All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீயின் "யாரென்று அறியாதவன் யாதுமாகினான்" - கதை திரி

Status
Not open for further replies.

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Episode 2(a):

அவள் உறைந்து நின்றது சில கணங்கள் மட்டுமே…”அடியே பிசாசு ரியூ” என்று நிஷா அவளை உலுக்கிய பின்னரே சுய உணர்வு பெற்றவள் , சற்றும் தாமதிக்காமல் வகுப்பறை விட்டு வெளியேறியவள் அவனை கண்களால் அலசினால்… வெளிர் நிற சட்டையும் கறுப்பு நிற பேன்ட் அணிந்து கம்பீரமாய் வேக நடையுடன் அவன் சென்றது அவள் மனதில் ஆழ பதிந்து போன அவனை இனங்கண்டு கொண்டால் அவள்…

அவன் வகுபறையில் நுழைந்ததும் என்னடா பெட் கட்டின மாதிரியே அவ கிட்ட லவ்வ சொல்லிட்ட போல என்றான் அவன் வகுப்பு மாணவன் ஒருவன். இது தெளிவாக அந்நேரம் வகுப்பில் நுழைந்த நம் ரியூ காதிலும் விழுந்தது…
“எதுல பெட் கட்டணும்னு வெவஸ்தை இல்லாதவனுங்க” என்று முனுமுனுத்த படி அவர்கள் அருகே சென்றவள், கண்களில் கனல் பறக்க “டேய் ஆலியம் செபா என்ன தைரியம் இருந்த இப்படி செய்து இருப்ப உனக்கு அறிவு இருக்கா இல்லையா(?) என்று வரிசையாய் வசை பாடினால்…
வகுப்பில் இருந்த சில அறிவு ஜீவிகள் ஆலியாம் செபா அப்படினா என்னவா இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்…
“ஏன்டா என் உருளைகிழங்கு வருவல கொட்டின “ என்று கேட்டாலே ஒரு கேள்வி அப்போது தான் வகுப்பினுள் நுழைந்த நிஷாவும் ஸ்வேவும் “என்னடி ஸ்வே செல்லம் இவ லவ்வ சொன்னதுக்கு திட்டுவானு பார்த்த உருளைகிழங்கு கொட்டினது பெரிய கொல குத்தம் மாதிரி சண்டை பிடிச்சிட்டு இருக்கா” என்றால் நிஷா.

“இவள பத்தி தெரிஞ்சும் இப்படி திங்க் பண்ண உன் மூலைய கொண்டு போய் மூளைல போட்டு மூடி வைடி “என்றால் ஸ்வேதா
அவள் திட்டுவதை ஏதோ பாரிஸில் அவனுக்கு பாராட்டு விழா நடத்துவது போல் சுவாரசியமாக கேட்டு கொண்டிருந்தான்.

