All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கதை திரி

Status
Not open for further replies.

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கணவன் திரன் குழுமத்தை வளர்ப்பதற்குத் தனது சீமந்த புத்திரியையும், அவளது பிள்ளைகளையும் உதாசினப்படுத்துவதை அவர் ரசிக்கவில்லை. அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமையையும் சொத்து சுகங்களையும் கொடுக்கவில்லை என்ற கோபம் மனதின் உள்ளே கனன்று கொண்டிருக்கும். ஷிவேந்திரன் முன்பு தன்னுடைய மகள் வயிற்றுப் பேர பிள்ளைகள் பிச்சை காரர்கள் போல் நிற்பதைக் காண காணக் கணவனை விஷம் வைத்துக் கொன்றுவிடும் என்று வெறி வரும். ஆனால் அந்த தர்மேந்திரன் இல்லையென்றால் தான் இந்த சுபிக்ஷத்திற்குள் வாழ முடியாது என்பதை அவர் அறிவார். ஷிவேந்திரன் வாழ விடமாட்டான்! இங்குக் கணவனை காண வேண்டி வந்திருப்பதற்குக் காரணம் விமன்யா! ஆசை பேத்தி! கணவனிடம் பேச ஆரம்பித்தார் மேகவதி.



“விமிய பத்தி பேசனும்” என்று கணவனின் முகம் பார்த்தார் மேகவதி. தர்மேந்திரன் முகம் பார்த்து அவர் அதிகம் பேசுவதில்லை. அப்படிப் பேசினால் தனது மகளுக்காவும், அவளுடைய பிள்ளைகளுக்காகவும் மட்டும் தான் இருக்கும். தர்மேந்திரன் மேலே சொல் என்பது போல் அமைதியாக இருந்தார்.



“விமிக்கு மேரஜ் பண்ணனும். ஷிவ் அந்த ராஜகுமாரிய கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டான். இனிமே விமிய இப்படியே விட முடியாது அவளோட லைஃப் ஸ்பாயில் ஆகிடும். அவளுக்கு நல்ல மாப்பிள்ளை நீங்க பார்க்கனும்.



“பார்க்கலாம்.. பெரிய விஷயமில்லை மேகா.”



“அவ நம்ம பேத்தி. நம்ம ஸ்டேட்டஸ்ல பாருங்க.. ஆல்ரெடி ஷிவ்வ கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு கோபத்துல இருக்கா.. அதனால பைத்தியம் மாதிரி அலையிறா. அப்படியே வேற ஒருத்தனை மேரேஜ் பண்ணாலும் ஷிவ்வவிட எல்லா விதத்திலையும் பெஸ்ட்டா ஒருத்தனை தான் பண்ணிக்குவாளாம். அடிச்சி சொல்லிட்டா.”



“ஓ..! நோ பிராப்ளம் அவளையே அப்படி ஒரு மாப்பிளையை பார்த்துக்கச் சொல்லு. நாம சந்தோசமா போய் மேரஜ் அட்டெண்ட் பண்ணிட்டு வரலாம்.”



“என்ன விளையாடிறிங்களா?” கணவனிடம் சீறினார் மேகவதி.



“லுக் மேகா, அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தான் ஆசைப்படனும். ஷிவ்வ கல்யாணம் பண்ணிக்க என்ன தகுதியிருக்கு விமன்யாவுக்கு? அத்தை பொண்ணுன்றது எல்லாம் தகுதி கிடையாது. இதுவே ஷிவ் வசதியில்லாதவனா சாதாரண ஒரு கிளார்க்கா இருந்தா உன் பேத்தி இப்படி கல்யாணம் பண்ண ஒத்த காலுல நிப்பாளா? உன் பொண்ணும், மருமகனும் நம்ம வீட்ல பழியா கிடப்பாங்களா? அவங்களுக்கு வாழ்க்கையில பொழைக்க வழி தெரியலை, அதுக்கு ஷிவ்கிட்ட ஒட்டிக்க பாக்குறாங்க. அவன் ஒன்னும் சுகுணாயில்லை அப்படியே நீங்க உருக்கமா ஆடுற நாடகத்தை நம்பி மோசம் போறதுக்கு. ஹீ இஸ் ஷிவ்! நியாயம் அநியாயத்தைப் பத்தி நான் பேசல. பட் ஷிவ் டிசைட் பண்ண ஒரு விஷயத்தை நான் மாத்த மாட்டேன்.”



மேகவதியின் முகம் கறுத்துவிட்டது, ஆனால் கணவனிடம் தன் மகளை விட்டுக் கொடுக்காது. “இங்க பாருங்க, அவ சொன்னதை நான் சொன்னேன். அவ சின்ன பொண்ணு மனசுல நடக்காத ஆசைய வளர்த்துக்கிட்டா. அதுக்கு நாமளும் ஒரு விதத்தில காரணம் அதை மறுக்கவோ மறக்கவோ வேண்டாம். இப்போ நான் கேக்கறது, நம்ம அந்தஸ்துக்கு ஓரளவுக்கு கிட்ட நிக்க கூடிய இடத்தில விமிக்கு சம்பந்தம் பண்ணனும்.”



“ரகுவரன் மகளாகத்தான் எல்லாரும் பார்க்குறாங்க.”



“தர்மேந்திரன் பேத்தியா பார்க்கவைங்க.”



"எல்லாரும் பணமும் பாரம்பரியமும் எதிர்பார்க்குறாங்க. இன்னாருடைய வீட்ல சம்பந்தம் பண்ணறோம்னு வெளில மதிப்பா சொல்லிக்க ஆசைப்படுறாங்க. அப்படி பார்த்தா உன் மருமகன் ரகுவரன் போல தான் ஒருத்தன் கிடைப்பான் பராவாயில்லையா??”



“ஹக் தி கிரேட் கஜேந்திரனோட பேத்திக்கு, ஃபேமஸ் இண்டஸ்டிரியலிஸ்ட் தர்மேந்திரனோட மகளுக்கு ரகுவரன் தான் கிடைச்சான்!”



“இல்லைன்னு யாரு சொன்னா! எங்க பிள்ளைக்கே இப்படின்னா ரகுவரனோட பிள்ளைங்களுக்கு எப்படிப்பட்ட பிள்ளைங்க கிடைக்கும்! யோசிக்கனும்..”



“நாம இங்க ஆர்கியு பண்ண வரலை...என் மகளுக்கு வந்த நிலை என் மக வயித்து பேரப் பிள்ளைகளுக்கு வரக் கூடாதுன்னு நினைக்கிறேன்!” என்றார் கரகரத்த குரலில் மேகவதி கலங்கிய கண்களுடன்.

.

மனைவியின் அந்தக் குரலில் தன் கண்களை மூடிக் கொண்டு தலையைப் பின்னுக்கு சாய்த்துக் கொண்டார்.

“ராஜேந்திரன் சுகுணாவோட பிள்ளைங்க விஷ்வேந்திரனும் ரூபாதேவியும் நமக்குச் சமமான அந்தஸ்துல இருக்கிற குடும்பத்தில ஓஹோனு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஷிவேந்திரன் இவங்களுக்கு ஒரு படி மேலே போய் ராஜவம்சத்தில கல்யாணம் பண்ணிக்க போறான். இதெல்லாம் எப்படி நடக்குது. ராஜேந்திரன் சுகுணாவுக்கு கணவனா அமைஞ்சதால தான். வசுந்தராவுக்கு நாம கவுரவத்தை காப்பத்துறோம்னு எவனோ ஒரு கையாலாகதவன கட்டி வச்சிட்டோம்!.

ராஜேந்திரன் செஞ்ச தப்புக்கு என் மகளும் அவளுடைய பிள்ளைகளும் தண்டனை அனுபவிக்கிறாங்க. சுகுணா! அவ இன்னைக்கு ஜெ.எம்.டியா இருக்கா, எதனால? திறமையான புருஷனால! ஒன்னுமில்லாம வந்தவ, அவ பிறந்த வீட்டுல இருந்து ராஜ் ஒத்த பைசா வாங்கல. அவளை ராணி மாதிரி பார்த்துக்கிறான். அவளுக்கு அப்புறம் தான் பிள்ளைகளுக்கு சிவகாமி இண்டஸ்டிரீஸ் அப்படின்னு அவளுக்காக யோசிச்சி உயில் எழுதி வச்சிட்டான். கண்ணோட இமை போல வச்சு காப்பாத்துறான். வாழ்க்கைப்பட்டா அப்படியொரு புருஷனுக்கு வாழ்க்கைபடனும்! வசுந்தராவிற்கு நாம என்ன மாதிரி வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்கோம்னு யோசிச்சு பாருங்க. வசுவுக்கு கிடைக்காத அந்த நல்வாழ்வை விமிக்கும், வசந்துக்கும் கொடுக்கனும். நாம செய்யாம தவறவிட்டதை நம்ம பேத்திக்காக பேரனுக்காக செய்யனும்... நீங்க அதுக்கான வேலையைச் செய்யுங்க.. என் பேத்தி பேரன் நல்ல இடத்தில வாழ்க்கைப்பட்டு நல்லா இருக்கனும். அதை தவிர உங்ககிட்ட கேட்க எனக்கு எதுவுமில்லை” என்று அமைதியான குரலில் தன்னுடைய கோரிக்கையை(?) முன் வைத்தவர், கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டார்.

தர்மேந்திரன் அசையாமல் அமர்ந்திருந்தார். மனைவி சுற்றி வளைத்து நீயும் குற்றவாளி தான் என்று சொல்லிவிட்டுச் சென்றது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தியாகத் தெரியவில்லை. ஆனால் வசுந்தராவின் வாழ்வில் நடந்த அவலங்களுக்கு ஒரு தந்தையாக அவரும் காரணியே என்பதால் மனைவியின் கோரிக்கையைப் பற்றிச் யோசிக்கலானார். ஒரு சில நிமடங்களில் யோசனையில் இருந்து விடுபட்டவராக தன்னுடைய அலைபேசியிலிருந்து தன்னுடைய நெருங்கிய நண்பனுக்கு அழைப்பு விடுத்தார்.



விமன்யா இன்னொரு வசுந்தராவா அல்லது சுகுணாவா?



கருப்பு அழகி வருவாள்


 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே,
'என் கருப்பழகி'-15வது அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

உங்களோட மனமார்ந்த பாராட்டுகளுக்கும் கருத்துகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. கண்டிப்பா தனிப்பட்ட பதிலை எல்லோருக்கும் இரண்டொரு நாட்களில் கொடுக்கிறேன். இரவில் அப்டேட்டுக்காக நிறைய பேர் தூக்கம் முழிக்கிறிங்க. அது எனக்கு சங்கடத்தைக் கொடுக்குது. இந்த நேரத்தில் பதிவிடப்படும் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. அதனால் முடிந்த மட்டும் மாலைக்குள் பதிவேற்றி விடுகிறேன். உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்பிகிறேன்.

#SAVEDELTA
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கருப்பழகி”

அத்தியாயம் – 15


வசந்த்! அந்தஸ்தான அழகிய நங்கைகளிடம் பிழிய பிழிய காதல் வசனங்களை பேசி அவர்களை கவர்ந்து சென்று காதல் செய்து கையாட்டிவிட்டு செல்லும் கைகாரான். அவன் அகராதியில் காதல் எனும் வார்த்தையின் அர்த்தம் காமம்! இன்று அந்த அகராதியில் காதலின் அர்த்தம் மாற்றி எழுதப்பட்டவிட்டது கவிதையாக அவளால்! அவள் சம்யுக்தாதேவி! அழகி! பேரழகி! உதய்பூர் சம்ஸ்தானத்தின் ராஜகுமாரி. வீழ்ந்துவிட்டான்! அந்த நொடி காதலில் வீழ்ந்துவிட்டான்! அரசிளங்குமரியின் வதனத்திலும், வனப்பிலும் வசந்தினுள்ளே உறங்கி கிடந்த உண்மை காதலன் உயிர்த்தெழுந்தான். பார்க்கும் பெண்களை எல்லாம் துகிலுரிக்கும் துச்சாதனன் தன்னுடைய காதலியை கண்களில் கனிவும் காதலும் பொங்க சொந்தத்துடன் நோக்கினான்.



