All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நெருங்காதே என்னவ(னே)ளே" - கதை திரி

Status
Not open for further replies.

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு வருடம் கழித்து உங்கள் எல்லாரையும் நெருங்காதே என்னவ(னே)ளே கதை மூலமா சந்திக்க வரேன்...என்னுடைய மூன்றாவது கதை இது..இந்த புது முயற்சியை நீங்க ஆதரிப்பீங்கன்னு நம்புறேன்.இந்த கதைல நிறைய கற்பனை கலந்துருக்கேன்..சோ மக்களே நோ லாஜிக்..என்னுடைய முந்தைய கதைக்கு கொடுத்த மாதிரி இதுக்கும் உங்க ஆதரவை தாருவீங்கன்னு நம்புறேன் பேபீஸ்......இன்னைக்கு முதல் டீசர் பதிவிடுறேன் ப்ரெண்ஸ்...😍😍
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெருங்காதே என்னவ(னே)ளே கதையின் டீசரை பதிவிட்டுருக்கேன்...படிச்சுட்டு உங்க பொன்னான கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.பல மாதங்கள் கழித்து கதை எழுத ஆரம்பிச்சுருக்கேன்.உங்களுக்கு என்ன தோணுதுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க தோழமைகளே...

*************************************************
டீசர்...1 :

வானம் தனது கோர முகத்தை காட்ட இடியும் மின்னலும் அந்த இடத்தையே புரட்டி கொண்டிருந்தது.அவன் வீட்டில் ஏ.சி என்பதால் அனைத்து ஜன்னல்களும் பூட்டபட்டிருக்கும்.ஆனால் அவனது அறை ஜன்னல் மட்டும் மெதுவாக மெதுவாக திறந்தது.

அத்தனை மழையிலும் காற்றிலும் அவனது ஜன்னல் திறந்ததே ஒழிய அந்த கதவுகள் ஆடவில்லை.அவனது ஆழ்ந்த தூக்கத்தில் அந்த காற்று அவனை சிலிர்க்க செய்தது.தலை முடி மெதுவாக காற்றில் அசைய யாரோ கோதுவது போல் சுகமாய் தலையசைத்து படுத்தான்.

அவனது கதவு படபடவென்று தட்டபட அதிர்ந்து விழித்தான்.

***************************************************
குழப்பத்தில் இருந்தவன் பூனைக்குட்டி உரசுவதை கண்டு கவனம் களைந்து சிரித்தபடி அதனை தூக்கி மடியில் அமர்த்தி வைத்தான்.அதன் தலையை தடவி கொடுக்க அது வாகாக சுருண்டு அவன் மேல் படுத்து கொண்டது.

சிறிது நேரம் கழித்து எழுந்த அந்த குட்டி அவனது வலது கையின் ஆட்காட்டி விரலில் கைவைத்து இழுத்தது.அப்பொழுது அந்த விரலில் இருந்த மோதிரம் கழண்டு விழுந்தது.

புன்னகையுடன் ,"அடேய் சேட்டகார பூனை உன்னை அடி பிக்க போறேன் பாரு" என்றவனின் கை கூற்றுக்கு மாறாக தலையை தடவி கொடுத்தது.பின் அந்த மோதிரத்தை எடுத்து விரலில் அணிந்தவன் பார்வை ஆச்சர்யத்தை காட்டியது.

நன்றி..
ஷா 😍
 

Attachments

  • PicsArt_01-18-09.08.19.jpg
    PicsArt_01-18-09.08.19.jpg
    274.4 KB · Views: 9
Last edited:

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வண்ணமாய் இருந்த
என் வாழ்வில்
ஏன் கருப்பு
வண்ணம் பூசி விட்டாய்
என்னவனே?

கருப்பு நிற மங்கை போல் மேகங்கள் சிரித்தது... மங்கையின் கண்ணீரை போல் நான் இப்பொழுது விழவா ? வேணாமா ? என்று மழைத்துளி மக்களை மிரட்டி கொண்டிருந்தது.

மாலை ஆறு மணிக்கு மேகத்தின் கருமையை கண்ட மக்கள் மழையிடம் மாட்டாமல் வீடு போய் சேர வேண்டும் என பரபரத்து ஓட அந்த இடமே நெரிசலில் சிக்கி கொண்டது.

இந்த சத்தங்கள் எதுவும் கேட்காத தூரத்தில் கடலை ரசித்து கொண்டிருந்தான் அவன்.அவன் தேவரதன்.கடல் அலைகள் அருகில் வந்து அவன் கைகளில் சிக்கி திரும்பி செல்வதை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.

அலைகள் அவனிடம் வந்து திரும்புவதும், அவனுள் ஏதோ ஒரு வலியை உருவாக்குவதும் அவனுக்கு விசித்திரமாக இருந்தது.

ஏன் இந்த வலி ? சில விஷயங்கள் அவனை இது போல் வலி கொள்ள செய்வது ஏன் ? மாதமாதம் அவனையறியாமல் அவன் கால்கள் இந்த கடலல நோக்கி வருவது ஏனோ ? இப்படி பல பல கேள்விகள் அவனை தூங்க விடாமல் செய்து கொண்டிருப்பதை அந்த ஆறடி மனிதன் மட்டுமே அறிவான்.அந்த கேள்விகளின் விடையை யார் அறிவாரோ?

திடீரென அவன் அலைபேசி,"எங்கேயோ உன் முகம் நான் பார்த்த நியாபகம்... எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த நியாபகம்" என்று பாடல் ஒலிக்க அலைபேசியை எடுத்து பார்த்தான்.

" அம்மா " என்ற எழுத்து மிளிர அதனை காதிற்கு கொடுத்தான்.

"என்னடா எப்பவும் போல பெசன்ட் நகர் பீச்-ல இருக்கியா?" என்று கிண்டலாக வெளிவந்தது அந்த தாயின் வார்த்தைகள்.

"அம்மா என்ன சொல்ல வந்தீங்களோ அத சொல்லுங்க.அத விட்டுட்டு என்னைய ஏன் கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க? அப்பா எஸ்கேப் ஆகிட்டா எனக்கு கால் பண்ணிடுவீங்களே" என்று பதிலுக்கு கிண்டலடித்தான்.

"அவர இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதே.சரி இன்னைக்கு மாசத்துல முதல் வெள்ளி.நான் அம்மன் கோவிலுக்கு போகனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.என்னால போக முடியல..உங்க அப்பாவும் எஸ் ஆகி போயிட்டாரு.நீயாச்சு போய்ட்டு வாடா கண்ணா.பீச்சுக்கு பக்கத்துல தான அஷ்டலட்சுமி கோவில் ப்ளீஸ் டா கண்ணா" என்று அத்தனை ப்ளீஸ், கண்ணா போட்டு மகனிடம் ஐஸ் கட்டியை வைக்காமல் ஐஸ் தண்ணீருக்குள் தள்ளி விட்டார்.

"ஐஸ் வைக்க சொன்னா என்னையவே ஐஸ் பெட்டிகுள்ள தள்ளுவீங்க போலயே.போய்ட்டு வரேன்" என்றான் சலிப்புடன்.

"சரிடா கண்ணா .பார்த்து வா .அம்மா போனை வச்சுடுறேன்"என்றவர் அழைப்பை துண்டித்தான்.

இரண்டு வருடமாக இந்த பெசன்ட் நகர் பீச்சிற்கு வருபவன் ஒரு தடவை கூட கோவிலுக்குள் செல்ல எண்ணியதில்லை.ஆனால் இன்று அந்த சூழ்நிலை வர அமைதியாக எழுந்து பேண்ட்-ஐ தட்டிவிட்டவன் கோவிலை நோக்கி நடந்தான்.

'வாவ் இந்த கோவில் ரொம்ப அழகா இருக்கு ' என்று எண்ணியவன் மனதில் ஒருவித குளிர் பரவுவதை உணர்ந்தான்.

'என்னாச்சு எனக்கு' என்று எண்ணியபடி தன் காலில் இருந்த ஷூ வை கழட்டி விட்டான்.

"பூ வாங்கிட்டு போ ராசா" என்று எழுபது வயது மதிக்கதக்க பாட்டியின் வார்த்தையில் அவரை திரும்பி பார்த்தான்.

இந்த வயதிலும் பூ விற்று சுயமாய் வாழ்கிறார் என்று யோசித்தபடி ,"சாமிக்கு போடுற பூ இரண்டு முழம் தாங்க" என்று வாங்கி கொண்டு கோவிலினுள் நுழைந்தான்.

அந்த பூ விற்பவருக்கு இவனை எங்கோ பார்த்து போல் இருந்தது.நியாபகம் வந்து கேட்பதற்குள் அவன் உள்ளே விரைந்திருந்தான்.

வந்தவுடன் கேட்போம் என்று எண்ணியவர் தன் வேலையை பார்க்க தொடங்கினார்.

கோவிலினுள் நுழைந்து ஒவ்வொரு லஷ்மியையும் தரித்து மனமார வேண்டிக்கொண்டவன் மனதில் ஒரு வெற்றிடம் உருவாகி அங்கு சிலிர்ப்பு உண்டானதை அவன் மட்டுமே அறிவான்.

அந்த கோவில் ஒவ்வொரு இடமும் அவனிடம் ஏதோ ஒன்றை நினைவு படுத்தியது.அதனை யோசிக்க யோசிக்க தலை சுற்றுவது போல் இருக்கவும் அவன் சற்று நேரம் அமைதியாக அமர்ந்தான்.

அமர்ந்திருந்தவன் அருகில் அழகிய வெள்ளை நிறமும் தங்க நிறமும் கலந்த ஒரு பூனைக்குட்டி அமர்ந்தது.அந்த பூனைக்குட்டி அவன் தொடையில் உரசியது.

குழப்பத்தில் இருந்தவன் பூனைக்குட்டி உரசுவதை கண்டு கவனம் களைந்து சிரித்தபடி அதனை தூக்கி மடியில் அமர்த்தி வைத்தான்.அதன் தலையை தடவி கொடுக்க அது வாகாக சுருண்டு அவன் மேல் படுத்து கொண்டது.சிறிது நேரம் கழித்து எழுந்த அந்த குட்டி அவனது வலது கையின் ஆட்காட்டி விரலில் கைவைத்து இழுத்தது.அப்பொழுது அந்த விரலில் இருந்த மோதிரம் கழண்டு விழுந்தது.

புன்னகையுடன் ,"அடேய் சேட்டகார பூனை உன்னை அடி பிக்க போறேன் பாரு" என்றவனின் கை, கூற்றுக்கு மாறாக தலையை தடவி கொடுத்தது.பின் அந்த மோதிரத்தை எடுத்து விரலில் அணிந்தவன் பார்வை ஆச்சர்யத்தை காட்டியது.அந்த மோதிரம் வித்தியாசமாக இருந்தது.D என்ற ஆங்கில எழுத்தை சுற்றி கொடி போல் ஏதோ பிண்ணபட்டிருப்பதை அப்பொழுது தான் கவனித்தான்.

எத்தனை யோசித்தும் அதை அவன் வாங்கியதாக அவனுக்கு நியாபகமே இல்ல.பின் அந்த மோதிரம் எப்படி அவன் கரங்களுக்குள் ?
'ஒரு வேளை அம்மா தான் என்னோட முதல் எழுனுத்துன்னு இத வாங்கி கொடுத்துருப்பாங்களோ ?' யோசிக்க யோசிக்க அவன் பலவீனமானதை போல் உணர்ந்தான்.பூனையை மடியில் இருந்து இறக்கி விட்டான்.

பின் அவசரமாக கோவிலில் இருந்து வெளியேறினான்.ஷீ-வை வேகமாக அணிந்தவன் தனது காரை நோக்கி விரைந்தான்.அந்த பூ விற்கும் பாட்டி அவனை அழைத்தது பாவம் அவன் செவிகளை எட்டவில்லை.எட்டியிருந்தால் அவன் தலையெழுத்தே மாறியிருக்குமோ என்னவோ? விதி வலியது என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்து கொண்டே இருக்கிறது அவன் வாழ்வில்.

கார் புயல் வேகத்தில் அங்கிருந்து அகல அவன் மனதின் படபடப்பு மட்டும் அடங்கவேயில்லை.

கார் வீட்டை அடைய கோவில் பிரசாதத்தை தாயிடம் தந்தவன் ,"அம்மா பசிக்கல.நான் தூங்க போறேன்" என்றவன் கார் சாவியை சோபாவில்.எரிந்து விட்டு தாயின் பதிலை எதிர்பாராமல் மாடியில் இருக்கும் தனது அறை நோக்கி விரைந்தான்.

"இவனுக்கு எனன் ஆச்சு ?" என்று எண்ணிய அவன் தாய் தீபா காஃபியை எடுத்து கொண்டு அவனது அறை கதவை தட்டினார்.

