All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பத்தி முன்றாம் பகுதி..

பவித்ரன் ஓடிச் சென்று உள்ளே பார்க்க, அங்கே ஜீவிதா இரு கைகளாலும் தன் மார்பை மறைத்தவாறு, அழுதுகொண்டிருந்தாள்.ஆனால் உள்ளே வந்த கண்ணனை காணவில்லை. பவித்ரனின் கண்கள் அறையை அளந்தது.

கண்ணன் பவித்ரனுக்கு பக்கவாட்டில் சுவற்றில் சாய்ந்து, கவலை முகத்துடன் நின்றிருந்தான்.

ஜீவிதா கண்களை மூடி அழுது கொண்டிருந்தாள். பவித்ரன் வந்ததைக்கூட கவனிக்கும் மனநிலையில் இல்லை.

பவித்ரனுக்கு புரிந்துவிட்டது. ஜீவிதாவிற்கு அனைத்தும் நினைவு வந்துவிட்டது. அதனால் கண்ணனை பார்க்க வருந்துகிறாள் என கணக்கிட்டவன், அறையில் இவர்களைத் தவிர யாருமில்லை என்றதும், கதவைத் திறந்த சுவடே தெரியாமல், இழுத்து மூடி வெளித்தாள்ப்பாள் போட்டுவிட்டு , துரையைக் காண சென்றுவிட்டான்.

கண்ணனுக்கு பவித்ரனின் செயல் நன்றாக புரிந்துவிட்டது. நீ எப்படியும் அவளை சமாதானம் செய்துவிட்டு, அறையிலிருந்து வெளிவந்தால் போதும்!! என செயலால் காட்டிவிட்டு பவித்ரன் நகர்ந்து கொண்டான்.

ஜீவிதா அழுகை நின்றபாடில்லை. கண்ணைத் திறக்கவும் இல்லை. கண்ணன் ஜீவிதாவின் அருகில் சென்று அவளை அழைத்தான்.

பக்கத்தில் கேட்ட கண்ணனின் குரலில் திடுக்கிட்டு விழித்தவள், முன்னிலும் அதிகமாக அழுதாள். அழாதே! நடந்ததெல்லாம் நன்மைக்கே!! என்றான் கண்ணன்.

ஜீவிதா, இப்போது அழுகையின் ஊடே பேசினாள். என்னைப் பற்றி தவறான பெண் என நினைக்காதீர்கள். நான் உங்களிடம் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டேன், என்னை மன்னியுங்கள் என கைகூப்பினாள்.

கண்ணன் ஜீவிதாவின் கைகளை தட்டிவிட்டான். இப்போது நீ பேசுவதும் தவறுதான். நீ என்னிடம் எப்படி நடந்து கொள்ளவும் உனக்கு உரிமை இருக்கிறது என்றான் பட்டென.

ஜீவிதா, திடுக்கிட்டு நிமிர்ந்தாள். கண்ணின் கண்களில் கண்ணீர் பெருக உன்னை காப்பது எனது கடமை. அது நான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் செய்வேன் ஜீவிதா உனக்கு ஆனந்தைப் பற்றிய உண்மை தெரிந்துவிட்டது. இப்போது நீ முடிவுகளை தெளிவாய் எடு என்றான் கண்ணன்.

ஆனந்தின் பெயரைக் கேட்டதும், ஜீவிதாவின் முகத்தில் ,தான் ஏமாற்றப்பட்டதில் முதலில் கோபமும், பின் அழுகையாக மாற முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

ம்சூ.. என கண்ணன் அவள் கைகளை முகத்திலிருந்து விடாபிடியாக பிரிக்க, அவன் தோள்களை கட்டிக்கொண்டு, அழுதாள்.

ஆறடி மனிதன், பாவையவள், அணைப்பில், சற்று ஆடித்தான் போனான். கண்ணன் தன்னை சமன்படுத்த சில நொடிகள் ஆனாது.

நான் ஒரு முட்டாள். ஆனந்தின் எண்ணம் புரியாமல், அவருடன் அவர் வீடுவரை சென்ற எனது அறிவின்மையை...என சட்டென நிமிர்ந்தவள், ஆனால் ஆனந்த் என்னைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.

