All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Teaser!

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

கதைகள் எழுத பிடிக்கும்...
ஆனா முழுசா எதையும் எழுத மாட்டேன்...
அப்பிடியே நான் கஷ்டப்பட்டு
முதல் தடவை எழுதிய கதை,
கதை என்றால் என்னவென்றே தெரியாமல்
ஏதோ மனசுக்கு தோன்றியதை வைத்து
நான் முதல் முதலில் எழுதியது
'காற்றில் மலர்ந்த மலர்' ஸ்கூல் லைப்ரரிக்காக எழுதியது...
எல்லாரும் நல்லா இருக்கின்னு சொன்னாங்க....
ஆனா எனக்கு திருப்தியளிக்கவில்லை....

அடுத்தது டைம் கிடைக்கும் போது
புத்தகத்தில கிறுக்கினது
'கை பிடித்த காதலன்'
முழுசா முடிக்காமலே பாதியில் விட்டிட்டேன்....

அதுகப்ரம் நிறைய கதை எழுதி
அதை கிழிச்சி போட்டு...
அம்மாடியோய்..... அதுக்காக நிறைய புக்ஸ் வேஸ்ட்...

இப்போ தான் நான் நல்ல கதை
எழுதறேன்ன திருப்தியே எனக்கு வந்தது...
அதுக்கெல்லாம் நீங்க தான் காரணம்...
ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்....

இப்போ நான் எழுதிக் கொண்டிருக்கும்
'என் விழியை நீங்கி நீ விலகாதே...' ,
தொடக்கத்தி்லே நின்று கொண்டிருக்கும்
'காதலா நெஞ்சன்பில் கலந்திலேன்...'
கதைக்கும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு ரொம்ப பெரிது...
நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தைகள் இல்லை எனக்கு....

அதுவும் ஷௌரி அனி பேபியை
எல்லாருக்கும் பிடிச்சிருக்கு....
இந்த கதையை நான் எழுதும் போதும்
நல்லா எழுதுவேனா இல்லையான்னு
ரொம்ப பயந்து பயந்து தான் எழுதினேன்....
ஆனா நீங்க கொடுக்கிற கமெண்ட்ஸ் லைக்ஸ்
பார்க்கும் போது நானும் நல்லா எழுறேன்னு தான் தோணுது....
அதுக்கு ரொம்ப நன்றி.... உங்கள் ஆதரவுக்கு....

சரி.... சரி.... என்னோட சுயவிளக்கம் போதும்....
நான் இப்போ எதுக்கு வந்தேன்னா.....
ஒரு கதை...
என்ன மறுபடியுமா????? னு யோசிக்காதீங்க....
டீசெர் தான்...
உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த
ரெண்டு கதையையும் முடிச்சிட்டு ஆரம்பிக்கலாம்...
அதுக்கு தான் வந்தேன்....
டீசெர் போடுறேன்.... பார்த்திட்டு எப்பிடி
இருக்கின்னு சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

இவ்ளோ நேரம் நான் மொக்க போட்டத
பொறுமையா படிச்சதுக்கு ரொம்ப பெரிய தேங்க்ஸ்.....
இதோ டீசெர் ஓட ஓடி வரேன்....:smiley27:

நன்றி :):)
 
Last edited:

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம்......

1528193443943.png

முன் காலை நேரக்காற்று மேனியை உரசி குளிரச்செய்ய அதை சுகமாய் ரசித்தபடி முகத்தில் புன்னகை தவள கைகள் இரண்டையும் சூடுபறக்க உரசியவாறு கைகளை இறுக கட்டிக் கொண்டபடி தன் தோளில் மாட்டியிருந்த பேக்பக்கை (backpack) சரி செய்தவள் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கேமராவினால் தன்னை சுற்றி உள்ள இடத்தை புகைப்படம் எடுக்க முனைய அவனோ அவளை பார்த்து குறுஞ்சிரிப்பை உதிர்த்தவன் தன் ராயல் என்பீல்ட்டின் வேகத்தை இன்னும் அதிகரித்தான்.

அதில் நிலை தடுமாறி அவனின் மேல் ஆழமாய் மோதியவள் “டேய் பாத்துப்போடா பக்கி...” என்றபடி பயத்தில் அவனின் இடையை கட்டிக் கொண்டு அவனின் முதுகில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.

அவனுமே அவளின் இந்த இணக்கத்தை ஆழ்ந்து ரசித்தவனாய் மெதுவாகவே தன் பைக்கை ஓட்டினான்.

அதில் இன்னுமின்னும் அவனுடன் ஒட்டிக் கொண்டவள் அவனின் நெஞ்சில் தன் கைகளை அழுந்த படியவிட்டபடி “ரொம்ப அழகா இருக்கில்ல..” என்றாள் மென் குரலில்.

