All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

💖உன்னுள் தொலைந்தேனே 💖-கதை திரி

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖உன்னுள் தொலைந்தேனே💖


சீறி வரும் காளைகளை இளைஞர் பட்டாளங்கள் அடக்கினர் சிலர் அடக்கம் முயற்சித்தனர்......

அப்போது ராஜவேலுவின் காளை வருவதற்கான அழைப்பு வந்தது......

காளையை அடக்குப்பவருக்கு ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் பீரோ என்று அறிவிக்கப்பட்டது......

கருப்பனை பார்த்ததும் பலர் ஒதுங்கினர் சிலர் அதை சீண்டி விட்டனர்......

‌ அனைவரையும் ஒரு காட்டு காட்டு விட்டு காளை முன்னேறி சென்றது...... அப்போது காளையின் எதிரே வந்து நின்றான் அவன்.....

சீறி வந்த காளை அவன் நெஞ்சை கீறி விட்டு சென்றது.........

அவனோ மயங்கி மண்ணில் சரிந்தான்.....

மற்றது யூடியில் 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
11985
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖உன்னுள் தொலைந்தேனே💖

அத்தியாயம் 6

ராஜவேலு மற்றும் தங்கதுரையின் குடும்பத்தினர் திருமணத்திற்கு தேவையானவற்றை வாங்கிவிட்டு அவரவர் வீட்டில் வைத்து பூஜை செய்து பின் கோவிலுக்கு சென்று வணங்கினர்……

மறுநாள் ஜல்லிக்கட்டிற்க்கு ஊரே கோலாகலமாக இருந்தது….. அவரவர் வீட்டின் காளைகளை மைதானத்திற்கு அழைத்து வந்து வாடிவாசல் வரிசையாக நிறுத்தினர்……

அப்போது சத்யன் அரவிந்திடம் சென்ற வருடம் நடந்த ஜல்லிக்கட்டை பற்றி கூறினான்…..சென்ற வருடம் அரவிந்தின் குடும்பம் திருவிழாவிற்கு வரவில்லை….
சென்ற வருடம் இதே ஜல்லிக்கட்டில்…….

வாடிவாசல் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது….. அதில் கருப்பனும் ஒன்று…. கருப்பனை பார்த்ததும் சிலர் ஒதுங்கினர் சிலர் அதை சீண்டி விட்டு வேடிக்கை பார்த்தனர்…….

அப்போது கருப்பன் வாடிவாசலில் இருந்து வரும் நேரம் அப்போது ஒலிபெருக்கியில் கருப்பனை அடக்குபவர்கள் ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் பீரோ என்று அறிவிக்கப்பட……….அப்போது அந்த ஊரின் பண்ணையார் மகன் பாண்டி ,,,,,,,,,,யாருக்கு வேணும் உங்க தங்கக் காசும் பீரோவும் அவர் பொண்ண கட்டி தராரானு கேளுங்க நான் காளையை அடக்கறேன் என்று வந்தான்…………

அப்போது ராஜ வேலுவும் நீ என் காளையை அடக்கு என் பொண்ணு உனக்கு கட்டி தரேன் என்று சவால் விட்டார் இதைக் கேட்டு பிரியவும் சத்யனும் அதிர்ந்து போயினர் லட்சுமியும் தான்………..

அப்போது கருப்பன் வாடிவாசலில் இருந்து பாய்ந்து களத்திற்கு வந்தது .....சிலர் அதை பார்த்து ஒதுக்கினர் சிலர் சீண்டி விட்டனர்......

அப்போ பாண்டி அதன் எதிரில் வந்து அதன் திமிலை பிடிக்க பார்க்க அது அவனை ஒரு சுழற்று சுழற்றி கீழே தள்ளிவிட்டது...... தோல்வியை ஏற்க மனமில்லாத பாண்டி திரும்பவும் அதன் முன்பு வந்து அதன் கொம்புகளை பிடித்தான்... அப்போது அதை அவன் நெஞ்சை கீறி விட்டு சென்றது......

கருப்பன் கீழே இடத்தில் ரத்தம் வந்தது...... அதைப்பார்த்ததும் பாண்டிய அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தான்.....

இந்த சம்பவத்திற்கு பிறகு பாண்டி சிறிது நாட்களுக்குள் தலைகாட்ட முடியாமல் அவமானப்பட்டு இருந்தான்.......

சத்யனின் நடந்த அனைத்தையும் அரவிந்திடம் சொன்னான்....

அப்போது அரவிந்திற்கு நேற்று இரவு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது....

நேற்று இரவு கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த அரவிந்திற்கு அன்று கடையில் புடவை எடுக்கும் போதும் தாலியை வாங்கும்போதும் உண்டான உணர்வை பற்றி யோசித்தபடி இருந்தான்...

இரவு சாப்பாட்டுக்கு பிறகு அரவிந்த் தன் அம்மாவிடம் கொஞ்சநேரம் காலார நடந்துட்டு வர்றேன் மா என்றுவிட்டு கால் போன போக்கில் நடந்தான்....

அப்போ மரத்தின் மறைவில் பாண்டி மற்றும் அவனது நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது....