அதனால்தான் வீடு வரை நயமாகப்பேசி அழைத்துவந்தவர், அதன் பின் என்னிடம் பேச்சு பலிக்காது என நினைத்து, மருந்து கலந்து கொடுத்து, என்னை.... என அதற்க்கு மேல் மீண்டும் கண்ணன் தோள்களில் புதைந்து அழுதாள்.

கண்ணன் ஜீவிதாவின் தலையைத் தடவியவாறு, எதுவும் நடக்கவில்லை. எதுவும் நடக்கவும் நான் விடமாட்டேன் என்றான்.

நீங்கள் வர ஒரு ஐந்து நிமிடம் தாமதமானாலும், என் நிலைமை...

உனக்கு ஒன்று தெரியுமா?? நீ வீட்டைவிட்டு கிளம்பியது முதல், நான் உன்னுடன்தான் இருந்தேன் என்றான்.

ஜீவிதா மீண்டும் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

ம்ம், நீங்கள் கோவில் சென்றது, உணவகம் சென்றது, பின் ஆனந்தின் வீட்டிற்குள் நுழைந்தது வரை என்றான் மிகவும் வருத்தமாக..

ஏன்?? என்னை பின்தொடர்ந்தீர்கள்.

நீ புடவை கண்டிக்கொண்டிருக்க, உன்னை விட்டு என்கண்களை விலக்க முடியவில்லை என்றான் அவள் கண்களைப் பார்த்தவாறு. பின் ஆனந்துடன் உன்னைக் கண்டதும், உன்னை தனியே அவனுடன் விடமுடியவில்லை என்றான்.

அன்று உனக்கு ஏதோ தவறாக நடக்கக்கூடும் என யூகித்தேன் என்றான்.

கண்ணன் கண்களோடு தன்கண்ணை கலந்தவள், ஏன் என்மீது இவ்வளவு அக்கரை, நீங்கள் காப்பாற்ற வந்தது பவி அண்ணாவைத்தானே, என்றாள் ஜீவிதா.

கண்ணனின் கண்கள் விரிந்தது. உனக்கு நான் போனில் பேசியது கூடத் தெரியுமா???

ம்ம்.. நான் விளிப்புடன்தான் இருந்தேன், நீங்களும் பவிஅண்ணாவும் பேசியது கூடத் தெளிவாகக் கேட்டது, ஆனால் எழமுடியாத இருட்டில் தள்ளப்பட்டது போல உணர்ந்தேன் என்றாள்.

அப்பா.. அப்பாவிற்கு வந்த ஆபத்தையும் காப்பாற்றிவிட்டேன் என்றீர்களே, அவர் என ஏதோ கேட்க வரும்முன் கதவு தட்டப்பட்டது.

கண்ணனும், ஜீவிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். தாங்கள் அணைத்திருந்த நிலையைப் பார்த்து வெட்கி,கண்ணன் மீதிருந்து கைகளை பட்டென எடுத்துவிட்டு, கண்களை துடைத்துக்கொண்டாள் ஜீவிதா.

கண்ணன் எழுந்து அவனுடைய கசங்கிய ஆடையை சரி செய்தான். அப்போது கண்ணனும் ஜீவிதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, கண்ணனின் கண்களை சந்திக்க முடியாமல், மறுபுறம் தலையைத்திருப்பிக்கொண்டவள் ரகசியமாகச் சிரித்தாள்.

பவித்ரனும் துரையும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர்.

பவித்ரனின் பார்வை கண்ணனையும் ஜீவிதாவையும் ஆராய்ந்தது. இருவர் முகத்திலும் வருந்தமில்லை, மாறாக வெட்கம் குடியேறி இருந்தது. ரொம்ப பாஸ்ட் டா ,கண்ணா நீ!!என மனதில் மெச்சினான் பவித்ரன்.

துரை வேகமாக வந்து, கண்ணனின் கைகளைப்பிடித்துக்கொண்டார். ரொம்ப நன்றி தம்பி என்றார் மனதார.

உங்களுக்கு இந்த வார்த்தையை நான் இரண்டாவது முறை சொல்கிறேன் என்றவர், தன் மகளிடம் திரும்பினார்.

அப்பா.. உங்களுக்கு ஒன்னுமில்லையே என்றாள், அவரது கைகால்களில் ஒட்டியிருந்த பிளாஸ்திரிகளை நோட்டமிட்டவாறு..

