All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஶ்ரீயின் 'காதலன்' - கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10:

தனிமையில்
தவிப்போடு புலம்புகிறேன்.......
தாபங்கள்
கொண்டு உயிர் சிதைகிறேன்....
தலைவனின்
ஸ்பரிசங்கள் தனிமையில் உயிரை நெருங்க...

உருகுகிறேன்
ஊன் மறந்து ...

கலங்குகிறேன்
கண்ணீர் கொண்டு..

தீண்டும் பொருள்களிலெல்லாம்
தன்னவனின் ஞாபகங்கள்.....

பார்க்கும் பார்வைகளிலெல்லாம்
ஸ்பரஸ்பர நெருக்கங்கள்.......

இரவிலும் அவனின்
இன்ப வேதனையில் மறப்பது கொஞ்சம் உறக்கத்தை..

தென்றல் கொஞ்சம்
தேகம் தொட்டால் தீயாகிறது உடல்.....

கொண்டவனின் பிரிவு
மாற வழியில்லையோ....

மயங்குகிற மாலைப்பொழுதில்
வாடுகிறது என் மனம்.......

பிரியமானவனின் நினைவுகள் நில்லாமல் காதல் வன்முறை ஏற்படுத்த
காயமுற்றவளாய் கண் கலங்கினேன்...

உணர்வுகளின் கொடுமையில் உயிர் கருக காத்திருக்கிறேன் காதலனுக்காக...



அவனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை சந்தோஷால். தன் குழந்தையின் வாழ்க்கையிலும் தன் நண்பனின் வாழ்க்கையிலும் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.

விஸ்வாதன் தன் தேனுக்குட்டியின் இந்த நிலைமைக்கு காரணம் அவன் புறக்கணிப்பு அவளின் பூ மனதை நோக செய்திருக்கும் என சந்தோஷ் நினைத்துக்கொண்டிருக்க ...அதற்கு மாறாக முகம் முழுக்க வேதனையுடன் தன் முன்னே அமர்ந்திருக்கும் தன் நண்பனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

எது எப்படியோ இவர்கள் இருவரையும் நேரில் சந்திக்க வைத்தால்தான் என்ன நடந்ததென்று உண்மை தெரியும் என்று விஸ்வாவை கை தாங்களாக தூக்கி "ஹாஸ்பிடல் போகலாம் " என்றான்.

விஸ்வாவோ முகத்தில் வழிந்த ரத்தத்தை பொருட்படுத்தாமல் “ இல்லை எனக்கு ஒன்னும் வலி இல்லை நான் அம்முகுட்டிய பார்த்துவிட்டு ஹாஸ்பிடல் போய்க்கிறேன் டா” என சிரித்துக்கொண்டே சொல்ல சாந்தோஷிற்கு சொல்ல முடியாத வேதனை வந்துவிட்டது.

சரி என்று அழைத்துக்கொண்டு அலுவலகத்தின் பின்வாசல் வழியாக கார் பார்க்கிங் சென்றான்..

**********

அங்கே கழுத்தில் இப்பொழுதுதான் கட்டப்பட்டதற்கான அடையாளமாய் தன் மஞ்சள் நிறம் மாறாமல் பார்த்தால் கண்களையும் மனதையும் ஒரு நேரத்தில் குளிர்ச்சி அடைய செய்யும் தன் தெய்வீக தன்மையோடு அகலியின் கழுத்தை அலங்கரிதுக்கொண்டிருந்தது அந்த மாங்கல்யம்.

அதற்கு மாறாக கண்கள் முழுக்க கண்ணீரோடு இரு கைகளையும் கூப்பி கொஞ்சிக்கொண்டிருந்தாள் தன் கணவன் விஸ்வாவை பிடித்துக்கொண்டிருக்கும் நான்கு அடியாட்களையும் , அவனை நோக்கி கத்தியை கொண்டுபோகும் ஒருவனிடமும்.

“ அய்யோ மாமாவ விட்டுடுங்க அவர எதும் செய்யாதிங்க நான் போய்டுறேன் அவர் எனக்கு வேண்டாம் அவரை உயிரோட விட்டுருங்க எனக்கு தாலி வேண்டாம் என தன் தாலியை அறுத்து எறிந்துவிட்டு, அவரோட கல்யாண வாழ்க்கை வேண்டாம்...

மாமா கண்ணுக்கு தெரியாம நான் எங்கேயாவது தொலைஞ்சி போய்விடுகிறேன் உங்களுக்கு உயிர்தான் வேணும்னா என்னை கொன்னுடுங்க என் மாமாவை விட்டுருங்க” என அவள் கத்தி கத்தி அழ

அவள் கத்துவதை கேட்க அங்கே யாரும் இல்லை “ அது எப்படி உன் கழுத்துல தாலி கட்டிட்டு இவன் உயிரோடு இருப்பானா” என ஏலனக்குரலில் சொன்னவன் .

அவளின் கண் முன்னே விஷம் தடவிய கத்தியை விஷ்வாவின் வயிற்றில் சொருகி, சொருகிய வண்ணமே கத்தியை மேல் நோக்கி தூக்கி அவன் கொடலையும் அறுத்தான்.

தன் கண்முன்னே தான் உயிரோடு இருக்கும் போதே தன் உயிர் போவதை தடுக்க முடியாமல் தன் மாமானின் உடலோடு உடலாக மயங்கி சரித்தாள்.

திடீரென்று கனவில் இருந்து விழித்த அகலி உடல் முழுக்க நடுங்க வியர்த்து வழிய...இதய துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்க “ மாமா மாமா என ஜெபம் போல் ஜெபித்துக்கொண்டே வெறி பிடித்தவள் போல் ரூமை விட்டு வெளியே வரவும் கவி கதவை திறக்கவும் சரியாக இருக்க

அங்கே தன் மாமனை உடல் முழுவதும் ரத்தத்தோடு பார்த்தவள் தூக்கி வாரி போட "மாமா" என்ற பெரும் கேவளோடு அவனை கட்டிக்கொண்டவள் இன்னும் கனவில் இருந்து மீளாமல் தன் மாமன் உயிர்த்தெழுந்து வந்துவிட்டான் என நினைத்துக்கொண்டு அவன் அணைப்பிலேயே அவன் நெஞ்சிலுருந்து தன் முத்தத்தை தொடங்கி அவன் முகம் முழுக்க தன் முத்தத்தால் இல்லை இல்லை தன் காதலால் அவனை நனைத்தாள்.


அவன் முகத்தில் வழியும் ரத்தத்தை பொருட்படுத்தாமல் அவன் கண் ,மூக்கு.வாய்,காது ,முடி என ஒவ்வொரு பாகமாய் மெதுவாக தடவியவள் தன் உயிரை பாதுகாக்கும் வேகத்தோடு அவனை இன்னும் இன்னும் அவளோடு இறுக்கி கொண்டாள் அவளின் இறுக்கம் விஸ்வாவிற்கே வலியை கொடுக்கும் அளவுக்கு இருந்தது..


