All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Lakshmivijay

Well-known member
அருமை ஸ்ரீமா ரெண்டு பேரும் ஒன்னாகிட்டாங்கனு நினைச்சா.....
பழி வாங்குறது இன்னும் தொடருதா அந்த குழந்தை யாரோடது.....
 

Hanza

Bronze Winner
நல்லா ஷேமமா ஆரம்பிச்சிருக்கீங்க ..... எல்லாரோட மண்டையும் வெடிக்க போகுது ..... 🤣🤣🤣🤣🤣

நம்ம ஆளு ஏன் இப்படி over performance பண்ணுறாருனு தெரியலையே ..... 🤣🤣🤣🤣

அஞ்சலி என்ன கஜினி சூர்யா மாதிரி அடிக்கடி மறக்குறா .... ஏதும் நோயோ ????

இந்த அமரு நல்லா நடிக்கிறாரு.... அமர் சஞ்சய் கூட்டணி போடுறாங்களோ .... 🤔🤔🤔🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooooo என்னது பழி வாங்க appadi love 😍 பண்றா maari நடிச்சான் ah நம்பர maari illaye...... அவன் காதல் poi illaye ஏன் பொய் solraan அஞ்சலி kita...... Avalum avana enathitatha nambaraala...... Appo அம்மு avanga kuzhanthai தானா..... சாரதா அம்மா avanoda தொடர்பில் தான் இருக்காங்க போல அது தான் அவன் office laye velai வாங்கி கொடுத்து இருக்காங்க..... Enna sign அது eppo வாங்கினா nu theriyalaye..... சூர்யா அவன் தங்கச்சி ah கல்யானம் pannikitaan போல அஞ்சலி solli.... Avanodaya எல்லா business yum poidicha இப்போ சாதாரணமா ஒரு business pannikitu இருக்கான்..... சஞ்சய் ஏன் avaloda சுத்திகிட்டு இருக்கான்.... அவன் சொன்னா thaye நம்பினா naa என்னது nu theriyala..... Super Super mam.... Semma semma episode
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...

காலம் மாறிய போது கோலமும் மாறியது...
காதல் மனிதனை படுத்தும் பாடு படிக்க பரிதாபம் தான்...

இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பது தான் அமரின் வேலை ஆம் என்று இதோ இப்போதும் நிருபிக்கிறான்...வேறு வேற சூழலில் அனைவரும்...

என்ன நடந்திருந்தாலும் காதல் மனம் சேர்ந்தே போராட துணியும் என்பதை மறந்தவனாய் மீண்டும் பெண்ணவளை சீண்டி விட்டு விட்டான்..
ஸ்ரீ மா அவன் வேலையை காட்டிட்டான்.... பார்த்தீங்களா...

மீண்டும் ஒரு தோல்வி அதை
கடந்துவிடுவேன்...
மீண்டும் ஒரு ஏமாற்றும் அதை ஏறறுக்கொண்டேன்...
மீண்டும் ஒரு வலி அதை
பொறுத்துக்கொண்டேன்...
மீண்டும் ஒரு போராட்டம் அதை
வென்று விடுவேன்...
என் காதல் எனை மீட்கும்
சக்தியாய் எதிரே நீயேயானால்
உனையும் வென்றிடும்
மாயம் என் மனதிற்கு தெரியும்
எட்டியே இரு மணாளா
எனை நெருங்க என்னுள் வீழ்ந்து
தொலைந்து காணாமல்
போய்விடுவாய்...
என் காதல் அந்த இயற்கையை
காட்டிலும் ஆபத்தானது....
❤❤❤❤

நல்லவன் பண்ணற வேலையை பார்த்தீங்களா... இதுல இவன் அந்த அயன் கதை வேற தூக்கிட்டு வருவான் அதை நாங்க படிச்சு இவனை சூப்பர் சொல்லனும்....
அயன் கதை சூப்பர் தான்... ஆனால் இவன் பாடம் கற்க இன்னும் பல வலி கடந்து தான் வருவான் போலையே😁😁😁

பழி வாங்க அவன் சொன்ன வார்த்தைகள் காரணம் சொல்லி இனி அவனுக்கு முட்டு குடுக்க நீங்கள் என்ன பண்ண போறீங்க ஸ்ரீ மா....