பாண்டியும் அவன் நண்பர்களும் அங்கு தண்ணி அடித்துக் கொண்டிருந்தார்கள் ...... குடிபோதையில் பாண்டி போன வருஷம் விட இந்த வருஷம் நான் அவள விடுறதா இல்லடா இந்த தன் நண்பர்களிடம் கூறினான்.......

அதற்கு அவன் நண்பனும் வேண்டாண்டா மாப்பிள்ளை இந்த வருஷம் அந்த பிள்ளைக்கு கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க தேவையில்லாத பிரச்சனை பண்ணாத என்றான்..........

நானும் அதை கேள்விப்பட்டேன்....எப்படி கல்யாணம் நடக்குது நானும் பார்க்கிறேன் ...... நாளை வாடிவாசலில் அவன் காளை வரும்போது பேசிக்கிறேன் இந்த வருஷம் அவன் காளையை அடைக்கி அவன் பொண்னை கட்டள என் பேரு பாண்டி இல்லை என்று சபதம் எடுத்தான் குடிபோதையில்.........

இதைக் கேட்ட படி நின்ற அரவிந்திற்கு அப்போது தெரியவில்லை அவர்கள் பிரியாவை பற்றி தான் பேசினார்கள் என்று......

ஆனால் இப்போது சத்யன் கூறியதைக் கேட்டதும் அவர்கள் கருப்பனை பற்றி தான் பேசி இருக்காரர்கள் என்பதை புரிந்து கொண்டான்......

இதையெல்லாம் யோசித்து கொண்டிருக்கும்போதே வாடிவாசலில் இருந்து கருப்பன் களத்திற்குள் வந்துவிட்டது....

அதை அடக்குவதற்காக பாண்டி முன்னே வரும் சமயம் அவனே முந்திக்கொண்டு அரவிந்த் களத்தில் குதித்தான்........

அரவிந்த் களத்தில் குதித்ததும் அனைவரும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தனர்.....

பாண்டியோ அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.... ஏன் என்றால் அரவிந்தனிடம் இருந்து இப்படி ஒரு செயலை அவன் எதிர்பார்க்கவில்லை.....

அரவிந்த்‌ களத்தில் குதித்ததும் கருப்பனின் திமிழைப் பிடித்து அடக்க பார்த்தான் அது அவனை ஹட்கீழே தள்ளிவிட்டு முன்னேறி சென்றது... அப்போதும் விடாமல் அவன் கொம்பை பிடிக்க முயற்சி செய்தான்.... கொம்பை பிடிக்க வந்தவனே பிடிக்க விடாமல் தலையாட்டி அவனையும் குத்துவதுபோல் சென்றது...... அதில் அவன் கீழே விழுந்தான்..... பின்னரும் விடா முயற்சியாக அதன் கொம்பை பிடிக்கப் போக அது அவன் நெஞ்சில் கொம்பால் கீறியது.... அப்போதும் அவன் விடாமல் கொம்பையும் திமிரையும் பிடித்து ஒரு வழியாக கருப்பனை அடக்கி விட்டான்....

அவன் கருப்பனை அடங்கியதும் முதலில் பார்த்தது ப்ரியாவை தான்.... அவளும் முதலில் அவனை ஆச்சரியமாக பார்த்து விட்டு பின் ஒன்றும் அறியாதவள் போல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.........

அவன் காளையை அடக்கி ஏதும் ராஜவேலு அறிவிப்பாளர்களிடம் சென்று அவர்களிடம் இருந்த மைக்கை வாங்கி உங்க எல்லாருக்கும் தெரியும் போன வருஷம் ஜல்லிக்கட்டுல என் காளையை அடக்கினா பொண்ண கொடுக்குறதான சொல்லியிருந்தேன்...... ஆனா இந்த வருஷம் என் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணதால நான் அதை பத்தி சொல்லல....... இருந்தாலும் என் பொண்ண கட்டிக்கப்போற மாப்பிள்ளை இந்த காளையை அடக்கி...... என் வாக்கை காப்பாற்ற வச்சுட்டாரு........ எல்லாருக்கும் தனி தனியா வீடு தேடி பத்திரிக்கை வைக்க வருவேன் இருந்தாலும் இப்போ எல்லா ஊர் ஜனங்களும் இங்கே இருக்கீங்க..... என் பொண்ணு நண்பன் தங்கதுரை பையனுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுக்க போறேன்...... என்று மீசையை நீவியபடி பெருமையாக சொன்னார் இவர் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை என்று........

அப்போது பிரியா மகாவிடம் உங்க அண்ணன் நெஞ்சில் காயம்பட்டு இருக்கு உடனே மருந்து போட்டு விடு என்று ஒரு ஆயின்மென்ட் மகாவின் கையில் கொடுத்தாள்....

அப்போதான் அந்த காயத்தை மகா மட்டும் லக்ஷ்மி தமயந்தியும் அனைவரும் பார்த்தனர் உடனே அவர்கள் அரவிந்த் இருக்கு அந்த களிம்பை தடவி விட்டனர....

தமயந்திக்கு தன் மகனை நினைத்து பெருமையாக இருந்தாலும் அதேசமயம் அவன் காயம்பட்டதினால் கொஞ்சம் வருத்தமும் அடைந்தார் கல்யாண நேரத்தில் காயம் ஆயிடுச்சு என்று......

