All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கதை திரி

Status
Not open for further replies.

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஹாஹாஅஹாஹாஹாஹா” என ஆர்ப்பாட்டமாய் சிரித்தான் ஷிவேந்திரன்.

தன்னுடைய புடவையால் நாக்கை வெளியே நீட்டி ‘வரட்டு வரட்டென்று’ துடைத்தாள் புகழினி நாக்கில் ஒட்டியிருந்த சுவையை போக்குவதற்காக! அதனை தடுத்தி நிறுத்தி,

“ஹே குட்டி என்னடா ஜூஸ் பிடிக்கலையா?”

“உவ்வாஅய் இது என்னது? ஒரு மாதிரியா இருக்கு? வாடையும் சரியில்லை, சுவையும் சரியில்லை..”

“ம்ம்ம்ம் இது பியர்!”

“என்னவோ! நல்லாவே இல்ல.. உவ்வே..”

“இது மருந்துடா குட்டி! அருகம்புல் ஜீஸ் மாதிரி இதுவும் ஒரு ஜீஸ்… குடிச்சா உடம்பு நல்ல ஷைனிங்கா அதாவது நல்ல பளபளப்பா இருக்கும். அப்புறம் உடம்பு நல்ல வெயிட் போடும்.”

“அம்புட்டு நல்ல மருந்தா இது! அதேன் விமன்யா புள்ள இதையே பொழுதுக்கும் குடிச்சிட்டு கிடக்கா!”

“ம்ம்ம் ஆமா! ஆமா!” சிரிப்பை மென்றபடி பலமாக தலையாட்டினான் அவள் இணையவன்.

“அப்ப சுகி ஆத்தாக்கிட்ட இந்த மருந்த குடிக்கச் சொல்லனும். இப்ப கொஞ்ச நாளா இளச்சு போய்த்தாய்ங்க பாவம்..”

“கண்டிப்பா, நாளைக்கு உன் ஆத்தாக்கு நீயே கொண்டு குடேன்!” என்றான் கண்களில் விசமம் மின்ன.

“ஐ, நான் நாளைக்கு மறக்காம கொண்ட ஆத்தாக்கு குடுக்குறேன். ஆமா எனக்கு எதுக்கு குடுத்துயே? நான் நல்லாதேன் இருக்கேன்.”

“நீயா! ஹ எலிகுஞ்சு மாதிரி இருக்க.. அதான் இது கொடுத்து உன் உடம்ப தேத்தலாம்னு பாத்தேன்”

“உங்களுக்கு நான் இப்படிதேன் தெரியுவேன்.. ஏனா நீங்கெ அப்படி இருக்கிய…”

“எப்படி இருக்கேன், காட்டெருமை மாதிரியா?”

“அமா(ய்ன்)“ என்று சொல்லி தலையாட்டிவிட்டு, பின்பு தான் சொன்னதை உணர்ந்து கலவரமாக அவனை நோக்கி,

“இல்ல, அப்புடியில்ல! நீங்கெ அப்டியில்ல..” என்று கூறி மறுப்பாக கைகளை அசைத்தாள். அவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டிருந்தான்.

புகழினி அவனை ஒரு வித பதட்டத்தோடு நோக்கினாள். பயத்தையும் தாண்டிய ஒரு உணர்வை அவனது பார்வை அவளுக்கு கொடுத்தது. அதை இன்னதென்று அவளால் பகுத்தறிய முடியவில்லை!

மணி சரியாக பணிரெண்டு அடித்தது, அவளை அப்படியே கைகளில் அள்ளி கொண்டு பால்கனிக்கு சென்றான். புகழினி பயத்தில் கண்களை இறுக மூடிகொண்டு, அவன் கழுத்தை இறுக கட்டி கொண்டாள். எங்கே தான் சொன்னதற்கு கோபம் கொண்டு தன்னை பால்கனியிலிருந்து கீழே வீசிவிடுவானோ என்ற பயம் அவளுக்கு. அவளை கைகளில் ஏந்தியபடி பால்கனியில் கொடி மண்டபம் இருந்த திசை பக்கம் வந்து நின்றவன் அவள் காதோரமாக குனிந்து,

“தெய்வா கண்ணை திறந்து பாரேன்” என்றான் கொஞ்சலான குரலில். மெதுவாக ஒற்றை கண்ணை மட்டும் திறந்து அவனை பார்த்தாள். படக்கென கண்ணடித்தவனைக் கண்டு அரண்டவள் மறுபடியும் கண்களை இறுக மூடி கொண்டாள். புகழினிக்கு எதன் மீதோ அமர்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்த அலங்கார ஊஞ்சலில் ஷிவேந்திரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் அழகாக அமர வைக்கப்பட்டிருந்தாள் புகழினி. அவன் அவள் முகத்தை திருப்பி கொடி மண்டபம் இருக்கும் திசையை சுட்டிக் காட்டினான்.

திரும்பிய புகழினியின் கண்கள் சந்தோசத்தில் விரிந்ததன.

“பிடிச்சிருக்கா!” என்று கிசுகிசுப்பான குரல் காதோரம் மீசை உராய கேட்டது. அந்த உராய்வில் அவள் உடல் நடுங்கி சிலிர்த்தது. அவள் பேச்சற்று ஆச்சரியமாக விழி விரித்து கணவனை நோக்கினாள்.

அவன் அவள் முகம் நோக்கி மெல்ல குனிந்தான், அவள் கண்களை ஆழ்ந்தபடி. கள்ளவனின் விழிவிசையின் வீச்சில் கிள்ளையின் கண்கள் அகல விரிந்து கொண்டே சென்றன. இமைகள் படபடக்க, மூச்சுகள் முட்டி மோத, வன்மையாளனின் முரட்டு உதடுகள் மென்மையாளின் மெல்லிழத்களை ஸ்பரித்தன. முத்தம்! முதல் முத்தம்!

புகழினியின் நெஞ்சு கூடு படபட என்று அடித்து கொண்டது. தன் கையிலிருந்த சிறிய நகை பெட்டியை திறந்து அதிலிருந்த வைர மோதிரத்தை அவள் இடது கை நடுவிரலில் அணிவித்து “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புகழினி தெய்வமங்கை!” என்று மந்தகாசமான புன்னகையுடன் வாழ்த்தினான் ஷிவேந்திரன்! புகழினியின் அழகிய அசுரன்!

கருப்பு அழகி வருவாள்
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy morning dears :)
Unfortunately my laptop has linux OS installed & Tamil Keypad isn't the usual one.. and its a tough nut... I will have the updates posted tonight dears... midnight...

Alas! I am happy that so many people are reading with surge of hopes & interest.. am really feeling glad.. thanks for all your grt support & patience... And those comments... i will have them answered soon... kindof busy.. so pls dont mistake... by this weekend I will try to reply to all your previous comments...

