All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பத்தி ஐந்தாம் பகுதி...

கண்ணன் பவித்ரனுடன் நடந்தவாறு, யார்?? இதைச் செய்தது என கேட்டான்.

தனது கைபேசியில் வந்த புகைப்படத்தை கண்ணனுக்கு காட்டினான் பவித்ரன்.

கண்ணன் கார் ஓட்டிக்கொண்டு செல்ல, பவித்ரன் செல்வ பாண்டியனுக்கு அழைத்தான்.

அவர் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதாக தகவல் வர பவித்ரன் காத்திருந்தான். சற்று நேரத்தில் பேசியில் தொடர்பு கிடைத்துவிட, பவித்ரனை முந்திக்கொண்டு செல்வபாண்டியன் பேசினார்.

ரஞ்சனி, கண்ணன்தான் மற்றொரு இணைப்பில் இருக்கிறான். அவன் பதில் பேச முடியாத நிலையில் உள்ளான். நீ விவரங்களை நேரடியாக அவனிடமே கூறு, அவன் அதன்படி செய்துவிடுவான். கண்ணா!! கேள்!! என்றவர் அமைதியாகிவிட்டார்.

பவித்ரன் இன்பமாக அதிர்ந்தான். கண்ணன் லைனில் இருக்கிறீர்களா??? என்றாள் ரஞ்சனி.

பவித்ரன் ம்.ம். எனவும் சிலநொடிகள் ரஞ்சனி பேசவில்லை. செல்வபாண்டியன், வேகமா சொல்லுமா!! நமக்கு நேரமில்லை என்றார்.

இல்லை அங்கிள், அது... என சற்று தயங்கியவள், பவித்ரன் நீங்களா??? என்றாள் பட்டென.

இப்போது பவித்ரன் முகம் மலர்ந்தது. யெஸ்!! என்றான். தன்னை மறைக்க விரும்பாமல்...

செல்வபாண்டியன் யாராக இருந்தால் என்ன?? காரியம் நடக்க வேண்டும். பவித்ரனிடமே சொல்!! என்றார் செல்வ பாண்டியன்.

அப்படியானால் கண்ணன், தன்னை வெளிப்படுத்திக்கொண்டானா??? சே என மனதில் நினைத்தவள், கண்ணன் என்னிடம் வேலை பார்ப்பதால், நான் அவரிடம் வேலை சொல்கிறேன். ஆனால் பவித்ரன் அப்படி இல்லை அங்கில் என்றவள், நீங்களே பார்த்துச் செய்யுங்கள் என்றாள் விட்டேற்றியாக..

என்னால் எதுவும் செய்யமுடியாது. கண்ணனும் எல்லா ஆதாரங்களையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இந்த கேஸை முடித்துவிட்டார். இப்போது நீ சொல்வதைச் செய்ய பவித்ரன் மட்டும்தான் உள்ளார். வேண்டுமானால் சொல்!! இல்லையெனில் விட்டுவிடு என்றார் அவரும் ரஞ்சனியைப் போலவே.

இப்போது பவித்ரன் பேசினான். நானும் கண்ணனும் மலரின் கணவரை காவல்நிலையத்தில் காணத்தான் செல்கிறோம். ஏற்கனவே சாருநேசனுக்கு பதிலாக வேறுஆள் நியமித்தாகிவிட்டது. இப்போது போலீசை சமாதானப்படுத்தி, ஆளை மாற்ற வேண்டும். மாற்றிவிடுவோம். இது சாலை விபத்தாகத்தான் பதிவாகி இருக்கிறது. இதில் உயிர் சேதம் இல்லை. எனவே நிறைய சாதகங்கள் நம்மிடம் உள்ளன. கவலை வேண்டாம் என்றான் பவித்ரன்.

செல்வபாண்டியன் சிரித்தார். ரஞ்சனி எதை என்னிடம் செய்யச் சொன்னாலோ, அதையே தான் நீயும் சொல்கிறாய் என்றார் அவர்.

கண்ணனிடம் போனைக் கொடுங்கள் என்றாள், ரஞ்சனி.

பவித்ரன் ஸ்பீக்கரில் போட்டு பேசு!! என்றான் சைகையால்...

கண்ணன் ஹலோ!! என்றான்.

கண்ணன் நீங்கள் அனுப்பிய சாருநேசன் புகைப்படம் வந்தது. தக்க சமயத்தில் நிறைய உதவிகளை எனக்கு செய்துள்ளீர்கள் நன்றி என்றாள்.

பரவாயில்லை மேடம், இது எனது வேலைதானே!! என்றான்.

ஆனால் சொல்லாத வேலை பலவற்றையும் செய்திருக்கிறீர்கள் போலவே!! என்றாள் கடுப்புடன்.