“ம்ம்ம்... ரொம்ப...” அவன் மயக்கத்துடன் முனுமுனுக்க அதைக் கேட்டு அவனின் முதுகில் ஒரு மொத்து மொத்தியவள் “நான் இந்த நேச்சர (nature) சொன்னேன்... நீ எதடா சொன்ன பக்கி...” அவள் அவனை சந்தேகப் பார்வை பார்த்தவாறு கடுப்புடன் கேட்டு வைக்க,

அதில் அசடு வழிந்தவன் “நான் கூட அந்த இயற்கையை தான்டி சொன்னேன்..” என்று ‘இயற்கையில்’ சிறு அழுத்தம் கொடுத்து கூறியவன் ரியர் வியூ மிரெர்ரில் (rear view mirror) அவளை பார்த்து விஷம புன்னகை சிந்த அதில் கோபம் கொண்டவள் அவனை பார்த்து ஒற்றை விரலசைத்து “இப்பிடியெல்லாம் லூசுத்தனமா டபுள் மீனிங்ல பேசின பாதியில கழட்டி விட்டுடுவேன்டா...” எனவும்
இப்போது முறைப்பது அவன் முறையாயிற்று.

“நீ இன்னமும் எனக்கு ஓகேன்னு கூட சொல்லல மை டியர் ஜானு... அத மறந்திடாத...” என தன் எண்ணத்தை சற்று கோபம் கொண்ட குரலில் கூற அதை கேட்டு அவனுக்கு பழிப்பு காட்டியவள் “முதல்ல நீ ஒழுங்கா லவ் பண்ணி தொலைடா... அப்றோம் நான் உனக்கு ஓகே சொல்றேன்...” என அவள் தன் ஆதங்கத்தை கொட்ட அதில் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் “இனிமே தினமும் என்னோட லவ்வ நீ பார்ப்ப ஜானு... இந்த சந்தீபிற்கு லவ் பண்ண ரொம்ப பிடிக்கும்... சோ நீ வொரி பண்ணிக்காத டார்லிங்ங்ங்ங்ங்ங்......” என கத்தியவன் தன் வண்டியின் வேகத்தை பலமடங்கு அதிகரிக்க அதில் அவனின் முதுகில் தன் பெண்மை பட அழுத்தமாய் மோதியவள் ஒன்றும் பேசாமல் அவனின் வயிற்றை இறுக கட்டிக் கொண்டாள்.

அதை பார்த்து அவளின் புறம் திரும்பி புன்னகை ஒன்றை சிந்தியவன் தன் வயிற்றில் இருந்த அவளின் கரத்தை மென்மையாய் எடுத்து அதில் தன் இதழை ஒற்றினான்.

அவனிற்கு பழக்கமான ஒன்று. ஆனால் அவளிற்கு முதல் முத்தம். எப்போதும் முதன்மையானதிற்கு வெகுமதி அதிகம் தான். அதில் அவனின் முதுகோடு தன் முகத்தை அழுத்தியவள் கண்களில் தோன்றிய மெல்லிய நீர்படலத்தை இமை சிமிட்டி சரி செய்தபடி அந்த முதல் முத்தத்தை பொக்கிசமாய் தனக்குள் சேமித்தாள்.

-------------------------------------------------

1528193335540.png1528193309241.png

“என்னால இதுக்கு மேல ஓட முடியல... கொஞ்ச நேரம் இங்க இருந்திக்கலாம்...” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி அங்கிருந்த மரகட்டிலில் அமர்ந்தாள்.

“ஏய்... யாருடி இவனுங்க எல்லாம்... எதுக்காக உன்ன தொரத்திறாங்க... ஆமா... நீ யாரு...” என்றான் தன் ஒட்டுமொத்த கடுப்பையும் வார்த்தையில் காட்டி.

அவளோ அவன் ஒருத்தன் இருக்கறான் என்ற நினைவே இன்றி அந்த மரகட்டிலில் மல்லாக்க படுத்தவள் அப்போது தான் நிம்மதியாய் மூச்சு விட்டாள்.

இத்தனை நேரம் ஓடி ஓடி களைத்து போயிருந்தவளுக்கு இதுவரை தோன்றாத பசி எனும் பூதம் மல்லாக்க படுத்து ஆசுவாசப்பட்டதும் தோன்ற அதில் வயிற்றை இறுக பற்றிக் கொண்டு எழுந்தமர்ந்தவள் தன் முன்னால் கோபத்துடன் நின்றிருந்தவனை பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தாள்.

அதில் அவளை சந்தேகமாய் பார்த்த ஷரன் “இப்போ எதுக்கு இப்பிடி ஒரு ஓவர் ரியாக்ட் பண்ற....” கடுப்பாய் கேட்க...

“அது... அது வந்து...” என அவள் இழுக்க...

