All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹெப்சியின் "ஒரு சான்ஸ் கொடு பெண்ணே!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
Thank you so much mam 😊
 

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அன்பார்ந்த வாசக பெருமக்களே..

First of all கேட்ட உடனே கதை எழுத திரி அமைத்து கொடுத்த ஸ்ரீகலா மேம்க்கு ரொம்ப ரொம்ப நன்றி.. 🙏

அடுத்து என்னை பற்றிய அறிமுகம்..

என்னோட பேர் ஹெப்சி..

இதுவரைக்கும் ஒரு கதை எழுதி இருக்கேன்.. நிறைய ஆதரவு கிடைச்சது..

அதனால அதே நம்பிக்கையோட அடுத்த கதை எழுத வந்திருக்கேன் 😁

முடிஞ்ச அளவுக்கு என்னோட Best கொடுக்க try பண்றேன்..

கதையின் பெயர்- ஒரு சான்ஸ் கொடு பெண்ணே!!

கதாபாத்திரங்கள்- ஜெகதீஷ் குமார்..
ஜியாலினி..

கதையை பற்றி கதையின் போக்கிலேயே பார்க்கலாம்..

Disclaimer- 📣

இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே..

உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்..

ஹெப்சி..

IMG-20201201-WA0000.jpg
 

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு சிறிய முன்னோட்டம்:

கல்லூரிகளுக்கிடையிலான மாநில அளவிலான கூடைப் பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தாள் ஜியாலினி.. அப்போது தீடீரென யாரோ அவள் தோளை தட்ட, திரும்பி பார்த்த ஜியாலினியின் முகம் அங்கே சிரித்தபடி அவளை பார்த்துக் கொண்டிருந்த ஜெகதீஷை கண்டவுடன் மாறியது..

உடனே அந்த இடத்திலிருந்து எழுந்து வெளியேற, அவனும் அவள் பின்னாடியே சென்றான்.

"ஜினி.. என்னாச்சு.. ஏன் இப்படி பிகேவ் பண்ற?.. 3 நாளா என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்குற.. நான் வந்தாலே எழுந்து போய்டுற.. நீ எதனால் என்மேல கோபமா இருக்கன்னு எனக்கு புரியவே இல்லை.."

"........."

"ஜினி வாயைத் திறந்து சொல்லப்போறியா.. இல்லையா?"

"........"

"ஜினி ப்ளீஸ் எனக்கு ஒரு சான்ஸ் கொடேன்.. நான் என்ன தப்பு பண்ணேன்னு சத்தியமா எனக்கு தெரியலை"

அடுத்து அவள் சொன்னதை கேட்டவன் முகத்தில் மில்லி மீட்டர் அளவு இருந்த சிரிப்பு சென்டி மீட்டராக மாறியது.

-------------------------------------

"ஜினி ப்ளீஸ்.. எனக்கு சான்ஸ் கொடேன்.. ஹ்ம் இதுக்கு முன்னாடி இந்த வார்த்தையை உன்கிட்ட நிறைய தடவை கேட்ருக்கேன்.. ஆனா இது தான் கடைசி.. ப்ளீஸ் என்னோட தரப்பு நியாயத்தை நான் சொல்லிடறேனே?!"

"தேவையில்லை ஜெகதீஷ்.. இனிமே நீ.. சாரி நீங்க எது சொன்னாலும் நடந்ததை யாராலும் மாத்த முடியாது இல்லையா?"

அவள் அவ்வாறு சொன்ன உடனே அவன் முகம் வேதனையில் சுருங்கியது.
 

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15.jpeg

அத்தியாயம்-1

"பூமி ஆடும் 'பிரேக்' டான்ஸ்- நிலநடுக்கம்"

-------------------------

ஜூலை 26, 2011..

நள்ளிரவு 1.02 மணி..

இடம்- வேளச்சேரி..

அங்கு பெரியார் நகரில் நடுத்தர அளவலான 'வில்லா' வகையிலான வீட்டின், ஒரு அறையில் வாசுதேவனும், அமிர்தமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்..

வாசுதேவன், பிரபல அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறார்.. அடுத்த உதவி பொது மேலாளர்(Assistant General Manager) இவர் தான் என பேச்சு அடிபடுகிறது.

அமிர்தம், குடும்பத் தலைவியாக இருந்தவர், பொழுதுபோக்காக தையல் பயிற்சி கற்றுக் கொள்ள, தற்போது திருமணங்களுக்கு அலங்கார ஜாக்கெட்டுகள் தைத்து கொடுக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்..

அப்படியே படிவழியாக ஏறி மாடிக்கு சென்றால் அங்கிருந்த 3 அறைகளில் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த ஜியாலினி பட்டென்று விழித்துக் கொண்டாள்..

வாசுதேவன்- அமிர்தம் தம்பதியின் ஒரே செல்ல மகள்.. அன்னை, தந்தை எந்த அளவுக்கு பாசம் காட்டுகிறார்களோ அந்த அளவுக்கு கண்டிப்பானவர்களும் கூட..

அவளும் அவளுக்கான சுதந்திரத்திலிருந்து எல்லை மீறியதில்லை.

12ம் வகுப்பில் 1134 மதிப்பெண்கள் பெற்று, கல்லூரியில் கால் பதிக்க இருக்கிறாள்..

18 வயது, தோளை தொடும் முடி, மாநிறம், முகத்தில் மெச்சூரிட்டியும், சிறு பிள்ளைத் தனமும் கலந்து இருந்தது..

வாசுதேவனுக்கு மகளை மாவட்ட ஆட்சியர் ஆக்க வேண்டும் என்று விருப்பம்..

ஜியாலினிக்கோ திரையுலகே போற்றும் வகையிலான பெண் இயக்குநராக விருப்பம்..

அதனாலேயே இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் அவள் விரும்பிய விஸ்காம் பிரிவை தேர்ந்தெடுத்தாள்.

அதை பெற்றோரிடம் கூற உடனே அவர்களிடமிருந்து கண்டணத்தை பெற்றாள்.. பின் அவர்கள் விருப்பப்படியே மாவட்ட ஆட்சியர் ஆகிறேன்.. ஆனால் கல்லூரியில் இந்த விஸ்காம் பிரிவு தான் படிப்பேன் என அடம்பிடிக்க, பெற்றோரும் அரைமனதாய் ஒத்துக் கொண்டனர்.. இதோ விஸ்காம்-க்கு புகழ்பெற்ற சென்னை லயோலாவில் சீட்டும் கிடைத்துவிட்டது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரி திறப்பு.. அதற்கு முன் ஜாலியாக அவள் விருப்பப்படி பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள்.

திடீரென விழித்தவளுக்கு தண்ணீர் தாகம் எடுக்க, அருகில் இருந்த வாட்டர் பாட்டில் காலியாக இருந்தது.

சலிப்புடன் எழுந்து கீழே சமையலறைக்கு சென்றாள்.. அங்கே தண்ணீர் குடித்து கொண்டிருக்கையில் தீடீரென நாய்கள் குரைத்துக் கொண்டே அங்குமிங்கும் ஓடும் சத்தம் கேட்டது.

"என்னாச்சு? ஏன் இப்படி இந்த நேரத்துக்கு சத்தம் போட்டுக்கிட்டே ஓடிட்டு இருக்குங்க?"என்று யோசித்தபடியே ஹாலை அடைந்தாள்.

திடீரென்று நாய்களின் சத்தம் இன்னும் இன்னும் அதிகமாக ஒரு பயப்பந்து வயிற்றில் உருண்டது.

உடனே பெற்றோர்களின் அறைக்கதவை தட்டச் சென்றவள் திடுக்கிட்டு நின்றாள்.

தரை ஆடுவது போல தெரிந்தது.. பிரமையாக இருக்குமோ என்று என்று எண்ணியவளின் எண்ணத்தை பொய்யாக்கியது.. அடுத்தடுத்த அதிர்வுகள்.

என்னவென்று புரிந்து கொண்டாள்.. உடனே பெற்றோர்களின் அறைக்கதவை படபடவென்று தட்டினாள்..

"அம்மா, அப்பா சீக்கிரம் வெளிய வாங்க.. அம்மா சீக்கிரம் கதவை திறங்க"

அமிர்தம் தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து கதவை திறந்தார்.

"என்னாச்சு ஜியா? ஏன் இன்னேரத்துக்கு கதவைத் தட்டுற?"என்று கேட்டவர் அப்போது தான் அதிரும் நிலப்பகுதியை கவனித்தார்.

"அய்யா கடவுளே!"என்று கத்திக் கொண்டே போய் வாசுதேவனை எழுப்பினார்.

"என்னங்க.. என்னங்க.. சீக்கிரம் எழுந்திரிங்க.."என்று எழுப்பும் போதே பொருட்கள் கீழே உருண்டோடும் சத்தம் கேட்டது.

வாசுதேவனும் பதட்டத்துடன் நிற்கும் மனைவியையும், மகளையும் கண்டவர் அப்போது தான் கட்டில் அசைவதை உணர்ந்தார்.

உடனே சுதாரித்தவர், மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

வெளியே அக்கம் பக்கத்தினரும் வீட்டை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர்..

நில அதிர்வு தற்போது இன்னும் பலமாகியிருந்தது.. உடனே அனைவரும் பயத்துடன் அருகிலிருந்த விளையாட்டு மைதானத்தில் தஞ்சம் அடைந்தனர்..

இரவு முழுவதும் இங்கேயே கழிப்பது என முடிவெடுக்கப்பட்டது..

ஜியாலினியும் அவளது பெற்றோரும் அங்கிருந்த திட்டில் அமர்ந்திருந்தனர்..

"கொஞ்ச நேரத்துல போட்டு உலுக்கிடுச்சே!!"

"என் பொண்டாட்டி, அப்போ தான் புத்தகம் படிச்சிட்டு தூங்க வந்தா.. அப்போ தான் திடீர்னு நாய்-லாம் பயங்கரமா குரைக்கறதை கேட்டு என்னை எழுப்பினா.. நல்ல வேளை"

"நானும் அப்போ தாங்க ஆஃபிஸ் வொர்க் லாம் முடிச்சிட்டு தூங்கலாம்னு போனேன்.. திடீர்னு தரையெல்லாம் பிரேக் டான்ஸ் ஆடுது.. பயந்து போய் பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிட்டு வெளியே வந்திட்டேன்"

"அட நானும் நாய் குரைக்குற சத்தத்திலேயே முழிச்சிட்டேன்-ங்க.. அப்பவே எனக்கு தோணுச்சு.. விபரீதமா ஏதோ நடக்கப் போகுதுன்னு.. ஏன்னா இந்த மாதிரி நிலநடுக்கம் லாம் வந்தா வாயில்லா ஜீவன்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிடும்"

"ஏங்க.. இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல்ல ஒரு 6 இருக்குமா?"

"இருக்கும்.. இருக்கும்.. நல்ல பலமா தான் நிலம் அதிர்ந்துச்சு.. நாளைக்கு காலையில ஹெட்லைன்னே இதுவா தான் இருக்கும்.. அப்போ எல்லா விவரமும் தெரிஞ்சிடும்"

என கலவையான பேச்சுக்குரல்கள் அவர்களை சுற்றி ஒலித்தது.. அவர்களும் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.. இப்படியே பேசிக் கொண்டே பொழுதும் விடிந்தது.

அப்போது காவல்துறை வாகனம் வந்து நின்றது..

உதவி ஆய்வாளரின் குரல் ஒலிப்பெருக்கியின் உதவியுடன் அந்த இடத்தையே நிறைத்தது..

"மக்கள் யாரும் இனி பயப்படத் தேவையில்லை.. இது சாதாரண நில அதிர்வு தான்.. இது மூலமா யாரோட உயிருக்கும் எந்த பாதிப்பும் இல்லைன்னு நினைக்குறேன்.. கொஞ்சம் பலமான அதிர்வுனால பொருட்கள் சேதம் இருக்கலாம்.. பரவாயில்லை.. அந்த பொருட்களை விட உயிர் முக்கியம் இல்லையா?! சோ.. கவலை வேண்டாம்.. எல்லாரும் இப்போ அவங்கவங்க வீட்டுக்கு போகலாம்.."

"சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க.. திரும்ப ஏதும் நிலநடுக்கம் வந்திடுச்சுன்னா என்ன பண்றது"என்று கூட்டத்திலிருந்த ஒரு முதியவர் கேட்டார்.

"இங்க பாருங்க.. சென்னை வானிலை மையம் தெளிவா சொல்லிட்டாங்க.. இனி நிலநடுக்கம் வர வாய்ப்பில்லைன்னு.. அதனால தைரியமா எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போகலாம்.. "

கூட்டம் கலைந்து அவரவர் வீட்டை நோக்கி படையெடுத்தது..

ஜியாலினியும் பெற்றோருடன் வீட்டுக்கு வந்தாள்..

உள்ளே நுழைந்தவர்களின் கண்ணில் பட்டது அலங்கோலமான வீடே..

அழகுக்காக வைக்கப்பட்டிருந்த சில பீங்கான் ஜாடிகள் கீழே விழுந்து உயிரை விட்டிருந்தது.

சில வெண்கல பொருட்கள் தரையில் உருண்டு கொண்டிருந்தது..

இனி இம்மாதிரியான எளிதில் உடையும் அலங்கார பொருட்களை வாங்குவதில்லை என முடிவெடுத்துக் கொண்டே அமிர்தம் மெதுவாக நடந்து கிச்சன் சென்றார்.. அங்கே பாத்திரங்கள் பக்கத்துக்கு ஒன்றாக சிதறி இருந்தது.. நல்ல வேளையாக மளிகை பொருட்களை சில்வர் சம்படத்தில் வைத்து மூடி இருந்ததால் அவை எல்லாம் தப்பித்தது.

ஜியாலினி.. அவளது அறையில் சென்று பார்த்தாள்.. அவளது புத்தகங்கள் இறைந்து கிடந்தது.. லேப்டாப் மற்றும் இதர பொருட்களை பத்திரமான இடத்தில் வைத்திருந்ததால் எந்த பாதிப்பும் இல்லை.

வாசுதேவன் தனது கோப்புகளை அலுவலக அறையில் உள்ள அலமாரியில் வைத்து பூட்டி இருந்தார்.. அதனால் சிறிது ஆசுவாசமாக இருந்தார்..

பெரிய அளவிலான சேதம் எதுவும் இல்லாததே அவர்களுக்கு பெரிய விஷயமாக தோன்றியது.

பின் மூவரும் இணைந்து வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலையில் ஈடுபட்டனர்.. முழுதாக இரண்டு மணி நேரங்கள் கடந்திருந்தது.

வீடு கொஞ்சம் பழைய நிலைக்கு திரும்பி இருந்தது.

அனைவரும் ஹாலில் களைப்புடன் அமர்ந்தனர்.. அமிர்தம் அனைவருக்கும் காஃபி தயாரித்து கொண்டு வந்தார்.

வாசுதேவன் தொலைக்காட்சியை உயிர்பித்து செய்திகளை ஓடவிட்டார்..

அதில் ஒரு அழகான பெண் உதடுகளை சுழித்தவாறே அன்றைய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள்..

செய்தியின் சாராம்சம்:

"சென்னையில் நள்ளிரவு 1.05 மணி வாக்கில், ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகள் அளவிலான, சிறிது பலமான நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கமானது மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கு திசையில் சுமார் 600 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திற்கு கீழ் 20 அடி ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த நிலநடுக்க அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேயர் பகுதிகளில் உள்ள நிலநடுக்க கருவிகளில் பதிவாகியுள்ளது.. மேலும் 6 புள்ளி அளவிலான நிலநடுக்கம் என்பதால் பொருட்சேதம் அதிகமாக ஆகியுள்ளது.. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.. சென்னையில் உள்ள வேளச்சேரி, சாந்தோம், நந்தனம், ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.. மற்றும் ஆந்திராவில் விசாகப்பட்டினத்தை ஒட்டிய சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதன்மூலம் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும்.. இனி பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்றும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.. மேலும் செய்திகளை அறிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் xxx தொலைக்காட்சியுடன்"என்று அந்த செய்தி வாசிப்பாளர் முடித்தார்..

அப்போது வெளியே அழைப்பு மணி ஓசை கேட்க.. ஜியாலினி தான் செல்வதாக கூறி எழுந்து சென்றாள்..