சம்யுக்தா வசந்தை சந்திப்பதற்காக ஈ.சி.ஆரில் உள்ள பிரபலமான ரிசார்ட்டிற்கு வருகை தந்திருந்தாள். வசந்த்தும், ரகுவரனும் ரிசார்டின் கீழே உள்ள ரெஸ்டாரண்டில் அவளுக்காக காத்திருந்தனர். சம்யுக்தா ரெஸ்டாரண்டினுள்ளே நுழைந்தது முதல் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் வசந்த். அடர் சிவப்பு நிற டிசைனர் சேலையில் கூந்தலை விரியவிட்டு அங்கமெல்லாம் மெல்லிய வைர நகைகள் மின்ன ஒய்யாரமாக நடந்து வந்தாள். அப்ஸரஸூ! அழகு தேவதை! என் தேவி! என வசந்த் மனதிற்குள் பிதற்றினான். ரகுவரனுக்கு அவளை பார்க்க பார்க்க காதில் புகை வராத குறை. இந்த பெண் ஷிவேந்திரனை திருமணம் செய்யப் போகிறாள் என்ற உண்மை அவருக்கு கசந்து, அவளை ஒட்டாத பார்வை பார்த்தார்.



அவள் அருகில் வரவும் இருவரும் எழுந்து கொண்டனர். அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்த நவீன இருக்கையில் அமர்ந்து அலட்சியத்துடன் கால் மேல் கால் போட்டு கொண்டாள். அவர்களை உட்காருமாறு தலையசைத்தாள். ரகுவரனுக்கு சினம் பொங்கியது “பெரிய மகாராணி அலட்டறதை பாரு! ஆமா அவ ராஜகுமாரி தானே! வருங்கால மகாராணி!” என்று மனதிற்குள் விவாதித்தார். வசந்த் அவளை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தான்.



சம்யுக்தாவிற்கு தன்னை ஆர்வத்துடன் யாரும் பார்த்தால் அவர்களை எள்ளலாக பார்க்க பிடிக்கும். பார், என் அழகை பார்! என் அந்தஸ்தை பார்! என்று அவர்களை தரம் தாழ்த்த பிடிக்கும். ஆனால் அதுவே யாரேனும் உரிமை கலந்த ஆர்வமான பார்வை பார்த்தால், என் கால் செருப்பிற்கு நீ இணையா என்று பார்ப்பாளே ஒரு பார்வை! எந்த ஆண்மகனும் அந்த பார்வையை தாக்குபிடித்து நெருங்கியதில்லை. அப்படி நெருங்க முற்பட்டவர்களை அவள் கவனிக்கும் விதமே வேறு. இன்று வசந்தன் அந்த பார்வையை பார்த்ததும் அவளுக்கு பற்றி கொண்டு வந்தது. ஷிவேந்திரன் ஒரு பொழுதும் இப்படி ஒரு பார்வையை பார்த்ததில்லை. ஓர் அழகிய பெண் அதிலும் அரண்மைப் பேரழகி என்று ஆர்வப் பார்வை கூட பார்க்கமாட்டான். அவன் பார்க்காத அழகிகளா! புகழினியை கையாள அவளுக்கு சுபிக்‌ஷத்துள் ஆட்கள் தேவைப்பட்டார்கள். வசந்த், அவன் அவளுக்கு தேவை.



அவளின் தீவிர யோசனையை கலைத்தான் வசந்த்



“ஹாய் சம்யுக்தா”



“டெல் மீ வசந்த் வைய் டிட் யு ஜஸ்ட் கால் மீ?”



“கண்டிப்பா பேசலாம். மிஸ் சம்யுக்தா வாட் வுட் யு லைக் டு ஹேவ்?”



“ஐயாம் நாட் ஹியர் ஃபார் தட்”



அவள் சொன்னதை சட்டை செய்யாது மூவருக்கும் தேவையான பானங்களை வசந்த் வரவழைத்தான்.



“சம்யுக்தா இஃப் யூ டோண்ட் மைண்ட் நாம பீச் சைட் போய் பேசலாமா.”



யோசனையாக பார்த்துவிட்டு சரி என்று தலையாட்டினாள். மூவரும் ரிசாட்டின் பின் பக்கமிருந்த பீச்சை நோக்கி சென்றனர்.



வசந்த் கடல் அலைகளை முகத்தில் சிறு புன்னகை படற பார்த்து கொண்டிருந்தான். ரகுவரன் இந்த பெண் வசந்திடம் பேச வேண்டிய காரணம் தெரியாமல் மண்டை காய்ந்தார். வசந்தின் பரவச நிலையை உணர்ந்து கொண்ட சம்யுக்தா “விட்டால் இன்னைக்கு ஃபுல்லா கடல் அலைகளை காதலா பார்ப்பான். ஸ்டுபிட் ஃபெலோ” என்று மனதிற்குள் திட்டி தீர்த்தாள். பின் முடிவு கட்டியவளாக அவனுடன் பேசலானாள்.



“வசந்த் வை டிட் யு கால் மீ ஹியர்? இந்த கடலை பார்க்கவா கூப்பிட்டிங்க!”



“இன்னைக்கு என்னவோ இந்த அலைகளை பார்க்கிறதுக்கு ரொம்ப வித்தயாசமா இருக்கு. சம்திங் பிளெசண்ட் இஸ் ஹேப்பிங் இண்சைட் மீ!”



சம்யுக்தாவின் கடுப்பான பார்வையை கண்டு, அதற்கு மேல் தாமதிக்காமல் நேரே விஷயத்துக்கு வந்தான்.



“அந்த கறுப்பிய உங்களுக்கு எப்படி தெரியும்? எங்க முதல்ல பார்த்திங்க?”



“ஹௌவ் டஸ் இட் கன்சர்ன் யூ?”



“அஃப்கோர்ஸ் இட் கண்சர்ன்ஸ் மீ!”



“ஹௌவ் அண்ட் வொய்?”



வசந்த் தன் பேண்ட் பாக்கடில் இருந்த சிகரட் கேசை எடுத்து அதிலிருந்த சிகரட் ஒன்றை எடுத்து உதடுகளில் பொருத்தி பற்ற வைத்தான். ஆழமாக மூச்செடுத்து புகையை ஊதினான். பின்பு தன் தந்தையை திரும்பி பார்த்தான். “இடத்தை காலி செய்” என்றது அவனது பார்வை. ரகுவரன் மகனை முறைத்துவிட்டு வேறு வழியின்றி தனக்கு முக்கியமான வேலையிருக்கிறது என்று இருவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினார்.



“சோ ராஜேந்திரன் மாமாவை பழிவாங்க ஷிவ் அத்தானை கல்யாணம் பண்ணிக்க போறிங்க இல்லையா ராஜகுமாரி சம்யுக்தா தேவி?”



சம்யுக்தா எந்த அதிர்ச்சியுமின்றி அசட்டையாக அவனை பார்த்தவள், ஏளமான குரலில்



“நான் பழி வாங்குற அளவுக்கு உங்க மாமா ஒன்னும் பெரிய ஆள் இல்லை மிஸ்டர் வசந்த். நான் ராஜகுமாரி சம்யுக்தா தேவி. பல தொழில்களை உடைய ராயல் லோட்டஸ் குரூப்போட வாரிசு!“



“ம்ம் எஸ் ராஜ் மாமாவைவிட நீங்க வெல்த்தி தான். பட் தி பாண்ட் இஸ், கிட்ட தட்ட முப்பத்தெட்டு வருஷத்துக்கு முன்னாடி இதே ராஜ் மாமாவ கல்யாணம் பண்ணிக்க உங்க சமஸ்தானத்து ராஜகுமாரி ஒற்றை கால்ல நின்னாங்க! அண்ட் தி ஹைலைட் இஸ், ஷி இஸ் நோ மோர்! எங்க மாமா செகண்ட் ஹனிமூனுக்கு கொடைக்கானல் போனப்ப அவங்க மாமாவ பாத்துட்டு மனசு உடைஞ்சி போய் கார பள்ளத்தாக்குல விட்டுட்டாங்க. அண்ட் தி லேடி இஸ் ரதி தேவி உங்க அப்பாவோட சொந்த தங்கை, தட் மீன்ஸ் உங்க அத்தை!”



“சோ?”



“யு ஹேவ் டு டெல் மீ யுவர் டெசிஷன் இன் ஜாயினிங் ஹேண்ட்ஸ் வித் மீ சம்யுக்தா!” என்றான் இருபொருள் பட.



சகல கலைகளையும் கற்று தேர்ந்த அந்த பெண்ணரிசிக்கா வசந்த் சொன்ன செய்தி புரியாது! ஆர்பாட்டமின்றி “வாட் ஃபார்?” என்றாள்



“எதிரிக்கு எதிரி நண்பன். அஸ் சிம்பிள் அஸ் தட்”



“உங்க ராஜ் மாமா உங்களுக்கு எதிரியா”



“சம்யுக்தா எங்க ஃபேமிலிய பத்தின எல்லா விஷயமும் உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும். சோ, அனாவசியமா டைம் வேஸ்ட் பண்ணாமா, நம்மளோட காமன் டார்கெட்ட எப்படி அழிக்கிறதுனு பிளான் பண்ணலாம்.”



சம்யுக்தா யோசனையானாள். புகழினி அவளது கண்களில் விழுந்த துரும்பாக உறுத்தி கொண்டேயிருந்தாள். இன்னொருவரின் உதவி இல்லாமல் அந்த துரும்பை நீக்கவது கடினம். அந்த உதவியாளன் வசந்த். ஷிவேந்திரனின் உடைமைகளை களவாட நினைக்கும் கூட்டத்தை சேர்ந்தவன். தன்னுடைய அழகில் மயங்கி தன்னை உரிமை கலந்து ஆர்வ பார்வை பார்ப்பவன். அவனது பலவீனம் அவளது பலம்! காதல் கலந்த ஈர்ப்பு! அவளின் மேல் அவனிக்கிருக்கும் ஈர்ப்புடைய காதல் தான் வசந்த்னை பொம்மை போல் அவள் நினைந்தது போல் ஆட்டுவிக்க முடியும்.



ஷிவேந்திரனின் பார்வை புகழினியின் மேல் சும்மாவேனும் படிவதை கூட சம்யுக்தா விரும்பவில்லை. புகழினி! பார்த்துவுடன் மனதில் ஒட்டி கொள்ளும் பெண்ணல்ல. அதற்கான நிறமும், முக பொலிவும், உடல் வாகும் அவளிடமில்லை! பற்றாகுறைக்கு நொண்டி வேறு! ஆனால் பழக பழக அவளது வெகுளித்தனத்தில் பெரும்பாலோர் கவிழ்ந்து விடுவார்களே! ஷிவேந்திரன் உணர்ச்சிகளுக்கு அப்பார்பட்டவன். அவன் உரிமையாக உடைமையாக பாராட்டும் எதையும் எவரையும் விட்டு கொடுக்கமாட்டான். புகழினி அவனின் உரிமை! அவனின் உடைமை! அப்பொழுது சம்யுக்தா? அவள் யார் அவனுக்கு? ஷிவேந்திரனை கைப்பிடிக்கும் வரை எதுவும் உறுதியில்லை. சம்யுக்தாவிற்கு எதிலோ தோற்று கொண்டிருப்பது போன்ற உணர்வு. உள்ளுணர்வு என்பார்களே, அது ஷிவேந்திரனை நீ இழக்கப் போகிறாய் என்றது. அதனை அவளால் சீரணிக்க முடியவில்லை. “இப்படி தான் தனது அத்தை ரதி தேவிக்கும் இருந்திருக்குமோ? தோற்றுவிட்டார்களே, ஒரு அண்ணாடங்காய்ச்சியிடம் தோற்றுவிட்டார்களே! சாமணிய பெண் சுகுணா அரசிளங்குமரியை வேர் அறுத்துவிட்டாளே! சரித்திரம் திரும்புகிறதா? திரும்பாது! திரும்பவும் நான் விடமாட்டேன்!” என்றவளின் எண்ண வலை அறுப்பட்டது.



