All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌதம் ..... அயல் நாட்டு அண்ணன்... அயர வைக்கும் அசுரன்... காதலில் கண்ணன்.... கிடக்கற்கறியா மன்னன்...

தேனு ..... பார்க்கவோ மங்கை.... பழகவோ கங்கை... தெளிவில்லா தளிர்... தெளிந்த பின் தாளிர்....

ஹரி.... கள்ளமில்லா காளை... களவு கொள்ளும் வேளை... தட்டிப்பறித்தது யாரோ.... உண்மை காதலோ.....

காதல் மணமோ... கட்டுப்பட்ட மணமோ... உனக்கு நான் எனக்கு நீ என்றுணர்ந்து தாங்கினால் தாழாமல் தழைக்கும் இல்லறங்கள் நல்லறமாக....

பெற்றோரும் உற்றார் உறவினரும் தாங்குங்கள் .... தடையாகாதீர்கள்.... நல்ல கருத்து....
ராஜி நைஸ் WRITING .... IMPRESSED MUCH ... குணங்கள் அறிந்து விட்டு கொடுத்து வாழ்வது அருமை....
ji semma
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேடி தொலைத்தேன் உன்னை ….


தலைப்பைப் படித்ததும்….கேள்வி வந்தது ... தேடி ... தொலைச்சுடாங்களா ?... கவலையா சொல்றாங்களா ?... கோபமா சொல்றாங்களா?..னு


கதையின் நாயகனுக்கும் நாயகிக்கும் பொருந்தும் அருமையான தலைப்பு


கெளதம் பார்த்திபன் - தேனாண்டாள்



வில்லன் or வில்லி ?? அப்படின்னா? னு கேட்டுட்டு ... தேனாண்டாளின் முதிர்ச்சியற்ற .. குழம்பி குழம்பி தவிக்கும் மனநிலையின் பக்கம் கை காட்டுறாங்க ராஜிமா ..


நாம லைஃப்ல நிறைய தேனுக்கள சந்திச்சுருப்போம் ... ...

தனக்கு எது தேவைனு தெரியாம ..

தன் கையில் இருப்பதன் மதிப்பு தெரியாம .. தூக்கி போட்டுட்டு ..

அப்புறமா தேடி அலையறத …


தேனுவும் அது தான் பண்றா…. தன் கனவு நாயகனை சந்திக்குறா ... பேசுறா .. காதலிக்கப்படுறா .. கல்யாணமும் நடக்குது ... ஆனா அவ மனசுல குழப்பம் ... இது நாம ஆசைப்பட்ட வாழ்வு இல்லையே ... கெளதமிடம் என் கணவனுக்கு இருக்க வேண்டிய க்வாலிஃபிகேஷன் இல்லியேன்னு….அவனைப் பிரிஞ்சு போகத் துடிக்குறா .. கல்யாணத்தை கனவா மறக்க நினைக்குறா .. தன் குடும்பத்தினர் ட்ட இருந்து மறைச்சுருறா ... பிரிய முடிஞ்சதா னு கேட்டா?.. இல்லை …. அவன் பிரியத்துடிச்சவ …. அவன் தன்னைத் தேடலைன்னதும் மறுகுறா .. கணவன் எனும் உரிமையில் தோன்றும் உணர்வுகள் ல உருகுறா ... அவனிடம் தனக்கான உரிமைய .. காதலை தேடுறா ..


lively character … இந்த குமரி உருவக் குழந்தை தன் காதலை உணர்ந்ததும் ... முழு மனைவியா .. காதலியா …. தாயா உருமாறுற அழகு .. நிஜமா பிரமிப்பு … கணவனை கோபத்திலிருந்தும் தவிப்பிலிருந்தும் மீட்டெடுக்குற சாமர்த்தியம் .. அன்பு .. காதலை வெளிப்படுத்தும் உடல் மொழி . விழி மொழின்னு ராஜிமா ... அவள நம் கண் முன்னாடி உயிரோட்டமா உலவ விடுறாங்க ... நாம் வெறுத்த அவகேரக்டரை கடைசி அத்யாயங்கள் ல விரும்ப வச்சுடுறாங்க …


கெளதம் ... பல பெண்களின்... கனவில் வரும் நாயகன் .. கணவனுக்கான எதிர்பார்ப்பு வரையறைகளில் 100% பொருந்துபவன் ... அழகன் ... குணம் படைத்த செல்வந்தன்... மாறாத காதல் கொண்டவன் ... தேனுவை பார்த்ததில் ஆரம்பித்து கதையின் கடைசி வரி வரை அவனின் காதல் பிரமிப்பூட்டுகிறது .. க்ரேட் லவ்வர் & ஹஸ்பண்ட்….


