All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

Status
Not open for further replies.

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 18



ராதா கல்லூரி செல்ல ஆரம்பித்தாள். தன் மாமாவுடன் பேசாமல் யாருடனும் பேச அவளுக்கு விருப்பம் இல்லை, அதனால் தனக்கு பேச்சு வந்ததை யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டாள்.

அவளது கல்லூரிக்கு மும்பை மற்றும் பெங்களுருவில் இருந்து பெரிய நிறுவனங்கள் ஆடை வடிவமைப்பாளர் பணிக்காக நேர்முக தேர்விற்காக வந்திருந்தனர். ராதாவால் பேச முடியாவிட்டாலும் அவளது ஆடை வடிவமைப்புகள் அவளுக்காக பேசியது. அனைவரும் எதிர்பாராத விதமாக அவளுக்கு இரு நிறுவனங்களில் வேலைக்கான உறுதி அளிக்கப்பட்டது. கடைசி செமஸ்டர் பரிட்சை முடிந்ததும் அவள் சேரும்படி பணி நியமன உத்தரவு கொடுக்கப்பட்டது. அவளுடன் நிறைய பேர் வந்து பேசி நட்பு பாராட்டினர். உடனே இதை கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்ள துடித்தவள் வேண்டாம் தன் திட்டத்திற்கு அது எதிராக முடியும் என்று மறைத்து விட்டாள். வழக்கம் போல டைரி எழுதவதும் அதில் கிருஷ்ணாவுடன் உரையாடுவதும் என அவளது வாழ்கை சென்றது.

கிருஷ்ணாவிற்கு அவளுடன் இருக்க வேண்டும் என்று இருந்தாலும் அவனது வேலை தடை செய்தது. தன் தொழிலை விரிவுபடுத்தி கொண்டு இருந்ததில் அவனுக்கு ஊருக்கு வந்து செல்ல நேரம் கிடைக்கவில்லை.

இரவு நேர வீடியோ அழைப்பில் பல நாட்கள் ராதாவிடம் பேசி கொண்டு இருக்கும் போதே உறங்கி விடுவான். அவளுக்கும் இதுவே நிம்மதி அளித்தது, வெகு நேரம் பேசி தன் ரகசியம் உடைந்து விட அவளுக்கு விருப்பம் இல்லை.



வீட்டு பெரியவர்கள் அனைவரும் ஜோதிடரிடம் இரு திருமணத்திற்கு நாள் குறிக்க சென்றனர்.

வாங்கம்மா எப்படி இருக்கீங்க???

நல்லா இருக்கோம் சாமி, தனம் பாட்டி சுருக்கமாக தன் வீட்டில் தடாலடியாக நடந்த இரண்டு திருமணத்தையும் கூறி மேலும் என்ன செய்வது என கேட்டார்.

முதலில் வைஷ்ணவி ஆகாஷ் ஜாதகத்தை பார்த்தவர்.....ம்ம்...தடாலடியா நடந்தாலும் ரொம்ப நல்லா பொருந்தி இருக்குமா வர ஜூன் மாசம் முன்னாடி இந்த கல்யாணத்தை முடிச்சுடுங்க...ஏன்னா அதுக்கப்புறம் குருபலன் போய்டுது....

“சாமி அவர் கட்டின மாங்கல்யத்தை என்ன செய்றது???....”

“ம்ம்....முஹுர்த்ததுக்கு முன்னாடி அவங்க எந்த கோவில்காக வேண்டி இருந்தாங்களோ அங்கே போய் உண்டியலில் செலுத்திட்டு உங்க வழக்கப்படி கல்யாணத்தை நடத்துங்க....ஒரு குறையும் வராது குழந்தைகள் நல்ல இருப்பாங்க...”

வைஷ்ணவி ஆகாஷ் திருமணத்திற்கு நாள் பார்த்து குறித்தனர். வைஷ்ணவியின் பரீட்சை முடிந்து ஒரு வாரத்தில் திருமணம் முடிவு செய்ய பட்டது. சிவகாமி மகளுக்காக மேலும் பல சந்தேகங்களை கேட்டு தெளிந்து கொண்டார்.

அடுத்ததாக ராதா கிருஷ்ணா ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்.....””மலர்ச்சியுடன் நான் அன்னைக்கே சொன்னேன் இல்லமா ரொம்ப அருமையான பொருத்தம் இவங்களோடது...இரண்டு பேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் வாழ்வாங்க இவங்க வாழக்கை மத்தவங்களுக்கு உதாரணமா இருக்கும். இது கடவுள் போட்ட முடிச்சு......ம்ம் ஆனா இன்னும் ஒரு வருடம் கழித்து இவங்க திருமணம் நடக்கணும் அப்போதான் ரெண்டு பேருக்கும் குரு பலன் வருது என்றார். அதுவும் அவர் முதல்ல கட்டிய மாங்கல்யத்தை உங்க குல தெய்வம் கோவிலில் செலுத்திட்டு அங்கேயே திருமணத்தை முடிச்சுடுங்க ரொம்ப சிறப்பா இருப்பாங்க” என்றார்.

ராதாவின் உடல்நிலை குறித்து கேட்க, “அதெல்லாம் தானா சரியாகிடும் கவலைபடாதீங்க... வாரம் செவ்வாய்கிழமை துர்கைக்கு விரதம் இருந்து நெய் தீபம் போட சொல்லுங்க எல்லாம் சரியாகிடும்” என்றார்.

பெரியவர்கள் ஒரு மனதாக இரு திருமணத்திற்கும் நல்ல நாட்களை குறித்து கொண்டு வந்தனர். முதலில் வைஷ்ணவி ஆகாஷ் திருமணம் என்பதால் அதற்க்கான ஏற்பாடுகள் குறித்து பேசி கொண்டே வீட்டிற்க்கு வந்தனர். ஆகாஷ் வீட்டினர் முதலில் அவர்கள் ஊரில் திருமணம் முடித்து விட்டு இங்கே வரவேற்பு வைப்பதாக இருந்தனர். ஆனால் ஜோதிடர் அறிவுரைப்படி அவர்கள் வேண்டுதல் நிறைவேற்ற வேண்டிய கோவிலுக்கு அருகிலேயே திருமண வைத்து பின்பு ஊரில் பெரிய அளவில் வரவேற்பு என தங்கள் திட்டத்தை மாற்றினர்.



ஆகாஷ் இப்போதுதான் வைஷ்ணவியிடம் ஒருவாறு போனில் பேச ஆரம்பித்து இருந்தான். பொதுப்படையாக பேசினான், ஆனால் நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்தை அம்மா என்பவளை என்ன செய்வது....எனினும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக முயன்று கொண்டு இருந்தான்.





அன்று இரவு உணவுக்கு பிறகு அனைவரும் ஹாலில் அமர லஷ்மி பாட்டி கிருஷ்ணாவிடம் அவர்களது திருமண நாளை சொல்ல கிருஷ்ணா தாம் தும் என குதித்தான்.

“இதெல்லாம் அநியாயம் பாட்டி.....ஆகாஷுக்கு மட்டும் சீக்கிரம் எனக்கு மட்டும் ஒரு வருஷம் கழிச்சு....செல்லாது செல்லாது”...என குதிக்க...வீடே அவனை பார்த்து சிரித்தது.

அனைவரது சிரிப்பையும் அலட்சியப்படுத்தியவன் பாட்டியிடம் சென்று,

“இதெல்லாம் அராஜகம் பாட்டி, எங்க கல்யாணம் எப்பவோ முடிஞ்சாச்சு, நியாயமா அவ இங்கதான் இருக்கணும் நீங்க செய்வது கொஞ்சமும் சரியில்லை” என்று கோபமாக குமுறினான்.

அவனது கோபத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு “பெரியவங்க சொல்றபடி நடக்கணும்” என்றார்.

“ப்ளீஸ் பாட்டி சீக்கிரம் நடக்க வேற வழி இல்லையா??”

“இல்லை” என்று பாட்டி தலையசைக்க...

“பாவம் பாட்டி ராதா, அவளால பேசவும் முடியல, என்னாலும் முன்ன மாதிரி அவளை போய் பார்க்க முடியல, நிறைய நாள் அவ கூட பேசிகிட்டு இருக்கும் போதே தூங்கிடுறேன், அவ கண்ல ஒரு சோகம் எப்போவும் இருக்கு, காரணம் சொல்ல வேண்டியவ பேச முடியாம இருக்கா, சில நேரம் யாருக்காக இப்படி உழைக்கனும்னு சோர்வா இருக்கு” கலங்கிய பேரனை அருகில் அழைத்து தன் மடியில் படுக்க வைத்து கொண்டவர் அவன் தலையை மெல்ல கோதியபடியே....”கண்ணா வாழ்கைல நாம நினைக்கிறதெல்லாம் நினைக்கிற நேரம் நடந்துடாது. உலகத்திலேயே சிறந்த செல்வம் திருப்தி, சிறந்த குணம் பொறுமை....சாரதாதேவி சொல்லி இருக்காங்க....பெரியவங்க ஒரு விஷயம் சொன்னா அது கண்டிப்பா உன்னோட நல்லதுக்குத்தான், ஆனா இப்போ சொல்றது உனக்கு மட்டும் இல்லை உன்னோட ராதாவோட நல்லதுக்கும் தான்..புரிஞ்சிகோடா...உனக்கு எல்லாம் நல்லதா நடக்கும் தேவை கொஞ்சம் பொறுமை அவ்ளோதான்.....உனக்கு மட்டும் இல்லை இனிமே ராதாவுக்காகவும் நாங்க எல்லாரும் இருக்கோம்.” பாட்டியின் வருடலோ வார்த்தையோ கிருஷ்ணாவின் மனதை சாந்தபடுத்த அப்படியே உறங்கினான்.
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“என்ன லஷ்மி ரொம்ப அடம் பிடிக்கிறான்??” தாத்தா

“எல்லாம் உங்க குணம் தான் என்ன செய்ய??” தாத்தாவை கிண்டல் செய்தவர் பேரனின் பக்கத்திலேயே படுத்து கொண்டார்.