“சம்யுக்தா, சம்யுக்தா, சம்யுக்தாஆஆஆ” என்று அவளை சத்தமாக விளித்து அவளின் யோசனை வலையை அறுத்தான் வசந்த். தன் முன் கைகளை ஆட்டி கொண்டிருந்தவனை பார்த்து என்ன என்பது போல் புருவம் உயர்த்தினாள். அதில் மயங்கி தான் போனான் வசந்த், ஆனால் நொடியில் சுதாரித்தான்.



“ஊஃப், அப்படியே ஃபிரீஸ் ஆன மாதிரி உக்காந்து இருந்திங்க. நான் பயந்துட்டேன். வாட் இஸ் ஈட்டிங் யு சம்யுக்தா?” என்று மென்மையான குரலில் வினவினான் வசந்த்.



சம்யுக்தா அந்த மென்மைய்யான குரலை விரும்பவில்லை ஆனால் முகத்தில் எதையும் காட்டி கொள்ளவில்லை. அவனின் உதவி அவளுக்கு தேவையாயிற்றே!



“வசந்த் நீங்க ஏன் அந்த கறுப்பிய பத்தி விசாரிக்கிறங்க?”



“ஷிவ் அத்தான் எதையும் காரணமில்லாம செய்யமாட்டார். அந்த கறுப்பிய கல்யாணம் பண்ணியிருக்காரு. அதோட அவளோட டீடெய்ல்ஸ் எதையும் கண்டு பிடிக்க முடியல. அதான் உங்களுக்கு எதுவும் தெரியுமானு கேட்டேன்.”



“ம்ம்ம் பட் ஸ்டில் யு டின் ஆன்சர் மை குவஷின்.”



“கறுப்பிய வச்சி ஷிவ் அத்தான் என்ன பிளான் பண்ணுறாருன்னு நான் தெரிஞ்சிக்கனும்.”



“அதை தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்ன பண்ணப்போறிங்க!”



வசந்த் முதன்முதலாக அவளை எரிச்சலுடன் நோக்கினான். “என்ன சும்மா சும்மா இந்த பொண்ணு ஒன்னுமே தெரியாத மாதிரி என் வாய பிடுங்குது?” என்று மனதிற்குள் எண்ணி கடுகடுத்தான். சம்யுக்தா புருவத்தை ஏற்றி இறக்கினாள். அந்த அழகில் எரிச்சல் மறைந்து அவனது மனது அவளை பார்த்து ஜொல்லியது.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஒகே. எனக்கு திரன் குரூப்ல ஈகுவல் ஷேர்ஸ் வேணும். எந்த விதத்திலயாவது அதை நான் அடையனும். கறுப்பி மூலம் எதாவது ஆதாயம் கிடைக்குமானு பார்க்கிறேன்.”



“அவ என்ன அவ்வளவு பெரிய ஆளா?”



“தெரியல, பட் ஷிவ் அத்தான் பொண்ணுங்களை கிளப் ஹவுஸ் தாண்டி வரவிட்டதில்லை. வீட்டுக்கே ஒரு நொண்டி பொண்ண கூட்டிட்டு வந்திருக்கார், அதுவும் வைஃபா! ஷீ மஸ்ட் செர்வ் சம் பர்பஸ் டு ஹிம்.”



“வாட் பர்பஸ்? அந்த நொண்டி கறுப்பியால என்ன பிரோயஜனம் ஷிவ்கு? ஷிஸ் இஸ் அன்னஃபிஷியல் வைஃப்! ஷிஸ் நாட் ஈவன் ஃபிட் டு கிளீன் ஹிஸ் ஷூஸ். அவள் ஷிவ்கு வைஃப்! ஷிட்!” என்று படபடத்தாள் சம்யுக்தா. புகழினி, தான் இத்தனை வருடம் கற்று தேர்ந்த நிதானத்தை இழக்க வைக்கிறாள் என்று எண்ணி மனதிற்குள் பொங்கினாள். அவளது நாசி விடைத்து கண்கள் சிவந்தன.



வசந்தின் கூர் புத்தி சம்யுக்தாவின் பதட்டத்தையும், கோபத்தையும் கண்டு கொண்டது. ராஜபாரம்பரியத்தில் பிறந்த பேரழகி, ஓர் கிராத்து நொண்டி கறுவாச்சியை பார்த்து படபடப்பதா! ஷிவேந்திரனின் வருங்கால மனைவி என்று சொல்லி கொள்பவள் இப்படி நிதானம் இழப்பதா! விஷயம் பெரிது தான். ஆக கறுப்பி கவனிக்கப்பட வேண்டியவள். என மனதில் நினைத்து கொண்டான்.



“ஓகே கூல் கூல். இங்க ஸ்னோ பவுலிங் கோர்ட் இருக்கு, ஷால் வீ கோ? நமக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்.”



“நோ வசந்த், ஐ ஹேவ் சம் கமிட்மெண்ட். நான் கிளம்புறேன். சீ யூ” என்று கூறுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் விரைவாக சென்றுவிட்டாள்.



இரண்டு கைகளையும் பேண்ட் பேக்கட்டில் நுழைத்து கொண்டு, போகும் அவளையே யோசனையுடன் பார்த்தான். தனது அலைபேசியை எடுத்து ஒரு எண்ணுக்கு அழைத்தவன், தொடர்ந்து அரை மணி நேரம் ஏதேதோ பேசினான். அலைபேசியை அணைத்து வைத்தான். “புகழினி” என்று உச்சரித்த வசந்தின் முகத்தில் மர்ம புன்னகை மலர்ந்தது.



தனது லாம்பர்கினி காரில் சென்று கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு இன்று காலை ஷிவேந்திரனின் அலுவலகத்தில் நடந்தது அவளது நினைவில் வலம் வந்து பாடாய் படுத்தியது. கார் ஸ்டியரிங்கை புகழினியின் கழுத்தாக நினைத்து இறுக்கி பிடித்தாள்.



அன்று காலை ஷிவேந்திரன் என்னை சேர்ந்தவர்களை தொட நினைத்தால் கொன்றுவிடுவேன் என்று மறைமுகமாக தன்னை எச்சரித்ததை நினைத்து மனம் காந்தியது. ஆஸ்தான மனைவியாக போகும் என்னைவிட அந்த நொண்டி நாயின் மீது அவ்வளவு அக்கறையா என்று எண்ணி மனதிற்குள் வெந்தாள். தன்னுடைய கைப்பையை எடுத்து கொண்டு அவனை பின் தொடர அறையை விட்டு வெளியே வந்தாள். அவன் அதற்குள் காணாமல் போயிருந்தான். மாயன்! அங்கிருந்த பெண்கள் அவளை ஓரக் கண்ணால் பார்ப்பதை அவள் கவனித்து கொண்டு தான் இருந்தாள். அவர்களை சட்டை செய்யாது அவன் மீட்டீங் ஹாலுக்கு தான் சென்றிருக்க வேண்டும் என்று அனுமானித்து அதனை நோக்கி சென்றாள்.



ஷீத்தல் நிறுவன அலுவலகத்தின் தரை தளத்தின் பின்னே உள்ள திடல் போன்ற அமைப்பில் பந்தல்கள் போடப்பட்டிருந்த இடத்திற்கு புகழினியை அழைத்துச் சென்றாள். புகழினி யாருடைய விசித்திர பார்வையையும் கண்டு கொள்ளாது சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தவாறு சென்றாள். அங்கிருந்த செயற்கை நீருற்றும், லானும், போகும் இடமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமையாக இருந்ததையும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தபடி மெல்ல நடந்தாள்.



முன்னே சென்று கொண்டிருந்த ஷீத்தல் திரும்பி பார்த்தாள், புகழினி கிட்ட தட்ட பத்திடி தூரத்தில் தன்னிடம் பின் தங்கி இருந்ததோடு, சிறு பிள்ளை போல் வேடிக்கை பார்த்து கொண்டு வருவதைக் கண்டு அவளுக்கு எரிச்சலாக இருந்தது. மூன்று முறை சொடிக்கிட்டாள், புகழினியின் காதுகளுக்கு எட்டவில்லை. முணுமுணுத்துவிட்டு கைகளை பலமாக தட்டினாள் அதற்கும் அவள் திரும்பி பார்க்கவில்லை! வேகமாக புகழினியின் அருகில் சென்றாள்.



“ஹே லுக்”



“ஹான்”



“வாட்ஸ் யுவர் பிராப்ளம்? வைய் ஆர் யூ நாட் ஃபாலோயிங் மீ?”



“கொஞ்சம் பைய பேசுறியளா? எனெக்கு நீங்க என்னெ பேசுறியனு விளங்களை. இங்குலிசும் தெரியாது. இப்பத்தேன் ரெண்டு மூனு வார்த்தை கத்துக்குறேன்” என்றாள் புகழினி வெகுளியாக.



“ஊஊஃப்ஃப்ஃப்! ஓகே ஏன் இவ்வளவு மெதுவா வர? அதோட வேடிக்கை பாக்குற? இதென்ன மார்க்கட்டா, கடையை வேடிக்கை பார்க்குற மாதிரி வர? பாஸ் உனக்கு சொன்ன வேலையை நான் சொல்லிட்டு என் வேலைய பார்க்க போகனும்மா! இப்போ விளங்குதா!”



“ம்ம்ம் புரியுதுங்கெ! நா(ய்)ன் கட்டக்காலுக்காரி, பையதேன் நடக்க வரும், தப்பா நெச்சுக்காதிய. சாரு சமைக்கத்தேன் அழைச்சாருனு எனக்கு தெரியும். நீங்க எடம் எங்கன இருக்குனு சொல்லுங்கெ, நான் போய்க்கிவேன்.”



புன்சிரிப்புடன் தன்னுடைய குறையை எந்தவித அலட்டலுமின்றி சொல்லிவிட்டு தனக்கு இது தெரியவில்லை என்று சிறுதும் மனம் குன்றாமல் சொல்லும் அந்த வெகுளி பெண்ணிடம் ஏனோ அலட்சியத்தையும், கடுகடுப்பையும் காட்ட ஷீத்தலால் முடியுவில்லை. அவளிடம் கடுமையாக பேச மனம் வரவில்லை. ஆனால் நட்பு பாராட்டவும் அவள் விழையவில்லை.



“ஓகே! சரி வா உன்னை அந்த இடத்தில கொண்ட விட்டுட்டு, எல்லாத்தையும் சொல்லிட்டு தான் போகனும், பாஸோட ஆர்டர். கொஞ்சம் சீக்கிரம் வர டிரை பண்ணு.”



“ம், சரிங்கெ. உங்க பேரு சீத்தலா?”



தன்னுடைய பெயரை சீத்தல் என்றழைத்த புகழினியை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு நடையில் கவனம் செலுத்தினாள் ஷீத்தல். புகழினி ஷீத்தலுக்கு தன்னுடன் பேச பிரியமில்லை என்று புரிந்து கொண்டு அமைதியாக மறுபடியும் வேடிக்கை பார்த்து கொண்டே கொஞ்சம் வேகத்தை கூட்டி நடக்கலானாள். பத்து நிமடங்கள் கழித்து ஒரு பெரிய ஷாமினா பந்தல் போடப்பட்டிருந்த இடத்தில் வந்து நின்றனர். வழக்கம் போல் வேடிக்கை பார்க்கலானாள் புகழினி. ஷீத்தல் தலையை இடமும் வளமுமாக ஆட்டிவிட்டு, புகழினி செய்ய வேண்டிய வேலைகளை பற்றி சொல்லி கொண்டிருந்தாள்.



இன்று ஷிவேந்திரனின் அலுவலகத்திற்கு அயல்நாட்டிலிருந்து வாடிக்கையாளர்கள் வருவதால், அவர்களுக்கு தமிழர்களின் முறைப்படி மண்பாண்டங்களை உபயோகித்து அசைவ உணவுகளை சமைப்பது தான் புகழினிக்கு அளிக்கப்பட்டிருக்கும் வேலை. அவளுக்கு துணை புரிய இரு பெண்கள் வரவழைப்பட்டுள்ளனர்.



