All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

Status
Not open for further replies.

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரிண்ட்ஸ்

இந்த கதையின் பாகம் 1 முதல் 12 வரை லிங்க் கிழே கொடுத்துள்ளேன்....லிங்க் வேலை செய்கிறதா என்று சொல்லுங்கள் நண்பர்களே....
படிக்க முடிந்தால் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்......

https://drive.google.com/open?id=1eow4-nIglrC_rIXziMKUDLUE8x81V8c4



நன்றி
திலகம் அருள்
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 13
விடியற்காலை கண் விழித்த கிருஷ்ணா தன்னை பிடித்து கொண்டு உறங்கும் ராதாவை பார்த்தவாறே படுத்திருந்தான். அவளை பார்த்து கொண்டு கொண்டு இருப்பதே அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அப்படியே அருகில் சென்று அவளது நெற்றியில் ஒரு முத்தமிட்டான். பக்கத்திலிருந்த குண்டு கன்னம் அழைக்க அதில் ஒரு முத்திரை பதித்தான். அதன் மென்மையில் மயங்கி மற்றொரு முத்திரையை பதித்தவன், அவள் உடல் நிலையை மனதில் கொண்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான். இன்றைக்கு ஊருக்கு செல்ல வேண்டுமே, தொழிலை பார்க்க வேண்டும் என்று புத்தி சொன்னாலும், மனம் செல்ல மறுத்து யோசித்தபடியே அவளின் அருகாமையை ரசித்து இருந்தான். பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் சிறுவனின் மனநிலையில் இருந்தான்.


மெல்ல ராதாவின் உறக்கமும் கலைய, அவள் கண் விழித்தது கிருஷ்ணாவின் முகத்தில் தான். எத்தனை நாள் கனவு நிஜமாக அவனை பார்த்தபடியே அந்த நிமிடத்தை ரசித்தாள்.


“என்ன மேடம் அப்படியே சிலை ஆகிட்டீங்க??” என்று அவள் முன் கை அசைக்க அசடு வழிய அவனை பார்த்து சிரித்தாள்.


“நான் உன்னை விட்டுட்டு ஊருக்கு எப்படி போறதுன்னு இருக்கேன்....நீ ஜாலியா சிரிக்கிறியா???” என சட்டென்று அவள் முகமும் வாடி விட்டது. இருப்பினும் அவன் தனக்காக இத்தனை நாள் இங்கு இருப்பதை உணர்ந்து மெல்ல அவனை பார்த்து புன்னகைத்தவாறே, காலெண்டரை காட்டி இன்று சென்று விட்டு சனிக்கிழமை வரும்படி சைகை காட்டினாள்.


“ம்ம் மேடம் எனக்கு schedule சொல்ற அளவுக்கு பெரிய ஆள் ஆயாச்சு இல்லை???” என இல்லை என்பது போல பலமாக தலை அசைத்தாள்.


பெரிய மாமா பல்ராம் மாமா ரெண்டு பேரும் பாவம் எவ்ளோ வேலை செய்வாங்க என் வாயசைவில் கூற, தனக்காக மட்டுமின்றி தன் குடும்பத்திர்க்காகவும் எவ்வளவு பார்க்கிறாள் என்று அவனுக்கு இன்னும் ஆசை அதிகமானது.


சரி நான் brush பண்றேன் என்று சைகையில் கூறிவிட்டு படுக்கையை விட்டு இறங்க, பாதம் சரியாக பதியாமல் தடுமாற, அங்கு அதற்காகவே காத்திருந்த கிருஷ்ணா பரமாத்வாக மாறி தன் இணையை தாங்கினான்.


ஒய் பப்ளிமாஸ், இன்னும் உடம்பு சரியாகல சரியா?? பெரிய சூப்பர் வுமன் மாதிரி எதாவது செஞ்ச அவ்ளோதான் என அவளும் பவ்யமாக சரி என்று தலை அசைக்க, வெகு அருகில் இருந்த அவளது முகம் கவர்ந்து இழுக்க தன் கட்டுபாட்டை மீறி அவளது கன்னத்தில் முத்தமிட்டான், அதில் அதிர்ந்த அவளை மேலும் சோதிக்காமல் தன்னையும் சோதனைக்குள் தல்லாமல் பாத்ரூம் அழைத்து சென்றான்.


ஹுஹும் இது வேலைக்கு ஆகுறது இல்லை என்று கவுண்டமணி போன்று தனக்கு தானே சொல்லி கொண்டவன் ரூமை விட்டு வெளியே வந்தான்.


ஹாலில் குளித்து ரெடியாக இருந்த பாட்டியும் அம்மாவும் இவனை பார்க்க தலைவர் தூங்கி எழுந்து அப்படியே வருவதை பார்த்து அதிர்ந்தனர்.
ஏன்டா....எழுந்ததே லேட், குளிச்சிட்டு ரெடியா வரலாம் இல்லை....இன்னைக்கு ஊருக்கு போகணும் ஞாபகம் இருக்கா இல்லையா???? என பாட்டி பிடித்து கடிக்க


இதோ வந்துடுறேன் என்று மீண்டும் ரூமிற்குள் தஞ்சம் புகுந்தான்.


தன் வேலை முடித்து மெல்ல ராதா வெளியே வர, “குண்டம்மா, வர எவ்ளோ நேரம்???” என்று பாட்டியிடம் வாங்கிய கடியை அவளிடம் கடத்தி விட்டு குளிக்க சென்றான்.


காலையில் இருந்து அவளை பப்ளிமாஸ் குண்டம்மா என்று அவளை அழைத்தாலும் அவளுக்கு கோபமோ வருத்தமோ வரவில்லை, மாறாக தன்னை இயல்பாக நடத்தும் அவன் குணம் அவளை வெகுவாக கவர்ந்தது. அவளிடம் இது வரை பழகியவர்கள், ஒன்று அவளை கிண்டல் செய்து மனதை புண்படுத்துவார்கள், இல்லை அவளுக்கு பிடிக்காத மாதிரி பேச கூடாது என்று கவனமாக பேசுவார்கள். இது போன்று எதுவும் இன்றி அவன் இயல்பாக இருந்தது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.


வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல அதன் பிறகு கிருஷ்ணா வேகமாக கிளம்பி வந்தான். அவன் சாப்பிட அமர அனைவரும் காலை உணவை முடித்தனர். பாட்டியும் சுமித்ராவும் அவளிடம் சொல்லி செல்ல வந்தனர்.


கண்ணா, உடம்பை நல்லா பார்த்துக்கோ, நல்லா சாப்பிடு, மாத்திரை எல்லாம் கரெக்டா போடு, பிசியோதெரபி சரியா செய், இன்னும் ஒரு மாசத்துல காலேஜ் போகணும் சரியா??? என பாட்டி கேட்க “சரி” என்று பவ்யமாய் தலை அசைத்தாள்.


ராதா நீ நல்லா இருந்தாதான் என் மகன் சந்தோஷமா இருப்பான் சரியா?? என சுமித்ரா கேட்க,


“சரி” உங்களை ஒன்னு கேட்கவா என, “என்ன” என்றார் சுமித்ரா.


நான் உங்களை அம்மான்னு சொல்லவா என்று உதடசைக்க சுமித்ராவின் கண்கள் கலங்க, “அப்படியே கூப்பிடு” என்றார்.


சரியாக அந்தநேரம் உள்ளே நுழைந்த கிருஷ்ணா, ஒய் பப்ளிமாஸ் என்ன எங்க அம்மாவை நீயும் அம்மான்னு சொல்வியா??? பாட்டி அவ சொல்றது சரியா??? என “ரொம்ப சரி” என்று சொன்ன பாட்டியின் குரலும் தழுதழுத்தது.


உங்கம்மா ஒரு வெகுளி டா கிருஷ்ணா, அவளுக்கு ஏத்த மருமக கிடைக்கனும்னு கடவுளை வேண்டிக்கிட்டு இருந்தேன், கடவுள் என் வேண்டுதலை நிறைவேற்றி வச்சுட்டார், என்று ராதாவை அணைத்து கொண்டார்.


அப்போ இந்த முறையும் நம்ம வீட்ல மாமியார் மருமகள் சண்டை கிடையாதா???


“குண்டம்மா நான் சொல்றத கேட்பியா??”


“ம்ம்”


நான் சொல்ற நேரம் சொல்றவங்க கிட்ட சண்டை போடணும் என்ன??


“ம்ம்ம்”


நல்லா மண்டைய உருட்டுற, சொல்ற மாதிரி நடக்கல இந்த கிருஷ்ணாவோட மறுமுகத்தை பார்ப்ப என்ன என்று மிரட்ட, அனைவரும் சிரித்து அவனை காமெடி பீஸ் ஆக்கினர்.


சிறியவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து பெரியவர்கள் செல்ல, “பாப்பு, பத்திரமா இருடா மாமா உனக்காக இருக்கேன், மெசேஜ் அனுப்பு, உடம்புக்கு சின்னதா முடியலன்னா கூட சொல்லிடு”


ம்ம்ம்ம்.....என்று அனைத்திற்கும் மண்டையை ஆட்டினாள்.


அவள் தலையாட்டும் ரசித்து கொண்டே இருந்தவன், சற்றென்று அவளை கட்டி பிடித்து அதே வேகத்தில் விலகி பை சொல்லி விட்டு கிளம்பினான்.
ராதா என்ன நடந்தது என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே அவளது செல்பேசி அழைக்க எடுத்து காதில் வைத்தவள், “பாப்பு அப்படியே பிரீஸ் ஆகி நிற்குரியா?? ரொம்ப நேரம் நின்னா கால் வலிக்கும் சோ அப்படியே போய் படுத்திக்கிட்டு மாமாவை நினைச்சுகிட்டே இரு ஓடி வந்துடுறேன் ஓகே” என போனை வைத்தான்.


முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் மருந்துகளை எடுத்து கொண்டு உறங்கினாள் ராதா.


மாலை வரை ராதா நல்ல மனநிலையில் இருக்க, அதை மாற்றவே வந்தார் சிவகாமி. பெயரளவில் மாமியாரிடம் பேசி விட்டு அவள் அறைக்கு சென்றவளை புன்னகையுடன் வரவேற்றாள் ராதா. அவருக்கு ராதாவை புது மஞ்சள் தாலியுடன் முகத்தில் புன்னகை நிரம்ப பார்க்க பார்க்க பொங்கிய ஆத்திரம் கண்ணை மறைக்க அதை வெளி காட்ட முடியாமல் அமைதி காத்தார்.

“வாங்க பெரியம்மா” என்றாள் ராதா..

“ம்ம் உனக்கெல்லாம் வந்திருக்கு பாரு வாழ்கை என்னத்த சொல்ல” என்று பொரிய மௌனமாய் அவரை பார்த்தாள்.
ஏண்டி உன் உருவத்தை என்னைக்காவது முழுசா கண்ணாடியில பார்த்து இருக்கியா??? முடிஞ்சு இருக்கா உன்னால??? உனக்கு ராஜா மாதிரி இருக்குற என் அண்ணன் மகன் கேக்குதா??? என்னை செஞ்சு அவனை மயக்கின??? என்று குற்றசாட்டுகளை அடுக்க அதை அனைத்தையும் அமைதியாக எதிர் கொண்டவள், தன்னை பேச முடியாமல் செய்ததற்கு கடவுளுக்கு மனதில் நன்றி சொல்லி கொண்டாள்.

என்ன வாய் இவருடையது, இது நாள் வரை என்னிடம் பேசாமல் வதைத்தார், இனி பேசி வதைப்பார் போல என்று இலகுவாக எடுத்து கொண்டு அமைதியாய் பார்த்தாள்.
அது இன்னும் அவரை கோபப்படுத்த, அவளை எப்படியாவது காயபடுத்துவது என்ற முடிவில் அவளது ராசியை பற்றி பேச ஆரம்பித்தார். “நீ ஒரு ராசி கெட்டவ, நீ இருக்குற இடம் உருப்படாது, நீ தூர இருந்து பார்த்ததால் தான் கிருஷ்ணா உயிருக்கு ஆபத்து வந்துச்சு, இன்னும் பக்கத்துல வந்துட்டியா....இன்னும் என்ன கஷ்டப்பட போறனோ???” என்ற பிரம்மாஸ்திரத்தை எய்த அது தப்பாமல் இலக்கை அடைந்தது.

அதுவரை தன்னை பற்றி பேசிய அனைத்தையும் அலட்சிய படுத்தியவள், தன்னால் கிருஷ்ணாவிற்கு ஆபத்து வரும் என்பதை தாங்க முடியவில்லை, அதை அப்படியே அவள் முகம் பிரதிபலிக்க அவளது நாடியை பிடித்து விட்டார் சிவகாமி.

வா சிவா சாப்பிட என்று மாமியார் அழைக்க இதோ வரேன் அத்தை என்று பவ்யமாக எழுந்து சென்றார்.

இல்லை அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது, என்னால் மாமாவுக்கு எதுவும் ஆகாது என்று நினைத்து கொண்டவள், ஆண்டவனை நினைத்து ஸ்ரீராமஜயம் எழுத தொடங்கினாள்.

ஊருக்கு சென்ற கிருஷ்ணாவுக்கு வேலை ஓடவில்லை, இத்தனை நாட்கள் எப்படி இவளை விட்டு இருந்தோம் என்னும் அளவிற்கு அனைத்திலும் ராதா தெரிந்தாள். ஒரு வழியாக வேலையில் மனதை திருப்பியவன் அதில் வெற்றியும் கண்டான்.

மாலை வேலை முடித்து ராதாவை வீடியோ காலில் அழைக்க, அவனது முகம் பார்த்ததும் அவள் சகலமும் மறந்தாள். அவன் வேடிக்கையாய் பேசி அவளை சிரிக்க வைக்க, கேட்ட கேள்விகளுக்கு மண்டையை உருட்ட, கிண்டலும் கேலியுமாய் ஒரு மணி நேரம் முடிந்து இருந்தது.

பப்ளிமாஸ் மாமா தினமும் இந்த நேரம் போன் பண்ணுவேன் நீ சரியா பேசிடு, இல்லை இல்லை மண்டையை உருட்டு என்ன, வீட்டுக்கு போனா வீடியோ கால் பண்ண முடியாது, வெறும் போன் தான், அதனால எதாவது அவசரம்னா மெசேஜ் அனுப்பு சரியா...என
ம்ம்ம் என்று அவள் மண்டையை உருட்ட அந்த நாள் இனிய நாளாய் இருந்தது, கிருஷ்ணாவை தவிர அனைத்தையும் மறந்து இருந்தாள்.


சிவகாமி மறக்க விடுவாரா?????


தொடரும்....
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய நண்பர்களே,

தாமதத்திற்கு மன்னிச்சு...........

குழந்தைகள் பரீட்சை முடிந்து விட்டது.......விடுமுறை வந்தாச்சு எனவே இனி விடுமுறை வரை வாரம் ஒரு பதிவு கொடுக்கிறேன் நண்பர்களே......

அதற்காக கமெண்ட்ல கை வச்சுடாதீங்க மக்களே.....ஏதோ பார்த்து செய்யுங்க...
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 14

வார இறுதியில் கிருஷ்ணா சென்னைக்கு வருவதும் வார நாட்களில் தனது தொழில் என வேகமாக ஒரு மாதம் சென்றது. இந்த ஒரு மாதத்தில் ராதாவின் உடல்நிலை நன்கு தேறியது, மனம் தன்னால் கிருஷ்ணாவுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று நினைக்க ஆரம்பித்தது.


மனதில் இந்த எண்ணம் இருந்தாலும் கிருஷ்ணாவை பார்க்கும் பொது அனைத்தும் மறந்து விடுவாள், அதனால் இவளது மனதின் எண்ணங்களை அறியா முடிய வில்லை.


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.....ராதா எம்மாத்திரம், சிவகாமி விதைத்த விஷ விதை அவள் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது. அவரும் தினமும் வந்து செவ்வனே தனது வேலையை செய்து கொண்டு இருந்தார். ஒரு நாள் ரித்திகா எவ்வளவு அழகு தெரியுமா?? நல்ல வசதி, படிப்பு, அம்மா அப்பா தம்பின்னு நல்ல குடும்பம், கிருஷ்ணவிர்க்கும் ரொம்ப பிடித்து இருந்தது, நடுவில் உன் உயிருக்கு ஆபத்துன்னு உன் பாட்டி அழுது உன் கல்யாணத்தை நடத்திட்டாங்க. இல்லைனா உன்னை எல்லாம் என் அண்ணன் மகன் திரும்பி பார்ப்பானா??? என்று நொடித்தார்.


இந்த செய்தி ராதாவிற்கு புதிது, “கிருஷ்ணாவிற்கு இன்னொரு பெண்ணை பிடித்து இருந்ததா?? அப்படியென்றால் என்னை எப்படி கல்யாணம் செய்துகிட்டார்”, என்று யோசிக்கும் போதே, “நீ பிழைக்க மாட்டேன்னு, உன் பாட்டி ஒரே அழுகை அவ சுமங்கலியா போகட்டும்னு அதுதான்” ராதாவிற்கு பீறிட்ட அழுகையை கஷ்டப்பட்டு அடக்கினாள்.