“ தேனுக்குட்டி” என்ற சந்தோஷின் தழுதழுத்த அழைப்பில் தன் கனவு உலகத்திலிருந்து வெளியே வந்தவள் சடாரென்று விஸ்வாவின் அணைப்பிலுருந்து வெளிவந்து

அவன் ரத்தம் கொட்டும் முகத்தை பார்க்க அசரீரி போல் ஒரு கொடூர குரல் அவள் மனதின் உள்ளே கேட்டது.

வேகமாக யாரும் இல்லாத சுவற்றின் பக்கம் திரும்பியவள்

“ மாமாவ ஒன்னும் பண்ணாதீங்க ..நான் நான் தெரியாம மாமாவை பார்க்கில் பார்த்துட்டேன், இனி பார்க்க மாட்டேன் அவரை அடிகாதிங்க நான் நான்.....இப்பவே சந்தோஷட ஊருக்கு போயிடுறேன் “

சந்தோஷ் அவளை கைகளை பிடித்து தடுக்க அதை எல்லாம் கேட்கும் நிலையில் அவள் இல்லை.அவன் கையை உருவிக்கொண்டு அவள் மீண்டும் மீண்டும் அதையே செய்தாள்

( தான் பார்க்கில் விஸ்வாவை பார்த்தது தான் அவனின் இந்த ரத்தம் கொட்டும் முகத்திற்கு காரணம் என அவளின் மனம் முழுதாக நம்பியது)

யாரும் இல்லாத அங்கே யாரோ இருப்பது போல் காலில் விழுவது போல் விழுந்து விழுந்து எழுந்தாள்.

இன்னும் ஏது ஏதோ பேசிக்கொண்டும் அழுதுக்கொண்டும் இருந்தவள் ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி சரிந்தாள்.
உடல் பலம் இல்லாமல் மயங்கினாலும் ..அவள் ஆழ் மனம் முழித்துக்கொண்டுதான் இருந்தது.

அப்பொழுதும் அவள் வாய் ஓயாமல் மாமா மாமா என்று உளறிக்கொண்டே தன் ஒரு கையும் காலும் வெட்டு வந்தது போல் இழுக்க அவளின் கரு விழி இரண்டும் மேலே சொருகி வெள்ளை முழி மட்டும் அரை மயக்கத்தில் தெரிந்தது.

அவளின் அசாத்திய நடவடிக்கையில் அப்படியே சிலை என உறைந்தான் விஸ்வா.

சந்தோஷ் “ விஸ்வா அகலிய தூக்கு நான் போய் கார் ஸ்டார்ட் பண்றேன்”


ஏற்கனவே இது போல் ஒருமுறை நடந்திருப்பதால் சந்தோஷ் அவளை மருத்துவமனை அழைத்துப்போவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து விரைந்து செயல்பாட்டான்.

விஸ்வாவிடம் சொல்லிவிட்டு வாசல் வரை சென்றும் கூட விஸ்வா அவன் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை.

அவனின் மூளை மரத்து சந்தோஷின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தாலும் அவனால் உடனே செயல் படமுடியவில்லை.

அவனின் உலகம் “ மாமாவை எதும் பண்ணாதீங்க என்ற அவளின் வார்தையிலேயே உறைந்து விட்டது.

அவனின் நிலை உணர்ந்த சந்தோஷ் வேகமாக அருகில் வந்து அவன் கன்னத்தில் வேகமாக ஒரு அறைவிட்டான்.


அதில் தெளிந்தவன் “ குட்டிமா' என்று வேகமாக அகலியிடம் சென்றவன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு வேகமாக காரை நோக்கி சென்றான் .

அவளின் வெட்டும் உடலும் அவள் பேசுவதையும் கேட்க முடியாமல் “சந்தோஷ் வேகமாடா” என்று நண்பனிடம் சொல்லிக்கொண்டே வந்தான்..

அவனிற்கு கொஞ்சமும் குறையாத தவிப்போடு இருந்த சந்தோஷ் ” கவியிடம் சொல்லி தமிழை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் வர சொன்னவனின் கையில் கார் மின்னல் வேகத்தில் சீறி சென்று ஜனனி வேலை பார்க்கும் மருத்துவமனை வாசலில் நின்றது.

அதற்குள்ளே அகலி உடம்பில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவன் கைகளிளே துவண்டு விட்டாள்

அவளை தூக்கிக்கொண்டு “ பாப்பு” என கத்திக்கொண்டே ஓடினான்.அவன் குரலை கேட்டு வெளிய வந்தவள் தன் அண்ணனையும் ...அவன் கையில் இருக்கும் தன்னவனின் குழந்தையும் ,. பக்கத்தில் நீர் நிறைந்த கண்களோடு நிற்கும் தன்னவனையும் பார்த்தவள் வேகமாக சிகிச்சை அளிக்க ஆரம்பித்துவிட்டாள்.

ஓரளவு அகலியின் உடம்பும்..அவளின் சுவாசமும் கட்டுக்குள் வரவே அந்த அறையை விட்டு வெளியே வந்தவளிடம் “ பேபி தேனுக்குட்டி எப்படி இருக்கா “ என சந்தோஷ் அவளின் கையை பிடித்திக்கொண்டு கேட்க

வெகு சில வருடங்களுக்கு பிறகு தன்னவனின் பிரத்தயோக அழைப்பு.... அதை ரசித்து சொல்லும் நிலையில் அவனும் இல்லை அதை ரசித்து கேட்கும் நிலையில் அவளும் இல்லை.


அவன் மேல் உள்ள கோபம் அப்படியே இருந்தாலும் அவன் கையை ஆறுதலாக பிடித்து “ இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை உங்க தேனுக்குட்டி இல்லை உங்க மூத்த பொண்ணு தூங்கிட்டு இருக்கா” என இதமான சிரிப்புடன் சொன்னாள்.

அவனும் சிறு சிரிப்புடன் உள் வாங்கிக்கொண்டான்.
பிடித்த கையை விடாமலே “ விச்சு எங்கே” என்று கேட்டாள்.

“அகலியை பார்த்துவிட்டு தான் போவேன்” என்று அமர்ந்து இருந்த விஸ்வாவை சந்தோஷ்தான் திட்டி அவன் காயத்திற்கான ட்ரீட்மெண்டீர்காக பக்கத்து அறையில் கொண்டு விட்டு வந்தான்.


ஜனனி கேட்டதும் அவளை அங்கே அழைத்துச் சென்றான்

அங்கே கையில் ஒரு கட்டுட்டுடன் தலையில் ஒரு கட்டுடன், முகத்தில் உள்ள காயத்திற்க்கு மருந்து போட அங்கு உள்ள நர்ஸிடம் முகத்தை காட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கட்டிலில் முகம் முழுவதும் வேதனையோடு படுத்திருந்தான் விஸ்வா.

