All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலன் கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#காதலன்

ஹாய் டியர்ஸ்,

காதலன் கதையை கொஞ்ச பேர் படிக்காததால ரீ ரன் பண்றேன்..

முதல் 2 இரண்டு எபி போட்டு இருக்கேன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

அப்பறம் கிண்டிலேல இன்றிலிருந்து (26.5.2020) to (28.05.2020) மூன்று நாளைக்கு பிரீ டவுன்லோட் கொடுத்து இருக்கேன் அதுல படிக்குறவங்களும் படிச்சிக்கங்க..மதியம் 2 மணிக்கு மேல செக் பண்ணுங்க அப்பதான் பிரீ டவுன்லோட் ஆப்ஷன் ஒர்க் ஆகும்

கதை திரி :



கிண்டிலே லிங்:




#நீங்கமுடியுமா


நீங்க முடியுமா கதை நெக்ஸ்ட் மண்டேலிருந்து ஸ்டார்ட் பன்றேன்..


இப்படிக்கு

உங்கள் மிளாணிஸ்ரீ
 
Last edited:

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :1

அழகூர் பெயரைப்போலவே அந்த ஊரும் மிக அழகு வாய்ந்த ஊர், கண்டிப்பாக இந்த ஊரின் அழகிற்காகதான் இந்த பெயர் வந்திருக்கும்.நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூரின் அருகில் இருக்கும் ஒரு பசுமை வாய்ந்த விவசாய கிராமம்தான் நம் அழகூர்.

எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென அழகாக மழை நீரை சேமிக்க ஆங்காங்கே குளங்களும், குட்டைகளும் தூரம் தூரமாய் தனி தனி வீடுகளும் வீடுகளை சுற்றி மரங்களும் பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக. இருக்கும்.


அந்த ஊர் மக்களால் சின்ன கேரளா என்று அழைக்கப்படும் அளவுக்கு இயற்கை அழகை உடையது.

20 அடி உள்ள சிறிய ஆறு அந்த ஊரின் விவசாய நிலங்களையும் குடியிருப்பு பகுதியையும் பிரிக்கும் கோடாக அமைய ,ஆற்றின் இடதுபக்கம் ஒரு தோப்பு போல நிறைய தென்னை மரங்களும்,மாமரங்களும்.வாழை மரங்களும் இருக்க அதற்கு நடுவே சின்னதாய் ஒரு ஓட்டு வீடு.

அந்த வீட்டின் இளவரசியின் ஆசைக்கிணங்க பெரிதாய் வீடு கட்ட பணவசதி இருந்தும் அந்த ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டையே நிரந்தர இருப்பிடமாக்கி இருந்தார் அந்தவீட்டின் தலைவர் ரத்தினமூர்த்தி.


“மல்லி மல்லி “என்று தன் மனையாளை அழைத்த வண்ணமே வீட்டினுள் உள்ள சோஃபா வில் அமர்ந்தார் ரத்தினம்..சொல்லுங்க என்று வந்த தன் மனைவி மல்லிகாவிடம்” பொழுது நல்லா இறங்கிடிச்சி மல்லி அம்மாவை போய் சின்ன பாப்பாவ அழைச்சிட்டு வர சொல்லு”என்று சொல்லும் போதே அவர் குரல் வேதனையை கக்கியது.

இது தினமும் நடக்கும் ஒன்றைபோல் மல்லிகாவும் தன் துயரத்தை மறைத்தபடி அத்தையிடம் போய் சொன்னாள்.

தன் பேத்தியை அழைக்க தன் பெரியமகன் மருதுவின் வீட்டை நோக்கி நடந்தார் காமாட்சி .


அங்கே ஆற்றிற்கு வலதுபுறம் உள்ள தன் வீட்டிற்கு செல்லவும் மற்றும் தன் விளைநிநிலத்திற்கும்,தன் தம்பியின் விளைநிலத்திற்கும் செல்ல ஏதுவாக மருது கட்டிய சிமெண்ட் பாலத்தில் காலை ஆற்றின் உள்புறம் தொங்கபோட்டு கொண்டு தன் கையில் உள்ள டைரியை இறுக்கி பிடித்தபடி எப்பொழுதும் கலங்கிய விழிகளுடனும் நழுங்கிய தோற்றத்தோடும் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அந்த வீட்டின் இளவரசி அகலிகை தப்பு செய்யாமலே சாபம் பெற்றவள்.


கொஞ்சும் போது பாப்பா, தங்கம்,சாமி,கண்ணு, எனவும் திட்டும் போது வாலு,குரங்கு, கழுதை,குட்டி என தன் பாசத்தாலும், சேட்டையாலும் அந்த வீட்டையே உயிர்ப்புடன் வைத்திருந்த அகலி இன்று உயிர்பில்லாமல் அமர்ந்திருந்தாள்.
அதை எல்லாம் யோசித்தபடியே அவள் அருகில் அமர்ந்தார் காமாட்சி.

ஓடக்கரையோரம் ஓரீருவர் நிக்கயாலே...
குத்தவச்ச பொண்ணெல்லாம் குடிசைக்குள்ள போகயிலே..
என் குலசாமி கருப்பன் கூட காவலுக்கு கிளம்பயிலே.
பாவி நான் மட்டும் பைத்தியமா நிற்கிறேனே....
வருஷம் ரெண்டாச்சி வஞ்சி இவ உன்னை பாத்து....
அழுகத்தான் தெம்பில்ல....
ஆறுதலுக்கு ஆளில்ல....
ரகசியமாய் நான் விடும் கண்ணீரை காற்றாவது கடல் கடந்து வந்து உன்னிடம் வந்து சேர்குமா......?
காத்திருந்து
காத்திருந்து
காலுல வேர் முளைச்சி விரிட்சமாச்சி.....
கனவெல்லாம் கண்ணீர்விட்டு
காய்ந்த சருகாச்சி....
உண்ணாமல்
உறங்காமல்
உன் நினைவில் நானிருக்க...
எப்படி ஆனாய்….

தன் மனநிலையை அப்படியே சொல்லும் தன் டைரியில் தான் எழுதிய கவிதையை பார்த்த கொண்டிருந்த அகலி அருகில் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அருகில் அமர்ந்த அப்பத்தாவை பார்த்த அகலிகை உதட்டிற்கும்,கண்ணிற்கும் எட்டாத ஒரு சிரிப்பை உதிர்த்து “அப்பத்தா என்று அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.


காமாட்சி தன் கரங்களால் அவள் தலையை கோதியபடி ”ஆத்தா அகலி இருட்டிடிச்சியா வீட்டுக்கு போகலாம் “ என்றார்.
.ம்ம்ம்ம் என்று சொன்னவள்

(இதுவே 1 வருடத்திற்குமுன் என்றால்” ஏட்டி அகலி விளக்கு வைக்கிற நேரத்துல வயசு புள்ளைக்கு ஆத்தங்கரையில என்னடி வேல”என வீட்டிலிருந்த படியே அழகூரே அதிரும் படி கத்தி இருப்பார் ஆனால் இன்றோ?) .

”ஏன் அப்பத்தா முன்னலாம் நான் அமைதியா இல்லனு திட்டுவல இப்பலாம் நான் ரொம்ப அமைதியா இருக்கன்ல உன்ன கிழவினு கூட சொல்ரது இல்லல. இப்ப உனக்கு சந்தோஷம் தானே” என்று கேட்டாள்.

“உன்ன கிழவில உள்ள உயிர்ப்பு உன் அப்பத்தாவில் இல்ல என் சாமி என பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டு தன் வீட்டின் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து சென்றார் .



சென்னையில் பணக்காரர்கள் வசிக்கும் அந்த அபார்ட்மெண்டின் நிசப்தத்தை கலைத்தபடி வந்தது ஒரு ஷூ வின் தள்ளாடிய சத்தம்.தன் இரு கைகளையும் பேன்ட் பாக்கெட்டில் விட்டபபடி கால்கள் தடுமாற அலட்சியமாக வாயில் சிகரெட்டை வைத்தபடியே சிகெரெட் புகையை உள்ளிழுத்து மூக்கின் வழியே வெளிவயிட்டபடியே தன் வெளிர் நீள நிற முழு கை சட்டையை முழங்கை வரை மடக்கி விட்டு டார்க் புளூ ஃபார்மல் பேண்டில் நான்காவது மாடியில் உள்ள தன் அபார்மெண்டை நோக்கி தள்ளாடிய படியே சென்றான் .

விஷ்வேந்திரன்..காலிங் பெல்லை அழுத்திவிட்டு அதைத்திறக்கும் வரை கூட நிதானம் இல்லாமல் கால்கள் தள்ளாட அறைக்கதவிலையே சாய்ந்து விட்டான்.

மணி 12 ஐ காட்ட கதவை திறந்து ஐ‌னனி வெளியில் வர கதவின் சப்போர்டில் நின்ற விஷ்வேந் ஜனனியின் மேல் விழுந்தான்.
அவனை தாங்கியபடியே “ ஏன் அண்ணா உன் உடம்ப இப்படி கெடுத்துகிற” என்ற படி அவன் ரூமிற்கு அழைத்து சென்றாள்.

விஷ்வேந்தோ” பகல் முழுசும் என் சிந்தனையை என் வேலையில் மூழ்கடித்துகிறேன் டா பாப்பு ஆனால் இந்த இரவு... இரவு என்னால முடியல டா பாப்பு “ என அழும் குரலில் சொல்லும் தன் அண்ணனை பார்க்கும் போது சில வருடங்களுக்கு முன் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் நிமிர்ந்த நடையுடனும் தெளிவான சிந்தனையோடும் இருந்த தன் அண்ணனா இது என்று ஆச்சரியமாக பார்த்தாள்.


காதல் இப்படியெல்லாம் ஒருவனை மாற்றுமா?

அங்கே ஹாலில் இறுக்கமாக அமர்ந்திருக்கும் தன் அன்னையையோ, தன்னயே ஏக்கத்துடன் பார்க்கும் தன் தந்தையையோ அந்த போதையிலும் துளியும் கண்டு கொள்ளாமல் தன் ரூமிற்கு சென்றுவிட்டான்.

அவனை ரூமில் படுக்கவைத்து விட்டு ஹாலிற்கு வந்த ஜனனியை பிழு பிழுவென பிடித்து கொண்டார் அவளின் தாய் ஞானசுந்தரி.

“ என்னடி அவன் கல்யாணத்தபத்தி இன்னைக்கும் பேசலயா? ஒன்னுக்கு மூனு பிள்ளைகள பெத்து வச்சிருக்கேனு தான் பேறு ஆனால் ஒன்னுக்கு கூட என் விருப்பப்படி கல்யாணம் பண்ணி வைக்க முடியல” எல்லாம் அவளால் வந்தது என அந்த அப்பாவி பெண் ருக்குவை திட்டினார்.

தன் பிள்ளைகளின் வாழ்க்கை இப்படி இருக்கிறதே என்ற வருத்தத்தை விட , அமைந்தால் தன் விருப்பப்படி தான் அமைய வேண்டும் என்ற எண்ணம் தான் சுந்தரிக்கு அதிகம் இருந்தது.


ஜனனி” அண்ணாணோட மனசு தெரிஞ்சும் இந்த கேள்வியை இப்ப மட்டும் இல்லம்மா எப்பொழுதும் என்னால கேக்க முடியாது.அதே மாறி அண்ணன் லைஃப்ல ஒரு தெளிவு கிடைக்காம எனக்கும் எதுவும் கிடையாது” என சொல்லும்போதே சந்தோஷின் முகம் அவள் மனக் கண்ணில் மின்னி மறைந்தது.


சுந்தரி” உங்க உங்க இஷ்டம் படி நீங்க இருக்குறத்துக்கு நான் ஏன் உயிரோட நான் சாகு...” என்று சொல்லி முடிக்கும் முன்பே ஜனனி சுந்தரயின் தோளை ஆவேசமாக பற்றி ஏன் மா ஏன் இப்படி சொல்லி சொல்லிதான் ஒருத்தியை எமனுக்கு தூக்கி கொடுத்தாச்சி ,இதோ ஒருத்தன ( தனக்கு வலப்புறம் உள்ளரூமை கைகாட்டி ) பைத்தியமாக்கியாச்சி, இன்னொருத்தன் உயிருடன் உணர்வு இருந்தாலும் பிணமாறி இருக்கான்.இன்னும் என்னதான் வேனும் உனக்கு?

ஏன்பா இப்ப கூட அம்மாக்கு எதிரா ஒரு வார்த்தை பேச மாட்டிங்கல? பொண்டாட்டி மேல் அவளோ காதல் இல்லை?
ஆனால் என் அண்ணன் மட்டும்..... பாப்பு என தன் தந்தை சொல்ல வந்ததை கை நீட்டி தடுத்தவள் “ ஒரு கணவனா , ஒரு வியாபாரியாய் நீங்க சிறந்து விளங்கினாலும் நல்ல குடும்ப தலைவனா நல்ல அப்பாவாக நீங்க தோத்துடீங்க அதுவும் மோசமா” என்று கோபமாக சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

அதன் பின் முருகன் பேசியதெல்லாம் காற்றுக்கு மட்டுமே.அவள் பேசியதெல்லாம் யாரையோ என்பது போல் சுந்தரி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் தூங்க சென்று விட்டார்.

முருகன் மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலை பட்டபடி சோஃபாவிலயே அமர்ந்துவிட்டார்..

காலையிலே 5 மணிக்கே விழித்து பழக்கம் உடைய விஷ்வேந் விழித்தபடியே தன் பெட்டிலேயே படுத்திருந்தான் .படுத்ததிற்க்கும் தூக்கத்திற்கும் இடையே உள்ள 5 நிமிடமும், காலையில் விழிப்பிற்க்கும் எழுவதற்கும் இடையில் உள்ள 5 நிமிடமும் தன் இனிமையான , தன் கொடுமையான,இனி வரவே கூடாத,ஒரு முறையாவது வந்து விடாதா என ஏங்கும் அந்த ஒரு வருடத்தை சந்தோசமும், இயலாமையும், காதலும் சரிவிகிதத்தில் இருக்க அதையே நினைத்து பார்த்து கொண்டிருந்தான் (கொண்டிருப்பான்)...


தன் மொபைலில் உள்ள அகலியின் போட்டோவை” என் குட்டிமா”என ரசனையாக பார்த்து கொண்டிருந்தான்.
அவன் மூளையோ அவள் மிஸ்ஸஸ் அகலிகை யாக கூட இருக்கலாம் விஷ்வேந் என அவனை எச்சரிக்க அவன் மனமோ அவனே ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் சிரிக்கிறான் அது உனக்கு பொருக்கலயா? அவன் ஒன்னும் மிஸ்ஸஸ் அகலிகைய பார்க்கல அவனோட அம்முகுட்டி தான் பாக்குறான் என்றது.


மிஸ்ஸஸ் அகலிகையிலயே முகம் இறுகிய விஷ்வேந் கோபமாக அருகில் உள்ள பார்க்கிற்கு ஜாக்கிங் சென்று விட்டான்

.தன் மனசு சொல்லும் உண்மையை கேட்கும் பொறுமை அவனிடம் இல்லை. .ஜாக்கிங் முடித்து குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் தன் அறையில் உள்ள கண்ணாடியில் தெரியும் தன் உடற்பயிற்சியால் முறுக்கேறிய உடம்பை பார்க்கும் போது தன் குட்டிமாவின் தேன் குரல் அவன் அனுமதி இல்லாமலே ஞாபகம் வந்தது.

“மாமா உனக்கு மட்டும் எப்படி உடம்பு இவளோ ஸ்ட்ராங்கா கல்லு மாறி ஜிம் பாடியா இருக்கு.என் அண்ணனும் இந்த சந்தோஷும் சுத்த வேஸ்ட் .மாமா மாமா உங்கள ஒரு பன்ஞ்ச் பன்னிக்கவ? ப்ளீஸ்

என குழந்தையின் குதுகலத்தோடும் தன் பூஞ்சை உடலில் உள்ள பூ போன்ற மென்மையான கைகளில் தன் மொத்த பலத்தையும் கொண்டு வந்து அவன் வயிற்றை நோக்கி கை ஒங்கவும் அவன் நகரவும் சரியாக இருக்க அந்த பார்க்கில் வேலைக்காக கொட்டி வைத்திருந்த மணலில் தொப்பென்று விழுந்தாள்.

இல்லாத காயத்தை பார்த்து வலிப்பது போல் அழுபவளை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அவள் முன் வந்தவன் உதடோரம் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “ தொட்டு பேசாத அகலி” என்றான்.

அடப்பாவி என்று ஆச்சரியம் காட்டியவள் “ கைகொடுக்குறான பாரு என்று மனதில் திட்டிய படியே கோபமாக எழுந்தவள் அவன் என்ன ஏது என்று சுதாரிக்கும்முன் ஒரு குதி குதித்து அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள் 20 அடி ஒடி சென்று திரும்பி அவனை நோக்கி “ டேய் வளந்து கெட்டவனே தொட கூடாத போடா போ இப்ப என்ன பன்னுவ? போ போய் கேஸ் அடுப்பு மேல் கன்னத்த வச்சிக்கோ” ..

என்று தன் நாக்கை நீட்டி பழிப்பு காட்டிவிட்டு" துரைய தொடக்கூடாதாமே நான் தொடாம வேறயாரு தொடுவாங்களாம் என்று முனுமுனுத்துக்கொண்டே ஓடி விட்டாள்.


பட்டாம்பூச்சி போல மென்மையான தன்னவளின் இதழ் ஸ்பரிசத்தை இன்றும் தன் கன்னத்தில் உணர்ந்தபடியே சிரித்து கொண்டே இரண்டு இரண்டு படிகளாக தாவி படி வழியாகவே கார் பார்கிங் சென்றான்.

(அவன் மனமோ ஏய் இரு இரு அவன் இப்ப தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கான் நீ எதையாவது சொல்லி அவன கன்ஃயூஸ் பண்ணிடாத என அவன் மூளையுடன் சண்டை போட்டு கொண்டிருந்தது )


தன் ஸ்வீஃப்ட் டிசைரில்,அதன் பின் எவ்வளவு விலை உயர்ந்த கார்கள் வாங்கினாலும் இது அவனுக்கு ஸ்பெஷல் தான் ஏன்னா அவன் மல்லிப்பூ க்கு ரொம்ப பிடிச்சகாராச்சே அவளை பேலவே அவள் ஆசைகளும் ரொம்ப குட்டி...

ஆபிஸ் வந்தவன் வானுயர்ந்த வளர்ந்து நிற்கும் தன் அலுவலக கட்டிடத்தை பார்த்தான்.இந்த இரண்டு வருடங்களில் அசுர வளர்ச்சி அடைந்த VJK கண்ஸ்டரக்ஸனின் வளர்ச்சி, உயரம் எல்லாம் விஸ்வேந் தன் அம்முகுட்டியை குத்தி கிழித்த வார்த்தைகளின் வலிக்கு சமம்.தன் மல்லிப்பூ அன்று கதறிய கண்ணீரின் வேதனைக்கு சமம்.

தன் வேக நடையுடன் அனைவரின் குட் மார்னிங்கையும் சின்ன தலை அசைவுடன் ஏற்றுக்கொண்டு அவன் அறைக்கு சென்றவன் அதற்கு மேல் நினைக்க நேரமில்லாமல் அவன் வேலை அவனை ஆக்கிரமித்தது.வேலை நடக்கும் சைட், கையிருப்பு மெட்டீரியல், பேமென்ட் பென்டிங் ,என அனைத்தும் தன் காரியதர்சியான பரத்திடம் கேட்டு தெரிந்து கொண்டவன்.

சைட் விசிடிற்கு வெளியில் கிளம்பும் போது பரத் “ சார் தஞ்சாவூரில் நமக்கு கிடைச்சிருக்க மாஃல் கட்டுற ப்ராஜெக்ட் விஷயமா கிளையண்ட் அண்ட் சைட் விசிட்க்காக நீங்க இன்னைக்கு நைட் கிளம்பனும் சார்” என கோர்வையாக சொல்லி முடித்தான்.


“யா ஓகே ரெடி பண்ணிடுங்க ஃப்ளைட். டிக்கெட் புக் பண்ண வேண்டாம் நான் கார்லயே போய்கிறேன் “ என சொல்லி சென்று விட்டான்.

இரவு 8 மணிக்கே மணிக்கே வீட்டிற்கு வந்த அண்ணனை பார்த்ததுமே தெரிந்து கொண்டாள் அண்ணன் எங்கயோ வெளியூர் வேலை விஷயமாக செல்கிறான் என்று.

(இல்லையென்றால் நைட் 12 தான் அதுவும் நிற்க முடியாத போதையில்).

“ பாப்பு ஒரு காஃபி டா ரொம்ப தலைவலிக்குது “ என சிகெரெட்டை பிடித்த படியே கேட்டான்.

ம்ம் என்று சொன்ன வள் வேலைக்காரி லீவ் என்பதால் தானே சென்றாள்.காஃபி எடுத்துக்கொண்டு வருவதற்குள் 4 சிகரெட்டை காலி பன்னியிருந்தான் விஸ்வேந். கலங்கிய கண்ணோடு “விச்சு அண்ணா டிரிங்க்ஸ் கூட பரவாயில்லை இந்த சிகரெட் வேணாமே”.என்றாள்.

“பாப்பு ப்ளீஸ்” என்று சொன்னபடி காஃபியை வாங்கி கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

ஜனனி அழுதபடியே அப்படியே அமர்ந்து விட்டாள்.ஒரு மணி நேரம் கழித்து கையில் டிராவல் பேக்கோட கிளம்பி வந்தவன்.முருகனும் ஞானசுந்தரியும் ஒரு மேரேஜ் ரிஷப்சன் சென்றிருந்தால் ஜனனி யிடம் 1000 பத்திரம் சொல்லிவிட்டு, கண்ணனை பத்திரமாக பார்த்துக்க சொல்லிட்டு எதாவதுனா? உடனே கால் பண்ண சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.

காரில் FM ல் ரேவதி நடிப்பில்


என்ன மானமுள்ள பொண்ணுனு மதுரையில கேட்டாங்க.
மாயவரத்துல கேட்டாங்க
அந்த மன்னார்குடில கேட்டாங்க
சீர்செனத்தியோடு வந்து சீமையில கேட்டாங்க..
அட எல்லாம் உன்னால வேணாம்னு சொன்னே கண்ணால
என் மச்சான் உன் மேல ஆசபட்டு நின்னேன் தன்னால...
கொண்டை முடி அழகபாத்து கோயம்புத்தூரில கேட்டாங்க...
நெத்தியில பொட்ட பாத்து நீஞ்சூருல கேட்டாங்க
இரு புருவ அழகு பார்த்தாங்க புதுக்கோட்டையில் இவள கேட்டாங்க...
கோபமுள்ள பொண்ணுன்னு கோட்டையில கேட்டாங்க..
பாசமுள்ள பொண்ணுன்னு இவள பண்ணபுரத்துல கேட்டாங்க...
இத்தனை பேரு சுத்தி இருந்தும் உத்தமராசா உன்னை நினைக்கும் பத்தினி உள்ளமடா....
என்ற பாட்டு ஓடியது.




தன் காதலை விஸ்வேந் ஏற்கவில்லை என்றதும் , எட்டு கட்டைக்கு அவன் அம்முகுட்டி அவன் அபார்ட்மெண்டே அதிரும் படி பாடியது அவனுக்கு ஞாபகம் வந்து தன்னாலே சிரித்து கொண்டான்.

இந்த குள்ளவாத்த கல்யாணம் பண்ணிக்க இத்தனை பேர் வந்தாங்கன்ரத நாம் நம்பனுமாம்.

அழைச்சிட்டு போன அடுத்த அரை மணி நேரத்தில கொண்டாந்து விட்டுட்டு வீட்டில் உள்ள எல்லாரு காலுலயும் விழுந்து கும்பிட்டுட்டு போவாங்க எப்படி இத வச்சி மேய்க்கிறேங்கனு.......பன்றதெல்லாம் வாலுதனம் சேட்டை இதுல மன்னார்குடியா மாயவரமா........என யோசித்தபடியே தஞ்சாவூரை நோக்கி சென்றான்.