அவளுள் ஏதோ ஒன்று உடைந்தது, இவ்வளவு நாள் தோன்றாத கேள்விகள் மனதில் தோன்ற ஆரம்பித்தது. அன்றைய தினம் அவன் தன்னை தெரியாத பார்வை பார்த்தது அசந்தர்ப்பமாக நினைவுக்கு வந்து வருத்தியது.


தன்னை யார் என்றே தெரியாமல் மறந்தவன் தன்னை மணந்தது எப்படி??


கிருஷ்ணா தன்னை விரும்பி மணக்கவில்லை, கட்டாயத்தில் மணந்து இருக்கிறான், என்னும் நினைவு ஒருபுறம், இன்னொரு பெண்ணை பிடித்து நிச்சயம் வரை சென்றது மறுபுறம் என உள்ளுக்குள் முற்றிலும் உடைந்தாள். இல்லை எதையும் வெளியே காண்பிக்க கூடாது, அதுவும் விஷ கொடுக்குள்ள பெரியம்மாவின் முன் கூடவே கூடாது, என்று உணர்ந்தவள் மிகவும் களைப்பாக இருப்பது போல கண் மூடி படுத்து கொண்டாள். வந்த வேலை முடிந்த திருப்தியுடன் கிளம்பினார் சிவகாமி.


அன்று இரவு மீண்டும் டைரியை எடுத்தவள் தன் மன வலியை பகிர்ந்து கொண்டாள்.....அது மட்டுமே அவளை காக்க போவது தெரியாமல்.....
“மாமா உங்களுக்கு பிடிக்காமல் இந்த கல்யாணம் நடந்ததா??? எனக்கு தெரியாதே.....தெரிந்திருந்தால் நிச்சயம் உங்களை இந்த இக்கட்டில் மாட்டி விட்டிருக்க மாட்டேன். பெரியம்மா சொல்லித்தான் எனக்கு தெரியும், உங்களுக்கும் ரித்திகாவை ரொம்ப பிடித்ததா??? நான் உங்க நல்வாழ்க்கைக்கு தொல்லையாக வந்து விட்டேனா???.....
இல்லை மாமா கூடாது......உங்களுக்கு விருப்பமான வாழ்க்கை கிடைக்கணும் அதற்கு இடைஞ்சலாக நான் இருக்க மாட்டேன். என்ன செய்யணுமோ செய்கிறேன்.....நீங்க கட்டின தாலி மட்டும் எனக்கு போதும்....போதும்....” என்று எழுதியவள், தன் நிலை இதுதான், தனக்கு உறவுகள் நிலைக்காது, என்று கழிவிரக்கத்தில் அழுது கொண்டே உறங்கினாள்.


அடுத்த நாள் எழுந்தவள் மனதில் தெளிவுடன் பல முடிவுகள் எடுத்திருந்தாள். அதற்காக கல்லூரி செல்ல ஆயத்தமானாள். வார இறுதியில் வந்த கிருஷ்ணாவிடம் கூற அவனும் சரி என்றான்.


“ஏன் பப்ளிமாஸ் ஒரு மாதிரி இருக்க???”


“ஒண்ணுமில்லை”

அவனது அக்கறையில் கரைந்தவள் கண் கலங்க, கலங்கிய விழிகளை கண்டவன் “பாப்பு எதாவது பிரச்சனையா?? மாமாகிட்ட சொல்லுடா?? யாராவது எதாவது சொன்னாங்களா???

“இல்லை”

“அப்புறம் உன் முகம் சரியில்லையே”

இவன் விடமாட்டான் என்று புரிந்து கொண்டவள், “பேச முடியாம காலேஜ் போக பயமா இருக்கு” என வாயசைத்தாள்.

“அப்போ போகாத.....பாட்டியை நல்ல நாள் பார்க்க சொல்லி ஊருக்கு கிளம்பிடலாம்...என்ன பாப்பு”

அடகடவுளே மொத்த திட்டமும் போச்சே என நினைத்தவள், “கொஞ்சம் பயமா இருந்தது இப்போ போச்சு” என்றாள்.

“அப்போ சரி” என்றவன், அவளை தன் புறம் திருப்பி முகத்தை இரு கைகளில் ஏந்தி கலங்கிய விழிகளை முத்தமிட்டவன், அப்படியே கன்னத்து மென்மையில் தன்னை தொலைத்தவன் அதனினும் மென்மையான அவளது உதடுகளை தன் உதடுகளால் மென்மையாய் சிறை செய்தான். அந்த க்ஷணம் இருவரின் வாழ்கையின் தேவ கணம், இரு காதல் கொண்ட உள்ளங்கள் காதலில் கரைந்து உலகத்தை மறந்து நின்று இருந்தனர். ராதாவிற்கு கிருஷ்ணாவை தவிர எதுவும் நினைவில் இல்லை, கிருஷ்ணாவிற்கு ராதாவை தவிர வேறு நினைவில் இல்லை. இந்நிலையில் இருந்து வெளிவர இருவருக்கும் விருப்பம் இல்லை, கிருஷ்ணாவின் விருப்பம் எதுவாகிலும் நிறைவேற்றும் ஆசை ராதாவிற்கு.....


“ராதா மாப்பிளைய சாப்பிட அழைச்சுகிட்டு வா” பாட்டியின் குரலில் இருவரும் தெளிந்தனர்.


அப்படியும் தன் வெட்க சிவப்பை மறைக்க அவளால் முடியவில்லை, கிருஷ்ணா இவள் உடல்நிலை குறித்து டாக்டரிடம் பேசி தெளிய வேண்டும் என்று நினைத்து கொண்டான். இன்னும் நாலு மாசம் இருக்கே....எக்ஸாம் முடிச்ச அடுத்த நாள் பாப்புவை ஊருக்கு பாக் பண்ண வேண்டியதுதான். நம்மளால இருக்க முடியாது சாமி....என்று மனதிற்குள் புலம்பி கொண்டான்.


பாட்டி தாத்தாவிடம் அவள் கல்லூரி செல்வதை பற்றி பேசியவன், அவர்களுக்காக கார் ஒன்றை வாங்கி நிறுத்தினான்.

தாத்தா “எதுக்கு பா இதெல்லாம்???....நான் பார்த்துக்குறேன்.....நான் வீட்ல சும்மாதானே இருக்கேன் நானே அவள் கூட போய் விட்டுட்டு கூட்டிகிட்டு வரேன்”
கிருஷ்ணா “இல்லை தாத்தா நீங்களும் என் தாத்தா மாதிரி தான், இந்த வயதில் இந்த வேலை வேண்டாம்....எங்க ரிசெப்ஷன் முடிஞ்சதும் நீங்களும் எங்க கூடவே ஊருக்கு வந்துடுங்க....நல்லா இருக்கும்”

பாட்டி, “ஏன்பா உனக்கு சிரமம்???”

“அவளால பேச முடியல, உடம்பும் இப்போதான் தேறி வருது, இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் பாட்டி, டிரைவர் எனக்கு நல்லா தெரிஞ்சவர் பத்திரமா பார்த்துபார், நீங்களும் நானும் டென்ஷன் இல்லாம வீட்ல இருக்கலாம், நாலு மாசம் தானே ஒன்னும் பிரச்சனை இல்லை”. கிருஷ்ணா.


அவர்களது அக்கறையும் கரிசனமும் ராதாவிற்கு கண்ணீரை வரவழைக்க, போதும் தன்னால் இவர்கள் படும் துன்பம் போதும், இனியாவது இவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்
நாம் இவர்களை விட்டு விலகி விட்டாலே இவர்களுக்கு நல்ல காலம் தான்.


“ஒய் பப்ளிமாஸ் ஏன் இப்போ டாம் ஓபன் பண்ற” நீ இப்போ என்ன செய்வேன்னு சொல்லட்டா.......என அவளை போலவே தலை அசைக்க, அவள் தன்னை மறந்து சிரித்தாள்.
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைஷுவிற்க்கு இன்று கோபம் தலைக்கேறியது. அந்த ஆகாஷ் என்ன அவ்வளவு பெரிய இவனா?? இன்னைக்கு காலேஜ் வந்தா நான் பேசணும், அவன் கூட வெளிய போகணும்.....அம்மாவே இப்படி சொல்றாங்க, வர வர அம்மா சொல்றது செய்யறது எதுவும் பிடிக்கல.....மனதிற்குள் புலம்பியவாறே காலேஜ் கிளம்பி கொண்டு இருந்தாள். பின்னே நேரில் சிவகாமியிடம் பேச முடியுமா??