வெளியே ஒரு இளைஞனும், அவனுடன் இன்னும் மூவரும் நின்று கொண்டிருந்தனர்.. அந்த இளைஞன் மாநிறத்தில் ஸ்மார்ட்டாக இருந்தான்.. வழக்கத்திற்கு மாறாக சுத்தமான ஜீன்ஸை அணிந்திருந்தான்.. நேருக்கு நேர் நின்றால் அவள் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் இருந்தான்.. அவன் அணிந்திருந்த கருப்பு நிற கட்டம் போட்ட சட்டை அவனுக்கு பொருத்தமாக இருந்தது.. அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்களிடம் ஜியாலினி, "யார் நீங்க? என்ன வேணும்?"என்று கேட்டாள்.

"நாங்க லயன்ஸ் கிளப் வாலன்டியர்ஸ்.. இங்க இருக்கற சில பகுதிகள்ல சேதம் அதிகம்னு சொன்னாங்க.. அதான் அதெல்லாம் சரிபண்ணி ஒதுங்க வைக்க நாங்க வந்திருக்கோம்.. உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா?"

அவர்களை சந்தேகமாக பார்த்தாள்.. அதை கண்டு கொண்ட அவன் சிரிப்புடன், "நீங்க பயப்பட தேவையில்லை, இந்தாங்க என்னோட ஐ.டி. கார்டு"என்று அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி பார்த்தாள்.. 'ஆர். ஜெகதீஷ் குமார், லயன்ஸ் கிளப் உறுப்பினர்' என்று போடப்பட்டிருந்தது..

அதை அவனிடம் கொடுத்து "சாரி"என்றாள் அசட்டு புன்னகையுடன்.

"தப்பில்லங்க.. இன்னைக்கு நாடு இருக்குற நிலைமைக்கு நாம உஷாரா தான் இருக்கணும்.."என்றவன் சிறிது இடைவெளி விட்டு, "ஏதாவது ஹெல்ப் வேணும்னு சொன்னீங்கன்னா பண்ணுவோம்"என்றான்.

அதற்குள் அவளைத் தேடி அமிர்தம் வந்துவிட்டார்.. அவரிடம் தாங்கள் வந்ததை பற்றி சொல்ல, "இல்லப்பா நாங்களே முடிச்சிட்டோம்.. கண்ணாடி ஜாமான் கூட அதிகமாக யூஸ் பண்றதில்ல.. மர ஜாமான் தான் அதிகம்.. அதனால சேதாரம் அதிகமாக இல்ல.. ஆனாலும் நீங்க கேட்டது ரொம்ப நன்றி தம்பி.. இந்த சின்ன வயசுலயே பொறுப்போட இருக்கீங்க.."என்று அவர்களை பாராட்ட, அவர்களும் நன்றி கூறி விடைபெற்று அடுத்தடுத்த வீடுகளுக்கு சென்றனர்.

ஆனால் சிலர் வீடுகளில் சேதம் அதிகமாக இருந்தது..

ஒரு குடும்பத்தினர் எப்படி இதையெல்லாம் சுத்தம் செய்வது என்று கையை பிசைந்து நின்று கொண்டிருந்தனர்.

அந்த இளைஞர்களின் வரவு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த இளைஞர்களும் கைகளில் கனமான உறைகளை மாட்டிக் கொண்டு சுத்தம் செய்ய கிளம்பினர்.

'அவன்' கார்ப்பரேஷன்- க்கு போன் செய்து குப்பை லாரியை வரச் சொல்லி கொண்டிருந்தான்.. இவள் பார்ப்பதைக் கண்டு அவனும் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்த வேலையை கவனிக்க கிளம்பி விட்டான்.

சிறிது நேரம் கழித்து, விலையுயர்ந்த சான்டிலியர் விளக்குகள், கண்ணாடியிலான அலங்கார பொருட்களை நொருங்கிய நிலையில் கொண்டு வந்து, அதை ஒரு அட்டை பெட்டியில் போட்டு லாரியில் ஏற்றினர்.

அந்த வீட்டில் முடித்ததும் இன்னும் சில வீடுகளிலும் உதவி செய்து விட்டு கிளம்பினர்.

"நல்ல வேளை டி.. நாம அந்த சான்டிலியர் லைட்-லாம் வாங்கல.. உங்க அப்பா வாங்கியே ஆகணும்னு குதியா குதிச்சாரு.. நான் மிரட்டவும் தான் அமைதியானாரு.. அப்படி வாங்கி இருந்தா.. இன்னைக்கு அந்த லைட்டோட நிலைம இதுதான்"- அமிர்தம்.

"என்ன என் பேர் அடிபடுது" என்றபடியே வந்தார் வாசுதேவன்.

"அப்பா அம்மா உங்களை மிரட்டுவாங்களாமே.. அப்படியா?!.. என்கிட்ட சொல்லவே இல்லை நீங்க"

"யாரு இவ சொன்னாளா?! நான் சும்மா ஒரு பார்வை பார்த்தாலே பிளாட் ஆகிடுவா?!..இவளுக்கு நான் பயப்படுவேனா?? ஹாஹா"

"அடடா.. போதுமே.. அதெல்லாம் லவ் பண்ண காலத்துல.. இப்போலாம் உங்க ஜம்பம் என்கிட்ட பலிக்காது"

"ஓ.. அப்படியா" என்றபடி மனைவியை பார்த்து ஒற்றை கண்ணை அடிக்க.. அவரோ.. "பொண்ணு முன்னாடி என்ன பண்றீங்க" என்று அதட்டினாலும் அவரது கன்னம் ரூஜ் போடாமலே சிவந்தது.. அதை மறைக்க வேகமாக உள்ளே சென்று விட்டார்.

"பார்த்தியாடா உங்க அம்மா வெட்கப்படுறதை!?" என்று மகளிடம் கண்ணை காட்ட, அவளும், "எங்க அப்பா யாரு? காதல் மன்னனாச்சே!" என்க.. இருவரும் ஹை-பை அடித்துக் கொண்டே உள்ளே சென்றனர்.

ஒரு வாரம் கழிந்தது..

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்னும் 4 நாட்களில் கல்லூரி திறக்க இருக்கிறது.. அந்த உற்சாகத்தில் சந்தோஷமாக ஷாப்பிங், தொலைக்காட்சி, நண்பர்களுடன் ஊர் சுற்றல் என ஜியாலினியின் நாட்கள் இனிமையாக சென்று கொண்டிருந்தது.

ஆனால் அந்த கல்லூரி தான் அவள் வாழ்க்கையே மாற்றப் போகிறது.. அதிலும் ஒருவனால் அவள் வாழ்வின் திசையே மாறப்போகிறது.. என்று அறியாமல் சன் மியூசிக்கில் "என்னமோ ஏதோ"பாடலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜியாலினி..

??!!

தொடரும்..

உங்கள் கருத்துகளை இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் 👇

 

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
IMG-20201203-WA0002.jpg

அத்தியாயம் 2:

திங்கள் அன்று செல்ல போகும் கல்லூரிக்கு சனி இரவே தயாராகி கொண்டிருந்தாள் ஜியாலினி... தன்னுடைய உடைகள் மற்றும் பையை எடுத்து வைத்து கொண்டிருந்தவள்.. எதேச்சையாக பார்க்கும் போது அங்கு அவளின் பெற்றோர் நின்று கொண்டிருந்தனர்.

"அப்பா, அம்மா.. .. என்ன அங்கேயே நின்னுட்டீங்க உள்ள வாங்க!?"

இருவரும் உள்ளே வந்தனர்.. அமிர்தம் கையில் அவளுக்கான பாதாம் பாலுடன் வந்திருந்தார்.. இருவரும் அவளின் இருபக்கமும் அமர, அவள் குடித்து முடிக்கும் வரை அமைதி காத்தனர்..

குடித்து முடித்ததும் கப்பை வாங்கி வைத்த அமிர்தம்.. மெதுவாக பேச்சை துவங்கினார்..

"என்னடா காலேஜ்க்கு தேவையானது- லாம் எடுத்து வச்சிட்டு இருக்கியா?"

"ம்.. ஆமா மா.. நாளன்னைக்கு காலேஜ் போகணும் -ல"

"ஆமால்ல சரி டா" என்ற படியே அவள் தலையை கோதி கொடுத்தார்.

2 நிமிடம் கழித்து, "என் கிட்ட என்ன சொல்லணும் பா" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் ஜியாலினி..

"ஸ்மார்ட் கேர்ள்.. ஆமா நீ எப்போடா இவ்ளோ ஸ்மார்ட் ஆன?"

"அப்பா மொக்க போடாம சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க பா"

"அது வந்து ஜியா… என்னடா அப்பா கடைசி நேரத்துல இப்படி சொல்றாருன்னு நினைக்க கூடாது.. சரியா?.. நீ கண்டிப்பா விஸ்காம் தான் படிக்க போறியா டா??.. என் ஃப்ரண்ட் இன்னைக்கு கூட சொன்னான்.. ஜியா-ஓட மார்க்-க்கு நல்ல பெரிய காலேஜ்-லயே இன்ஜினியரிங் சீட் கிடைக்கும்.. இன்னும் கூட டைம் இருக்கு.. அதுவும் இல்லாம விஸ்காம் லாம் பசங்க தான் அதிகம் படிப்பாங்க.. பொண்ணுங்களுக்கு ஏத்தது இல்லனு சொன்னான்.." என்றவர் சிறிது தயக்கத்துடன், "நான் வேணா இன்ஜினியரிங் அப்ளிகேஷன் வாங்கிட்டு வரட்டுமா டா?" என்றார்.

அவர்கள் இருவருமாக தன்னைத் தேடி வந்ததும், கிட்டத்தட்ட விஷயம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தாள்.. அதனால் எந்தவித சலனமும் இல்லாமல் இருவரையும் பார்த்தாள்..

"அப்பா.. ஒரு அஞ்சு நிமிஷம்.. நான் பேசிக்குறேன்.. நடுவுல நீங்க இரண்டு பேரும் எதுவும் பேசக் கூடாது.. ஓகே"

இருவரும் அவளுக்கு சரியென்று தலையசைத்து அனுமதியை வழங்க, பேச ஆரம்பித்தாள்.

"சின்ன வயசுல இருந்தே என் விருப்பத்துக்கு நீங்க ரெண்டு பேரும் மதிப்பு கொடுத்துருக்கீங்க.. எனக்கான சுதந்திரமும் கொடுத்துருக்கீங்க.. அண்ட் உங்க விருப்பத்தையும் நான் மதிக்குறேன்.. அதனால தான் +2 ல காமெர்ஸ் குரூப் எடுத்தேன்.. ஏன்னா சிவில் சர்வீஸ் எக்ஸாம்க்கு நிறைய போர்ஷன் இந்த குரூப்ல இருக்கு.. கண்டிப்பா நான் கலெக்டர் ஆகணும்-ன்ற உங்க ஆசையை நிறைவேத்துவேன்.. ஆனால் எனக்கும் ஒரு கனவு இருக்குல பா.. உங்களை பொறுத்த வரைக்கும் இது ஒரு டிகிரி.. ஆனா என்னை பொறுத்த வரைக்கும், இது வேற ஒரு ஃபீலிங்.. நிறைய பேருக்கு சினிமான்னா ஜஸ்ட் என்டர்டெயின்மெண்ட் இல்லைனா மக்களை கெடுக்குற விஷயம்.. ஆனா அது அப்படி இல்லை.. நிறைய பேரோட கனவு தொழிற்சாலை அது.. ஒரு விஷயத்தை நல்ல விதமாவும் சொல்லலாம், கெட்ட விதமாவும் சொல்லலாம்.. நாம சொல்ற விதத்துல தான் இருக்கு.. பாசமலர், இரத்தக்கண்ணீர் இந்த படங்கள்லாம் மக்கள் மனசுல இன்னும் இருக்கு.. இனியும் இருக்கும்.. அதே மாதிரி இந்தியன், அந்நியன் மாதிரியான படங்கள் எவ்ளோ தாக்கத்தை ஏற்படுத்துச்சு?!.. எல்லாரும் படமா பார்த்தாங்க.. நான் பாடமா பார்த்தேன்.. அப்பா உங்களுக்கு நியாபகம் இருக்கா?.. சின்ன வயசுல நான் கட்டுரை நல்லா எழுதும் போதுலாம் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவீங்க.. பரிசு வாங்கும் போது என்னை விட நீங்க அதிகமா சந்தோஷப்படுவீங்க.. ஆரம்பத்துல நானும் பெரிசா எடுத்துக்கலை.. ஆனா போக போக என்னோட எழுத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது, அதுக்கு ஏன் உயிர் கொடுக்க கூடாதுன்னு தோணுச்சு.. அப்புறம் அதுவே கனவா மாறுச்சு.. ப்ளீஸ் பா.. ப்ளீஸ் மா.. இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்காக விட்டுக் கொடுங்க.. ஒரே ஒரு படம்.. எ ஃபிலிம் பை ஜியாலினி, அப்படின்னு வரணும்.. அவ்ளோ தான்.. அதுக்கப்புறம் கண்டிப்பா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு கோச்சிங் ஸ்டார்ட் பண்ணிடுறேன்.. அதுக்கப்புறம் என்னோட முழு கவனமும் கோச்சிங்-ல தான் இருக்கும்.. நான் உங்களுக்கு பிராமிஸ் பண்றேன்.. என்னோட கனவை ஜெயிக்க ரெண்டு பேரும் எனக்கு துணையா இருப்பீங்களா?"என்று ஆசையையும், எதிர்பார்ப்பையும் கண்களில் டன் டன்னாக நிரப்பி அவர்களை பார்த்தாள்.

"உன்னோட ஆசை புரியுது டா.. ஆனா நம்ம குடும்பத்துக்கு இந்த சினிமா லாம் செட்டாகுமா?? பொதுவா இந்த சினிமா, அரசியல் இதெல்லாம் சாக்கடைன்னு சொல்வாங்க.. நமக்கு எதுக்குடா அதெல்லாம்?"- அமிர்தம்.

"அம்மா எல்லா வேலைலயும் சாதக பாதகங்கள் இருக்க தான் செய்யுது.. எதையும் நாம பாக்குற கண்ணோட்டத்துல தான் இருக்கு.. இதை நீங்க தான் எனக்கு சொல்லிக் கொடுத்தீங்க.. எல்லா துறைலயும் பிரச்சனை இருக்க தான் செய்யுது.. சினிமா துறையும் அப்படி தான்.. ஆஃபீஸ் வொர்க் மாதிரி தான்.. என்ன டைரக்டர் னா கொஞ்சம் வேலை அதிகமா இருக்கும்.. பட் மனசுக்கு பிடிச்ச வேலையா இருந்தா அந்த கஷ்டம் கூட தெரியாது.. இந்த காலத்துல பொண்ணுங்க விண்வெளிக்கே போக ரெடியா இருக்காங்க.. நான் ஒரே ஒரு படம் தானே எடுக்கணும்னு சொல்றேன்.. கண்டிப்பா என்னால முடியும்.. அதேசமயம் உங்களோட மரியாதையும் எனக்கு முக்கியம்.. அதை கண்டிப்பா காப்பாத்துவேன்.. என்னை நம்புங்க”

வாசுதேவன் மகளை புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார்..

அவருக்கு தெரிந்த ஜியாலினி பொதுவாக அமைதி, கூச்ச சுபாவம் அதே சமயம் அழுத்தம், அதிகமாக பேச மாட்டாள், இன்ட்ரோவேர்ட், பெற்றோர் & நண்பர்களை தவிர அவளிடமிருந்து வார்த்தையை வாங்க பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டும்..