விஷ்வேந்திற்காவது அவன் குட்டிமாவின் சேட்டைகளோடும் அவள் கொடுத்த காதலோடும், ஆல்கஹாலுடனுமா நாட்களை தள்ளினான்.
ஆனால் அகலிகை யோ வார்த்தையால் கூட தன் காதலை கூறாத தன் மாமனின் நினைவுகளோடு எப்படி இருப்பாளோ என அவன் மனம் வருத்தப்பட்டது...




வருவாள்…
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2 :

யாருக்கு வேண்டும் மனிதப்பிறவி..
மழைமேகமாய் பிறந்திருந்தால் உன் மார்போடு நனைந்திருப்பேன் ....

காற்றாக பிறந்திருந்தால் உன் கார்குழலோடு கலைந்திருப்பேன்......

கடலாக பிறந்திருந்தால் உன் காலோடு தவழ்ந்திருப்பேன்....

விரிந்த நிலமாக பிறந்திருந்தால் விழிமூடி காத்திருந்திருப்பேன்....
உன் விரல் தீண்டலுக்காக....

உன் நிழலாக பிறந்திருந்தால் நொடி கூட பிரியாமல் நடந்திருப்பேன்.....

மனதப்பிறவி ஆதலால் மனதுக்குள்ளே அழுகிறேன்....


இறுதியாக என் காதல்

வழி தெரியாத ஊரின் பயணமாய்...
மொழி தெரியாத பாடலின் முனகலாய்......

பார்வை இல்லாதவனின் முழு நிலவாய் ஆனது.....

என வழக்கமான தன் மனதின் வலிகளை தன் டைரியோடு கொட்டிக் கொண்டிருந்த அகலியின் அருகில் தட்டில் 3 இட்டிலிகளுடன் வந்து அமர்ந்தார் அகலியின் பெரியம்மா அம்சவள்ளி மருதுவின் மனைவி.

அவளுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே அவளிடம் பேச்சி கொடுத்தார்...” கண்ணு படிச்ச படிப்பு வீணா போகுதுல்லயா ஏதாவது வேலைக்கு போகலாம்லயா?...இல்லன அப்பாவும் பெரியப்பாவும் பாத்துகிற லாட்ஜ் , ரெஸ்டாரன்ட், மளிகை கடைகள் ஏதாவது ஒன்னும் போய் மேற்பார்வை பார்த்துகலாம் ஐயா

”நீயும் அது சம்மந்தப்பட்ட படிப்புதான் படிச்சிருக்கன்னு தம்பி சொன்னாரு "என்று கேட்டுக்கொண்டிருந்தார்.....


உடனே காமாட்சி ”பெரியவளே அது மளிகை கடை இல்ல ஆத்தா சூப்பர் மார்க்கெட் என் புள்ளைகளும் பேரபுள்ளைகளும் கோடிக்கணக்குள செலவுபன்னி இந்த சுத்துகட்டுலயே முதல் முதலாக சூப்பர் மார்க்கெட் 5 மாடிக்கு கட்டி வச்சா நீ என்னன்னா மளிகை கடைனு சொல்ற”.. என்ற நீட்டி முழக்கி சொன்ன விதத்தில் அகலிக்கு வாய் கொள்ளாத சிரிப்பில் சத்தாமாகவே சிரித்து விட்டாள்.


சிரித்து முடித்து பின் அனைவரையும் பார்த்தவள் அங்கே ரத்தினம், மல்லிகா, மருது, அம்சவள்ளி, காமாட்சி என அனைவரும் கலங்கிய கண்ணோடு, லேசான சிரிப்போடும், இனி எப்போது காண போகிறோமோ என்று பரவசத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வளவுதான் அவள் சிரிப்பு இதழ்களிலயே உறைந்தது...


அழுதுக்கொண்டே தன் அறைக்கு ஓடிவிட்டாள் இனி அவள் அழுகப்போகும் அழுகைக்கு இந்த சிரிப்பு சிரிக்காமலே இருந்திருக்கலாம் என நினைத்து அவள் குடும்பத்தினர் நின்ற இடத்திலேயே சிலையாகிவிட்டார்கள்.

அவர்கள் எண்ணம் போலவே அறைக்கு வந்தவள் ,...தன் இயல்பை மாற்றி தன் குடும்பத்தின் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் காவு வாங்கிய தன் மாமன் மீதான தன் காதலையும் குறைக்க முடியாமல், அவன் கொடுத்த வார்த்தைகளின் வலியையும் தாங்க முடியாமல், அது எல்லாவற்றையும் விட யாருக்கும் தெரியாத ஏன் சந்தோஷ் மற்றும் அவள் மாமனுக்கு கூட தெரியாத அந்த 10 நாட்களின் தாக்கத்தில் இருந்து வெளி வரமுடியாமல் 2 வருடமாக தான்படும் மரண அவஸ்தை இன்று தீர்ந்தே ஆகவேண்டும் என்ற அளவிற்கு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்.தொலைபேசி சத்தத்தில் கண் விழித்தாள்.

“கருவாயன்”என்று பெயருடன் மிளிர்ந்த தன் பேஃசிக் மாடல் மொபைலை எடுத்து காதில் வைத்தாள்..”சொல்லு சந்தோஷ்” எப்படி இருக்க. வேலையெல்லாம் எப்படி போகுது என கேட்டுக் கொண்டே போனாள்.. அவள் ஹலோவிலேயே அவள் அழுதிருக்கிறாள் என்று தெரிந்து கொண்டவன் ஏற்கனவே அவள் வாழ்க்கை இப்படி இருப்பதற்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வில் தவிப்பவன் நாளுக்கு நாள் அது அதிகமாவதை வேதனையுடன் உணர்ந்தான்.


ரொம்ப நேரமாக பதில் இல்லாமல் போகவே “டேய் கருவாயா” என அழுத்தி அழைத்தாள் அதில் சுயம் திரும்பி சிரித்தவன் “ எப்படி வெள்ளெலி இருக்க” என்று முயன்று வருவழைத்த சாதாரண குரலில் கேட்டான்.

இதுவே பழைய அகலிகை யாக இருந்திருந்தால் அவன் வெள்ளெலி என்றதுற்கு 3 குடும்பத்தில் உள்ளவர்களை ஒன்றாக உட்காரவைத்து 4 பக்கத்திற்கு குற்ற பத்திரிகை வாசித்து தலா ஒருவருக்கு 10 சாரி விகிதம் சில பல மன்னிப்புக்களையும் சில பல கெஞ்சல்களையும் அவனிடமிருந்து கேட்ட பிறகே அகலிகை மலை இறங்குவாள்.

அவன் வெளிநாட்டில் இருந்தாலும் ஸ்கைப் காலில் படுத்திவிடுவாள்.இதில் சென்னையில் இருக்கும் அவள் அண்ணன் தமிழும் அடக்கம்.அவன் மன்னிப்பு கேட்டாலும் அவளை வம்பு இழுப்பதை மட்டும் நிறுத்த மாட்டான் சந்தோ.ஷ்


இப்போதோ அந்த அழைப்பை கூட உணராமல் இருப்பவளை மேலும் வருந்தாமல்” தேனு நான் இந்தியா வரேன் டா ஒரு ப்ராஜெக்ட் விசயமா சென்னையில உள்ள கிளையண்ட மீட் பன்ன வரேன் டா”.உனக்கு என்ன வேனும்னு சொல்லு வாங்கிட்டு வரேன் என்றான்.

அகலிகை” எனக்கு ஏதும் வேணாம்டா நீ பத்திரமா வா நான் அம்மாடையும் அப்பாட்டையும் போன் கொடுக்கிறேன் என பெட்டிலிருந்து எழுந்தவளிடம் ...இவள இப்படியே விட்டாள் நைட் முழுவதும் அழுதுகொண்டே தூங்க மாட்டாள் என்று நினைத்தவன்

”நான் அவங்கள்ட பேசிட்டேன் டா நீ பேசு என்றவன் அவளிடம் பேசினான். காலையில் தான் ப்ரஷ்பன்னதுல ஆரம்பித்து தன் மேலதிகாரி சொட்டை மண்டையிடும் திட்டு வாங்கியது,அந்த ஊரு மலாயி பொண்ன க்ரெக்ட் பன்றதுக்கு தான் செய்த வீர சாகசங்கள் என அனைத்தும் சொன்னவனை சின்ன சிரிப்புடன் ம்ம் போட்டு கேட்டு கொண்டவள் அழுததால் கொண்ட அயர்வினால் தன்னையும் அறியாமல் தூங்கிவிட்டாள்.

அவள் தூங்கியதை உறுதி செய்து கொண்டவன் அகலிகையின் அம்மாவிற்கு போன் போட்டு “அம்மா தேனு நல்லா தூங்கிட்டா நீங்க துணைக்கு படுத்துகோங்க என்ற பனித்து விட்டு போனை வைத்தவன் தன் இனிமையான குழந்தை பருவத்திற்கு சென்றான்.


மருது மற்றும் ரத்தினம் இருவரும் அந்த அழகூரின் விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் முக்கியமானவர்கள். ஊர் முழுவதும் தென்னந் தோப்பு மாந்தோப்பு வாழைத்தோப்பும், ஊர் முழுவதும் நிறைய விவசாய நிலங்களும், ஊருக்கு வெளியே டவுனில் சிறிய அளவிலான லாட்ஜ், மல்டி குசைன் ரெஸ்டாரன்ட், சூப்பர் மார்க்கெட் என நிறைய தொழில் ஆதாரங்களோடு வாழ்ந்து வந்தனர்.


எவ்வளவு பணம் இருந்தாலும் அதை தன் பேச்சிலோ, செயலிலோ ஒரு போதும் அவர்கள் காட்டியதில்லை. அனைவரையும் சரிசமமாக நடத்தும் மேன்மையான குணம் படைத்தவர்கள்.

தங்கள் வருமானத்தில் வரும் பாதி இலாபத்தை அந்த பகுதியில் வாழும் ஏழை எளியோருக்கும் திறமை இருந்தும் படிக்க முடியாமலிருக்கும் மாணவர்களுக்கும் நாடு முழுவதும் இருக்கும் முதியோர் இல்லங்களுக்கும் அனாதை ஆசிரமங்களுக்கும் தங்கள் முடிந்த உதவியை செய்வார்கள்.


ரத்தினம் மற்றும் மூர்த்தி(சந்தோஷின் தந்தை) இருவரும் உயிருக்கு உயிராக நண்பர்கள்.நட்பிற்காக உயிரை தியாகம் செய்யும் அளவிற்கு தூய்மையான நட்பை உடையவர்கள். அதுபோல்தான் ஒருநாள் ரத்தினமும் மூர்த்தியும் வயலில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது கருநாகம் ஒன்று இரத்தினத்தின் காலுக்கடியில் படமெடுத்துக் கொண்டு நின்றது.

ரத்தினத்திடம் அந்த பாம்பை பற்றி சொன்னாலோ அல்லது அவனைத் தள்ளி விட்டாலோ ஏற்படும் அதிர்வினால் அந்தப் பாம்பு தனக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து அவனை கடிப்பது உறுதி என நினைத்த மூர்த்தி அந்தப் பாம்பு கடிக்க வரும் பொழுது காலுக்கும் அந்த பாம்பிற்கும் இடையில் கையை நீட்டி விட்டார்.

பாம்பு மூர்த்தியின் கையை கடித்துவிட்டது. பாம்பு கடித்தவுடன் பார்த்து விட்டதாலும் விஷம் உடல் முழுவதும் பரவுவதற்குள் தடுத்துவிட்டதாலும் மூர்த்தியின் உயிர் காப்பாற்றப்பட்டத து


தனக்கு ஒரு ஆபத்து வந்ததும் தன் குடும்பம் தன் பிள்ளைகள் என எதையும் யோசிக்காமல் தன் உயிரையும் கொடுக்கத் துணிந்த தன் நண்பன் மூர்த்தியின் நட்பில் ரத்தினம் கண்களில் கண்ணீரோடு தன் நண்பனை அணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து மூர்த்தி இரத்தினத்தின் உயிர்மூச்சு ஆகிப் போனார்.


மூர்த்திக்கும் ரத்தினத்தை போல் அளவுக்கு அதிகமாக இல்லை என்றாலும் ஓரளவு விவசாய நிலங்கள் இருந்தன. இருந்தபோது மூர்த்திக்கு அரசாங்க உத்தியோகத்தில் அளவில்லாத பிரியம். .

அதனால் மிகவும் சிரமப்பட்டு படித்து நிறைய அரசாங்க வேலைக்கான தேர்வுகள் எழுதி, பக்கத்தில் உள்ள டவுனில் உள்ள BSNL அலுவலகத்தில் மத்திய அரசாங்க வேலை வாங்கி விட்டார்.

மூர்த்தியும் இரத்தினத்தை போல மருதுவிற்கு ஒரு தம்பியே இருவருக்கும் எப்பொழுதும் வேறுபாடு பார்த்ததே கிடையாது.

சொந்தங்கள் நிறைய இருந்தாலும் இம்மூன்று குடும்பத்திற்கு மட்டுமே ஒட்டுதல் அதிகம். மருது மற்றும் அம்சவல்லி தம்பதியினருக்கு தமிழ்வாணன் என்று 6 வயது மகனும் மூர்த்தி மற்றும் செல்வி தம்பதியினருக்கு சந்தோஷ் என்ற 3 வயது மகனும் ராஜா என்ற ஒரு வயது மகனும் உள்ளனர்.

தனக்குத் திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே கல்யாணமன தன் நண்பனிற்கு ஒரு வாரிசு இல்லையே என்று மூர்த்தியும் தன் தம்பிக்கு ஒரு குழந்தை இல்லையே என மருதுவும் மிகவும் வருத்தப்பட்டனர்.


காமாட்சி மல்லிகா அம்சவல்லி , செல்வி என நான்கு பெண்களும் போகாத கோவில் இல்லை வேண்டாத தெய்வமில்லை எதற்கும் அந்தக் கடவுள் செவி சாய்க்கவில்லை . காமாட்சியோ” ஊருக்கே நல்லது செய்யும் என் குடும்பத்திற்கு ஏன் இந்த சாபம் ஐயனாரே என தன் குலதெய்வத்திடம் மன்றாடினாள்.


அவரின் வேண்டுதல் அந்த அய்யனாருக்கு கேட்டதோ என்னவோ மறு மாதமே மல்லிகாவிற்கு கரு உண்டாயிருந்தது.. குழந்தை பிறக்கும் பத்து மாதமும் அந்த மூன்று குடும்பத்தின் திருவிழாக் காலம் ஆனது.

மொத்த குடும்பமும் மல்லிகாவை மிகவும் கவனமுடன் பார்த்துக் கொண்டனர். தமிழ் தனக்கு ஒரு தங்கச்சி பாப்பாவோ தம்பி பாப்பாவோ வர போகிறது என புரிதலோடு . இருந்தான்.
ராஜாவோ ஒரு வயதுக்குழந்தை என்பதால் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. சந்தோஷ் மட்டுமே அந்த குழந்தைக்காக மிகவும் எதிர்பார்ப்புடன். காத்துக்கொண்டிருந்தான்.

மல்லிகாவிடம் “ பாப்பா எப்பம்மா வரும் பாப்பா எப்பம்மா வரும் என்று மல்லிகாவின் மூன்று மாதத்திலிருந்து படுத்தி எடுத்து விட்டான். பாப்பா விற்கும் கொடுக்க வேண்டும் என்று தன் தந்தை தனக்கு கொடுக்கும் பணத்தை சேமித்து சின்ன சின்ன பொம்மைகள் விளையாட்டுப் பொருள்கள் என வாங்கி குவித்து விட்டான்.


அவர்களின் தேவதை அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தன் அன்னைக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் சுயப்பிரசவமாகவே பிறந்து விட்டாள்.

ரோசா பூப்போலே வெள்ளைத் துணியில் சுற்றப்பட்ட அந்தக்குட்டி குழந்தையை கைகள் நடுங்க ரத்தினம் வாங்கும்போது அவர்கள் அனைவரின் கண்களும் கண்ணீரில் பணித்தது.


அன்றிலிருந்து அவள் அந்தக் குடும்பத்தின் குல தெய்வமாகிப் போனாள்.

மூர்த்தி தன் இலக்கியங்களில் மிகவும் ரசித்த பெயரான அகலிகைதான் குழந்தைக்கு பெயராக வைக்க வேண்டுமென்று சொன்னதால் தன் நண்பனின் விருப்பப்படி இரத்தினம் அவரின் குட்டி தேவதைக்கு அகலிகை என்ற பெயரையே வைத்தார்.


தங்கள் 3 குடும்பத்திற்கும் ஒரே பெண் குழந்தை என்பதால் அகலிகை அந்தக் குடும்பத்தின் ராஜகுமாரியாகவே வழம் வந்தாள்.


குழந்தையை பார்க்க சென்ற சந்தோஷின் ஆள்காட்டி விரலை குழந்தை பிடித்துக் கொண்டாள்

. அதில் அதிக சந்தோஷமடைந்த சந்தோஷ் அனைவரிடமும் அப்பா “பாப்பா என் கையை பிடித்துக்கொண்டு விடவில்லை” என்றும்” பாட்டி பாப்பா என் கையைப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை இதுவரை யாரு கையையும் இப்படி பிடித்தது இல்லையாம் பாட்டி மல்லிகாம்மா என்னிடம் சொன்னாங்க.

அப்படியென்றால் பாப்பாவிற்கு என்னை தானே ரொம்ப பிடிக்கும் பாட்டி என்று குழந்தையின் மழலையோடு கேட்ட சந்தோஷிடம் நெட்டி முறித்து ஆமாம் ராசா என்று செல்லம் கொஞ்சினாள் காமாட்சி.


அன்று முழுவதும் குறைந்தது 50 பேரிடமாவது இதை சொல்லி சொல்லி களைத்துப் போனான் சந்தோஷ்.. தன் அன்னையிடம் அம்மா நான் பாப்பாவிற்கு என்ன பெயர் வைக்க என்று கேட்டு நச்சரித்து கொண்டடிருந்தான் 4 வயது சந்தோஷ். செல்வியோ உனக்கு எது ரொம்ப பிடிக்குமோ அந்தப் பெயரே வைத்துக்கொள் என்று கூறினாள்.

அதில் பாதி மட்டுமே புரிந்த சந்தோஷ் எனக்கு தேன்மிட்டாய் தான் ரொம்ப பிடிக்கும் நான் பாப்பாவிற்கு தேன்மிட்டாய் என்றே வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்

அன்றிலிருந்து இன்றுவரை சந்தோஷிற்கு அகலிகை எப்பொழுதுமே தேன் மிட்டாய் தான் . கொஞ்சும் போது தேன் மிட்டாய், தேனு ,தேனுக்குட்டிஎன்று கொஞ்சுவான்.

அவளை வம்பு வழக்கும் போது வெள்ளை பன்னி வெள்ளை காக்கா ,வெள்ளை எலி என மல்லிப்பூ போன்ற அழகிய தேவதையை இப்படிதான் நாராசமாக . வம்புவளப்பான்.


தமிழ் வெளியூரில் உள்ள தன் மாமாவின் வீட்டில் தங்கி படிப்பதால் சந்தோஷ்தான் அகலிகை மற்றும் ராஜாவை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

சந்தோஷ், ராஜா, அகலிகை மூன்று பேரையும் ஒரே பள்ளியில் தான் சேர்த்திருந்தார்கள் அவர்களின் பெற்றோர்கள்.

அகலிகை ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது தன் வகுப்பில் உள்ள ஒரு பையன் தன் பென்சிலை எடுத்து வைத்துக்கொண்டு தன்னை அடித்துவிட்டதாக அழுதுகொண்டே நான்காவது படைக்கும் சந்தோஷிடம் சொன்னாள்.

உடனே சந்தோஷ் தன் உடன் படிக்கும் அவனோட ஃப்ரண்ட்ஸை அழைத்துக் கொண்டு பெரிய காலேஜ் ரெளடி கும்பலை போல் சென்று அந்தப் பையனை அழவிட்டு மிரட்டி அகலிகை யிடம் சாரி சொல்ல வைத்துவிட்டுதான் வந்தான்.


அது பெரிய ப்ராப்ளம் ஆகி ப்ரின்ஸிபிள் வரை சென்று விட்டது.அவனை கூப்பிட்டு கண்டித்த ப்ரின்ஸிபளிடமே” மேம் என்னோட தேன்மிட்டாயிட யாரு வம்பு செய்தாலும் அவள அழ விட்டாலும் நான் இப்படி தான் செய்வேன்.என்று பெரிய மனித தோரனையோடு தைரியமாக சொன்ன அவனை அந்த ஆசிரியரே மிகவும் ஆச்சரியமாக பார்த்தார்.


பக்கத்து அபார்ட்மெண்டின் காலிங் பெல் சத்தத்தில் நிகழ்காலத்திற்கு வந்த சந்தோஷ் வேதனையுடன் சிரித்து கொண்டான்.

தன் தேனு குட்டியோட எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய தன் உயிர் நண்பன் விஷ்வேந்தை எதுவும் செய்ய முடியாவில்லையே என்று.அவனை நினைக்கும் போதே அவனின் பேபிமா நினைவு அவனுக்கு வந்தது.

இன்னுமா அவள் தன்னையே நினைத்து கொண்டிருப்பாள்.அவள் அண்ணன் இந்நேரம் வேருயாருகாவது கல்யாணம்பன்னி வைத்திருப்பான் என நினைத்துக் கொண்டான்.


( விஸ்வேந் தன் அகலிகைக்கு கொடுத்த அதே காயாத்தை தான் தானும் தன்னவளுக்கு வேறு வடிவில்கொடுத்திருக்கிறோம் என்பதை வசதியாக மறந்து போனான்.நியாய அநியாயங்கள் ஒவ்வோரு பக்கங்களிலிருந்து பார்க்கும் போது வித்யாசம் படுகிறதோ????)

வருவாள்..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:

இனியொரு
இடம் புதிதாய் வேண்டாம்
நீ எங்கிருந்தாலும் ரசிப்பேன்,,,
ஒப்பனைகள் ஒன்றும் தேவை இல்லை
சோம்பல்கள் கூட
உனக்கு அழகுதான்...
புதிய உடைகள் அவசியம் இல்லை
உன் வாசனைகள் நிறைந்த அந்தபழைய வஸ்திரமே
எனக்கு ரொம்ப இஷ்டம்,,,
வசதி இருந்தாலும் எனக்கு வேண்டாம்
உன் தோளில் சாய்ந்து கொள்ள
கொஞ்சம் இடம் கொடு
அது போதும்,,,
வாகனங்கள் ஏதும் வாக்காய் இல்லை,,,
பொடிநடையாய்
நடப்போம் விடியும் வரை...
ஆயிரம் கண்கள் கடந்து செல்ல,,,
இயற்கை எல்லாம் நகர்ந்து செல்ல,,,
இமைகள் கூட உறக்கம் தேட
இமைக்காமல்,,,என் அழகனே!
உன்னைமட்டும் ரசிப்பேனடா...


நீண்ட நாட்களுக்கு பிறகு ஏதோ நிம்மதியாய் தூங்கிய உணர்வுடன் காலை 7 மணிக்கு துயில் கலைந்தால் அகலிகை.எழுந்து வெளியில் வரும்போது மருதுவும் ரத்தினமும் மற்றும் மூர்த்தி சோஃபாவில் யோசனையுடனும் மல்லிகா செல்வி அம்சவள்ளி காமாட்சி ஆகியோர் சோகத்துடன் கீழேயும் அமர்ந்திருந்தனர்..

