All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "ராட்சசனே என் ரட்சகனே!!❤" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்..

நான் சரண்யா.. என்னை பற்றி சொல்லனும் அப்படினா நான் இப்போ தான் b.ed படிச்சிட்டு இருக்கேன்.. நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. இப்போ நாவல் எழுத ஆரம்பிச்சு இருக்கேன்.. அப்புறம் வேறென்ன.. நல்லா சாப்பிடுவேன்.. தூங்குவேன்.. இன்னும் விளக்கமாக சொல்லனும் அப்படினா.. dad and mom's little princess..😁😁.. என்ன ரொம்ப மொக்க போடுறேனு யோசிக்கிறிங்களா.‌. இதோ மேட்டர்க்கு வந்துட்டேன்.. நான் இந்த தளத்தில் எழுதற என்னுடைய முதல் நாவல் பெயர் "ராட்சசனே என் ரட்சகனே!!❤" இந்த கதையை படிச்சிட்டு உங்களுடைய கருத்தை சொல்லிட்டு போங்க நட்பூஸ்..
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24487



ராட்சசனா? ரட்சகனா? - 01❤


சுற்றிலும் கும்மி இருட்டாக இருக்க, வானில் இருக்கும் நிலவின் ஒளியை தவிர வேறொன்றும் அந்த அறையின் உள்ளே நுழையவில்லை. அந்த நிலவின் ஒளி உள்ளே ஊடுறவ, நன்றாக உற்று பார்த்தாள் தான் தெரியும் அங்கே ஒருவள் இருப்பது என்பதே.. அந்த பாவையோ அறையின் மூலையில் சுருண்டு படுத்திருந்தாள். அதை அறையென்று சொல்வதை விட தங்கச் சிறையென்று சொல்லலாம்.. ஆம் தங்கச்சிறை தான். சரியான நேரத்திற்கு உணவு வந்துவிடும்.. அவளுக்கு தேவையான அனைத்தும் அங்கே இருக்கும். ஆனால் வெளி உலகை மட்டும் அவளால் காணமுடியாது.

சுற்றி திரிந்த பறவையை தங்க கூண்டில் அடைத்து அதற்கு பிடித்த உணவு கொடுத்தால் அதற்கு பிடிக்குமா‌ என்ன?? அதே போன்று தான் இருக்கு இந்த மங்கையவளின் நிலையும். ஆனால் இவள் சுற்றியெல்லாம் திரியவில்லை வீட்டிலே தான் அடைக்காக்கபட்டாள். அதாவது அப்போது வீட்டில் அடைப்பட்டு இருந்தாள்.. இப்போது அது என்ன இடம் என்று அவளுக்குத் தெரியவில்லை அது தான் வேறுபாடு மற்றபடி வேறெதுவும் இல்லை.

அவளின் மான் போன்ற விழிகளோ, நிலவின் ஒளியினை கண்டு ஜன்னல் அருகே சென்று அந்த நிலவின் ஒளியின் மூலம் அறையை நோட்டமிட்டாள்.. கதவு இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை.. பெருமூச்சு விட்டபடி மறுபடியும் நிலவை வெறிக்க ஆரம்பித்துவிட்டாள். இதுதான் அவள் வேலையாக இப்போது இருந்தது. காலையில் அந்த சுடரோனை வெறிப்பதும்.. இரவில் நிலவுமகளை வெறிப்பதும் அவள் வாடிக்கை ஆகிவிட்டது..

அவள் இங்கு வந்த நாளன்றே மயக்கம் தெளிந்த பின் தன்னுடைய கீச் குரல் மூலம் யாரேனும் இருக்கிறார்களா என்று அழைத்தும் பார்த்து விட்டாள். பாவம் அவளுக்கு பதில் சொல்ல தான் ஆளில்லை. அவள் இந்த இடத்திற்கு வந்து இரண்டு நாட்களாகிவிட்டது.. சரியான நேரத்திற்கு அங்கிருக்கும் ஓட்டையின் வழியே அவளுக்கு உணவு வந்துவிடும்.. இவள் என்ன பேசினாலும் அந்த பக்கத்தில் இருந்து பதில் வராது. அவளுக்கு தான் ஒன்றுமே புலப்படவில்லை..

இப்போது வானத்தை பார்த்தே புலம்ப ஆரம்பித்துவிட்டாள். அய்யோ முருகா.. என்ன எப்படியாச்சும் காப்பாத்திடு பா.. அப்படி மட்டும் நீ என்னை காப்பாத்திட்ட உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன். அய்யோ அவ்ளோ பட்ஜெட் என்கிட்ட இல்லை.. அதனால் அதில் பாதி 54 தேங்காய் உடைக்கிறேன்.. என்னை காப்பாத்திடேன் என்று வாய்விட்டே புலம்பிவிட்டாள் அந்த பேதை பெண்.. முருகப் பெருமானோ நீ பாதி தானே செய்ற நானும் உனக்கு பாதி தான் செய்வேன் என்று மீதி பாதியை வைட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிட்டார்.

ஏய் பூமி இது என்னடி உனக்கு வந்த சோதனை.. யாரையும் காணோம்.. இருந்தாலும் மூன்று வேலை சோறு போடுறாங்க அதுவரைக்கும் ஓ.கே.. ஆனால் நான் எப்படி இங்கே வந்தேன்.. வீட்டிலிருந்து கடைக்கு கிளம்பினேன்.. தீடிர்னு யாரோ கூப்பிட்டாங்க அவ்ளோ தான் நியபகம் இருக்கு.. அப்புறம் அந்த கண்ணு.‌.. ப்பா என்ன கண்ணுடா அது என்று அவள் மனதில் பதிந்த அந்த சாம்பல் நிறக்‌ கண்களை நினைக்க தலை வழி வந்தது தான் மிச்சம். அய்யோ மண்டை வலிக்குதே.. அடேய் யாருடா அது ஒழுங்கா என்னை விட்ருங்க இல்லைனா.. இல்லைனா.. நான் அழுதிடுவேன் என்ற ரீதியில் அவள் பாட்டிற்கு அவளின் போக்கில் தனியாக பேசிக் கொண்டிருந்தாள். அவ்வாறே அந்த இரவையும் கடந்துவிட்டாள்.. அப்போது அவளுக்கு தெரியவில்லை அடுத்த நாள் தன்னுடைய ராட்சசனை பார்க்க போகிறோம் என்று...

ஆதவன் தன் செங்கதிர்களை மெல்ல பரப்பிக்கொண்டு வெளியே வந்தான்.. அவனின் கருணையால் அந்த இருள் நிறைந்த அறையிலும் வெளிச்சம் பரவி அழகு மயிலாக உறங்கிக் கொண்டிருக்கும் அவள் மீதும் வீழ, அந்த கும்பக்கரணியோ இன்னும் எழுந்தபாடில்லை..

அப்போது வெளியே எதோ.. தட்..தட்.. என்று பூட்ஸ் சத்தம் கேட்க அதில் விழித்துக் கொண்டாள். இருப்பினும் யாரும் வரப்போவதில்லை என்று மீண்டும் உறக்கத்தை தொடர்வதற்காக தன் கண்மணிகளை உறக்கத்தில் ஆழ்த்த இமைகளை மூடிக்கொள்ள, எதோ திறப்பது போன்று சத்தம் கேட்டது. மெதுவாக தன் ஒற்றை கண்ணை திறந்து பார்க்க, அந்த சுவர் திறந்நது..