Positive or negative comments .. am ready to accept both with smile ... so pls dont hesitate to point any negatives if any.. I am an amateur writer... there might be some errs ... with all your support I can steadily rectify me..

wats next .. thanks a ton :) Luv you all...

Meet you tonight... my humble request.. pls dont stay awake for just to read this... its not worth compared to all your health... am awake at midnight cos have a son who wont allow me to type freely.. so read it fresh in morning .. hope tat will bring smiles on all our faces :)

With Luv
Sokki
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் வந்துட்டேன் :smiley5:

'என் கருப்பழகி' 19வது அத்தியாயம் பதிந்துவிட்டேன். அடுத்த அத்தியாயம் வரும் ஞாயிறன்று இரவில்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கறுப்பழகி"

அத்தியாயம் – 19
ஆழ்ந்த நித்திரையிலிந்த ராஜேந்திரன் தன்னுடைய அலைபேசியின் ஒலியைச் செவிமடுத்தபடி சோம்பலாக எழுந்தவர் அதில் மின்னிய பெயரை கண்டவுடன் பரபரப்பாக அதனை உயிர்ப்பித்து காதிற்கு கொடுத்தபடி சப்தமில்லாமல் தன்னுடைய அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டவரிடம் சொல்லப்பட்ட செய்தியில் அவர் உயிர் கூடு உரைந்துவிட்டது. பதட்டத்தை மறைத்துக் கொண்டு மறுபக்கம் இருப்பவர் செய்ய வேண்டியவற்றைத் தெளிவாக விளக்கிவிட்டு அலைப்பேசியை அணைத்தவருக்குக் குளிரூட்டப்பட்ட அந்த அறையிலும் வியர்த்து வழிந்தது. வியர்வையை துடைக்கும் நினைவின்றி தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தவர் உள்ளணர்வு உந்த அறையின் வாயிலைத் திரும்பி நோக்கியவர், முகம் வெளிற நின்றிருந்த மனைவியைக் காணவும், பதறிக் கொண்டு அவரிடம் விரைந்தார். மயங்கிச் சரிந்த மனைவியைத் தோள் தாங்கி மெல்ல அவரை அணைத்தபடி அங்கிருந்த மெத்தை நாற்காலியில் அமரவைத்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்த தண்ணீர் குடுவையை திறந்து மனைவியிடம் நீட்டினார். சில்லிட்ட தண்ணீர் தொண்டையில் ஊசியாகக் குத்தி சில்லிப்பாக இறங்கியது. துடிக்கும் இதழை மடித்துக் கடித்து அழுகையை மென்றவர்,



“காப்பாத்த முடியாதாங்க?” என்று கேட்கும் பொழுதே அழுகை வெடித்துக் கொண்டு வந்ததுவிட்டது சுகுணாவிற்கு.



“இல்லைடா சுகி.. ஒன்னும் ஆகாது.. நாம நினைக்கிற மாதிரி இருக்காது.. நீ பயப்படாத.. “ மனைவியை அணைத்தபடி கூறியவரின் கண்களிலும் கண்ணீர் துளிகள் திரண்டிருந்தன. தன்னை அவநம்பிக்கையுடன் நிமிர்ந்து நோக்கிய மனைவியிடம் மெல்லிய குரலில் சூழ்நிலையை விளக்கத் தொடங்கினார் ராஜேந்திரன்.



…………..

குளிருக்கு இதமாக இருந்தது அந்த மசாலா தேநீர். தேநீரைப் பருகும் பொழுது ஏறி இறங்கும் அவளின் தொண்டைக்குழியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். பாண்டிச்சேரி கடற்கரை நள்ளிரவு ஒன்றாரை மணி முப்பது வினாடிகளைத் தாண்டியிருந்தது. சல்வாரின் மேல் உடுத்தியிருந்த ஜெர்கின் உடலை இறுக்கி கதகதப்பை தந்தது. லேசான குளிர்காற்று உடலைத் தீண்டி அவள் கன்னம் தீண்ட, சிலிர்த்தவள் கைகளை பர பரவென்று தேய்த்துச் சூடேற்றி ஒவ்வொரு கன்னங்களாக வலது கையை பதித்தாள். அவளுக்கு இவை யாவும் புதிது.. இந்த நள்ளிரவு பயணம், சுடச் சுட தேநீர், நாலடி தொலைவில் கடற்கரை… இருட்டு வெளியில் அடுக்கடுக்காய் நின்று மின்மினிப் பூச்சிகளாய் ஒளிர்ந்த மஞ்சள் தெரு விளக்குகளும் ஆங்காங்கே முளைத்திருந்த பெரிய வெள்ளை தெரு விளக்குகளும் அந்த இரவிற்குத் தனி சோபையைக் கொடுத்திருந்தது… தூரமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித தலைகள் புள்ளிகளாகத் தெரிந்தன.. தனது கருப்பு நிற செரோகி டிராக்ஹாக் எஸ்.யூ.வில் சாய்ந்து நின்றபடி அண்ணாந்து குடுவையிலிருந்த திரவத்தின் கடைசி சொட்டைத் தொண்டையில் சரித்தவன் மனைவியின் பின்னே நெருங்கி அவளின் கருப்பட்டி கன்னங்களை அணைவாகப் பற்றினான் ஷிவேந்திரன்.



சூடான முரட்டு கரங்களின் தீண்டலில் திடுக்கிட்டு திரும்பியவள் கணவனை காணவும் நெஞ்சில் கைவைத்து மூச்சை இழுத்துவிட்டபடி “ஆத்தி நீங்களா, ஒரு நிமிசம் எனக்கு உசிரே நின்னு போயித்து…” இதயம் படபடக்க கூறினாள் புகழினி.



“என்னை தவிர உன்னை யாரால நெருங்க முடியும் தெய்வா???” சற்று இறுகிய குரலில் வினவினான்.



அந்த குரலில் புகழினியின் உடலில் விரைந்தோடிப் பரவிய நடுக்கத்தை உணர்ந்தவனாக கைகளால் அவளை முழுவதுமாக தன்னுள் இறுக்கி ஆக்டோப்பசை போல் வளைத்துக் கொண்டவன் கிசுகிசுப்பான குரலில்,



“குளிருதா?” என்று வினவினான்.



“ம்ம்ம்ம்” அவளுக்கே கேட்காத குரலில் முனகினாள்…



“ஒரு வாக் போயிட்டு வரலாமா?”



“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” வேக வேகமாகத் தலையாட்டினாள்.



“இதுக்கு மட்டும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சத்தமா வருமே…” என்று கிண்டலடித்தவன் அலேக்காக அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.