விட்ட இவ அவ்வளவுதான் இன்னிக்கு பூரா திட்டிட்டு இருப்பா என்றவாரே, ஸ்வேதா அவள் அருகில் சென்று மெல்லிய குரலில், “ஏன் டி இவன திட்டிட்டு இருக்க “என்று கேட்டால் , அவளை “லூச நீ “என்பது போல் பார்த்து வைத்தால் ரியூ. பாக்குற பார்வைக்கு ஒன்னும் குரைச்சலில்லை ரியூ பேபி என்று மனதில் நினைத்தவள் “பிசாசு குட்டி இவன் அவன் இல்லடி, அவசரத்துல அவன் திரும்பி போகும் போது ஸ்பெக்ஸ் போட்டு இருந்தத நான் பார்த்தேன்டி நீ கவனிக்கலயா” என்றால் ஸ்வேதா ,”ஆமா பேபி நானும் பார்த்தேன் “என்று நிஷாவும் கூறினால்… தன் கவனகத்தை நொந்தவாரே “ ஸாரி அண்… “அண்ணா என்று கூற வந்தவள் அங்கிருந்த மற்றொருவனை பார்த்தவாரே வாய் வரை வந்த வார்த்தையினை விழுங்கியவள் (பின்னே அண்ணானு சொல்லி கூப்பிட்டா ஐயர் ஆத்து மாமியா நீ அண்ணானு கூப்பிட்றது அவ்ளோ இதமா இருக்கு என்று இளித்தவன் அவன் தானே எனவே கொஞ்சம் அடக்கி வாசித்தால் என்னிக்காவது அவனை பழி தீர்க்கும் எண்ணத்துடன்) அப்போது தான் கவனித்தால் அவனை …
அவனை கண்டதும் ஷாக் அடித்தது போல் உறைந்து விட்டவள் சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டு, “அச்சோ இவன் அந்த அஞ்சு ரூபா அருணாச்சலம் ஆச்சே”…’ இவன் ஏன் இப்படி பட்டிக்காட்டான் பாப்கார்ன பாக்குற மாதிரி வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்கான்’ என்று நினைத்தவள் “அச்சோ சாரி அஞ்சு … ஹான் அது சாரிங்க சாரி தான் சொல்ல நினைச்சேன்” என்று கூறியவள் சிட்டாய் அங்கிருந்து பறந்துவிட்டால்…
இவள நம்பி வந்தா நம்மல டீல்ல விட்டு போறாலே என்று முனுமுனுத்தவாரே அவள் தோழியரும் அவ்விடத்திலிருந்து பறந்தனர்…
இவற்றை உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா… டார்லி நீ இவ்ளோ பேசுவியா சோ ஸ்வீட் டார்லி என்று தனக்கு தானே பேசிக் கொண்டான்…
இந்நிகழ்வுகளை நான்கு ஜோடி கண்கள் விழிகளில் அனல் பறக்க பார்த்திருந்தனர்…


யாதுமாவான்...
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Episode -2(b)


இவற்றை கண்களில் கோபம் மின்ன பார்த்திருந்தாள் அவ்விரு விழிகளுக்கு சொந்தகாரியான நியா…

அதை விட பன் மடங்கு கோபம் கண்ணில் தெறிக்க அவ்விடம் விட்டு அகன்றான் ஆதர்ஷ் இல்லை இல்லை அவனை இழுத்து சென்றனர் அவன் நண்பர்கள் சித் மற்றும் அஷ்வின்

"டேய் , ஹர்ஷா ப்ரபோஸ் பண்ணியா இல்லையா டா" என்று வினவினான் அவன் நண்பன் ஆனந்த் "ப்ச்ச் இல்லடா அதுக்குள்ள ஜுனியர் பையன் ப்ரபோஸ் பண்ணிட்டான் டா" என்று வெறுப்புடன் கூறினான். "இதுக்கு தான் பார்த்த அன்னைக்கே லவ்வ சொல்ல சொன்னோம்" என்றனர் அவன் நண்பர்கள் இருவரும், "இப்போ கோபப்பட்டா வேலைக்காகாது ராசா "என்றான் வினய்.
"ஆனாலும் அவ தானா வந்து எங்கிட்ட பேசிட்டால டா என் டார்லி எனக்கு தான்" என்றான் ஹர்ஷா...
"நினைப்பு தான் பிழைப்ப கெடுக்குமாம் லவ்வே சொல்லலியாம் பெட் வச்சும் சொல்லாம வந்தவரு பேச்ச பாரு டா"என்று அவனை கடுப்பேத்தினர் அவன் வகுப்பு மாணவர்கள்...
"டேய் ஓவரா பேசாத அடங்கு டா அவள கல்யாணம் பண்ணி காட்றேன் டா நான் யாருனு அப்போ தெரியும்"என்றான்.

"என்னது உஉஉஉ இப்போ தெரிஞ்சுதே அப்டியா" என்றனர் அவன் வகுப்பு மாணவர்கள் சிலர் ...
கோபத்தில் அவன் கண்கள் சிவக்க கை முஷ்டிகள் இறுக அவனை அடிக்க கை ஓங்கினான் ஹர்ஷா... அவனை தடுத்த அவன் நன்பர்கள் "டேய் ஹர்ஷா ,ஸார் வர நேரம் டா பிரச்சனை வேணாம் சும்மா இரு" என்று அவனை அடக்கிவிட்டனர்... அப்போதும் அவர்களை முறைத்தவாரே அமர்ந்தான் அவன்.

