All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

Thani

Well-known member
அரசு தன்னுடைய தப்பை ,இந்த பிறவியில் மன்னிப்பு கேட்டும், தனது உயிரை மாய்த்துக்கொண்டும்,
அவனுக்கான தண்டனையை அவனே நிர்ணயித்துக்கொண்டான்☹
லக்ஷ்மணன் மகனின் மேல் அவ்ளோ பாசம் அதான் அவரினால் அவனின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாமல் மகனிடமே போய்விட்டார் ...
அவரின் நீண்டகால மௌனத்திற்கு மகன் கொடுத்த தண்டனைதானோ ,கண்முன்னாடி அவனின் இறப்பு ......
சூப்பர் ❤
 

vijirsn1965

Bronze Winner
Appa enna maarthiriyaana unarvu entre theriyavillai superb arpudhamaana story mam ninaithu paarkave mudiyaatha kadhai kalam Thiru Arasu Thilo anaivarukkum munjanma thodarbu aduththa piravi yilum thodarkirathu SarathChandhran, enna maathiriyaana character intha piraviyil chance ye illai Thirunavukarasaka irunthu Thilo ku seitha dhrogaththuku intha piraviyil thaane tharkolai seithu kondu niyayam seithu vittaan Thilo vidam avaluku maganaka vanthu pirappean entru sonna pothu kankalil kanneer nirainthu vittathu dhrogam seitha Arasu vin intha uruvam veandaam intha dhroga ninaivukalum veandaam entru thannai thaane maaithukolkiraan Sarath Maran Thilo avanai kolvatharku edam kodukkaamal Avan mudivai avane theadi kondaan kadaisiyil Laxmanapandyan edam oru vaarthai kuda peasavillai adhve avarukkaana dhandanai avarum thaan seitha dhrogathuku than uyirai vittu vittaar inimeal Thilothamai Maranin Ammai mattum thaan janmam kadanthum avarkal kaadhal thodanthu eruthiyil thangal kaadhalil eruvarum vertri pertru vittaarkal iniyaavathu avarkal vaazhvu sirappaaka amaiyattum vaazhga valamudan superb story mam pala edankalil nekizhvaaga irunthathu padithu mudiththa pinbu innum brimippu ennai vittu agalavillai ovvoru uds um avvalavu arumai ah irunthathu story pramaadham mam viji
 

Kirukalepandi

Active member
Ammadi ஏதோ திகில் படம் பார்த்த மாறி இருந்தது... ஆரம்பத்தில் ஒரு குழப்பதோடு தான் படிச்சேன் ஆனா, முடிவுல அவங்க அவங்க மனநிலையை தெளிவா சொல்லிட்டேங்க.. Full epi yum emotional aa irunthathu.. Oru sila விஷயங்களை நினைச்சே பக்கமுடியால.😳.. Niyam uyir kol எவ்ளோ intresting aa இருந்ததோ அதைவிட( NYK- still remember, i was keep on (FULL கதையை) searching for the episodes romba மெ னக்கிட்டு தேடிட்டுருந்தேன் ) அதிகமா வே இது intresting irunthathu. வாழ்த்துக்கள்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!

இனிய தோழி,

வடம் தேடிய வழக்கில்
வெளுக்காத கிழக்கு!

அவன் காதல் கை பிடிக்க
அவள் காதல் கை கொடுக்க
கெட்டிமேளம் கொட்டி இங்கு
இருமனமும் துடிக்க...
மணம் கொண்ட மாறனின்
மாறாத காதல்...
மனம் கொன்ற பேதையின்
தீராத காதல்...
மனதை பூட்டி
உளக்கிடங்கை மறைத்தவள்...
அகத்தை மீட்டி
காதலாழியை திறந்தாளோ...?

வஞ்சிக்கப்பட்டவள்
வஞ்சியவள் என்றால்
தண்டிக்கப்பட்டவன்
தடம் மீறுவானே...!
தடம் மாறிய வழக்கில்
புடம் போட்ட பெண்மை
வடம் பிடிக்கும் வழக்கில்
வழுவாத நீதியில்
மனுநீதி யாரோ...?

