All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Wow wow wow wow....ur story is awesome raji mam....first I really got angry on the thenu Character then I realize people are there who doesn’t know how to realize their love...but gowtham character is really no words to say cause such a egoless love that to business tycoon ....ur gowtham character makes me to also fell the pain of love..amazing character u narrated...I want to say hari character also really he is a gentleman and genuine too when he accepts for marriage and break in marriage also....totally ur story is super super super.....
 

தாமரை

தாமரை
ராஜிமா,

கதைக்கு முழுவதும் விமர்சனம் கேட்ருக்கீங்க. சிம்பிளா சொல்லனும்னா லவுலி லவ் ஸ்டோரி. :love::love::love::love:

தேனு கேரக்டர் சராசரி பெண்களின் கனவுகளுடன் வலம் வந்தவள். சினிமா, தொழில் என்று வலம் வரும் ஆண்களை கனவு நட்சத்திரங்களாக கொண்டு கனவு காண்பது, அவர்களை ஒரு தடவையாது சந்திக்க வேண்டும் என்று ஆசை படுவது. அப்படி ஒருவனை சந்திக்க நேர்ந்ததால் அவளையும் மீறி அவள் உணர்வுகள் பேசியது. உலகமே கொண்டாடும் ஒருவன் தன்னை கொண்டாடுவதில் அவள் வானத்தில் பறந்தாள். அதில் அவனின் உண்மை காதல் புரியாமல், திருமணத்திற்கு சம்மதித்தது. எல்லாம். அவனின் உண்மை வாழ்க்கை முறை பார்த்ததும் பயத்தில் அவனை பிரிய முடிவு எடுத்தது என்று எதுவும் அவள் உணர்ந்து பண்ணாமல் போனது தான் விபரீதம்.

பிறகு இங்கு வந்து அவள் வழக்கத்தோடு ஒன்றியபிறகு அவள் தொலைத்தது ஒரு பொக்கிஷம் என்று தெரிய அதை இழந்து விட்டோமே என்று ஒவ்வொரு முறையும் தவிப்பது, ஒரு முடிவோடு அதை சரி செய்ய நினைப்பது, ஆனால் இது எந்த ஒரு இடத்திலும் அவள் குழந்தை தனம் மாறாமல் இருப்பது என்று ரசிக்க வைக்கிறாள்.

கெளதம் ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே என்ட்ரி சாங் போட்டு அவனை காட்டி இருக்கணும் . ஓகே ஓகே நானே போட்டுகிறேன் ராஜிமா. உண்மை காதலை தேடி தோற்றுபோனவன், கடைசியில் அதை தேனுவிடம் கண்டு மயங்கி அவளை தனதாக்கி கொண்டாடுகிறான். இதில் எங்கே அவன் தோற்றுப்போனான் என்பது புதிர் தான். அவனின் இயல்பை அவளுக்காக மாற்றாமல் தனது உள்ளத்து காதலை மட்டும் கடைசி வரை அவளிடம் காட்டி வெற்றி பெறுகிறான்.

அவளை ரசிப்பது, அவளை வெறுக்க முடியாமல் தவிப்பது, அவளை பிரிவது இதில் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் அவளுக்காக எல்லா பழியையும் அவன் மேலே போட்டு கொள்வது என்று சும்மா அள்ளுறான்.:smiley2::smiley2::smiley2::smiley2: ஆனா கடைசியில் கம்பியில் முட்டிக்கொண்டானே அது தான் செம்ம. :smiley28:

அலமு க்கு இருந்த புரிதல் தேனுவுக்கு இருந்திருந்தால் அவள் தொலைத்து இருக்க மாட்டாள்.. ஆனால் அவள் தொலைக்கவில்லை என்றால் எங்களுக்கு ராஜிமா இப்படி ஒரு கதையை கொடுத்தும் இருக்க மாட்டார்கள்..

ராஜிமா ஆயிரம் முத்தங்கள் உங்களுக்கு.:Puszi::Puszi: என் சார்பாக அன்பு அண்ணனிடம் வாங்கி கொள்ளுங்கள். ஹா ஹா .. ஏதோ என்னக்கு புரிந்த வகையில் சொல்லி இருக்கிறேன். தவறாக கணித்திருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் ராஜிமா.
mathy ma...sema comment....
 

PriyaPraveen

Bronze Winner
hai,
unga story starting la irunthu padikkaren arambathula irunthu ippa varaikkum gowtham semma mass and handsome man,enakku romba pidichithu...ennama thenuva love pandran.......thenu firstla irunthu asattuthanama iruntha avala pathi ava santhosamnu irunthu gowtham kalayanam panni apparom sandai pirinchathu,hari encagement....ellame avasaram....
Gowtham india vanthgapprom thenu oovoru incidentla avana purinju thannoda thappa thirithi edutha muyarchi super,irunthalum appapa thenu than thannu pannathu konjam over...alameluku vendi gowtham veetuku vara vechalum nallathe nadanthathu.thenu veetla ellarum epdi family pathi purinji approm then thenu gowtham love soodu pidichuthu.......thenu veetla party hall ella idathulayum thenu gowtham kitta loveku pordinathu.....super super......rendu perum ovruvarukoruvar ennama love pannalum gowtham unlimited love i love gowtham...........kadaisila veetla ullavanga purinji avangale thenu asapatta mathiri marriage mudinchu ippa happy life going........
story romba romba super.........i love it......:love::love::love::love::love::):):):):):smiley35::smiley37::smiley38:
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிக்கா…

தேடி தொலைத்தேன் உன்னை…!!:love::love::love:

கெளதம் பார்த்திபன் - தேனாண்டாள்

கெளதமின் காதலின் தேடலில் தொலைந்த போனோம் என்று தான் சொல்லணும்...

