பெண்களை புசித்திடும்
வலியவனுக்கு
அவள் சதைகள்
தெரியும் அளவிற்கும்
மனம் தெரிவதில்லையே
கண்ணா.....
முகம் முழுக்க வெட்க பூக்களுடன் நின்றிருந்த யட்சினி.பொதுவாக யட்சினி என்பது பிசாசுகள் என மலையாளத்தில் கூறுவார்களாம்.அதே போல் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளிலும் யட்சினி என்பது பிசாசுகள் என்றே அழைக்கின்றனர்.இதை சில போலி மந்திரவாதிகள் யட்சினி யாகம் ,யட்சினியுடன் பேசுவது என பலவாறு ஏமாற்றி பணம் பார்க்கிறார்கள்.
உண்மையில் யட்சினி என்பது தேவதைகள்.யட்சனிகள் அறுபத்து நான்கு வகைகளாகவும் அவர்கள் அனைவரும் பெண்களாகவும் இருக்கின்றனர்.இவர்கள் குபேரனின் செல்வத்தை காக்கும் அழகு மிகுந்த தேவதைகள்.யட்சினி மனதர்களை விட சக்தி வாய்ந்தவங்களாம்.(நம்ம புள்ள பேர் மட்டும் தான் யட்சினி)
யட்சினி-யின் தந்தைக்கு புராணங்கள் சங்க இலக்கியங்களில் அதிக நாட்டம்.இந்து சமயபுராணங்கள் படித்து கொண்டிருக்கும் போது அதில் வந்த யட்சினி என்ற பெயர் அவருக்கு பிடித்து போனது.எனவே அவளது முதல் பெண்ணிற்கு அந்த பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.அச்சோ ரொம்ப நேரமா பேரை பத்தி பார்த்துட்டு இருக்கோம்.சரி வாங்க அவ ஏன் வெட்க பட்டான்னு போய் பார்ப்போம்).
வெண்ணிற முகம் முழுக்க இளஞ்சிவப்பு படர்ந்து தலை குணிந்தபடி இருந்தாள் யட்சினி.யட்சினி என்ற தேவதையின் பெயரை போல் அழகாக இருந்தாள்.ஐந்தடியில் வெண்மை நிறமும் மாசு மருவற்ற முகமும் கள்ளமில்லா உள்ளமும் அவளுக்கு அழகு.அந்த அழகுக்கு அவள் குறையாய் நினைப்பது அவளது உடலை மட்டுமே.சற்று பூசினாற் போல் இருந்தாலும் அவள் அழகே.புன்னகையின் போது விழும் கண்ணக்குழி விழுந்தது பல பேர்.ஆனால் அவள் விழுந்தது என்னவோ எதிரே இருந்த அந்த ஆணிடம்.
அவன் ராஜ கணேஷ்.அவளை விட சற்று உயரம்.சந்தன நிறத்தில் இருந்தவன் கண்கள் எப்பொழுதும் சிரிக்கும்.அவனது முறுக்கு மீசையும் தாடியும் இன்னும் அவனுக்கு அழகு சேர்த்தது.அவனை பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைப்பவன்.
"யட்ஷி இங்க பாரு.ரொம்ப வெட்கமோ முகமெல்லாம் சிவந்து போச்சு?" என்றவன் அவள் விரல்களை பிடித்தான்.
"அதெல்லாம் இல்ல மாமா" என்றவள் மெதுவாக அவனிடம் இருந்து கைகளை உருவி கொண்டாள்.
"சரி.இன்னைக்கு நம்ம வெளிய போலாமா பாப்பா?" என கேட்டாள்.
"இல்ல மாமா.எனக்கு வேலை இருக்கு" என்றவள் ஏக்கமாக அவனை பார்த்தாள்.
"உனக்கு வேலையெல்லாம் இல்ல.உங்க வீட்டை நினைச்சு பயபடுற அதானே" என்றவள் அவள் அருகில் வந்தான்.
'அய்யோ நம்ம மனசை படிச்சுட்டானே' என்று எண்ணியவள் ,"அதெல்லாம் இல்ல.இன்னைக்கு ஓனர் ஆடிட்டிங் வராங்க அதான்" என்று மழுப்பினாள்.அது உண்மையும் கூட.
