All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

Status
Not open for further replies.

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க... நான் இந்த பக்கம் வந்து ரொம்ப நாள்... இல்ல இல்ல மாசமே ஆயிடுச்சி...

இது என்னோட முதல் கதை... Rerun பண்ணுறேன்...
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்....





அத்தியாயம் 1

“ஓம் கௌசல்யா ஸுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம்
தைவமாஹ் நிகம்...”

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீக குரலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் அந்த இல்லத்தில் மெதுவாக இசைத்து கொண்டு இருந்தது. அது சென்னையில் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி.

“சூர்யா… சூர்யா… எழுந்திரிடாமா இன்னைக்கு இன்டெர்வியூ இருக்கு சீக்கரம் எழுப்பிவிட சொன்ன இல்ல டா, எழுந்திருடாமா டைம் ஆச்சு பாரு...” எழுப்பிக் கொண்டிருப்பவர் காயத்ரி, அவ்வீட்டின் தலைவி. சிவரத்தினத்தின் மனைவி. இவர்களின் மூத்த மகள் தான் சூர்யா.

சூர்யா, வயது 25. படிப்பு M.Sc(ஹோம் சயின்ஸ் ), பால்வண்ணம்... 5 அடி உயரம், அதனால் சற்று பூசினார் போன்று இருக்கும் உடல்வாகு இடைத்தாண்டும் கூந்தல், வட்டமுகம், சிறியதும் பெரியதும் இல்லாத அளவான விழிகள் (black browny eyes), தன்னை கடந்து செல்பவர்களை கவனிக்க வைக்கும் மிதமான அழகு.

இளையவன் ஜீவரத்னம், வீட்டின் கடைக்குட்டி வயது 22 MBA படித்து கொண்டிருப்பவன் 6 அடி உயரம் இக்கால இளைஞர்களில் நானும் ஒருவன் என சொல்லும் அளவிற்கு நாகரிகமான தோற்றம்.

தமக்கை பால்வண்ணம்… தம்பி வெண்மையும் கருமைக்கும் இடைப்பட்ட நிறம். இந்த விஷயத்தில் காயூ மேல் செம காண்டு இவனுக்கு. சூர்யா தாயின் நிறத்தை கொண்டும், இவன் தந்தை நிறத்திலும் பிறந்திருந்தான். (தம்பி, இது ஜெனட்டிக் ப்ரோப்ளம். நீ ஏன் காயூ மேல பொங்குற)

காலை 9 மணியளவில் சூர்யா, குளித்து முடித்து இளநீல நிற சேலையில் தங்கநிற கரையிட்டு அதற்கு பொருத்தமான மாட்சிங் தங்கநிற ரவிக்கையில், தளர பின்னிய கூந்தல் அதில் ஒற்றை ரோஜா அளவான ஜிமிக்கி, புருவங்களுக்கு மத்தியில் சேலையின் வண்ணத்தில் பொட்டு கழுத்தில் ஒற்றை தங்கசங்கிலி என மிதமான ஒப்பனையுடன் தயாராகி வந்தவளை கண்கலங்க பார்த்திருந்தார் காயத்ரி.

“அம்மா, நான் ரெடி இந்த ஜீவா கிளம்பிட்டானா..? டிபன் ரெடியா” எனக் கேள்விமேல் கேள்வி கேட்ட மகளின் குரலின் நிகழ்வுக்கு திரும்பினார் காயூ.

“குட் மோர்னிங் பூசணி” (யாருன்னு யோசிக்கிறீங்களா..? ரொம்ப யோசிக்காதீங்க நம்ம சூர்யாவிற்கு ஜீவா வைத்த பெயர் தான் இது)

அவனை முறைத்துக்கொண்டே தன் அன்னை வைத்த காலை சிற்றுண்டியினை சாப்பிட்டுக் கொண்டுருந்தாள் சூர்யா.

“குட் மார்னிங் மா, அப்பா எங்க?” எனக் கேட்டுக் கொண்டே ஜீவா சாப்பிட அமர்ந்தான்

“உங்கப்பா… வாக்கிங் போயிட்டு அப்படியே மார்க்கெட் போய்ட்டு வரேன்னு சொன்னார் டா” என காயூ கூற,

“ஐயையோ...! ஒரு ரிட்டையர்டு பேங்க் மேனேஜரை போய் இப்படி மாத்திட்டியே காயூ. இது நியாயமா..? தர்மமா..?” என வம்பு பேசி கொண்டிருந்தவனின் மண்டையில் நங்கென்று ஒன்று வைத்து, “வாடா, எனக்கு இன்டெர்வியூ பதினோரு மணிக்கு உன் கதாகலஷேபம் முடிச்சி நீ என்னை ட்ராப் பண்றதுக்குள்ள இன்டெர்வியூ முடிஞ்சிட போகுதுடா சீக்கிரம்” என்றாள் சூர்யா.

“ஏய் பூசணி, அதான் எல்லா லெவலும் பினிஷ் பண்ணிடல்ல... அப்புறம், இது என்ன திடீர்னு லாஸ்ட் ரௌண்ட்…” என ஜீவா கேட்க, “தெரியலைடா, போய் பார்த்தா தான் தெரியும்” எனக் கூறினாள். (அவளுக்குமே அந்த கேள்விக்கு விடை தெரியாதே)

“அம்மா, கிளம்பறோம்... அப்பா வந்தா சொல்லிடுங்க. நான் இன்டெர்வியூ முடிச்சிட்டு கால் பண்றேன் மா… நான் கால் பண்ண பிறகு அப்பாவை கிளம்பி வர சொல்லுங்க. முன்னாடியே வந்து வெய்ட் பண்ண வேண்டாம்” எனக் கூறி செல்லும் மகளை பெருமை, வருத்தம், ஏக்கம் கலந்த பார்வை பார்த்தார் காயத்ரி.

பெருமை… என் மகள் அழகி என்று.

வருத்தம்… இந்த அழகே என் மகளுக்கு எதிராய் உள்ளதே.

ஏக்கம்… என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையுமா..?


அவன் உயிரானவள்...








அத்தியாயம் 2


சென்னை...

தன் முன் வானை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்த கட்டிடத்தை விழிவிரிய பார்த்திருத்தாள் சூர்யா. “கமல் டவர்ஸ்” பதினோரு மாடி கட்டிடம்... “தி கமல் குரூப் ஆப் இண்டஸ்ட்ரிஸ் அண்ட் கம்பெனிஸ்” இந்நிறுவனத்தின் கீழ் (கமல் ஹோட்டல்ஸ், கமல் ஃபுட் ப்ரோடக்ட்ஸ், கமல் இம்போர்ட் அண்ட் எக்ஸ்ப்போர்ட்ஸ்) என மேலும் பற்பல... இது சென்னையில் இயங்கும் அவர்களின் தொழில்களுக்கான சென்னை தலைமையகம்.

அந்த கட்டிடத்தினை படப்படப்புடனும், லேசான பயத்துடனும் பார்த்திருந்தாள் சூர்யா.

வண்டியினை பார்க்கிங்கில் விட்டு வந்த ஜீவா, தன் அக்காவின் நிலைக் கண்டு உள்ளுக்குள் கலங்கினாலும் உடனடியாக தன்னை மீட்டு கொண்டு.

தன் தமக்கையின் தோளில் தட்டி, “ஏய்... பூசணி, நிஜமாவே இன்டெர்வியூல உன்னை செலக்ட் பண்ணாங்களா இல்ல சும்மா கதை விட்டியா செக்யூரிட்டி வேற ஒரு மாதிரி பார்க்கிறார் பாரு. உண்மைய சொல்லு… இந்த கம்பெனி தானா... இல்ல, வேற கம்பெனியா... ம்...சொல்லு...” எனப் பேசியவனை, முறைத்துவிட்டு தனக்கு அவர்கள் அனுப்பிய மெயில் மற்றும் மெசேஜ் காட்டி, “என்னையென்ன உன்னை மாதிரி நினைச்சியா… போடா லூசு... நெட்ட கொக்கு” என இன்னும் பலப்பல பட்ட பெயர்களால் அவனை திட்டிவிட்டு அவன் முகம் பார்க்க.

அவள் தம்பி ஜீவாவோ புன்சிரிப்புடன் அவளின் தோளில் கைபோட்டு, “இப்ப டென்ஷன் போயிடுச்சா கா... கவலைப்படாம போய் பாரு என்ன விஷயமானாலும் எனக்கு இல்ல அப்பாக்கு கால் பண்ணு. இல்ல உனக்கு ரொம்ப டென்ஷனா இருந்தா, நான் வேணும்னா இன்டெர்வியூ முடியும் வரை வெயிட் பண்ணட்டுமா, சொல்லுக்கா “ என

தன் தம்பியின் அன்பில், கண்களில் இருந்து கண்ணீர் வர பார்க்க, முயன்று அதை தடுத்து, “நீ இன்னும் அந்தளவுக்கு வளரலடா தம்பி “ ( ஏன்மா, வளர்ரத பத்தி நீயெல்லாம் பேசுற… காலகொடுமைடா சாமி) கிண்டல் போல் கூறினாள்.

தயங்கி நின்றவனை, “நான் இன்டெர்வியூ பினிஷ் பண்ணிட்டு, உனக்கு மெசேஜ் இல்ல கால் பண்றேன். அப்பாவுக்கு கால் பண்ணி வர சொல்லி அவர்கூட போறேன் தனியா போகமாட்டேன். ஓகே... வாடா, சமயத்துல நீ எனக்கு தம்பியா இல்ல அண்ணனானு எனக்கே டவுட் வருது முடியல “ என அலுத்து கொள்வது போல் கூறினாலும் அதில் பெருமையே மேலோங்கி இருந்தது தன் உடன் பிறந்தவனின் பாசத்தினை எண்ணி.

“சரி கா, ஆல் தி பெஸ்ட் … எனக்கு மறக்காம கால் பண்ணு ஓகே வா...” என கூறி, அத்தொழில் வளாகத்தினுள் செல்லும் தன் அக்காவை ... பார்த்து கையசைத்துவிட்டு தன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான் ஜீவா

சூர்யாவும், “சரி… பை… டா… பார்த்துப் போ” என்றவள், அவ்வளாகத்தினுள் சென்று, அங்கிருந்த ரிசெப்ஷனிஸ்ட் பெண்ணிடம், தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு தான் வந்த காரணத்தினை கூறினாள்.

அப்பெண் அவளிடம், “ப்ளீஸ் வெயிட் அ மினிட் மேம் “ என சொல்லி சூர்யாவை அங்கிருந்த இருக்கையில் அமர சொன்னாள்.

தொலைபேசியில் சூர்யா வந்த விஷயத்தினை தெரிவிக்க, “ஓகே சார், அனுப்புறேன்...” எனக் கூறி தொலைபேசியினை துண்டித்து சூர்யாவை நோக்கியவள்,

“மேம்… ப்ளீஸ் கோ டூ 3ர்ட் ப்ளோர், மீட் அவர் ஹச்.ஆர் மேனேஜர் மிஸ்டர் கிருஷ்ணா...” என

ரிசெப்ஷனிஸ்ட் பெண்ணிடம் நன்றி தெரிவித்துவிட்டு 3வது தளம் செல்ல மின்தூக்கி நோக்கி சென்றாள் சூர்யா.

மிஸ்டர் .கிருஷ்ணா (ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜர் ) சென்னை பிரான்ச்... என தன் எதிரில் இருந்த பெயற்பலகை தாங்கிய கதவில் மெதுவாக இருமுறை தட்டி, “ மே ஐ கம் இன்” என அனுமதி கேட்டு உள் நுழைந்தாள் சூர்யா.

“யெஸ், கம் இன் மிஸ் சூர்யா… என அவளுக்கு அனுமதி வழங்கியவன், ப்ளீஸ் டேக் யுவர் சீட்” எனப் புன்னகை முகமாக வரவேற்றான் கிருஷ்ணா…

“தேங்க்ஸ்” எனக் கூறி, சிறு படபடப்புடன் அவன் கை காட்டிய இருக்கையில் அமர்ந்தாள் சூர்யா…

“என்ன மிஸ் சூர்யா, எல்லா லெவல்களிலும் நாம் செலக்ட் ஆயிட்டோம், பட் இந்த லாஸ்ட் ரவுண்டு இன்டெர்வியூக்கான பர்பஸ் என்னனு யோசிக்கிறீங்களா..? நத்திங் டூ வொரி... உங்க ப்ரொபையில்ல... நீங்க ‘இன்டெர்ஸ்டெட் டூ கோ அப்ராட்’ அப்படின்னு மென்சென் பண்ணி இருந்தீங்க...ஆர் யூ சூர்..? அபௌட் தட்..? அந்த விஷயமா பேச தான்... உங்களை வரச் சொன்னேன் “ என.

“ஆமா சார்… எனக்கு வெளிநாடு போறதுக்கு விருப்பம் தான்” என்றாள் சூர்யா...

“ஹான் சூர்யா, நோ சார் ஜஸ்ட் கால் மீ கிருஷ்ணா” என…

“ஓ...ஓகே… கிருஷ்ணா, எனக்கு வெளிநாடு போறதுல எந்தவித பிரச்சனையும் இல்லை…”என

“அண்ட் ஒன்மோர் திங்க், நீங்க எம்.எஸ்.ஸி. ஹோம் சயின்ஸ், உங்களை எங்க ஹோட்டல் மேனேஜ்மேன்ட் பேஸ்டு கேட்டகிரிக்கு தான் செலக்ட் பண்ணோம். பட் சில ரிசென்ஸ்னால நீங்க எங்க பாஸ் மிஸ்டர் கமலநேத்ரன்... அவருடைய ஹவுஸ் மெயின்டனிங்க் அண்ட் அவரோட அம்மா, ஷீ ஹாஸ் சம் ஹெல்த் இஸ்யூஸ் அவங்களுக்கு கம்பானியன் பிளஸ் டயட் அண்ட் நியூட்ரிஷினியஸ்ட் ஆகவும் இருக்கணும். அண்ட் ஒன் மோர் கண்டிஷன் நீங்க அட்லீஸ்ட் 2 இயர்ஸ் ஒர்க்கிங் காண்ட்ராக்ட் அக்ரீமெண்ட் சைன் பண்ணனும், இஃப் யூ ஆர் இன்டெரெஸ்ட்டேட் நாம மேற்கொண்டு பேசலாம்” என்றான்.

கிருஷ்ணா பேச பேச சூர்யா மனத்தில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் வெளிநாடு செல்வது நிம்மதியாகவும், ஹோட்டல் அல்லாது முதலாளியின் வீட்டில் வேலை என்றதும் கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது. இந்த வேலையினால் புதிதாக எந்த பிரச்சனையும் வரக்கூடாது என அவள் வேண்டி கொண்டாள்.

“வெளிநாட்டுல இல்லாத கம்பானியனா அப்படின்னு நீங்க திங்க் பண்ணலாம்... பட், எங்களோட பாஸ்சோட அம்மாவுக்கு, நல்ல தமிழ் பேசுற தமிழ் கலாச்சாரம் தெரிந்த தமிழ் பொண்ணு தான் வேணுமாம்...”

சூர்யா மனத்திற்குள் இந்தம்மா, ' வேலைக்கு ஆள் எடுக்குறாங்களா...? இல்ல இவங்க வீட்டுக்கு மருமகளுக்கு ஆள் செலக்ட் பண்ணுறாங்களா?‘ என எண்ணினாள்.