நீதி கேட்ட இலக்கில்
வழுவாத மேன்மையில்...
ஜென்மம் கடந்தாலும்
பந்தம் அறுந்தாலும்
சொந்தம் புரிந்தாலும்
வித்திட்ட வினைக்கு
விளக்கங்கள் சொல்லாமல்...
பித்தான தந்தைக்கு
இளக்கங்கள் காட்டாமல்...
நீதியில் வென்றவன்
மனு நீதி என்று...
தன் தலை கொய்து
கோலோச்சினான் அரசனே!

வாழ்த்துகள் தோழி, நன்றி.

ஒரு வித்யாசமான, ஜென்ம பந்த பாசங்களை உயிரூட்டி, உணர்வால் மெருகூட்டி, மனதை மிரள வைத்த நடைக்கு என் இனிய வாழ்த்துகள் தோழி. விட்டு விட்டு படித்தாலும், தொட்டுத் தொடர்ந்த காதலது, மனதை கட்டி இழுத்த காருண்யம், எழுத்தரசி மொழிக்கு தமிழ் தந்த பெருமையே! அது எங்கள் மனம் வென்ற இனிமையே!
இந்த கதை, கற்பனையாய் நின்றாலும், காட்சிகளின் தெளிவில், கண்முன் நர்த்தனம் ஆடிய அழகு, பேரழகு.
சரத் சந்திரனவன் வழுவாத நீதிக்கு, கலியுக காவியத்தில், இது காப்பிய தோரணமே!
மீண்டும் ஒரு அழகிய காதல் கதையில், மேஉம் மேலும் உங்கள் கதையை ரசிக்க காத்திருக்கிறேன் தோழி. வாழ்த்துகள், நன்றி.
 

ZeenathSabeeha

New member
Srikala Tamil Novels சிஸ்டர் எழுதிய "உன்னைத் தொடர்வேன் உயிரால் தொடுவேன்"
அப்பப்பா... கதையில் ட்விஸ்ட் வைக்க சொன்னால் இவர் டுவிஸ்டையே கதையாக வைத்திருக்கிறார்.. கதை முழுவதும் நம்மை சுற்றளில் வைப்பதே இவருக்கு வேலை 😀😀 சரத் சந்திரன் மாறன் மித்ரவேல் இவர்கள் இருவரில் யார் ஹீரோ என்பதை குழப்பி அடித்து போகப் போக புரிய வைத்தார் தன் அருமையான எழுத்தால்,.. இதே போல் சிவரஞ்சனி.. திலோத்தமை.. இவர்களில் யார் ஹீரோயின் போகப் போகக் கிடைத்தது விளக்கம்... ஜென்ம ஜென்மமாக தொடரும் இவர்களின் காதல்.. ஆனவனின் காதல் உயர்ந்ததா? பெண் அவளின் காதல் உயர்ந்ததா படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. மித்திரவேல் தன்னவனின் காதலுக்காக இவன் ஏங்குவது மிகவும் பாவமாக இருந்தது 😔 இவனின் பி ஏ பிரபு வெகு அருமை இவர்கள் இருவரின் உரையாடல்களும் சூப்பர் 🥰👏 தன் ரத்தம் என சிலர் கொண்ட அதீத பாசமே ஒரு குடும்பம் துயர் கொள்வதற்கு காரணமாகி விடுகிறது 😔 தனக்கு வலிப்பது போல் அடுத்தவருக்கும் வலிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இருந்தாலே இந்த ஜென்மமாய் தொடரும் நிகழ்வு நிகழாமலே போயிருக்கும் 😔 எப்பொழுதும் போல இவரின் அதிரடியான எழுத்துக்களில் ஒரு அதிரடியான கதை👏👏 ஆரம்பித்த கதையை இடையில் நிறுத்த முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை👍 இதற்கு மேல் இந்த கதையை பற்றிய விளக்கத்தை கொடுத்தால் படிக்கும் சுவாரசியத்தை குறைத்து விடும் அதனால் படித்து பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே 🥰 எப்பொழுதும் போல் இதிலும் உங்கள் எழுத்து எண்ணை மயங்க வைத்தது 🥰🥰😘 வாழ்த்துக்கள் சிஸ்டர் 👏👏
இந்த கதையின் லிங்க் இன்று இரவு வரை மட்டுமே இருக்கும் நண்பர்களை அதற்குள்..
Good luck dear 🥰❤🎉
Keep rocking 🌹🥰👏
 
Top