இந்த பாச காட்சியை பார்த்து அவரவர் படுக்க சென்றனர்.

அடுத்த நாள் தனம் பாட்டி ராதாவிடம் அவர்களது திருமண தேதி பற்றி சொல்ல, ம்ம்ம் என அமைதியாய் கேட்டு கொண்டாள். இப்போதெல்லாம் இடையில் இருந்த உற்சாகம் குறைந்து அவள் பழைய மாதிரி மாறி விட்டதை உணர்ந்தார் தனம் பாட்டி. ஆனால் இந்த நேரத்தில் கிருஷ்ணாவிடம் சொல்லி அவனை கலவரப்படுத்த அவர் விரும்பவில்லை. அவனது வேலை பளுவை அவரும் உணர்ந்து இருந்தார். அவளிடம் செவ்வாய்கிழமை விரதம் இருந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல, சரி என்று தலை ஆட்டி கொண்டாள்.

கிருஷ்ணாவை அழைத்தவர், “நேரம் கிடைச்சா நைட் தங்கலனாலும் பரவாயில்ல வந்துட்டு போப்பா..”

“ஏன் பாட்டி எதாவது பிரச்சனையா???”

“இல்லைப்பா...ராதா ரொம்ப சோர்ந்து தெரியுறா....அதான் ஒருவேளை உன்னை பார்க்காததால் இருக்குமோனு நினைச்சேன் வேற ஒண்ணுமில்லை...முடிஞ்சா ஒரு எட்டு வந்துட்டு போப்பா..நாங்களும் உன்னை பார்த்து நாள் ஆச்சு.”

“சரி பாட்டி..”

ராதா என்னென்னவோ முடிவுகள் எடுத்து விட்டாள், ஆனால் அவள் முடிவுகள் அவளை கிருஷ்ணாவிடம் இருந்து தள்ளி வைக்க தன் முடிவுகளை வெறுத்தாள் முடிவில் தன்னையே வெறுத்தாள். கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த அரிய பொக்கிஷம் கைக்கு கிடைத்து அதை விட்டு விட போகிறேனே என்று நினைத்தவள் கண்களில் கண்ணீர் ஊற்றாய் பெருக அமைதியாய் படுத்து வழக்கம் போல அந்த பொம்மையை கட்டி கொண்டாள். நம் தலை எழுத்து இதுதான் என்று அழுதவள் அப்படியே உறங்கினாள்.

அப்படியே அந்த வாரம் கல்லூரி வீடு என்று சென்றது ராதாவிற்கு....அவளது மனநிலையை மாற்ற வீட்டிலும் நிறைய டிசைன்ஸ் வரைந்து வைக்க ஆரம்பித்தாள், எப்போதும் எதாவது வேலை தனக்கு இருக்கும்படி பார்த்து கொண்டாள்.

சிவகாமி வைஷுவின் திருமணத்தால் மிகவும் பிஸியாக இருந்தார். அதனால் ராதாவிற்கு சற்றே நிம்மதி கிடைத்தது. இருந்தாலும் அவ்வப்பொழுது எதாவது கூறுவார்.

“அத்தை...இந்த ட்ரெஸ் பாருங்களேன் வைஷுவுக்கு போட்டா நல்லா இருக்கும். அதுக்குத்தான் உடம்பு ஒல்லியா அழகா இருக்கணும், அப்போதான் எப்படி வேணா ட்ரெஸ் பண்ணலாம். புருஷன் கூட வெளியில போகும் போது நல்லா இருக்கும்.”

குண்டா இருக்கவங்க கூட சரியா டிரஸ் பண்ணா தங்களை அழகா காட்ட முடியும் என்று கத்த வேண்டும் போல தோன்றும் ராதாவிற்கு. அடுத்த நொடியே ச்சே இவர்களுக்காக என்னுடைய நிலை தாழ்த்தி பேச மாட்டேன் என்ற முடிவுக்கு வருவாள். நான் எடுத்த முடிவு என் மாமாவுக்காக அவர் நல்லா இருக்க, இவர்கள் பேசுவது எல்லாம் எனக்கு தேவை இல்லாத விஷயம் என்று அவளுக்கு அவளே அறிவுரை கூறி கொள்வாள். (குண்டு செல்லம் இதெல்லாம் தெளிவா இருக்கடா நீ....)

அந்த வார இறுதியில் கிருஷ்ணா வர, ராதா அனைத்தும் மறந்து விட்டாள். கிருஷ்ணாவை பார்த்ததும் அனிச்சையாய் முகம் மலர்ந்தது.

“வாங்க மாமா” என்று அழைத்தவள், உள்ளே தண்ணீர் கொண்டு வர சென்றாள்.

“வா கிருஷ்ணா...ரொம்ப சிரமப்படுத்திடேனா?? இப்போதான் அவ சிரிச்சு பார்க்கிறேன்” பாட்டி

அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் எனக்கும் அவளை பார்க்க ஒரு சான்ஸ் சொல்லி சிரித்தான்.

அதற்குள் ராதா தண்ணீர் கொண்டு வர, “ராதா கிருஷ்ணா குளிக்க டவல் எடுத்து கொடு அசதியா இருக்கும், நான் டிபன் எடுத்து வைக்கிறேன்” பாட்டி

“சரி பாட்டி” என்று தன் அறைக்குள் நுழைந்து அவனுக்காக அனைத்தையும் எடுத்து வைத்தவளை பின்னிருந்து அணைத்தான் கிருஷ்ணா “மிஸ் யூ கண்ணம்மா....மிஸ் யூ அ லாட், எப்படிடா இருக்க??” என்று வாய் பேசினாலும் கை தன் வேலையை ஒரு பக்கம் செய்ய, ராதா வெட்கத்தில் நெளிந்தாள், அவனது கையை விடுவிக்கும் முயற்சி அனைத்தும் வீணானது. அவனது முரட்டு கரம் நகரவே இல்லை. “சொல்லு செல்லகுட்டி”.

“என்ன சொல்லணும்??”

“நீயும் என்னை மிஸ் பண்ணேன்னு சொல்லணும்....எல்லாமே நானே சொல்லி கொடுக்கணும்னா எப்படி பாப்பு” என்று மேலும் அவளை சிவக்க வைக்க, அவன் வார்த்தையின் பொருள் புரிந்து ராதா தலை குனிந்தாள்.

“ம்ம்..நானும் ரொம்ப மிஸ் பண்ணேன்.” என்றாள் பாடம் போல.

என்னது சின்ன பிள்ளைங்க திருப்பி சொல்ற மாதிரி சொல்ற ஒரு பீலிங்க்ஸ் இல்லாம இது சரி வராது இரு பாட்டியை கூப்பிட்டு நியாயம் கேட்போம்.

பாட்டி என அவன் குரல் கொடுப்பதற்குள் தன் கைகளால் அவனது வாயை மூடினாள். பஞ்சு போன்ற மெத்தென்று இருந்த கைகளுக்கு முத்தம் கொடுக்க சட்டென்று கைகளை எடுக்க தன் கையால் அவள் கைகளை பற்றி நிறுத்தி தன் முத்த ஊர்வலத்தை தொடங்கியவன் அவளது இதழ் நிறுத்தத்தில் நிதானமாய் நிறுத்தினான். அவள் தனக்கு விதித்து இருந்த கட்டுபாடுகள் தளர்ந்து போக அவனது காதல் ஊர்வலத்தில் தன்னை இணைத்து கொண்டாள்.

“ராதா கிருஷ்ணாவை சாப்பிட கூப்பிட்டு வா” பாட்டியின் குரல் கேட்டு பதறி விலகினாள் ராதா.

“ப்ச்...சாப்பிட்டு வந்து உன்னை கவனிக்கிறேன்”...என்றவன் குளிக்க சென்றான்.

குளித்து முடித்து வர, தொலைபேசி சிணுங்க அவனது பாட்டி அழைத்தார்.

“என்ன பாட்டி?”

பத்திரமா போய்டியா??

