All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்திகனின் "அரிமாவின் தகிக்கும் அணங்கிவள்" கதைத் திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரிமாவின் தகிக்கும் அணங்கிவள் முன்னோட்டம்.


24382




ஓடிவாங்க ஓடிவாங்க...


நாமளும் நிறைய ஆன்டி ஹீரோ கதையை வாசிச்சோமே. அதுங்கல்ல ஹீரோயினை ஹீரோ கதற விடுவாங்க.


சரி நாம கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு, ஆம்பளைங்களை அழ வச்சா என்னன்னு யோசிச்சேன்???


ஹீரோவையே கதற வைக்குற ஹீரோயினை கொண்டு வந்து வச்சு செய்யலாம்னு ஆன்டி ஹீரோயின் கதையை எழுத போறேன் மக்களே...


ஹலோ நட்பூஸ்.. 😍😍😍,


காதலர் தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்🤩
அதுக்கு ஸ்பெஷலா என்னோட அடுத்த கதையோட டீசர் கூட வந்திருக்கேன்..


அரிமாவின் தகிக்கும் அணங்கிவள் - டீசர்....


புயலைப் போல் கதவைத் திறந்தவாறே உள்ளே நுழைந்தான் அருண்மொழி வர்மன். வர்மா குரூப்ஸ் என்ட் கம்பனியின் தற்போதைய எம்.டி. அவன் வரவை எதிர்பார்த்தது போல் கூலாக தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் வெயிட்டை சுழற்றினாள் வானதி.


அவள் முகத்தில் நடனமாடும் நக்கலில் அவளைக் கொலை செய்யுமளவு ஆத்திரம் அவனுள் பெருகியது. ஆனால் காரியத்தை கச்சிதமாக முடிக்க வேண்டுமல்லவா?


"உன்னால பண்ண முடியுமா? முடியாதா?" என்றவனின் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரத்தை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் குதூகலம் பீறிட அவள் முகத்தில் தெரியும் நக்கலின் அளவும், திமுரும் அதிகரித்தது.


"ஏய்" என்ற அவனது கர்ஜனையில் வேறு யாராவது அங்கே இருந்தால் நடுநடுங்கிப் போயிருப்பர். ஆனால் அங்கு இருப்பது சீறும் பெண் சிங்கம் வானதி அல்லவா?


"ஆழம் தெரியாமல் காலை விட்டுட்ட வானதி. இதுக்கு நீ அனுபவிப்ப. இப்போவே நான் உன் வாயால ஒத்துக்க வைக்குறேன்" என்று உரைத்தவனை பார்த்து, "ஆஹான்" என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பிரயோகித்து பேப்பர் வெயிட்டை சுழற்ற ஆரம்பித்தாள்.


அவனுக்குத் தெரிந்த அமைச்சரை அழைக்க அவர் அழைப்பை ஏற்கும் முன், ஒரு கேலிச் சிரிப்பை சிந்தி உதட்டை வானதி சுழிக்க சுருசுரு என்று ஏறிய கோபத்தில், "ஆஃப்ட்ரோல் ஒரு பொண்ணு நீ. என் கிட்ட வாலாட்டுற?" என்று எகிறி அவள் கழுத்தைப் பிடிக்கச் செல்ல அவனது கையை முறுக்கியவள் அவனைக் கீழே தள்ளி அவன் நெஞ்சில் தன்னுடை ஹீல்ஸ் அணிந்த காலை வைத்து ஊன்றினாள்.


இவை அனைத்துமே கண்மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்தன. "பொண்ணுன்னு தப்பா எடை போட்டுட்டியே" என்று கேலிக்குரலில் மொழிந்தவள் தான் கூந்தலில் சூடி இருந்த ஹெயார் பின்னை எடுக்க அது கூரிய சிறிய கத்தியாக இருந்தது.


"இதை உன் கழுத்துல இறக்க எனக்கு இரண்டு செக்கன் அதிகம். எனக்கு தேவை உன் உயிர் இல்லை. உன் வீழ்ச்சி. அதை நினைச்சே நீ பைத்தியமாகனும்" என்றவளின் குரலில் தெறிந்த தீவிரமும் கண்களின் பளபளப்பும் அதை செய்தே தீருவேன் என்று உரைக்க அவ் காப்ரேட் கிங் ஸ்தம்பித்து நின்றான்.




#######################


அவமானத்தில் முகம் இறுகி உடல் விறைக்க நின்றவனது தோற்றம் அங்கிருந்தோரை பயப்பட வைத்தாலும் கிருஷ் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டவில்லை. வேலைக்காரர்களும், சமையல்காரர்களும் பதறி இருக்க அதன் பிறகே தான் செய்த காரியத்தை உணர்ந்தாள் சஞ்சனா.


உணர்ச்சி துடைத்த குரலில், "வேற ஏதாவது வேணூமா மேம்?" என்று எப்போதும் போல் நின்றான். சஞ்சனா அதிர்ச்சியுடனேயே நின்றவளின் சிரம் 'இல்லை' என்று ஆட்டியது. அதன் பிறகே கிருஷ் அங்கிருந்து நகர்ந்தான்.


இதைக் கேள்வியுற்ற வானதி புயலையும் மிஞ்சும் வேகத்தில் அங்கே வந்தவள் சஞ்சனாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அதில் தன்னை சுதாகரிக்க முடியாமல் சுருண்டு விழுந்தாள் சஞ்சு. அவற்றை எவ்வித உணர்வும் இன்றி வெறித்துப் பார்த்தான் கிருஷ்.


அவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்த வானதி, "நீ பண்ண வேலைக்கு இந்த நேரம் அவனோட புளட்ஸ் உன் நெத்தியில இறங்கி இருக்கனும். நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக அவன் பொறுமையா இருக்கான். மறுபடியும் இதைமாதிரி பண்ண நீயும் உயிரோட இருக்க மாட்ட. உன் வுட்பி வர்மாவும் இருக்கமாட்டான். ஜாக்கிரதை" என்று உறுமியதில் பயத்தில் நடுங்கினாள் சஞ்சனா.


"இது இந்த வானதி தேவியோட கோட்டை. எந்த கொம்பனாலேயும் நுழைய முடியாது. முட்டாள் தனமா உன்னை காப்பாத்த வர்மா வருவான்னு நினைக்கிறதை விட்டுட்டு அமைதியா இருக்கிற வழியப் பாரு. அவனுக்கு நான் கொடுக்குற தொல்லையை சமாளிக்கவே நேரம் சரியா இருக்கு. சோ, நீ அமைதியா இருக்கிற வரைக்கும் சேஃப்.


இது வரைக்கும் உன் மேலே ஒரு சின்ன கீறலோ, அவமதிப்போ உனக்கு இங்கே நடக்க இல்லை. இனிமேல் உன் நடத்தையைப் பொருத்து உனக்கு மரியாதை கிடைக்கும். அதனால அமைதியா இருக்கிற வழியைப் பாரு" என்று அழுத்தமாய் கூறி வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றாள்.


#########################


"ஹாய் பேபி என் அதிரடி எப்படி இருந்தது?" என்று அலட்சியம் கலந்த கிண்டலுடன் அருண்மொழிவர்மன் வானதியை இடித்தவாறு அமர அவளில் எந்தவித மாற்றமும் இல்லாது ஜடத்தைப் போல் அமர்ந்து இருந்தாள்.


வானதி, "மீடியா முன்னாடி கிஸ் பண்ணி நான் உன் பொன்டாட்டி; கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னால் நான் அடங்கி போயிருவேன்னு யார் மேன் உனக்கு சொன்னது?" என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினாள் அமர்த்தலாக.


வர்மா, "என்னைக்குமே வானதி அருண்மொழிவர்மனுக்கு தான். அருண்மொழியை வானதி காதலிச்சு கல்யாணம் பண்ணாளாம். தெரியும்ல?" என்று கிண்டலுடன் வினவ, "இந்த வானதி இந்த அருண் மொழிதேவனை அழிக்கிறதுக்காவே பிறப்பெடுத்தவன்னு உனக்கு தெரியாது" என்று சீறலாய் வந்தன சொற்கள்.


அவன் கேலியாய் உதட்டைச் சுழிக்க, அதில் வானதி கோபம் கொள்ளாமல் நக்கலாய் சிரித்து, "நீ பண்ண தப்புக்கு தண்டனை கொடுக்காமல் இருந்தால் நான் வானதி இல்லையே. உன் மொபைலுக்கு இப்போ ஒரு வீடியோ வந்திருக்கும். அதை பாரு" என்று திமிருடன் மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை சுழற்றினாள் சாவகாசமாக.


அதைப் பார்த்தவனுக்கு இரத்தம் கொதித்தது. "ஏய்" என்று கர்ஜிக்க ஒரு கையால் காதைக் குடைந்தவள், "நீ எனக்கு கிஸ் பண்ண. நான் என் ஆளை வச்சு என் கஸ்டடியில இருக்கிற நீ கல்யாணம் பண்ண போறவளை கிஸ் பண்ண வச்சேன். அவளோ தான். இதுல தாம் தூம்னு குதிக்க எதுவுமே இல்லை" என்று அலட்சியமாய் தோளை உழுக்கினாள்.


"நீயெல்லாம் பொண்ணாடி? ராட்சசி" என்ற அருண்மொழியின் உறுமலை இரசித்துப் பார்த்தாள் வானதி.


"பொண்ணுங்களுக்கு பொண்ணுங்க எதிரின்னு சொல்றதுல தப்பே இல்லை" என்று வர்மா சொற்களைக் கடித்துத் துப்ப, "இதென்னடா வம்பா போச்சு? ஆம்பளைக்கு ஆம்பளை எதிரியா இருக்கும் போது பொம்பளைக்கு பொம்பளை எதிரியா இருக்கக் கூடாதா என்ன?" என்று சிறு சிரிப்புடன் வினவினாள் வானதி.


"ச்சீ.." என்று வெறுப்புடன் வர்மா முகத்தைத் திருப்பி, "அழகு ரொம்ப ஆபத்து. நீயும் அதே போலதான். பாம்பு மாதிரி" என்ற சொற்கள் வர்மாவின் வாயில் இருந்து வெறுப்புடன் வெளிவந்தன.


"நீ என்ன சொன்னாலும் என்னை பாதிக்காது மேன். உன் ஃபிரென்ஸ், குடும்பத்தோட உயிரெடுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. எனக்கு தேவை உன்னோட, உன் ஃபிரன்சோட அழிவு. நீ ஒன்னுமே பண்ண முடியாமல் கையாலாகாதவனா நிக்கனும். அதை நான் இரசிக்கனும்.


உன்னை எதிர்க்க ஆம்பிளை யாரும் பிறப்பெடுக்க இல்லைன்னு சொல்லுவியாமே மேன். ஆனால் இப்போ உன்னை எதிர்த்து நிற்கிறது ஒரு பொண்ணு. உன்னால என்ன பண்ண முடிஞ்சது?" என்ற வானதியின் முகத்தில் இகழச்சி, திமிர் எகத்தாளம் என்பவை போட்டியிட்டு தாண்டவம் ஆடின.


