All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

அருமையான பதிவு
ராவணன் பெயர் விளக்கம் அருமை
எல்லா ஜோடிகளின் காதல்
ஒவ்வொரு விதத்திலும்
வித்தியாசமாக தான்
இருந்தது
 

Subasini

Well-known member
ராதைக்கேற்ற ராவணன்....

பேருரிமையுடையவன்.... அருமையான விளக்கம்....

இந்த சமூகத்தில் ஆண் தன்னை சில வஞ்சக பெண்ணிடம் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்றால்.... பெண்ணோ ஆண் பெண் இருவரிடமும் தன்னை காத்துக்கொள்ள போராட வேண்டும் என்பது விக்னேஷ் மற்றும் அபிராமி தான் உதாரணம்....

தன் காதல் தோல்வி, தனக்கான வாழ்கையில் ஏமாற்றம் எல்லாம் வேறொருவர் காரணம் என எண்ணி கொடுமை செய்வதெல்லாம் அவரின் குணம் எப்படி என சிந்திக்க தொன்றும், இவருக்கு காதல் என்ற மெல்லிய உணர்வு எப்படி வந்தது என்பது தான் ஆச்சரியம்.... இவரின் தவறை அழகாக சரி செய்த சிவசங்கரனுகாவது நேர்மையக இருந்து இருக்கலாம்.

பெண்ணின் நிலை தான் பரிதாபத்திற்கு உரியது....பெண் அரண்டு , பயந்து கட்டுபடும் அவலம் என்பது அவள் மானம் தான் என்பது இங்கேயும் உறுதியாகிறது....பெற்ற தாய் துரோகியாக இருக்கும் இந்த சூழலில் வேற எதுவும் பேச இயலாது....

தன்னை காத்துக்கொள்ள அவள் பேசிய வார்த்தைகளை கொண்டு தொடங்கிய கதை களம் பழி பழி என உறுமிய நாயகனை காதல் காதல் என பிதற்ற வைத்து அவளுக்காக எதையும் செய்ய துணியும் மனம் வந்து அவளை காத்து நி்கும் அரனாக மாறிய காதலனாக மாறும் இந்த கிருஷ்னார்ஜூன் தான் கதை களம்....

நாயகியை காக்க அவள் கணவனிடமே போராடும் அவள் மித்ரனாக எந்த சூழலிலும் அவளை கை விடாது தோள் கொடுத்த கண்ணனின் நட்பை புரிந்து கொள்ளும் இடத்தில் இந்த ஹீரோ score பண்ணறான்...

தன் தங்கைக்கு நீதி வழங்கிய போது அவன் பால் காதலால் வழுக்கியது ராதையின் நெஞ்சம்.... கணவனுக்கு நியாயம் செய்ய துடிக்கும் அவள் குற்றவுணர்வை காதலாக மாற்ற அவன் செய்தது பெண்ணுக்கு மரியாதையை அது அவளை அவனிடத்தில் வீழ்த்தியது தான் உண்மை....

பெரியவர்கள செய்யும் பிழை அவர்கள் பிள்ளைகள் வாழ்க்கையை பதம் பார்க்க அதை வலியோடு கடந்து வரும் இந்த கதையின் ஹீரோ ஹீரோயின் தங்கள் காதலை அதில் செதுக்கு கொள்வது தான் அழகு...

பாண்டியன் தன் மனதின் அழகால் காதலை ஜெயித்தான் என்றால், மணி மாறன் தன் நட்பால் காதலை உயர்த்தினான்....
புரிதல் என்பதும் ,விட்டுக்கொடுத்தல் என்பதும் , காத்திருப்பதும்,காதலின் சிறப்பு என்பதை ராதிகாவின் காதல் உறுதிப்படுத்துகிறது....

கதையில் காதல் மட்டும் அல்ல நட்பு, விஸ்வாசம், புரிதல், காத்திருப்பு,குடும்பம் என எல்லாம் நிறைந்து உங்கள் ஸ்டைலில் கதையை தந்து எங்களை மகிழ்ச்சி படுத்துட்டிங்க ஶ்ரீமா.... வாழ்த்துக்கள்....

