ஹாய் படீஸ்,
நா செளந்தர்யாசெழியன்,பிறந்தது வளந்தது இப்ப இருக்குறது எல்லாம் திண்டுக்கல் பக்கத்துல இருக்க ஒரு அழகான சேலையின் நகரமான குட்டி ஊர்ல, நா இப்ப M.A பண்ணிட்டு இருக்கேன்,
எனக்கு கதை படிக்கிறது னா அவ்ளோ பிடிக்கும் சின்ன வயசுல இருந்தே வாரமலர்,சிறுவர் மலர்ல வர சின்ன சின்ன கதைய படிப்பேன் எல்லாரும் ஓடிப்புடிச்சு விளையாடுறப்ப நா மட்டும் கதைப் புத்தகம் எங்காயவது இருக்கான்னு தேடிட்டு இருப்பேன்,
என் பிரண்டு வீட்டுக்கு போன அங்க நிறைய புக்ஸ் இருக்கும் அங்க போன நா அந்த புக்ஸ்ஸோடையே ஐக்கியம் ஆகிடுவேன்,
இத தெரிஞ்சுக்கிட்டு நா அவுங்க வீட்டுக்கு போனாலே புக்ஸ் எல்லாத்தையும் ஒளிச்சு வச்சுறுவா அது வேற கதை
அப்றம் அப்டியே டச் விட்டு போச்சு,
அப்றம் நான் 9&10 படிக்கும் போது திரும்பவும் புக்ஸ் படிக்க ஆரம்பிச்சு அதுவும் பாதியில நின்னுடுச்சு,
நெக்ஸ்ட் நா Ug LA தான் தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன்,லைப்ரேரில இருக்குற தமிழ் நாவல்ஸ் எல்லாத்தையும் ஒன்னு விடாம படிச்சேன் எப்ப பாரு புக்ஸ் தான் லாஸ்ட் பென்ச் னால கிளாஸ் நடக்குறப்ப பென்ச் அடியில வச்சு படிச்ச நாள்கள் அதிகம்,அதா மேம் பாத்துட்டு Department LA Enquiry அட்டன் பண்ணதுது எல்லாம் வேற விஷயம்
பர்ஸ்ட் நா லக்ஷ்மி சுதா நாவல்ஸ் தான் படிக்க ஆரம்பிச்சேன், அப்றம் சாண்டில்யன் நாவல் கடல் புறா, மன்னன் மகள்,யவன ராணி,இன்னும் நிறைய........
ரமணி மா நாவல் நெக்ஸ்ட் ஸ்ரீ அக்கா நாவல் நெக்ஸ்ட் இந்த சைட் இருக்குறது தெரிஞ்சு ஜாயின் பண்ணியாச்சு,
நாவல் எழுதனும்னு ரொம்ப நாள் ஆசை கனவு வீட்டுல Parents support,அப்றம் காலேஜ்ல மேம் சப்போர்ட் பண்ணி தட்டு
தடமாறி ஒரு கதைய இந்த சைட்டுல வெற்றிக்கரமா எழதி முடிச்சுட்டேன் மத்தப்படி என்னப் பத்தி சொல்ல ஒன்னும் பெருசா இல்ல,
புக்ஸ்ன்னா உயிர் அத இருந்தப் போதும் வேற எதுவும் எனக்கு தேவையில்ல,