All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீயின் "யாரென்று அறியாதவன் யாதுமாகினான்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் கியூட் கிட்டீஸ் , குட்டீஸ் ,சுட்டீஸ் பியூட்டீஸ்😍😍 இத்தளத்தில் வாசகியாக இருந்த நான் கதை எழுதும் ஆர்வத்தில்
புதியதொரு கதையினோடு வந்துட்டேன்… இது என் மனதில் தோன்றிய முதல் கதை… (அப்படி என்ன உனக்கு புதுசா தோனிடப்போகுதுனு ரொம்ப யோசிக்காதிங்க 😂😂😂 இது புதுசு இல்ல பழசு தான் 😉😉😉ஆனா என் புதிய முயற்சி😊😊😊) இது காதல் பற்றிய கதை களம்… காதலைப் பற்றி
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள்… காதல் ஓர் அழகிய உணர்வு சில சமயம் மெல்லிய பூங்காற்றாய் தேகம் சிலிர்க்கச் செய்யும் சில சமயங்களில் புயலில் சிக்கிய உணர்வைத் தரும்… மனம் என்னும் பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கபடும் ஓர் இனிய உணர்வு, கடவுளை போல் கண்களுக்கு புலப்படாது… உணர்வுகளால் உணரக் கூடியது… மணம் கமழும் மலராய் மனம் மலர செய்து ஏகாந்தம் காண்பது காதலில் மட்டுமே… காதல் இல்லா உயிரினை கண்டிலேன் ஆம் காதலின்றி உயிர்கள் இல்லை இவ்வுலகில்… ஒரு ஆண் பெண்ணின் மீதோ அல்லது ஒரு பெண் ஆணின் மீதோ காதல் கொள்வது மட்டுமல்ல காதல்…

பூக்கள் மீதும் காதல்
பூங்குயிலின் மீதும் காதல்
காற்றின் மீதும் காதல்
காடுகளின் மீதும் காதல்
இசையின் மீதும் காதல்
இயற்கையின் மீதும் காதல்
இயக்கங்களை எல்லாம் இயக்கும் சக்தியான கடவுளின் மீதும் காதல்
புல்லின் மீதும் காதல்
புள்ளினங்களின் மீதும் காதல்
புவியெங்கும் கலந்திருக்கும் காலத்தின் மீதும் காதல்
காலம் கடந்து ஞாலம் போற்றும் காதலின் மீதும் காதல்....


எங்கிருந்தோ வந்த ஒருவன் , யாரென்றே அறியாத ஒருவனைப் பற்றி அறிகிறாள் பாவையவள் , தன் காதலில் அவளை திளைக்கச் செய்து…காதல் கடலில் மூழ்கி முத்தெடுக்க வைத்தவன் ,அவளுக்கு யாதுமாகி போகிறான்..
யாரென்றே அறியாதவன் யாதுமாகினான்…
கதையின் நாயகி: ஸஷ்ரியா
கதையின் நாயகன்: போக போக தெரியும் 😂😂😂 (அதான் யாரென்றே தெரியாதவன்னு சொல்லிட்டேனே😉😉😉)

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினால்
முதல் பார்வையிலே எத்தனை எத்தனை பரிமாற்றங்கள்
அதனால் ஏற்பட்ட மனதின் கிறக்கங்கள்
அவனோ அவள் மனம் கொண்ட கள்வன்
இவளோ கள்வனின் காதலி
இது தான் கண்டதும் காதலோ??
இல்லை கண்டதினால் காதலோ.....
ஒரு க்ஷணப் பார்வையில்...
ஒவ்வொரு க்ஷணமும் அவளின் பார்வை அவனுக்கும் ....
அவனின் பார்வை அவளுக்கும்
மையலோடு கூடிய தார்மீக அன்பின் வெளிபாடு.....
இது சரீரத்தின் தாளமல்ல
ஆன்மாவின் ராகம்😍😍😍

கவிஞர் கண்ணதாசன் கூறியது போல,
காதல் சரீரத்தின் தாளமல்ல…
ஆன்மாவின் ராகம்….
(மேல இருக்க கவிதை நான் எழுதுனது 😛😛😛 ஆனா முதல் வரி கம்ப இராமயணத்தில் இருந்து சுட்டுடேன் இறுதி வரி கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்ல இருந்து சுட்டது 😂😂😂 இடையில் உள்ளது இனியவளான என் கற்பனையே😉😉😉😍)

யாதுமாவான்… 😍😍😍
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது என்னோட முதல் கதை ... நிறை குறை பிழை இருப்பின் உங்கள் கருத்துக்களின் மூலம் சுட்டிக் காண்பிக்க மறவாதீர்கள்...
உங்களது கருத்துக்கள் எனது பிழைகளை சரி செய்ய உதவும். இக்கதையினை பற்றி அறிமுகம் கொடுத்துள்ளேன். விரைவில் கதைக்கான முன்னோட்டத்துடன் வருகிறேன் 😊😊😊
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
TEASER-1