பின் அடுத்தடுத்து காளைகள் வரிசையாக வாடிவாசலில் இருந்து புறப்பட்டு அங்கிருந்த இளைஞர்களுக்கு உற்சாகமாக காளையை அடக்கினர்....

பாண்டிக்கோ அவமானம் மற்றும் ஏமாற்றமாக இருந்தது.... அவன் தன் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் நண்பனை அழைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.......

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்........

அப்போ அவன் மனசாட்சி உனக்குதான் ப்ரியாவை பிடிக்காதுல அப்புறம் ஏன் நீ காளையை அடக்கின பேசாம பாண்டியே அத அடக்கி ப்ரியாவை கல்யாணம் பண்ணிருப்பான்‌.... உன் பிரச்சினையும் முடிஞ்சிருக்கும்ல என்று கேள்வி கேட்டது.....

பிடிக்காத பொண்ணா இருந்தாலும் அவன் குணம் சரியில்லாதவன் அவன் காளைய அடக்கி அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்ட வேலு மாமாவுக்கு தானே கஷ்டம் அது மட்டுமில்லாம என் தங்கச்சி போய் வாழ போற இடம் அங்க நிம்மதி இல்லாமல் இருந்தா என் தங்கச்சி எப்படி சந்தோஷமா இருக்கும் அதனால தான் அடக்கினேன் என்று சப்பைக்கட்டு கட்டினான் மனசாட்சியிடம்......

இப்படியே அன்றைய ஜல்லிக்கட்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது....


அன்று மாலை அரவிந்தனை சந்தித்த சத்யன் .......

அரவிந்த் என்னால நம்பவே முடியல நீ ஏன் திடீர்னு களத்தில குதிச்சி காளையை அடக்கின.... ஏன் கேக்குறேன்னா ஜல்லிக்கட்டுனாலே பின்னாடி போற நீ இன்னைக்கு யாருமே அடக்காத காளையை அடக்கி இருக்கியே அதான் கேட்டேன்......

அதற்கு அரவிந்த்தோ பாண்டியும் அவன் நண்பர்களும் நேற்று இரவு பேசியதை பற்றி கூறினான்.....

‌இதை கேட்டதும் சத்யனுக்கு பயங்கர கோவம் வர எவ்ளோ தைரியம் இருந்தா என் தங்கச்சி ஆண்களைக் கவர திட்டம் போடுகிறார்கள் என்று கோவமாக கிளம்பினான்....

அதைப்பார்த்த அரவிந்த்தோ விடுடா அதான் ஏதும் நடக்கலல நம்மளே பிரச்சினை பெரிசு பண்ண வேண்டாம் என்று அவனை அடக்கினான்......

இருந்தும் சத்யனின் கோவம் அடங்கவில்லை அவன் பக்கத்தில் இருந்த மரத்தை ஓங்கி குத்தினான்....

இதைப் பார்த்த அரவிந்த்க்கும் பாண்டியின் மீது அளவிற்கு அதிகமான கோபம் வந்தது .....இருந்தாலும் பிரச்சினை வேண்டாம் அதுவும் திருவிழா சமயத்தில் வேண்டாம் என்று தன் நண்பனையும் அமைதி காக்க வைத்தான்.......

அன்று இரவு தனது ராஜவேலுவின் குடும்பத்தினரை இரவு சாப்பாட்டிற்கு அழைத்திருந்தார்.....

அங்கே வந்த சத்யன் மாலை அரவிந்த் சொன்னதை அவர்களிடம் சொன்னான் ...,.இதைக்கேட்டதும் ராஜவேலுவிற்கும் தங்கதுரைக்கும் கோவம் வர உடனே அவனை உண்டு இல்லை என்று ஆக்கும் முடிவில் கிளம்பினர்.......

அவர்களை தடுத்த சத்யன் பொறுமையா இருங்க திருவிழா முடியட்டும் அவன பாத்துக்கலாம் கல்யாணம் இருக்கும் சமயத்தில் பிரச்சனை வேண்டாம் என்று அடக்கினான்.....

அவன் சொல்வதும் சரி என்பதால் இருவரும் அமைதியாக இருந்தனர்....

கெட்டதிலும் ஒரு நல்லது என்னவென்றால் பிரியாவிற்கும் அரவிந்த்திற்கும் திருமணம் முடிவானதில் இருந்து தன் தங்கைக்காக தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தானோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் இருந்தது......

இந்த நிகழ்விற்கு பிறகு அரவிந்த் மற்றும் பிரியாவின் வாழ்க்கை நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கை வந்தது அனைவருக்கும்.......

பிரியாவிற்கோ இந்த கல்யாணத்தில் தான் அவனக்கு சம்பந்தம் இல்லையே அப்புறம் ஏன் என்னை காப்பாத்த நினைக்கிறானாங்க என்ற பெரிய குழப்பம் வந்தது.......


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அன்றைய பொழுதை கழித்தனர் ......

மறுநாள் மபகலில் தீமிதி திருவிழா ஆரம்பித்தது ....ஒவ்வொருவரும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற சொல்லியும் நிறைவேற்றப்பட்ட வேண்டுதலுக்கும்‌ பூமிதித்தனர்.........