“இதை கேக்க போன் பண்ண மாதிரி தெரியலையே...என்ன விஷயம் நேரா சொல்லுங்க...”

அது வந்து, கல்யாணம் முடியற வரைக்கும்....என அவர் இழுக்க அவரது வாக்கியத்தின் பொருள் புரிந்து கோபம் தலைக்கேறினாலும் அமைதி காத்தான்.

அவனது அமைதியில் அவனுக்கு புரிந்ததை தெரிந்து கொண்ட பாட்டி போனை வைத்தார்.

இரவு உணவு முடித்து அவர்கள் அறைக்கு வந்தனர். கட்டிலில் படுத்தவன் ராதாவை அருகில் அழைத்தான்.

“பாப்பு இங்க வாயேன்”

என்ன??

“என் பக்கத்துல உட்கார்....”

உனக்கு எதாவது பிரச்சனையா???

அவனது நேரடி கேள்வியில் அதிர்ந்தவள் சட்டென்று சுதாரித்து “ஒண்ணுமில்லை” என்று தலை அசைத்தாள்.

அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கி கொண்டவன் “பாப்பு எதுவா இருந்தாலும் சொல்லு மாமாவுக்கு ஊரில் நிறைய வேலைடா அதான் உன்னை வந்து பார்க்க முடியலை..வேற ஒண்ணுமில்லை..மாமா எப்போவும் உன் மாமாதான்...சரியா??” சிறு குழந்தைக்கு கூறுவதை போல கூறியவன் சரி படுத்துக்கோ என்று நகர்ந்து அவள் படுக்க வழி விட்டான். பாட்டியின் எச்சரிக்கை, பயண களைப்பு, வேலை பளு அணைத்தும் சேர்ந்து உறங்கி விட்டான்.

சரி என்று தலை ஆட்டியவள், அமைதியாக அவன் அருகில் படுத்து கண் மூடி கொண்டாள். எங்கே இன்னும் கொஞ்சம் நேரம் பேசினால் எதாவது உளறி விடுவோமோ எனும் பயம் அவளுக்கு...

அடுத்த நாள் ஞாயிறு காலை வழக்கம் போல கிருஷ்ணாவிற்கு சீக்கிரம் விழிப்பு வர, பக்கத்தில் அவளது நிலாமுகம் கண்டு மகிழ்ந்தான். அப்படியே அவள் அருகில் சென்று நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். அப்படியே தவறாமல் அவளது குண்டு கன்னத்தில் அழுத்தி முத்தமிட “போங்க மாமா எப்போவும் நீங்க இப்படித்தான்” என்று ராதா சிணுங்க அதிர்ச்சியில் உறைந்தான் கிருஷ்ணா.

தொடரும்....
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வந்துட்டேன் பிரிண்ட்ஸ்.......லீவ் முடிஞ்சதும் கடமைக்காக வந்தாச்சு....அடுத்த UD போட்டாச்சு......உங்க கமெண்ட்ஸ்காக மீ வைடிங்.......
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 19

அடுத்த நாள் ஞாயிறு காலை வழக்கம் போல கிருஷ்ணாவிற்கு சீக்கிரம் விழிப்பு வர, பக்கத்தில் அவளது நிலாமுகம் கண்டு மகிழ்ந்தான். அப்படியே அவள் அருகில் சென்று நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். அப்படியே தவறாமல் அவளது குண்டு கன்னத்தில் அழுத்தி முத்தமிட “போங்க மாமா எப்போவும் நீங்க இப்படித்தான்” என்று ராதா சிணுங்க அதிர்ச்சியில் உறைந்தான் கிருஷ்ணா.


ஒரு வேலை தனது பிரமையோ என நினைத்தவன் அவளை மறுபடியும் முத்தமிட மாமா என் அவள் சிணுங்க, உள்ளுக்குள் உடைந்தான் கிருஷ்ணா.

இவளால் பேச முடிகிறது....எப்போது பேச்சு வந்தது? இல்லை ஆரம்பத்தில் இருந்தே நடிக்கிறாளா?? ஒரு நிமிடத்தில் மனம் உலகை சுற்றி வர மெல்ல எழுந்தான். இத்தனை நாள் சரியாக உறங்காமல் இருந்தவள் இன்று கிருஷ்ணா உடனிருக்க நிம்மதியாக உறங்கினாள்.

மெல்ல அலமாரியை ஆராய்ந்தவன், அவளது டைரியை எடுத்தான்.

“மாமா எனக்கு பேச்சு வந்துடுச்சு...அந்த பாப்பாவை தூக்கும் போது பேச்சு வந்துடுச்சு. ஆனா உங்ககிட்ட பேசாம யார்கிட்டயும் பேச எனக்கு பிடிக்கல...

உங்களை தினமும் மாமா மாமான்னு ஆயிரம் தடவை கூப்பிடனும்னு ஆசையாய் இருக்கு...அதுக்கான தகுதி எனக்கு இல்லைன்னு பெரியம்மா சொல்றாங்க. அவங்க சொல்றதும் ஒரு விதத்தில் சரி தான் பிறந்ததில் இருந்து அதிர்ஷ்டம் கெட்ட பிறவி நான், அம்மா அப்பா இருந்தும் அவங்க பாசம் கிடைக்கல கொஞ்ச நாள்ல அவங்களும் இல்லை..தாத்தா பாட்டி அன்பையும் கண்டிப்பா தான் காட்டுவாங்க....நீங்க என் கூட இருந்த அந்த ஒரு வாரம் என் வாழ்கையின் வசந்த காலம். அதை நினைத்தே என் காலத்தை ஒட்டி இருப்பேன்....அன்னைக்கு எதிர்பாராத விதமா உங்களை காப்பற்ற நான் வந்து உங்களை இந்த பந்தத்துல சிக்க வச்சுட்டேன். அந்த விபத்துல நான் போய் சேர்ந்து இருந்தா ரொம்ப சந்தோஷமா போய் சேர்ந்து இருப்பேன் அதுக்கும் எனக்கு கொடுப்பினை இல்லை. ரித்திக்கா எவ்ளோ அழகா இருக்கா அவளை விட்டுட்டு சூழ்நிலை கைதியா உங்களை என்னை கல்யாணம் செய்து வச்சுட்டாங்க என் பாட்டி, அதுக்கு ரொம்ப சாரி மாமா.....நான் வேண்டாம் உங்களுக்கு...நீங்க எல்லாம் கிடைச்சு நல்லா இருக்கணும் நான் உங்க லைப்ல வந்த என்னோட துரதிர்ஷ்டம் உங்களையும் பிடிச்சுக்கும்.”

ஆங்காங்கே கண்ணீரில் அழிந்திருந்த அந்த பக்கத்தை படித்தவன் கண்களிலும் கண்ணீர்..தன் தேவதையின் மனதை அறியாமல் இருந்த தன் முட்டாள்தனத்தையும், தன்னை புரிய வைக்காத தன் அகந்தையும் அவனை ஒரு வழி செய்தது. அடுத்தடுத்த பக்கங்களை படித்தவன் மேலும் அதிர்ந்தான்.

ராதாவிடம் அசைவு தெரிய டைரியை அதன் இடத்திலேயே வைத்து விட்டு குளியலறை புகுந்து கொண்டான். ஆண் அழகூடாது எனும் இலக்கணம் மீறி கண்ணில் நிறைந்த நீரை ஷவர் அடியில் நின்று மறைத்தான். வெகு நேரம் நின்றவன் “பாப்பு உன்னோட கடந்த கால இழப்புகளை என்னால் திருப்பி தர முடியாது ஆனால் உன்னோட எதிர் காலத்தை சிறப்பா மாற்ற என்னால் மட்டும் தான் முடியும்.” என மனதில் தனக்கு கூறி கொண்டவன் நிறைய பல முடிவுகளுடன் சற்றே தன்னை உற்சாகமாக மாற்றி கொண்டு வெளியில் வந்தான்.

“பாப்பு குட் மார்னிங்”

“குட் மார்னிங் மாமா” என்றவள் அப்போது உளறியதை அறிந்து அதிர்ந்து எழுந்தாள்.

கண்ணாடியில் தலை வாருவது போல நின்று கொண்டு இவளை பார்த்து கொண்டு இருந்த கிருஷ்ணாவிற்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. “பாப்பு குட் மார்னிங்” என்றான் மற்றொருமுறை வேண்டுமென்றே....

இந்த முறை உஷாராக “குட் மார்னிங் மாமா” என்று சைகையுடன் வாய் அசைத்தாள்.

“குட் மார்னிங் செல்லம் குளிச்சிட்டு வா மாமா வெளிய வெயிட் பண்றேன்.”

“ம்ம்ம்....என்றபடி குளியலறைக்குள் நுழைந்தாள். எதாவது உளறி விட்டோமோ???” ஆனா மாமா ரியாக்ஷன் அப்படி இல்லையே....இன்னைக்கு முழுக்க எப்படி தப்பிக்க போறோம்....ராதா ஸ்டடி இன்னைக்கு மட்டும் உஷார்...என்று தனக்குதானே தைரியம் சொல்லி கொண்டாள். (பாப்பு நீ மாட்டி ரொம்ப நேரம் ஆச்சு...)