தோழிகள் தம் வகுப்புக்கு செல்லும் வழியில் அவனை கண்டனர்...

ரியூ பேபி இவன் தான் உன் கிட்ட லவ் சொன்னவன் என்றாள் நிஷா
ஆமா, இவன் தான் அந்த அதிரடி சரவெடி ,ரெண்டும் ( இரண்டும் )சொல்லி வச்ச மாதிரி ஒரே ட்ரெஸ் போட்டு வந்து இருக்குங்க உங்களால நான் கன்பியூஸ் ஆகிட்டேன்டா என்று நினைத்தவள் அவன் அருகில் சென்றாள் இவன் கண்களில் குறும்பு மின்ன அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் எதுக்குடா என் உருளகிழங்க கொட்டின என்றாள்
‘ஙே’ என்று விழித்தவன் அவளை புரியாத பார்வை பார்த்தான்... லவ் சொன்னதுக்கு தானே நியாயமா பார்த்தா கோவப்படனும் இவ என்ன டிசைனோ என நினைத்தவன்... சரி டா ஷ்ரி செல்லம் என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லு டெய்லி உன்னோட மாமூ உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி தரேன் என்றானே பார்க்கலாம்

“அடேய் இப்போ தான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி லவ் பண்றேன் சொன்னான் இப்போ என்னடா னா கல்யாணம் பண்ணிகலாங்குறான்” என்றாள் நிஷா , “லவ் பண்றது எதுக்குமா கல்யாணம் பண்ண தான “ இவ்வாறு கூறியது நம்ம ஸ்வேதாவே தான் “ஆமா யாரு இப்போ இல்ல சொன்னா ஆனாலும் இவன் ஸ்பீட் ஆ உலகம் தாங்காது சாமி” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர் தோழிகள் இருவரும்…

இவன் கூறியதை கேட்டு திகைத்து நின்றால் ரியூ பேபி (அவனின் ஷ்ரி பேபி) ‘அச்சோ விட்டா இவன் இப்போ தாலி கட்டிருவான் போல டேய் நீ சரவெடி னா நான் ராக்கெட் சும்மா சொய்ங் னு பறந்துடுவேன்’... இப்ப பாரு என்று அவ்விடம் விட்டு மறைந்தாள்…

ஏய் இவளுக்கு ஓடுறதே வேலையா போச்சு என்று சலித்துக் கொண்ட தோழிகள் இருவரும் தங்கள் வகுப்பறை நோக்கி சென்றனர்.


வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு செல்லும் வேளையில் ரியாவை மறித்தவாறு வந்து அவளை சுவற்றோடு சாய்த்து அவளை நகரவிடாமல் இரு கைகளையும் அணைவாய் நிறுத்தி நின்றான் அவன் …

அவனது இந்த தீடீர் தாக்குதலில் பேச்சற்று கண்களில் அலைப்புறுதலுடன் நின்றால் அவள்…

“டேய் சரவெடி விட்றா என்ன” என்றால் அவள், “பாருடா அதுக்குள்ள என் செல்லம் எனக்கு செல்ல பேர்லா வச்சிருக்கா என் செல்லம் டீ” என கொஞ்சினான்…

செல்ல பேரும் இல்ல செல்லாத பேரும் இல்ல முதல்ல மேல இருந்து கைய எடுடா… அவன் சட்டென்று அவள் மென் கரம் பற்றவும் என் பொருமைய ரொம்ப சோதிக்குற உன் கைய எடுடா

“அச்சோ பேபி கோவத்துல கூட கோவக்காய் மாதிரி அழகா சிவக்குற “, “இது என் டயலாக் டா காப்பி கேட் நான் பேசுறதுலாம் ஒட்டு கேட்டு இருக்க அப்டி தான” , “அப்டியும் வச்சிகலாம் பேபி நீ என்ன காப்பி ரைட்ஸ் ஆ வாங்கி இருக்க நீயே கொஞ்சம் நாள்ல என் சொத்து தான் அப்றம் என்ன” என்று நக்கலாய் கூறினான்.