"சரி வா பாப்பா நான் உன்ன ஹோட்டல்ல இறக்கி விடுறேன்" என்றான்.
இதற்கு மேல் மறுக்க முடியாது என்று தோன்றவே சரி என்றாள்.
வண்டியில் சாவியை நுழைத்து ஆன் செய்தவன் அவளை பார்த்து ,"உன்னோட பேக்-யை குடு .நான் முன்னாடி வச்சுகுறேன் பாப்பா" என்று பரிவாக வாங்கி கொண்டான்.
அவளுக்கு ஒருபுறம் அமர்ந்து பழக்கமேஇல்லை.தந்தையுடன் மட்டுமே இதுவரை வண்டியில் சென்று பழகியதால் அவளுக்கு ஒருபுறம் அமர்ந்து செல்ல வேண்டிய அவசியம் வந்ததே இல்லை.இப்பொழுது தயங்கியவள் ,அவன் அவசரமாக என்ன என கேட்கவும் சட்டென்று ஏறி அமர்ந்தாள்.அவள் மேல் முடிந்த அளவு ஒட்டாமல் அமர்ந்திருந்தாள்.
வண்டியில் வேகத்தில் அவன் அருகே வர அவனோட கள்ளமாக புன்னகைத்து கொண்டான்.பின் அவனது இடது கையால் அவளது கையை பிடித்தபடி வண்டி ஓட்டினான்.
"ப்ளீஸ் மாமா .கையை விடுங்க...ககக" என்று திணறினாள்.
அந்த கள்வனோ விடாது போக ,"மாமா " என்று அதட்டலாக கூற கையை விட்டான்.
அவள் வேலை ஹோட்டலில் இறக்கி விட்டவன் ,"இந்த சனிக்கிழமை நம்ம வெளிய போறோம்.ஒழுங்கா வர்ற நீ.ஏதாச்சு சப்ப காரணம் சொல்லிட்டு இருந்த எனக்கு கோபம் வரும் பார்த்துக்கோ" என்று மிரட்டினான்.
"சரி நான் மெசேஜ் பண்றேன்" என்றவள் விடை பெற்றாள்.
அவள் சென்ற திசையை பார்த்து கொண்டிருந்தவன் புன்னகைத்தான்.அவன் புன்னகையில் இருந்தது என்ன ?
"பசிக்கு ருசி " என்ற பெயர் பலகையை தாங்கிய அந்த பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தாள் யட்சினி.அந்த உணவகம் சென்னையில் மட்டும் பத்து கிளைகளை கொண்டது.அவள் வேலை செய்வது முதன்மையான கிளையில்.
அங்கே அக்கவுண்ட பிரிவில் வேலை பார்த்து கொண்டிருந்தாள்.அத்தனை கிளைகளின் வரவு செலவுகள் அவளிமே வரும்.அதனை சரி பார்த்து ஜி.எஸ்.டி பைல் பண்ணுவது போன்ற வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் சென்று வேலையில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருக்க அங்கு வந்த ஓனர் இவளை பார்த்து புன்னகைத்தார்.
"வணக்கம் சார்" என்றாள் புன்னகையுடன்.
"வணக்கம்மா வேலையெல்லாம் எப்படி போகுது?" என்று விசாரித்தார்.
"ரொம்ப நல்லா போகுது சார்.ஆனால் நம்ம ஹோட்டல்ல வீட்டுக்கு டெலிவரி எல்லாமே பண்றோம்.அதோட ஸ்வீட் காரமும் கொடுத்தா நல்லா இருக்கும் சார்" என்று தனது யோசனையை கூறினாள்.
"நானும் அதை பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்மா.ஆனா பாரு அதுக்கு சரியான ஆளுக இன்னும் சிக்கல.பார்ப்போம் என்னோட பையன் கிட்ட சொல்லி இதை கொண்டுவர பார்க்குறேன்" என்றவர் கணக்குகளை பார்க்க தொடங்கினார்.