எல்லோரும் என்ன ஒன்னா உட்கார்ந்து இருக்கிறார்கள் என யோசித்து கொண்டே வந்தவள்.
சலுகையாக மூர்த்தியின் தோளில் வாகாக சாய்ந்து கொண்டவள்” என்ன அப்பா காலையிலே ஒன்னா உட்கார்ந்து யோசிச்சிட்டு இருகீங்க ராஜா கடைக்கு போய்டானா” என கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்கள் மூவரின் குழந்தைகளுக்கும் மூவரின் பெற்றோரும் அம்மா அப்பா தான்.வெளி ஆட்களிடம் பேசும்போது மட்டும் மூர்த்தி அப்பா , மருது அப்பா, மல்லிகாம்மா, செல்வி அம்மா என் அம்மா அப்பாவுக்கு பின்னால் பெயரை சேர்த்துக்கொள்வார்கள்.

இவர்களைப் பார்க்கும் ஊரில் உள்ளவர்கள் இவர்கள் எல்லோரும் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் போல் இருப்பதைக் கண்டு ஆச்சிரியம் கொள்வார்கள்.

அவள் தலையை ஆதரவாக தடவிய மூர்த்தி சின்ன சிரிப்புடன் யோசனையில் ஆழ்ந்தார்.தமிழிற்கு கல்யாணம் என்று சொன்னதற்கே அழுது கத்தி மயக்கம் போட்டி விழுந்து ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருந்தவளிடம் இதை எப்படிசொல்வது என யோசித்து கொண்டிருந்தார்.


“அப்பா நீங்களாவது சொல்லுங்களேன்” என்று மருதுவிடம் கோட்டாள்.
மருது”சின்ன பாப்பா கவி உண்டாயிருக்காம் இப்ப தான் தமிழ் போன் பன்னி சொன்னான்.

கவி வீக்கா இருக்கறதால ட்ராவல் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம் டாக்டர் .அதான் நாமாலாம் இன்னைக்கு நைட்டு சென்னை போய் பார்த்து விட்டு வரலாம்னு” என்று மிகவும் தயங்கி என்ன ஆகப்போகுமோ என்ற பயத்தில் சொல்லி முடித்தார்.


அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே அகலியை உடலை இறுக்க பிடித்து கொண்டார் மூர்த்தி அவர்கள் நினைத்தது போலவே அவள் உடலில் ஒரு நடுக்கம் ஏற்படுவதை தன் கைகளில் உணர்ந்தார்.

ஆனால் அந்த அதிர்வு சென்னை என்ற வார்த்தையால் தான் என அவர்களால் உணர முடியவில்லை.

தன் சோகத்தை உள்ளே மறைத்து கொண்டவள் தன் மேல் உயிரையே வைத்திருக்கும் இவர்களுக்காகவாவது தான் மாற வேண்டும் இல்லை மாறியது போல் நடிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டவள்.

“ சூப்பர் அப்பா நான் அத்தையாக போறேன் இதை ஏன் இவளோ சோகமா சொல்றீங்க என்று யோசித்தவள் ஓஓஓ நீங்கள தாத்தா பாட்டி ஆக போரிங்க என்று கவலையில இருக்கீங்களா???.

ஏய் கிழவி நீ கொள்ளு பாட்டி ஆக போறோம்ன்ற சோகமா? அதெல்லாம் அப்புறம் கவலைபட்டுக்கலாம்.போய் சொன்னைக்கு இன்னைக்கு கிளம்ப ரெடி பண்ணுங்க சந்தோஷ் வேற வரான் வரான்.சோ எல்லாம் சென்னைக்குு போகலாம் என மிகவும் சிரமப்பட்டு கலகலப்புடன் சொன்னவள் நான் கவிக்கு கால் பன்னி விஷ் பண்ணுகிறேன் என தன் ரூமிற்கு சென்று விட்டாள்..


ஆனால் 24 நான்கு வருஷமாக வளர்தவர்களுக்கா தெரியாது அவள் தங்களுக்காக நடித்துவிட்டு சொல்கிறாள் என.. இருந்தபோதும் இது என்றாவது உண்மை ஆகிவிடாத என ஏக்கத்துடன் அவள் செல்வதையே பார்த்து கொண்டு நின்றனர்.

ஆனால் அவர்களுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை அன்று தமிழுக்கு திருமணம் என்றதும் அவள் நடந்து கொண்டதற்கும்.இன்று அவள் நடந்து கொண்டதற்கும் உள்ள முரண்பாடு மட்டும்.

ஏன் இப்படி் தங்கள் பெண்ணின் வாழ்வில் அந்த ஒரு வருடம் என்னதான் நடந்தது என அவர்களுக்கு தெரியவில்லை.

சந்தோஷும் அவளிடம் எதுவும் கேட்க கூடாது என்று சொல்லி விட்டான்.தன் பெண்ணின் வாழ்க்கையை நினைத்து கடவுளிடம் வேண்டுவதை தவிர அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அகலிகை தன் அண்ணன் திருமணம் மட்டும் இல்லை யாரின் திருமணத்தை பற்றி பேசினாலும் ஏன் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே அவளின் உடலும் உள்ளமும் சுயம் இழந்து விடுவாள் என அவர்களுக்கு தெரியவில்லை.

அவர்களிடம் சாதரணமாக பேசிவிட்டு வந்தவள் தன் ரூமிற்கு வந்தவள் ரூமை சாற்றிவிட்டு டெரஸ்ங் டேபிளுக்கும் சுவற்றிற்க்கும் இடையில் உள்ள இடைவேளியில் உட்கார்ந்து கொண்டு நடுங்கும் உடம்பை ஒரு கையால் பிடித்து கொண்டு ஒரு கையால் நெஞ்சை பிடித்து கொண்டு ஊமையாக கதற ஆரம்பித்தாள்.

தன்னால் சென்னை செல்ல முடியுமா தன்னால் இயல்பாக இருக்க முடியுமா தன் உடலும் மனமும் இதையெல்லாம் தாங்குமா என நினைத்தாள்.


மாமா தன்னை மறந்து இருப்பாங்களா என்று யோசித்தாலும் அவன் கண்களில் அவர் கொண்டகாதலை கண்டிருக்கிறாளே.. கண்டிப்பாக தான் அவரை காண கூடாதுன்னு கடவுளை வேண்டிக் கொண்டாள்.

எது எப்படியோ தான் போய் தான் தன் குடும்பதிற்காக சென்னை சென்று தான் ஆகவேண்டும்.தன் அண்ணனுக்காகவும் ,தன் தோழி கவிக்காகவும் தங்கள் வீட்டிற்கு வரப்போகும் குட்டி பாப்பாகாகவும் என்று தன்னை சமன் செய்து கொண்டவள் இதுவரை நீ கொடுத்த அடிகளை தாங்கவே என் உடலுக்கும் மனதிற்கும் பலம் இல்லை இனி எதையும் கொடுத்து விடாதே சிவனே என தன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு சென்னைக்கு செல்ல தயாரானாள்.


அங்கே விஸ்வேந் தஞ்சாவூர் கிளையண்ட மீட் பண்ணி லேண்ட் டாகுமெண்ட்ல கரெக்டா இருக்கா சாண்ட ப்ரூஃப்லாம் ஒழுங்காக இருக்க என்று சரி பார்த்து கொண்டு,வேலை ஆரம்பிக்கும் தேதி வேலை ஆரம்பிக்கும் இடம் எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டு அடுத்த வாரம் அடிக்கல் நாட்டிவதற்கு அங்கு உள்ள அவர்களின் வேலையாட்களை கொண்டு ரெடி செய்து விட்டு இன்று சென்னை திரும்புவதற்கு ரெடியாகி கொண்டிருந்தான்.

சிறிது ஓய்வு நேரத்தில் தன் அம்முகுட்டியின் நினைவில் சுகமாய் ரணமாய் மூழ்கினான்.அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்குமோ அன்று தான் அவளிடம் சொன்னது போல் அவள் காதல் குழந்தை தனமானதுதானோ.. தன்னை மறந்திருப்பாளோ.... என எப்பொழுது போல அவன் மூளை தப்பாக வழி நடத்த



அவன் மனமோ அவளை பார்த்த உனக்கு அப்படியா தெரியுது அவள் உன்னை தவிர இன்னொருவனை கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டாள்

அவளிடம் ஒரு தடவை கூட காதலை சொல்லாத உன்னாலையே அவளை மறக்க முடியாமல் 2 வருடமாக தீயில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் அப்படி இருக்க தன் காதலை ஆழமாகவும் குழந்தை தனத்தோடும், நீ அவளை நூறு சதவீதம் மறுக்க மாட்டாய் என்ற நம்பிக்கையை தன் மென்விழியில் தாங்கி உரிமையாக தன் காதலை வித விதமாக சொன்ன அவள் மட்டும் எப்படி மாறுவாள் என்று நீ எப்படி நினைக்கலாம் என்று சொன்னது.


அப்படி அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் நீ என்ன செய்வதாய் உத்தேசம் என அவன் மூளையும் மனமும் சேர்ந்து அவனை கேள்வி கேட்க அதற்கு பதில் இல்லாமல் தலையை பிடித்து கொண்டு குடிக்க சென்றுவிட்டான்.

நிதானம் இழக்கும் வரை குடித்து விட்டு தன் குட்டிமாவின் போட்டாவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தூங்கி விட்டான்.

அங்கு சென்னையில் தான் அன்று இரவு பேசியதிலிருந்து மிகவும் சோகமாக இருக்கும் தன் தந்தையின் அருகில் அமர்ந்து அவர் கையை பிடித்துக் கொண்ட ஜனனி” சாரிப்பா எவ்வளவு ஃபர்பெக்டா இருந்த நம்ம விச்சு அண்ணா இப்படி ஆயிட்டானேனு ஒரு ஆதங்கத்தில கொஞ்சம் கோபமா பேசிட்டேன்பா ரியலி சாரிப்பா” என்று கூறினாள்.


முருகன்” இல்ல டா பாப்பு நீ சொன்னதுல எந்த தப்பும் இல்லை.என் வருத்தம் எல்லாம் என் பிள்ளைகளோட வாழ்க்கை இப்படி இருக்கே அப்படின்றதுதான்.

உங்க வாழ்க்கைய சரி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடு நான் அதை சரியா பயன்படுத்திக்கிறேனு அந்த கடவுளை வேண்டிருக்கிறேன் டா பாப்பு. பெரியவன் வாழ்க்கைதான் சூனியமா இருக்கு நம்ப விச்சு வாழ்க்கையாவது நல்லா இருக்கணும் .

உனக்கு அந்த பொண்ண பத்தி எதாவது தெரியுமா என்று கேட்டார்.
எதோ சொல்வதற்கு வாய் திறந்த ஜனனி இடதுபுறம் உள்ள அறையில் இருந்து வந்த அசாத்திய சத்தத்தில் இருவரும் அங்கே விரைந்தனர்.சமையில் அறையில் இருந்த ஞானசம்பந்தரியும் வந்தார்.

அங்கே உள்ள அறையில் கண்ணன் அங்கு உள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து கீழே போட்டு உடைத்துக் கொண்டும் கத்திக் கொண்டும் இருந்தான் இவர்கள் மூவராலும் அவனை கட்டு படுத்த முடியவில்லை.

முருகன் அவன் கையை பின்னால் இழுத்து பிடித்துக் கொண்டு “ பாப்பு சீக்கிரம் இன்ஜக்சன் எடுத்துட்டு வா டா சுந்தரி நீ அவன் காலபிடி என்றார்.


ஆனால் அவன் அவர்கள் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு இருந்தான்.
சரிப்பா என்று தன் அறைக்கு வந்தவள் அனெஸ்தேசியா கொஞ்சம் ஹை டோசில் போட்டு இன்ஜெக்சனை எடுத்து கொண்டு அவன் கையில் செலுத்தினான்.அதன் வீரியம் தாங்காமல் கண்ணன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.


“ எல்லாம் இவனா இழுத்து போட்டு கொண்டது அன்னைக்கே நான் சொல்றதா கேட்டிருந்த இன்னைக்கு இந்த நிலமை உனக்கு வந்துருக்குமா என்று அழுத சுந்தரி ஜனனி யின் ஒரு முறைப்பில் வாய் மூடிககொண்டவள் ஏன் நான் என்ன தப்பாவா சொன்னேன்”என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டாள்.


முருகன்” பாப்பு ஏன் டா எப்பொழுதும் ரொம்ப அமைதியாக எதையோ யோசிச்சிட்டு இருக்கான் சில டைம் இது மாறி ரொம்ப வையலண்டா நடந்துகிறான் என்று கேட்டார்.

ஐனனி “ அவன் ரொம்ப ஸ்ட்ரெஸ் ல இருக்கான்பா வேறு எதுவும் இல்லை நெக்ஸ்ட் பந்த் US லேந்து ஒரு சைக்யார்டிஸ்ட் எங்க ஹாஸ்பிடல்க்கு வராங்கபா நான் அப்பாயின்மென்ட் வாங்கி வைக்கிறேன் நாம் போய் அண்ணன அவங்கள்ட காட்டலாம்.

நான் இப்ப ஹாஸ்பிடல் கிளம்புறேன் நீங்களும் ஃபேக்டரி கிளம்புங்க என்று சொல்லி சென்றாள்.

முருகனும் ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்றார்.


அழகூரில் ராஜா ரத்தினத்திடம்” அப்பா மாமாவும் அத்தையும் நேத்தே தமிழ் அண்ணா வீட்டிற்கு போய்டாங்களாம் அதனால என்னோட காரும் நீங்களும் மருது அப்பாவும் யூஸ் பன்ற ஸ்கார்பியோ காரும் போதும்பா.ஒரு BMW இல்லனா ஒரு அவ்டி (Aadi) வாங்குகன்னு சொன்ன கேட்க மாட்டேனு சொல்றீங்க “ என்று கூறிக் கொண்டு இருந்தான்.

டேய் “ சின்னபாப்பா காதுல விழுற மாறி சொல்லாத ஏற்கனவே அம்பாசிடர் கார ஏன் வித்திட்டு இதெல்லாம் வாங்கி வச்சிருக்கீங்க அந்த பணத்துல இன்னும் ரெண்டு பேரோட படிப்பு செலவுக்கு கொடுத்துருக்கலாம்னு சண்டை போட்டுகிட்டு இருக்கு.இதல்லாம் தெரிஞ்சா நீ நடந்து தான் போகணும் என்று சொல்லி கொண்டே வந்து அமர்ந்தார் மருது‌.


ஆமா ஆமா உங்க பொண்ணு சொன்னாலும் சொல்லுவா என்று மெதுவாக சொன்னவன் காமாட்சியிடம் சென்று வம்பு வழக்க ஆரம்பித்துவிட்டான்.

அன்று இரவு பெரிய காரில் ராஜா ஓட்ட காமாட்சி அம்சவள்ளி அகலி மருதுவும் மற்றொரு காரில் ரத்தினம் மூர்த்தி மல்லிகா செல்வி ஒரு காரிலும் சென்னையை நோக்கி பயணப்பட்டனர்.

காரின் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த அகலி அதன் ஓரத்தில் தலை சாய்த்து கொண்டு அந்த இருட்டையும் அதை போக்க போராடும் நிலவின் போராட்டத்தையும் பார்த்துக் கொண்டே வந்தாள்.

ராஜா” அகலி பனி காத்து ரொம்ப அதிகமா இருக்கு வின்டோஸ க்ளோஸ் பன்றேன் தலையை எடுத்துக்கோ என்று சொல்லிவிட்டு வின்டோஸ க்ளோஸ் பன்னிரண்டு MP3 மல்
பாடலை போட்டு விட்டான்.

அதில்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
மேயல் பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் கவிதை

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே

வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே…


ஏதோ இந்த பாட்டை கேட்டவுடன் நெஞ்சை பிசைவது போல தோன்ற “ ராஜா ப்ளீஸ் பாட்ட ஆஃப் பன்னேன் எனக்கு தூக்கம் வருது” என்று சொன்னவள் கண்களில் நீர் வெளியே வருவதற்குள் அம்சவள்ளியின் மடியில் படுத்து கொண்டாள்....
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4:

இருட்டான என் இறந்த காலமும்
எதுமோ இல்லாத என் எதிர்காலமும்
நொடி கூட நில்லாமல் என் நிகழ்காலத்தை சிதைக்கிறது.....


சென்னை சென்று வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்பதால் அவர்களின் நிறுவனங்களில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு ராஜா கிளம்பியதற்கு ஒரு மணி நேரம் கழித்தே ரத்தினம் மற்றும் மூர்த்தி தம்பதியினர்கள் கிளம்பினார்கள்.


கிளம்பி இரண்டு மணி நேரம் கழித்து தஞ்சாவூர் பைபாசில் வண்டி சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று டயர்கள் ஒரு கீரிச் சத்தத்துடன் நின்றது.

மூர்த்தி என்னவென்று இறங்கி பார்க்கும்பொழுது முன் டயர்களில் 1 பஞ்சர் என்று தெரிந்தது. ஒரு கார ஒழுங்கா வெச்சிக்க தெரியதாவென்று வழக்கம்போல் மூர்த்தி தம்பதினர் ராஜாவை திட்டி தீர்த்தனர்.

ரத்தினம் “புள்ள வேணுன்னே பண்ணி இருக்க மாட்டான் மூர்த்தி அதான் வண்டில் டூல்ஸூம் ஸ்டெப்பினியும் இருக்கே.

ஆனால் உனக்கும் எனக்கும்தான் டயர்மாத்த தெரியாது. ஏதாவது மெக்கானிக்குக்கு கால் பண்ணு". என்றார்.

மூர்த்தி ராஜாக்கு கால்பன்னி நல்லா திட்டியபிறகு மெக்கானிக்குக்கு கால் செய்துவிட்டு”மெக்கானிக் வரதுக்கு எப்படியும் 1 மணி நேரம் ஆகும் அது வரை லேடீஸல வைச்சிகிட்டு இந்த ஹைவேல எப்படி நிற்கிறது "என சத்தமாக புலம்பவே வண்டியில் அமர்ந்திருந்த செல்வியும் மல்லிகாவும் இறங்கினார்கள்.


“நீங்கவேற ஏன் கீழ இறங்கினீங்க போய் உள்ள உட்காருங்க எங்கயாவது போறதுனா போதும் உடனே வீட்டுல உள்ள நகையேல்லாம் எடுத்து போட்டுகிட்டு வந்துறது “என அவர்களை திட்டிக்கொண்டு இருப்பதற்க்கும் தங்களை நோக்கி கருப்பு கலர் ஸ்விஃப்ட் டிசையர் கார் வந்து நின்று அதில் இருந்து நெடு நெடுவென ஒருவன் இருட்டில் இறங்கி வரவும் சரியாக இருக்கவும்

பெண்கள் இருவருக்கும் பயம் பிடித்து கொண்டு அனிச்சை செயலாய் அவர்களின் கணவர்களின் அருகில் நின்று கொண்டார்கள்.


விஸ்வேந் சென்னையை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது அங்கே ஹைவேயில் ஒரு காரும் அதன் அருகில் இருக்கும் ஆண்களும் நின்றனர்.

ஆண்கள் மட்டும்தானே என அலட்சியமாக அவர்களை க்ராஸ் செய்தவன்.அதில் இரண்டு பெண்மணிகள் இறங்குவதை பார்த்ததும் எதாவது உதவி. தேவையா என கேட்பதற்கு அவர்களை நோக்கி சென்றவன் .


அவர்கள் இருவரின் செயலை கண்டு “ டேய் விச்சு உன் பர்ஸ்னால்டி இவளோ கேவலமாவ இருக்கு உன் அம்முகுட்டி வச்ச கண்ணு வாங்கமா பார்பாளோ "என்று யோசித்து கொண்டே இதமாய் சிரித்தபடி அவர்களை நோக்கி சென்றவன் “அங்கிள் எதாவது ஹெல்ப் வேணுமா" என்று சிரித்தபடி கேட்டான்.


அவன் வெளிச்சத்திற்கு வந்த பிறகுதான் தாங்கள் நினைத்தது தவறோ என நினைத்தனர்.வெள்ளை நிற காலர் இல்லாத டீசர்டில் ஃநைட் டிராவல் என்பதற்காக முட்டி வரை சார்ட்ஸில், அழகாக ஆண்மகனாக நின்றான் விஷ்வா.

அவன் சிவந்த நிறத்திற்கு கருப்பு கலர் தாடி மிகவும் அழகாக இருக்க, பிறந்ததிலிருந்து பணத்திலே வளர்ந்தவன் என்பது அவன் பேசும் தோரணையிலே தெரிந்தது.

ரத்தினம்” இல்ல தம்பி” என்று நடந்ததை கூறினார்.


விஸ்வேந்” அங்கிள் மெக்கானிக் வரதுக்கு ரொம்ப லேட் ஆகும்... டூல்ஸ கொடுங்க நான் ஸ்டெப்னி மாத்துறேன்' என்றான்.

( வேற யாராவது இருந்தால் மெக்கானிக் வருகிறான் என சொன்னபிறகு சென்றிருப்பாரன் ஆனால் இவர்களைப் பார்க்கும் பொழுது அப்படியே விட்டுசெல்ல தோன்றவில்லை,ஏதோ ஒரு உள்ளுணர்வு அவர்களை இவனுக்கு
தெரிந்தது போல )


"இல்ல தம்பி பரவாயில்லை" என்று மூர்த்தியும் ரத்தினமும் மறுக்க...

"பரவாயில்லை அங்கிள் கொடுங்க லேடீஸ வச்சிகிட்டு இங்க ஃசேப்டி இல்ல" என்றான்.

அவர்களும் இவன் சொல்வதில் நியாயம் இருக்கவே சரி என்றனர்.
அவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் யாரோ ஒருவர்களுக்காக செய்யும் உதவியை அவர்கள் நால்வரும் ஆச்சரியமாக பார்த்தனர்.


அவனும் கால் மணி நேரத்தில் அவர்களிடம் பேசிக்கொண்டே டையரை மாற்றிவிட்டான்.பின் இவனின் விசிட்டிங் கார்டை கொடுத்தவன்
"சென்னையில் என்ன உதவி தேவை பட்டாலும் எனக்கு இந்த நம்பருக்கு கூப்பிடுங்க" அங்கிள் என்றான்.


அவன் கார்டை வாங்கி பார்த்தவர்கள் ஆச்சிரியமாக இவனை பார்த்தார்கள்.ஒரு கம்பெனியின் M. D எந்த ஒரு முகச்சுழிப்பும் இல்லாமல் உதவி செய்ததை

தங்கள் பிள்ளைகளாம் கூட இப்படியெல்லாம் நடந்து கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.

ரத்தினம்” ரொம்ப நன்றி தம்பி கொஞ்சம் கூட யோசிக்காமல் சரியான நேரத்தில் இந்த உதவியை செய்ததற்கு "என்றார்.

“ நாம் இப்படி செய்யற சின்ன சின்ன உதவிகள் தான் அங்கிள் நாளைக்கு பெரிய உதவியாய் கடவுள் திரும்பி கொடுப்பார் “ என்று கூறிவிட்டு எல்லாரிடமும் பொதுவாய் தலையசைத்து விட்டு சென்றான்.


அவன் மனமோ "கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம உன் அம்முகுட்டி சொன்னது காஃபி அடிச்சி சொல்றியே டா" என அவனை காரி துப்பியும் அவன் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் ஏதோ ஒரு நிம்மதி உணர்வோடு சென்றுவிட்டான்.

இங்கு ரத்தினம் குடும்பத்தினரும் அதேதான் நினைத்தார்கள்.” அப்படியே நம்ப சின்ன பாப்பா மாறி என் நினைத்து கொண்டு ராஜாவிடம் விசயத்தை சொல்லிவிட்டு கிளம்பினர்.