வைஷுவிற்க்கு ஆகாஷ் மீது கோபம் தான், ஆனாலும் அம்மா சொல்படி நடக்கும் கிளிபிள்ளை, இப்போது அம்மா அவனோடு பேசு என்பதால் பேசுகிறாள், இல்லையென்றால் பேசமாட்டாள். ராதாவை விட ஒரு வயது பெரியவளாக இருந்தாலும் அவளது தெளிவு இவள் கிடையாது, அதுவே சிவகாமிக்கு பெரிய குறை. இந்த ஆத்திரத்தின் வெளிப்பாடே ராதாவின் மேல் விழுந்தது, எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அசராமல் வாயை திறக்காமல் சாதிக்கும் ராதா ஒரு புறம், எதையும் ஆராயாமல் அந்த நேரத்திற்கு தன் உணர்வுகளை குழந்தை போல வெளிபடுத்தும் தன் மகள் என அவரது ஒப்பிடே அவரின் கோபத்திற்கு காரணம்.


ஆகாஷ் மரத்தடியில் நின்று கொண்டு தன் காதலிக்கு தாலி கட்டிய நிகழ்வை எண்ணி மனதிற்குள் சந்தோஷபட்டு கொண்டிருந்தான். நிச்சய புடவை எடுத்த பிறகு அவளை காணாது ஏங்கிய மனதை அடக்கவே இன்றைய சந்திப்பு. வைஷுவை நினைப்பதே அவனுக்கு அவ்வளவு சுகமாக இருந்தது, அவளது குழந்தைத்தனம் அவனை மிகவும் கவர்ந்தது.


தன் நினைவுகளின் நாயகி அருகில் நிற்பது கூட தெரியாமல் அவளை நினைத்து கொண்டு இருந்தவன் பக்கத்தில் அரவம் கேட்டு திரும்பினான்.

ஹாய் வைஷு எப்படி இருக்க???

ம்ம் நல்லா இருக்கேன்...

காலேஜ் முடிஞ்சுதா???

அதனாலதான் இங்க நிற்கிறேன்....

மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க போல இருக்கே.....உள்ளுக்குள் நினைத்தவன், இவளை எப்படி சரி செய்வது.....””எதாவது சாப்பிடலாமா??””

ம்ம் என்றவளை, அருகில் இருக்கும் காபி ஷாப் அழைத்து சென்று பிடித்தமானதை வாங்கி கொடுத்து சரி கட்டினான்.

வைஷுவின் இந்த குணம் ஆகாஷை வெகுவாக கவர்ந்தது.

வைஷு உனக்கு என் மேல கோபம் இல்லையா???

நிறைய இருந்தது......

இருந்தது னா இப்போ இல்லையா???

அம்மா உங்க கிட்ட கோப பட கூடாதுன்னு சொன்னாங்க....

அம்மா எது சொன்னாலும் செய்வியா???

ம்ம்ம்.....

இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னா???

அம்மா சொல்றபடி கேட்பேன்.

ஆகாஷ் அவளது நாடியை பிடித்து விட்டான். அவளது பலம் பலகீனம் அனைத்தும் அவளது தாய். குட்டி பாப்பா, கல்யாணத்துக்கு முன்னாடி ஓகே இனிமே இந்த ஆகாஷ் இருக்கான் உனக்கு என்று மனதிற்குள் சொல்லி கொண்டான்.

சரி நம்ம நிச்சயத்திற்கு உனக்கு என்ன பரிசு வேண்டும்....

எதுவும் வேண்டாம்....

வைர மோதிரம்

வேண்டாம்....

அவ்ளோ நல்லவளா நீ??? மனதில் நினைத்தவன் வெளியில் சொல்லவில்லை.

சரி நீ எதுவும் சொல்ல வேண்டாம் நானே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன்...

பத்திரமாக அவளை வீட்டில் விட்டு அவன் வீடு திரும்பினான்.
*************​

ஆகாஷ் வீட்டின் முன் தங்கள் வசதியை காட்ட சிவகாமியும் ஸ்ரீனிவாசனும் நிச்சயத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து இருந்தனர். தங்கள் சம்பந்தியின் வசதியை காட்ட சொந்தம் பந்தம் அனைவரையும் அழைத்தனர்.

நிச்சயதார்த்தம், மாலை ஒரு பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாப்பிள்ளைக்கு மோதிரம், செயின், விலையுயர்ந்த ஆடை, இருபத்தியொரு தட்டு வரிசை என ஏற்பாடுகள் தயாராக இருந்தது. முன்றைய தினமே வந்து தனம் பாட்டி, லஷ்மி சுமித்ரா சொந்த பந்தம் அனைவரும் சிவகாமிக்கு உதவினர்.

கவுசல்யா ராதாவை பார்க்கும் ஆசையில் நிச்சயதன்று காலையே ராதா வீட்டிற்க்கு வந்து விட்டாள். ராதாவும் அவளை ஆசையாய் வரவேற்று குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தாள்.

மாலை நிச்சயத்திற்கு அனைவரும் கிளம்பினர். ராதா கவுசல்யாவை மிகவும் அழகாக அலங்கரித்தாள். அவள் கட்டும் புடவையை மிகவும் அழகாக கட்டி விட்டு மிதமான மேக்கப் போட்டு, அழகிய சிகை அலங்காரத்துடன் தயாராக அவளை பார்த்த பலராம்....கௌசி, கண்டிப்பா பங்க்ஷன் போகனுமா???

உதை....என்று கை விரலால் பத்திரம் காட்ட....

“பிள்ளை இல்லாத ஊரில் கிழவன் துள்ளி விளையாடின கதையா, நான் இங்க இருக்கும் போது உங்க ஆட்டம் தாங்கவில்லை பா”.....நொடித்தபடி கிருஷ்ணா வர.....

கவுசல்யா வெட்கப்பட, “உனக்கு ஏன்டா வயத்தெரிச்சல்....நான் என் வைப் கூட ஆட்டம் போடுறேன், நீ முடிஞ்சா உன் வைப் கூட ஆட்டம் போடு நான் எதுவும் கேட்க மாட்டேன்.” பலராம் கிண்டல் செய்ய அவர்களை செல்லமாக முறைத்தபடி அறைக்குள் சென்றான் கிருஷ்ணா.

பப்ளிமாஸ் ரெடியா??? குரல் கொடுத்தபடி கிருஷ்ணா நுழைய, தயாராகி இருந்தவள் இவன் குரல் கேட்டு அப்படியே நிற்க, கிருஷ்ணா வெகு நிதானமாக அவள் அருகில் வந்தான்.

வெங்காய நிற புடவையில் மரூன் கலர் மெல்லிய சரிகையிட்ட பட்டு புடவையை தனக்கு ஏற்றார் போல உடுத்தி, பாப் கட் போன்ற சிகை அலங்காரத்தில் அசத்தலாக இருந்தாள்.

பாப்பு கலக்கலா இருக்குற.....

சீக்கிரம் ரெடி ஆகுங்க.... நான் வெளிய வெயிட் பண்றேன் என்று ஓடியவளை பிடித்து நிறுத்தியவன்.....”நீ ஒரு மக்கு, வெளிய பூஜை வேலை கரடியா போய்டாதே ”

அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து உதட்டை கடித்து நிற்க, இப்படியெல்லாம் நின்னா நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை என்று கிருஷ்ணா அருகில் வர, மாமா டைம் ஆச்சு என்று அவனை குளியலறைக்கு தள்ளி விட்டாள் அவனது செல்ல மனையாட்டி.

அனைவருடனும் ராதா மிகுந்த சந்தோஷ மனநிலையில் விழாவிற்கு கிளம்பினாள்....திரும்பி வரும் போது அவளது சந்தோஷம் நிலைத்திருக்குமா?????


தொடரும்.........
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 15

ஆகாஷ் வைஷுவை கண்களால் முடிந்த வரை கைது செய்து கொண்டு இருந்தான். மக்கு வைஷு பொம்மை போல வந்து நின்று விட்டு சென்று விட்டது.


நிச்சயத்திற்கு முந்தைய நாள் வைஷு வீட்டிற்க்கு சென்று, “இந்தாங்க அத்தை என் பிரெண்ட் ஜெய்ப்பூரில் சாரிஸ் கடை வைத்திருக்கான் வைஷுக்கு ஒரு புடவை வாங்கினேன்...அவளுக்கு கொடுக்கவா” அவனது பவ்யத்தில் வியந்து இருங்க மாப்பிள்ளை அவளை வர சொல்றேன். அவரே வைஷுவை அழைத்து வர அந்த விலையுர்ந்த புடவையை பார்த்தவள் வாயை பிளந்தாள்.


