All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி, வலியின் உச்சத்தில் பிரசவித்தாள், தனது ஆண்மகவை.

லதாவும், ராஜனும் மிகுந்த சந்தோசத்தில் இருந்தனர்.

ஆர்வமாக குழந்தையை வாங்கிய ரஞ்சனியின் கைகள், குழந்தையை உற்றுப் பார்த்ததும் உலகையே வெறுத்தாள்.

ஓரடி நீளமான குழந்தை, அதன் ஆறடி தந்தையின் நகலாகவே பிறந்திருந்தான். குழந்தையை திரும்ப தாயிடம் கொடுக்க முற்பட்டவளுக்கு, குழந்தையின் அழுகையும், மார்பின் ஈரமும், அதை செய்யமுடியாமல் தடுத்தது.

யாரை வாழ்நாளில் திரும்ப பார்க்கவே கூடாது என நினைத்தாலோ, அவனையே கையில் ஏந்தி மார்பில் அணைக்கிறோம் என நினைத்தவள், உண்மையில் தன்னையே வெறுத்தாள்.

குழந்தைக்கு வாயை துடைத்து, ஏன்??? என்னைப்போல கண், காது, ஏதேனும் ஒன்று வந்திருக்கக்கூடாதா, என கண்களால் குழந்தையிடம் வினவினாள்.

குழந்தை, ரஞ்சனியின் கேள்விக்கு பதிலாக சிரிப்பை வழங்கியது. அதன் சிரிப்பு, முதல்முறை தனக்கு முத்தமிட்ட பவித்ரன், பின் வெட்கமா? கேலியா? யாதென பிரித்தறிய முடியாத ஒரு சிறு சிரிப்புடன், ரஞ்சனிக்கு நீருடன் வைர நகையை கொடுத்ததை நினைவூட்டியது.

ரஞ்சனியின் மனதில் காருக்குள் அன்று நடந்த காட்சி, அவனது பிரகாசமான முகம், மேலும் நினைவுகளை அப்புறப்படுத்த கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

கதவைத் தட்டும் ஓசையில் நிகழ்காலத்திற்கு தப்பித்து வந்தாள்.

வீடுவந்தவளுக்கு ஆரத்தியுடன், ஒரு லெட்டரும் கொடுத்தாள் நந்தினி.அது வேறொன்றுமில்லை, M.B.A தொடக்க வகுப்பகளுக்கான கல்லூரி அறிவிப்பு. கல்லூரி இன்னும் ஒருமாதத்தில் தொடங்க இருப்பதாக, கடிதத்தில் அறிவித்திருந்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனியும், லதாவும் குழந்தையை மாத சோதனைக்கு மருத்துவ மனை அழைத்து வந்திருந்தனர்.

ரஞ்சனிக்கு 11 மணிக்கு மருத்துவரைப் பார்க்க நேரம் தரப்பட்டிருந்தது. ஆனால் மணி 12 ஆகியும் அழைக்கப்படவில்லை. அவர்களைத் தவிர யாரும் அந்த காத்திருப்பு அறையிலும் இல்லை. அடுத்த அறைமணிநேரத்தில் குழந்தையுடன் ரஞ்சனி மட்டும் அனுமதிக்கப்பட்டாள்.

ரஞ்சனி, பரசவத்திற்கு பிறகு முதல்முறை வருவதால், இதுதான் இங்கு முறையோ என நினைத்தவண்ணம் உள்ளே நுழைந்தாள்.

அங்கு டாக்டர் இல்லை. யாருமே இல்லை. என்னவென புரியாமல் இருந்தவளுக்கு, பதிலாக உள்ளறையிலிருந்து ஜார்ஜ் வெளிப்பட்டான்.

ஜார்ஜ் நேராக வந்து மருத்துவர் இருக்கையில் அமர்ந்தான். ரஞ்சனியைப் பார்த்து ஹலோ என அவன் கைகொடுக்கவும், ஹலோ டாக்டர்!!என கைகொடுத்தவள் , குழந்தையை அவன்புறம் நீட்டினாள்.