மறுநாள் விடியல் காலையிலயே ராஜாவின் காரில் தமிழின் வீட்டிற்கு சென்றவர்கள் ஃகாலிங் பெல்லை அடிக்க கதவை திறந்தாள் கவி அங்கே கவி, தமிழ் கவியின் பெற்றோர்(அம்சவல்லியின்அண்ணன் மற்றும் அண்ணி) ,கவியின் தங்கை ஸ்வப்னா எல்லோரும் நின்றுகொண்டிருந்தனர்.ஸ்வப்னா பாதி தூக்கத்தில் எழுப்பி விட்டதால் தன் தாயை முறைத்து கொண்டே நின்றாள்


உள்ளே வந்ததும் தமிழ் அகலியிடம்” பாப்பா எப்படி டா இருக்க என்று அவள் தலையை அதுரமாய் தடவியபடியே கேட்டான்.தன் ஒரே ஒரு செல்ல தங்கை தன் கல்யாணத்திற்கு கூட வரமுடியாத அளவுக்கு நாம் என்ன பாவம் செய்தோம் என்று வருத்தம் கொண்டான்.


அகலி”அண்ணா நம்ம வீட்டிற்கு என்ன விட இன்னும் ரொம்ப சின்ன பாப்பா வரப்போகுது நீ என்னடான்னா என்ன இன்னும் பாப்பானு சொல்லுற என்றவள் என்ன கவி என ஆரம்பித்தாள் நாக்கை கடித்து கொண்டு” என்ன அண்ணி பாப்பா என்ன சொல்றா” என அவள் வயிற்றில் கை வைக்க அவள் வெட்கத்தோடு தன் கணவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.


அவளை சிரிப்புடன் அணைத்து பிடித்த படியே தமிழ் “ எத்தனை குழந்தை வந்தாலும் நீதான் இந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதல் குழந்தை டா பாப்பா "என்றான்.

அவள் விரக்தி புன்னகை ஒன்றை சிந்திவிட்டு” அத்தை,கவிப்பா எப்படி இருக்கீங்க ஸ்வப்னா நீ எப்படி இருக்க படிப்பெல்லாம் எப்படி போகுது என்று கேட்டாள்.

சின்ன வயதிலிருந்தே கணேசனை கவிப்பா க‌விப்பா என்றே அழைத்து பழகிவிட்டாள் ,மாமா என்று எவ்வளவு சொல்லியும் அவளால் அப்படி பழகமுடியவில்லை. மாமா என்று முதல் முறையாக அழைத்தும் விஸ்வேந்தைதான்.

இனி அவனை தவிர வேற யாரையும் அழைக்க போவதும் இல்லை.

அனைவரும் சிறிதுநேரம் உரையாடிவிட்டு விடியல் காலை என்பதால் மீதியை காலையில் பேசிக் கொள்ளலாம் என படுக்க சென்றனர்.

கதவை திறந்தவுடன் ஸ்வப்னாவை பார்த்த ராஜா “ ஓ நம்ப சொப்பன சுந்தரியும் வந்துருக்காள இந்த மாமா சொல்லவே இல்லையே ,வாடி என் மாமா மகளே 1 வாரம் போர் அடிக்குமேன்னு பார்த்தேன் நல்ல டைம் பாஸ்.

தொழ தொழவென நைட்டியில் தூக்க. கலக்கத்தோடு கலைந்த முடியோடு நின்ற ஸ்வப்னாவை ஜொள்ளு வடியிற அளவுக்கு சைட் அடிக்க ஆரம்பித்ததுவிட்டான்.

அவளோ அப்படி ஒருவன் அங்கு இருக்கிறான் என்று துளியும் கண்டு கொள்ளாமல் நின்றதில் கோபம் கொண்டவன் அவர்கள் அனைவரும் சென்றதும் அவள் வாயே பொத்தி அழைத்துக் கொண்டு ஸ்டோர் ரூமின் அருகில் உள்ள சுவற்றில் சாய்த்தான்.

ஏற்கனவே திடீரென்று ஏதோ தொடுகையில் உடல் அதிர்ந்து பயந்தவள் அது ராஜா என்றதும் உடல் நடுங்க தன் விழிகளை விரித்து பார்த்தாள்.

அதில் கொஞ்சம் சுயம் பெற்றவன் நிதானமாக அவள் வாயிலிருந்து கையை எடுத்து பேசாதே என்று சைகை செய்தவன் சுவற்றின் இரு புறமும் கையை வைத்தவன் அவளை மறுபடியும் சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டான்.

(அடப்பாவி).

ராஜா அத்தான் ஏன் இப்படி நம்மள மொறைக்குறாங்க ...

(அடிப்பாவி அவன்
உன்னை சைட் அடிக்கிறான்... டேய் ராஜா ரொமான்ஸ்ல நீ கொஞ்சம் இல்ல ரெம்பவே வீக் போல )

என்று சிறிது நேரம் யோசித்தவள் பின் ஞாபகம் வந்ததை போல” அத்தான் நீங்க ஸ்மோக் பண்ணத தெரியாம நான் மூர்த்தி மாமாட சொல்லிட்டேன் ப்ளீஸ் இப்பயும் அடிச்சீடாதீங்க" என்று கண்கள் கலங்க கேட்டாள்.


ராஜா” அவள் மேல் உள்ள பார்வையை விளக்காமல் இல்ல அடிக்கு தான் போறேன் என்று அவளை இன்னும் நெருங்கி அவள் இதய துடுப்பின் வேகத்தை கேட்டபடி கூறினான்.


அவளோ கண்களை இறுக்க மூடிக்கொண்டே "ராஜா அத்தான் மெதுவா ஒரே ஒரு அடி அடிச்சிகங்க" என்றாள்.

"ம்ம்‌.....ஒரே ஒரு அடிதான்" என விசமமாய் சொன்னவன் அவள் கலைந்த முடியை ஒதுக்கி தன் ஆட்காட்டி விரலால் பயத்தால் நடுங்கும் இதழை வருடினான் .

இந்த அத்தான் என்ன பண்றாங்க என அவள் கண்களை திறக்க அதற்காகவே காத்திருந்தவன் போல. அவள் இதழ்களை தன் இதழ்களால் மூடிவிட்டான் அவளின் மென்மை அவனை இன்னும் அவனை அவளுக்குள் புதையச்செய்ய அவள் இதழ்களுக்குள் மௌன போர் நடத்தினான்.

அவன் இதழ்களின் ஸ்பரிசம் பட்டதுமே ஏதோ ஒரு சுகமான உணர்வு அடி வயிற்றில் தோன்ற கண்கள் சொறுக தன் பலத்தையெல்லாம் இதழின் மூலம் உறிஞ்சி எடுப்பதை தடுக்கவும் முடியாமால் அதை அனுபவிக்கவும் முடியாமல் கண்கள் கலங்க உணர்வுகளின் வேகம் தாங்காமல் அவன் சட்டை காலரை இறுக்க பிடித்து கொண்டாள் ஸ்வப்னா.

அவள் மூச்சிற்கு சிரம் படுவதை பார்த்தவன் விருப்பமே இல்லாமல் அவளை விடிவித்து அவனும் மூச்சி வாங்க அவள் நெற்றியோடு தன் நொற்றியை வைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டான் தன் வன்முறையால் சிவந்து கிடந்த அவள் இதழ்களை பார்த்த படி “ தேங்கஸ் டா “ என்றான்.

இது வரை ஏதோ மோனநிலையில் இருந்தவள் சுயம் பெற்று கண்களை திறந்து பார்த்தவள் அவனை தள்ளிவிட்டு அழுதுகொண்டே வேகமாக ஓடிவிட்டாள்.

பயந்துட்டா போல என நினைத்தவன் காலையில் சமாதான படுத்திகலாம் என்று நினைத்து தன் முதல் காதல் முத்தத்தை தித்திப்பாய் நினைத்தபடி படுக்க சென்றான்.

மறுநாள் காலையில் பத்து மணிக்கு சென்னை ஏர்போர்ட் வந்த சந்தோஷ் ஏர்போர்டிலையே தன்னை ரெப்ரஸ் செய்துவிட்டு சென்னையில் உள்ள தன் கிளை நிறுவனத்தில் கன்பார்ம் பண்ணிவிட்டு இரண்டு நாள் கழித்து வேலையை ஆரம்பிப்பதாக சொல்வதற்க்கு தன் நிறுவனத்திலிருந்து அனுப்பி வைத்த காரில் சென்று கொண்டிருந்தான்.

அவன் எண்ணம் முழுவதும் அவன் குடும்பத்தினரையே சுற்றி இருந்தது அதுவும் அவனின் தேனுகுட்டி அந்த கொடிய நாட்களுக்கு பிறகு ஓரிரு முறை அதுவும் அவளை
அவளை பார்ப்பதற்காகவே வந்த இரண்டு நாட்களில் சென்று விடுவான் .இம்முறைதான் 2 மாதம் அதுவும் கவியின் கரு வேறு இரட்டிப்பு சந்தோசம்


கார் சிக்னலில் நிற்கும் போது அருகில் ஒரு ஸ்கூட்டியில் ஒரு கர்ப்பிணி பெண் 6 மாதம் இருக்கும் அப்படியே மயங்கி விழ சந்தோஷ் வேகமாக வந்து அந்த பெண்னை தாங்கி பிடிக்க நல்ல வேலை வயிறு தரையில் படவில்லை.அந்த பெண் இன்னும் மயக்க நிலையிலே இருப்பதால் தன் காரிலையே ஹாஸ்பிடல் அழைத்து சென்றான்.

பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடல் வந்தவுடன் அந்த பெண்ணால் தனியே நடக்க முடியாது என்பதால் ஒரு அண்ணன் போல் தாங்கி பிடித்து கொண்டு சென்றான்.

யாரோ ஒரு பேசன்டின் ரிப்போர்டை பார்த்தபடி வந்த ஜனனியின் கண்ணில் பட்டு விட்டான் கையில் உள்ள பைல்கள் கீழே விழ நீண்ட நெடிய 2 வருடங்களுக்கு பிறகு தன் மனதிற்கினியவனை பார்க்கிறாள் அதுவும் கர்பிணியா இருக்கும் அவள் மனைவியோடு.

(க்ககும் நான் ஏதாவது ப்ளான் பண்ணி உங்கள மீட் பண்ண வச்சாலும் உங்க அவசர புத்தியால் தப்பு தப்பா நினைச்சுகோங்க என விதி தலையில் அடித்து கொண்டது)

அதே நேரத்தில் சந்தோஷூம் அவளை பார்த்து விட்டான் இருவர் ஒருவரை விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.அவளோ கல்யாணம் பண்ணிட்டானே என்றும் அவனோ கல்யாணம் பண்ணிருப்பாளோ என்றும்

அண்ணா நிற்க முடியவில்லை என அந்த பொண்ணு சொன்னதும் மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான்.

ஜனனி எப்படி இவனால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிந்தது.ஒரு பெண்ணாய் என்றைக்கு இருந்தாலும் அவன் வருவான் என காத்திருக்க இவனால் எப்படி வேற பொண்ணோடு அவளால் யோசிக்க கூட முடியவில்லை......

என் காதலை நான் தான் அவனுக்கு ஆழமாக உணர்த்த வில்லையோ என யோசித்துக்கொண்டே கால்கள் இரண்டும் வேரூன்ற அழும் மனதை அடக்கும் வழி தெரியாமல் நின்றாள்.

அதற்குள் டாக்டரிடம் அந்த பொண்ணை பார்க்க சொல்லிவிட்டு வெளியே வந்தவன் அவள் முன் வந்து நின்று.அவளை ஒரு முறை ஆழ ரசித்து விட்டு

( விதி கருமம் கருமம் என தலையில் அடித்துக்கொண்டது)

இல்லை என்று சொல் என்ற பதிலை கண்களில் தேக்கி "கல்யாணம் ஆகிவிட்டதா' என்றான்.



அவ்வளவுதான் எங்கிருந்து தான் இவ்வளோ கோபம் வந்தோ தன் காதலின் அளவு ,தன் ஏமாற்றத்தின் அளவு, தன் காத்திருப்பின் அளவு, என எல்லாவற்றையும் தன் கைக்குள் கொண்டு வந்தவள் தன் வலது கையால் அவன் வலது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை.

அவன் என்னவென்று யோசிக்கும் முன் அவன் இடது கன்னத்தில் தன் இடது கையால் பளார் என்று ஒரு அடி அடித்துவிட்டு சென்றுவிட்டாள்....

வருவாள்....
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#காதலன்

ஹாய் டியர்ஸ்,

காதலன் கதையோட அடுத்த 2 இரண்டு எபி போட்டு இருக்கேன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

கதை திரி :


கிண்டிலே லிங்:


#நீங்கமுடியுமா

நீங்க முடியுமா கதை நெக்ஸ்ட் மண்டேலிருந்து ஸ்டார்ட் பன்றேன்..

இப்படிக்கு

உங்கள் மிளாணிஸ்ரீ
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5 :

இறைவா வேண்டாம்
என் இயல்பான குணங்களை எனக்கே எதிரி ஆக்குகிறாய் .

விதியை என்னோடு மட்டும் விளையாட அனுப்புகிறாய்.
சோதனை செய்ய நன் என சோதனை கூடமா?

இறகே விரிக்க முடியாத எனக்கெதற்கு இவலோ பெரி ய வானம் ....

சுவையே அறியாத என் நாவிற்கு அதற்கு பல்சுவை விருந்து....
இரவே இல்லாத எனக்கெதற்கு இவ்வளவு கனவு...

இயக்குபவனே நீயாய் இருக்கையில் எனக்கெதற்கு இக்கதாபாத்திரம் ....


அவள் அடித்த அதிர்வின் காரணமாக கண்கள் குளமாக கலங்கி நின்றவனால் எதற்காக அடித்தாள் என்று யோசிக்க முடியவில்லை

ஒருவேளை அவளின் பர்செனல் விஷயத்தில் தலையிட்டதற்காக அடித்து இருப்பாளோ என யோசித்தவன் அப்ப அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று நினைக்கும் போதே சொல்லென்னா வேதனை கொண்டான்.


அவனால் அவளை தான் ஒரு பெண்ணுடன் வந்தததற்க்காகத்தான் அவள் கோபப்பட்டிருக்கிறாள் என்ற கோணத்தில் யோசிக்க முடியவில்லை.ஏன் என்றால் அவனையும் அகலியும் பற்றி தெரியாதவர்கள் அவர்களை லவ்ர்ஸாக பார்க்கும் போது இவள் மட்டுமே அந்த உறவை சரியாக பார்த்தவள் ,அது ஒரு வளர்ப்பு தாய்க்கும் மகளுக்கான பாசம் என.


பாவம் அவனுக்கு தெரியவில்லை அவன் என்று அவளிடம் ஏதும் சொல்லாமல் பிரிந்து சென்றானோ அன்றே அவள் டாக்டர் மூளை மலங்கிவிட்டது என்று.


அவள் அடித்த கன்னத்தை எதோ முத்தம் கொடுத்தது போல இதமாய் தடவியவன் அவள் அண்ணன் செய்த தவறுக்கு அவளுக்கு தண்டனை கொடுத்த தன் முட்டாள் தனத்துக்கு தனக்கு இந்த தண்டனை தேவைதான் என நினைத்து கொண்டு சிலையாக நின்றான்.


தான் இனி எதுவும் செய்யக்கூடிய நிலையில் இல்லை அவள் கணவனோடும் குடும்பதோடும் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும், தன்னை அவள் வெறுத்தததாய் வேதனையோடு உள் வாங்கி கொண்டான்.

யோசனையோடு நின்றவன் அங்கு வந்த நர்ஸின் குரலில் சுயம் பெற்று விரைந்து சென்று அந்த பெண்ணின் வீட்டாரின் போன் நம்பரை வாங்கி அவர்கள் வீட்டாருக்கு இன்போர்ம் செய்து விட்டு அதிகம் தனியாக எங்கும் செல்லாதேம்மா என்று அந்த பெண்ணிற்கு அறிவுரை வழங்கிவிட்டு பத்திரமாக செல்லும்படி சொல்லிவிட்டு தன் ஆபீஷை நோக்கி சென்றான்.


அவனை அடித்து விட்டு தன் அறையில் உள்ள டேபிளில் தலை வைத்த கொண்டு கண்கள் வீங்க அழுது கொண்டிருந்தாள் ஜனனி.


தன் அண்ணனுக்காக தன் கல்யாணத்தை தள்ளி போட்டாலும் அதற்குள் தன்னவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் தானே அவள் இத்தனை நாட்களை கடத்தினாள்.

எப்படி இவனால் முடிந்தது என்னை நினைத்த மனம் எப்படி இன்னோர்த்தியை நினைக்க முடியும் ,எப்படி என்னை தொட்ட கைகள் இன்னொரு பெண்ணை தொட முடியும் ....எப்படி என்னை அணைத்த கைகள் இன்னொரு பெண்ணை.... அவளால் அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை அழுகை பெரும் கேவளாக ஆரம்பித்து விட்டது..

இனி இங்கு இருந்தால் தான் வேலையில் கவனம் செலுத்த முடியாத என தோன்ற வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.

இங்கே தமிழின் வீட்டில் அனைவரும் மதிய உணவை முடித்துவிட்டு ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.கவிக்கு சுகர் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் காமாட்சியின் அறிவுரைப்படி குழலி(கவியின் தாய் ) பாவைக்காய் சமைத்து கொடுத்தார்.அதை தெரியாமல் வேற ஏதோ என்று சாப்பிட ஸ்வப்னா கசப்பு தாங்காமல் அங்கே குழலியிடம்


"அம்மா ப்ளீஸ் மா கொஞ்சம் சக்கரை கொடுமை ரொம்ப கசக்குது ப்ளீஸ்" என்று கொஞ்சி கொண்டிருந்தாள்.


குழலி " ஒழுங்கா போயிடு டி கசக்குது கசக்குதுனு அரை கிலோ சர்க்கரையை காலி பண்ணிட்டா
ஏற்கனவே சின்ன வயசுல இனிப்பு அதிகம் சாப்பிட்டு சாப்பிட்டு பல்லெல்லாம் பூச்சி ஆகி இருந்தது வளர வளர தான் சரி ஆனது..


இப்ப ஸ்வீட் சாப்பிட்டு சாப்பிட்டு உருகி எலும்பு மட்டும்தான் உடம்புல இருக்கு ...சின்ன வயசிலானா பரவாயில்லை இப்ப அப்படி ஆன மாப்பிளை வேணான்னு சொல்லிடுவான்" என்று அவளை கத்தினார் .


இந்த அம்மா நமக்கு எந்த மாப்பிளையை பாத்து வச்சிருக்கு அவன் நாம பிடிக்கல்னு சொல்றதுக்கு என யோசித்தவள்


அம்மா எனக்கு எவனும் வேணாம் ப்ளீஸ் இந்த மாறி மொக்க ரீசன்ல சொல்லாதம்மா அப்ப சின்ன பிள்ளை அதனால அப்படி இப்பல அப்படி ஆகாது என்று அவர் தாடையை பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தாள்.


நீயே எடுத்துக்கோ என்று அங்கிருந்து சென்று விட்டார் குழலி.

அது எட்டுனா நான் எடுக்க மாட்டேனா என்று யோசித்து கொண்டு அங்கே லாஸ்ட் ராக்கில் உள்ள டப்பாவை எடுக்க குதித்துக்கொண்டிருந்தாள்.


அவர்கள் வீட்டில் உள்ள பெண் பிள்ளைகள் மூவரும் (கவி,ஸ்வப்னா,அகலி) சாதாரண பெண்களின் உயரத்தை விட கொஞ்சம் குறைவு தான் அதிலும் முதல் இடம் நம்ம அகலி தான்.


நேற்று இரவு நடந்த வரலாறு சிறப்புமிக்க சம்பவத்திற்கு பிறகு சொப்பண சுந்தரியை காணுமே என்று வீடு முழுவதும் ஸ்வப்னாவை தேடி வந்தவன் அவள் கிட்ச்சனில் குதித்துக்கொண்டு நிற்பதை பார்த்து சிரித்துக்கொண்டே அவள் பின்னே வந்தான்.


வந்தவன் "மாமன் மவளே என்ன டி வேணும்" என்று அவள் காதோரம் மெதுவாக கேட்டான்,அதை அவள் உணராமல் எப்பொழுதும் போல "ஆமா ராஜா அத்தான் அந்த சுகர் டப்பாவை கொஞ்ச எடுத்து தாறீங்களா" என்று திரும்பியவள்


அங்கே மிக அருகில் நின்ற ராஜாவை பாத்ததும் தான் நேற்று இரவு அவன் தன்னை அணைத்தது முத்தம் கொடுத்தது என அனைத்தும் அவள் கண் முன் அவன் முகமே திரையாக மாறி ஓட இவ்வளவு பெரிய விஷயத்தை தான் எப்படி மறந்தோம்....


ஏன் ஏன் என யோசித்து கொண்டுருந்தவளை அப்படியே அங்கு உள்ள சுவற்றில் அவளை சாய்த்து "என்ன பூனைக்குட்டி உனக்கு ஸ்வீட் தான வேணும் அத்தான் தாரேன் அதுக்கு ஏன் இவ்வளோ கஷ்டப்படுற” என்று அவளை நோக்கி குனித்தான்.

அதில் தன்னிலை அடைந்தவள் அவனை தன் கைகளால் தள்ள ,அவன் அவள் இரண்டு கையையும் அவளின் தலைக்கு மேல் தூக்கி தன் வலக்கையால் பிடித்தவன் அவள் தாவணியில் இருப்பதால் கை மேலே தூக்கப்பட்டதும் அவளின் இடுப்பின் செழுமையும் அவள் பெண்மையின் செழுமையும் பார்த்தவன் இதற்கு மேல் தாங்காது என அவள் இதழ்களில் தன் இதழ்களால் கவிதை இல்லை பெரிய காவியமே எழுத ஆரம்பித்து விட்டான்.


இவன் இனி நாம் என்ன சொன்னாலும் கேட்க போவது இல்லை என புரிந்துகொண்டவள் அழும் கண்களோடு அவன் உதடுக்கு உணவாகி நின்றாள்.


நெடு நேரமாக காவியம் எழுதியவனை காமாட்சியின் “ டேய் ராஜா எங்க டா இருக்க “ என்று குரல் தான் கலைத்தது.


"கிழவி உன்னை வரேன் இரு” என வாய்க்குள் முணுமுணுத்தவன் அப்பொழுதுதான் ஸ்வப்னா அழுவதை கவனித்தான். தன் காதலை சொல்லாமலே இவளிடம் இப்படி நடந்து கொள்கிறோமே என நினைத்தவன் தன் முட்டாள் தனத்தை எண்ணி தன் நெற்றியில் அடித்து கொண்டு அவள் தாடையை பிடித்து அவள் கண்களை நோக்கி “சாரி டா நான் உன்னிடம் நிறைய பேசனும் .

இப்ப எனக்கு டைம் இல்ல..நான் இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்தன அப்பத்தா இங்க வந்துரும் நான் சாயங்காலம் பேசுறேன்” என சொல்லி முடிப்பதற்குள் மறுபடி காமாட்சியின் குரல் கேட்கவே “ கிழவி உன்னை கொல்லறேன் இரு “ என்று கூறிக்கொண்டே வெளியில் சென்று விட்டான்.


அவன் சொல்வதை எதையும் கவனிக்காமல் சிந்தனை வயப்பட்டவள் அப்டியே கீழே அமர்ந்து நம் ஏன் இவனை தடுக்க வில்லை .அப்பாவிடம் அல்லது வீட்டில் பெரியவர்கள் யாரிடமும் சொல்லவில்லை தான் ஏன் அவன் செயலை அனுமதிக்கிறோம் என யோசித்து கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டாள்.


"டேய் பாவி அகலியும் சந்தோஷும் இப்படி இருக்காங்க நீ என்ன எப்ப பாத்தாலும் அந்த பச்சை புள்ள வாய வாய கடிச்சி வைக்கிற" என அவன் மனசாட்சி அவனுடன் கேள்வி கேட்க”, அதெற்கெல்லாம் அசருபவனா நம்ம ராஜா “ ஏய் நான் எவ்வளவு ரொமான்டிக்கா என் செல்லக்குட்டிய கிஸ் பண்ண அது உனக்கு கடிக்கிற மாறி இருக்க?

அப்பறம் சந்தோஷ்,அகலியும் கண்டிப்பா நல்ல இருப்பாங்க ஏன்னா அவங்க ரொம்ப நல்லவங்க என்னை விட தனுக்குமொறு ஆறுதல் போல தன் மனசாட்சியிடம் பதில் சொன்னான்.