அந்த அதிகாலை வேளையில் அவ்விடமே கலைக்கட்டி இருந்தது… சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபம் …. மலர் வனத்தில் நுழைந்துவிட்டோமோ என வியக்கும் வகையில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது…. அந்த பிரம்மாண்ட வாயிலில் வாயில் காப்பாளர்களாய் இருந்தன வாழைமரங்கள்… அலங்கார விளக்குகளினுடே அந்த ஏகாந்தமான காலை வேளையில் அழகாய் மிளிர்ந்தது அவ்விடம்… ( எம்மா!!! போதும் விவரிச்சது கல்யாண மண்டபம்னா இப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியாது பாரு...😏😏😏 இப்படி கேட்டது வேற யாருமில்லிங்க என் மைன்ட் வாய்ஸ்ஸே தான்… அட அறிவுக் கெட்ட மைன்ட் வாய்ஸ்ஸே நீ போதும் எனக்கு… 😣😣😣)
சரி வாங்க யாருக்கும் யாருக்கும் கல்யாணம்னு பார்த்துட்டு வரலாம்… 😊😊😊
(உன்ன பார்த்தா கல்யாணத்த பார்க்க வந்த மாதிரி தெரியல … 🤔🤔🤔 உண்மைய சொல்லு நல்லா சாப்பிட தானே வந்த🙄🙄🙄 நம்மல பத்தி கரக்டா சொல்லுதே🙄🙄 நம்ம m.v ஆச்சே தெரியாம இருக்குமா… சரி சரி… என் புகழாரம்ல வெளிய சொல்ல கூடாது 😉😉😉)
திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஒருப்பக்கம் நடந்து கொண்டிருக்க மற்றொரு பக்கம் மணமக்கள் தத்தம் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்… (அடேய்! கல்யாண பொண்ணையும் பையனையும் பாக்க வந்தா முகத்த மறைச்சி இருக்கிங்களேடா…
அடியே இது வடக்கத்திய முறை திருமணம் …)
அங்க ரெண்டு பேர் பேசிட்டு இருக்காங்க வா… சஞ்ஜு என்னனு கேட்போம்… மனசாட்சிக்கிட்டியே மனசாட்சி இல்லாம பேசுறவ நீ தான்டி ரிஷி… இப்ப வரியா இல்லையா நீ… சரி சரி வந்து தொலைக்கிறேன்)
"டேய் ! அங்க மணமேடை ஃப்ரியா இருக்கு (‘ஐஸ்கிரீம் ஃப்ரியா தராங்க வா சாப்ட போலங்குற மாதிரில கேக்குறா’) இன்னிக்கு இங்க கல்யாணமே நடக்காது சோ நாம கல்யாணம் பண்ணிக்கலாம் படிச்சி படிச்சி சொன்னனேடா இப்ப வந்து என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்ற… "(என்னங்கையா இங்க நடக்குதுஉஉஉஉஉ “ச்சு அமைதியா இரு” )"அடியே நானே வா சரினு சொன்னேன் என்ன அப்படி சொல்ல வைச்ச டி நீ… ","ஓஹோ சார் அப்ப என்ன லவ் பன்னல அப்படி தானே… 😣😣😣" என்று பாச பார்வை வீசினாள் அவன் மீது… 'அய்யய்யோ இவ இப்படி பார்த்த நமக்கு டேஞ்ஜர் ஆச்சே'… "பேபிமா! வந்து… நீ வரவே வேணாடா … ","நான் அன்னிக்கே சொன்னேன் எனக்கு பேஸ் கவர் பண்ணிட்டு நார்த் இந்தியன் ஸ்டைல் ல கல்யாணம் செய்துகனும்னு ஆசைனு(உன் ஆசையில தீய வைக்க… “நல்லா ஆசைப்பட்ட போ”) அப்போ சரி சரி சொல்லிட்டு இப்ப இப்டி சொல்றல எங்க மாமா பையன் இருக்கான் அவன கல்யணம் செய்துக்கிறேன் நீ வேணா போடா...😣😣😣"," அடங்க மாட்டியாடி நீ நம்ம அப்பா அம்மாக்கு தெரிஞ்ச வருத்தபடுவாங்க பேபிமா…"," நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சேடா…வருத்தமும்பட மாட்டாங்க வருத்த கடலையும் சாப்ட மாட்டாங்க டா… "
"ஆமா ஆமா… நம்மல வருத்து எடுப்பாங்க டி… (“என்னாது கல்யாணம்…. ஆகி...டுச்சா… “ லூசாடா இவ🙄🙄🙄) அது தான் டி நானும் சொல்றேன் நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே அப்பறம் ஏன் டி படுத்துற…"," டேய்!" 'அய்யோ கண்ண உருட்டுறாளே' "பிளீஸ் பேபிமா புரிஞ்சிக்கோடா… இது தப்பு அவங்க எவ்ளோ ஆசையா கல்யாணம் செய்துக்க போறாங்க நாம இப்படி செய்ய கூடாது டா… ","டேய் மரமண்டை அவங்க கல்யாணம் நடக்காதுடா… ","ஏன் டி இப்படி அபசகுனமா பேசுற… ","நான் ஒன்னும் அப்படி சொல்லலடா… அது நடக்காது எனக்கு தெரியும் என்ன நீ நம்புறலடா மாமா… "(ஆஹா! நம்ம வீக்கனஸ் வச்சு வீழ்த்துறதுல நம்பர் 1 ஆ இருக்காலே)" சரி பேபிமா… மாமா உனக்காக எதையும் செய்வேன்டா"(‘ அய்யோ வாய குடுத்து மாட்டிக்கிறியே ராசா… அடுத்து கிறிஸ்டியன் முஸ்லிம் மாதிரி கல்யாணம் செய்ய ஆசைய இருக்கு மாமா னு கெளம்ப போறா பாத்துக்கோ’) "இப்ப வந்து சொல்லு உன்கிட்ட பேசி வாய் வலிச்சது தான் மிச்சம்"(‘அப்படி சொல்லுடி தங்கம் இவனால இவ்ளோ டைப் செய்ய வேண்டியதாகிடுச்சு’)...
இவர்கள் தங்களை அலங்கரித்து வருவதற்குள் வாங்க நம்ம மண்டபத்த சுத்தி பாக்கலாம்… (ஹி ஹி ஸ்டோர் ரூம் கிட்சன சொன்னேன்… சாப்ட போவோம் .😋😋😉😉) அங்கே இரு ஜோடிகள் தங்கள் முகத்தினை மறைத்தபடி இருந்தனர்…" நம்ம கல்யாணம் நடக்கவிடாம செய்ய நிறைய பேர் இருக்காங்க டா அதான் உன்ன இங்க யாரு கண்ணுலையும் படாம அழைச்சிட்டு வந்துட்டேன்… ஊரரிய உன்ன கல்யாணம் செய்யனும்னு இருந்தேன் இப்டி கல்யாணம் செய்ய வேண்டி வந்துருச்சி என்ன மன்னிச்சிடு அம்மு…" என்று சொல்லிக் கொண்டே அவன் அந்த மாங்கல்யத்தினை அவளுக்கு அணிவித்து தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான்… அதே சமயம் "பேபி செகண்ட் டைம் உன்ன கல்யாணம் செய்றது கூட கிக்கோட கூடவே சந்தோஷமா இருக்கு டி…" என சொல்லி அவள் சங்கு கழுத்தில் மாங்கல்யத்தினை அணிவித்து திலகமிட்டான்… "யாரோ கல்யாணமே வேணாம் சொன்னாங்களே யாரு மாமா அது …"," என்ன டி கிண்டலா" என அவள் மென் கரம் கிள்ளினான்…அவள் அலறாமல் இருக்க உதடு கடித்தாள்....