பாட்டி தாத்தாவுடன் சேர்த்து டிபன் சாப்பிட்டு முடித்தார்கள்.

“பாட்டி இன்னைக்கு நானும் ராதாவும் வெளியில போயிட்டு நைட் வரோம்.”

“சரிப்பா பத்திரம்....”

ராதாவுக்கு பயம் பிடித்து கொண்டது, கடவுளே இவங்க கூட வெளியில போனா எதாவது உளறிடுவோமோ??

“பாப்பு போலாமா??”

“இங்கயே இருக்கலாம் மாமா”

“மாமா சொன்னா பாப்பு கேட்பியா???”

அவளையும் அறியாமல் தலை ஆடியது.

“சீக்கிரம் ரெடி ஆகி வா....சுடிதார்ல...”

அவன் கூறியதை போல தயாராகி வந்தவளை அவன் சென்னையின் ஒரு ஷாப்பிங் மாலுக்கு அழைத்து சென்றான்.

“இங்க எதுக்கு???”

“சும்மா அடிக்குற வெய்யில்ல ஜாலியா ac ல இருக்கலாம்.”

“உனக்கு எந்த ஹீரோ புடிக்கும் தலையா?? தளபதியா???”

“எனக்கு புடிச்ச ஒரே ஹீரோ நீங்கதான்”.....என்றாள் உணர்வுபூர்வமாய்.

“ஏய்....மாமாவை கிண்டல் பண்ற..”

“இல்லை ப்ராமிஸ்”

“சரி உன்னை நம்புறேன்....இங்க எதுக்கு வந்தோம்னா இங்க வந்த ஈசியா பொழுது போகும் உன் கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும் அதுக்குத்தான்...இங்கயே எதாவது படம் பார்த்துட்டு சாப்பிட்டுட்டு நைட் வீட்டுக்கு போகலாம் சரியா??? “

“சரி”...என்றவள் அந்த இடத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள். நிறைய துணி கடைகளுக்கு அழைத்து சென்று காண்பித்தான். “பார் உன்னை மாதிரி டிசைனர்கள் கைவண்ணம் தான் எல்லாம், எனக்கு ஒரு ஆசை உன்னோட டிசைன் வச்சு இதே மாதிரி ஒரு கடை ஆரம்பிக்கணும். அதுக்கு உன்னோட ஒத்துழைப்பு வேணும்...ஒண்ணுமில்லை நிறைய டிசைன் தயார் செய்யணும் எப்படியும் நம்ம கல்யாணம் ஒரு வருஷம் கழித்துதான் அதுக்குள்ள நீ எல்லா டிசைன்சும் ரெடி செய்து வை, நான் சொல்றது புரியுதா???”

எப்படி சரி என்று சொல்வது?? சரி என்று சொல்லி விட்டு மும்பை சென்று விட்டால் தவறில்லையா??? கடவுளே மாமாவிடம் எப்படி பொய் சொல்வது....ராதா திகைத்து நிற்க..

“பாப்பு வா எதாவது சாப்பிட போகலாம் வா”....இவ்வளவு நேரம் பேசியதது தான் இல்லை என்பது போல அவளை அழைத்து சென்றான்.

அதற்கு பிறகு அவளிடம் சிரிக்க சிரிக்க பேசினான், அவளை நிறைய சிரிக்க வைத்தான். அவனது கல்லூரி கால கலாட்டாக்களை கூறி அவன் நிஜ கிருஷ்ணன் என எண்ண வைத்தான். மொத்தத்தில் ராதாவை வேறு எதையும் சிந்திக்க விடவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு அவள் முகம் சற்றே தெளிந்தது போன்று இருந்தது.

இரவு வீட்டிற்க்கு திரும்பியவர்களுக்காக காத்திருந்தார் சிவகாமி, “வாங்க அத்தை” என கூறி விட்டு உள்ளே சென்றான் கிருஷ்ணா.

அவன் உள்ளே சென்றது தாமதம் என அவர் ராதாவை பிடித்து கொண்டார், “உன் லட்சணத்துக்கு என் அண்ணன் மகன் கூட நகர உலா கேக்குதோ?? தினமும் கண்ணாடி பார்ப்பியா இல்லையா?? அவன் தான் கட்டின தோஷத்துக்கு வரான்னா..உனக்கு எங்க போச்சு புத்தி...அவனே வந்து கூப்பிட்டா கூட நீ இனிமே அவன் கூட வெளிய போக கூடாது புரிஞ்சுதா??”

வழக்கம்போல ராதா அமைதியாய் நிற்க, ஏதோ கேட்க வேண்டும் என்று திரும்பி வந்தவன் காதில் சிவகாமியின் சுடு சொற்கள் விழ, சென்று சிவகாமியை எதிர்த்து பேச நிமிடம் ஆகாது அதன் விளைவுகள் நிச்சயம் நல்ல பலனை தராதது மட்டுமின்றி மீண்டும் அவளை தான் தாக்கும் என்பதை யோசித்தவன், இப்படி ஒரு இக்கட்டில் அவளை விட்டு வைக்க வேண்டிய நிலையை எண்ணி அன்றைய தினம் இரண்டாவது முறையாக தன்னுள் நொறுங்கினான்.

“ராதா” என்று குரல் கொடுத்தபடி ஒன்றும் அறியாதவன் போல கிருஷ்ணா வர, அப்பாடி எனும் பெரு மூச்சுடன் உள்ளே சென்றாள்.

“என்ன அத்தை இந்த நேரம்??”

“வைஷு கல்யாண விஷயமா அத்தை கிட்ட பேச வந்தேன்.”

“ஒஹ்...கல்யாண வேலை எந்த அளவில் இருக்கு, எதாவது வேலை இருந்தா சொல்லுங்க டைம் கிடைச்சா செய்யறேன்.”

“இருக்கட்டும் கிருஷ்ணா....நீயே நேரம் கிடைக்காம ஓடிக்கிட்டு இருக்க...நாங்க பார்த்துக்குறோம்...அதுவும் இல்லாம கல்யாணம் ஆகாஷ் வீட்ல பண்றதால நமக்கு வேலை சாமி கும்பிடுவது கடைக்கு போவது அவ்ளோதான், அதுக்கு நல்ல நாள் பார்க்கத்தான் வந்தேன்.” அண்ணன் மகன் தன்னிடம் பேசியதில் ராதாவை மறந்தார்.

ஆனால் கிருஷ்ணா எதையும் மறக்க கூடியவனும் அல்ல...அப்படியே விடுபவனும் இல்லை என்று அவருக்கு அப்போது தெரியவில்லை.



கிருஷ்ணா போனில் பல்ராமுடன் பேசிவிட்டு நாளை ஊருக்கு வருவதாக கூறி வைத்தான்.

இன்றும் அவன் இங்கு தங்குவது ஏன் என்று கேட்க பிடிக்கவில்லை ராதாவிற்கு. அவனது அருகாமை அவளுக்கு தைரியத்தையும், பாதுகாப்பையும் கொடுத்தது அதை ரசிக்க ஆரம்பித்தாள். இவன் உடன் இருந்தால் ஆயிரம் சிவகாமிகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும் என்று நினைத்து கொண்டாள்.

“என்ன மேடம் ரொம்ப யோசனை??? நான் இன்னைக்கு ஒரு நாள் இங்க எக்ஸ்ட்ரா தங்கலாமா?? உங்க ரூம்ல இடம் கிடைக்குமா???”

“போங்க மாமா???” என வெட்க புன்னகை பூத்தாள்.

இன்னும் ஒரு வருஷம் எப்படி வெயிட் பண்றது??? அந்த ஜோசியக்காரர் கைல கிடைச்சா அவ்ளோதான்....மனதிற்குள் கறுவி கொண்டே ராதாவை பார்த்து புன்னகைத்தான்.

“இங்க வா” என கை விரித்து அவளை அழைக்க, ஓடி சென்று அவனை இறுக்கமாய் கட்டி கொண்டாள்.

“பாப்பு நம்ம கல்யாணம் இன்னும் ஒரு வருஷம் கழிச்சுதான் தெரியுமா??”

“ம்ம்ம்...”.

“நீ இப்படி கட்டிகிட்டா என்னால ஒரு நிமிஷம் கூட தாங்க முடியாது...”

ஐயோ நாம எடுத்த முடிவு என்ன...நாம நடந்துகுறது என்ன...”ராதா எருமை உன் மாமாவை பார்த்தால் உன் புத்தி புல் மேயதான் போய்டுமா...அறிவுகெட்டவளே” மனசாட்சியிடம் மண்டகப்படி வாங்கிய பிறகு சற்றே தெளிந்து ஈ ஈ என அசடு வழிந்த படி கிருஷ்ணாவிடம் இருந்து விலகினாள்.

இவளின் முகமாற்றத்தை ரசித்தவன், இவளால் நம்மை விட்டு இருக்க முடியாது எனும் முடிவுக்கு வந்தான்.