கோபமாக கதவை திறந்தவன் ,"எதுவும் வேணாம்னு சொன்னேன்-ல மா.ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் மீ" என்று கத்தினான் தேவ்.

"உனக்கு தலை வலி மாதிரி இருந்துச்சுடா கண்ணா.அதான் அம்மா காஃபி கொண்டு வந்தேன்" என்று பாசமாக கூறிய தாயை கண்டவன் குற்ற உணர்ச்சியுடன்,"உள்ள வாங்கம்மா" என்று தனது அறைக்குள் அழைத்தான்.

அவனது அறையில் டீபாயில் காஃபியை வைத்த தீபா மகனின் மெத்தையில் அமர்ந்தார்.

அவருக்கு தெரியும் தேவரதன் மனம் சரியில்லாத வேளைகளில் தன் மடியில் படுத்துக்கொள்வான் என்பது.

அமைதியாக தாயின் மடியில் தலை வைத்து படுத்தவனின் தலையை கோதி கொடுத்தார் தீபா.

"என்னடா கண்ணா ஆச்சு கொஞ்ச நாளா எதையோ தொலைச்ச மாதிரி இருக்க.?" என்று தலையை கோதியபடி வினவினார்.

"என்னன்னு தெரிலம்மா.மனசெல்லாம் பாரமா இருக்கு.ஏதையோ ஒன்னை நியாபகபடுத்த என்னோட மனசு முயற்சி பண்ணிட்டே இருக்கு. ஆனா என்னன்னு என்னால யோசிக்க முடியலம்மா. யோசிக்க முயற்சி பண்ணா தலையெல்லாம் வலிக்குது" என்றவனை ஒரு வித வலியுடன் பார்த்தார் தீபா.அவன் படுத்திருந்ததால் அவரின் முகத்தை பார்க்கவில்லை.பார்த்திருந்தாள் அவர் முகத்தில் இருந்த மாற்றத்தை அவன் உணர்ந்து விசாரித்திருப்பான்.

"ஒன்னுமில்லடா கண்ணா.அந்த ஆக்ஸிடென்ட் - நடந்துச்சுல்ல அதோட விளைவு தான் சீக்கரம் சரியாகிடும் " என்றார் அவன் அன்னை ஆதரவாக.

சற்று நேரம் அங்கே அமைதி நிலைக்க தீபா எழுந்து,"நீ காஃபி குடிச்சுட்டு தூங்குடா கண்ணா எல்லாம் சரியாகிடும்.காஃபி இந்நேரம் ஆறிருக்கும்.நான் வேற போட்டு கொண்டு வரேன்" என்று வெளியேறியவர் வேறு ஒரு காஃபியை சுடசுட கொண்டு வந்து தேவ் குடித்த பிறகு அங்கிருந்து அகன்றார்.

திரும்பி அவனது அறைக்குள் வந்தவர் ,"கண்ணா அம்மா ஒன்னு சொன்னா கோவ படகூடாது." என்று பீடிகை போட்டார்.

"சொல்லுங்கம்மா " என்றவனின் விழிகளில் கேள்வி இருந்தது.

"நாளைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போகனும்.தாத்தா செத்துட்டாரு வர முடியாது,வர மாட்டேன்,வேணா, வேலையிருக்குன்னு ஸ்கூல் பையன் மாதிரி சப்ப காரணம்லா சொல்லிடாதடா கண்ணா" என்று பாவமாகவும் சற்று கிண்டலுடனும் அவன் விழிகளை பார்த்தார்.

இந்த முறையும் மகன் வேண்டாம் என்று விடுவானே என்ற கவலை தாயின் முகத்தில் தெரிந்தது.

இருந்த குழப்பத்திலும்,தாயின் முகத்தில் தோன்றிய கவலையிலும்,"சரிம்மா வரேன்" என்று கூறியவன் அமைதியாக படுத்து கொண்டான்.

மகன் சம்மதித்ததில் சந்தோஷம் கொண்ட தீபா தனது அறைக்கு சென்றார்.

மனதினுள் ,"அஷ்டலட்சுமி தான் என் பையனோட மனசை திறந்திருக்கு.தாயே நன்றிம்மா " என்று நன்றி தெரிவித்தவர் மணியை பார்த்தார்.

அது ஒன்பது என காட்ட "சாயங்காலம் வெளிய வேலையிருக்குன்னு போன மனுஷன் இன்னும் வீட்டுக்கு வரல இவரை"என்று பல்லை கடித்தபடி கணவருக்கு அழைத்தார்.

அவளுடைய கணவர் எடுக்காமல் போகவே "வேலைக்கு போயிட்டாலே இந்த போன் எடுக்குற பழக்கமே வராது" என்று கணவரை திட்டியபடி போனை அணைத்து விட்டு படுக்க சென்றார்.

வானம் தனது கோர முகத்தை காட்ட, இடியும் மின்னலும் அந்த இடத்தையே புரட்டி கொண்டிருந்தது.அவன் வீட்டில் ஏ.சி என்பதால் அனைத்து ஜன்னல்களும் பூட்டபட்டிருந்தது. அவனது அறையில் இருந்த ஜன்னல் கதவு மெதுவாக மிக மெதுவாக திறந்தது.அத்தனை மழையிலும் காற்றிலும் அவனது ஜன்னல் திறந்ததே ஒழிய அந்த கதவுகள் ஆடவில்லை அசையவுமில்லை. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவனை அந்த குளர் காற்று சிலிர்க்க செய்தது.தலை முடி மெதுவாக காற்றில் அசைய யாரோ தலையை கோதுவது போல் சுகமாய் தலையசைத்து படுத்தான்.

தேவ்-ன் அறை கதவு படபடவென்று தட்டபட அதிர்ந்து தூக்கத்தில் இருந்து விழித்தான்.

ஓடிச்சென்று கதவை திறந்தவன் முன்னால் பதட்டத்துடன் அவன் தாய் தீபா நின்றிருந்தார்.

அவரது பதட்டத்தை கண்டவன் "என்னாச்சும்மா?" என்று பதட்டத்துடன் வினவினான் தேவ்.

"டேய் கண்ணா மழை இவ்ளோ கொட்டுது.உன்னோட அப்பாக்கு கால் பண்ணா எடுக்க மாட்டிங்கறாரு.எனக்கு பயமா இருக்கு டா" என்று பதறினார்.

"ஒன்னும் ஆகியிருக்காதும்மா.நான் இப்போவே கடைக்கு போய் என்னன்னு பார்க்குறேன்.நீங்க கவலைப்படாதீங்க" என்றவன் தனது கார் சாவியை தேடினான்.

கார் சாவியை தனது தலையணை மேல் இருந்து எடுத்தவன் காரை நோக்கி விரைந்து ஓடினான்.

காரை எடுத்து தந்தையின் கடையை நோக்கி செலுத்தினான்.கொட்டுகிற மழையில் சாலை தெளிவில்லாமல் தெரிந்தாலும் லாவகமாக ஓட்டினான்.

போகின்ற வழியில் திடீரென கார் க்ரீச் என்ற சப்தத்துடன் சாலையில் நின்றது.தேவ்-வோ,"இந்நேரத்துல கார் மக்கர் பண்ணுதே " என்று எண்ணியவன் இறங்கி மழையில் நனைந்தபடி காரில் என்ன கோளாரென்று பார்க்க தொடங்கினான்.

காரின் முன் பகுதியின் இன்ஜினை பார்த்து கொண்டிருந்தவன் தோளில் ஒரு கை பதிய சட்டென்று அதிர்ந்து திரும்பினான்.அங்கு ஒரு பெண் சிவப்பு நிற உடையில் மழையில் நனைந்தபடி நின்றிருந்தாள்.அவளது பாதி முகம் முழுக்க தலைமுடியால் மறைக்கபட்டிருந்தது.அவளை பார்த்தவன் ஓரடி பின்னால் நகர,அந்த பெண்ணோ அவன் ஆட்காட்டி விரலில் இருந்த மோதிரத்தை உருவிவிட்டு சாலையின் மறு திசையை நோக்கி ஓடினாள். ஓடும் போது எதிரில் வந்த ஒரு வெண்ணிற நிற கார் அவள் மேல் ஏறியது.

சினிமாவில் காண்பிப்பது போல் நான்கு அடி பறந்து கீழே பொத்தென்று விழுந்தாள் அந்த பெண்.

அவ்வளவு திடகாத்திரமான மனிதனும் அந்த நிமிடத்தில் உறைந்து நின்றான்.மறுநொடி ஓடிச்சென்று அவளை தூக்க அவளது உடை நிறத்தில் அந்த முகமும் இரத்தத்தால் ஜொலித்தது.இரத்தம் தோய்ந்த அந்த முகத்தின் பாதி மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது.அந்த பெண்ணின் முத்தையே தேவ் பார்த்து கொண்டிருக்க ,அந்த பெண்ணோ அவனது ஆட்காட்டி விரலில் அந்த மோதிரத்தை மீண்டும் அணிவித்தவள் மயங்கி சரிந்தாள்.மறுநொடி இடியின் அகோர சத்தத்தில் பதறி விழித்தான் தேவ்.

விழிப்பு வந்ததும் ஒரு நிமிடம் இரு கரங்களால் முகத்தை அழுந்த தேய்த்து கொண்டான்.மணியை பார்க்க அது இரண்டு என காட்டியது. அவனது கண்களின் ஈரத்தை அவன் உணர்ந்தான்.அவனையறியாமல் கண்கள் கலங்கி இருந்தது.முகம் முழுக்க வேர்த்திருந்தது.இத்தனை குளிரிலும் அவனது முகம் வேர்த்திருந்ததை அதியமாக எண்ணினான்.ஒருவேளை கனவோட உண்மைத்தன்மையோ என்று எண்ணினான்.

பின் அறையை சுற்றி பார்க்க ஜன்னல் திரை பறந்து கொண்டிருந்தது. எழுந்து சென்று திரையை விலக்கி பார்க்க ஜன்னல் கதவுகள் திறந்திருந்தது.திரும்பி தனது அறை ஏ.சியை பார்க்க அது 20°-ல் ஓடிக்கொண்டிருந்தது.

தனது அறை ஜன்னல் கதவுகள் திறக்கபடுவேதே இல்லை என்று அறிந்தவனுக்கு உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. அப்பொழுது தான் கவனித்தான் இடியும் மின்னலும் கோர மழையும் ஊரையே உலுக்கி கொண்டிருந்ததை.

அதனை பார்த்த தேவரதன் அதிர்ந்து போனான்.இந்த அளவுக்கு இயற்கையின் கோர முகத்தை அவன் பார்த்ததில்லை.சென்னையில் வெள்ளம் வரும் போது கூட அவன் ஊரில் இல்லை..ஊரெங்கும் இருக்கும் அமைதி இப்பொழுது இல்லை.கருமை படந்திருந்த அந்த இரவில் சட்டென பின்னால் ஏதோ சத்தம் கேட்த திரும்பி பார்த்த தேவரதன் கண்ணில் பட்டது கீழே கிடந்த காலண்டர் பேப்பர்.இது எப்படி என்று யோசித்தபடி அதை எடுத்து பார்க்க அதில் இருந்தது நாளைய தேதி....

ஏன் ? அவனுக்க குறிப்பு இதா ? இல்லை எதார்த்தமாக விழுந்ததா ? தடதடவென்று அவனது அறை கதவு தட்டபட தேவ் விழிகள் பதறியது.

நெருங்காதே என்னவளே....


வாழ்க்கைல சில விஷயங்கள் கடக்க முடியாதுன்னு நினைக்குறீங்களா ? இப்போ நீங்க கடந்து வந்த பழைய பாதையை திரும்பி பார்த்தா எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்த உங்களால இத கடக்க முடியாதா ? (நம்பிக்கை அதானே எல்லாம்)...

காத்திருப்புடன்
ஷா சங்கரி...😍

கதை பற்றின கருத்துக்களை மறக்காம பகிர்ந்துக்கோங்க கண்மணிகளே...😍
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெருங்காதே என்னவ(னே)ளே...

நெருங்காதே - 2

பெண்ணே யார் நீ ....?
உன் கோபத்தின் பின்னால் உள்ள வலி என்ன ?
என்னை துடிக்க துடிக்க
வலிக்க வைக்கிறாயே ஏன்...?
விடை தேடி நான் ...
விடையை அறியவிட மறுக்கும் நீ ....?

தூங்கிகொண்டிருந்த தீபாவிற்கு இடி மின்னலின் சப்தத்தில் முழிப்பு வர சட்டென்று எழுந்து அமர்ந்தார்.தொண்டை வரண்டது போல் இருக்க, தண்ணீரை குடித்து விட்டு படுத்து கொண்டார்.