அது, தெரியாமல் பவித்ரன் என்னை பார்த்துவிட்டார் என்றான் கண்ணன் தயக்கமாக..

நீங்கள் செய்தது ஒரு தவறல்ல, பல. உங்களை வெளிப்படுத்திக்கொண்டது, வேலை நேரத்தில் காதலில் விழுந்தது, முக்கியமானது என்னிடம் உண்மையை மறைத்தது..என சற்று கடுமையாக முடித்தாள் ரஞ்சனி.

அது..சாரி.. மேடம், ஆனா.

நீங்கள் ரகசிய வேலைக்கு லாயக்கற்றவர் கண்ணன். இத்துடன் நம்முடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொல்வோம், உங்களுக்கு நான் கொடுப்பதாகச் சொன்ன தொகை உங்கள் கணக்கில் போட்டுவிட்டேன் என்றாள் ரஞ்சனி.

ஐம் ரியலி சாரி மேடம் என்றான் கண்ணன் அதை கேட்பதற்கு ரஞ்சனி இணைப்பில் இல்லை.

கண்ணன் அமைதியாக காரை ஓட்டினான்.

பவித்ரனுக்குத்தான் பாவமாக இருந்தது. கண்ணன் தோள்களை தட்டிக் கொடுத்தான்.

ஆமா, என்னோடதான இவ்வளவு நேரமும் இருந்த, எப்படி எனக்கு தெரியாம டாலிக்கு போட்டோ அனுப்புன, அப்பா!! உங்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் போலவே!! என்றான் பவித்ரன்.

கண்ணன் பவித்ரனை ஓரக்கண்ணால் பார்த்து, டாலின்னா ரஞ்சனி மேடமா??? என்றான் , ஆச்சர்யமாக!!

பவித்ரன் முகம் பிராகசமானது...

சார் நீங்க, கிளாமர் கிங் சார் , அப்பா!! ரஞ்சனிமேடம்னு சொன்னதும் பிரைட் ஆயிட்டீங்க!! என வம்பிழுத்தான்.

நீ நல்லா எங்கிட்ட அடி வாங்குவ.. கிண்டல் பண்ணாம வண்டி ஓட்டு என்றான் பவித்ரன்.

கண்ணன் விடவில்லை, பிரப்போஸ் பண்ணீட்டீங்களா?? எப்போ கல்யாணம் எனக் கேட்டான்.

பவித்ரன், ஓ.. உனக்குத் தெரியாதா?? என் முன்னால் மனைவி என் டாலி என்றான்.

கண்ணனுக்கு இப்போது ரஞ்சனியின் பேச்சும், கோபமும் புரிந்தது. அங்கே சங்கடமான அமைதியை நீட்டிக்க விடாமல், காவல் நிலையம் வந்துவிட்டது.

காலையிலிருந்து தொடங்கிய ஓட்டம் எத்தனை நபரை எத்தனை விதமாக புரட்டிப்போட்டுவிட்டது.

இரவாகிவிட்டது. மது கையில் குழந்தையுடன் நின்றிருந்தாள். பக்கத்தில் சாருநேசன் அம்மா அழுது கொண்டிருந்தார். மலரின் தந்தை பக்கத்தில் அமர்ந்திருந்தார்.

மது பவித்ரனைப் பார்த்ததும் அவனிடம் ஓடிவந்தாள். சார் அத்தான்! என அவள் சொல்லும் முன், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றான் பவித்ரன்.

மது, ஆனால் அத்தானிடம் முதலில் பேசுங்கள், நான் தான் செய்தேன். ஆனந்தை கொலை செய்யவே இதைச் செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துவிட்டார் என்றாள்.

அவருக்கு ஆனந்தைப் பற்றியும், உண்மைகளும் எப்படி தெரிந்தது, என கேட்டான் பவித்ரன்.

நான்தான் ஏதோ கோபத்தில் மலரை சரியாக பார்த்துக் கொல்லவில்லை. திருடனை நம்பியவர் மனைவியை நம்பவில்லை என திட்டினேன். ஆனால் அவர் இப்படி செய்வார் என நான் நினைக்கவில்லை என்றாள் மது.

மதுவை முறைத்தவன். மடமடவென அவளை கடந்து சென்றான்.

காவல் அதிகாரியிடம், துரை ஏற்கனவே பேசியதில் இவர்கள் வேலை சுலபமானது. ஆனால் சாரு நேசன் லாக்கப்பிலிருந்து வெளியே வரமாட்டேன் என்றார்.

என் மனைவி, எப்படி கைகால்கள் இழந்து தன் கடைசி நாட்களைக் கழித்தாளோ!! அவனும் இப்போது அதையே அனுபவிக்கிறான். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு சைக்கோவை, கொடூரனை இந்த நிலைக்கு உள்ளாக்கியதை நான் மறைக்க விரும்பவில்லை. சொல்லப்போனால் பெருமையாகத்தான் கருதுகிறேன் என்றான் சாருநேசன்.