“ஹலோ… ஹலோ… சூர்யா, என்ன யோசனை ஆர் யூ ஆல்ரைட்..? நீங்க அங்க போய் ஒர்க் பண்ண இன்ட்ரெஸ்ட் இருக்கா?” கிருஷ்ணா கேள்வியாக சூர்யாவை நோக்கினான்.

“கிருஷ்ணா, ஒரே ஒரு கொஸ்டின், ஏன் இந்த ப்ரோபோசல்க்கு என்னை செலக்ட் பண்ணீங்க அண்ட் ஒய் திஸ் அக்ரீமெண்ட்..?”

“ஏன்னா, நீங்க தான் ஒன்லி கேர்ள் கேண்டிடேட் வெளிநாடு போக இன்ட்ரெஸ்ட்டட் அப்படின்னு ஃபில் பண்ணி இருந்தீங்க அண்ட் நீங்க அன்மேரிட் அங்க போய் ஒர்க்ல செட்டில் ஆன கொஞ்ச நாள்ல நீங்க ஜாப் ரிசைன் பண்ணக்கூடாது இல்லையா ஜஸ்ட் ஃபோர் அவர் சேப்டி... அண்ட் இவ்வளவு டீடெயில்ட் எக்ஸ்பிளனேஷன் எதுக்குன்னா நீங்க ஒரு சிக் லேடிக்கு கம்பானியன் அண்ட் கேர் டேக்கரா இருக்க போறீங்க”.

“ஓகே… கிருஷ்ணா, நான் இந்த ப்ரோபோசல்க்கு அக்ஸப்ட் பண்றேன்…” என சூர்யா சொல்லவும் கிருஷ்ணா அவளை ஆச்சர்யமாக பார்த்தான்…

சூர்யா, அவன் பார்வை உணர்ந்து “என்ன கிருஷ்ணா, அப்படி ஆச்சர்யமா பார்க்கிறீங்க?” என

“இல்ல, வீட்டுல கேக்க வேண்டாமா... சாரி இட்ஸ் நாட் மை ஜாப் ஐ நோ, பட் ... ஜஸ்ட் அ க்யூரியாசிட்டி... டோன்ட் மிஸ்ட்கே மீ… என்றான் கிருஷ்ணா

“வீட்டுல சொல்லாம, அவங்க பர்மிஷன் இல்லாம, நான் அந்த ஆப்ஷன்ன ஃபில் பண்ணிருக்க மாட்டேன் கிருஷ்ணா” என சிறு முறுவலுடன் சூர்யா சொல்ல…

“ஓகே, சூர்யா கொஞ்சம் நேரம் நீங்க வெயிட்டிங் ரூம்ல இருங்க, நான் என் பாஸ்க்கு மெசேஜ் கன்வே பண்ணிட்டு… உங்ககிட்ட மத்த டீடெயில்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்றேன் ஓகே சீ யூ லேட்டர்” என்றான் புன்னகையுடன்.

“ஓகே தாங்க் யூ கிருஷ்ணா...” என்றவள் விடைபெற

பாரீஸ் மாநகரம்...

ஐரோப்பிய கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்த பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாக விளங்கும் அழகிய பாரீஸ் நகரம். அம்மாநாகரத்தில் பெயர் பெற்ற பல தொழில்களை கொண்டது “கமல் குரூப் ஆப் இண்டஸ்ட்ரிஸ் அண்ட் கம்பெனிஸ்” என்ற நிறுவனம். அந்நிறுவனத்தின், ஒரே வாரிசு “திரு.கமல நேத்ரன்...” வெளிநாட்டு வாழ் இந்தியன்.

பல இந்தியர்களை போல, இவன் தாத்தா திரு.கமல நாதன், தொழில் நிமித்தமாக பாரீஸ் நகரத்தில் குடியேறினார். காலப்போக்கில் தன் குடும்பம் மற்றும் தொழிலை இங்கேயே அமைத்து கொண்டுவிட்டார். இவர் தொடங்கிய “கமல் ஃபுட் ப்ரோடக்ட்ஸ்” என்று சிறிய அளவில் ஆரம்பித்த தொழில். இன்று உலகளவில் உயர்ந்ததிற்கு காரணம் கமல நேத்ரன் என்றால் அது மிகையில்லை. இவன் தாத்தா, தொடங்கியதை இவனின் தந்தை வளர்த்தார், இவன் பலமடங்காக பெருக்கினான்.

காலை 7 மணி “கமல நாதன் இல்லம்” அது இல்லம் என சொல்ல முடியாது... அது ஒரு அரண்மனை போல் பிரம்மாண்டமாய் காட்சியளித்தது. தன் அறைக்கு அடுத்து உள்ள பால்கனியில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து தன் தொடைகளில் தன் கரங்களினால் முட்டுக் குடுத்து தன் தலையை தாங்கி கொண்டு தீவிர யோசனையில் இருந்தான். இந்த உலகம் போற்றும் , “தி கிரேட் பிசினஸ் ஐகான் அண்ட் வேர்ல்ட் பேமஸ் யங் பிசினஸ் மேன்” பல பெண்களின் கனவு நாயகன். மிஸ்டர். கமல நேத்ரன்.

திரு.சத்யமூர்த்தி மற்றும் பிரேமா அவர்களின் ஒரே மகன் சத்யா, அவர்கள் தன் தந்தையின் பெயரை தன் மகனுக்கு வைக்க வேண்டும் என்று “கமல நேத்ரன்” என பெயரிட்டார். கமல நேத்ரன், வயது 30 சராசரி ஆண்களை விட உயரம் , 6 அடிக்கு மேல், திராவிடன் என்றாலும் கருமை இல்லாத பாலுடன் தேன் கலந்த நிறம். திருத்தமான முகம், வசீகரிக்கும் கண்கள்… பொதுவாக பெண்களுக்கு தான் வசீகரிக்கும் கண்கள் உண்டு. ஆனால் இவன் கண்களினால் வசீகரிக்கபட்ட கன்னியர் பலர். கூர் நாசி, நிகோடின் தீண்டாத இதழ்கள், அவனின் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு, கருமையான கேசம், மொத்தத்தில் இவனின் அழகிற்காகவும், பணத்திற்காகவும் இவன் பின்னால் சுற்றும் பெண்கள் பலர் உண்டு.

இவன் பெண்களை அறியாதவனும் இல்லை, அதே போல் பெண்கள் பின்னால் சுற்றுபவனும் அல்ல...
இப்படி உலகில் உள்ள அனைத்தையும் தன் கண்ணசைவில் நடத்தி காட்டும் வல்லமை கொண்டவன். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கும் காரணம் தான் என்ன..?

அவன் சிந்தனையை கலைப்பது போல் ஒலித்து கொண்டிருந்தது அவனின் அலைப்பேசி. அதில் ஒளிர்ந்த இந்திய தொலைப்பேசி எண்களை கண்டவன். ஏதோ அந்த கடவுளை கண்ட பக்தனை போல பரபரப்பு அவனை ஆட்கொண்டது. நொடியும் தாமதிக்காது அலைபேசியினை உயிர்ப்பித்து காதில் வைத்தான் கமல். தொழில் வட்டாரத்தில் அனைவருக்கும் அறிந்த தெரிந்த பெயர்.

“இட்’ஸ் இன்டெர்வியூ பினிஷ்ட்… கிருஷ்ணா?”.

........
“இஃப் ஷீ ஹாட் நோ கொரிஸ் அபௌட் ஹேர் ஜாப் டிஃபரெஸியேஷன்…?”

........

“ஓகே பிரிப்பர் ஆல் பேப்பர்ஸ் அண்ட் பினிஷ் ஆல் போர்மலிட்டிஸ் ஷீ வில் பி ஹியர் வித் இன் 10 டேஸ் மேக் அரேன்ஜ்மென்டஸ் ஆஸ் லைக் தட்
அண்ட் மெயில் ஹேர் போட்டோ அண்ட் ப்ரொபைல் டூ மீ”.

(இந்தியாவிற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் 4மணி 30 நிமிடங்கள் வித்தியாசப்படும்... நாம் முன்னோக்கி அவர்கள் பின்னோக்கி எ.க... அவர்களுக்கு (பிரான்சில்) காலை 7 மணியென்றால்.. நமக்கு (இந்தியாவில்) முற்பகல் 11.30 மணியாகும்).

பேசி முடித்தவன், தன் தலை முடியை அழுந்த கோதிக் கொண்டான்.

“மாம், எல்லாம் உங்களுக்காக தான் நீங்களாவது எனக்கு வேணும் மாம், ப்ளீஸ் கம் பேக் டூ மீ”


அவள் உயிரானவன்…




 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

"என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 1 & 2 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்...

உங்க நிறை குறைகளை கொஞ்சம் சொல்லிட்டு போங்க...


தனசுதா...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3


சென்னை...

“என்னங்க சூர்யா இன்னும் கால் பண்ணலை… இன்னுமா இன்டெர்வியூ முடிஞ்சு இருக்காது, இந்த ஜீவா பையனும் அவளை அங்க ட்ராப் பண்ணிட்டு ஒரு கால் பண்ணி சொன்னானா...?”என. தன் கணவரிடம் கேட்டுக் (புலம்பி) கொண்டிருந்தார் காயத்ரி.

சிவரத்தினம் புன்னகைத்து கொண்டே, “ஏன் காயூ...டென்ஷன் ஆகுற “( என்னே… உங்க சமாளிப்பு… நீங்கதான் பெர்ஃபெக்ட் குடும்ப தலைவன். பின்னே ஏன் புலம்பிட்டு இருக்கே அப்படின்னா கேட்க முடியும் இதை காயத்ரியிடம் சொல்லி, வாங்கி கட்டிக் கொள்ள சிவரத்தினம் என்ன முட்டாளா ).

“ஜீவா கால் பண்ணான்… அவளை பத்திரமா கொண்டு போய் விட்டுட்டானாம், இன்டெர்வியூ முடிச்சதும் அவளே கால் பண்றதா சொன்னாளாம்” என…

“ம்ஹும்... அதைத்தான் என்கிட்டயும் சொல்லிட்டு போனா…” என நொடித்துக் கொண்டார்

அவரின் புலம்பலை நிறுத்துவதை போல சிவாவின் கைப்பேசி ஒலித்தது. அலைபேசியினை பார்த்து புன்னகைத்துக் கொண்டே, “இந்தா உன் பொண்ணு தான் கால் பண்ணுறா இவ்வளவு நேரம் என்கிட்ட கேட்ட கேள்வி எல்லாத்தையும் இப்ப உன் பொண்ணுகிட்ட கேளு” என்றார்.

அவரை முறைத்து கொண்டே அலைபேசியை எடுத்து பேச சொன்னார் காயாத்ரி.(என்ன காயூ, சிவாகிட்ட அந்த பேச்சு பேசுனிங்க... சூர்யா பேர் கேட்ட உடனே இப்படி பேக் அடிச்சிட்டிங்களே)

அலைபேசியை உயிர்ப்பித்து தன் காதில் வைத்தார் சிவரத்தினம், அந்த பக்கம்

“அப்பா...”

“சொல்லுடா சூர்யா, இன்டெர்வியூ பினிஷ் ஆயிடுச்சா...”

“முடிஞ்சிடுச்சி ப்பா, ஒர்க் செடியூல் மத்த ப்ராஸஸ் பத்தி பேச வெயிட் பண்ண சொல்லி இருக்காங்க ப்பா... எப்படியும் இன்னும் ஒரு அரைமணி நேரத்தில முடிஞ்சிடும் நீங்க கிளம்பி வாங்கப்பா, இல்லன்னா காயூ, புலம்பியே உங்களுக்கு BP ரைஸ் பண்ணி விட்ருவாங்க...” என்றாள் கிண்டல் போல.

“ஹா... ஹா… கரெக்டா சொன்னடா உங்கம்மா அவ வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டா, நீ இப்ப கால் பண்ணலைன நானே உனக்கு கால் பண்ணி இருப்பேன்...”

இவர்களின் பேச்சு வார்த்தையினை கேட்டு காயூ, தன் கணவரை முறைத்துக் கொண்டிருந்தார்.

‘அப்பாவுக்கும் பெண்ணுக்கும் என்னைய கிண்டல் பண்றதுன்னா அல்வா சாப்புடுற மாதிரி’ என்று தன் கணவரையும் மகளையும் மனத்திற்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்…

“சரிடா சூர்யா, எனக்கு எங்கேயோ கருகுற வாசனை வருது… அது என்னன்னு முதல்ல பார்க்கிறேன்… அப்புறம் சூர்யா, சொல்ல மறந்துட்டேன்... அப்பா வர்ற வரைக்கும் நீ அங்க உள்ளேயே இரு நான் வந்து கால் பண்ண பிறகு வெளியே வா மா.” என்றார்.

தந்தை இப்படி சொல்லியவுடன், சூர்யாவின் முகம் வாடி விட்டது.

சிறிதுநேர அமைதிக்கு பின் சூர்யா, “அப்பா, ஏதாவது பிரச்சனை வந்திடும்னு பயப்படுறீங்களா...” என.

அவளின் அமைதி மற்றும் கேள்வியில் தன் மனம் கவலை கொண்டாலும்… அதை தன் மகளிடம் காட்டாத குரலில், “அதுக்கு பெயர் பயம் இல்லடா எச்சரிக்கை உணர்வு. நாம ஜாக்கிரதையா இருந்தா நமக்கு தானே நல்லது. நீ மிச்சசொச்ச வேலையெல்லாம் பாரு. நான் கிளம்பி வரேன். ஓகே பை...டா...”

“சரி ப்பா, நீங்க பாத்து பொறுமையா வாங்க பை...ப்பா...”

அலைபேசியினை துண்டித்த பிறகும் அதனையே பார்த்துக் கொண்டிருந்த தன் கணவரின் அருகில் வந்த காயத்ரி, அவரின் தோளில் கைவைக்க.

சிவா, கண்களில் வலியும், வெறுமையும் கண்டு காயூ கலங்கினாலும்...

“இந்த முறை எந்த தப்பும் நடக்காதுன்னு நம்புவோம்... நீங்க இப்படி வருத்தப்படுறீங்கன்னு... சூர்யாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கவலைப்படுவா...
இந்த முஞ்சியோட போகாதீங்க... என் பொண்ணு பாவம்... பயந்திட போறா கொஞ்சம் சிரிச்சா போல போங்க...” எனக் காயூ சொல்லியதை கேட்டு முறைக்க முயன்று சிரித்துவிட்டார் சிவா.

“காயூ, நீ மட்டும் தைரியமா இல்லனா... நானும் பசங்களும் என்ன ஆகியிருப்போம்னே தெரியலை...” எனச் சொல்லி மென்மையாக தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.

சிறிது நேரம் காயூ, தன் கணவரின் அணைப்பில் ஒன்றி இருந்தவர் அவர் தன் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என அறிந்து, “இந்த தடவை எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்றார்.

சிவாவும், “நல்லது நடந்தா ரொம்ப சந்தோசம்” என்றார் புன்னகையுடன்.

கமலிடம் பேசி முடித்த பிறகு கிருஷ்ணா, ஒரு நீண்ட பெருமூச்சினை வெளியிட்டான்.

“ஷப்பா... மனுஷன் நம்மள பேசவே விடாம எத்தனை கேள்வி மூச்சு கூட விடாம கேக்குறார்… இன்னும் பத்து நாளுக்குள்ள எப்படி எல்லா ப்ராஸஸ்சையும் முடிச்சி... அவங்களை(சூர்யாவை) பாரீஸ் அனுப்புறது. (விடுறா...விடுறா... கிருஷ்ணா எவ்வளவோ... செஞ்சிட்டோம்... இதை செய்ய மாட்டோமா)

கிருஷ்ணா, தனக்குள் புலம்பிக்கொண்டே... கமல் கேட்ட சூர்யாவின் புகைப்படம் மற்றும் அவளின் ப்ரொபைல் ஆகியவற்றை சரிப் பார்த்து மெயில் அனுப்பினான்.

