All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Subasini

Well-known member
அமரஞ்சலி...


காதல் மட்டுமே இருக்கும் அமரஞ்சலி...


எவ்வளவு அழகு இந்த காதல்...
அழகு மட்டுமா.. அங்கே அளவுகடந்த வலியும் இருக்கிறது...


பல இன்னல்களை கடந்து வர வலிமையான துணை அவளின் காதல் நிறைந்த மனம் தான்...


இவ்வளவு காதல் ஒரு பெண்ணிடம் பெற அவன் காடு மலையெல்லாம் தூசு என கடந்து வருவான்...


இதோ அமர் கடந்து வந்து கொண்டிருக்கிறான்..


ஆணாய்
அரக்கனாய் ஆணவமாய்
அகங்கரித்தவனை அன்பாய்
அரவனிப்பால் ஆராதித்து
ராமனாய் மாற்றினாள்...
தனவந்தனாய்
காதலில்லாத
காவலனாய் வந்தவனை
அன்பால் அணைத்து
காதலனாய் உருமாற்றினாள்...
பணி தந்தவனாய்
பனியென உறையவைத்தவனின்
பாவங்களை களைந்து
பிள்ளைக்கு தந்தையாக்கி
கணவனாக உயர்த்தினாள்...
காதல் மட்டுமே தந்து
காமத்தை வென்று
மனதால் அவனை
மீண்டும் மீண்டும்
உயிர்பித்து
இருவருக்குமாய்
உன்னத உறவினை
உருவாக்கி இதோ
நினைவிழந்து அவள்
கிடக்க அவளுடைய
கரங்களுள் தங்கள்
வாழ்வினை விதையென
பொதிந்து அவளுடன்
ஒருங்கே இணைத்து
பயணிக்க காத்திருக்கும்
அவளவன் காதல்
மெருகேறி அதை
மெருகேற்றி விருட்சமாக
வளர்ந்து நிற்கும்
அவன் அஞ்சலி
அமரஞ்சலி...❤❤❤


காதல்....


அப்பப்பா திகட்ட திகட்ட காதலிக்கும் அஞ்சலி....


அது தான் அவளை ஆராதிக்கும் அமர்...


மீண்டும் மீண்டும் படிக்கும் நான் ❤❤❤
சூப்பர் srimaaa...


படிக்கும் போது எங்களை ஒரு மயக்கத்தில் வைத்திருக்கும் உங்க எழுத்துக்கு ஒரு big salute ❤❤❤


என்ன romantic place....car head light உண்மையாக உணர்ந்தேன் படிக்கும் போது... செம இடம்....
Super 💕
 

Chitra Balaji

Bronze Winner
Woooooow... Woooooow.... Very very lovely lovely episode mam semma..... Ava birthday ku kandipa avan varuvaanu evvallavu நம்பிக்கை oda kaathukitu இருக்கா...... Evvalavu santhosham avana பாத்து.... Rendu perum எவ்வளவு santhoshama இருக்காங்க... Avalodaya gift 📦 semma avanuku appadi ஒரு santhosham.....எதனால அவன் kita avvallavu காதல் ah காட்டின...... Annaiku அந்த maari இருந்ததது ku appram thaan எதோ நடந்து இருக்கு அதுனால இப்போ ava அவ்வளவு காதல் அவன் kita kaatum pothu avvallavu பயந்தா போல athuku ethaamaari தானே aachi.... Appove kuzhanthai oda per எல்லாம் select pannitaa..... Super Super mam... Semma
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

அன்பில் சாய்ந்த நெஞ்சம் இரண்டு
அஞ்சனமானது ஒன்றில் ஒன்று!

அன்பில் வேய்ந்த தஞ்சம் கண்டு
ஆசுவாசமானது ஒன்றில் ஒன்று!

கூடிக் களித்த குயில்கள்
தேடிக் கொண்டதென்ன...?
பாடிப் பறந்த கிளிகள்
வாடி நின்றதென்ன...?