எம்மாடி.. எப்படி இந்த சுவரு திறந்துச்சு.. இவன் என்னை மந்திரகாரனா இருப்பானோ என்று தன் ஒன்றை கண்களாளே பார்த்து கொண்டிருந்தாள்.. பாவம் அந்த அப்பாவி பெண்ணிற்கு தெரியவில்லை அது சுவரு இல்லை.. சுவரு போன்ற கதவு என்று.. கதவை திறந்த யாரோ ஒருவன் அவளிடம் வருவதை கண்டு தன் குண்டு கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அவன் இவளை நெருங்க, நெருங்க அவளின் இதயத்துடிப்பு பலமடங்கு அதிகரித்தது.. அவளால் தூங்குவது போல் சரியாக நடிக்க கூட முடியவில்லை..

அவளை நெருங்கியவன்.. பால் நிறம் போன்ற அவள் முகத்தை ஒரு நிமிடம் உற்று விழித்தான்.. அவன் கண்களில் இரக்கம் தோன்றியதோ என்னவோ.. அடுத்த நொடி அதை துடையெறிந்துவிட்டு தன் முகத்தை இறுக்கமாக வைத்தவன். அவள் மூடிய கருவிழிகளில் அசைவை கண்டு தன் உதட்டோரம் சிறு புன்னகையை உதிர்த்தவன். அங்கிருக்கும் தண்ணீர் குவளையை பார்த்தான்.. அடுத்த நிமிடம் அவள் மீது அபிசேகம் செய்யப்பட்டிருந்தது.. ஆத்தாடி என்று பதறி அடித்து கொண்டு எழுந்தாள் அவள்..

எழுந்தவள் அவனை இப்போது தான் பார்த்தாள். அவள் மனதில் பதிந்த அதே சாம்பல் நிறக் கண்கள். இமைக்கவும் மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க.. தன்னையே பார்த்து கொண்டு இருந்தவளை கண்டவனுக்கு எரிச்சல் தான் மண்டியது.. தன் குரலின் மூலம் அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தான்..

ஏய் உன்னை தான்.. உனக்கு ஐந்து நிமிஷ டைம் அதுக்குள்ள இந்த டிரஸ்ஸை போட்டுட்டு ரெடியாகிட்டு வர.. என்று தன் கையில் இருந்த பையை அவளிடம் திணிக்க, எதோ பாஷை தெரியாத ஊரில் மாற்றி கொண்டதை போன்று மலங்க மலங்க விழித்தாள்..

என்ன பகல் கனவா.. போ என்று ஒரு அதட்டு அதட்ட.. அந்த குரலில் இருந்த எதோ ஒன்று அவளை அதனை செய்ய சொல்ல.. மடமடவென்று அவன் சொன்னபடியே ஐந்து நிமடங்களில் ரெடியாகி வந்தாள். அந்த அரக்கு நிறப்புடவை அவளின் பால் சருமத்திற்கு எடுப்பாக காட்ட, அவளை கண்களாலே அளந்தவன்.. அவளின் ஒப்பனை அவனுக்கு திருப்தி ஏற்பட.. சரி வா என்று அவளை தன்னோடு அழைத்துச் சென்றான்..

அவன் காரில் ஏறி டிரைவ் செய்யும் இடத்தில் அமர, அவளோ அவன் அருகில் சென்று அமர்ந்து விட்டாள். அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை இயக்கினான்‌. எதோ ஓர் உந்துதலில் அவன் அருகில் அமர்ந்து விட்டாள்.. ஆனால் மனம் படபடப்பதை அவளால் நிறுத்த முடியவில்லை.. வண்டி புறப்பட, அதன்பின் அந்த இயற்கை காற்றை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். இரண்டு நாள் கழித்து சுதந்திரத்தை உணர்வது போன்று தோன்றியது. இப்போது தான் மனது லேசானது போன்ற உணர்வு..

சென்றடைய வேண்டிய இடம் வந்து விட, கார் நின்றது.. அந்த இடத்தை பார்த்தாள் அது ரெஜிஸ்டர் ஆபிஸ்.. அப்போது தான் அவளுக்கு புரிந்தது எதுக்காக நான் அவனிடம் எங்கு வருகிறோம் என்று கூட கேட்காமல்‌ மந்திரத்திற்கு கட்டுண்டது போல் அவனோடு வந்தேன் என்று தன் மனதை‌ குடைந்தவள்.. தயங்கி தயங்கிய மெதுவாக கேட்டாள்,

இப்போ எதுக்கு இங்கே வந்திருக்கோம் என்று..
ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு எதுக்கு வருவாங்க.. கல்யாணம் செஞ்சிக்க தான் என்று சாதரணமாக சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி போக.. அவனின் பேச்சை கேட்டு அதிர்ந்தவள்.. என்ன விளையாடுறிங்களா நான்லாம் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்.. எங்க பெரியப்பாவுக்கு தெரிஞ்சா என்ன கொன்னு போட்ரும் என்னை விட்ருங்களேன் என்று இரைஞ்ச, அவனோ அலட்சியமாக தோளை குலுக்கினான்.

அய்யோ என்னை விட்ருங்க.. என்ற பெரியப்பாவுக்கு தெரிஞ்சா நான் அவ்ளோ தான்.. என்று மீண்டும் அதே பல்லவியை பாட, அதில் எரிச்சல் அடைந்தவன்.. ஏய் இப்போ எதுக்கு இப்படி கீச் கீச்னு கத்திட்டு இருக்க.. கொஞ்சம் ‌வாயை மூடு.. மறுபடியும் அவள் பெரிப்பா என்று ஏதோ சொல்ல வர..

"சரி இப்போ நீ சொல்ற மாதிரி உங்க வீட்டில் உன்னை விட்டா அவங்க எதுவும் கேட்க மாட்டாங்களா‌", என்றவனின் நக்கல் பேச்சில் தான் உண்மை புரிந்தது.. அட ஆமல்லா இப்போ மட்டும் வீட்டுக்கு போனேன் என்னை பொலி‌ போட்ருவாங்க என்று மனதில் தன் வீட்டை பற்றி நினைக்க அவள் உடல் நடுக்கம் கொண்டது. அதுக்குன்னு உங்களை எப்படி கல்யாணம் செய்துக்கிறது என்று தயக்கத்தோடு கூறியவளை, இறுக்கமான முகத்தோடு நீ என்னை‌ கல்யாணம் செய்து தான் ஆகனும்.. அதைவிட்டா உனக்கு வேற வழியில்ல என்றவளை பயம் நிறைந்த விழிகளோடு நோக்கியவள், அவளை இழுத்துக் கொண்டு ரிஜிஸ்டர் அலுவலகம் உள்ளே செல்ல, ஏற்கனவே அவனின் நண்பன் சந்தீப், அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்ததால் இவர்கள் சென்றவுடன் எந்தவொரு குறையும் இன்றி பூமிகாவின் கழுத்தில் மங்கல நாணை சூட்டினான் அவளின் ராட்சன் ரியான் கண்ணன்...

திருமணம் முடிந்தவுடன், அவளை கண்டு.. ஏய் என்ன அதுதான்‌ கல்யாணம் முடிஞ்சது இல்ல, அப்புறம் என்ன வேடிக்கை பார்த்திட்டு போய் காரில் உட்காரு என்றவனின் அதட்டலில்.. குடுகுடுவென்று ஓடிப்போய் காரில் அமர்ந்து கொண்டாள்..

டேய் ரியான் ஏன்டா அந்த பொன்னுகிட்ட இப்படி பேசுற, பாரு எப்படி பயப்படுற.. அந்த பொன்னை பார்த்தாலே அப்பாவியாய் இருக்கு.. பாவம் டா.. அவங்க குடும்பம் செய்ததுக்கு இவ‌ என்னடா பண்ணுவா என்ற சந்தீப்பின் பேச்சில் அவன் மறைக்க நினைத்த பக்கங்கள் கண் முண் நிழலலாட, அதை புறம் தள்ளியவன்.. தீபு இதுக்கு மேலே நீ எதுவும் பேசாத.. என்றவன் தன் கையை இறுக்கி அவனின் கோபத்தை கட்டுபடுத்தினான்..‌இதற்கு மேல் தன் நண்பணிடம் பேசினால் அது அந்த பெண்ணிற்கு தான் பிரச்சினை எனறு நினைத்த சந்தீப் அதோடு அப்பேச்சை விடுத்து தன் நண்பனோடு காரின் அருகில் சென்றான்..