“நீ ரொம்ப ஓவரா போற என்ன பத்தி தெரில உனக்கு அதான் இப்டி பேசிட்டு இருக்க”

உன்ன பத்தி தெரிஞ்சிக்க தான உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன் சொல்றேன் . ‘அச்சோ படுத்துரானே என நினைத்தவள்’ “டேய் இப்போ மேல இருந்து கைய எடுக்க போறியா இல்ல எங்கம்மா கிட்ட சொல்லவா” என மிரட்டினாள்.

அதை கேட்டு வாய் விட்டு நகைத்தவன் “நீ குழந்தையே தான் டீ அதான் இப்டி பேசிட்டு இருக்க “ என்றான் அவன். யார்டா குழந்தை என்று சீற்றமாய் கேட்டாள் அவள் , வேற யாரு நீ தான் என்றவன் விளையாட்டை கைவிட்டவனாய்,
“உன் கிட்ட கொஞ்சம் பேசனும் வெயிட் பண்ணு “என்றான் .
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ்ளோ நேரம் பேசமா பேஸ் வாஷா டா செய்துட்டு இருந்த என எண்ணியவள்...

“உங்கிட்ட பேச எனக்கு டைம் இல்ல பஸ் எடுத்துடுவாங்க நான் வீட்டுக்கு போகனும் வழிய விடு “என்றால் எரிச்சலுடன் அவள்…

எனக்கு கூட தான் டைம் இல்ல நாங்க மட்டும் என்ன காட்டுக்கு கபடி ஆடவ போறோம் வீட்டுக்கு தான் போறோம் ஆனாலும் இன்னிக்கு பேசியே ஆகனும் என்றவனின் குரலில் நீ இருந்து தான் ஆக வேண்டும் என்ற மறைமுக கட்டளை இருந்தது…

இதையெல்லாம் சட்டை செய்தால் அவள் ரியா இல்லையே, அவன் அசந்த நேரம் தன் புத்தகபையினை அவன் காலில் போட்டவள் அவன் அலறும் சமயம் அவன் சுதாரிக்கும் முன் பையினை எடுத்துக் கொண்டு சாரி டா அதிரடி சரவெடி என்று சொல்லிக் கொண்டே சிட்டாய் பறந்து விட்டாள்….

இதுக்கெல்லாம் உனக்கு இருக்குடி என்கிட்ட மாட்டமையா போய்டுவ அப்ப இருக்குடி உனக்கு என்று தனக்குள் கூறிக்கொண்டு அவன் பேருந்தை நோக்கி சென்றான் ஆதர்ஷ்…


மாலை மங்கி பகலவன் தன் பணியினை முடித்துக் கொண்டு செல்லும் வேளையில் தன் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள் ரியா…

‘பேஆஆஆஆ’ என்று கத்திக் கொண்டே தன் கண் அருகே குத்த வருவது போல் வந்து நின்றவளை சினம் பொங்க பார்த்தால் ரியா

போதும் டீ பொங்கல் வச்சது எனக்கு பொங்கல்னா கொஞ்சம் அலர்ஜி தெரியும்ல என்றாள் ரியாவின் ஜெகே அவ்வீட்டின் இன்னொரு இளவரசி ’ ரினு’

செங்கலையே சாப்பிட்றவ பொங்கல பத்தி பேசுற அலர்ஜினு சொல்றியே டீ என் சொலானம் டியூபரோஸம் (solanum tuberosum) என்றால் ரியா.

போடீ என் சொலானம் லைக்கோபெர்ஸிகம் (solanum lycopersicum )என்று புரியாத பெயர்களை புதினா தொக்கு ஆக்கினர் சகோதரிகள் இருவரும்…


அவ வந்ததும் உன் சேட்டைய ஆரம்பிச்சுட்டியா ரினு என அவளை கடிந்தவாரே வந்தார் அவர்களின் அன்னை லல்லி.