அந்த அறைக்கு உள்ளே வந்தவள் ” விச்சு அண்ணா “ என கூற அவன் கண் திறப்பதற்குள்ளவே ” அகலி நல்லா இருக்கா, தூங்கிக்கிட்டு இருக்கா இன்னும் 3 மணி நேரம் கழிச்சு கண் முழிச்சோன நீ பார்க்கலாம் “ என்றாள்.


” பாப்பு(பேபி) என் மல்லி பூக்கு ( தேனுகுட்டி)என்ன டா ஆச்சி ஏன் அவள் இப்படியெல்லாம் நடந்துக்குறா “ என சந்தோஷ் ,விச்சு இருவரும் கவலையோடு கேட்க ..

அய்யோ இவன் ஏன் விச்சுக்கு முன்னாடி இப்படி கூப்பிடுறான் என ஒரு மாறி ஆகிவிட்டது ஜனனிக்கு .

அதை கவனிக்கும் நிலையில் விச்சு இல்லை என நிம்மதியாய் உணர்ந்தவள் ,


“அவளுக்கு இப்ப எந்த பிரச்சனையும் இல்லை விச்சு அண்ணா,இப்ப எதைப்பற்றியும் பேச வேண்டாம் .. உன் மல்லி பூ மாமா மாமானு மயக்கத்துல கூட யாரையோ ஏலம் போட்டுக்கிட்டு இருக்கா அவரை அழைச்சிட்டு வந்து அவள் பக்கத்தித்துலயே இருக்க சொல்லு ” என்றவள்

சந்தோஷின் புறம் திரும்பி “ உங்க தேனுக்குட்டியோட மாமா யாரு “ என்று தெரிந்து கொண்டே கேட்டாள்.


அவனும் சிறு முறுவளுடன் தன் புருவத்தை தூக்கி எதிரில் இருக்கும் விஸ்வாவை காட்டினான்..

விஸ்வாவிருக்குமே அவளின் கிண்டலில் லேசான வெட்கம் வந்து விட்டது.

அதை பார்த்த ஜனனி “அண்ணா உனக்கு வெட்கமெல்லாம் வேற வருமா” என்றாள்.

என்னதான் ஜனனியின் பேச்சில் சிறிது இறுக்கம் தளர்ந்தாலும் “ சந்தோஷிருக்கும்,விஸ்வாவிற்கும் தங்களுக்கு தெரியாமல் தங்கள் தேவதையின் கடந்த காலத்தில் ஏதோ கருப்பு பக்கம் இருக்கிறது என்று தோன்றியது..


அதை கலைந்து தங்கள் தேவதையை பழைய படி மாற்ற வேண்டும் என சபதம் எடுத்தனர் இருவரும்..

வருவாள்..

மிளாணி ஸ்ரீ
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டியர்ஸ் நெக்ஸ்ட் எபி போஸ்ட் பண்ணிட்டேன் எப்படி இருக்குனு படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க..

அப்பறம் ஒரு எபி flashback ஒரு எபி கரண்ட் ஆ நடக்குற மாறி கொடுகாலம்னு இருக்கேன்.. உங்களுக்கு ஓகே வா..

இல்லை flashback முடிச்சிட்டு அப்பறம் கரண்டா உள்ளது எழுதவா ?

நீங்க சொல்ற படி செய்றேன்..
உங்கள் கட்டளையே என் சாசனம்..

லாஸ்ட் எபிக்கு “chu” சொல்லிட்டு போன எல்லோருக்கும் நன்றி ....வெறும் “ chu “ மட்டுமே சொல்லிட்டு போன அனைவருக்கும் நன்றி.

இந்த எபிக்கும் கமெண்ட்ஸ் ஒரு chu சொல்லிட்டு போங்க..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11:

வேண்டுகிறேன்
உன்னை நினைத்த இதயம் நிலைத்திருக்க....

வேண்டுகிறேன்
நினைத்த நின்னையே மணமுடிக்க...

வேண்டுகிறேன்,
காதில் விழுந்த களவியையும்
கேட்டறிந்த இருளின் வெளிச்சத்தையும்
நீ கற்று கொடுக்க
நான் மறந்து நடிக்க.........

வேண்டுகிறேன்...
அதில் இறுதி வரை மாணவியாய் நானிருக்க
மனம் நோகாமல் நீ கற்று கொடுக்க....

வேண்டுகிறேன்..
உன்னை எனக்குள் சுமக்க
பிறக்கும் முன்னே நீ என் தாயக ..
நான் உன் சேயாக..

வேண்டுகிறேன்
என் கருவறைக்குள் உன் கனவு வளர..

வேண்டுகிறேன்..
களைத்து நான் விழுந்தால் உன் காய் தாங்க...

வேண்டுகிறேன்
என் விருபங்களில் நீ வாழ
உன் விருப்பங்களில் நான் வாழ

வேண்டுகிறேன்
இல்லறத்தின் இலக்கணமாய்
மரு/மகனாய் நீ இருக்க
மரு/ மகளாய் நானிருக்க..

வேண்டுகிறேன்..
சில நொடி நீடிக்கும் சண்டைகளுடனும்
பல ஆண்டு நீடிக்கும் காதலுடனும் நான் வாழ..

வேண்டுகிறேன்
இக்கால காதலை போல் அல்லாமல்
இலக்கண காதலாய் நாம் வாழ..

என் பரம் பொருளே,
பாற்கடலே.
பரமசிவனே



அந்த 4 மணிநேரமும் ஏதோ வருடக்கணக்கை கடப்பது போல் கடினமாக இருந்தது விஸ்வாவிற்கு...

நான்கு மணிநேரமாக அவள் கையை பிடித்த படியே உட்கார்ந்திருக்கிறான் அவன் மல்லிப்பூ முழித்த பாடாக இல்லை.

அவள் உடம்பில் சிறு அசைவு கூட இல்லாமல் நிர்மலமான முகத்துடன் தூங்கி கொண்டிருந்தாள்.

அவள் தூங்கும் இடைவெளியில் தமிழும் ,கவியும் வந்து பார்த்துவிட்டு இரவு உணவை சமைத்து எடுத்துக்கொண்டு கவி கர்ப்பமாக இருப்பதால் அவளை வீட்டில் விட்டு வருவதாகவும் சந்தோஷிடம் சொல்லி சென்றான்.


அவர்கள் பார்க்க வந்தது பேசியது எதையும் அவன் கண்டுகொள்ளவில்லை.

அகலியின் கையை பிடித்துக்கொண்டு அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

தமிழுக்கு அவன் யாரென்று தெரியவேண்டும் என்று இருந்தாலும் சந்தோஷின் மேல் உள்ள நம்பிக்கையின் பொருட்டு எதையும் கேட்காமலே சென்றுவிட்டான்.

வீட்டில் உள்ள யாருக்கும் இப்பொழுது எதுவும் தெரியவேண்டும் அவர்கள் ரொம்ப பயந்துவிடுவார்கள் என்று சந்தோஷ் கேட்டுக்கொண்டதால் வீட்டில் உள்ளவர்களிடம் அகலியின் உடல் நிலை பற்றி சொல்லவில்லை.