புகைப்படத்தினை பார்த்து தன் முதலாளி எந்தளவிற்கு அதிர போகிறான் என தெரியாமல் ...

தந்தையுடன் பேசிவிட்டு தம்பிக்கும் மெசேஜ் செய்துவிட்டு காத்திருந்தாள் சூர்யா.

அவளை அழைத்த கிருஷ்ணா, அவளின் பணி விவரம், பயண விவரம், விசா ஆகியவற்றை பற்றி கூறி, அவளின் பயணம் இன்னும் பத்து தினங்களுக்குள் இருக்கும் என்றான்.

மறக்காமல் அவளிடம் ஜாப் காண்ட்ராக்ட் அக்ரீமெண்டில் கையெழுத்தும் வாங்கி கொண்டான்.

(அக்ரீமெண்டில் கையெழுத்து போடும் போது தயங்கினாலும் ‘நம்மை மீறி எதுவும் தவறாக நடக்காது’ என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டாள் சூர்யா)

அவள் செல்லும் நாடு, அதற்கான டிக்கெட், தங்கும் இடம்... முதலியனவற்றை மெயிலில் அனுப்புவதாக சொல்லி, பயணத்திற்கு தயாராக இருக்குமாறு கூறினான்..

“ஓகே சூர்யா, உங்க போட்டோ அண்ட் ப்ரொபைல்ல எங்க பாஸ் சாரி… சாரி நம்ப பாஸ்க்கு அனுப்பிட்டேன் உங்களுக்கு வேற ஏதாவது சந்தேகம் இருந்தா எனக்கு மெயில் இல்ல கால் பண்ணுங்க… ஆல் தி பெஸ்ட் சூர்யா” என வாழ்த்தினான் கிருஷ்ணா.

“ஓகே… தேங்க்ஸ் கிருஷ்ணா பை...” என விடைபெற்றாள் சூர்யா…

பாரீஸ் மாநகரம்...

அலைபேசியில் பேசிய பிறகு அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் அவளுடைய ப்ரொஃபைலை மெயில் அனுப்ப சொல்லிவிட்டு மீண்டும் தன் யோசனையில் ஆழ்ந்தான் கமல நேத்ரன்.

இரண்டு மாதங்களுக்கு முன் தன்னுடைய வாழ்க்கையினையும்... தற்போதைய நிலையினையும் ஒப்பிட்டு பார்த்து சிந்தித்து கொண்டிருந்தான். அவனின் சிந்தனையை தடை செய்வது போல் அதிர்ந்த அவனின் கைப்பேசி. என்னவென்று பார்க்க... கிருஷ்ணாவிடம் இருந்து மெயில் வந்திருந்தது.

சாதாரணமாக திறந்து பார்வையிட்டவன் பெண்ணவளின் புகைப்படத்தினை பார்த்து நெற்றி சுருங்க யோசனை வயப்பட்டான். மீண்டும் தன் பார்வையினை புகைப்படத்தில் பதித்தவனுக்கு அந்த புகைப்படம் பல விஷயங்களை புரியவைத்தது.
புரிந்த விஷயம் அவனை அதிர்ச்சிக்குள்ளாகியது அதுவும் இன்ப அதிர்ச்சி… திரும்பவும் அவளின் ப்ரொஃபைலை சரிபார்க்க மிஸ்.சூர்யா என்றிருந்தது.

அவளின் அந்த மிஸ்.சூர்யாவில் குழப்பம் மேலிட்டது. இதற்கான பதில் தன் தாயிடம் தான் உள்ளது என அவரை காணச் சென்றான்.

அவன் உயிரானவள்...





அத்தியாயம் 4

பாரீஸ் மாநகரம்...

கமலநேத்ரன் மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்தான். தொழிலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அனாயசமாக முடிவெடுக்கும் திறன் படைத்தவன். சூர்யா விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தடுமாறினான்.

அம்மா ஏன் இவளுக்கு இங்கே வேலை கொடுக்க சொன்னார்கள். வேலை தான் வேண்டும் என்றால்… சென்னையில் உள்ள எங்கள் நிறுவனங்களில் ஒன்றில் ஏற்பாடு செய்திருக்க முடியும். எதற்கு இங்கே வரவழைக்க வேண்டும்.

யோசிக்க...யோசிக்க தலைவலிப்பது போல் இருக்கவும் தன் இரண்டு கரங்களினால் தலையை தாங்கி கொண்டான்.

இங்கேயே இப்படியே யோசித்து கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை என்றெண்ணி, சூர்யாவை பற்றி அறிய வேண்டுமானால் தன் கேள்வி மற்றும் குழப்பங்களுக்கான விடைகள் அனைத்தும்… தன் அன்னையிடம் தான் கிடைக்கும். எனவே அவரை பார்க்க சென்றான்.

அதற்கு முன், தன் நண்பனும் துப்பறியும் நிபுணனுமான ஹரிஷுக்கு தொடர்பு கொண்டான்.

ஹரிஷ், தனியாக துப்பறியும் நிறுவனம் வைத்திருந்தாலும் அவனின் வேலை பெரும்பாலும் “கமல் இண்ட்ஸ்ட்ரிஸ்” உடனே இருக்கும்.

ஹரிஷ், கமலின் எண்ணை பார்த்தவுடன் தன் அலைபேசியை உயிர்ப்பித்தான்.

“ஹாய் கமல், எப்படி இருக்க...? அப்புறம் அம்மா, ஹெல்த் ஓகே வா...” என.

“ம்ம்… ம்ம்… ஹரிஷ், நான் நல்லா இருக்கேன், அம்மாவுக்கு இப்ப பரவாயில்லை நோ பிரோப்ளேம் எனக்கு நீ ஒரு ஃபேவர் பண்ணனும்...”

“சொல்லுடா, என்ன விஷயம்...”

கமல், தன் கேசத்தினை அழுந்த கோதிக்கொண்டு, “எ... எனக்கு...ஒரு பொண்ணைப் பத்தி விசாரிச்சி சொல்லணும்...” இதைச் சொல்லி முடிப்பதற்குள் பெரும் சங்கடமாகி போனது. இத்தனைக்கும் தொழில் சம்பந்தமாக பலரை, விசாரிக்கவும் கண்காணிக்கவும் சொல்லியவன் தான்.

அந்த பக்கம் ஹரிஷ் முகம் கொள்ளா புன்னைகையுடன், “கமல் யாருடா அந்த பொண்ணு, எனக்கு தெரியாம யாரையாவது லவ் பண்றியா சொல்லுடா” என்றான்.

ஹரிஷின் கேள்வியில் கடுப்புற்றவன்... தன் நிலைமை புரியாமல் பேசும் நண்பனை நினைத்து கோபத்தில் பல்லைக் கடித்தான்.( ஹரிஷு...உனக்கு வாய்ல வாஸ்து சரி இல்ல... நல்லவேளை... கமல் முன்னாடி இந்த கேள்வியை கேட்கலை...இல்லனா பல்லுக்கு பதிலா உன்ன கடிச்சி வெச்சிருப்பான்).

“ஹரிஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...கொஞ்சம் நான் சொல்லுறத முழுசா கேளு டா” (கமலின் வாயில் வார்த்தைகள் அரைப்பட்டன)

கமலின் குரலிலும் மற்றும் வார்த்தைகள் உச்சரித்த விதத்திலேயே அவனின் கோபத்தின் அளவை கண்டுக் கொண்ட ஹரிஷ் தன் தலையில் கைவைத்து கொண்டான்.

‘சரி சிங்கம் சீரியஸ் மோடுக்கு போயிடுச்சி... சேதாரம் இல்லாம எஸ் ஆகிடு டா ஹரிஷ்’ என மனத்திற்குள் எண்ணிக் கொண்டு நல்லப் பிள்ளையாக… “சாரி டா சரி சொல்லுடா...” என.

“நான் உனக்கு ஒரு போட்டோ அண்ட் அவங்களோட ப்ரொபைல் அனுப்புறேன், நீ அவங்களோட கரண்ட் ஸ்டேட்டஸ் அண்ட் லாஸ்ட் 5 இயர்ஸ் அவங்க லைப் ஹிஸ்டரி வேணும்… ஒரு சின்ன விஷயம் கூட மிஸ் ஆக கூடாது காட் இட் இது வெரி கான்பிடென்சியல்...” என்றான் தீவிர குரலில்.

கமல் குரலில் உள்ள தீவிரத்தை உணர்ந்த ஹரிஷ், தன் விளையாட்டு தனத்தினை கைவிட்டவனாக, தன் நெற்றியினை வலக்கையின் சுட்டு விரலால் நீவி கொண்டவன், தன் நண்பனை நன்கு அறிந்தவனாய் இதற்கு முன் இப்படி சொல்லியது இல்லை. அதுவும் பெண்களை பற்றி ...இல்லவே இல்லை என பலவாறாக யோசித்தவன்… ‘தன் நண்பனால் யாருக்கும் எத்தீங்கும் நேராது’ என மனத்திற்குள் சொல்லிக்கொண்டவன் .

“ஓகே கமல்… ஒரு ஒன் வீக்குள்ள நீ கேட்ட டீடெயில்ஸ் உன்கிட்ட இருக்கும் சென்ட் மீ தி மெயில்” என்றான் ஹரிஷ்

“என்னாது… ஒன் வீக்ஆஆஆஆ… நோ வே...எனக்கு எல்லா டீடெயில்ஸும் இன்னும் இருபத்தி நாலு மணிநேரத்துக்குள்ள வேணும்... நீ யார வேணா, எத்தனை பேர வேணா ஹெல்புக்கு வச்சிக்கோ எனக்கு கூடிய சீக்கரம் டீடெயில்ஸ் வேணும்...” என்றான் கமல். அவனுக்கு தன் குழப்பங்களுக்கு எல்லாம் விரைவில் விடை தெரிய வேண்டும்.

கமலின், பேச்சில் திடுக்கிட்ட ஹரிஷ்,
“டேய் கமல், உனக்கே இது நியாயமா இருக்கா... நீ கேட்டது அஞ்சுஊஊஊ வருஷ லைப் ஹிஸ்டரி...கொஞ்சம் டைம் எடுக்கும்.அட்லீஸ்ட் ரெண்டு இல்ல மூணு நாளாவது ஆகும்” என்றான்

ஹரிஷின் பதிலில் யோசனைக்குள்ளானவன்... தன் வலக்கையினால் தலை முடியினை அழுந்த கோதிக் கொண்டான் கமல்.

“ஓகே ஹரிஷ், ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோ ஃபுல் டீடெயில்ஸ்க்கு பட் இன்னும் ஒன் ஹொவர்ல எனக்கு கரண்ட் டீடெயில்ஸ் வேணும்… இதுக்கு மேல நோ எக்ஸ்ஸுயூஸ் ஓகே கால் அஃப்டேர் ஒன் ஹொவர் வித் தி டீடெயில்ஸ் உனக்கு மெயில் பண்ணிட்டேன். ஓகே பை...ஸீ யூ சூன்...” அவனின் குரல் எஃகின் கடின தன்மையுடன் ஒலித்தது.

இனிமேல் என்ன சொன்னாலும் கமல் ஒத்துக்கொள்ள போவதில்லை என்பதினை அவனின் குரலில் கண்டுகொண்ட ஹரிஷ். “ஓகே கமல்… ஒன் ஹொவர்ல நீ கேட்ட டீடெயில்ஸ்சோட, உனக்கு கால் பண்றேன்… பை டேக்கேர் அம்மாவ, விசாரிச்சேனு சொல்லு...” என தொடர்பை துண்டித்தான்.

அலைபேசியினை அணைத்து விட்டு தன் அறையினில் இருந்து கீழ் இறங்கி வந்தவனை சாப்பிடச் சொல்லி அழைத்தார் தங்கம்மா.

தங்கம், அவர்கள் வீட்டில் பல வருடங்களாக வேலை செய்பவர். வேலையாள் என்பதை விட அவர்கள் வீட்டினுள் ஒருவர். நம்பிக்கைக்குரியவர்.அவனின் தாய் இல்லாத இந்த இரண்டு மாதமும்... அவன் வயிறு வாடாமல் பார்த்து கொண்டவர்.

“வேண்டாம் தங்கம்மா, நான் அம்மாவ தான் பார்க்க போறேன், பார்த்திட்டு அப்படியே ஆபீஸ் போயிடுவேன்… அங்கே போய் சாப்பிட்டுக்குறேன்…” எனச் சொல்லி கிளம்ப போனவனை, தடுத்து ரெண்டு இட்லிகள் அவன் வயிற்றுக்குள் சென்ற பிறகே அவனை வெளியே செல்ல விட்டார் தங்கம்.

அவரிடம், தலையசைத்து விடைபெற்றவைனை கண்டு மனம் வருத்தமுற்றார். எப்படி இருந்த வீடு இப்படி களையிழந்து இருப்பதை காண முடியவில்லை அவரால், ‘பிரேமாம்மா, நீங்க எப்ப வீட்டுக்கு வருவீங்க. அப்ப தான் வீடு கொஞ்சமாவது நல்லா இருக்கும். கடவுளே... இந்த வீடு பழைய மாதிரி சந்தோஷமா இருக்கணும். அதுக்கு நீதான் அருள் புரியணும்’ என்று வேண்டிக் கொண்டார். அந்த உண்மையான விசுவாசி.

அவரின் வேண்டுதல் பலிக்குமா..?

வீட்டிலிருந்து தன்னுடைய கருநீல நிற மெர்சிடிஸ் பென்ஸில் அந்த மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்தான் கமலநேத்ரன்.

தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை தன்னகத்தே கொண்ட மருத்துவமனை அது.

அந்த மருத்துவ வளாகத்தினுள், சென்று தன் வண்டியினை அதற்குரிய இடத்தில நிறுத்திவிட்டு வண்டியில் இருந்து இறங்கி மருத்துவமனையின் தலைவர் மற்றும் தன் தந்தையின் நண்பருமான, திரு. கைலாஷ் அவரின் அறை நோக்கி தன் கால்களை எட்டிப் போட்டான்.

கைலாஷ் , வயது 55. இருக்கும் பார்ப்பதற்கு ஒரு சாயலில் நடிகர் விசுவினை போல் இருப்பார். மனநல மருத்துவர் மருத்துவமனையின் தலைவர்.

தான் வருவதை முன்கூட்டியே அவரிடம் தெரிவித்திருந்தான். அதனால் எந்தவித தடையும் இன்றி அவரின் அறைக்குள் சென்றான்.

“குட் மார்னிங்...அங்கிள் ...” என்றான் கண்களில் எட்டா சிரிப்புடன்...

“ஹாய் கம் மை பாய், ஹொவ் ஆர் யூ..? உட்கார்” என சொல்லி தன் எதிரில் இருந்த நாற்காலியினை கைகாட்டினார். டாக்டர்.கைலாஷ்.

“யா...ஐ ஆம் பைன் தேங்க்ஸ் அங்கிள்...”

“சொல்லு கமல், அப்படி என்ன முக்கியமான விஷயமா என்கிட்ட பேசணும்...” என்றார் தன் கண்களில் உள்ள கண்ணாடியை கழற்றியவாறே...