அங்கே இருந்த ஜீவனோ மனதிலே தன் இஷ்ட தெய்வமான முருகனை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்..
முருகா.. நான் உனக்கு என்ன குறை வைச்சேன்.. தினமும் செவ்வாய் கிழமை உன் கோயிலுக்கு வந்து விளக்கு ஏத்தி தேங்காய் வைச்சு பூஜை செய்வனே.. அது உன் கண்ணுக்கு தெரியலையா என்றவளை, ஹா..ஹா.. நீ மாசத்துக்கு ஒரு நாள் இதெல்லாம் செஞ்சிட்டு அதுவும் வாரம் வாரம் என்று பொய்யா புளுகற.. என்று அவள் மனதே அவளை வாரியது.. சரி சரி இப்படி உண்மையெல்லாம் பட்டு பட்டுனு சொல்லிட கூடாது அப்புறம்‌ என்னை பற்றி என்ன நினைப்பாங்க என்று தன் மனதை அடக்கி கொண்டிருக்க, நண்பர்கள் இருவரும் காரை நெருங்கியிருக்க.. சந்தீப் காரை ஓட்ட.. ரியான் சென்று பூமிகாவின் அருகில் பின் சீட்டில் அமர்ந்தான்.. அவன் கடுகடுத்த முகத்தை பார்த்தவளின் உதடுகளோ அவளை அறியாமல் ராட்சசன்.. ராட்சசன்.. என்று முனுமுனுத்தது..
* தொடரும்...



💘💘💘💘💘💘💘

ஹாய் பட்டுஸ்,

கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்களின் ஆதரவை கொடுக்கனும் என்று நட்போடு கேட்டுக்கிறேன்..

அடுத்த பகுதி: 21/02/2021(Sunday)

Bye frnds.. give ur valuable comment.. eagerly waiting drs..❤❤🤩

- சரண்யா💖
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24509


ராட்சசனா? ரட்சகனா? - 02❤

அந்த தார் சாலையில் மிதமான வேகத்தில் கார் பயணித்து கொண்டிருக்க.. அதன் உள்ளிருந்தவர்களின் நினைவு அலைகளோ வெவ்வேறு விதமாக அடித்துக் கொண்டரிந்தது.. சந்தீப்பின் எண்ணமோ, தன் நண்பன் எந்தவொரு அநியாயமும் அந்த பெண்ணிற்கு செய்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்க, அதற்கு மாறாக அவளை எவ்வாறெல்லாம் இம்சிக்க வேண்டும் என்று ரிகான் மனதில் நினைத்து கொண்டு வந்தான்.

பூமியோ நம்ம வாழ்க்கையில் என்னடா நடக்குது, இவன் பாட்டிற்கு வந்தான்.. என்னை கடத்தினான், என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் தாலி கட்டினான் என்று நினைத்து கொண்டிருக்க, இதை அவன்கிட்டே கேளு பாரக்கலாம் என்ற மனதின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவனை ஓரக் கண்ணால் பார்க்க அவனோ உர்ரென்று அமர்ந்திருந்தான் ஐய்யோ இவன் என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கான் என்று நினைத்தவளுக்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட.. வாய்விட்டு சிரித்துவிட்டாள்... அவனோ பார்வையாலே அவளை பஸ்மமாக்க, சட்டென்று தன கையை வைத்து வாயை பொத்தி கொண்டு ஜன்னல் பக்கம் தன்னுடைய பார்வையை பதித்தவாறு திரும்பிவிட்டாள்.. ரியானுக்கோ ஏகத்துக்கும் உள்ளுக்குள் எரிந்துக் கொண்டது.

அந்த அரண்மனை போன்ற வீட்டின் முன்பு அந்த கார் நிற்க.. அதனுள் பயணித்தவர்களும் காரில் இருந்து வெளியே வந்தனர்.. சரிடா ரிகான்‌ நான் அப்படியே பைக்கில் வீட்டிற்கு கிளம்புறேன். நீ‌ கொஞ்சம் ஒழுங்கா நடந்துக்க என்று தன்‌ நண்பனை எச்சரிக்கை செய்து விட்டே நகர்ந்தான் சந்தீப்.

பூமியோ இன்னும் அந்த வீட்டையே
பார்த்தவாரு இருந்தாள். அம்மாடி இந்த வீடு என்ன இவ்ளோ பெரிசா இருக்கு.. இத்தனைக்கும் நம்ம வீடும் பெரிசு தான்.. ஆனால் இது அதைவிட பெரிசா இருக்கே என்று வாயை பிளந்தாவரே ஆவென்று பார்த்து கொண்டிருக்க.. ஏய் வாயை மூடு.. உன் வாயில் உலகமே தெரியுது.. உள்ளே வா என்றழைத்தான் ரிகான்‌. இவளோ அவனை கண்டு அப்பாவியாக ஒரு லுக்கை விட, ஏய் என்ன அது தான் உள்ளே வா என்று சொல்லிட்டேனே அப்புறம் என்ன கனவில் மிதந்திட்டு இருக்க.. மகாராணிக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கனுமோ என்று நக்கலாக கூறியவனுக்கு தன் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமாம் என்று சொல்ல ரிகான் முகமோ கோபத்தில் செந்தனலாக சிவந்தது..
உள்ள வா என்றவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த தன்‌ கைகளை இறுக்கமாக மூடிக் கொண்டான்..

அவள் அப்போதும் அசையாமல் நிற்க, இப்போ உள்ள வர போறியா இல்லையா‌ என்று பல்லை கடிக்க..
இல்ல இன்னும் ஆரத்தி எடுக்கலையே, கல்யாணம் ஆனால் வீட்டிற்குள் போகும் போது ஆரத்தி எடுப்பாங்களே நான் கூட எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அக்கா புதுச கல்யாணம் செஞ்சிட்டு வந்தபோது ஆரத்தி எடுத்து‌ தானே உள்ளே அழைச்சாங்க நான் பார்த்து இருக்கனே என்றவள் பேசிக் கொண்டே போக.. அவள் கையை இறுக்கமாக பிடித்து உள்ளே இழுத்துச் செல்ல முயன்றான் ரிகான்.. அவள் உள் நுழையும் முன்னே அந்த வீட்டில் வேலை செய்யும் பொன்னி இருவருக்கும் ஆரத்தி எடுக்க.. கடுகடுப்போடு நின்றிருந்தவன் அருகில் புன்னகை பூத்த முகத்தோடு நின்றிருந்தாள் பூமிகா.. பின்பு தன் ராட்சனோடு தான் வாழப் போகும் வீட்டில் தன் முதல் படியை எடுத்து வைத்தாள் ராட்சசனின் அவள்...

பொன்னி அக்கா அம்மா என்ன செய்றாங்க என்ற‌‌ ரிகானின் கேள்விக்கு.. அதுவா தம்பி அம்மா இப்போ தான் சாப்பிட்டாங்க‌ ரூமில் தான் ஓய்வு எடுக்குறாங்க என்றவளுக்கு சிறு தலையசைப்பை கொடுத்து அந்த அறையை நெருங்கினான். ஏய் இங்க பாரு நான் என்ன சொன்னாலும் மண்டைய மட்டும் ஆட்டுற வேற எதாச்சும் பேசுன அவ்ளோ தான் என்று அவளை மிரட்டி தன்‌ தாயிடம் இழுத்துச் சென்றான்..
அங்கே புன்னகை முகத்தோடு கையில் ஒரு புத்தகத்தோடு வீற்றிருந்தார் அமிர்தவள்ளி.. பெயரில் இருக்கும் அமிர்தம் போன்று தான் அவர்.. உள்ளே நுழைந்தவன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் தன் தாயை‌ கண்டவுடன் அவன் முகம் வேதனையை காட்டியது. தன் தாயிற்கு‌ அதனை காட்டாமல் மறைத்தவன் , தன் தாரத்திடம் அதனை மறைக்க முடியவில்லை.