ஒன்னுமில்லமா.. இது சாதாரண சிராப்புதான். சரியானதும் எடுத்திடலாம். நீ எப்படி இருக்க?? என்றார்.

லேசாக விசும்பியவள், ஒன்னுமில்லை பா என்றாள்.

எல்லாம் பவித்ரன் சொன்னார். கெட்டதிலும் பல நல்லதிருக்கு, நீ ஆனந்தைப்பற்றி புரிந்து கொண்டதே எனக்குப் போதும் என்றார் துரை.

அப்படீனா உங்களுக்கு முதலிலேயே இதெல்லாம் தெரியுமா??

இல்லை. ஆனால் கல்யாணம் நெருங்க நெருங்க சில விசயங்கள் ஆனந்தைப் பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் அப்போது நீ ஆனந்தின் மீது மிகுந்த நம்பிக்கைகொண்டிருந்தாய், காதல் என்ற வார்த்தையை நாசூக்காய் தவிர்த்தவர், நான் சில ஆதாரங்களுடன் உன்னிடம் பேசலாம் என நினைக்கும் போது, விபத்து நடந்துவிட்டது என்றார்.

சே!!என்ன ஒரு மிருகம் பா , அவன். அவனை வாழ்நாளில் நான் பார்க்க விரும்பவில்லை என்றாள் ஜீவிதா.

நீ மட்டுமல்ல யாரும் அவனை இனிமேல் பார்க்க முடியாது. ஏனெனில் ஆனந்த் இறந்துவிட்டான் என்றார் துரை.

அறையிலிருந்த அனைவரும் திகைத்து விழித்தனர்.
 
Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணன் ஸ்டோர் ரூமில் ஆனந்தை தலைகீழாக கட்டி தொங்கவிட்டிருந்தான். அவனது முகம் மறைக்கப்பட்டிருந்த நிலையில், சரமாரியாக அடித்தவன், பின் ஜீவிதாவின் ஞாபகம்வர மடமடவென அவளிருந்த அறைக்கு ஓடினான்.

ஆனந்த் தலைகீழாக தொங்கிய நிலையில், போலீஸ் அடியில் மயங்கியிருந்தான். ஆனந்த் வீட்டு வேலைக்காரன், சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்தான். அப்போதுதான் மயக்கம் தெளிந்த ஆனந்த், தான் இருக்கும் நிலைகூட உணராமல், தண்ணீர்.. தண்ணீர் என புலம்பினான்.

பின்பு வேலையாள் ஆனந்தைக் கண்டறிந்து கட்டுகளை அவித்தான்.

சற்றே நினைவு வந்ததும் ஆனந்த் கொதித்தெழுந்தான். தன்னைத் தாக்கியது யார்?? என யோசித்தான்.

அப்போது துரையைத்தாக்க சென்ற இருவரும் போலீசில் மாட்டிக்கொண்ட தகவல் வர, தன்னை நாலாபுறமும் எதிரிகள் சூழ்ந்துவிட்டதை அறிந்து கொண்டான் ஆனந்த்.

இவ்வளவும் பவித்ரன் தனித்திருந்து நடத்தியிருக்க வாய்ப்பில்லை. தன்னைத் தாக்கியதும் வேறு ஆள். பவித்ரனையும் இதுவரை கொல்லமுடியவில்லை. பவித்ரன் உயிரையும் காப்பாற்றி, என்னையும் மாட்டிவிட யாருக்கு இத்தனை வேகம் என தனக்குள் கேட்டுக்கொண்டவனுக்கு சட்டென பதில் கிடைத்தது, அது ரஞ்சனி.

உடனே ரஞ்சனிக்கு அழைத்தான். அவளது எண் தெரிந்தும், என்னிடம் தோற்று ஓடியவள், என இழப்பமாக நினைத்து, அவளை இதுவரை நேரடியாக சீண்டவில்லை.

ஆனால் என்னை அழிக்க படுகுழியை தோண்டத்தான், அங்கு சென்றிருக்கிறாளா??? சை!! அவளை சாதாரணமாக எடை போட்டுவிட்டோமே!!!