பவித்ரன், மதுவின் கையிலிருந்த குழந்தையை வாங்கி சாருநேசன் கையில் கொடுத்தான். நீங்களே சிறையில் வைத்து வளர்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

அனைவரும் அதிர்ந்து நின்றனர். அம்மாவிடம் பாப்பாவைக் கொடுங்கள். அவர்கள் வளர்ப்பார்கள் என்றான் சாரு தயக்கமாக...

பாட்டி ஏன்?? வளர்க்க வேண்டும். ஒரு குழந்தையை, அதன் பெற்றவர்கள்தான் வளர்க்க வேண்டும். அம்மா இல்லாத பட்சத்தில், அந்தக்குழந்தையை நீங்கள் தான் வளர்க்க வேண்டும். ஆனால் நீங்கள் மிக நேர்மையாக சிறை செல்ல இருப்பதால்,ஒரு குற்றவாலியை அழித்து, சிறையில் பல குற்றங்களை செய்த, பல குற்றவாலிகளின் மத்தியில் பெண்குழந்தையை வளருங்கள் என்றான்.

சாருநேசன் பவித்ரன் சொல்வதை நினைக்கவும் பயந்தவன், நான் என்ன செய்ய வேண்டும் என சரணடைந்தான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் தொழிலில் கவனம் சொலுத்த ஆரம்பித்தான்.

கண்ணனும், ஜீவிதாவும் பவித்ரனை திருமணத்திற்கு அழைக்க நேரில் வந்தனர்.

பவித்ரன் வீட்டில் வரவேற்று இருவரையும் அமரவைத்தான்.

கண்ணன், டிடெக்டிவ் வேலை எப்படி போகுது என வம்பிழுத்தான் பவித்ரன்.

இல்ல சார்.. எங்க மேடம் கம்பெனில நிறைய வேலை இருக்கு, அதை பாருங்கனு சொல்லீட்டாங்க, என ஜீவிதாவைப் பார்த்தான் கண்ணன்.

ஜீவிதா, அதுக்கில்ல பவி னா.. ஒரு ரகசியம் சொல்லவா.. இவருக்கு பெண்கள் ஹாஸ்டலில் அறைக்கதவை திறக்காமல் எப்படியெல்லாம் நுழைவது என பல வித்தை கற்றிருக்கிறார் அதனால் தான் பயமாக இருக்கிறது என்றாள்.

பவித்ரன் பலமாகச் சிரித்தான்.

கண்ணன் தோட்டத்தில் அமர்ந்திருக்க, பவி அண்ணா!! ரஞ்சனி யாரு??? என்றாள் ஜீவிதா மெதுவாக..

பவித்ரன் சற்று தொலைவில் இருந்த கண்ணனை திரும்பிப் பார்த்தான்.

ஜீவிதா உடனே, அவர் சொல்லல, நான் மயக்கமா இருந்த போது, நீங்களும் கண்ணனும் பேசியது எனக்கு கேட்டது. உங்கள் உயிருக்கு ஆபத்து வரும்னு கண்டுபிடிச்சு, உங்களை காப்பாத்த ஆளும் அனுப்பி இருக்காங்களே, அவங்க யார்??

கண்ணனுக்குத்தான் தெரியுமே!! என பவித்ரன் சொல்லவும், இப்போது ஜீவிதா கண்ணனை முறைத்தாள். எத்தனை முறை கேட்டிருப்பேன் எனக்கு தெரியவே தெரியாது என சாதித்துவிட்டார் என்றாள் கடுப்பாக ஜீவிதா.

ஏன்?? எதுக்கு இவ்வளவு ஆர்வம்.

அவங்கதான இவர அனுப்புனாங்க, நான் ஒரு நன்றியாவது சொல்ல வேண்டாமா??

நீங்க அவங்க நம்பர் குடுங்க, எங்க இருக்காங்கனு சொல்லுங்க என்றாள் ஜீவிதா.

எனக்கு தெரியாதே!! என்றான் பவித்ரன்.

நீங்களும் பொய்யா?? உங்களை காப்பாத்தி இருக்காங்க, அவங்க எங்க இருக்காங்கனு கூடத் தெரியாத... அண்ணா!! அவங்க உங்கள விரும்புறாங்க.. அது கூட உங்களுக்கு தெரியலையா??? என்ன பவி னா நீங்க... வேகமா போய் அவங்க கைபிடிங்க என்றாள்.

பவித்ரன், முகத்தில் வருத்தக் கோடுகள் பதிந்தன. அவள் என் முன்னால் மனைவி என்றான்.

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா!!

டைவர்சும் தான்..