“நான்ன்ன் நாஆனே நடந்து வாரேங்க” பதறியபடி கூறினாள்.



“காத்து ஜில்லுன்னு வீசுதுள்ள ஜில்லு குட்டி… ஒருத்தருக்கு ஒருத்தர் அணைச்சுக்குட்டா குளிருக்கு இதமா இருக்கும்… இருக்குதானே?” விசமமானப் புன்னகையுடன் வினவினான்.



அவளோ நாலாப் பக்கமும் தலையை உருட்டோ உருட்டென்று உருட்டினாள். அவளை மேலும் திணறடிக்கும் பொருட்டு, ஏந்திய கரங்கள் அவ்வப்பொழுது அழுத்தம் கொடுப்பதும் இலகுவதுமாக இருந்தன. அதையெல்லாம் அவன் கைகளில் பதுமை போல் பதுங்கிக் கிடந்தவள் உணர்ந்தாற்போல் தெரியவில்லை… அவன் இடது தோளை சுற்றி ஒரு கரத்தை பதித்தவள் மறுகையால் அவன் டிஷர்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவன் கைகளில் அடங்கியிருந்தவளுக்குப் பறப்பது போன்ற உணர்வு



“ஜில்லு குட்டி… நான் உன்னை மெனக்கட்டு தூக்கிட்டு வரேன் நீயென்னனா ஜாலியா வேடிக்கைப் பார்த்திக்கிட்டு இருக்கியே! ம்ம்ம்… பேசவும் மாட்டேங்கிற… அப்படியே வாயை திறந்தா வெறும் காத்துதேன் வருதுன்னு சொல்லுவ… சோ உன் மாமுவுக்காக இந்த மூடுக்கு ஏத்த மாதிரி பாட்டு ஒன்னு பாடுவியாம்…”



“பாட்டாஆஅ… ஏஎ என் என்ன பாட்டு?”



“எல்லாம் நம்ம பாட்டுதேன்..... “ என்றபடி அவள் காதோரமாக கிசுகிசுத்தான்.



புகழினியின் முகம் வெளிறிவிட்டது… ‘ஆத்தி வெக்கம் கெட்ட மனுசன்… வெட்ட வெளியில நட்டநடு சாமத்துல இந்த பாட்டை நா(ன்) பாடுனா என்னையத்தேன் வெக்கம் கெட்ட புள்ளன்னு எல்லாரும் வைவாக… இவருக்கு என்ன!’ மனதிற்குள் புலம்பி தள்ளினாள்.



“என்ன என்னை வெக்கம் கெட்ட மனுஷன்னு நினைக்கிறியா?” அவளுடைய நினைப்பைச் சரியாக கணித்துக் கூறவும் புகழினி மிரண்டுவிட்டாள். மறுப்பு கூறவும் நாயெழவில்லை..



ஷிவேந்திரனின் குரல் பேதங்களை உணர்ந்திருந்தவளுக்கு பயப்பந்து மேலே எழும்பவுதும், கீழே அமிழ்வதுமாக இருந்தது. யாருமில்லா கடற்கரை.. நள்ளிரவு நேரம்…. எட்டு எட்டு எடுத்து வைத்தால் கடல்நீர் கால்களை தீண்டிவிட்டு செல்லும் தூரம்… மிதமிஞ்சிய கோபத்தில் அவளைக் கடலில் விசிறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நகையும் சதையுமாக ஒட்டித் திரிந்த சம்யுக்தாவையே தலையால் தண்ணி குடிக்க வைத்து சிறைவாசம் வாங்கிக் கொடுத்துவிட்டான்… தன்னை… அவள் மேலே நினைக்கும் முன்…



“சரி நாம ஒரு விளையாட்டு விளையாடலாமா????” என்று வினவினான் ஷிவேந்திரன்.



“என்ன விளையாட்டு?” மெல்லிய குரலில் வினவினாள்..



“அந்தாக்ஷ்ரி”



“என்னதூஊஉ ஆந்தை கறியா?”



 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“அங்க பாத்தியா கடல்… டிஸ்கஸ் திரோ பண்ணுற மாதிரி உன்னை அப்படியே கடலுக்குள்ள வீசிடுவேன். உடனே உன் டேம்ல தண்ணிய திறந்துவிடாத… ஏற்கனவே இங்க நிறைய தண்ணியிருக்கு…”



மூக்கை உறிஞ்சியவளை மேலும் தன்னோடு இறுக்கிவிட்டு “அந்தாக்ஷரின்னா, பாட்டு போட்டிமா… அதாவது…”என்று அந்தாக்ஷரியின் விதிமுறைகளை அவள் மண்டையில் ஏறும் வரையில் சொல்லி தீர்த்துவிட்டான். அது ஏறிய பாடாக தெரியவில்லை! அவனுக்கே தொண்டை உளர்ந்து தண்ணீர் பருக வேண்டும் போலிருந்தது..



“இது சரிவராது.. ஒரு பாட்டோட முதல் வரி நான் பாடினா அடுத்த வரி நீ பாடனும்.. சரியா? புரியுதா? அதாவது பாட்டோட ஆண் குரலுக்கு நான் பாடுவேன்.. பெண் குரலுக்கு நீ பாடனும்.. விளங்குதா?”



“ம்ம்ம்ம்ம் விளங்குதங்க” என்று தலையை பலமாக உருட்டினாள் வில்லங்கம் புரியாமல்.



“ப்பா கிரேட் கற்பூரம்டி குட்டி நீ” பரிகாசமாகக் கூறியவன் தொண்டையை செறுமிவிட்டு சற்றே கிசுகிசுப்பான குரலில்



“ மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே” அடுத்து நீ பாடு என்பது போல் தலையசைத்தான் ஷிவேந்திரன்.



“நாளை எண்ணி நா(ன்) காத்திருந்தே(ன்) மாம(ன்) உனக்குத்தானே..” உதடுகள் உதற முத்துக்களை உதிர்வது போல் மென்மையாக வார்த்தை மெட்டுகள் வந்து விழுந்தன.



“பூவோடு ஆஆஅ தேனாட”



“தேனோடு ஓஓஒ நீயாடு”



“ஓஓஹோ மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே”



“நாளை எண்ணி நா(ன்) காத்திருந்தே(ன்) மாம(ன்) உனக்குத்தானே..

ஆசை நூறாச்சு போங்க

நெலவு வந்தாச்சு வாங்க

நெருங்க நெருங்க பொறுங்கப் பொறுங்க ஓஹோ ஓஓஒ ஹோஓஒ….…” அவள் நெருங்கச் சொன்னதை போல் அவள் முகம் நோக்கி நெருங்கியது அவன் முகம்… அதில் அவள் பாடிய கடைசி வாக்கியம் தேய்ந்து ஒலித்தது.