மாலை முளைப்பாரி இட்ட வீட்டு பெண்கள்‌ மற்றும் அவ்வூரின் சிறுமி முதல் குமரி வரை கோயிலின் வாசலில் கும்மி பாட்டு பாடி முளைப்பாரி யை சுற்றி வந்தனர்..

ஊரே கோலாகலமாக திருவிழாவை கொண்டாடினார்கள்.....

கிருஷ்ணனின் தங்கை நீலவேணி மற்றும் அவரின் கணவன் ராஜேந்திரன் மற்றும் மகன் பிரசாத்துடன் நாளை திருவிழா என்ற நிலையில் இன்று தன் அண்ணன் வீட்டிற்கு வந்தார்கள்.....

இந்த முறை தங்கையிடம் திருமணத்தை பற்றி பேச வேண்டும் என்ற முடிவோடு கிருஷ்ணன் இருந்தார்.......

அதைப் பற்றி பேசுவதற்காக நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் ........

எப்போதும் விட இம்முறை கிருஷ்ணவேணி அவர் தங்கை குடும்பத்தை நன்றாக கவனித்தது அவர்களுக்கு மகிழ்ச்சி...

பிரசாத்திற்கு நந்தினியைப் பார்க்க தவிர்த்தான் நொடிக்கு ஒரு முறை அவன் அவளின் அறையை பார்த்துக் கொண்டிருந்தான்...... நந்தினி அவன் தன்னை தேடுவதை உள்ளறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்......

பின் வெளியே வந்து வாங்க அத்தை வாங்க மாமா என்று அவர்களை மட்டும் அழைத்து விட்டு பிரசாத்தை சட்டை செய்யாமல் உள்ளே சென்றாள்.....

பிரசாரத்தோ என்னையா கண்டுக்காம போற தனியா மாட்டுவல அப்போ கவனிச்சிக்கிறேன் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.......

அன்று இரவு உணவிற்குப் பிறகு கிருஷ்ணன் ராஜேந்திரனிடம் மெதுவாக நந்தினிக்கு இந்த வருஷம் கல்யாணத்தை முடிக்கலாம்னு நினைக்கிறேன்.... என்றார்...

நீலவேணிக்கோ நந்தினியை தன் வீட்டிற்கு மருமகளாக்க ஆசை ஆனால் அண்ணி தன் அண்ணன் மகன் சத்யன்னுக்கு தான் கொடுக்க ஆசைப்படுகிறார் என்று அமைதியாக இருந்தார்....

இந்தப் பேச்சைக் கேட்டதும் பிரசாத்திற்கு என்னவோ போல் இருந்தது .....எப்படியாவது நந்தினியை விரும்புவதைப் பற்றி மாமாவிடம் சொல்லி தனக்கு திருமணம் பண்ணி தர சொல்லனும் என்று நினைத்துக்கொண்டான்......

இவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணனோ ராஜேந்திரனிடம் " மச்சான் நம்ம பிரசாத்துக்கு நந்தினியை கொடுக்கலாம்னு ஆசைப்படுறேன் உங்க இஷ்டம் தெரிஞ்சா "..... என்றார்..


ராஜேந்திரன்க்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை தன் மனைவியையும் மகனையும் அவர்களின் சம்மதத்திற்காக பார்த்தார் ..... பிரசாத்தின் முகத்தை வைத்தே அவனுக்கு நந்தினியை எவ்வளவு பிடிக்கும் என்பதை புரிந்துகொண்டு. ....." இதெல்லாம் கேட்கணுமா மச்சான்" என்று தன் சம்மதத்தை மறைமுகமாக சொல்கிறார்.....

பிரசாரத்திற்கு நம்பவே முடியவில்லை சிறுவயதிலிருந்து நந்தினியை காதலித்தான் ....... ஆனால் தன் அத்தைக்கு சம்மதம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும் இருந்தாலும் எப்படியாவது நந்தினியின் மனசுல இடம் பிடித்து அவளையே திருமணம் பண்ணிக்கனும்னு ஆசைப் பட்டான்.......அதுவே கூடிவரும் போது அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி........


இருந்தும் நந்தினிக்கு சத்யன் மேல் ஏதும் பிரியம் இருக்குமோ என்று அவன் மனதில் இருந்தது........ அதை அவளிடமே கேட்டு தெரிஞ்சுக்கணும் என்று நினைத்தான்...... அதற்காக நந்தினியிடம் பேச வேண்டுமென்று அவளை தனியாக சந்தித்து கேட்கவேண்டும் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்......

பிரசாத் நந்தினியிடம் பேசுவானா???

தொடரும்...........
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends

நான்தான் கார்த்திகா....

முதல்ல உங்க எல்லாருக்கும் பெரிய சாரி என்னால யூடி தொடர்ந்து கொடுக்க முடியல..... ரொம்ப நாள் கேப் விட்டுட்டேன் .....ஃபர்ஸ்ட் என் தங்கச்சி குழந்தை பிறந்து ஹாஸ்பிடல்ல இருந்தாங்க அவங்கள பார்க்கிறதுல டைம் போயிடுச்சு..... அடுத்து என் மொபைல் ரிப்பேர் ஆயிடுச்சு பாதியோடு டைப் பண்ணிட்டு இருக்கிற தண்ணி விழுந்தது ஒன்னும் செய்ய முடியல திருப்பி பழையபடி எல்லாத்தையும் டைப் பண்ண ரொம்ப நாள் ஆகிவிட்டது கொஞ்சம் flow விட்டு இருக்கும்னு நினைக்கிறேன்....


அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க....
இனி ரெகுலராய் யூடியோடு வரேன்...


💖உன்னுள் தொலைந்தேனே 💖அத்தியாயம் 6 கொடுத்துள்ளேன்....

தங்களின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் 👇👇👇👇👇

 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖 உன்னுள் தொலைந்தேனே💖


அத்தியாயம் 7

மறு நாள் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது.. இங்கு கிருஷ்ணனின் வீட்டில் கிருஷ்ணவேணியும் நீலவேணியும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். காலை உணவிற்கும் பணியாரம் மற்றும் இட்லி செய்துகொண்டிருந்தனர், நந்தினியும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் அப்போது, நீலவேணி நந்தினியிடம் "பிரசாத் எழுதிருச்சிருப்பான் இந்த காப்பி தண்ணிய எடுத்துட்டு போய் குடு " என்றார்.

நந்தினியும் " நானா நான் போல நீங்களே போய் கொடுங்க" என்றாள். "அட என்ன இப்படி வெக்கப் படுற நாளைக்கு நீ தானே இதெல்லாம் அவனுக்கு செய்யணும் இப்போதிலிருந்தே பழகிக்கோ, போ அவன் எந்திரிச்சதும் காபி கேட்பான் போய் கொடு" என்று அனுப்பி வைத்தார் நீலவேணி .

நந்தினி சென்றதும் கிருஷ்ணவேணியும் நீலவேணியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். கிருஷ்ணவேணிக்கோ மகள் வாழ்க்கை நல்லபடியா இருந்தா போதும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டார்.

'சத்யனை விட பிரசாத் தன் மகளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இரவு கல்யாண பேச்சு எடுக்கும் போது அவன் முகத்தில் வந்து போன ஒளியே சொன்னது'.

அங்கு பிரசாத்தின் அறைக்கு நந்தினி காப்பியை , உள்ளே எடுத்துட்டு போக தயங்கிக்கொண்டே வாசலில் நின்று எட்டிப் பார்த்தாள். பிரசாத்தை அவன் அறையில் காணவில்லை. 'காலையிலேயே எங்க போய் இருப்பாங்க' என்ற குழப்பத்தோடு அவள் நன்றாக எட்டிப்பார்த்தாள்.

இவனோ அவள் கையில் காபியோடு வரும்போதே தெரிஞ்சுகிட்டான் தனக்கு தான் கொண்டு வருகிறாள் என்று உடனே கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.

நந்தினி எட்டி பார்க்கவும் வேகமாக அவளை உள்ளே இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு காப்பி அவன் மேலேயே கொட்டியது.

அதைப் பார்த்ததும் நந்தினிக்கு ஒரே பயம் . காப்பி வேறு சூடாக இருந்தது அவன் முகத்தைப் பார்க்கவும் அவனும் ஒரு நிமிடம் கோபப்பட்டாலும் தன் முட்டாள்தனத்தை நினைத்து ஒன்றும் சொல்லாமல் அமைதியாக குளியலறைக்குள் சென்றான்.

உள்ளே குளியலறையில் 'உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல பிரசாத் அவர்தான் கைல காப்பி டம்ளர் வைச்சிருந்தத பார்த்தியே அப்புறம் ஏன் வேகமாக இழுத்த ' என்று தன்னையே நொந்துக்கொண்டு காபி கொட்டிய சட்டையைக் கழட்டி விட்டு மேலே ஒரு துண்டை மட்டும் போட்டுக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே , அவள் சென்று இருப்பாள் என நினைத்து வந்தான். அவளோ அங்கேயே இருக்கவும் என்ன என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான். அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் "ஒன்னும் இல்ல காபி ரொம்ப சூடா இருந்துச்சு நல்லா சுற்றுச்சா என்று தயங்கி தயங்கி கேட்டாள்".

"ஆமா ஆமா ரொம்ப எரியுது வந்து எனக்கு மருந்து தேச்சு விடு "என்று கண்கள் சிரிக்க சொன்னான்.

அவன் அப்படி சொன்னதும் இவளோ முழித்தாள்.

அப்புறம்தான் அவளுக்கே புரிஞ்சது அவர் வேகமா இழுத்ததால் தான் நம்ம விழுந்தோம் என்று.

"உடனே என்னை ஏன் அப்படி இழுத்தீங்க அதனால் தான் உங்க மேல கொட்டிட்டேன் , அதனால் மருந்து போட முடியாது நீங்களே போட்டுக்கோங்க" என்று சொல்லி வெளியே போக திரும்பினாள்.

அவள் திரும்பவும் அவள் போக முடியாதபடி அவள் கையை பிடித்தான்.

உடனே நந்தினியும் வெட்கப்பட்டுக்கொண்டே "என்ன பண்றீங்க விடுங்க, நான் போகணும் கீழே அம்மாவும் அத்தையும் சமைச்சுட்டு இருக்காங்க " என்று கையை உருவ முயன்றாள் ஆனால் அவளால் முடியவில்லை.