அசைவ சமையல் என்றதும் புகழினி ஆர்வமானாள். “அசத்திப்புடுறேன்! நீங்க கவலைப்படாம போங்க!” என்று உற்சாகமாக ஷீத்தலுக்கு பதிலளித்தாள்.



“ம்ம்ம் ஓகே, எதாவது உனக்கு வேணும் அப்டின்னா, இதோ இருக்கான்ல் இவன்கிட்ட சொல்லு. பேரு சந்தானம், வெளில போய் வாங்கி வர வேலையெல்லாம் இவன் செய்வான். இவங்க ரெண்டு பேரும் உனக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணுவாங்க! ஒகே யா? இஸ் தட் கிளியர்?”



எல்லோரும் புரிந்தது என்று தங்களது தலையை பலமாக ஆட்டினர்.



“ஹான், தென் முக்கியமான விஷயம். டுவெல் தட் இஸ் மதியம் பண்ணெண்டு மணிக்கெல்லாம் சமையல் முடிஞ்சு எல்லா ஐட்டம்ஸ் ரெடி ஆகிருக்கனும். ஒரு நிமிஷம் கூட டிலே ஆக கூடாது. ஓகே! சரி நான் கிளம்பிறேன். நீங்க வொர்க்க ஸ்டார்ட் பண்ணுங்க. கமான் பீ ஃபாஸ்ட்!” என்று உத்தரவிட்டுச் சென்றாள்.



புகழினி அங்குள்ளவர்களுக்கு என்ன என்ன வேலை செய்ய வேண்டும் என்று ஐந்து நிமிடத்திற்குள் திட்டமிட்டு பகிர்ந்தளித்து கொடுத்தாள். பிறந்ததிலிருந்து சமையலறையே அவளது புகலிடமாகி போனதால், சமைப்பது அவளுக்கு வெகு எளிதான வேலை. அசைவ உணவுகளின் தனித்துவமே சரியான அளவில் உப்பு, புளி, காரம் சேர்த்து சமைப்பது தான். அதனால் மசாலா அரைக்கும் வேலையை அவள் ஏற்று கொண்டாள். சமையல் வேலை தொடங்கியது.



ஷிவேந்திரன் தன்னுடைய அயல்நாட்டு வாடிக்கையாளர்களுடன் கான்பரன்ஸ் ரூமில் பேசி கொண்டிருந்தான். ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். பேச்சோடு பேச்சாக அதனைக் கொண்டாடும் பொருட்டு தங்களது பாரம்பரிய முறைப்படி அலுவலகத்திலேயே சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஷிவேந்திரன் கூறினான். அயல்நாட்டவர்களுக்கு பாரம்பரிய தமிழக உணவை சுவைக்கும் ஆவலோடு அதனை சமைக்கும் முறையை நேரில் காணும் ஆசையும் ஆவலும் வந்து ஒட்டி கொண்டது. அதனை ஷிவேந்திரனிடம் பகிரவே புன்சிரிப்புடன் இப்பொழுதே போகலாம் என்று கூற, அனைவரும் உணவு தயார் செய்யப்படும் இடத்தை கானும் பொருட்டு மின்தூக்கியை நோக்கி சென்றனர்.



அப்பொழுது மின்தூக்கியிலிருந்து வெளிப்பட்ட சம்யுக்தாவைக் கண்ட ஷிவேந்திரனின் புருவங்கள் சுருக்கின. சம்யுக்தா ஷிவேந்திரனை நெருங்கி அவனை மிதமாக அணைத்து விடுவித்துவிட்டு “ஹாய் ஷிவ், ஒரு இம்பார்டண்ட் மேட்டர் டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்தேன். பட் இட் சீம்ஸ் யூ ஆர் பிஸி!” என்று போலி ஆச்சரியம் காட்டி சொன்னாள். வாடிக்கையாளர்கள் முன் தன்னை எதுவும் சொல்லமாட்டான் என்ற தைரியத்தில் இப்பொழுது தான் அவனை பார்ப்பது போல் பேசினாள்.



“பை தி வே ஃபிரண்ட்ஸ், ஷீ இஸ் சம்யுக்தா தேவி, ராயல் லோட்டஸ் குரூப் ஜெ.எம்.டி. ஐயாம் பிஸி வித் மை கிளையண்ட்ஸ், மிஸ் சம்யுக்தா. ஐ காண்ட் எண்டர்டைய்ன் யூ நௌ.” என்று கூறி அவளின் மூக்கை உடைத்தான் ஷிவ்.



சம்யுக்தா அந்த மூக்குடைப்பை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அதனை கவனியாதது போல வாடிக்கையாளர்களுடன் கை குலுக்கி அவர்களுடன் தான் ராஜபாரம்பரியத்தில் பிறந்த தொழிலதிபர் என்று அறிமுகமாகி கொண்டாள். ராஜகுமாரி அதுவும் தொழில் திறமையுள்ள பெண் என்பதால் அவளை தங்களுடன் வந்து மதிய உணவுண்ண வருமாறு அழைப்பு விடுத்தனர் வாடிக்கையாளர்கள். சம்யுக்தாவும் அதனை மகிழ்ச்சியுடன் பதவிசாக ஏற்று கொண்டாள். ஷிவேந்திரன் குறுக்கே பேசாமல் அவர்களை பார்த்து கொண்டிருந்தான். அவனது முகத்திலிருந்து எதனையும் அறிந்து கொள்ள முடியாதவளாக ஆயாசப்பட்டாள் சம்யுக்தா. தனது மனக்கிலேசத்தை வெளியேக் காட்டிக் கொள்ளாது சிரிக்க சிரிக்க உரையாடினாள். ஆனால் வேறு ஒரு வழியில் ஷிவேந்திரன் தன்னைப் பழிவாங்க போகிறான் என்று அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை! கடுமையாக திட்டக்கூடும் என்று தான் அவள் எண்ணி அலட்சியமாக இருந்தது. மற்றவர்களின் நினைப்பிற்கு ஆடும் பொம்மையா அவன்! அவன் ஷிவேந்திரன்! பிளாக் சீட்டா! அசரடிக்கும் வேகத்துடன் எதிரிகளை கலங்கடிக்கும் அசுரன்!



நித்தம் நித்த(ம்) நெல்லுச் சோறு, நெய் மணக்கு(ம்) கத்திரிக்கா

நித்தம் நித்த(ம்) நெல்லுச் சோறு, நெய் மணக்கு(ம்) கத்திரிக்கா

நேத்து வச்ச மீன் கொழம்பு என்னை இழுக்குதைய்யா

நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதைய்யா


பச்செரிசி சோறு உப்பு கருவாடு

சின்னமனூரு வாய்க்கா சீலா கெண்டெ மீனு

குருத்தான மொளை கீரை, வாடாத சீறு கீரை

நினைக்கெயிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அள்ளி தின்ன ஆசை வந்து என்ன மீறுது

நித்தம் நித்த(ம்) நெல்லுச் சோறு, நெய் மணக்கு(ம்) கத்திரிக்கா

நேத்து வச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதைய்யா

நெஞ்சுக்குள்ளெ அந்தெ நெனப்பு வந்து மயக்குதைய்யா



பாவக்கா கூட்டு, பருப்போட சேத்து

பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு

சிறு காலான் வறுத்தாச்சு, பதம் பாத்து எடுத்தாச்சு

கேழ் வரகு கூழுக்கிது ரொம்ப பொருத்தமைய்யா

தெனம் குடிச்ச ஒடம்பு இது ரொம்ப பெருக்குமைய்யா

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கு(ம்) கத்திரிக்கா

நேத்து வச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதைய்யா

நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதைய்யா



பழைய சோறுக்கு தோதா, புளிச்சிருக்கு மோரு

பொட்டுகல்ல தேங்கா, போட்டரைச்ச தொவையலு

சாம்பாரு வெங்காய(ம்) சலிக்காது தின்னலாம்

அதுக்கு எணை ஒலகத்திலெ இல்லவே இல்ல

அள்ளி தின்னென் எனக்கு இன்னும் அலுக்கவே இல்லெ

இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ளெ ஆசை ஒன்னு

சூசகமா சொல்ல போரேன் பொம்பள தாங்க

சூடாக இருக்கருப்ப சாப்பிட வாங்க”
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாடியவாறு மீன் வறுவலுக்கு அம்மியில் மசாலா அரைத்து முடித்து அதனை அம்மிக் குழவியிலிருந்து வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தின் மேல் வாழை இலையை பரப்பி அதன் மேலே மசாலாவை வைத்த புகழினியின் கைகள் கை தட்டல்களின் ஓசையை கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் புகழினி. அயல்நாட்டு வாடிக்கையாளர்களுடன் ஷிவேந்திரன், சம்யுக்தா, ஆண்டோ, ஷீத்தல் இன்னும் சிலர் நின்று கொண்டிருந்தனர். சம்யுக்தா வேண்டுமென்றே ஷிவேந்திரனை நெருங்கி உரசியவாறு நின்று கொண்டிருந்தாள். வழக்கம் போல் அந்த நெருக்கம் புகழினியை பாதிக்கவில்லை. மாறாக அவள் உட்கார்ந்திருந்த விதம் அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது. அவளால் நின்று கொண்டு அம்மியில் மசாலாவை அரைக்க முடியாது என்பதால், அம்மி கல்லை தரையில் கீழே இறக்கி படத்தா விரிக்கப்பட்டிருந்த தரையில் அமர்ந்து மசாலாவை அரைத்தாள். அரைப்பதற்கு ஏதுவாக வலது காலை மடக்கி, கட்டிய புடவையை கனுக்கால் வரை ஏற்றிவிட்டு இடது காலை நீட்டியிருந்தாள். அவள் அணிந்திருந்த பிரத்யேக காலணி தெரிந்தது. அதற்காக அவள் மனக்கிலேசம் கொள்ளவில்லை. புடவை மேலேறி அனைவரும் அதை காணும்படி ஆகிற்றே என்று சங்கடப்பட்டாள்.



அவசரமாக பக்கத்திலிருந்த பாத்திரத்திலிருந்த நீரில் கைகளை சுத்தம் செய்து தன்னுடைய முந்தானையில் துடைத்து விட்டு, தன்னுடைய ஒற்றை ஊன்றுகோளை தரையில் ஊன்றி எழ முயற்சி செய்தாள். அவளின் எண்ணம் புரிந்து ஷிவேந்திரன் வேகமாக அவளை நெருங்கியவன், அவளை தூக்கி விடுவதற்காக ஓடி வந்த பெண்களை ஒற்றைப் பார்வையில் தேங்கி நிற்க வைத்தான். குனிந்து அவளை மெல்ல தூக்கி நிறுத்தினான். சம்யுக்தாவிற்கு மட்டுமல்ல ஷிவேந்திரனின் அலுவலக ஊழியர்கள் யாவருக்கும் பேரதிர்ச்சி தான். வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தனர். உள்ளடி விசயம் தெரிந்த ஆண்டோ மட்டும் முகத்தில் புன்சிரிப்பு படற நின்றான். சம்யுக்தாவின் பார்வை ஷிவேந்திரனை சுட்டெறித்தது. அவளின் ரத்த அழுத்தத்தை மேலும் ஏற்றும் வகையில் தன்னுடைய கைகுட்டையால் அவளின் வியர்வையை துடைத்தான். புகழினிக்கு உடல் வியர்த்து மயக்கம் வருவது போல் இருந்தது. அதனை உணர்ந்தார் போல் அவளை இறுக பற்றி தோளோடு சேர்த்து அனைத்து கொண்டான் ஷிவேந்திரன். காலையிலிருந்து அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியாக அவளை தாக்கி கொண்டிருக்கிறது. கணவனின் இந்த புது நெருக்கம் அவளுக்கு கிளர்ச்சியை கொடுக்கவில்லை. வழக்கம் போல் பயத்தை தான் கொடுத்தது!