“அதான் இவ்ளோ தூரம் இழுத்திட்டு வந்திட்டியே... இன்னமும் இழுக்காம சீக்கிரம் சொல்லித்தொலை...”,

அதில் அவனை முகத்தை சுருக்கி பாவமாய் பார்த்தவள் வயிற்றை பிடித்துக் கொண்டு “மதியம் சாப்பிட்ட ரெண்டு பார்சல் பிரியாணிக்கு இன்னமும் நான் ஒன்னும் சாப்பிடலையா அதான் பசி வயித்த கிள்ளுது...” என ராகம் போட அதில் ஆவேன பிளந்த வாயை கை வைத்து மூடியவன் “என்னது!!!! ரெண்டு பார்சல் பிரியாணியா...” திறந்த வாய் மூடாது கேட்க...

அப்பாவியாய் ‘ஆம்’ என தலையசத்தவள் “எப்போவும் கொறைஞ்சது மூணு பார்சல் சாப்பிடுவேன்... ஆனா இன்னிக்கு வீட்ட விட்டு ஓடி வார அவசரத்துல கொஞ்சமா தான் சாப்பிட வேண்டியதா போய்டிச்சு..” என்று சோகமாய் மொழிய அதை கேட்டு கண்ணில் வழிய தயாரான கண்ணீரை கட்டுப்படுத்தி அவளை பாவமாய் பார்த்தவன்,

‘அடி சண்டாளி... ரெண்டு பார்சல் பிரியாணிய ஏப்பம் விட்டிட்டு எப்படி பசிக்கிதுன்னு சொல்றா... நான் ஒன்னு கூட சாப்பிடலயேடி... சாப்பிட போன என்னை பாதியில வழி மறிச்சு இப்பிடி மாட்டிவிட்டிட்டியேடி....’ என தன்னை நினைத்தே பரிதாப்பட்டவன் அவளை ஏகத்தும் கடுப்பாய் முறைத்து விட்டு அவளுக்கு மறுபுறம் திரும்பி அமர்ந்து கொண்டான்.

அதில் எங்கே தனக்கு சாப்பாடு கிடைக்காமல் போய்விடுமோ என பயந்தவள் சட்டென படுத்திருந்த மரகட்டிலில் இருந்து எழுந்து அவனின் புறம் வந்தவள் “என்ன சார் நீங்க... ஒரு பொண்ணு பசிக்குதுன்னு சொல்லிட்டு இருக்காளே அவளுக்கு சாப்பிட சாப்பாடு வாங்கிக் கொடுக்காம இப்பிடி கல்லு மாதிரி உற்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்....” என அவள் அவனை தாஜா செய்ய முற்பட்டாள்.

அவனோ அவளின் வலையில் சிக்காமல் “சாப்பாடு வாங்கிக் கொடுக்க பிடிக்கலேன்னு அர்த்தம்..” என்று அலட்டாமல் கூற..

அதை கேட்டு நெஞ்சை பிடித்தவள் ‘அச்சச்சோ... அப்போ இன்னிக்கி எனக்கு சாப்பாடு கிடைக்காதா... சாப்பாடு இல்லாம என்னால இருக்க முடியாதே...மணி இப்போவே பதினொன்னாச்சு நான் என்ன பண்றது...’ என்று தீவிரமாய் யோசித்தவள் அவனை எப்படியாவது தாஜா செய்து இப்போது சாப்பிட்டே ஆகவேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

ஆனால் அவனோ இவளின் எந்தவொரு சமாதானத்திற்கும் மசியாமல் குத்துக் கல்லாய் அமர்ந்திருந்தவன் அவள் ஓய்ந்து போய் அமர்ந்ததும் அவளின் புறம் திரும்பி “உன் பெயரென்ன...” என்றான்.

அது தான் முக்கியம் என்பது போல்.

அதில் ஏகத்திற்கும் கடுப்பானவள் ‘நான் பசியில சாப்பாடு வாங்கி கேட்டா வாங்கி கொடுக்க மாட்டானாம்.. ஆனா அவன் என் பெயர கேட்டா மட்டும் நான் சொல்லனுமா...’ என முறுக்கியவள் ஒன்றும் பேசாது மறுபுறம் திரும்பி அமர்ந்து கொள்ள அதில் அவளை முறைத்தவன்,

“உன் பெயர சொன்னா சாப்பாடு வாங்கி கொடுக்கலாமா வேண்டாமான்னு டிசைட் பண்ண வசதியா இருக்கும்...” என அவள் எதற்கு மசிவாள் என்று ஒரு சில நிமிடங்களிலேயே கண்டு கொண்டு சாமர்த்தியமாய் அவளிடம் அவளின் பெயரை கேட்டான்.

