ஹாய் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பா என்னடா இவ இவ்வளவு நாள் வராமா இருந்துட்டு மன்னிப்பு கேட்பா அப்படின்னு பாத்தா நன்றி சொல்லறானு தான நினைக்கிறேங்க நான் தேங்க்ஸ் சொன்னது இவ்வளவு பொறுமையா இருந்ததுக்கு .
நிறைய பேர் மனசுக்குள்ள என்ன வறுத்து எடுத்திருப்பீங்க இன்னும் கொஞ்சம் பேர் அப்பாடா தொல்லை ஒழிஞ்சுது அப்படின்னு நினைச்சுருப்பீங்க
மனசுல வறுத்தவங்களுக்கு ஒரு ஃப்ரீ அட்வைஸ் இனிமே வறுக்கருத மனசுக்குள்ள செய்யாதீங்க கருத்து திரில சொல்லிவிட்டு போங்க
அடுத்தது தொல்லை ஒழிஞ்சுதுனு நினைச்சவங்களுக்கு இதோ வந்துட்டேன்
வாசிப்பவர்கள்(வா)- யூடியோடயா???????????.,.....
இல்ல
(வா) - அப்புறம் எதுக்கு இந்த பக்கம் வந்த
இதில ஃப்ரீ அட்வைஸ் வேற எங்களுக்கு அட்வைஸ் பண்ணறியே நீ சொன்ன சொல்ல காப்பாத்தரியா
சாரி.......
(வா) - ஆ ஊ னா இத ஒன்ன சொல்லிட வேண்டியது சரி சரி வந்தது தான் வந்துட்ட என்ன விஷயமா வந்த சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு கிளம்பு நாங்க அடுத்த வேலையை பாக்க போகனும்
நான் வந்ததது தேங்க்ஸ்...
(வா) - என்ன தேங்க்ஸ் சொல்லத்தான் வந்தியா இதுக்கு நீ வராமலே இருந்தீருக்கலாம்
பொறுமை பொறுமை சகோதர சகோதரிகளே மற்றும் நண்பர்களே
(வா) - எல்லாம் சரிதான் சீக்கிரம் விஷயத்த சொல்லு
சரி
அதாகப்பட்டது சில பல சொந்த பிரச்சினைகள் காரணமாக என்னால தொடர்ந்து நான் சொன்ன படி யூடி கொடுக்க முடியாம போயிடுச்சு ஆனால் அத பொருட் படுத்தாம இருந்த என் வாசகர்களுக்கு என் மிக பெரிய நன்றி
ஏற்கனவே நான் படிச்சுட்டு இருக்கிறது உங்களுக்கு தெரியும் நினைக்கறேன் இப்போ அதோட சேர்த்து பண நெருக்கடியும் வந்ததால வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் அதுக்காக கடன் கிடன் லெவலுக்கு கற்பனை பண்ணிராதீங்க அந்த அளவுக்கு போய்ட கூடாது இல்ல அதோட எங்க வீட்டுல எப்பவுமே கடன் என்ற வார்த்தையே வர கூடாது அப்படின்னு ஒரு சட்டமே உண்டு அது எங்க வீட்டுக்கு மட்டும் தான்
அதானால திருப்பியும் என்னோட எல்லா அட்டவணையும் மாற்ற. பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது அதுல கதைய தொடர்ந்து எழுத என்னால நேரம் ஒதுக்க முடியலை இப்போ தான் கதை எழுதறவங்களோட கஷ்டம் புரியுது முன்னெல்லாம் நானே கதைய நடுல கேப் விட்டு எழுதினா அப்படி எழுதறவங்க மேல் கோப. பட்டிருக்கேன் ஆனா இப்போ யோசிக்கும் போது ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கு அதோட என்னவிட எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமான கஷ்டம் அதெல்லாம் தாண்டி நல்ல நல்ல படைப்ப. பொழுதுபோக்கு அம்சமாகவும். சமுக சிந்தனைய தூண்டற மாதிரியும் நாட்டு நடப்பு , அவலங்களை எடுத்து. காட்டுவதாக எழுதறதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு அவங்க எல்லாருக்காகவும் என்னால இப்போதைக்கு முடிஞ்சது கடவுள் கிட்ட பிராத்தனை பண்ணறது தான்
என் சுமை கூடி விட்டதால் என்னால முன்னால சொன்ன மாதிரி யூடி. தர முடியாது மன்னிக்கவும் அதோட இன்னொன்னையும் புரிந்து கிட்டேன் முந்திரி கொட்டை தனமும் கூடாதுன்னு ஏன்னா கதைய மூனு பார்ட்டா கொடுக்கிறதா சொல்லி இருந்தேன் இல்லையா இப்போ அதுல முன்ஜென்ம பார்ட்ட கொடுக்க முடியாது சாரி சாரி ஆனா அத தனி கதையா கொடுக்கலாம் என்று நினைச்சு இருக்கேன் ஆனா கடவுள் என்ன வைச்சுருக்கார்ன்னு தெரியலை அதனால அது நடக்கும் போது பாத்துக்கலாம்கறது என்னுடைய எண்ணம்
இனி கதைய ரிஷியோடது ப்ளஸ் ரகுராம் வர்மாவோடது மட்டும் தான் இரண்டே பார்ட்டா முடிச்சுடறேன்
முதல கொடுத்த மாதிரி இனி ஞாயித்து கிழமை மட்டும் தான் கம்பல்சரி யூடி அதோட இந்த கதைய டிசம்பர் கடைசிகுள்ள முடிக்க முடியாது அதானல கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள்
சாரி சாரி சாரி சாரி ...........
(வா) - சப்பா இப்பவே கண்ண கட்டுதே இந்த கதை ஒழுங்கா எழுதி முடிப்பயா???????.....
தெரியலை
அடிங்க ...............