“குட் நைட் பாப்பு”


அடுத்த நாள் தானும் அவளுடன் கல்லூரிக்கு கிளம்பினான்.

“நானே போய்டுவேன்??? உங்களுக்கு எதுக்கு கஷ்டம்??”

“எனக்கு உங்க காலேஜ் பார்க்க வரணும் அவ்ளோதான்...”

“ம்ம்ம் சரி”

கல்லூரிக்கு அவளோடு வந்தவன், அவளது வகுப்பு நண்பர்களுடன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான். பெண் தோழிகளிடம் அவன் சாதாரணமாக பேசியதை கூட ராதாவால் பொறுக்க முடியாமல் கிருஷ்ணாவின் அருகிலேயே நின்றாள். அவளை ஓர கண்ணால் பார்த்துக்கொண்டே அவர்களிடம் சிரித்து சிரித்து பேசி ராதாவின் வயற்றெரிச்சலை கொட்டி கொண்டான்.

என்கிட்டே கூட அப்படி பேசல இப்போ என்ன இவளுங்க கூட இப்படி பேச்சு இங்க கூட்டிகிட்டு வந்தது என் தப்பு என ஆயிரமாவது தடவையாக தன்னை குட்டி கொண்டாள்.

“ராதா உன் ஹஸ்பன்ட் செம்ம ஸ்மார்ட்”

இவளுங்களுக்கு என்ன அதனால மனதிற்குள் நினைத்தாலும் வெளியில் ஈ ஈ என சிரித்து வைத்தாள்.

அனைவரிடமும் பேசிவிட்டு, “ஓகே பாப்பு நான் ஊருக்கு கிளம்பறேன். பத்திரமா இருடா...சரியா....”

அவ்வளவு நேரம் இருந்த தைரியம் உற்சாகம் வடிந்து மீண்டும் கூண்டுக்குள் சென்று விட்டாள் ராதா. “ம்ம்ம்” என தலை அசைந்தாலும் முகம் அப்பட்டமாய் அவளது விருப்பமின்மையை காட்டி கொடுத்தது. “மாமா என்னையும் கூட்டிகிட்டு போயிடுங்களேன் இங்க என்னால தனியா முடியல” அவளது கண்கள் யாசிக்க..

“பாப்பு பீ பிரேவ், மாமா எப்பவும் உன் கூட இருப்பேன்.”

“நீங்க இருப்பீங்க நான்தான் ரொம்ப தூரம் போய்டுவேன்.” என மனதிற்க்குள் நினைத்து கொண்டே அவனுக்கு கை அசைத்து விடை கொடுத்தாள்.



தொடரும்..
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 20



நாட்கள் வேகமாக நகர்ந்தது. கிருஷ்ணா வேலை பளு காரணமாக வர ராதாவை பார்க்க வரவில்லை. போனில் உரையாடுவதும் குறைந்தது. இவை ராதாவின் மன ஏக்கத்தை அதிகரித்து அவளது முடிவு சரி தான், ஏதோ நிர்பந்தத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டான் தான் எங்காவது சென்று விட்டால், தன்னை பார்க்காமல் இருந்தால் தன் நினைவு மறந்து அவன் வேறொரு வாழ்க்கைக்கு தயாராகிவிடுவான் என்ற முடிவிற்கு வந்தாள்.

அன்று அவர்களது கல்லூரிக்கு ஒரு சிறிய நிறுவனத்தில் இருந்து காம்பஸ் இன்டர்வியூ செய்ய வந்தார்கள். திருப்பூரில் புதிதாக தொடங்கியுள்ள அவர்களது கார்மெண்ட்ஸ்காக ஆட்களை தேர்ந்தெடுக்க வந்தார்கள்.

வழக்கம்போல ராதா நன்றாகவே இன்டர்வியூ அட்டென்ட் செய்தாள்.

ஹெச் ஆர் “மேடம் உங்க டிசைன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப யுனிக்கா இருக்கு...கண்டிப்பா நீங்க சேர்ந்தீங்கன்னா கம்பெனி பெரிய அளவில் வரும்..அதோட பலன் உங்களுக்கும் இருக்கும். ஆனா??”

என்ன??? என்பது போல ராதா பார்க்க....

மேடம், இது இப்போதான் புதிதா ஆரம்பித்த கம்பெனி அதனால வேலை அதிகம் இருக்கும், நேரம் முன்ன பின்ன ஆகும், சரியா 9 டு 5 வேலை முடியாது, நீங்க கல்யாணம் ஆனவர், உங்க வீட்ல விடுவாங்களா??? உங்களால் உங்க குடும்பத்தை விட்டு வர முடியுமா??

அட இப்படி நாம நினைக்கலையே.....இது தான் நமக்கு வேண்டும் என்று நினைத்தவள் சரி என்று அவர்களது அணைத்து கண்டிஷன்களுக்கும் தலை ஆட்டியவள், தனக்கு பாதுகாப்பாக தங்க இடம் மட்டும் வேண்டும் என்று உறுதி படுத்தி கொண்டாள்.

அன்று இரவு டைரியில் வழக்கம் போல தன் மாமாவுடன் உரையாடி விட்டு தான் திருப்பூர் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக முடிவு எடுத்து இருப்பதை கூறி விட்டு படுத்தாள்.

அவள் இந்த கம்பெனியை தேர்ந்தெடுக்க காரணம் கிருஷ்ணாதான், ஒரு முறை ஏதோ விவாதத்தின் போது அவன், “பாப்பு எப்போவும் பெரிய கம்பெனி விட சின்ன கம்பெனில இருந்து தான் நாம நம்ம வேலைய தொடங்கணும்...ஏன் தெரியுமா???”

“ஏன்???”

“சிறிய கம்பெனில நீ நிறைய விஷயம் கத்துக்கலாம். உன்னோட வேலை மட்டும் இல்லாம முழுமையா அந்த நிறுவனத்தை பார்க்கலாம், உன்னுடைய வேலைக்கு முந்தின நிலை, நீ வேலை முடிச்ச பிறகு என்ன செய்றாங்க, உன்னோட டிசைன்ஸ் நிஜமாக என்னவெல்லாம் செய்றாங்க எல்லாம் தெரிஞ்சுக்கலாம். பெரிய நிறுவனம்னா அது முடியாது, கடிவாளம் கட்டின குதிரை மாதிரி உன்னோட வேலை மட்டும் முடிச்சுட்டு வந்துடலாம், அதுனால நீ வேலைக்கு போகணும்னு முடிவெடுத்தா முதல்ல ஒரு சின்ன கம்பெனில சேர்ந்தா இந்த மாமா சந்தோஷப்படுவேன் சரியா??”

“ம்ம் சரி..”

மாமா எப்பவும் நீங்க சந்தோஷப்படுற மாதிரி நான் நடந்துப்பேன்.

வைஷ்ணவியின் வரவேற்ப்பு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டது, அது முடித்து யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கிளம்பி திருப்பூர் வேலையில் சேர ராதா திட்டம் தீட்டி கொண்டாள்.

வைஷுவின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே ஊரிலிருந்து அனைவரும் வந்துவிட கிருஷ்ணா மட்டும் வரவில்லை.

லஷ்மி பாட்டி, சுமி, கவுசல்யா ராதாவுடன் தங்கி கொண்டனர்.

லஷ்மி பாட்டி, “கண்ணா எப்படிடா இருக்க??”

நல்லா இருக்கேன் பாட்டி...

ராதாவுக்கு கவுசல்யாவின் குழந்தையுடன் விளையாட நேரம் போதவில்லை, மூவரும் அவள் மீது அன்பை பொழிந்தனர், அதை பார்த்த தனம் பாட்டி அழ, அனைவரும் திகைத்தனர்.

ஏன் சம்பந்தி அழறீங்க??

இது மாதிரி ஒரு நாள் கூட என் பேத்திகிட்ட நாங்க அன்பா நடந்துக்கல, மனசுல இருந்த அன்பை வெளியில சொல்லல, நீங்க அவளை இப்படி நடத்தும் பொழுது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று அவர் மேலும் கண்ணீர் விட, ராதாவும் கண் கலங்கினாள். “என்னை மன்னிச்சுடு பாட்டி என்னால் இதை முழுசா அனுபவிக்க முடியாது....இது மாதிரி அழுதுதான் என்னை மாமாவை கல்யாணம் பண்ணிக்க வச்சியா?? வேணாம் பாட்டி மாமா யாராவது நல்ல அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டும்.” மனதிற்குள் மறுகியவள் இவர்களை பிரிய போவதை எண்ணி மேலும் கண்ணீர் விட்டாள்.

“அடடா....பாசமா பேசுறது ஒரு குத்தம்மா??? எடுடா அரிவாளை போடுடா ஒரே போடு” என்று கவுசல்யா குரல் கொடுக்க நிலைமை சகஜமானது.

ராதாவிற்கு வைஷுவின் கல்யாணத்திற்க்கோ, வரவேற்பிற்க்கோ செல்ல துளியும் விருப்பம் இல்லை. எனினும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கவும், தன் திட்டத்தை நிறைவேற்றி கொள்ளவும் இந்த நிகழ்ச்சியை உபயோகப்படுத்தி கொள்ள திட்டமிட்டாள்.

