All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Kavi 27

Member
அருமையான பதிவு. பல கேள்விகளுக்கு பதில் கிடைத்த பதிவு. அஞ்சலியை மஹிமா விடம் இருந்து எப்படி காப்பாற்ற போறான் நம்ம அமர் .Next ud waiting.
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...
காதல் மனதில் கடலளவு இருக்கு...


அதை உணர்ந்த போது காலம் தான் கடந்து விட்டது... அவள் துரோகத்தின் பின்னனி வேறு கதைகள் இருக்கும் போலையே...


பெண்ணவள் காதலுக்காய்
போராடியது பார்ததது இல்லையே...
இதோ இவள் போராடுவாள் அவனுக்காய்... அவன் காதலுக்காய்...


அஞ்சலி என்ன பண்ண போறா ஸ்ரீ மா...
அவள் பயந்து வாழும் சாமானிய பெண் இல்லை...
கண்டிப்பாக எதிர்த்து போராட முடியும் இல்லை அமரே எல்லாம் சரி பண்ணுவானா என்ற கேள்வியோடு...


தவறி போனேன் நான்
நேற்றைய தவறு
நாளைய வாழ்வை
அழிக்க இன்று இதோ தவிக்கிறேன்...


தவறி போனேன் நான்
இருளை மறைக்கும்
ஆதவனை உணராமல்
மின் மினி பூச்சியின்
மாய வலையில் சிக்கி இதோ
துடிக்கிறேன்...


தவறி தான் போனேன்
காதலை காணாது
காம பார்வையில்
சிறையில் இருந்து இதோ
மீள முயலுகிறேன்...


தவறி தான் போனேன்
பாசத்தின் பார்க்காது
பாசியின் பாசத்தில்
வழுக்கி வீழ்ந்த
வாழ்க்கையை சரி செய்ய
இதோ தடுமாறுகிறேன்...


தவறி போன நான்
அபலையாய் சதி
அறியாத அப்பாவியாய்
வாழ்க்கை சதுரங்கத்தில்
பேதையாய் இதோ
காதலை மட்டுமே
காதலித்து நிற்கிறேன்
நான் பத்தினா என்ற கேள்வியோடு???


ஸ்ரீ மா... மஹிமா... எல்லாமுமாய்...
தயாரிகிய தீவிரவாதியாக முன் நிற்கிறாள்...


ஆம் இன்றைய சமூகத்திற்கு அவள் தீவிரவாதி தான்...


நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் அவள் தீவிரவாதி தான்...
இந்த மனபோக்கில் வாழ்ந்து பெண்ணியம் பேசும் கயமை மனம் படைத்த அவள் தீவிரவாதி தான்...
ஒரு தீவிரவாதி தான் யாரையும் எந்த உயிரையும் பற்றி கவலை கொள்ளாது தன் லட்சியம் மட்டுமே கண்ணாக செயல் படுவர் இதோ எனக்கு இன்று மஹிமா அப்படி தான் தெரிகிறாள்....
இப்படி பெண் இருக்கின்றாளா என்ற கட்டதை கடந்து இன்றைய சூழல் இப்படி நடக்கும் என்றால் நாம் இழப்பது என்ன என கேட்டாள் பெண் என்ற பண்பு என சொல்லி கொண்டே...


சஞ்சய்... வேவு பார்ப்பவன் எதையும் செய்ய துணியும் துணிவு இருக்கும் என சிந்திக்க தவறிய அமரை தான் காட்டுகிறது....


உளவாளி ஆக இருக்கிறான் என அறிந்தவனுக்கு அவனை தன்னோடு வைத்து அவனை சிறை செய்ய வேண்டாமா தவறிவிட்டான் என்ற குற்றத்தை ஹீரோவை நோக்கி வீசிய படி...


நீங்க தயாராகிட்டீங்க...


ஹீரோயின் துரோக்கத்தை அழிக்க...அதை படிக்க நான் காத்திருந்தேன் ஸ்ரீ மா அந்த எபி படிக்கும் எப்படி இருக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்போடு சுபி 😁😁😁
பி.கு. :. அக்ஷ்சய் நினைவுக்கூறுகிறேன் இங்கே ... அவன் காதலை அவள் ஏற்க அவன் அவளிடம் அந்த விபத்தில் தன் உயிரை தருவதாக கூறி கண் மூடும் காட்சி தான் அடிக்கடி வருகிறது இவள் துரோகத்தை நேரி செய்ய என்ன பண்ணுவாள் என்று யோசிக்கும் போது... பெண் உயிர் எது என்று நமக்கே தெரியுமே... எதுவாகினும் அடுத்த எபியை படிக்கும் ஆர்வம் காத்திருப்பு என்ற நிலையை வெறுக்க வைப்பது உண்மை தான் 😁😁😁