“ஏ ஆசை நான் கொண்டு வந்தால்

அள்ளித் தேன் கொண்டு வந்தாள்

மயங்கி கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஓஓஓ ஹோஓ” அவள் காதுமடல்களை உடசின அவன் மீசை ரோமங்கள்…. “ஏன் முழிக்கிற மேலே பாடு ஜில்லு குட்டி” திருதிருத்தவளை மேலே பாடுமாறு உந்தினான்.



“ஆஅ… வெ வெப் வெப்ப் வெப்ப்ப்பம் படருது படருது

வெ வெவெ வெட்கம் வளருது வளருதுஊ”



“கொட்டும் பனியிலே பனியிலே

ஒட்டும் உறவிலே உறவிலே” அவன் மூக்கின் நுனியால் அவள் கன்னம் தேய்த்தான்..



அவளுக்கு அவனின் சேட்டைகளில் நா உளர்ந்துவிட்டது…எச்சிலைக் கூட்டி விழுங்கி தொண்டையை ஈரப்படுத்த முயன்று தோற்றவள்…

“த த் தத தண்” மேலே சொல்ல முடியாமல் திணறியவள் அவன் பார்வை கூர்மை பெறவும் வலது கை உள்ளங்கையை முடக்கி கட்டை விரலை நிமிர்த்தி தண்ணீர் வேண்டும் என்று செய்கை செய்தாள்.



அந்த நடைபாதையிலிருந்த திண்டில் அலங்காமல் குலுங்காமல் மனைவியை அமரவைத்தான் ஷிவேந்திரன். குனிந்த தலை நிமிராமல் இருந்த புகழினி… அடிக்கண்ணால் அவன் நகராத கால்களை நோட்டமிட்டாள்… ‘இப்புடி நகராம இருந்தா குடிக்க தண்ணீ எங்க இருந்து கொண்டு வருவாய்ங்க? என்னைய கடலுல இறங்கி குடிச்சுக்கன்னு சொல்லிப்புடுவாய்ங்களோ!’ என்று மனதிற்குள் தீவிரமாக யோசித்தவளின் முன்னே தண்ணீர் குடுவையை நீட்டினான் அவள் ஆருயிர்(!) கணவன். தண்ணீர் குடுவையையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்தவளின் கண்களில் ஆச்சரியம்… இது எங்கிருந்து வந்தது என்று கணவனை வினவுவதற்கு அவளுக்கு உதறலாக இருந்தது. ‘எங்க இருந்து இந்த தண்ணி பாட்டிலு வந்தா எனக்கு என்ன! மனுசன் அலுங்காம குலுங்காம தவிச்ச வாய்க்கு தண்ணீ கொடுக்கிறாய்ங்க..கேள்வி தோனுதோ கேள்வி! அதுவும் ஆர பாத்து கேள்வி கேக்குற!’ மனதிற்குள் எண்ணி மானசீகமாக தன்னுடைய தலையில் கொட்டிக் கொண்டவள், பார்வையால் அவனுக்கு நன்றி கூறிவிட்டு தண்ணீர் குடுவையை வாங்கி தொண்டையில் சரித்தவளுக்குப் புரையேறி மூக்கு வழியே தண்ணீர் வழிந்து, விடாமல் இருமிக் கொண்டிருந்தாள்.



“ஹே ஹே! ரிலாக்ஸ்… இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி புரையேறி இரும்பி தள்ளுற… ரிலாக்ஸ் ஜில்லு குட்டி..” அவள் அருகில் அமர்ந்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.



****

காரின் முன்னிருக்கையில் அமர்ந்து சில்லட்டசன்னல் கண்ணாடியில் கன்னம் பதித்திருந்தாள். அந்தக் கும்மிருட்டில் காற்றைக் கிழித்து கொண்டு செல்லும் கார் பயணத்தில் சர் சரென்று மரங்கள் மறைந்து போவது போல் ஒரு பிரமை!



“ஹர்ர்ர்ர்ர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்” என்ற சப்தத்தில் கணவனைத் திரும்பி நோக்கினாள்.. ஆட்காட்டி விரலை மேலே சுட்டிக் காட்டி ‘அங்கே பார்’ என்பது போல் செய்கை செய்தான்.



நிமிர்ந்தவளின் கண்களில் புன்னகை படர்ந்து அவள் பூவிதழ்களில் மென்னகையாக வந்தமர்ந்தது.



“என்ன பாக்குற சீட் மேலே ஏறி நின்னுக்கோ.. மேலே கை வச்சு சாஞ்சுக்கோ….ம்ம்ம் கமான்” வண்டியின் வேகத்தைக் குறைத்தபடி கூறினான்…



காரின் மேல் பகுதியிலிருந்த கண்ணாடியைத் தான் விளக்கி பின்னுக்கு தள்ளியிருந்தான்.. ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்தபடி மறுகையால் மனைவியின் கரம் பற்றி அவள் இருக்கையீன் மீது ஏறி நிற்பதற்கு உதவினான். வண்டி சீரான வேகத்தில் நகரத் தொடங்கியது.



சற்று முன்னே சாய்ந்தார் போல் நின்று கொண்டிருந்தவளுக்கு தான் காற்றில் பறப்பது போலிருந்தது… அந்த மையிருட்டு அவளுக்குப் பயத்தை கொடுக்கவில்லை… நிம்மதியைக் கொடுத்தது… கூண்டில் அடைந்து கிடந்த குயிலானது சிறகடித்து சுதந்திர வானில் பறப்பதை போன்ற உணர்வு… அவளுடைய ஆத்தா, ஐயன் அருகில் கிட்டாத நிம்மதியா! இல்லை இதே வேறு அதனையும் தாண்டிய ஒரு நுண்ணிய உணர்வு… சந்தோசத்தின் ஒரு விளிம்புமுனை.. இன்னாதென்று வரையறுக்க முடியாமல் அவளைத் தவிக்க வைக்கும் உணர்வு.. குளிர் காற்று சில் சில்லென்று முகத்தில் மோத ஆழ மூச்செடுத்தவளின் கண்களில் இருதுளி கண்ணீர்!



“ஹே ஜில்லு குட்டி என்ன சைலண்ட்டா வர? படத்துல எல்லாம் பார்த்தது இல்லையா, இது மாதிரி கார்ல நின்னு எல்லாம் சப்தமா கத்தி கூச்சல் போடுவாங்க..”



“இரவையில எப்படிங்க?”

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“அப்ப சரி நாளைக்கு மதியம் ஆள் நடமாட்டம் உள்ள இடத்துல இதுமாதிரி நின்னு கத்துறியா?”