நாற்காலியில் அமர்ந்திருந்தவன் தன் முன் இருந்த மேஜையில் கைகளை நீட்டி வைத்திருந்தவன் தன் விரல்களை கோர்த்து பிரித்து என தன் படப்படப்பினை குறைக்க முயற்சித்து கொண்டிருந்தான் கமல். அவனின் செயல்களை அளவிட்டு கொண்டிருந்த டாக்டர்.கைலாஷ், “கம் அன் மை பாய் ஸ்பிக் அவுட்...” என்றார்.

மூச்சினை உள்ளிழுத்து தன்னை சமன்செய்து கொண்டு, “வேற ஒண்ணும் இல்ல அங்கிள்... அம்மாவ டிஸ்சார்ஜ் பண்ணுறத பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்... அம்மாவோட ஹெல்த் கண்டிஷன் இப்ப எப்படி இருக்கு... அவங்களோட ரொட்டின் லைப்ஸ்டைல்க்கு எப்ப திரும்புவாங்க...” என மூச்சி விடாமல் கேள்வி கேட்க…


“கமல், ஸ்டாப்... ஸ்டாப் ஜஸ்ட் ரிலாக்ஸ்… மை பாய், நான் முதல்ல சொன்னது தான் கமல் புதுசா வேற எந்த மாற்றமும் இல்ல. அதுவும் இல்லாம உன் அம்மாவ பத்தி எல்லா டீடெயில்ஸும் உனக்கு தான் ஆல்ரெடி தெரியுமே.

இந்த ஆக்சிடேன்ட்ல பிரேமாவுக்கு உடம்பில் உள்ள காயம்னு பெருசா ஒண்ணும் இல்ல. ஜஸ்ட் கை மற்றும் கால் ஃபிராக்சர் மட்டும்தான் மத்தபடி சின்ன சின்ன காயம் தான். பட் மெண்டலி ...ஃபுல் ஆப் ஸ்ட்ரெஸ்... சத்யாவோட டெத்தை டைஜஸ்ட் பண்ணிக்கிட்டு இந்தளவு ரெகவர் ஆனதுக்கே நாம சந்தோஷப்படணும்.

பிஸிக்கல்லி, ஷீ இஸ் 100% ஓகே... அவங்களுக்கு அதிகமா ஸ்ட்ரெஸ் ஆகக் கூடாது. இட்ஸ் நாட் குட் போர் ஹேர் ... அண்ட் ரொம்ப எமோஷனல் ஆகக் கூடாது, அவங்க தனிமைய உணரக்கூடாது. தட்ஸ் இட்... வா போய் உன் அம்மாவ பார்க்கலாம்…” எனச் சொல்லி தன் நாற்காலியில் இருந்து எழுந்து இருவரும் அவ்வறையில் இருந்து வெளிவந்து பிரேமாவின் அறை நோக்கி நடந்தனர்.

ஏதோ யோசனையோடு நடந்தவனை, “ரொம்ப யோசிக்காத கமல், அம்மா முன்னாடி இப்படி இருக்காத. சியர் அப் மை பாய்…” என அவனின் தோளில் தட்டி கொடுத்தார் புன்னகை முகமாய்...
அவரின் புன்னகை இவனையும் தொற்றி கொண்டது. அதே புன்சிரிப்புடன் தன் அன்னைக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

வசதியுள்ளவர்கள் தங்கும் அறைகளுக்கே உரித்தான எல். இ. டி டிவி, ஏர் கண்டிஷனர் என சகல அம்சங்களும் அதில் நிறைந்து இருந்தது.

அங்கிருந்த கட்டிலில் வலது கையிலும் காலிலும் கட்டுகளுடன், உடலில் சில இடங்களிலும், நெற்றியிலும் காயம் சரியாகி வருவதிற்கான அறிகுறியாய் கருமை படர்ந்திருந்தது. அதைக்கண்டு நேத்ரனின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

அழகும், கம்பீரமுமாய் ... உதட்டில் உறைந்த புன்னகையுடன் இருக்கும் தன் தாயின் முகம் வந்து சென்றது.

இவர்கள் வந்த சத்தத்தில், கண்விழித்தவர். தன் மகனை கண்டு மெலிதாக சிரித்தார். டாக்டர்.கைலாஷ் அவரின் உடல்நிலையினை பரிசோதித்து விட்டு, “எவ்ரிதிங் நார்மல் ஓகே நான் ரௌண்ட்ஸ் போயிட்டு வரேன்... கமல், ரொம்ப நேரம் பேசக் கூடாது ஓகே... டேக் கேர்” எனச் சிறு தலை அசைப்புடன் தாய்க்கும் மகனுக்கும் தனிமை தந்து விடை பெற்று சென்றார்.

அவர் வெளியேறும் போதே அங்கு பிரேமாவிற்காக இருந்த செவிலிக்கும் வெளியேறுமாறு கண்காட்டி விட்டு சென்றார்.

தன்னை உச்சி முதல் பாதம் வரை கண்களில் பெரும் வலியோடு காணும் மகனை கண்டு அந்த தாயுள்ளம் வேதனை கொண்டது. தன் தாய் தன்னை கவனிப்பதை அறிந்து கொண்டு தன் பார்வையினை இயல்பு போல் மாற்றி கொண்டான் நேத்ரன்.

தன் மகனின் பார்வை மாற்றத்தினை கண்டுகொண்டாலும் சாதாரணம் போல், “வா நேத்ரா...” என்றார் அடிப்படாத தன் இடது கைநீட்டி... நீண்ட அவரின் கரத்தினை பற்றிக் கொண்ட நேத்ரனிடம், “சாப்டியா கண்ணா...” என்றார்.

தன் அன்னையின் கேள்வியில் உதட்டில் தோன்றிய புன்சிரிப்புடன், “அதான் உங்க அசிஸ்டண்ட் இருக்காங்க இல்ல அப்புறம் எப்படி என்ன சாப்பிடாம வெளியே விடுவாங்க நீங்க சொல்லுங்கமா… எப்படி இருக்கீங்க...? பெயின் எதுவும் இல்லைல சாப்டிங்களா” என கேள்விகளை அடுக்கி கொண்டிருக்கும் தன் மகனின் குரலிலும் ஸ்பரிசத்திலும் உள்ள படப்படப்பினை உணர்ந்து அவனின் கரங்களில் அழுத்தம் கூட்டினார்.

தன் கரங்களில் ஏற்பட்ட அழுத்தினை உணர்ந்து தன் தாயின் முகம் பார்த்தான் கமல். காய்ந்த இதழ்களில் மெல்ல புன்முறுவல் சிந்த, “சொல்லு கண்ணா ஏதாவது பிரச்சனையா... இல்ல என்கிட்ட ஏதாவது கேட்கணுமா” என்று கேட்டு தான் அவன் அன்னை என்பதை நிரூபித்தார் பிரேமா.

தன் முகம் மற்றும் உடல் மொழியிலேயே தன் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன் தாயின் செயல்பாட்டினை எண்ணி என்றும் போல் இன்றும் வியந்தான்.

“நோ பிக் இஸ்ஸுஸ்... உங்களுக்கு கம்பானியன் அண்ட் நம்ம ஹோம் மைண்டைனிங்க்கும் ஒரு ஸ்டாப் நீங்க ரெபெர் பண்ணீங்களே அது விஷயமா பேசணும்... இவங்க தானே நீங்க செலக்ட் பண்ண உங்க கம்பனியன்...” என சொல்லி தன் பாக்கெட்டில் இருந்த அலைபேசியினை எடுத்து அதனினுள் உள்ள சூர்யாவின் புகைப்படத்தினை காண்பித்தான்.

சூர்யாவின், புகைப்படத்தினை பார்த்து உள்ளுக்குள் சிறிது அதிர்ந்தாலும்,’எப்படியும் இவனுக்கு தெரியவேண்டிய விஷயம் தானே’ என மனத்திற்குள் சொல்லிக்கொண்டு வெளியே சாதாரணமாக, “ஆமா...இவ தான். ஏன் உனக்கு ஏதாவது இதுல சங்கடம் இருக்கா...” என்றார் பிரேமா அவனின் முகத்தினை அளவிட்டு கொண்டே…

“அப்படியெல்லாம் இல்ல மாம்... இவ உங்க பிரண்ட் டாட்டர் தானே... நீங்க இவளுக்கு மேரஜ் ஆயிடுச்சின்னு சொன்னிங்க ப்ரொபைல்ல மிஸ்.சூர்யானு போட்டிருக்கு…”

(தம்பி அப்போ சூர்யா, இங்க வரது உனக்கு பிரச்சனை இல்ல அவ, மிஸ்ஸா...இல்ல மிஸ்ஸஸா...ங்கிறது தான் உன் பிரச்சனையா)

மகன் கேட்ட கேள்வியில் மனம் மகிழ்ந்தாலும் முகத்தில் எந்த வித உணர்வினையும் கட்டாது, “உனக்கு இந்த பெண்ணை நினைவிருக்கா நேத்ரா...” என்ற அன்னையின் கேள்வியில் என்ன பதில் சொல்வது என தெரியாமல் ஒரு நொடி தடுமாறி நின்றான் அந்த தொழில் நிபுணன்.

“மாம், என்கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களா…? சம்திங் பிஷ்ஷி ...”என்றான் நேத்ரன்.

கண்களை மூடி தன்னை சமன்செய்து கொண்டவர். தன்னை சாய்த்து அமர வைக்க பணித்தார்.

அது போல்ட்டிங் டைப் பெட். அவரின் கால் பகுதிக்கு கீழேயுள்ள விசையினை திருக அவரின் தலை மற்றும் முதுகு பகுதி மேல் எழுந்தது. அவரை வசதியாக சாய்த்து அமர வைத்தவன். தான் வந்து அரைமணி நேரத்திற்கு மேல் ஆனதால் அங்கிருந்த அழைப்பு மணியினை அழுத்தி வந்தவரிடம் பிரஷ் ஜூஸ் வாங்கி வர சொல்லி தானே அதனை தன் அன்னைக்கு புகட்டினான்.

குடித்து முடித்தவர் சூர்யாவின் வாழ்வில் நடந்ததினை சுருக்கமாக சொல்லி அவள் வெளிநாடு வரும் காரணத்தினையும் கூறினார்.

அவனின் அன்னை சொல்ல சொல்ல சூர்யாவின் துன்பத்திற்கு காரணமானவர்களை கொல்லும் அளவிற்கு கோபம் வந்தது.

ஒரு நிமிடம் கண்மூட முடிய கண்களுக்குள் வந்து போனாள் 19 வயது சூர்யா ‘கியூட் டாலி’ என அவனையும் அறியாமல் அவன் உதடுகள் முணுமுணுத்தன.


அவள் உயிரானவன்...



 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

"என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 3 & 4 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்...

உங்க நிறை குறைகளை கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

[/URL]


தனசுதா...
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5



பாரீஸ் நகரம்...



தன் அன்னை கூறிய விஷயத்தினை கேட்டு ஒரு மனம் தன்னவளை நினைத்து வருத்தம் கொண்டாலும் இன்னொரு மனம் சிறகுகள் இல்லாமல் வான்வெளியில் சுற்றி வந்தது. இத்தனை வருடங்களாக தன் இதயத்தினை அழுத்தி கொண்டிருந்த பாரம் தன்னை நீங்கி சென்றது போல் உணர்ந்தான் நேத்ரன்.



தான் கூறியவற்றை கேட்டு தனக்குள் யோசனையில் ஆழ்ந்திருக்கும் தன் மகனை அழைத்தார் பிரேமா.



அன்னையின் அழைப்பில் நிகழ்விற்கு திரும்பிய நேத்ரன். சில நாட்களாக மறந்து இருந்த எதிரில் உள்ளவர்களை வசீகரிக்கும் அழகிய புன்னகை அவனின் இதழ்களில் பூத்தது.



“இவ்வளவு டீடெயில்ஸ் என்கிட்ட கேட்கிற… ஏன் உன் பிரென்ட் அந்த ஜேம்ஸ் பாண்ட் என்ன ஆனான்… இந்நேரத்துக்கு அவன்கிட்ட விசாரிக்க சொல்லி இருப்பியே” என்று கேட்டார் பிரேமா.



அதே புன்னகை முகத்துடன், “விசாரிக்க சொல்லியிருக்கேன். விசாரிச்சிட்டு கால் பண்ண சொல்லி இருக்கேன். முடிச்சிட்டு கால் பண்ணுவான். சரிம்மா... நீங்க ரெஸ்ட் எடுங்க நான் ஆபீஸ் போயிட்டு ஈவினிங் வரேன் ம்மா, பை...டேக்கேர்”

என கூறி கிளம்பியவன் நாற்காலியில் இருந்து எழுந்து, பிரேமாவின் அருகில் சென்று குனிந்து அவர் நெற்றியில் காயம் படாத இடத்தில் முத்தமிட்டு, “கெட் வெல் சூன் ம்மா...” என்றவன் கண்களில் தன்னையும் மீறி இரண்டு சொட்டு கண்ணீர் அவரின் முகத்தினை நனைத்தது. மகனின் கண்ணீரில் மனம் வருந்தினாலும் அவனின் தலை முடியினை கோதிவிட்டு… கலங்கிய கண்களை துடைத்துவிட்டு... முன்னுச்சியில் முத்தம் பதித்து, “கண்ணா… நான் சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுவேன். எனக்கு ஒண்ணும் இல்லை. ஐ அம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்…” அப்புறம் சூர்யா, விஷயத்தில் நான் சொன்னது எல்லாம் நினைவில் வச்சி செய் கண்ணா, சூர்யாவுக்கு ஒரு சேஞ்சு வேணும்னு தான் இங்க நான் அவளை வர வைக்கிறதே. உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்ல. டேக்கேர் ஆப் ஹேர்...” என.



“கவலைப்படாம இருங்க ம்மா, சூர்யா பத்திரமா பாதுகாப்பா நம்ம வீட்டுக்கு வருவா ஓகே… இனிமே சூர்யா என் பொறுப்பு...” என்றான் நேத்ரன்



மகனின் வார்த்தையில் அவனின் மனநிலை உணர்ந்து மகிழ்ந்தவர் கடவுளே, ‘என் ஆசை நிறைவேறணும்’என்று வேண்டிக் கொண்டார்.



விடைபெற்று வரும் பொழுதே ஹரிஷ், ஒரு உணவகத்தின் பெயரினை குறிப்பிட்டு அங்கு வருமாறு நேத்ரனின் அலைபேசிக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தான்.



தான் இன்னும் பத்து நிமிடங்களில் வருவதாக பதிலளித்து விட்டு தன் காரில் அந்த உணவகத்தினை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான் நேத்ரன்.



நேத்ரன் வரும் முன்னே ஹரிஷ் அங்கு சென்றிருந்தான். நேத்ரனும் அவனை அதிகம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான்.நண்பனின் தோற்றத்தில் உள்ள மெலிவு கண்டு வருந்தினாலும் அதனை முகத்தில் காட்டாது புன்னகையுடன் நேத்ரனை ஆரத் தழுவிக் கொண்டான்.



“எப்படிடா இருக்குற…? சரி உட்காரு என்ன சாப்புடுற...” என்றான் ஹரிஷ்.



“ம்ம்...ம்ம்... நல்லா இருக்கேன் டா… சூர்யா டீடெயில்ஸ் என்னாச்சு சொல்லுடா…? எனி திங் சீரியஸ்...” எனப் பதட்டத்துடன் கேட்டான் நேத்ரன்.