தன்னை டாக்டர் என நினைத்த ரஞ்சனியைப் பார்த்து, அவன் விழுந்து விழுந்து நகைத்தான்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபத்தி ஒன்பதாம் பகுதி...

பவித்ரன் மிகவும் ஆவலாக காத்திருந்தான். அவன் அடுத்த ஆட்டத்திற்கு தயராகிவிட்டான். ஆனால் இவளிடம் எப்படி ஆரம்பிப்பது, எப்படி புரியவைப்பது என மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டான்.

அவன் எதிர்பார்த்தபடி அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனைக் காண வந்தாள் ஜீவிதா.

ஜீவிதா வேறுயாரும் இல்லை, ஆனந்தின் வருங்கால மனைவி.

இப்போது ஜீவிதா கல்லூரி இறுதியாண்டு படிக்கிறாள். ஆனால் அவளது தோற்றம் அதைவிட இளமையாக, சற்றே சிறிய பெண்ணாக காட்டியது.

ஜீவிதா அழகியல்ல, பேரழகி என்றுதான் சொல்ல வேண்டும். கருமைக்கும் வெளுப்புக்கும் இடையேயான தமிழ் நிறம்.

பவித்ரன் மனதில் ஒத்திகை பார்த்ததெல்லாம், ஜீவிதாவைப் பார்த்த உடன் மறந்தது. அவன் நினைவில் எஞ்சியது எல்லாம், எப்படியாவது இவளை ஆனந்தனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே.

பவித்ரனிடம் கல்லூரி இறுதி ஆண்டு பிராஜெக்டுக்காக ஒரு குழுவாக ஜுவிதா வந்திருந்தாள்.

பவித்ரனே, தொழிற்சாலையை சுற்றிக்காட்டி, தயாரிப்பு பற்றி எல்லாம் விவரித்தான். தானே முன்னின்று அனைத்து உதவிகளும் செய்கிறேன் என இனிய முகத்தில் இயம்பினான்.

ஒரு வாரம் வகுப்பின் முதல் நாள் இனிதே நிறைவுற்றது.

சென்னையிலிருந்து வந்திருந்த குழு ஒருவாரம் கோயம்புத்தூரில் தங்கியிருந்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி, டாக்டர் தான, நீங்க, என சந்தேகமாக ஜார்ஜிடம் வினவினாள். அவனோ சிரிப்பினூடே, தலையை இடவலமாக அசைத்து ரஞ்சனியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தான்.

ரஞ்சனி புருவத்தை சுருக்கினாள். அப்படியானால், நீங்கள் யார்???

ஜார்ஜின் சிரிப்பு பட்டென நின்றது. தன்னைப் பார்த்து இந்த கேள்வியை ஒரு இளம்பெண் கேட்கக்கூடும் என அவன் நினைக்கவில்லை.அதிலும் தானே வழிய சென்று உதவிய பெண் இப்படி கேட்கிறாள்??? என நினைத்தவன்,

லேசான அதிர்ச்சி சிரிப்பில், நான் ஜார்ஜ் என்றான் அழகிய ஆங்கிலத்தில், ரஞ்சனிக்கு இப்போது கோபம்வந்தது, ஜார்ஜ் என்பது, பதவியா? அல்லது உங்கள் ஐடியா? நான் யார் எனக்கேட்டேன்?? உங்கள் பெயரையல்ல... என சற்று கடுமையாகவே பேசிவிட்டாள்.

ஜார்ஜ் என்ற பேரும் தெரியவில்லையா? கடவுளே!! உனக்கு சரியான குட்டு டா, ஜார்ஜ் என தனக்குள் சிந்தித்தவன் சிந்தையை, கதவு தட்டும் ஒலி கலைத்தது.

இருவரும் ஒருசேர திரும்பிப் பார்க்க, லதா நுழைந்தார்.