அவன் X மனைவியை காணவில்லை....

இந்த பத்து மணி அம்மா நேரமாக இந்த வேலையை செய்திருந்தாள் இவன் பழி என்று அஞ்சலி வாழ்வில் வந்திருக்க மாட்டான்....

என்ன காரணங்கள் ஆயிரம் வந்தாலும் அதற்கு அவள் நலம் தான் அவன் யோசித்தான் என்றாலும் அவள் அவன் மனதை சிதைக்கிற மாதிரி கேள்வி கேட்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஸ்ரீ மா...

பெண் மனம் தெரியாமல் அவளை சிக்கலில் வீழ்த்தி வார்த்தைகள் தவற விடுதல் பாவம்...

அவனுக்காக அவள் தன் கொள்கையை விட்டு அவன் முகத்தில் சிரிப்பை கொண்டு வர அவள் செய்த செயல்கள் அவன் என்ன காரணம் காட்டினாலும் அஞ்சலி ஏற்றுக்கொள்ள செய்வாள் இந்த சுபிக்கு நாட் ஓகே அவ்வளவு தான்....

ஒரு பச்ச புள்ள கோயிலில் போய் மணி அடித்தது குத்தமாயா? அங்கே தொடங்கியது அவளுக்கு.....

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா... எப்படியோ அவனை திரும்ப எட்டி நிற்க வைத்து ஏங்க வைக்கிறீங்க வெரி குட் 😂😂😂😂 என்ன இந்த தடவை பல பெண்ணிடம் போக முடியாது. அது தான் ஒரு பெண் குழந்தையை கையில் வச்சுட்டு சுத்தறானே...அது தான் சந்தர்ப்பம் கிடைத்த போது எல்லா தப்பையும் பண்ணிட்டான் போல இந்த ஹீரோ...
செதுக்கும் நேரத்தில் அவன் சத்தம் ரொம்ப கம்மியா கேட்கிறது 😂😂😂😂
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

ஆத்மார்த்தமான அன்பின் ஆலோலத்தில்
ஆத்மிகாவின் மழலை மெட்டில்
மனம் மீட்ட வந்த இரண்டாம் அலை!
தொடரும் அலையின் தாத்பர்யம்
முதல் அலையின் ஆக்ரோசமே!

மன்னவன் மீட்டிய வீணையில்
சுபஸ்வரம் கேட்ட வேளை...
காதலின் ஆலிங்கனம்
கவிதையாய் சங்கமம்!

மன்னவன் தீட்டிய லீலையில்
அபஸ்வரம் கேட்ட வேளை...
காதலின் ஆலிங்கனம்
மழலையாய் சமரசமோ...?

ஆண் அவன் ஆணவத்தில்
பெண் அவள் ஆக்ரோசத்தில்
தங்கை அவள் நிலை கண்டால்
தடுமாறும் காதல் உள்ளம்!
அன்னை அவள் நிலை கண்டால்
தடம்மாறும் தாய்மை உள்ளம்!

சபலத்தில் சஞ்சய்
அவன் சதுரங்கத்தில்...
வஞ்சகத்தில் மன்னன்
அவன் சாகசத்தில்...
நெஞ்சகத்தில் மங்கை
அவள் சஞ்சலத்தில்...
விடியாத வாழ்க்கையில்
விடைதேடும் விடுகதைக்கு
கேள்விக்குறி போட்டது
எழுத்தரசியின் எண்ண அலைகளே!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிதாய் இல்வாழ்க்கை தொடங்குவோம் என்று தொடரும் இட்ட இதயனின் வாழ்க்கை..

முடிவில்லா வலிவழியில் ஆருதல் அருமருந்தாய் மழலைமலர் ஏந்தும் ஏந்தல்..

விடைபெற்று வந்த வேல்விழி விழி தேங்கி நிற்பதோ நீர்விழி...

நித்தில பெண்ணின் நெஞ்சம் கொண்ட ரணம் என்னவோ...

ரணத்தின் காரணம் மன்னவனோ மாயோனின் மனம் கொய்த மாயனோ..

உடல் சுற்றும் நச்சுக்கொடியாய் நயவஞ்சகன் திரிய தீயாய் நிற்கும் நிகழினி..