படுக்கும் பொழுது தான் கணவர் அருகில் இல்லாததை கண்டவுடன்,மணியை பார்க்க அது ஒன்று என காட்டியது."என்னாச்சு இவருக்கு ? மணி ஒன்னாகுது இன்னும் வீட்டுக்கு வராம இருக்காரு?இந்த மனுஷனுக்கு வெளிய போனா போதும் வீட்டு நியாபகமே வராதே.இவ்வளவு நாள் ஒன்பது மணிக்கே வர்றவர் இன்னும் வரலையே.பிரச்சனைன்னு வேற சொல்லிட்டு போனாரே" என்று வாய்விட்டு புலம்பியர் மனதில் கோபமும் கவலையும் ஒருங்கே தோன்றியது.

உடனே அலைபேசியை எடுத்து கணவருக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே சொன்னது.

'எத்தனை மணி ஆனாலும் இவரு போனை அணைக்க மாட்டாரே.பேசாம தேவை போய் பார்த்துட்டு வர சொல்லுவோம்'என்று எண்ணியவர் உடனே மாடியேறி மகனின் அறைக்கதவை தட்டினார்.

அதே நேரம் காலண்டர் பேப்பரை கையில் வைத்து கொண்டிருந்த தேவ்-ஐ கலைத்தது அந்த ஒலி.

உடனே சென்று பதட்டததுடன் கதவை திறந்தான்.அங்கே அதைவிட பதட்டமாக நிற்கும் தாயை கண்டான்.

"என்னாச்சும்மா ?" என்று வேகமாக கேட்ட, "இல்லடா மணி ஒன்னாச்சு.உங்க அப்பாவை இன்னும் காணோம்.எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா கண்ணா.இது வரை உங்கப்பா இப்படி பண்ணதே இல்லடா .நீ நம்ம ஹோட்டலுக்கு போய் அப்பாவை பார்த்துட்டு வர்றியா? " என்று கேட்டார்.

"நான் உடனே போய் பார்த்துட்டு வரேன்மா" என்றவன் வேகமாக பாத்ரூம் சென்று முகத்தை அடித்து கழுவி விட்டு தூவாலையால் துடைத்தவன் கீழே விரைந்தான்.அவன் பின்னால் பதைபதைப்புடன் தீபாவும் இறங்கினார்.

கீழே சாவி மாட்டும் இடத்தில் அவன் கார் சாவியை தேட அது அங்கே இல்லை.உள்ளே நுழையும் போதே தாயுடன் பேசிக்கொண்டே சாவியை அங்கு மாட்டியது அவனுக்கு நன்கு நினைவில் இருந்தது.உடனே கனவு நியாபகம் வர ,"அம்மா ஒரு நிமிஷம்" என்றவன் ஓடிச்சென்று தனது தலையணை மேல் பார்க்க அவனது சாவி அங்கே இருந்தது.அதை கண்டவன் அதிர்ந்து போனான்.

ஏதோ விபரீதம் நடக்க போகிறதோ என்று கனவை நினைத்து உள்மனம் பயம் கொண்டது.அந்த நேரம் கீழேயிருந்து தீபா ,"கண்ணா.என்னாச்சு? " என்று குரல் கொடுக்க பின்னந்தலையை தட்டு விட்டு கீழே விரைந்தான்.

ஓடிச்சென்று காரை எடுத்தவன் அதே வேகத்துடன் காரை ஓட்ட மழையோ நான் விடுவேனா என்பது போல் வெளுத்து வாங்கியது.

அந்த மழையிலும் லாவாகமாக வண்டியை செலுத்தினான்.திடீரென அவன் கனவில் கண்ட இடம் நெருங்க இவன் மனமோ அடித்து கொண்டது.பயத்தில் காரை இன்னும் வேகமாக செலுத்த கார் காற்றை கிழித்து கொண்டு பறந்தது.

கார் அங்கு நின்று விட கூடாதே என்று பயந்தவன் ,வேகமாக செலுத்தியவன் விழியில் ரோட்டின் நடுவில் ஒரு உருவம் தெரிய பதறி போனான்.காரை நிறுத்த முயற்சிப்பதற்குள் அந்த பெண் மேல் கார் ஏறியிருந்தது."வீரா" என்ற குரல் கார் ஜன்னல்கள் அடைக்கபட்டும் அவன் காதுகளை தீண்டியது.

கார் சட்டென்று நிறுத்து விட்டு, வேகமாக குரல் வந்த திசையை நோக்கி ஓடினான்.அங்கே யாரும் இல்லை.ஒரு நிமிடம் அவனது உடல் உதறியது.சுற்றி பார்க்க அங்கு ஒருவர் இருந்ததற்கான தடமே இல்லை.

அவன் பின்னால் சிவப்பு நிறத்தில் உடையில் ஒரு பெண் நின்றிருந்தாள்.இடைவரை நீண்டிருந்த கூந்தலில் ஒருபாகம் அவளது பாதி முகத்தை மறைத்திருந்தது.மீதி பாதி முகமோ அவள் நிலவின் மறூபாதியோ என்னும் அளவு பளிங்கு போல் வெண்மையாக இருந்தது.அவள் இவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்.அவள் புன்னகை கோபப்புன்னகையாய் இருந்தது.

அவன் சுற்றி தேடியவன் பின்னால் திரும்ப அதிர்ந்து போனான்.இப்போ தானே பின்னாடி திரும்பிட்டு திரும்புனேன்.அதுக்குள்ள இவ எங்கயிருந்து குதிச்சா என்று நினைத்து கொண்டு அவளை அதிர்ந்து நோக்கினான்.

"ஏய் யார் நீ?" என்று கேட்க இவளோ அமைதியாக ஒவ்வொரு எட்டாக அவனை நோக்கி நடந்தாள்.

"நெருங்காதே" என்றவனை ஆழமாக பார்த்தாலே ஒழிய அவள் முன்னோக்கி வருவதை நிறுத்தவில்லை.

நேராக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தவளின் கண்கள் மெல்லிதாக சிகப்பேற கருவிழிகளில் வெண்மை படற அதிர்ந்து போனான் தேவ்.

"நோ" என்று கத்தியவன் கண்களில் அப்பட்டமான பயம் மட்டுமே.சட்டென்று விலகி ரோட்டின் அடுத்த ஓரத்தில் அவள் நடக்க தேவ் செயல் இழந்து நின்று கொண்டிருந்தேன்.

எதிர் திசையில் ஒரு கருநீல நிற ஸ்விப்ட் கார் வர அவள் அந்த காரை வெறித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

மழை அடித்து ஊற்றியதில் அவனுக்கு ஊசி குத்துவது போல் வலித்தது.ஆனால் அவனால் செயல்பட இயலவில்லை.கைகளும் கால்களும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.

ஆம், அந்த மாயபெண்ணின் கட்டுக்குள் இருந்தான் தேவ்.

அவன் மூளையும் செயல்பட மறுத்தது. இதுவரை ஆத்மா என்பதை கட்டுகதை என்று எண்ணி கொண்டிருந்தவன் தனது கண்களால் அதை காணும் போது அறிவு தோற்று போனது என்பதே உண்மை.

அந்த நீல நிறகார் வேகமாக வந்து கொண்டிருந்தது.அவளின் முகம் ஜொலித்தது.கார் நெருங்கி வரவே அந்த பெண்ணை கண்டவர் அதனை நிறுத்த முயற்சிக்க கார் கட்டுபாட்டை மீறி அந்த பெண்ணின் அருகில் செல்ல அந்த பெண் தன் சுட்டு விரலை நீட்ட அந்த கார் சுட்டு விரலில் மோதிய கார், மரத்தில் மோதியது போல் தெரித்து முன்புறம் முழுவதும் நொறுங்கி அருகில் இருந்த மரத்தில் இடித்து நின்றது.

அடுத்த நிமிடம் தேவ் விடுபட்டது போல் உணர "அப்பா " என்ற அலறலுடன் ஓடினான்.

அங்கே காரின் முன்புறம் இருந்த அறுபது வயது மதிக்கதக்க மனிதர் காருடன் சேர்ந்து அமிழ்ந்து இருக்க,பின்னால் இருந்தவர் முன்புற சீட்டு கம்பியில் நன்றாக இடித்துகொண்டு கால்கள் சீட்டின் அடியில் சிக்கிய படி மயங்கி கிடந்தார்.

கண்களின் அவனையறியாமல் கண்ணீர் வர ,"அப்பா " என்று அவன் அலறியது அந்த இடத்தையே உலுக்கியது.ஆம் அது அவனது தந்தை ரத்தினம்.

உடனே அவனது காருக்குள் விரைந்தவன் அவனது அலைபேசியை எடுத்து நூற்றி எட்டிற்கு அழைத்தான்.

மறுபுறம் அது எடுக்கபட விவரங்களை தெரிவித்தவன் மறுபுறம் சரி என்றதை கேட்டு அதை அணைத்தவன் தனது பாக்கெட்டில் வைக்க அது பாக்கெட்டில் இல்லாமல் கீழே விழுந்திருந்தது.அவனே பதட்டத்தில் தந்தையை மீட்க அவரை நோக்கி சென்றான்.

அந்த கார் இருந்த இடம் முழுவதும் மழைநீரில் இரத்தம் கலந்து செந்நீராய் ஓடியது.அதை பார்த்த தேவ்-ன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.யார் நீ ? என்று கோபத்தில் அவன் கத்தினான்.

சட்டென்று அவன் அருகில் தோற்றிய அந்த பெண் அவனது தொண்டையை தனது வலது கையால் நெரித்தாள்.மிக சாதாரணமாக அவனை தரையில் இருந்து ஒரு அடி தூக்கிவிட்டிருந்தாள்.

கழுத்தை நெரிக்கும் வேளையில் மூளை செயல் இழந்து கை,கால்களை உதைத்து வெளிவர முயன்றான்.அவன் செய்த முயற்சிகள் எதுவும் துளி கூட அவளை பாதிக்கவில்லை.நிமிர்ந்து தேவ் முகத்தை நோக்கியவள் "உன்னால என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாமா என்ன?"
என்று கேட்டாள்.

அவள் விழிகளை பார்த்த தேவ் முகமோ வெளிப்போனது.கண்கள் சிவந்து கோரமாக மாறிகொண்டிருந்தவள் இவன் முன் சாதாரண மங்கை போல் நின்றிருந்தாள்.

அவனுக்கு மூச்சு முட்டியது.அவன் கண்கள் அவளுக்கு எதையோ சொல்ல,அவனை மெல்ல கீழிறக்கியபடி,அழுத்தத்தை குறைத்தாள்..அடுத்த நொடி அவனை கீழே இறக்கி விட்டு மறைந்திருந்தாள்.

அவள் கண்கள் அரை நொடிக்கும் அதிகமாக அவனை பார்த்து என்ன சொன்னது என்பதை தான் அவனால் உணர முடியவில்லை.

அவள் மறைந்த அடுத்த நொடி தந்தை இருந்த காரை நோக்கி ஓடினான்.அதே நேரம் அங்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தது.

தேவ் - உடன் ஓட்டுநரும் மற்றொருவரும் சேர்ந்து மெதுவாக காரில் இருந்து இருவரையும் பிரிக்க முயன்றனர்.

கார் ஓட்டுநரை வெளியே எடுக்க அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது.'அங்கிள் உங்களுக்கா இப்படி ஒரு நிலமை' என்று எண்ணி மனதால் வருந்தினான்.

இருக்காதா பின்னே பல வருஷமாக அவர்களுக்கு கார் ஓட்டுபவராயிற்றே அந்த முத்தையா.

அடுத்து பின்னிருந்து தந்தையை வெளியே எடுக்க கண்ணீர் அவன் அனுமதியின்றி வழிந்தது.

அருகில் இருந்தவரே "அழாதீங்க தம்பி.ஒன்னும் ஆகாது.சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனும்.அப்போ தான் நல்படியா காப்பாத்த முடியும்" என்றவர் அவனை சமாதானப்படுத்தி இருவரையும் ஆம்புலன்ஸ்-ல் ஏற்றினார்.

ஆம்புலன்ஸ் செல்ல அதனை தனது காரால் பின் தொடர்ந்தான்.மருத்துவமனை அடைந்ததும் அங்கிருந்தவர்கள் அங்கே அவனது தந்தையை ரத்தினத்தை அவசர சிகிச்சை பிரிவிலும் முத்தையா-வை பிரேத பரிசோதனைக்கும் அழைத்து செல்ல செயல்பட இயலாமல் அமர்ந்து விட்டான்.

அவனது மூளை மறத்து போனதென்னவோ உண்மை.

அந்த நேரம் அங்கே போலீஸ் நுழைந்து விசாரிக்க அவன் மூளையோ 'கண்டிப்பா நடந்ததை சொன்னா யாரும் நம்ப போறது இல்ல...பேசாம பொய்யே சொல்லிடலாம்' என்று எண்ணிக்கொண்டான்.

காவல் துறை அதிகாரி அவன் அருகில் வந து,"ஆக்ஸிடண்ட்-னு சொன்னாங்க எப்படி ஆச்சு ? நீங்க யாரு அவருக்கு ? " என்று கேட்டார்.