“ஆத்தி இப்போ நா(ன்) என்ன சொல்லிப்புட்டேன்னு என்னைய வரண்டு இழுக்குறிய?”



“சரி வரண்டு இழுக்குல, உன்னை பிடிச்சு இழுக்கவா?” பரிகாசமாக வினவினான்.



“அடியாத்தி! நா(ன்) என்ன பண்ணுவேன்.. இந்த மனுசனை எந்த காத்து கருப்பு அடிச்சுதோ இப்புடி ஒத்தை பொழுதுல தலைகீழா நடக்குறாரே!! ஹீம்ம்ம் அடியேய் புகழு… இவரையாவது காத்து கருப்பு அடிக்கிறதாவது… அந்தக் கருப்புக்கே காத்துடிச்சு விடுவாருடி கூறுகெட்டவளே!



ஒத்தையடி பாதையில ஒத்தையில சிக்கிப்புட்டேன்…

இரட்டைநாடி மனுசனுக்கு இரண்டுங்கெட்டான் ஆசையடி” மனதிற்குள் புலம்பி கடைசியில் பாட்டாகவே பாடிவிட்டாள் புகழினி.



காரை அலுங்காமல் குலுங்காமல் சத்தமின்றி நிறுத்தியவன் அவன் இருக்கையின் மேலேறி அவளின் அருகே கன்னத்தில் கைவைத்து நின்றதை அவள் கவனிக்கவில்லை. நெஞ்சில் கைவைப்பதும், பின்னே மேலே நோக்குவதும், பெருமூச்சுவிடுவதுமாக இருந்த மனைவியைக் காண அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. எதர்ச்சியாக திரும்பியவள் கணவனை அருகில் காணவும் அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. சில்லென்ற உணர்வு உடலில் பரவி படர்ந்தது.. அடுத்த நொடி,



“ஆத்தி …ஆளில்லாம காரு எப்படி ஓடும்….” வெளிறியவள் கார் சாலையில் ஒதுக்கமாக நின்று கொண்டிருப்பதை காணவும் ‘அம்மாடி’ என்று நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டாள்.



“அறிவுக் கொழுந்து” என்று மனைவியின் தலையில் வலிக்காமல் கொட்டியவன் அவளை நெருங்கி இடையைப் பற்றி தூக்கி தன்மேல் சாய்த்துக் கொண்டு அவள் முகம் நோக்கிக் குனிந்தான்… ஒரு நிமிடமோ! அரை நிமிடமோ நிமிர்ந்தவனின் கண்கள் நட்சத்திரங்களாய் ஒளிர்ந்தன.



“ஜில்லு குட்டி.. சில்லுன்னு காத்து.. நான் கொடுத்த சூடான முத்தம்.. எப்படி இருந்தது?” என்று கிசுகிசுப்பாக வினவினான்..



சற்று பின்னால் சாய்ந்தவள் அவனை பார்க்க தயங்கி “சுறுக்கு சுறுக்குன்னு ஊசி குத்துறாப்புல உங்க தாடியும் மீசையும் குத்திக்கிட்டு கிடக்குதுங்க..” குறுகுறுத்த கன்னங்களை தேய்த்து விட்டபடி சிணுங்கினாள்.



அட ஆண்டவா! இப்படியா ஒருத்தி முத்த சுவையின் அனுபவத்தை விளக்குவாள்! ‘ஹா ஹா ஹா’வென அந்தக் கானகமே அதிர இடி சிரிப்பு சிரித்தான் ஷிவேந்திரன்….



*****

அந்த கார் இரநூற்றி எழுபது கிலோமீட்டர் வேகத்திலும் அலுங்காமல் குலுங்காமல் சீராகச் சென்று கொண்டிருந்தது.. நள்ளிரவு பயணம்! மிதமான இசை! சில்லென்று ஏ.சி கேட்கவா வேண்டும்.. தூக்கம் சொக்கி கொண்டு வருமே! ஆனால் ஷிவேந்திரனை சொக்க வைத்தவளோ அந்த பயணத்தை முழுவதுமாக அனுபவிக்கும் முடிவில் இருந்தாளோ என்னவோ புன்னகையுடன் இலகுவாக உரையாடிக் கொண்டிருந்தாள்.



“ஜில்லு குட்டி அது என்ன புகழினி தெய்வமங்கை? ஒன்னு புகழினின்னு வச்சிருக்கனும் இல்லை தெய்வமங்கைன்னு வச்சிருக்கனும்.. பட் ஏன் ரெண்டு பேரு”



அருகில் யாரோ அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை போல் சுற்றும் முற்றும் நோக்கிவிட்டு அவனை நோக்கி நகர்ந்து அமர்ந்வள் மெல்லிய குரலில்,



“பெரியாத்தாதேன் எனக்கு இந்த பேரு வச்சாய்ங்க.”



“அது யாரு பெரியாத்தா?”



“உங்களுக்கு என்னைய பத்தி ஏதும் தெரியாதுங்களா? அவய்ங்க ஏதும் சொல்லலியா?”



“நான் ஏன் மத்தவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கனும்.. நீயே சொல்லேன்.. அதுக்கு முன்னாடி உனக்கு என்னைப் பத்தி என்ன தெரியும் சொல்லு பார்க்கலாம்?” அமர்த்தலாக வினவினான்.



‘ஆத்தாடி, இதுதேன் சொந்த செலவுல சூனியம் வச்சுகிறதுபாய்ங்களா! என்னன்னு சொல்லுவேன்… எப்படியின்னு சொல்லுவேன்.. ‘ மானசீகமாகத் தலையில் கைவைத்துக் கொண்டாள்.



மனைவியை ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்தவன், வந்த சிரிப்பை மென்று விழுங்கிவிட்டு,



“சரி உனக்கு ஈசியா இருக்கட்டும். என்னைப் பத்தி ஒற்றை வார்த்தையில் சொல்லனும்னா என்ன சொல்லுவ?”



“இராவணன்” வில்லில் இருந்து புறப்பட்ட அம்பென சீறிக் கொண்டு வந்தது பதில்.



புகழினிக்கே ஒரு கணம் தான் என்ன பதிலைச் சொன்னோம் என்று புரியவில்லை. புரியத் தொடங்கியதும் மறுபடியும் அவள் இதயம் பட படவென்று அடித்துக் கொண்டது. கார் குலுங்கி நின்றது…



“ஓ!” ஒற்றை வார்த்தையில் புகழினியின் எஞ்சியிருந்த தைரியமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது. ஆழ மூச்சை இழுத்துவிட்டு,



“உங்களை மாதிரி இராவணன் எம்புட்டு பெரிய மனுசன்”



“ஆமா என்னைப் போல காட்டெருமை மாதிரி தான் அவரும் இருப்பாராமே… கேள்விப்பட்டிருக்கேன்.”