வா கண்ணா.. கல்யாணம் எல்லாம் சரியா முடிஞ்சது தானே என்று புன்னகையுடன் கேட்க அவனும் மெல்ல தன்‌‌ தலையை ஆட்டினான். ஏன் கண்ணா.. லவ் பண்ணது ஓ.கே.. அதுக்காக அவங்க வீட்டில் சம்மதிக்கல என்றதுக்காக இப்படி அவசரமா கல்யாணம் செய்தது என்னவோ எனக்கு சரியா படல.. ஆனால் பொன்னு பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்கா என்று சிரித்து விட்டு பூமிகாவை பார்த்து கிட்ட வாடா மா என்றழைக்க அவளும் ரிகானை பார்த்து கொண்டே அவரிடம் சென்றாள்.. ஆமா உன் பெயர் என்ன மா என்று அவள் கன்னம் தொட்டு கேட்டவரின் பேச்சில் சிறிதும் வஞ்சம் இல்லை.. அவளோ அமைதியாக ரிகானை பார்த்தாள். எதுக்கு மா இப்போ அவனை பார்க்கிற.. லவ் பண்ற பொன்னு பேருக் கூட சொல்லையா என்று தானே.. அவன் அப்படி தான் மா.. அவன் லவ் பண்ணுவான் என்று நான். நினைக்கவேயில்ல, "நான் மட்டும் நினைச்சேன என்ன என்று தன் மனதிலே கவுன்டர் கொடுத்த பூமிகா" வெள்ளந்தியாக புன்னகைத்தவரை கண்டு இவளும் லேசாக புன்னகைத்தாள்.

அம்மா இவ்ளோ பேசுறாங்க அப்போ கூட எதாச்சும் வாயை திறக்கிறால பாரு என்று வாய்க்குள்ளே முனங்கியவன், அம்மா அவப் பேரு பூமிகா என்றுச் சொன்னவனின் வார்த்தை அவள் உயிர் வரை சென்று சிலிர்க்க வைத்தது. அம்மா நீங்க ரெஸ்ட் எடுங்க.. இன்னைக்கு நைட் நீங்க டிரிட்மென்டுக்கு கேரளா போனும் தானே.. உங்க கூட பொன்னி வருவா என்னால் இப்போது என் வேலையை விட்டு வர முடியல சாரி ம்மா எனறான் ரிகான்..

கண்ணா இப்போ எதுக்கு நீ வருத்தபடுற, இப்போ தான் உனக்கு திருமணமாச்சு அதனால் நீ பூமிக்கூட என்ஜாய் பண்ணு சரியா என்று சொல்லிவிட்டு மாத்திரை சாப்பிட்டதால் உறங்க சென்றுவிட்டார். ரிகானுக்கோ பூமியின் பெயரை கேட்டவுடன் அவன் முகம் பாறை போன்று இறுகியது.. இதை யாரு‌ கவனிக்க வேண்டமோ அவள் சரியாக கவனித்துவிட்டாள். அய்யோ இவன் மூஞ்சு என்ன முன்னுறு கிலோ மீட்டருக்கு போகுது இன்னைக்கு சங்கு தானா நமக்கு என்று அவன் முகத்தை கண்டு எச்சில் விழுங்க.. அவனோ வேக நடையுடன் வெளியே சென்றான். அவனை பின் தொடர்ந்து வெளியே வந்தவளை பார்த்து விட்டு இன்னைக்கு நைட்டு இருக்குடி உனக்கு என்று வார்த்தையை கடித்து துப்பியவன், தன் கார் சாவியை எடுத்து வெளியே கிளம்பிவிட்டான்.

அவன் வெளியே சென்றவுடன் எப்படியோ இந்த ராட்சசன் போயிட்டான். ஆனால் இவனை எங்கையோ பார்த்த மாதிரியே இருக்குதே.. இவன்கூட நான் ஏற்கனவே பழகின பீல் வருதே.. என்று யோசிக்க மண்டை வலி வந்தது தான் மிச்சம்.. ஏய் பூமி இல்லாத மூளையை வைச்சு அதிகம் யோசிக்காத என்று மனது எச்சரிக்கை செய்ய, அப்பபோதைக்கு அந்த நினைவை புறம் தள்ளினாள்.

ஆனால் அவங்க கிட்ட நம்ம லவ் பண்ணி இருக்கோம்னு புளுகி வைச்சிருக்கான்.. சரியான புளுகுமூட்டை.. இன்னும் என்னென்ன சொல்லி வைச்சிருக்கானோ என்று ஒரு பெரு மூச்சை விட்டாள் பூமிகா.
இருந்தாலும் அவங்க அம்மா பார்க்க அப்பபடியே அண்ணபூரணி மாதிரி இருக்காங்க ஆனால் இவன் எதுக்கெடுத்தாலும் வல்லு வல்லுனு குரைக்கிறது.. என்றவள் அவன் சிடுசிடுப்பு முகத்தை நினைத்து சிரித்துக் கொண்டாள். உண்மையில் இவளுக்கு அவனை கண்டால் பயமென்றெல்லாம் சொல்ல முடியாது. அவள் வீட்டிலே அநேக‌ பேரை இதுப்போன்று பார்த்துவிட்டாள்..
இந்த ராட்சசன் வேற நைட்டு வந்து கவனிச்சுக்கிறேன் சொல்லிட்டானே.. போனது தான் போனான், கடங்காரன் சோறு போட்டிட்டு போக்க கூடாது. அவள் வயிறு கூப்பாட போட, இதற்கு மேலும் தாங்காது என்று சமையற்கட்டில் நுழைந்து பூனை போன்று உருட்டிக் கொண்டிருக்க.. அங்கே வந்துச் சேர்ந்தாள் பொன்னி..

"சின்னம்மா என்ன வேணும்.."
ஐயோ அக்கா என்ன பூமினே கூப்பிடுங்க.. நான் உங்களை விட வயசில் சின்னவ‌ தான் என்று அழகாக புன்னகை‌ சிந்தியவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தாள் பொன்னி.. ரிகான் தம்பி சரியான ஜோடியை தேர்ந்தெடுத்திருக்காரு. குணத்திலும் நீ அழகு தான் தாயி என்றவர் அவளை நெட்டி முறித்துவிட்டு அவள் சாப்பிட மீன் குழம்பை வைக்க அதை ஒரு பிடிபிடி பிடித்தாள்.

காரில் சென்றவன் நேராக சென்றது அவனுக்கு பிடித்த இடமான கடற்கரைக்கு தான்.. அவன் பர்சில் இருந்த புகைப்படத்தை கைகளால் வருடியவனின் மனமோ, மறக்க முயன்ற‌ அவன் வாழ்வின் இருண்ட பகுதியை‌ கண்முன்னே காட்டியது.. அப்படியே எழுந்து தன்னுடைய பூட்ஸ்களை அகற்றியவன், கடற்கரை மணலில் ஓட ஆரம்பித்து விட்டான். அவன் மனம் லேசாகும் வரை ஓடியவன், தன்னுடைய கடிகாரத்தில் நேரம் பார்க்க மணி இரவு ஏழு என்று காட்ட, வேக வேகமாக தன் காலணிகளை அணிந்து கொண்டு தன்னுடைய BMW காரில் வீட்டை நோக்கி சீறிப்பாய்ந்தான்..