"அவரு என்னோட அப்பா சார்..ஹோட்டல் வச்சுருக்கோம்..வழக்கமா எட்டு மணிக்கே வந்துருவாரு.இன்னைக்கு அக்கவுண்ட்ஸ் பார்க்கணும்னு போனவரு இரண்டு மணியாகியும் வரல.அதான் அவர தேடி போனேன் சார்..வழில அவங்க கார் அங்கிருந்த மரத்துல இடிச்சு முன்பக்கம் முழுவதும் நசுங்கிருச்சு சார்" என்றவன் கண்களில் நடந்ததை எண்ணி பயம் தந்தையையும் ,முத்தையாவையும் நினைத்து கண்ணீரும் ஒருங்கே வந்தது.

"அங்க நீங்க போகும் போது எதிர் வேகமாக ஏதாச்சு வண்டி வந்ததை பார்த்தீங்களா?இல்ல வேற யாராவது இருந்தாங்களா ?" என்று கேட்டான்.

"இல்ல சார் யாரும் இல்ல.அதோட நல்ல மழை நானே கஷ்டபட்டு தான் வண்டி ஓட்டிட்டு போனேன்" என்று கூறினான்.

"சரி ஆக்ஸிடெண்ட் ஆன இடம் கார் நம்பர்-லா எழுதி ஒரு கம்ப்ளைண்ட் குடுத்துடீங்கன்னா நல்லா இருக்கும்" என்றார்.

"நாளைக்கு நானே வந்து தரவா ?" என்று கேட்டவனை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவர்," சரி இப்போ ஆக்ஸிடெண்ட் நடந்த இடமும் கார் நம்பரும் சொல்லுங்க.நாளைக்கு காலைல ஸ்டேஷன் வந்துருங்க" என்று அவனிடம் தகவலை பெற்று விட்டு கிளம்பினார்.

ஐ.சி.யூ-வில் அவன் தந்தைக்கு அவசர சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்க அதன் வாசலில் இருந்த நாற்காலியில் 'பொத்' என அமர்ந்தான்.

அவன் உடலில் ஒவ்வொரு அனுவிலும் ஊசி குத்துவதை போல் உணர்ந்தாலும் அவனால் செயல்பட முடியவில்லை.

அவன் உடல் வலியை விட மன வலியே அதிகமாக இருந்தது.அவன் கண்களில் கண்ணீர் இறங்கினாலும் அவன் கண்ணத்தை தாண்டவில்லை...அதை அவன் உணரும் நிலையிலேயே இல்லை...

அங்கே தீபா-வோ கடைக்கு சென்ற கணவனையும் காணோம்.கணவனை தேட சென்ற மகனையும் காணோம் என தவித்து போனார்.

இருவரின் மொபைலும் ஒரு சேர அணைத்து வைக்கபட்டிருப்பதாகக் கூறியது.

தீபா மிகவும் தவித்து போனவராக இருந்தார்.கடைசியில் அவனே சரணாகதி என்பது போல் கடவுள் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

அங்கு புல்லாங்குழல் கையில் வைத்தபடி நீலநிறக்கண்ணன் புன்னகையுடன் இருந்தார்.

"கண்ணா " என்ற குரலுடன் கைகூப்பி கண்ணன் அமர்ந்து கொண்டார்.

"கண்ணா கண்ணா" என்று அவர் குரல் அசைபோட்டு கொண்டே இருந்தார்.அங்கு விபரீதம் தான் என்று அவர் மனம் அடித்து சொன்னது.

"நான் என் பாவம் பண்ணேன் கண்ணா.முடியலையே என்னால ரொம்ப வலிக்குதுப்பா.இரண்டு வருஷம் முன்னாடி என்னோட பையன் அப்படி கிடந்தான்.இப்போ என்ன நிலமைன்னு கூட தெரியாம இப்படி உட்கார வச்சுட்டியேப்பா" என்றவரின் கண்ணீரையும் கண்ணன் அதே புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார்.

அவரது குரல் கண்ணனை எட்டியதா? கண்ணனின் கணக்கு தான் என்னவோ?
ரத்தினம் மீண்டு வந்தாரா?

நெருங்காதே என்னவளே...


புன்னகைத்து பழகுங்கள்...உங்களோட ஒரு சின்ன புன்னகை ஒருத்தர் எவ்வளவு வருத்தத்தில் இருந்தாலும் அவரை ஒரு நிமிட நிம்மதியாவது தந்துவிடும்...

கருத்துக்களை மறக்காம பகிர்ந்துக்கோங்க கண்மணிகளே...

காத்திருப்புடன்,
ஷா 😥😍
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


என் இரத்தத்தால் எழுதபட்ட
காவியம் உன் இரத்தம் கலந்த பின்
சரித்திரம் ஆனதோ.....?
சரித்திரத்தை நீ
உணரும் போது உன் நிலை என்ன
என்னவனே....?


ஐ.சி.யூ-வில் இருந்து அவசரமாக வெளியே வந்த நர்ஸ் அவனை நோக்கி,"சார் நீங்க தான் தேவ்வா?" என்று கேட்டாள்.

"ஆமாம் மேம்..என்ன ஆச்சு ?" பதட்டம் அவனையும் தொற்றி கொண்டது.

"அவரு உங்க கிட்ட ஏதோ சொல்ல முயற்சி பண்றாரு..தேவ் தேவ்-னு புலம்பிட்டே இருக்காரு. சீக்கிரம் உள்ள வாங்க" என்று அவனையும் அழைத்து சென்றார்.

உள்ளே நுழைந்தவன் கண்கள் தந்தையின் மேல் அதிர்ச்சியாய் படிந்தது.கால்கள் மற்றும் தலை முழுக்க கட்டுடன் முகத்தில் மூச்சிற்காக ஆக்ஸிஜன் மாஸ்க்-குடனும் படுத்திருந்தார்.

அடுத்த நொடி அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது."அப்பா " என்றவன் வேகமாக அவர் படுக்கையின் அருகே சென்றான்.

தேவ்வை பார்த்ததும் அவர் கண்களில் ஒருவித அழைப்புறுதல்.எதையோ சொல்ல துடித்தார்."தே....வ்..........அவ........ஆத்......மா... ஆஆஆஆஆஆஆ" என்ற கோர்வையில்லாத வார்த்தைகளை உதிர்த்தவரின் கண்கள் தாமே மூடிக்கொண்டது.

"அப்பா " என்று கத்தியவனை பார்த்த மருத்துவர் ,"கொஞ்சம் வெளிய போங்க"என்று பதட்டத்துடன் கூறவே நகர மறுத்த கால்களை நகர்த்தி வெளியே விரைந்தான்.

வெளியே வந்தவனுக்கு தாயின் நினைவு எழ 'அம்மாக்கு விஷயத்தை சொல்லலையே' என்று எண்ணியவன் தனது அலைபேசியை தேட அவனது பாக்கெட்டில் அது இல்லை.உடனே காரை நோக்கி விரைந்து சென்றான்.

காரில் அலைபேசியை தேட அது அவன் கையில் அகப்படவில்லை.'ஒரு வேளை அங்க இருந்த பதட்டத்துல தொடச்சுருப்பேனோ' என்று எண்ணியவன் நேரத்தை கடத்தாமல் கார் கதவை மூடினான்.மூடியவன் கண்ணாடி வழியே எதுவோ தெரிவது போல் இருக்க உள்ளே பார்த்தான்.அங்கே அவனது இருக்கையில் சிகப்பு நிற பைல்(file) அவனுக்கு தெரிந்தது..
மீண்டும் காரின் கதவை திறக்க அந்த இடம் வெறிச்சோடி இருந்தது.'ஏதாச்சு கனவு கண்டேனா' என தலையில் தட்டியபடி ரிசப்ஷனை நோக்கி ஓடினான்.


அங்கிருந்த லேன்ட் லைன்-ஐ பார்த்தவன் அருகிலிருந்த நர்ஸிடம் "நர்ஸ் கொஞ்சம் வீட்டுக்கு கால் பண்ணிக்கவா ?" என்று அவசரமாக கேட்க அவனது அவசரத்தை கண்ட அந்த பெண் ,"பண்ணிக்கோங்க சார்" என்று தனது வேலையை பார்க்க தொடங்கினார்.

வேகமாக தனது வீட்டு லேன்ட் லைனுக்கு அழைத்தான்.

தீபா கண்டிப்பாக இது மகனின் அழைப்பு தான் என ஓடி சென்று அழைப்பை ஏற்றார்.

"கண்ணா " என்று அழைத்தார்.

"அம்மா" என்றவனுக்கு தாயிடம் எப்படி விஷயத்தை சொல்வது என ஒரு நொடி தயங்கினான்.

அதற்குள் தீபா,"கண்ணா அப்பாவுக்கும் உனக்கும் ஒன்னும் இல்லைல" என்று பதறினார்.

தாயின் பதட்டமான குரல் செவிகளை தீண்ட,"அம்மா எனக்கு ஒன்னும் இல்ல.அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு.இப்போ ஜி.ஹெச்(G.H) -ல அட்மிட் பண்ணிருக்கேன்.அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதும்மா..ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கு"என்றபடி சூழ்நிலையை தாய்க்கு விளக்கினான்.

தீபாவின் கண்களில் கண்ணீர் வழிய,"கண்ணா எனக்கு அப்பாவை பார்க்கனும்டா" என்றவர் குரலில் அத்தனை வலி.

"அம்மா,அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதும்மா.நான் உங்களை கூப்பிட வரேன்.நீங்க ரெடியா இருங்க"என்றவன் எதிர்திசையில் சம்மதம் வர காரை எடுத்து கொண்டு வீடு நோக்கி விரைந்தான்.

அரைமணி நேர தூரத்தை பத்து நிமிடத்தில் கடந்தவன் வீட்டிற்கு சென்று தாயை ஏற்றி கொண்டான்.

வழி நெடுக அழுது கொண்டே வந்தவரின் கண்ணீர் அவனுக்கும் வலித்தது."அம்மா அழாதீங்க" என்றவன் ஸ்டியரிங்கில் இருந்த இடது கையை தாயின் கை மீது ஆதரவாக வைத்தான்.

"இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இப்படி தான் உயிர கைல பிடிச்சுட்டு இதே ஹாஸ்பிடலுக்கு போனேன்.ஏன்டா நம்ம குடும்பத்துக்கு மட்டும் இப்படி நடக்குது.என்னால முடியலடா கண்ணா" என்றவர் குலுங்கி அழ தாயை எப்படி சமாதானபடுத்த என தெரியாமல் காரை வேகமாக செலுத்தினான்.

"அப்பா-வை பார்த்தியா ? அப்பாவுக்கு ஒன்னும் இல்லல்ல" ஒன்னும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று வேண்டியபடி மகனிடம் கேட்டார்.

"அப்பாவுக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னேன்லம்மா.அப்பாவுக்கு எதுவும் ஆகாது .நீங்க அழுது அழுது உங்களுக்கும் எதுவும் வரவச்சுக்காதீங்க"என்றான்.

"இல்ல கண்ணா நான் அழல.உங்கப்பா என்ன விட்டுட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டாரு..சீக்கிரம் எழுந்துருவாரு பாரு" என்று தன் கண்ணீரை துடைத்து கொண்டார்.

"இது தான் என்னோட அம்மா" என்று எண்ணியவன் மயங்கிய தந்தைக்கு என்ன ஆனதோ என்று எண்ணியபடி காரை மருத்துவமனைக்கு விரைந்து செலுத்தினான்.

என்னதான் மகன் முன் தன்னை சமாதானப்படுத்தி கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் அவரது இதயம் வலிப்பதை அவர் மட்டுமே அறிவார்.மகன் மிகவும் பதட்டபட கூடாதே என்று கவலை கொண்டவர் தன்னை நிதானமாக காட்டி கொண்டார்..

வேகமாக கார் செல்லும் வழியில் இருந்த சார்லஸ் மருத்துவமனையின் முன் கூட்டம் கூடியிருக்க கார் சற்று தேங்கியது.

அந்த நேரம் அந்த மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் இவன் அருகில் நின்று விடாமல் ஹாரனை ஒலிக்க விட தேவ் ஒரு நொடி இடி தன் மேல் பாய்ந்தது போல் அலறினான்.

"கண்ணா என்னாச்சு டா?" என தீபா கேட்க அவனிடம் பதில் இல்லை.

அவன் தலைக்குள்ளோ ,"இதே ஆம்புலன்ஸ்-ல் இவன் உடை முழுவதும் ரத்தத்துடனும் பாதி கண்கள் மூடியபடி படுத்து கொண்டிக்க அவன் அருகில் நவ்தீப் நின்று,"உனக்கு ஒன்னும் ஆகாதுடா மாப்ள நா இருக்கேன்" என்ற குரலும், நவ்தீப்-ன் உருவமும் நிழலாக தெரிந்தது.

