All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதியலின் வே(சோ)தனைகள் கதை திரி

Status
Not open for further replies.

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் டார்லிஸ்,

இது அழகிய சங்கமம் நாவல் போட்டிக்காக எழுதப்படும் கதை திரியாகும்.
கதையின் தலைப்பு : வேதியலின் வே(சோ)தனைகள்

கதையின் தலைப்பின் மூலம் ஏதேனும் யூகிக்க முடிகிறதா(?) செல்லங்களே... :unsure::unsure:
உங்கள் யூகங்களையும் கதையினைப் பற்றிய கருத்துக்களையும் கருத்துத் திரியில் பகிருங்கள் பட்டூஸ்:love::love::love:


இக்கதை உங்கள் நெஞ்சமதில் வேதியல் வினைப்புரிந்து வேதனைகள் கலைந்து நெஞ்சில் நிறைந்து உயிரில் கரைந்து உங்கள் மனதில் என்றென்றும் உயிர்த்திருக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன்😊😊😊


அனைவரின் ஆதரவுகள் மற்றும் கருத்துகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என் அன்பு தோழமைகளே 😍😍😍😍😍
 
Last edited by a moderator:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேதியலின் வே(சோ)தனைகள் தலைப்பை பார்த்ததும் தலை தெறிச்சு ஓடிராதிங்க லட்டூஸ்😂😂😂
இது என்னடா நமக்கு வந்த வேதனை சோதனை அப்படினு நினைச்சிடாதிங்க ,
எல்லாம் ஒரு முன் எச்சரிக்கை தான் சிலருக்கு வேதியியல் என்றாலே அலர்ஜி இல்லையா(?)


வருத்தபடாதிங்க மக்களே வேதியியல் பாடம் எடுத்து உங்கள வருத்தெடுக்கவும் மாட்டேன் வருத்தப்பட வைக்கவும் மாட்டேன். 😂😂😂 சோ , நீங்க எல்லாரும் ஜாலியா என்ன வருத்தெடுக்காம வருத்தக்கடலை சாப்பிட்டுகிட்டே கதை படிங்க😉😉😉


நம் வாழ்வில் இரண்டற கலந்த ஒன்றை ஒதுக்கி வைப்பது முறையில்லையல்லவா (?) அதான் வேதியலுக்கு ஆதரவு கொடி தூக்கி கொண்டு வந்து இருக்கேன்.

வேதியியல் வேதனையை மட்டுமே பரிசளிக்குமா என்ன(?)
அல்லது சோதனைகள் வேதனையாகிடுமா(?)

சோதனைகள் யாவும் சாதனை படைக்கவே என்பதனை அறிவோமா(?) அல்லது அறிய மறந்தோமா(?)

இந்த கதையில் வருபவை அனைத்தும் கற்பனையே… அசாத்தியம் சாத்தியாமானல் சாத்தியமும் அசாத்தியமே… அதாவது நடைமுறைக்கு அப்பாற்பட்ட விஷயங்களா இருக்கும் , சோ கண்டுகாதிங்க செல்வங்களா😂😂😂


முன்னோட்டம்:


அடியே, என்ன வேலை பண்ணி இருக்க அய்யோ அய்யோ அதோட விலை 1 கோடி டி இப்படி முழுங்கிட்டு அசால்டா முழுங்கிட்டேன் சொல்றியே அறிவிருக்கா உனக்கு, நீ சாப்பிட இது தானா கிடைச்சுது இன்னும் பல வார்த்தைகள் கொண்டு வசை மழை பொழிந்தார் வசந்தியின் மாமியார்…

இன்னிசை மழையில் நனைபவள் போல் இவை அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள் ,பிகாஸ் மாமியார்னா திட்டுறதும் மாடுனா முட்டுறதும் சகஜம் தானே😂😂😂 என்ற மனோபாவம் அவளிடம்


என்னடி நான் என்ன இங்க கச்சேரியா நடத்துறேன் இல்ல கேசரி கிண்டி தாரேனா இப்படி பாத்துட்டு இருக்க கிளம்புடி ஹாஸ்பிட்டலுக்கு உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல எனக்கு நீ சாப்பிட்ட அந்த வைரக்கல் வேணும் என்றிருந்தார்….

என்னாது வைரமா(?) அத்தை அது கல்கண்டு வைரம் இல்ல , இனிப்பா இருந்துச்சே நான் கடிச்சு தான் சாப்பிட்டேன் எனக்கு தெரியாதா , அப்பாவியாய் வினவினாள்.


அடிப்பாவி மகளே , கல்கண்டுக்கும் வைரத்துக்கும் வித்தியாசம் தெரியாது , யார்கிட்ட கதை விடுற சொல்லுடி எங்க வச்சு இருக்க திருடிட்டியோ அவளை சந்தேகமாய் பார்த்தபடியே ஆத்திரமடங்காமல் கத்தினார் எல்லாம் நான் பெத்தத சொல்லனும் யார எங்க வைக்கனும்னு அறிவில்லாம உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டான்ல…
குப்பைய கோபுரத்துல வச்சாலும் குப்பை குப்பை தான் என்று நொடித்துக்கொண்டார்.


போதும் நிறுத்துங்க , அவன் குரலில் தான் எத்தனை கடுமை அதில் அவ்விடமே அதிர்ந்தது, இதுக்குமேல ஒருவார்த்தை அவள பத்தி தப்பா பேசினிங்க நான் மனிஷனா இருக்கமாட்டேன் என்றான் வசந்த் , வசந்தியின் காதல் கணவன்…


நீங்க என் அம்மாங்கிற காரணத்தினால அமைதியா இருக்கேன் என்றவன்,
அவர் முன்னே செய்திதாளை விட்டெறிந்தான், நியூஸ் படிக்கிற பழக்கம் இருந்தா தானே அட்லீஸ்ட் நீயூஸ் ஆச்சு பாக்கணும் அதுவுமில்ல சீரியலே சரணம்னு இருந்தா இப்படிதான் எரிச்சலாக மொழிந்துவிட்டு இப்பயாவது படிங்க என்றவன் உறைநிலையில் கலங்கியபடி நின்றிருந்த தன் மனைவியை கையோடு அழைத்துச் சென்றான்….

பார்வையை அன்றைய நாளிதழில் பதித்தவர் அதிர்ச்சியில் தொய்ந்து அமர்ந்துவிட்டார்…

தலைப்பு செய்தியே அவர் தலையில் இடியை இறக்கியது , அவர் தலையில் மட்டுமா(?)