அதை பார்வையிட அவருக்கு திருப்தியாக இருந்தது.புன்னகையுடன் யட்சினியை பார்த்தவர்,"கணக்கெல்லாம் சரியா இருக்குமா.நீ ஆடிட்டர் கிட்ட கொடுத்து பைல் பண்ணிடு" என்றார்.
"சரிங்க சார் .எனக்கு இந்த சனிக்கிழமை லீவ் வேணும்"என்று தயங்கியபடி கேட்டாள்.அதனாலென்ன எடுத்துக்கோம்மா" என்றவர் கிளம்பினார்.
ராஜா மாமா என்று சேமித்து வைத்திருந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் சனிக்கிழமை நான் தயார் என்ற குறுஞ்செய்தியை அனுப்பினாள்.
அங்கே ராஜா-வோ அதனை பார்த்து புன்னகைத்தபடி லவ் யூ பாப்பா என்று அனுப்பினான்.
அங்கு இருவரின் நம்பிக்கையும் சிதைந்து போக போகுது என்றால் நம்புவார்களா ?
####################################
"எங்கேயோ உன் முகம் நான் பார்த்த நியாபகம் ..எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த நியாபகம்" என்ற பாடல் தொடர்ந்து ஒலிக்க இதமான கனவில் இருந்து எழுந்தான் தேவ்.
கனவு கலைந்தவனுக்கு எங்கே இருக்கிறோம் என்று உணரவே நேரம் எடுத்தது.அவன் இருந்த இடம் கண்டு அதிர்ந்து தான் போனான்.ஆம் அவன் இருந்தது அவனது காருக்குள்.ஆனால் கார் அவனது போர்டிகோ-வில் இருந்தது.
நினைவுகள் பின் செல்ல அந்த வெண்ணிற கைகள் ஸ்டியரிங்கை பற்றியதும்,அவன் மேல் அந்த அருவத்தின் வெம்மை படர்ந்ததும் நினைவு எழ அவன் உடல் ஒரு முறை உதறியது.
அதற்குள் இரண்டாம் முறை அழைப்பு வர அதில் தீபாவின் அழைப்பு மிளிர அலைபேசியை எடுத்தான்.
"கண்ணா என்னாச்சு டா?மதியத்துல இருந்து கால் எடுக்கவே இல்ல?" என்று பதறினார்.
அலைபேசியை பார்க்க அதில் தீபாவிடம் இருந்து இருபதற்குள் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தது.உடனே"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.வந்ததும் தூங்கிடேன்."என்று மழுப்பினான்.
"பயந்துட்டேன் கண்ணா"என்றார்.பின் ,"அப்பா கண் முழிச்சு பத்து நிமிஷத்துட திருப்பி மயக்கமாகிட்டாரு டா.சார்லஸ் அங்கிள் வந்து பார்த்திட்டு சீக்கிரம் சரியாகிருவான்.தேவ் வந்ததும் என்ன பார்க்க வர சொல்லுன்னு சொன்னாரு கண்ணா" என்றார்.
"ரொம்ப நல்லதும்மா அப்பா கண் முழிச்சது.நான் இன்னைக்கு நைட் அப்பாவை பார்த்துக்குறேன்.நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க" என்று அக்கரையுடன் கூறினான்.
"இல்லடா உங்கப்பா கண் முழிக்காம என்னால வீட்ல இருக்க முடியாது.இங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.உங்கப்பா முகத்தை பார்த்துட்டே இருந்துருவேன்" என்றவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
"சரிம்மா உங்களை வீட்டுக்கு வர சொல்லலை சந்தோஷமா ?" என்று சலிப்பாக கேட்டான்.
"டேய்...ஒழுங்கா போய் சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு தூங்கு" என்று கோபத்தில் தொடங்கி அக்கரையில் முடித்தார்.
"சரிம்மா" என்றவன் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றான்.