இதே சமயம்… பக்கத்திலிருந்த பிள்ளையார் கோவிலில் …" ரொம்ப நன்றி இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு " என்று கூறிக்கொண்டிருந்தவளின் வெண் சங்கு கழுத்தில் திடீரென்று தாலி கட்டி தன்னவளாக்கிக் கொண்டான் அவன்… "நான் பிரதி உபகாரம் இல்லாம யாருக்கும் உதவி செய்ய மாட்டேன் மா "என அழகாய் கண்சிமிட்டினான்…
அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள் பெண்ணவள் 😉😉😉
வாங்க மண்டபத்துல என்னா நடந்ததுனு தெரிஞ்சிக்கலாம்…
ஸ்டோர் ரூமில் இருந்த ஜோடிகள் திருமணம் முடிந்ததும் நேரே மணவறை சென்றனர்… அப்போது அங்கே அவர்கள் அடுத்து கண்ட காட்சியில் அனைவரும் ஸ்தம்பித்தனர்…



யாருக்கு யாரோட கல்யாணம் ஆச்சு ??இவங்க எல்லாருக்கும் என்ன சம்பந்தம்?? இது போன்ற கேள்விகளுக்கான விடை….
“போக போக தெரியும் கதையினை தொடர்ந்து படித்தால் புரியும்”😂😂🤣🤣🤣😉😉


புரியாத புதிராய் பலர்
புரிந்தும் புதிராய் சிலர்
நீ புதிரா எனக்கு எதிரா
உன் தீரா காதலோ தீரா
நானும் காதல் கொண்டேன்
என் தீரா….

யாதுமாவான்….
 
Last edited:

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மேலே கொடுக்கப்பட்டது கதைக்கான முன்னோட்டம்... இன்னும் அத்தியாயம் பதிவிடவில்லை ... எல்லோருக்கும் அங்கு திருமணம் யாருக்கும் யாருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது அது கதையின் போக்கிலோ அல்லது இறுதியிலோ தெரியவரும்... முக்கிய கதாபாத்திரங்களை முதல் இரு அத்தியாயங்களில் கொடுத்துவிடுவேன்... லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி .... சைலன்ட் ரீடர்ஸ்க்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று மாலை முதல் அத்தியாயத்துடன் வருகிறேன் டியர்ஸ் 😊😊😊
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPISODE-1