கெளதம் முதல் சந்திப்பில் சிறு சலனம் ஏற்பட்டு தேனுவின் குழந்தைதனமான பேச்சில் கவரப்பட்டு அவள் மேல் காதல் கொண்டு உடனே முறையாக திருமணம் செய்து.. தன்னவள் ஆக்கி காதலில் மூழ்கி… அவளுக்காக அவள் முகம் பார்த்து செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவர்கிறான்… அவள் பிரிவை கேட்கும் போது கூட அவளுக்காக பிரிந்து அவளின் நினைவில் எந்த இடத்தில் தன்னுடைய காதல் பொய்த்து போனது என தவித்து... பின் தொழிலில் திசை திருப்பி செல்கையில் மீண்டும் தன்னவளை கண்டு அவளின் காதலுக்காக தவிப்பது… அவள் காதலை மறுத்தும் அவளுக்காகவே அவள் கேட்ட. அனைத்தும் நிறைவேற்றி… தேனுவின் குடும்பத்தை கண்டு மகிழ்ந்து தனக்கும் இதுபோல் குடும்பம் வேண்டும் என்று ஏங்குவதும்… தன்னவளுக்காக மாப்பிள்ளை என்று வந்தவனை கண்டு பொறாமை கொண்டு தன் இயல்பை தொலைத்து… அதற்கும் தன்னையே நொந்து தவிப்பதும்… அவள் குடும்பத்திற்கு முன் தன்னையே குற்றவாளியாக காட்டி இறுதிவரை தேனுவிற்காகவே என்று தன் காதலை நிலைநாட்டி தன்னவளின் காதலையும் பெற்றுவிட்டான்…

தேனு யாருக்கும் கிடைக்காத பொருள் தனக்கு கிடைத்தால் கொண்டாடி மகிழ்ந்து மெல்ல மெல்ல சலித்துவிடும் அது போல உலகம் போற்றும் ஒருவன் தன்னிடம் காதலை சொன்னவனின் காதலை உணராமல்… அவன் காதலில் திளைத்து… நாளாக நாளாக குடும்பத்தின் மேல் உள்ள பாசத்திலும், கௌதமின் வாழ்க்கை முறை கண்டு பயந்து... காதலுக்கும் ஈர்ப்புக்கும் குழம்பி கௌதமின் காதலை தூக்கியெறிந்து விட்டு செல்கிறாள்… தன் குடும்பத்தை கண்ட மகிழ்ச்சி இருந்தாலும் தன் திருமணத்தை மறைத்த குற்றவணர்வில் தவித்து… கெளதமின் அருகாமைக்காக ஏங்கி… அவன் வருகிறான் என்ற செய்தி கேட்டு அவனை காண சென்று அடையும் அவமானம்… பின் கெளதம் தனக்கும் நெருக்கமானவன் என்று காட்டிட செய்யும் செயல்கள் அதில் இருந்த அவள் காதலை உணரவில்லை… இறுதியில் தன் காதலை உணர்ந்து, தவித்து அவன் மறுத்தும் அவனின் குழந்தைதனம் மாறாமல் அவள் பணியிலே அவனை ஒருவழி ஆக்கி தன்னவனிடம் சேர்ந்துவிட்டாள்…
அந்த காதலின் பரிசாய் இரு செல்வங்கள்…

அழகான நிறைவு… சொந்த மண்ணில் தொழில் துவங்கி அங்கேயே செட்டில் ஆனது நல்ல விஷயம்… அதிலும் கெளதம் ஜன்னல் கம்பியில் முட்டிக்கொள்வது சிரிப்பை அடக்க முடியல…

காதல், ஏமாற்றம், வழி, தேடல், தவிப்பு என அனைத்திலும் மூழ்கடித்து உங்களின் பாணியில் அழகான காதல் கதை தந்ததற்கு நன்றி ராஜிக்கா…
:smiley35::smiley37:

(பி. கு.சின்ன பிள்ளை கமெண்ட் அஜஸ்ட் பண்ணிக்கோங்க ராஜிக்கா...ஹிஹி..):Puszi:
 

Lakshmi perumal

Bronze Winner
ஹாய் ராஜி சிஸ் ஒரு தடவை கை கொடுங்கள் சூப்பரான கதை கௌதம் ஹனியை இனி நாங்கள் தான் தேடப்போறோம், கெளதமும் தேனும் அமெரிக்காவை விட்டு இந்தியா வந்தது நல்ல முடிவு, கௌதமிற்கு கிடைக்காத உறவுகள் அவன் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
 

Kutyma

Member
Super sis.rc mam novel padicha niraivu kidaithathu intha story la sema dear.next romantic novelkagha waiting i want another different love story sis.unghalal mudiyum puthumaighal pala kudukka
 
Top