கருத்துக்களைப் பகிர

 
Last edited:

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24659



அரிமாவின் தகிக்கும் அணங்கிவள்




அத்தியாயம் 1





கருமையை இரவு நேரம் தத்தெடுத்து இருக்க மெல்லிய காற்றினால் உயரிய அகன்ற மரங்களின் இலைகள் அங்குமிங்கும் நாணல் போன்று அசைந்தவாறு நடனமாடின. வெளிச்சம் அவ்விடத்தில் கிஞ்சித்திற்காவது இருந்தால் யாராக இருந்தாலும் ஒரு நொடிப் பொழுதேனும் மரங்களின் அசைவுகளை இரசிக்காமல் இருக்க மாட்டார்கள்.


ஆனால் வெளிச்சத்திற்கே அங்கே பஞ்சமாக இருக்க கறுப்பு நிறம் காணும் இடமெல்லாம் சூழ்ந்து இருந்தது. பிராணிகளின் நடமாடலும், அவற்றின் அரவங்களுமே அங்கே எதிரொலித்து இருக்க திடீரென்று அங்கே சலசலப்பு உருவானது.


ஒரு மெல்லிய வெளிச்சம் உருவாக அது இருளைக் கிழித்து வெளியேறியது. அவ் குறுகிய வெளிச்சத்தை ஒரு உருவம் மொபைல் மூலம் உருவாக்கி அதை ஏந்திக் கொண்டு தைரியமாக அங்கே நிலவும் நிசப்தத்தையும் பொருட்படுத்தாது பூட்ஸ் அணிந்த தன் நீண்ட நெடிய கால்களால் வேக எட்டுகளை வைத்தன.


அவற்றின் ஒலியே 'தட் தட்' என அவ்விடமெங்கும் எதிரொலிக்க சருகளை மிதித்து நேர் கொண்ட, கூரிய பார்வையை தான் அடைய வேண்டிய இடத்திற்குச் செலுத்தி நடந்து சென்றது அவ்வுருவம். மரங்கள் நிறைந்த அவ் அடர் கானகத்தில் அதிகளவு தருக்கள் அடர்ந்து நெருங்கி வளர்ந்து இருக்க நடுவில் சிறிதாக ஒரு குடிசை போன்று ஒரு இடம் தென்பட்டது.


அதன் அருகில் நெருங்கி சுற்றும் முற்றும் பார்த்த அவ்வுருவம் இகழ்ச்சிப் புன்னகையுடன் குடிசையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தது. கண்களில் ஏளனமும், ரௌத்திரமும் போட்டியிட நாற்காலியில் கட்டப்பட்டு இருந்த ஒருவனை வெறித்துப் பார்த்தது அவ்வுருவம்.


கட்டப்படு இருப்பவனுக்கு அருகில் நின்று இருந்தவன், "பாஸ் நம்ம ஆளுங்களோட விரல் நுனி இவன் மேலே பட இல்லை. இன்னியோட அவன் சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு. நீங்க தான் அடுத்து என்ன பண்ணனும்னு சொல்லனும்" என்றான் விசுவாசம் நிறைந்த அவனது பி.ஏ ஈஸ்வர்.


அவனை வெறித்தவாறே வலது கையை நீட்ட தண்ணீர் போத்தலை வழங்கினான் ஒரு அடியாள். அதைத் திறந்து தண்ணீர் முழுவதையுமே கட்டப்பட்டு இருப்பவனுக்கு ஊற்ற மயக்கத்தில் இருந்து பதறி கண் விழித்தான். அவனது பதட்டத்தில் இவனது உதடுகள் ஏளனமாக வளைந்தது.


எதிரே நின்று இருந்தவனைப் பார்த்த நாற்காலியில் கட்டப்பட்டவனுக்கு பயத்தில் தொண்டை வரண்டு போக எச்சிலை விழுங்கி ஈரப்படுத்திக் கொண்டான். "இவளோ பயம் இருக்கிறவன் எதுக்காக எனக்கு துரோகம் பண்ண நினைக்கனும்" என்று நக்கல் வழியும் குரலில் வினவியவாறே அவனுக்கு எதிரே ஒரு நாற்காலியை இட்டு அமர்ந்தான்.


கட்டப்பட்டவனோ பயத்தில், "என்னை மன்னிச்சிருங்க சேர். நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். இனிமேல் பண்ண மாட்டேன்" என்று மிரண்டுக் கெஞ்ச அதைக் கிஞ்சித்திற்கும் பொருட்படுத்தாது அலட்சியமாக, "நான் அருண்மொழி வர்மன் டா. என் கிட்டேயே உன் வேலையை காட்டி இருக்க? உன்னை சும்மா விடுவேன்னு யாரு சொன்னது?" என்று எகத்தாளமாய் வினவினான் வர்மா.


"சேர் சேர் மன்னிச்சி விட்ருங்க சேர்" என்று அவன் அழுது கெஞ்சியும் ஏதிரே இருப்பவனுக்கு மனம் இரங்கவில்லை. வர்மா, "துரோகத்துக்கு இந்த வர்மாவோட கோர்ட்ல தண்டனை மரணம்" என்றவன், "என்னை எதிர்க்க இங்கே யாருமே பொறக்க இல்லைடா. வந்தாலும் வர்மா கிட்ட வாலாட்ட முடியாது" என்று உறுமி அவனது நெற்றிப் பொட்டில் தனது துப்பாக்கியின் குண்டை இறக்கினான்.


இவனுடைய தொழிலுக்கு எதிரியாக இருப்போர்களில் சிலர் இவனுடைய கம்பனியிற்கே ஆட்களை அனுப்பி தகவல்களை திருட முயற்சித்தனர். பல முறை முயற்சி செய்து தோற்றாலும் விடாமல் அங்கே இருப்பவன் ஒருவனை விலைக்கு வாங்க முயற்சிக்க, அவனும் பணத்திற்காக இத்தனை நாட்களாக தன்னை பார்த்துக் கொண்ட முதளாலியிற்கு துரோகம் இழைக்க முயன்றான்.