அங்கே ஹாலுள் கீழே அமர்ந்திருந்த காமாட்சியின் மடியில் சென்று படுத்தவன் “ ஏன் அப்பத்தா இப்படி கத்திக்கிட்டு கிடக்கிற உன் பேரன் அந்த கரிமேட்டு கருவாயன் தான இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவன்” என அவர் கேட்க போகும் கேள்விக்கு முன்னமே பதில் சொல்லிவிட்டு

“ அப்பத்தா ஒழுங்கா உன் பேத்தியை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க போறியா இல்லையா நீ மட்டும் தாத்தாவை 15 வயசிலேயே கல்யாணம் பண்ணிக்கிட்ட இப்படியே போனதுனா அப்பறம் என் புள்ளைய வச்சிட்டு தான் நான் கல்யாண பண்ணுவேன் போல பார்த்துக்க என அவர் காதை கடித்து துப்பிக்கொண்டிருந்தான்


“ அட போடா உனக்கெல்லாம் பொண்ணு கிடையாது என் பேத்திக்கு பாரின் மாப்பிள்ளையதான் பார்க்க போறேன்" என்று அழுங்காமல் அவனுக்கு ஆப்பு வைத்தவர் அவன் முறப்பை கண்டுகொள்ளாமல் வீட்டில் உள்ளவர்களிடம் பேச ஆரம்பித்து விட்டார்.


ஆம் ஸ்வப்னா பொறந்ததுமே அவள் ராஜாவுக்குத்தான் என அவ்வீட்டினார் முடிவு பண்ணிவிட்டனர்,

பொறந்த உடனே காமாட்சி ராஜாவிடம் “ டேய் இவ தான் நீ கட்டிக்க போற பொண்ணு என சொல்லிவிட்டார் அது 4 வயது உள்ள ராஜாவுக்கு புரியா விட்டாலும் ஸ்வப்னா தனக்கு ரொம்ப நெருக்கமானவள் என்று மட்டும் புரிந்து கொண்டான்.


வயது வளர வளர அவன் எண்ணங்கள் அன்பு ஆசை நேசம் காதல் என படி படியாக வளர்ந்து இன்று பொண்டாட்டி என்று நிலையில் வந்து நின்றது.


கணேசனின் சொந்தங்கள் கவியின் கல்யாணத்திற்கு பிறகு ஏன் அவர்கள் குடும்பத்திலையே இன்னொரு பெண்ணையும் கொடுக்குற அதும் உனக்கு மச்சான் கூட இல்ல உன் மச்சனின் தம்பியின் நண்பன் என சொந்தங்களும் பெருசா விரியாது என எவ்வளவு எடுத்து சொல்லியும் கணேசன் கேட்காமல் மூர்த்தியும் என் மச்சான் தான்.


அவர்கள் மூன்று குடும்பமே 300 குடும்பத்திற்கு சமம் என அந்த பேச்சை அப்படியே நிறுத்து விட்டார்.


ராஜா விற்கு விவரம் தெரியும் என்பதால் இவை யாவும் அவனுக்கு தெரியும் அதனால் தான் அவன் ஸ்வப்னாவிடம் அவ்வளவு உரிமை எடுத்து கொண்டது கூட.


ஸ்வப்னா சின்னபெண் என்பதாலும் படிக்கும் பெண் என்பதாலும் கல்யாணத்தோடு சொல்லி கொள்ளலாம் என்று அவளிடம் யாரும் சொல்லவில்லை அதுவே அவள் இப்படி அழுவதற்கு காரணம் .

( பாவிங்களா கொழந்தைகிட்ட சொலிருக்கலாமே டா).


ஹாலில் அனைவரும் அமர்ந்திருக்க சந்தோஷ் உள்ளே வரவும் அனைவரும் அவனை வரவேற்று அவனிடம் நலம் விசாரித்தனர் .


சந்தோஷ் அனைவருக்கும் பதில் சொல்லிவிட்டு திரும்ப அங்கே ராஜா அவனை “டேய் கருவாயா” என அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டான் .



அதை பார்த்த ஸ்வப்னா அய்யே இவன் என்ன எல்லாருக்கும் முத்தம் கொடுப்பான் போலவே என நினைத்து கொண்டு அமைதியாக நின்றாள்.

அவனை அணைத்து விட்டவனின் கண்கள் தன் வளர்ந்த குழந்தையை தேடிக்கொண்ட்டிருந்தது.


அங்கு உள்ள அனைவருக்கும் அது புரிய ரத்தினம் “ பாப்பா தூக்கம் வருதுன்னு மாடில உள்ள ரூமில் படுத்து இருக்குயா போய் பாரு என சொல்லவே 2 2 படிகளாக மாடியில் ஏரியவன் அந்த ரூமின் வாசலில் தான் போய் நின்றான்.



அங்கே அவனின் தேனுக்குட்டி பெட்டில் 2 காலையும் தூக்கி மேலே வைத்துக்கொண்டு தன் இரு கைகளால் காலை கட்டிக்கொண்டு தலையை ஒரு பக்கமாக சாய்த்து எதுவுமே இல்லாத சுவர்களை வெறிக்க பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அதை பார்த்த சந்தோஷ் இயலாமையுடன் “ தேனு குட்டி” என நைந்த குரலில் கூப்பிட்டான் அந்த அழைப்பின் உரிமையாளன் யார் என்று தெரிந்த கொண்டவள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் சந்தோஷ் என்ற கூவளுடன் அவனை

அணைத்து கொண்டவள் “ ஏன் டா எனக்கு மட்டும் இப்படி யென் டா எனக்கு மட்டும் இப்படி என கேட்டுக்கொண்டே அவனிடம் அழுது தீர்த்தாள்.


தான் எத்தனை தட வந்தாலும் இந்த அழுகை மட்டும் குறையவே இல்லையே என நினைத்தவன் “ அப்படில்லாம் இல்லடா தேனு குட்டி எல்லாம் சரியாகிடும் அழாதடா என்று அவள் கண்களையும் அவள் வேதனையையும் குறைக்க நினைத்தவனின கண்களும் கண்ணீரை சிந்த அவன் வேதனையும் குறையாமல் ஏறியது.


அகலிகை என்று வரும் போது அவன் அனைத்தையும் இழக்க தயாராகத்தான் இருக்கிறான்.


இப்பொழுது கூட தான் இறந்தால் அகலியின் துன்பம் குறையும் என்று யாரவது சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு கழுத்தை அறுத்துக்கொல்வான் தான் அதில் இவன் இன்பம் துன்பம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.


அதில் அவன் மறந்தது இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் தான் மாற்றிவிட்டதைத்தான்.






இப்படி அவள் நல்லத்திற்கு நல்லத்திற்கு என்று சந்தோஸும் விஷ்வேந்தும் செய்த எல்லாமே அவள் எதிர்காலத்தை நிகழ்காலத்தை என அனைத்தையும் கேள்வி குறியாக்கியது.

*******

அங்கே பணக்காரர்கள் இல்லை மிகவும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் 10 வீடு கட்டும் இடத்தில் ஒரே ஒரு வீடு மட்டும் வானளவு உயர்ந்து கடலளவு விரிந்து கிடந்தது.

அதில் முதலில் பார்க்கும் யாருக்கும் அந்த வீட்டின் பிரமாண்டமும் வீடு முழுவதும் இழைத்து வைத்த கிரானைட் கற்களும் சந்தன தூண்களும் தேக்குமர கட்டிலும் பணத்தில் குளித்த அந்த வீட்டின் செழுமையும் கோடிக்கணக்கில் இருக்கும் விலை உயர்ந்த கார்களும் தெரியும்.


ஆனால் அந்த வீட்டில் உள்ள மனிதர்களின் உண்மை முகம் தெரிந்தவர்களுகே அந்த வீடு பிணம் எரியும் சுடுகாடாகவும்..ஆன்மாக்கள் வாழும் சமாதியாகவும்...பலபேரின் கண்ணீராகவும்...பிஞ்சி குழந்தைகளின் காதறலாகவும் இரத்த வெள்ளமாகவும் பாவத்தின் மொத்த சம்பளமாகவும் தெரியும்.


அந்த வீட்டின் அசாத்திய அமைதியை கிளித்தபடி வந்தது ஒரு ஆணின் குரல் அந்த வீட்டின் வடக்கு மூலையில் உள்ள அறையில் ஒருவன் அங்கு உள்ள சோஃபாவில் உட்கார்ந்திருக்க அங்கு 4 பேர்கள் ஒரு நடுத்தர வயது உள்ளவனே கத்தியால் நார் நாராக கிழித்து கொண்டிருந்தனர்.


அதை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் ஒரு சிரிப்புடனும் இந்த மரணம் நடப்பதால் தனக்கு கிடைக்கும் சில கோடி பணத்தையும் மட்டுமே நினைத்து கொண்டு கண்களை சிமிட்டாமல் பார்த்தது கொண்டிருந்தான் எமனுக்கு மிகவும் பிடித்த அந்த சென்னையே கண்டு நடுங்கும் ஈவு இரக்கம் இல்லாத ராட்சசன் கார்த்திக் ராமமூர்த்தி சுருக்கமாக கே.ஆர்.



நமக்கு எப்படி சிக்கன் மட்டனை வெட்டும் பார்க்கும் போது அதை எப்படி எப்படி எல்லாம் சமைத்து சாப்பிடலாம் என தோன்றுமோ அதே போல் தான் அவனுக்கு மனிதர்களை பார்க்கும் போதும் அவர்களை கொன்றால் அதன் மூலம் தனக்கு கிடைக்கும் பணமும் தன் மேல் ஏற்படும் பயமுமே தோன்றும்.


அவனுடன் இருப்பவர்களும் அப்படிதான் இருக்க வேண்டும் இல்லையேல் அது அவர்களின் இறுதி நாட்கள் ஆகிவிடும்

.....
ஒரு முறை அடியாட்களை கொண்டு ஒரு குடும்பத்தை அழிக்க சொல்லும் போது பாவம் பார்த்து அந்த வீட்டின் குழந்தையை கொல்லாமல் வந்ததற்கு அந்த ஆறு அடியாட்களையம் கொஞ்சம் கூட யோசிக்காமல் விஷம் வைத்து கொன்று விட்டான்...அவர்களும் விஷம் வைத்த சாப்பாடு என்றே தெரிந்தே அதை சாப்பிட்டு உயிரை விட்டார்கள் அவர்கள் அதை சாப்பிட விட்டால் அவங்களும் குடும்பமும் அல்லவா சேர்த்து கொல்லப்படுவார்களே??


கே.ர் ன் ஒரே தங்கை ரீனா ராணி அவன் வளர்ப்பில் வளர்ந்ததாலோ என்னவோ அவள் பிறப்பில் மட்டுமே பெண் அவள் நடந்து கொள்ளும் விதம் அவள் குணம் என அனைத்தும் ஒரு ஆம்பிளையை போலவே தான்..
தண்ணி அடிப்பது தம் அடிப்பது..என உலகின் அனைத்து எதிர்மறைகளுக்கும் மொத்த உதாரணம்.


தன் உடல் தேவை பணத்தேவை என் அனைத்தையும் ஒரு நொடியில் எப்படி வேணுமானாலும் நிறைவேற்றி கொள்பவள் அதில் அவள் கொலை கூட அசால்ட்டாக செய்பவள் அவளிடம் பண வசதி உள்ளவர்கள் கூட உயிர்க்கு பயந்து அவளுக்கு அடிமை தான்..


இந்த மாறி மனிதர்களை பார்க்கும் போது தான் கடவுள் என்ற ஒருவன் இருக்கிறானா இல்லையா என அனைவருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது..


இதோ அவளின் அட்டகாசங்களின் ஒரு சிறு துளி...


மத்திய சென்னையிலுள்ள அந்த சாப்பிங் மால் வார இறுதிக்கே உடைய பரபரப்புடன் காணப்பட்டது.

வாரம் முழுவதும் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளும்,
வாரம்முழுவதும் ப்ராஜெக்ட் அசைன்மென்ட் மீட்டிங் என ஓடும் இளைகர்களும்,ஒரு நாளாவது நல்ல ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைக்கும் குடும்ப தலைவர்களும் வீட்டின் மனைவி,குழந்தைகளின் கட்டாயத்தால் கொட்டாவி விட்டபடி,,,என அனைத்து தரப்பு மக்களும் அங்கே நிரம்பி வழிந்தனர்.

அந்த சலசலப்பையும் தாண்டி அந்த மாலின் வாசலில் வந்து நின்றது ப்ளாக் கலர் BMW கார்.

அதன் பின்னே நான்கு இன்னோவா காரும் நிற்க அதிலுருந்து பத்து பதினைந்து தடியர்கள் இறங்க,,,,

அதில் மிகவும் பவ்யத்துடன் ஒருவன் வந்து அந்த BMW காரின் கதவை திறந்துவிட்டான்.

அதில் இருந்து தன் அடர்ந்த மை போட்ட கண்களுக்கு கூலரை போட்ட படியே இறங்கியவள் தன் கருப்பு நிற ஹை ஹீல்ஸை தரையில் டக் டக் என வைத்தபடி தன் ஒய்யார நடையுடன் தன் படைகளுடன் உள்ளே சென்று கொண்டிருந்தாள்.

நீங்கள் நினைப்பது சரிதான். அவளேதான்.

நம் கதையில் நடக்கும் ஒட்டு மொத்த கொடூர சம்பவங்களின் கதாநாயகி ரீனா ராணி .

அங்கே உள்ள அனைவரும் ஒரு முறையாவது அவளை திரும்பி பார்த்திருப்பார்கள்.அவள் அழகிதான் எனினும் எல்லாரும் அவளை பார்பதற்கு காரணம் அவளின் உடைதான்.

ப்ளக் கலர் ஸ்லீவ் லேஷ்ஷில் மார்புக்கு கொஞ்சம் மேலிருந்து ஆரம்பித்த அந்த உடை அவளின் தொடை பகுதியை தாண்டி கொஞ்சம் முழங்காலிற்கு மேலே முடிந்திருந்தது.

அவளின் இடுப்பு பகுதியில் தங்க கலரில் ஒரு செயினும்,கழுதை ஒட்டி அதே கலரில் பல வலயங்களை ஒன்றாக கோர்த்த படி உள்ள செயினை அணிந்து, அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கோடு வந்து கொண்டிருந்தாள் .

அது உடை பார்பதற்கு ஒரு கருப்பு கலர் டவலை அவள் உடலை சுற்றி கட்டியிருப்பதை போலவே தோன்றும் அதுவும் மிகவும் இறுக்கமாக இருப்பதால் அவளின் அபாயகரமான வளைவுகள் அப்படியே தெரிந்தது....

மாலை பார்த்துக்கொண்டே வந்தவளின் கண்ணில் அவளின் இன்றைக்கான இரைப்பட்டது.

விதி அந்த குடும்பத்தை பாவமாக பார்த்தது.

தன் குழந்தயிடனும் தன் மனைவியுடனும் அங்கே நின்று கொண்டிருந்தது அந்த பழியாடு,

சரியான உயரத்தோடும் நல்ல கலரில் பார்பதற்கு கலாபக் காதலன் படத்தில் நடித்த ஆர்யா போல் இருந்தான் அந்த இளைஞன்.

அவனை ரசித்த படியே அவன் அருகில் வந்த ரீனா அவனிடம் “ ஹைய் ஹான்சம் டுடே இய்ய் வான்ட் யூ டு ஸ்லீப் வித் மீ"( Today I want you to sleep with me) என கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கேட்டாள்.

அதை கேட்ட அந்த இளைஞனும் அவன் மனைவியும் “வாட் யூ மீன்”, எனவும்" சீ கருமம் “ எனவும் முகத்தை சுளிக்க ,அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல்

“ஏன் இங்கிலீஷ் தெரியாத என கூறியவள்

“***********************************” என தமிழில் பச்சையாக கேட்டாள். அந்த பெண் தன் காதை பொத்திகொள்ள அவனோ கோபமாக அவளின் கழுதை பிடிக்க போக அதிலுருந்து அலட்சியமாக விலகியவள்

‘ சி ஹான்சம் ஆண்கள் எனக்கு முன்னடி கோபபட்டால் எனக்கு பிடிக்காது.

"அங்கே பார்" என அவள் கை நீட்ட அந்த திசையை நோக்கி அவனும் பார்க்க, அவளின் மனைவியும் ஒரு வயது மகனும் அவளின் அடியாட்களின் பிடியில் துப்பாக்கி முனையில் நின்றனர்.

“என்னங்க”, ”ப்பா” எனவும் பயத்துடன் அவனை அழைக்க “ இப்பொழுது பயத்தோடு அவளை பார்த்தவனின் பார்வையில் திருப்தியுற்றவள் “பாலோ மீ” என முன்னே செல்ல அவளை மிகுந்த அவமானத்தோடும் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பயத்தோடும் பின் தொடர்ந்தான்.

இதுபோல் தான் நினைத்தது சரியோ தவறோ அசிங்கமானதோ அருவருப்பானதோ எதை பற்றியும் அவள் யோசித்ததில்லை. அவளுக்கு வேண்டும் என்றால் வேண்டும் மட்டும் தான்.

ஒரு புலியை வீட்டில் வைத்து ஒரு பூனைக்குட்டியை போல வளர்த்தால் அது அப்படியே தான் வளருமாம். அதே போல ஒரு காட்டில் வைத்து புலி போல வளர்த்தால் அதுவும் அப்டியே வளருமாம்.

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர்
ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே”

என்ற பாடலுக்கு ஏற்ப கொடூரமான அண்ணனின் பாதுகாப்பில் வளர்ந்தவள் அவனை போலவே வளர்ந்தாள்.

அவளால் பாதிக்கபட்டவர்கள் அவளை கொலை செய்ய நினைப்பதும், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதும்,ஊரை விட்டு தூரமாக செல்வதும் அவர் அவர்களின் மனவலிமையும் ,குடும்ப பின்புலத்தையும் பொறுத்தது...

வருவாள்....
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6 :


கண்களில் கோளாறா
இல்லை கடவுளின் படைப்பில் கோளாறா....
பார்ப்பவர்கள் யாவரும் உன்னை போல
ஏழு பேர் அல்ல
குறைந்தது எலுநூறு பேரையாவது சந்தித்திருப்பேன்..
ஆனால் ஒரேயரு வித்தியாசம் உன் குணமும்
உன் மேலான என் காதலும்.....


சென்னையில் விஸ்வேந் வீட்டில் சுந்தரி காலை சாப்பாடு மெனுவை வேலைக்கார அம்மாவிடம் பரபரப்பாக சொல்லிக்கொண்டு இருக்க

சோபாவில் அமைதியாக இன்றைய நியூஸ் பேப்பரில் தன் தலையை புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நம் கதையின் இரண்டாவது நாயகி ஜனனி.


அவள் கண்கள் பேப்பரில் இருந்தாலும் அவள் ஹாஸ்பிடலில் நேற்று நடந்ததை கலவையான மனநிலோயோடு யோசித்து கொண்டிருந்தாள்.

அன்று அழுதுகொண்டு வீட்டிற்கு வந்தவள் ஒரு நாள் லீவு எடுத்துக்கொண்டு நேற்று தான் மீண்டும் ஹாஸ்பிடல் சென்றாள்.


அவள் ஒரு மகப்பேறு மருத்துவர் ,அவள் நோயாளியை பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடுத்ததாக அன்று சந்தோஷ் அழைத்துக்கொண்டு வந்த பெண்ணும் அவளுடன் ஒரு ஆடவனும் வந்திருந்தார்கள்.


அவளுக்கு அன்று சந்தோஷ் அவளை கை தாங்களாக அழைத்துக்கொண்டு வந்தது நியாபகம் வந்தாலும் அவள் மருத்துவர் கடமையை செவ்வனே செய்தாள்.


அவள் அந்த பெண்ணின் ரிப்போர்ட்டை செக் செய்யும் போது அதில் கணவனின் பெயரில் சந்தோஷ் என்பதற்கு பதிலாக வேறு இருந்தது.

அதை பார்த்தவள் சொல்ல முடியாத உணர்வில் சிக்கிக் கொண்டவள் அந்த ரிப்போர்ட்டில் உள்ள கண்ணை எடுக்காமல் அந்த பெண்ணிடம் உங்கள் கணவனின் பெயர் என்ன என்று கேட்டாள்.


அந்த பெண் தன கணவனின் பெயரை சொல்லி இவர்தான் என அருகில் உள்ளவரை கை காட்டினாள்.


அவ்வளவுதான் கண்ணில் விழவா வேணாமா என்று இருந்த கண்ணீர் கீழே விழுந்து அந்த ரிப்போர்ட்டயும் அவள் மனதையும் நனைத்தது.


அந்த ஒரு துளி கண்ணீர் ஏதோ டன் கணக்கில் தன் மனதில் இரு நாட்களாக அழுத்திக்கொண்டிருந்த சுமையை குறைத்தது போல ஒரு உணர்வு அவளுக்கு..
.

(அப்பாடி உன் மரமண்டியில புரிய வைக்குறதுக்குள்ள பாவம் அந்த வயித்து புள்ளத்தாச்சிக்கு வயிறு வலி வர வச்சி நீ வேலை பாக்குற ஹாஸ்பிடலிலே அதுவும் உன்னையே பார்க்க வைக்குறதுக்குள்ள என் நாக்கு தள்ளி போச்சி என விதி செல்லமாய் அவளிடம் கோபித்து கொண்டது).


சாதாரண வயிற்று வலிதான் என அவர்களை அனுப்பிவிட்டு மறுபடியும் யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

அவன் லைபில்(life) இந்த பெண் இல்லையென்றால் என்ன வேற எந்த பெண்ணும் இல்லாமல் எப்படி இருப்பாள் என மனம் தொட்டா சிணுங்கி போல சுருங்க ஆரமித்து விட்டது.

(அட சீ என்றானது விதிக்கு என்னை விட எல்லாம் தெரியும் என படித்த திமிரில் இருக்கும் உங்கள் மூளை தான் உங்கள் லைபில்(life) அதிகம் விளையாடுகிறது என வேதனையோடு சந்தோஷை பார்க்க சென்று விட்டது அவனுக்காவது புரியவைக்கலாம் என்று)


அதை நினைத்து பார்த்து கொண்டிருந்தவள் தன் அருகில் அமர்ந்த தன் தந்தையயை கவனிக்க வில்லை .

முருகன் " என்ன டா ஏதோ யோசிச்சிட்டு இருக்க ,2 நாளா வேற ஒரு மாறி இருக்க உடம்பு ஏதும் முடியலையா என்று கேட்டார்.

அதில் சிந்தனை திரும்பியவள் அவரைப் பார்த்து ஒரு ஒட்டாத சிரிப்பை சிரித்து விட்டு "ஒன்னும் இல்லப்பா" என்று .சொன்னாள்.

கொஞ்ச நேரத்தில் அவர் எதோ கேட்க வருவதும் பின் தயங்குவதுமாக இருக்க "என்னப்பா ஏதும் கேட்கணுமா கேளுங்க"என்றாள்.

முருகன்"இல்ல டா விஸ்வேந் , அந்த பொண்ணு,தெரியுமா என ஏதேதோ கேட்க"
அவரின் தயக்கம் புரிந்தது

கொண்டு "அப்பா விச்சு அண்ணா வாழ்க்கையில ஒரு பொண்ணு இருந்தா இப்ப இல்ல அப்படிங்குறது மட்டும்தாப்பா தெரியும்
வேற ஏதும் தெரியாது ஏன் அந்த பொண்ணோட பெயர் கூட தெரியாதுப்பா.

அப்படி தெரிஞ்சிருந்தா நானே அந்த பொண்ண கண்டுபுடிச்சி பேசியிருப்பேன்.