மின்னல் வெட்டியது போல் அந்த காட்சியும் குரலும் அவனை விதிர்க்க செய்தது.உடல் முழுவதும் அந்த மழையிலும் வேர்த்து வழிய அமர்ந்திருந்தான்.

ஆம்புலன்ஸ் உள்ளே சென்று அந்த இடம் கிளியர் செய்ய பட்ட பின்னும் அவன் கார் நகராமல் இருக்க பின்னிருந்த அனைத்து வண்டிகளில் இருந்தவர்கள் விடாமல் ஹாரனை ஒலிக்கவிட்டனர்.

"கண்ணா " என தீபா சத்தமாக அழைத்து அவனை உலுக்க தேவ் கண்களை மெதுவாக விருப்பம் இல்லாமல் திறந்தான்.

"ரோடு கிளியர் ஆகிடுச்சு பாரு டா.பின்னாடி எல்லாரும் ஹாரனை அடிச்சுட்டே இருக்காங்க வண்டியை எடு டா" என உரைத்து கூற சற்று நிதானம் பெற்றான்.

அதற்குள் அவன் ஜன்னல் அருகே வந்த ஆட்டோ ஒன்று ,"என்னைய்யா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்ல.இந்த மழைல நடு ரோட்டுல வண்டிய நிப்பாட்டி வச்சு கனவு கண்டுட்டு இருக்க? சாவுகிராக்கி உனக்கெல்லாம் எதுக்கு வண்டி" என்றவர் திட்டிவிட்டு செல்ல அந்த நினைவில் இருந்து கலைந்தவன் வண்டியை எடுத்தான்.

மகனின் முகத்தில் குழப்பத்தை கண்டவர்,"கண்ணா என்னாச்சு ?" என கேட்க ஒன்னுமில்லம்மா என்றவன் காரை வேகமாக செலுத்தினான்.

பத்து நிமிடத்தில் மருத்துவமனையை அடைய விரைந்து இறங்கியவர்கள் ஐ.சி.யூ-வை நோக்கி நடையை எட்டி போட்டனர்.

ஐ.சி.யூவாசல் வந்ததும் தீபா கண்கள் கலங்க மகனின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டார்.

தாயின் இறுகிய பிடியை வைத்து அவரின் பதற்றத்தை உணர்ந்தவன் "அம்மா அப்பாவுக்கு ஒன்னும் இல்லை.முதல்ல உட்காருங்க" என்று அமர வைத்தவன் தாயின் கைகளை ஆறுதலாக பற்றி கொண்டான்.மகனின் தோளில் சாய்ந்து மௌனமாக கண்ணீர் வடித்து கொண்டிருதார் தீபா.

அவசரமாக வெளியே வந்த நர்ஸ்,"அவர்களை கண்டு சார் இந்த மருந்தெல்லாம் வேணும் வாங்கிட்டு வந்துருங்க சீக்கிரம்" என்றவர் ஐ.சி.யூ-விற்குள் சென்று மறைந்தார்.

வேக நடைகளால் மருந்தகத்தை அடைந்தவன் நர்ஸ் கொடுத்த சீட்டில் இருந்த மருந்துகளை வாங்கி வந்தான்.

ஐந்து நிமிடத்தில் வெளியே வந்த நர்ஸ், அவனிடம் இருந்த மருந்துகளை வாங்கி கொண்டு உள்ளே வரைந்தார்.

மேலும் அரைமணிநேரம் கழித்து வெளியே வந்த டாக்டரின் முகம் குழப்பத்தில் இருந்தது.

அவரை கண்ட தீபா,"டாக்டர் அவருக்கு ஒன்னும் இல்லைல்ல? " என்று பதட்டமாக கேட்டார்.

"நீங்க?" என கேட்க ,"நான் அவரோட மனைவி இது என்னோட பையன் தேவ்" என அவசரமாக கூறினார்.

"மிஸ்டர்.தேவ் உங்ககிட்ட பேசும் போது நினைவு இருந்துச்சு.ஆனா பேசிக்கிட்டு இருக்கும் போதே அவரோட நினைவு தப்பிருச்சு.அது நடக்க வாய்ப்பு இல்ல.ஆனா இப்போ அவர் இருக்க நிலமை எங்களுக்கு குழப்பமா இருக்கு" என்று தன் மனதில் இருந்ததை கூறினார்.

"சரி டாக்டர்.அப்பாவை எங்களோட பேமிலி டாக்டர் ஹாஸ்பிடல்-ல அட்மிட் பண்ணலாம்னு நினைக்குறேன்..இப்போ அப்பா இருக்க உடல் நிலைல அப்பா-வை வேற ஹாஸ்பிடலுக்கு மாத்த முடியும்ல" என்று தந்தையின் நிலையை விசாரித்தான்.

"கண்டிப்பா கூட்டிட்டு போகலாம்" எனவும் தனது குடும்ப மருத்துவருக்கு அழைத்தவன் உடனே ரத்தினத்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான வேலைகளை துரிதபடுத்தினான்.

அடுத்த அரைமணி நேரத்தில் ரத்தினம் சார்லஸ் மருத்துவமனையில் வி.வி.ஐ.பி பிரிவில் சேர்க்கபட்டிருந்தார்.

அங்கே அவரது குடும்ப மருத்துவர் ரத்தினத்தை பரிசோதித்து விட்டு ரத்தினத்தின் மருத்துவ அறிக்கைகளையும் பார்த்த ஜார்ஜ் ரத்தினத்தின் தோழன்.

"தேவ் ரத்தினத்துக்கு சில டெஸ்ட் எழுதி கொடுத்திருக்கேன்.அதோட ரிசல்ட் எல்லாம் வந்ததும் என்னன்னு சொல்றேன்.எனக்கு இத பத்தி இன்னும் தெளிவா தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு" என்றார்.

"அங்கிள் அப்பாவுக்கு சரியாகிடும்-ல" என்று கவலையாக வினவினான்.

"ரத்தினத்துக்கு நினைவு தப்புற அளவுக்கு சீரியஸ் இல்ல.ஆனா என்னன்னு சொல்ல இன்னும் ஸ்டடி பண்ணனும்.நீ கவலைபடாத..ரத்தினத்துக்கு நான் பொறுப்பு" என்று முடித்து கொண்டார்.

அவர் சென்றதும் அறைக்குள்ளே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் மனம் கனத்தது.

அங்கேயே அவனும் தீபாவும் தங்கி விட அவர்கள் அறியாமல் அங்கே அந்த ஆத்மாவும் இருந்தது.

அந்த ஆத்மாவோ மென்மையாக தேவ்வின் தலையை கோதி அவனை மென்மையாக பார்த்தது.

அந்த கோர ஆத்மா-வா இது என்பது போல் முகத்தில் அத்தனை கனிவு.

தேவ் தூக்கத்தில் தலை கோதுவதை உணர்ந்தவன் தாய் என்றே எண்ணினான்.அந்த நொடி அவன் மூளை ஏதோ வித்தியாசமாக தோன்ற கண் முழித்தான்.

தாய், தந்தை அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க ,'தலை கோதியது யார்?' என்ற சிந்தனை தோன்றியது.

அதை கலைப்பது போல் மூளையில் வெட்டிய நினைவுகள் நினைவு வர முதல்ல நவ்தீப்-ஐ பார்க்கனும்.இரண்டு வருஷம் எப்போ கேட்டாலும் வெளிநாட்டுலையே இருக்கான்.எனக்கு ஆக்ஸிடென்ட் ஆன அப்பறம் இருந்து அவன் என்ன சந்திக்கவே இல்ல..இந்த நினைவுகள் வேற' என்றவன் மனம் முதல் முதலாக தனது ஆக்ஸிடென்டை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினான்.

ஏனோ அதில் மர்மம் இருக்கிறது என அவனது மனம் அடித்து சொன்னான்.

அதே நேரம் அவன் முதுகில் சாம்பல் நிற கோர கரங்கள் அவன் முதுகை தடவ அதிர்ந்தான் தேவ்.

உடலெல்லாம் பதற்றம் பரவ அந்த ஏ.ஸி-யிலும் அவனுக்கு வியர்த்தது.

இரண்டு கைகளும் மெதுவாக முன்னேறி அவனது தோள் வழியாக முன்னே வர அந்த கைகளை கண்டவன் அதிர்ந்தான்.

சாம்பல் நிறத்தில் சுருக்கமற்ற கைகள்,கருமை படர்ந்த அந்த நகங்கள் கோரமாக இருந்தது.

சட்டென்று எழுந்து திரும்பி பார்க்க அங்கே அவன் கண்டது அவன் அவன் உயிர் உள்ள வரை மறக்க இயலாதது.

அங்கே வெண் புகைகளுக்கு நடுவே இரண்டு கோரமான கரங்கள் மட்டுமே....அவன் உள்ளமே பதறி போனது.அடுத்த நிமிடம் அந்த கரங்கள் அவனை நோக்கி வந்து கழுத்தை நெரிக்க தேவ் அதிர்ந்தான்.

அந்த கருமை படர்ந்த கட்டை விரல் நகம் அவன் கழுத்தை கீற அங்கே இரத்தம் வெளிவந்தது.

அந்த வெண் புகைக்கு நடுவில் முகம் வெளி வர, முகம் முழுக்க சாம்பல் நிறம் கொண்டும்,கண்கள் இரத்தத்தில் மூழ்கி எழுந்தது போலும் இருந்தது.

கைகள் இரண்டும் அவன் பின் தலையை அழுத்த ,அந்த முகம் அவன் கழுத்தருகில் வந்து நாக்கை நீண்டி இரத்தத்தை மென்மையாக வருட ,தேவ் கண்கள் வெளியில் தெரித்து மட்டுமே விழவில்லை.

அடுத்த நொடி அவன் முகத்தில் ஏதிரே அந்த கோரமான முகம் வர அவன் இதயம் தாளம் தப்பியது.

அந்த முகம் வாயை திறக்க அந்த கோர பற்கள் வெளி வர அரண்டு போனான்.அந்த நொடி.....


நெருங்காதே என்னவளே.....


சின்ன சின்ன ஆசைகளை தள்ளி போட்டு என்ன பண்ண போறோம்? இருக்குறது ஒரு வாழ்க்கை தான்...சின்ன சந்தோஷத்தை கூட முழுசா அனுபவிச்சு வாழுங்க...உங்க வாழ்க்கையை வேற யாராலையும் வாழ முடியாது இல்லையா...?

கருத்துக்களை மறக்காம பகிர்ந்துக்கோங்க....

காத்திருப்புடன்,
ஷா😍
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெருங்காதே - 4