சந்திஷிற்குமே விஸ்வாவின் வரவு பெரும் ஆறுதலே தனி ஒரு ஆளாக தன் தேனுக்குட்டியை எப்படி சரி செய்ய போகிறோம் என்று திக்கு தெரியாத காட்டில் நின்றவனுக்கு தன் நண்பனின் காதல் என்னும் விளக்கு பெருத்த நிம்மதியை தந்தது.

காலையில் விஸ்வா தன்னிடம் யாசித்த போது அவன் கண்களில் தெரிந்த வலி, காதல் எல்லாமே அவன் அன்று அகலியை மறுத்ததற்கு ஒரு ஆழமான காரணம் இருக்கும் என்று அவன் மனதை முழுதாக நம்ப வைத்தது.

அகலியை எப்போதும் தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்த போதும் அப்படி என்ன நடந்திருக்க கூடும் என அவனால் யூகிக்க முடியவில்லை.


என யோசித்து கொண்டே ஹாஸ்பிட்டல் வராண்டாவில் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து இருக்கும் போது அவ்வழியே ஜனனி ரௌண்ட்ஸ் முடித்து வந்து கொண்டிருந்தவள்

அவனை பார்த்தவுடன் ஆவலாக அவன் அருகே சென்றவளை என்ன என்பது போல் சந்தோஷ் பார்க்கவே ஜனனிக்கு அவன் மேல் உள்ள கோபம் நியாபகம் வந்து வெடுக்கென்று தன் முகத்தை திருப்பிக்கொண்டு வேக வேகமாக நடந்து சென்றாள்.

“ அவங்களுக்கு என்ன பிரச்சனையோ இப்படி வந்து அப்படி போய்ட்டாங்க “ என்ற வடிவேலின் காமெடி போல் அவன் அருகே வந்தவள் உடனே ஒரு U டேர்ன் அடித்து வந்த வழியே சென்று கொண்டிருந்தாள்.

அவள் கோபமாக செல்வதை பார்த்த உடனே அவனுக்கு சிரிப்பு வர சத்தமாக


“ தக்காளி தக்காளி குண்டு தக்காளி , வெள்ளை தக்காளி” என தான் அவளை காதலிக்கும் போது ஜனனியின் உடல் வாகை வம்பிழுப்பதை போல் இப்பொழுதும் சத்தாமாக பாடினான்.


பத்து அடி தூரம் போனவள் அவன் பாட்டு பாடவும் மறுபடியும் கோபமாக ஒரு “U” டேர்ன் அடித்து அவனை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கும் போது அவளின் ஹை ஹீல்ஸ் செருப்பு ஒன்று பிய்ந்து விட்டது .


இரண்டு செருப்பையும் கழட்டி போடாமல் பிய்ந்த செருப்பை மட்டும் கழட்டி போட்டி விட்டு 16 வயதினாலே படத்தில் வரும் கமலை போல் காலை இழுத்து இழுத்து கொண்டு அவன் அருகே வந்தவள்,

டாக்டர் கோட்டையும் ஷ்டேத்தாஷ்கோப்பையும் அங்கே உள்ளே பெஞ்சின் மேல் போட்டுவிட்டு அவன் அடர்ந்த சிகையை இடது கையால் பிடித்து ஒரு சுற்று சுற்றியவள் மறுகையால் அவனை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“என்ன குண்டு தக்காளி சொல்லாத சொல்லாத எத்தனை தடவ சொல்றது. “ என சொல்லிக்கொண்டே அவன் முடியை பிடித்து ஒரு வழி பண்ணிவிட்டாள்.


அவன் விடாமல்” நீ ஊட்டி தக்காளி மாறி தல தலனு இருந்தா அப்படி தாண்டி சொல்லுவேன் டி”என அவளை மேலும் சீண்டி விட்டான்.


( என்னப்பா நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு...உன் மண்டையில உள்ள முடியெல்லாம் அவள் கையில வரப்போகுது பாரு,

ந்தாம்மா...ஜனனி..... மண்டை பத்தரம்...... நீ மட்டும் அவனை இந்த அடி அடிக்குறது உள்ள படுத்து இருக்கிறவளுக்கு தெரிஞ்சது...
கொறஞ்சது 4 தையல் போடாம விடமாட்டா பாத்துக்க....)

“ ஏய் வலிக்குது டி தக்காளி” என்று பெரும் போராட்டத்திற்கு பிறகு அவளின் இரண்டு கையயும் தன் கையால் அடக்கி அவளை தன் அருகே அமர வைத்து

“ ஆன நீ இப்ப குண்டு தக்காளி மாறி இல்லையே டா ஏன் இப்படி ஒல்லியா இருக்க” என அவளின் கன்னத்தை வருடிய படி கேட்டான்.


அவளுக்கு அவன் அப்படி கேட்டதும் உதடு பிதுங்க அழுகை அடக்க போய் அது கேவளாக மாற அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே

“ நீதான் என்னிடம் ஒரு வார்த்தை கூட எதுவுமே சொல்லாமல் விட்டுவிட்டு போய்டியே அப்பறம் நான் எப்படி சந்தோசமா இருக்குறது”


( ஏய் பாப்பா நீ அவன் மேல கோபமா இருக்கேனு நான் பிள்டப் பண்ணி வச்சிருந்தா நீ அவனை கொஞ்சிக்கிட்டு இருக்க)

என ஆரம்பித்து விஸ்வாவின் மாற்றங்கள், நேற்றிலுருந்து அவன் சந்தோசமாக இருப்பது என அனைத்தையும் சொன்னாள்.


சிறுது நேரம் அமைதியாய் அவள் தலையை கோதிவிட்டவன் அவளை இயல்பாக்கும் பொருட்டு “ பேபிமா இது ஹாஸ்பிட்டல் நீ இங்க டாக்டர் ..இப்படி பேசண்ட பார்க்க வந்த விசிட்டர கட்டி பிடிச்சிகிட்டு உட்கார்ந்துருக்க “ என கூறினான்.


அவன் சொன்ன செய்தியில் வேகமாக அவனை விட்டு விலகியவள் மீண்டும் ஒரு முகத்திருப்பலையும் ஒரு யூ டேர்னையும் போட்டுவிட்டே, சென்றாள்

**************************
அகலிக்கு தூக்கம் கலைந்தாலும் கண்களை திறக்க முடியவில்லை.கண்களை திறக்காமலையே நேற்று நடந்ததெல்லாம் அவள் கண்முன்னே வந்தது.

அடிக்கடி தன் உயிரை தவணை முறையில் காவு வாங்கும் கனவில் ஆரம்பித்து இரத்த முகத்துடன் இருக்கும் விஸ்வாவின் முகத்தில் வந்து நின்றது.

உடனே கண்ணை திறந்தவளின் பார்வையில் வந்து விழுந்தது கவலை தேய்ந்த முகத்தோடு தன்னை பார்த்துக்கொண்டு இருக்கும் தன் மாமானின் முகம் .

