All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஸ்பென்ஸ் தாங்க முடில அப்படி என்ன நடந்து இருக்கும்னு
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...

அவளுக்கு என்ன உடல் பிரச்சினை ஸ்ரீ மா...

என்னமோ நடந்து அவனை மறக்க அவனை பற்றிய தவறான செய்தியை அவள் மனதில் பதிய வைத்த அந்த நல்ல உள்ளம் யாரா இருக்கும் என்ற கேள்வியோடு???

பனிபோல் உருகியவள்
இன்று தீயாய் காய்கிறாள்...
மழையாய் மனதை நனைத்தவள்
வெப்பமாய் தகிக்கிறாள்...
சுனாமியாய் சுழட்டி
அடிக்கும் மனதில்
காதல் எங்கே அமிழ்ந்து
இருக்க அவணைப்பு
தேடாத காதலை அவன்
வலி தேடி தருமோ...
காதலனாய் தேடினான் தள்ளித்தான் போவாளோ
கணவனாய் கட்டினான்
கண்டிக்கத்தான் செய்வாளோ...
அவள் பிள்ளையாய் ஏங்கினான்
என்றால் புது வெள்ளமாய்
பாய்ந்தோடி வருவாளே!!!
அவன் அஞ்சலி....

எது எப்படியோ ஸ்ரீ மா... உங்களுக்கு அமர் எவ்வளவு பிடிச்சு இருக்கு என்று நேற்றைய எபியில் நல்லா தெரிஞ்சது 😂😂😂

அவள் மன திரையில் அழிந்த வண்ணங்கள் யாவையும் அவன் வீட்டு திரையில் வெறும் நினைவுகளாக மட்டுமே ஒளிர,
நினைவுகளை மட்டும் அவன் கையில் நிஜமோ கண் முன் இருந்தும் கை வர விதி தடுக்கிறதோ😂😂

பழியென மனதில் வலம் வந்த நேரம் அவன் படுத்திய பாட்டிற்கு எல்லாம் இதோ அவனை வாட்டி எடுக்கிறாள்...கூடவே பெண் என்றால் என்ன என்று பாடமும் எடுக்கிறாள் மகளோடு சேர்ந்து இந்த தாயும் அவளை சீர் செய்கின்றனர் செதுக்கின்றனர்...
கடைசி para வும் எழுதிய கவிதையும் அழகு தான் ஸ்ரீ மா...
சூப்பர் அவன் காதல் செதிக்கீட்டிங்க...

எல்லாமே ஓகே இந்தSP அவது சம்பவம் வைக்கலாமே...❤❤
நெக்ஸ்ட் எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா...



ஓ இந்த டைமும் அமருக்கு பொங்கலையோ....

இதோ... பொங்கிறேன்...

பழியாட வாங்கிற பழி... பார்த்தியா அஞ்சலி வாங்கினா பழி எப்படி..
இதுக்கு தான் மனசு சொல்லறதை கேட்கனும் சும்மா வெயிட் பண்ணிட்டு அவளுக்கு உடல் சீர்கெட்டு இருக்கு... இந்த சந்தர்ப்பத்தில் அவளை படிக்கும் எல்லோரும் பெத்த புள்ள விட்டு போய்டா பேச வைத்து குளிர் காயும் ஆணாதிக்க எண்ணம் தான் இந்த ஹீரோ 😂😂😂 அடே...