உன் விரல் தடங்கள்
வலிப்பதை விட
இனிப்பது ஏனோ...?
நீ அருவமாய் இருக்கும்
போது உன்னை எனக்கு
உணர்த்துவது எது ?
தீபா ,தேவ் அருகில் சென்று தோள் தொட பட்டென்று எழுந்தான்.
"என்னாச்சு கண்ணா?.பொறுமை பொறுமை" என்றவர் அவர் தலையை கோதினார்.
"ஒன்னுமில்லம்மா " என்றான்.
"சரி நான் இங்க இருந்து அப்பா-வை பார்த்துக்குறேன்.நீ வீட்டுக்கு போய் பிரஷ் ஆகிட்டு எனக்கும் டிரெஸ் எடுத்துட்டு வா" என்று மகனை வீட்டிற்கு அனுப்பினார்.
இரவெல்லாம் அவள் தூங்காமல் விழித்திருந்ததை அவர் கண்களே காட்டி கொடுத்தது ,'அம்மா தூங்குனதை நான் பார்த்தேனே' என்று மனம் அவனை முரண்டியது.
இது கனவோ என்று தலையிலேயே தட்டி கொண்டான்.
தீபாவிற்கோ மகன் மறுபடியும் ஹாஸ்பிடலில் இருந்தால் பழைய நினைவு வந்து அவனை அழைக்கழிக்குமோ என்று பயம் கொண்டார்.
நவ்தீப்-ன் வார்த்தைகள் அவரை கவலை கொள்ள செய்தது."அம்மா அவனுக்கு பழைய நினைவுகள் எதுவும் நியாபகம் இல்ல.ஆனா பழசு எல்லாம் அவன் மூளைல இருக்கு.அதை நினைவுக்கு கொண்டு வர அவனோட மூளை முயற்சி செய்யும் .அதுவும் பழைய நிகழ்வுகள் நடந்த இடத்துக்கு வரும் போது அவனோட நினைவு தூண்டபட்டு பழைய விஷயங்கள் நியாபகத்துக்கு வர வாய்ப்பு இருக்கு.அப்போ அவனோட கேள்விகளுக்கு நம்ம கிட்ட பதில் இருக்காது..நான் கூட இருக்கும் போது அவனுக்கு நினைவு வந்துரும்னு பயந்து தான் நான் வெளிநாடு போறேன்.நீங்க அவன பத்திரமா பாத்துக்கோங்க" என்று வெளிநாடு கிளம்பி சென்றது அவரால் மறக்கவே முடியவில்லை.
அதனால் தான் அவனை மருத்துவமனையில் இருக்கவிடாமல் வீட்டிற்கு அனுப்பினான்.
"சரிம்மா டாக்டர் வந்தா அப்பாவுக்கு டெஸ்ட் பண்ண ரிசல்ட் எல்லாம் வந்துருச்சா ? இப்போ என்ன நிலை -ல இருக்காருன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க.நான் சீக்கிரம் வந்துடுறேன்" என்றான்.
"சரிப்பா" என்றவர் அவன் கிளம்பி சென்றதும் அவரது அண்ணனுக்கு அழைத்து கணவரது நிலையை கூறினார்.
தீபன் தீபாவின் அண்ணன்.ராகவி தீபனின் மனைவி.இனி அங்கு நடப்பவை...
"ராகவி" என்று தீபக் கத்தினார்.
"வந்துட்டேங்க.எதுக்கு இந்த கத்து?" என்று முறைத்தபடி வந்து நின்றார் ராகவி.
"அது என் மச்சினன் ரத்தினம் இருக்காருல்ல அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிருச்சு.சீக்கிரம் கிளம்பு போய் பார்க்கனும்" என்றார்.
ராகவியோ ,"அவரு மேல தான் உங்களுக்கு கோபமாச்சே.ஆனா இப்போ நீங்க பதட்டபடுறதை பார்த்தா சரியில்லையே" என்று சந்தேகமாக கேட்டார்.
"ராகவி உனக்கு கொஞ்சம் கூட விவரம் பத்தலை.இந்த நேரத்துல நம்ம கொஞ்சம் வருத்தபட்டுட்டு அப்படியே தேவரதன நம்ம பொண்ணு விபாவுக்கு கல்யாணத்தை பத்தி பிட் போட்டுட்டு வரலாம்னு பார்த்தா நீ இப்படி கேட்குற ? போக வேணாவா?" என்று கேட்டார் தீபன்.
"ஓ சார் அப்படி ப்ளான் போடுறீங்களா ? அப்போ சரி நான் போய் சோகமா கிளம்பிட்டு வரேன் " என்று கிளம்ப சென்றார்.
தீபனுக்கும் ,ராகவிக்கு தன் தங்கை மகனை மருமகனாக்கி கொள்ள கொள்ளை ஆசை.அது அவனது அழகையோ அறிவையோ பார்த்து அல்ல.அத்தனை சொத்தும் அவன் ஒருவனுக்கு என்பதை தெரிந்து கொள்ளை அடிக்க வந்த கொள்ளை ஆசை..
அதற்கு மிகப்பெரிய முட்டுகட்டையே அவன் தான்.அவனுக்கு ஆக்ஸிடென்ட் நடப்பதற்கு முன்பும் சரி பின்பும் சரி அவனத பதில் முடியாது என்பதாகவே இருந்தது.
"விபா எனக்கு தங்கச்சி மாதிரி மாமா.அவளை கல்யாணம் பண்ணிக்குறதை என்னால நினைச்சு பார்க்கவே முடியலை.ஐ திங் விபாவுக்கும் இப்படி தான் இருக்கும்.நீங்க அவளுக்கு வேற மாப்பிள்ளை பாருங்க." என்று தன்மையாகவே மறுத்தான்.
விபாவும் இந்த விஷயம் கேள்வி பட்டு தாய் தந்தையுடன் சண்டையிட்டாள்."அம்மா தேவ் எனக்கு நல்ல ப்ரண்ட்.அவனை சின்ன வயசுல இருந்து பார்க்குறேன்.எனக்கு அவன் மேல காதல் கீதல் எல்லாம் வரல.அவன கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்று மறுத்தாள்.
அதற்கு ராகவியோ ," விபா அதெல்லாம் போக போக சரியாகிடும்.நீங்க ஒன்னும் அண்ணன் தங்கை இல்ல புரிஞ்சுதா? அதோட அவனோட அழகு,அறிவு ,சொத்து இது மூனும் வேற யாருகிட்டயும் இருக்காது.எதையுமா ஒலராம போய் உன்னோட வேலையை பாரு.இத பத்தி நீ கவலைபட்டுட்டு இருக்காத." என்று மிரட்டலாகவே கூறினார்.
விபாவோ இதற்கு மேல் பேச முடியாது நடக்கும் போது பார்த்துகலாம் என்று அசால்டாகவே இருந்தாள்.
இவர்களுக்கு ஆசை விட்டால் தானே..அவன் விபாவை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என அவர்களுக்கு தடையாக.வந்ததை தகர்த்து கொண்டே இதுவரை வந்து விட்டனர்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்களா ?
என்ன தான் சொந்தம் என்று இருந்தாலும் சிலருக்கு உயிரற்ற காகிதங்களே வாழ்க்கையாகி விடுகிறது.
வீட்டிற்கு சென்று குளித்து கொண்டிருந்த தேவ்-விற்கு அந்த புகை வடிமம் நினைவு வர ,அதெல்லாம் கனவாக இருக்கும் என்று மனதை தேற்றி கொண்டான்.
இருந்தாலும் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது.சட்டென்று கழுத்தின் கீரல் நினைவு வர கழுத்தை மென்மையாக தடவி பார்க்க அந்த இடம் எரிந்தது.
சட்டென்று குளித்துவிட்டு வாஷ்பேசன் அருகே இருந்த கண்ணாடியில் சென்று கழுத்தை பார்க்க அவனது முகம் வெளிறியது.
அந்த இடம் சிவந்து போய் இருந்தது.நடுவில் கருப்பு நிற கீறல்.அதை பார்த்தவுடன் அந்த கோர முகமும் நாக்கும் அவனை பயம் கொள்ள செய்தது.
"வேணாம் எதுவும் நினைக்காத தேவ்.அப்பாவை பார்க்கனும்" என்று உரக்க தனக்கு தானே சொல்லி கொண்டவன் உடைகளை மாற்றிவிட்டு , தீபாவிற்கும் உடைகளை எடுத்து கொண்டு ஹாஸ்பிடலிற்கு சென்றான்.
அங்கே தீபா அழுது கொண்டிருக்க அவளை ,"ஒன்னுமில்லை தீபா.அண்ணன் நான் இருக்கேன்.மச்சானுக்கு ஒன்னும் ஆகாது.இத விட நல்ல ட்ரீட்மெண்ட் குடுப்போம்.மச்சானை குணப்படுத்துறது என்னோட பொறுப்பு" என்று தீபாவை தேற்றி கொண்டிருந்தார்.
"அதெல்லாம் வேணாம் மாமா...ஜார்ஜ் அங்கிளை விட யாரும் அப்பாவை நல்லா பார்த்துக்க முடியாது." என்று திட்டவட்டமாய் மறுத்தான்.
"சரி தேவ்.மச்சானுக்கு உடம்பு சரியில்லைன்னு பதற்றத்துல இப்படி பேசிட்டேன்" என்று உடனே ஒத்து கொண்டார்.
தீபாவை நோக்கி,"அம்மா டாக்டர் அங்கிள் என்ன சொன்னார்?"என்று கேட்டார்.
"டெஸ்ட் ரிபோர்ட் வர இன்னும் இரண்டு நாள் ஆகும் னு சொன்னார் கண்ணா.அதுகுள்ள அப்பா முழிக்க வாய்ப்பு இருக்கும்னும் சொன்னார்" என்று கூறினார்.
"அப்பா எவ்வளவோ கஷ்டத்தை தாண்டி வந்தவர் அம்மா.இதையும் தாண்டி வருவார்.எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றான்.
தேவ் அருகில் சென்ற தீபா அவன் தலையை கோதியபடி,"உன்னோட கல்யாணத்தை பார்க்கனும்னு தான் அவரோட மிகப்பெரிய ஆசை.அவர் முழிச்சதும் அதை பத்தி நீ யோசிக்கனும் கண்ணா.அவருக்கு மட்டும் இல்ல எனக்கும்" என்றார்.அவரது வார்த்தைகளில் ஏக்கம் அப்பட்டமாய் இருந்தது.
அந்த.நொடி அங்கே இருந்த குளுகோஸ் பாட்டில் பட்டென்று கீழே விழ அந்த சத்தத்தில் அனைவரது கவனமும் கலைந்தது.
அதை எடுத்து அதன் இடத்தில் பொருத்திய தேவ்,"அப்பா குணமாகும் வரை இதை பத்தி பேச மாட்டீங்கன்னு நம்புறேன் மா.இப்போ நீங்க அப்பாவை பார்த்துக்கோங்க.நான் கடைக்கு போறேன்" என்றான் அழுத்தமாக.
அவன் அழுத்தமான வார்த்தைகளை ஒரு முறை மீறியதால் வந்த விளைவுகள் தீபாவின் கண்களில் வலம் வர சரியென்று தலையசைத்தார்.
"போய்ட்டு வரேன் மாமா,அத்தை" என்று அவர்களை பார்த்து கூறியவன் அவர்களது பதிலை எதிர் பாராமல் வெளியேறினான்.
அவன் சென்றால் தான் தங்கையுடன் பேச வந்த காரியத்தை முடிக்க முடியும் என்று எண்ணி கொண்டார் தீபன்.
தேவ் சென்றதும் ராகவியிடம் கண் ஜாடை காட்ட அவள் தீபாவிடம் சென்று ,"அண்ணி நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுகாதீங்க.தேவ் என்னோட மருமகனா வந்தா நல்லா இருக்கும்.நீங்க ஏன் வெளிய இருக்க பொண்ணுங்களையே தேடுறீங்க.அவனோட பழைய கதை தெரிஞ்சும் நீங்க வேற பொண்ணை தேடுறீங்க.விபா-வை கட்டி வச்சா கூட அவ மேல சின்ன வயசுல இருந்தே பாசம் இருக்குறதுனால அது காதலா மாறி அவங்களோட இல்வாழ்க்கை நல்லா இருக்கும்..யோசிச்சு பாருங்க " என்று வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல் விஷயத்தை கூறினார்.
"யோசிக்குறேன் அண்ணி..அவனுக்கு விருப்பம் இல்லாம கட்டி வைக்க முடியாதில்லையா? பேசி பார்க்குறேன்.ஆனா அவருக்கு குணமாக பேசுனா அவ்ளோ தான் சூலம் இல்லாம சாமியாடிருவான்" என்று நிலமையை கூறினார்.
"இப்போவே சொல்லலை அண்ணி.யோசிச்சு முடிவு எடுங்க.அவ்ளோ தான்.இப்போ நமக்கு அண்ணா தான் முக்கியம் " என்று பேச்சை மாற்றினார்.
இங்கு காரில் ஏறிய தேவ்விற்கு தலை வலித்தது.இவங்க வந்தாலே தலைவலி வந்துடுது.ச்சை.என்று காரின் ஹான்டில்பாரில் அடித்தான்.
சட்டென்று அவன் மூளைக்குள் மின்னல் வெட்ட," நீ போற பாதை தப்பு தேவ்.இதுனால பாதிக்கபட போறது நீ இல்ல.நீ காப்பத்த நினைக்குறவங்க" என்று மங்கலாக ஒரு உருவம் அவனை மிரட்ட அவனக்கு உடல் ஒரு முறை உதறியது.
இந்த வலி இரு நாட்களாக வருவதை உணர்ந்தவன் அக்ஸிடெண்ட் ஆன போது அவனுக்கு மருத்துவம் பார்த்த நியூராலஜிட் வம்சியை சந்திக்க சென்றான்.
அங்கே அவன் செல்லும் போது அவர் ப்ரீ-யாக இருக்க உடனே அவரை சந்தித்தான்.
"ஹாய் டாக்டர் நான் தேவரதன்" என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டான்.
"ஹாய் தேவ்.உங்களை மறக்க முடியுமா?" என்று கேட்டார்.
"அப்படி என்ன டாக்டர் பண்ணி வச்சேன் ?" என்று சங்கடமாக வினவினான்.
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.உங்களுக்கு நான் எவ்ளோ முயற்சி பண்ணியும் பழைய நியாபகத்தை கொண்டு வர முடியலையே அத வச்சு சொன்னேன்" என்றார்.
அதற்கு அவனோ ," அத பத்தி தான் டாக்டர் பேச வந்தேன்.இப்போ ரெண்டு நாளா மூளை-ல மின்னல் வெட்டுற மாதிரி இருக்கு.சில விஷயங்கள் சில இடங்கள் எல்லாம் தெரியுது.அதோட தலைவலி பயங்கரமா வருது" என்றான்.
"வாவ் சூப்பர் தேவ்.உங்க மூளை பழைய விஷயங்களை உங்களுக்கு தெரிய வைக்குது .அதால ரொம்ப நாள் மறக்க வைக்க முடியாதுல்ல" என்றவர் அவனுக்கு சி.டி ஸ்கேன் எடுத்து வர சொல்லி எழுதி கொடுத்தார்.
இரண்டு மணி நேரத்தில் சி.டி ஸ்கேன் ரிப்போர்ட்-உடன் அவரை சந்திக்க அவரது கண்கள் அதிர்ச்சியை காட்டியது.
உங்களோட மூளை பகுதி-ல எல்லாமே சரியா இருக்கு தேவ்.கண்டிப்பா உங்களுக்கு நினைவுகள் தப்ப வாய்ப்பு இல்ல.எதுக்கும் ஒரு ஒரு வாரம் மாத்திரை தரேன்.எடுதாதுக்கோங்க" என்றார்.
உடனே தேவ்,"நீங்க குடுத்த மாத்திரை கூட இத எடுத்துக்கனுமா டாக்டர்?" என்று கேட்டான்.
உடனே வம்சி ,"வாட் தேவ்? உங்களுக்கு நான் மாத்திரை தரலையே " என்று அதிர்ந்தார்.அவர் கொடுத்தாக சொல்லி அவன் எடுப்பது அவருக்கு ஆபத்து அல்லவா அதான்.
"வாட் டாக்டர்.அப்போ அந்த மாத்திரை நீங்க கொடுத்தது இல்லையா? இரண்டு நாளா டென்ஷன்-ல அத எடுத்துக்கலை .அதுனால தான் எனக்கு நியாபகம் திரும்பி வருதா ? ஆனா நீங்க கொடுத்ததா அம்மா கொடுத்த அப்பறம் தானே அதை எடுத்துக்குறேன்"என்றவன் அந்த மாத்திரைகளின் பெயரை கூறினான்.
"தேவ் இந்த மாத்திரை எல்லாம் ட்ரக்ஸ் மாதிரி.உங்களோட மூளையை ரொம்ப சிந்திக்க விடாம பார்த்துக்கும்.ஐ திங்க் இந்த மாத்திரையை உங்களுக்கு இங்க இருக்கும் போது இருந்தே யாரோ கொடுத்திருக்கனும்.அதான் உங்களுக்கு பழசு எதுவும் நியாபகம் இல்ல.உங்க.வீட்ல யார் இத பண்றாங்கன்னு கண்டுபிடிங்க தேவ்" என்று வம்சி கூறியவர் அவனுடைய பைலை கொண்டு வர செய்து அதில் அவனுக்கு எந்த மாத்திரையும் தரவில்லை என்பதை உறுதிபடுத்தினார்.
"ஓகே டாக்டர்.இது என்னன்னு நான் பார்த்துக்குறேன்" என்றவன் வெளியேற போகும் போது "ஓரு நிமிஷம் " என்று அழைத்த வம்சி ,"இந்த மாத்திரை பவர் இன்னும் உங்களுக்கு இருக்கு தேவ்.இதை எடுக்காம இருக்கும் போது அப்போ அப்போ நினைவு வரலாம்.எதுக்கும் நீங்க ஒரு ஒன் வீக் அட்மிட் ஆனா உங்ஙளுக்கு பழைய நினைவை கண்டிப்பா என்னால திருப்பி தர முடியும்" என்று கூறினார்.
"தேங்க்ஸ் டாக்டர்.கண்டிப்பா சீக்கிரம் அட்மிட் ஆக வரேன்" என்றவன் அவரிடம் விடை பெற்றான்.
நேராக தந்தை அறை நோக்கி செல்ல அங்கே தீபா அவரை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
"அம்மா" என்று அழைத்தபடி அவரிடம் சென்றவன் அவரை அணைத்து.விடுவித்தான்.
"சொல்லு கண்ணா கடை-ல வேலை எல்லாம் முடிஞ்சுதா ?" என கேட்டார்.
"அதெல்லாம் முடிஞ்சது அம்மா. எனக்கு ஒரு மாத்திரை தர்றீங்களே அதை யாரு வாங்கிட்டு வருவா ?" என கேட்டான்.
"தீந்துடுச்சா கண்ணா.அப்பா தான் வாங்கிட்டு வருவார்.மருந்து சீட்டு கூட அவரை தான் வச்சிருக்கார் " என்றார்.
தேவ் அதிர்ந்து போனான்.
"அம்மா தலை வலிக்குற மாதிரி இருக்கு வீட்டுக்கு போறேன்" என்றபடி வீட்டிற்கு கிளம்பினான்.
அவனால் காரை ஓட்டவே முடியவில்லை.இத்தனை வருடம் தந்தை தான் அவனுக்கு நினைவு வர விடாமல் செய்து விட்டார் என அதிர்ந்து போய் இருந்தான்.
காரை ஓட்ட ஓட்ட அவனது கண்கள் சொருகியது.சட்டென்று அவனது கையை ஒரு வெண் புகை பிடித்து தள்ளி விட்டு காரை செலுத்தியது.அவன் மடி மீது யாரோ அமர்ந்திருப்பது போல் சுகமாய் இருந்தது அவனுக்கு.அந்த மயக்கத்திலும் அந்த புகையை பார்த்தான்.
"நெருங்காதே" என்றபடி மயங்கி போனான் தேவ்.
நெருங்காதே என்னவளே....
.ஒருத்தர் மேல கோபம் வரும் போது அவங்க.செஞ்ச சின்ன சின்ன விஷயங்கள் கூட பெருசா வந்து உங்களை இன்னும் கோபபடுத்தும்.அந்த நிமிடத்தை அமைதியா கடந்திருங்க.இல்லைன்னா ஒரு உறவை நீங்க இழக்க வேண்டி இருக்கும்.