அவர்கள் யாவரும் புகழினி அந்த பாடலை பாட தொடங்கியதுமே வந்து விட்டனர். வாடிக்கையாளர்கள் அவள் பாடுவதை கேட்கும் ஆவல் கொள்ளவும் ஷிவேந்திரன், அங்கு சமையல் வேலை பார்த்து கொண்டிருந்த வேலையாட்களிடம் வாயின் மேல் விரல் வைத்து வேலையை தடையின்றி தொடருமாறு சாடை செய்திருந்தான். அவர்களும் அப்படியே நடந்து கொண்டனர். தன்னை மறந்து பாட்டு பாடிக் கொண்டு அம்மியில் அரைத்து கொண்டிருந்த புகழினி இதனை கவனிக்கவில்லை. தனக்கு பிடித்த விசயத்தை செய்யும் ஆவலும், ஆர்வமும் அவளை சுற்றுபுறத்தை மறக்க செய்தது.



“டியர் ஃபிரண்ட்ஸ், ஷி இஸ் புகழினி தெய்வமங்கை மை பிலவ்ட் வைஃப்” என்று கம்பீரமாக அனைவருக்கும் புகழினியை அறிமுகப்படுத்தினான் ஷிவேந்திரன்.



புகழினி ஷிவேந்திரன் காட்டிய நெருக்கத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய அதிர்ந்தப் பார்வையைச் சட்டை செய்யாத ஷிவேந்திரனைக் கண்டு ஆத்திரம் பொங்கியது சம்யுக்தாவிற்கு. பல்லைக் கடித்து கோபத்தை அடக்கமுயன்றாள், முடியவில்லை! உடல் நடுங்க முகம் செந்தனலாக சிவந்து இறுகியது. தன்னை கட்டுபடுத்தி கொள்ள ஒரு கையால் தன்னுடைய கைப்பையை இறுக்கிப் பிடித்திருந்தாள். மறுகையின் விரல்களை இறுக மடக்கியிருந்தாள். அவளுடைய நகங்கள் அவளின் உள்ளங்கையை குத்தி கொண்டிருந்தது.



வாடிக்கையாளர்கள் அவளின் மென்மையான குழந்தை குரலில் மயங்கி தான் போயிருந்தனர், ஷிவேந்திரன் மனைவி என்று அறிமுகப்படுத்தியதும், அவளுடன் பேசி பழக வெகுவாக ஆர்வம் காட்டினர். அதனைக் கண்ணுற்ற சம்யுக்தாவின் முகம் பயங்கரமாக மாறியது. ஷிவேந்திரன் வேறு புகழினியை ஒட்டி உரசி தோளை அணைத்தபடி நின்று கொண்டிருந்தான். புகழினி அவனிடம் மெல்லிய குரலில் உரையாடினாள். அவனும் லேசாக குனிந்து கொண்டு சளைக்காமல் அவளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான்.



“ஏன் இப்படி செய்யுறிங்க?”



“எப்படி?”



“இது மாதிரி அணைச்சுக்கிட்டு, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, விடுங்களேன்!”



“ம்ம ஒரு மாதிரியானா? காலையிலே நான் முத்தம் கொடுத்தப்போ கண்ணு சொருகி கிடந்தியே அப்படியா?”



அவனின் பதிலில் புகழினி அவனை நிமிர்ந்து ‘இது என்ன பதில்’ என்பது போல் பார்த்தாள். அவன் அவளை பார்த்து புன்சிரிப்புடன் புருவம் உயர்த்தினான். மலங்க மலங்க விழித்துவிட்டு சட்டென தலை குனிந்து கொண்டாள். “ஆத்தி இவங்க ஏன் இப்புடி இருக்காய்ங்க? என்னென்னவோ செய்யுறாங்க. யாராவது இவய்ங்களுக்கு மந்திரிச்சிட்டாய்ங்களோ!” என மனதிற்குள் புலம்பிக் கொண்டு நிமிர்ந்து அவனை யோசனையாக பார்த்துவிட்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு,



“என்னைய என்னனு அவய்ங்க்கிட்ட சொன்னிங்கெ?” என்று வினவினாள்.



“என் பொண்டாட்டினு சொன்னேன்”



“வெறும் பொண்டாட்டின்னா சொன்னிங்க! எப்பவும் வப்…வேற மாதிரியில சொல்லுவிய்ங்க.. இன்னிக்கு என்ன புதுசா?” என்று வினவினாள். அன்னஃபிஷியல் வைஃப் என்ற வார்த்தைக்கு சுகுணாவிடம் கெஞ்சி கூத்தாடி அர்த்தம் தெரிந்து கொண்டாள். மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் எப்பொழுதும் போல் நொடியில் தன்னை சமனப்படுத்திக் கொண்டாள். இப்பொழுது ஏன் என்னை வைப்பாட்டி என்று சொல்லவில்லை என்று கேட்க வந்தாள். அவனிடம் பட்டவர்த்தனமாக கேட்க பயமாக இருந்ததால் அந்த வார்த்தையை பாதியில் மென்று விழுங்கினாள்.



அவன் அவளுக்கு பதில் சொல்ல எத்தினிக்கையில் வாடிக்கையாளர்கள் அவர்களை நெருங்கி வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர். ஷிவேந்திரன் அவர்களை புகழினிக்கு அறிமுகப்படுத்தியவன், அவளை கைகுலுக்க சொன்னான். அவள் சங்கடப்பட்டு கொண்டு பட்டும்படாமல் கை கைகுலுக்கினாள்.



“சமையல் வேலை ஆச்சா தெய்வா?” என்ற புனைப்பெயரை முதன்முதலாக கொண்டழைத்து அவளை ஆச்சரியப்படுத்தினான் ஷிவேந்திரன்.



“முக்காவாசி வேலைய முடிச்சிப்புட்டேங்க. மீனு வறுக்க மசாலாவ இப்பத்தேன் அரைச்சி முடிச்சேன். ஒரு பத்து நிமிசம் மசாலாவுல மீனு ஊறனுங்களே, அப்பத்தேன் வறுத்த மீனு நாக்குக்கு உப்பும் ஒரப்புமா ருசியா இருக்கும்..”



“ஃபைன் நோ பிராப்ளம், நீ பொறுமையா பண்ணு தெய்வா”



தன்னை தெய்வா தெய்வா என்று கணவன் ஏன் அழைக்கிறான் என்று புகழினிக்கு புரியவில்லை. வாய் திறந்து கேட்கவும் பயமாக இருந்தது. ‘அவர் எப்படி நடந்து கொண்டாலும் நாம் நம் நிலைமையறிந்து, இடமறிந்து அமைதியாக இருந்து கொள்ள வேண்டும்’ என்று மனதிற்குள் எண்ணினாள் புகழினி. பின்பு ஏதோ நினைவு வந்தவளாக ஷிவேந்திரனிடம் வினவினாள்.



“அதுக்குள்ளார பண்ணெண்டு மணியாயிடுச்சாங்க?”



“இல்லை தெய்வா, மணி இப்போதான் பதினொன்றை ஆகுது. இவங்க நீ நம்ம முறைப்படி எப்படி சமைக்கிறன்னு பாக்க ஆசைப்பட்டாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன்.”



“ஆத்தி, அடுப்படி வேலையக் கூடவா பாக்க ஆசைப்படுவாய்ங்க!” என்று தாடையில் வலது கையை வைத்தபடி ஆச்சரியமாக வினவினாள்.



அவளின் செய்கையில் வாடிக்கையாளர்களில் இருந்த ஒரு பெண்மணி அவளிருகில் வந்து அவளின் கன்னத்தில் லேசாக கிள்ளி “க்யூட் கேர்ள்” என்றுக் கொஞ்சினாள். சுகுணா அவளை க்யூட்டி என்று இப்பொழுதெல்லாம் அழைப்பதால் அந்த வார்த்தையின் அர்த்தம் அவளுக்கு தெரிந்திருந்ததால் அந்த பெண்மணியின் செய்கையில் லேசாக வெட்கப்பட்டாள்.



“வாவ் யூ ஆர் பிளஷிங்! பீப்பில் சே, இண்டியன் கேர்ள்ஸ் லுக் மோர் அட்ராக்டிவ் அண்ட் அட்மையரபிள் வென் தே பிளஷ். யு லுக் வெரி அட்ராக்டிவ் அண்ட் அட்மையரபிள் மிஸஸ் புகலினி ஷிவேந்திரன். யூ லுக் அலைக் டஸ்கி புயூட்டி குயின் கிளியோப்பேட்டரா.” என்று மணமுவந்து சொன்னார் அந்த நாற்பது வயது வாடிக்கையாளர் பெண்மணி.



புகழினி இப்பொழுது தான் சுகுணாவின் தயவில்(?) அதாவது மிரட்டலில் தனக்கு ஏழாம் பொருத்தமான ஆங்கிலத்திற்கும் தனக்கும் பத்துக்கு பத்து பொருதத்தை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட தொடங்கியிருந்தாள். இந்திய ஆங்கிலத்திற்கே மிரண்டு போகும் புகழினி, அயல்நாட்டுவர்களின் ஆங்கிலத்தில் விழிபிதுங்கி பேயைக் கண்டது போல் அரண்டு போகாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!



பரிதாபமாக திரு திருத்து நிற்கும் மனைவிக்கு அந்த பெண்மணி கூறிய செய்தியை மொழி பெயர்த்தான் ஷிவேந்திரன்.



“நீ வெட்கப்படும் பொழுது ரொம்ப கவர்ச்சியா, அழகாயிருக்கியாம். அதனால உனக்கு கறுப்பழகினு பட்டம் கொடுத்து இருக்காங்க. பலநூறு வருஷத்துக்கு முன்னே வாழ்ந்த மகாராணி கிளியோப்பேட்டரா தான் உலகத்திலியே ரொம்ப அழகான பெண்மணி இன்னைக்கு வரைக்கும். அவங்க நிறமும் உன்னைப் போல கறுப்பு தான். நீயும் அந்த மகாராணியை போல அழகா இருக்கன்னு இவங்க சொல்லுறாங்க. சோ இனிமேல் உன்னை அழகினு கூப்பிடலாம் இல்லையா மிஸஸ் புகழினி ஷிவேந்திரன்!” என்று சிரித்தபடிக் சத்தமாகவே கூறினான்.



அதற்கும் புகழினி வெட்கம் கலந்த சிரிப்பு சிரித்தாள். அவளின் மனதில் ஷிவேந்திரன் கூறிய கடைசி வாக்கியம் பதியவில்லை. ஷிவேந்திரன் வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய மனைவிக்கு ஆங்கிலம் தெரியாது என்று சாதராணமாக கூறினான். அவர்களும் புரிந்து கொண்டு தலை ஆட்டினர்.



“ஒகே தெய்வா, சமையல் வேலையை இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல முடிச்சிடலாமா?”



“ஐஞ்சே நிமிஷத்திலே முடிச்சுப்புடுறேன். நீங்கெல்லாம் அங்குன உக்காருங்க.”

என்று கூறிவிட்டு அவனிடமிருந்து மெல்ல நகர்ந்து, முந்தானையை இடுப்பில் இழுத்து சொருகி கொண்டாள் மள மளவென வேலை செய்ய தொடங்கினாள்.



மீனை மசாலாவில் புரட்டி எடுத்து வாழையிலையில் லேசாக நெய்யை தடவி அதன் மேலே மசாலா தடவிய மீன் துண்டுகளை அடுக்கி வைத்தாள். அடுப்பில் மண்சட்டியை ஏற்றி அதில் கடலை எண்ணெய்யை விட்டு தேவையான சூட்டில் காயவைத்தாள். வேலையாட்களிடம் சில வேலைகளைச் செய்யுமாறு கேட்டு கொண்டாள். ஊன்றுகோளுடன் நடந்தாலும் விறுவிறுவென சுறுசுறுப்பாக வேலை செய்யும் புகழினியை வாடிக்கையாளர்கள் மனதாரப் பாராட்டி சிலாகித்தனர். ஷிவேந்திரன் அதனை புன்சிரிப்புடன் ஏற்று கொண்டான். சம்யுக்தாவின் உடல் மிளகாய் பூசியது போல் எறிந்தது.