அதை பார்த்தவுடன் மீண்டும் உடல் வேர்க்க ...உடம்பு நடங்க ஆரம்பித்து அவன் நெற்றியில் உள்ள காயத்தை தொட்டு பார்த்து “மாமா மாமா” என்று அனத்த ஆரம்பித்து விட்டாள்.

அதை பார்த்த விஸ்வாவிருக்கு “அய்யோ” ‘என்று இருந்தது.


உடனே அவள் கையை அழுத்தி பிடித்து ” குட்டிமா மாமாக்கு ஒன்னும் இல்லை டா, இது காலையில பைக்ல போகும் போது நடந்த சின்ன அக்சிடெண்ட், நீ பதட்ட படாம அமைதியா இரு”.மாமா உன் பக்கத்துலதான் இருக்கேன்” என கூறினான் .

எங்கே அவன் மல்லி பூ மீண்டும்” மாமா”,” மாமா “என புராணம் பாடிக்கொண்டே இருந்தாள்.

அவளின் இந்த நிலைமைக்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் இருப்பவனுக்கு அவள் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருக்க

தன் இயலாமை கோபமாக மாறி “ அகலி.......வாய மூடு” ...என கோபமாக சொல்லவும். அவன் கோபத்தின் அளவு அவளுக்கு தெரியும் என்பதால் தன் ஒரு கையால் வாயை மூடிக்கொண்டு அவனை பார்த்து வெம்பி கொண்டிருந்தாள்.


“இன்னொரு கையாலையும் வாய மூடு சத்தம் ,சத்தம் வந்தது தொலைச்சிடுவேன் தொலைச்சி,முழுங்கு சத்தத்தை ம்ம்ம்ம் ” எனவும் இன்னொரு கையால் வாயை மூடிக்கொண்டு சத்தத்தை அப்படியே நிறுத்தி அவனை பாவமாக பார்த்தாள்.



அவளின் புலம்பலுக்கு இந்த பயப்பார்வை எவ்வளவோ மேல் என அவனுக்கு தோன்றியது.

விஸ்வாவின் சத்தத்தில் உள்ளே வந்த சந்தோஷ் அகலியின் நிலையை பார்த்து “தேனுகுட்டி” என அவள் அருகில் வர...

“சந்தோஷ்” என ஆரம்பித்தவள் விஸ்வாவின் “ ம்ம்ம்ம்” என்ற கணைப்பில் அப்படியே வாயை மூடி சந்தோஷின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“ ஏன் டா குழந்தையை திட்டுற” என கேட்கவும்..

விஸ்வா ” ஆமாம் டா அவள் குழந்தைதான் இப்படி சொல்லி சொல்லி அவளை கொஞ்சிக்கிட்டே இரு .

அவள் இப்படியே சொகுசா அழுதுக்கிட்டும், கத்திக்கிட்டும், பைத்தியம் மாறி வாழ்க்கையை தொலைச்சிட்டும் நிற்கட்டும்.

அவள் உயிரோட சந்தோசம இருக்கணும்னு தானடா நான் என் காதல கொன்னுட்டு அவளை திட்டி அனுப்புனேன் .

அவள் வாழ்க்கையில என்னை விட ஏன் அவளை விட உனக்கு அக்கறை அதிகம்...

நீ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்பன்னு தானடா...என் மல்லிப்பூவ பிரிந்து என் இயல்ப தொலைச்சி 2 வருசமா நரகத்தில வாழ்ந்துகிட்டி இருந்தேன்.

ஆனா என் குட்டிமாவ இருட்டுக்குள்ள கதற விட்டுட்டியே “


என தன் மன அழுத்தத்தை எல்லாம் வார்த்தையால் கொட்டிவிட்டி தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

சந்தோஷின் மேல் எந்த தவறும் இல்லை என்ற போதும் அவள் 2 வருடமாக இதை போல் தான் இருக்கிறாள் எனும் போது அதை தன்னிடம் உடனே தெரியப்படுத்தாமல் இருந்த வருத்தம் மேலோங்க கத்திவிட்டான்.

("அப்ப எனக்கு என்ன தம்பி வேலை" என விதி அவனை பார்த்து சிரித்தது)

விஸ்வா தன் காதலை ,தன் நேசத்தை சொன்னதெல்லாம் அவள் மூளையில் ஏறவே இல்லை அவள் சிந்தனை முழுவதும் அவனைவிட்டு தூரம் சொல்வதிலயே இருந்தது..

“ சந்தோஷ் மாமாவை என்னை திட்ட வேண்டாம்னு சொல்லு...அவரை இங்கேர்ந்து போக சொல்லு இல்லை நாம போகலாம் வா,எனக்கு மாமா வேண்டாம்' என்ற சொன்னவள்
பின் "இல்லை இல்லை மாமாக்கு நான் வேண்டாம் “,

10 பேரு சந்தோஷ் அதுல 2 பேருக்கு என் அப்பா வயசு டா” என எங்கே சத்தமாக அழுதால் திட்டிவானோ என பயந்து கொண்டு மெதுவாக அழுதாள்.

அவள் வாயிலுருந்து வரும் புது புது வார்த்தைகள்.அவளின் வித்யாசமான செயல்கள் எல்லாமே அவர்கள் இருவருக்குமே பயத்தை ஏற்படுத்தியது..

எனினும் அவளை சரி செய்தால் ஒழிய பிரச்சனை என்னவென்று தெரியும் என்பதால்

விஷ்வா எழுந்து சந்தோஷின் நெஞ்சில் புதைந்திருக்கும் முகத்தை தன் கைகளால் ஏந்தி “ குட்டிமா மாமாவை பாரு” என சொல்ல

அவள் தலையை மறுப்பாக அசைத்து சந்தோஷின் நெஞ்சில் இன்னும் புதைந்து கொண்டாள்.

“ குட்டிமா மாமா சொல்றேன் மாமாவ பாரு” என்று சற்று அழுத்தாமாக சொல்லவும் ,


அவள் பயத்துடன் அவனை நோக்கி “ மாமா நான் உங்களுக்கு வேண்டாம்” தயவுசெய்து என்னைவிட்டு போய்டுங்க”என அவன் கைகளில் புதைந்து கதற ஆரம்பித்துவிட்டாள்.

விஸ்வாவும், சந்தோசும் கண்ணீரோடு அடுத்த என்ன என மலைத்து நின்று விட்டனர்.


இது எல்லாவற்றிற்கும் காரணம் ஆனவள்..

தன் வாழ்க்கையை எப்பொழுதும் போல் அடுத்தவர்களின் கண்ணீரில் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருந்தாள்.

வருவாள்

மிளாணி ஸ்ரீ
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டியர்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன் படிச்சுட்டு எப்படி இருக்குனு கமெண்ட்ஸ் ல” choo” சொல்லிட்டு போங்க..

லாஸ்ட் எபி கு choo சொன்ன எல்லோருக்கும் என் நன்றிகள்..

Flashback எபி ஆஃபீஸ்ல் உள்ள லாப்டாப்பில் மாட்டிக்கொண்டதால் இன்றும் கரண்டா நடக்குற எபி தான்..