வர்மாவின் உலவுத்துறை ஆட்கள் அத் துரோகியை அடையாளம் காட்ட நான்கு நாட்களுக்கு முன் கடத்தி ஊரின் ஒதுக்குப்புறம் இருந்த இடத்தில் அடைத்து வைத்து இன்று உயிரையும் எடுத்து விட்டான்.


வர்மா நல்லவர்களுக்கும், தன்னுடைய நலனை பார்ப்பவர்கள்; தன்னுடைய தொழிலாளிகளுக்கும் மிக மிக நல்லவன். ஆனால் எதிரியாக இருப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து உயிரை எடுக்கவும் தயங்காத அஞ்சா நெஞ்சம் கொண்டவன்.


தன்னை எதிர்க்க இங்கே யாருக்கும் துணிவில்லை என்று இறுமாப்பில் இருப்பவனை நடு வீதியில் அலைய வைப்பதற்காக ஒரு பெண் இந்தியாவிற்கு வருகைத் தர இருக்கிறாள் என்பதை அறியாதவனாக, "டிஸ்பொஸ் இட்" என்று கட்டளையிட்டு காட்டிற்கு வெளியே சென்று மறைவில் நிறுத்தி இருந்த தனக்குப் பிடித்தமான சில கோடிகள் பெறுமதியான கறுப்பு நிற காரில் ஏறி வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.


நள்ளிரவையும் நேரம் கடந்திருக்க தனது காரை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி சில அடிகள் நடந்தான் மேலும் உள் நோக்கி. அங்கே இருக்கும் ஒரு கதவைத் திறந்து மீண்டும் அதைத் தாழ்ப்பாள் இட்டு மொபைல் வெளிச்சத்தை ஒளிர வைத்து சில அடிகள் மேலும் நடந்தவன் படிகள் இருக்க அதில் ஏறி ஒரு அறைக் கதவைத் திறந்தான்.


அதைத் திறந்ததும் ஏசியின் காற்று அவன் முகத்தில் வீச ஆழ மூச்செடுத்து மீண்டும் கதவை அடைத்து திரைச்சீலையை ஒழுங்காக இட்டான் அக்கதவை மறைக்கும் வகையில். மின் விளக்கை ஒளிர்வித்தவன், தனது ஜெகட்டை கழற்றி சோஃபாவின் மீது வீசி, குளியலறைக்குச் சென்று குளித்து ஆரம்கட் டீசர்ட், ஷோர்ட்ஸ் இற்கு மாறியவன் கண்ணாடியின் முன் நின்றான்.


ஆறடிக்கும் அதிகமாக மேலும் மூன்று அங்குல உயரத்தில் வளர்ந்து இருக்க உடலை இறுக்கிய ஆர்ம் கட் டீசர்ட்டின் மூலம் அவனது வயிற்றுப் படிகட்டுகளைக் கொண்ட தசைகளும் புஜத்திலும், மார்பிலும் முறுக்கேறிய தசைகள் தென்பட்டன. தொடர் உடற் பயிற்சியினால் உருவாகி இருந்தது அவனது உடலமைப்பு.


அகன்ற நெற்றி; அடர் புருவங்கள்; அவனது அகன்ற உள்ளங் கையினால் அடக்க முடியாத அலைப்பாயும் கேசம்; எதிரே இருப்பவர்களை எடைப் போடும் கறுநிற கண்கள்; கூரிய மூக்கு; பெண்களை மயக்கும் புன்னகையைச் சிந்தும் சிவந்த இதழ்கள்; முகத்தில் பியர்ட் செய்யப்பட்ட தாடி அவனது சிவந்த நிறம் என்பவை அவனை ஆணழகனாகக் காட்டியது.


தன் முகத்தினையும், பின் கழுத்தையும் துவாயினால் துடைத்தவன் அதையும் சோஃபாவின் மீது வீசி விளக்கை அணைத்து தன்னுடைய கிங் பெட்டில் விழுந்தான். இவனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அங்கே பொருத்தப்பட்டு இருக்கும் மைக்ரோ கமெராவின் மூலம் தனது மடிக் கணனியில் வெறித்துப் பார்த்தது ஒரு ஜோடிக் கண்கள்.


கதிரவனும் தன் உதயத்தை துவங்க நிலா மகள் தன் வீட்டை நோக்கிச் செல்லும் அவ் அதிகாலை வேளையில் தன் கதவை "அருண்" என்று சாந்தமான குரலில் கதவைத் தட்டியதில் கண்விழித்தான் வர்மா.


வீட்டைப் பொருத்தவரையில் அனைவருக்குமே அவன் அருண். ஆனால் தொழில் உலகத்தைப் பொருத்த வரையில் அவன் அரிமாவாக (சிங்கம்) இருக்கும் வர்மா. அவனது பெயரைக் கேட்டாலே நடுங்குவது வாடிக்கையாகப் போய்விட்டது.


அறையின் கதவைத் திறக்க சாந்தமான முகத்துடன் நெற்றியி வகுட்டில் குங்குமம், நெற்றியில் விபூதி, தலைக்குளித்து மங்கலகரமாக அங்கே பூஜைத் தட்டுடன் புன்னகை முகமாக நின்று இருந்தார் யசோதா.