லதா, ஜார்ஜைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார். நந்தினி ஒருமுறை அரச குடும்ப விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது, ரஞ்சனிக்கு உதவியது இவர்தான் என காட்டியிருந்தாள்.

ஆனால், ஜார்ஜ் இங்கே என்ன செய்கிறான் என்பது அவருக்கு புரியவில்லை. அவருக்கு இதை ஆங்கிலத்தில் அவனிடம் எப்படி கேட்பது என்றும் புரியவில்லை. அவர் ரஞ்சனியிடம் ஜார்ஜைப் பற்றியும், இங்கே என்ன செய்கிறான் எனவும் கேட்டார்.

ரஞ்சனிக்கு அப்போதுதான் நந்தினி ஜார்ஜைப் பற்றி கூறியது , ஞாபகம் வந்தது. அதனுடன் தான் பிரசநேரத்தில் செய்த கலாட்டாக்களும் நினைவில் எழ, தர்ம சங்கடமாக உணர்ந்தாள்.

ஜார்ஜுக்கு லதா தமிழில் பேசியது எதுவும் விளங்கவில்லை. அவன் அவர்கள் பேசுவதை கார்ட்டூன் போல பார்த்திருந்தான்.

ரஞ்சனி சங்கடமான ஒரு சிரிப்புடன் ஜார்ஜை நோக்கினாள்.

அவள் ஜார்ஜைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் நேரில் வந்ததுபோல, ஒரு பிரமிப்புடன் நந்தினி ஜார்ஜைப் பற்றி கூறவும், அவருக்கு இருக்கும் வேலையில் தன்னை மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லை என்றே கருதினாள்.

நீங்கள் அரச குடும்பத்து வாரிசா?? என்னால் சட்டென அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள், என்றாள் ரஞ்சனி.

நான் நன்றி சொல்வீர்கள் என எதிர்பார்த்தேனே!, மன்னிப்புகேட்கிறீர்கள்?? என்றான் ஜார்ஜ்.

அதுவும் தான் மிக்க நன்றி... என்றவள், நீங்கள் எங்கே? இங்கே என்றாள்.

நீங்கள் உதைத்த உதையில் சிறு எலும்பு முறிவு அதனால் டாக்டரைக் காண வந்தேன் என்றான்.

நம்பாத பார்வையை வீசியவள், இது குழந்தைகள் பிரிவு, நீங்கள் எலும்பு முறிவு பிரிவிற்குத்தான் போக வேண்டும் என்றாள்.

இப்போது கார்ட்டூன் பார்ப்பது, லதாவின் முறையானது.

சரண்டர்... என்றான்.

சரி சொல்லுங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்?? டாக்டர் எங்கே?? என்றாள் ரஞ்சனி.

உங்களின் வலியும் துடிப்பும், என்னை மிகவும் பாதித்துவிட்டது. குழந்தையையும் பார்க்கமலே அன்று போக வேண்டிய சூழ்நிலை. அதனால் உங்கள் நலமும், குழந்தை நலமும் காண வந்தேன் என்றான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனந்தனைப் பற்றிய விவரங்கள் அடங்கிய கடிதம் பவித்ரனுக்கு வந்து சேர்ந்தது.

ஆனந்தனின் புகைப்படம் முன்னால் இருந்தது. அதன் பின் அவன் படிப்பு நண்பர்கள் பழக்கவழக்கம், தற்போதைய சொயல்பாடுகள், முக்கியமாக பவித்ரன் அறியாத, அவனது குணநலன் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.

தன்னை வென்றவர்களிடம் , நட்பு பாராட்டி, அவர்களை எழமுடியாத, படுகுழியில் தள்ளுவது ஆனந்தின் மோசமான குணம், என எழுதப் பட்டிருந்தது.