அதற்கு அவள் எடுத்த முதல் முடிவு யார் என்ன சொன்னாலும் ஒரு புன்னகையை மட்டும் சிந்துவது என்பது தான். என் மனதை வருத்தப்பட வைப்பவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்களது சொல்லும் செயலும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.

கிருஷ்ணா திருமணத்திற்கு முந்தைய நாள் வந்தான், வந்தவன் ராதா தன் தாய், பாட்டி, அண்ணி, குழந்தை புடை சூழ இருப்பதை பார்த்து பல்லை கடித்தான். குண்டு பிசாசு மண்டைல மசாலா இருக்கா இல்லையா தெரியலையே....மாமா இத்தனை நாள் கழிச்சு வரானே தனியா இருப்போம்னு இருக்கா....எப்பவும் ஒரு கும்பலோட திரிய வேண்டியது....டேய் எல்லாரும் உங்க ஆளுங்கடா என்று அதட்டிய மனசாட்சியை, எல்லாம் எனக்கு தெரியும் என அதட்டியவன், “ராதா” என்றான் அன்பொழுக.

கண்ணில் ஒளியுடன் நிமிர்ந்தவள் “மாமா” என்று அருகில் வந்தவள் சுற்றி இருப்பவர்களை மனதில் கொண்டு அவன் கையில் இருந்த பையை வாங்கி கொண்டாள்.

“வாங்க மாமா”

“வந்துட்டேன், குளிக்க ரெடி பண்ணு” என்றான் சலிப்பாக

எப்பவும் இப்படி இருக்க மாட்டங்களே, என்னாச்சு ரொம்ப வேலையோ, என யோசிக்க

வா கண்ணா....சீக்கிரம் ரெடி ஆகு நாங்க பக்கத்து ரூம்ல ரெடி ஆகுறோம் நேரம் ஆகுது என்று பாட்டியும் மற்றவர்களும் அடுத்த அறைக்கு நகர்ந்தனர்.

இல்லை பாட்டி இங்கேயே இருங்க என்று ராதா தடுக்க, கவுசல்யாவிற்க்கு சிரிப்பு தாங்கவில்லை.

“ஏன் அக்கா சிரிக்கிறீங்க??”

“கடவுளே உன்னை வச்சுக்கிட்டு தம்பி என்ன செய்ய போறாரோ??”

“என்னை வச்சு என்ன செய்வாரு??”

“ஒண்ணுமில்லைமா ஒண்ணுமில்லை உன் பாடு தம்பி பாடு” சிரித்து கொண்டே ஓடி விட்டாள்.

கவுசல்யாவின் பேச்சை குளியலறையில் கேட்டு கொண்டு இருந்தவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. “அண்ணி கொஞ்சமாவது உங்க தங்கச்சியை தேத்தி விடுங்க....என்ன சொன்னாலும் தேற மாட்டேங்குது, மக்கு என்கிட்டே பேசாம உங்க யார்கிட்டயும் பேச மாட்டேங்குது, இன்னும் என்னென்ன கலாட்டா பண்ணி வைக்க போகுதோ???” மனதிற்க்குள் நினைத்து கொண்டே சிரித்தான்.

வரவேற்ப்பு சிறப்பாக நடந்தது. ராதா ஒரு ஓரமாக இடம் பார்த்து அமர்ந்து கொண்டாள். கிருஷ்ணா சிறிது நேரம் அவள் அமர்ந்தவன் பிறகு மணப்பெண் வீட்டிற்க்கு உதவ சென்றான்.அவ்வப்பொழுது இவளை பார்த்து செல்வது பிறகு வேலை செய்வது என்று நேரத்தை செலவிட்டான்.

கவுசல்யா தங்கள் குடும்பத்தினருடன் பேச குழந்தையை இவள் வாங்கி வைத்து கொண்டாள்.

அடுத்த நாள் திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது. இவளை துன்புறுத்தும் சிவகாமி வைஷு இருவரும் பிஸியாக இருந்ததால் இவள் தப்பித்தாள். மணப்பெண்ணின் அறைக்கு செல்ல சொல்லி கிருஷ்ணா சொல்ல இதோ போகிறேன் என்று அவனுக்கு போக்கு காட்டி விட்டு ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள். வலிய சென்று வாங்கி கட்ட பைத்தியமா என்ன?? ராதா நீ சூப்பர் மா எப்படி எஸ்கேப் என்று அவளுக்கு அவளே பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டாள்.

திருமணம் முடிந்து அடுத்த நாள் மதுரையில் வரவேற்ப்பு அதன் பிறகு மற்ற சடங்குகள் எங்களது பாரம்பரிய வீட்டில் நடக்க வேண்டும் என்று முன்பே முடிவெடுத்து இருந்தனர். எனவே திருமணம் முடிந்து அன்று இரவே ரயிலில் முதல் வகுப்பில் ac கோச் முன்பதிவு செய்யப்பட்டது.

தாத்தா பாட்டி கிருஷ்ணா ராதா நால்வருக்கும் ஒரு கூபே ஒதுக்கப்பட்டு இருந்தது. தாத்தா பாட்டி இருவரும் கீழே படுத்து கொண்டனர். ராதாவும் கிருஷ்ணாவும் மேல படுக்க, மற்ற மூவரும் களைப்பில் உறங்க ராதா மட்டும் தான் மாமாவுடன் இருக்கும் நேரம் குறைந்து கொண்டே வருவதை நினைத்து தூக்கத்தை இழந்தாள்.

“மாமா என்னை மன்னிச்சுடுங்க, ஆனா மறந்துடாதீங்க..கொஞ்ச நாள் கழித்து உங்களை வந்து யாருக்கும் தெரியாமல் பார்த்துட்டு போய்டுவேன். உங்களை பற்றி யார் மூலமாவது எப்படியாவது தெரிஞ்சுக்குவேன். உங்க நன்மைக்காக தான் இந்த முடிவை எடுக்கிறேன்”, மனத்திற்குள் பேசியபடி கிருஷ்ணாவை கண்ணிற்குள் நிரப்பி கொண்டாள்.

மேலும் எதையும் நினைக்க முடியாமல் கண்ணில் கண்ணீர் பெருக எழுந்து கண் மூடி அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து கண் திறந்து பார்த்தால் அவளது அருகில் கிருஷ்ணா அமர்ந்து கொண்டு இருந்தான் இவளை துளைக்கும் பார்வையுடன்.

“பாப்பு என்னாச்சுடா ஏன்டா அழற??” என்று கிசுகிசுப்பான குரலில் கிருஷ்ணா கேட்க

“மாமா” என்று எதுவும் பேசாமல் அவனை கட்டி கொண்டு அதுவரை இருந்த அவளது மன பாரம் அனைத்தும் அழுத்த சேர்த்து வைத்து அழுதாள்.

என்னாச்சு குட்டிமாக்கு??

ஒண்ணுமில்லை???

அப்போ எதுக்கு இவ்ளோ அழுகை??

அவனாலும் அந்த நேரத்தில் கீழே பெரியவர்கள் இருக்க மேலும் கேட்க முடியாமல் போக ராதா கிருஷ்ணாவை கட்டி கொண்டு அழுதவள் கேவி கொண்டே உறங்கியும் விட்டாள்...இப்பொழுது உறக்கம் இழப்பது கிருஷ்ணாவின் முறை ஆனது.



தொடரும்.....
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 21

அடுத்த நாள் இன்முகத்துடன் அணைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்த ராதாவை பார்க்கும் பொழுது நேற்று இரவு தான் கண்டது கனவோ எனும் ஐயம் கிருஷ்ணாவுக்கு எழுந்தது. இரவு பிழிய பிழிய அழுதது என்ன? காலை ஒன்றும் அறியாத பிள்ளை போல எழுந்தது என்ன? இப்பொழுது சளைக்காமல் வேலை செய்வது என்ன? என்று விட்டால் என்ன என்ன பாட்டே பாடியிருப்பான் கிருஷ்ணா.

அவளது டைரியை படித்தது வரை ஓரளவிற்கு அவளை புரிந்தது, ஆனால் அவளது அழுகைக்கான காரணம், பேச்சு வந்ததை மறைத்தது, எதுவும் புரியவில்லை. (கண்ணா கடவுளாலேயே புரிஞ்சிக்க முடியல, நீ எல்லாம் சின்ன பையன்). அவனுக்கு இருந்த தைரியம் எல்லாம் அவளுக்கு வேலை கிடைத்த நிறுவனங்களின் முகவரியை தெரிந்து வைத்து இருந்தது. அவள் வேலையில் திறமை அவன் அறிந்ததே அதை ஒட்டி அவன் பல திட்டங்கள் வைத்திருந்தான். தொழில் கற்று கொள்ள இந்த ஒரு வருடம் அவளுக்கு உதவும் என்று நினைத்தான். அப்படியே அவள் அங்கு சென்றாலும் அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி தெரிந்து கொள்ளலாம், மேலும் அவளுடன் படித்தவர்களின் போன் நம்பரை வாங்கி கொண்டான். எப்படியாவது இந்த ஒரு வருடத்தை கடத்திவிட்டால் அவளை அப்படியே தன் ஊருக்கு கடத்தி கொண்டு வருவது அவனது திட்டம். (கண்ணா திட்டம் போட்ட சரி அதை உன் குண்டு செல்லம் கிட்ட சொல்லி இருக்கலாம்ல..மேடம் வேற திட்டம் வச்சு இருக்காங்க...)