ரஞ்சனி வகுப்பு இடைவேளையில் இருந்தாள். அனைவரும் வெளியே சென்றுவிட, ஒரு அழகி கோபத்துடன் உள்ளே நுழைந்தாள்.

அவள் நேராக ரஞ்சனியிடம் வந்து, நீ தானே ரஞ்சனி என்றாள் ஆங்கிலத்தில், ரஞ்சனி ம்.. என்றதும் அவளது செல் ஒலித்தது. அதை எடுத்து காதில் வைத்தவள் ஹலோ! என்றாள்.

அந்த அழகியை வரும் வழியில் பார்த்த ஜார்ஜோ மடமடவென அவளைத் தடுக்க ஓடிவந்தான்.

நான் ஆனந்த் பேசுகிறேன் என்றது மறுபுறம் வன்மமான குரல்.

ரஞ்சனி கவனம் மொத்தமா போனில் இருந்தது. அது தெரியாத அந்த வெந்நிற அழகியோ, ரஞ்சனி முன் இருந்த மேசையில் போட்டோக்களையும் காகிதங்களையும் தூக்கிப்போட்டாள். ரஞ்சனி அதை கண்டுகொள்ளாமல் போனில் பேசிக்கொண்டிருப்பது வேறு இன்னும் கோபமூட்டியது அந்த அழகிக்கு.

சொல்லு, செத்தவன் உயிரோடு பேசுவது ஆச்சர்யம் என்றால், அவன் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொள்வது இன்னும் வியப்பு என்றாள் ரஞ்சனி.

நான் இறந்ததாக சொன்னதே, பவித்ரன் கையால் நீ சாகத்தான் என்றான் ஆனந்த்.

யாருடைய விதியும் உன் கையிலில்லை என்பது,இப்போது உனக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்றாள் ரஞ்சனி.

எனக்கு பயந்து நாட்டைவிட்டே ஓடிய நீ இதைச் சொல்வது மிகுந்த ஆச்சரியம் என்றான் ஆனந்த்.

கலகலவென சிரித்தாள் ரஞ்சனி. அதே நேரம் சரியாக ஜார்ஜ் வாயிலில் நுழைந்தான் . டேசியா கோபமாக நிற்க, ரஞ்சனி புரியாத மொழியில் போனில் பேசி சிரித்துக்கொண்டிருந்தாள்.

இந்த காட்சியில் சுவாரஸ்யம் எழ, ஜார்ஜ் டேசியாவைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கலானான்.

ரஞ்சனியின் சிரிப்பில் கடுப்பானவன், உன்னக் கொல்லாம விடமாட்டேன் டி என்றான்.

ரஞ்சனிக்கு ஆனந்துடைய பதற்றமான போச்சும், கோபமும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது.

நிதானமாக, வெண்ணெய்யில் கத்தி இறக்குவது போல் அவனது நெஞ்சைப் பிளந்தாள்.

விதி வலியது. நாம் தவறுகள் எப்படிப்பட்டதோ, தண்டனையும் அவ்வாறே கிடைக்கும். திருடன் தேவையான சமயத்தில் பொருளை இழப்பான். வஞ்சகன் வஞ்சகத்தால் வீழ்த்தப்படுவான்.

அதேபோல் நல்லவன் நல்லவனால் காப்பாற்றப்படுவான். தியாகி மற்றவரின் தியாகத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவர்.

அதேபோல், உனக்கும், மற்றவரை பழிவாங்கத்துடிப்பவன், அவர்களை எப்படி அழித்தாயோ!! அதே போல் நீயும் பழிவாங்கப்படுவாய், சேதாரமே இல்லாமல் மொத்தமாக அழிவின் உச்சக்கட்டத்தை அனுபவிப்பாய் என்றாள் ரஞ்சனி.

ஓ ...என்னைக் கொல்லவே திட்டமிட்டுவிட்டாயா???

நான் அனாதைகளைக் கொல்வது இல்லை என்றாள் ரஞ்சனி தெளிவாக,

ரஞ்சனி பேசிய இந்த வார்த்தை ஆனந்தை வெகுவாகத் தாக்கியது.

உடம்பைப் பார்த்துக்கோ!! என்றவள், பட்டென இணைப்பைத் துண்டித்தாள்.

ஆனந்த் விக்கித்து நின்றான்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 
anandhie

Member

sema episode mam
 
Top