ஆனால் ஒன்னு அப்பா அந்த பொண்ணு நம்ம விச்சுவ ஏமாத்திட்டா அப்படினு என்னால யோசிக்க முடியல,ஏன்ன நம்ம விச்சு சோ பேர்பிக்ட் (perfect ),
ஒருத்தவங்களோட கண்ண பார்த்தே அவங்க எப்படினு சொல்லிடுவான். பொண்ணுங்க விசயத்துல சுத்தமா இன்ட்ரெஸ்ட் காட்டமாட்டான். அப்புறம் லவ்லயும் பெருசா இன்ட்ரெஸ்ட் காட்ட மாட்டான். ஏன்னா நம்ம அம்மா செய்த காரியங்கள் அப்படி(அதை சொல்லும் பொது வேதனையோடு தன் பெரிய பையன் கண்ணனை நினைத்து கொண்டார்).


இப்படி இருக்கறவன் இப்படி தன்னோட இயல்பா தொலைச்சிட்டு நிக்கிறானா கண்டிப்பா அவள் துய்மாயானவளாத்தான் இருப்பாள் என நீளமாக பேசி முடித்தாள்.


(இவள் காதலுக்கும் காலான் அவள் தான் என்ற உண்மை தெரியவந்தால் இதேபோல் அவளுக்கு சப்போர்ட் செய்வாளா ???/)


தன பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்கான எல்லா கதவுகளும் இறுக பூட்டப்பட்டிருப்பதை கண் கலங்க ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவித்தார் முருகன்.


இவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்தான் விஷ்வேந்.நைட் முழுவதும் குடித்ததால் கண்கள் சிவக்க குடித்த சிகிரெட்டின் வாசம் அவனையே முகம் சுழிக்க வைக்க இறுகிய முகத்துடன் வந்தான்.


சுவாதீனமாக தன தந்தையை தவிர்த்து தன் தங்கையிடம் "என்ன டா பாப்பு ஹாஸ்பிடல் போகலையா" என கேட்டபடி அருகில் அமர்ந்தான். அண்ணா அப்பா வந்து என்று எது சொல்ல முருகன் அவளை பார்க்கவும் அவள் ஆறுதல் போல கண்களை மூடி திறந்து "அண்ணாவ செக்கப் அழைச்சிட்டு போறத பத்தி கேக்குறாங்க...அத பத்தி பேசிட்டு இருந்தோம் என பேச்சை மாற்றினாள்.


"ஓ என்று கூறியவன் தன் அம்மாவை நினைத்து கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.அவன் ஆபிஸ்ல் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்து விட்டு இறங்கும் போது அவளை மறைத்தபடி நின்றாள்.


ராட்சசி,கொலைக்காரி,கலியுகத்து சூர்ப்பனங்கை ,இதிகாசங்களில் வரும் அனைத்து எதிர்மறை கதாபாத்திரங்களின் மொத்த உருவம் , ரீனா ராணி இளித்தபடி அவனை இடித்த படி நின்றாள்.


அவன் கோபத்துடன் அவளை பார்த்து "ரீனா திஸ் ஐஸ் தி லிமிட் ",நீ உன் எல்லையை ரொம்ப தாண்டுற நீ எதிர் பார்க்குற ஆள் நான் கிடையாது, உன்ன மாறி ஆளுங்களுக்கு தான் ஆயிரம் பேர் இருப்பாங்களே அப்பறம் ஏன் என்னை புடிச்சுகிட்டு பல வருசமா தொங்குற ",


உன்னல ஏன் இந்த கடவுள் பொண்ணா படைச்சி பொண்ணுங்களுக்கே ஒரு சாபக்கேடா ஆக்கி வச்சிருக்கானோ தெரியல"என்று அவன் கத்த
அதை கொஞ்சம் கூட காதில் கொள்ளாமல் அவனை ஒரு வெறியுடன் அங்குலம் அங்குலமாக ரசித்து கொண்டிருந்தாள்.


"பேபி நீ எவ்வளோ என்னை திட்டினாலும் அசிங்கபடுத்தினாலும் நான் சொன்னதை நீ செஞ்சே தான் ஆகணும் இல்ல செய்ய வைப்பேன்.

உன்னையும் உன் குடும்பத்தையும் அழிக்க எனக்கு நீ கண் மூடுற நேரம் போதும் விஷவேந்திரன் பட் எனக்கு அது வேணா நான் கேட்டதை மட்டும் நீ பண்ணு போதும்"


என்று அவனை ஏளனமாக பாரத்தவளை கழுத்தை நெரித்து பிடித்தான் விஷ்வேந் "என் குடும்பத்துல நீ கை வைப்பிய அதுக்கு நீ உயிரோட இருக்கனும் டி "என கோபமாக அவள் கழுத்தை இறுக்கினான்.


அவளோ "நீ என்ன கொலை பண்ண போறேன்னு நினைக்கிறது கூட என் அண்ணன்னுக்கு தெரிஞ்ச உன் சொந்தம் பந்தம் என உன் சந்ததியையே அடியோடு அழிச்சிடுவான் விஷ்வேந் சோ நான் சொன்னதை கேட்டு பழகுங்க" என்று அலட்சியமாக சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

செல்பவள் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் விளையாடியதை சந்தோசமாக நினைத்து கொண்டு சென்றாள்.என் விருப்பத்திற்கு இடையில் யார் வந்தாலும் இதே நிலைமை தான் உன்னையாவது உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன் என சந்தோசப்படு என நினைத்து கொண்டு சென்றாள்.


அவள் செல்வதயே பார்த்து கொண்டிருந்தவன் ஏதோ திடீரெண்டு மனம் எல்லாம் கணக்க தன் அலுவலகத்திற்கு சென்றான்.மதியம் வரை வேலை செய்தவன் எதிலும் முழுமையாக ஒன்றை முடியாமல் ஏனோ இன்று அகலியின் நினைவு உயிர் வரை சென்று அதிகம் அவனை பாடாய்படுத்தியது.


எப்பொழுதும் அவள் செய்த குறும்புகளை நினைத்து சந்தோச படுவான் இல்லை அவளை தன் மறுத்ததை நினைத்து தன் மீதே கோபம் கொண்டு தண்டனை கொடுத்து கொள்வான்.

ஆனால் இன்று என்னவென்று வரையறுக்க முடியாத உணர்வு எப்பொழுதும் அவனை தப்பாய் வழி நடத்தும் மூளையும் சரியாக வழி நடத்தும் மனசுமே அவனுக்கு இந்த உணர்வில் உதவ முடியவில்லை.

எப்போதுமே தன் அகலியை விட்டு பிரிந்து சரிதான் என யோசிக்கும் அவன் மனம் இன்று ஏனோ நேர்மறையாக யோசித்தது.அவளிடம் தன் காதலை சொல்லிருக்க வேண்டுமோ..


தன்னை தாண்டி அவளுக்கு என்ன பிரச்சைனை வந்து விட போகிறது ,அப்படியே வந்தாலும் தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்றி இருக்க வேண்டுமே....இல்லை அவளோடே உயிர் விட்டுருக்க வேண்டுமோ அதை விட்டு அவளை விட்டு பிரிந்து தவறான முடிவை எடுத்து விட்டோமோ...என் அம்முக்குட்டி என்னை விட்டு எப்படி இருப்பாள்....என ஏதேதோ யோசித்தான்.

அவன் நினைத்தால் ஒரு நாளிலே அவள் எங்கிருக்கிறாள் என தெரிந்து கொள்ள முடியும் தான் ஆனால் அவள் எங்கிருந்தாலும் சந்தோசமாகத்தான் இருப்பாள் என நம்பிக்கொண்டிருப்பவனின் நம்பிக்கையை அது தகர்த்து விடுமே

அதனால் தான் அவன் அவளை பற்றி எந்த ஒரு தேடுதலையும் தொடங்கவில்லை ஏன் அவன் உயிர் நண்பன் சந்தோஷிடம் கூட பேசுவதில்லை அவன்..

ஆனால் அதற்கு எதிர்மறையாக இன்று அவள் துளி கூட சந்தோசமாக இல்லை என்று அவன் உள்மனம் ஓழமிட்டு அழுவதை தாங்கமுடியாமல் மூடிய கண்களில் கண்ணீர் வடிந்து அவன் கைகளில் சிதறியது.


தான் அழுகிறோம் அதுவும் ஒரு பெண்ணிற்காக்க அழுகிறோம் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் கண்களில் தண்ணீர் வற்றும் வரை மௌனமாகவே அழுது தீர்த்தான்.

ஏனோ ரீனா அவனிடம் கோபமாக பேசியதும் அழுதுவடிந்த அகலிகயின் முகமும் மாறி மாறி தோன்ற அவன் உள்ளுணர்வு என சொல்கிறது என புரிந்து கொள்ள முடியாமல் அதிகமாக யோசித்தால் கண்ணும் தலையும் வலிக்க இதற்கு மேல் தங்காது என நினைத்தவன் 4 மணிக்கெல்லாம் ஆபிஷிலிருந்து கிளம்பி பாருக்கு சென்று விட்டான்.


நாளை முக்கியமான மீட்டிங் ஒன்று இருப்பதால் அதை முடித்துவிட்டு என்ன நடந்தாளும் அவள் அம்மு குட்டி எங்கு இருக்கிறாள் என தேட வேண்டும் ...இல்லையென்றால் சந்தோஷிடமாவது பேச வேண்டும் என தீர்க்கமாக முடிவு எடுத்தான்.

அங்கு சென்று தன் உள்ளுணர்வு ஊமையாகும் வரை குடித்தான் .தன் மூளை வேலை செய்வதை நிறுத்தும் வரை குடித்தான்.இனி குடித்தால் தான் வீட்டிற்கு செல்ல முடியாது கார் ஓட்ட முடியாது தனக்கு எது என்றாலும் பரவாயில்லை தன்னால் மற்றவர்களுக்கு ஏதும் ஆகி விட கூடாது என்று வீட்டிற்கு பயணப்பட்டான்.


நான் திட்டுனா நீ என்ன விட்டு போய்டுவியா டி என் கூடவே இருந்து என்னை உன் காதலை ஏத்துக்க வைக்க முயற்சி செய்யாம ஏன் டி என்ன விட்டு போன என அவளை திட்டிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் காரில் சென்று கொண்டிருந்தான்.


சிறுது தூரம் சென்றவன் காரை நிறுத்தி ஏதோ தோன்ற அங்கு உள்ள பார்க்கில் நுழைந்தான். தனக்கும் தன் குட்டிமாவிற்கும் பார்க்கில் நிறைய சம்பவங்கள் நடந்ததால் அவனுக்கு பார்க்கென்றால் எப்பொழுதும் ஸ்பேஷல் தான்.


ஏன் அவள் காதலை சொல்கிறேன் என்று மிகப்பெரிய காமெடி பண்ணியதும் இதுபோல் உள்ள ஒரு பார்க்கில் தான் என அந்த போதையிலும் தன் வெள்ளை பற்கள் தெரிய சிரித்து கொண்டே உள்ளே சென்றான்.


அதே நேரத்தில் இங்கே தமிழின் வீட்டில் 2 நாட்களாக சந்தோஷ் வீட்டிலிருந்து அவனின் தேனு குட்டியை பத்திரமாக பார்த்துக்கொண்டும் அவளை ஏதாவது சொல்லி சிரிக்க வைத்து கொண்டும் இருந்தவன் இன்று தான் அலுவலக வேலையாக வெளியில் சென்றான்.

அவன் இருக்கும் வரை சந்தோஷமும் இல்லாமல் துக்கமும் இல்லாமல் ஒரு நடுநிலை உணர்வில் இருந்தவள் அவன் சென்றவுடன் ஏனோ பழைய படி வண்ணம் இழந்த பட்டாம் பூச்சியாய் ஆனாள்.

ராஜாவிடம் சில பல கெஞ்சல்களை போட்டு தன்னை பக்கத்தில் உள்ள பார்க் எதிலாவது கொண்டு வந்து விடும்படி கேட்டு கொண்டிருந்தாள்.

அவனோ அதெற்கெல்லாம் அசையாமல் என் காலுல விழுந்தாதான் அழைச்சிக்கிட்டு போவேன் என்று முருகன் சிலை போல் நின்று சிரித்துக் கொண்டிருந்தான்.


அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இவன் செய்வதை பார்த்து கோபம் வந்தாலும் அவளை இயல்பாக்கவே அவன் இப்படி செய்கிறான் என் தெரிந்து அமைதியாக நின்றனர்.


ஒரு வழியாக அவனை சமாதான படுத்தி அழைத்து வந்தாள். அவளை அருகில் உள்ள பார்க்கில் இறக்கி விட்டவன் “ குட்டி சாத்தான் உன் வீதி உலாவ முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணு நான் வந்து அழைச்சிக்கிட்டு போறேன்,


உன் ஆருயிர் தோழன் ஏதோ உன்னை பாதுகாக்ககுறத்துக்காகவே அவனை கடவுள் படைச்ச மாறி ஸீன் போடுவானே அவன் கால் பண்ண நான் உன் கூட தான் இருக்கேன்னு சொல்லு இல்லை என்னை திட்டுவான்" என தன் அண்ணனை கலாய்த்த போதும் அவன் குரலில் பெருமையே இருந்தது.


அவனிடம் சரி என்று சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவளுக்கும் அவள் மாமனின் நினைவுகள் தான். ஏதோ தோன்ற தன் தலையை நிமிர்த்தி பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள்.


அங்கே அவளின் மாமன் நிற்க முடியாத போதையில் பார்க்கில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு கையில் சிகிரெட்டை பிடுத்து கொண்டு நழுங்கிய உடையோடு நடந்து வந்து கொண்டிருந்தான்.

என் மாமனா இது எப்போதும் திருத்த பட்ட முடியோடும் ட்ரிம் செய்யபட்ட தாடியோடும் கொஞ்சம் கூட கசங்கா பேர்பிக்ட் லூக்கில் இருப்பாவனா இது
அவனை பார்த்த முதல் நொடி அவளுக்கு தோன்றியது மாமா குடிப்பாங்களா என்பது தான்.


எத்தனையோ வருடங்களாக கனவிலும் நினைவிலும் தான் பூஜித்த உருவம் .முகம் தெரியாத போதே அவளின் உயிராக நின்ற முகம்.தன்னை அவள் உலகமாக மாற வைத்த அதே முகம் .ஏதோ ஜென்ம ஜென்ம பந்தம் போல் பார்த்த முதல் சந்திப்பிலேயே முழு உரிமையும் எடுத்து கொண்ட அவள் கண்ணனின் முகம் ஆனால் கொஞ்ச தாடியுடனும் கலைந்த தோற்றத்தோடும் வந்தது.அங்கே வேரூன்றி நின்ற அந்த மனித மரத்திற்கு வேறொன்றும் தோன்றவில்லை.



ஆண்டவனுக்கு அலங்காரம் முடித்து ஆராதனை காட்ட திரை விலக்கும் போது அனைத்து பக்தர்களும் அடைவார்களே ஒரு பரவச நிலை அதில் தான் இருந்தது.


அவனையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவனை பார்த்திலுருந்து அனைத்தும் நியாபகம் வர அந்த கொடிய நாட்களும் நியாபகம் வர தன் இதயத்திற்கு வரும் இரத்த ஓட்டத்தின் வேகம் குறைய உடல் நடுங்க கண்கள் சொருகி மயக்க நிலைக்கு செல்லும் போது தான் அதை பார்த்தாள்.

விஷ்வேந் நடந்து வரும் பாதையில் அங்கு உள்ள செடிகளை வெட்டும் கத்தரிக்கோல் வானத்தை பார்த்து குத்தி இருந்தது. அவன் தள்ளாடிய படியே வருவதால் கண்டிப்பாக அதில் இரடி விழும் வாய்ப்பு இருப்பதால் அவள் காதல் கொண்ட மனம் தன் உடல் உபாதையை தாண்டி அவனை காக்கா வேக எட்டுகளை எடுத்து வைத்து அவள் மாமனை நோக்கி ஓடியது.


என்னதான் மனம் காதல் கொண்டு ஓடினாலும் அந்த பூஞ்சை உடம்பு காரியின் உடல் அவளுக்கு ஒத்துழைக்க வில்லை. அதை கருத்தில் கொள்ளாமல் "வீர்" என்ற கேவளுடன் அவனை நோக்கி சென்றவள் அவன் அங்கு இடறி விழும் நேரம் அவனை இழுத்து பக்கத்தில் உள்ள புல் தரையில் விழுந்தவள்

தன் மாமனை காப்பாற்றி விட்டோம் என்ற நினைப்பில் அவள் மனம் அவள் உடலுக்கு வழி கொடுக்க குறை இரத்த அழுத்தத்தால் அவன் மார்பிலேயே மயங்கினாள்..


தன்னை யாரோ இழுப்பதுபோல் உணரந்தவன் அவள் தன் தேகம் தொடும் போதே உணர்ந்து விட்டான் அது தன்னவள் என்று. இதுவரை அவனாக அவளை அணைக்காத போதும் அவளின் குழந்தை தனம் மாறாத முத்தமும் அணைப்பும் அவனுக்கு அத்துபடியாயிற்றே.


அங்கு உள்ள புல் தரையில் அவனின் இடது கையின் மேலே அவள் தலை வைத்திருக்க அவளின் ஒரு கை அவனின் இடுப்பையும் அவளின் இன்னொரு கை அவனின் சட்டை காலரயும் பிடித்து கொண்டிருந்தது

2 ஆ மடிச்சு பாக்கெட்ல வைக்கிற மாறி குட்டியா இருந்துட்டு நீ என்னை காப்பாத்துரியா குள்ள வாத்து என அவள் தாடையை பிடித்து கொஞ்சினான்.

அவள் தன் சட்டை காலரை பிடித்ததை பார்த்ததும் அவளுடன் தான் ஒரு நாள் வந்த பஸ் பயணம் நியாபகம் வந்து சிரித்து கொண்டு அவள் தலையில் செல்லமாக முட்டியவன் "என் அம்முக்குட்டி" என்று உயிர் உருக கூறினான்.

அவள் மாமான் முதல் முறையாக அவளிடம் செய்யும் அனுசரணையான செய்கை. அவள் முன் முதலாக அழைக்கும் அவளின் செல்ல பெயர் என எதையும் கேட்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அகலி.


அவள் மயக்கத்தை இருக்கிறாள் என்ற எண்ணம் தோன்றாமல் அவளை அனு அணுவாக ரசிக்கும் வேலையை ஆரம்பித்தான்.முதுகு வரையே முடி என்றாலும்

அதன் அடர்த்தி அதிகம் அவள் விரித்து போட்டாள் அவள் முதுகை மட்டும் அல்லாமல் தோள் வழியாக வழிந்து அவள் முகத்தையும் சேர்த்து மூடி விடும். திருத்தாத புருவம் அதற்கு அவள் சொல்லும் காரணம் அவனை எப்போதுமே ரசிக்க வைக்கும்.


இந்த உலகத்தையே ஒரே பார்வையில் விழுங்கி விடும் பெரிய விழிகள். குட்டியாக ஒரு மூக்கு அவள் சிரிக்கும் போது அது இன்னும் அழகாக தெரியும்.
என அவளை அங்குலம் அங்குலமாக பார்த்து கொண்டே வந்தான்.

சாதாரண ஒரு காட்டன் சுடிதாரில் அடர்ந்த கூந்தலை அள்ளி கட்டி அது அடங்காமல் அங்கும் இங்கும் சிலும்பி நிற்க.கழுத்தில் ஒரு தங்க செயின் காதில் ஒரு தோடு தங்கத்தில் போட்டு இருந்தாள்,து அவளின் தங்க நிறத்திற்கு எடு படவே இல்லை.


வலது கையில் ஒரு கருப்பு கயிறு அதை பார்த்ததுமே தெரிந்தது அவனும் அவளும் கோவில் சென்ற போது அங்கே கொடுத்தது. தன் கையிலும் கட்ட வைத்து வலுக்கட்டாயமாக தன்னையும் அவள் கையில் கட்ட வைத்தது.அவனும் அந்த கயிற்றை இன்னும் அவிழ்க்க வில்லையே.


பிறந்த குழந்தையின் ரோசப்பு நிறத்தோடு ஒத்துப்போகும் அவள் உடலின் நிறம் இன்றும் மாறாமல் அப்படியே இருந்தது. ஆனால் அவள் முகத்தில் உள்ள குழந்தை I மறைந்து கண்களில் கருவலயத்தோடு ஏற்கனவே 50 கிலோ வில் இருப்பவள் இன்னும் மெலிந்து தக்கை போல் இருந்தாள்.


அவளின் பார்த்ததுமே அவன் மனம் சொல்லி விட்டது அவளுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று .அதில் அவன் அடைத்த சந்தோசம் அவனால் அளவிட முடியவில்லை.
Lkg படிக்கும் குழந்தை பள்ளி விடும் போது கேட்டின் வாசலில் தன் தாயைபார்த்து விட்டு துள்ளி குதிக்குமோ அந்த மாதிரியான மகிழ்ச்சி.

அவளை அலேக்காக தூக்கி கொண்டு அவனின் காரை நோக்கி சென்றான்.
அவளை பின் சீட்டில் அமர வைத்தவன் அவனும் பக்கத்தில் அமர்ந்து அவளை தன் நெஞ்சில் போட்டு கொண்டான்.ஏனோ அவளை தண்ணீர் தெளித்து எழுப்ப தோன்றவில்லை.


எழுந்து தனக்கு நிச்சயம் ஆகிவிட்டது..கல்யாணம் ஆகிவிட்டது தாலி கட்டுனாதான் நம்பியோ என கேட்டு விடுவாளோ என அவன் மூளை அவனை வழி நடத்த.

உனக்கு வேறு வேலையே இல்லையா என வழக்கம் போல அவன் மனம் அவன் மூளையிடம் சண்டை போட்டது.


அவள் தலையை வருடி கொடுத்தவன் அவள் கண் காது மூக்கு கன்னங்கள் என வரிசையாக முத்தம் கொடுத்தான் கடைசியாக அவள் மல்லி பூ உதட்டில் பட்டும் படாமலும் ஒரு முத்தம் கொடுத்து உச்சி முகர்ந்து அவளை தன் நெஞ்சிலே புதைத்து விடுபவன் போல் இறுக்கி கொண்டான்.


அவன் செய்கையில் அன்பு காதல் காமம் என எதுவும் இல்லாத அதற்கெல்லாம் அப்பாற்பட்ட வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு செயல் தான் இருந்தது. அதன் பின் தீர்க்கமாக எதையோ யோசித்து ஒரு முடிவெடுத்தவன் அவளை இறுக்கி அணைத்த படி உறங்கியும் போனான்.


சிறுது நேரத்திற்கெல்லாம் மயக்கம் தெளிந்து கண் விழித்தவள் தன்னை யாரோ கட்டி வைத்திருப்பதை போல தோன்ற கண்களை திறந்து பார்த்தவுடன் தெரிந்து கொண்டாள் இது தனக்கு சொந்தமான இடம் என்று அவன் மார்பிலிருந்து ஏழாமலே கண்ணீர் வெள்ளம் என உடைப்பெடுக்க தன்னவன் தன்னை முதல் முறை அணைத்திருக்கிறான் தொட்டு தூக்கியிருக்கிறான் என நினைப்பு இல்லாமல் தான் ஏன் அழுகிறோம் எதற்காக அழுகிறோம் என தெரியாமல் அவன் இடது பக்க மார்பை கண்ணீரால் நனைத்தவள்....


சிறுது நேரத்திற்கெல்லாம் ஏதோ நியாபகம் வந்தது போல் அவனை விட்டு சரேலென்று விலக்கியவள் உடம்பெல்லாம் தூக்கி போடா உதடு துடிக்க வேர்த்து வலிய தன் கேவளை தன் தொண்டையிலயே அடக்கியவள் அவனிடமிருந்து முயன்று விலகி அவன் நெற்றியில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்தவள் “love u mama as usual ” என்று அழுகையோடு ஒரு வரியில் தன் ஓட்டு மொத்த காதலையும் சொன்னவள் வேகமாக இறங்கி நடுங்கிய உடம்பை ஒரு கையால் பிடித்த படி சென்று விட்டாள்.

