All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின் - "மௌன கீதம்...!!" கருத்து திரி

Deebha

Well-known member
Hi sis, நீங்கள் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் உங்கள் எழுத்தும் வெகு இயல்பாக பொருந்தின.

தன் தந்தையின் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் ( 3 sis + 1 bro) நால்வரையும் தனக்கு பிடிக்கவில்லை எனினும் கடமைகாகவும் தந்தையின் அன்பிற்காகவும் காக்க நினைக்கும் கதிரரசு....

தன் வளர்ப்பு தந்தை தன்னை பழி வாங்க நினைத்து வாழ்க்கை துணையாக தீர்மானித்தவனை மணக்க துணியும் குந்தவை...

அரசுவின் நலம் நாடும் ஆருயிர் நண்பனாய் சத்யன் வெகு இயல்பு... அரசு குந்தவை இணைந்து வாழ வைக்க துடிக்கும் சத்தியன்... அரசுவின் ஒரு தலைவலியை விருப்பத்துடன் தன் மனைவியாக ஏற்பது என அசத்தும் சத்தியன்....

தவியின் ஆருயிர் நண்பனாய் கெளதம், சூப்பர். தவிக்கு உறுதுணையாக நிற்பது. தவி சொன்னால் என்பதற்காக தேவியை தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பது.. முதலில் அரசுவை வெறுப்பது பின் புரிந்து கொள்வது பின்னர் கோவம் கொள்வது, தேவி & குழைந்தையின் அன்பிற்கு காத்து நிற்பது என பன்முகம் காட்டி சிலிர்க்க வைத்தான்..

ஒரு attraction இல் அரசுவை விரும்புவதும் பின் இருவரின் சூழ்நிலையை கருதி விலகுவதும், அன்னையின் வற்புறுத்தலால் வெளிநாட்டவனை மணந்து ஏமாற்றப்பட்டு குழந்தையுடன் அரசிடம் அடைக்கலம் ஆவதும் வேதனை. இறுதியில் கெளதமின் அன்பில் மூழ்கியது நிறைவு. நித்தினின் குறும்புகள் சூப்பர். So understanding kid....

சித்ரா அக்கா சூப்பர். குந்தவையின் உண்மையான நலம் விரும்பி...

அந்த 4 ஜந்துக்கள் குந்தவையின் கசின் என்று நினைத்தால், இருவர்பெற்றோர் மற்ற இருவர் சகோதரர்களா ???

கதிரும் அவனின் லட்டு மேடமும் இருவரும் ஒரு கட்டாயத்தில் மணந்திறுதாலும் ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக் கொள்வதும் , அரசு அவளின் வெற்று விழியின் மொழி படிக்க முயல்வதும் சூப்பர் . எதற்கும் கலங்காத குந்தவை அரசியல் வாதியிடமும் அவரின் மகன் ருத்ரனிடம் இருந்தும் அரசுவின் உயிரை காப்பாற்ற நினைப்பதில் தன்நம்பிக்கை இழந்து தடுமாறுவதை உணர்ந்து அவளை விட்டு divorce வாங்கி கொண்டு விலகி செல்வதும் அருமை. 4 ஆண்டுகளுக்கு பிறகு அவளின் எதிரி என தெரியாமல் ருத்ரனையே வரனாக கொண்டு வருவதும், பின் லட்டு மேடத்தின் விழி மொழி அறிந்து தானே மணப்பதும் ,பின்னர் தன் மீது வீழ்ந்த கொலை குற்றத்தில் இருந்து மீண்டு வருவதும் சூப்பர். அரசு லட்டு மேடத்திற்காக கொலை செய்யவும் தயார், பிறர் காலில் விழவும் தயார், என்ன மாதிரி அன்பு sis...

குந்தவையின் வளர்ப்பு தந்தை சிறு வயதில் கொடுக்க மறந்த பாசத்தை அரசுவின் மூலம் அவள் வாழ் நாள் முழுவதும் கிடைக்க செய்துவிட்டார் .

தன் குழந்தை என்று தெரியாமலேயே குந்தவைவைக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதும், இருமுறை அவளின் வாழ்வில் குழப்பம் வர காரணமான நாதன் பத்மாக்கு அவள் அப்பா அம்மா என்று கூப்பிடாதத்து சரியான தண்டனையே...

படபட பட்டாசாக அரசும், மௌனமே பாஷையாய் குந்தவையும் இணைந்து இதயத்தில் மென்மையாக மௌனகீதம் இசைத்தனர் ..

Thanks for a nice story sis :smiley7:💐💐💐
 
Top