வீட்டிற்குள் நுழைந்தவன் கண்டது எதையோ தன் தாயிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் பூமிகாவை தான்.. புருவ முடிச்சுடனே அவர்களை நெருங்கியவன்.. என்னாச்சு மா என்று தன் தாயிடம் கேட்டாளும் அவனின் கண்கள் பூமிகாவையே அளந்துக் கொண்டிருந்தது. அது ஒன்னுமில்ல டா.. என் மருமகள் எனக்கு ஒத்தாசையா அவளும் என்கூட கேரளா வராலாம் என்றுச் சொல்ல.. அய்யோ இப்படி போட்டு கொடுத்திட்டயே அத்தை இன்னைக்கு நான் செத்தேன் என்று அவனையே பயத்துடன் பார்த்தாள்.. அவனுக்கோ நான் கேடினா இவ என்ன ஜில்லா கேடியா இருக்காளே என்று உதட்டில் தோன்றிய புன்னகையை அவள் பார்க்கும் முன்னே மறைத்தவன்.. தன் தாயிடம் நீங்க கிளம்புங்க மா நான் பார்த்துக்கிறேன் என்றவன் அவர்களை வழியனுப்பி விட, இவளும் வேறு வழியின்றி தன் அத்தையை வழியனுப்பி வைத்தாள்.. உள்ளே வந்தவளை கண்டவன்,

"எதுக்கு அம்மா கிட்ட அப்படி சொன்ன"
அது.. அது வந்து இப்போ இந்த வீட்டில் நீங்க நான் மட்டும் தானே இருக்கோம் என்று அவள் முடிக்கும் முன்னர் அங்கிருந்த நாற்காலி பறந்தது.. அவனின் கோபம் கண்டு இமைகளை படபடக்க அவனோ தன்னுடைய அறைக்கு சென்று, கதவை‌ டொம்மென்று அடைத்துக் கொண்டான்..

இவளுக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை.. அப்படியே சோப்பாவில் அயர்வாக அமர்ந்தவள்.. நெடுநேரம் அப்படியே இருந்தாள்.. அய்யோ இன்னும் அந்த ராட்சசன் சாப்பிடலையே.. ரொம்ப பாவம் நம்மை திட்டவாச்சு அவனுக்கு தெம்பு வேணுமே‌, என்று உணவை அவனுக்காக தட்டில் போட்டு கொண்டு அவன் அறையை நோக்கிச் சென்றாள். என்னடி பூமி தைரியமா வந்திட்டு இப்படி அவன் ரூம்க்கு வாட்ச்மேன் வேலை செஞ்சிட்டு இருக்கியே நீ என்று தன்னையே கொட்டிக் கொண்டு.. கதவை திறக்க முயல, கதவு தானாக திறந்துக் கொண்டது. ஏதோ சிங்கத்தின் குகைக்குள் நுழைவது‌ போன்று பூணை நடையிட்டு செல்ல அங்கே அவள் கண்ட காட்சியில், அவள் கண்கள் மட்டுமல்ல அவளின் வாயும் பிளந்தது.. அவனோ ஒரு பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு இரண்டாவதை குடித்துக்‌ கொண்டிருந்தான்.

அடப்பாவி கடன்காரா.. என்ன டா மொட குடிக்காரன் மாதிரி இப்படி குடிக்கிற என்றவள் தான் கொண்டு வந்த சாப்பாட்டை அங்கே மேஜை‌ மீது வைத்துவிட்டு, மெதுவாக கண்ணா என்றழைக்க..

ஏய் என்று கோபத்தில் கத்தியவன் அவளை நெருங்கி அவளின் தாடையை இறுக பற்றிக்கொண்டு இன்னொரு முறை அப்படி கூப்பிட்டாத என் அம்மா மட்டும் தான் என்னை அப்படி கூப்பிடனும் என்றவன், வலியில் முகம் சுருங்கியவளை கண்டு தன் இறுக்கத்தை தளர்த்தினான்.

" அடேய் அதை வாயிலே சொன்னா உனக்கு என்னடா.. ராட்சசா.. ராட்சசா" என்று மனதிலே அவனை திட்டிவிட்டு வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.. அடியேய் பூமி இவன் முன்னாடி இப்படியே அப்பாவியா மெயின்டன் பண்ணு, இல்லைனா சரக்குக்கு சைடிஸா உன்னை மாத்திடுவான் என்றவளின் மனக்குமுறலை சரியாக கணித்துவிட்டான் அவளின் ராட்சசன்..
ஏய் இப்படி மூஞ்சை அப்பாவியா வைச்சுக்கிட்டா அப்படியே உன்னை நம்பிடுவேன் பாரு.. "கீழே இருக்கும் போது என்ன சொன்ன.."என்று கோபத்தில் கத்தியவனிடம், "அது வந்து உங்ககூட த..‌தனியா இருக்கு பய..பயமா இருக்குனு சொன்னேன்" என்று வார்த்தை தந்தியடிக்க கூறியவளை கண்டு ஏளனமாக சிரித்தவன்.. அவள் புரியாமல் விழிக்க.. இல்லை உன்னலாம் போய் நான் தொடுவேனு நினைச்சியா.. நீயெல்லாம் இந்த வீட்டுக்கு வேலைக்காரியா இருக்க கூட தகுதி இல்லாதவ என்று அமிலமாக வார்த்தையை அவள் மீது‌‌ வீசினான்.
அவளுக்கோ அவன் பேச்சில் முனுக்கென்று கண்ணீர் எட்டிப்‌ பார்க்க.. இல்லை பூமி‌ இவன் முன்னாடி அழக்கூடாது‌ என்று தன் கண்ணீரை கட்டுபடுத்தியவளை‌ கண்டவன், ஏய் என்ன இங்கேயே நிக்கிறதா ஐடியாவா.. போ.. போய் கீழே படு, என்று தலைகாணியை அவள் முகத்தின் மீது‌ வீசியவன்.. மேஜையின் மீது இருந்த உணவை‌ பார்த்தும் அதையெடுத்து சுவற்றில் தூக்கி எறிய அந்த‌ கண்ணாடி தட்டை போன்றே அவளின் மனமும் சுக்குநூறாக உடைந்தது.

முதலில் அவன் பேசியதையெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொண்டவளால் இறுதியாக தன்னை வேலைக்காரியை விட கீழாக நினைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீர் வர.. பூமி இது உனக்கு தேவை தான்டி‌ அவன் சாப்பிட்ட உனக்கென்ன சாப்பிடலனா உனக்கென்ன நீ மூடிக்கிட்டு ஹாலிலே இருந்திருக்க வேண்டியது தானே என்று ஒரு மனம் சொல்ல இன்னொரு மனமோ அச்சோ இன்னும் அவன் சாப்பிடவேயில்லையே என்றுச் சொல்ல.. ஏன்டி இவ்ளோ நேரம் உன்னை கழுவி கழுவி ஊத்தினானே அவனுக்காகவா நீ யோசிக்கிற என்று அவளையே காரி துப்பிக் கொண்டு உறங்கி விட்டாள்.

நள்ளிரவில் எழுந்தவன் அவளை நெருங்கி, அவளின் முகத்தையே வெறுத்து பார்த்து கொண்டிருந்தான் ரிகான். ஏன்டி அப்போ தான் என்னை நம்பல இப்போவும் என்னை நம்ப மாட்டியா என்று மனதிலே புலம்பினான்.. அவளின் மதிமுகத்தையே‌ உற்று விழித்தவனின் உதடுகளோ சுட்க்கி( chutki) என்று முணுமுணுக்க.. அந்த பெயரை‌ உச்சரித்தவுடன் அவன் உதடுகள் புன்னகையால் விரிந்தது. அடுத்த நிமிடமே, அதை தன் உதட்டில் புதைத்தவன், இல்லை... இவள் என் சுட்க்கி இல்ல.. இவள்.. என் சுட்க்கி இல்லை என்று தன் மனதிற்கு கூறிக் கொண்டவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது...