வருவாள்...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7 :

காலை மலராய் பூப்பேன் உன் வருகைக்காக

மாலை செந்தாமரையாய் பூப்பேன் உன் வருகைக்காக

இரவு நட்சத்திரமாக பூப்பேன் உன் வருகைக்காக

விடியல் வெள்ளியாக பூப்பேன் உன் வருகைக்காக....

உன் வருகைக்காகவும் உன் பேச்சி எனும் கவிதைக்காகவும்
உன் காலடி வாசலில் பூத்துக்கொண்டே இருப்பேன்....

அகலியயை பார்க்கில் இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்த ராஜா நேராக சென்றது ஸ்வப்னாவை தேடித்தான், அன்று அவளிடம் மாலை பேசுகிறேன் என்று சொன்னவன்

மாலை ஊரிலிருந்து முக்கியமான போன் வந்ததால் அவளிடம் சொல்வதற்கு கூட நேரம் இல்லாமல் அன்று இரவே அழகூருக்கு சென்றவன் வேலையை முடித்துவிட்டு இன்று காலை தான் வீட்டிற்கு வந்தான்.

வந்ததிலிருந்து அவளிடம் பேச முயற்சிக்கிறான் ஆனால் அவள் தான் இவன் கண்ணிலேயே படுவது இல்லை.

ஒன்று எல்லோரும் இருக்கும் போது அவன் முன்னே வருவது இல்லை இவன் வருவதை பார்த்துவிட்டு ரூமில் சென்று கதவை சாத்திக்கொள்வது என கண்ணா மூச்சி ஆடிக்கொண்டிருந்தாள்.

வீட்டில் யாரும் இல்லாமல் இருப்பதை கண்டவன் யோசனையுடன் தன் தாய் கிழவிக்கு போன் அடித்தான். " ஹலோ தாய் கிழவி என்ன வீட்ல யாரையும் காணும் அத்தை அப்பத்தா எல்லாரையும் கூப்பி ட்டுகிட்டு எங்க சுத்திகிட்டு இருக்க " என கேட்டான்.

செல்வி " ஏன் டா சொல்ல மாட்ட 18 வயசுலயே உங்க அப்பன் என் அப்பாவ டார்ச்சர் பண்ணி கட்டுனா உங்க பொண்ணைத்தான் கட்டுவன்னு ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டு 22 வயசுலயே 2 புள்ளைக்கு அம்மாவானேன் பாரு நீ தாய் கிழவினும் சொல்லுவ இன்னும் கொள்ளு பாட்டினும் சொல்லுவ “ என்று அவனை கடுகடுத்தார்.


(45 வயது ஆனாலும் பார்ப்பதற்கு 35 வயது போல ஒல்லியான உடம்போடும் சிவந்த நிறத்தோடும் இருக்கும் அவரை பார்த்து தாய் கிழவின்னு சொன்ன அவருக்கும்தான் கோபம் வராத என்ன).


இது எப்பொழுதும் நடக்கும் கதைதான் என்பது போல " அம்மா உன் மொக்கையா கொஞ்சம் நிறுத்திட்டு மேட்டர சொல்லு" என சொன்னான் .


அவரும் வந்த கோபத்தை அடக்கி கொண்டு " வீட்ல உள்ள ஆம்பளைங்க எல்லாம் சென்னையில் ஒரு சின்ன சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கும் விஷயமாக வெளியில் சென்று இருப்பதாகவும் பெண்கள் அனைவரும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று இருப்பதாகவும் ஸ்வப்னா மட்டும் வீட்டிலுருப்பதாகவும் சொன்னார்.


செல்வியின் கடைசி செய்தியில் குதூகலம் ஆனவன். "வாடி என் மாமன் மவளே மாட்டுன " என்று விசில் அடித்த படியே சொப்பணசுந்தரிய மட்டும் ஏன் விட்டுட்டு போனாங்க என்று யோசித்த படியே அவளை தேடி சென்றான்.


அங்கே ஸ்வப்னா பால்கெனியில் கீழே உட்கார்ந்து கொண்டு ஒரு கையால் வயிற்றை லேசாக பிடித்த படி கண்களை மூடிக்கொண்டு இதழ்கள் லேசாக பிரிந்திருக்க மாதவிடாயில் ஏற்பட்ட வயிற்று வலியாலும் ராஜாவின் திடீர் செய்கைகளினால் ஏற்பட்ட பயத்தினாலும் எதுவும் புரியாத மனநிலையில் அமர்ந்து இருந்தாள்.


அவளை தேடி கொண்டு வந்தவன் அவளை பால்கெனியில் அமர்ந்திருப்பதை கண்டவன் தான் பேச வந்ததை மறந்து அவள் அமர்ந்திருக்கும் அழகில் மயங்கி அவள் அருகில் சென்றவன் அவள் முன் முட்டி போட்டுக்கொண்டு அவள் இதழில் தன் இதழை கொண்டு லேசாக ஒற்றி எடுத்தான்.


அவன் முத்தம் கொடுத்த அடுத்த நொடியே அவனை இனம் கண்டுகொண்டவள் கண்களை திறக்காமலே அந்த சுகத்தை அனுபவித்தாள் அவள் இன்னும் கண்களை திறக்காமல் இருக்கவே அவள் இரண்டு கன்னங்களிலும் கை வைத்தவன் " ஏய் சோபி" என்று மிக மெல்லிய குரலில் அவளை அழைத்தான்.

அவள் அபொழுதும் கண்களை திறக்காமல் அவனின் கையில் உள்ள
கதகதப்பான சூடு அவளுக்கு இதமாக இருக்க அவன் கையில் இன்னும் தன் கன்னங்களை புதைந்தவள் அப்படியே இருக்க அவனுக்கு தான் பயம் வந்து விட்டது ஒரு வேலை மயக்கத்தில் ஏதும் இருக்கிறாளோ என்று
"ஸ்வப்னாஆஆஆஆ" என அவள் தோளை வேகமாக உலுக்கினான்.

அதில் அவள் மாயை அறுபட கண்களை திறந்தவள் கண்கள் கலங்க அவன் மார்பிலே விழுந்து "ஏன் அத்தான் இப்படி நடந்துக்கிறீங்க என்னால உங்க செய்கையை ஒத்துக்கவும் முடியல தடுக்கவும் முடியல ,யார்டையும் சொல்லவும் முடியல என்ன பாத்தா தப்பான பொண்ணு மாறி தெரியுதா அத்தான் அதான் இப்படில நடந்துக்கிறீங்களா நான் அந்த மாறி பொண்ணு இல்ல அத்தான் என்னிடம் அப்படி நடந்துக்காதிங்க ப்ளீஸ் " என தன் அடி குரலிலிருந்து கதறினாள் .


எப்பொழுதும் கண்ணியமாக நடந்து கொள்ளும் தன் அத்தான் இப்பொழுது இப்படி நடந்து கொண்டால் தன் மீது தான் ஏதோ தப்பு இருக்கும் என நம்பியவள் பழியை தூக்கி தன்மீதே போட்டுக்கொண்டாள்.


வயிற்று வலியோடு தன் மார்பில் புதைந்து கதறியவளை கண்டவன் தன் முட்டாள் தனத்தை எண்ணி வெட்கியவனாய் சிலை போல் சமய
அவள் சொன்ன நான் அந்த மாறி பொண்ணு இல்லை என்ற வார்த்தையில் சுயம் பெற்றவன் அது கொடுத்த வலியில் அவளை தன் நெஞ்சோடு இறுக்கி "இல்ல டா இல்ல நீ என் தேவதை ,பல வருசமா என் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தேவதை டா எனக்கு விவரம் தெரிஞ்சதுலேந்து உன்னை நான் கட்டிக்க போற பொண்ணாதான் பார்க்கிறேன்,


அது கொடுத்த உரிமையில பல வருசமா உன்ன பார்க்காம இருந்த ஏக்கத்துல தான் நான் அப்படி நடந்துக்கிட்டேன் சாரி டா சாரி டா நீ இப்படியெல்லாம் நினைப்பனு நான் யோசிக்கல டா சாரி சாரி.

எல்லாம் தப்பும் என் மேலதான் என்று கண்கள் கலங்க அவளை தன்னுள் இறுக்கி கொண்டான்.

கட்டிக்க போற பொண்ணாதான் பார்க்கிறேன் என்ற வார்த்தையிலேயே அவன் மனம் புரிந்தவள் விரும்பியே அவன் நெஞ்சினுள் வாகாக அடங்கி கொண்டாள்.

சிறு வயதிலிருந்தே தனக்கு மூக்கு சிந்திவிடும் அவள் அத்தான் அவள் கேட்டதை எல்லாம் அவளுக்கு வாங்கி கொடுக்கும் அவள் அத்தான்
,அவளுக்கு ஒரு வயதாக இருக்கும் போது தான் நடக்க முடியாமல் அழும்போது தூக்க முடியாமல் தூக்கி சென்ற தன் 3 வயது அத்தான் , சைக்கிள் கத்து கொடுத்த தன் அத்தான் அவளுக்கு வாழ்கை துணையாக வருகிறேன் என்றால் அவளுக்கு கசக்குமா என்ன ?


அவன் எதுவும் சொல்லமால் இருந்திருந்தாலே அவள் உணர்ந்திருப்பாள் அவன் மீதான தன் நேசத்தை இவன் அதிரடியாக முத்தம் கொடுத்ததால் அவள் இதையே யோசித்து கொண்டு தன் மனதில் உள்ள காதலை உணர மறந்து விட்டாள். இதோ இவன் சொன்ன பொது அவள் உணர்வுக்கு மீண்டும் உயிர் வந்து விட்டது.

தன் போக்கிற்கு ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தவன் அவளின் அமைதியாக இருப்பதை கண்டு அவள் முகவாயை பிடித்து "உனக்கு புடிக்கும்ல டா என்னை "என அவளை பார்த்து எதிர் பார்ப்போடு கேட்டான். ஸ்வப்னா "பிடிக்கல " என்று ஒரு வார்த்தையில் சொன்னவள் மீண்டும் அவன் மார்பில் மீண்டும் சாய்ந்து கொண்டாள் .

ராஜாவோ அவள் வார்த்தைக்கும் செய்கைக்கும் சம்மந்தம் இல்லாமல் முழித்தான். ஸ்வப்னா "ஆமா பிடிக்கல நீங்க ஏன் என்ன உங்க நெஞ்சிலேர்ந்து பிரிச்சீங்க அது பிடிக்கல எனக்கு இப்படி இருக்க தான் பிடிச்சிருக்கு என்று அவனை கட்டிக்கொண்டு அப்பறம் என்ன கேட்டீங்க என்று யோசித்தவள் ம்ம்ம்ம் எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு உங்கள மட்டும் தான் பிடிச்சிருக்கு" என்றாள்.


அவள் வாய் வழியாலேயே தன் காதலை கேட்பதற்காக வீட்டில் உள்ள அனைவரிடமும் எங்கள் கல்யாணத்தை பற்றி அவளிடம் பேச கூடாது என்று தான் அன்று சொன்னதன் பலன் இன்று கிடைத்து விட்டதை எண்ணி அவளை நன்கு கட்டிக்கொண்டான்..


எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ "அத்தான் வயிறு ரொம்ப வலிக்குது" என ஸ்வப்னாவின் குரலில் கலைந்தவன். அவளுக்கு காமாட்சியின் அறிவுரை படி கசாயம் செய்யது கொடுத்து அவளை படுக்க வைத்துவிட்டு வெளியில் ஒரு வேலையை முடித்து விட்டு அகலியை அழைத்து கொண்டு வருகிறேன் என்று அவளிடம் விடை பெற்று தன் காதல் கை கூடிய மகிழ்ச்சியில் நிம்மதியாக சென்றான்.


விஷவேந்தின் காரிலிருந்தது வேகமாக இறங்கியவள் அவன் கார் கண்ணிலிருந்து மறையும் தூரம் வந்தவள் அதே இடத்திலே அமர்ந்து மீண்டும் சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்து விட்டாள்..


தன் மாமனை ஒரு நாளாவது ஒரு முறையாவது காண மாட்டோமா என இரண்டு வருடமாக ஏங்கி தவித்தவள்

இன்று பார்த்ததும் இல்லாமல் அவன் மார்பிலேயே கதறி அழ வாய்ப்பு கொடுத்த அவள் இஷ்ட தெய்வம் சிவனுக்கு நன்றி சொன்னாள் தாங்கள் சந்தித்ததை யாரும் பார்த்திருக்க கூடாது என்றும் மனமுருக வேண்டிக்கொண்டாள்.


விஷவேந்திருக்கு தோன்றியது போல் அவனுக்கு கல்யாணம் நடந்திருக்குமா,திருமணம் செய்து கொள்ள போகிறானா? என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை.

ஏனென்றால் கத்தியின்றி ரத்தம் இன்றி திருமணம் என்ற வார்த்தையையே அவள் வாழ்க்கையிலுருந்து மட்டும் இல்லை அவள் எண்ணத்திலிருந்தும் அழித்திருந்தாள் அந்த ராட்சசி ,


சிறுது நேரம் அழுது முடித்தவள் இப்படியே தன்னை பார்த்தால் கண்டிப்பாக ராஜா கண்டுகொள்வான் என தோன்ற தானே வந்துகொள்வதாக அவனுக்கு குறுந்செய்தி அனுப்பிட்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து

தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தவள் ஓய்ந்துபோய் அழக்கூட தெம்பில்லாமல்,கண்களிலும் கண்ணீர் இல்லாமல் மனவேதனையோடு கட்டிலில் படுத்து விட்டாள்.


படுத்தவளை பாவம் பார்த்து நித்ரா தேவி கொஞ்சநேரமாவது அவள் மனம் அமைதியாக இருக்க தூக்கத்துல் இழுத்து கொண்டாள். திடீரென்று தோன்றிய கனவில் கண் முழித்தவள் அந்த கனவு கொடுத்த தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அந்த கனவில் பார்த்த காட்சிகள் மீண்டும் மீண்டும் கண்முன்னே வர தான் மாமனை ஏன் இன்று பார்த்தோம் என்று வருத்தம் மேலோங்க


முகம் ரத்த பசை இன்றி வெளிற ரூமுக்குள் இருப்பது மூச்சி முட்டுவது போல் இருக்க எழுந்து கீழே சென்றாள்.


அங்கே அனைவரும் அமர்ந்திருக்க நேரே சென்றவள் அங்கு அமர்ந்திருக்கும் சந்தோஷின் மடியில் தலைவைத்து காமாட்சியின் மடியில் காலை வைத்து கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அந்த கனவை மறக்க முயற்சி செய்தாள்.

அவளின் நிலை அறிந்து சந்தோஷ் அவளின் தலையை ஆறுதலாக வருடினான்.அந்த காட்சியை காணும் அனைவருக்குமே கொடுத்து வைத்தவள் அன்பான குடும்பத்தில் வாழ்கிறாள் என தோன்றுவதற்கு பதிலாக

அவள் கண்களில் வழியும் கண்ணீரும் நடுங்கும் உடலையும் பார்த்து "ஐயோ பாவம் குழந்தை" என்றே தோன்றும்.

சந்தோஷிற்கு தான் அவள் நிலையை நினைத்து கவலையாகி போனது.
கண்டிப்பாக அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை ஏனென்றால் அவனுக்கு அவள் தேனுக்குட்டியை பற்றி தெரியும் அவள் காதலை பற்றியும் தெரியும்.


அவன் ஆசை எல்லாம் அவள் கொஞ்சம் இயல்பு போல் சிரித்து கொண்டு இருந்தால் அதுவே அவனுக்கு போதும் தான்.

ஆனால் அகலியோ மேலும் மேலும் தன்னுள் இறுக்கி இருப்பதை பார்த்தவனுக்கு தன் மீது கோபம் வந்தது.

தன்னால் தான் அவள் இந்த நிலைமைக்கு காரணம் என்று நூறு சதவிகிதம் நம்பினான்.

பாவம் அவனுக்கு தெரியவில்லை எல்லாரையும் தாண்டி ஏன் விதியையே மிஞ்சி ஒருத்தி அவள் வாழ்க்கையை கொத்தாக களவாடி போனதை.

அவனின் கை வருடலில் சிறுது தெம்பு பெற்றவள் அவனின் வருடும் கையை பிடித்து கொண்டு " ப்ளீஸ் சந்தோஷ் என்ன விட்டு எங்கேயும் போகாதே எனக்கு பயமா இருக்கு"

என்று மழையில் நனைந்த கோழிக்குஞ்சை போல் உதடு நடுங்க அவனிடம் கூறினாள்.
அதை பார்த்த அவள் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கண்கள் கலங்கி விட்டது.


"இல்ல டா நன் போக மாட்டேன் எங்கேயும் போக மாட்டேன்" என்று அவள் கைகளைஇறுக்கி பிடித்துக்கொண்டான் கண்களில் கண்ணீரோடு .

இந்த தேவதை பெண்ணை வேண்டாம் என்று சொல்ல அவனுக்கு எப்படி மனசு வந்தது என விஸ்வேந்தின் மீது கொலை வெறியே வந்தது அவனுக்கு.

இங்கே விஷ்வேந்தோ போதையாலும் தன்னவளின் அருகாமையாலும் தன்னைமீறி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவன். எங்கோ ஒலிக்கும் ஹாரன் சத்தத்தில் கண் முழித்தான் .

அருகில் அகலி இல்லாமல் சிறிது திகைத்தவன் பின் இயல்புக்கு மாறி சிரித்தான் சத்தமாக இரண்டு வருடம் தான் சிரிக்காத சிரிப்பையெல்லாம் சேர்த்து வைத்து கண்களில் தண்ணீர் வரும் வரை சிரித்தான்.

அது சிரிப்பால் வந்ததா இல்லை ஆனந்த கண்ணீரா என்று அவனுக்கு மட்டுமே தெரியும். ஆம் இனி அவன் அவள் அம்முக்குட்டியை விடுவதாய் இல்லை.இந்த உலகத்தின் எந்த மூலையில் அவள் இருந்தாலும் அவன் ஆளுமையால் அவளை ஒரு மணிநேரத்தில் கண்டுபிடித்து விடுவான்.


அதனால் தான் இந்த சிறு பிரிவை அவன் பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை இனி என்ன நடந்தாலும் யார் தடுத்தாலும் அவளுடன் வாழ்ந்து பார்க்க முடிவெடுத்துவிட்டான் ,

ஒரு வருடம் முழுவதும் ஒரு நாள் தவறாமல் தன்னை காதலால் வித விதமாய் நனைய வைத்தவளை இனி அவன் ஆயுள் முழுமைக்கும் காதலால் பூஜை செய்ய முடிவெடுத்துவிட்டான்.

அதன் வெளிப்பாடு தான் இந்த சிரிப்பு..அன்று அவளின் உயிருக்காக அவள் காதலை நிராகரித்தவன் இன்று தன் மீதான காதல் தான் அவளின் உயிர் என்று உணர்ந்து அவளுடன் வாழ முடிவெடுத்துவிட்டான்.

அன்றும் அவள் மீதான அதீத காதலினால் தான் அவளை பிரிய முடிவெடுத்தான் இன்றும் அவள் மீதான அதீத காதலால் தான் அவளுடன் வாழவேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.

அன்றும் இன்றும் என்றுமே அவளுக்காக அவள் உயிருடன் வாழ வேண்டும் என்பதற்காகவே எல்லாம் செய்தான். அகலியின் காதலுக்கு கொஞ்சமும் குறையாதது தான் விஸ்வேந்தின் காதலும்..மிகவும் சந்தோஷமான மனநிலையில் வீட்டிற்கு கிளம்பியவன் வீட்டிற்கு வந்தவன் அங்கு அமர்ந்திருந்த ஜனனியை தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழே விட்டவன்


“ பாப்பு சாரி டா என்னோட பிரச்சனையில உன்னை கவனிக்கமா விட்டுட்டேன் அண்ணனுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சிட்டு உனக்கு இரு ராஜா குமரன மாப்பிள்ளையா கொண்டு வரேன்”


நான் போய் தூங்குறேன் நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு பாரின்ல உள்ள ஒரு கன்ஸ்ட்ராக்ஷன் கம்பெனிலேர்ந்து ஒரு டொமேஷ்டிக் டை அப் காக நம்ப கம்பெனி ஆ தான் செலக்ட் பண்ணிருக்காங்க.

அதனால என்ன காலையில கொஞ்சம் சீக்கிரம் எழுப்பி விடுடா” குட் நைட் என்று சொல்லிவிட்டு அவனின் பெற்றோரையும் புன்னகை முகத்தோடு பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றவன் குளிக்கமால் ட்ரெஸ் மாற்ற கூட தோன்றாமல் தன்னவளின் வாசத்தில் லயித்தவனாய் கண் மூடி கனவில் தன்னவளை சந்திக்க சென்றுவிட்டான்.


அவனின் புன்னகை முகத்தை கண்ட அவனின் வீட்டாருக்கு தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை .ஒருவரை ஒருவர் கிள்ளி கொண்டு உண்மை தான் என உணர்ந்துகொண்டனர்.


சுந்தரி என்னதான் தன் பிள்ளைகளின் மீது கோபம் இருந்தாலும் விஸ்வேந்தின் பல வருடத்திற்கு பிறகான உயிர்புள்ள சிரிப்பை காணும் போது அவருக்குமே சந்தோசத்தில் வார்த்தைகள் வற்றி போனது...


ஜனனிக்கும் தன் அண்ணனின் இந்த மாற்றம் மிகவும் சந்தோஷம் தான்.ஆனால் அவன் கடைசியாக சொன்ன கல்யாணம் என்ற வார்த்தைதான் அவளை சந்தோசம் அடைய விடாமல் தடுத்து விட்டது.


தான் காதலிக்கிறேன் என்று சொன்னாள் விஷ்வேந் எப்பேற்பட்ட தடைகள் வந்தாலும் தாண்டி திருமணம் செய்து வைப்பான்தான்.அந்த தைரியத்தில்தான் அவள் சந்தோஷை விரும்பியதே... ஆனால் இப்பொழுது எதிர்காலமே இல்லாத காதலை பற்றி இவளும் என்னவென்று சொல்வாள்.

வருவாள்..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8 :

தீயுடன் மரம் கொண்ட காதல் மரத்தை சாம்பலாக்கியது
உன்னுடன் நான் கொண்ட காதல் என்னை சாம்பலாக்கியது
இருப்பினும் உனக்கென் நன்றிகள்
என்னுடன் சேர்ந்து எரிந்த அந்த நட்களுக்காக.....

அன்று இரவு தமிழின் வீட்டில் ஹாலிலே அனைவரும் தூங்க, அகலி அங்கு உள்ள சோபாவில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தூங்க ஆரமித்தாள்.


ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒரு பக்கமென தூங்க சந்தோஷ் மட்டும் தூங்காமல் யோசித்து எப்படி அகலியின் வாழ்க்கையை சரி பண்ண போகிறோம்
எதுவும் புரியவில்லை அவனுக்கு குழந்தை மாறி துள்ளிக்குதித்து திரிந்தவளை இப்படி மாற்றிவிட்டதே விதி.

நல்லவர்களை கடவுள் காய் விடமாட்டான் கை விட மாட்டான் என்று தன் வீட்டு பெரியவர்கள் சொன்னதெல்லாம் கானல் நீராய் விட்டதே..

தெரியாமல் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத தன் தேனுக்குட்டிக்கு ஏன் இந்த நிலைமை அதுவும் அவளுக்கு அடிக்கடி வரும் ஒரு கனவு , அந்த கனவு என்னவென்று தெரியாவிட்டாலும் அந்த கனவின் போது நடுங்கும் அவள் உடல் இதய துடிப்பு சீரில்லாமல் அவள் சுவாசிக்க சிரம படுவது அவளின் கதறல் என எதயுமே அவனால் மாற்ற முடியவில்லையே.

என யோசிக்க யோசிக்க அவனுக்கு தூக்கம் தூர போனது தான் மிச்சம்.தனக்கு தெரிந்த அளவுகூட தன குடும்பத்துக்கு தெரியாது அவள் பிரச்சனை இதற்கே அவர்கள் எல்லாம் மனதுக்குள்ளே வெந்து செத்துக்கொண்டுருக்கிறார்கள்.