பழி என ஆற்பறித்தான்...
காதலில்லை என இறுமாத்திருந்தான்...
உணர்வுகளை மீட்டெடுக்க போரிட்டான்...
உறவுகளை பகைத்திருந்தான்....
நட்பிடமும் மறைத்திருந்தான்...
சமூகத்தின் நாயகனாகினான்
பத்தினியிடம் ராவணனகி எள்ளி நகையாடினான்...
அவள் குற்றவுணர்வில் குன்றிபோனான்...
நாளேட்டின் பக்கங்களில் அவளுக்காய் வருந்தினான்...
அவளுக்காய் அவளாகவே அவனான்...
அவள் மனதில் ராமனாகியவளை ஆராதித்தான்...
பெண்ணின் காதல் அவனை கொண்டாட
ஆணின் காதல் அவளை மரியாதை செய்ய
ராதைக்கான இந்த அர்ஜூனன் என்றும்
கிருஷ்னார்ஜூன்னாக ....
இந்த ராவணனுக்கேற்ற ராதை இவளே என்று அவளை கொண்டாடும் காதல் கணவன்.......
 
Last edited:

Indhumathisara

New member
Krishna Arjun character was nice கொஞ்சம் கோவம் நிறைய love wife mela.Pandian character jolly type both of them expressed their feeling well. Kannan very supportive to anuradha romba poorumaisali manimaran nice support to his friend radhika playfull naughty girl Saritha,Nandhini and arundhadhi soft everyone was characterised well
 