பெண் வாடிக்கையாளர்கள் புகழினி சமையல் செய்யும் அழகினைக் காண அவளருகில் வந்து அமர்ந்து கொண்டனர்.



“இங்கன அனலடிக்கும், உங்களுக்கு தோதுபடாது அங்க உக்காந்துக்குங்களேன்.” என்று பதறியபடி கூறினாள்.



ஷிவேந்திரன் ஷீத்தலை புகழினியின் சார்பாக மொழிப்பெயர்க்க பணித்திருந்தான். ஆகவே ஷீத்தல் புகழினி சொன்னதை மொழிப்பெயர்த்தாள். வாடிக்கையாளர்கள் புன்சிரிப்புடன் அவளைவிட்டு நகர மறுத்தனர். இவ்வாறு எல்லோரும் புகழினியோடு உரையாடி தமிழ்நாட்டு பாரம்பரிய சமையல் முறைகளைப் பற்றியும் அதனைச் செய்யும் முறைகளைப் பற்றியும் அவளோடு பேசி தெரிந்து கொண்டனர். பேசிக் கொண்டிருக்கையில் புகழினி பொரித்துக் கொடுத்த சூடான மீன் துண்டுகளை சுட சுட உண்டு மகிழ்ந்தனர்.



ஷிவேந்திரன் ஒரு முக்கியமான தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக கூறிவிட்டு ஆண்டோவையும் மற்றவர்களையும் வாடிக்கையாளர்களை நன்றாக கவனித்த கொள்ளுமாறு பணித்துவிட்டு அலுவலகத்தை நோக்கி வேகமாக நடந்து சென்றான். அங்கிருந்த செயற்கை நீருற்றைச் சுற்றியுள்ள தோட்டதில் சற்று மறைவான இடத்தில் சென்று சிகரட்டை பற்ற வைத்தான். அவன் எதிர்பார்த்தது போல் சம்யுக்தா அவனின் பின்னே வந்து நின்று “ஷிவ்” என்று ஆத்திரமான குரலில் விளித்தாள்.



ஷிவேந்திரன் புகையை பிடித்து கொண்டு மெல்ல திரும்பினான்.

“எஸ் சம்யுக்தா?”



“வாட் தி ஹெல் இஸ் ஹேப்பினிங் ஹியர்? அவ உங்களுக்கு வைஃபா”



“எஸ் அழகி என் வைஃப் தான்”



“வாட்? வாட் டிட் யு ஜஸ்ட் சே! அழகியா? யாரு அழகி?”



“என் வைஃப் புகழினி தெய்வமங்கை தான் அழகி. கறுப்பழகி! அப்படி தான் மிஸஸ் கிளாரா சொன்னாங்க! சத்தமா தானே சொன்னாங்க, உன் காதுல விழலையா?”



“ஷிவேந்தர்..” என்று அலறினாள் சம்யுக்தா.



“சம்யுக்தா” என்றான் அமைதியான ஆனால் அழுத்தமான குரலில் ஷிவேந்திரன்.



அந்த குரலில் தானாக கட்டுக்குள் வந்த சம்யுக்தா, திரும்பி நின்று கொண்டு தன்னை அசுவாசப்படுத்தி கொண்டவள் மீண்டும் அவன் பக்கம் திரும்பி “அவ உங்களுக்கு என்ன மாதிரியான வைஃப்னு நீங்க சொல்லவே இல்லையே ஷிவ்! மே பி கிளையண்ட்ஸ் முன்னாடி அப்படி சொல்லுறதுக்கு உங்களுக்கு பயம்ம்மா இருக்கா?” என்றாள் எகத்தாளமாக.



“ஹா ஹா இந்த ஷிவேந்திரனுக்கு பயமா! ஹாம்ம்ம்ம்ம்… ஆல்ரைட் மை ஆன்சர் ஃபார் யுவர் குயரி இஸ் திஸ்” என்று தன்னுடைய ஐபோனை அவளிடம் காட்டினான்.



நெருங்கி வந்து அவனுடைய போனை பிடுங்காத குறையாக வாங்கி பார்த்தவள் அதிர்ச்சியும் மிரட்சியுமாக அவனை நோக்கினாள். சிகரட்டை வாயிடுக்கின் ஓரமாக பொருத்திக் கொண்டு கைகளை இரண்டையும் பேண்ட் பாக்கட்டிற்குள் நுழைத்து கொண்டவன்

“மிஸ் சம்யுக்தா தேவி! எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு. பிளாக் சீட்டா!! தி அல்டிமேட் டெஸ்டியார்!! ” என்று கர்ஜித்தான் ஷிவேந்திரன்.



அந்த சிங்கத்தின் கர்ஜனையில் நான்கடிகள் தன்னையறியாமல் வேகமாக பின்னே சென்று அவனை விழிபிதுங்க பயத்துடன் நோக்கினாள் ராஜகுமாரி சம்யுக்தா தேவி.



அரசிளங்குமரியின் அதிரிச்சியின் காரணம்???





கருப்பு அழகி வருவாள்
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே,

சாரி மக்கா நேற்று என் மகனோட பிராஜக்ட் வேலை, நினைத்ததைவிட என் நேரத்தைவிட அதிகமாக கபளிகரம் செய்துவிட்டது. ரியலி சாரி.

'என் கருப்பழகி'-16வது அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

உங்க கருந்துகளுக்கும் மற்றும் ஆதரவுக்கும் என்னோட நன்றிகள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கண்டிப்பாக பதிலளிக்கிறேன் மனவருத்தம் வேண்டாம்.

அடுத்த அத்தியாயம் வரும் ஞாயிறன்று.

#SAVEDELTA
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கறுப்பழகி”

அத்தியாயம் – 16

“வசந்த் ஆர் யூ சீரியஸ்?”



“எஸ் மாம்”



“ஷிவ்வா இப்படி பண்ணான், ஐ டோண்ட் பிலீவ் திஸ்!”



தாய் வசுந்தராவை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் வசந்த். அந்தப் பார்வையில் அமைதியானாள் வசுந்தரா. விமன்யா தனது அலைபேசியை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். வசந்த் சம்யுக்தாவை சந்தித்த ரிசார்ட்டில் தன்னுடைய குடும்பத்தாருடன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.



“வசந்த் இது உன் தாத்தாக்கு தெரியுமா?” மேகவதி.



“தெரியலை பாட்டி, தாத்துக்கு நியூஸ் போச்சான்னு இன்னும் கன்பார்ம் ஆகலை.”



அங்கு ஒரு கணம் அமைதி நிலவியது. இது என்னடா புதுப் பிரச்சனை என்று அனைவரும் மண்டைக் காய்ந்து போயிருந்தனர். மகன் இன்னும் சம்யுக்தாவின் சந்திப்பைப் பற்றி வாய் திறக்கவில்லையே, ஏன்? என்று எண்ணியவாறு மகனை யோசனையுடன் பார்த்தார் ரகுவரன். மகனின் தீர்க்கமான பார்வை கூறிய செய்தி அவருக்குப் புரியவில்லை. அதனால் அனாவசியமாக வாய்திறக்கக் கூடாது என்றெண்ணினார். வசுந்தரா தனக்கு தோன்றிய சந்தேகங்களை மகனிடம் கேட்கலானாள்.



“வசந்த், இந்த விஷயம் அந்த சம்யுக்தாவுக்கு தெரியுமா?”



“தெரியலை மாம்”



ரகுவரன் யோசனையாகத் திரும்பி நின்று கொண்டார். சம்யுக்தவுடன் நடந்த சந்திப்பை மறைப்பதன் காரணம் என்ன? தங்களிடம் கூட சொல்லாது மகன் என்ன மாதிரி திட்டம் தீட்டுகிறான், தெரியவில்லையே என்று மூளையைக் கசக்கி பிழிந்தார். பதில் கிடைத்த பாடுதான் இல்லை.



“அந்த நொண்டிய பத்தி விசாரிச்சியா?”



“ஜீரோ”



“என்னடா சொல்ற?”



“அவள பத்தி ஒன்னும் கண்டு பிடிக்க முடியலைன்னு சொன்னேன் மாம்.”



“வாட்? அந்த நொண்டிப் பெண்ணை பத்தி ஒன்னுமே உன்னால கண்டு பிடிக்க முடியலையா! ஷேம் ஆன் யு வசந்த்”



“உங்க ஆசை அண்ணன் மகன் தான் எதையும் நெருங்க முடியாம பண்ணி வச்சிருக்கான்.”



வசுந்தரா தலையைப் பிடித்து கொண்டாள். புகழினியை பற்றிய விசயங்களைக் கடுகளவு கூட வெளியே கசிய விடாது ஏன் ஷிவேந்திரன் பாதுகாத்து வருகிறான் என்கிற காரணம் எவருக்கும் புரியவில்லை. ஆனால் அது நல்லதிற்கில்லை என்பது அவர்களுக்குத் தெளிவு. புகழினியை அன்னிஃபிஷியல் வைஃப் என்று ஷிவேந்திரன் அறிமுகப்படுத்தி நடத்திய விதத்தில் அவளை ஒரு பொருட்டாக அவர்கள் யாரும் நினைக்கவுமில்லை, மதிக்கவுமில்லை.



ஆனால் இப்பொழுது அவள் விஸ்வரூபமல்லவா எடுத்து நிற்கின்றாள்! ஷிவேந்திரன், புகழினியை மனைவி என்று வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதை சாதாரண நிகழ்வாக அவர்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஷிவேந்திரனைப் பற்றி அவர்களுக்குத் தெரியும், அவனுடைய உடைமையை எவராலும் எப்பொழுதும் நெருங்க முடியாது. ராஜேந்திரனுக்கும் ஷிவேந்திரனுக்கும் எப்பொழுதும் ஓர் விஷயத்தில் மட்டும் ஒற்றுமையுண்டு. அது இருவரும் தங்களுக்கு வேண்டியவர்களை யாரேனும் காயப்படுத்தினால் சும்மா விட்டு வைக்கமாட்டார்கள் என்பது தான்.



தந்தை எட்டடி பாய்ந்தால், தனையன் எட்டாயிரம் அடிகள் பாய்கிறான்! அதற்கு மேலும் அவன் பாய்வான், ஆச்சரியப்படுவதற்கு இல்லை! அதனால் தான் இன்றளவும் அவர்கள் சுகுணாவை உயிரோடு விட்டு வைத்திருப்பதே. இப்பொழுது சுகுணாவுடன் அந்தக் கறுப்பியும் சேர்ந்து கொண்டுவிட்டாளே! கறுப்பி ஷிவேந்திரனின் முழு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிட்டாள். பாதுகாவலை உடைக்க முடியுமா? முட்டாள் தனம்! அதைவிட முட்டாள் தனமான செய்கை இருக்க முடியுமா என்ன! என்ன, எங்கே, எப்படி, எதைச் செய்வது?



விமன்யா தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்துவிட்டு உற்சாகமான குரலில் “டென் கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ்ல ஒரு பெருமாள் கோயிலிருக்கு, அங்க டெய்லி மூனு தடவ அன்னதானம் போடுவாங்களாம். சாம்பார் சாதம் வில் பி சிம்பிளி டெலிஷியஸ்! இப்பவே மணி ஏழாக போகுது. இன்னும் கொஞ்ச நேரம் போனா எல்லாம் காலியாகிடும். வாங்க அதையாவது டைத்துக்கு போய் வாங்கி சாப்பிடுவோம்” என்றாள்.



அங்குள்ளவர்களுக்கு விமன்யாவின் நக்கல் புரியாமலிருக்குமா என்ன! செய்ய வேண்டிய காரியங்களை சரியான நேரத்தில் செய்யாததினால் தான் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் இனிமேலும் இப்படி இருந்தால், கோயில்களில் உண்டகட்டி வாங்கித் தின்று தான் சீவனம் செய்ய வேண்டும் என்று எள்ளலாகக் குத்தி காட்டுகிறாள் என்பதை எல்லோரும் தெளிவாக புரிந்து கொண்டனர். அவள் சொல்வதில் தவறொன்றும் இல்லை.