நேத்ரனின் பதட்டத்தினை மனத்தினில் குறித்து கொண்ட ஹரிஷ்,



“கூல்… கூல்... நத்திங் சீரியஸ் பட் ஓகே... இந்தா நீ கேட்ட டீடெயில்ஸ்…” என ஒரு கோப்பினை நேத்ரனிடம் தந்தான் ஹரிஷ்.



அதனை படித்த நேத்ரனின் முகம் சுட்டெரிக்கும் சூரியனை போல் தகித்தது. காது கொடுத்து கேக்க முடியாத வண்ண வண்ண வார்த்தைகள் எல்லாம் வந்தது நேத்ரனின் வாயில்… (சீ...சீ...பார்க்கத்தான் ஹை கிளாஸ்... பட் வாய தொறந்த படுஊஊஊஊ லோக்கல் ).



“ஓகே… ஹரிஷ் சூர்யாவிற்கு 24 ஹவர்ஸ் ஷாடோ போடு… சென்னையில் இருந்து பாரீஸ் லேண்ட் ஆகுற வரை, அண்ட் இன்னும் ஒன் வீக்ல சூர்யா இங்க இருக்கணும், இது உன்னோட பொறுப்பு ஹரிஷ்” எனக் கூறிக் கொண்டே தன் தலையினை அழுந்தக் கோதி கொண்டான்.



“நேத்ரா, அவனை என்ன பண்றது” என்ற ஹரிஷிடம்



“இல்ல இப்ப எதுவும் பண்ண வேண்டம்… சூர்யா இங்க வர்றது தான் இப்ப எனக்கு முக்கியம். அவனை அப்புறம் கவனிக்கலாம். அவனோட எல்லா ஆக்டிவிட்டீஸ் பத்தியும் எனக்கு தெரியணும் ஓகே...” என



“டேய், அவன் நாளைக்கு சென்னை ரிடர்ன் ஆகுறான் டா ...” என்றான் ஹரிஷ்



“இல்ல ஹரிஷ், அவன் இன்னும் ஒன் வீக் சென்னை போக மாட்டான்… பிகாஸ் அவன் அவங்களோட பிசினஸ்சை (ஹோட்டல்) அங்க இருக்கவங்களோட டை அப் பண்ணுற விஷயமா போய் இருக்கான் அண்ட் இட்ஸ் ஒன் ஆப் மை பிரென்ட் கன்சர்ன். சோ அவனை டிலே பண்ணுறது ஒண்ணும் பெரிய பிரோப்ளம் இல்லை…” என்றான் நேத்ரன்.



“அதுக்கு ஏன்டா ஒன் வீக், சூர்யா இங்க வந்த பிறகு அவனை ரிலீவ் பண்ணலாம் இல்ல...” என்ற ஹரிஷை பார்த்து விஷமமாக கண்சிமிட்டி… “நோ, சூர்யா வெளிநாடு போறது அவனுக்கு தெரியணும்… விஷயம் தெரிஞ்சு அவனால ஒண்ணும் செய்யமுடியாத நிலையில் அவன் இருக்கணும்… அதைவிட சூர்யா பிளைட் ஏறும்போது அவன் சென்னையில் இருக்கணும்...” என்றான் நேத்ரன்.



“சரி நீ ஒரு முடிவோட இருக்க நடத்து...” என்றான் ஹரிஷ்.



முகம் கொள்ள புன்னகையுடன், “ யெஸ் ஹரிஷ், ஒரு தடவை நான் சூர்யாவை மிஸ் பண்ணிட்டேன். திஸ் இஸ் மை செகண்ட் சான்ஸ் ஐ நெவெர் கிவ் அப்...” என்றான் நேத்ரன் உறுதியுடன்.



“ஆல் தி பெஸ்ட் மை பிரெண்ட்...” என வாழ்த்து கூறினான் ஹரிஷ்… இருவரும் ஆர்டர் செய்த உணவினை உண்டு விட்டு கிளம்பினார்கள்



நேரே தன் அலுவலகத்தில் உள்ள தன் அறைக்கு சென்ற நேத்ரன், தன் பி.ஏ விடம் தன் அலுவல்களை கேட்டறிந்து தான் கையெழுத்து போட வேண்டிய கோப்புகள் எல்லாம் சரி பார்த்து, மற்ற வேலைகளை கவனிக்கவும் அவனின் அன்றைய மீதி நேரம் செலவழிந்தது.



ஓரளவிற்கு எல்லா வேலைகளையும் முடித்து மணி பார்க்க இரவு 8 என்று காட்டியது. பனிமூட்டம் காரணமாக குளிரும் அதிகமாக இருந்தது நேரமாவதை உணர்ந்து அன்னையை காண மருத்துவமனைக்கு கிளம்பினான் நேத்ரன்.



இதுவரை அவனிடம் விடைபெற்று இருந்த சூர்யாவின் நினைவுகள் அவனுள் வலம் வர ஆரம்பித்தன.



ஐந்து வருடங்களுக்கு முன்பு,



எப்போதும் போல் சில நாட்கள் தன் தாய் தந்தையுடன் இருக்கும் பொருட்டு் தமிழ்நாட்டில் உள்ள தன் சொந்த ஊருக்கு சென்றார் திரு.சத்யா மூர்த்தி, உடன் மனைவி திருமதி.பிரேமா, மற்றும் அவர்களின் மகன் கமலநேத்ரன். வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தாலும் தன் மண்ணையும் தன் உறவுகளையும் போற்ற கற்று கொடுத்திருந்தார் திரு.கமலநாதன்.



திரு.கமலநாதன், என்னதான் வெளிநாட்டில் தன் குடும்பம், தொழில் என அமைத்துக் கொண்டாலும், தன் நாடு மற்றும் கலாச்சாரங்களை தன் பிள்ளைகளுக்கு கற்றுத்தர மறக்கவில்லை. அதற்கு முதல் காரணம் அவர் மனைவி காமாட்சி.இவர்களின் சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சி மாநகரம் அடுத்துள்ள ஒரு சிறிய கிராமம். இவர்களின் குடும்ப தொழில் விவசாயம் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவிலான பெரிய குடும்பம் இவர்களின் குடும்பம். ஒரு விபத்தில் தாய் தந்தை இழந்தவர் கமலநாதன், ஒரு மாற்றம் வேண்டி அதனால் தன் நண்பர்களின் துணைக் கொண்டு வெளிநாட்டில் தன் வியாபாரத்தினை ஆரம்பித்துபின் முழுமையாக தானே நிர்வகித்து இங்கேயே தன் வாழ்வியலின் வழித் தடத்தினை அமைத்துக் கொண்டார்.



வெளிநாட்டில் தொழில் ஆரம்பித்தாலும் தன் குடும்ப தொழிலையும் நலிவடையாமல் பார்த்துக்கொண்டார்.



வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது சமயம் கிடைக்கும் பொழுது எல்லாம் தன் சொந்த மண்ணிற்கு தன் குடும்பத்துடன் சென்று வருவார். இப்படியாக தன் சொந்த மண்ணின் வேர்களையும் தன் சொந்தபந்தங்களையும் அழியவிடவில்லை.



அதனாலேயே தன் மகனிற்கும் தமிழ் பெண்ணையே மணம் முடித்தார். பிரேமா அவர்களும் மாமியார் மெச்சும் மருமகளாய் இருந்தார்.



சத்ய மூர்த்தி மற்றும் கமல நேத்ரன் தொழில்களை பார்க்க ஆரம்பித்தவுடன் தன் முதுமை காலத்தினை தன் சொந்த மண்ணில், தன் சொந்த பந்தங்களுடன் இருக்க விருப்பம் கொண்டு தன் குடும்ப தொழிலை தானே நேரடியாக கவனிக்க வேண்டியும் கிராமத்திற்கே வந்து விட்டனர் கமல நாதன்.



அவர்களுக்கு, அனைத்து வசதிகளையும் செய்வித்து அவர்களின் பூர்விக வீட்டினை புதுப்பித்து அவர்களின் பாதுகாப்பிற்கும், நம்பிக்கைக்கும்... உரிய வேலையாட்களை நியமித்து, என அனைத்து வேலைகளையும் தானே முன் நின்று செய்தது கமல நேத்ரன் தான்.



வருபவர்களை வரவேற்க கமலநாதன் மற்றும் காமாட்சி தம்பதியர் ஆர்வமாக காத்திருந்தனர்.அவர்களின் ஆர்வத்திற்கு காரணம் அவர்களின் பேரன் எப்பொழுதும் வேலை வேலை என்றிருப்பவன் அவர்களுக்கு வேண்டிய வசதி செய்து கொடுக்க இங்கு வந்தவன் அதன் பிறகு ஓரிரு முறை வந்தாலும் இம்முறை போல் ஒரு வாரம் சேர்ந்தாற்போல் தங்க வந்ததில்லை.



இவர்களின் மகிழ்விற்கும், ஆர்வத்திற்கும் சற்றும் குறைவில்லா அளவில் வண்டியில் இருந்து இறங்கியவன், “ஹாய் பாட்டி “ என கூவிக்கொண்டே காமாட்சியை நெருங்கி அவரை அணைத்து கொண்டான் கமலநேத்ரன்.



அவரும் பேரனின் அன்பில் நெகிழ்ந்து அவனின் கன்னம் வழித்து முத்தமிட்டார்.



“டேய், நானும் இங்க தாண்டா இருக்கேன்” என்றார் கமலநாதன் சிரித்துகொண்டே அவனின் தோளை தட்டி, “தாத்தா” என அவரையும் அணைத்துக் கொண்டான்.



“அம்மா…” என்ற சத்யாவை பார்த்து “எப்படி ப்பா இருக்க...” என கேட்டவரை அணைத்துக் கொண்டார் சத்யா “வா பிரேமா…” என மருமகளையும் வரவேற்றார் காமாட்சி



அனைவரும் பேசிக் கொண்டே அந்த மாளிகையினுள் சென்றனர். ஆம், மாளிகைதான் அது அவர்களின் பூர்வீக வீடு. இரண்டு அடுக்குகள் கொண்ட வீடு. சுற்றிலும் தோட்டம் அமைத்து நடுவில் கம்பீரமாக காட்சியளித்தது அந்த மாளிகை அந்த வீட்டின் பழமையினை குலைக்காமல் நவீன வசதிகளை செய்திருந்தான் நேத்ரன்.



பழைய விஷயங்களை பேசிக்கொண்டு இரவு உணவினை முடித்தனர் அனைவரும்.



ஹாலில் உள்ள சோபாவில் தாத்தா, அப்பாவுடன் நேத்ரனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.



“சொல்லுடா, உன்னோட கேர்ள் பிரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க…? இன்னமும் அந்த ஹரிஷ் கூட தான் சுத்திக்கிட்டு இருக்கியா...” என்ற கமலநாதனை முறைத்து கொண்டு அங்கு வந்த காமாட்சி, ‘வயசுதான் ஆகுது இந்த மனுஷனுக்கு விவஸ்தையே இல்ல பேரன் கிட்ட பேசிற பேச்சை பாரு’ என மனத்திற்குள் தன் கணவனை தாளித்து கொண்டே…



நேத்ரனிடம், “கண்ணப்பா, இந்தா பால் குடிப்பா...” என்றவர் அவன் அருகில் அமர்ந்து, “இந்த வருசமாவது கல்யாணம் பண்ணிப்பியா பொண்ணு பார்க்கட்டும்மா..?” என்றவரின் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டு…



“பாட்டி இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அப்புறமா நீங்க யார கல்யாணம் பண்ணிக்க சொல்லி கை காட்டுறீங்களோ கட்டிக்கிறேன்...” என்றான் நேத்ரன்.(தம்பி...அவசரப்பட்டு வாக்கு தர...அதுக்கு ஆயுள் ரொம்ப கம்மி)



அவனின் பதிலில் பெருமூச்சினை விட்டவர், “ சரி போயி ரெஸ்ட் எடு கண்ணப்பா, நாளைக்கு காலையில், நம்ம சொந்ததுல ஒரு கல்யாணம் எல்லாரும் போய்ட்டு வந்துடலாம்...” என்ற காமாட்சியிடம்.



“நான் எதுக்கு பாட்டி நீங்க, தாத்தா, மாம், டாட் மட்டும் போயிட்டு வாங்க... நான் வரலை...” என கூறியவனை, “நாலு இடத்துக்கு எங்களோட வந்தாதான் நம்மளோட சொந்தங்கள் எல்லாம் உனக்கு தெரியும்.அதனால நீ வர சரியா” என முடிவாக கூறிவிட்டு தன் வேலையினை பார்க்க சென்று விட்டார் காமாட்சி.



“தாத்தா…” என்றவனை “சாரி மை பாய்... உங்க பாட்டி சொன்னதுக்கு அப்புறம் நோ மோர் டிஸ்கஷன் போ...போய் ரெஸ்ட் எடு. காலையில் கல்யாணத்திற்கு கிளம்பணும் ...” என்றார் கமலநாதன்.



விடியற்காலை நேரம்... கிராமங்களுக்கே உள்ள தனி சிறப்பான பலவித புள்ளினங்களின் ஒலியுடன் அழகாக புலர்ந்தும் புலராத வேளை...



தன் படுக்கையில் தூக்கதிற்கும் விழிப்பிற்கும் இடையில் கண்மூடி படுத்திருந்தான் கமலநேத்ரன்.



சத்யமூர்த்தி, தன் மகனின் அறையில் நுழைந்து அவன் பக்கத்தில் அமர்ந்து தலைமுடியினை கோதிக் கொடுக்க அவர் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டு, “குட் மோர்னிங் டாட்” என்றான் கமலநேத்ரன்.



“முழிச்சிட்டியா கண்ணா, சரி சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு...” என்ற தந்தையிடம், “கண்டிப்பா நான் வரணுமா டாட், இட்ஸ் டூ போரிங் நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க” என்றான்.



அவன் சொல்வதை கேட்டு சிரித்துக் கொண்டு, “ஏன் கண்ணா அப்படி நினைக்கிற இது வரை நம்ம தமிழ் கல்யாணங்களை நீ நேரில் பார்த்தது இல்ல சோ... ஜஸ்ட் கம் அண்ட் என்ஜோய் தி மொமெண்ட்...” என்ற சத்யாவிடம்.



“சரி...சரி நான் வரேன்...” என்றான் நேத்ரன் சலிப்புடன், “ரொம்ப சலிச்சிக்காதடா, யாருக்கு தெரியும் அங்க உனக்கு புடிச்ச மாதிரி பொண்ண கூட நீ பார்க்கலாம் ( நீங்க... ஒரு தீர்க்க தரிசி கரெக்ட்டா சொல்றிங்க), போய் குளிச்சிட்டு ரெடி ஆகு...நானும் போய் என் பொண்டாட்டி என்ன பண்றா னு பார்த்துட்டு வரேன் ...” என்றார் சத்யா.



“ஆமாம்… ஆமாம்...” என தலையாட்டிக் கொண்டே ஒரு கேலி சிரிப்புடன் குளிக்க சென்றான் நேத்ரன்



“கண்ணா ரெடியா...? கண்ணப்பா கிளம்பிட்டியா?” என்ற அன்னை மற்றும் பாட்டியின் அழைப்பிற்கு.



“யெஸ் கமிங்...” என்று சொல்லிக்கொண்டேவெள்ளை பட்டு வேட்டியில், அடர் பச்சை வண்ண சட்டையில் படியிறங்கியவனின் அழகிலும், கம்பீரத்திலும் மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருந்தனர் அனைவரும்.