ஆனால் இப்போது அவளின் விருப்பத்தையும், அதில் அவள் உறுதியையும் கண்ட பிறகு மகளின் திறமை மீதான நம்பிக்கை அதிகரித்தது.. அதில் பெருமிதம் கொண்டவராக அவளிடம், "சரிடா.. எங்களுக்காக இவ்ளோ யோசிக்குற உனக்காக நாங்களும் யோசிக்கணும்ல.. அடுத்து வர்ற 3 வருஷம், அப்புறம் நீ ஒரு படம் எடுத்து முடிக்குற வரைக்கும் உன்னோட விருப்பம் தான்.."என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே "என்னங்க.. நீங்களும் அவ கூட சேர்ந்துகிட்டு!!" என்று அமிர்தம் தனது ஆதங்கத்தை வெளியிட, "இல்ல அமிர்தம் இப்போ அவ நமக்காக நாம விருப்பப்பட்டதை படிச்சு, கலெக்டராகவே ஆகுறான்னு வச்சுக்குவோம்.. பத்து வருஷம் கழிச்சு அவ வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது.. அதுல நம்ம தான் இருப்போம்.. அவளோட விருப்பம், ஆசைன்றது ரொம்ப கம்மியா இருக்கும்.. இதே இப்போ அவ விருப்பப்பட்டது செஞ்சா, பின்னாடி அவ கலெக்டர் ஆனப்புறம் திரும்பிப் பார்க்கும் போது.. அட்லீஸ்ட் அவ மனசுக்கு பிடிச்சதை செஞ்சிருக்கோம்-ன்ற ஒரு திருப்தி இருக்கும்.. அந்த திருப்தி நம்ம பொண்ணுக்கு கிடைக்கணும்"என்று கூறியவர், ஜியாலினியிடம் திரும்பியவர் "ஜியா உனக்கு நான் சொல்லத் தேவையில்லை.. உன்னோட விருப்பப்படி நீ படி.. டைரக்டர் ஆகு.. அதேசமயம் உன்னை நீதான் பத்திரமா பாத்துக்கணும்.. அது ரொம்ப முக்கியம்.. சரியா!!.."என்றவரை தாவி அணைத்துக் கொண்டாள்.

"தேங்க்ஸ் பா.. தேங்க்யூ வெரி மச்.. என் மேல நம்பிக்கை வச்சு என் விருப்பத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு.. அச்சோ நான் எவ்ளோ ஹேப்பியா இருக்கேன் தெரியுமா?? "என்று அவர் கன்னத்தில் முத்தமிட்ட போது.. "பார்றா.. அப்பாவும் பொண்ணும் சேர்ந்துகிட்டு, என்னை டீல்ல விட்டுட்டீங்க.."என்று முகத்தை தூக்கினார்..

"அம்மா.. அம்மா.. நீ இல்லைனா நாங்க இரண்டு பேரும் இல்லை.. எங்களோட எனர்ஜி பூஸ்டே நீ தான்"என்று அவர் கன்னத்திலும் முத்தமிட்டு இருவரையும் அணைத்துக் கொண்டாள்..

-----------

அடுத்த நாள் காலை..

ஜியாலினி வீட்டுக்கு பின்புறமிருந்த கார்டன் ஏரியாவில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் ஜாகிங் முடித்துவிட்டு வாசுதேவனும், அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தார்.

"என்ன ஜியா பேப்பர்ல ஏதாவது இன்ட்ரஸ்ட்டிங் நியூஸ் இருக்கா?"

"இல்ல பா.. எப்பவும் போல இந்த கட்சியில அந்த கட்சிக்கு மாறுனாங்க அந்த கட்சியில இருந்து இந்த கட்சிக்கு மாறுனாங்க-னு சுடச்சுட அரசியல் செய்தி.. ஈஸியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்-அ த்ரில்லிங்கா ஜெயிச்ச இந்தியா பத்தின செய்தி.. அப்புறம் கொஞ்சம் வெளிநாட்டு செய்தி.. அதை விட கொஞ்சமா உள்ளூர் செய்தி.. என்னென்ன படம் எப்போ ரிலீஸ் ஆகுதுன்னு மட்டும் 4 பக்கத்துக்கு இருக்கு.. அதை தவிர வேற ஒன்னும் இல்லை.. தலையங்கம் பகுதியில கூட முக்கியமான டாப்பிக் இல்ல"

"ஹ்ம் நீ சொல்றதும் சரி தான் டா.. ஆமா உன்னோட ஸ்கூட்டி நல்ல கண்டிஷன்ல தானே இருக்கு.. பெட்ரோல் இல்லைனா போய் போட்டுட்டு, ஏர் செக் பண்ணிட்டு வந்திடு.. அப்புறம் நாளைக்கு கிளம்பும் போது மக்கர் பண்ணப் போகுது"

"அப்பா நானே சொல்லணும்னு நினைச்சேன்.. நான் பஸ்ல காலேஜ்-க்கு போறேன் பா"என்றாள் கண்களை சுருக்கி கெஞ்சலாக.

"ஏன்டா உன்கிட்ட தான் வண்டி இருக்கே.. அப்புறம் ஏன் பஸ்ல போகணும்-ன்ற"

"அப்பா பஸ்-ல போனா அது ஒரு தனி ஃபீல்-ல.. சின்ன வயசுல பஸ்ல போனது.. அதுக்கப்புறம் எங்க போனாலும் கார்ல தான் போறோம்.. எனக்கு ஸ்கூட்டி வாங்கின அப்புறம் நான் அதுல தான் எல்லா இடத்துக்கும் போறேன்.. எனக்கு பஸ்ல காலேஜ்க்கு போகணும்-னு ரொம்ப ஆசையா இருக்கு"

"சரிடா.. அப்போ காலேஜ் பஸ்க்கு ஃபீஸ் பே பண்ணிடலாம்"

"அப்பா.. அது வந்து நான் சொன்னது காலேஜ் பஸ் இல்ல.. பப்ளிக் டிரான்ஸ்போர்ட்"

"வாட்.. ஜியா என்ன விளையாடுறியா?.. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்"

"என்ன விஷயம்? எதுக்கு ஒத்துக்க மாட்டீங்க?"என்று கேட்டவாறே மூவருக்குமான சத்துமாவு கஞ்சியுடன் வந்தார் அமிர்தம்.

"நீயே கேளு அமிர்தம்.. ஜியா கவர்ன்மென்ட் பஸ்ல காலேஜ் க்கு போறாளாம்"

"என்னடி.. அப்பா சொல்றது உண்மையா? அப்படி ஒரு எண்ணம் இருந்தா இப்பவே தூக்கி தூர போட்ரு"என்றார் கோபமாக.

"அம்மா.. ப்ளீஸ் மா"

"ஜியா.. வரவர எல்லாத்துக்கும் அடம் பிடிச்சிட்டு இருக்க நீ.. அடி வாங்க போற பாரு"

"அப்போ நான் எப்படி தான் இந்த உலகத்தை தெரிஞ்சுக்கறது"என்றாள் சிணுங்களாக.

"அதெல்லாம் நீ ஸ்கூட்டில போயும் உலகத்தை தெரிஞ்சுக்கலாம்"

"ப்பா.. ப்ளீஸ் பா.. நீங்களாவது சொல்லுங்க.. நான் மட்டுமா பஸ்ல போறேன்.. என்கூட எவ்வளவோ பொண்ணுங்க வர போறாங்க.. அதுவும் இல்லாம இங்கிருந்து 20 நிமிஷம் தான் ஆகும்.. ஸ்கூட்டில போனா ட்ராபிக் அப்படி இப்படின்னு இன்னும் நேரமாகி ஊர்ல இருக்குற மொத்த வெயிலும் என் தலையில தான் விழும்.. காலையிலேயே டயர்ட் ஆகிட்டா அப்புறம் எப்படி க்ளாஸ் கவனிக்க முடியும்.. இதே பஸ்னா ஜாலியா பாட்டு கேட்டுக்கிட்டு, அப்படியே பிரெண்ட்ஸ் கூட ஜாலியா பேசிக்கிட்டே போய்டுவேன்.. அதுவும் இல்லாம பஸ் ஸ்டாண்ட் இங்கிருந்து 2 நிமிஷம் நடந்தா வந்திடும்.. ஒத்துக்கோங்க ப்ளீஸ்"

"ஆமா முன்னாடிலாம் இப்படி பேச மாட்டியே.. இந்த மாதிரிலாம் பேச எங்கிருந்து கத்துக்கிட்ட?"- சிரிப்புடன் வாசுதேவன்.

"ஹாஹா.. அதெல்லாம் அப்படியே தானா வருது பா"

"பேசாம நீ விஸ்காம் எடுத்ததுக்கு பதிலா 'லா'(Law) எடுத்துருக்கலாம்.. பேசியே கேஸை ஜெயிச்சிடுவ"

"ஐ.. அப்போ நான் பஸ்ல காலேஜ் போக ஒத்துக்கிட்டீங்களா!!.. அப்பான்னா அப்பா தான்"

"ஆமா.. நீ தாராளமா பஸ்ல போலாம்.. ஆனா பத்திரமா போய்ட்டு வரணும், அப்புறம் பஸ் ஏறின உடனே எங்க ரெண்டு பேருல ஒருத்தருக்கு போன் பண்ணி சொல்லிடனும்.. ஓகே"

"அதெல்லாம் என்னை நான் பத்திரமா பார்த்துக்குவேன் பா.. நீங்க கவலையே படாதீங்க"

"வர வர இவளுக்கு செல்லம் அதிகமா கொடுக்க ஆரம்பிச்சீட்டீங்க.. என்ன சொன்னாலும் சரி சொல்றீங்க.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்"என்று பொறிந்தார் அமிர்தம்

"அமிர்தா.. சின்ன பொண்ணு ஆசையா கேக்குறா.. அதுவும் இல்லாம பக்கத்துல தானே.. அதெல்லாம் அவளை பத்திரமா பார்த்துக்குவா.. பொண்ணுங்களை கட்டியே வைக்கக்கூடாது.. அப்புறம் அவங்களுக்கு தன்னம்பிக்கையே இல்லாம போய்டும்.. நம்ம பொண்ணு இந்த சமுதாயத்தை எப்பவும் தைரியமா ஃபேஸ் பண்ணணும்"

"எப்படியோ போங்க இரண்டு பேரும்"என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

"அப்பா.. பாருங்கப்பா அம்மாவை?!.. எப்படி சொல்லிட்டு போறாங்கன்னு"

"எல்லா அம்மாக்களுக்கும் இருக்குற பயம் தான் டா.. அதெல்லாம் புரிஞ்சுக்குவா.. நீ கவலைப்படாம சந்தோஷமா இரு.. சரியா"

"என் செல்ல அப்பா"என்று கொஞ்சிக் கொண்டே வீட்டினுள் சென்றாள்..

அமிர்தம் கோபமாக இருப்பதை போல் நடித்தும், அப்பாவும் மகளும் அதை கண்டும் காணாமல் சிரித்தும் அந்த நாள் சென்றது.

---------------

ஆகஸ்ட் 8, 2011..

காலை 7 மணி..

ப்ளூ ஜீன், பிளேக் கலர் ஃபுல் ஸ்லீவ் டாப், போனி டெய்ல், காதில் வளையம், கையில் பேக் உடன் கீழே இறங்கி வந்தாள் ஜியாலினி.

"அம்மா டிபன் ரெடியா.. சீக்கிரம்.. பஸ் வந்திடும்"

"எல்லாம் ரெடியா இருக்கு.. டைனிங் டேபிள்-ல உக்காரு கொண்டு வரேன்"

பாத்திரங்களை ஒவ்வொன்றாக கொண்டு வந்து வைத்தவர் அவளை பார்த்து, "இன்னைக்கும் இந்த சாக்கு துணியை தான் போடணுமா.. அழகா சுடிதார் இல்ல புடவை கட்டிட்டு போக கூடாது"

"போ மா.. எனக்கு இது தான் கன்வினியண்ட்-ஆ இருக்கு"

"உன் சேட்டை வரவர அதிகமாகிட்டே போகுது.. ஒரு நாள் கவனிச்சுக்குறேன் இரு"

"அதை அப்போ பாத்துக்கலாம்.. நீ இன்னொரு இட்லிய வை"என்க அவரும் சிரித்துக் கொண்டே பரிமாறினார்.

அப்போது தான் அலுவலகம் தொடர்பான ஒரு போன் செய்துவிட்டு அங்கே வந்தார் வாசுதேவன்.

"அப்பா நல்ல வேளை வந்துட்டீங்க.. இரண்டு பேரும் பூஜை ரூமுக்கு வாங்க.."என்று அவர்களை கூட்டிச் சென்று கடவுளை வணங்கிவிட்டு, பட்டென இருவர் காலிலும் விழுந்தாள் ஜியாலினி.

"ஜியா என்னது இது.. எழுந்திரு முதல்ல"என்று அவளை பதறி எழுப்பினார் அமிர்தம்.

"என்ன ஜியா இது.. கால்ல-லாம் விழுந்துகிட்டு.. இதுவே கடைசியா இருக்கணும்.. சரியா"

"இன்னிக்கு முதல் முதல்ல காலேஜ் போறேன்.. அதுக்கு ஆசிர்வாதம் வாங்கினேன்.. இதிலென்ன பா தப்பு"

"அப்படி இல்லடா.. என் பொண்ணு யார் கால்லயும் விழக் கூடாது.. அது பெத்தவங்களாவே இருந்தாலும்.. எங்க ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கு டா.. நீ நினைச்சதெல்லாம் நடக்கும்.. இதே சந்தோஷத்தோட நீ எப்பவும் இருக்கணும்.. எங்களுக்கு அதுவே போதும்"என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினார் வாசுதேவன்.

அமிர்தமும், "அப்பா எல்லாம் சொல்லிட்டாரு.. நானும் அதையே சொல்லி உன்னை போரடிக்க விரும்பல.. காலேஜ் லைஃப் ஒவ்வொருத்தருக்கும் பல அழகான நினைவுகளை கொடுக்கும்.. நீயும் அந்த அழகான நினைவுகளை சேகரிச்சிட்டு வா.. ஆல் தி பெஸ்ட்"என்று அணைத்து, முத்தமிட்டு அவளை வழியனுப்பினார்.

அவள் பேருந்து நிலையத்திற்கு வந்த ஐந்தாவது நிமிடம் பஸ் வந்தது.. மிதமான கூட்டம்.. பஸ்ஸில் ஏறிக் கொண்டாள்.

பஸ்ஸில் எப்.எம்-ல், நிகழ்ச்சி தொகுப்பாளரின் கலகல பேச்சையும், இனிமையான பாடல்களையும் கேட்டவாறே அவளது பயணமும் இனிமையாக அமைந்தது.

“சென்னையின் இதயம்” என்று அழைக்கப்படும் நுங்கம்பாக்கத்தில் அமைந்த கல்லூரி வாசலில் இறங்கினாள்.

அப்படியே நின்று கல்லூரி பெயர் பலகையை பார்த்தாள்..

'லொயோலோ கல்லூரி' என தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது..

இன்றைக்கு சினிமா உலகிலும், தொலைக்காட்சி உலகிலும் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பல முன்னணி நாயகர்களையும், இயக்குனர்களையும் உருவாக்கிய கல்லூரி.

நினைக்கும் போதே மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.. அதே சமயம் முதல் நாள் என்பதால் கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது.

அதே உணர்வுடன் வாட்ச் மேனிடம் விஸ்காம் பிரிவு எங்கே எனக் கேட்டுவிட்டு, அந்த பகுதியை நோக்கி சென்றாள்.

அப்போது அவளுக்கு எதிரே சிறிது தூரத்தில் வந்து கொண்டிருந்தவனை கண்டு, டிராபிக்கில் சிக்னல் போட்ட வண்டியை போல் நின்று விட்டாள் ஜியாலினி.

தொடரும்..

உங்களது கருத்துகளை இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.. 👇

 

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24.jpeg

அத்தியாயம்-3:

'அவனை' பார்த்தபடியே நின்றிருந்தவள், "அட இவன் இந்த காலேஜ்லயா படிக்குறான்?", என்று யோசித்தபடி, அவனையே பார்த்திருந்தவளை, அவன் கவனிக்கவில்லை போலும்.. போனில் பேசியபடியே அவசர அவசரமாக வெளி கேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.. அவளும் ஒரு தோள் குலுக்கலுடன்.. முதலாம் ஆண்டு விஷூவல் கம்யூனிகேஷன் வகுப்பை நோக்கி சென்றாள்.

அங்கே ஏற்கனவே சில மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.. இவள் உள்ளே நுழைந்ததும் அனைவரும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

அவளும் அமைதியாக, பெண்கள் வரிசைக்கு சென்று மூன்றாவது இருக்கையில் உட்கார்ந்தாள்.