ரியா பப்பு போய்ட்டு ரெப்ரெஷ் ஆகிட்டு வா என அவளை அனுப்பி வைத்தவர் ரினுவை முறைத்தவாரே சென்றார்...

இந்த லல்லிமாக்கு இதே வேலையா போச்சு முட்ட கண்ணி மாதிரி முறைச்சிட்டு போறத பாரு என நொடித்துக் கொண்டவள் இரு உன்ன ‘விஷ்’ கிட்ட சொல்லி உன் முட்டை கண்ண ஆம்லேட் போட சொல்றேன் என முனுமுனுத்தவரே சென்றாள் ரினு

“அங்க என்னடி சத்தம்”, ஹி ஹி சும்மா மா லுலுலாய்கு என்று கூறியவள் ;ரியாவிற்கு டீ போட்டு எடுத்து சென்றாள் கூடவே பிஸ்கட் மற்றும் சிப்ஸும்

“என் மேல இவ்ளோ அக்கறையா”, ‘ ரியா ,இவ ஏதோ பிளான் பண்ணிட்டா ஸ்டெடி ரியா ஸ்டெடி’ என மனதில் நினைத்துக் கொண்டவள் நார்மலாய் முகத்தை வைத்தவாரே , “என்னடீ காத்து இந்த பக்கம் ஏசி காத்து வாங்க வந்து இருக்கு என்ன விஷயம் “.

அதெல்லாம் இல்ல ரியா குட்டி இந்தா டீ உனக்காக நானே டீ போட்டு கொண்டு வந்தேன்…

‘இவ முழிக்கிற முழியே சரியில்லையே என்னவா இருக்கும்னு’ யோசித்தவாறே ,டீயினை பார்த்தவள் , என்னடீ டீ தீஞ்சுபோன டிரான்ஸிஸ்டர் மாதிரி இருக்கு இத நீயே குடி…

உனக்கு தான் எதையும் வேஸ்ட் பண்ணா பிடிக்காதே சோ டீய குடி இல்லன என் கூட ஷாப்பிங் வா …

“உன் டீய குடிச்சா என் நிலைமை கவலைகிடம் ஆகிடும் ஷாப்பிங்னாலும் ஷாப்பிங் பண்றனு சாவடிப்பியே”, ‘ரியா ,நமக்கு உயிர் முக்கியம் இவ டீய குடிக்குறதுக்கு ஷாப்பிங்கே போலாம் எல்லாம் விதி என்று புலம்பியவாறே ...
சரி வந்து தொலைக்கிறேன் ,ஆமா எதுக்குடி ஷாப்பிங் போற?

“காலேஜ் இப்போ தான ஜாயின்ட் பண்ணேன் அதுக்கு தான் டீ டிரஸ் வாங்க போறேன்” என அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்…

தன் விதியை நொந்தவாரே சென்றனர் சகோதரிகள் இருவரும் அங்கு அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமல்…


அந்த பிரபலமான மாலில் தங்கள் காரினை பார்க் செய்துவிட்டு அவர்கள் நேரே சென்றது புட் கோர்டிற்கு தான். என்ன தான் இருந்தாலும் சோறு முக்கியம்ல…

ப்ரென்ச் ப்ரைஸ் சாக்லெட் மில்க் ஷேக் வாங்கிக் கொண்டு இருக்கையினை நோக்கி ரினு வருகையில் “மச்சி, உன் ஷ்ரி டா “என்றான் சித் .

“அறிவுகெட்டவனே அவ ஷ்ரி இல்லடா” என்றான் ஆதர்ஷ் . உனக்கு கண்ணாடி போட்டும் கண்ணு கெட்டு போச்சி நல்லா பாரு அவ உன் ஷ்ரி தான்.