ஆண்மை மிளிர, அறடிக்கும் மேல் இருக்கும் அவனிற்கு அந்த உடை அவ்வளவு பாந்தமாய் பொருந்தியது. அனைவரும், தன்னை பார்ப்பதை அறிந்து கண்சிமிட்டினான் அந்த கள்வன்.



“சூப்பர் பேராண்டி, எதுக்கும் ரெண்டு பேரை கூட்டிக்கிட்டு வர வா...” என்ற கமலநாதனை, அனைவரும் யோசனையுடன் பார்க்க… அவரோ வந்த சிரிப்பினை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, “அது ஒண்ணும் இல்லடா, நீ முதன்முதலா வேட்டி கட்டி இருக்க சபைல மானம் போய்டா கூடாது பாரு...” என கூறி வெடி சிரிப்பு சிரித்தார்.



அவரின் பேச்சினை கேட்டு அனைவரும் சிரித்தனர்.



நேத்ரன், அவரின் அருகில் வந்து அவரின் தோளில் கைபோட்டு, “ தாத்தா, இது ஒட்டிக்கோ கட்டிக்கோ மாடல் அதனால எனக்கு வேண்டாம் உங்களுக்கு வேணா வைச்சிக்கோங்க. உங்களை அப்படியே கைத்தாங்கலா பிடிச்சிட்டு வர… பிகாஸ் உங்களுக்கு தானே வயசு ஆயிடுச்சி” என்றவனிடம், “யாருக்குடா வயசாயிடிச்சி “ என்று தன் மீசையினை முறுக்கி விட்டுக் கொண்டே தன் கைகளை மடக்கி புஜத்தில் தட்டி காட்டினார். தன் கணவனின் சேட்டையினை பார்த்து உள்ளுக்குள் சிரித்து கொண்டாலும் வெளியில் நொடித்துக் கொண்டார் காமாட்சி.



“சரி...சரி நேரம் ஆயிடுச்சி வாங்க கிளம்பலாம்...” என கூறி முன்னே நடந்தார்



காஞ்சிபுரம்... கோயில்களின் நகரம்... பட்டின் நகரம்... பல்லவ தலைநகரம் என சிறப்புக்கள் பல கொண்ட காஞ்சிபுரம் நோக்கி சென்றது அவர்களின் வாகனம்.



பெரிய கல்யாண மண்டபம் நவீன வசதிகளுடன் குளிரூட்டப் பட்ட மண்டபம் பெண்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பல வண்ண பட்டாடை அணிந்து ஆபரணங்கள் சூடி வலம் வந்தனர்.



இவர்களின் வண்டி மண்டப வாசலை அடைந்ததும் மண்டபத்தின் வாசலுக்கே வந்து இவர்களை வரவேற்றனர் கல்யாண வீட்டினர்.



கமலநாதன், தன் குடும்ப சகிதம் மண்டபத்தினுள் நுழைந்தார். அங்கிருந்த அலங்காரம் நடைபெறும் சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் நேத்ரன். வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனை கலைத்தது ஒரு குரல்.



குரல் வந்த திசை நோக்கியவன் கண் இமைக்கவும் மறந்து அந்த குரலுக்கு சொந்தமானவளை பார்த்துக் கொண்டிருந்தான்.



மெஜந்தா நிறத்தில் லெஹங்கா... அவளின் பால் வண்ண மேனிக்கு பொருத்தமாக இருந்தது, அளவான ஒப்பனையில் கண்களை உறுத்தா வண்ணம் ... அழகிய மெழுகு பொம்மை போல் இருத்தவளை கண்டவுடன் இவனுள் ஒரு மின்னல் மின்னி மறைந்தது.



தன்னால் ஒருவனுள் நிகழ்ந்த மாற்றத்தினை அறியாது அங்கிருந்த குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தாள் சூர்யா.



தன்னை கடந்து சென்ற வாகனத்தின் ஒலியால் நிகழ்விற்கு திரும்பியவன் தன் முடியினை கோதி தன்னை சமன் செய்து கொண்டவன் விரைவாக மருத்துவமனைக்கு சென்று தன் அன்னையினை கண்டு, அவருடன் கொஞ்ச நேரம் இருந்து விட்டு அவருக்கு உணவு ஊட்டிவிட்டு அங்கிருந்த செவிலியரிடம் சொல்லிவிட்டு தன் அன்னையிடமும் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினான்.



வீட்டிற்கு வந்து குளித்து முடித்து கீழ் இறங்கியவனை இரவு உணவு உண்ண அழைத்தார் தங்கம்மா. உணவினை பரிமாறி விட்டு உண்ணும் அவனை பார்ப்பதும் தனக்குள் யோசனையுமாக இருந்தவரை, “என்ன விஷயம் தங்கம்மா” என்ற நேத்ரனின் குரலில்,



“ஒண்ணும் இல்ல தம்பி பிரேமா அம்மா சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்கன்னு சொன்னீங்க எப்ப வருவாங்க...” என்றார்.



சிறு புன்சிரிப்புடன், “இன்னும் பத்து நாள்ல அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்க...” என்று நாற்காலியில் இருந்து எழுந்துக் கொண்டே கூறினான் நேத்ரன்.



தன் அறைக்குள் வந்த நேத்ரனை மீண்டும் சூர்யாவின் நினைவுகள் அரவணைத்து கொண்டன.



மன்னவனின் காதல்

பெண்ணவளுள் காதலை

பூக்க செய்யுமா...





அவன் உயிரானவள்
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6



சென்னை...



தன் எதிரில் இருந்த தனது பி.ஏ விடம் அந்த கட்டிடமே அதிர கத்திக் கொண்டிருந்தான் விவேக்.



விவேக், சென்னையில் மட்டும் அல்லது இந்தியாவில் உள்ள பல பெரிய ஹோட்டல் மற்றும் ரிசார்ட்களுக்கு சொந்தக்காரன்.



ராஜேஷ், வித்யா அவர்களின் ஒரே பிள்ளை. அளவிற்கு அதிகமான பணமும் பெற்றோரின் அளவில்லா பாசமும் (பல பெற்றோர் செய்யும் தவறு). அவனுள் பிடிவாதத்தினையும், தான் நினைத்ததை எவ்வழியில் சென்றாவது அடைந்தே ஆக வேண்டும் என்ற மன பாவத்தினை வளர்க்க காரணம் ஆக்கி விட்டது.



நல்ல விஷயத்திற்காக பிடிவாதம் பிடிப்பதும் நல்ல செயல்கள் செய்ய நினைத்து அதனை முடிப்பதும் நன்று. முறையில்லாத விஷயங்களுக்கும், செயல்களுக்கும் பிடிவாதம் பிடிப்பது தவறாகும்.

இத்தகைய குணம் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையினை மட்டுமல்லாது அடுத்தவர் வாழ்வினையும் கெடுப்பர்.



“ஹவ் டேம் இட்ஸ் பாஸ்சிபில்… நான் ஒரு 1 மன்த் ஊருல இல்ல அதுக்குள்ள எப்படி இது நடந்தது… நீங்க ஏன் எனக்கு இன்போர்ம் பண்ணல...” என உச்சபட்ச டெஸிபலில் தன் பி.ஏ தீபக்கின் செவிபறை கிழியும் அளவிற்கு கத்திக் கொண்டிருந்தான்.



“சார், நான் உங்களுக்கு இன்போர்ம் பண்ணேன் சார் அவங்க இன்டெர்வியூ அட்டெண்ட் பண்றாங்கன்னு...” பதில் சொல்லிக் கொண்டிருந்த தீபக் விவேக்கின் கனல் பார்வையில் சொல்லிக் கொண்டிருந்ததை பாதியிலேயே கைவிட்டான்.

“எப்பவும் போல இந்த கன்சர்ன்க்கும் கால் பண்ணி ஷி ஈஸ் அவுட்பிட் அப்படி இப்படின்னு எதையாவது சொல்லி முன்னாடி எப்படி வேலை கிடைக்க விடாம பண்ணோமோ அப்படி எதையாவது செய்ய வேண்டியது தானே” என்றான் இன்னும் கோபம் மட்டுப்படாமல்.



‘என்னது பண்ணோமா நீ செய்ய சொன்ன அதை நான் செஞ்சேன் டா பாவி, உன்னைத்தான் அந்த பொண்ணு திரும்பிக் கூட பார்க்க மாட்டிங்குறா இல்ல. அப்பறம் என்ன -------க்கு அவங்கள நீ டிஸ்டர்ப் பண்ணுற... எனக்கு மட்டும் குடும்பம், கடன் பிரச்சனை இல்லைனா நீயும் ஆச்சு உன் வேலையும் ஆச்சுன்னு போயிடுவேன். என்ன செய்ய என் நிலைமை அப்படி...’ என தன் மனத்திற்குள் புலம்பிக்கொண்டும் விவேக்கினை வறுத்தெடுத்தும் கொண்டிருந்தான் தீபக் (ஏதோ...அவனால முடிஞ்சது)



“சார், இதற்கு முன்ன அவங்க அட்டெண்ட் பண்ணது எல்லாம் லோக்கல் இல்லைனா இந்தியாகுள்ள இருந்த நிறுவனம், சோ நம்ம இன்பிளுயன்ஸ் அண்ட் வேற சோர்ஸ் வச்சி அவங்களுக்கு வேலை கிடைக்காம ஸ்டாப் பண்ணினோம். பட் இப்ப அவங்க போய் இருக்க கன்சர்ன் (concern) இன்டர்நேஷனல் லெவல். அதுமட்டுமில்லை, ஜாப் இந்தியாவுல இல்ல. வெளிநாட்டுல இன்னைக்கு அவங்க கிளம்புறாங்க” என்றான் தீபக். அலுங்காமல் குலுங்காமல் இச்செய்தி விவேக்கின் தலையில் இடியாக இறங்கியது. அவனின் கோபமும் கட்டுக்கடங்காமல் ஏறியது.(சிறிது பயத்துடனே வேலை கிடைச்சதுக்கே அப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சாரு. இதுல வெளிநாட்டுல வேலை இப்ப என்ன செய்ய போறாரோ ஐய்யோ தீபக் இன்னைக்கு உனக்கு நாள் நல்ல இல்ல)



தீபக்கின் நினைப்பினை பொய்யாக்காமல், “வாட்…” என்றான் விவேக். அவனின் குரலே சொல்லாமல் சொல்லியது அவனின் கோபத்தினை முகமெல்லாம் சிவந்து கைமுஷ்டி இறுக கைவிரல்கள் இறுக மூடி மேசை மீது குத்தினான். அவன் குத்தியதில் மேஜை மீதிருந்த பொருட்கள் எல்லாம் அதிர்ந்தது.



தீபக்கோ விவேக்கின் குரலிலும் செயலில் வெலவெலத்து போனான்.



அந்த அறையின் நீள அகலத்தினை தன் நடையினால் அளந்து கொண்டிருந்தான் விவேக். என்ன செய்த போதிலும் அவனின் கோபம் மட்டுப்பட வில்லை.



தனது நாற்காலியில் அமர்ந்து, தன் இருகரங்களினாலும் தன் தலைமுடியை கோதிவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சினை வெளியேற்றி தன்னை சமன் செய்ய முயன்றுக் கொண்டிருந்தான் விவேக்.



இதை எல்லாம் அந்த அறையின் ஒரு மூலையில் நின்றுக் கொண்டு சற்று படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் தீபக்.( இப்ப நான் இங்க நிற்கணுமாஇல்ல போய் என் வேலையை பார்க்கணுமா ஒண்ணுமே புரியலியே காலையிலேயே என்ன புலம்ப வைக்கிறானே).



ஒருவாறு தன்னை சமன்செய்து கொண்ட விவேக், “எப்படி தீபக் ... நாமதான் அவ(சூர்யா) வீட்டுல உள்ள எல்லாரையும் க்ளோஸா வாட்ச் பண்றோம் இல்ல. அப்படி இருந்தும் எப்படி இது நடந்தது...”



‘சம்பளம் கொடுக்குற முதலாளினு பார்க்கிறேன்… இல்ல நடக்குறதே வேற ஒரு பொண்ண கண்காணிக்கிறதே தப்பு, இதுல நீ அவங்க வீட்டுல உள்ளவங்களையும் வாட்ச் பண்ணுற. எல்லாம் பணம் இருக்கும் திமிரு... உன்ன ரொம்ப கெட்டவன்னும் சொல்ல முடியவில்லை. சூர்யா விஷயத்தை விட்டுட்டா நீ ரொம்ப நல்லவன்டா. நீ செய்யறது தப்புன்னு உன்ன தடுக்கவும் முடியல. உன்ன அந்த கடவுள் தான் காப்பாத்தணும்...’ கோபமாக ஆரம்பித்து வருத்தமாக மனத்திற்குள் சொல்லிக் கொண்டான் தீபக்.



“சார், அவங்க வீட்ல இருந்து யாரும் எங்கேயும் போகலை… அவங்க வீட்டுக்கும் யாரும் வரலை வேற எந்த வித கால் ட்ரான்சக்ஷன் ஸ்பெசிபிக்கா இல்ல (நோ இன்கம்மிங் அண்ட் அவுட் கோயிங்) நான் ஏற்கனவே இன்போர்ம் பண்ணது தான் 6 மன்த் முன்னாடி அவங்க (சூர்யா) பேரெண்ட்ஸ் அவங்க சொந்த ஊரில் ஒரு மேரேஜ் பங்க்ஷன் அட்டெண்ட் பண்ணுனாங்க மத்தபடி எதுவும் இல்ல எல்லாம் நார்மலா தான் இருந்தது...” என கூறினான் தீபக்.



“சரி சூர்யா, அந்த நிறுவனத்தில் எந்த வேலைக்கு செலக்ட் ஆகி இருக்கா எந்த நாட்டுக்கு போறா எங்க ஸ்டே பண்ண போறா அப்படின்னு வேற டீடெயில்ஸ் ஏதாவது உங்களுக்கு தெரியுமா...” என தான் அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து தன் முன் உள்ள மேஜை மீது உள்ள பேப்பர் வெயிட்டினை உருட்டிக் கொண்டே கேட்டான் விவேக்.



“சார், சூர்யா மேடம் ஜாயின் பண்ணி இருக்க நிறுவனம்… தி கமல் குரூப் ஆப் இண்ட்ஸ்ட்ரிஸ் அண்ட் கம்பெனிஸ்...” என்று கணேஷ் சொன்னவுடன் தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்து யோசனையாக இடது கையில் தன் தாடையினை தடவிக்கொண்டே தீபக்கினை பார்த்து மேலே சொல்லும் படி தன் வலது கை அசைக்க.



தொடர்ந்து தீபக், “எல்லா அரேன்ஜ்மென்டஸ் சும் அந்த நிறுவனமே செய்து கொடுக்குறாங்க இன்க்ளூடிங் டிக்கெட், விசா அண்ட் அக்கோமோடஷன் ஆல்சோ அதனால அதனால சூர்யா மேடம் , எங்க ஸ்டே பண்ணுறாங்க. அப்படின்னு எந்த டீடெயில்சும் கிடைக்கலை அவங்க போற நாடு பிரான்ஸ் (பாரீஸ்) எந்த பிளைட் எத்தனை மணிக்கு அதுவும் தெரியலை” என்றான் குரலில் சிறு உதறலோடு.



தீபக் சொல்லி முடித்தவுடன் ஆவேசம் கொண்டு எழுந்தவன் மேஜை மீதுள்ள அனைத்து பொருட்களையும் தள்ளி அந்த அறையினையே போர்க்களம் போல் மாற்றி இருந்தான். அவனைது செயல் கண்டு தீபக் நடுநடுங்கி போய் அந்த அறையின் ஒரு மூலையில் சுவர் ஓரம் பல்லியை போல் ஒட்டிக்கொண்டான்.