மறக்காம கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க கண்மணிகளே...


காத்திருப்புடன்,
ஷா😍
 

Shasankari

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண்களை புசித்திடும்
வலியவனுக்கு
அவள் சதைகள்
தெரியும் அளவிற்கும்
மனம் தெரிவதில்லையே
கண்ணா.....


முகம் முழுக்க வெட்க பூக்களுடன் நின்றிருந்த யட்சினி.பொதுவாக யட்சினி என்பது பிசாசுகள் என மலையாளத்தில் கூறுவார்களாம்.அதே போல் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளிலும் யட்சினி என்பது பிசாசுகள் என்றே அழைக்கின்றனர்.இதை சில போலி மந்திரவாதிகள் யட்சினி யாகம் ,யட்சினியுடன் பேசுவது என பலவாறு ஏமாற்றி பணம் பார்க்கிறார்கள்.

உண்மையில் யட்சினி என்பது தேவதைகள்.யட்சனிகள் அறுபத்து நான்கு வகைகளாகவும் அவர்கள் அனைவரும் பெண்களாகவும் இருக்கின்றனர்.இவர்கள் குபேரனின் செல்வத்தை காக்கும் அழகு மிகுந்த தேவதைகள்.யட்சினி மனதர்களை விட சக்தி வாய்ந்தவங்களாம்.(நம்ம புள்ள பேர் மட்டும் தான் யட்சினி)

யட்சினி-யின் தந்தைக்கு புராணங்கள் சங்க இலக்கியங்களில் அதிக நாட்டம்.இந்து சமயபுராணங்கள் படித்து கொண்டிருக்கும் போது அதில் வந்த யட்சினி என்ற பெயர் அவருக்கு பிடித்து போனது.எனவே அவளது முதல் பெண்ணிற்கு அந்த பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.அச்சோ ரொம்ப நேரமா பேரை பத்தி பார்த்துட்டு இருக்கோம்.சரி வாங்க அவ ஏன் வெட்க பட்டான்னு போய் பார்ப்போம்).

வெண்ணிற முகம் முழுக்க இளஞ்சிவப்பு படர்ந்து தலை குணிந்தபடி இருந்தாள் யட்சினி.யட்சினி என்ற தேவதையின் பெயரை போல் அழகாக இருந்தாள்.ஐந்தடியில் வெண்மை நிறமும் மாசு மருவற்ற முகமும் கள்ளமில்லா உள்ளமும் அவளுக்கு அழகு.அந்த அழகுக்கு அவள் குறையாய் நினைப்பது அவளது உடலை மட்டுமே.சற்று பூசினாற் போல் இருந்தாலும் அவள் அழகே.புன்னகையின் போது விழும் கண்ணக்குழி விழுந்தது பல பேர்.ஆனால் அவள் விழுந்தது என்னவோ எதிரே இருந்த அந்த ஆணிடம்.

அவன் ராஜ கணேஷ்.அவளை விட சற்று உயரம்.சந்தன நிறத்தில் இருந்தவன் கண்கள் எப்பொழுதும் சிரிக்கும்.அவனது முறுக்கு மீசையும் தாடியும் இன்னும் அவனுக்கு அழகு சேர்த்தது.அவனை பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைப்பவன்.

"யட்ஷி இங்க பாரு.ரொம்ப வெட்கமோ முகமெல்லாம் சிவந்து போச்சு?" என்றவன் அவள் விரல்களை பிடித்தான்.
"அதெல்லாம் இல்ல மாமா" என்றவள் மெதுவாக அவனிடம் இருந்து கைகளை உருவி கொண்டாள்.

"சரி.இன்னைக்கு நம்ம வெளிய போலாமா பாப்பா?" என கேட்டாள்.
"இல்ல மாமா.எனக்கு வேலை இருக்கு" என்றவள் ஏக்கமாக அவனை பார்த்தாள்.
"உனக்கு வேலையெல்லாம் இல்ல.உங்க வீட்டை நினைச்சு பயபடுற அதானே" என்றவள் அவள் அருகில் வந்தான்.

'அய்யோ நம்ம மனசை படிச்சுட்டானே' என்று எண்ணியவள் ,"அதெல்லாம் இல்ல.இன்னைக்கு ஓனர் ஆடிட்டிங் வராங்க அதான்" என்று மழுப்பினாள்.அது உண்மையும் கூட.

"சரி வா பாப்பா நான் உன்ன ஹோட்டல்ல இறக்கி விடுறேன்" என்றான்.

இதற்கு மேல் மறுக்க முடியாது என்று தோன்றவே சரி என்றாள்.

வண்டியில் சாவியை நுழைத்து ஆன் செய்தவன் அவளை பார்த்து ,"உன்னோட பேக்-யை குடு .நான் முன்னாடி வச்சுகுறேன் பாப்பா" என்று பரிவாக வாங்கி கொண்டான்.

அவளுக்கு ஒருபுறம் அமர்ந்து பழக்கமேஇல்லை.தந்தையுடன் மட்டுமே இதுவரை வண்டியில் சென்று பழகியதால் அவளுக்கு ஒருபுறம் அமர்ந்து செல்ல வேண்டிய அவசியம் வந்ததே இல்லை.இப்பொழுது தயங்கியவள் ,அவன் அவசரமாக என்ன என கேட்கவும் சட்டென்று ஏறி அமர்ந்தாள்.அவள் மேல் முடிந்த அளவு ஒட்டாமல் அமர்ந்திருந்தாள்.

வண்டியில் வேகத்தில் அவன் அருகே வர அவனோட கள்ளமாக புன்னகைத்து கொண்டான்.பின் அவனது இடது கையால் அவளது கையை பிடித்தபடி வண்டி ஓட்டினான்.

"ப்ளீஸ் மாமா .கையை விடுங்க...ககக" என்று திணறினாள்.

அந்த கள்வனோ விடாது போக ,"மாமா " என்று அதட்டலாக கூற கையை விட்டான்.
அவள் வேலை ஹோட்டலில் இறக்கி விட்டவன் ,"இந்த சனிக்கிழமை நம்ம வெளிய போறோம்.ஒழுங்கா வர்ற நீ.ஏதாச்சு சப்ப காரணம் சொல்லிட்டு இருந்த எனக்கு கோபம் வரும் பார்த்துக்கோ" என்று மிரட்டினான்.

"சரி நான் மெசேஜ் பண்றேன்" என்றவள் விடை பெற்றாள்.

அவள் சென்ற திசையை பார்த்து கொண்டிருந்தவன் புன்னகைத்தான்.அவன் புன்னகையில் இருந்தது என்ன ?

"பசிக்கு ருசி " என்ற பெயர் பலகையை தாங்கிய அந்த பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தாள் யட்சினி.அந்த உணவகம் சென்னையில் மட்டும் பத்து கிளைகளை கொண்டது.அவள் வேலை செய்வது முதன்மையான கிளையில்.

அங்கே அக்கவுண்ட பிரிவில் வேலை பார்த்து கொண்டிருந்தாள்.அத்தனை கிளைகளின் வரவு செலவுகள் அவளிமே வரும்.அதனை சரி பார்த்து ஜி.எஸ்.டி பைல் பண்ணுவது போன்ற வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் சென்று வேலையில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருக்க அங்கு வந்த ஓனர் இவளை பார்த்து புன்னகைத்தார்.

"வணக்கம் சார்" என்றாள் புன்னகையுடன்.