ஓ... ஆனா இப்ப நீங்க அவங்களை கண்டுபிடிச்சு போனா நிச்சியம் உங்கள ஏத்துப்பாங்க, உங்க மேல அக்கறை இருக்கிறதுனால தான இவ்வளவும் சொஞ்சிருக்காங்க..

கண்டுபிடிக்கிறது சுலபம்தான். ஆனா.. அவள் என்னை மன்னிப்பது தான் கடினம் என்றான்.

ஏன்???

ஆனந்த் உனக்கு செய்ததை விட, நூறுமடங்கு நான் அவளுக்கு செய்துவிட்டேன், அதுவும் அவளுடைய கர்ப காலத்தில்...

ஜீவிதா அதிர்ந்து, இரண்டு எட்டுக்கள் பின்னால் வைத்தாள்.

பவித்ரன், ஜீவிதாவின் அதிர்ந்த கண்களைக் கண்டு பயமா?? நான் மிகவும் மோசமானவன். என்னைப் பார்ப்பதை ரஞ்சனி என்றுமே விரும்பமாட்டாள். அதனால் அவளை தொல்லை செய்ய நான் விரும்பவில்லை என்றான்.

பவித்ரனின் வருத்தம் ஜீவிதாவால் உணரமுடிந்தது.

சே! சே! இல்ல பவி அண்ணா. அப்படி சொல்லாதீங்க, நீங்க ரொம்ப நல்லவர்.

பவித்ரன் இடவலமாக தலையசைத்தான்.

சரி நீங்க தப்பே செய்திருந்தாலும், அதை ஒப்புக்கொண்டு வருந்தும் அளவிற்கு நீங்கள் மாறிஇருக்கிறீர்கள். அதுவே நீங்கள் நல்லவர் என்பதற்கு சான்றுதானே!!

இருக்கலாம்.

பிறகென்ன ரஞ்சனி சுலபமாக மன்னித்துவிடுவார்.

பவித்ரன் புன்னகைத்தான். அதில் வருத்தமே மேலோங்கி இருந்தது. அவள் மிகவும் கடினமானவள். எவ்வளவு கடுமையானவள் என கண்ணனிடம் கேள். பிறகு புரிந்துகொள்வாய், எனது சூழ்நிலை எதுவென..

ஓ... அவங்களுக்கு ரொம்ப கோபம் வருமா??

ம்... ஆனால் நிறைய போரை காப்பாற்றி இருக்கிறாள், என்னையும் உட்பட...

ஜீவிதாவிற்கு ரஞ்சனியைப்பற்றி தெரிந்து கொல்லும் ஆர்வம் முன்னிலும் அதிகமானது.

அவங்க போட்டோ... இருக்குமா??

பவித்ரன் அவனது திருமண ஆல்பத்தை காண்பித்தான்.

கண்ணனும் ஜீவிதாவும் பவித்ரனின் கல்யான ஆல்பத்தை பார்த்தனர்.

ரொம்ப அழகு.... அறிவு, திறமை, அண்ணா நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க.... என்றாள் ஜீவிதா.

ஹே!! சார் மட்டும், என்ன குறை?? அழகு... டாலினு சொல்லிப் பாரு, இன்னும் கிளாமர் ஏறும் என கிண்டலடித்தான்.

டாலியா?? அது என்ன???

பவித்ரன் முகம் மலர்ந்தது. பாத்தியா?? இப்ப சொல்லு யார் அழகு சாரா?? மேடமா??

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பத்தி ஆறாம் பகுதி..

நாட்கள் அதன் போக்கில் யாருக்கும் காத்திராமல் உருண்டது.

கண்ணனும் ஜீவிதாவும் மங்கலமாக வாழ்க்கையைத் தொடங்கினர். துரை தாத்தா ஆனார். ஜீவிதாவிற்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது.

ரஞ்சனியைத் துரத்தும் ஜார்ஜ் ஓயவில்லை. நந்தினியும் அவளது பங்கிற்கு ஜார்ஜிற்கு உதவி செய்தாள். ஆனால் ரஞ்சனியிடம் பலன்தான் கிடைத்த பாடில்லை.

பிரணவ் ஜார்ஜிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான். ஜார்ஜ் எங்கு சென்றாலும் ஜார்ஜுடன் செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இப்போது ஜார்ஜுடன் அதிகமாக கிசுகிசுக்கப்படும் நபர் நம் பிரணவ்தான்.

பிரணவின் இரண்டாம் பிறந்த நாள் வந்தது. ஜார்ஜ் அனைவரையும் விருந்திற்கு அழைத்தான். ஜார்ஜின் பிரமாண்ட மாளிகையில் விருந்து நடைபெற இருந்தது.

ரஞ்சனியே விருந்தினராகத்தான் அழைக்கப்பட்டாள்.