விவேக்கோ தன் இடது கன்னத்தில் கைவைத்து தடவி கொண்டே, ‘நீ என் கன்னத்தில் அடிச்ச ஒவ்வொரு அடியையும் நான் திருப்பி உன்னோட வாழ்க்கையில் அடிப்பேன். ஏன்டா இவன அடிச்சோம்னு உன்ன லைப் லாங் வருத்தப் பட வைக்கல.என் பேர் விவேக் இல்லடி (தம்பி...சீக்கிரமா உன் பேர மாத்துற வேலைய தொடங்கு). ஏய் சூர்யா, நீ என்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறனு நானும் பார்க்கிறேன்டி. நீ உலகத்தில் எந்த மூளைக்கு போனாலும் உன்ன விடமாட்டேண்டி விடமாட்டேன். உன்ன என்கிட்ட இருந்து யாரலையும் காப்பாத்த முடியாது...’ என்று அகங்காரமும் ஆவேசமுமாக மனத்திற்குள் சொல்லிக் கொண்டான்



(டேய்,ஆல்ரெடி சூர்யாவை சேவ் பண்ண ஆள் வந்தாச்சு. இது தெரியாம ரொம்ப பேசுற ).





‘உன்னை இவ்வளவு நாள் விட்டுவச்சத்துக்கு காரணம் மை மாம் அண்ட் டாட், இனிமே இருக்குடி உனக்கு ...’ என மனத்திற்குள் எண்ணிக் கொண்டு ஒரு முடிவெடுத்தவனாக தன் நாற்காலியில் வந்தமர்ந்தான் விவேக்.



தன் முதலாளியின் அமைதியில், ‘பயப்புள்ள புதுசா ஏதோ பிளான் பண்ணுது' என உள்ளுக்குள் சொல்லிக் கொண்ட தீபக், “ சார்... ரூம் கிளீன் பண்ண ஆள் வர சொல்லட்டுமா..?”என்றுக் கேட்டான்.



தீபக்கின் குரலில் தன் சிந்தனை கலைந்தவன், “ம்ம்...ம்ம் வர சொல்லுங்க அப்புறம் சூர்யா போற பிளைட் அவ எங்க லேண்ட் ஆகுறா யார் அவளை பிக்கப் பண்ணுறாங்க அவ ஸ்டே பண்ணுற டீடெயில்ஸ் எல்லாம் எனக்கு தெரிஞ்சாகணும்... “என விவேக் கூற அவனை மனத்திற்குள் “அடப்பாவி” பார்வை பார்த்து வெளியில் அப்பாவி போல் பார்த்து, “ஓகே சார்,நீங்க கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்து உங்கள பார்க்கிறேன்” என சொல்லி விட்டால் போதும் என அந்த அறையினில் இருந்து வெளியேறி இதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சினை வெளியிட்டான் தீபக் .



இவர்களின் விவாதத்தின் நாயகி சென்னை விமான நிலையத்திற்கு தன் குடும்பத்தாருடன் பயணப் பட்டு கொண்டிருந்தாள்.



அன்று



சூர்யா இன்டெர்வியூ முடித்து விட்டு தன் தந்தையுடன் வீட்டிற்கு வந்தவளை காயத்ரி கேள்வி மேல் கேள்வியாக கேட்டு படுத்தி விட்டார்.



ஓரளவிற்கு மேல் பொறுக்க முடியாத சூர்யா, “ ம்மா, முதல்ல கொஞ்சம் மூச்சை விடுங்க அப்புறம் எனக்கு சாப்பாடு போடுங்க சாப்பிட்டுட்டு நிறுத்தி நிதானமா உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுறேன். ஓகே வா... இப்ப நான் போய் பிரேஷ் ஆயிட்டு வர்றேன்...” என கூறி தன் அறைக்கு சென்றுவிட்டாள் .



போகும் அவளை முறைத்துக் கொண்டே தன் கணவரை கேள்வியாய் பார்த்தார். இவரின் பார்வைக்கான பொருள் உணர்ந்த சிவா, “காயூ, குட்டிம்மா பசிக்கிதுன்னு சொல்லிட்டு போய் இருக்கா போ போய் சாப்பாட எடுத்து வை...” என்றார்.



“ம்...ம்ஹும்” என காயத்ரி கழுத்தை தன் தோளில் இடித்துக் கொண்டு தந்தையினையும் மகளையும் மனத்திற்குள் திட்டிக்கொண்டு் உணவு அடங்கிய பாத்திரங்களை டைனிங் டேபிளில் கொண்டு வந்து அடுக்கினார்.



சிவாவும், சூர்யாவும் தங்களை சுத்தப்படுத்தி கொண்டு உணவு உண்ண வந்து அமர்ந்தார்கள்.



இருவருக்கும் பரிமாறி விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு தந்தையும், மகளும், ஏதாவது பேசுவார்களா என இருவர் முகங்களையும் பார்வையிட்டார். இருவரும் உணவினை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.( காயூ மனத்திற்குள், ‘என்னமோ பத்துவகை பதார்த்தத்தோட விருந்து சாப்புடுற மாதிரி இல்ல ரெண்டும் சாப்பிடுதுங்க’ ( உங்க சமையல் எப்படின்னு உங்க அளவுக்கு யாருக்கு தெரியும்). காயூவின் முகபாவங்களை அளவிட்டுக் கொண்டே உண்டனர் தந்தையும், மகளும்... ஒருவழியாக இருவரும் உண்டு முடித்ததும் அதற்குமேல் அமைதியினை கடைபிடிக்க முடியாமல் காயத்ரி, திரும்பவும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.



சூர்யா தன் தாயின் பொறுமையை இதற்கு மேலும் சோதிக்க கூடாது என, “நீங்க சாப்பிடுங்கம்மா, நான் சொல்லுறேன்...” என காயூவிற்கு உணவினை பரிமாறினாள். காயூ உணவு உண்டதும் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு மூவரும் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தார்கள்.



தன் முகம் பார்க்கும் தாயிடம் அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினாள் சூர்யா.



தன் வேலை பற்றியும் வெளிநாட்டிற்கு செல்வது குறித்தும் முதலாளியின் வீட்டில் வேலை அதுவும் உடல்நலம் சரியில்லாத அவருடைய தாயின் கம்பானியன் மற்றும் அவர்களின் வீட்டினை நிர்வகிக்கும் வேலை (முதலாளியின் தாய்க்கு உடல்நலம் சரியில்லை என்றவுடன் காயத்ரியை பதட்டம் ஆட்கொண்டது. சிவா அவரின் கைகளில் அழுத்தம் கொடுத்து கண் மூடி திறந்து அமைதியாக இருக்கும் படி சைகை செய்தார்).



இன்னும் பத்து நாட்களில் செல்லும்படி இருக்கும் என சொல்லிவிட்டு தன் பெற்றோரின் முகம் காண அந்நேரம் சிவாரத்தினம் அவரும் தன் மகளை பார்த்துக்கொண்டிருந்தார்.



கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக எங்கு வேலைக்கான தேர்வுக்கு சென்றாலும் முன்பு வேலை செய்த இடத்தில ஏன் வேலையை விட்டீர்கள்? ஏதாவது பிரச்சனையா? இதே கேள்வி... அப்படியும் ஒரு சில இடத்தில் கடைசி நிலை வரை சென்று கை நழுவி போய்விடும். இதற்கெல்லாம் என்ன காரணம் தெரிந்தாலும் மனம் சோர்வுராமல் மறுபடியும் மறுபடியும் விடாமல் முயற்சித்துக் கொண்டிருந்தாள் சூர்யா.



ஒருமுறை சிவாவே, “குட்டிமா நீ எங்க போனாலும் அவன்தான் உனக்கு வேலை கிடைக்காம பண்றான்ல... விடுடா, நீ வேலைக்கு போய் தான் ஆகணும்னு எந்த அவசியமும் நமக்கு இல்ல அப்படி இருக்கும் போது நீ ஏன்டா திரும்ப திரும்ப இன்டெர்வியூக்கும் போய்ட்டு இருக்க...” என



“ப்பா… இன்டெர்வியூ போறது என்னோட நாலேட்ஜ் வளர புது புது மனுசங்களை மீட் பண்ணும் போது அவங்களோட நல்லது, கெட்டது இதெல்லாம் அனலைஸ் பண்ண கத்துக்க முடியும், வீட்டுக்குள்ளையே நான் மனவருத்தத்தோட இருக்கணும் தான் அவன் இவ்வளவு செய்யுறான். அதுமட்டும் இல்ல ப்பா, தப்புன்னு தெரிஞ்சே செய்யுற அவனே விடாம செய்யும் போது நான் ஏன் ப்பா, அவன்கிட்ட தோத்து போய் வீட்டுல இருக்கணும். இந்த உலகம் ரொம்ப பெருசு ப்பா, இதுல அவன் மட்டும் இல்லை...” என்றாள் சூர்யா நிமிர்வுடன்.



‘விளையாட்டும், குறும்பும், சேட்டையும், சிரிப்பும் ஆக இருந்த தன் மகள், பொறுப்போடு பேசுவதை எண்ணி மகிழ்வதா..? இந்த பொறுப்பு வர காரணமாக இருந்த நிகழ்வை எண்ணி வருந்துவதா..?’ என உள்ளுக்குள் கலங்கினார் சிவா.



தன் தந்தையின் அமைதி கண்டு, “ப்பா” என அவர் தோளில் கை வைத்து அசைக்க நிகழ்விற்கு திரும்பியவர் தன்னை தவிப்புடன் காணும் மகளின் தலையினை மெதுவாக வருடிக் கொடுத்து,



“என்னடா குட்டிமா”



“ந...நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா ப்பா...” என்ற சூர்யாவை பார்த்து இடமும் வலமும் தலை அசைத்து இல்லை என கூறி மகளை தன் தோளின் மீது சாய்த்து கொண்டார் சிவா…



சிறிது நேர அமைதிக்கு பிறகு, “அப்பாவும் அது தான் சொல்றேன் குட்டிம்மா, அவன் மட்டும் உலகத்தில் இல்ல. நீ கண்டிப்பா உன்னோட கல்யாணத்த பத்தி கொஞ்சம் யோசிடா, நீ இப்படியே கடைசி வரை இருக்க முடியாதுடாம்மா. உனக்கே உனக்குன்னு ஒரு லைப் வேணும் குட்டிமா, உன்னை நான் நாளைக்கே கல்யாணம் பண்ணிக்க சொல்லலை. பட் உன்னோட கல்யாணத்தை பத்தி கொஞ்சம் ரீ கன்சிடெர் பண்ணி பாருடா...” என்ற தந்தையின் கரங்களை தன் கரம் கொண்டு அணைத்து கொண்ட சூர்யா. தவிப்புடன் தந்தையின் முகம் காண அதில் அந்த தந்தையின் உள்ளம் கண்ணீர் சிந்தியது.



“ எ ...என...எனக்கு இன்னொரு தடவை அந்த மாதிரி பேச்செல்லாம் கேக்க முடியாது ப்...ப்பா...” என சொல்லி அழும் மகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் அவரின் கண்களும் கலங்கின.



“வன்மம் கொண்டு வஞ்சியின் வாழ்வினை அழிக்க துடிக்கும் ஒருவன்…
காதல் கொண்டு காரிகையின் கரம் பற்றி காதல் வானில் வலம்வர துடிக்கும் ஒருவன்…
வஞ்சகன் வெற்றி கொண்டால் பெண்மை மரணிக்கும்...
மன்னவன் வெற்றி பெற்றால் பெண்மை மலர்ந்து மணம் வீசும்...”



அவள் உயிரானவன்






 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

"என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 5 & 6 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்...

guys, கதையை படிக்கிறீங்களா... புடிச்சி இருக்க... கூடவே
உங்க நிறை குறைகளையும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

[/URL][/URL]


தனசுதா...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7



அப்படித்தான் ஒருநாள் காலை வேளையில் வேலைக்காக “ஜாப் கிளாசிபைடுஸ்” பார்த்துக் கொண்டிருந்தவள் அருகில் அமர்ந்த சிவா, ஒரு நிறுவனத்தின் பெயர் மற்றும் அதன் விவரங்களை குடுத்து அந்த நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பிக்க சொன்னார்.



‘யார்...என்ன... எப்படி’ என்ற சூர்யாவின் கேள்விகளுக்கு தெரிந்தவர் மூலமாக அறிமுகம் என சொல்லி, “மறக்காமல் விண்ணப்பிக்கும் போது வெளிநாட்டில் பணிபுரிய விருப்பம்” என்று குறிப்பிடவும் சொல்லி சென்றார். எங்கே இன்னும் இருந்தால் மகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வருமோ என பயந்து...



இதை எல்லாம் யோசித்தபடி அமர்ந்திருந்த சூர்யாவினை, காயத்ரி தோள் தொட்டு அழைக்க நிகழ்காலத்திற்கு வந்தவளை,



“ஏன் குட்டிம்மா, அப்பாவையும் அம்மாவையும் விட்டுட்டு போகணும்னு வருத்தப் படுறியாடா இல்ல நாம முன்பின் அறிமுகமில்லாத தெரியாத இடத்துக்கு போக போறோம்னு பயப்படுறியாடா...” என சிவா கலக்கத்துடன் கேக்க.



மெல்லிய புன்னகையை இதழ்களில் மிளிரவிட்டு சூர்யா, தாய் மற்றும் தந்தை இருவருக்கும் நடுவில் அமர்ந்துக் கொண்டு, “கண்டிப்பா பயம் எல்லாம் இல்ல ப்பா, உங்களை காயூவை அப்புறம் ஜீவாவை ரொம்ப மிஸ் பண்ணுவேன். மத்தபடி வேற எந்த காரணமும் இல்ல. ஏன்னா இந்த ஜாப்க்கு அப்ளை பண்ண சொன்னது, வெளிநாட்டுக்கு போற ஆப்ஷனை டிக் பண்ண சொன்னது, எல்லாம் நீங்க நல்லா விசாரிக்காம நீங்களும் அம்மாவும் எனக்கு எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க மாட்டீங்க. இப்ப நான் ஜாப்க்கு போற நிறுவனம் ஒண்ணு உங்களுக்கு தெரிஞ்சவங்களா இருக்கணும். இல்ல உங்களோட நம்பிக்கைக்குரியவங்களா இருக்கணும். யாருனே தெரியாத இடத்துக்கு கட்டாயம் என்னை தனியா அனுப்ப மாட்டீங்க” என்ற மகளை சிவாவும் காயத்ரியும் அணைத்துக் கொண்டனர். தங்கள் மகள் தங்களின் மீது வைத்த நம்பிக்கையில். பெற்றவர் இருவரின் விழிகளில் (ஆனந்த) கண்ணீர்...

**********************************



அதோ இதோ என சூர்யா, வெளிநாட்டிற்கு மறுநாள் செல்ல வேண்டும். அவளின் பாஸ்போர்ட், விசா மற்ற விஷயங்கள் அனைத்தும் வீட்டுக்கே வந்தன (அனைத்தும் நேத்ரன் சொல்லி ஹரிஷ் செய்த ஏற்பாடு).



இரவு நேரம் மறுநாள் பாரீஸ் கிளம்பவேண்டும். எல்லாம் தயார் பெட்டி முதற்கொண்டு அனைத்தையும் அடுக்கியாகி விட்டது... என்னதான் தந்தை, தாயிடம் வருத்தமில்லை என்று சொல்லிவிட்டாலும் அனைவரையும் பிரிவதை நினைத்து மனம் சங்கடப்பட்டது சூர்யாவிற்கு.