அவளோ சாப்பாடு என்றதும் அனைத்தும் மறந்து போக சாப்பாட்டு கனவில் மூழ்கியவள் நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு “ஸ்...” என்றவள் அவனின் முகத்தை அவனறியாமல் கூர்ந்து பார்த்து விட்டு அவனின் எண்ணத்தை படித்தவளாய் “சந்திரமுகி...” என்றாள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு.

அதில் அவளை திரும்பி பார்த்தவன் “சரியான பெயரைத்தான் வச்சிருக்காங்க... சந்திரமுகி... சரியான பேய்... என்னை என்ன ஆட்டு ஆட்டினா...” என அவளுக்கு கேட்காமல் முனகியவன் அவளை பார்த்து,

“கொஞ்ச நேரம் இங்கயே இருந்துக்கோ பக்கத்தில ஏதாவது சாப்பாட்டு கடை திறந்திருந்தா வாங்கிட்டு வாறேன்...” என உள்ளுக்குள் அவளை வசைபாடிய படியே சென்றவன் அருகிலிருந்த ஒரு சிறு கடையில் இரண்டு உணவுப் பார்சல் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தவன் அங்கு அவளை காணாது திகைத்து விழித்தான்.

-----------------------------------------

1528194523895.png1528194633902.png

“அவ எங்க இருந்தாலும் கண்டு பிடிச்சு என் முன்னாடி கூட்டிட்டு வா... அவளை நான் பார்த்திக்கிறேன்...” என கர்சித்தவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெறித்தது.

பாயின் குரலில் இருந்த கர்ச்சனையில் குலை நடுங்க அவசரமாய் தலையை ஆட்டி அவனின் கட்டளையை ஏற்றுக் கொண்டவன் வெளியில் விரைந்தான்.

அவனுக்காகவே காத்திருந்த அவனின் கூட்டம் இவன் வெளுத்த முகத்துடன் வெளி வரவும் அதிர்ச்சியுடன் அவனை நோக்க அவனோ யாரையும் கண்டு கொள்ளாமல் கோபம் கொப்பளிக்க ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.

இவனின் கோபத்தை அவனது செய்கைகளிலே கண்டு கொண்ட அவனின் அடியாட்கள் ஒன்றும் பேசாது அவனின் பின்னே வந்து ஜீப்பில் ஏற ஒருவன் ஜீப்பை உயிர்பித்தான். அடுத்த நொடி அதிவேகத்தில் அந்த ஜீப் அவளை தேடி விரைந்தது.

************

“நாளைக்கு காலைல எப்பிடியும் அவனுங்கள பிடிச்சாகனும்... நம்ம பிளான்ல எந்த ஓட்டையும் விழுந்திட கூடாது..” செல்போனில் யாரிற்கும் கேட்காதளவு மெல்லிய குரலில் உரையாடிக் கொண்டிருந்தான் அவன்.

அவனின் குரலில் இருந்த தீவிரத்தை புரிந்த கொண்டவர்கள் “ப்ளாப் ஆகாது சார்... பப்ளிக் அந்த பக்கம் வராம எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டோம் சார்... நாளைக்கு எப்பிடியும் நம்ம மிஷன் சக்செஸ் ஆகிடும் சார்.... யு டோன்ட் வொர்ரி...” அவனின் தீவிரத்திற்கு சற்றும் குறையாத தீவிரத்துடன் மறுபக்கம் உரையாடியவன் அழைப்பை துண்டிக்க,

அதற்காகவே காத்திருந்தவன் போல தன் செல்போனில் இருந்த சிம் கார்டை கழற்றி வீசியவன் செல்போனை அங்கிருந்த மணலில் விசிறியவாறு தன் பேக்பக்கை தோளில் ஏந்திக் கொண்டவன் கண்களில் கூலரை அணிந்தபடி அங்கிருந்து அகன்றான்.

இவனிற்கு எதிர் புறத்தில் நின்றிருந்தவள் “எல்லா டிடைல்ஸும் கலெக்ட் பண்ணிட்டேன்... யா... நான் நாளைக்கு மோர்னிங் கிளம்பி சென்னை வந்திடுவேன்... எந்த பிரச்சினையும் இல்ல... நான் சேபா தான் இருக்கேன்... நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ... ம்... பாய்...” அழைப்பை துண்டித்தவள் தான் அணிந்திருந்த ஷாலை கொண்டு தலையை மறைத்தவாறு முக்காடிட்டவள் அவனிற்கு எதிர்ப்புறமாய் விரைந்தாள்.

*************

Mahisri

Active member
முன்னோட்டம்......

View attachment 857

View attachment 856View attachment 855

View attachment 858View attachment 860

****Super Shamu..athum 2nd teaser Chandramukhi character ..:p
All the best Dr...:smiley35::smiley7:
 
shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank you so much sis...
keep supporting me...
:smile1:
 
Top