தேனுவின் குடும்பத்தினர் ….கே.எஸ் ரவிக்குமார் படங்களில் வரும் குணச்சித்திரங்கள் போல் கருத்தைக் கவர்கிறார்கள் .. அவர்களின் அன்பும் ... பெருந்தன்மையும் ... கூட்டுக் குடும்பத்தின் கலகலப்புக்களும் ..விழாக் காட்சிகளும்.. பழங்கால வீட்டு அமைப்பும் ராஜிமா கைவண்ணத்தில்.. காட்சிகளாக விரிந்து கவர்கின்றன ..


கெளதம் தேனு சந்திப்பு ... டேட்டிங் செல்வது …. காதலில் விழுவது ... பஞ்ச பூதங்கள் சாட்சியாக வயதானவர்கள் முன்னிலையில் திருமணம் செய்வது …. ஒத்து வராத வாழ்வு முறை கண்டு பிரிவது …. மற்றும் ஒரு திருமணத்திற்கு தயாராவது ... தேனு திரும்ப தன் காதலை உணர்வது .. கெளதம் பட்ட வலிகளால் விலகுவது ...காதலால் ஒன்றிணைவது என ... ஆக்ஷன் கதைகளை மிஞ்சும் அதிரடித் திருப்பங்கள் காட்டி நம்மை கதிகலங்க வைக்கிறார் ராஜிமா ... கடைசி அத்யாயங்கள் மயிலிறகால் வருகுவது போல் இருவரின் காதலால் வருடி.. நம் குழப்பங்கள் கோபங்களுக்கும் முடிவு கட்டுகிறார் …..


கெளதம் காவிய நாயகன்... தேனு நாயகனை கவரும் நாயகி….


ராஜிமா ... வித்யாசமான இருவரை ஒன்றினைத்து ... மறக்க இயலா காவியம் படைத்து விட்டீர்கள் ….


தேடித் தொலைத்தேன் உன்னை ….


காதலைத் தேடினேன்

களவுமணம் கொண்டேன் ….


கனவைத் தேடினேன் …

கணவன் வரம் பெற்றேன் ….


வாழ்வைத் தேடினேன் ….

வருத்தங்கள் பெற்றேன் …


உறவுகளைத் தேடினேன் ….

உயிர் அவனை துறந்தேன்…


தேடியது தொலைத்தேன் …

தொலைந்தவற்றைத் தேடினேன் ….


உயிர் உருக்கும் காதலினால்

தேடியவற்றை கை கொண்டேன் …..



அற்புதங்கள் தொடர ….. வாழ்த்துக்கள் ….. ராஜிமா ..
bangaram akkaya...lines ellam diamond semma.....
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai raji unga ella storyilum oru ethirpparppu irukkum.athu polave "தேடி தொலைத்தேன் உன்னை" intha story yaiyum koduththu enga aarvathai thundi next ena next ena appdinu enga padikkum aarvaithirkku nalla virunthaka amaintha kathai raji ma.gowtham&then ivngala paththi solla varthaiye illa.avvalavu alaga avangaloda
கேரக்டர கொடுத்திருக்கிங்க.இதே என்னோட poster,
View attachment 331View attachment 332View attachment 333View attachment 334View attachment 335View attachment 336View attachment 337
ராஜி ma nan solla vanthathai sariyaka sonnena enru theriyavillai,irunthalum அஜ்ஜஸ் செய்துக்கோங்க.
"தேடி தொலைத்தேன் உன்னை" ஸ்டோரி சூப்பர் சூப்பர் சூப்பர்.
poster queen super....
jiji vacha ovoru turning point kum post semmaya porunthuthu......out of the world.....
 