அடர்ந்த மஜந்தா நிறத்தில் வெளிர் சந்தன நிற பார்டர்ல எம்ப்ராய்டரி பூக்களும், உடலை உறுத்தாத மெல்லிய கற்களும் பதிக்கப்பட்டு வெகு அழகாக வடிவமைக்கப்பட்ட புடவை காண்போரை வசபடுத்தும், வைஷு எம்மாத்திரம்... “வாவ் சாரி சூப்பர்....ஆகாஷ்”


“பிடிச்சிருக்கா”


“ம்ம்ம் ரொம்ப” என புடவையை அப்படியே கட்டி கொண்டவளை கட்டிக்கொள்ளும் ஆசை வந்தது ஆகாஷிர்க்கு. சிவகாமி எதிரில் நல்ல பிள்ளையாய் கட்டுபடுத்தி கொண்டான்.


“எப்படி இருக்கு என்னோட நிச்சயதார்த்த கிப்ட்.???”


“ம்ம்ம் சூப்பர்....ஐ ஜஸ்ட் லவ் இட். (I just love it)”


“இதே மாதிரி என்னையும் கட்டிக்க வைக்குறேண்டி.....எதுகெடுத்தாலும் அம்மான்னு சொல்ற வாயை ஆகாஷுன்னு சொல்ல வைக்கிறேன்”. மனதிற்குள் சூளுரைத்து கொண்டான்.


அலங்காரத்தில் அந்த ஹோட்டல் ஜெகஜோதியாய் ஜொலித்து கொண்டு இருந்தது. அதை மேலும் அழகு சேர்க்கும் வகையில் அங்கிருந்த பெண்கள் தங்கத்திலும் வைரத்திலும் மின்னி கொண்டு இருக்க, ஆண்கள் பிளாடினத்தில் ஒளி வீசி பார்க்கும் கண்களை கூச செய்து கொண்டு இருந்தார்கள்.


ஆகாஷ் சிவகாமியை அத்தை அத்தை என்று பாச மழையில் நனைத்தான்.


“அத்தை உங்கள் பொண்ணு சூப்பர்......உங்க வளர்ப்பு அது தான்”...”.ஹோட்டல் அலங்காரம் சூப்பர் அத்தை....எங்க சொந்தகாரங்க எல்லாம் அசந்துட்டாங்க....ரொம்ப நல்லா எல்லாதையும் நடத்துறீங்க, கிப்ட், வரிசை எல்லாமே அசத்தல் அத்தை”.....மூச்சுக்கு முண்ணூறு அத்தை போட்டு சிவகாமியை தன் கைக்குள் கொண்டு வந்தான்.


மண்டபத்திற்குள் நுழைந்தது முதல் ராதா தனித்து விடப்பட்டாள், கிருஷ்ணா தன் அத்தைக்கு உதவ செல்ல, அவளுக்கு தெரிந்த உறவினர்கள் அனைவரும் ஆளுக்கொரு வேலை செய்ய, ராதா தனது மற்ற உறவினர்களுடன் பேசி கொண்டு இருந்தாள். அவளும் திருமணத்திற்கு பிறகு தன் சொந்தங்களை பார்க்க முடியாததால் அவள் அவர்களுடன் ஒன்றி விட்டாள்.


சிறிது நேரம் கழித்து வந்த கிருஷ்ணா, இவள் தனித்து இருப்பதை பார்த்து “பாப்பு ஏன்டா தனியா இருக்க, வா வைஷு ரூம் போலாம்”


“வேண்டாம் மாமா நான் இங்கேயே இருக்கேன்.”


“எவ்ளோ நேரம் தனியா இருப்ப என் கூட வா” வைஷுவின் ரூமிற்குள் நிறைய பெண்கள் இருக்க அவளை உள்ளே செல்லும்படி சொல்லிவிட்டு சென்றான்.


அவளும் வேறு வழி இன்றி பயந்து கொண்டே உள்ளே சென்றாள்.


ராதாவை பார்த்த வைஷுவிற்க்கு தன் தாய் அவளை பற்றி கூறியது எல்லாம் நினைவிற்கு வர, கிருஷ்ணா அவளிடம் அன்பாக இருப்பது கடுப்பை கிளப்ப இவளை எப்படி வெறுபேற்றுவது என திட்டமிட்டு கொண்டிருக்கும் போதே அங்கு ரித்திக்கா வர வைஷுவிற்க்கு அல்வா சாப்பிட்டது போல இருந்தது.


"ஹாய் வைஷு"

"ஹாய் ரித்திக்கா எப்படி இருக்க??"

"நான் என்ன சூப்பரா இருக்கேன்..."

"சித்தி தெரியுமா, இவதான் ரித்திக்கா என்னோட பிரெண்ட், கிருஷ்ணா மாமாவுக்கு இவளை தான் பார்த்தாங்க."...என வெடியை கொளுத்தி போட

அதுவரை அமைதியாய் தலைகுனிந்து அமர்ந்திருத்த ராதா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். நவீன உலகின் கணக்குப்படி மெல்லிடையாய் பால் நிற சருமத்தில் பார்லர் உபயத்தில் பட்டி பார்க்கப்பட்ட பளீர் முகத்துடன் இருந்தவளை கண்டு ஒரு கணம் திடுகிட்டாள்.

எவ்வளவு அழகா இருக்கா???....இவ தான் மாமாவுக்கு ஏத்த ஜோடி....ரெண்டு பெரும் மேடையில் நின்றால் ஜோடி பொருத்தம் அமோகமா இருக்கும். பக்கி அவன் உன் புருஷன் என்று கூறிய மனசாட்சியை மனசாட்சியே இல்லாமல் அடக்கினாள்.

“அப்புறம் எப்படி அவன் அந்த குண்டு பொண்ண கட்டிகிட்டான்” என்று வெள்ளந்தியாய் சித்தி கேட்க, விருந்து சாப்பிட்ட திருப்தி வைஷுவிற்க்கு.

சிவகாமி உபயம், தன் மச்சினர் பெண் ஒரு குண்டு பெண் என்று மட்டுமே சொந்தங்களிடம் அறிய செய்து இருந்தார்.

“அதை ஏன் சித்தி கேக்குறீங்க, எல்லாம் மாமா நேரம்” என்று அவள் முதலை கண்ணீர் வடிக்க, “போதும் உன் மாமாவுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத” என்றாள் ரித்திகா எரிச்சலுடன்.

ஆமா “ரித்தி உன்னை மாதிரி பொண்ணு கிடைக்க அவருக்கு கொடுத்து வைக்கல”

சித்தி....”ஏன் ரித்திகாவுக்கு என்ன அவளுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்ய அம்மா அப்பா இருக்காங்க, அவங்க காலத்துக்கு பிறகும் சீர் செய்ய தம்பி இருக்கான். அழகு இருக்கு.....சீமைத்துரை மாதிரி ஒருத்தன் வருவான் பாரு”

பாவம் சித்தி அங்கு ராதா இருப்பது தெரியாமல் ரித்திகாவை சமாதான படுத்த சொன்ன வார்த்தைகள் இங்கே ஒருத்தியை உயிரோடு கொன்று கொண்டு இருப்பதை அறியவில்லை.

அங்கிருந்த மற்றவர்களுக்கு அவள் யார் என்று தெரியாது என்பதை வைஷு தனக்கு சாதகமாக்கி கொண்டாள்.

இந்த சம்பாஷணையை கேட்டு கொண்டிருந்த ராதா அப்படியே பூமிக்குள் சென்று விட மாட்டோமா என அவமானத்தில் கூனி குறுகி அமர்ந்து இருந்தவள், மற்றவர் கருத்தை கவராமல் வெளியே வந்து மொட்டை மாடிக்கு சென்றாள்.

மொட்டை மாடி இருட்டில் வானத்தை வெறித்து கொண்டு இருந்தவளுக்கு அந்த தனிமையும் இருளும் மட்டுமே தனக்கு துணை என்று நன்கு புரிந்து போனது. கண்ணிலிருந்து சுத்தமாய் கண்ணீர் வரவில்லை. எங்கிருந்தோ வந்த பழைய படத்தின் பாடல் வரிகள் “கண்ணிலே நீர் எதற்கு காலமெல்லாம் அழுவதற்கு” அவளுக்கு அவள் நிலையை கூறியது.

கண்ணில் கண்ணீர் இல்லை, கோபம் இல்லை, வருத்தம் இல்லை, விரக்தி இல்லை.........அவளுக்கு இருந்த ஒரே உணர்வு தன் கிருஷ்ணா நன்றாக இருக்க வேண்டும் அதற்கு தடையாக தானே இருக்க கூடாது என்பதே.

இது போன்ற உன்னத காதல் கிடைக்க கிருஷ்ணா என்ன தவம் செய்தானோ....இல்லை அவனது காதலை உணர்த்த அவனுக்கும் வாய்ப்பு கிடைக்குமா....பதில் காலத்தின் கையில்.....