“ஆத்தாடி நான் அப்படி சொல்லைங்க..”



“இப்ப தானே சொன்ன.. உங்களை மாதிரி இராவணன் எம்புட்டு பெரிய மனுசன்னு” அவளைப் போலவே சொல்லிக் காட்டினான்.

அழுகை இப்பொழுது வரவா அப்பொழுது வரவா என்றிருந்தது புகழினிக்கு. மனைவியின் முகம் கண்டு தன்னுடைய விளையாட்டை நிறுத்திக் கொண்டவன்…



“டேமை திறந்த அப்படியே காரிலிருந்து கீழே உருட்டி விட்டுறுவேன்.” புருவங்களைச் சுருக்கி அதட்டினான்.



செய்தாலும் செய்துவிடுவான் என்கிற பயத்தில் சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கும் பல்லியைப் போல் இருக்கையின் மேல் சாய்ந்து இறுக பற்றிக் கொண்டாள்.



“என்னைப் பத்தி இன்னொரு நாள் பேசலாம். அப்போ என்னை ஏன் இராவணன்னு சொல்லுறேன்னு விளக்கம் கொடு. இப்போ சொல்லு யாரு உன் பெரியாத்தா?”



“பெரியாத்தா பேரு புவனேசுவரி” சொல்லும் பொழுது உதட்டில் புன்னகையும், கண்களில் கண்ணீரும் தோன்றியது.



“உன்னோட சொந்த பெரியம்மாவா?”



“இல்லை…. நான் பொறக்கும் போது எங்காத்துளுக்கு பிரசவ(ம்) பாத்தவய்ங்க.. அவய்ங்க தான் என்னை ஆசுபுத்திரியில காவந்து பண்ணி எனக்கு பேரு வெச்சவய்ங்க…நா(ன்) பேரும் புகழோடுவும் இருக்கனுமாம்.. அதேன் மொத பேரு புகழினி… நான் பொறந்த பிறவுதேன் என் குடும்பத்துக்கு பெரிய அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தேனா(ம்) ..அதேன் இரண்டாவதா தெய்வமங்கைன்னு பேரு வச்சேன்னு சொல்லுவாய்ங்க..” அவள் குரல் கமறியது.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“உங்க ஊருல உனக்கு பிடிச்ச கோயில் எது?” இலகுவாக அவளைத் திசை திருப்பினான் ஷிவேந்திரன்



“வேற ஆரு எங்க மீனாச்சி அம்மந்தேன்… அவளை பாக்காம கண்ணு இரண்டும் பூத்து போச்சு..



“உங்க ஊரு ஸ்பெஷல் ஜிகிர்தண்டாவை நீ ஒரு முறை கூட செஞ்சு கொடுக்கலை எனக்கு.”



“ஆரு சொன்னா! நம்ம வீட்டுல அம்புட்டு பேரும் நான் செஞ்ச சிகுருதண்டாவை குடிச்சுப்புட்டு மறுக்கா செய்யுன்னு சொன்னாய்ங்க தெரியாமா? நீங்கதேன் ஆகாசத்துலையே பறந்துக்கிட்டு கிடக்குறியளே!” என்று பொருமினாள்.



“வூஊஊ ஜில்லு… கூல்டா கூல்… இப்போ என்னை நான் ஆகாசத்துல இனி பறக்க கூடாது.. அவ்வளவு தானே! ரைட் விடு.. இனி உன் முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு உன் பின்னடியே சுத்தி சுத்தி வரேன்.. டீல் ஓகேவா?” என்று கட்டை விரலைத் தூக்கி காண்பித்தான்.



புகழினி திருதிருத்தாள்.. புன்னகைத்தவன் அவளின் கருப்பட்டி கன்னம் கள்ளி முத்தம் கொஞ்சினான். அவளோ உதட்டை கடித்தவிட்டு தலை குனிந்தாள். மறுபடியும் அவளைப் பேச வைக்கும் பொருட்டு,



“ஜில்லு நீ எப்படி இவ்வளவு நல்லா சமைக்கிற அதுவும் இவ்வளவு சின்ன வயசுல… ஸ்டார் ஹோட்டல்ஸ் எல்லாம் உன் டேஸ்ட் கிட்ட நிக்க முடியலை தெரியுமா!”



சமையல் என்றதும் பூவாக மலர்ந்தவள் “சமைக்கிறது என்ன பெரிய கம்பசூத்திரமா! பழகப் பழக எல்லாம் வருங்க..”



“உண்மை தான். ஆனா நூறு பேரு.. ஏன் ஆயிரம் பேருக்கு சமைக்கிறதுன்னா கூட ஒற்றை ஆளா நீ சமாளிப்ப போலவே! நேத்து ஆபிஸ்ல வெளுத்து கட்டிட்ட தெரியுமா!”



“எனக்கு நெனவு தெரிஞ்ச நாளுல இருந்து அடுப்பங்கரையிலதேன் என் முக்காவாசி பொழுது போவும். நெதமும் ஐநூறு வேலை ஆளுகளுக்கு தனியா பொங்கனும்.. அது கீழ கொட்டாயிலதேன் செய்வோம்.. அப்புறம் வீட்டாளுகளுக்கு தனி அடுப்பங்கரை… அவுக அவுக பிரியத்துக்கு பலகாரம் செய்யனும்… ஏது நேரம்! பம்பர(ம்) கணக்காவுல சுழலனும்.. நான் என்ன பெரிய இவ! எங்க செங்கமல(ம்) ஆத்தா ஒத்தை பொழுதுல எட்டுப்பட்டி ஊருக்கே விருந்தாக்கி போட்டுப்புடுவாய்ங்க தெரியுமா!” கடைசி வாக்கியதை கூறுகையில் பெருமை பொங்கி வழிந்தது.



“ஓ கிரேட்! பட் வெறும் சமைக்கிறது மட்டும் எப்போதும் செய்யுறது உனக்குப் போர் அடிக்காதா?”



“என்ன அப்புடி கேட்டுப்புட்டியே! எம் பொறந்து வீட்டுல சகலமும் நாந்தேன் செஞ்சேன்… வெள்ளி மொளைக்கும் முன்னே வீடு மேவாச தோட்டமெல்லாம் கூட்டி பெருக்கி சருகு கிருகெல்லாம் கொளுத்திப்புட்டு வாசத் தெளிச்சு கோலம் போடுவேன்… அதுவும் வாசலே அடைக்கிறாப்புலதேன் போடனும்.. இல்லன்னா சின்னத்தா வஞ்சுப்புடுவாய்ங்க..