யசோதா, "போய் சீக்கிரமா குளிச்சிட்டு கீழே வா" என்று தீபத்தை ஒற்றி எடுத்து நெற்றியில் இதழ்பதித்து வெளியேறினார். அவனும் புன்னகையுடன் முகம் கழுவி வந்தவன் உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்து உடற்பயிற்சியை முடித்து ஜொகிங் செல்வதற்காக ஜொகிங் சூட்டை அணிந்துக் கொண்டு முதல் தளத்திற்கு லிஃப்ட் மூலம் வந்தான்.


அங்கே பத்திரிகையை வாசித்தவாறு வர்மாவின் தந்தை பரந்தநாதன் வர்மா காபியைப் பருக, தம்பி சித்தார்த் வர்மா வாயிலின் அருகே நின்று ஜொகிங் செல்வதற்காக காலில் அணிந்த ஷூவீன் லேசைக் கட்டினான். சாமி அறையில் இருந்து தாயோடு சேர்ந்து அவனது தங்கை பிருந்தா நெற்றியில் விபூதியைப் பூசியவாறே வெளியேறினாள்.


அனைவரையுமே இரசித்துப் பார்த்தவன் தனது குடும்பத்தை எண்ணி பெருமிதத்துடன் கீழே வர தாய் பூஜைத் தட்டை எடுத்து மீண்டும் அவனுக்கு ஆராதனை காட்டி நெற்றியில் விபூதியை வைத்தார். வர்மா சிறு புன்னகையுடன், "அம்மா ஜொகிங் போயிட்டு வரும் போது வியர்வையால எப்படியும் அழிஞ்சிரும். அப்புறம் எதுக்காக அம்மா இதெல்லாம்" என்று வினவினான்.


யசோதா, "இது என் மன திருப்திக்காக அருண். உங்களுக்காக வேண்டிட்டு விபூதியை என் கையால உங்களுக்கு வச்சு விட இல்லைன்னா என் மனசு நிம்மதியாவே இருக்காது" என்று வாஞ்சையாய் தன் மகனின் முகத்தை வருடி சமையலறைக்குள் நுழைந்தார்.


இவர்களின் சம்பாஷணைகளை அவனது குடும்பத்தினருமே புன்னகையுடன் கேட்டுக் கொண்டு இருந்தனர். பிருந்தா, "அண்ணா, அக்கா இன்னிக்கு வீட்டுக்கு வரேன்னு சொன்னா. கிருஷி பாப்பாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி வைக்க சொல்லி ஆடர் போட்டு இருக்கா. சோ ஈவீனிங் ஷொபிங் போயிட்டு அவளுக்கு தேவையான திங்சை வாங்கனும்" என்று தயக்கமாய் கூறினாள்.


அருணிற்கு மூத்தவள் விஷாகா. தற்போது ஒரு பிரபலமான மனோ தத்துவ மருத்துவர் தருணை காதல் திருமணம் செய்து அவர்களுக்கு காதலின் பரிசாக இரு வயது கிருஷி பிறந்தாள் அவ் வீட்டின் இராணியாக. தருண் இவர்களைப் போன்று வசதியற்றவனாக இருந்தாலும் சிறந்த குணம் படைத்த குணவாளன். அவனது குடும்பத்தினருமே அவனைப் போன்றவர்களே.


வர்மாவிடம் அனைவருமே மரியாதையாகவே நடந்துக் கொள்வர். உடன் பிறந்தவர்களுக்கு அவன் மேல் அச்சம் கலந்த மரியாதை உண்டு. அது மட்டுமல்லாது அவனுக்கு தொழில் ரீதியான எதிரிகள் அதிகமாக இருப்பதால் அவனிடம் கூறி விட்டே வெளியே செல்லுமாறு கட்டளையிட்டு இருக்க அதை அனைவருமே கடைப் பிடிக்கின்றனர்.


பிருந்தா தற்போது எம்.பி.ஏ இறுதி வருடம் பயில, சித்தார்த் சென்னை மாநாகரத்தில் ஒரு சி.பி.ஐ அதிகாரியாக பணிபுறிகிறான். சித்தார்த் மற்றும் பிருந்தாவிடம் அருணின் சாயல் இருக்க அவனைப் போலவே பேரழகாய் இருந்தனர் இருவரும். அருண் அவனது தாத்தாவின் அச்சுப் பிரதியாகப் பிறந்தவன்.


அவருடைய நாமம் அருள் வர்மா; அவர் இறந்த பிறகு அவருடைய பிரதியாக இருப்பதற்காகவும் பொன்னியின் செல்வன் காவியத்தின் தீவிர இரசிகனாக இருந்ததால் நாதன் அவனுக்கு அருண்மொழி வர்மன் என்று தந்தையின் பெயரின் ஓசையில் வருமாறு நாமத்தை வைத்தார்.


அக்காலத்திலேயே ஆணழகனாகத் திகழ்ந்த வர்மாவின் தாத்தாவைப் போன்றே அவருடைய இரு செல்வங்களும் பிறந்தன. மகனும், மகளும் அவ்வாறே அவரது சாயலில் இருந்தனர். தாத்தவைப் போன்று தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் அவரைப் போன்றே இருந்தான்.


விஷாகா தாயைப் போன்று மஞ்சள் நிறத்து பைங்கிளியாகத் திகழ தருண் எனும் வேடன் அவளை காதல் வலையில் வீழ்த்தி அடைந்து சந்தோஷமாக வாழ்கின்றனர்.


வர்மா, "ஒகே பார்த்துப் போயிட்டு வா" என்று தங்கையிடம் மொழிந்தவன், "சித்து" என்று தம்பியை அழைக்க, "அண்ணா" என்றவாறு அவ்விடம் வந்தான் சித்தார்த்.


வர்மா, "ஈவீனிங் ஃபீரியா இருந்தால் அவளைக் கூட்டிட்டு போ. இல்லைன்னா கார்ட்ஸ் கூட அனுப்பு" என்று ஜொகிங் செல்ல வெளியேறினான்.