**************************************

தன் எதிரே அமர்ந்திருந்தவனை அலட்சியமாய் பார்த்திருந்தாள் அவள் , அவள் Dr.விகாஷனா விஷ்வநாதன் சுருக்கமாக Dr.விவி மிகவும் நெருக்கமானோருக்கு விகா அவளவனுக்கு ’ ஷனு ‘... (நம் கதையின் நாயகி போன்றவள்)

இத்தனை நேரம் அவளை ரசனையாய் பார்த்திருந்தவன் அவளின் அலட்சிய பாவனையில் ஆத்திரமடைந்து அவளை உருத்து விழித்தான் அவன் Dr.விவேக் விஷ்வேஷ்வர் சுருக்கமாக Dr.விவி. (நம் கதையின் நாயகன் போன்றவன்)

இருவரும் இரு வேறு துறையைச் சேர்ந்தவர்கள் சில காரணங்களால் தற்போது நிலவி இருக்கும் காரணத்தினால் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்…

விரும்பும் ஓர் உள்ளம் விருப்பமில்லா ஓர் உள்ளம் இரு உள்ளங்களும் காந்தமாய் ஈர்க்கப்பட்டு வேதியியல் வினைப்புரிந்து சாதனைப் படைக்குமா(?) வேதனையில் சிக்குமா(?) சோதனைகளை சோதிக்குமா(?) பொருத்திருந்து பார்ப்போம்…


வேதனையின் தீர்வு நோக்கி சோதனைகள் தொடரும்…..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா ஒரே ஒரு டீஸர் போட்டுட்டு ஓடிப் போய்ட்டாலேனு என்னை தேடிய அன்பு உள்ளங்களுக்கு முக்கிய செய்தியுடன் 2வது முன்னோட்டம் இதோ....



முன்னோட்டம்:2

வணக்கம்,
முக்கிய செய்திகள்

இன்று காலையில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்…
அதிர்ச்சியில் அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்ப்பட்டு பிரபல நகைகடை உரிமையாளர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதி…
எறும்புகள் சூழ , ஈக்கள் மொய்த்த நிலையில் நகைகடைகள்

செய்திச் சுருக்கம்

இன்று காலையில் வழக்கம் போல் நகைகடைகளை திறக்கும் போது அங்கு கண்ட காட்சியில் நகைகடை ஊழியர்கள் அதிர்ந்தனர்…

ஈக்கள் எறும்புகள் மொய்க்கபட்ட நிலையில் நகைகடைகளின் காணொளி காட்சி இதோ…

வைர நகைகள் அனைத்தும் ஈ , எறும்புகள் மொய்க்கப்பட்ட நிலையில்...

வைரங்கள் எல்லாம் கற்கண்டாய் மாறிய திடுக்கிடும் தகவல்…
தங்க நகைகள் யாவும் தகரமாகிய மர்மம்…
மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன…

இதனால் பிரபல நகைகடை உரிமையாளர்கள் அதிர்ச்சி
மாரடைப்பு ஏற்ப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்….

அனைத்து அணிகலன்களும் வேறு உலோகங்களாக மாற்றம். இதனைக் குறித்து விசாரிக்க RAW, CBI போன்ற பல்வேறு துறையினருக்கும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது... ஆராய்ச்சியாளர் விஞ்ஞானிகள் பலரும் இது குறித்து ஆய்வு மேற்க்கொள்ள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது…

இதன் பின்னனி என்ன(?) மர்ம முடிச்சுக்கள் கட்டவிழ்கபடுமா(?)


வேதனைகளின் தீர்வை நோக்கி சோதனைகள் தொடரும்....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லைக்ஸ் மற்றும் கமெண்ட் பண்ணின எல்லா லட்டூஸிற்கும் எனது நன்றிகள்... 😍😍😍😘😘சத்தமில்லமா சைலண்டாக கதையினை படிக்கும் பட்டூஸ் உங்களுக்கும் எனது நன்றிகள்... 😍😍😍நீங்களும் கருத்து தெரிவிச்ச ஐ பீல் ஹாப்பி மக்களே😊😊😊💕💕
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் -3

கண்களில் கனல் பறக்க அவனை முறைத்துக் கொண்டிருந்தால் ,விகாஷனா

அதனை கண்டு ஏளனமாக வளைந்தது அவனின் இதழ்கள்… ஷனு பேபி என்னோட இந்த கண்டிஷன நீ ஏத்துகிட்டு தான் ஆகனும்…

ஏத்துக்கலனா ? அலட்சியமாக வினவினால் ….
ஏத்துக்க வைப்பேன் டீ …
முடியாது போடா … உன்னால ஆனத பாத்துக்கோ எரிச்சலுடன் மொழிந்தாள்….

என்ன பகைசிக்கிறது உனக்கு நல்லது இல்ல பேபி என்றவன் அடுத்து செய்த செயலில் அவள் தலை தானாக அசைந்து அவனுக்கு இசைவாக இசைந்து சம்மதம் தெரிவித்தது….

**********************************************


இத்தனை நாட்களாக டாம் அண்ட் ஜெர்ரியாய் இருந்தவர்கள் இன்று இல்லறம் என்ற இனிய பந்தத்தில் அடியெடுத்து வைத்திருந்தனர்…

ஆம் அன்று காலையில் தான் Dr. விவேக் விஷ்வநாதன் மற்றும் Dr.விகாஷனா விஷ்வேஷ்வரின் திருமணம் நடந்தேறியது… தனது ஷனு பேபியை தன்னில் சரிபாதியாய் ஏற்றுக்கொண்டான் விவேக்…

**********************************************

என்னதான் அவனை அலட்சியமாக எண்ணி முறைத்துக் கொண்டு திரிந்தாலும் இன்று ஏனோ அவன் தன் மணாளனாகிய பின்னர் அவனை தனிமையில் எதிர்கொள்ள மங்கையவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது…

இருந்தும் அவளின் இயல்பான துடுக்குதனமும் ,தைரியமும் அவளை துவண்டுவிடாமல் அவனை எதிர்க்கொள்ள தயார் செய்தது… இது மனம் செய்யும் மாயாஜாலமன்றி வேறென்ன …

பின்னர் ஒரு முடிவெடுத்தவளாய் சற்றே தன்னை தேற்றிக் கொண்டு அக்காரியத்தினை செய்து முடித்தவள் முகத்தில் இன்னதென்று பிரித்தறிய முடியாத உணர்வுகள்….


நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த படுக்கையறையின் கதவினை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த விவேக் அறையிருந்த கோலம் கண்டு திகைத்தான்…

அங்கே அவனின் ஜெர்ரி அழகாய் சயனித்திருந்தாள் அவளை ரசனையாக பார்த்திருந்தவன் விழிகள் சட்டென்று செங்கொழுந்தாய் சிவந்தது கோபத்தில்…


வேக எட்டுகள் வைத்து அவளை நெறுங்கியவன் அவள் தூங்கவில்லை என்பதையறிந்து அவளை சீண்ட எண்ணினான்…

சத்தமின்றி அவள் அருகில் நெருங்கியவன் இதழ்கள் அவளது இதழினை நெருங்கியது அதில் துணுக்குற்றவள் சுதாரித்து நகர்ந்ததில் அவனது இதழ்கள் இடம் மாறி அவள் பிறை நுதலில் இதழ் பதிந்தது…

அதில் அவள் தேகம் சிலிர்த்ததோ(?) அவளே அறியால்...
இதழின் ஈரத்தில் கொதித்தெழுந்தவள் அவனை தள்ளிவிட்டு எழுந்தமர்ந்தால் அவள்… சற்றே சுதாரித்தவன் கண்களில் மீண்டும் கோபம் குடி கொண்டது…
இப்போது கோபத்தில் இருவரும் சண்டைகோழியாக சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

ஏய் என்னடி இதெல்லாம் கோபத்தில் கர்ஜித்தான் அவன்… பார்த்தா தெரியல கேலியாய் சிரித்தால் , அவளது கேலியில் சினந்தவன் அது பார்த்தா தெரியுது , எதுக்கு டீ இப்டி லூசு தனமா மெத்தைக்கு நடுவுல கயிறு கட்டி வைச்சதும் இல்லாம ஷெல்ஃப்ல இருந்த புக்ஸ் எல்லாம் மெத்தைல அடுக்கி வச்சு விளையாடிட்டு இருக்க…


செவி மடலில் தனது விரலினை நுழைத்து குடைந்தவாரே பேசி முடிச்சிட்டியா என்பது போல் பார்த்து வைத்தவள் இங்க பார் என்னால சோபால படுத்து தூங்க முடியாது நீயும் தூங்க மாட்டனு தெரியும், அதான் இப்படி என்னோட சேப்டிக்கு … இந்த கயிறு புக்ஸ் தாண்டி உன்னால வர முடியாது வரவும் கூடாது அதிகாரமாய் உரைத்தால்…

அதில் அவளை சுவாரசியமாக நோக்கியவன் ஆமா இது வாகா பார்டர் நாங்க வான்டட்டா உள்ள வந்து ஆக்கிரமிப்பு பண்ணிடுவோம் அப்படியே வந்தாலும் என்னடி செய்வ என் ஷனு பேபி, சரசமாய் கேட்டுக்கொண்டே அவளை சட்டென்று தன் புறம் இழுத்து அவளை சிறைப்பிடித்தவன் இதழ்கள் அவள் செவிமடல்களை தீண்டி உரைத்த செய்தியில் அதிர்ச்சியடைந்து திகைத்து விழித்து உறைந்து சிலையாய் சமைந்தால்….


உன் ரகசிய பார்வையினால்
எனக்குள் ரசாயன மாற்றங்கள்
நிகழ்த்துகிறாய்
வேதியலின் வித்தகியே…

மின் காந்தபுலமாய் உன்னை சூழும் என் காதலில் இயல்பாய் சிக்கி இந்த இயற்பியலாலனின் மீது நீ மையல் கொள்வதும் எப்போதடி….



வேதனைகளின் தீர்வை நோக்கி சோதனைகள் தொடரும்...


WhatsApp Image 2019-04-13 at 12.57.49 AM.jpeg
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

எனது கதைக்கு கருத்தினை பகிர்ந்து லைக்ஸ் இட்ட அனைத்து லட்டூஸ்கும் எனது நன்றி. மேலும் சத்தமில்லாமல் படிக்கும் ஸ்வீட்ஸிற்கும் நன்றி. அப்படியே கதை பத்தி கருத்து தெரிவிச்சா மகிழ்ச்சி எனும் மழைச்சாரலில் நனைவேன் பிகாஸ் "என்னா வெயிலு" 😂😂😂

இதோ எனது கதையின் முதல் அத்தியாயத்துடன் நான் மீண்டும் வந்துட்டேன் செல்லம்ஸ்😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-1


அந்த அழகிய அதிகாலை வேளையில் புலர்ந்தும் புலராத புதிய விடியலில் என்றும் புதுமைகளை வாரி வழங்கும் வாழ்க்கையினை பற்றி எப்போதும் தோன்றும் சிந்தனையுடன் இன்றும் அதே போன்றதொரு சிந்தனையில் வான்வெளியினை வெரித்துக் கொண்டிருந்தாள் அவள்…

பிரபஞ்சம் பல அதிசயங்களை உள்ளடக்கியது என்று பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மனிதர்கள் சிலர் அவர்கள் மனதினை ஆராய்ச்சி செய்வது அரிது. அவர்கள் இதனை அறியத் தவறினறா(?) இல்லை மறந்தனரா (?)

உலகில் ஏராளமான விசயங்கள் மர்மங்களாய் கண்ணுக்கு புலப்படாது கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது முடிச்சுக்கள் அவிழ்கப்படா நிலையிலும் அதனைப் பற்றி பல கதைகள் புனையப்பட்டு பரந்த உலகில் பரவி வருகிறது…

வாழ்கையே மர்மங்கள் நிறைந்த பயணம் தான் என அறிந்தோர் சிலரே… ஆம் வாழ்கை எந்நொடி எத்தகு விஷயங்களை நமக்கு எப்போது(?) எங்கே(?) ஏன்(?) எவ்வாறு(?) எதற்காக(?) எதனால்(?) பரிசளிக்கும்/ பாதளத்தில் தள்ளும் என்பதினை யவரும் அறிகிலர்…

ஆனாலும் அறிவீனத்தில் மூழ்கி திளைக்கும் மாந்தர் இனமோ பல தீய வழிகளில் சென்று அழிக்கும் சக்தியாக உருபெறுகின்றனர்…

அவளுக்கு எப்போதும் தோன்றும் சிந்தனை இதுவே…
என்றேனும் ஓர் நாள் இப்புவியில் தீமைகள் கருகி நன்மைகள் மலராதா(?) என்ற அவளது ஆழ்மனதின் ஏக்கம் இன்றும் அவள் சிந்தையில் சிந்து பாடியது இது அவள் சந்தித்த பல தாக்கத்தினால் விழைந்தது…