பணக்காரர்களிடம் நட்பு பாராட்டி, தன் நண்பனாக்கிக்கொண்டு, நினைத்ததை சாதிப்பதும். குறிக்கோள் முடிந்ததும், மரம் விட்டு மரம் தாவுவதும், என அப்பட்டமாக அவனது பண்புகள் எழுதப்பட்டிருந்தது.

அவனது குற்றங்கள் என வரிசைபடுத்தப்பட்டிருந்ததை படித்ததும், பவித்ரன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான். மனம் படபடத்தது. தண்ணீரைக்குடித்து அதன் தாக்கத்தை அடக்க முயன்றான்.

பள்ளியில் தன்னை அனாதை என்று கூறிய ஒரு மாணவனுடன் நட்பு பாராட்டி, அந்த மாணவன்( நண்பன்) குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது, அவர்கள் போகும் கார் பிரேக்கை துண்டித்தான். அந்த பயணம் அவர்களின் கடைசி பயணமானது.

அதன்பின் கல்லூரி சேர்ந்தான். முதல்நாள் அங்கே ரேகிங் நடந்தது. அன்றுதான் பவித்ரன் முதல்முறை ஆனந்தைகண்டான்.

பவித்ரனுக்கும் அதுதான் முதல் வருடம். மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முதல் வருட மாணவர்களை ரேகிங் செய்தனர்.

அவர்களிடம் , ஏற்கனவே ஆனந்த் மாட்டிருந்தான். ஆனந்தன் ஒருபக்க கைகாள்களை மட்டும் ஆட்டி, மற்றொருபுறம் இருக்கமாக வைத்துக்கொண்டு கோமாளித்தனமாக நடனமாடினான்.

அதை பார்த்தவாறே நடந்து வந்த பவித்ரனை ஒருவன் சொடுக்கிட்டு அழைத்தான்.

பவித்ரன் என்னவென அவர்களின் அருகில் செல்ல, அங்கு சீனியர் மாணவர்களில் ஒருவன் மற்றொருவனிடம் காதில் ஏதோ முணுமுணுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகண்றான்.

பிறகு சீனியர் மாணவர்கள் தங்களுக்குள் ரகசியமாக பேசிவிட்டு, இன்று இதோடு முடிந்தது நாளை பார்க்கலாம் என கலைந்து சென்றனர்.

பவித்ரனை சொடுக்கிட்டு அழைத்தவன் உட்பட அனைவரும் கலைந்து சென்றனர். பவித்ரனுக்கு எதற்காக அழைத்தார்கள் என்றே தெரியவில்லை.

பவித்ரன் வந்ததும் அவர்கள், பயந்து ஓடியதை ஆனந்தன் மனதில் குறித்துக் கொண்டான். அப்படியானால் இவன் பணக்காரனாக இருக்கவேண்டும், அல்லது உயர்ந்த பதவியில் இவன் வீட்டில் யாரேனும் இருக்க வேண்டும் என நொடியில் யோசித்தவன், அவனின் நட்பு தனக்கு நிச்சயம் வேண்டும் என முடிவெடுத்தான்.

ஆனந்தன் , பவித்ரனிடம் ஹலோ பிரண்டு என கைநீட்ட, பவித்ரன் கைகொடுக்கவில்லை, ஒருசிறு சிரிப்புடன் ஆனந்தை கடந்தான்.

ஆனந்தன், இதை அவமானமாக எடுத்துக்கொண்டான். ஆனால் பவித்ரன் மனதில் நினைத்ததோ வேறு.

அவனது அன்னை சத்யாதேவி, யாரிடமும் சட்டென நட்பு கொள்ளக்கூடாது, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து அவருடன் நட்புகொள்ள வேண்டும், ஒரு நல்ல நட்பு நமக்காக உயிரைக்கொடுக்கும் என்பது எந்த அளவு உண்மையோ, அதேபோலத்தான் தவறான நட்பு நம்மை படுகுழியில் தள்ளும்.