உழைப்பின் பயணம் தொடங்கும் இடம் மீண்டும் பகலவனாய் இருக்க

பாவையவளின் பகை எதுவோ..
விடை விழியாளிடம்..

Samma story akka
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இரண்டாம் பாகத்தின் முதல் பதிவு... ஹா! ஹா! இதிலும் இருவருக்குமான சதிராட்டம் முதலிருந்து ஆரம்பமா?

பெண் குழந்தையின் மழலையில் கண் விழிக்கும் அமர் அக்குழந்தை பிறந்தது முதலே தாயுமானவன் ஆனான்...அமர் அம்மா பத்மினியும் அவனுடையே இருக்கிறாள்..

ஷர்மிளாவிற்கு அஞ்சலி சொன்னதால் சூர்யாவுடன் திருமணம் ஆகியுள்ளது... இருந்தாலும் இருவரும் தனித்தனியே...

அஞ்சலி தம்பி தங்கை சாரதாவுடன் தனியாக அடுக்கு மாடி குடியிருப்பில்... தினமும் அஞ்சலி யை சந்திக்க சஞ்சய் அவளை தேடி விஜயம்..

அஞ்சலி க்கு இது நான்காம் நிலையோ? முதலில் அவள் அழகை காத்து போட்டியில் தன்னை ஈடுப்படுத்தி கொண்டது அதில் தன் அறியா பருவத்தில் அமருக்கு செய்த துரோகம்... இரண்டாம் நிலையில் அவள் குடும்பத்துடன் கஷ்டத்தை அனுபவித்தது இதிலும் அமரின் கண்காணிப்பில் அவள்... மூன்றாம் நிலையில் இருவரும் ஒன்று சேர்த்து கொஞ்ச நாள் என்றாலும் சந்தோஷத்தை அனுபவித்து பிரிந்தார்கள்... நான்காம் நிலையில் இருவரும் தனித்தனியாக ஆனால் இப்போதும் அவன் கண்காணிப்பில்...

கோயிலில் அமர் நேரடியாக போய் ஏன் குழந்தையை வாங்கவில்லை அஞ்சலியிடமிருந்து... யாரோ ஒரு பெண்மணியை அனுப்பினான்... வீட்டிற்கு வந்தவுடன் அக்குழந்தையை நினைத்தவுடன் அஞ்சலி தன் வயிற்றின் மேல் கை வைத்து எதற்காக முன்னே நடந்த விவாதத்தை நினைத்தாள்.. அப்போது அந்த குழந்தை??? மஹிமாவின் கைங்கர்யமா அனைத்தும்?

எத்தனை கேள்விகளை எங்கள் மனதில் ஓடவிட்டு இருக்கிறீர்கள் தெரியுங்களா ஸ்ரீ மேம்?

இருந்தாலும் எதற்காக அமர் அஞ்சலியிடம் ஏதோ ஒப்பந்தம் வாங்கியுள்ளான்? அவளை அவன் கண்காணிப்பில் வைத்து கொள்ளவா? குழந்தை பாட்டிலில் பால் அருந்தும் போது ஏன் அமர் வருந்தினான் அதை கண்டு? அக்குழந்தை யின் தாயை நினைத்தானா? இல்லை அக்குழந்தையின் நிலையை நினைத்தா?

அற்புதமான வித்தியாசமான பதிவு...பல கேள்விகளை மனதில் ஓடவிட்டாலும் முடிவில் அனைத்தும் சுபமே என்று எங்கள் மனதை நாங்களே ஆறுதல்படுத்தி கொண்டு அடுத்த பதிவை எதிர் நோக்கி...

என்றும் போல் அமரஞ்சலியும் காவியமாக எங்கள் வாழ்த்துக்கள்...
 

vijirsn1965

Bronze Winner
enna aachu mam 1st partil eruvarum nantraha tnaane erunthaner ippo enna aanathu eruvarum muraiththu kondu irukkiraarkal antha kuzhanthai yaar mahimavinatha athai amar valarkiraana mahima enge avan annai padhmini avanudan vanthuvittaar pole marupadiyum anjali amaridame velaiku vanthirukkiraal eruvarum muttikkolkintraner super vegu arumai semma ud mam(viji)
 
Top