யாரைக்கேட்டு ஏற்பாடு செய்தீர்கள். பிரணவை தர மாட்டேன் என அடம்பிடித்தவளிடம், நந்தினி பாய்ந்தாள். நீயும் பிள்ளைக்கு எதுவும் கொண்டாடமாட்ட, கொண்டாட விரும்புரவரையும் தடுப்பாயா?? என்றாள்.

ரஞ்சனி முறைத்துக்கொண்டு அமைதியாக நின்றாள். ரஞ்சனியின் முறைப்பில் ஜார்ஜ் வாயே திறக்கவில்லை. ஜார்ஜை அப்படியே பின்பற்றும் பிரணவும் ஜார்ஜைப்போலவே வாயை கையில் பொத்திக்கொண்டு, ஜார்ஜைப் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றான்.

ரஞ்சனிக்கு பிரணவைப் பார்க்கும் போது பவித்ரன் ஞாபகம்தான் வந்தது. இப்போது குட்டி பவித்ரனாகவே இருந்தான் பிரணவ்.

அவ முறைச்சா முறைக்கட்டும், நீங்க கூட்டீட்டு போங்க, நாங்க பின்னாடியே வர்றோம் என்றாள் நந்தினி.

ஜார்ஜ், ரஞ்சனியைப் பார்த்தான். அவள் அசையவில்லை.

ஜார்ஜ் முதல்முறை கோபப்பட்டான்.

ஜார்ஜ் மடமடவென வெளியேற எத்தனித்து இரண்டு எட்டுக்கள் வைக்க, பிரணவ் டாடி...என ஜார்ஜை அழைத்தான்.

ஜார்ஜ் சந்தோசமாக திரும்ப, ரஞ்சனிக்கு மூச்சடைத்தது. நந்தினியும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஜார்ஜ் சந்தோசத்தில் பிரணவை தூக்கிப்போட்டு பிடித்தான். இனி யாருடைய சம்மதமும் எனக்கு தேவையில்லை என்றவன், பிரணவை தூக்கிக்கொண்டு வெளியேறினான்.

ரஞ்சனி தான் சாய்ந்திருந்த டேபிளை கைகளால் இருக்கப் பிடித்துக்கொண்டு தன்னை அடக்க முயன்றாள். அழவே கூடாது என எவ்வளவோ முயற்சி செய்தும், அவளது கண்ணில் நீர் பெருகி கண்ணில் திரைவிழுந்தது.

நந்தினி, ரஞ்சனி பிரணவோட சந்தோசத்தையும், ஜார்ஜோட சந்தோசத்தையும் பார். உனக்கு மனசு மாறாதா?? என்றாள்.

ரஞ்சனி நந்தினியின் கண்ணத்தில் பட்டென அறைந்தாள்.

நந்தினி உறைந்து நின்றாள்.

அப்போது தான் உள்ளறையிலிருந்து வெளிவந்தார் லதா.

இந்த அடியை , நீ என்னுடன் லண்டன் வந்தால் தான் திருமணம் செய்து கொல்வேன் என்று அடம்பிடித்தாய் பார் , அப்போதே கொடுத்திருந்தால், நான் ஜார்ஜை சந்தித்திருக்கவே தேவையில்லை. எனக்கு கெட்ட பெயரும் வந்திருக்காது.

மற்றவர் முதல் பெற்றவர்கள் வரை என் பெயர் நாசம். இன்று என் மகன் டாடி என எவனையோ அழைக்க, அதை கண்களால் பார்க்கும் அளவு காலம் என்னை கஷ்டப்படுத்திவிட்டது.

என்னோட வாழ்க்கையில் தலையிட நீ யார்?? நானும் ஜார்ஜ் இன்று மாறிவிடுவார், நாளைமாறிவிடுவார் எனப் பார்க்கிறேன். எத்தனையோ முறை எப்படி எல்லாமோ சொல்லிவிட்டேன். ஒருமுறை அடித்துக்கூட விட்டேன். ஆனால் நாளுக்கு நாள் ஜார்ஜ் என்னிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

நன்றாகக் கேட்டுக் கொள். நான் யாரையும் திருமணம் செய்வதாக இல்லை. யார் மீதும் எனக்கு நேசமில்லை, பிரணவ் உட்பட. நான் எல்லோருக்கும் என் கடமையை சரியாக செய்ய நினைக்கிறேன்.

என் அப்பா, அம்மா, மகன் என அனைவருக்கும். அவ்வளவு தான் என்வாழ்க்கை. அவ்வளவே தான். இன்னும் ஒருமாதத்தில் படிப்பு முடிந்தது, நான் எனது கடையை கவனித்துக்கொள்ள சென்றுவிடுவேன்.