geethusri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுடைய பார்வையில் அபிராமி கதாபாத்திரம் பாவப்பட்ட பெண் கதாபாத்திரம்... ஒருவனை காதலித்து அவன் மேல் உள்ள நம்பிக்கையில் தன்னையே அவனிடம் இழந்து அவன் உயிரை சுமக்கும் தருவாயில் அவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது தெரிய வரும் போது எவ்வளவு வேதனை கொண்டிருப்பாள்... பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து வாழ வேண்டிய சூழல்... ஆனால் அந்த கணவனும் உண்மை தெரிந்த பிறகு அவளை ஒதுக்குகிறான்... ஒரு கட்டத்தில் தன் கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தங்களின் இல்லற வாழ்க்கையை தொடங்கினாலும் அந்த நிலையில் அவளின் உள்ளம் என்ன பாடுப்பட்டிருக்கும் என்பதை பெண்களால் மட்டுமே உணர முடியும்... ஒருவேளை அவரின் வாழ்க்கை நன்றாக அமைந்திருந்தால் அவர் இந்த அளவிற்கு சென்றிருப்பாரா? அனைத்தையும் மறந்தும் அவரால் வாழ முடியாது... ஏனென்றால் அவருக்கு கனகவேல் இழைத்த அநீதிக்கு சான்றாய் அனுராதா அவர் கண் முன் இருக்கையில் அவரால் எப்படி மறக்க முடியும்? அவளை பார்க்க பார்க்க தான் ஏமாற்றப்பட்டதுதானே அவர்க்கு நினைவு வரும்... பொதுவாகவே பெண்கள் எதையும் மறக்க மாட்டார்கள்... அது சிறியதோ... பெரியதோ... அப்படி இருக்க அபிராமியால் கனகவேலின் துரோகம்... சிவசங்கரனின் பாராமுகம்... அவர்களின் இல்லற வாழ்க்கை தொடங்கிய விதம் இப்படி எதையும் மறந்திருக்க மாட்டார்... அதுதான் சந்தர்ப்பம் கிடைத்ததும் கனகவேலால் தனக்கு கிடைத்த வாழ்க்கையை போல அவர் மகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டுருக்கிறார்... அனு அவரின் மகள் தான்... ஆனால் நம் சமூகத்தில் பிள்ளைகள் ஆணின் வாரிசாக தான் பார்க்க படுகின்றன... அதனால் கூட அவர் அனுவை இறுதி வரை கனகவேலின் மகளாக பார்த்திருக்கலாம்... அவர் முதலில் அனுவிற்கு தன்னை போல ஒரு வாழ்க்கையை தான் அமைத்து கொடுக்க திட்டமிட்டுருக்கிறார்... ஆனால் விக்னேஷின் செய்கைகளால் அவனை பயன்படுத்தி அந்த குடும்பத்தை அவமானபடுத்தியிருக்கிறார்... சாதாரண மனித இயல்பு தானே... கிருஷ்ணார்ஜுன் தான் பட்ட அவமானத்திற்கு கொலை செய்ய துணியவில்லையா? வருந்தினால் அது சரியாகிவிடுமா? அப்போதே அனு இறந்திருந்தால்? கிருஷ்ணார்ஜுன் தான் பட்ட அவமானத்திற்கு அவர்கள் குடும்பத்தை பழி வாங்க நினைக்கவில்லையா? அதற்காக அவனும் குறுக்கு வழியில் தானே செல்கிறான்? அதை தவறென்று சொல்ல முடியுமா? அவரவர்க்கு அவரவர் நியாங்கள்... இந்த கதையில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தவறிழைக்கின்றனர்... அனைவர்க்கும் மன்னிப்பும் கிடைத்துவிட்டது... ஆனால் அபிராமியை மட்டும் இங்கு நிறைய பேர் தவறாக நினைக்கின்றனர்... அவர் தாயே அல்ல என்று சொல்கின்றனர்... அனுவை அவர் முழுக்க வெறுத்திருந்தால் எப்போதோ கொன்றிருக்கலாம்... அவர் அப்படி பண்ணவில்லையே... தன் விரலை கொண்டு தன் கண்ணை குத்த செய்வது போல கனவேல் வேதனை படவேண்டும் என்று திட்டமிட்டுருக்கிறார்... அதன் பிறகு அவரின் செய்கைகள் எல்லாம் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே... ஆனால் இவை அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்ட கனகவேலுக்கு எந்த தண்டனையும் இல்லை... அவர் குடும்பத்தில் புயல் அடிக்க வேண்டாம் என்று கிருஷ்ணார்ஜுன் நினைப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை... ஒரு பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றியவருக்கு எந்த தண்டனையும் இல்லையா? அபிராமி வேதாச்சலம் செய்ததற்கு தண்டனை கொடுத்த அர்ஜுன் இவரை மன்னித்ததை ஏற்று கொள்ள முடியவில்லை... பெண்களுக்கு அநீதி இழைத்தால் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்... சீதா தேவிக்கு இழைக்கப்படுவது தான் அநீதியா? சூர்பனகைக்கு நடந்தால் இல்லையா? யாரென்றாலும் பெண் பெண்தானே... கனகவேல் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட மன்னிப்பை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை...அனைவரும் ஏதோ ஒரு காரணத்தால் ஏதோ ஒரு சூழலில் தவறிழைத்தவர்களே... ஹீரோ உடன் இருக்கும் கதாபாத்திரம் தவறிழைத்த போதும் மன்னிப்பு கொடுக்க பட்டதை போலவும் மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதை போலவும் ஒரு உணர்வு எனக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை... இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...
 

rajinrm

Member
hi kala, story rompa azhaku. super. Ravanan name ku ippadi oru other definition irukku nu ippo dhan therinthathu. krishnan arjun iru name um sernthu krishnarjun irunthathal thanaku thane geethai vakuthu kondu athupola nadakkam nu irunthu irukkan. but rathaiyai kolla ninaithathu dhan konjam krishnan geethai pathai mari poi irukkirar nu ninaikiren. ethuanalum rathai yai kolla aatkal anubuvathu rompa rompa thavaru. kala sis thank you for your another super story ku. with regards from rajinrm
 
Top