சொற்பமான சிலரில் அற்பமாக இல்லாமல் அற்புதமாய் இரு…

(இதை சொன்னவள் யாரென சிந்தனை வேண்டாம் … 😂😂😂 இது என்னில் பிறந்த எனது எழுத்துக் குழந்தைகளே)

பின்னர் என்றேனும் ஒரு நாள் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் தனது காலை கடன்களை முடித்துவிட்டு குளிக்கச் சென்றாள்…

சடுதியில் தயாரானவள் யோகாசனப் பயிற்ச்சியில் ஈடுபட்டாள்… இது அவளது அன்றாட வழக்கம் , பின்னர் தனது தோழிகளை காணச் சென்றாள்…

அவள் நேரே சென்றது அந்த அழகிய தோட்டத்திலுள்ள மரம் செடி கொடிகளை காணவே… இவர்களே அவளின் உற்ற தோழிகள் மனதின் பாராமோ இதயத்தின் இன்பமோ எதுவாயினும் தனது தோழிகளான இவற்றுடன் பகிர்ந்துக்கொள்வாள்…

ஏனெனில் இத்தோழிகளுக்கு புறம்பேச தெரியாது அகத்தின் அன்பினையே உணரத் தெரியும்… அவற்றிற்கு தண்ணீரை பாய்ச்சிவிட்டு சிறிது நேரம் அக்காலை நேர ஏகாந்த சூழலை ஆழ்ந்து அனுபவித்தாள்.


அவளை அணு அணுவாய் இரசித்துக் கொண்டிருந்தான் அவன் , அவ்வீட்டின் அழகிய விசாலமான பால்கனியிலிருந்து…

அவளவனாக மாறும் நாளிற்காய் காத்திருக்கும் நம் கதையின் நாயகன் (போன்றவன்)

அவன் பார்வைகள் வட்டமிட்ட பாவை அவனின் மாமன் பெற்ற மரகதம் / மல்கோவா , Dr.விகாஷனா விஷ்வநாதன் சுருக்கமாக Dr.விவி மிகவும் நெருக்கமானோருக்கு விகா அவளவனுக்கு ’ ஷனு ‘... (நம் கதையின் நாயகி போன்றவள்). வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இளம் விஞ்ஞானி.

இத்தனை நேரம் அவளை ரசனையாய் பார்த்திருந்த அவன் Dr.விவேக் விஷ்வேஷ்வர் சுருக்கமாக Dr.விவி. இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய இளம் விஞ்ஞானி.



யாரோ தன்னை உற்று நோக்குவது போல் உள்ளுணர்வு உந்த சட்டென அழகாய் தலை சாய்த்து திரும்பி பார்த்தாள், யாரும் இல்லாதது கண்டு திரும்பவும் பூக்களுடன் உரையாடிவளின் உள்ளுணர்வில் தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற சுற்றும் முற்றும் பார்த்தாள் இப்போதும் யாரும் இருப்பதாக தெரியவில்லை யோசனையூடே மேலே பார்த்தவளின் நயனங்களில் அவனின் காலை தரிசனம்…

நீல நிற கண்களில் குறும்பு மின்ன எப்போதும் இறுக்கமாய் இருக்கும் இதழ்களில் அவளை கண்டால் மட்டும் மின்னலாய் தோன்றும் கீற்றுப் புன்னகை , ‘இந்த நக்கல் சிரிப்புக்கு மட்டும் குறைச்சல் இல்ல மனதிற்குள் வானலியில்லாமல் வருத்தெடுத்தால் அவனை’. முறுக்கேறிய புஜங்கள் , போர் வீரனை போல் பறைசாற்றும் வில் போன்ற உடல் தோற்றம் , தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் வந்த சிக்ஸ் பேக்ஸ் உடலமைப்பு, அலை அலையாய் புரளும் கேசம் என பார்ப்பதற்கு பேரழகனாய் இருந்தவனை கண்டவள் அவனுக்கு மனதில் லக்ஷார்ச்சனை நடத்தினாள்.
ஆளையும் மூஞ்சையும் பாரு வானரத்துக்கு வேஷம் போட்ட மாறி இருந்துக்கிட்டு அவனும் அவன் தாடியும் பார்க்க பிதாமகன் விக்ரம் மாதிரியே இருக்கான் மனசுல உலக அழகன் நினைப்பு , வெள்ள எருமை மாடு மாதிரி அங்க அங்க கோடு கோடா வெச்சுகிட்டு சிக்ஸ் பேக்ஸ்னு சீன் காமிச்சிட்டு இருக்கான், என்னோட யோகாவ குறை சொல்லுவான் … என் ரசகுல்லாவ பிடுங்கி திண்ணுற டிராகுலா மண்டையன்… பார்க்குற பார்வையை பாரு கண்ண தோண்டி காண்டமிருகத்துக்கு போடுறேன்டா மனதில் புகைந்தாள்.


அவன் நயனவிழிகள் இவளது நளினங்களில் நர்த்தனம் புரிந்தது… படபடக்கும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அடர்ந்த இமைகள் அவள் அஞ்சனம் தீட்டிய கருவிழிகளின் அழகுகிற்கு அழகு சேர்ப்பதாய்… அதை காணும் நொடியெல்லாம்
அவன் மனமோ அவள் விழிகளில் தொலையும் நாளிற்காய் ஆசைக்கொண்டது. தன்னை கண்டால் மட்டுமே ஏளனமாக வளையும் செவ்விதழ்கள் நாணத்தில் நாணம் கொண்டு தனக்குள் புதைய மையல் கொண்டது. செவ்விதழ்களில் இருக்கும் மச்சமோ அவனது மனதினை பித்தம் கொள்ளச் செய்யும். இயற்கையிலேயே வில்லாக வளைந்த புருவங்கள் புருவ மத்தியில் அன்றாடம் நிறம் மாறும் பூக்களாய் அவள் பிறை நெற்றியில் கலர் கலராக வைக்கும் சிறிய பொட்டு, கோபத்தில் சிவக்கும் அவளின் நுனி மூக்கு கூட அஞ்சுகத்தின் மூக்கினை ஒத்திருக்கும். அவள் சிரிப்பில் சிறிதாய் மின்னும் முத்து மூரல்களில் அவன் தேகம் சிலிர்க்கும்… அவளின் பட்டுப் போன்ற கார்குழலில்
அவனோ சுழலில் சிக்கிய கப்பலாக அவளுள் மூழ்கச் செய்யும். மொத்தத்தில் அவள் அவனில் வேதியல் வினை புரியும் வனிதை…


ஆனால் அவனது வேதனை யாதெனில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அவளிடம் அவனது பார்வைகள் அவளுள் வேதியல் மாற்றம் நிகழ்த்தாததே. இதுவே அவனிற்க்கு தற்போதைய பெறும் சோதனை. ‘டேய் நீ முனைவர் பட்டம் வாங்கினது இயற்பியல்ல நீ ஏன் அவள உன் கந்தக பார்வையால காந்தமாய் ஈர்க்க ட்ரை பண்ணாம வேதியல் வேப்பங்காய்னு இருக்க அவன் மனசாட்சி ஐடியா மணி ஐடியா கொடுத்தது(?)’