" சரி நான் விடனும்னா எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ".

" என்ன பதில் சொல்லணும் " என்றாள் வெட்கப்பட்டுக்கொண்டே.

"என்ன உனக்கு புடிச்சிருக்கா" என்றான்.

" பிடிக்காமல்தான் நீங்க என் கைய புடிச்சிருந்தும் நான் அமைதியா இருக்கேனா " என்று சொல்லி விட்டு கையை உருவிக் கொண்டு ஓடிவிட்டாள்.

முதலில் அவள் சொன்னது புரியாமல் பின்பு அவள் சம்மதத்தை புரிந்து மகிழ்ச்சி அடைந்தான்.

அதே மனநிலையோடு திருவிழாவிற்கு கிளம்பினான்.


தமயந்தி குடும்பமும் நீலவேணி குடும்பமும் ஒரே தெருவில் தான் உள்ளார்கள்..

நீலவேணிக்கு தமயந்தி என்றால் பிடிக்கும் , ஆனால் கிருஷ்ணவேணிக்கு பிடிக்காத காரணத்தினால் ஊருக்கு வந்தால் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பார். அவ்வளவாக பேசிக் கொள்ள மாட்டார், ஆனால் பிரசாத்தும் அரவிந்தம் நல்ல நண்பர்கள்.

பிரசாத் குளித்துக் கிளம்பி கீழே வந்தான் . அவன் வரவும் இவர்கள் காலை டிபன் வைக்கவும் சரியாக இருந்தது. டிபனை சாப்பிட்டு விட்டு ,"அம்மா நான் போய் அரவிந்த்தை கொஞ்சம் பார்த்துட்டு வரேன்". என்றான் அரவிந்த் என்றதும் கிருஷ்ணவேணியின் முகம் சுருங்கியது. அதை பார்த்த நீலவேணி , "அண்ணி அரவிந்தும் பிரசாத்தும் சின்ன வயசுலருந்தே நல்ல நண்பர்கள்". என்றார்.

கிருஷ்ணவேணி ஒன்றும் கூறாமல் அமைதியாக உள்ளே சென்றார்.

பிரசாத் நேராக அரவிந்த் வீட்டிற்கு வந்தான். அவனைப் பார்த்ததும் தமயந்தி ,"வா பிரசாத் ஏன் வெளியவே நிக்கிற உள்ள வா மோர் குடிக்கிறியா" என்றார்.

"இல்லத்த இப்பதான் டிபன் சாப்பிட்டு வந்தேன் அரவிந்த் எங்க" என்று கேட்டான்..

"அவன் இப்பதான் சத்யனை பார்க்க அவன் வீட்டுக்கு போனான், நீ வரேன்னு சொல்லி இருந்தா இருந்திருப்பானே, சொல்லலையா?,".

" இல்லத்த நான் நைட்டு தான் வந்தேன் அவனுக்கு போன் பண்ணனும்னு நெனச்சேன் பண்ணல நான் அங்க போய் அவனைப் பார்க்கிறேன்" என்று விட்டு சென்றான்..

அவன் சென்றதும் மகாவிடம் வந்த தமயந்தி "என்ன பன்ற காலையில இருந்து இன்னும் குளிக்கலையா , சீக்கிரம் கிளம்பு எல்லாரும் கோயிலுக்கு போயிட்டு இருக்காங்க, உங்க அப்பா வந்தா அவ்வளவுதான் இன்னும் கிளம்பலையா கொச்சிப்பாரு சீக்கிரம் கிளம்பி வா" என்றார்..

"மா என்ன பாத்தா குளிக்காத மாதிரியா இருக்கு , நான் குளிச்சு ஒரு மணி நேரம் ஆச்சு . ஒரு மணி நேரமா இந்த பிளவுஸ் ஓட போராடிக்கிட்டு இருக்கேன். நான் கொடுத்த அளவு தைக்காம டைட்டா தட்சிட்டாரு அந்த டெய்லர்.. வர ஆத்திரத்துக்கு என்ன பண்றதுனே தெரியல நீ போம்மா நான் இந்த பிளவுஸ் பிரிச்சு போட்டுட்டு வரேன் அப்பா வர்றதுக்குள்ளே கிளம்பி இருப்பேன் நீ கத்தாதே". என்றாள்..

தமயந்தியும் , "அதுக்குதான் அவசரமாக தைக்க சொல்லி வாங்க கூடாதுன்னு சொல்றது இந்த திருவிழாவிற்கு இல்லாட்டி வேற ஃபங்ஷனுக்கு கட்டி இருக்கலாம் . அவசர அவசரமாக அதை தைக்க சொல்லி வாங்கி காசுக்கு காசும் போய் உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம , நீ எப்படித்தான் போற இடத்தில இருக்க போறியா என்னையே தான் திட்டுவாங்க போற இடத்துல என் பேரு கொஞ்சம் காப்பாத்து".