HEMASENTHIL

New member
ஹாய் ராஜி அக்கா,
கதை சூப்பர்.கெளதம் கனவு நாயகன் தான் ஒரு பெண்ணிற்கு எப்படி பட்ட ஆண்மகனை பிடிக்குமோ அப்படியே இருக்கிறான்.தேனு மீதான அவன் காதலை படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது.இப்படி பட்ட ஒருவனை எப்படி பிரியணும்னு நினைத்தாள்?அவளுடைய கனவு நாயகனை பார்த்ததும் மயங்கிப்போய் கல்யாணம் பண்ணிட்டு அவள் எதிர்பார்த்த வாழ்க்கை இது இல்லைன்னு முடிவு பண்ணி பிரிவது நியாயமா?என்ன பொண்ணு இவள்?அப்படின்னு கோபம் தான் வந்தது.கொஞ்சம் கூட மெச்சுரிட்டியே இல்லை.தேனுவிற்கான கௌதமின் அக்கறை&காதல் பார்க்கும் போது அதிசயமாக இருக்கு.இப்படி பட்ட அருமையான காதலை இழக்கப்பார்த்தாளே.கெளதம் தேனு கடைசியா கேட்டான்னு கொடுத்த முத்தம்,சென்னையில் நடந்த பார்ட்டியில் தேனுவின் மீதான அக்கறை,கிளம்பும் போது கௌதமிற்கு அவள் கொடுக்கும் அட்வைஸ்,அத்தனை பேர் இருக்கும் போது அவர்கள் சைகையில் பேசிக்கொள்ளும் முறை இப்படி ஒவ்வொரு சீனும் ரசிக்கும் படியா இருந்தது.கெளதம் தேனுவிற்காக செய்யும் சிறு சிறு செய்கையிலும் மனசை அள்ளுறான்.பிரிவு தான் தேனுவிற்கு அவளுடைய காதலை புரியவைத்திருக்கிறது.கெளதம் விலகி போகும் போது இவள் செய்யும் அட்டகாசம் இருக்கே ஹா ஹா செம்ம CUTE.கடைசியில் கௌதமின் காதலுக்கு சரியான மரியாதையை கொடுத்துவிட்டாள்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

தேடித் தொலைத்த நெஞ்சங்கள்
நாடிக் கொண்டது தஞ்சங்கள்!
தேடிய காதலில்
ஓடிய மோதலில்
கண்டு கொண்டது
கற்பனைக் கெட்டா
நற்சுனை ஊற்றுக்கள்!

காதல் சுனை
வற்றாத ஜீவனதியாய்....
வாழ்க்கையின் தேடலின்
வேட்கையை தீர்த்த
அருஞ்சுனை தேனாய்
பாய்ந்திட்ட அழகே...
உன் கதை சொல்லும் வேகத்தில்
உன் நடை சொல்லும் விவேகத்தில்
காதல் மட்டுமல்ல்
கருத்தின் ஆழமும்
மனம் மீட்டிய பேரழகே...

வாழ்க! உன் கதை திறன்!
வளர்க! உன் கற்பனை திறன்!

வாழ்த்துக்கள் ராஜி, அடுத்த அடுத்த கதையும் உன் பேர் சொல்ல என் இனிய வாழ்த்துக்கள். நன்றி
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

தேடித் தொலைத்த நெஞ்சங்கள்
நாடிக் கொண்டது தஞ்சங்கள்!
தேடிய காதலில்
ஓடிய மோதலில்
கண்டு கொண்டது
கற்பனைக் கெட்டா
நற்சுனை ஊற்றுக்கள்!

காதல் சுனை
வற்றாத ஜீவனதியாய்....
வாழ்க்கையின் தேடலின்
வேட்கையை தீர்த்த
அருஞ்சுனை தேனாய்
பாய்ந்திட்ட அழகே...
உன் கதை சொல்லும் வேகத்தில்
உன் நடை சொல்லும் விவேகத்தில்
காதல் மட்டுமல்ல
கருத்தின் ஆழமும்
மனம் மீட்டிய பேரழகே...

வாழ்க! உன் கதை திறன்!
வளர்க! உன் கற்பனை திறன்!

வாழ்த்துக்கள் ராஜி, அடுத்த அடுத்த கதையும் உன் பேர் சொல்ல என் இனிய வாழ்த்துக்கள். நன்றி
kavithai kavithai ithu than kavithi mithu sis.very nice kavithai.
 
Last edited by a moderator:
Top