என்ன பேபி என்னையே ரொம்ப நேரமா சைட் அடிச்சிட்டு இருக்க போல பாத்து கழுத்து சுளுக்கிக்கிட்டு கலிபோர்னியா போய்ட போகுது நான் வேணும்னா கீழ இறங்கி வரேன் நல்லா சைட் அடிச்சிக்கோ பேபி என்று மேலிருந்து கத்தினான்.


அதில் ஆத்திரமடைந்தவள் நான் மேல வந்தேனா உன் வாய் வெனியூசிலா போய்டும் பாத்துக்க எரிச்சலாய் மொழிந்தாள்.


நீயும் கூட வரியா பேபி என மேலும் அவளை சீண்டினான். விட்டா இவன் ஓவரா பேசுவான் என நினைத்தவள் அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

அவளது அலட்சிய பாவனையில் கோபம் கொண்டவன் கொழுப்புடி உனக்கு உன்ன என்ன செய்றேன் பாரு என மனதில் கறுவிக் கொண்டான்.

தனது அறைக்கு சென்று தயாராகி கீழே வந்தவனை சாப்பிடுவதற்காக அழைத்தார் அவனின் அத்தை விசாலாக்ஷி. ‘கண்ணா தோசை வார்த்து தரேன் இன்னிக்காவது சாப்பிட்டு போ என்றார் அவர் சொன்னதற்கினங்க டைனிங் டேபிலில் அமர்ந்தான் அப்போது தானும் தயாராகி வந்த அவனின் பேபியை கண்டு அவனின் சம்சாரம் ஆக போகும் அவளால் அவன் தேகத்தின் அணுக்கள் எல்லாம் கிரவுண்ட் ஸ்டேட்டிலிருந்து எக்ஸைட்டட் ஸ்டேட் சென்றது.


அவன் மீது பாசப்பார்வை வீசியவள் தன் அன்னையிடம்,” அம்மா எனக்கு தோசை கொண்டு வா சீக்கிரமா நான் சாப்பிட்டு கிளம்பனும் என்றாள்".

பாருடா ‘ஈ’ ஓட்ட எக்ஸ்பிரஸ் வேகத்துல கிளம்புறத என கிண்டலடித்தவன், அத்தை எனக்கு பர்ஸ்ட் குடுங்க நான் தானே முதல்ல வந்தேன் எனக்கும் டைம் ஆச்சு என்றான் அவன்.

அதில் கோபமுற்றவள் ,” நீ மட்டும் என்ன(?) காலங்காத்தால போய் காக்கா தான ஓட்ட போற என்று சண்டை கோழியாக அவனிடம் சிலிர்த்துக் கொண்டு நின்றாள்”. இவர்களின் சண்டையை சமாதானம் செய்ய விழைந்து விரைந்து வந்தவர் அடுப்பை அணைக்க மறந்ததில் தோசை கறுகியது. ஆனால் அவர்களின் சண்டை முடிவுக்கு வந்த பாடில்லை.
டேய் உன்னால தான்டா தோசை தீஞ்சது என்று அவளும் உன்னால தான் டி தீஞ்சுது என அவளும் சிறு பிள்ளையாய் சண்டையிடுவது கண்டு நீங்க இரண்டு பேரும் சைன்டிஸ்ட் மாதிரியா நடந்துக்குறிங்க சைல்டிஷா பிஹேவ் பண்றிங்க உங்களை வச்சிக்கிட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே அய்யய்யோ முடிலடா சாமி காலையிலே கண்ணக்கட்டி கன்னித்தீவுல விட்ட பீல் வருது என புலம்பினார் அவர்.

ஒரு தோசை சுட தெரில என்ன வந்து வம்பிழுத்திட்டு இருக்க நானே போய்ட்டு தோசை சுட்டுகிறேன் என சென்றாள் விகா…

எப்படி சின்ன வயசுல பேப்பர்ல ஓட்ட போட்டு தோசை சுட்டியே அப்படியா (?)
பாத்து மா தோசை கல்லுல ஓட்டை போட்ற போற... ஹ ஹ ஹா என அவளை கேலி செய்து சிரித்தான்.

அவன் சொன்னதற்கு தானும் சேர்ந்து சிரித்த விகா’வின் அன்னைக்கு அவளின் சிறு வயது நினைவலைகள் நெஞ்சில் அலை மோதியது…

அப்போது அவளுக்கு மூன்று வயது இருக்கும் L.K.G படித்துக்கொண்டிருத்தாள். விவேக்கும் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன். தேர்வுகள் முடிந்து பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கிற்கு இவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு சென்றிருந்தனர்.

முதலில் விகாவின் வகுப்பாசிரியரை சந்திக்க சென்றனர். ‘ மேடம் எங்க பொண்ணு விகா எப்படி படிக்கிறா எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதி இருக்கா என்று வினவினர்.

ஓ! ரொம்ப நல்லா ஆஆஆ எழுதி இருக்கா என்றார் அவர் சிரித்துக் கொண்டே ( பட்டூஸ் இத நீங்க வேற மாடுலேஷன்ல படிக்கனும் அவ சூப்பரா எழுதி இருப்பா அப்படினு இப்ப அவ இருக்கறத வச்சு தப்பு கணக்கு போட்டுறாதிங்க ஹி ஹி ஹி ஏன் னா மேடத்தோட வரலாறு அப்படி😉😉😛 )

உங்க பொண்ணு எழுதின பேப்பர் பாத்தா அவ மார்க் என்ன உலகமே தெரியும் என்றவர் அவள் எழுதிய பேப்பரினை எடுத்து காண்பித்ததில் நால்வருக்கும் சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை , விவேக் மட்டும் விழுந்து விழுந்து அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.