அதுவரை நீயும் ஜார்ஜூம் என்னிடம் பேச வேண்டாம் என விரல் நீட்டி எச்சரித்தவள், தனது அறைக்குள் சென்று அடைத்துக்கொண்டாள்.

ஜார்ஜிடமிருந்து அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், ரஞ்சனிக்கு போன் வந்தது.

அதை இரண்டுமுறை தவிர்த்தாள். மீண்டும் அழைப்பு வரவும், கடுபானவள் அதை எடுத்து ஹலோ என்றாள்.

ரஞ்சனி ஆறு மணிக்கு பார்ட்டி வந்துவிடு என்றான் ஜார்ஜ்.

என்னால் முடியாது. பார்ட்டி முடிந்ததும் நந்தினியிடம் குழந்தையை தந்துவிடுங்கள் என்றாள்.

நீ வந்தால் குழந்தையை பார்க்கலாம். எடுத்துக்கொண்டும் போகலாம். இல்லையேல் இத்துடன் நீ பிரணவை மறந்துவிடு, நானே பார்த்துக்கொள்கிறேன் என்றான் ஜார்ஜ்.

ரஞ்சனி மனம் பதறினாள். ஜார்ஜ் நீங்கள் எல்லை மீறி பேசுகிறீர்கள். என்னால் எங்கும் வர இயலாது. என் குழந்தையை எந்த உரிமையில் நீங்கள் பார்த்துக்கொள்கிறேன் என்கிறீர்கள். மரியாதையாக பிரணவை அனுப்பி விடுங்கள் என்றாள்.

அழகான உடை அணிந்து வா!! என்றவன் இணைப்பை துண்டித்தான்.

ரஞ்சனி திரும்பத்திரும்ப முயற்சித்தும் தொடர்பு கிடைக்கவில்லை.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி மனம் நொந்து போனால். இப்படி ஒரு போராட்டமா என் வாழ்க்கை.

புயலுக்கு பின் அமைதி. முன் அமைதி என பழமொழிகள் உள்ளனவே. என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு புயல் எப்போது கரையைக் கடக்கும் என யோசித்தவள், தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

பிரணவுடன் ஜார்ஜ் விளையாட வரும்போதெல்லாம், ஜார்ஜை தவிர்க்க நினைத்து, அவர்களை கண்காணிக்காமல் விட்டது, எவ்வளவு பெரிய குற்றமாகிவிட்டது.

நந்தினியின் குழந்தை யாஷினி டாடி என நிவேஷனை அழைப்பதைப் பார்த்து, என் டாடி யார் என பிரணவ் அவனது மழலையில் கேட்கும் போதாவது, பவித்ரன் போட்டோவை காட்டி இருந்திருக்கலாமோ!

நந்தினி கதவைத் தட்டினாள். ரஞ்சனி அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தாள். தலையை பிடித்துக்கொண்டு, எப்போது தூங்கினோம் என யோசித்தவாறு எழுந்து கதவைத் திறந்தாள்.

நந்தினி அழகான ஒரு கௌனை அவள்புறம் நீட்டினாள்.

ரஞ்சனி, நந்தினியை முறைக்க, ரஞ்சனியின் கையில் கௌனை திணித்தவள், எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.

அப்போது ஜார்ஜ் ரஞ்சனியை அழைத்தான்.

ரஞ்சனி ஹலோ எனும் முன், இந்த ஆடையை போட்டுக்கொண்டு வா!! என்றவன், பட்டென இணைப்பை துண்டித்தான்.

அந்த கௌனில் கையே இல்லை. முதுகு முழுவதும் தெரியுமாறும், அதை ஆங்காங்கே மறைத்த மூன்று மெல்லிய கயிறுகளும் மட்டுமே இருந்தது.

முன்னங்கழுத்து பெரிதாக இருந்தது. இதை எப்படி அணிந்து செல்வது என தலையில் கைவைத்தாள் ரஞ்சனி.

பின் ஒரு முடிவு எடுத்தவளாக, அதை அணிந்து கொண்டாள்.

முழு நீளக் கண்ணாடியில் தன்னைக் கண்டு அருவறுத்தாள். எதையோ நினைத்தவள் மனம் நிறைந்தது. கடைசி ஆயுதமாக இதையே பயன்படுத்த முடி வெடுத்தவள், பார்ட்டிக்கு தயாரானாள்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பத்தி ஏழாம் பகுதி..

அழகிய வெள்ளை நிற கௌனில், அதற்கு ஏற்ற வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தாலான ஒரு மிருதுவான கோட்டை அணிந்து , கண்ணாடி முன் நின்றாள் ரஞ்சனி. எப்போதும் நுனிக்கை வரை உடையணியும் வழக்கம் கொண்டவள் ரஞ்சனி. ஆனால் இந்த கோட் முக்கால் கைதான் இருந்தது. மூச்சை இழுந்துவிட்டு, அழுத்தத்தை சற்று குறைத்தவள், மடமடவென வீட்டிலிருந்து வெளியேறினாள்.