நல்லா பார்த்ததுனால தான் சொல்றேன் என்று அந்த நல்லா வை அழுத்தி சொன்னவன், அவளுக்கு இரண்டு கண்ணுலையும் கண்ணுக்கு ஓரத்தில மச்சம் இருக்கும் டா அவள் கண்களை தன் மனக் கண்ணில் இருத்தி ரசித்தாவரே கூறினான் ஆதர்ஷ். அவன் கண் திறக்கையில் அவன் தேவதையினை கண்டவன் உள்ளத்தில் உவகை பூ பூத்தது…

“டேய் தம்பி, ட்வின்ஸ் போல டா” என்றான் சித். இது என்ன டா புதுசா தம்பிங்கற அது ஒன்னுமில்லடா நான் ரியாவோட சிஸ்டர என் மனைவியா பிக்ஸ் (fix) பண்ணிடேன் டா அப்போ உன்ன மச்சி சொன்னா அவ எனக்கு தங்கச்சி ஆகிடுவா டா அதான் என்றான் சித்.

போதும் வழியுது தொடச்சிக்கோ அது என்ன அவள பார்த்ததும் பொண்டாட்டி சொல்ற

இவரு மட்டும் பார்த்ததும் காதலிப்பாராம் நாங்க மட்டும் என்ன டொமெட்டோ சாஸா டா நான் கல்யாணமே பண்ணுவேன் டா…
 

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓ ஹோ அப்டி சொல்ல வர, எங்க அவ்ளோ கட்ஸ்(guts) இருந்தா அவகிட்ட போய்ட்டு லவ் பண்றேன் சொல்லு பாக்கலாம் என்றான் ஆதர்ஷ்…

இதெல்லாம் எனக்கு இலந்தை பழம் அதான் டா ஜூஜுபி

ஜூஜுபி னா இலந்தை பழம்னு சொன்னதே நான் தான் அடங்கு டா என்றான் ஆதர்ஷ்

ஹி ஹி என்று இளித்தவாரே இதோ இப்போ போய்ட்டு வரேன் என்றவாறே அங்கிருந்து அகன்றான் சித் .

சகோதரிகள் இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர ஆதர்ஷ் சாதரனம் போல் கேஷுவலாக அவர்களை கவனியாதவாறு அவ்விருக்கையில் அமர்ந்தான்…

திகைப்பாய் கேட்பது போல் கண்களில் குறும்பு மின்ன ஷ்ரி பேபி வாட் எ சர்ப்ரைஸ் இந்த மாமூ வ நினைச்சிட்டே இருந்தியோ செம்ம வேவ்லெந்த் பேபி நமக்கு அதான் ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி ஒரே கலர் ட்ரெஸ் ஒரே இடத்துக்கு வந்து இருக்கோம் என அழகாய் கண் சிமிட்டினான்…

ஆம் இருவரும் கருப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தனர்…

அவ்வுடையில் அழகாய் மிளிர்ந்தவளை அவன் நேத்திரத்தில் படம்பிடித்து இதயத்தில் சேவ் (save) செய்து மூளையில் பேக் அப் (back up) எடுத்து வைத்தான் .

ஹே யார்டீ இவன் செம்ம அழகா இருக்கான் உன்ன வேற பேபிங்கறான் என்ன விஷயம் சொல்லு ஆர்வமானாள் ரினு…

அவளை பாசப் பார்வை பார்த்தவள் அவனிடம் திரும்பி உனக்கு என்ன வேணும் இப்போ என்று எரிந்து விழுந்தாள் .

நீ தான் ஷ்ரி வேணும் என்றான் ஆதர்ஷ் அவள் கோபத்தில் முகம் சிவக்க அவனை முறைத்துக் கொண்டிருந்தால்…

சட்டென்று சிரித்துவிட்டான் அவன் பின்ன இந்த கலேபரத்திலும் குதூகலாமாய் மில்க் ஷேக் அருந்தி கொண்டு இருந்தவளை கண்டால் யாருக்கு தான் சிரிப்பு வராது…

நம்ம ரினு தான் மில்க் ஷேக் குடித்துக் கொண்டிருந்தால் ரியா உனக்கு என்ன வேண்டும் என்று ஆதர்ஷிடம் கேட்டதும் அவள் நார்மலாக தோழமையுணர்வோடு கேட்கிறாள் என எண்ணியவள் எங்கே அவன் மில்க் ஷேக் வேண்டும் என்று கேட்டிடுவனோ என்று அதை அருந்த துவங்கிவிட்டால்…