சிறிது நேரம் வகுப்பறையை சுற்றிப் பார்த்தவள் அருகில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள்..

"ஹாய்!! என் பேர் ஸ்வேதா"

"என் பேரு ஜியாலினி" என்று பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டார்கள்.

"உங்க பேரு ரொம்ப அழகா இருக்கு"- ஸ்வேதா.

"உங்க பேரும் தான் அண்ட் நீங்களும் க்யூட்டா இருக்கீங்க!!.."

"ஹாஹா.. எவ்ளோ பெரிய பொய்!"

"ஹே.. நிஜமா தான்"

"ஓகே.. ஓகே.. நம்புறேன்.. எங்க இருந்து வரீங்க?"

"வேளச்சேரி.. நீங்க"

"நான் பெசன்ட் நகர்ல வர்றேன்"

என சிறிது நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர்கள் இடையே, "வாங்க, போங்க" கட்டாகி, "வா போ" என்றளவில் முன்னேறி, சில நிமிடங்களிலேயே நட்பு துளிர்விட்டது.

இதற்கிடையில் மாணவ, மாணவிகளும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

சிறிது நேரத்தில் பெல் அடிக்க, அப்போது 'அவனும்' உள்ளே நுழைந்தான்.

அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்து, "ஹே.. இவன் சீனியர்னு நினைச்சா.. கடைசியில நம்ம கிளாஸா?" என்று நினைத்தவள்.. அவன் அவளை பார்க்கவும் டக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அப்போது உள்ளே ஆசிரியர் தோரணையில் ஒருவர் நுழைய எல்லாரும் எழுந்து நின்றனர்..

"சிட்.. சிட்.. எல்லாரும் உட்காருங்க.. குட் மார்னிங் ஆல்.. என் பேரு டார்வின்.. எம்.எஸ்.ஸி. விஸ்காம் வித் பி.எட் முடிச்சிருக்கேன்.. உங்களுக்கு 'டிராயிங்" கிளாஸ் எடுக்கப் போறேன்.. விஸ்காம்-ல டிராயிங் ரொம்ப இம்பார்ட்டன்ட்… நீங்க ஃபோட்டாகிராஃபி, டைரக்ஷன் இப்படி எந்த டிபார்ட்மென்ட் சைட் போனாலும், டிராயிங் ஒரு பேசிக்கான குவாலிஃபிக்கேஷன்.. அண்ட் அடுத்த 3 வருஷத்துக்கு உங்க கிளாஸ் அட்வைசர் நான் தான்.. நான் ரொம்ப ஸ்டிரிக்ட் லாம் கிடையாது.. அதனால எல்லாரும் ஃப்ரீயா பேசலாம்.. என்ன டவுட்-னாலும் கேட்கலாம்.. சப்ஜெக்ட் ரிலேட்டடா" என்று சிரித்தவர்.. "அதேசமயம் எல்லாரும் அவங்கவங்க வேலையை கரெக்டா செஞ்சிடணும்.. அப்புறம் எனக்கு டிஸிப்ளின் ரொம்ப முக்கியம்.. அதனால எவ்ளோ ஜாலியா இருந்தாலும் உங்களோட லிமிட்ஸோட இருங்க.. ஓகே.. இப்போ ஒவ்வொருத்தரா வந்து உங்களை அறிமுகப்படுத்திக்கோங்க.. முக்கியமா இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ், இது மாதிரி நிறைய படிப்புகள் இருக்கும் போது, ஏன் விஸ்காம் ச்சூஸ் பண்ணீங்கன்னு சொல்லுங்க.. ஓகே" என பேசிவிட்டு காலியாக இருந்த கடைசி பெஞ்சில் சென்று அமர்ந்தார்..

ஒவ்வொருவராக சென்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர்..

முதலில் பெண்கள் வரிசையிலருந்து ஆரம்பமாக, ஸ்வேதாவின் முறை வந்தது..

"ஹாய் எவ்ரிவன்.. ஐம் ஸ்வேதா.. நான் பெசன்ட் நகர்ல இருந்து வரேன்.. நான் வித்யா மந்திர் ஸ்கூல்ல படிச்சேன்.. படிப்பை விட எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்-ல ரொம்ப இன்ட்ரெஸ்ட்.. நான் ட்ராயிங் & பெயிண்டிங் நல்லா பண்ணுவேன்.. ஃபோட்டாகிராஃபி-யும் பிடிக்கும்.. பி.சி. ஸ்ரீராம் சார் ரொம்ப பிடிக்கும்.. ஒரு ஒளிப்பதிவாளருக்கு தியேட்டர்ல விசிலடிச்சு பார்த்து பிரமிச்சு போய்ருக்கேன்.. எனக்கும் அதுபோல சினிமாட்டோகிராஃபர் ஆகணும்னு ரொம்ப ஆசை.. அதனால தான் விஸ்காம் எடுத்தேன்.. தேங்க்யூ".

அடுத்து ஜியாலினி பேச மேடையேறினாள்..

"ஹாய் ப்ரெண்ட்ஸ்.. என் பேர் ஜியாலினி.. நான் வேளச்சேரில இருந்து வரேன்.. பத்மா சேஷாத்ரி ஸ்கூல்ல படிச்சேன்.. ட்ராவலிங் என்னோட ஹாபி.. அப்புறம் நிறைய படம் பார்ப்பேன்.. ஒவ்வொரு படம் பார்த்த அப்பறமும் என் பேரண்ட்ஸ்கிட்ட அதைபத்தி விரிவா டிஸ்கஸ் பண்ணுவேன்.. எனக்கு டைரக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை.. நம்ம இந்திய திரையுலகில பெண் இயக்குநர்கள் ரொம்ப கம்மி.. அப்படி பெண் இயக்குநர் எடுக்கும் படங்களுக்கு நல்ல பேர் கிடைக்குது, ஹிட் ஆகுது.. ஆனா பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்ல வர மாட்டேங்குது.. அது மாறணும்.. அதுக்கான முயற்சில நானும் ஒரு பார்ட்டா இருக்கணும்னு நினைக்கிறேன்.. ஒரு படம் எடுத்தாலும், இண்டஸ்ட்ரி-ல அந்த படம் காலத்துக்கும் கொண்டாடுற படமா இருக்கணும்.. தட்ஸ் மை விஷ்.. தேங்க்யூ".

அடுத்து மாணவர்கள் வந்து ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

"ஹாய்.. ஹலோ.. ஐம் ராஜேஷ் ஃப்ரம் கிண்டி.. டான் பாஸ்கோ ஸ்கூல்ல படிச்சேன்.. எனக்கு கார்ட்டூன் ரொம்ப பிடிக்கும்" என்று சொன்ன போது வகுப்பு மொத்தமும் சிரிப்பால் நிறைந்தது.. அதைக் கண்டவன் சிறு சிரிப்புடன், "புரியுது எதுக்கு சிரிக்கிறீங்கன்னு.. கார்ட்டூன் & அதோட சேர்ந்த அனிமேஷன்-ல ரொம்ப இன்ட்ரஸ்ட்.. டோரா, பீம், சின்சான் மாதிரி நானும் ஒரு கார்ட்டூன் கேரக்டர் உருவாக்கி.. டிஸ்னிக்கே சவால் விடணும்.. அதான் என் ஆசை.. தேங்க்யூ"

இறுதியாக 'அவனின்' முறையும் வந்தது.. ஜியாலினி நிமிர்ந்து அமர்ந்து, ஆர்வமாக அவன் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.

"ஹாய் ப்ரண்ட்ஸ்.. ஐம் ஜெகதீஷ் குமார் ஃப்ரம் மடிப்பாக்கம்.. டி.ஏ.வி. பாய்ஸ் சீனியர் செகண்டரி ஸ்கூல்ல படிச்சேன்.. 6-வதுல இருந்து +2 வரைக்கும் அங்க தான்.. ஸ்கூல்ல என்.சி.சி. ல இருந்தேன்.. சோஷியல் சர்வீஸ்-ல நானும் என்னோட பிரண்ட்ஸ்-ம் சேர்ந்து 'உதவும் கரங்கள்'-னு ஒரு சின்ன குழு ஆரம்பிச்சு எங்களால முடிஞ்ச உதவி செய்வோம்.. என்னோட ஹாபி போட்டோகிராஃபி.. அண்ட் எனக்கும் டைரக்டர் ஆகணும்கிறது தான் ஆசை.. ஒரு சோஷியல் மெசேஜை, கமர்ஷியலா மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்.. லைக்.. சங்கர் சாரோட சிவாஜி, அந்நியன் படங்கள் மாதிரி.. மீடியா மேல இருக்க இன்ட்ரஸ்ட்-னால தான் விஸ்காம் எடுத்தேன்.. தட்ஸ் ஆல்..".

அனைவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டவுடன் டார்வின் பேச ஆரம்பித்தார்.

"ஓகே ஸ்டூண்ட்ஸ்.. எல்லாரும் அவங்கவங்க விருப்பத்தை அழகா சொன்னீங்க.. சொல்லப்போனா எல்லாரும் ரொம்ப இன்ட்ரஸ்ட்-ஓட தான் விஸ்காம் எடுத்துருக்கீங்க.. இதே இன்ட்ரஸ்டோட கடைசி வரைக்கும் இருந்தா கண்டிப்பா நீங்க விருப்பப்பட்டதை சீக்கிரம் அடையலாம்.. ஃபர்ஸ்ட் இயர் ஜாலியா தான் போகும்.. சோ நோ வொர்ரீஸ்.. அண்ட் விஸ்காம் முடிச்சிட்டா உடனே பெரிய டைரக்டர், இல்ல வேற துறைகள்ல உடனே பெரிய ஆள் ஆகிடலாம்னு கனவு காணாதீங்க.. நாங்க உங்களுக்கு இந்த ஃபீல்டுல எல்லா அடிப்படை விஷயங்களையும் சொல்லிக் கொடுத்துடுவோம்.. நீங்க இரண்டாவது வருஷம் முடிக்கும் போது, நீங்க என்னவா ஆகப்போறீங்க-ன்றதை தெளிவா முடிவு பண்ணி, மூணாவது வருஷத்துல அந்த ஃபீல்டுல நல்லா பண்ணா, உங்களோட கனவு சீக்கிரமா நிறைவேறும்.. இந்த ஃபீல்டுல வெற்றிங்கறது.. முழுக்க முழுக்க உங்களோட விருப்பம் அண்ட் உங்க திறமையை பொறுத்தது.. அடுத்து உங்க எல்லோரையும் இந்த விஸ்காம் டிபார்ட்மென்ட் ஃபுல்லா சுத்திக் காட்டுவாங்க.. எடிட்டிங் ரூம், போட்டோஷூட் ரூம் இப்படி எல்லாமே காட்டுவாங்க.. அதிலேயே உங்களுக்கு தெரிஞ்சிடும், அடுத்த 3 வருஷம் நீங்க என்ன பண்ணப் போறீங்க.. என்னலாம் கத்துக்கப் போறீங்கன்னு.. ஆல் தி பெஸ்ட் கைஸ்" என்று அவர் சொல்லவும் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

அனைவரும் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட இடங்களை சுற்றி பார்க்கவும், கல்லூரி முடியும் நேரமும் சரியாக இருந்தது.

ஜியாலினி ஸ்வேதாவுடனும், ஜெகதீஷ் ராஜேஷ் உடனும் பரஸ்பரம் போன் நம்பர்களை பரிமாறி கொண்டனர்.

ஜியாலினி பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த வேளையில் அந்த வழியே ஜெகதீஷ் தனது இருசக்கர வாகனத்தில் அவளை கடந்து சென்றான்.. இம்முறை அவளை பார்த்து விட்டே சென்றான்.

ஒரு வழியாக பஸ்ஸூம் வர ஜியாலினி அதில் ஏறிக் கொண்டாள்..

வீட்டிற்குள் நுழைந்ததும்.."அம்மா நான் வந்துட்டேன்", என்று சத்தமிட்டபடியே வந்தாள்.

"என் செல்லக்குட்டி வந்துட்டா.. வா வா.. சாப்பாடு எடுத்து வைக்கவா?"

"சரி மா.. நான் போய் ஃபிரெஷ் ஆகிட்டு வரேன்"

உணவை தட்டில் போட்டுக் கொண்டே அமிர்தம், "ஃப்ரஸ்ட் டே காலேஜ் எப்படி இருந்தது ஜியா?"

"சூப்பர்மா.. நிறைய சுத்திக் காட்டினாங்க.. படிக்க-லாம் ரொம்ப கம்மி தான்.. மத்த எல்லாமே நம்ம கிரியேட்டிவிட்டி பொறுத்து தான்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"

"சூப்பர் டா உனக்கு பிடிச்சிருக்கு-ல.. அது போதும்.. மோர் போட்டுக்குறியா ஜியா?"

"வேண்டாம்மா.. இதுவே போதும்"

"சரி போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.. அப்பா இன்னிக்கு சீக்கிரம் வர்றதா சொல்லிருக்காரு.. நாம ஒரு சின்ன அவுட்டிங் போய்ட்டு வரலாம்"

"ஐ.. ஜாலி.. இன்னிக்கு நம்ம செமயா என்ஜாய் பண்ணலாம்"

"சரி டா" என்று விட்டு இருவரும் சிறிது ஓய்வெடுக்க, அவரவர் அறைக்கு சென்றனர்.

மாலை குடும்பமாக வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு, இரவு உணவையும் முடித்துவிட்டு வீடு திரும்பினர்..

----------------

ஆகஸ்ட் 11, 2011..

அனிமேஷன் டிசைன் லேப்(Lab)..

எல்லோரும் அவரவர் விருப்பப்பட்ட அனிமேஷனை கம்ப்யூட்டரில் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

ரோல் நம்பர் வரிசையில் அனைவரும் அமர்ந்திருந்ததால் ஜெகதீஷ்-க்கு அடுத்த சீட்டில் ஜியாலினி அமர்ந்திருந்தாள்.

"எக்ஸ்ட்ரா பென்(Pen) இருக்கா?" குரல் வந்த திசையை திரும்பி பார்த்தாள் ஜியாலினி.. ஜெகதீஷ் தான் கேட்டிருந்தான்.

"இருக்கு" என்றுவிட்டு, பவுச்சில் இருந்து பேனாவை எடுத்துக் கொடுத்தாள்..

"தேங்க்ஸ்"

அவளிடம் ஒரு சிறு சிரிப்பு மட்டும்..

------------

அதன்பின் இருவரும் நிறைய முறை வெளியிலும், வகுப்பறையிலும் பார்த்துக் கொண்டாலும்.. சிறு சிரிப்பு.. அளவான உரையாடல் என்ற அளவிலேயே சென்றது.

-------------

ஆகஸ்ட் 17, 2011..

கேஃபிடீரியா..

ஜியாலினி, ஸ்வேதா இடையேயான நட்பு குறுகிய காலத்திலேயே நெருக்கமாகி இருந்தது.. எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றார்கள்.. பிடித்ததை பகிர்ந்து கொண்டார்கள்.. ஒரே அலைவரிசை அவர்களை மேலும் இறுக பிணைத்தது.

"ஹே ஜியா.. என்னோட டிராயிங் புக்கை கிளாஸ் ரூம்லயே விட்டுட்டு வந்துட்டேன்டி.. நாளைக்கு அசைன்மென்ட் வேற கொடுத்திருக்காங்க.. நான் போய் எடுத்துட்டு வந்திடறேன்"

"நானும் வரேன்டி"

"இல்லடி வேணாம்.. நான் போய்ட்டு சீக்கிரம் வந்திடறேன்.. ஓகே" என்று பேசிக்கொண்டே ஓடிவிட்டாள்..

சிறு சிரிப்புடன் இருபக்கமும் தலையசைத்து ஜூஸை குடித்துக் கொண்டிருந்தவள் காதருகே "ஹாய்" என்று குரல் கேட்க, திடீரென கேட்ட சத்தத்தால் புரையேறியது..

புரையேறுற அளவுக்கு யார் கூப்பிட்டது??

??!!

தொடரும்..
 
Last edited:

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23aa02099fb17af737d6e641404e1625.jpg
அத்தியாயம்-4:

"ஹாய்" என திடீரென்று காதருகே கேட்ட சத்தத்தால் திடுக்கிட்ட ஜியாலினிக்கு புரையேற, தலையை தட்டியவாறே எதிரே இருந்த ஜெகதீஷை கண்டதும் ஒரு முறை கண்களை அழுந்த மூடித் திறந்து அவனை பார்த்தாள்.

அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்த ஜெகதீஷோ, "ஹே.. ஹாய் தானே சொன்னேன்.. அதுக்கே பயந்துட்டியா?.. இந்தா தண்ணி குடி" என்று அவளது பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

"தேங்க்யூ"

"இட்ஸ் ஓகே"

"......."

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் சுற்றும் முற்றும் பார்க்க, அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரிடமும் நிலவிய மௌனத்தை ஜெகதீஷே உடைத்தான்.

"ஆமா என்னை பார்த்தா உனக்கு பயமா இருக்கா?"

"அப்படிலாம் எதுவும் இல்லையே!.. ஏன் கேட்குறீங்க?"

"அப்போ ஏன் ஒரு மாதிரி தயங்கி தயங்கி பேசுற.. காலேஜ் ஆரம்பிச்சு ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.. கேர்ள்ஸ் நீங்க பத்து பேர் தான் இருக்கீங்க.. பட் இன்னும் நம்ம கிளாஸ்-ல ஒரு யூனிட்டியே இல்ல.. இப்படியே இருந்தா எப்படி??.. நாங்களும் மனுஷங்க தான்.. சோ இந்த எல்லாரும் பிரெண்ட்லியா ஜாலியா இருப்போமே.. குறிப்பா நீ?!.. கேர்ள்ஸ் கிட்ட நல்லா பேசுற.. ஆனா பசங்க கிட்ட பேசும் போது மட்டும் வாய்சே வர மாட்டேங்குது.. ஏன்?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை" என்றாள் தலையை குனிந்து, காதோர முடியை பின் தள்ளியபடி..

"கமான் ஜியாலினி.. எதுவா இருந்தாலும் சொல்லு.. ஏதாவது அன்கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்றியா?.."

"அப்படிலாம் எதுவும் இல்லை.. பொதுவாவே நான் கொஞ்சம் இன்ட்ரோவோர்ட் தான்.. ஆரம்பத்துல மிங்கிள் ஆக கொஞ்சம் டைம் எடுத்துக்குவேன்.. நல்லா பழகிட்டேன்னா அப்புறம் நார்மலா பேச ஆரம்பிச்சிடுவேன்.. அண்ட் என்ன தான் கோ-எட் ல படிச்சாலும்.. பசங்க கிட்ட பேச கொஞ்சம் தயக்கம் அதான்.. மத்தபடி வேற ஒன்னும் இல்லை"

"தேங்க்ஸ்.. என்னை நம்பி என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டதுக்கு.. எனக்கு உன்னை புரியுது.. இது ரொம்ப சிம்பிளான விஷயம்.. போக போக சரியாகிடும்.. எப்படியும் அடுத்த 3 வருஷத்துக்கு நாம ஒன்னா தான் படிக்க போறோம்.. என் ரோல் நம்பருக்கு அப்புறம் உன் ரோல் நம்பர் தான் வரப் போகுது.. கல்ச்சுரல்ஸ், டூர், பிராஜெக்ட் இப்படி எல்லாம் ஒன்னா தான் செய்யப் போறோம்.. அதனால இதுல தயக்கம்லாம் அவசியமே இல்லை.. எல்லாத்தையும் தூக்கி தூரப் போட்டுட்டு இந்த காலேஜ் லைஃபை நல்லா என்ஜாய் பண்ணு.. ஓகே"

"ஓகே" என்றவளின் வலது இதழின் ஓரமாக சிறு சிரிப்பு வந்து அமர்ந்தது.

"அப்போ ப்ரெண்ட்ஸ்??" என்று அவள் புறமாய் கையை நீட்டினான்.

சிறு தயக்கத்துடன் அவனது கையை பற்றி, "ப்ரெண்ட்ஸ்" என்றாள்.

"ப்ரெண்ட்ஸ் ஆகி இருக்கோம்.. ட்ரீட் ஏதும் இல்லையா?"

"யா ஷ்யூர்.. உங்களுக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணுங்க"

".........."

"சொல்லுங்க"

தீர்க்கமான பார்வை மட்டுமே அவனிடம்.

"என்னாச்சு?" என்றாள் மெல்லிய குரலில்.

"என்னை பார்த்தா ரொம்ப வயசான ஆள் மாதிரி தெரியுதா?"

"இல்லையே" என்றாள் குழப்பமான பாவனையுடன்..

"நீயும் நானும் ஒரே கிளாஸ் தானே.. அப்புறம் என்ன வாங்க, போங்கன்னுட்டு.. ஒழுங்கா வா, போ-ன்னே சொல்லு.."

இதற்கு தான் இவ்வளவு அலப்பறையா என்று எண்ணியவள், "சரி வா, போ" என்றாள் சிரிப்பை அடக்கி.

"பார்றா.. இப்போ தான் ஒரிஜினல் ஜியாலினி வெளியே வர்றா போல.. குட்.. இதையே மெயின்டெய்ன் பண்ணு"

"ம்ம்.. சரி".. இப்போது வெளிப்படையான சிரிப்பு அவளிடம்.

பின் அவன் சமோசா, ப்ரெஷ் ஜூஸ், பிரெஞ்ச் ஃபிரைஸ், வெஜ் ரோல், பப்ஸ் என ஆர்டர் செய்தவன், "இன்னிக்கு பசி இல்லை.. அதான் கம்மியா ஆர்டர் பண்ணிட்டேன்" என்கவும் அதிர்ந்து பார்த்தாள்.. அவளுக்கு வேண்டுமா எனக் கூட கேட்காமல் தனியாளாக அனைத்தையும் காலி செய்தவன்.. டிஷ்யூவில் கையை துடைத்துக் கொண்டே, "இன்னிக்கு நான் தான் உன்னை என் ப்ரெண்ட் ஆக்கி இருக்கேன்.. அதனால நீ தான் பில் கொடுக்கணும்.. பே(pay) பண்ணிடு.. பை.. நாளைக்கு பார்க்கலாம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னவன், எழுந்து சென்றுவிட்டான்.

அவனது செயலில், "அடப்பாவி.. அவன் பாட்டுக்கு வந்தான், பேசினான், சாப்பிட்டான், பில் பே பண்ணிடு போய்ட்டான்.. சரியான ஆளா இருக்கானே.. ஹ்ம்ம்" என்று திட்டிக் கொண்டே பில்லை செலுத்தி முடிக்கவும், ஸ்வேதா வரவும் சரியாக இருந்தது.

"ஏண்டி இவ்ளோ லேட்டு"

"அய்யோ ட்ராயிங் சார் புடிச்சிக்கிட்டாரு டி.. நீ நல்லா படம் வரையுற.. ஆனா இன்னும் இம்ப்ரூவ் பண்ணணும் அப்படின்னு ஆரம்பிச்சவரு, அது இதுன்னு பேசிக்கிட்டே போறாரு.. ஷப்பா.. ரம்பம் போட்டுட்டாரு.. நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. சாரி டி.. ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா?"

"அதெல்லாம் இல்லை டி" என்றுவிட்டு அவள் சென்றபின் ஜெகதீஷ் வந்தது, அவள் காசில் மொக்கியது.. என்று கூற.. ஸ்வேதா விழுந்து விழுந்து சிரித்தாள்.

"ஹாஹா.. சூப்பர்டி.. ஓசியிலேயே நல்லா சாப்பிட்டு போய்ட்டான்"

"ப்ச்.. போடி.. நீ வேற"

"சரி சரி கூல்.. ஆமா அவனுக்கு மட்டும் தான் ட்ரீட் தருவியா? நாம தானே முதல்ல ப்ரெண்ட்ஸ் ஆனோம்.. எங்க என்னோட ட்ரீட்?"

"ட்ரீட் தானே.. இதோ கொடுக்குறேன்".. என அவளை அடிக்க ஏதேனும் கிடைக்குமா எனத் தேட

"ஹாஹா.. சிக்க மாட்டேனே" என அவள் ஓட, ஜியாலினி துரத்த என்று காலேஜ் கிரவுண்டையே சுற்றி வந்தார்கள்..

ஓடிக் களைத்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு, பின் மீண்டும் கேஃபிடீரியா சென்று ஜூஸ் குடித்து விட்டு, வீட்டிற்கு சென்றார்கள்.

------------

ஆகஸ்ட் 22, 2011..

அனிமேஷன் டிசைன் லேப்..

"ஜியாலினி எக்ஸ்ட்ரா பென் இருக்கா?"- ஜெகதீஷ்.

உடனே தனது பவுச்சை வேறுபுறம் வைத்துக் கொண்டவள், "இல்லை" என்றாள்.

அவளது பவுச்சை எட்டிப் பார்த்தவன், "ஹே பொய் தானே சொல்ற.. உன் பவுச்-ல எப்பவுமே நாலஞ்சு பேனா இருக்கும்-ல".

"ஆமா.. இருக்கு.. ஆனா உனக்கு தர மாட்டேன்.. ஏற்கனவே உன்கிட்ட 3 பேனா கொடுத்துருக்கேன்.. அதுல ஒன்னு கூட திரும்ப வரல.. இதுல திரும்பவும் கேக்குறியா? உனக்கு இனி எப்பவும் பேனா கிடையாது".

"என்ன இப்படி சொல்லிட்ட.. உன்னை நம்பி தானே நான் பேனா எடுக்காம வந்தேன்" என்றான் சிரிப்புடன்.

"எது என்னை நம்பி பேனா எடுக்காம வந்தியா.. இதுக்காகவே உனக்கு கிடையாது.. ஆமா இதுக்கு முன்னாடி நான் கொடுத்த பேனாலாம் எங்க?"

"அதெல்லாம் நீ மறந்துடணும்.. இந்நேரம் அந்த பேனாலாம் எங்க, யார்கிட்ட இருக்கோ.. யாருக்கு தெரியும்?!"

அவனை கோபமாக முறைத்தவள் கணினியின் புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவனும், இனி இவளிடம் இருந்து வாங்க முடியாது எனத் தெரிந்து, பக்கத்தில் இருந்த பையனிடம் சில பல பிட்டுகளை போட்டு பேனாவை வாங்கி விட்டான்..

அதைக் கண்டவள், "அடப்பாவி, ஒரு பேனாவுக்காக என்னலாம் பிட்டு போடறான்" என நினைத்தவள்.. அவன் பேசியதை கேட்டு மறுபக்கம் திரும்பி சிரித்தாள்.. அதை அவனும் கவனித்துவிட்டான்.

"இந்த பக்கம் திரும்பியும் சிரிக்கலாம்.. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" என்றான் சிரித்துக் கொண்டே.

"நான் ஒன்னும் சிரிக்கலையே"

"இன்னைக்கு என்ன.. பொய் பொய்யா பேசிட்டு இருக்க?"

"ஆமா.. நீ பார்த்த.. ஹ்ம்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"பாத்து.. கழுத்து சுளுக்கிக்க போகுது"

"எங்களுக்கு தெரியும்"

"ஓ தெரியுமா? ரொம்ப நல்லது"

இப்போது இருவரிடமும் புன்னகை.. பொன்னகையாய் மின்னியது.

---------------

அடுத்து வந்த நாட்களில் ஜியாலினிக்கும் ஜெகதீஷூக்கும் இடையேயான நட்பு கேமராவும், பிலிம் ரோலும் போல மாறியது.. அவனிடம் மட்டுமல்ல வகுப்பில் உள்ள அனைவருடனும் நன்றாக பேச ஆரம்பித்திருந்தாள்.. ஜெகதீஷ் பேசி பேசியே அவளை இலகுவாக்கியிருந்தான்.. நிறைய பேசினான்.. அவளையும் பேச வைத்தான்.. தற்போது அவனை கலாய்க்கும் அளவுக்கு முன்னேறி இருந்தாள்..

--------------------

செப்டம்பர் 3, 2011..

கேன்டீனில்..

ஸ்வேதா ஸ்டாஃப் ரூம் வரை சென்றிருக்க, அவளுக்காக காத்திருந்த ஜியாலினி, மொபைலை நோண்டியபடியே, தர்பூசணி பழச்சாறு அருந்தி கொண்டிருந்தாள்.

"ஹலோ.. வணக்கம் வந்தனம் நமஸ்தே நமோஸ்கார்" என்றபடியே அவளுக்கு எதிரே அமர்ந்தான் ஜெகதீஷ்.

"ஹாய்.." என்றவள்,"அவ்ளோ தானா.. இன்னும் இருக்கா?" என்றாள்.

"என்னது?"

"இல்லை.. 4 லேங்வேஜ்ல தான் சொன்ன.. அதான் இந்த 4 லேங்வேஜ் மட்டும் தான் தெரியுமா? இல்ல இன்னும் இருக்கான்னு கேட்டேன்" என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

"ஹா.. அதெல்லாம் எங்களுக்கு நிறைய தெரியும்.. என்ன வெளிய காட்டிக்கிறது இல்லை.. அப்படி காட்டினேன்னு வச்சுக்கோ.. அப்புறம் ஃபேன்ஸ் தொல்லை அதிகமாகிடும்.. குறிப்பா கேர்ள் ஃபேன்ஸ்.. யூ நோ(know).. எனக்கு இந்த பப்ளிசிட்டிலாம் பிடிக்காது .. அதனால தான் என்னோட திறமைய வெளிக்காட்டாம இருக்கேன்"

"ஹோ அப்படி.. ம்ம்.. நம்பிட்டேன்"

"இந்த உலகம் என்னைக்கு நல்லவனை நம்பி இருக்கு?!"

"நல்லவனை நம்பும்.. ஆனா உன்னை நம்புமான்னு தெரியலை.. ஆமா.. நீ வீட்டுக்கு கிளம்பலையா?"

"கிளம்பணும்.. உன்னை பார்க்க தான் வந்தேன்?"

"என்னை பார்க்கவா?.. எதுக்கு?.. ஏதாவது முக்கியமான விஷயமா?"

"முக்கியமான விஷயம்னா தான் உன்னை பார்க்க வரணுமா?"

"நான் அப்படி சொன்னேனா?"

"இல்லை.. ஹையோ.. உன்கிட்ட பேசிக்கிட்டே வந்த விஷயத்தை மறந்துட்டேன் பாரு" என்றுவிட்டு அவனது பாக்கெட்டிலிருந்து ஒரு பொருளை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதைக்கண்டவள், குழப்பமான பாவனையில், "என்னது இது?"

"வாங்கி பிரிச்சு பாரு"

அதை வாங்கியவள் பிரித்து பார்க்க, உள்ளே இருந்த பொருளைக் கண்டு அவள் கண்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது..

"ஹே.. பார்க்கர் பென்.. செமயா இருக்கு.. புது மாடலா?.. இப்போ தான் வாங்கினியா?"

"இல்லை நேத்து வாங்கினேன்.. அப்புறம் இது எனக்கு இல்லை.. உனக்கு"

"என்னது எனக்கா? எனக்கெதுக்கு?.. விளையாடாத"

"நீ தானே சொன்ன.. உன்கிட்ட பேனா வாங்கிட்டு திருப்பி தரலைன்னு.. அதுக்காக தான் இது?"

"ஹே லூசா நீ.. நான் சும்மா உன்கூட விளையாண்டேன்.. அதுவும் இல்லாம அஞ்சு ரூபா பேனாவுக்கு ஈடா.. பார்க்கர் பேனாவா?.. கண்டிப்பா இந்த பேனா ஆயிரம் ரூபாய்க்கு மேல இருக்கும்.. எனக்கு வேண்டாம் ஜெகதீஷ்.. பிளீஸ் நீயே வச்சுக்கோ?!"

"ஓ அப்போ நான் தந்தா வாங்கிக்க மாட்டியா?.. முதல் முதல்ல உனக்கு கிஃப்டா ஒரு பொருள் கொடுக்கிறேன்.. வேண்டாம்னு சொல்ற.. அன்னைக்கு உன் காசில தான் சாப்பிட்டேன்.. அதுக்கு இன்னிக்கு வரைக்கும் நான் பணம் கொடுக்கல.. ஏன்? நான் உன்னை பிரெண்டா நினைச்சதால.. நீயும் என்னை பிரெண்டா நினைச்சா இந்த பேனாவை வச்சுக்கோ.. இல்லை.. அப்படி நினைக்கலைனா,பரவால்ல.. திருப்பி கொடுத்திடு" என்றவாறே அவளிடம் கையை நீட்டினான்.