அதில் சினந்த விகா அவனை கோபத்தில் கடித்து வைத்தால். அதில் இருவருக்கும் மூண்ட சண்டை தான் இன்று வரையிலும் முற்று பெறா தொடர்கதையாக தொடர்கிறது.


ஒருவாறு அவர்களை சமாளித்து வைத்த அவர்களின் பெற்றோரிடம் விகா விடைதாளினில் விளையாடிய விளையாட்டினை உரைத்தார் அவளின் ஆசிரியை.


அவர் காண்பித்த விடைதாளில் உலகத்தோடு சேர்த்து அவரும் தெரிந்தார். 😂😂😂ஹி ஹி ஹி அவ்ளோ பெரிய ஓட்டை இருந்தா அவர் தெரியாம இருந்தா தான் ஆச்சரியம். எல்லாரும் பேப்பர்ல தான் ‘ஓ’ போடுவாங்க உங்க பொண்ணு பேப்பருக்கே ல ‘ஓ’ போட்டுருக்கா...
(பேப்பர்ல O.N.E. -1 க்கு ஓ ( O ) போடாம பேப்பரையே ‘ஓ’ னு ஓட்ட போட்டு வச்சிருக்கா ) என்றவராலும் தனது சிரிப்பை அடக்க வழித் தெரியவில்லை.

ஹே ‘ஓ’ போடே … ‘ஓ’ போடே என்று பாட்டு பாடி அவளை வம்பிழுத்தான் விவேக்.


ஏன் பப்பு இப்படி பண்ணிருக்க என்று வினவிய விஷ்வநாதனிடம் அப்பா ரப்பர் எங்கயோ கீல விழ்ன்ச்சு அதா கைல அழ்ச்சேனா பெருச இப்டி ஆச்சு ( ரப்பர் எங்கயோ கீழ விழுந்திடுச்சு அதான் கையால அழிச்சேனா இப்படி ஆகிடுச்சு மழலை மொழியில் பிதற்றினால் அந்த சின்னஞ்சிறு சிட்டு) அழுதவாறு உதட்டை பிதுக்கி அவள் சொன்ன அழகில் அனைவரும் மயங்கினர்.


பின்னர் விவேக்கின் வகுப்பிற்கு சென்றனர் அங்கு
விவேக் பற்றி புகழ்ந்து பேசிய அவனின் வகுப்பு ஆசிரியை அவனது ஐக்யூ ( IQ) திறன் அதிகமாக உள்ளது என்றும் அவன் பிற்காலத்தில் பல சாதனைகள் புரிந்து சிறந்து விளங்குவான் என்றும் வாழ்த்தினார்.


அவனை மட்டும் புகழ்ந்து பேசியதில் கோபம் கொண்ட விகா அச்சிறு வயதிலேயே அவனை விட சிறந்து விளங்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தீவிரமாக படித்தால். அதனாலேயே இன்று சிறந்து விளங்குகிறாள் வேதியியலில் வித்தகியாக…

தங்களது நினைவிலிருந்து கலைந்தவர்கள் மேலும் சண்டையை ஆரம்பிக்க துவங்கும் வேளையில் சொல்லி வைத்தார் போன்று இருவரது அலைபேசியும் இசைத்து தனது இருப்பை காட்டியது…

இருவரும் அதை ஆன் செய்து காதில் வைத்ததும் செவியில் நுழைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.


**********************************************


இருக்க இருக்க இவங்க திருந்துவாங்கனு பார்த்த திருந்துற மாதிரி தெரியலையே என்றான் அவன்.

நான் சொன்ன அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு வந்த இப்போ பாத்தியா நிலைமையா என்றான் இன்னொருவன்.


ஆமா, அவனுங்க இவங்கள சும்மா விடமாட்டானுங்க திணற திணற கதறடிக்க போறங்க, நாம ஏதாவது செஞ்சே ஆகனும் ஏன்னா இவங்க எல்லோரும் வெரி டேஞ்சரஸ் என்றான் மற்றொருவன்.

என்ன செய்யலாம் ஹம்ம்ம்…

ஒரு பெருமூச்சுடன்…

எஸ் இட்ஸ் டைம் டு லீவ் திஸ் பிளானட்…

Yes it's TiMe tO LeAvE tHiS pLaNeT…



விழிகளின் வீச்சில்
என்னை வீழ்த்தும்
வித்தகியே…
நின் விழிச்சிறையில்
விரும்பியே அகப்பட காத்திருக்கும்
வித்தகன் நானடி…
விழுங்கும் பார்வையில்
எனது காதலில்
நீ விழுவதும்
எப்போதடி
என் வஞ்சிக்கொடியே.



வேதனைகளின் தீர்வை நோக்கி
சோதனைகள் தொடரும்…





images(36).jpg
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் லட்டூஸ் நான் வந்துட்டேன் லேட்டா வந்ததுக்கு சோ சாரி செல்லம்ஸ் இனிமே கரக்டா யுடி வந்துடும் (நம்புங்க டியர்ஸ் 😂😂😂 ) இதோ அடுத்த அத்தியாயத்துடன் மீண்டும் நான்...
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPISODE-2

அதிர்ச்சியில் உறைந்திருந்த அவ்விருவரையும் உளுக்கி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தார் விகாவின் அன்னை…

அதில் தெளிந்தவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே காரை நோக்கி சென்றனர்…

“இதுங்க ரெண்டும் எப்போ திருந்துங்களோ தெரியலியே ஆண்டவா” புலம்பியவாரே சென்றார் விசாலாக்ஷி…

தங்களது காரினை புயல் வேகத்தில் கிளப்பி சென்றனர் இருவரும்…
இதிலும் இருவரும் ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் பொருட்டு வேகமாக சென்றதில் விகாவின் ஜாகுவார் மரத்தில் மோதி நின்றது நல்ல வேளையாக அவளுக்கு எந்த சேதரமும் ஆகவில்லை…

ரியர் வியூ மிர்ரரில் இதனை கண்ட விவேக் பதற்றத்துடன் தனது காரினை ரிவர்ஸில் எடுத்து அவள் அருகில் வந்தான்…

அதற்குள் காரிலிருந்து வெளியே வந்தவள் அவனை உறுத்து விழித்தாள், அவள் நலமுடன் இருப்பது கண்டு ஆசுவாசமடைந்தவன் வழக்கம் போல் அவளை வம்பிழுக்கும் பொருட்டு “என்ன பேபி மரத்துக்கு முட்டு குடுத்து வச்சிருக்க என்ன ஒரு சமூக அக்கறை உன் விழுப்புணர்வு கண்டு வியக்கிறேன்.”