தன் மன்னவனின் மனதை அறியாத பேதை ராதா பழைய பாடாவதி யோசனையுடன் வழக்கம் போல குழப்ப கடலில் நீந்திக்கொண்டு தவறான கரையில் கரை ஏற முடிவெடுத்து விட்டாள். அதன் முதற்படியாக தன் மீது யாருக்கும் சந்தேகம் வராதபடி இன்முகத்துடன் அணைத்து வேலைகளிலும் ஈடுபட்டது.

ஆகாஷின் அம்மாவிற்கு ராதாவை மிகவும் பிடித்து விட்டது. இந்த காலத்தில் இவ்வளவு சுறுசுறுப்பாக ஒரு பெண்ணா?? என மண்டபத்தில் அனைவரையும் ஈர்த்து விட்டாள் ராதா.

திடீரென்று ஆரத்தி தட்டு கொண்டு வர வேண்டியவர் எங்கோ வேலையாக மாட்டி கொள்ள, என்ன செய்வது என்று அனைவரும் விழிக்க, ராதா உடனே பெரிய பேப்பர் தட்டுகளை கொண்டு மண்டபத்தில் இருந்த பூ, தெர்மோகோல், அலங்கார கற்கள், கல் உப்பு, கலர் கோலப்பொடி இவைகளை வைத்து கால் மணி நேரத்தில் 21 தட்டுகளை தயார் செய்தாள். “அட என்ன சமயோசித புத்தி” அனைவரும் அசந்து நிற்க கிருஷ்ணாவின் கண்கள் காதலுடனும் இவள் என்னவள் என்னும் கர்வத்துடனும் தழுவின.கிருஷ்ணாவின் வீட்டினருக்கும் மருமகளை நினைத்து பெருமை தாளவில்லை. சுமி, “ராதா வீட்டுக்கு போனதும் உனக்கு சுத்தி போடணும் ஊர் கண்ணே உன் மேல தான்” ராதாவிற்கு குற்ற உணர்ச்சி அதிகரித்தது நான் எடுத்த முடிவால் பாதிக்க பட போகிறவர் ஆனாலும் மாமாவுக்காக என்று மீண்டும் தன் முடிவை உறுதி செய்து கொண்டாள்.

அப்பொழுது ஆரம்பித்த அவளது வேலை இரவு வரவேற்பு முடியும் வரை தொடர்ந்தது. போட்டோவிற்கு ஏற்றார் போல வைஷுவிற்க்கு புடவை கட்டி விட்டது, மேடை அலங்காரத்தில் மணமக்கள் உடைக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்தது, என்று தன் திறமையையும் அழகுணர்ச்சியையும் வெளிப்படுத்தி கொண்டு இருந்தாள். இவ்வளவு வேலைக்கு நடுவிலும் அவளது புடவை நேர்த்தியாக அவளுடன் பொருந்தி வாடாத புன்னகை அவளை மேலும் எழிலாக்கி காட்டியது.

சிவகாமிக்கு ராதாவை அனைவரும் புகழ்வது எரிச்சலாக இருந்தாலும் தன் மகளின் வரவேற்ப்பு என்று அமைதி காத்தார்.

“ராதாம்மா சாப்டியாம்மா?” ஆகாஷின் அம்மா அன்பொழுக கேட்டார்.

“இல்லை” என்றாள் ராதா.

ஒஹ் நீ உன் மாமா கூட தான் சாப்பிடுவ இல்ல?? அவர் கிண்டல் அடிக்க

“ஆமாம்” வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள்.

கவலை படாதே அடுத்த வருஷம் உன் கல்யாணத்துல இந்த அத்தை எல்லா வேலையும் உனக்காக செய்யறேன் சரியா??

மாமாவை விட்டு செல்ல போகிறோம் அவனுடன் இருக்கும் நேரம் குறைந்து கொண்டே வருவதில் கவலையாக இருக்க, நடக்காத திருமணத்திற்கு வேலை செய்ய போவதாக ஒருவர் சொல்ல மனம் சொல்ல முடியாத வேதனையில் தவிக்க சட்டென்று கண் கலங்கினாள் ராதா.

ஏன்மா கண் கலங்குற உனக்கு நான் அத்தை முறை என்றாலும் நீ எனக்கு மகள் மாதிரி தான்..

இந்த வார்த்தையை கேட்டவள் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. தனக்கு அம்மான்னு ஒருவர் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும் ஏன் தனக்கு இல்லை...அதே நேரம் சரியாக “நீ ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ” என தொடங்கி சிவகாமி கூறியது அனைத்தும் நினைவிற்கு வர கழிவிரக்கம் மிகுந்து கண்ணில் வலி தெரிந்தது.

தூரத்தில் எப்போதும் இவள் மேல் ஒரு கண் வைத்திருந்த கிருஷ்ணா அருகில் வர, அட கிருஷ்ணா வந்துட்டியா, நீ என் மக மாதிரின்னு சொன்னதுக்கு அழறா???

ஒண்ணுமில்லை ஆன்ட்டி கொஞ்சம் எமோஷனலா ஆகிட்டா என அவளை தனியே அழைத்து சென்றான்.

ஏன் பாப்பு பொசுக்கு பொசுக்குன்னு அழற, நேத்து நைட் அப்படி ஒரு அழுகை, இப்பவும் அழற எதாவது மனசுல வச்சுக்கிட்டு கஷ்டப்பட்ரியா?? இந்த மாமாகிட்ட எதுவும் சொல்ல கூடாதா?? அவளை பார்த்து கூர்மையாக கேட்க, என்ன சொல்வதென்று ராதா கையை பிசைந்து கொண்டு நிற்கும் நேரம் சரியாக கவுசல்யா அங்கு தன் குழந்தையுடன் வந்து சேர்ந்தாள். ராதா நிம்மதியுடன் குழந்தையை வாங்கி கொண்டு கொஞ்ச துவங்கினாள். கிருஷ்ணா எரிச்சலின் உச்சத்தில் இருந்தான், இறைவா அவ வாயை திறக்க வைக்க முடியலையே என்று மனதிற்குள் புலம்பியவன் வெளியில் எதையும் கட்டாமல் நின்றான்.

“ஹப்பா உங்களை பார்த்ததும் நிம்மதி குழந்தையை பார்த்துகோங்க நானும் உங்க அண்ணனும் சாப்பிட்டு வந்துடுறோம்.” கவுசல்யா

“நாங்களும் சாப்பிடல அண்ணி”

“பரவாயில்லை உங்களுக்கு இப்பல்லாம் பசிச்சா தான் தப்பு.” கவுசல்யா

அவளது பேச்சில் ராதாவுக்கு சிரிப்பு மலர்ந்தது. அவளது சிரித்த முகம் கிருஷ்ணாவின் கோபத்தையும் எரிச்சலையும் வெகுவாக குறைத்தது.

“பாப்பு எப்பவும் இப்படி சிரிச்ச முகமா இருக்கணும், நீ அழுதா கண்ணாடி முன்னாடி அழு அப்போதான் உன் முகம் எவ்ளோ கன்றாவியா இருக்குன்னு தெரியும்.” கிருஷ்ணா கூறியதை கேட்டு மேலும் அவள் முகம் மலர்ந்தது.

குழந்தை தன் சேஷ்டைகளால் இருவரையும் வசீகரிக்க இருவரது மனநிலையும் மாறிவிட்டது. சரி பிறகு கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கிருஷ்ணா முடிவெடுக்க, அவளது மனைவி அவனுக்கு அந்த வாய்ப்பை அளிக்க போவதில்லை என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

****************************************************************************************************
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


தமிழ்நாட்டின் ஏழாவது பெரிய நகரம், வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம், ஊரின் பின்னல்ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்ப்பு பெற்றவை, பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான அந்நிய செலவாணியை ஈட்டி தருகிறோம் என்னும் எந்த கர்வமும் இல்லாமல் சூரியன் தன் கதிர்களை திருப்பூரில் விரிக்க ஆயத்தமானான். விடிந்தும் விடியாத அதிகாலை எந்த ஊரிலும் அழகு தான். அது போன்ற ஒரு அதிகாலையில் அலாரத்தின் உதவியின்றி எழுந்தாள் ராதா. வழக்கம் போல எதிரில் இருந்த கிருஷ்ணாவின் போட்டோவிற்கு குட் மார்னிங் வைத்து விட்டு வேகமாக தன் காலை வேலைகளை முடித்தாள்.