யாரும் அற்று வெருச்சோடி இருந்த அந்த சாலையில் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாள் அவள்… (‘உசைன் போல்ட்க்கு தங்கச்சியா இருப்பாலோ’🤔🤔🤔) அவளை முறைத்தவாரே ஆவேசத்துடன் துரத்திக் கொண்டிருந்தான் அவன்….
(‘யாரா இருக்கும்🤔🤔🤔 அம்மா மின்னலு, யாருனு சொல்லு மா’)

அச்சோ சொல்ல மறந்துட்டேன் இவ தாங்க நம்ம கதையின் நாயகி😂😂😂(‘அடியே இந்த பொண்ணு என்ன பன்னிடிச்சினு இப்படி எடுத்ததும் ஓட விடுற’)😂😂😂”அப்போ தான் என் கதையும் நல்ல ஓடுங்கற நினைப்புல தான்”😜😜😜(‘உன் நினைப்புல நைட்ரிக் ஆசிட் ஊத்த’)


“அய்யோ விடாது போலயே” பயத்தில் வேர்த்து விருவிருத்து போனால் அவள்… அவன் இன்னும் வேகமெடுக்கவும், செய்வதறியாது திகைத்தாள், திகைத்தவளின் பார்வையில் பட்டது அது, அதை கண்டதும் அவள் கண்களில் ஓர் நிம்மதி(கல்லு /கட்டை எடுத்து அடிக்க போறா னு நினைச்ச அது ரொம்ப தப்பு மக்களே, ஏன் னா, செல்லம் கொஞ்சம் பயந்த சுபாவம்) சற்றும் தாமதிக்காமல் சட்டென்று திறந்திருந்த அவ்வீட்டினுள் நுழைந்தவள் கண்கள் சுழல மயங்கி சரியவிருந்தால் ….

அப்போது இரு வலிய கரங்கள் அவள் மெல்லிடையினை பற்றி அவள் கீழே விழாமல் தாங்கிப் பிடிக்க , ஒரு வலிய கரம் அவள் பூங்கரத்தினை பற்றி இழுப்பதற்காய் நீள… அங்கே அவள் கண்ட காட்சியில் நினைவுகள் பின்னோக்கி செல்ல சற்று நேரத்தில் மயங்கிச் சரிந்தால்….



அப்படி என்ன நினைச்சி இருப்பா??? (அவ மைன்ட் வாய்ஸ நான் கேட்ச் பன்னிடேன் அத வச்சு நாம அவளோட அவ வாழ்ந்து கொண்டிருந்த வரலாறு (இங்கயும் வரலாறா னு பயப்பட வேண்டாம் )எப்படி இருந்துச்சு னு பாக்க கொசுவத்திய சுழலவிடுவோம்.
(ஹா ஹா, கொசு வ கொல்ல பயன்படுதோ இல்லையோ ஃப்ளாஷ் பேக் தெரிஞ்சிக்க பயன்படுது)




அவ்வினிய காலை பொழுதினில் கடமையே கண் என கருதும் கதிரவன் தன் கிரனங்களை பரவச் செய்து பலரின் மனதில் பரவசமூட்டிக் கொண்டிருந்தான்…
‘கீச்’ ‘கீச்’ என்ற பறவையின் ஒலியும் , குக்கூ… குக்கூ… என்ற குயிலின் கானமும் செவிகளுக்கு இனிமை சேர்த்து அந்த காலைப் பொழுதினை மேலும் அழகாக்கியது…
ஆங்காங்கே இருந்த மாணவர் கூட்டமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் என அக்கல்லூரி பரபரப்புடன் காணப்பட்டது…
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான சேர்க்கை நடைப்பெற்றுக் கொண்டிருந்தது…
அங்கே அழகின் திருவுருவாய் மஞ்சள் உடையில் பச்சை நிறம் தெரிக்க புன்னகையுடன் இருந்தாள் ஓர் மஞ்சள் அழகி… அவளை ரசித்துக் கொண்டிருந்தது இரு ஜோடி விழிகள், “நம் கதை நாயகி அப்படினு நினைச்சா அதுக்கு நான் பொருப்பில்ல”

அவள் அருகில் சுவரசியமாய் கதைத்துக் கொண்டிருந்தாள் அவள்… பீச் நிறத்தில் ஆங்காங்கே வெண்ணிற முத்துக்கள் பதித்திருந்த உடையில் முத்து மூரல் மின்ன புன்னகை பூசி அழகாய் இருந்தாள் அவள்… ஸஷ்ரியா.

இவ்வளவு நேரமும் அவள் ரசித்து பேசிக் கொண்டிருந்தது சரக்கொன்றை மரத்திடம். ஆம்! அந்த மஞ்சள் அழகி சரக்கொன்றை மரம் தான்.
அப்போது அவளை சுவரசியமாய் பார்த்துக் கொண்டே வந்தாள் பெண்ணொருத்தி…

“ஹாய் ! நான் வினோநியா.. உங்களை பார்த்தா ஃபர்ஸ்ட் இயர் மாதிரி தெரியுது!! Am I right?? நான் ஃபர்ஸ்ட் இயர் EEE டிபார்ட்மென்ட் , அப்றம் நீங்க சிரிக்கும் போது அழகா இருக்கிங்க 😊😊😊 உங்க பேர் என்ன எந்த டிபார்ட்மென்ட் ??“ பிரன்ட்ஸ் என்று தன் கையினை அவள் புறம் நீட்டி வினவினாள்….