அவளோ அவன் கொடுத்த பேனாவை திருப்பி திருப்பி பார்த்தவள், "இல்லை.. இந்த பேனா வேற ரொம்ப நல்லாயிருக்கு.. புது மாடல்.. அதுவும் எனக்கு பிடிச்ச பிளாக் கலர்.. அதனால நானே வச்சுக்குறேன்.. என்னோட ஸ்கிரிப்ட் எழுத யூஸ் பண்ணிக்குவேன்.. அப்புறம் உனக்காக ஒன்னும் நான் வாங்கிக்கலை"

"ஓ.. இதை இப்படியும் சொல்லலாமா.. சரிங்க மேடம்.. உன்னை இந்த பேனாவை வாங்க வைக்கறதுக்குள்ள.. ஷப்பா.. பக்கம் பக்கமா பேசி ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்.. எங்க போய் ஒரு ஆப்பிள் ஜூஸ் வாங்கிட்டு வா பார்ப்போம்"

"என்னது நான் போய் ஜூஸ் வாங்கிட்டு வரணுமா?.. உனக்கு வேணுமின்னா நீ போ?!"

"அதாவது.." என்று ஆரம்பித்தவனை இடைமறித்தவள்.. "ஹப்பா சாமி.. நீ எதுவும் சொல்ல வேணாம்.. நானே வாங்கிட்டு வந்து தொலைக்கிறேன்.." என்று முறைத்துக் கொண்டே எழுந்தாள்.

"அது.. அந்த பயம் இருக்கணும்" என்றான் காலரை தூக்கிவிட்டு கெத்தாக.

"உன்னை" என்று மேஜை மேலிருந்த நோட்டால் ஒன்று போட்டு விட்டே வாங்க சென்றாள்.

வரும் போது அவளுக்கும் சேர்த்து இரண்டாக வாங்கி வர, "அடடா.. ரெண்டு வாங்கிட்டு வந்துட்டியா? ஆனா எனக்கு ஒன்னு போதும்"

"ஹலோ.. அந்த இன்னொன்னு எனக்கு.."

"ஓ.. உனக்கா.. குடி குடி.. என்ன வரும் போது அப்படியே லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட் வாங்கிட்டு வந்திருக்கலாம்.. ஹ்ம்ம்.. என்ன நீ" என்று சலித்துக்கொண்டே ஜூஸை குடித்தான்.

அதைக் கேட்டு கொலைவெறியானவள் அவனை முறைக்க, "கூல்.. பரவால்ல விடு அப்புறம் வாங்கிக்கலாம்.." என்க.. "உன்னை திருத்தவே முடியாது" என்று தலையில் கைவைத்து கொண்டாள்.

"திருத்தறதுக்கு நான் என்ன ஆன்ஸர் பேப்பரா?.. "

"இதெல்லாம் 1940ஸ் காலத்து ஜோக்கு.. இன்னுமா இதெல்லாம் சொல்லிட்டு இருக்க.."

"இந்த உலகம் இருக்கே?.." என்று ஆரம்பித்தவனை, போர்க் ஸ்பூனை எடுத்து அவனுக்கு முன் நீட்டி.. "இப்போ நீ அமைதியா இல்ல?" என்று மிரட்ட..

"ஹே என்ன நீ வயலன்ல இறங்குற.. ஆண்களுக்கு இந்த உலகத்துல பாதுகாப்பே இல்லை" என்று நொடித்துக் கொண்டான்.

இவன்கிட்ட பேசி தன்னால் ஜெயிக்க முடியாது என்று எண்ணியவள்.. அமைதியாக தன்னுடைய ஜூஸை குடிக்க ஆரம்பிக்க.. அவனும் அவளை வம்பிழுத்தது போதும் என்று விட்டு விட்டான்.

அப்போது, "என்னங்கடா நடக்குது இங்க?" என்று கோரசாக கேட்க.. குரல் வந்த திசையை நோக்கி திரும்பியவர்கள், அங்கிருந்தவர்களைக் கண்டு, "ஆஹா இவங்களா?!" என்று ஒரேபோல் மனதில் நினைத்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், "எப்படி சமாளிக்கலாம்" என்று திட்டமிடத் தொடங்கினர்.


தொடரும்..
 

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1.jpeg

அத்தியாயம்-5:


ஜியாலினியும், ஜெகதீஷூம் ஒன்றும் அறியாதவர்கள் போல் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்க.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜேஷூம் ஸ்வேதாவும் தங்களுக்குள்.. "இரண்டு பேரும் ஏதோ பிளான் பண்ணிட்டாங்க.. வா என்ன கதை சொல்றாங்கன்னு கேட்போம்" என அவர்களை நோக்கி சென்றனர்.


இருவரும் அருகில் வந்ததும், ஜெகதீஷ், "ஜியாலினி அக்கார்டிங் டூ த நியூட்டன்ஸ் தர்டு லா.. ஃபார் எவ்ரி ஆக்ஷன் தேர் இஸ் ஆன்(an) ஈக்குவல் அண்ட் ஆப்போஸிட் ரியாக்ஷன் (நியூட்டனின் மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினை உண்டு)"


"யா ஜெகதீஷ்.. ஐ அக்ரி"


அப்போது "ம்க்கும்" என்ற செருமல் சத்தம் கேட்க.. திரும்பிய ஜெகதீஷ், "மச்சான் நீ எப்படா வந்த?.." என்றான் அவனை புதிதாக பார்ப்பது போல்.


"ஹோ.. அப்போ நாங்க வந்தத நீங்க இரண்டு பேரும் பார்க்கல?"..


"இல்லையே"..- இருவரும்.


"நாங்க ரெண்டு பேரும் உங்களை வெறிச்சு வெறிச்சு பார்த்திட்டு இருந்தது உங்களுக்கு தெரியவே தெரியாது?"


"சத்தியமா தெரியாது!"- மீண்டும் கோரஸாக இருவரும்..



"டேய் டேய் நடிக்காதீங்கடா?.. எதை வேணாலும் நான் மன்னிப்பேன்டா.. ஆனா விஸ்காம்-ல பிஸிக்ஸ் லா சொன்ன பார்த்தியா அதை மன்னிக்க மாட்டேன்டா.. அதுவும் எங்களை விட்டுட்டு நீங்க மட்டும் தனியா சாப்டீங்க பார்த்தீங்களா?? அதை எப்பவும் மன்னிக்க மாட்டேன்டா?? ஒழுங்கா எங்களுக்கும் ஏதாவது வாங்கிக் கொடுங்க?!"..


"இப்போ என்ன உனக்கு சாப்பிட வாங்கி தரணும் அவ்ளோ தானே.. சில்லி(silly) கைஸ்.. போய் இரண்டு பேரும் ஆர்டர் பண்ணிட்டு வாங்க?!.."


"ஐ..ஐ.. ஜாலி ஜாலி.." என்று குஷியாக ஓடினர் ராஜேஷூம் ஸ்வேதாவும்..



"ஜெகதீஷ் என்ன இப்படி சொல்லிட்ட.. எங்கிட்ட காசு வேற இல்ல.. பஸ்க்கு தான் இருக்கு.."


"என்கிட்டயும் தான் இல்ல.. பெட்ரோல்க்கு தான் இருக்கு.."


"அப்புறம் நீ பாட்டுக்கு ட்ரீட் கொடுக்குற?"


"நான் போய் ஆர்டர் பண்ண தான் சொன்னேன்.. நான் காசு தரேன்னு சொல்லவே இல்லையே?"


"அச்சோ ஜெகதீஷ் பாவம் அவங்க.. நம்ம ஃபிரண்ட்ஸ்-அ நாமே மத்தவங்க கிட்ட விட்டு தரலாமா?!"


"ஹாஹா.. சும்மா ஒரு பிராங்க்(Prank) பண்ணி பார்ப்போம்.. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்"


"பார்த்து.. விளையாட்டு வினையாகிடப் போகுது"


"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. கூல்"


அதற்குள் அவர்கள் இருவரும் வந்துவிட்டனர்.. அவர்கள் கொண்டு வந்திருந்த ஐட்டங்களை பார்த்த ஜியாலினி.. "போதுமா?!.. ஐட்டம்ஸ் ரொம்ப கம்மியா இருக்கே?" என்றாள் தட்டு நிறைய இருந்த பதார்த்தங்களை பார்வையிட்டவாறே..


"நாங்க டயட்ல இருக்கோம் ஜியா.. சோ இதுவே போதும்"- என்றாள் ஸ்வேதா வாயில் சமோசாவை அடைத்தவாறே..


"ஓஹோ…" என்றனர் ஜியாலினியும் ஜெகதீஷூம் ஒருவரை ஒருவர் பார்த்து கோரஸாக..


இருவரும் சாப்பிட்டு முடித்த பின்னர்..

"ஓகே மச்சான் கிளம்பலாமா?"- ஜெகதீஷ்.


"ஓ கிளம்பலாமே"


"சரி போய் பில் பே பண்ணிட்டு வந்திடுங்க"


"டேய் என்னடா என்னை பில் பே பண்ண சொல்ற.. நீ தானே வாங்கி கொடுத்த"


"நல்லா யோசிச்சு பாரு.. நானா வாங்கி கொடுத்தேன்.. நான் போய் ஆர்டர் தான் பண்ண சொன்னேன்.. அதுவும் இல்லாம நாங்க சாப்பிட்டத்துக்கு நாங்க தனித்தனியா பில்ல கொடுத்துட்டோம்.. அப்போ நீங்களும் அப்படி தானே கொடுக்கணும்.. அதானே நியாயம்.. கரெக்ட் தானே ஜியாலினி"


"100 பெர்சென்ட் கரெக்ட்"


"ஒன்னு கூடிட்டாய்ங்கய்யா.. ஒன்னு கூடிட்டாய்ங்க.." என வடிவேலு ஸ்டைலில் கூறியவன் பின் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "என்கிட்ட காசு இல்லடா" என்றான் மெதுவாக.


"அதை சாப்பிடறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்"


"ஸ்வேதா உங்கிட்ட காசு இருக்கா??.. இருந்தா கொடேன்.. நாளைக்கு தரேன்.."


"எங்கிட்டயும் இல்லடா.. உன்னை நம்பி தானே நான் வந்தேன்"


"என்னடா இது தி கிரேட் ராஜேஷ்க்கு வந்த சோதனை.. இட்ஸ் ஓகே.. 2 மினிட்ஸ்.. இதோ வரேன்.." என்று கடைக்காரரிடம் சென்றான்..


அங்கு அவன் ஏதேதோ அளந்து விட்டுக் கொண்டிருக்க, கடைக்காரர் அவனை மரியாதையாக பார்த்துக் கொண்டிருந்தார்..


அதை மற்ற மூவரும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.


பின் கூலர்ஸை கண்ணில் மாட்டியவாறே அவர்களை நோக்கி வந்தவன்.. "கிளம்பலாமா?" என்றான்.


"டேய் அவர்கிட்ட என்னடா சொன்ன?? உன்னை ஏதோ தலைவர் ரேஞ்சுக்கு பார்க்குறாரு"


"ஹாஹா.. உண்மையை சொன்னேன்" என்றான் கண்ணாடியை ரஜினி ஸ்டைலில் மாட்டியவாறு..


"என்னவோ.. உதை வாங்காம இருந்தா சரி"


"யாமிருக்க பயமேன்"- ராஜேஷ்


"நீ இருக்கனால தான்டா பயமே!"- ஸ்வேதா.


அதைக்கேட்டு எல்லார் முகத்திலும் சிரிப்பு பரவியது.


---------------------------


செப்டம்பர் 22, 2011..


டிராயிங் கிளாஸ்..


டார்வின், "ஓகே ஸ்டூடண்ட்ஸ்.. இவ்ளோ நாளா நீங்க டிராயிங் கிளாஸ்-ல.. ஜியாமெட்ரிகல் அண்ட் விதவிதமான பேட்டர்ன்ஸ் வரைஞ்சிருப்பீங்க.. இன்னைக்கு நாம பார்க்க போற டாப்பிக் 'பர்ஸ்பெக்டிவ் டிராயிங் (முழு உளக்காட்சி)'.. அப்படின்னா ஒரு சாதாரண பொருளை முப்பரிமாண பிம்பத்துல வரையுறது.. இப்போ பாருங்க" என்று ஒரு பெட்டியின் முப்பரிமாண பிம்பத்தை வரைந்தார்.. "பார்த்தீங்களா?!.. ஒரு பெட்டிக்கு முப்பரிமாண பிம்பம் கொடுத்த உடனே அதோட டைமன்ஷனே மாறுதுல்ல.. அதான் இந்த வகை டிராயிங்.. ஓகே பேஸிக்ஸ்ல இருந்து போலாம்.. இப்போ எல்லாரும் உங்க பென்சிலோட முப்பரிமாண பிம்பத்தை வரைங்க.. ஹோம் வொர்க்கா நான் சில ஹெட்டிங்ஸ்(headings) தரேன்.. அதை பண்ணிட்டு வாங்க.. ஓகே.. கமான் ஸ்டார்ட் பண்ணுங்க.. நீங்க வரையப் போற பென்சிலை நல்லா ஷார்ப்பா வச்சுக்கோங்க" என்றவாறே மாணவர்களை பார்வையிட ஆரம்பித்தார்.


ஒவ்வொருவரும் மும்முரமாக வரைய ஆரம்பித்தனர்.. பின் வரைந்த உடன் வேறு சில பொருட்களை சொல்ல அதையும் வரைந்தனர்..


"குட்.. எல்லாருமே ஒரு ஆர்வத்தோட பண்றீங்க.. ஒரு சில பேருக்கு சரியா வரலை.. ஜெகதீஷ், ராகவ், கமல், அப்புறம் கார்த்திக் இன்னும் இம்ப்ரூவ்மெண்ட் வேணும்.. நல்லா பிராக்டீஸ் பண்ணுங்க.. ஸ்வேதா, கலையரசி, விமல், சதீஷ் உங்க நாலு பேரோடது நல்லா இருந்தது.. ஒரு பர்ஃபெக்ஷன் இருக்கு.. கீப் இட் அப்.. ஓகே கைஸ் அடுத்த கிளாஸ்ல பார்ப்போம்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..


அது தான் கடைசி வகுப்பு என்பதால் அனைவரும் வீட்டுக்கு கிளம்ப தயாராகினர்..


ஜெகதீஷ், ராஜேஷ், ஜியாலினி, ஸ்வேதா இவர்களுக்கிடையேயான பிணைப்பு தற்போது அதிகமாகி இருந்தது.. நால்வரும் நல்ல நண்பர்களாகி இருந்தனர்.. வகுப்பு முடிந்தவுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டோ அல்லது படிப்பு சம்பந்தமாக ஒருவருக்கொருவர் உதவி செய்து விட்டோ தான் வீட்டுக்கு திரும்புவர்..


அன்று வகுப்பு முடிந்து சாப்பிட்டு விட்டு நால்வரும் மைதானத்தில் நிழலில் அமர்ந்திருந்தனர்..


ராஜேஷ் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்க.. "டேய் என்னடா நானும் பார்த்துட்டே இருக்கேன்..ஆழ்ந்த சிந்தனையிலேயே இருக்கியே அப்படி என்னதான் யோசிக்குற?!.. " என்று அவன் சிந்தனையை கலைத்தான் ஜெகதீஷ்.


ராஜேஷ், "அது ஒன்னும் இல்லடா.. நம்ம குரூப்-க்கு என்ன பேர் வைக்கலாம்னு யோசிக்குறேன்".


ஜியாலினி, "பேரா?!.. அதெல்லாம் எதுக்கு.."


ராஜேஷ், "என்ன ஜியாலினி இப்படி சொல்லிட்ட.. ஒரு குரூப்-னு இருந்தா அதுக்கு பேர் இருக்கணும்.. அது அவசியம்.. எங்க நீயும் யோசி பார்ப்போம்"


ஸ்வேதா, "பென்டாஸ்டிக் 4.. எப்படி இருக்கு?"


ராஜேஷ், "நல்லா தான் இருக்கு.. ஆனா பழசா இருக்கு.. நெக்ஸ்ட்!?"