நந்தினி, ரஞ்சனியின் வருகைக்காக கூடத்தில் காத்திருக்க, அவளை கண்டுகொள்ளாமல் வெளியேறிவிட்டாள் ரஞ்சனி.

நந்தினி மிகுந்த கோபத்தில் குழந்தையுடன் அமர்ந்திருக்க, நிவிஷன் என்னாச்சுமா?? என கேட்டதுதான் தாமசம், மடமடவென பொரிந்து தள்ளினாள் நந்தினி.

நான் அவ நல்லதுக்குதானங்க செஞ்சேன். எப்படி கண்டுக்காம போறா பாருங்க, ஜார்ஜுக்கு என்ன குறை??? என நிவிஷனிடம் கைநீட்டி கேட்டாள் நந்தினி.

நிவிஷனுக்கு நந்தினியின், குமுறலும், சிறுபிள்ளை தாயிடம் புகார் செய்வது போல் புகார் செய்வதையும் கண்டவருக்கு, ஒருபுறம் சிரிப்பு வந்தது. ஆனால், இப்போது சிரித்தால் என்னை கொன்றேவிடுவாள் என நினைத்தவன் அமைதிகாத்தான்.

சொல்லுங்க யாழ் பா... என்றாள் நந்தினி.

நிவிஷன், என்னது யாழ் பா... வா இது என்ன புதுசா?? என்றான்.

அது வா.. லதா மா சொன்னாங்க, குழந்தை பிறந்திடுச்சாம், இன்னமும் உங்களை பேர்சொல்லி கூப்பிட கூடாதாம். அதுதான் எப்படி கூப்பிடனு யோசிச்சேன், அப்பறம் லதாமா.. ராஜன் சார, ரஞ்சனிபானுதான கூப்பிடுறாங்க, அதான் அப்படியே நானும் கூப்பிட்டேன், ஏன்?? நல்லா இல்லாயா??

நிவிஷன் , தலை இடவலமாக ஆடியது.

நந்தினி, பின்ன எப்படி கூப்பிட?? என்றாள். அவன் நிவிஷன் என்றான்.

இப்போது நந்தினியின் தலை இடவலமாக ஆடியது.

ஏன்??? இவ்வளவு நாள் மேடம் அப்படித்தான கூப்பிட்டீங்க..

ஆமா. ஆன இப்ப யாழும் பேச ஆரமிச்சிட்டா.. அவளும் என்னமாதிரி உங்கள பேர் சொல்லி கூப்பிடுறா .. அதனால பேர் வேண்டாமே என்றாள் நந்தினி.

அப்பசரி.. நானும் இனிமே உன்ன யாழ் மா.. னு கூப்பிடவா..

ஐயோ!! சகிக்கல!! வாடி போடினுகூட கூப்பிடுங்க, ஆனா இது வேணாம் என்றாள் நந்தினி.

நிவிஷன் நந்தினியின் பேச்சில் சிரித்துவிட்டான். அவளிடமிருந்து குழந்தையை வாங்கியவன், யாழின் கன்னத்தில் முத்தமிட்டவாறு தன்மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தான்.

நிவிசன் தோளில், நந்தினி சிரித்தவாறு, சிறிய அடி ஒன்றை வைத்தவள், பின் சற்றே சோகமாக, நான் டிரஸ் மாத்தீட்டு வரேன் என உள்ளே சென்றாள்.

மனைவியின் சுணக்கமான முகத்தை பார்த்து, அவளை மற்றொரு கையால் அணைத்தவன், தன் கை வளைக்குள் வைத்துக்கொண்டான்.

ரஞ்சனியும் நம்மள மாதிரி வாழனும்னு, நான் நினைக்கிறது தப்பாங்க... என்றாள் நந்தினி மெதுவாக..

நிவிஷன் பதில்பேசவில்லை. அமைதியாகவே இருந்தார். ஒருவரின் வாழ்க்கையின் முடிவுகளை அவர்கள்தான் எடுக்கமுடியும். ஏனெனில் அதன் வலியும், வேதனையும் அவர்களுடையதே என நினைத்தவன், ஆனால் நந்தினியிடம் எதுவும் சொல்லாமல், மௌனமாக இருந்தான்.

ம்சூ.. எதாச்சும் சொல்லுங்க.. அவ இன்னைக்கு என்ன அடுச்சுட்டா தெரியுமா?? என்றாள் நந்தினி.

நிவிஷன் சே!! நான் பாக்காம போயிட்டேனே!! என்றான்.

நந்தினி பட்டென நிவிஷனைவிட்டு விலகிநின்று முறைத்தாள்.