"வணக்கம்மா வேலையெல்லாம் எப்படி போகுது?" என்று விசாரித்தார்.

"ரொம்ப நல்லா போகுது சார்.ஆனால் நம்ம ஹோட்டல்ல வீட்டுக்கு டெலிவரி எல்லாமே பண்றோம்.அதோட ஸ்வீட் காரமும் கொடுத்தா நல்லா இருக்கும் சார்" என்று தனது யோசனையை கூறினாள்.

"நானும் அதை பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்மா.ஆனா பாரு அதுக்கு சரியான ஆளுக இன்னும் சிக்கல.பார்ப்போம் என்னோட பையன் கிட்ட சொல்லி இதை கொண்டுவர பார்க்குறேன்" என்றவர் கணக்குகளை பார்க்க தொடங்கினார்.

அதை பார்வையிட அவருக்கு திருப்தியாக இருந்தது.புன்னகையுடன் யட்சினியை பார்த்தவர்,"கணக்கெல்லாம் சரியா இருக்குமா.நீ ஆடிட்டர் கிட்ட கொடுத்து பைல் பண்ணிடு" என்றார்.
"சரிங்க சார் .எனக்கு இந்த சனிக்கிழமை லீவ் வேணும்"என்று தயங்கியபடி கேட்டாள்.அதனாலென்ன எடுத்துக்கோம்மா" என்றவர் கிளம்பினார்.

ராஜா மாமா என்று சேமித்து வைத்திருந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் சனிக்கிழமை நான் தயார் என்ற குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

அங்கே ராஜா-வோ அதனை பார்த்து புன்னகைத்தபடி லவ் யூ பாப்பா என்று அனுப்பினான்.

அங்கு இருவரின் நம்பிக்கையும் சிதைந்து போக போகுது என்றால் நம்புவார்களா ?
####################################
"எங்கேயோ உன் முகம் நான் பார்த்த நியாபகம் ..எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த நியாபகம்" என்ற பாடல் தொடர்ந்து ஒலிக்க இதமான கனவில் இருந்து எழுந்தான் தேவ்.

கனவு கலைந்தவனுக்கு எங்கே இருக்கிறோம் என்று உணரவே நேரம் எடுத்தது.அவன் இருந்த இடம் கண்டு அதிர்ந்து தான் போனான்.ஆம் அவன் இருந்தது அவனது காருக்குள்.ஆனால் கார் அவனது போர்டிகோ-வில் இருந்தது.

நினைவுகள் பின் செல்ல அந்த வெண்ணிற கைகள் ஸ்டியரிங்கை பற்றியதும்,அவன் மேல் அந்த அருவத்தின் வெம்மை படர்ந்ததும் நினைவு எழ அவன் உடல் ஒரு முறை உதறியது.

அதற்குள் இரண்டாம் முறை அழைப்பு வர அதில் தீபாவின் அழைப்பு மிளிர அலைபேசியை எடுத்தான்.

"கண்ணா என்னாச்சு டா?மதியத்துல இருந்து கால் எடுக்கவே இல்ல?" என்று பதறினார்.

அலைபேசியை பார்க்க அதில் தீபாவிடம் இருந்து இருபதற்குள் மேற்பட்ட அழைப்புகள் வந்திருந்தது.உடனே"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.வந்ததும் தூங்கிடேன்."என்று மழுப்பினான்.

"பயந்துட்டேன் கண்ணா"என்றார்.பின் ,"அப்பா கண் முழிச்சு பத்து நிமிஷத்துட திருப்பி மயக்கமாகிட்டாரு டா.சார்லஸ் அங்கிள் வந்து பார்த்திட்டு சீக்கிரம் சரியாகிருவான்.தேவ் வந்ததும் என்ன பார்க்க வர சொல்லுன்னு சொன்னாரு கண்ணா" என்றார்.

"ரொம்ப நல்லதும்மா அப்பா கண் முழிச்சது.நான் இன்னைக்கு நைட் அப்பாவை பார்த்துக்குறேன்.நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க" என்று அக்கரையுடன் கூறினான்.

"இல்லடா உங்கப்பா கண் முழிக்காம என்னால வீட்ல இருக்க முடியாது.இங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.உங்கப்பா முகத்தை பார்த்துட்டே இருந்துருவேன்" என்றவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"சரிம்மா உங்களை வீட்டுக்கு வர சொல்லலை சந்தோஷமா ?" என்று சலிப்பாக கேட்டான்.

"டேய்...ஒழுங்கா போய் சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு தூங்கு" என்று கோபத்தில் தொடங்கி அக்கரையில் முடித்தார்.

"சரிம்மா" என்றவன் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றான்.

சோபாவில் சென்று "பொத்"-தென்று அமர்ந்தவனுக்கு நடப்பவற்றை சுலபமாக எடுத்து கொள்ள முடியவில்லை.தொடர்ந்து மூன்று இரண்டு நாட்களாக அந்த அருவம் அவனை தொடர்வதை அறிந்தே இருந்தான்.அவனுக்கு திருமணம் என்றதும் ட்ரிப்ஸ் கீழே விழுந்தது அவனுக்கு எதார்த்தமாக தெரியவில்லை.

அந்த அருவம் அவனை கொல்ல நினைக்கிறதா காக்க நினைக்கிறதா ? எதுவும் புரியாமல் திகைத்திருந்தான்.இதற்கு பதில் தான் என்ன ? காலம் தான் விடை சொல்லும் என்றால் அவன் நம்புவானா?

திடீரென்று யோசனை தோன்ற அவனது அலைபேசியை எடுத்தான்.எடுத்தவன் பேய்கள் உண்மையா ? என்று கூகுளில் டைப் செய்து பார்க்க அது முக்கால்வாசி உண்மை என்றே வந்தது.அதில் ஒரு இடத்தில் பேய் ஓ நெகட்டிவ் வகை இரத்தம் இருப்பவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியும் என்று படிக்க அதிரந்து போனான்.

அச்சச்சோ அனக்கு ஓ நெகட்டிவ் இரத்தமே.உடனே ஓடிச்சென்று பூஜை அறையில் இருந்த விபூதியை எடுத்து பட்டை போட்டு கொண்டான்.
"பேசாம நம்ம இந்த ரூம்-ல இருந்துட்டா பேய் கிட்ட வராதுல்ல" என்று எண்ணியவன் அங்கேயே படுத்து.கொண்டான்.

பயம் வந்தால் ஆறடி மனிதனும் சிறு குழந்தை தானோ?

அதை பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த அருவம் சிரித்தது.ஆத்மாவாக இருந்தாலும் சில இடங்கள் அவற்றால் கட்டுப்படுத்த இயலாது.

அந்த சிரிப்பு சத்தத்தில் காதை பொத்தி கொண்டபடி படுத்தான்.
####################################
தீபனும் ராகினியும் சேர்ந்து எப்படி தேவ்வை தங்கள் திட்டத்தில் விழ வைப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர்.

உடனே தீபன்,"ராகினி பேசாம விபா கிட்ட சொல்லி தேவ் -வை லவ் பண்ண வைக்க சொல்லலாம்" என்றார்.

அதற்கு ராகினியே,"புருஷன்னு கூட பார்க்க மாட்டேன்.சோத்துல விஷம் வச்சுருவேன் பார்த்துக்கோ" என்றாள் கோபமாக.

"ஏன்டி" என்று பரிதாபமாக தீபன் கேட்க,"அவளே தேவ்வை கட்டிக்க மாட்டேன்னு சுத்திகிட்டு இருக்கா.இவ கிட்ட சொன்னா எனக்கு உன்ன புடிக்கலன்னு சொல்லி மொத்த ப்ளான்லையும் லாரி மண்ணை கொட்டிட்டு வந்துருவா பார்த்துக்க" என்றாள்.

"ஆமா ராகினி இத மறந்துட்டேன் பாரு" என்றார்.மண்டைல ஏதாச்சு இருந்தா தானே நியாபகம் வச்சுப்பா" என்று கோபத்தில் ஒருமையில் தாவியிருந்தார்.

"சரி விடு.என்னோட தங்கச்சி கிட்ட போய் மச்சானுக்கு இப்படி இருக்கு.தேவ் வேற இரண்டு வருஷமா கல்யாணத்துக்கு பிடி கொடுக்கலை.இப்படியே விட்டா தனிமரமாகிடுவான்.நீ கொஞ்சம் மிரட்டு சம்மதிக்க வை-ன்னு சொல்லி பிட் போடுவோமா ?" என்று கேட்டார்.

"இதுவும் நல்ல யோசனைங்க.முயற்சி பண்ணி பார்ப்போம்.இப்போ எனக்கு தூக்கம் வருது.போய் படுங்க" என்றவர் கட்டிலின் மறுபுறத்தில் படுத்தார்.
நடுஇரவில் தோளில் ஒரு கைவிழ ,"யோவ் கையை எடுத்துட்டு படு" என்றபடி தூங்கிபோனார்.

அந்த கை மெதுவாக தோளை தடவ கையை தட்டி விட்டார்.

அந்த கை மெதுவாக அவரது கழுத்தில் முன்னேற பட்டென்று எழுந்து அமர்ந்தார்.

திரும்பி பார்க்க அங்கே கணவன் இல்லை."என்னங்க ?" என்று ராகினி கத்த அவரோ பாத்ரூமில் இருந்து வரேன்டி என்று குரல் கொடுத்தார்.

ராகினி சுற்றி முற்றி தேட அவர் அருகில் வெண்புகையாய் எழுந்த உருவம் அவரின் மறுபுற தோளை தொட ராகினி திரும்பினாள்.

அந்த வெண் புகைக்குள் இருந்து வெண்மை நிறத்தில் அந்த உருவம் வெளிப்பட அதன் முகத்தில் இருந்த வன்மத்தில் மூச்சடைத்து போனாள் ராகினி.

கத்த கூட தோன்றாத ஒரு நிலை.அவர் மூச்சு விடுகிறாறா என்பதே தெரியவில்லை.அந்த உருவம் சட்டென்று அதன் தலையில் இருந்த ஒரு முடியை பிடித்து இழுத்து ராகினியின் கைகளில் கட்டியது.இவை அனைத்தையும் பித்துபிடித்தபடி பார்த்திருந்த ராகினி முடியை கையில் கட்டுவதை கண்டு நகர முனைய அவள் உடல் பாகங்கள் செயலிலந்து போனது.

அதை கட்டி முடித்ததும் அந்த ஒரு முடி மறைய ராகினி அமைதியாக படுத்து கொண்டாள்.

ஆம் ராகினி அந்த அருவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தாள்.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த தீபன் தூங்கி கொண்டிருந்த ராகினியை பார்த்து,"மனுஷனை நிம்மதியா பாத்ரூம் போக.விடாம கத்திட்டு இப்போ தூங்குறதை பாரு.பிசாசு" என்றபடி கட்டிலை நோக்கி நகர்ந்தார்.

அவர் கட்டிலை நோக்கி நகர சட்டென்னு அவருக்கு முன் தரையில் இருந்து ஒரு வெண்புகை எழுந்தது.

அதிலிருந்து அந்த உருவம் வெளிப்பட நடுங்கி போனான்.

அந்த முகம் அதன் கோரம்.இவரை பீதியடைய செய்தது.அந்த உருவம் இவரின் அருகில் கைகளை தொட ஷாக் அடித்தது போல் இரண்டு அடி தள்ளி சென்றது.

அதை பார்த்து சிரித்த தீபன் அதன் அருகில் சென்று மெதுவாக,"எத்தனையோ பேர கணக்கு வழக்கிலாம கொன்னுறுக்கேன்.இப்படி ஏதாச்சு பேயா கிளம்பிரும்னு தான் கேரளா போய் மந்திருச்சு கட்டிருக்கேன்" என்று கையில் இருந்த கயிற்றை காட்டினார்.

அந்த உருவம் முகம் மிக கோரமாக,"அடேய் குள்ள குண்டா ..உன்னோட முடிவு என்னைக்கும் என் கைல தான் நியாபகம் வச்சுக்கோ.நீ வினையை விதைச்சுட்ட கண்டிப்பா நீ தான் அறுக்கணும்" என்றபடி பலமாக சிரித்தது.

மென்மையாக அது மறைந்தும் போனது....


நெருங்காதே என்னவளே....


பொறாமை மிகக்கொடிய நோய்.ஏதாச்சு இடத்துல நீங்க பொறாமை படுறதா தோணினா உடனே அவங்க பட்ட கஷ்டத்துக்கு கிடைச்ச.நல்ல பலன் அதுன்னு நினைச்சுக்கோங்க.இல்லன்னா அந்த பொறாமையே உங்களை வாழ விடாது....

படிச்சுட்டு மறக்காம கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க கண்மணிகளே...உங்களோட கருத்துக்கள் தான் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமருந்து....


புன்னகையுடன்,
ஷா...😍
 
Last edited:
Status
Not open for further replies.
Top