நீ எனக்கு ஒரே மகனாக இருந்தால் நான் இதையெல்லாம் உனக்கு சொல்லமாட்டேன். ஏனென்றால், ஒரு சாதாரண மனிதனின் நல்ல பழக்கமும், கெட்டபழக்கமும் அவனை மட்டுமே பாதிக்கும்.

ஆனால் எனக்குப் பிறகு தொழிலை கையிலெடுக்கப்போகும் ஒரு பொறுப்பு உனக்குள்ளது. அதுவும் தனியாக நடத்த வேண்டும், கற்றுக்கொடுக்க தந்தையில்லை, தோள்கொடுக்க அண்ணன் தம்பி இல்லை.

இந்த நிலையில் உனது நல்ல நட்புதான் உனக்கு பலம். அதனால் ஒருவனைப் பற்றி நன்கு அறிந்த பின்னரே அவருடன் நட்பு கொள்ள வேண்டும்.

அடுத்தது, இதை நான் உனக்கு சொல்லலாமா??? என தெரியவில்லை, கூடப் பிறந்தவர்கள் இருந்தால், பக்குவமாக சொல்லிஇருப்பார்கள், இப்போது வேறுவழி இல்லை.

இது மனதில் ஆசைகள் முளைக்கும் தருணம், இந்த வயதில் பெண்கள் மீதான ஆசை நல்லதல்ல, பெண்களுடன் நட்பும் வேண்டாம், என சொல்லி அனுப்பினார்.

பவித்ரனைப் பற்றி ஆனந்தன் அனைத்தையும் அறிந்து கொண்டான். அன்று சீனியர் மாணவர்கள் ஓடியதற்குக் காரணம் ஒருவனின் தந்தை பவித்ரன் தொழிற்சாலையில் வேலைபார்க்கிறார்.

பவித்ரன் எந்த விளையாட்டுகளில் எல்லாம் சேர்கிறானோ, அதிலெல்லாம் தன்னையும் இணைத்துக்கொண்டான். சேர்ந்து விளையாடும் போது சில முறை ஆனந்தன் விட்டுக் கொடுத்தான். ஆனால் பவித்ரனுக்கு இது சுத்தமாய் பிடிக்கவில்லை.

ஒருவன் நம்மோடு போட்டியிடும் போது, நாம் திறமையும் வளரும், வெல்லத்துடிக்கும் மூளை பலவற்றைக் கற்றுக்கொள்ளும். எதிராளி விட்டுக்கொடுக்க ஆரம்பித்தால், வெற்றி கிட்டும், சந்தோசம் வரும், ஆனால் திறமை வளராது.

பவித்ரனின் முகத்தை வைத்தே ஆனந்தன் அவன் மனதை படித்தான். இருவருக்குள்ளும் போட்டி வலுத்தது. பவித்ரனின் தன் சொகுசுத்தனத்தை விட்டு இறங்கி வந்து விளையாட்டில் உள்ள நெளிவு சுழிவுகளை உடல் வலியோடு கற்றுக்கொண்டான்.

ஆனந்தனுக்கு ஆச்சரியம். சில முறை விட்டுக்கொடுத்தால், எளிதாக நட்பாகிவிடலாம் என நினைத்தான் அவன். இதுவரை பள்ளிகளில் அவன் நட்புகொண்டதும், அவ்வாறே, ஆனால் பவித்ரன் மிகவும் வித்யாசமாக தெரிந்தான்.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 
ஆனந்தனை பற்றிய உண்மையை முன்பே தெரிந்திருந்தால் பார்த்திபன் தன் வாழ்க்கை காப்பாற்றிக் கொண்டுருக்க முடியும்

இப்போது உண்மை தெரிந்ததால் ஜீவிதாவை காபற்றுவான பார்த்திபன்

கூட நட்பு கேடில் முடியும் என்பதற்கு ஏற்ப பார்த்திபன் வாழ்க்கை ஒரு உதாரணமாக அமைந்துள்ளது சகோ

ரஞ்சனி வாழ்க்கையில் மாற்றம் வருமா சகோ
😁😁😁😁😁
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பதாம் பகுதி...