நிவிஷன் , என்னாச்சு நந்தினி, ஓ.. முறைக்கிறியா??? சரி சரி என சிரிப்பை அடக்கிக்கொண்டு பேச,

எதாச்சும் கேள்வி கேட்டா பதில் சொல்லாம என்னையே கலாய்க்குறீங்க... என்றாள் நந்தினி.

இப்போது நிவிஷன் சற்று அமைதியாகி, ஒன்னு சொல்லுவேன் செய்வியா?? என்றான் நந்தினியிடம்.

அவள் ம் என தலையசைக்க, நீ எதுவும் செய்யவேண்டாம். ரஞ்சனியோட வாழ்க்கைல அவங்க எந்த முடிவெடுதாலும், நீ தலையிடாத, இது உன்னோட நல்லதுக்குதான் சொல்றேன் என்றான்.

நந்தினி அது.. என ஏதோ ஆரம்பிக்க,

இரு நான் முடிச்சிடுறேன். உங்க நட்பு நல்லாவும் இருக்கும், போக அவங்களுக்கும் யோசிக்க நேரம் கிடைக்கும். ரஞ்சனிய விட்டுப்பிடி... என்றான்.

நந்தினிக்கு இதில் சிறிதும் சம்மதம் இல்லை. இருந்தும் நிவிஷனுக்காக சரி என ஒப்புக்கொண்டாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி தனது வேக நடையுடன் அந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் நுழைந்தாள்.

பத்திரிக்கை கூட்டம் ரஞ்சனியை சூழ்ந்துகொண்டது. இதற்கு தயாராகவே வந்தவள் சற்றும் எரிச்சல்படவில்லை, பயப்படவுமில்லை. அவளது நடை நிற்கவுமில்லை.

புகைப்பட ஒளி சரமாரியாக அவள் மேல் விழுந்தவண்ணமிருந்தது. அவள் முன்னோக்கி நகர, கூட்டம் பின்னோக்கி நகர்ந்து அவளுக்கு வழிவிட்டது. ஒரு கட்டத்தில் கூட்டம் இரண்டாகப்பிரிய, இப்போது ரஞ்சனிக்கு நேர் எதிரில், ஜார்ஜ் பிரணவை தூக்கிக்கொண்டு நின்றான். இருவரும் ஒரே மாதிரியான சூட்டில் மிடுக்காய் இருந்தனர்.

ஜார்ஜின் முகத்தில் வெற்றியின் பூரிப்பு இருந்தது. டாடி, மா... என அவனது குரலில், மொத்த அரங்கமும் வியந்து பார்த்தது. ரஞ்சனி, ஏதும் சொல்லாமல், ஜார்ஜ் அருகே வந்து நின்றாள். முதலில் பிரணவை கையில் வாங்கிக்கொண்டாள்.

கேக்கை வெட்டி இனிதாக பிறந்தநாள் கொண்டாடினர். ரஞ்சனி எதுவும் பேசவில்லை. மோனலிசா ஓவியம் போல் அமைதியாகிவிட்டாள். எதையும் வெளிக்காட்டவில்லை.

ஜார்ஜ் ரஞ்சனியின் கையை விடவில்லை. அவளும் தடுக்கவில்லை. பிரணவை விழாமுடியும் வரை தரையில் இறக்கவும் இல்லை.

விருந்து முடிந்து அனைவரும் வெளியேறத் தொடங்கினர். ஜார்ஜின் கை இப்போது ரஞ்சனியின் தோள்களுக்கு மாறி இருந்தது.

ஜார்ஜ் ரஞ்சனியை கை அணைப்பில் வைத்திருக்க, ரஞ்சனி தூக்கிய ஜார்ஜை அணைத்து வைத்திருந்தாள். இன்னும் புகைப்பட ஒளி அவர்கள் மீது சில சமயம் விழுந்து கொண்டுதான் இருந்தது.

கோட்டையை அணிவகுத்திருந்த அனைத்து காரும் சென்றுவிட்டது, ரஞ்சனி காரைத் தவிர...

ரஞ்சனி... நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் என ஜார்ஜ், ரஞ்சனியின் கன்னத்தில் முத்தமிட்டான். ரஞ்சனி அமைதியாகவே இருந்தாள். ஜார்ஜ் புன்னகையுடன் அவளது உதட்டை நெருங்கினான்.

பலியாவாளா?? பலிகொடுபாளா??
 
Ayyoooo.... Ithu enna kelvi... George pali aaga poran... Rajathi pali kudukka pora.... Sethada magane.... George yar Mela kaiser vaikkura.... Yarkitta ranjani kittayeva.. Corner panna vunakku aale kidaikkalaya.... Sethukkka pora.... Sethil sethillla petkka pora..... Rip for george:cool::cool::cool::cool:
 
Top