இதில் ராஜா மட்டும் தான் மனதில் கஷ்டம் இருந்தாலும் அவளிடம் கொஞ்சம் இயல்பாக இருப்பான் . அவனின் விளையாட்டுதனம் தான் வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சமாவது உயிர்ப்புடன் இருக்க காரணம்.

எதை எதையோ நினைத்து கொண்டிருந்தவனின் நினைவுகள் கடைசியாக அவள் உயிரானவளிடம் வந்து நின்றது.

தான் முதல் முதலில் பார்க்கும் போது கற்பக பச்சை நிறத்தில் பட்டு பாவாடையில் தங்க நிறத்தில் இலை இலையாக படர்ந்து இருக்க விஸ்வேந்தின் கையை பிடித்து கொண்டு நின்ற காட்சி வந்து போனது.

( அடப்பாவி பச்சபுள்ளயா போயி ரூட்டு விட்டுருக்கியா டா )

எப்பொழுதும் இதை நினைக்கும் போது ஒரு இனிய அதிர்வு ஏற்படும் ஆனால் அவளை கண்டத்திலுருந்து அவளை இழந்ந்து விட்டோமோ என வேதனை தான் அதிகாமாக இருக்கிறது.


அவளை தன் உயிர் போல நேசிக்கிறான் ...ஆனால் அகலி என்று நினைக்கும் போது அவன் உயிரையே கூட துட்சமாக நினைப்பது...அதனால் தான் என்னவோ தன உயிரானவளையும் பிரிந்து வேதனைபடுகிறான் .

அவன் அண்ணன் செய்ததற்கு ஜனனி எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டாள் தான்.ஆனால் அகலியை விட்டுவிட்டு இவன் மட்டும் தன் காதலியோடு சந்தோசமாக இருக்க அவன் மனம் ஒரு போதும் ஒத்து கொள்ளாது அதற்காகத்தான் கோபம் என்னும் முக முடியோடு சுத்திக்கொண்டுருக்கிறான் .

சந்தோஷோ துக்கம் இல்லாமல் தவிக்க, ஜனனி அண்ணனிடம் எப்படி திருமணம் வேண்டாம் என்று சொல்வது என்று பெட்டில் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தாள்.விஷ்வேந்தோ தன் அம்முகுட்டிய சீக்கிரமே தன்னுடன் கூட்டிவர போகிறோம் என்று சந்தோசத்தில் தூங்கி போனான் .

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாறி அந்த இரவை கடக்க சூரியன் யாரையும் எதிர்பார்க்காமல் தன் தங்க நிற கதிர்களால் பூமியை ஜொலிக்க செய்ய ஆரம்பித்தது .

காலையில் அனைவரும் ஹாலில் குழுமியிருக்க மூர்த்தி "தமிழ் நாங்க எல்லாம் ஊருக்கு கிளம்புறோம் வந்து 1 வாரம் இருக்கலாம்னு தான் வந்தோம் ஆனா முடியல இந்த ராஜாவயாவது ஊருல போய் இருடான்னு சொன்ன பச போட்ட மாறி இங்கயே உக்காந்து இருக்கான் அங்கு வேலையெல்லாம் அப்படியே கெடக்கு " என்று அவனை பார்த்து முறைத்து கொண்டே கூறினார்.


அந்த முறைப்பை ஏதோ அவார்ட் கொடுப்பது போல் சிரித்து கொண்டே வாங்கி கொண்டவனை பார்க்கும் போது ஸ்வப்னாவிற்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து வாயை கையால் மூடிக்கொண்டாள்.

அதன் பின்னரே தன் தந்தையை தானும் ஒரு முறைப்பு முறைத்து விட்டு "உனக்காக தான் நான் போகமாட்டேனு சொன்னேன் ஆனால் நீ சிரிக்கிறியா உனக்கு இருக்குடி சொப்பணசுந்தரி என்று அவளிடம் மனதுக்குள்ளே பல்லை கடித்து கொண்டான் .

மேலே பேசிய மூர்த்தி "நேத்து போய் பார்த்த இடம் ஓகே தான் சூப்பர் மார்கெட் ஓபன் பண்ண,இவனும் ஏதும் முயற்சி பண்ணி தனியா பிஸ்னஸ் ஆரம்பிப்பானு பாத்து நான் ஓஞ்சி போய்ட்டேன்.


அதனால நானே இறங்கி வேலைய ஆரம்பிச்சிட்டேன். "இங்க பாரு ராஜா இடம் மட்டும் தான் நான் வாங்கி கொடுப்பான் மத்தபடி நீதான் லோன் போட்டு பாத்துக்கணும் நான் வேணுனா ஸூரிட்டிக்கு சைன் போடுறன்" அவ்ளோதான் என ராஜாவை பார்த்து சொன்னார்.

பின் தமிழை பார்த்து அவனை தனியா ஸ்டே பண்ண கெட்டு போயிடுவான் அதனால அவனை இங்கயே தங்கிக்கட்டும் தமிழு " என்று அவனிடம் சொன்னார்.


அதற்கு " சரிப்பா "என்று ராஜாவை பார்த்து சிரித்து கொண்டே சொன்னான் தமிழ்.

இது தான் அவர்கள்.... தன் நண்பனின் பிள்ளை வீட்டில் தன் பிள்ளையை தங்க வைக்க போகிறோம் அவனிடம் கேட்க வேண்டும் அல்லது தமிழிடமாவது கேட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உரிமையிடன் சொன்னதும் அதற்கு தமிழும் சரி என்று சொல்வதும் விந்தை தான்,

இந்த ஒற்றுமை தான் கணேசன் தனது இரண்டாவது பெண்ணையும் அங்கே கொடுக்க காரணம் இன்னொரு பெண் இருந்தால் அதையும் சந்தோஷிற்கே கட்டி கொடுத்திருப்பார்.

(நல்ல வேலைட சந்தோஷுஉஉ.... தப்பிச்ச நீ இப்ப பண்ணி வச்சிருக்க வேலைக்கே ஜனனி உன்னை வச்சி செய்வா..இது வேறனா சுத்தம் நல்ல வேலை தப்பிச்ச )

ராஜாவிற்கு சென்னையில் ஒரு சூப்பர் மார்க்கெட் ஸ்டார்ட் பண்ணனும் தான் ஆசைதான்.

ஆனால் ஊரிலே உள்ள எல்லா பிசினஸ்ஸையும் பார்க்கவே ஆள் இல்லாததால் அதை யோசனையோடு நிறுத்திவிட்டான் அவன் எண்ணம் அறிந்து செயல் பட்ட தன் தந்தையை நினைக்கும் போது அவனுக்கு பெருமை தான் .


இருந்தாலும் அவரை வம்பிழுக்கும் பொருட்டு அவரிடம் "யார கேட்டு இதெல்லாம் பண்றீங்க நானெல்லாம் என் பியூட்டிய விட்டு எங்கயும் வர மாட்டேன் என்று காமாட்சியை பார்த்து ஒரு பறக்கும் முத்தத்தை கொடுக்க.. அவர் தூ... என்று துப்பி தன் மேல்வாயை தன் தோள்பட்டையில் இடித்து கொண்டு திரும்பி கொண்டார்.

அதை பார்த்த சந்தோஷ் அகலி கூட தங்கள் கவலையை மறந்து சிரித்தனர்.

ஒருவழியாக அவன் வாயை அடக்கி எல்லோரும் ஊருக்கு கிளம்ப சந்தோஷ் மட்டும் ரத்தினத்திடம் "அப்பா அகலி இங்க இருக்கட்டும் எனக்கு இன்னும் இங்க 2 மந்த் வேலை இருக்கு,காவியாவை கூட டாக்டர் ரொம்ப ஷ்டெயின் பண்ண கூடாதுனு சொல்லிருக்காங்க.


அவளுக்கு துணையா இருக்கட்டும் ,அதுக்கு அப்பறம் நானே அவளை ஊருல கொண்டாந்து விட்டுட்டு போறேன் என்று சொன்னான்.

அகலி சந்தோஷிடம் இருப்பது அவள் கருவறையில் பாதுகாப்பாக இருப்பதற்கு சமம் என்று அவர்கள் குடும்பத்திற்கு தெரியும் அதை விட அவள் தன் கவலை மறந்து இருப்பாள் என தோன்ற சரி என்று சொல்லி ஊருக்கு கிளம்ப தயாரானார்கள் .

எல்லாரும் ஊருக்கு கிளம்ப ராஜா ஸ்வப்னாவிடம் திரும்பி பார்க்கும் வரை ஸ்ட்ராங்கா இருக்குற மாறி ஒன்னு கொடு என்று அவள் மறுக்க மறுக்க வாங்கி கொண்டு ..கூடவே நான்கு அடியும் ஐந்து உதையும் வாங்கி கொண்டு சென்றான்.


கணேசன் குடும்பமும் கிளம்ப வீட்டில் அகலி காவியா தமிழ் சந்தோஷ் மட்டும் இருந்தனர் .

தமிழும் ஆபீஸ் கிளம்ப சந்தோஷ் அகலியிடம் வந்து "தேனுகுட்டி ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு முடிச்சிட்டு ஈவினிங் எங்கயாவது எல்லாரும் வெளியில் போயிட்டு வரலாம் .

நான் வரும் வரை பத்தரமா இருக்கணும்,எங்கும் போனாலும் கால் பண்ணி சொல்லிட்டு போ இல்ல நான் வந்து கூப்பிட்டு போறேன் டா ஒழுங்கா சாப்பிடணும் என்று ஏதோ 3வது படிக்கும் குழந்தையிடம் சொல்வது போல் சொல்லி விட்டு காவியவிடம் சென்று "அவளை தனியா இருக்கவிடாத எதையாவது யோசிச்சிகிட்டு இருப்பாள் எதாவது பேச்சி கொடு இல்லை வேலை கொடு "என்று சொல்லி விட்டு சென்றான் .


அங்கு விஸ்வேந்தோ "தன் ரூமில் உள்ள ஹோம் தியேட்டரில் நான்கு மூலையிலும் ஸ்பீக்கர் காதை கிழிக்க பாட்டு கேட்டு கொண்டிருந்தான்.

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி

அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ...

என்ற பாட்டை கேட்டுக்கொண்டிருந்தான்

கீழே உள்ள அனைவர்க்கும் இந்த சத்தத்தை கேட்டு ஒரே ஆச்சர்யம் விஸ்வேந் ஒரு நாலும் இப்படி நடந்து கொண்டது இல்லை பிறந்ததிலிருந்தே அவன் ரொம்ப ரிஸர்வ்ட் டைப் தன் உணர்வுகளை வெளி காட்ட மாட்டான்.

இது இவன் இயல்பு இல்லையே என்று அனைவரும் யோசித்து கொண்டிருக்க கண்ணன் கூட கேட்ட சத்தத்தில் ரூமை விட்டு ரொம்ப நாட்களுக்கு பிறகு வெளியே வந்து என்னவென்று பார்த்தான் .


சுந்தரியோ "ஏங்க நம்மா விச்சுக்கு என்ன ஆச்சுங்க நேத்து என்னனா நம்மல பார்த்து சிரிச்சிட்டு போறான் .

இப்ப இவளோ சத்தமா பாட்டு கேட்டுகிட்டு இருக்கான் அவனோட நடவடிக்கையெல்லாம் ரொம்ப அப்ர்மனாரம்லா இருக்கு எனக்கென்னவோ பயமா இருக்கு "என்று கூறினார்.


அதை கேட்ட ஜனனி சிரித்து கொண்டே "அம்மா அண்ணா இப்பதான் கொஞ்சம் நார்மலா இருக்கான் இனி சீக்கிரமே அண்ணன் பழைய படி ஆயிடுவான் நான் போய் அவனுக்கு டீ கொடுத்துட்டு என்னனு கேட்டுட்டு வரேன் "என்றாள்.

உடனே சுந்தரி "அப்படியே கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கவான்னு கேட்டுட்டு வா என்றார் "

"அம்மா உன் வேலைய ஆரம்பிச்சிட்டியா, பேசாம இரு என் கோபத்தை கிளப்பாம "என்று சொல்லிவிட்டு டீ எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.

நேற்றுலிருந்து அண்ணன் ரொம்ப சந்தோசமா இருக்குறத பார்த்தா நேற்று ஏதோ நடந்துருக்கு.இல்ல அண்ணன் யாரையோ மீட் பண்ணிருக்கான் எது எப்படியோ என் அண்ணன் சந்தோசமா இருந்தா எனக்கு போதும் என்று யோசித்து கொண்டே அவன் ரூம் வாசல் வந்துவிட்டாள்,

ரூம் கதவு திறந்திருக்க கையில் உள்ள மொபைலை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். "விச்சு "என ஜனனி கூப்பிட்டதும் வாசல் பக்கம் திரும்பியவன் அவளை பார்த்து இன்னும் குஷியானவன் பாப்புபு....என்று கூவலுடன் அவளிடம் சென்றவன் அவள் கையில் உள்ள டீயை வாங்கி அங்கு உள்ள டீப்பாயில் வைத்தவன் அவளை இழுத்து கொண்டு சந்தோசமாக டான்ஸ் ஆட ஆரமித்துவிட்டான் ..


அவன் சந்தோஷத்திற்கு காரணம் நேற்று தன் உதவியாளரிடம் கேட்டுக்கொண்டபடி அகலியின் பெயரும் அவள் mba படித்த யூனிவர்சிட்டியின் பெயரையும் வைத்து எல்லா டீடைலும் கண்டுபிடித்து இப்பொழுது அவள் குடும்பம் முழுவதும் சென்னையில் இந்த அட்ரசில் தான் இருக்கிறார்கள் என அனைத்தையும் கண்டுபிடித்து அட்ரசையும் அவன் மெயிலுக்கு அனுப்பி வைத்தான்.

அது மட்டும் அல்லாமல் சந்தோஷ் பாரினில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்கிறான் என்பது வரை விசாரித்துவிட்டான்.சந்தோஷ் முக்கியமான டாபிக் இல்லை என்று அவனை பற்றி வேற ஏதும் விசாரிக்கவில்லை

விசாரித்தால் அவனும் சென்னையில் இருப்பதையும் இன்று அவன் வாங்கும் அடியையும் அன்று அவள் தங்கை சந்தோஷிற்கு கொடுத்த அடியையும் சேர்த்தே சொல்லிருப்பான் அந்த விசுவாசி


என்னென்று தெரியாவிட்டாலும் தன் அண்ணனின் சந்தோசத்தில் தானும் கலந்து கொண்டாள் . சிறுது நேரம் கழித்து அவளை விடுத்து டீயை குடிக்க ஆரம்பித்தான்.

ஏனோ இன்று தன் அண்ணனின் கண் ,உதடு ,உள்ளம் என அனைத்தும் சிரிப்புடன் இருப்பதை போல் அவளுக்கு தோன்றியது.அவள் அவனை இமைக்காமல் கண் கலங்க பார்த்து கொண்டிருந்தாள்.

தன் தங்கை தன்னை நிறைவோடு பார்த்து கொண்டிருந்ததை பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது .

ஈசியாக முடிக்க வேண்டியதை ரொம்ப இழுத்து அனைவரையும் கஷ்டப்படுத்தி விட்டோமோ என தோன்றிய நொடி

தன் அண்ணன் கண்ணன் இழந்தது ஞாபகம் வர அதனால்தான் தான் அந்த முடிவெடுக்க வைத்தது என யோசிக்க எது எப்படியோ இனி எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என நினைத்தவன்..


"பாப்பு சாப்பாடு எடுத்து வை டா நான் குளிச்சிட்டு வரேன். இனி அண்ணன் யாரையும் கஷ்ட பட விட மாட்டேன் ,இனி எல்லாம் நல்லதே"என்று அவளின் தலையை வருடி சொல்லிவிட்டு குளிக்க சென்று விட்டான்.


அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவள் ஒருவித புத்துணர்ச்சியோடு கீழே வந்து அதை தன பெற்றோர்களிடமும் பகிர்ந்து கொண்டாள்.

முருகன் "இந்த சந்தோசம் பெருகி பரவ வேண்டும் இறைவா என கடவுளை வேண்டிக்கொண்டு பாக்டரிக்கு கிளம்பிவிட்டார்.

அன்று காலை 11 மணியளவில் விஷ்வேந் தன் அலுவலகத்தில் பாரின் கிளைண்ட்டுக்காக வையிட்(wait )செய்து கொண்டான்.

உள்ளே 40 வயதுமிக்க ஒருவரும் கூடவே ஒரு 29 வயது இளைஞனும் வந்தனர்.

அங்கு வந்த அந்த இளைஞனை பார்த்த விஸ்வேந் சந்தோஷம் அதிர்ச்சி என அனைத்தும் கலந்து பார்த்து கொண்டிருந்தான்.

ஆமாம் வந்தது சாச்சாத் நம்ம கறுப்பழகன் சந்தோஷேதான்.

ஆனால் அதற்கு மாறாக சந்தோஷோ கொலை வெறியுடன் கண்கள் சிவக்க, நர நர வென்று பல்லை கடித்து கொண்டு இருக்கும் இடம் கருதி அமைதியாக ஆனால் உள்ளம் எல்லாம் உலைக்களமாய் கொதிக்க நின்று கொண்டிருந்தான்.

சந்தோஷ் பாரினிலிருந்து வந்தது அவர்களின் கிளை நிறுவனங்களை உலகம் முழுவதும் உள்ள முன்னனி வளர்ந்த வரும் நாடுகளில் பரப்புவதற்குத்தான் .அதை இந்தியாவில் சென்னையில் ஆரம்பிக்கதான் வந்தான்
.
தீடிரென்று அவனின் மேலிடம் அவனின் மேனேஜரிடம் ( ராமலிங்கம் ) அங்க லோக்கலில் உள்ள ஒரு நல்ல கான்ஸ்ட்ரக்க்ஸன் கம்பெனியோடு டையப் வைத்துக்கொள்ளுமாறு சொன்னதால்.

அவர் சந்தோஷிடம் கலையிலயே அவனிடம் JKV என கம்பெனியின் பெயரைக்கூட சொல்லாமல் அழைத்து கொண்டுவந்துவிட்டார்.

அவனும் கம்பெனியின் நேம் போர்டை கூட பார்க்காமல் "ஏன் சார் ஏற்கனவே நாம ஆபீஸ் ஆரம்பித்து பாதி வேலை முடித்து விட்டோம் தீடிரென்று ஏன் என்று கேட்டுக்கொண்டே உள்ள வந்து விட்டான்.

விஷ்வேந் 1 வருடத்திற்கு முன் தன் ஆபிசயும் விரிவுபடுத்தி பழைய இடத்திலிருந்து இங்கே மாற்றி விட்டான்.அதனால் அவனால் விஸ்வாவை பார்க்கும் வரை அவன் கம்பெனிக்கு வருவது தெரியாது..


தெரிந்தாலும் அவனை நேரே வந்து அடித்து விட்டுதான் சென்றுருப்பான்.

இப்ப விஸ்வாவிற்கு அடி கொஞ்சம் லேட்டாக கிடைக்கும் அவ்வளவே வித்யாசம்..


விஷ்வேந்தும் ராமலிங்கமும் ஆஃபீஸியலா பேசிக்கொண்டிருக்க ராமலிங்கம் சந்தோஷயும் அந்த உரையாடலுக்குள் இழுத்ததால் அதே கோபத்தோடு அவனும் பேசிக்கொண்டிருந்தான்.

அவனை பார்க்க அவன் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிந்தது.அங்கே ஒருத்தி ஊனுருகி உயிருறுகி ஜீவன் இழந்து கிடக்க இவன் மட்டும் இங்கே சந்தோஷமாக இருப்பதை பார்க்க பார்க்க அவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகவே முடிவு பண்ணிவிட்டான் .


ஆனால் அவனுக்கு தெரியவில்லை நேற்றிலிருந்துதான் விஸ்வாவும் ஜீவனுடன் இருக்கிறான் என்று.

அவர்கள் உரையாடல் திருப்திகரமாக முடிய ராமலிங்கத்துடன் வெளியே வந்தவன் அவரிடம் தனக்கு ஒரு வேலை இருப்பதாக அனுப்பிவிட்டு புயலென விஸ்வாவின் ரூமிற்கு வந்தவன்

அவனுக்கு பேச கூட நேரம் கொடுக்காமல் அவனை கன்னம் கன்னமாக அறைய ஆரம்பித்தான்..

ஒவ்வொரு அடிக்கும் "என் பட்டாம்பூச்சி அங்க சிறகொடிஞ்சி கெடக்கு இங்கு நீ சந்தோசமா இருக்கியா ?"

"என் வாடாமல்லி வண்ணம் இழந்து கிடக்கு நீ இங்க சிரிச்சிட்டே எப்படி டா சந்தோசமா இருக்க""

என் தேனு குட்டி 4 மணி நேரம் தூக்கம் கால் வயிறு சாப்பாடுன்னு ஏதோ என் குடும்பத்திற்காக உயிர் வாழணும்னு வாழ்ந்துட்டு இருக்கா நீ எப்படி டா இப்படி குற்ற உணர்வே இல்லாமல் சுத்திகிட்டு இருக்க?


மாமா மாமானு உன்னையே தான டா சுத்திகிட்டு இருந்தா அவளுக்கு இப்படி ஒரு உயிர் வலியை கொடுக்க உன்னால எப்படி முடிஞ்சது விஸ்வா

நீ கல்யாணம் முடிஞ்சி சந்தோசமா இருக்க ஆனா... என் தேனுக்குட்டி.... என்று தொண்டை அடைக்க கோபம் இன்னும் தலைக்கு ஏற அவனை கொடூரமாக அடிக்க ஆரம்பித்துவிட்டான்.

அவன் வெள்ளை சட்டை முழுவதும் ரத்தத்தில் நனைந்து இருக்க.வாய்,மூக்கு என அனைத்தும் உடைந்து ரத்தமாக இருக்க.

அதன் வலியை விட தன் மல்லிப்பூ தனக்காக பட்ட கஷ்டம் துன்பம் எல்லாம் நினைக்க நினைக்க அவள் தன் மேல் வைத்திருக்கும் காதலின் ஆழம் ஒரு காதலனாய் அவனை பெருமை பட வைக்க

இன்னொரு மனம் அவள் படும் வலியை நினைக்கும் போது இந்த உயிர் வேண்டாம் என கடவுளை வேண்ட அதே வேண்டுதலை கண்களில் தேக்கி சந்தோஷை பார்க்க ஏனோ அதற்கு மேல் அவனை அடிக்க முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்து விட்டான்.

உடல் முழுவதும் ரத்தத்தோடு சந்தோஷின் அருகில் வந்து அவன் கையை பிடித்து கொண்டே "சந்தோஷ் ப்ளீஸ் டா என்னை என் அம்முகுட்டிட அழைத்துக்கொண்டு போ இல்லை இங்கயே என்னை கொன்னுடு டா " என அவனும் சத்தமாக அழுதுவிட்டான்.

தனக்கு தெரிந்த விஸ்வா இவன் இல்லையே எதற்கும் அஞ்சாமல் யாருக்கும் தலைவணங்காமல் தனக்கு சரி என்று பட்டதை எவ்வளவு பெரிய தடை வந்தாலும் செய்து முடிப்பவன்.

கன்னியாவான்,நேர்மையானவன்,சைட் அடிக்கும் நோக்கத்தோடு கூட பெண்களை நிமிர்ந்து பார்க்காதவன். "என்னை கொன்றுவிட்டு என கூறும் போது அவனுக்கு ஒரு மாறி ஆகி விட்டது சந்தோஷ் அவனை ஒரு குற்ற உணர்வோடு பார்த்தான்.

அவளின் வலியின் காரணம் பாதி தெரிந்தே இவர்கள் இருவரின் நிலை இப்படி என்றால்? முழுவதும் தெரிந்தால் ??????
 
Status
Not open for further replies.
Top