வெகு நேரம் இருளில் கண் மூடி தனிமையை ரசித்து கொண்டு இருந்தவள் தொலைபேசி சினுங்கியது.

கிருஷ்ணாதான் அழைத்து இருந்தான். அது வீடியோ கால் என்பதால் கட் செய்து விட்டு கிழே சென்றாள்.

நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்து பரபரப்பான போட்டோ எடுக்கும் வைபவம் நடந்து கொண்டு இருந்தது.

கிருஷ்ணா அவனுடம் போட்டோவிற்கு மேலே அழைக்க பேசாமல் சென்று அவன் அருகில் நின்று போட்டோ எடுத்து கொண்டாள்.

சாப்பிட அழைத்து சென்றவன் “பாப்பு ஏன்டா ஒரு மாதிரியா இருக்க??? இவ்ளோ நேரம் எங்க இருந்த??? நான் உன்னை ரொம்ப நேரம் தேடினேன். வைஷு கூட வருவேன்னு மாமா எவ்ளோ ஆசையா எதிர்பார்த்தேன் தெரியுமா?? எதாவது பிரச்சனையா?? உடம்புக்கு சரி இல்லையா???”

கிருஷ்ணாவின் கேள்விகள் அவளின் கண்ணீர் சுரப்பிகளுக்கு வேலை கொடுத்து விடுமோ என்று பயந்தவள்....”ஆமா தலை வலிக்குது”

ரொம்ப வலிக்குதா??? இப்போவே டாக்டர் கிட்ட போலாமா???

இல்லை வீட்டுக்கு போலாம். படுக்கணும்.

சரி....நாளைக்கு கண்டிப்பா ஹாஸ்பிடல் போலாம். எனக்கும் டாக்டர் கிட்ட கொஞ்சம் பேசணும்.

அப்பு குட்டி வேற ஒன்னும் இல்லையே???

இல்லை என்று தலை அசைக்க...

அப்பா இப்போதான் என்னோட பப்ளிமாஸ்....உன்னோட டிரேடு மார்க்...என அவளை போல தலை அசைக்க மெல்லிய புன்னகை ராதாவிடம்.

கிருஷ்ணாவின் வீட்டினருக்கு அப்படி என்ன இருக்கிறது இந்த பெண்ணிடம், எவ்வளவு அழகாய் பெண்கள் இருக்கும் இடத்தில் யாரையும் ஏறெடுத்து பார்க்காதவன் ராதாவை தாங்கியது சந்தோஷமாக இருந்தாலும் அவள் அவனது பாசத்திற்கு ஏற்றவளாக இருக்க வேண்டும் என இஷ்ட தெய்வத்தை வேண்டி கொண்டனர்.

நிச்சயம் முடிந்து அனைவரும் வீட்டிற்க்கு திரும்பினர். ராதாவிற்கு மனம் மிகுந்த சோர்வாக இருந்தது. கிருஷ்ணாவின் அருகாமை அனைத்தையும் மறக்க செய்தாலும் ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை.

வழக்கம் போல பக்கத்தில் படுத்த கிருஷ்ணாவை அவளது கலங்கிய விழிகளும் சோர்ந்த முகமும் பார்த்து திடுக்கிட்டான்.

என்னாச்சு பாப்பு???

அவனை சாய்வாக படுக்க வைத்து அவனது தோள் வளைவில் படுத்து கொண்டவள் அவனது ஒரு கையை எடுத்து தன் தலையை வருடி விட்டாள். எப்போதும் களைப்பாக இருப்பதாக அவனது அருகாமையை தவிர்ப்பவள் இன்று நடந்து கொள்ளும் விதம் எதையோ உணர்த்த அமைதியாய் அவள் சொன்னதை போன்று செய்ய அமைதியாய் தூங்கினாள் கிருஷ்ணனின் ராதா. ராதையின் கிருஷ்ணனுக்கு தூக்கம் தூரம் சென்றது.



கிருஷ்ணாவை ராதாவின் காதலை உணர்ந்த அளவு அவளை உணரவில்லை. அவன் உணர்வானா????



தொடரும்...........
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 16

காலை ராதா கண் விழிக்கும் பொழுது கிருஷ்ணா வெளியில் செல்ல தயாராகி அமர்ந்திருந்தான். எழுந்து அவனுக்கு குட் மார்னிங் வைத்தவள், “எங்க போறீங்க மாமா??” என்றபடி குளியலறைக்குள் புகுந்து தன் வேலைகளை முடித்து கொண்டு வெளியே வந்தாள்.


“போறே இல்லை போறோம்” கையில் காபி கோப்பையை திணித்து விட்டு “சீக்கிரம் கிளம்பி சுடிதார் போட்டுட்டு வா ஹால்ல வெயிட் பண்றேன்.” பதிலுக்கு காத்திராமல் வெளியே சென்று விட்டான்.


அழகிய மரூன் கலர் டாப்பும் அதற்கேற்ற சந்தன நிற பாண்டும், சந்தன நிற மரூன் டிசைன் சேர்ந்த துப்பட்டாவில் அசத்தலாக தயாராகி வந்தாள் ராதா.


“பாப்பு உன்னை எப்போ அப்படியே அள்ளிகிட்டு ஊருக்கு போக போறனோ தெரியலையே??” மனதிற்குள் புலம்பியபடி “வா சீக்கிரம் டிபன் சாப்பிடு....கிளம்பனும்”


“எங்கே???”


“ஹாஸ்பிடல்...”


“எதுக்கு???”


“சும்மா செக் அப்....நீ காலேஜ் போறது ஓகே வான்னு கேக்கணும்.”


“ம்ம் சரி”


“தாத்தா பாட்டி போய்டு வரோம்” நேரே பாட்டியின் காதில் சென்று ரகசியமாய் எதையோ கூறி விட்டு வந்தான்.


என்ன???


“ஒண்ணுமில்லை” அவளை போன்று தலை அசைத்து வெறுப்பேற்றிகொண்டே தன் ராயல் என்பீல்ட் பைக் ஸ்டைலாக எடுத்தான்.


இது போன்ற பைக்கில் நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்பது அவளது நீண்ட நாள் கனவு.


“வாவ்”..ஏதோ அழகி போட்டியில் வென்றவள் போன்று இரு கைகளையும் கன்னத்தில் வைத்து வியந்து கொண்டே அருகில் வந்து பைக் தடவி கொடுத்தவள், “உங்களுதா மாமா???” என்றாள்.


கொடுத்து வச்ச பைக் என்று மனதிற்குள் குமைந்தவன், “ஆமா” எரிச்சலுடன் மொழிந்தான்.


என்னாச்சு இந்த மாமாவுக்கு நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தாங்க, யோசித்தவாறே பைக்ல் ஒரு பக்கமாக அமர “ரெண்டு பக்கம் கால் போட்டு உட்கார்” என்றான் அதே எரிச்சலுடன்.


என்னாச்சு மாமா?? ஏன் கோபம்??? பரிதாபமாக ராதா கேட்க


“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆக போகுது, இன்னைக்கு பைக் தடவி கொடுத்த மாதிரி என்னை கவனிச்சு இருக்கியா??”


ஐயோ மாமா வெக்கமா இருக்கு என்று கண்களை முடி கொள்ள, இருக்கும் இடம் புரிந்து “உட்கார்” என்றான்.



ஹாஸ்பிடலில் ஏற்கனவே சொல்லி வைத்து இருந்ததால், குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவரை சந்தித்தனர். ராதாவை சோதித்த மருத்துவர், குட் improvement, அவளது தலை காயத்தை சோதித்தவர், “குட் தலை காயம் நல்லா ஆறி இருக்கு....இன்னும் பத்து சதவீதம் ரெகவரி தான் தேவை, மத்தபடி ஷி இஸ் பைன் அண்ட் கேன் கோ டு காலேஜ் (she is fine and can go to college)....டோன்ட் ஸ்ட்ரெயின் மச் (don’t strain much) ராதா, உங்களால் ஈஸியா செய்ய முடியறதை செய்யுங்க.”

அவ எப்போ பேசுவா டாக்டர், “எப்போனாலும் அந்த மிராகிள் (miracle) நடக்கலாம். டோன்ட் வொர்ரி ஷி வில் பீ பெர்பெக்ட்லி அல்ரைட் சூன் (don’t worry she will be perfectly alright soon). உடளவில் அவங்க காயம் நல்லா ஆறி இருக்கு, அதே போல அவங்க மன காயம் ஆறும் போது பேச்சு வந்துடும். அப்படியும் முடியலைனா ஸ்பீச் தெரபி கொடுப்போம். அவங்க தொண்டையில் பிரச்சனை இருந்திருந்தா அப்போவே ஆரம்பித்து இருக்கலாம்...அவங்க உடல் உறுப்புகள் ஆரோக்கியமா இருக்கு....ஒரு சடன் ஷாக் அவ்ளோதான். சினிமா டிராமாவில் வர மாதிரி அதே மாதிரி சூழ்நிலை வரும் போது அவங்க பேசலாம்.”