* தொடரும்❤..

- சரண்யா🧡

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவும்.. நன்றி லட்டுஸ்..😍
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராட்சசனா? ரட்சகனா? - 03❤



பிராகசமான விடியலை உலகிற்கு தருவதற்கு ஆழியிலிருந்து மெதுமெதுவாக தன் சுடர்கதிர்களை உலகத்திற்கு பரப்பிக் கொண்டிருந்தான் அந்த கதிரோன். வெளியே பறவைகளின் கூக்குரல்கள் அலாரமாக அடித்துக் கொண்டிருக்க அடித்துத் போட்டது போன்று குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர் ராட்சசனும், ராட்சசனின் அவளும்.. சூரியன் உச்சத்தை அடைந்த விட்டான்.. அனைவரும் இயங்கி கொண்டிருக்க இவர்களுக்கு மட்டும் என்ன உறக்கம் என்று மெது மெதுவாக தன்னுடைய பொன் கதிர்களை பால்கனியின் ஜன்னல் உள்ளே நுழைந்து அவள் முகத்தில் பளிச்சென்று பட வைக்க.. "அடச்சே அதுக்குள்ள யாருடா லைட்டா போட்டது என்று கண்ணை கசக்கி கொண்டே" எழுந்தவளுக்கு, ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.. பின்னே தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் திருமாங்கல்யமும், கட்டிலுக்கு பக்கத்தில் தரையில் படுத்து உறங்கும் அவளின் ராட்சசனை கண்ட பின்பு தான் அவளுக்கு ‌நினைவு வந்தது தனக்கு திருமணம் முடிந்தது என்றே..

அவனருகே சென்றவள், அவன் மூச்சு சீராய் வருவதை வைத்து அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக புரிந்தது. "அடேய் இவ்வளவு பெரிய பெட் இருக்கே அப்புறம் ஏன்டா கீழே பரப்பிக்கிட்டு படுத்திறுக்க, நானாச்சு ஜம்முன்னு மேலே படுத்தருப்பேன்" என்று நொந்தவள்.. அவன் அருகே குனிந்து, அவன் முகத்தை பார்க்க உர்ரென்று இருந்தது.. ஏன்டா தூக்கத்தில் கூட சிரிக்கவே மாட்டியா நீ என்று அவன் உதடுகளை இழுத்து சிரித்த மாதிரி வைக்க.. அவனிடம் அசைவு தெரிய.. வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.. அப்போது தான் கீழே உடைந்திருந்த கண்ணடி துண்டுகளை பார்க்க இரவு நடந்தது எல்லாம் நினைவில் தோன்ற, அவனின் மீதான கோபமும் நியாபகத்திற்கு வந்தது.

நேற்று நைட் தான் உன்ன அந்த கிழி கிழிச்சான்.. இப்ப அவனை போய் கொஞ்சிட்டு இருக்க என்று தன் தலையில்‌ தானே கொட்டி கொண்டவள்.. அவன் இன்னும் துயில் கொள்வதை கண்டு.. ம்ஹூம் இவன் இன்னைக்கு எழுற மாதிரி தெரியல.. எப்படி எழுவான் நேத்து தான் இரண்டு பாட்டில் பீர்ரை அப்படியே முழுங்குனானே.. என்றவள் அவனை உற்று பாரக்க, கறுப்பும் அல்லாது வெள்ளையும் அல்லாது மாநிறம் போன்ற நிறம்.. அலை அலையாய் புரளும் கேசம், அழகிய சாம்பல் கண்கள்.. கூர் நாசி.. சிவந்த அதரம்.. திடகாரமான உடல், அதனை பார்க்கும் போதே தெரியும் இவன் சரியாக உடற்பயிற்சி செய்பவன் என்று.. ஒருவேளை அதுனால தான் இவன் குடிச்சாலும் தொப்பை இல்லையோ என்று தீவிரமாக சிந்திக்க.. கோபத்திலும் அவனை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கோம்‌ என்பதை அவள் அறியவில்லை.

காற்று அவள் மேனியை தழுவ, பால்கனி சென்று அந்த அழகிய தோட்டத்தை ரசித்தாள். அதில் அவளுக்கு பிடித்தமான செடிகளே அதிகம் இருக்க.. "பரவாயில்ல இந்த ராட்சசனுக்கும் கொஞ்சம் ரசனை நல்ல தான் இருக்கு". அதனை பார்த்து கொண்டிருந்தவளின் கண்களில் வெள்ளை ரோஜா செடி தென்பட, மனம் குழந்தையாக குதுகலித்தது. அவளுக்கு மிகவும் பிடித்த மலர் என்றால் அது வெள்ளை ரோஜா தான். அதனை கண்டவுடன் தன் வீட்டு நியபகமும் வர.. "என்ன நம்மள தேடி ஒருத்தரும் வரல, ஒருவேளை தொல்லை போயிடுச்சுனு நினைச்சிட்டாங்களோ, இல்லையே அப்படியே நம்மள விடமாட்டாங்களே, நம்ம காணாம போனவுடனே ஊரையே சல்லடை போட்டு தேடியிருபாங்களே" என்று நினைத்தவள், இப்போ நம்ம ஊரில் என்ன நடந்திட்டு இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கத் தொடங்கிவிட்டாள் பூமிகா.

*************​

அந்த தென்னை மரத்தில் ஒருவன் கட்டி வைக்கப்பட்டிருக்க, அவன் உடலெங்கும் சவுக்கு அடியின் காயங்கள் இருக்க, வலியில் முனங்கிக் கொண்டிருந்தவனின் தலையை பற்றினான் முத்து என்கிற அடியாள்..

டேய் முத்து என்ன எதாச்சு வாயை தொறந்தானா என்று கேட்டபடி அங்கே அடி வாங்கியவனை பார்த்துக் கொண்டே தன் ஜீப்பில் வந்து இறங்கினார் நாறப்தைந்து வயதையோட்டிய காளிங்கன், அவரோடு அவன் தம்பி நடராஜனும் வந்தான்.

இல்லை ஐயா, என்ன அடி அடிச்சும் சின்னமா எங்கே போனங்கனு தெரியலனு சொல்றான். அடிச்ச எனக்கே கை வலி வந்திருச்சு என்றான் காளிங்கத்தின் அடியாள் முத்து.

டேய் எச்சக்கள நாயே ஒழுங்கா சொல்லிடு, பூமி எங்கடா.. உன்கூட தானே அவளை கடைக்கு அனுபிச்சு வைச்சேன் இப்போ தெரியலனு கதையா கட்டுற... சொல்லுடா.. சொல்லுடா நாயே என்று காளிங்கனும் அங்கிருந்து சவுக்கை‌ எடுத்து வெளுக்க.. ஐயா‌ எனக்கு நிஜமாலும் சின்னமா எங்கே போனாங்க என்று தெரியாதுங்க.. என்று கதறியவனை கண்டு சிறிதும் மனம் இரங்காதவர் அவன் தோளை உரித்து கொண்டிருந்தார்.