அஞ்சலி தாய்மையை உரசி பார்க்க நீ தான் காரணம் என்று சொல்லிக்கிறேன்... பிடிக்கவில்லை சொன்னவளை நிர்பந்தம் பண்ணி கிஸ் பண்ணின இப்போ எல்லாம் சரியாக இருக்கும் போது அவளை தள்ளி வச்சு அவளை வதைக்கிற 😁என‌சொல்லி போராடும் ஹீரோயின் ஆர்மீ டா நாங்கள் 😁😁😁..
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode mam.......paavam amar enthaan avanuku ivvallavu சோதனை yo..... Ava avana maranthutaala..... சஞ்சய் எதோ thappu thappa solli vechi இருக்கான் ah அமர் ah pathi.... Athai eppadi iva நம்புற.... Ava perganent ah irukkum pothe கல்யாணம் pannikalaam nu கேட்டு இருக்கான் iva ஏன் vendaam nu solli இருக்கா appo என்னமோ ivaluku therinji இருக்கு...... வலி வலி வலி eppo இது சரி aagarathu..... அமர் oda காதல் enna solrathu no words mam.....azha veikiraanga... Super Super Super mam... Semma semma episode
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

மன்னவனே!

பழியாய் அழைத்து
பதியாய் குழைந்து
பத்தினி அவளை
பதிவிரதை ஆக்கிய நீ...
பட்டாம் பூச்சிக் கூட்டத்தில்
பரிதவிக்க விட்டாயோ...?

ஒற்றையாய் நின்றாலும்
ஓருயிராய் காதலில்
ஒருமித்து நின்றவளை
ஒருமனதாய் காதலில்
ஓங்காரமாய் ஏற்றிய நீ...
ஒடும் பச்சோந்திக் கூட்டத்தில்
ஓட்டியே விட்டாயோ...?

உனக்காக தன்னை
உனக்காக பெண்மை
உனக்காக தாய்மை
உனக்காக வாய்மை
உனக்காக தூய்மை
அனைத்தும் கொடுத்தவளை
அனாதரவாய் விட்டாயோ...?
இல்லை...
அத்தனையும் பழி என்று
அந்தரத்தில் விட்டாயோ...?

இன்று...
ஒற்றையாய் பிள்ளையை...
தாயாய் தாங்கி நின்று
தாளாத சோகத்தில்
தடுமாறும் நிலை கண்டால்
தவிக்கின்ற மனமதனை
என்னவென்று நான் சொல்ல...?

பிள்ளையாய் அன்னையை
தாயாய் வேண்டி நின்று
மாளாத காதலில்
தடுமாறும் நிலை கண்டால்
தவிக்கின்ற மனமதனை
என்னவென்று நான் சொல்ல...?

நேரிழையே!
உருகி உருகி அழைத்தாலும்
மறுகி மறுகி குழைந்தாலும்
தாய்மையை மறுக்கும் பெண்மையே!
உன் தலைவிதி அதுவோ... உண்மையே?

பெற்றவரும் சொந்தமில்லை
உற்றவனும் பந்தமில்லை
மற்றவரும் பகடையாய்
உருட்டிய வாழ்வில்...
காதல் ஒன்றே பற்றுதலாய்
கரம் சேர்த்த தாயே!
நீ... சேயதை மறந்தால் சத்தியமாய்
அவன்... தாயை விட்டானோ வீதியிலே...
அவள்... தேடும் நேரத்தில் அந்நியமாய்...!
காயம் வேராய் ஆழ்மனதில்
பாயம் கூராய் ஊழ்வினையில்
நேயம் மாறாய் தாயவளும்
நெருக்கம் தேடா விதி வழுவோ...!

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!'
முதுமொழி என்றாலும், பழமொழி என்றாலும்,

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்."

குறள் மொழி என்றாலும், குரல் வழி கேட்டாலும்

இன்னா செய்யாமை
என்னாலும் நன்றே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Kavi 27

Member
கொஞ்சம் மோதல் கொஞ்சும் காதல் கதை திரும்ப எப்ப போடுவீங்க நான் 16 epi படிச்சிட்டேன் . மீதி கதை படிக்கனும் Sri ma முடிஞ்ச upload பண்ணுங்க. உங்களுடைய தீவீர ரசிகை pls
 

Deebha

Well-known member
அமர் மனதில் தவிப்பு உள்ளது. அஞ்சலி மனதில் கோவம் உள்ளது. ஆத்மி குட்டி பாவம். இன்றைய ud விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் கவிதை அருமை.
 
Top