நீட்டிய கையினை பற்றிக் கொண்டே, “போதும் போதும் மூச்சு விடுங்க ஹப்பா நான் ஸ்டாப் பா பேசுறீங்க.. ஐ அம்(I am) ஸஷ்ரியா, ECE டிபார்ட்மென்ட் அண்ட் தேங்க்ஸ் உங்க சிரிப்பும் உங்க பேச்சு மாதிரியே ரொம்ப அழகா இருக்கு.” என்று பாராட்டினாள்.

"ஹே வாவ் சூப்பர்! நான் நியா, நீ ரியா😍 ஆமா உனக்கு அப்போ என் சிரிப்பு கூட என் பேச்சு மாதிரியே மொக்கைனு indirectஆ சொல்லுற மாதிரி தெரியுதே…

அப்படிலாம் இல்லங்க நியா…

என்னது ‘ங்க’ வா நமக்கு இந்த வாங்க போங்க லாம் கேட்டா அலர்ஜி நம்ம ஒரே இயர் தான சோ இந்த வாங்க போங்க லாம் வேணாம் டீல் ஓகே வா??" என நியா வினவினாள்.
"டபுள் ஓகே செல்லம்" என உடனே அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டாள்.
இவ்வாறாக இவர்கள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது..
அவர்களை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தன இரு ஜோடி விழிகள்…

“ஓகே, ரியா நான் கிளம்புறேன் என்று விட்டு சென்றாள் நியா” அவளுக்கு கையசைத்து விடைக்கொடுத்தாள் ரியா…

அவளை கண்டதும் காதல் கொண்டான் (‘யாருனு?? கேட்டா அவன் என்ன பார்த்த பாச பார்வையில பறந்தோடிட்டேன் டியர்ஸ், அப்றம் உங்களுக்காக அவன் யாருனு ஃபாலோ பன்னதுல(அட நம்புங்க பா) அவன் பேர் ஆதர்ஷ் ஹர்ஷித் வ்ரிஷங்கா (Aadharsh harshith vrishanka) 1St yr, EEE dept னு தெரிஞ்சுது’)


சிறிது நேரம் இரசித்துப் பார்த்துவிட்டு மனமே இல்லாமல் அவர்கள் கிளம்பியதும் இவனும் தன் வீடு நோக்கி புறப்பட்டான்…
 
Last edited:

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(“டேய் நீ யாரு டா இவ பின்னாடி போற”… ‘அறிவு கெட்டவளே…. முன்னாடி போனா அவ எங்க போறா னு எப்படி தெரியும்’ 🤦 )

நம் ரியாவின் பின்னால் சென்று கொண்டிருந்தவன் சட்டென்று அவள் ஆஃப்பிஸ் ரூமில் நுழையவும் இவனும் அங்கே சென்றான்.

அங்கே சாந்த சொரூபினியாக “அட்மிஷன் டைம்ல மட்டும் தாங்க, அப்றம் ஃபைன் வாங்கறச்சே மேடம் சொர்ண சொரூபினியா மாறிடுவாங்க… அதாங்க சொர்ணாக்கா ரூபம் அவ்வளவு டரெர் பீஸ்” அட்மினில் இருந்தவரிடம் ,”மேம்! நான் ஃபர்ஸ்ட் இயர் இந்த காலேஜ் ல ஜாயின் பன்ன ஆட்மிஷன் போட வந்திருக்கோம் என்றால்”

உடனே அவர் புன்னகை ததும்பும் முகமாக(இது உலக மகா நடிப்புடா சாமி… சிடு சிடு சிடுமூஞ்சி இன்னிக்கு சிரிச்ச முகமா இருக்க காரணம் என்ன காரணமா இருக்கும்?? வேறென்ன காரணம் இன்னிக்கு அட்மிஷன் தான் காரணம்)

”இந்தாங்க அட்மிஷன் ஃபார்ம் இத ஃபில் அப் பன்னிட்டு அப்படியே ஃபீஸ் பே (pay) பன்னிடுங்க “என்றார்.


அட்மிஷன் ஃபார்ம் நிறப்ப வேண்டி தனது பேனாவை எடுத்து எழுதினாள் அவள்… பேனாவோ எழுதமாட்டேன் என்று சதி செய்தது… ( ‘ஆரம்பமே அசத்தலா இருக்கே’) அப்போது இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் அருகில் வந்தான்… ரசித்துப் பார்த்தவர்களில் ஒருவன் ஹட்ச் டாக் (ஹி ஹி அது தாங்க; வேர் எவர் யூ கோ , ஐ வில் ஃபாலோ யூ அப்படினு பின்னாலயே வரும்”…)
( ‘அது நாய் இல்ல , அவள ஃபாலோ பன்னிட்டு வந்தானே அவன தான் இப்டி ஸிம்பாளிக்கா சொல்றாலாம்’ )