விதியின் ஆட்டம் முடியாத போது
மதியின் ஓட்டம் முடிவுற்றுப் போகும்...!
நிஜத்தின் நிதர்சனத்தில்
அன்பின் அரண்கள்
துணை நின்றாலும்
வம்பின் முரண்கள்
பிணை ஆகுமோ...?

ஆலோலம் பாடிய அன்றில்கள்
ஆனந்த ராகத்தில் லயிக்க...
ஆற்றாமல் தேடிய ஆருயிர்கள்
ஆனந்த மோகத்தில் முகிழ்க்க...
விதிர்க்க வைத்தவன்
விதியவன் தானோ...?
அதிரும் மனமே...!
எதிரும் புதிரும்
காட்டிய நடையில்
காதல் நிலையே!
கலங்காதிரு மனமே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்பீச்லெஸ் ஶ்ரீ மேம்🤩🤩🤩🤩🤩🤩

அச்சோ என்ன எழுத்து!!!!!!!!!!

லாஸ்ட் ரெண்டு எபியும் தான் இந்த கதை ஆரம்பிக்கும் போதுல இருந்து நாங்க எதிர்ப்பார்த்த விஷயம்.... உங்க ஸ்டைல ஒவ்வொரு தவறுக்கும் விளக்கம் சொல்லி நிஜமா அப்படியே எனக்கு புள்ளரிச்சிட்டு🥺🥺🥺🥺(இதுக்கு தான் பெரிய ரைட்டப் உண்டுனு சொன்னேன்)

"அவள் வலியில் அவனுடைய வலியை உணர்ந்தான்" முந்தின எபி லைன் adipoli 🤩🤩🤩🤩🤩🤩🤩

இதோ இன்னைக்கு "ஆத்மார்த்தமான உறவில்" ஸ்ட்ரைக் பண்ணி "ஆத்மார்த்தமான காதல்" nu திருத்தி சொல்லும் இடம் எனக்கு அமர் அஞ்சலிய தாண்டி நீங்க யோசிக்கிற விதம் தான் பிரம்மிக்க வச்சிது💞💞😘😘....

கடைசி epi முழுக்க காதல் காதல் காதல் மட்டுமே❤❤❤ அமர் இப்படி ஒரு காதல் மன்னன்னு எதிர்ப்பார்க்கல.... அஞ்சலி காதலுக்கு இவன் என்ன நியாயம் செஞ்சிட போறான்னு எதிர்பர்த்து இருந்தோம்...இவன் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொண்ணுல யும் கண்ணு வேர்க்குது🥺🥺🥺😥😥......

உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன மேம்..... போன எபி படிச்சு பார்த்து டோட்டல் கிளோஸ் 🙊🙊🙊🙊🙊அமர் மேல ஒரு க்ருஷ் வந்துட்டு😍😍💐🙊🙊 ஹீரோ பக்கம் சாய்ஞ்சது நமக்குள்ள இருக்கட்டும் மேம்🤭🤭🤭 உண்மையெல்லாம் தனியா தான் சொல்லனும்னு மஹிமா சொல்லி கொடுத்துருக்கா🤭🤭அதான் சைட் பக்கம் வந்துட்டேன்....😜😜இதை அந்த டான் கிட்ட மட்டும் மாட்டி விட்டுடாதீங்க🤐🤐🤐.......
 

ஶ்ரீகலா

Administrator
@Mirshi டான் இங்கே பல அவதாரத்தில் சுத்துக்கிட்டு இருக்காங்கன்னு ஒரு நியூஸ் வந்துச்சு. பார்த்து பீ கேர்புல் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Mirshi டான் இங்கே பல அவதாரத்தில் சுத்துக்கிட்டு இருக்காங்கன்னு ஒரு நியூஸ் வந்துச்சு. பார்த்து பீ கேர்புல் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ஆத்தாடி அப்படியா????🙄🙄🙄🙄🙄
டான் எபி போடாம இந்த பக்கம் வரமாட்டாங்க... நான் சொன்னது அவங்க கண்ணுக்கு மாட்டாம எனக்கு அடுத்து வர்ற கருத்துக்கள் காப்பாத்திடும்😂😂... அதுக்கு சீக்கிரம் epiya கொண்டு வாங்க மேம் 😜
 
Top