சோபாவில் சென்று "பொத்"-தென்று அமர்ந்தவனுக்கு நடப்பவற்றை சுலபமாக எடுத்து கொள்ள முடியவில்லை.தொடர்ந்து மூன்று இரண்டு நாட்களாக அந்த அருவம் அவனை தொடர்வதை அறிந்தே இருந்தான்.அவனுக்கு திருமணம் என்றதும் ட்ரிப்ஸ் கீழே விழுந்தது அவனுக்கு எதார்த்தமாக தெரியவில்லை.
அந்த அருவம் அவனை கொல்ல நினைக்கிறதா காக்க நினைக்கிறதா ? எதுவும் புரியாமல் திகைத்திருந்தான்.இதற்கு பதில் தான் என்ன ? காலம் தான் விடை சொல்லும் என்றால் அவன் நம்புவானா?
திடீரென்று யோசனை தோன்ற அவனது அலைபேசியை எடுத்தான்.எடுத்தவன் பேய்கள் உண்மையா ? என்று கூகுளில் டைப் செய்து பார்க்க அது முக்கால்வாசி உண்மை என்றே வந்தது.அதில் ஒரு இடத்தில் பேய் ஓ நெகட்டிவ் வகை இரத்தம் இருப்பவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியும் என்று படிக்க அதிரந்து போனான்.
அச்சச்சோ அனக்கு ஓ நெகட்டிவ் இரத்தமே.உடனே ஓடிச்சென்று பூஜை அறையில் இருந்த விபூதியை எடுத்து பட்டை போட்டு கொண்டான்.
"பேசாம நம்ம இந்த ரூம்-ல இருந்துட்டா பேய் கிட்ட வராதுல்ல" என்று எண்ணியவன் அங்கேயே படுத்து.கொண்டான்.
பயம் வந்தால் ஆறடி மனிதனும் சிறு குழந்தை தானோ?
அதை பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த அருவம் சிரித்தது.ஆத்மாவாக இருந்தாலும் சில இடங்கள் அவற்றால் கட்டுப்படுத்த இயலாது.
அந்த சிரிப்பு சத்தத்தில் காதை பொத்தி கொண்டபடி படுத்தான்.
####################################
தீபனும் ராகினியும் சேர்ந்து எப்படி தேவ்வை தங்கள் திட்டத்தில் விழ வைப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர்.
உடனே தீபன்,"ராகினி பேசாம விபா கிட்ட சொல்லி தேவ் -வை லவ் பண்ண வைக்க சொல்லலாம்" என்றார்.
அதற்கு ராகினியே,"புருஷன்னு கூட பார்க்க மாட்டேன்.சோத்துல விஷம் வச்சுருவேன் பார்த்துக்கோ" என்றாள் கோபமாக.
"ஏன்டி" என்று பரிதாபமாக தீபன் கேட்க,"அவளே தேவ்வை கட்டிக்க மாட்டேன்னு சுத்திகிட்டு இருக்கா.இவ கிட்ட சொன்னா எனக்கு உன்ன புடிக்கலன்னு சொல்லி மொத்த ப்ளான்லையும் லாரி மண்ணை கொட்டிட்டு வந்துருவா பார்த்துக்க" என்றாள்.
"ஆமா ராகினி இத மறந்துட்டேன் பாரு" என்றார்.மண்டைல ஏதாச்சு இருந்தா தானே நியாபகம் வச்சுப்பா" என்று கோபத்தில் ஒருமையில் தாவியிருந்தார்.
"சரி விடு.என்னோட தங்கச்சி கிட்ட போய் மச்சானுக்கு இப்படி இருக்கு.தேவ் வேற இரண்டு வருஷமா கல்யாணத்துக்கு பிடி கொடுக்கலை.இப்படியே விட்டா தனிமரமாகிடுவான்.நீ கொஞ்சம் மிரட்டு சம்மதிக்க வை-ன்னு சொல்லி பிட் போடுவோமா ?" என்று கேட்டார்.
"இதுவும் நல்ல யோசனைங்க.முயற்சி பண்ணி பார்ப்போம்.இப்போ எனக்கு தூக்கம் வருது.போய் படுங்க" என்றவர் கட்டிலின் மறுபுறத்தில் படுத்தார்.
நடுஇரவில் தோளில் ஒரு கைவிழ ,"யோவ் கையை எடுத்துட்டு படு" என்றபடி தூங்கிபோனார்.