வாழ்த்துக்கள் ஸ்ரீ மா.. முள் மேல் வாழை இலை போல் இருக்கும் கதையை நீங்க கொண்டு போகும் விதம் எவ்வளவு அழகா விரசமில்லாமல் அருமை அருமை இந்த கதை களம் உங்களால் தான் இவ்வளவு அழகாக தர முடியாது.. வாழ்த்துக்கள்
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இப்படியும் ஒரு பெண் இருப்பாளா அரக்கியை விட மோசமாய் என நினைக்க வைத்த பதிவு...

வாழ்க்கை முழுவதும் அமரின் சொத்திற்காக எதையும் செய்ய துணியும் மஹிமா... அமரையே ஒவ்வொரு முறையும் கண்காணித்து உள்ளாள்... ஐந்து வருடத்திற்கு முன்பு அமர் அஞ்சலியை தூக்கி சென்ற புகைப்படத்தையும் இப்போது கடற்கரையில் எடுத்த புகைப்படத்தையும்... ஸ்ரீ மேம் காதலிப்பவர்களுக்கே தெரியாதாம் நாம் அவர்கள் மேல் இந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளோமா என்று? ஆனால் எப்படி கண்டுபிடித்துள்ளாள் பாருங்க.. எங்கேயோ கேங் லீடரா இருக்க வேண்டியவள். அமர் தலையில் உட்கார்ந்து கீழே இறங்க மாட்டேன் என்று அவனை ப்ளாக்மெயில் செய்து கொண்டு இருக்கிறாள்... அமர் அஞ்சலி ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொண்ட மஹிமா அச்சோ! எப்படி இப்படி ஒரு ப்ளாக்மெயில்? இவள் எல்லாம் பூமியில் இருக்க தான் வேண்டியவளா? அதுவும் அமரின் மனைவி என்பதை தி கிரேட் அமரேந்தர் மனைவி, கோடீஸ்வரர் மனைவி, உன் பெஸ்ட் ஃப்ரெண்டோட மனைவி இப்படி மத்தவர்களுக்கு தான் யார் என்பதை அழுத்தி சொல்ல நினைக்கிறாளா? எப்படி சமாளிக்க போகிறானோ தெரியலையே அமர்? ஏதோ ஒன்றிற்காக அவன் கட்டுப்பட்டுள்ளான் அதை மட்டும் விடுவித்து விட்டால்????

சஞ்சய் நீங்கள் சொல்வது போல் அவன் குள்ள நரியே தான்... ஆனால் அவன் மேல் சந்தேகம் ஏற்பட்டு அடித்து துரத்திய அமர் அவனை எப்போதும் தன் கண்காணிப்பில் ஏன் வைத்து கொள்ளவில்லை? அஞ்சலியிடம் வேற காதலை சொல்லி வற்புறுத்துகிறானே இது எங்கு போய் முடியுமோ?

கனி ஏதாவது செய்து மஹிமாவை உன் வாழ்க்கையிலிருந்து விலக்கு என்பதற்கு அமைதியாய்... யாரிடமும் எதையும் சொல்ல முடியாமல் திணறி தத்தளித்து கொண்டு மனம் வருந்தி கொண்டுள்ளான் அமர்...

இதை எதையும் அறியாத அஞ்சலி அவன் முகத்தை கண்டு புன்னகை பூப்பது அழகென்றால் அவனை புன்னகைக்க சொல்வது அழகோ அழகு... அதனால் உயிர்த்தெழும் அஞ்சலி அவனுக்கு என்றும் துணை நிற்பாளா?

ஸ்ரீ மேம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கலவையான உணர்வுகள்.. அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று எதிர்பார்த்து.. ஒவ்வொரு கதையும் எங்கள் மனதில் என்றும் மறவாத காவியமாய்... அற்புதம் ஸ்ரீ மேம்... எப்படித்தான் இப்படி வித்தியாசமாய் யோசிக்கிறீர்களோ? அனு தினமும் உங்கள் பதிவை கண்டு அதிசயத்து போகிறோம்... வாழ்க வளமுடன்...
 

Hanza

Bronze Winner
😫😫😫😫😫😫😫😫😫
இதை தவிர வேறு எதையும் போட வரல .....
என் மனசை தேத்திட்டு வரேன் அப்புறமா ....
 
Top