அண்ணே நிறுத்துங்க, அவனுக்கு தெரிஞ்சு இருந்தா நாம அடிச்ச அடிக்கு வாயிலிருந்து எதாச்சும் உண்மையை கக்கியிருப்பான். அவனுக்கு எதுவும் தெரியாதுனு நினைக்கிறேன் என்ற நடராஜன் , அடியாள் முத்துக்கு கண்ணை காட்டி விடுவிக்கச் சொல்ல அவனும் விடுவித்தான். விட்டால் போதும் என்று ஓடிவிட்டான், அடி வாங்கியவன். இதற்கு முன் அவர்கள் வீட்டில் வேலை செய்த டிரைவர் சுந்தரம்.

டேய் தம்பி இப்போ என்னடா பண்றது. இவ்ளோ‌ நாள் அவளை கோழி அடை காக்கிற மாதிரி பொத்தி பொத்தி வீட்டுக்குள்ள வச்சிருந்தா, இப்போ இப்படி ஆகிடுச்சே.. அந்த ஓடுகாலி நாயை எப்படிக் கண்டுபிடிக்கிறது. எல்லாம் கூடி வரும்போது கடைசியில் இப்படி பண்ணிட்டாலே அந்த சிறுக்கி மவ என்று பூமிகாவை வசை பாடினார் காளிங்கன்.

அண்ணே பொறுமையா இரு, அவ எங்க போயிருப்ப இங்கன தான் எங்காய்ச்சு இருப்பா. சல்லடை போட்டு தேடுவோம், அவ கிடைச்சதுக்கு அப்புறம் இருக்கு அவளுக்கு பூசை என்றபடி தன் அண்ணனை சமாதனபடுத்தினான் நடராஜன். அவள் மீது கொலை வெறியில் இருக்கும் இவர்கள் வேறு யாரும்‌‌ இல்லை பூமியின் பெரியப்பாவும், சித்தாப்பாவும் தான்.. ( இவர்கள் குடும்பம் பற்றி பின் வரும் பின்வரும் அத்தியாயங்களில் காண்போம்).

************

தூக்கம் கலைந்த ரியானுக்கு தலை வின்னென்று வலிக்க, அப்படியே தலையை பிடித்தவாரு எழுந்து அமர்ந்தான். நேற்று அடித்த பீர் சரியாக வேலையை காட்டியது. நிமிர்ந்தவன் கண்கள் தேடியது அவளை தான்.. கண்களின் கருவிழியை‌ பம்பரம் போன்று சுழலவிட அதில் விழுந்தது.. ஓவியம் போல் காட்சியளிக்கும் பூமிகா தான். கண்ணில் மை அழிந்து கொஞ்சம் கீழ் இறங்கியிருக்க, தலைமுடி கலைந்து ஒற்றை முடி அவளின் நெற்றியில் விழுந்து உதட்டை தொட்டுக் பயணித்து கொண்டிருக்க, நேற்று அணிந்திருந்த புடவையை மாற்றாமல் அப்படியே உறங்கியதால் கசங்கி இருந்தது.. அவளை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான். அதில் என்ன இருந்தது என்று தான் புரியவில்லை. ஆனால் அவளை பார்த்த பின்பு தான் அவன் மனம் அமைதியானது போன்ற உணர்வு. அதன் காரணம் அவனே அறிவான்.

அவளை பின்னிருந்து நெருங்கி நின்றுக் கொண்டிருந்த ரிகான்.. "இங்க என்ன செஞ்சிட்டு இருக்க" என்று கணீர் குரலில் கேட்க, தீடிரென்று கேட்ட அவன் குரலில் பதறிக் கொண்டு திரும்ப அவனின் இதழ் அவளின் இதழை தீண்டியது. அடுத்த நொடி பதறிக் கொண்டு விலகினாள். அவனும் விலகிட, இருவரும் அவர்களின் உதட்டை நன்றாக தேய்த்து கொண்டனர்..

"காலையிலே கருமம் கருமம்.. இன்னும் ஊத்த பல்லை கூட விலக்கியிருக்க மாட்ட, இதிலே கிஸ் வேற.." ச்சே என்று தன் உதட்டை இன்னும் துடைத்து கொண்டே ரிகான் திட்ட.. "ஆமா அப்படியே எனக்கு மட்டும் தித்திப்பா இருந்துச்சு பாரு.. சரக்கு அடிச்ச உன் நார வாயால என்னை கிஸ் பண்ணிட்டு கடைசியில் என்ன சொல்றையா டா" என்று இவளும் எப்போதும் போல் மைண்ட வாய்ஸில் பேசுவதாக நினைத்து வாய்விட்டு உலறிவிட..

" ஏய் இப்ப என்ன சொன்ன.. திரும்ப சொல்லு பார்க்கலாம்"
அய்யோ மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா உளறிட்டோமோ. இவன் என்ன நம்மை இப்படி முறைச்சு பார்க்கிறான்.. அது வந்துங்க நீங்க இப்போ தானே எழுந்திங்க தூக்க கலக்கத்தில் உங்களுக்கு அப்படி கேட்டிருக்கும்.. நான் எதுவும் பேசவே இல்லைங்க என்று இடது வலதுமாக தலையாட்டியவள் அங்கிருந்து நழுவ பார்க்க..

"ஏய் நில்லு ஒரு நிமிஷம்"

அய்யோ கண்டுபிடிச்சிட்டானா என்றவாறே அவனை பயமாக திரும்பி பார்க்க, "அந்த கப்போர்டில் டிரஸ் இருக்கு போய் குளிச்சிட்டு மாத்திக்க.."

சட்டென்று கேட்டுவிட்டாள்.. நான் தான் இந்த வீட்டு வேலைக்காரிக்கு கூட தகுதியில்லாதவளாச்சே அப்புறம் எனக்கு எதுக்குங்க டிரஸ் தறிங்க என்று அமைதியாக தான் கேட்டாள். ஆனால் அவனுக்குள் ஒரு பூகம்பமே அது ஏற்படுத்தியது. அவனு மனதுள் பல தாக்த்தை ஏற்படுத்த கோபத்தை அப்படியே அவள் மீது கொட்டினான்.

"ஏய் இப்போ என்னடி உனக்கு.. ஹான்.. போ.. போய் ஒழுங்கா குளி. வந்திட்டா பெரிசா கேள்வியை தூக்கிட்டு" என்றவன் கத்தலில் திடுக்கிட்டவள், வேகமாக சென்று உடை எடுத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டு கதவை‌ மூடிக் கொள்ள அதையும் தாண்டி ஒலித்தது அவனின் குரல்..
"ரொம்ப நேரம் அப்படியே குளிக்கிற மாதிரி ஓ.பி அடிக்காம சீக்கிரம் வா.. உனக்கு நிறைய வேலையிருக்கு", என்றவனின் பேச்சை கேட்டவள் அரக்க பரக்க வேகமாக குளித்து வந்துவிட்டாள்.. காலையிலே இவனிடம் திட்டு வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில்..

"குளிச்சேடன்ங்க என்றபடி அவன் முன் நிக்க.." "இப்போ என்ன நான் உனக்கு மேக்கப் போட்டு விடுனுமா.. ப்பே.. போய் முதலில் ஸ்டராங்க ஒரு காபியை போட்டு எடுத்திட்டு வா" என்றவனுக்கு மைண்ட வாய்ஸிலே‌ மண்டகபடி செய்தாள்.. "டேய் பனை மரம் நீ தானடா குளிச்சிட்டு வேலை சொல்றேனு சொன்னா இப்போ அந்தர் பல்டி அடிக்கிற.."

ஏய் என்ன நின்னுட்டே இருக்க என்றவனின் குரலில்.. அது ஒன்னுமில்ல நானும் ஒரு காப்பி போட்டுக்கிட்ட என்றவளை மேலும் கீழும் பார்த்தவன்.. ம்ம் என்று தலையை மட்டும் ஆட்ட.. அங்கிருந்து கிளம்பச் சென்றவளை மறுபடியும் தடுத்து நிறுத்தினான்.

