்டே மயங்கி சரிந்தாள்.

அவளது அந்த நிலையை கண்ட ராயனோ ஒரு ஏளன சிரிப்பை சிந்தி விட்டு அவளை அள்ளிக்கொண்டே மருத்துவமனைக்கு விரைந்தான்.

முழுதாக ஒரு நாள் கழித்தே கண்விழித்தாள் தர்ஷினி. கண்களை திறந்தவுடன் சில நொடிகள் மங்கலாக தெரிந்து பின்பு தெளிவாக தெரிந்த அவளின் கண்முன்னே அவளின் தாய் மட்டும் நின்றிருந்தனர்.

“அம்மா…” என்று ஈனஸ்வரத்தில் முனங்கியவள் எழுந்து அமர முயன்ற பொழுது வயிற்று பகுதியில் சுள்ளென்ற ஒரு வலி உண்டாகியது. வலியினால் முகம் சுளித்து கண்களில் கண்ணீரும் பெருகியது.

உன்ன பத்து மாசம் சுமந்து பெத்ததுக்கு நல்ல ஒரு பெருமைய எங்களுக்கு தேடி தந்துட்டடி… ஒத்த பொண்ணுனு செல்லம் கொடுத்து வளர்த்தோம் பாரு எங்கள சொல்லனும். எப்ப பெத்தவங்கள விட எவனோ ஒருத்தனுக்காக உயிரையும் கொடுக்க துணிஞ்சயோ அப்பவே எங்க பொண்ணு செத்துட்டா.. நீ கண்முழிச்ச பின்னாடி உன்ன நாக்க பிடிங்கற மாதிரி கேட்கனும்னு தான் நான் நின்னுட்டு இருக்கேன். நாங்க செத்தா கூட நீ வந்து பார்க்க கூடாது பார்த்துக்கோ” என்று கண்களில் வழிந்த கண்ணீரை தனது முந்தானையில் துடைத்து கொண்டே வெளியேறினார் தர்ஷினியின் தாய்.

பாதி மயக்கத்தில் இருந்தவளுக்கு எதற்கு தனது அன்னை தன்னை திட்டினார் என்று அறியாமலேயே அமர்ந்திருந்தவளுக்கு அப்பொழுது தான் மயக்கமடையும் முன் நடந்த நிகழ்வுகள் யாவும் கண்முன்னே வர இப்பொழுது எங்கே இருக்கிறேன் என்று அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்து மருத்துவமனை என்பதை அறிந்தவள் எப்படி தாம் இங்கே வந்தோம் என்று எழுந்து அமர முற்பட்டாள்.

“மேடம் மேடம் இப்ப எழுந்திரிக்காதீங்க..” என்று அவசர அவசரமாக உள்ளே ஒரு தாதி நுழைந்தார். “ரொம்ப கஷ்டப்படுத்திகாதீங்க தையல் பிரிஞ்சட போகுது. ராயன் சார் பார்த்தா எங்கள தான் திட்டுவார். ஆனாலும் ரொம்ப காதல் போல அவர் மேல. அவருக்காக சாக துணிஞ்சுட்டீங்களே மேடம்..” என்று சிரித்து கொண்டே பேசினாள்.

அவளின் பேச்சில் இருந்த ராயனின் மீது காதல் என்ற வார்த்தையை கேட்டு அருவருப்புடன் முகம் சுழித்தாள்.

அதற்குள் ராயன் உள்ளே நுழைந்தான். அவனை கண்டவுடன் அங்கிருந்த தாதி வெளியேறினாள்.

“என்ன பேபி… இப்ப ஒகே வா நீ.. டாக்டர்கிட்ட பேசினேன். இன்னும் ஒரு வாரத்துக்கு இங்க தான் இருக்கனும்னு சொன்னார். ஆனா நான் முடியாதுனு சொல்லிட்டேன். உடனே நம்ம வீட்டுக்கு போறோம் அங்கயே இந்த ஹாஸ்பிட்டல் செட்டப் எல்லாம் கொண்டு வந்துடலாம்.. போலாமா பேபி..”

“நா… நான் எதுக்கு உன் கூட வரனும்..” என்றாள் மெல்லிய குரலில்.

“எதுக்கா… என் பொண்டாட்டி என் கூட வராம வேற எங்க வருவா” என்றான் குரலில் ஒரு வித கேலியுடன்.

“பொண்டாட்டியா… நானா..” என்றாள் ஒருவித அதிர்ச்சியுடன்.

“ஆமா… தாலி கட்டிட்டா பொண்டாட்டி தானே..” என்றவன் அவளின் அருகே நெருங்கி அவளது கழுத்தில் இருந்த தாலியை எடுத்து அவளுக்கு காண்பித்தான்.

“பாரு இவ்வளவு நேரம் உன் கழுத்துல தானே இருந்துச்சு அதுகூட தெரியலையா…” என்றவன் அதை விடுவித்தான்.

தான் கனவு ஏதும் காண்கிறோமா என்று நினைத்து கொண்டே அவளது கழுத்தில் இருந்த தாலியை கைகளில் ஏந்தினாள்.

மஞ்சள் கயிற்றில் பொன்னால் செய்யப்பட்ட தாலி அவளது கைகளில் உறுத்தி இது கனவில்லை நிஜம் என்பதை அவளுக்கு தெளிவூட்டியது.

எந்த ஒரு பாதாளத்திலிருந்து தப்பிப்பதற்காக தனது உயிரையும் போக்கி கொள்ள எண்ணினாளோ அதற்கு பலன் இல்லாமல் போயிற்று அந்த கடவுளுக்கு கூட தன் மேல் கருணை என்பதே இல்லையா? தான் இந்த நரகத்தை ஏற்று தான் ஆக வேண்டும் என்பது விதியோ என்று நினைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றாக பெருகியது.

“என்ன பேபி… சும்மா.. சும்மா கண்ணுல இருக்கற டேம திறந்து விட்டுட்டே இருக்க… இனி என் கூட தான் இந்த வாழ்க்கைய நீ வாழ்ந்தாகணும் வேற வழியே இல்லை” என்றவன் அன்றே அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான்.

அன்று முதல் தினம் தினம் அவள் நரகத்தை மட்டுமே சந்தித்து வந்தாள். உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் அவளுக்கு நரகத்தை காட்டி கொண்டிருந்தான் ராயன் எனும் அரக்கன்.

இதை சொல்லி முடிக்கும் பொழுது தர்ஷினியின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாக பெருகியது. அதை கேட்ட வெற்றிக்கோ அவனை அடித்து கொல்லும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.



கருத்து திரி:

 
Status
Not open for further replies.
Top