கிருஷ்ணாவிற்கு அவள் உடல்நிலை குறித்து சந்தோஷபட்டாலும் சீக்கிரம் பேச்சு வர வேண்டும் என வேண்டி கொண்டான்.

வெளியில் வந்த பிறகே டாக்டர் ரூமில் தன் ஹெல்மெட்டை விட்டு வந்ததை உணர்ந்து “பாப்பு இங்கேயே இரு நான் போய் ஹெல்மெட் கொண்டு வரேன்.”


“சாரி டாக்டர் ஹெல்மெட் மறந்துட்டேன்.”


இட்ஸ் ஓகே....உங்களுக்கு என்ன தனியா கேக்கணுமோ கேளுங்க..


டாக்டர்....


நீங்க தெரியாம ஹெல்மெட்டை வைச்சுட்டு போகல....நானும் உங்ககிட்ட தனியா பேச தான் அப்போ சொல்லலை.


டாக்டர் வந்து அவளோட படிப்பு முடிஞ்சதுக்கப்புறம் நாங்க எங்க கல்யாண வாழ்கையை தொடங்கலாமா??


யா தராளமா....ஆனா அதுக்கு முன்னாடி அவங்க மனசுல எதையோ வச்சு கஷ்டப்படுறாங்க அது என்னன்னு கண்டுபிடுச்சு சரி பண்ணுங்க.


“எனக்கும் புரியுது டாக்டர் ஆனா அவளை பேச வைக்க முடியாதது ரொம்ப கஷ்டமா இருக்கு”....என கலங்கினான்.


கவலைபடாதே யங் மேன், உங்க அன்பு தன் அவங்களுக்கு மருந்து...உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா, அன்றைக்கு சர்ஜெரி முடிஞ்சு அவங்க கிட்ட எந்த முன்னேற்றமும் இல்லை.....நீங்க தாலி கட்டின பிறகு தான் ஷி ஸ்டார்ட்டு டு ரெகவர் (she started to recover)...சோ அவங்கள வாழ வைக்குற ஒரே பிடிமானம் உங்க அன்பு மட்டும் தான். அதனால் அவங்களை சந்தோஷமா வச்சுகோங்க. ஆல் தி பெஸ்ட் என வாழ்த்தி விடை கொடுத்தார்.


ஹெல்மெட் எடுக்கவா இவ்ளோ நேரம்....ம்ம்ம்....கிடுக்கிபிடி கேள்வி கேட்க


நீ வக்கிலுக்கு படிச்சு இருக்கணும் பாப்பு, என்னமா கேள்வி கேக்குற???


அதெல்லாம் சரி ஏன் இவ்ளோ நேரம் என்ன சொன்னாரு டாக்டர்???

அவருக்கு ஒரு சந்தேகமாம் அதை தீர்த்து வச்சுட்டு வரேன். என்ன நம்பலையா...வா டாக்டர்கிட்டே கேட்கலாம் அவளை காலாய்த்து மாற்றினான்.

ஏதோ யோசனையில் அமர்ந்து இருந்தவள், இது வீட்டுக்கு போற வழியா மாதிரி இல்லையே.... “எங்க போறோம் மாமா??”

“சும்மா ஒரு லாங் டிரைவ் ஓகே வா பாப்பு”

ம்ம்ம்.........ஜாலி என அனைத்து குழப்பங்களும் மறைந்து மறந்து அவனுடன் ஒன்றினாள்.


பாப்பு கொஞ்சம் தள்ளி உட்கார். நான் எப்படி வண்டி ஓட்றது??? என்று சிடுசிடுத்தான். அவன் சிடுசிடுத்ததன் காரணம் மக்கு ராதாவுக்கு புரியவே இல்லை, அதை விட அதை மேடம் கவனிக்கவே இல்லை. அவள் கனவு நிறைவேறியதில் சந்தோஷ பயணத்தில் அவனுடன் ஒட்டி உரசி அமர்ந்து இருந்தாள், கிருஷ்ணாவின் பாடு பாவமாக இருந்தது.



இந்த நிலையிலும் “இந்த மக்க வச்சுக்கிட்டு என்ன செய்வது??” என்று மிக தீவிரமாக யோசித்து கொண்டு வந்தான் கிருஷ்ணா.



இளநீர் குடிக்கலாம் என்று ஒரு ஓரம் நிறுத்தினான் கிருஷ்ணா....ஒரு கனவு பயணம் தடைப்பட்ட கோபம் ராதா முகத்தில்.


எதுக்கு நிறுத்தினீங்க???

“பாப்பு பேசாம நீ டான்சர் ஆகி இருக்கலாம்....நவரசமும் கண்ல காட்ற...இப்போ கோவமா இருக்க??? கரெக்டா??? மாமா டயர்ட் மா...கொஞ்சம் கருணை காட்டு செல்ல குட்டி....ஒரே ஒரு இளநீர் குடிச்சிட்டு கிளம்பிடலாம்....ஓகே...”


“ம்ம்ம்....ஓகே....”


எதிர் திசையில் கார் ஒன்று பழுதாகி நிற்க, அனைவரும் இறங்கி நிற்க அனைவரும் அசந்த நேரத்தில் ஒரு குழந்தை ஒரு ஓரமாக நடக்க தொடங்கியது, அதனை அறியாமல் சாலை நோக்கி அதன் நடை திரும்பியது.



இருவரும் இளநீர் குடித்து கொண்டே எதிர் திசையில் பார்த்தவள் முகம் வெளிறி எதையும் யோசிக்காமல் அங்கே ஓடினாள்.



யாரையும் நினைக்காமல் அந்த குழந்தை மட்டுமே அவள் குறி என ஓடியவள், அந்த குழந்தையை தூக்கி கொண்டு அம்மா என முனகி கொண்டே தள்ளி விழவும் ஒரு கார் பிரேக் போட்டு நிற்கவும் சரியாக இருந்தது.



கிருஷ்ணா சாலையை கடப்பதற்குள் இவ்வளவு விபரீதம் நிகழ்ந்து முடிந்து இருந்தது. உறவினர்கள் ஓடி வந்து ராதா கையில் இருந்து குழந்தையை வாங்க குழந்தை பயத்தில் வீறிட்டு அழ ராதாவின் குரல் வெளியே கேட்கவில்லை. அதுவும் கிருஷ்ணாவிற்கு சுத்தமாக கேட்கவில்லை.....இது ராதாவுக்கு நல்லதா???



தொடரும்....
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 17



கிருஷ்ணா சாலையை கடந்து ஓடி வந்து ராதாவிடம் ஓடினான், அனைவரும் குழந்தையை பார்க்க இவன் ஓடி சென்றான் தன் குழந்தையிடம். அவள் அருகில் சென்று அணைத்து கொண்டவன், “பாப்பு உனக்கு ஒன்னும் இல்லையே??”



அதிர்ச்சியில் பேச மறந்து இல்லை என தலை அசைத்தாள்.



இந்த அதிர்ச்சியிலாவது உனக்கு பேச்சு வந்து இருக்க கூடாதா?? என புலம்ப ராதா சுதாரித்து கொண்டாள். நமக்கு பேச வருவதை இவனிடம் சொல்ல கூடாது எனும் முடிவுக்கு வந்தாள்.



குழந்தை நல்லா இருக்கா???



ம்ம்ம்...நல்லா இருக்கு....



அதற்குள் குழந்தையின் பெற்றோர் உறவினர் அனைவரும் ராதாவிடம் ஓடி வந்தனர்.



“ரொம்ப நன்றி மா....வெறும் நன்றி என்கிற வார்த்தை பத்தாது” என அவள் காலிலேயே விழுந்தாள் குழந்தையின் தாய்.



அய்யோ என பதறி கிருஷ்ணாவிடம் ஒன்ற அவன் பெருமை பொங்க தன் மனையாளை பார்த்து கொண்டு நின்றான். அனாயாசமாக தன் உயிரை மதிக்காமல் பிறரது உயிரை காப்பாற்றுகிறாளே, இவளை நான் எப்படி காப்பாற்ற போகிறேன்??? மனதிற்க்குள் எண்ணியவன் பாப்பு பத்திரமா எழுந்திருடா என்றான்.