ஜார்ஜ் ஒரு டென்னிஸ் பிளேயரும் ஆவான். ஆனால் இப்போது விளையாடும் போது முழுகவனமும் விளையாட்டில் இல்லை. ரஞ்சனி தன் கைகளைப் பிடித்துக்கொண்டு வலியில் துடித்ததே திரும்பத் திரும்ப ஞாபகம் வந்தது.

அவள் ஜார்ஜின் கைகளைப் பற்றியது, ஒரு இரண்டு நிமிடம் தான், ஏனோ இரண்டு மாதங்கள் ஆகியும் அந்த தாக்கம் குறையவில்லை.

அவள் நலமாக இருப்பதை பார்த்த பிறகும் , ஏனோ அவளது முகமே திரும்பத்திரும்ப தலைக்குள் வந்து இம்சித்தது. சொல்லப்போனால் ரஞ்சனியைப் பார்த்த பின் ரஞ்சனியின் நினைவு அதிகரித்ததே தவிர குறையவில்லை.

ஒரு கருப்பு நிற பெண்ணிடம் இவ்வளவு ஈர்ப்பா??

இரண்டு முறைதான் பார்த்திருப்பான். அவளது, வலி, கோபம், சிரிப்பு, அனைத்தும் கல்லில் பொரித்தது போல மனதில் பதிந்தது.

ரஞ்சனி குழந்தையுடன் ஒரு அங்காடிக்கு சென்றிருந்தாள். அது ஒரு சாப்பிங் மால். அங்கே குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு நந்தினியும், ரஞ்சனியும் ஒரு காபி சாப்பில் அமர்ந்தனர்.

அங்கு திடீரென பூகம்பம் வந்தது போல் அனைவரும் ஒருபுறம் ஓடினர்.

ரஞ்சனி, ஏதோ சினிமா நட்சத்திரம் வந்திருப்பாரோ என்றாள்.

நந்தினி சற்று எட்டிப்பார்த்துவிட்டு, ஜார்ஜ் வந்திருக்கிறார், என்றாள்.

அதற்குமேல் அவர்கள் கூட்டம் அலைமோதுவதையும் கண்டு கொள்ளவில்லை, ஜார்ஜையும் கண்டுகொள்ளவில்லை. தங்களுக்கு வந்த காபியை அருந்திக்கொண்டு இருந்தனர்.

அவர்களைச் சுற்றி திடீரென காவலர்கள் வளையம் போல் ஒரு அமைப்பில் நிற்க, பெண்கள் அதிர்ந்து நின்றனர்.

காவலர்கள் வளையத்தைத் தாண்டி ஜார்ஜ் மட்டுமே உள்ளே நுழைந்தான். ஜார்ஜின் விசிறிகள் யாரையும் காவலர்கள், அந்த வட்டத்திற்குள் அனுமதிக்கவில்லை.

நந்தினி நம்ப முடியாத பாவனையில் இருந்தாள். ரஞ்சனி புருவம் சுருக்கி ஜார்ஜின் வருகையை நோக்கினாள்.

அந்த வட்டத்திற்கு வெளியே , ஜார்ஜின் விசிறிகள் கையில் செல்போனுடன் அவனை படம்பிடிக்க ஆர்பரித்துக்கொண்டு இருந்தனர்.

இவ்வளவு கலவரத்திலும் அமைதியாக வந்தவன், ரஞ்சனி எப்படி இருக்கீங்க என்றான்.

ரஞ்சனி, இவ்வளவு கூட்டத்திற்கு நடுவே, தர்ம சங்கடமாக உணர்ந்தாள். கூட்டத்தினர் எடுக்கும் புகைப்பட ஒளி அவள் கண்ணிலும் பளீரென விழுந்தது.

லேசாக உதட்டை இழுத்துப் பிடித்துக்கொண்டு நலம், இது என் தோழி என நந்தினியை அறிமுகப்படுத்தினாள்.