இந்தாங்க பென் என்று அவள் எழுதுவதற்காக அவளிடம் நீட்டினான்… இடம் மாறியது பென் அல்ல பெண்ணே என் இதயுமும் தான் (‘அழகா கவிதை சொல்ல தெரியுதாடா வெளிய சொன்ன வெளக்குமாத்தால அடி வாங்குவ பாத்துக்கோ ,சான்ஸ் கிடைச்ச போதுமே😉 கவிதை வடிக்கிறேன் கஞ்சி தண்ணி வடிக்கிறேன் கிளம்பிட வேண்டியது… லாஸ்ட் ஆ கண்ணீர் வடிக்க வேண்டி வரும் பாத்துக்க… இன்ஸ்டன்ட் அறிவுரை வழங்கியது அவனின் மனசாட்சி’) அவளும் அதை வாங்கிக் கொண்டு தனது விவரங்களை பூர்த்தி செய்து விட்டு திருப்பிக் கொடுத்தாள்… அப்போது அவன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டவள் ' என்ன 5 ரூபா பேணாவ குடுத்துட்டு ஏதோ இவன் சொத்து மாதிரி ஆஆனு பார்க்குறான் கண்ணுல கொல்லிகட்டைய வைக்க' என மனதில் அவனை வறுத்து எடுத்து விட்டு வெளியே புன்னகையுடன்
தேங்க்ஸ் , என்று கூறி பேனாவை திருப்பி கொடுத்து விட்டு சென்றாள்…
அவள் கொடுத்ததோ அவளின் எழுதாத பேனாவை… அதை கண்டதும் அவன் மனமோ குத்தாட்டம் போட்டது… , பேனாவை கொடுத்தது போல் உன் இதயத்தினையும் கொடுத்துவிடடி பெண்ணே… அவன் இதழ்கள் முனுமுனுத்தது…

அவன் இரண்டாம் ஆண்டு EEE, மாணவன்… ஸ்ரீ ஹர்ஷவர்தன் சஹஸ்ரஜித் (Sri Harshavardhan sahasrajith) , சுருக்கமாக ஹர்ஷா…

‘இது பேரா இல்ல சீனப் பெருஞ்சுவரா… இம்புட்டு நீளமால இருக்கு ‘


(இப்போதைக்கு இவன பத்தி இவ்ளோ டீடைல்ஸ் தான் கலெக்ட் பன்னினேன்… மீதி அவனைப் பற்றி கதையில் பார்க்கலாம்)

ஆகிற்று நம் ரியா அக்கல்லூரியில் காலடி எடுத்து வைத்து ஒரு மாத காலம் சென்றுவிட்டது…

அன்று ரம்மியாமான அந்த அதிகாலை வேலையில் ரியா வை எழுப்ப படாத பாடு பட்டுக்கொண்டிருந்தார் அவள் அன்னை லலிதா…

ஏய் எழுந்துக்கோ டி இன்னிக்கு எக்ஸாம் மா எழுப்பி விடுங்கனு சொல்லிட்டு தூங்கிட்டு இருக்க என்று கத்திக் கொண்டிருந்தார்… பின்னர், இது வேலைக்கு ஆகாது என்று எண்ணிக் கொண்டே வெளியே விரைந்தார்…

என்ன ஒரு அதிசயம் , இவ்வளவு நேரமும் கண் திறவாமல் அழுச்சாட்டியம் செய்துக் கொண்டிருந்தவள் கண் மலர்ந்தாள்.

“அப்படி என்ன அதிசயம் நடந்துச்சி னு நீங்க கேட்க வரது புரியுது, செல்லத்துக்கு செர்லாக் (cerelac mixed fruits with wheat and milk) ரொம்ப பிடிக்கும்” (இதென்ன சின்ன புள்ள தனமா னு கேட்காதிங்க , its manufacturing error😂😂😂)

அவள் அழகிய நாசி அவ்வாசம் உணர்ந்த நொடி அவள் தன் நேத்திரங்களை திறந்து , சோ சுவீட் ஆஃப் யூ மா, என்று அக்கின்னத்தை வாங்க முற்ப்பட்டால்

அடியே அர லூசு முதல்ல பல்லு விலக்கிட்டு வந்து வாங்கு என்று அவள் அழகிய செவி மடல்களை திருகி கராராக சொன்னார்…

பட்டென்று படுக்கையிலிருந்து பாய்ந்தோடி பாத்ரூமில் நுழைந்துக் கொண்டு …நம்மளோட ஜெராக்ஸ் காபிய மட்டும் விட்டுட்றாங்க, ஹ்ம்ம் என்று பெரு மூச்சு விட்டுக் கொண்டே அவளுக்கென்ன ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் எடுத்துட்டு ஜாலியா இருக்கா… ‘உன்ன யாரு செல்லம் எஞ்ஜினியரிங் எடுக்க சொன்னா?’ “அது எனக்கு இஷ்டபட்டு எடுத்தேன்” ‘தெரியுதுல அப்போ போய் கிளம்புற வழிய பாரு’ “இப்போ இருந்து உன்ன என் மனசாட்சின்ற பதவி ல இருந்து தூக்கிட்டேன்” என்று கோபமாக முறைத்தால் “ஹய்யா, ஜாலி விடுதலை விடுதலை” என்று சொல்லிச் சென்றது அவள் மனசாட்சி.
 