காபி ஸ்டராங்கா இருக்கனும் என்றவன் குளியலறைக்குள் தன்னை சுத்தப்படுத்தி கொள்ள புகுந்துக் கொண்டான். சமையலறைக்குள் புகுந்தவள் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தாள்.. "காபி வேனுமா காபி.. அதுவும் ஸ்ட்ராங்கா.. நான் போடப்போற காப்பியை நீ உன் வாழ்க்கையிலே மறக்கக் கூடாது டா" என்றவள் பாலை காய்ச்சிவிட்டு காபி தூளை அவன் கேட்ட மாதிரியே தூக்கலாக தூவினாள். இப்போ என்ன பண்ணலாம் உப்பு போடலாமா மிளகாய் தூள் போடலாமா என்று தன் குட்டி மூளையை குடைந்து கடைசியில் போன போது உப்போ போடுவோம் என்று கொஞ்சமே கொஞ்சமாக மூன்று ஸ்பூன் உப்பை அள்ளி போட்டவள், தனக்காக மணமணக்க சுவையான காப்பியை போட்டுக் கொண்டு அறைக்கு சென்றவள், அய்யோ ஏற்கானவே அந்த கத்து கத்தினான் இப்போ இதக்குடிச்சா சொல்லவே வேணாம். அவசரபட்டுடோமோ என்று காப்பியை பார்த்துக் கொண்டே நின்றவளை..

"ஏய் என்ன எப்போ பார்த்தாலும் சிலை மாதிரியே நிக்கிற", என்று அதட்ட, சரி எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்று உப்பு காப்பியை அவனிடம் நீட்டிவிட்டு, சுவையான காப்பியை தான் எடுத்த கொண்டு பால்கனிக்கு சென்று பூக்களை ரசிக்க ஆரம்பித்தவாரே மிடரு மிடராக காப்பியை அருந்தினாள். ரிகானும் பெட்டில் அமர்ந்தவாறு போனை பார்த்து கொண்டே எடுத்து ஒரு வாய் பருக.. தூ.. தூ என்று கீழே துப்பியவன், "போட்டிருக்க பாரு காப்பி கண்டறாவியா இத விட பாய்சனே நல்லா இருந்து இருக்கும்" என்று அவளுக்கு அர்சனையை வழங்கியவன், அவளை கண்களால் தேடினான். அவளோ அனைத்தும் மறந்து பூக்களை ரசித்தவாரே காப்பியை பருகிக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்றவனை, அவளும் திரும்பி பார்த்தாள்.

"அங்கே டேபிள் மேலே இருக்க போனை எடுத்திட்டு வா" எனச் சொல்ல.. "அங்கிருந்துதான டா வந்த நெட்டைக்கொக்கு எடுத்திட்டு வரதுக்கு உனக்கென்ன" என்று மனதினுள் புலம்பியவள் தன் கோப்பையை அங்கே வைத்துவிட்டு அவனது போனை எடுத்த வந்துக் கொடுத்தாள். அதற்குள் காபி கோப்பையை மாற்றியவன் இப்போது அவள் முகத்தை உற்று பார்த்திருந்தான். அவள் முகம் எப்படி போக போகிறது என்று ஆவலாக பார்க்க.. ஒரு வாய் குடித்தவள்.. அடுத்த நிமிடம் அதனை ரிகான் சட்டை மேலே துப்பியிருந்தாள். அடச்சீ.. என்ன ஒரு கேவலமான காப்பி.. ஆமா காபி கப்பு எப்படி மாறுச்சு என்று சிந்தித்தவள், ரிகான் முகத்தை பார்க்க கடுகு போட்டால் கூட வெடித்துவிடும் போல அப்படியிருந்தது. "ஐய்யோ இந்த ராட்சசன் வேற அப்பப்ப எரிமலையா மாறுறானே!! எப்பா முருகா கொஞ்சம் கருணை காட்டுப்பா என்று‌ நினைத்தவாரு" வெளியே! "சா..சாரிங்க காப்பி.. உப்பு.. ச்சீ.. சக்கரை.." என்று ஏதேதோ உளறியவள். நீங்க போய் குளிங்க நான் உங்களுக்கு சாப்பாடு செய்றேன் என்றவள் அவன் பேசுவதற்கு முன் ஓடிவிட.. யூ... பிளடி இடியட் என்று அவன் கத்திய கத்தல் காற்றில் மிதந்து அவள் செவியை அடைந்தது.

எப்படியோ பூமி அந்த ராட்சசன் கிட்டேயிருந்து தப்பிச்சிட்ட, ஆனாலும் இவன் என்ன காட்சில்லாக்கு(Godzilla) தம்பியா இருந்திருப்பானா இந்த கத்து கத்துறான். நல்ல வேளை நீ அவன் நெஞ்சு அளவுக்கு உயரம் இருந்த.. கொஞ்சம் அவனை விட அதிகமா வளர்ந்திருந்த அவன் மூஞ்சிலே துப்பியிருப்ப என்று பெருமூச்சு விட்டாள்.. அடியேய் பூமி கடைசியில உன் நிலம இப்படி மைண்ட் வாய்ஸில் புலம்றதா மாறிடுச்சே என்று அவளுக்கு அவளே சொல்ல.. பின்னே நீ வாய் திறந்த, நீ பேசுற பேச்சுக்கு உனக்கு சங்கு தான் என்றது அவள் மனம்... ஒருவேளை வாழ்க்கை முழுதும் ‌நம்ம பொலப்பு இப்படி மைணட் வாய்ஸ் பேசிட்டே முடிஞ்சிடுமா என்று ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தவளின் நினைவை கலைத்தது, வீட்டின் அழைப்பு மணியின் சத்தம். அட இப்போ யாரு வந்திருப்பாங்க என்று யோசித்த கொண்டே கதவை திறந்து பார்க்க, பார்த்தவளின் குண்டு கண்கள் இன்னும் பெரிதாக விரிந்தது. அங்கே............................


* தொடரும்❤...


உங்க கருத்தை சொல்லிட்டு போங்க நட்பூஸ்👇👇..😉😘



- சரண்யா🧡
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ராட்சசனே என் ரட்சகனே!!" என்ற கதை தற்போது இந்த தளத்தில் இருந்து நீக்கியுள்ளேன்.

கிட்டத்தட்ட ஆறு மணி நேர கதை.. சுவராஸ்யமாக கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்..

இக்கதையை அமேசான் கின்டலில் போட்ட பின்பு லிங் இங்கு கொடுக்கப்படும்.. படித்து மகிழவும்..

நன்றி
நட்புடன்

சரண்யாகீதா



ராட்சசனா? ரட்சகனா? - 04




உங்க கருத்தை சொல்லிட்டு போங்க பட்டூஸ்👇👇🤩



- சரண்யா🧡
 
Last edited:

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராட்சசனா? ரட்சகனா? - 05❤

அடுத்த யூடி: 6/03/2021(நாளை)



மறக்காமல் உங்க கருத்தை சொல்லிட்டு போங்க பட்டுஸ்..👇👇😘



_சரண்யா🧡
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராட்சசனா? ரட்சகனா? - 06❤



மறக்காமல் உங்க கருத்தை கீழே இருக்கும் லிங்கில் சொல்லிட்டு போங்க நட்பூஸ்..😘


_சரண்யா
🧡
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியரிஸ்,

வெரி சாரி.. யூடி போட்டு ரொம்ப நாளாச்சு.. இனி சரியா டெய்லி மார்னிங் யூடி வந்திடும்.. ராட்சசனே 👿 என் ரட்சகனே- அத்தியாயம் 07💓 பதிவு போடுறேன் படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க லட்டுஸ்..😘🙈

_சரண்யா💛
 
Status
Not open for further replies.
Top