எழுந்து நிற்க முடியாமல் ராதா தடுமாற “என்னடா என்னாச்சு??? அடி பட்ட இடத்தில் அடி பட்டுடுச்சா??” கால்களை ஆராய்ந்தவன் முகத்தை பார்க்க அவள் குறும்பாக அவன் முகத்தை பார்த்தாள், “கொஞ்ச நேரத்தில் பயமுறுத்திட்ட.... நம்ம பிளான் படி வெளிய போலாமா இல்லை வீட்டுக்கே போய்டலாமா??””



“வெளியவே போகலாம்”



அனைவரிடமும் சொல்லிவிட்டு பழையபடி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர் இருவரும். ராதாவின் வாழ்கையில் ஒரு மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. மணாளனுடன் தன் கனவு பயணத்தை வெகுவாக ரசித்தாள். காற்றை கிழித்து கொண்டு தன் கணவன் வண்டியில் செல்வது கோடையிலும் குளு குளு குளிரில் செல்வது போல இருந்தது அவளுக்கு...அவள் கேட்டதை தனக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி கொடுத்து கிருஷ்ணாவும் ரசித்தான். வீட்டிற்க்கு சென்றதும் அவனிடம் பேசி அவனை அசத்த வேண்டும் அவனை விட்டு இருக்க முடியாது என்னும் முடிவுக்கு வந்தாள் ராதா.



அவர்கள் வீடு திரும்ப இரவு எட்டு மணி ஆகிவிட கிருஷ்ணா அங்கேயே தங்கினான். கிருஷ்ணா வண்டியை விட்டு தாத்தாவிடம் பேசி கொண்டு இருக்க இவள் வேகமாக தங்கள் அறைக்குள் வந்தாள். அவன் உடன் இருக்கும் போது தனக்கு பேச்சு வந்ததை எப்படி கூற வேண்டும் என்று மனதிற்க்குள் பல கற்பனைகளை கொண்டு வந்தாள். தான் பேசினால் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவான் எண்ணி மனதிற்க்குள் நினைத்து பார்த்து கொண்டாள். அவன் வருவதற்க்குள் மாற்று உடையுடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டு கண்ணாடியில் மெதுவாக “மாமா” என்று அழைக்க அந்த ஓசையே அவளுக்கு தித்திப்பாக இருந்தது. களைப்பு தீர குளித்து விட்டு நைட்டியுடன் வெளியே வந்தாள்.



“பாட்டி நாங்க வெளிய சாப்பிட்டோம் வெறும் பால் மட்டும் போதும்” என்றபடி கிருஷ்ணா தங்கள் அறைக்குள் நுழைந்தான்.



“சரிப்பா ராதாகிட்ட கொடுத்து அனுப்புறேன் ரூம்ல இரு”



கிருஷ்ணா உள்ளே நுழைய ராதா கண்ணாடியின் முன்னே நின்று மாசுமரு இல்லாத முகத்தை துடைத்து பொட்டை வைத்தாள். அவள் முகம் என்றும் இல்லாத ஆனந்தத்தில் மலர்ந்து இருக்க “என்ன பாப்பு முகம் செம்ம ப்ரைட்டா இருக்கு” அருகில் வந்தவன் அவள் அழகில் மயங்கி அப்படியே பின்னிருந்து அணைத்தான். அவளது கழுத்து வளைவில் தன் இதழ்களை பொருத்த ராதா கண்களை மூடி நின்றவள் என்றுமில்லாத உணர்வுகளுக்கு ஆட்பட்டாள். அவளது வெட்கம் என்னும் நெய் அவனது தாப நெருப்பை தூண்ட இருவரும் வேறு உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்.



“அத்தை அத்தை என்ன பண்றீங்க....கொஞ்சம் சீக்கிரம் வாங்க” வெளியே சிவகாமியின் குரல் கேட்க சட்டென்று ராதா கண்களை திறக்க கண்ணாடியில் அவர்களது உருவத்தை பார்த்தவள் “வேண்டாம் நான் மாமாவுக்கு வேண்டாம்” மனதிற்க்குள் கூறிக்கொண்டே மறுபடியும் தன் கூட்டிற்க்குள் அடைந்து கொண்டாள். மெதுவாக அவனை விடுவிக்க அவள் வெளியே கை காண்பிக்க அப்போதுதான் சிவகாமியின் பேச்சு குரல் கேட்டு, ஒரு இனிய கனவு கலைந்த எரிச்சலுடன் அவன் குளிக்க சென்று விட்டான்.

ராதாவுக்கு சிவகாமியின் விஷ பேச்சுக்கள் ஞாபகத்தில் வந்து பாடாய் படுத்தியது.



“என்னம்மா?? இவ்ளோ அவசரம்” பாட்டி



“ஒண்ணுமில்லை அத்தை இங்க புது வண்டி நிக்குதே யாரோடது???”



“நம்ம கிருஷ்ணா வந்து இருக்கான் அவனோடது...”



“ஒஹ்....அப்படியா வண்டி புதுசா இருந்ததும் நம்ம வீட்டுக்கு யாரு புதுசான்னு பதறிட்டேன்”...(நாங்க நம்பிட்டோம்மா)



“அது சரி நீ என்ன இந்த நேரத்துல இங்க”



வைஷு மாமியார் வீட்ல சீக்கிரம் கல்யாணம் வசுக்கலாம்னு சொல்றாங்க அதுதான் உங்களை கேக்கலாம்னு வந்தேன்.



“அதுக்கு இவ்ளோ நேரத்துல வரணுமா?? காலைல நிதானமா பேசிக்கலாம் காபி சாப்பிட்டு கிளம்பு இல்லை டிபன் சாப்பிடுறியா??”

“அதெல்லாம் வேணாம் அத்தை நான் காலையிலே அவர் கூட வரேன்.”



“ராதாம்மா வந்து இந்த பால் கொண்டு போ”



சிவகாமி சென்றதை உறுதி படுத்தி கொண்டு மெல்ல வெளியே வந்தாள் ராதா. அவரை பார்க்கவே அஞ்சினாள்.



பால் எடுத்து கொண்டு ரூமுக்கு வந்தவள் முகம் சற்று முன் இருந்த மலர்ச்சியை தொலைத்து இருந்தது. கட்டிலில் வாட்டமாக அமர்ந்திருக்க, குளித்து விட்டு வந்த கிருஷ்ணா அவளருகில் வந்து தலையை உதற நீர் துளி மேலே பட்டு சற்றென்று விழித்தாள்.



என்ன பாப்பு பயந்துட்டியா??



“இல்லை”



கொஞ்ச நேரத்திற்கு முன்பு இருந்த முகம் இது இல்லையே....என்ன ஆனது?? இவள் மனதில் என்னதான் ஓடுகிறது??? ஒன்னும் புரியலையே??



“என்னடா திடீர்னு டல்லா இருக்க?? உடம்பு டயர்ட்டா இருக்கா”



“ஆமாம்”



சரி இந்தா இதை குடிச்சுட்டு படுத்துக்கோ...



ம்ம்ம் சரி....



பப்பு குட்டி நீ பேச ஆரம்பிச்சா போதும் உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் மாமா வெளிய கொண்டு வந்துடுவேன். குளிக்க உள்ளே போனபோது எப்படி இருந்த??? வெளிய ஆசையாய் வந்தா டல்லா இருக்க...உடம்பு முடியலையா...மனசுக்குள்ள எதையோ வச்சுக்கிட்டு சங்கடப்படுரியா??? மாமன் அறிவுக்கு ஒன்னும் எட்டலையே??? உன்னை பத்திரமா பார்த்துக்கணும்னு தெரியுது ஆனா எப்படின்னு தெரியலையே?? கடவுளே எனக்காக பாப்புவை சீக்கிரம் பேச வச்சுடு....ப்ளீஸ் மனதிற்க்குள் கடவுளிடம் வேண்டி கொண்டு இருந்தான்.



கண் மூடி படுத்தவள், கண்ணில் முட்டி கொண்டு வந்த கண்ணீரை அடக்கியபடி கண்ணாடியில் தெரிந்த அவர்கள் உருவத்தை நினைத்து பார்த்து கண் கலங்கினாள். “மாமாவுக்கு நான் மேட்ச் இல்லை....நான் வேண்டாம் அவங்களுக்கு, எனக்கு பேச வந்தது தெரிஞ்ச என்கிட்டேபேசினா நான் எல்லாத்தையும் சொல்லிடுவேன்....வேண்டாம் பேசுறது தெரிய வேண்டாம்” தான் முன்பு எடுத்த முடிவுகளில் தீவிரமானாள். கடவுளே எனக்கு பேச்சு வந்தது மாமவுக்கு தெரிய கூடாது....நானே கூட உளறிட கூடாது என்று அவசரமாக இவள் ஒரு வேண்டுதலை கடவுளிடம் வைத்தாள்.



கடவுள் என்னதான் செய்வார்???

தொடரும்....
 
Status
Not open for further replies.
Top