Last edited:

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(பின்னே இன்னும் கொஞ்சம் நேரம் அங்க இருக்க அவ என்ன லூசா ‘இல்ல தான், ஏன் னா அவ தான் அர லூசு ஆச்சே’) (சு என்ன தான் இருந்தாலும் அவ இந்த கதை ஹீரோயின், ஏன் அது நீ அவள ஓட விடும் போது தெரியலியா, அச்சோ நம்ம மைன்ட் வாய்ஸ் நம்மள விட ஸ்மார்டா இருக்கே , இருக்கட்டும் நம்ம மைன்ட் வாய்ஸ் தானே… எதுக்கும் அமைதி அமைதி அமைதியோ அமைதி … அமைதிக்கெல்லாம் அமைதியா இருப்போம்)
அவ செர்லாக்க இரண்டு வயசு ஆன அந்த அருந்த வாலு ஆருத்ர கிருஷ்ணா (க்ரிஷ்) தூக்கிட்டு ஓட சான்ஸ் இருக்கே, இதுக்கு உடந்தையா அவளின் அன்னையர் குல திலகம் லொல்லு லல்லு பேபி செயல்படுமே அந்த பயம் தான்…

ஆமா யாரு இந்த க்ரிஷ் மற்றும் ஜெராக்ஸ் காபி னு தானே யோசிக்கிறிங்க

க்ரிஷ் வேறு யாருமில்ல சஞ்ஜய் சஞ்ஜிதா வின் தவப்புதல்வன் ரியா வின் அண்ணன் மகன்.

ஜெராக்ஸ் காபி, ரியாவுடன் உடனே பிறந்த உடன் பிறப்பு (அதாங்க ட்வின்ஸ்😉😉😉) ரினு என்கிற ஷஷ்ரினுதா முதலாம் ஆண்டு அறிவியல் இளங்கலை மாணவி, தாவரவியல் மற்றும் விலங்கியல் துறை.

இவளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடி முடித்துவிட்டு , தன் (மரு)மகளுக்கு சமையலில் உதவி புரிய சமையலறை நோக்கிச் சென்றார் லுல்லு பேபி.

அப்போது, லல்லி ஒரு கப் காபி என்று ஹாலில் பேப்பரினை கையில் எடுத்தவாரே கேட்டார், நம்ம கதையின் நாயகியான தங்கத்த பெற்றெடுத்த அந்த தங்கமான தந்தை விஸ்வேஷ்வர், மத்திய அரசு வேலையில் உயர் பதவி வகிப்பவர்.

பின்னர் அனைவரும் தத்தம் தமது வேலைகளை முடித்துவிட்டு சாப்பிட அமர்ந்தனர், அப்போது அங்கே அவசராமாக வந்த ரியா, மா பஸ் வர டைம் ஆகிடுச்சு நா கிளம்புரேன் என்று தன் டிபன் பாக்ஸை எடுத்தால்…

உடனே அப்படி என்னடி அவசரம் சாப்பிட்டு போ என்றார்… இல்ல லேட்… என்று தொடங்கியவளை முறைத்தவர் , அவளை அமர வைத்து அவள் வாயில் தோசையை திணித்தார்,இதுக்கு தானே இந்த ஸீனு என்று கடுப்பாக கூறியவர் அடுத்த வாய் தோசை ஊட்ட முற்படுகையில், மாஆஆஆ… லேட் என்று ஆரம்பித்தால் இப்போது முறைப்பது ஜெய்யின் (சஞ்ஜெய்) முறையானது , பிசாசு கார் ல கொண்டு போய் விடுறேன் மரியாதையா சாப்பிடு இதுக்கு தானே இப்படி ஒரு ஆக்ஷன் பட் சகிக்கல , எங்கே அந்த எம்.ஜி, உன் ஜெராக்ஸ் காபி என்றான் (மன்சிங் காட்ஜில்லா Munching Godzilla😂😂😂).

அவ தூங்கிட்டு இருக்கா டா எரும, ரியா ,அது என்ன அண்ணானு கூட பாக்காம மரியாதை இல்லாம பேசறது என்று அதட்டினார், விடு லல்லி அவ சின்ன பொண்ணு தானே என்று சொன்னவரை பாசப் பார்வை பார்த்தில் அவர் தன் வாயினை பசைப் போட்டு தற்போது ஒட்ட முடியாது என்பதால் வாயில் தோசையை திணித்தார் இரண்டும் ஒன்னு தான் என்று எண்ணிக்கொண்டு, வெளிய சொன்ன சேதாரம் அதிமாகிடாது அதான் 😂😂😂

இவையனைத்தையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தால் சஞ்ஜி…..

“ஓ!! இன்னிக்கு அவளுக்கு லீவ் ஆ” ஆமா( டா) அ(எ)ருமை அண்ணா என்று சொல்லியவாரே தண்ணீர் அருந்திவிட்டு அனைவரிடமும் விடைப்பெற்று கிளம்பியவள் உடனே தானும் கை கழுவி விட்டு அவளுடன் காரை நோக்கி சென்று முன் பக்க கதவினை அவளுக்கு திறந்து விட்டு காரிலேறி அமர்ந்து அதை புயல் வேகத்தில் செலுத்தியவன் பேருந்து நிறுத்தத்தில் அவளை இறக்கிவிட்டு ASV Automobiles ஆன தன் அலுவலகத்திற்கு விரைந்தான். அங்கே அவன் GM(General Manager) ஆக பதவி வகிக்கிறான்.