ஜியாலினி, "தானா சேர்ந்த கூட்டம்?!"


ஜெகதீஷ், "நல்லா இருக்கே"


ஜியாலினி, "அதே தான்.. நல்லா இருக்குல்ல"


ராஜேஷ், "ஹே சூப்பரு ஜியாலினி.. தானா சேர்ந்த கூட்டம்.. அதை சுருக்குனா டி.எஸ்.கே(T.S.K).. வாவ்.. வாவ்.. எல்லாருக்கும் ஓகே தானேபா.. இதையே ஃபிக்ஸ் பண்ணிக்கலாமா?"


"எங்க எல்லாருக்கும் ஓகே.." என்றனர் மற்ற மூவரும் கோரஸாக..


"குட்.. இனிமே எல்லார்கிட்டேயும் நம்ம குரூப்பை நல்லா தெரியப்படுத்தணும்.. ஓகே.. டி.எஸ்.கே குரூப்னா அப்படியே காலேஜே தெறிச்சு ஓடணும்"


"டேய் அப்படிலாம் இருக்க வேணாம்.. நம்ம என்ஜாய் பண்றது மத்தவங்களுக்கு எப்பவும் டிஸ்டர்பா இருக்கக் கூடாது"- ஜெகதீஷ்.


"ஜெகதீஷ் சொல்றது தான் கரெக்ட்"- ஜியாலினி.


"நானும் இதை வழிமொழிகிறேன்"- ஸ்வேதா.


"எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க.. இனி நான் சொல்லி என்ன ஆகப் போகுது.. ஆனா பாருங்க நான் ஒரு டானா(Don) உருவாகுறது இந்த உலகத்துக்கே பிடிக்கலை போல.. சோ சேட்"


"ஏன்டா காமெடி பண்ற"- ஜெகதீஷ்.


"ஆமாடா நான் பண்றது லாம் காமெடியா தான் தெரியும்.. சரி நாம எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.. நம்மளை பத்தி ஓரளவுக்கு தெரியும்.. ஆனா நம்ம ஃபேமிலி பத்தி ஒன்னும் தெரியாது.. எங்க அப்படியே உங்க பேமிலி பத்தி, உங்களை பத்தி சொல்லுங்க பார்ப்போம்.. நானே முதல்ல ஸ்டார்ட் பண்றேன்.. அப்பா ஜனகராஜ், இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்-ல வெர்க் பண்றாரு.. அம்மா திலகவதி, டீச்சர், எனக்கு ஒரு தம்பி இருக்கான்.. 10வது படிக்குறான்.. என்னோட பேரண்ட்ஸ் ஜாலியா இருப்பாங்க.. அதே சமயம் கண்டிப்பாவும் இருப்பாங்க.. என்னுடைய இந்த வாய்ஜாலம் எங்க அப்பா கிட்ட இருந்து வந்தது தான்.. ஏன்னா அவரும் இப்படி தான் பேசிக்கிட்டே இருப்பாரு.. அம்மா ரொம்ப அமைதி.. தம்பியும் அமைதியானவன் தான்.. நான் மட்டும் தான் கொஞ்சம் அறுந்த வாலு.. ம்ம்.. அவ்ளோ தான்.. நெக்ஸ்ட் ஸ்வேதா நீ சொல்லு"


"ம்ம்.. அப்பா கருணாகரன் ரிஜிஸ்டரார்-ஆ(பதிவு அலுவலர்) இருக்காரு.. அம்மா உமா, ஹௌஸ் வைஃப்.. நான் ஒரே பொண்ணு தான்.. அப்பாவுக்கு புக்ஸ் வாசிக்கிறது ரொம்ப பிடிக்கும்.. 2,3 புக் கூட எழுதி இருக்காரு.. அம்மா சூப்பரா சமைப்பாங்க.. இரண்டு பேருமே எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க.. அதனாலேயே அவங்க பேச்சை மீறணும்னு தோணல.. எங்கப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ்.. சோ நிறைய லவ் சான்ஸ் ஓடும் வீட்ல.. தட்ஸ் இட்.. நெக்ஸ்ட் ஜியாலினி நீ சொல்லு"


"அப்பா வாசுதேவன் பேங்க்-ல வொர்க் பண்றாரு.. அம்மா அமிர்தம், வீட்ல இருந்தே டிசைனிங் வொர்க்ஸ் பண்ணி தருவாங்க.. ரெண்டு பேருமே பேரண்ட்ஸ்-ன்றதைவிட என்னோட ஃபிரண்ட்ஸ்.. அப்படிதான் பழகுவாங்க.. என்ன வேணாலும் அவங்ககிட்ட ஷேர் பண்ணிக்க முடியும்.. அடுத்து ஜெகதீஷ்"


"ம்ம்.. என்ன சொல்றது.. அப்பா தியாகராஜன்.. பிஸினஸ்மேன், 2 ஸ்பின்னிங் மில், 1 சூப்பர் மார்க்கெட், வச்சிருக்காரு.. அம்மா லதா.. பிகாம் (சி.ஏ) படிச்சிருக்காங்க.. சோ அப்பாவோட கம்பெனி ஆடிட்டிங் பார்த்துப்பாங்க.. எனக்கு ஒரு தங்கச்சி, பேரு திவ்யா.. என் மேல ரொம்ப பாசம்.."


"அடப்பாவி இவ்ளோ பெரிய வீட்டு பையனா நீ.. ஆனா அப்படி தெரியலையேடா.. எங்களை விட மோசமா ட்ரெஸ் பண்ற.. பார்த்து பார்த்து செலவு பண்ற" என்று வியந்தான் ராஜேஷ்.


"இரு இரு இன்னும் முடிக்கலை.. சின்ன வயசுல இருந்தே நான் தனிமை விரும்பி.. அவ்ளோ சீக்கிரம் மிங்கிள் ஆக மாட்டேன்.. இப்போ கொஞ்சம் மாறிட்டேன்.. நான் படிப்புலயும் கொஞ்சம் சுமார் தான்.. சோ எனக்கும் எங்க அப்பாவுக்கும் அதனால ஆகாது.. அவருக்கு நான் நல்லா படிக்கணும், அவர் பிஸினஸ பார்த்துக்கணும்னு ஆசை.. எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை.. நான் என் விருப்பத்தை சொன்னேன்.. ஒத்துக்கலை.. அதுவும் இல்லாம நான் சோஷியல் சர்வீஸ் நிறைய பண்ணுவேன்.. எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் அதிகம்.. நானும் என்னோட ஃப்ரண்ட்ஸ் சில பேரும் சேர்ந்து வாலன்டையரா போய் நிறைய ஹெல்ப் பண்ணுவோம்.. அதுவும் அவருக்கு அவ்வளவா பிடிக்கல.. ஒரு நாள் வீட்ல பயங்கர சண்டை வந்துடுச்சு.. அதுல இருந்து நான் பார்ட் டைம் வேலைக்கு போய் என்னோட செலவுகளை பார்த்துக்குவேன்.. வீட்ல தங்கறதுக்கு சாப்பிடறதுக்கு காசு கொடுத்தேன்.. அம்மா ரொம்ப கோச்சுக்கிட்டாங்க.. அதனால ரொம்ப இல்லாட்டியும் தேவையானதை கேட்டு வாங்கிக்குவேன்.. ஆனா என்னோட சொந்த செலவுகளை நானே பார்த்துக்குவேன்.. அப்புறம் நான் நல்லா கார் ஓட்டுவேன்.. சோ தெரிஞ்ச ஏஜன்ஸி மூலமா கார் ஓட்ட போவேன்.. அதுலயே போதுமான வருமானம் வருது.. இவ்ளோ தான் நான்"


"ஏன்டா.. பெத்தவங்க கிட்ட என்னடா வீம்பு.. கொஞ்சம் அவங்க பக்கம் இருந்தும் யோசிச்சு பாருடா" என்று உரிமையாக கண்டித்தான் ராஜேஷ்.


"இது வீம்பு இல்லடா.. தன்மானம்.. நான் அவங்க பக்கம் இருந்தும் யோசிச்சதால தான் ஒரு படம் எடுக்குற வரைக்கும் டைம் கேட்டிருக்கேன்.. அதுல நான் என்னை நிரூபிக்கறதை பொறுத்து தான் என் லைஃப் மாறும்.. என்ன சண்டை போட்டாலும் அவங்க என் மேல வச்ச பாசமும், நான் அவங்க மேல வச்ச பாசமும் மாறாதுல்ல.. இப்ப கூட என்னை ஏன் வேலை பார்க்க விடறாங்கன்னா.. எதுவுமே ஈஸியா கிடைச்சிட்டா அதுக்கு மதிப்பு இருக்காதுல்ல.. அதுக்காக தான்" என்றவனை மற்ற இருவரும் பெருமையாக பார்க்க, அவனை புதிதாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஜியாலினி.


அவன் மீதான மரியாதை இன்னும் அதிகமானது..


அடுத்து நடந்த ஒரு நிகழ்வில் அவள் மீதான மரியாதை அவனுக்கு அதிகமானது..


அப்படி என்ன செய்தாள்??


தொடரும்..
 
Last edited:

Hepsi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2b5d29f3465c5da3dcdfd98e30377d38.jpg

அத்தியாயம்-6:


அக்டோபர் 4, 2011..


கல்லூரியில் இண்டர்னல் எக்ஸாம் தொடங்கி இருந்தது..


பரீட்சை ஆர்வத்தில் மூவரும் கொஞ்சம் சீரியஸாக படித்துக் கொண்டிருந்தனர்.. ஜெகதீஷை தவிர.. அவன் எப்போதும் போல் கூலாக இருந்தான்.


"ஏன்டா நாங்க இங்க விழுந்து விழுந்து படிச்சிட்டு இருக்கோம்.. நீ என்னடா போன்ல யூ- டியூப் பார்த்துட்டு இருக்க?"


"பார்த்துடா.. அடிபட்டுடப் போகுது"


"ஜோக்கு.. அடுத்த மாசம் நாலாம் தேதி சாயங்காலம் மூணு மணிக்கு நியாபகப்படுத்து.. சிரிக்குறேன்!"


"ஹாஹா.. இல்லடா.. நேத்து நைட் தூக்கம் வரலன்னு 'ராவணன்' படம் பார்த்தேன்.. ப்பாஆஆ.. செம மூவி டா.. ஏன் இவ்வளவு நாளா பார்க்கலைன்னு ஃபீல் பண்ண வச்சிருச்சு அந்த படம்.. கதையை விடு.. ஆனா அதை எடுத்த விதம் அமேசிங்.. தெரியுமா.. சந்தோஷ் சிவன்( படத்தின் ஒளிப்பதிவாளர்) சார்க்கு நான் பெரிய ஃபேன் ஆகிட்டேன்.. அவ்வளவு நீட்டான பிரசண்டேஷன்.. அதுவும் 'உசுரே போகுதே' சாங் பார்த்துட்டு அப்படியே பிரமிச்சு போய்ட்டேன்.. இதுக்கு முன்னாடி கூட அந்த பாட்டை பார்த்துருக்கேன்.. ஆனா அவ்ளோ கவனிச்சு பார்தத்தில்லை.. நேத்து மட்டும் 10 தடவை பார்த்திருப்பேன்.. கேமரா ஆங்கில்(Angle), லைட்டிங்ஸ், விஸ்வலைசேஷன், லொகேஷன்ஸ் இப்படி இன்னும் நிறைய.. அந்த படத்துல இருந்து வெளிய வர முடியலை.. அதான் அந்த படத்தோட ஹிடன் டீட்டெய்ல்ல்(Hidden details) அப்புறம் இன்டர்வியூஸ் லாம் பார்த்து என்னென்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி இருக்காங்க?, கேமரா எந்த டைப் இதெல்லாம் பார்த்துட்டு இருக்கேன்.. பின்னாடி நமக்கும் யூஸ் ஆகும்-ல"


"என்னது எக்ஸாம் வச்சுக்கிட்டு படம் பார்த்தியா நீ.. ஏன்டா இந்த 3 நாள் கழிச்சு பார்க்க வேண்டியது தானே?!"


"அதென்னவோ எனக்கு நேத்து தான்டா படம் பார்க்கணும்னு தோணுச்சு"


"தோணும்டா.. தோணும்.. சரி இப்பவாவது ஒரு இரண்டு கொஸ்டீனாவது எடுத்து படி டா"


"விடுடா பார்த்துக்கலாம்"


"என்னவோ போ" என்று ராஜேஷூம் விட்டு விட்டான்.


இவ்வாறாக தேர்வுகளும் முடிந்தது..


கடைசி தேர்வு முடிந்த நாளன்று ஜியாலினியிடம் வந்தான் ஜெகதீஷ்.


"ஜியாலினி இன்னைக்கு நானும் உன் கூட பஸ்ல தான் வரப்போறேன்.. இதுவரைக்கும் பைக்லயே போய்ட்டேனா.. எந்தந்த பஸ் போகும்னு சரியா தெரியலை.. ஐ திங்க் நீ போற பஸ் ரூட் தான் எனக்கும்.. சோ சேர்ந்தே போகலாம்.. உனக்கொன்னும் அப்ஜெக்ஷன் இல்லையே"


"உனக்கே இது ஓவரா தெரியலை.." என்று முறைக்க முயன்றவளை பார்த்து சிரித்தான், "சும்மா கேட்டேன்.." என சமாளித்தான்.


"ஆமா உன் பைக் என்னாச்சு?"


"சர்வீஸ்க்கு கொடுத்திருக்கேன்.. நாளைக்கு தான் கிடைக்கும்"


"ஓ.. அப்படியா.. சரி.. பஸ் ஸ்டாண்ட்-க்கு போய்டலாமா?"


"ஓகே"


"சரிடா.. இரண்டு பேரும் பார்த்து பத்திரமா போங்க.. நெக்ஸ்ட் டைம் நாங்களும் உங்க கூட ஜாய்ன் பண்ணிக்குறோம்.. பை" என்றபடியே ராஜேஷூம், ஸ்வேதாவும் அவரவர் வாகனங்களில் சென்றனர்.


அன்று உடனே பஸ் கிடைத்தது மட்டுமல்லாமல் கூட்டமும் குறைவாக இருந்தது..


இருவரும் தனித்தனியாக முன்பின் சீட்டில் அமர்ந்தனர்.. அருகருகே அமர ஏதோ ஒரு சொல்லவியலாத தயக்கம் இருவரிடமும்.. 'அவளுக்கு பிடிக்காதோ?' என அவனும், 'அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ?' என அவளும் தயங்கிக் கொண்டிருந்தனர்.


இருவரும் ஏதேதோ பேசியபடியே வர சாலை பராமரிப்பு காரணமாக வேலை செய்து கொண்டிருக்க, பஸ் மாற்று பாதையில் சென்று கொண்டிருந்தது.


------------------------------------------


நெருப்பு:-


விளக்கின் மீது அமர்ந்தால் தீபம்..

வீட்டின் மீது அமர்ந்தால் தீ..


-----------------------------------------


வண்டி அடையாறை தொட்டதும் அங்கு ஓரிடத்தை நோக்கி குடிசை வாழ் மக்கள் பதட்டமாக ஓடிக் கொண்டிருந்தனர்.


தூரத்தில் பார்க்கும் போது மேலே வான் நோக்கி கரும்புகை சென்று கொண்டிருந்தது.


ஏதோ விபரீதம் என்று நினைத்த ஜெகதீஷ்.. ஜியாலினியிடம், "ஜினி ஏதோ ஃபயர் ஆக்சிடன்ட் போல.. நான் போய் என்னன்னு பார்க்குறேன்.. இந்த ஏரியாவுல குடிசை வீடுங்கதான் அதிகம்.. தீ பரவுச்சுனா இந்த இடமே அழிஞ்சுடும்.. நீ பார்த்து பத்திரமா வீட்டுக்கு போ.. சரியா.. நான் நாளைக்கு உனக்கு எல்லாம் டீடெய்லா சொல்றேன்" என்றுவிட்டு அவசரமாக கிளம்பியவனின் கைகளை பிடித்து, "ஜெகதீஷ் நானும் உன்கூட வரேன்" என்றாள்.