“டேய் எல்லாம் உன்னால தான் டா இப்படி ஆச்சு , பனங்கொட்டை தல மண்டையா என்ன கலாய்கிறதுக்குனே கால் டாக்ஸி பிடிச்சுட்டு வந்துற வேண்டியது”

“ஹவ் டேர் யூ ? போனா போகுதே என் மாமன் பெத்த மாங்காய்க்கு"... அவள் பாசபார்வை பார்த்து வைத்ததில் "மாங்கா ஐ மீன் மல்கோவானு சொல்ல வந்தேன்” என்றவன் மீண்டும் கோபமாக “என் பென்ட்லீ காண்டினென்டல் உனக்கு கால் டாக்ஸியா டி , உன் ஜாகுவார் தான் இப்போ டங்குவார் அறுந்து போய் டெங்கு வந்த மாதிரி கிடக்குது” என்று மேலும் அவளை கடுப்பேற்றினான்.


“யூயூஉஉஉ … “கோபத்தில் வார்த்தை வராமல் தடுமாறியவளின் அழகை அவன் கண்கள் அழகாய் இரசித்தது அவன் மனமோ ‘இந்த ரணகலத்துலயும் ரசகுல்லா சாப்டுவான் போல‘ என மானசீகமாய் அவன் மண்டையிலடித்தது அதை புறம் தள்ளியவன் கண்கள் மீண்டும் அவளை ரசனையுடன் நோக்கியது …

“நாம என்ன தான் ரசனையா பார்த்து வச்சாலும் இவளுக்குள்ள ஒரு ரசாயன மாற்றமும் தெரிய மாட்டேங்குதே உனக்கு ரஸ்னா குடுத்தாச்சும் காதல் ரசாயனத்த வரவைப்பேன்டி என் ரஸ்னா பேபி” தனக்குள்ளே சபதம் மேற்கொண்டான்.

“டேய் நான் என்ன இங்க கச்சேரியா நடத்துறேன் ‘ஆ’ நு பாத்துட்டு இருக்க, பாத்து டா வாய்க்குள்ள ஈ போய்ட்டு ஈஸ்டர் கொண்டாடிட போகுது” ...

“ஹேய் போதும் அடங்குடி அர லூசு, வா வந்து கார்ல ஏறு என்றான்”…

“உன் டப்பா கார்ல நான் வரமாட்டேன் போடா” என்று மேலும் அவனை வருத்தெடுத்தவள் ஒரு ஓரமாக சென்று போனை எடுத்து யாருக்கோ அழைத்தாள். இதனை கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவளது கெட்ட நேரமோ ,இவனின் நல்ல நேரமோ, அவளது அழைப்பை யாரும் ஏற்காமல் போக அவளோ சலிப்புடன் மீண்டும் அழைப்பு விடுத்தாள் அப்போதும் யாரும் ஏற்காமல் போக தன்னையே நொந்துக் கொண்டாள்.

‘அவன் சொன்ன அப்போவே கார்ல போய் இருக்கலாம் இப்போ போய் அவனோட கார்ல ஏறினா காலத்துக்கும் காதுவலி வர அளவுக்கு இதையே சொல்லி ஓட்டுவானே, கெத்த மெயின்டெய்ன் பண்ணனும், அவனே கூப்பிடட்டும்’ என்று மனதினில் நினைத்தவாறு அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “இப்போ நீ வரீயா இல்ல நான் போகவா எனக்கு டைம் ஆகுது உனக்கும் தான் “ அவன் அவ்வாறு கூறியதும் “ போனா போகுதே நான் இல்லாம உன்னால அங்க ஒன்னும் கழட்ட முடியாதுனு தான் உன்னோட வரேன் “என்று கூறியாவரே காரில் ஏறினாள்…

“நீயே ஒரு நட்டு கழன்ட கேஸ் நீயில்லாம என்னால ஏதும் கழட்ட முடியாதா காமெடி பண்ணாத போடி” அவன் கிண்டலில் வெகுண்டவள் சில பல வார்த்தைகளால் அவனை அர்ச்சித்தால் மனதிற்குள்ளே தான் ‘பின்ன வெளிய திட்டினா வான்ட்டடா அவன் வாய்குள்ள இருக்க சாட்டெர் டேய வாலிபால் ஆட கூப்பிட்ட மாதிரி ஆகிடுமே அதானே வெளிய அமைதி புறாவா இருக்க ‘ அவள் மனசாட்சி மானத்தை வாங்கியது…

பின்னர் இருவரும் அவரவர் சிந்தையில் மூழ்கியவாரே பயணத்தினை மேற்க்கொண்டனர்.

அந்த பெரிய ஆராய்ச்சி கூடத்தின் கட்டிடத்தின் முன்பு சராலென்று நின்றது அவர்களது கார்…

சிறுபிள்ளைகளாக சண்டையிட்டு கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானோ என சந்தேகிக்கும் வண்ணம் தங்களது கம்பிர நடையுடையுடன் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் மீட்டிங் ஹாலினுள் நுழைந்தனர்.

சற்று நேரத்தில் மீட்டிங் தொடங்கிட அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் தலைமை அதிகாரியான Dr. சிவபிரசாத் தனது வேக நடையுடன் தீர்க்கமான பார்வையுடன் கம்பீரமாக தனது இருக்கையில் அமர்ந்தார்.

“ஹாய் கைஸ், உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ஏன் இந்த அவசர மீட்டிங்னு நம்மளோட அணு ஆராய்ச்சியில கொஞ்சம் பிரச்சனை ஏற்ப்பட்டு இருக்கு அது உடனே சரி செய்லனா பெரிய ஆபத்து சோ , இந்த பிராஜக்ட Dr.மனோஜ் சரண் பார்த்துட்டு இருந்தார் சில காரணங்களால் அவர் இந்த ப்ராஜக்டை தனியா ஹான்டில் பண்ண முடியாத சூழ்நிலையால இனிமே இந்த பிராஜக்ட Dr.விவி தலைமையில் , Dr.விகா கூட Dr.மனோஜ் & டீம் பார்த்துப்பாங்க
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது சம்பந்தமான கேள்விகள் சந்தேகங்கள் எல்லாம் அவங்கள கேட்டுக்கோங்க, ப்ராஜக்ட் பத்தின டீடெயில்ஸ் அவங்க கிட்ட சொல்லிடுங்க மனோஜ்" என்றவர் அத்துடன் மீட்டிங் முடிந்தது என்னும் விதமாக அவரவர் கலைந்து சென்றனர்.