நிறைய பேர் என் கவிதைகள் நல்ல இருக்குன்னு சொல்லிருக்கீங்க அதுக்கு ஒரு ஸ்பேசல் நன்றிகள்

இனி செவ்வாய் காலையில் தான் அடுத்த எபி....
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்....
நெக்ஸ்ட் ud போட்டுட்டேன்...படிச்சிட்டு எப்படி இருக்குனு கமென்ட்ஸ்ல ஒரு choo சொல்லிட்டு போங்க..
லாஸ்ட் ud க்கு கமெண்ட்ஸ், லைக் போட்ட எல்லோருக்கும் ரொம்ப நன்றி..
அடுத்த ud இன்னும் 2 டேஸ்க்கு அப்பறம்....
நன்றி...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12 :
காதலிப்பதால் கவிதை எழுத்துகிறேனா....
இல்லை கவிதை எழுதுவதால் காதலிக்கிறேனா....
தெரியவில்லை....

பிடித்து போய் காதலிக்கிறேனா....
இல்லை பிடித்தத்திற்காக காதலிக்கிறேனா
தெரியவில்லை.....
ஏதோ காரணத்திற்காக பிடித்த
உன்னை எந்த காரணத்திற்காகவும்
விலக்கமுடியவில்லை.....

அடர்ந்து பரந்த பாலைவனத்தில் தேடும் ஒரு துளி நீரைப்போல்......!
உன்னில் ஒளிந்துகிடக்கும் என் காதலை தேடி தேடியே
சோர்ந்து போகிறேன்....
இனிப்பில் இருக்கும் உப்பளவு கூட உறவில்லை
என உரக்க சொல்கிறாய்..
என் உயிரை அறுத்தாவது என் மேலான உன் நேசத்தை நிரூபித்தே தீருவேன்....


( பிளாஷ் பேக்)


அதன்பின் சந்தோஷ் வீட்டிற்கு தொலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு, அவர்கள் காரில் வந்து அகலியை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் ஊரின் வழக்கபடி அந்த ஊரில் வாழும் வன்னான் வீட்டில் உள்ள எவரேனும் அவள் தலைக்கு தண்ணீர் ஊற்றி முறை செய்த பிறகே தாய்மாமன் முறை செய்யும் பழக்கம்.
மல்லிகாவுடன் உடன்பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லாததால் அம்சவள்ளியின் அண்ணன் கணேசன்தான் தாய்மாமன் முறை செய்யவேண்டும் என முடிவு செய்யப்பட்டு,.
30 ஆம் நாள் சடங்கு வைத்துகொள்ளலாம் என அதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதற்குள்ளாகவே அகலியை ஒரு இடத்தில் அமர வைப்பது என்பது முடியாத காரியமாகிவிட்டது.
எல்லோரும் அவளிடம் கெஞ்சி , கொஞ்சி ஒரு வழியாக அவள் எங்கும் போகாமல் வீட்டிலையே இருப்பதாக ஒத்துக்கொண்டாள், ஒரு சில நிபந்தனைகளோடு.

அதாகப்பட்டது என்னவென்றால் அவள் சந்தோசை பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் சந்தோஷ் தன் வீட்டிலேயே இருக்க வேண்டும்.மூர்த்தி அப்பா,செல்வி அம்மா ,அம்சா அம்மா ,மருது அப்பா இவங்க எல்லாரும் நம்ம வீட்டில்தான் இருக்க வேண்டும்.

மேலும் சந்தோஷிற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இருப்பதால் அவனால் தன்னோடு விளையாட முடியாது அதனால் ராஜாவும் தன வீட்டில முப்பது நாள் தங்கவேண்டும் என்றும்,
ராஜாவும் தானும் ஒரு திருடன் போலீஸ் கூட விளையாட முடியாது,

அதனால் கவி,பவநீஷ்,யோகித்,ரித்தி, (பக்கத்துக்கு வீட்டு குட்டி பசங்க) உப்புக்கு சப்பாணியாய் விளையாட அவர்களும் இங்கவே தங்க வேண்டும் என்ற சாதாரண நிபந்தனைகளோடு மலை இறங்கியது அகலி சாமி,
இதை எல்லாவற்றையும் தாங்கி கொண்ட அவள் வீட்டாரால் அவள் கடைசியாக சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அது என்னவென்றால் அவள் சாப்பிடும் நாட்டுக்கோழி பச்சை முட்டை,குடிக்கும் நல்லஎண்ணெய், கேப்பக்களி,அரிசி புட்டு என அனைத்தும் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டால்தான் தான் சாப்பிடுவேன் என்பதாகும்.
(பயபுள்ள எப்படி பழி வாங்குது)
இதில் அந்த உணவு வகைகளை சந்தோஷ் மட்டுமே முகம் சுழிக்காமல் சாப்பிட்டது.மற்றவர்கள் அனைவரும் “தேமே” என்றே சாப்பிட்டார்கள்.
அன்று காலையிலேயே தலைக்கு குளித்து அதை சந்தோஷிடம் துடைக்க சொல்லி கொடுத்துவிட்டு விடாமல் தும்மி கொண்டே உட்கார்ந்திருந்தாள் நம் நாயகி அகலி.
தலையை துவட்டிக்கொண்டு வீட்டில் உள்ளவர்களை சத்தம் போட்டு கொண்டிருந்தான்.

“இவளோ முடி எதுக்கு ? இவளுக்கு வெட்டி விடுங்க வெட்டி விடுங்கன்னு சொன்னா கேட்கிறீங்களா, வைக்கோல் தறி மாறி எவளோ அடர்த்தி,எவளோ நீளம், ஒவ்வொரு தட தலைக்கு குளிச்சிட்டு இவ படுற அவஸ்தை தாங்க முடியல.
தொடர்ந்து ஐம்பது தடவையாவது தும்மிட்டே இருக்கா அடிவயிரெல்லாம் வலிச்சி மயக்கமே வர நிலைமைக்கு போய்டுறா” என சாதாரண தும்மலுக்கு மிகபெரிய விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான் அந்த பாசக்கார நண்பன்.
(டிசைன் டிசைனா யோசிக்கிற டா நீ...பாவம் ஸ்டோரி படிக்கிற என் உடன்பிறப்புகள் எல்லாம்)
அதை பார்த்த அனைவரும் சிரிப்பதா,அழுவதா என்ற மனநிலமையோடு பார்த்துக்கொண்டு இருக்க,,,,
செல்வி மட்டும் “ டேய் சந்தோஷ் உன் தொல்லை தாங்கல,நீளமா இருக்குனுதான் முடியை கட் பண்ணியாச்சி,அடர்த்திய என்ன டா பண்றது எழுந்து ஒழுங்கா ஓடிடு” என கத்தினார்.

