இத்தளத்தில் இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது வணக்கம்
...
Me
நிவிராம்
BE (ECE) 2018 Batch☺
Palani.
Single
நான் நாவல் படிக்கத் தொடங்கிய காலத்தில் இந்த தளம் இல்லை. அன்று நாவல் படிக்க புத்தகம் தான் வேண்டும். இல்லையா நான் எனக்கு வேண்டியதைத் தேட பல தளத்தில் போராட வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை. பலருக்கு உலகமே இத்தளம் எனும் அளவு ஆவதற்கு ஸ்ரீ மேம் தான்
. நான் நாவல் படிக்க நண்பர்களுக்குப் பகிரும் முதல் தளம் இதுவே. ஸ்ரீகலா மேம், சீத்தாலக்ஷ்மி மேம், நிவேதா ஜெயநந்தன் மேம், ஷென்பா மேம், விஜி பிரபு மேம், பெமிலா ஜான்சன் மேம் என அனைவரின் அனைத்து நாவல்களையும் விடிய விடிய படிக்கும் பிரியை. மன்னிக்கவும் இதில் பல ஆசிரியர்கள் குறிப்பிடப் படவில்லை
...
அப்படி இருக்க... விழிப்புணர்விற்காக நாவல் எழுதத் தொடங்கிய நான் தற்பொழுது காதல் களத்தில் நாவல் எழுதிக் கொண்டு இருக்கின்றேன்... 2வது நாவல்..."மறப்பதில்லை நெஞ்சே! நெஞ்சே!
"
நிறைய ரொமான்ஸ் இருக்குன்னு என்ன தப்பா
நினச்சிடாதீங்க... எனக்கு நாவல் மூலம் மட்டுமே அனுபவம்
நிஜத்தில ஐயம் குட் அண்டு க்யூட் கேர்ள்
(இது சத்தியமான உண்மை
... சூடம் அடிச்சிக் கூட சத்தியம் பன்ற
)
எனக்கே சந்தேகம்... கிட்டத்தட்ட... 6 வருடம் சைலன்ட் ரீடர் ஆ இருந்த நான் எப்படி இப்படி ஆனேன் அப்படினு
... (17 வயசுல இருந்து நாவல் படிக்குறேன்னு சொல்ல வறேன்
)
எனது நாவலைப் படித்து உங்களின் பொன்னான கருத்துக்களால் என்னை அன்பு மழையில் நனைவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி
வணக்கம்
❤❤❤❤❤❤❤