ஜொகிங்கை முடித்து தனது அறைக்குச் சென்று கடும் நீல நிற கோர்ட் சூட்டில் கம்பீரமாக மிடுக்குடன் நடந்து வந்தான் வர்மா. அவன் காலை உணவை உட்கொள்ள உணவு மேசையில் அமர அவனது மொபைல் ஒலித்தது. அவன் அழைப்பை ஏற்று ௧ம்பீரமாக ஆளுமை நிறைந்த குரலில், "ஹலோ" என்றான்.


எதிர்ப்புறம் கூறிய செய்தியில் பூவாய் அவன் முகம் மலர இறுதியாக , "தேங்கியூ" என்று அழைப்பைத் துண்டித்து, "இந்த வருஷத்தோட இந்தியாவோட பெஸ்ட் யங்கஸ்ட் பிஸ்னஸ் மேன் அவோர்ட் எனக்கு கிடைச்சிருக்கு. இன்னும் ஃபைவ் டேஸ்ல டெல்லிக்கு அவோர்ட் பங்கஷனுக்காக போகனும்" என்று குதூகலம் நிறைந்த குரலில் மொழிந்தான்.


குடும்பத்தினருக்கு சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷமாக இருக்க அனைவருமே அவனுக்கு வாழ்த்தை தெரிவித்தனர். அத்தோடு அவனது தொழில் வட்டார நண்பர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் என்று அனைவருமே ஒருவருக்குப் பின் ஒருவராக வாழ்த்துக்களை அனுப்பினர்.


அதே குதூகலத்துடன் தனது அலுவலகத்தை நோக்கி காரில் பறந்தான் வர்மா. இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே அவனுக்கு சந்தோஷமும், நிம்மதியும் இருக்கப் போகின்றது என்பதை அவன் அறியவில்லை.


அவுஸ்திரேலியாவில் அதே தினத்தில் காலை நேரம் சிட்னி நகரத்தில் பெரிய வீடுகள் நிறைந்த அப்பகுதியில் மாளிகையைப் போன்ற அவ் இல்லத்தில் மேல் மாடியின் ஓர் செல்வச் செழிப்பு நிறைந்த அறையில் கட்டிலில் படுத்தவாறு மிரண்டு அனைவரையும் பார்த்தான் அவ் வெள்ளையன் மைக்கல்.


அவனைச் சுற்றி கறுப்பு நிற ஆடையணிந்து ஐந்து தடியர்களும் டிப்டொப்பாக நீல நிற ஜீன்ஸ், வெள் சேர்ட் அணிந்து அதை இன் செய்து சேவ் செய்யப்பட்ட முகத்துடன் ஆறடியில் களையான மாநிறத்தில் ஒருவித மிடுக்குடன் நின்று இருந்தான் சம்பத். அவனது முகத்தில் எவ்வித உணர்வுமே இல்லாமல் உணர்ச்சிகள் துடைத்து எறியப்பட்டு இருந்தன.


(அனைத்து உரையாடல்களுமே ஆங்கிலத்தில் இடம் பெறும்)


மைக்கல், "யார் நீங்க எல்லாம்?" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வினவ, "உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எதுவுமே எங்களுக்கு இல்லை" என்று மொழிந்தவன் தனது இடது கையில் கட்டியிருந்த கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.


மைக்கல், "பொலிசுக்கு ஃபோன் பண்றேன்" என்று எழ முயற்சிக்க அங்கே இருந்த தடியர்களில் ஒருவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை லோட் செய்து வைக்க மைக்கலுக்கு பயத்தில் பேச நா எழவில்லை. அவனையே அதிர்ந்து பார்க்க, "லீவ் இட்" என்ற ஒரு கம்பீரமான குரல் கேட்க கட்டளை வந்த அடுத்த நொடி துப்பாக்கி மீண்டும் அவனது முதுகிற்குப் பின்னால் சென்றது.


மைக்கல் படுத்தவாறே அரவம் கேட்டப் புறமாக தலையை மட்டுமே திருப்பினான். 'டக் டக்' என்ற ஹீல்சின் சத்தம் முன்னே வர சில செக்கன்களில் அதற்கு சொந்தமான உருவம் அறை வாயிலில் நின்றது. மைக்கலின் பார்வை கீழ் இருந்து மேலாக அவ்வுருவத்தை அளவெடுத்தது.


வெள்ளை நிறத்தில் பளபளப்புடன் கூடிய ஹைஹீல்ஸ், பிங்க் நிற ஜீன்ஸ் அணிந்து இருக்க அவனது பார்வையும் மேலேறியது. வெள்ளை நிற டீசர்ட் இன் செய்யப்பட்டு, அதே பிங்க் நிறத்தில் பிளேசர் அணிந்து இருந்தது அவ் உருவம்.


வலது கையில் மரகதமும், வைரமும் பதிக்கப்பட்ட ஒற்றை வளையல்; இடது கையில் பிளெடினத்தினால் ஆன கைக்கடிகாரம் அணியப்பட்டு இருக்க மிக மிக மெல்லிய தங்க பிரேஸ்லட்டும் கைக்கடிகாரத்தோடு பினண்ணிப் பிணைந்து இருந்தது.


கைவிரல்களில் எவ்வித மோதிரமும் இருக்கவில்லை. கழுத்துப் பகுதியில் கறுப்பு, பிங்க் நிறம் கலந்த ஆரம் போன்ற வடிவில் மோடர்ன் செயின் கழுத்தோடு ஒட்டி அணிந்து இருக்க கூலிங் கிளாஸ் அவளது டீசர்டில் தொங்கியது. காதுகளில் பிளடினத்தினாலான மிகச் சிறிய காதணி அணிந்து இருந்ததாள் அவள். ஆம் அவள் ஒரு பெண்.