அப்புறம் நடுவீடு தொடைச்சு, கொல்லைப் புறம் கொட்டியெல்லாம் கூட்டி பெருக்கி சாணி அள்ளனும்.. பாலு பீச்சனும்.. பிறவு அடப்பங்கரையில நுழைஞ்சிட்டா வெளில வர ஒம்பது மணியாகிப் போயிறும்… “



“வீட்டாளுக சாப்புட்டு முடிச்ச பிறவுதேன் நா(ன்) நாலுவா அள்ளிப் போட்டுக்கிட்டு பாத்திரம் பண்டமெல்லாம் நானும் அன்னமத்தாவும் ஒழிச்சு தேய்ப்போம்.. பிறவு துணிமணியெல்லாம் வேலையாளோட தோச்சுப் போட்டுப்புட்டு நிமிந்தா பத்து மணி! மறுபடியும் அடுப்பங்கரைக்குள்ள போனா திரும்பி வர மதியம் இரண்டாகிடும்.. மறுபடியும் அடுப்பங்கரையை ஒழிச்சுப்புட்டு… கொள்ளைப் புரம் கொட்டிக்கு போவேன்… அங்க பெரிய வேப்பமரம் ஒன்னு இருக்கும் அங்கன உக்காந்து காத்து வாங்குறதே தனி சொகந்தேன் தெரியுமா! அப்படியே சிலுசிலுனு இருக்கும்…



வேப்ப மர நிழலுல செத்த உக்காந்து உளுந்து ஒடைப்பேன்… அப்புறம் கம்மாய்க்கு போய் துணியெல்லாம் அளிசிப்புட்டு கொட்டிக்கு வந்து சாணியள்ளி பால் பீச்சுவேன், நாலு மணிக்கு வீட்டாளுகளுக்கு காப்பி தண்ணியும் மாலை பலகாரமும் கொடுக்கனுமே… அப்புறம் நோட்டு புத்தகம் எழுதனும் நான் நல்லா வரையுவேன் தெரியுமா! எங்க பிரபாவுக்கு நாந்தேன் ரிகாடு நோட்டுல படமெல்லாம் வரைஞ்சு கொடுப்பேன்.. எம்புட்டு பக்கமாயிருந்தாலும்… எங்கூரு டவுன் பஸ்சு மாதிரி பாஸ்ட்டா எழுதி முடிச்சுப்புடுவேன்… அப்புறம் எல்லாரு துணிமணியெல்லாம் நாந்தேன் தேச்சு கொடுப்பேன் ஒருக்கா எங்காத்தாவோட பட்டு ரவிக்கையை தெரியுமா தீச்சுப்புட்டேன்னு எந்தொடையிலையே சூடு வச்சுப்புட்டாய்ங்க.. அப்போ(ம்) எனக்கு பதினொரு வயசு.. மொத மொத தேய்ச்சது.. கூறுகெட்டவ எனக்கு விவர(ம்) தெரியல.. தேய்க்கிற பொட்டியும் கனமாதேன் இருக்கும்… என்னால தூக்க முடியாது… பிறவு செங்கமலம் ஆத்தாதேன் எப்படி சுளூவா பொட்டிய தூக்கனும், எந்த எந்த துணிக்கு எம்புட்டு சூடு வைக்கனும்னு சொல்லிக் குடுத்தாய்ங்க…



இரவை சமையலுக்கு ஆக்கிப்புட்டு, எல்லாம் வேலையும் முடிஞ்ச பிறவு எங்க அப்பாத்தாவுக்கு முட்டிவலிக்கு ரவையில காலுல மருந்து தடவி காலை அமுக்கி விடுவேன்… எனக்கு அம்புட்டு தூக்கம் வரும்… கண்ணைக் கொண்டு சொருவும்.. ஆனா உறங்கினா அம்புட்டுதேன் அப்பத்தா என்னைய கொன்னுப்புடுவாய்ங்க? எங்கய்யாவே எங்கப்பாத்தாள பாத்து இப்பவும் பயப்படுவாய்ங்க தெரியுமா!”



கொட்டும் மழையென தாமரைக் குளத்தில் தன்னுடைய வாழ்க்கை முறையை கொட்டிக் கவித்துவிட்டாள் தன்னையறியாமல்! ராஜேந்திரன் சுகுணா தம்பதியரிடம் இத்துணை மாதங்களில் பகிர்ந்து கொள்ளாததை ஒற்றை இரவுப் பொழுதில் கணவனிடம் கொட்டி கவிழ்த்துவிட்டாள். உடையவன், உரியவன் என்கிற நினைப்பா தெரியவில்லை! ஏதோ ஒரு உந்துதல் தன்னை அறியாமல் கொட்டி கவிழ்த்துவிட்டாள்.



“நீ எப்போ சாப்பிடுவ தெய்வா?” ஸ்டியரிங்கை இறுகப் பற்றி உணர்ச்சி துடைத்த குரலில் வினவினான்.



“நேர(ம்) கெடைக்கையில நாலுவா திண்ணுக்க வேண்டியதுதேன்..” என்று வெகுளியாகச் சிரித்தாள்.



இருட்டை வெறித்தன ஷிவேந்திரனின் கண்கள் “தெய்வா நீ கொஞ்சம் நேரம் தூங்குடா… இன்னும் கொஞ்சம் நேரத்துல நம்ம இடத்துக்கு போயிடுவோம்.”



“இல்லங்க நா….” மறுக்க நினைத்தவள் அவனது பார்வையில் சன்னமானத் தலையசைப்போடு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டவளின் நெஞ்சுக் கூடு இரண்டு நிமிடங்களில் சீராக ஏறி இறங்கியது. எத்துணை பேருக்கு படுத்ததும் உறங்கும் பாக்கியம் கிட்டும்.. அந்த நொடி அவள் பாக்கியசாலி! அவள் மனதில் இவ்வளவு அமிழ்ந்திருந்த பாரம் விலகியதோ தெளிவான முகத்துடன் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றுவிட்டாள்.



****



“தெய்வா தெய்வா… செல்ல குட்டி.. எழுந்திரு கண்ணா” என்று கிணற்றில் இருந்து கேட்பது போலிருந்தது.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“புகழினி” என்ற அழுத்தமான குரலில் ஆழ்மனது எச்சரிக்க பட்டாரென்று எழுந்து அமர்ந்தவள் மலங்க மலங்க விழித்தாள்.



“குட்மார்னிங் செல்லக் குட்டி.. என்ன முழிக்கிற? அரைமணி நேரமா தொண்டை தண்ணி வத்த கெஞ்சி கொஞ்சி உன்னை எழுப்புறேன் எழுப்புறேன்.. அசராம கல்லு குண்டு போல படுத்திருந்த.. புகழினின்னு கொஞ்சம் அழுத்திக் கூப்பிட்டதும் பதறியடிச்சிட்டு எழுந்திறிக்கிற!” புருவம் உயர்த்தி கேலியான குரலில் கூறினான்.