"அதெல்லாம் அத்த என்ன நல்லா பாத்துப்பாங்க . நான் பொறுப்பா தான் இருப்பேன்.. திருவிழாக்கு வாங்கின புடவை திருவிழாக்கு தானே கட்ட முடியும்.. எனக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு போயி நீசீக்கிரம் கெளம்பு, நான் கிளம்பி வந்து விடுவேன்" என்றாள்..

மகாவின் குணம் இதுதான் 'அவளுக்கு ஒன்னு வேணும் என்று நினைத்தா அதை எப்படியாவது வாங்கி விடுவாள். அதே மாதிரி யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். ரொம்ப பிடிவாதம் பிடிப்பது . கோவம் வந்துட்டா அடுத்தவங்க சொல்றது எதையுமே காதில் வாங்க மாட்டாள். சின்ன வயசுல இருந்து அண்ணனும் அப்பாவும் பயங்கர செல்லம் அவளுக்கு' .

இந்தப் பிடிவாத குணத்தினால் அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்று தெரிந்திருந்தால் இவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்து இருக்கமாட்டார்களோ என்னவோ அவள் அண்ணனும் அப்பாவும்.

தங்கதுரை வீட்டிற்குள் வரும்போதே "கிளம்பிட்டியா இல்லியா எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டாங்க நீங்க ரெண்டு பேரும் தான் இன்னும் வரவே இல்ல, என்றார்.

" நான் கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சு உங்க மக தான் இன்னும் ரூமை விட்டு வெளியில் வரல, போய் என்னன்னு பாருங்க" என்றார்.

"வந்ததும் என்ன போட்டு கொடுக்கிறதே உனக்கு வேலை நான் ரெடிப்பா அம்மா சும்மா சொல்றாங்க" என்று வந்த தன் மகளின் அழகை பார்த்து வியந்தார்..

தமயந்தியும் அவளின் அழகில் மெய் மறந்து அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தார்..

"தமயந்தி வந்ததும் மகளுக்கு சுத்தி போடு ஊரு கண்ணே நம்ம பொண்ணு மேலதான் இருக்கும் " என்றார்..

அதைக் கேட்டதும் மகாவிற்கு வெட்கமாகிவிட்டது "போங்கப்பா" என்று சொல்லி வெளியே ஓடிவிட்டாள்..

'அட என் பொன்னுக்கு வெக்கம் எல்லாம் படுதே' என்று அதிசயித்தார்..

அங்கே பிரசாத் அரவிந்தை பார்த்ததும் அவனை கட்டிப் பிடித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

அரவிந்தோ "என்னடா ஆச்சு உனக்கு , என்றான்.

நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னோட பல நாள் கனவு நிறைவேறப் போகுது.

அப்படி என்னடா சந்தோஷமான விஷயம் சொல்லு நானும் சந்தோஷப்படுவேன் நந்தினி உன் லவ்வை அக்சப்ட் பண்ணிட்டாங்களா ?, இந்த வருஷமாவது உன் லவ்வ அவங்ககிட்ட சொல்லிட்டியா?, இல்லையே நேத்து நைட்டு தானே வந்த அதுக்குள்ள நீ பேசி இருக்கவே மாட்டியே?" என்றான்.

அப்போது வெளியே வந்த சத்தியனும் அவன் முகத்தை பார்த்து "என்னடா முகம் பயங்கர பிரகாசமா இருக்கு ?என்ன விஷயம்?" என்று வம்பு இழுத்தான்.

"ஆமாடா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அதுக்கு காரணம் எங்க மாமாதான்".

" என்னடா சொல்லுற மாமாவா அப்படி என்ன பண்ணாரு உன் சந்தோஷத்துக்கு ? நந்தினியை கல்யாணம் பண்ணித்தறேன்னு சொல்லிட்டாரா ? என்றான்..

"ஆமாண்டா கரெக்டா சொன்ன! நந்தினியை எனக்கு கல்யாணம் பண்ணித்தர மாமா கேட்டாரு , அத்தைக்கும் இதில முழு சம்மதம் சொல்லிட்டாங்க!.அத்தை அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்கனு நான் நினைக்கவே இல்ல". என்றான்.

"அது மட்டும் என் சந்தோஷத்துக்கு காரணம் இல்லை, நந்தினிக்கும் என்ன ரொம்ப பிடிச்சிருக்கு! அவகிட்ட நேரடியாவே கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டு, அவ சம்மதத்தை கேட்டு தான் இங்கே வரேன் ,எனக்கு அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்குடா" என்றான்.

அரவிந்த்க்கும் சத்யனுக்கும் அவனை நன்கு தெரியும் .அவன் நந்தினியை எவ்வளவு விரும்பினான் என்று ,, ஆனால் சத்யனுக்கு மனதில் சிறு நெருடலாக இருந்தது ,, அத்தை நந்தினியை தனக்கு பேசினாள், அப்பாவிடம் எப்படி மகாவை பற்றி பேசி சம்மதம் வாங்க வைப்பது? என்று ஆனால் இப்போது எல்லாருடைய ஆசையும் நிறைவேறப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான் . ஆனால் அதில் ஒரு சின்ன குறை அரவிந்த்க்கும் ப்ரியாவிற்கும் வாழ்க்கை எப்படி போகும் என்று..