அப்படி மனசங்கடம் இருந்தால் தோட்டத்தில் வந்து அங்குள்ள மலர், செடி இவைகளை பார்த்தால் மனம் சற்று லேசாகும் உணர்வு. அதே போல் இன்றும்தோட்டத்தில் வந்து அமர்ந்திருந்த சூர்யாவின் அருகில் வந்து அமர்ந்தான் ஜீவா. ஏன் அவள் அங்கு அமர்ந்திருக்கிறாள் என்பதை அறிந்தவன், அவளின் மனநிலையினை மாற்றும் பொருட்டு அவளிடம் வம்பிழுத்தான். “என்ன பூசணி, நாளைக்கு இந்நேரம் பிளைட்ல ஜாலியா பறந்து கிட்டு இருப்ப...” என்றவனை முறைத்து பார்த்துவிட்டு திரும்பி கொண்டாள் சூர்யா.



“ என்ன பூசணி” என்று சூர்யாவின் தோளில் கைபோட்டு அணைத்து கொண்டவன் மேல் தலை சாய்த்து, “எனக்கு அம்மா,அப்பா உன்னை எல்லாரையும் விட்டுட்டு போறது கஷ்டமா இருக்கு ஜீவா...” என கண்களில் கண்ணீருடன் சொல்லும் தமக்கைக்கு என்ன சொல்லி தேற்றுவது என புரியாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தவன் பின்பு தன்னை ஒருவாறு சமாளித்து கொண்டு.



“ சூர்யா சூர்யா, இங்க பாரேன்...” என்றவனை கருத்தில் கொள்ளாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவளை, “ பூசணி… ஏய் பூசணி… ஏய் பூ...ச...ணி... இங்க பாரு...” எனவும் ஜீவாவின் கையினை தட்டிவிட்டு நேராக நிமிர்ந்து அமர்ந்தாள் சூர்யா.



அவளின் செய்கையில் ஜீவாவிற்கு சிரிப்பு வந்தது. இப்பொழுது தான் சிரித்தாள் சூர்யா கண்டிப்பாக கோபம் கொள்வாள் என கஷ்டப்பட்டு சிரிப்பினை கட்டுப்படுத்தி கொண்டு.



மீண்டும் சூர்யாவிடம், “உனக்கு நான் புதுசா சொல்லணும்ன்னு இல்ல க்கா, உன்னை எதுக்கு அம்மாவும் அப்பாவும் பாரீஸ்க்கு அனுப்புறாங்கன்னு தெரியும். நீ உன் லைப்ல நடந்ததெல்லாம் மறக்கணும்... அதுக்கு உனக்கு ஒரு புது அட்மோஸ்பியர் (atmosphere) தேவை அதுக்காகவும்… கொஞ்ச நாள் அவனோட பார்வை உன் மேல படாம இருக்கும்...” என்ற தம்பியை பார்த்து,



“ இப்ப மட்டும் அவனுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறியா ...?” என்றாள் சூர்யா…



“ தெரியுது… தெரியல இப்ப பிரச்சனை அது இல்ல முதல்ல மாதிரி அவனால இந்த வேலையை கெடுக்க முடியலை. அதுமட்டும் இல்லாம நாளைக்கு நீ பாரீஸ் போறன்னு தெரிஞ்சும் அமைதியா இருக்கான்.( தம்பி, அந்த வில்லங்கம் ஊருல இல்ல அமைதியா இருக்கானா அதப் போய் அந்த தீபக் கிட்ட கேளு. பக்கம் பக்கமா புலம்புவான் ச்சே...ச்சே ... சொல்லுவான்) அப்படினா, இந்த நிறுவனத்தில் அவனோட தில்லாலங்கடி வேலை எடுபடலை.அதுவே நமக்கு பெரிய விஷயம்...” என்றான் ஜீவா.



“அது என்னமோ உண்மைதான்டா ...” என்றாள் சூர்யா.



“ அப்புறம் க்கா, புது இடம் புது மனுசங்க நீயும் உன்னோட லைப்ல நடந்த பழைய கசப்பான நிகழ்வு எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா ஒரு லைப் சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணனும்” என்றவனை, அடிபட்ட பார்வை பார்த்தாள் சூர்யா. தன் தமக்கையின் பார்வையுள்ள வலி புரிந்தாலும் அதனை முகத்தில் காட்டாது முகத்தினை சாதாரணம் போல் வைத்து கொள்ள மிகவும் சிரமப்பட்டான் ஜீவா.





“ எனக்கு காதல், கல்யாணம் இதில் எல்லாம் நம்பிக்கை போய் ரொம்ப நாள் ஆயிடுச்சி ஜீவா” (என்னமா, பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட அங்க ஒருத்தன் அவள் வருவாளா அவள் வருவாளான்னு... பாடிக்கிட்டு இருக்கான் கொஞ்சம் பார்த்து செய்மா)



“ நெகடிவ்வா பேசாதே பூசணி, ஒருத்தர் ரெண்டு பேர் தப்பா போனா எல்லாரும் அப்படி தான்னு முடிவு பண்ண கூடாது. கண்டிப்பா உனக்கே உனக்குன்னு ஒருத்தர் உன்னை பொக்கிஷம பார்த்துக்குறவர் உன்னை உக்காக மட்டும் உயிருக்கு உயிரா விரும்புறவர் கட்டாயம் உனக்கு கிடைப்பார்...” என



ஜீவா,சொல்லிதை கேட்டு விரக்தி புன்னகையினை தன் இதழ்களில் படர விட்ட சூர்யா, “அப்படி ஒருத்தன் வருவானோ இல்லையா எனக்கு தெரியாது ஆனா நீ சொல்றதைக் கேக்க நல்லா இருக்கு...” என சொல்லியவளை முடிந்த மட்டும் முறைத்து விட்டு அவளின் தலையில் ‘நங்’ என கொட்டினான் ஜீவா.



“டேய் லூசு ஏன்டா வளர பிள்ளையை தலையில் கொட்டுற...” என்றாள் சூர்யா… தன் தலையினை தேய்த்து கொண்டு ஜீவாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.



மனத்திற்குள் ஜீவா ‘அப்படியே நீ வளர்ந்துட்டாலும் குள்ள கத்திரிக்கா...’ என தன் தமக்கையினை தாளித்து கொண்டிருந்தான்.



“சரி,அப்படி நான் சொல்லுற மாதிரி நடந்தா எனக்கு என்ன தருவ...” என்றவனை (பக்கி பயப்புள்ள டீலிங்க் பேசுற ) பார்த்து தன் தலையில் அடித்துக்கொண்டாள் சூர்யா. இருவரும் தங்களுக்குள் வழக்கடித்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.





தன் மகளின் முகத்தில் உள்ள தெளிவு பெற்றவர் இருவரின் மனத்திலும் நிம்மதி கொள்ள செய்தது.



காயூ, “எல்லோரும் போய் படுங்க நேரம் ஆயிடுச்சி நாளைக்கு கிளம்பணும்...” என சொல்ல அனைவரும் தங்களின் அறைக்கு சென்றனர்.

.........................................



இதோ சூர்யா, பாரீஸ் செல்ல விமான நிலையம் நோக்கி பயணப் பட்டு கொண்டிருந்தாள். கார் நின்ற பிறகும் இறங்காத தன் தமக்கையின் தோளில் தட்டினான் ஜீவா. அதில் நிகழ்விற்கு திரும்பிய சூர்யா, ஜீவாவினை பார்த்து மெல்ல புன்னகை சிந்திவிட்டு காரில் இருந்து இறங்கினாள்.



விமான நிலையத்திற்கு கிருஷ்ணாவும் வந்திருந்தான். அவள் அங்கு சென்றபின் அவளை அழைத்து செல்லும் வண்டியின் எண் மற்ற விவரங்களை அவளிடம் தெரிவித்து விட்டு அவளின் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தான்.





“ தேங்க்ஸ் கிருஷ்ணா...” என அவனிடம் விடைபெற்று தன் தாய், தந்தை இருவரையும் அணைத்து கொண்டாள் சூர்யா. சிவா, தன் மகளின் தலையினை மெல்ல வருடி கொடுத்தார். காயூ தன் மகளின் முன்நெற்றியில் கண் கலங்க முத்தமிட்டார்.



பெற்றவரின் நிலைக் கண்டு சூர்யாவின் மனமும் விழிகளும் கலங்கினாலும் தான் இப்பொழுது கண் கலங்கினால் அவர்கள் இருவரும் இன்னும் கலங்குவார்கள் என தன் கண்ணீருக்கு அணை இட்டு இதழ்களில் புன்சிரிப்புடன் அவர்களிடம் விடைபெற்றாள்.



ஜீவா தன் தமக்கையினை அணைத்து அவளின் கைகளை இறுக பற்றிக்கொண்டு, “தைரியமா இருக்கணும் என்ன பிரச்சனையானாலும் எனக்கு கால் பண்ணு புது நம்பரை எனக்கு அனுப்பு பத்திரமா இரு...” என ஆயிரம் அறிவுரைகளை நூறாவது முறையாக சொன்னவனை முறைக்க முயன்று சிரித்து விட்டாள் சூர்யா.



விமானம் புறப்படுவதற்கான கடைசி அழைப்பு வந்தது. அனைத்து விதிமுறைகளும் முடிந்து அனைவரிடமும் இதழ்களில் புன்னகையுடன் கை அசைத்து விடை பெற்றாள் சூர்யா.



செல்லும் அவளை கண்களின் நீருடன் பார்த்துகொண்டிருந்த காயத்ரி, தன் கணவரின் தோளில் சாய்ந்து இன்னும் இன்னும் கண்ணீர் வடித்தார். மகன் ஒரு புறமும் கணவன் ஒரு புறமும் அவரை தாங்கி கொண்டனர். தங்கள் மகளின் வாழ்வில் இனி நடப்பது எல்லாம் நன்மையாக வேண்டும் என்று பிராதித்துக் கொண்டனர்.



விவேக்கின் அறையில் இருந்த வெளிவந்த தீபக், நீண்ட நெடிய மூச்சினை வெளியேற்றியவன், “நான் என்ன வைச்சிகிட்டா வஞ்சனை பண்ணுறேன். நானும் என்ன என்னமோ பண்ணி பார்த்துட்டேன். ஒரு இன்பர்மேஷனும் கலெக்ட் பண்ண முடியலை. இதை சொன்னா மனுஷன் கடிப்பார் முடியலடா சாமி...” என தன் வேலையினை பார்க்க சென்றான்.



எவ்வளவு முயன்றும் தீபக்கினால் சூர்யாவினை பற்றி விவேக் கேட்ட விவரங்களை முன்கூட்டியே சேகரிக்க முடியவில்லை.



கடைசி நிமிடத்தில் தான் அவளுடைய பிலைட் விவரங்களும் கிடைத்தன. அப்பொழுதும் அவளின் வேலை பற்றிய விவரமும் தங்கும் இடம் பற்றி தெரியவில்லை. தீபக்கிற்கு இதெல்லாம் தற்செயலாக நடக்கிறதா இல்லை யாராவது திட்டமிட்டு சொல்படுத்துகிறார்களா என சற்று யோசித்தான்.



இதே சிந்தனையோடு விவேக் தன் அறையில் உலவி கொண்டிருந்தான். அவனுக்கு இதை யாரோ பக்காவாக பிளான் பண்ணியது போல் தோன்றியது. ஒரு வாரத்துக்கு முன்பே முடியவேண்டிய பிசினஸ் ட்ரிப்... கடைசியில் நீண்டது. பலவற்றையும் யோசிக்க யோசிக்க தலை வலிப்பது போல் இருக்கவே நாற்காலியில் அமர்ந்து மேஜை மீது இரு கைகளையும் வைத்து தன் தலையினை தாங்கி கொண்டான்.



(இதுக்கே தலைவலி வந்தா இன்னும் எவ்வளவோ இருக்கே இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அப்படினு சொல்லவாங்க)



‘உனக்கு ஹெல்ப் செய்றது யாருன்னு கண்டுபிடிக்கிறேன்… அப்புறம் உனக்கு இருக்குடி...’என வன்மமாக கூறிகொண்டான் விவேக்.



விமானத்தில் ஏறிய சூர்யா, பாரீஸ் நகரம் சென்றடைய பதினோரு மணி நேரம்(பயண நேரம்) ஆகும். பகல் 1.45 மணிக்கு பிளைட் பாரீஸ் சென்றடைய இந்திய நேரப்படி நள்ளிரவு 12.45 மணிக்கு, பாரீஸ் நேரப்படி இரவு 8.15 மணிக்கு தரை இறங்கும்.





பாரீஸ் நகரம்...



சூர்யா பிளைட் ஏறியது முதல் விவேக்கின் நடவடிக்கை என அனைத்தையும் ஹரிஷ் மூலம் நேத்ரனுக்கு தெரிவிக்க பட்டது.



சூர்யாவை ரிஸிவ் செய்ய நேத்ரனே சென்றான். தன்னுடைய அடையாளங்கள் அனைத்தும் மறைத்து கொண்டு தன்னவளுக்காக பாரீஸின் புகழ் பெற்ற சார்லஸ் டீ கவுலி( charles de gaulle) விமான நிலையத்தில் காத்திருந்தான்.



சாதாரணமான உடையிலும் அவனின் கம்பீரம் சற்றும் குறையவில்லை. குளிருக்காக ஜெர்கின் அதனுடன் இருந்த ஹூடியை(கேப்பினை) தலையில் மாட்டிக் கொண்டுருந்தான்.



விமானம் தரை இறங்குவதற்கான அறிவிப்பு வந்தவுடன் பயணியர் இறங்கும் இடத்திற்கு வந்தவன் தன் உயிரானவளை அந்த கூட்டத்தில் தேடினான்.



நெடுநேர பயணத்தினால் உடல் சோர்வுற்று இருந்தாலும் அந்த நிலையிலும் அவனைவள் அவனின் கண்களுக்கு பேரழியாகவே தோன்றினாள்.



தான் முதன்முதலில் கண்டு ரசித்த குழந்தை தனம் மாறி இருந்தது. கண்களில் குறும்பு மறைந்து நிதானம் குடியேறி இருந்தது. அந்த விமான நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் ப்ராம்மண்டத்தினை ரசித்துக் கொண்டே வெளியேறினாள். தனக்காக வந்திருக்கும் வண்டியை தேடி (கிருஷ்ணா,அவளிடம் வண்டி ஏர்போர்ட் வாசலில் நிற்கும் என்றும் வண்டியின் எண்ணையும் குறித்து கொடுத்திருந்தான்)



குளிர் உடலை தாக்க கையில் வைத்திருந்த ஜெர்கினை தான் அணிந்திருத்த காட்டன் டாப்பின் மேல் போட்டு கொண்டாள். தன்னவளை அதிக நேரம் தவிக்க விடாமல் காரினை கொண்டுவந்து அவளின் முன் நிறுத்தினான் நேத்ரன்.



வண்டியின் எண்ணை சரிபார்த்து சில விவரங்கள் கேட்டுக் கொண்டு வண்டியில் அமர்ந்தாள் சூர்யா.



வண்டி கமலநாதன் இல்லம் நோக்கி பயணப்பட்டது.



நேத்ரனின் நினைவுகள் பின்னோக்கி பயணப்பட்டது.



அவன் உயிரானவள்
 
Status
Not open for further replies.
Top