"ஜினி இது சாதாரண விஷயம் இல்ல.. நெருப்பு சம்பந்தப்பட்டது.. நீ வீட்டுக்கு போ.."


"இல்லை.. எனக்கு எதுவும் ஆகாது.. நானும் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன் ப்ளீஸ்"


அதற்கு மேல் தாமதம் செய்ய விரும்பாமல், நடத்துநரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொல்ல, இருவரும் இறங்கினர்.


சம்பவ இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வழியிலேயே ஜெகதீஷ் அவன் நண்பர்களுக்கு போன் செய்து வரச் சொன்னான்.. அப்படியே தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தான்.


இருவரும் சம்பவ இடத்தை அடைந்தனர்.


"அய்யோ.. பத்திக்கிட்டு எரியுதே.. எங்களை காப்பாத்த யாருமே இல்லையா? எந்த நாசாம போனவனோ இப்படி கொளுத்தி விட்டுட்டு போய்ட்டானே.. கட்டையில போறவன்.." என்று ஒரு பெண்மணி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.


தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது.. ஏற்கனவே இரண்டு வீட்களுக்கு பரவியிருந்த நிலையில் தற்போது காற்றின் வேகத்தின் காரணமாக பக்கத்து வீடுகளுக்கும் பரவத் தொடங்கியது.. குடிசை பகுதியாக இருப்பதால் தீ அதன் கோர முகத்தை காட்டி ஜொலித்துக் கொண்டிருந்தது.


ஜெகதீஷ் அந்த பெண்மணியிடம் சென்று, "அம்மா.. பயப்படாதீங்க.. நாங்க தீயணைப்பு துறைக்கு சொல்லி இருக்கோம்.. சீக்கிரம் வந்திடுவாங்க.. வீட்டுக்குள்ள யாரும் இல்லை தானே?!" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, "அய்யோ அம்மா.. நெருப்பு.. நெருப்பு.. யாராவது காப்பாத்துங்களேன்.. அய்யோ எரியுதே.. ஆஆஆஆஆ.." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.


ஜெகதீஷ் சிறிதும் தாமதிக்காமல் அருகிலிருந்த தொட்டியில் இருந்து வாளியின் மூலம் அந்த வீட்டின் மேல் புறத்தில் ஊற்றினான்..


பக்கத்தில் இருந்த ஆண்களிடம், "பயப்பாதீங்க.. மணல் அப்புறம் தண்ணீர் இருந்தா கொண்டு வந்து நெருப்பு மேல போடுங்க.. அணைஞ்சிடும்.. சீக்கிரம் சீக்கிரம்" என்றான்.


அவர்களும் அவன் சொன்னபடியே செய்ய தற்போது தீயின் வேகம் குறைந்தது.


உடனே ஜெகதீஷ் பக்கத்து வீட்டின் மேற்பகுதியில் காயப்போட்டு இருந்த கம்பளியை எடுத்தவன், அதனை தண்ணீரில் நனைத்து தீ பிடித்திருந்த வீட்டின் உள்ளே கம்பளியால் மூடியபடியே சென்றான்..


உள்ளே அழுது கொண்டிருந்த பெண்ணை நெருங்கி, அவளையும் கம்பளிக்குள் கொண்டுவந்து வெளியே கூட்டி வந்தான்.


இதையெல்லாம் ஜியாலினி பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.


அந்த பெண்ணை அவளின் பெற்றோரிடம் ஒப்படைத்து, முதலுதவிக்காக உடனே ஆட்டோவை வரவழைத்து மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தான்.


"எப்படிம்மா தீ புடிச்சது?" என்றான் பக்கத்திலிருந்த பெண்மணியிடம்.. தண்ணீரை வீட்டின் மேல் ஊற்றிக் கொண்டே..


"அதான் கண்ணு எனக்கும் தெரியலை.. நான் வேலைக்கு போய்ட்டு வரும் போது தான் பார்த்தேன்"


"வேற யாருக்கும் தெரியாதா?"


"இல்லை தம்பி தெரியலை" என்றனர் அங்கிருந்த சிலர்.


"சரிமா.. இனி பார்த்து கவனமா இருங்க.." அங்கிருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியின் ஒரு பக்கத்தை கிழித்து.. அதில் தீயணைப்பு, மருத்துவ உதவி உள்ளிட்ட சில அவசர உதவி எண்களை மார்க்கரால் எழுதியவன்.. "அம்மா இதுல சில முக்கியமான நம்பர்லாம் எழுதி இருக்கேன்.. ஏதாவது விபத்து நடந்துச்சுனா.. உடனே பதட்டப்படாம இந்த நம்பருக்கு கூப்டீங்கனா சம்பந்தப்பட்டவங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.. இதை எல்லாருக்கும் தெரியுற மாதிரி ஒரு இடத்துல மாட்டி விடுங்க" என்று அவரிடம் கொடுத்தான்.


அவரும் அதனை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டார்.


தற்போது அவன் நண்பர்களும் வந்திருக்க, அவர்களுடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தான்.


அப்போது ஒரு பெண் ஜெகதீஷிடம் வந்து, "தம்பி.. தம்பி.. என் குழந்தை உள்ள மாட்டிக்கிச்சு தம்பி.. குழந்தை பசிக்குதுன்னு சொன்னா.. வீட்ல சாப்பாடு இல்லாதனால பக்கத்து வீட்ல கேக்கலாம்னு குழந்தையை தனியா விட்டுட்டு போனேன்.. அதுக்குள்ள இப்படி ஆய்டுச்சு.. உங்க கால்ல விழுறேன்.. எப்படியாவது காப்பாத்தி குடுப்பா" என்று அந்த பெண்மணி காலில் விழும் முன்னரே தடுத்தவன், "என்னம்மா இது.. ப்ளீஸ்.. இப்படிலாம் பண்ணாதீங்க.. இதோ உள்ள போய் பார்க்கிறோம்" எனும் போதே ஜியாலினி தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் ஜீன்ஸ் சட்டையின் மேல் தலையோடு தண்ணீர் ஊற்றி விட்டு அந்த பெண்மணி சொன்ன வீட்டுக்குள் நுழைந்தாள்.


இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெகதீஷ் அதிர்ந்து விட்டான்..


"ஜினி நில்லு.." என்று அவன் கத்தியதை கேட்காமல் அவள் உள்ளே சென்று விட்டாள்.


அதற்குள் அவனும் உள்ளே நுழைந்து விட்டான்.. அங்கே ஜியாலினி வீறிட்டு அழுது கொண்டிருந்த ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமியை கையில் ஏந்தியவாறு வெளியே வந்து கொண்டிருந்தாள்.


உடனே அவர்களை நெருங்கியவன் சிறுமியை கையில் வாங்கிக் கொண்டு அவளையும் இழுத்தவாறு வெளியே வரும் போது தீயணைப்பு வாகனமும் வந்து விட்டது.


குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தீயணைப்பு வீரர்களை நோக்கி சென்றான் ஜெகதீஷ்.. அவர்களிடம் விவரத்தை சொல்லிவிட்டு நகர, ஏரியா மக்கள் அவனை பிடித்துக் கொண்டனர்.


"ரொம்ப நன்றி தம்பி.. இன்னிக்கு இரண்டு உசுரை நீங்க காப்பாத்திக் கொடுத்திருக்கீங்க.. யாரோ எப்படியோ போகட்டும்னு நினைக்குற இந்த காலத்துல, யாருனே தெரியாத எங்களுக்காக, உங்க உசுர பணயம் வச்சி காப்பாத்திக் கொடுத்திருக்கீங்க.. இனிமே எங்க குலதெய்வமே நீதான்யா.. நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும்யா" என்று அவன் கையை பிடித்து பேசிக் கொண்டிருந்தார் அந்த சிறுமியின் தாய்.


"என்னம்மா நீங்க பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.. மனுஷ உயிர் விலைமதிப்பில்லாதது.. அதை காப்பாத்த ஏதோ எங்களால முடிஞ்ச உதவி செஞ்சோம்.. அவ்வளவு தான்.. போங்க.. பாப்பா ரொம்ப பயந்துட்டா.. அவளை கவனிங்க.." என்றான்.


இப்படியே அந்த ஏரியா மக்கள் அவனை பிடித்து பேசிக் கொண்டிருப்பதை சிறிது தூரத்தில் நின்று ஜியாலினி பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஏனோ ஓர் இனம் புரியாத உணர்வு.. அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளது கண்களுக்கு அவன் ஒரு ஹீரோவாக தெரிந்தான்.


அதை கவனித்தவன் அவர்களிடம் விடைபெற்று அவளை நோக்கிச் சென்றான்.. அவன் நடையிலேயே ஜியாலினிக்கு தெரிந்தது, அவன் அவள்மீது பயங்கர கோபத்தில் இருக்கிறான் என்று.


"அறிவிருக்கா உனக்கு.. நீ பாட்டுக்கு நான் கூப்பிட கூப்பிட போய்ட்டே இருக்க.. உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா உங்க அப்பா அம்மாவுக்கு யாரு பதில் சொல்றது"


"இல்லை அந்த அம்மா அழுதாங்க-ல.. அதை பார்த்து மனசு கேட்கலை.. எப்படியாவது அந்த குழந்தையை காப்பாத்தணும்னு தோணுச்சு.. அதான்"


"ப்ச்.." என்று கையால் பிடரியை கோதியவன்.. "உன் இன்டென்சன்(intension) சரிதான்.. ஆனா நம்ம சேஃப்டியையும் நாம பார்க்கணும்ல.. நானே ரொம்ப பாதுகாப்பா தானே உள்ள போனேன்"


"நானும் ஜீன்ஸ் தானே போட்ருக்கேன்.. இதுவே சாக்கு மாதிரி தானே இருக்கு.. அதுவும் இல்லாம மேல தண்ணீ ஊத்திக்கிட்டேன்.. எனக்கு தெரியும் எப்படியும் நீ என் பின்னாடியே வருவன்னு.. அதான் தைரியமா உள்ள போய்ட்டேன்" என்று அவள் கூறியதை கேட்டு ஏனோ அவனுக்கு சிரிப்பு வந்தது.


"உன்னை.." என்றபடியே கை ஓங்கியவன், அவள் தலையில் வைத்து ஆட்டி, "இனிமேல் இதுபோல பண்ணக்கூடாது.. சரியா.. அப்படி பண்றதா இருந்தா என்கிட்ட சொல்லிடணும்.. ம்ம்" என்றான்.


அவளும் சரி என்று தலையசைத்தாள்.


தற்போது தீயணைப்பு வீரர்கள் முழுவதுமாக தீயை அணைத்து இருந்தனர்.


பின் அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்களை, அவர்கள் வீடெல்லாம் சரியாகும் வரை, தனக்கு தெரிந்த ஒரு சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்தான்.. அவர்களும் அத்தியாவசிய ஜாமான்களை எடுத்துக் கொண்டு கிளம்ப, அவர்களை இரண்டு மினி ஆட்டோக்கள் வந்து அழைத்துச் சென்றது.. அவனது நண்பர்கள் தான் அவர்களை அழைத்துச் சென்றனர்.


அதன்பின்னரே ஆசுவாசமாக உணர்ந்தான் ஜெகதீஷ்.


"போலாமா ஜியாலினி"


"ம்.. போலாம்.." எனும் போதே அவள் குரல் மெலிந்து ஒலித்தது.


"என்னாச்சு?"


"இல்லை.. ஒன்னுமில்லையே!"

என்றாள் அவனுக்கு தன் கைகளை மறைத்தவாறே.


"இல்ல..என்னவோ இருக்கு.. ஏன் கையை மறைக்குற" என்றவாறே அவள் கைகளை பற்றினான்.


அப்போது தான் அவள் முழங்கையில் இருந்த தீக்காயத்தை கவனித்தான்.


"ஓ காட்.. இவ்ளோ பெரிய காயமாகி இருக்கு.. நீ பாட்டுக்கு நிக்குற.. என்கிட்ட சொல்ல வேண்டியது தானே?"


"இல்ல வீட்டுக்கு தானே போறோம்.. போற வழியில பார்த்துக்கலாம்னு.. " அவன் முறைத்த முறைப்பில் வார்த்தைகள் நின்றது.


"பார்த்து கிழிச்ச.." என்று கோபத்தோடு சொன்னவன் அங்கிருந்த ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.


மருத்துவமனையில் கூட்டமில்லை மற்றும் எமர்ஜென்சி என கூற உடனே மருத்துவரை பார்க்க ஏற்பாடு செய்தார்கள்..


அவன் மருத்துவரிடம் விவரத்தை கூற, அவர் ஆன்டிசெப்டிக் மருந்து போட்டு, வலி குறைய ஒரு ஊசியும் போட்டு விட்டார்.


ஜெகதீஷ் மருந்துகள் வாங்க சென்றிருந்தான்.


ஜியாலினி சோர்வாக அங்கிருந்த பெட்டில் படுத்திருந்தாள்.


தனியார் மருத்துவமனை என்பதால் சுத்தமாக இருந்தது.


அவளை பார்த்த அவனுக்கே பாவமாக இருந்தது.


"ஜியாலினி" என்று மெதுவாக கூப்பிட்டான்.


கண்களை திறந்து மெதுவாக சிரித்தவள், எழ முற்பட, "இரு.. இரு" என்று அவளருகே வந்தவன் அவள் தோள் பற்றி எழ வைத்தான்.


ஏனோ அவளுக்கு கூச்சமாக இருந்தது.. இருந்தும் முகத்தில் காட்டாமல் சமாளித்தாள்.. அதை அவனும் உணர்ந்ததானோ?.. பட்டும் படாமல் அவளை பிடித்திருந்தான்.


"இப்போ பரவால்லையா?!.. எங்க கைய காட்டு" என்று அவள் கைகளை பார்த்தான்.


"இல்ல.. இப்போ கொஞ்சம் பரவாயில்ல.. வலி தெரியலை"


"சரி.. வீட்டுக்கு கிளம்பலாமா?"


"ம்ம்"


மெதுவாக அவளை அழைத்துக் கொண்டு, ஆட்டோவில் ஏறினான்.


வேளச்சேரியை நெருங்கியதும் ஜியாலினி, "ஜெகதீஷ்.. என்னை இங்க முன்னாடியே இறக்கி விட்ரு.. நான் போய்க்குவேன்"


"ஏன்.. வீட்டுக்கு வந்து.. அம்மாகிட்ட எப்படி ஆச்சுன்னு சொல்லி விட்டுட்டு வரேன்"


"சுத்தம்.. நான் இப்படி பண்ணேன்னு தெரிஞ்சா.. அப்புறம் என்னை வெளிய எங்கயும் விடவே மாட்டாங்க"


"அதுக்கு.. பொய் சொல்லப் போறியா?"


"இல்லையில்லை.. நானே பக்குவமா அவங்ககிட்ட சொல்லிக்குறேன்"


"அதுக்கில்ல.. அம்மாகிட்ட சொல்லிட்டு.. அப்படியே உன் பிரெண்ட்-னு சொல்லி இன்ட்ரோ ஆகலாம்னு பார்த்தேன்"


"உன்னை அவங்களுக்கு இன்ட்ரோ கொடுப்பேன்.. ஆனா இப்படிபட்ட சூழ்நிலையில வேணாம்.. ப்ளீஸ் ஜெகதீஷ்" என்க அவனும் அரைமனதாக ஒத்துக் கொண்டான்.


அமைதியான ஆட்டோ பயணம்.. இருவருக்கும் நடுவில் இருவர் அமரும் வகையில் இடைவெளி..


ஆனால் இருவருக்கும் பிடித்திருந்தது. அவளை திரும்பி பார்த்தான்.. அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தாள்.


அவளது செயலால் அவள் மீதான மரியாதை அதிகமாகியது.. இன்னும் அவளை பிடித்தது.. ஒரு சிறுமுறுவலுடன் அவனும் வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.


அவள் இருக்கும் ஏரியாவின் என்ட்ரன்ஸ்-லேயே இறங்கிக் கொண்டவளை, அவள் வீட்டில் நுழையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன்.. அதன்பின்னரே அவன் வீட்டை நோக்கி சென்றான்.


இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விதி, "உங்களுக்கு இன்னும் ஆப்பு வச்சிருக்கேன்.. கவலையே படாதீங்க" என்பது போல் நக்கலாக சிரித்தது.

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top