தன் கூந்தலை பொனிடேல் இட்டு இருக்க அக்குதிரை வால் போன்ற அடர் கருங் கூந்தல் நடு முதுகினைத் தொட்டு அங்குமிங்கும் ஆடியது. எப்போதும் போல் நீண்ட ஹெயார் பின்னை பொனிடேலுக்கு நிலைக்குத்தாகக் குத்தி இருந்தாள்.


வெண்ணிற பாலில் கஸ்தூரி மஞ்சளைக் கலந்த நிறத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட அழகிய சிற்பம் அவள். கண்களா? துள்ளி விளையாடும் கயல் மீன்களா? என வியக்கும் வேல்விழிகள்; வளைந்த திருத்தப்பட்ட புருவங்கள்; பிறை நெற்றி; செதுக்கிய மூக்கில் வெள்ளை நிற வைரக்கல் மின்னியது.


விழிகளுக்கு மைதீட்டி மஸ்காரா இட்டு இருக்க செப்பு இதழ்களுக்கு இளம் பிங்க் நிறத்தில் டாஸ்லர் லிப்ஸ்டிக்; லிப்குளோஸ் இட்டு இருந்தாள். இயற்கையிலேயே பேரழகியாய் இருப்பவள் முகத்திற்கு அளவான ஒப்பனையுடன் மயக்கும் மோகினியாய் இருந்தாள் அவள்.


அவள் வானதி தேவி. வி.டி குரூப்ஸ் என்ட் கம்பனியின் சி.ஈ.ஓ. அவுஸ்திரேலியா; இந்தியா லண்டன் போன்ற சில முக்கிய இடங்களில் பிரசித்தமான ஒரு கம்பனி அது.


வானதி கம்பீரக் குரலை மாற்றி தன் தேன் குரலில் பேச ஆரம்பித்தாள். இடத்திற்கேற்றது போல் குரலின் சுருதியை மாற்றும் வல்லமை நன்றாகவே இருந்தது அவளுக்கு.


வானதி, "உன் கண்ணுல எனக்கான பயம் தெரியுதே மைக்கல்" என்று அவனுக்கு நேரெதிரே வர தடியர்களில் ஒருவன் அவள் அமர நாற்காலியை இழுத்து வைத்தான். அதில் காலுக்கு மேல் கால் இட்டு அமர்ந்து மைக்கலையே அழுத்தமாகப் பார்த்தாள்.


மைக்கல், "நீ சொன்னது போல என்னோட அத்தனை புரொஜெக்டசையும் உனக்கு கொடுக்குறேன்னு ஒஃபீசியலா அனௌன்ஸ்மன்ட்டு கொடுத்துட்டேன். இன்னும் என் பேர்ல இருக்கிற சொத்தை உன் பேருக்கு மாத்திட்டேனே. இதுக்கு அப்புறமும் எதுக்காக என்னை கடத்தி வச்சு டாச்சர் பண்ற?" என்று கத்தினான்.


அவள் முன்னே குரலை உயர்த்தியதற்காக ஒருவன் மைக்கலின் மூக்கில் ஒரு குத்தை விட இரத்தம் பீரிட்டு வழிந்தது. "என் கிட்ட பேசும் பார்த்து பேசனும் மைக்கல். நீ இன்னும் என்னை சரியா புரிஞ்சிக்க இல்லை" என்று எச்சரித்தவள் தொடர்ந்து, "நீ நல்லா ஜோக் சொல்ற மேன்" என்றாள்.


அவள் எச்சரித்த போதும், அதன் பின் பேசிய போதும் அவள் முகத்தில் தெரிந்த புன்னகை மாறவில்லை. அவளின் விசேடத் தன்மையே இது. கோபப்பட்டாலோ, சிரித்தாளோ, குரூரமாய் நடந்துக் கொண்டாளோ அவள் முகத்தில் தெரிந்த புன்னகை மறையாது.


அதைக் அழகாகக் கையாளும் வித்தைக்காரி; ஆனால் அவளது வாழ்வின் எதிரியைப் பற்றி பேசும் போது முகத்தில் புன்னகை மாறாது இருந்தாலும் அது உயிர்ப்பும், உணர்ச்சியும் அற்றதாய் மாறிவிடும். யாரந்த எதிரி???



வானதி, "இது யாரோட வீடு?" என்று வினவ, "என்னோடது" என்றான்


"யாரோட ரூம்?"


"என்னோடது"


"யாரோட பெட்?"


"என்னோடது"


"அப்புறம் நான் கடத்தி வச்சி இருக்கேன்னு சொல்றியே. இது ஜோக்கா இல்லையா?" என்றவளின் குரலில் டன் கணக்கில் நக்கல் தெரிந்தது.


மைக்கல் விழிபிதுங்கி அவளைப் பார்க்க, "வானதியை எதர்க்கனும்னு யோசிச்சது ரொம்ப பெரிய தப்பு மைக்கல்.என் கிட்ட மோதனும்னு உன் நினைப்புல வந்தது; ரொம்ப ரொம்ப பெரிய தப்பு. தப்பு பண்றவங்களுக்கு தண்டனை கண்டிப்பா உண்டு வானதி கிட்ட" என்று வன்மத்துடன் அவள் சொற்கள் வெளி வர தடியர்கள் அடுத்து என்ன எனப் புரிந்துக் கொண்டு ஒவ்வொருவரும் கைககள் இரண்டு; கால்கள் இரண்டையும் பிடித்தனர்.