அவர்களும் கிட்ட தட்ட நாற்பது வருடங்களாகத் திட்டம் திட்டுகிறார்கள் தான். திட்டம் தீட்டி என்ன செய்ய! செயல்படுத்த நினைக்கியிலேயே திட்டம் வெட்ட வெளிச்சமாகி இவர்கள் தங்களை வெட்டுப்படாமல் காத்துக் கொள்வதிலேயே காலம் யாவும் பறந்தோடிவிட்டதே! இனி அவ்வாறு இருந்தால் முதலுக்கே மோசமாகப் போய்விடுமே! எதையாவது எப்படியாவது செய்தே தீரவேண்டும்! எல்லோரின் முகத்திலும் தீவிரம் தெரிந்தது. மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் புகழினியை ஒரு கை பார்க்க விமன்யா சுபிக்ஷத்தை நோக்கி தன்னுடைய காரில் பறந்து கொண்டிருந்தாள். “கறுப்பி” எனப் பல்லை கடித்தாள்.



“கறுப்பழகி! ம்ம்ம் அந்த லேடி கரெக்ட்டான பேர் தான் வச்சிருக்காங்க எங்க குயூட்டிக்கு” என்று புகழினியின் கன்னம் கிள்ளி செல்லம் கொஞ்சினார் சுகுணா.

சுகுணா ராஜெந்திரன் புகழினி மூவரும் சுபிக்ஷத்தில் முதல் தள பால்கனியில் அமர்ந்து மாலை தேநீரை அருந்தியபடி அன்னம்மா சுட்டச் சூடான பஜ்ஜிகளை ருசித்து ரசித்துச் சாப்பிட்டு கொண்டிருந்தனர். சந்தோசமான மனநிலையில் இருந்தனர் மூவரும். காரணம், புகழினியின் சமையலையும், பாடிய பாட்டையும் அயல்நாட்டு வாடிக்கையாளர்கள் பாராட்டி வாழ்த்தியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

“புகழ்மா உன்னோட சமையல் திறமை வெளிநாட்டவர்களையும் மயக்கிடுச்சு பார்த்தியா! உன் கைபக்குவமே தனி! அதுல ஒரு மேஜிக் இருக்கு! இல்லையா சுகி?”

“எஸ், எஸ் கண்டிப்பா கியூட்டி கையில எதோ மாய மந்திரம் இருக்கு! அதான் அவ சுடு தண்ணி குடிக்க கொடுத்தா கூட, ஃபில்டர் காஃபி பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு புகழ்மானு சப்பு கொட்டி குடிச்சிட்டு பாராட்டுறிங்க.”

“அது வேற ஒன்னுமில்லை சுகிம்மா, இவ்வளவு நாளா நீ காஃபினு சொல்லிட்டு சுடு தண்ணிய வச்சு கொடுத்தியா, அதான் பழக்க தோசத்துல புகழ் குட்டி சுடு தண்ணி குடுத்தாலும் எனக்கு காஃபியா தெரியுது! நான் என்ன பண்ணுவேன் சொல்லு!”

“உங்களை” என்று இருக்கையில் இருந்து எழுந்து வந்து கணவன் ராஜேந்திரனின் முதுகில் நாலு மொத்து மொத்தினார் சுகுணா.

புகழினி சிரிப்பை அடக்க முடியாமல் வாய் பொத்தி கண்களில் நீர் வர உடல் குலுங்க சிரித்தாள். சுகுணாவும் ராஜேந்திரனும் அவளின் சிரிப்பில் கலந்து கொண்டனர். இரவு சமையலை தான் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டாள் புகழினி.

“இந்தப் பையன் மனசுல என்ன நினைக்கிறான்னே புரிய மாட்டேங்கிதே, திடீர்னு புகழ எல்லார்கிட்டேயும் பொண்டாட்டினு சொல்லிட்டான். ம்ம்ம்ம் இதை எப்படி எடுத்துக்குறதுன்னே எனக்கு தெரியலை.”

“அவசரப்பட வேண்டாம் சுகி, என்ன நடக்குதுனு பார்க்கலாம். இன்னைக்கு ஆஃபிஸ்ல நடந்ததை வச்சு அவன் திருந்திட்டான்னு சொல்ல நான் ஒன்னும் முட்டாளில்ல. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த பையன் புகழ வைச்சு எதோ பெருசா பிளான் பண்ணுறான் அது மட்டும் உறுதி. நீ பயப்படாத ஒன்னும் ஆகாது, ரிலாக்ஸ்டா.” என்று கூறி மனைவியின் கைகளை தட்டிக் கொடுத்தார்.

அப்பொழுது அன்னம்மா அந்த வயதிலும் அவர்களை நோக்கி அரக்கப் பறக்க ஓடி வந்தார். சுகுணா திரும்பி பார்த்துவிட்டு புருவம் உயர்த்தினார். அவரின் அருகே குனிந்து காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார் அன்னம்மா. சுகுணாவின் முகம் யோசனைக்குள்ளானது. அன்னம்மாவிடம் பதிலுக்கு கிசுகிசுத்துவிட்டு விரைந்து போகுமாறு கூறிவிட்டு கணவனிடம் திரும்பினார்.

“என்ன சுகி?”

“சம்யுக்தா ஃபாமிலியோட வந்திருக்கா. மாமாவும் ஆஃபிஸ்ல இருந்து வந்துட்டாரு போல. அவனுக்காக எல்லாரும் வெயிட்டிங்.”

“ஓ! சரி நாம எதுவும் இப்ப டிஸ்க்கஸ் பண்ண வேண்டாம், வா போகலாம். அப்புறம் புகழை உன் கைவளையத்துக்குள்ள இருக்கனும். ஏதோ சரியில்லைன்னு புரியுது. புகழ மனைவின்னு சொன்னதுனால கூட இருக்கலாம். சோ அவங்க டார்கட் அவனா இருக்க முடியாது, புகழ் தான். வா சீக்கிரம்.”

கணவனும் மனைவியும் கிட்டத்தட்ட ஓடினார்கள் தரை தளத்தை நோக்கி. சுகுணா கணவன் சொல்லும் முன்பே அன்னம்மாவிடம் புகழினியை தான் வரும் வரை யார் கண்ணிலும் பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு என்று அறிவுறித்தியிருந்தார்.

ரிசார்ட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த வசந்தின் குடும்பற்றவர் விமன்யாவிற்கு அலைபேசியில் பேச முயன்று ஓய்ந்தனர். மேகவதி வீட்டிலிருக்கும் வேலையாளிடம் விமன்யா வீடு வந்து சேர்ந்தாளா என்று கேட்க முனைகையில் அவன் ஒரு அணுகுண்டைத் தூக்கி அவர் தலையில் போட்டான்.

“வாட்” என்ற மேகவதி அதிர்ந்து கத்தினார். வசந்த் பாட்டியின் அருகே வந்து அவரது அலைபேசியை பிடுங்கி அவசரமாகக் காதில் வைத்தான். விமன்யா தற்போது வீடு வந்து சேர்ந்துவிட்டதாகவும் அத்தோடு சம்யுக்தா குடும்பத்தோடு வந்திருக்கும் விஷயமும் சொல்லப்பட்டது. வசந்த் கண்களை இறுக மூடி ஆழ மூச்செடுத்தான். தான் காதலிக்கும் பெண் இன்னொருவனை மணமுடிக்கத் துடிப்பதால் ஏற்பட்ட வலி அது!

“வசந்த் என்னடா என்னாச்சு?” என்று அவனை உலுக்கினார் ரகுவரன்.

உணர்ச்சியற்ற குரலில் விசயத்தைப் பகிர்ந்து கொண்டான் வசந்த். சம்யுக்தா இவ்வளவு விரைவாகச் செயல்படுவாள் என்று அவர்கள் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. எல்லோரும் யோசனையில் மூழ்கினார்கள்.

“வசந்த் என்னடா யோசிச்சுட்டு இருக்கிற! விமி சுபிக்‌ஷத்தில் ரீச் ஆகிட்டா. நாம இப்பவே கிளம்பலாம் டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.” என்றாள் வசுந்தரா அவசரமாக. ஏற்கனவே மனமுடைந்திருக்கும் மகள் விமன்யா அங்கே தனியாக எப்படி அவர்களை எதிர்கொள்வாள்? எதாவது ஆத்திரத்தில் செய்துவிட்டாளெனில் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்குமே என்ற பயம் தான் வசுந்தராவிற்கு புராதனமாக இருந்தது.

வசந்த் குடும்பத்தினர் வசந்தின் காரில் ஏறி சுபிக்‌ஷத்தை நோக்கிப் பறந்தனர். மகனின் அருகில் அமர்ந்திருந்த ரகுவரனுக்கு மகனின் முகமாறுதல் எதற்கு என்று புரியவில்லை. ஆனால் அவன் இறுகி இருப்பதை உணர்ந்து அமைதியாக வந்தார். மகன், ஷிவேந்திரன் அந்த ராஜகுமாரியை மணமுடிப்பதை நிறுத்த வேண்டுமென்று யோசிக்கிறான் என்று அவர் எண்ணிக் கொண்டிருந்தார். அவருக்கு எங்கே தெரியப் போகிறது, மகன் அந்த ராஜகுமாரியை தானே காதலித்து திருமணம் செய்ய விழைகிறான் என்று! இந்த விவரங்களெல்லாம் அவருக்குத் தெரிந்திருந்தால் அவரும் தேர்ந்த தொழிலதிபராக அல்லவா வலம் வந்திருப்பார்!
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜேந்திரனும் சுகுணாவும் தரை தளத்திற்கு வந்துவிட்டனர். சம்யுக்தாவின் குடும்பத்தினர் யாவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். அவர்கள் சுகுணாவை எள்ளல் பார்வை பார்க்க முனைகையில் அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சமையல் அறையை நோக்கி விரைந்து சென்றுவிட்டார். அவர்களின் முகம் யாவும் இஞ்சித் தின்ற குரங்கைப் போல இருந்து வைத்தது. சம்யுக்தாவின் தாய் ‘திமிர்’ என்று மகளின் காதை கடித்தாள்.

சம்யுக்தாவும் தாய்க்குத் தலையாட்டி தனது உடன்பாட்டினை தெரிவித்துவிட்டு துவேசம் பொங்க சுகுணா சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜேந்திரன் அவர்களை வரவேற்காமல் அங்கிருந்த மூவர் அமரக் கூடிய இருக்கையில் அமர்ந்து கொண்டார். மனைவி சென்ற திசையைக் கோபமாக பார்க்கும் சம்யுக்தாவை கடுமையான பார்வை பார்த்தார். சம்யுக்தா அவரை முறைத்துவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டாள். தர்மேந்திரன் நடுநாயகமாக இருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்து எல்லாவற்றையும் எப்பொழுதும் போல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

விமன்யா போர்டிகோவில் வேறு புது கார்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்த்து, தன்னுடைய காரை ஷெட்டில் நிறுத்திவிட்டு யோசனையுடன் வீட்டை நோக்கி நடந்தாள். அவளது கைப்பேசி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது. எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தாள், வசந்த் என்ற பெயர் மிளிர்ந்தது. அணைக்க நினைத்தவள் பின் மூச்செரிந்துவிட்டு அதனை உயிர்ப்பித்து காதுக்குக் கொடுத்தாள். சொல்லப்பட்ட செய்தியில் நின்ற இடத்தில் சமைந்துவிட்டாள். வசுந்தரா தான் மகளிடம் தகவலை சொல்லி பின் தங்கி நிற்கச் சொன்னாள். நாம் யாவரும் ஒன்றாகச் செல்வதே நல்லது என்று அறிவுறுத்தினாள். சம்யுக்தா தனியாக வந்தாலே விமன்யாவிற்கு எதிர்கொள்வது கஷ்டம், குடும்பே என்றால்! அவள் பதுங்கினாள்! புலி பதுங்கினால் பாய்வதற்கு. குள்ளநரி விமன்யா பதுங்கினால் புறமுதுகிட்டு ஓடுவதற்காக அல்லவா!