“நா நாஆஆம எங்கயிருக்கோ(ம்)?” சுற்றி முற்றி நோக்கியபடி வினவினாள்.



அந்த அறை சுபிக்ஷத்தின் அறைகளில் ஒன்றல்ல என்பதை முதல் பார்வையிலே புரிந்து கொண்டாள். ஆனால்…

அவள் எண்ணப் போக்கை சரியாக ஊகித்தவனாக “என்ன நேத்து நைட் நம்ம இடத்துக்கு போறோம்னு சொல்லிட்டு இவன் இங்க கூட்டிட்டி வந்துட்டானேன்னு பாக்குறியா?”



முதலில் ‘ஆம்’ என்று தலையாட்டியவள் பின்பு அவசரம் அவசரமாக இல்லை என்பது போல் தலையாட்டினாள். ஆடிய தலையை பற்றி நிறுத்தியவன்.



“இதுவும் நம்ம இடந்தான்… இந்தா போய் முதல்ல குளிச்சிட்டு வா.. உனக்கு தேவையானது எல்லாம் அந்த டிரெசிங் ரூமில் இருக்கு… “ மனையாளை கைகளில் அள்ளியவன் குளியலறை வாயிலில் இறக்கிவிட்டான். இன்னும் விழித்துக் கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு விசமமாகச் சிரித்தபடி



“நான் வேணா உனக்குக் குளிக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்டது தான் தாமதம் அலறியபடி



“வேணா(ம்) வேணா(ம்) இந்தா அஞ்சு நிமிசுத்துல குளிச்சுப்புட்டு ஒடியாறேன்.” என்றவிட்டு அவன் பதிலை கேளாமல் பட்டென்று குளியல் அறைக் கதவை சாற்றிவிட்டாள்.



கதவில் சாய்ந்தவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு தன்னை ஸ்திரப்படுத்டிக் கொண்டு காலை கடன்களை முடித்தவள், இளஞ் சூட்டில் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றிக் கொள்ளவும் தான் நேற்றிரவு கணவனிடம் தன் கொட்டி விசயங்கள் நினைவில் படங்களாக ஓடியது. கையிலிருந்து குவளை நழுவி தரையில் விழுந்தது.. அவளுடைய முகம் பேயறைந்ததைப் போல் காணப்பட்டது. கதவு பலமாக தட்டப்படும் சப்தத்தில் தன்னை மீட்டெடுத்தவள் அவசரம் அவசரமாகக் குளித்துவிட்டு கணவன் தனக்கு வைத்திருந்த உடையையும் ஆபரணங்களையும் கவனியாது அடிப்பிடித்து அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.



மனைவியைக் கண்டவனின் முகத்தில் ஏதோ உணர்வு வந்து போனது.. அதைக் கவனிக்கும் நிலைமையில் அவன் மனையாள் இல்லை என்பதையும் அவன் கவனித்தான். அங்கு ஓரமாக நின்றிருந்த நடத்துர வயது பெண்மணியைப் பார்த்து கண்ணசைக்கவும் அவள் புகழினியை நெருங்கினாள். அடுத்த அரைமணி நேரத்தில் கருப்பு வைரமாக ஒளிர்ந்த மனைவியின் தோற்றத்தில் திருப்தியுற்றவனாக அந்தப் பெண்ணை பார்த்து சன்னமாக தலையசைத்தான். அந்தப் பெண்மணி மரியாதையாக அவனையும் புகழினியையும் வணங்கி விடைபெற்றுச் சென்றார்.



***

“மேடம் என்ன நைட் தூக்கம் பத்தலையா? காலையிலிருந்து கண்ணை திறந்து வச்சுக்கிட்டே தூங்குற? எனக்கும் இந்த வித்தையைக் கொஞ்சம் கற்று கொடேன்!” பரிகாசமாகக் கூறியவன் மனைவிக்காக கார் கதவைத் திறந்துவிட்டான்.



ஏதோ நினைவில் காரை இறங்கியவளின் முகம் எத்திரில் தெரிந்த காட்சியில் பேயறைந்ததை போல் ஆனது. அவளையே கூர்ந்த ஷிவேந்திரனின் விழிகளில் பளபளுப்பு! தன்னை நோக்கித் திரும்பிய மனையாளைப் பார்த்து ‘எப்படி’ என்று புருவம் உயர்த்தியவனின் விழிகளில் தவழ்ந்தது அந்தச் சிரிப்பு.





கருப்பு அழகி வருவாள்…









 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Dears :)
En hubby laptop enkita ipo illa... so english la dhan type pana mudiyum..dont mistake..

Old Readers, yes neenga nenaikra madri nan epi's mathi iruken.. ini vara epis ellam pudusa daan irukum.. cos.. old epis irundha ennala indha storya 2 parts la finish pana mudiyadhu.. 3,4 nu poikite irukum... adhan indha change over...

New readers, ungalil sila peruku... indha storyla continuity miss agudhu illana story kozhapudhunu feel panringa... ungaloda adhangam enaku puriyudhu... unga ellaarukum teriyum idhu ennoda mudhal kadhai.. indha kadhai karu mutrilum pudhidhu endru sollum dhairiyam enaku illa... aanal sollum vidham kandippaga pudhidhu.. vazhakamana logic illa magic kadhaigalil idhuvum ondru... story narration dhan vidhyasamanathu... enakendru oru signature style vendum endra asai... adhodu evalavu complexa ennal kadhai ezhadha mudigiradhu endru nan terindhu kolla vendum... ennudaiya flow maarinaal kadhai urukulaindhu vidum... indha kadhai mudindha pinbu... vasagargal yavarum.. kuzhapugiradhu endru feel seidhal.... parkalam.. adhai patri ipodhu pesa vendam..

nan fb la neraiya per stories pathi review kodukaradhai pathuruken... en aracha mavaiye araikringa.... pudhidaga yosiyungal, creativity konjam vendum ... endru innum pala karuthugal... ennudaiya kadhaiku ippadi oru vimarsanam varakoodadhu enbadhu en mudhal aim.. irandu bagam ondrodu ondru pinni pinaindhu irukum.... 2 partsayum serthu padithal dan indha kadhai puriyum.. apadi dan indha kadhaiyai nan ezhudugiren...

evalavu nandraga ezhudhinaalum kadaisiyil adharku angigaram kodupadhu vasagargal dhan... ipodaiku ennudaiya padhil.. kadhai mudiyum varai poruthirungal :)

Veru edhenum ennidam solla venduma sollungal ... kandipaga ungalaku badhil alika nan kadamai patiruken :)
 
Status
Not open for further replies.
Top