அந்த கை மெதுவாக தோளை தடவ கையை தட்டி விட்டார்.
அந்த கை மெதுவாக அவரது கழுத்தில் முன்னேற பட்டென்று எழுந்து அமர்ந்தார்.
திரும்பி பார்க்க அங்கே கணவன் இல்லை."என்னங்க ?" என்று ராகினி கத்த அவரோ பாத்ரூமில் இருந்து வரேன்டி என்று குரல் கொடுத்தார்.
ராகினி சுற்றி முற்றி தேட அவர் அருகில் வெண்புகையாய் எழுந்த உருவம் அவரின் மறுபுற தோளை தொட ராகினி திரும்பினாள்.
அந்த வெண் புகைக்குள் இருந்து வெண்மை நிறத்தில் அந்த உருவம் வெளிப்பட அதன் முகத்தில் இருந்த வன்மத்தில் மூச்சடைத்து போனாள் ராகினி.
கத்த கூட தோன்றாத ஒரு நிலை.அவர் மூச்சு விடுகிறாறா என்பதே தெரியவில்லை.அந்த உருவம் சட்டென்று அதன் தலையில் இருந்த ஒரு முடியை பிடித்து இழுத்து ராகினியின் கைகளில் கட்டியது.இவை அனைத்தையும் பித்துபிடித்தபடி பார்த்திருந்த ராகினி முடியை கையில் கட்டுவதை கண்டு நகர முனைய அவள் உடல் பாகங்கள் செயலிலந்து போனது.
அதை கட்டி முடித்ததும் அந்த ஒரு முடி மறைய ராகினி அமைதியாக படுத்து கொண்டாள்.
ஆம் ராகினி அந்த அருவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தாள்.
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த தீபன் தூங்கி கொண்டிருந்த ராகினியை பார்த்து,"மனுஷனை நிம்மதியா பாத்ரூம் போக.விடாம கத்திட்டு இப்போ தூங்குறதை பாரு.பிசாசு" என்றபடி கட்டிலை நோக்கி நகர்ந்தார்.
அவர் கட்டிலை நோக்கி நகர சட்டென்னு அவருக்கு முன் தரையில் இருந்து ஒரு வெண்புகை எழுந்தது.
அதிலிருந்து அந்த உருவம் வெளிப்பட நடுங்கி போனான்.
அந்த முகம் அதன் கோரம்.இவரை பீதியடைய செய்தது.அந்த உருவம் இவரின் அருகில் கைகளை தொட ஷாக் அடித்தது போல் இரண்டு அடி தள்ளி சென்றது.
அதை பார்த்து சிரித்த தீபன் அதன் அருகில் சென்று மெதுவாக,"எத்தனையோ பேர கணக்கு வழக்கிலாம கொன்னுறுக்கேன்.இப்படி ஏதாச்சு பேயா கிளம்பிரும்னு தான் கேரளா போய் மந்திருச்சு கட்டிருக்கேன்" என்று கையில் இருந்த கயிற்றை காட்டினார்.
அந்த உருவம் முகம் மிக கோரமாக,"அடேய் குள்ள குண்டா ..உன்னோட முடிவு என்னைக்கும் என் கைல தான் நியாபகம் வச்சுக்கோ.நீ வினையை விதைச்சுட்ட கண்டிப்பா நீ தான் அறுக்கணும்" என்றபடி பலமாக சிரித்தது.
மென்மையாக அது மறைந்தும் போனது....
நெருங்காதே என்னவளே....
பொறாமை மிகக்கொடிய நோய்.ஏதாச்சு இடத்துல நீங்க பொறாமை படுறதா தோணினா உடனே அவங்க பட்ட கஷ்டத்துக்கு கிடைச்ச.நல்ல பலன் அதுன்னு நினைச்சுக்கோங்க.இல்லன்னா அந்த பொறாமையே உங்களை வாழ விடாது....
படிச்சுட்டு மறக்காம கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க கண்மணிகளே...உங்களோட கருத்துக்கள் தான் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமருந்து....
புன்னகையுடன்,
ஷா...