மீட்டிங் ஹாலினுள் நுழைந்ததிலிருந்து விகாவை கவனித்துக் கொண்டிருந்த விவேக்கின் கண்களில் அவளது அதிர்ந்த பார்வையும் அதனை தொடர்ந்து அவள் முகம் வெளிரியதையும் கண்டு அவளுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் நியாபகம் இருப்பதை அறிந்துக் கொண்டான்.அவனது முகம் யோசனையை தத்தெடுத்துக் கொண்டது.

Dr.மனோஜ் சரணை பார்த்தவள் முகம் பல்வேறு பாவனைகளை வெளிப்படுத்தியது…

அவள் முன் இளித்தாவாறே ஹாய் விகா உங்க கூட சேர்ந்து வர்க் பண்றதுல ரொம்ப சந்தோசம்…

‘ஹி ஹி உனக்கு சந்தோசம் எனக்கு துக்கம் டா’, அவனை கொல்லும் அளவு கோபம் இருப்பினும் இருக்கும் இடத்தை கருதி அமைதி காத்தாள், வெளியில் அவனை அலட்சியம் செய்து விட்டு விவேக்கின் பின் சென்றாள்.

‘அவனோடயா போற போடி போ எவ்வளவு நாள் தான் அவன் உனக்கு பாடிகார்ட் வேளை பாக்குறானு நானும் பார்கிறேன்’ மனதினுள் வன்மமாக நினைத்துக் கொண்டான்.

பின்னர் அனைவரும் அணு ஆராய்ச்சியில் ஏற்ப்பட்ட பிரச்சனை குறித்து ஆலோசிக்கலானர். தொடரும் பார்வையினால் தொடர் தொல்லை குடுத்துக் கொண்டிருந்த மனோஜைக் கண்ட விவேக் (Dr.VV) ‘உனக்கு ஒரு முடிவு கட்றேன் , அன்னைக்கே உன்ன போட்டு தள்ளி இருக்கனும் அதிர்ஷ்ட வசமா உயிர் பிழைச்சுட்ட உன்ன என் கையால கைமா பண்றேன்டா’ என்பதாய் அவன் மனம் கொந்தளித்தது.

****************************************************

“வைரமே ஒருநாள் உன்ன தூக்குவேனே”... பாடிக்கொண்டிருந்தால் அவள்,

“தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே” எசப் பாட்டு படித்தான் அவன்…

“போதும் தல பாட்டு கச்சேரிலாம் இவனுங்கள என்ன பண்றதா இருக்கிங்க”…

தன் வியூகங்களை ஒவ்வொன்றாக வகுத்தவன் அதனைத் தன் கூட்டாளிகளிடம் தெரிவித்தான் அக்கூட்டத்தின் தலைவனான வைரம்.

“நாம இப்படி பண்ண போறது இந்நேரம் அவனுங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் எந்நேரமும் அலெர்டா இருங்கடா அவனுங்க நம்ம பிளான சொதப்ப பார்ப்பானுங்க சூதனாம இருக்கனும் புரிஞ்சதா , எவனாச்சும் ஏடாகுடமா மாட்டினிங்கனா நான் என்ன செய்வேன் தெரியும்ல சிதச்சுருவேன்”… என்றவாறு தனது அதிர வைக்கும் குரலில் உருமினான் வைரம்.

“டேய் தலயோட பிளான் எதுக்கு ஏன்னு ஒன்னுமே புரியல ஏன்டா இப்படி சொல்லிட்டுப் போறாரு” என்று கேட்டான் லாரன்ஸ்.

“தல எது சொன்னாலும் செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும் ஏன் எதுக்குனு கேட்கப்படாது ஏன்னா இங்க எல்லாம் அப்படித் தான் நீயும் அதுக்கேத்த மாதிரி நடந்துக்க ராசா இல்லாட்டா ஆகிடுவ லூசா” என்றான் நிக்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த அக்கூட்டத்தின் தலைவனான வைரத்தின் வலது கை சமர் “போதும் உங்க வெட்டி பேச்ச நிறுத்திட்டு எல்லாருக்கும் அசைன் (assign) பண்ண வேலைய செய்ங்க போங்க” என்று அவர்களை விரட்டினான்…

வைரத்தின் தலைமையில் ஒரு கூட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது, அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேளைகளை சரி வர செய்வதே சரி என்னும் விதிமுறையின் படி வாழ்பவர்கள்…

வாழ்வின் விதி மீறல்கள் எத்தகு விதிகளை உண்டு செய்யும் என்பதை நன்கு அறிந்தவர்கள்…

விதியின் சதியினை சதி செய்து விதி மீறி விதிமீறல்களை வெல்பவர்கள் எவரோ…

*******************************************************


பாஸ் “அவனுங்க பிளான அநேகமா நாளைக்கி எக்ஸிகியூட் பண்ணிடுவாங்கனு நினைக்கிறேன். நம்ம ஸ்பை எக்யுப்மென்ட்ஸ் வைச்சி இத தெரிஞ்சிக்கிட்டோம்”…

ஓ, இது தெரிஞ்ச விஷயம் தானே அவனுங்க பிளான் என்னனு கண்டுபிடிச்சிங்களா?

பாஸ் வந்து தலையினை சொரிந்தவாரே அவன் வார்த்தைகள் தந்தி அடித்தன…

இரிட்டேடிங் இடியட் போய் அத பர்ஸ்ட் கண்டுபிடி டா ஆரிப் போன ஆப்பாயில் மாதிரி இத்துபோன பழைய நியூஸ் ஆ சொல்ல வந்துட்ட…

அதற்க்குள் அங்கு வந்த இன்னொருவன் பாஸ் அவங்க பிளான் இது தான் என அவனது பாஸ்க்கு பிளானை விளக்கினான்…

இன்ட்ரெஸ்ட்டிங் , வாவ் அமேசிங் அவனது கண்டுபிடிப்பை மனதிற்குள் அவனை மெச்சியபடி வெளியில் இத கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா? பட் பரவாயில்ல குட் வர்க் யங் மேன் என்று கோபமாய் ஆரம்பித்து பாராட்டில் முடித்தான்…

ஓகே , தே ஸ்டார்டட் தி கேம் லெட்ஸ் பிளே தி கேம் வெல்…

தி கேம் பிகின்ஸ் நவ் ஆன் என வில்லன் சிரிப்பு சிரித்தான்…


வேதனையின் தீர்வை நோக்கி சோதனைகள் தொடரும்...


 
Status
Not open for further replies.
Top