சம்யுக்தாவின் தந்தை தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்தார். மணி 7.10 என்று காட்டியது. அவர்கள் வந்து அரைமணிக்கு மேல் ஆகிவிட்டது. ஷிவேந்திரனுக்கு தகவல் சொல்லியாகிவிட்டது என்பதில் அவருக்கு உறுதி. அவன் அவர்களைத் தவிர்க்கவில்லை, தண்டிக்கிறான் என்பது அவரது புத்திக்கு எட்டியது! இன்று முடித்தே ஆக வேண்டும், இனியும் தாமதிக்க கூடாது என்று எண்ணினார். அடுத்த பத்து நிமிடத்தில் வசந்தின் கார் தங்கை விமன்யா நின்ற இடத்தின் அருகே கீரிச்சிட்டு நின்றது. வசுந்தரா முதல் ஆளாக மகளை வந்து அணைத்துக் கொண்டாள்.

சுபிக்‌ஷத்திற்குள் சம்யுக்தாவின் குடும்பத்தினர் காரில் அணிவகுக்கும் பொழுதே ஷிவேந்திரனுக்கு தகவல் பறந்துவிட்டது. அவன் ‘ம்’ என்ற பதிலுடன் முடித்துக் கொண்டான்.

அலுவலகத்தில் தனது அறையில் வேலையில் ஆழ்ந்திருந்த ஷிவேந்திரனுக்கு தாத்தா தர்மேந்திரனிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. துண்டித்துவிட்டான்! செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு எழுந்து சிகரட்டை பற்ற வைத்துக் கொண்டு அறையின் கண்ணாடிகளின் வாயிலாக இரவு பொழுதில் மின் விளக்குளில் மிளிரும் சென்னை மாநகரத்தைப் பார்வையிட்டான். அவன் மனது இன்று மதியம் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தது.

சம்யுக்தாவுடன் உரையாடிவிட்டு அலுவல் அறைக்குச் சென்ற ஷிவேந்திரன் செய்ய வேண்டிய காரியங்களுக்கான வேலைகளில் ஆயத்தமானான். அவனுடைய அலைபேசி அடித்தது. அவனுடைய பி.ஏ ஆண்டோ தான் அழைத்திருந்தான்.

“எஸ் ஆண்டோ”

“பாஸ் இங்க எல்லாம் ரெடி, வீ ஆர் ஆல் வெயிட்டிங் ஃபார் யூ.”

“ஆல்ரைட் கோ அஹெட் ஐ வில் பி தேர் இன் டென் மினிட்ஸ்.”

“ஒகே பாஸ், டைனிங்கு ரெடி பண்ணிட்டு இருக்கோம். நீங்க வந்ததும் ஸ்டார்ட் பண்ணிடலாம்.”

“டிட் சம்யுக்தா லீவ்?”

“ஷீ லெஃப்ட் பாஸ்.”

அழைப்பைத் துண்டித்துவிட்டு அலைபேசியில் ஒரு எண்ணை ஒற்றி ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு தனது அறையிலிருந்த பிரத்யேக மின்தூக்கியை நோக்கி சென்றான்.

ஷாமினா பந்தலிட்ட இடத்தில் போடப்படிருந்த டைனிங் டேபிள்களில் அமர்ந்து எல்லோரும் சிரிப்பும் கும்மாளமாக பேசிக் கொண்டிருந்தனர். புகழினி உணவு பதார்த்தங்களை வாழை இலைகளில் அடுக்கி வைத்து முடித்திருந்தாள். அவள் மட்டும் அமராமல் நின்று கொண்டு உரையாடினாள். ஷிவேந்திரன் அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்துவிட்டான்.

“ஹாய் பிரண்ட்ஸ் இஸ் எவிரிதிங் கம்ஃபொர்டபிள் ஃபார் யூ கைஸ்?”

“ஓ மிஸ்டர் ஷிவேந்திரன், யுவர் அரேன்ஜ்மெண்ட்ஸ் ஆர் வொண்டர்ஃபுல். அண்ட் யுவர் வைஃப் சீம்ஸ் டு பி எ வெரி குட் ஹோஸ்டெஆ.” என்றாள் ஒரு வாடிக்கையாளர் பெண்மணி. எல்லோரும் அதனையே அமோதித்தனர்.

“தட்ஸ் அவர் பிளஷர் மிஸ் ஜெனிலியா.”

ஷிவேந்திரன் புகழினியை தோளோடு அணைத்துக் கொண்டு அந்தப் பெண்மணிக்கு நன்றி கூறினான். அவர்கள் கூறியதை புகழினிக்கு மொழிபெயர்த்தான். அவள் கூச்சத்துடன் சிரித்தாள். அதையும் அவர்கள் கலாட்டா செய்தனர். புகழினியை தங்களோடு வந்து விருந்துண்ணுமாறு வற்புறுத்தினர். அவள் மறுத்தும் ஷிவேந்திரன் அவளை விடாது தன் அருகில் அவளை அமர்த்தி கொண்டு விருந்தைத் தொடக்கி வைத்தான். ஒவ்வொரு பதார்த்தின் ருசியும் மணமும் அனைவரையும கவர்ந்திழுத்து மெய்மறக்கச் செய்தது. மலையின் அருகில் மடுவைப் போல் அமர்ந்திருந்த புகழினியோ ஷிவேந்திரனின் அருகில் இயல்பாக உண்ண முடியாமல் கொரித்தாள். ஷிவேந்திரன் வற்புறுத்தி அவளை உண்ண வைத்தான். விருந்து அமோமாக நடந்து முடிந்தது.

வாடிக்கையாளர்கள் உணவின் சுவையை வெகுவாக சிலாகித்தனர். இதுவரை இப்படியொரு அருமையான இந்திய உணவை தாங்கள் உண்டதில்லை என்று மனமார பாராட்டினார்கள். எப்பொழுதும் போல் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டாள் புகழினி. அவளின் தேன் குரலை கேட்கும் ஆவலில் அவளை ஒரு பாட்டு பாடுமாறு வேண்டினார்கள். ஷிவேந்திரனின் முன்னால் நிற்பதற்கு அவளுடைய நாக்கு மேல்லன்னத்தில் ஒட்டிக் கொள்கிறது. இதில் எங்கே அவள் பாட்டு பாடுவது! அவள் பயமும் கூச்சமுமாக முடியாது என்று தலையாட்டினாள். அனைவரும் வற்புறுத்தி வேண்டவே ஒருவாறு சம்மதித்தாள்.

“மிஸஸ் புகலினி, வீ வுட் லைக் யு டு சிங் அ வில்லேஜ் சாங் அபவுட் யுவர் ஹஸ்பெண்ட் மிஸ்டர் ஷிவேந்திரன்” என்றார் ஓர் வாடிக்கையாளர்.

“சார் பத்தி பாடச் சொல்றாங்க மேடம். அதுவும் கிராமிய பாட்டு. பாடுங்க மேடம்.” என்று ஷீத்தல்.

ஆண்டோ மற்றும் ஷீத்தலுடன் தான் புகழினி நின்று கொண்டிருந்தாள்.

“ஆத்தி, அவுகள பத்தியா? என்னங்க விளையாடுறியளா! சும்மாதேன் சொல்லுறிங்க!”

“மேடம் பொய் சொன்னா எங்க சார் பெண்டு நிமித்திடுவாறு.”

“என்ன பாட்டுங்கெ பாடுறது அதுவும் அவங்கள பத்தி?”

“சாரை பத்தி என்ன மனசில தோனுதோ பாடுங்க மேடம், எல்லாரும் ஆர்வம்மா உங்களையே பார்க்குறாங்க பாருங்க.”

“எம்மனசுல தோனுறதை நான் பாடிப்புடுவேன், அப்புறம் என்னைய குத்தெம் சொல்லக் கூடாது சொல்லிப்புட்டேன்.”

அவள் எதையாவது எசக்கு பிசக்காக பாடிவைத்தால் ஷீத்தலின் கதை அவ்வளவு தான்! எதற்கு வம்பென்று அவள் அருகில் குனிந்து “சரி எங்களுக்கு மட்டும் கேக்குற மாதிரி பாடுங்க மேடம், ஒகேன்னா அவங்க முன்னாடி பாடலாம்.”

“க்க்ம்ம்ம்ம்ம் வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலேய்ய்ய்ய்

வாரனாசி ரோட்டை தாண்டி மெயிலு வண்டியிலேய்ய்ய்ய்”

“நான் ரயிலு வண்டியில வரதை நீ எப்போ பார்த்த தெய்வா?” என்ற குரலில் மூவரும் பதறி திரும்பினர்.

ஷிவேந்திரன் அவர்களுக்கு மூன்றடி தூரத்தில் தான் நின்று கொண்டிருந்தான். புகழினிக்கு வெளிப்படையாகவே உடல் வியர்த்து நடுங்கியது. புகழினியின் பாடலைக் கேட்டு கிளுக்கி சிரித்த ஷீத்தல் பேயைக் கண்டது போல் முகம் வெளிறிவிட்டாள். ஆண்டோ சாதாரண முகபாவத்துக்கு மாறியிருந்தான். ஷிவேந்திரன் திரும்பி அவர்களை ஒரு பார்வை பார்த்தான். இருவரும் அவசரமாகத் தலைகுனிந்து நான்கெட்டு பின்னடைந்தனர்.

“ம்ம்ம்ம் நான் பூச்சாண்டி ம்ம்ம்ம்!”

அவனுக்குப் பதில் சொல்லி நா எழவில்லை. வாயைத் திறந்தால் வெறும் காற்று தான் வந்தது! ஷிவேந்திரனை பற்றி என்ன பாடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஷீத்தல் தொடர்ந்து வற்புறுத்தியதால் விளையாட்டாக அந்தப் பாட்டை பாடினாள், அது வினையாக முடியும் என்று அவளென்ன கனவா கண்டாள்! “கண்டிப்பா இன்னைக்கு வீட்டுல எனக்கு பூசை போடத்தேன் போறாய்ங்க! வர வர எனக்கு வாயு நீண்டுபுடுச்சு. பின்னே சிங்கத்து பிடரியை பிடிச்சிட்டு தொங்குற கணக்கா அவய்ங்கள கேலி பேசுவேனா! அடிச்சுப்புடுவாரோ? சூடூ வச்சிட்டா? மரத்தில தலை கீழே கட்டி தொங்க விட்டா? நாய விட்டு கடிக்க வச்சா? ஆத்திஈஈஈஈஈ” என்று மனதிற்குள் அரண்டுவிட்டாள் புகழினி.

ஷிவேந்திரன் புகழினியின் முகமாற்றத்தை அனுமானித்துக் கொண்டிருந்தான். லேசான கேலி சிரிப்புடன் அவளிடம் “காலையில டைனிங் டேபிள்ல ஒரு பாட்டு கேட்டுட்டு நீ விக்குனியே அந்த பாட்டு பாடுறியா தெய்வா? உனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. அனுபவச்சி பாடலாம். ஓகே தானே!” என்று விசமக் குரலில் வினவினான்.

விதிர்த்துவிட்டாள் புகழினி. “எஞ்சாமி! எனக்கு இன்னைக்கு கெரகம் சரியில்லை போலயே. அந்த பாட்டையும் மல்லி பந்தலையும் மறக்குவேணானு மனுசன் இறுக்கி பிடிச்சு சுத்தி சுத்தி வாராயங்களே! நான் என்ன பண்ணுவேன்! இது எங்கெ போய் முடிய போவுதோ?” என்று மனதிற்குள் புலம்பி தள்ளினாள்.

திருதிருத்து நிற்கும் புகழினியை பார்த்துவிட்டு, ஆண்டோ இது வேலைக்காகது என்று இடைப் புகுந்தான். “மேடம் உங்களுக்கு தேவர் மகன் பட பாட்டெல்லம் தெரியுமா?”
 
Status
Not open for further replies.
Top