அவன் திமிற ஐந்தாவது தடியன் அவனுடைய தலையைப் பிடித்துக் கொண்டான். வானது தனது வலது கையின் இரு விரல்களை அவனது வலக் கையிற்கு அருகில் கொண்டு சென்று வர்மக் கலையின் மூலம் அக் கரத்தையும், வலது புறக் காலையும் செயல் இழக்க வைத்தாள்.


"உனக்கு இன்னொரு விஷயம் சொல்லனும். நீ அதிகளவு டிரகஸ் எடுத்ததால உன் பிரஷர் கூடி பக்கவாதம் வந்திருச்சின்னு ரிபோர்ட் உங்க பேரன்சுக்கு நேத்து நைட்டே போய் சேந்திருச்சு. அவங்க உன்னைப் பார்க்க வரதோட அவங்க பேர்ல இருக்கிற மொத்த சொத்தையும் என் கிட்ட கொடுத்துட்டாங்க.


லண்டன்ல இருந்து வந்துட்டு இருப்பாங்க இப்போ. என்ன இருந்தாலும் நான் இந்தியன் பொண்ணு இல்லையா? எனக்கும் மனசுல கொஞ்சமா ஈரம் இருக்கு. சோ இந்த வீடு, உன் டிரீட்மன்டுக்கான பணத்தை விட்டு வச்சிருக்கேன். உன்னை பார்த்துக்க ஒரு நர்சும் ஏற்பாடு பண்ணிட்டேன். பார்த்து இருந்துக்கோ" என்று வெளியேறினாள்.


ஏதோ நினைவு வந்தவளாக திரும்பி அவனிடம் வந்தவள், "என்னை தவிற வேற யாராலேயும் உன்னை குணப்படுத்த முடியாது. ஏழு மாசத்துல திரும்பி அவுஸ்திரேலியா வரும் போது உன்னை கன்சிடர் பண்றேன்" என்ற இகழ்ச்சிப் புன்னகையுடன் அங்கிருந்து வெளியேற மற்ற அனைவருமே அவளுக்குப் பின்னால் சென்றனர்.


அவ் இலத்தில் இருந்து தன் கூலிங் கிளாசை மாட்டியவாறு வெளியேற டாக்டர் குழு ஒன்று மைக்கலைப் பரிசோதிக்க உள்ளே சென்றது. சம்பத் கார் கதவை திறந்து விட அமர்ந்த பிறகு அவனே கதவை மூடி வாகன ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்தான்.


அவளுடைய காரிற்கு முன்னும், பின்னும் ஒவ்வொரு கார்கள் பின் தொடர்ந்தன. வண்டியில் செல்லும் போது, "மேம் ஒன்னு கேட்கட்டுமா?" என்றான் சம்பத் தயங்கியவாறு.


டேப்பின் (tab) தொடு திரையில் அவள் விரல்கள் அசைய அவனது வினாவில் அவ்வாறே நின்றது.


அதை அவளது அனுமதி என்று அறிந்துக் கொண்டவன், "மூனு மாசத்துக்கு முன்னாடி அவனை இந்த நிலமைக்கு கொண்டு வரனும்னு முடிவு பண்ணிய மைக்கலுக்கே இந்த நிலமை. பத்து வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தனை..." என்று கூற முடியும் முன், "இட்ஸ் ரோங் சம்பத்" என இடை மறித்தாள் வானதி.


வானதி, "நாலு பேர்... நாலு குடும்பம் சம்பத்" என்று திருத்த, "சொரி மேம். அந்த நாலு பேரை நடுத் தெருவுல நாயா அலைய வச்சு அவங்க பரிதவிக்கிறதையும், தோல்வியை ஒத்துக்க முடியாமல் தலையைப் பிச்சிக்கிறதை பார்க்கனும்னு முடிவு பண்ணி இருக்கிங்களே. அவங்களோட நிலமையைப் எண்ணிப் பார்க்கும் போது எனக்கே பயமா இருக்கு மேம்" என்றான் சம்பத்.


அவனை மெச்சுதலாய்ப் பார்த்த வானதி, "அப்போ ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பண்ணி இருப்பேன்னு உனக்கு புரியிது. அதை அவங்க நாலு பேரும் நிச்சயமா எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. அவங்க விதி அப்படி!! நாம என்ன பண்ண முடியும்? அவங்களோட கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிருச்சு சம்பத்" என்றவள் டேப்பை தனக்கருகில் வைத்து இருக்கையில் தலை சாய்த்து கண்மூடினாள்.


சில நிமிடங்களின் பின், அதே நிலையில், "கிருஷ் உன் கூட பேசினானா?" என்று வினவ, "ஆமா மேம். உங்க செகன்ட் பிளேனை எக்சிகியூட் பண்றதுக்கான வேலைகளை சின்சியரா பார்க்குறான் மேம்" என்று உரைக்க சிறு புன்னகையை சிந்தினாள்.


"நான் இந்தியா போய் வீட்டுக்கு போக முன்னாடி நான் பார்க்க வேண்டியது, அந்த வர்மா தலையைப் பிடிச்சிட்டு ஒன்னுமே பண்ண முடியாமல் தவிக்கிற காட்சியா இருக்கனும். அதை ஏற்பாடு பண்ண சொல்லு" என்று, "ஐம் கமிங் அருண்மொழி வர்மன்" என்று அவளது உதடுகள் குரூரத்துடன் முணுமுணுத்தன.


பெண்சிங்கமும், ஆண்சிங்கமும் ஒன்றோடு ஒன்று மோது போது இழப்பு யாரிற்கு???



வருவாள்......


மீீீீீீ
அடுத்த வாரத்தில் ஒரு நாளில் மீண்டும் சந்திக்கிறேன்



கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ள,










 
Status
Not open for further replies.
Top