பின்பு சத்யன் " உனக்கும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும் டா ,எங்க அப்பா எனக்கும் மகாவுக்கும் கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க! திருவிழா முடிஞ்சு வர முகூர்த்தத்தில் கல்யாணம் ". என்றான்.

"என்னடா சொல்ற இன்னும் ரெண்டு நாளில் கல்யாணமா என்றான்" ஆச்சரியமாக..


அது மட்டும் இல்ல அரவிந்துக்கும் ப்ரியாவிற்கும் திருமணம்,! ஒரே மேடையில் இரண்டு திருமணம் என்று முடிவு பண்ணி இருக்காங்க" என்றான்..


இதைக்கேட்டதும் பிரசாத் அரவிந்தனை பார்த்தான் . அரவிந்தனும் அவன் தன்னைப் பார்ப்பதை தெரிந்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டான் . சத்யனை இவர்கள் இருவரையும் பார்த்து கண்டும் காணாமல் இருந்தான்...

அரவிந்த் பார்க்காத வண்ணம் சத்யன் பிரசாத்திடம் கண் ஜாடை காட்டிவிட்டு , "மச்சான உள்ள போயி போன் எடுத்துட்டு வரேன் " என்று சென்றான்..

அவன் உள்ளே சென்றதும் அரவிந்திடம் "என்னடா நடக்குது இங்க, உனக்கும் பிரியாவுக்கும் கல்யாணமா ? உனக்கு தான் அவளை பார்த்தாலே பிடிக்காதே, அப்புறம் எப்படி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன? அவளை பழிவாங்க நினைச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா?, அப்படி ஏதோ உன் மனசுல இருந்துச்சுன்னா இப்பவே இந்த கல்யாணத்தை நிறுத்திரு ஏன்னா இதுல உன் தங்கச்சியோட வாழ்க்கையும் இருக்கு" என்றான்..

அதற்கு அரவிந்தோ, " என்னடா நினைக்கிறீங்க என்னை பத்தி, என்ன என்னவோ வில்லன் ரேஞ்சுக்கு பேசுற , எனக்கும் பிரியாவுக்கும் ஒத்துவராது தான், அதெல்லாம் அப்ப, இப்போ அவ தான் என் பொண்டாட்டினு அப்பா முடிவு பண்ணினாரோ அப்போதிலிருந்து என் மனசை கொஞ்ச கொஞ்சமா மாத்த முயற்சி பண்ணிட்டு இருக்கிறேன். அவளை பழிவாங்கலாம் நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல , அவ என்ன பழி வாங்கம இருந்தா போதாதா". என்றான்..

" இந்த ஜென்மத்துல அவதான் என் மனைவி,, அவளை நான் விரும்பிலாம் கல்யாணம் பண்ணிக்கல,,அதே மாதிரி என் தங்கச்சிக்காகவும் கல்யாணம் பண்ணிக்கல.. ஆனா என்னோட வாழ்க்கை இனிமே அவளோட தான்னு முடிவு பண்ணிட்டேன். அதனால இத பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம் . இது அவனுக்கும் தான், சொல்லு அவன் உன்ட்ட கண்ன காமிச்சது எனக்கு தெரியாதுனு நினைக்கிறான். அதுவும் தெரியும் அவன் ஃபோன எடுக்க உள்ள போகலைன்னு தெரியும் அவனை முதல்ல வெளியில வர சொல்லு"..

உள்ளிருந்து இதையெல்லாம் கேட்ட சத்யனோ வந்து வேகமாக அவனை கட்டி பிடித்து "என்னை மன்னிச்சுடுடா ,, எனக்கும் கொஞ்சம் பயமாக இருந்தது ஒரு அண்ணன்னா என்னுடைய தவிப்பு புரிஞ்சுக்கோடா" என்றான்..

" டேய் மச்சான் எனக்கு புரியுதுடா இருந்தாலும் என்னை பத்தி தப்பா நெனைச்சது தான் வருத்தம்மா இருக்கு.. என்றான்..

"டேய் போதும் இந்தப் பேச்சு ,, இதோட விட்டுவோம் ,, நம்ம மூணு பேருக்கும் கல்யாணம் ..திருவிழா முடிஞ்சி.. அதை மட்டும் நினைச்சு பார்த்துட்டு சந்தோஷமா இருப்போம் .. சத்தியா நீயும் எதுக்கும் வருத்தப்படாத,, அரவிந்தும் பிரியாவும் சீக்கிரமே ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.. எனக்கு நம்பிக்கை இருக்கு நம்ம ரெண்டு பேரோட அவங்க தான் இந்த கல்யாணம் லைஃப நல்லா என்ஜாய் பண்ணுவாங்க,, என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ..அதனால இனிமே உன் தங்கச்சியை பற்றி கவலைப்படுவதை நிறுத்து" என்றான் பிரசாத்..

மூவரும் சந்தோஷமான மனநிலையுடன் திருவிழாவிற்கு சென்றனர்...

அடுத்த பதிவில் திருமணத்தோடு வருகிறேன்...

தொடரும்....
 

karthikaganesan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
💖உன்னுள் தொலைந்தேனே 💖

அத்தியாயம் 7 கொடுத்துள்ளேன்..
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.....

சென்ற அத்தியாத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல 🥰🥰🥰

 
Top