தெரியுமே, ஹாய் நந்தினி என கைகுலுக்கினான். நந்தினி இது கனவா? நினைவா? எனும் பாவனையில் உறைந்திருக்க, ஜார்ஜ் நந்தினியிடம் நலம் விசாரித்தான்.

நந்தினி அவனிடம் தலையசைத்து நலம் என்றாள், ஆனால் அவள் கண்களின் ஆச்சரியம் சிறிதும் குறையவில்லை.

என்ன விசயம் ? ஜார்ஜ் என்றாள் ரஞ்சனி. ஒன்றுமில்லை ஒரு செல்பி என அவன் அவனது கைபேசியை தூக்கிப்பிடித்தான்.

எதற்காக? செல்பி, என்ற ரஞ்சனியிடம், இதென்ன கேள்வி, என்னுடன் ஒரு நாளைக்கு குறைந்தது நூறுபேர் செல்பி எடுத்துக்கொள்கின்றனர். அதுபோலத்தான் இதுவும் என்றான் ஜார்ஜ்.

அவர்கள், உங்கள் விசிறிகள். உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பது பெருமையாக கருதுகிறார்கள், ஆனால் நான் எதற்காக??

நான் உன் விசிறி . உன்னுடன் புகைப்படம் எடுப்பதை லட்சியமாக நினைக்கிறேன். அதனால், பிளீஸ் ஒரு போட்டோ??? என கண்களில் இறைஞ்சினான்.

ரஞ்சனிக்கு ஜார்ஜ் இப்படி பேசியதும் நெஞ்சம் படபடத்தது. ஜார்ஜ் ஒரு போட்டோவிற்காக ரஞ்சனியிடம் கெஞ்சிக்கொண்டிருக்க, சுற்றி இருப்பவர்கள் அனைவரும் தங்களது கைபேசியில், சரமாரியாக அவர்களை போட்டோ எடுத்துத் தள்ளினர்.

சாரி ஜார்ஜ். நீங்கள் இப்படி கேட்கும் அளவிற்கு நான் பெரிய ஆளில்லை. என்றவள், பாய் என்றுவிட்டு அவனது பதிலையும் எதிர்பார்க்காமல் நந்தினியை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

ரஞ்சனி கூட்டத்தின் நடுவே நிற்க திணறியதை பார்த்தவன், சிறு முறுவலுடன் இருந்தவன் வாய், இந்த கூட்டத்திற்கே பயந்துவிட்டால் எப்படி, இன்னும் நிறைய இருக்கிறதே! அன்பே என்றது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி குழந்தையுடன் எப்போதும் ஒட்டி உறவாடியது இல்லை. குழந்தையை எப்போதும் லதாதான் வைத்திருப்பார்.

குழந்தையிடம் அவர் மிகுந்த பிரியம் கொண்டதால், அவர் ரஞ்சனியின் ஒதுக்கத்தைப் பற்றி அறியவில்லை. இதை முதலில் கண்டது நந்தினிதான்.

குழந்தையை குளிப்பாட்டி மையிட்டுக்கொண்டிருந்த போது நந்தினி உள்ளே நுழைந்தாள். ரஞ்சனி குழந்தைக்கு ஆடை அணிவித்துக்கொண்டிருக்கும்போது, குழந்தை அவளைப்பார்த்து அழகுற சிரித்தான்.

சற்றுதள்ளி அமர்ந்திருந்த நந்தினியாலே அவனை கொஞ்சாமல் இருக்க முடியவில்லை. அவனை அள்ளி அணைத்து முத்தமிட்டாள். ஆனால், ஆடை அணிவித்தவுடன் கடமை முடிந்தது என எழுந்து சென்றுவிட்டாள் ரஞ்சனி.