பேருந்து நிறுத்தத்தில் அந்த கல்லூரி பேருந்து வந்ததும் அதில் ஏறி தமது ஆஸ்தான இருக்கையான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள் ரியா, இவ்விருக்கையில் அவளை தவிர வேறு யாரையும் அமர அனுமதிக்க மாட்டார்கள் அவள் தோழிகளான வினிஷா மற்றும் ஸ்வேதா. இவ்விருவரும் CSE Dept.
கல்லூரியில் கண்டதும் இவர்களது நட்பு மலர்ந்தது. வகுப்பு நேரங்கள் தவிர மீதம் இருக்கும் நேரங்களில் ஒன்றாகவே சுற்றித் திரிவார்கள்…

இன்னிக்கு மாத்ஸ் இன்டர்னல்ஸ் இருக்கே படிச்சியா ரியூ பேபி என்று கேட்டாள் ஸ்வே குட்டி, ஹே அவ கிட்ட இந்த மாதிரி கேள்விலாம் கேக்காத செல்லம் அவ கரைச்சி குடிச்சுட்டு வந்து இருப்பா என்றால் நிஷா. அவளை பாசமாக பார்த்துக் கொண்டே அப்போ நீ படிக்கல இத நாங்க நம்பனுமா என்றாள் அவர்களின் ரியூ பேபி.
இவ்வாறே பல கதைகளையும் வளவளத்து கொண்டுவந்தவர்கள் கல்லூரி வந்ததும் அதிலிருந்து இறங்கி எக்ஸாம் ஹால் நோக்கி சென்றனர்.
அன்றைக்கு தங்கள் பேருந்து சற்று தாமதமாக சென்றதால் அவசர அவசரமாக பென், கால்குலேட்டர்,பென்சில் முதலானவைகளை எடுத்துக் கொண்டு எக்ஸாம் ஹாலினுள் நுழைந்தனர். வினா தாள் மற்றும் விடைத்தாள் வாங்கிக் கொண்டு தமக்கான இருக்கையில் சென்று அமர்ந்து தேர்வெழுத ஆரம்பித்தனர். தேர்வு முடிந்ததும் தம் கலாட்ட பேச்சுகளை தொடர்ந்தவாரே இன்டர்வல் முடிந்ததும் தத்தம் தமது வகுப்பறைக்கு சென்றனர்.
 
Last edited:

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று மதிய வேளையில் தோழியர் மூவரும் கலகலத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வகுப்பறையில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே உள்ளே இருந்தனர். உணவு இடைவேளை முடியும் தருவாயில் அந்த வகுப்பறையில் நுழைந்தான் அவன். நேரே இவர்களிடம் வந்தவன் ‘டொம்’ என்று மேசையை தட்டினான். அதில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மூவரும் கண்டது அவனது பக்கவாட்டத் தோற்றத்தினையே…
அவன் தட்டியத்தில் ரியூ பேபிக்கு மிகவும் பிடித்தமான உருளை வருவல் சிறிது கீழே சிதறியது… அதில் வருந்தியவள் தன்னை சமன் செய்துக்கொண்டு கோபமாக திரும்பும் முன் அவன் சொல்லிச் சென்ற வார்த்தையில் உறைந்து நின்றாள்… அவள் மட்டுமல்ல அந்த வகுப்பறையிலிருந்த அனைவருமே.

சில நிமிடங்களுக்கு முன் , கோபமாக அண்ணா என்று மேலும் கூற வந்தவளை அண்ணா லாம் இல்ல நான் உன்ன லவ் பன்றேன் எனச் சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டான்….

ஆசை ஆசையாக உன்னை அள்ளிக் கொள்ள விழைந்தேன்
என் மனதினை பதற வைத்து
பிரிந்து போனதும் ஏனடா
சிதறிய உருளை வருவலே….
😂🤣😜😝


யார் அவனோ அவனோ ?
வந்தது எதற்காக?
மின்னலாக வந்தான் மனதில் மின்சாரத்தை பாய்ச்சினான்
யார் அவனோ அவனோ?
😂😂😂😂😂 அவளுக்கே தெரியல எனக்கு எப்படி தெரியும்😉😉😉


முன் மாலை பொழுதில்
முகமறியாதவனின் வருகை
புயலென வந்தான்
புன்னகை புரிந்தான்
யாரடா இவன் என்ற என் எண்ணத்தினைக் கண்டுகொண்டான்
சில கணங்களில் என் கண்களில்
யான் உன்னவன் என்றான்
காலத்தை வெல்லும் என் காதல் நீ எனச் சொல்லிச் சென்றான்.
இதமாய் இதயம் திருட காத்திருக்கும் கள்வன்......



யாதுமாவான்….
 
Status
Not open for further replies.
Top