என்ன இருந்தாலும் மில்க் ஷேக் முக்கியமாயிற்றே …

இருவரையும் மேலும் முறைத்த ரியா என்ன பேசனும் நேரிடையாக கேட்டால் கொஞ்சம் தனியா உன்னோட பேசனும் என்றிருந்தான் ஆதர்ஷ்…

இவ இங்கிருந்து எழுந்துக்க மாட்டா என்று நினைத்தவள் அடியே ரினு நீ இங்கேயே இரு ஐஸ்கிரீம் சாப்பிட்றேன் அரிசி முருக்கு சாப்பிட்றேனு இந்த இடத்த விட்டு எங்கயும் போன அப்றம் இருக்கு உனக்கு கச்சேரி , நான் பேசிட்டு வந்துடுறேன் என்றவாறே ஆதர்ஷுடன் சென்றால்.


அப்போது ரினு இருந்த மேஜையினருகே பிரசன்னமாகினான் சித்...
சட்டென அவள் வலக்கரத்திலிருந்த மில்க் ஷேக்கை எடுத்தவன் அவள் விரல்களை பற்றினான்… டேய் அது என் மில்க் ஷேக் டா என்று கத்தினாள் ரினு

நான் என்ன அரபியா ஷேக் னா சொன்னேன், உருவம் தான் ஒரே மாதிரி நினைச்சா கேரக்டர் கூட ஒன்றுக்கொன்று சலைச்சதில்ல போலயே என தனக்குள் முனுமுனுத்தவன்…

அவள் கண்களை பார்த்தவரே காதலுடன் அந்த அழகிய வேலைபாடு கொண்ட அவனுடைய வைர மோதிரத்தை அவளுக்கு அணிவித்திருந்தான் சித்.

அதனூடே அவளது கைகளில் அழகிய மலர்ச் சென்டினை கொடுத்தான்.

கத்திக்கொண்டிருந்தவள் அதிர்ந்து தான் போனால் அவன் செய்கையில்…

அம்மு குட்டி நான் உன்ன லவ் பண்றேன் என்னோடான உன் வாழ்கை இப்ப நீ இருக்குறத விட இன்னும் சந்தோஷமா இருக்கும் அதுக்கு நான் பொருப்பு என்னை உன் புருஷனா ஏத்துக்கோ அம்மு என்று கண்களில் காதலினை தேக்கி வார்த்தையில் நேசம் பொங்க உயிர் வேரில் காதல் விதையினை விதைதான்…

இந்த ஒரு வார்த்தைகாக தானே இத்தனை மாசமா காத்திருந்தேன் இப்ப வந்து சொல்றான் பாரு டியூப் லைட் என்று செல்லக் கோபம் கொண்டவள் அவனை முறைத்துக் கொண்டு மில்க் ஷேக் ப்ரென்ச் ப்ரைஸ் எடுத்துக் கொண்டு அகன்றாள். (பூச்சென்டையும் தான்)

என்ன தான் இருந்தாலும் காரியத்துல கண்ணா இருக்காயா இவள எப்டி சமளிக்க போறேனோ ஆனாலும் ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்டாலே என்று அவன் மனம் ஏமாற்றமடைந்தது. திடீரென்று அவ்விடம் வந்த ஆதர்ஷ் அங்கிருந்து கோபமாய் அவனை அழைத்துச் சென்றான்…

உன் நேசப் பார்வையில் சொக்கி தான் போனேன்…
உன் இதயத்தில் இதய ராணியாக நுழைந்தேன்…
உன் வார்த்தையில் வழியும் அன்பில் கட்டுண்டேன்…
உன் மெய் தீண்டலில் மெய் சிலிர்த்தேன்...
உன் காதலில் விரும்பியே சிக்கிக் கொண்டேன்…
உன் உள்ளதில் உணர்வில் உனக்குள் உன்னில் உயிர் கலந்தேனே உன்னுயிராய்…





யாதுமாவான்...
 
Status
Not open for further replies.
Top