ரஞ்சனி கல்லூரி பாடத்தை கணினியில் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தை கண்ணக்குழி அழகில் மயங்கிய நந்தினி, மயக்குற டா... என குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

குழந்தை சற்று தள்ளி இருந்த அன்னையை பார்த்து பார்த்து சிரித்தான். நந்தினி, ரஞ்சனி உன்னத்தான் கூப்பிடுரான் என்றாள்.

சற்றே திரும்பிப் பார்த்த ரஞ்சனி, குழந்தையை பார்த்த மாத்திரத்தில் சற்றே புருவம் சுருக்கினாள். பின் அது பொய்யோ எனும் அளவிற்கு கண்ணை எட்டாத சிரிப்பில் குழந்தையை ஒரே வினாடி கண்டவள், பின் தனது வேலையை தொடந்தாள்.

குழந்தைக்கு, தண்ணீர் கொடுப்பதற்காக, லதா தண்ணீருடன் வந்து நந்தினி அருகில் அமர்ந்தார். குழந்தையின் சிரித்த முகத்தைவிட்டு அவர் கண்கள் அகலவில்லை. சுத்திப்போடணும், என்றவாறே தண்ணீர் புகட்டினார். இது எதையும் கண்டும் காணாமலும் உட்கார்ந்திருந்த ரஞ்சனியை நந்தினி கண்டுகொண்டாள்.

நந்தினி லதாவிடம், குழந்த யார்மாதிரி மா இருக்கு எனவும், ரஞ்சனி தலை நிமிர்ந்து பார்த்தாள்.

லதா பட்டென, வேற யாரு அப்படியே ரஞ்சனிதான் என்றார். நந்தினி அப்படியா, ரஞ்சனி நீ குட்டில, ப்ரணவ் மாதிரியா இருந்த?? என்று ரஞ்சனியை அட்டத்திற்கு இழுத்தாள்.

இப்போது ரஞ்சனியின் கண்களில் லேசான சிரிப்புடன் குழந்தையை ஆராய்ந்து, ஏமாற்றமடைந்தாள்.

நந்தினி எப்படிமா? சொல்றீங்க, எனக்கென்னவோ, ப்ரணவ், அழகுல மயக்குறானே, இவன் அளவுக்கு ரஞ்சனியெல்லாம் ம்கூம், ரஞ்சனியை ஒரு பார்வை பார்த்துச் சிரித்தாள் நந்தினி. ரஞ்சனியும் சிரித்துக்கொண்டே நந்தினியை முறைக்க, லதா, வாய்விட்டு சிரித்தார்.

சேட்டைல, அறிவுல எல்லாத்துலயும் ரஞ்சனியே தான், பாரு கால்மேல கால்போட்டு ஆட்றதா இப்படியேதான் இவளும் செய்வா, இப்படியேதான் சிரிச்சுட்டு இருப்பா, சின்னதுல அழவே மாட்டா, ஊர்ல இருக்கவுங்க, உங்க வீட்ல குழந்த இருக்கா?? ஒரு சத்தமும் காணூன்னு கேப்பாங்க, எதுக்கும் அழமாட்டா.

ஒரு பெரிய ஆக்சிடெண்ட் நிறைய தையல் அதுலகூட அவ அழல, நான்தான் அழுதேன்.

அவ அழுது நான் முதல்ல பாத்தது கல்யாணம் முடிச்சு அவள விட்டுட்டு வரும்போதுதான். ஆனா... என ரஞ்சனியை ஒருபார்வை பார்த்தார் லதா, அவள் இருகிப்போய் அமர்ந்திருந்தாள். அதுக்கு பிறகு அவ கவலையத்தான் நான் அதிகமா பாத்திருக்கேன், என்றவர் கண்கள் கலங்கத்தொடங்கியது.

ரஞ்சனி எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். நந்தினிக்கு பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கானது. ஆனால் ரஞ்சனியின் மனதில் இது நம் பிள்ளையும்தான் என்ற விதையை வெற்றிகரமாக விதைத்துவிட்டாள் நந்தினி.
 
Top