ராஜாவோ “ டேய் கருவாயா பேசாம குரங்கு மூஞ்சி குமுதாவுக்கு நானும் இந்த குட்டி பிசாசும் ஒரு சைடு முடிய கட் பண்ணிவிட்ட மாறி நீயும் இவளுக்கு பண்ணிவிட்டுறேன்,

அடர்த்தி கம்மியான மாறியும் இருக்கும் புது ஹேர்ஸ்டைலாவும் இருக்கும்” என்று கூறியவன் அவன் செல்ல அண்ணன் பார்த்த அன்பு பார்வையில் வாயை மூடிக்கொண்டான்.

இப்படி இவர்கள் ரெண்டுபோரோட அலம்பலோடும் முப்பது நாட்களை கடப்பதுற்குள் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் ஒரு வழியாகிவிட்டார்கள்.
அதிலும் பக்கத்து வீட்டில் உள்ள நல்லம்மா என்ற வயதான பெண்மனிதான் அகலியிடம் அதிக நேரம் மாட்டிக்கொண்டது.

(நல்லம்மா என்ற பெயரை பாத்து ஏமாந்துவிடாதீர்கள் மக்களே , எப்பொழும் எல்லோரையும் குறை சொல்லிக்கொண்டும்,வார்த்திகளால் காயப்படுத்திக்கொண்டும்,
கொச்சை வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டும்தான் இருப்பார்.தப்பி தவறி யாரவது ஒரு வார்த்தை எதிர்த்து பேசிவிட்டால் அன்று முழுவதும் அவர்களை திட்டுவதையே முழுநேர வேலையாக பார்ப்பார்.அதனால் அவரிடம் யாரும் வாய் கொடுப்பது இல்லை)
ஒரு நாள் அகலி சந்தோஷின் அருகில் அமர்ந்திருப்பதை பார்த்து “ஏன் டி அகலி அது என்ன எப்ப பாரு அவன ஓரசிகிட்டே உட்கார்ந்துருக்க,உனக்கு ஏன் டி இப்பவே இந்த புத்தி....”என வார்த்தைகளால் நெருப்பை அள்ளி கொட்டினார்.
அகலிக்கே “திக்” என்ற போதிலும் அவருக்கு பதில் அடி கொடுக்கும் பொருட்டு

“அப்படியா பாட்டி நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா ?”, என்று வேண்டும் என்றே சம்தோஷின் கையை இறுக்கி பிடித்துக்கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்தாள்.
இப்படி அவர் தன் வீட்டிற்கோ தன் வீட்டின் வழியோ சென்றாலோ வேண்டும் என்றே சந்தோஷின் மடியில் உட்கார்ந்து கொள்வது,அவனை உப்பு மூட்டை தூக்க சொல்வது என அவரை காண்டாக்கி கொண்டிருந்தாள்.
அவர் யாரையாவது ஏதாவது சொன்னால் ஒன்று அவர்கள் அவரின் முன் வர மாட்டார்கள் இல்லை அவரிடம் சண்டை போடுவார்கள்.இது இரண்டில் அவர்கள் எது செய்தாலும் அவரின் வாய்க்கு அது தீனியே....

ஆனால் அதற்கு மாறாக அகலி இவ்வாறு செய்ததில் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
இப்படியாக அவளின் சடங்கு நாளுக்கு இன்னும் 3 நாட்களே இருக்க கைகள் இரண்டிலும் மருதானியுடன் இருப்பதால் ஒரு விளையாட்டும் விளையாட முடியாததால் உணவு உண்ணலாம் என தன் வீட்டில் உள்ள பெருசுகளை தேடிக்கொண்டிருந்தாள்.
எல்லாரும் எங்க போய்ட்டாங்க , என அந்த ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டை தலைக்கீழாக தேடிப்பார்த்தாள்.

ஒருவரும் கண்ணில் படவில்லை...”என்ன டா சூனா பாணாக்கு வந்த சோதனை,இதுக எல்லாம் ஒன்னு சேர்ந்த ஹெவியா ஏதாவது பிளான் பண்ணுவாங்களே “என யோசித்தக்கொண்டே
சென்று கொள்ளை புறம் போகவே அங்கு உள்ள கிணற்றின் பக்கத்தில் உள்ள மோட்டர் ரூமின் மேடையில் அமர்ந்து கையில் ஒரு நோட்டுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

“அதானே பார்த்தேன்” என்று அவர்கள் அருகில் வந்தவள் “ ஆல் அப்பாஸ் இங்க பாருங்க சடங்கு பங்க்ஷன்ல என்னை சோகேஷ் பொம்மை மாறி நிற்க வச்சி ஏதாவது காமெடி பண்ணீங்க “, அவ்ளோதான்

ஒழுங்கா இதுக்கு செலவு பண்ற பணத்தை கீழத்தெருல இருக்குற அண்ணாங்களாம் நம்ம ஊரு கவர்மெண்ட் ஸ்கூல்ல பசங்களுக்கு நல்ல படிப்பு சொல்லி கொடுக்கவும் ,
அதை விரிவுபடுத்தவும் நிதி திரட்டிக்கிட்டு இருக்கங்களாம் அதுக்கான முழுச்செலவையும் நீங்களே கொடுத்துடுங்க சரியா”,
அகற்கு அவளின் ஆல் அப்பாஸ் “ சரி “ சொல்லித்தான் ஆக வேண்டும்,அவளிடம் பேசி அவர்கள் யாரலையும் ஜெயிக்க முடியாது என்பதால் அவர்கள் தலை சரி என்றே சொன்னது.
செல்வியின் பக்கம் திரும்பியவள் “அம்மா பசிக்குது சாப்பாட்டு போட்டு ஊட்டிவிடுங்கள் “என்றார்.
செல்வியும் சரி என்று அவளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டே “ பாப்பா எங்கடா உன் டச்சப் பாய் என்னை சாப்பாடு கொடுக்க சொல்ற” என்று கேட்டார்”
“மம்மி நீங்க என் சூர்யாவை ரொம்ப கிண்டல் பண்றீங்க இது நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்”,
( நீங்க தேவாவாக்கும் கருமம்....)
அவனுக்கு நாளைக்கு கடைசி பரிட்சை இருக்குல்லஅவனை படிக்க சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றாள்.
*†*†******÷÷
அவளின் சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்து அவளின் முழு ஆண்டு தேர்வும் இனிதே முடிய கோடை விடுமுறையை முடிப்பதற்குள் பயங்கர கருப்பாய் இருந்த சந்தோஷை கருப்பாய் பயங்கரமாய் மாற்றிவிட்டு..