தன் வேலை முடித்து ஹாலுக்கு வந்தவள் பேப்பர் படிக்க ஆரம்பித்தாள்.

“குட் மார்னிங் ராதா” குரல் கேட்டு திரும்ப அங்கே புன்னகையுடன் சுஹாசினி நின்று கொண்டு இருந்தாள்.

“குட் மார்னிங்” என பதிலுக்கு தலை அசைத்து விட்டு வேகமாக இருவரும் தங்கள் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் யோகா வகுப்பிற்கு சென்றனர். யோகா முடிந்து நிதானமாக இருபது நிமிடம் நடை பயிற்சியும் முடித்து வீடு திரும்பினர்.

காலை மதிய உணவு இருவரும் சேர்ந்து தயாரித்து முடித்து ஒன்றாக தங்கள் பணிக்கு கிளம்பினர்.

அவர்கள் வேலைக்கு செல்வதற்குள் அவர்களை பற்றி பார்த்துவிடுவோம்.

ராதா திருப்பூர் வரும் போதே அவள் தன் கம்பெனியிடம் கேட்டுகொண்டது போல அவளுக்கு இருப்பிடம் தயாராக இருந்தது. அது கம்பெனிக்கு வெகு அருகில் இருந்தது. ஒரே அறை என்றாலும் பாதுகாப்பாக இருப்பதே நல்லது என அவள் அமைதி காத்தாள். இரெண்டே நாளில் சுஹாசினி அங்கு வந்து சேர அவளுக்கும் இதே போன்ற அறை வழங்கப்பட்டது. பிறகு இருவருமாக இணைந்து கம்பெனிக்கு சற்று தொலைவில் தங்கள் வசதிக்கு ஒரு வீடை வாடகைக்கு எடுத்து கொண்டு இருக்கின்றனர். அருகருகே வீடுகளுடன் பாதுகாப்பும் இருந்ததால் இரு பெண்களும் அங்கே குடி பெயர்ந்தனர். மேலே வீட்டு சொந்தக்காரர் ராணுவத்தில் இருந்து வந்தவர் என்பதால் பயம் இன்றி இருந்தனர். இங்கு வந்த பிறகும் ராதா யாரிடமும் பேசவில்லை, தன் மாமாவிடம் பேசாமல் யாரிடமும் பேச அவளுக்கு விருப்பம் இல்லை எனவே இண்டர்வியூவின் போது இருந்தது போலவே இருந்து கொண்டாள். சுஹாசினியிடமும் அதே சைகை பாஷை தான். இந்த ஆறு மாதத்தில் சுஹாவும் இவளது சைகைக்கு பழகி இருந்தாள்.

இருவரும் சரியான நேரத்திற்கு அலுவலகம் நுழைந்தனர்.

“சரி ராதா லஞ்ச்ல பார்க்கலாம்” சுஹா

“ம்ம் சரி”

“இன்னைக்கும் நான் வந்து கூப்பிடுற மாதிரி இருக்க கூடாது.”

“ம்ம் சரி”

“இந்த மண்டையை ஊருட்டுவதை விட மாட்டியா??”

“ம்ம் சரி”

அதே போல தலை அசைக்க அடி என்று இவள் அவளை அடிக்க ஓடி வர...சாரி கேட்டபடியே தன் அறைக்குள் நுழைந்தாள்.

எப்பொழுதும் போல தன் பர்சில் இருந்த கிருஷ்ணாவிற்கு வணக்கம் சொல்லிவிட்டு தன் டிசைன்களை வரைய தொடங்கினாள். அதன் பிறகு எந்த நினைவும் இன்றி அவளும் டிசைன்களும் ஒன்றி போனார்கள். பதினோரு மணி அளவில் MDயிடம் இருந்து அழைப்பு வர சென்றாள்.

வருன்குமார் MD என்ற பெயர் பலகையின் கீழே கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.

“எஸ் கம் இன்” என்று உள்ளே நுழைந்தவளை தன் கூர்மையான பார்வையால் ஆராய்ந்தான்.

“குட் மார்னிங் சார்”

“குட் மார்னிங் ராதா உட்காருங்க”

“யூ ஆர் டூயிங் எக்ஸ்செல்லேன்ட் ஜாப் (you are doing excellent job)...நீங்க இங்க டிசைனராக வந்த பிறகு நமக்கு நல்ல நிறைய ஆர்டர்ஸ் கிடைக்குது. நம்ம கிளயன்ட்ஸ் கிட்ட நல்ல வரவேற்ப்பு இருக்கு. இன்னைக்கும் புதுசா ஒரு ஆர்டர் வந்து இருக்கு அதற்க்கான தகவல்களை உங்க மெயிலுக்கு அனுப்புறேன் பாருங்க.”

“எஸ் சார்”

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என் பிரன்டோட கல்யாணம் வர ஜூன்ல வருது அதற்கு ரொம்ப வித்தியாசமா சரி டிசைன் பண்ணி தரனும் கொஞ்சம் பர்சனல் கேர் எடுத்து செய்து தர முடியுமா???

“எஸ் சார்” என்று எழுந்தவளை

ஒரு பர்சனல் கேள்வி...”உங்களுக்கு எப்போல இருந்து பேச்சு வரல, நான் எதாவது ஸ்பெஷலிஸ்ட் பார்த்து சொல்லவா???”

அருகில் இருந்த நோட் புக் எடுத்து “நான் ட்ரீட்மென்ட் போய்க்கிட்டு இருக்கேன் சார், சீக்கிரம் சரி ஆகிடும் நான் கிளம்பறேன்” என எழுத

“ம்ம்ம் சரி” என்றான் வருணின் பார்வையில் இருந்தது என்ன ராதாவிற்கு புரியவில்லை.

வருண் அறையிலிருந்து வந்தவள் மீண்டும் வேலையில் முழ்கியவள் மதிய உணவிற்கு சுஹாசினி அழைத்த போதுதான் நிமிர்ந்தாள்.

“தினமும் இதே வேலையா போச்சு....நாளையில் இருந்து நீயா வரணும் புரிஞ்சுதா??” சுஹா

“ம்ம்ம் சரி” ராதா

டிபன் பாக்ஸ் திறக்க “ஏன் ராதா தினமும் இப்படி வெறும் சுண்டலும் பச்சை காய்கறியும் சாப்பிடுற, இந்தா கொஞ்சம் லெமன் ரைசும் உருளை ப்ரை எடுத்துக்கோ??”

வேண்டாம் என மறுப்பாக தலை அசைத்தவள்

காலைல தினமும் எனக்கு ஹெல்ப் பண்ற ஆனா சாப்பிட மாட்டேங்குற?? ஏன்பா?? உனக்கு என்ன பிரச்சனை என்கிட்ட சொல்ல கூடாதா?? என்று சுஹா கேட்க

ஒண்ணுமில்லை என்று சிரித்தபடி தலையசைத்துவிட்டு தனிமையை நாடி தன் அறைக்குள் புகுந்து கொண்டாள். நான் ரசித்து ருசித்து சாப்பிட்ட காலம் போய்விட்டது...இங்கே இருப்பது வெறும் கூடு உயிர் வாழ ஆசை இல்லை...என் மாமாவை விட்டுட்டு அவர் கிட்ட சொல்லாம வந்துட்டேன், அவங்க எப்படி இருக்காங்கன்னு தெரியல கடவுளே என் மாமாவையும் அவங்க குடும்பத்தையும் நல்லா வச்சுக்கோ. மனதிற்க்குள் வேண்டி கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தவள் கண்ணில் அவளையும் அறியாமல் விழி நீர் பெருகியது. மாமா என பக்கத்தில் இருப்பவனை போல கிருஷ்ணாவை அழைத்தாள்.

அதே நேரம் பொன்னேரியில் தன் வீட்டில் ருசியான உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த கிருஷ்ணாவிற்கு புரை ஏற, சட்டேன்று சுதாரித்தவன் தண்ணீர் அருந்தி கட்டுக்குள் கொண்டு வந்தான்.

என்ன கிருஷ்ணா இன்னைக்கும் புரை ஏறிடுச்சா?? நீ சாப்பிடுற நேரத்தை ராதாவுக்கு யார் சொல்றா?? கவுசல்யா கிண்டல் செய்ய

யாரும்மா சொல்லணும் இவனே அவகிட்ட சொல்லிட்டு வந்துதான் சாப்பிடுறானோ என்னவோ?? பாட்டி அசால்டாய் அடிக்க

“இருக்கும் அத்தை, எப்பவும் போனும் கையுமா தான் இருக்கான்.” சுமி கூட சேர்ந்து கொள்ள

அவள் மீது இருந்த கொலைவெறியை வெளியே காண்பிக்காமல் புன்னகை சிந்திக்கொண்டே உணவருந்திகொண்டு இருந்தான் ராதாவின் அருமை கணவன் கிருஷ்ணா. ராதா நீ மட்டும் என் கைல கிடைச்ச என்று நினைத்தவன் கையில் அப்போதைக்கு அகப்பட்ட அப்பளத்தை நொறுக்கினான்.

தொடரும்....
 
Status
Not open for further replies.
Top