வீட்டில் உள்ள அனைத்து பெரியவர்களையும் எல்லா விளையாட்டிலும் சேர்த்து குழந்தைகளாக்கிவிட்டு,காமாட்சியை அனைத்து விளையாட்டுகளின் முதன்மை அம்பயாராக மாற்றிவிட்டு
சந்தோஷின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்ப்பதற்கு வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் தலையை நுழைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

11 மணிக்கு தான் தேர்வு முடிவு என சந்தோஷ் சொல்லியும் கேட்காமல் “எனக்கு தெரியும் போடா பிளாக்கி” என
காலையில் 8 மணியிலுருந்து பிரஷும் கையுமாக அமர்ந்துவிட்டாள்.
ரிசலட் அறிவிக்கப்பட்டு சந்தோஷ் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான்...
அகலியை தான் கையில் பிடிக்க முடியவில்லை சந்தோசத்தில், ரத்தினம் சொல்லும் அந்த வார்த்தையை கேட்கும் வரை..
“சந்தோஷ் எந்த காலேஜ்லபா ஜாயின் பண்ண போற, சிவில் என்ஜினீயரிங் வேற படிக்கணும்ன்னு சொன்ன” என்று கேட்டார்.
அவன் சொன்ன காலேஜின் பெயரை கேட்டவர் “ நீ அங்க படிக்கிறதுக்கு படிக்காமலே இருக்கலாமே “ என்றார்.
“ இல்லப்பா அதுதான் நம்ம வீட்டிலிருந்து பக்கமா இருக்கு தினமும் போய்ட்டு போய்ட்டு வரலாம் ,
தேனுகுட்டி நான் இல்லாம இருக்க மாட்டா .அத்தோட எனக்கும் அவளை பார்க்காமல் இருக்க முடியாதுப்பா,
விளையாடுறேன்னு எங்கையாவது விழுந்து வைப்பா அப்பா அவளை பாரத்துகணும் ” என்றான்.

“ நல்ல பிள்ளை போ நீ.. இதுக்கு எதுக்கு நீ ஸ்கூல் பர்ஸ்ட் வரணும்,.நீ சென்னையில உள்ள NIT காலேஜ்ல தான் படிக்கிற, பாப்பாவ உன் அளவுக்கு இல்லனாலும் ஓரளவு பத்திரமா பாத்துக்க,நாங்க 3 குடும்பம் இருக்கோம்,

அத்தோட உன் தேனுக்குட்டியே நாலு பேர பாத்துப்பா...நீ கவலை படாம இரு , பாப்பாட நான் பேசிக்கிறேன் “என்றார்.
ரத்தினம் வந்து அகலியிடம் சொன்னதுதான் தாமதம் அவள் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்துவிட்டாள்...அதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பே இல்லை என்றும் படிக்கிற புள்ளை எங்கு இருந்தாலும் படிக்கும் என்று சொல்லிவிட்டாள்.
சந்தோஷோ “ தேனுகுட்டி சொன்னா மட்டும் போறேன் இல்லன வேண்டாம் என்பதோடு முடித்துவிட்டான்.
அவர்கள் வீட்டில உள்ளவர்கள் தான் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள்.
மல்லிகா” ஏன் பாப்பா சந்தோஷ் எவளோ பெருந்தன்மையா அவனோட நல்ல படிப்பை கூட உனக்காக வேண்டாம்னு சொல்றான்,
அதே மாறி நீயும் அவனுக்காக பார்க்க வேண்டாமா , அவன் இங்க உள்ள காலேஜ்ல பஸ்டா(First) இருந்த கூட அந்த காலேஜ் ல 10வது உள்ளவனுக்கு தெரிஞ்சதுதான் தெரியும் “

“முடியவே முடியாது “என்று சொன்னவள் 10 நாட்கள் தேயோ தேய் என்று விலக்கி ஒத்துக்கொள்ளவைத்தார்கள்.
ஒரு வழியாக அவன் சென்னை செல்லும் நாளும் வரவே அகலி கீழே புரண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
அவளை சமாதானம் செய்து வார இறுதிகளில் வருவதாகவும் தினமும் போன் செய்கிறேன்,என்று சொல்லி அவளிடம் 1000 பத்திரம் சொல்லி அனைவரிடமும் கனத்த மனதுடனும் கண்களில் கண்ணீரோடும் சென்னை சென்றான்
( ரொம்ப ஓவரா பண்றீங்க டா ரெண்டு பேரும்)
வருவாள்..

மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்...
இதோ காதலானோட அடித்த அத்தியாயம்...
நீங்க எல்லாம் பீப் போட்டு பச்சை பச்சையா திட்டுறது எனக்கு நல்லா கேட்குது..
அண்ணன் கல்யாணம் ..அப்பறம் தவிர்க்க முடியாத காரணங்களால் 1 வீக்கா update போட முடியவில்லை..
மன்னிச்சிக்கோங்க பிரின்ட்ஸ்..
எல்லாரும் பதிவு ரொம்ப சின்னதா இருக்குன்னு சொன்னீங்க..
என்னோட லாப்டாப் display போனதால கடைசி சில பதிவுகள் நான் மொபைலதான் டைப் செய்து போடுகிறேன்...
நீங்க படிக்கிற 10 மினிட்ஸ் பதிவை நான் 3 மணி நேரம் டைப் பன்றேன் செல்லம்ஸ்...
முடிந்த வரை பெரிய பதிவா கொடுக்க முயற்சி செய்யறேன் டியர்ஸ்
முந்தைய பதிவுக்கு choo சொன்ன எல்லார்க்கும் என்னோட நன்றிகள்..
இந்த எபிக்கும் எல்லோரும் கமெண்ட்ஸ்லவொரு choo சொல்லிடுங்க..
நன்றிகள்...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13:

ஒத்துக்கொள்கிறேன்.....
கற்பூரமே நீ....
காற்றுக்கு கரைவதற்கு பதில் என் காதலுக்கு கரையலாமே....?

பிரேதப்பரிசோதனை செய்தால்....
இறப்பிற்கான காரணம் தெரிந்துவிடுமாம்....?

தினமும் மனப்பரிசோதனை செய்யும்..
என்னால் அறிய முடியவில்லை
உன் மேல் காதல் வந்த காரணத்தை....!!!!

என்
நாணத்தை உடைத்த பெருமை உனக்கே....
அதன் சன்மானத்தையாவது எனக்கு தரலாமே....?

“ஆம் “என்ற ஒற்றை வார்த்தையில்....
ஒரு வேளை....!

ஓட்டு போட பணம் கேட்பதை போல....
உன் காதலை சொல்ல ...
கிம்பளம் கேட்கிறாயோ...

தருகிறேன் ..
கண்டிப்பாக அத்தனையும் காதலாக...

உன் உணர்வுகளால் நான் உணர்ந்த..
உன் காதலை உன் உதடுகளால் நீ சொல்லும் போது.....
இறுதியாக ஒன்று....

காத்திருக்க போவதில்லை..
கடத்தப்போகிறேன்...
கட்டாயத்திருமணம் நடத்தப்போகிறேன்....

விஸ்வா தன் கண்ணீரையும் சோகங்களையும் அப்படியே தன்னுள் மறைத்துவிட்டு சிரித்துக்கொண்டே அவள் மூக்கை பிடித்து ஆட்டி “ஏய் குள்ளவாத்து உனக்கு ஆசை தாண்டி உனக்கு விஸ்வா வேணுமா
”, ஏதோ மாமா மாமான்னு சுத்திக்கிட்டு இருந்தவளுக்கு உடம்பு முடியலனு பார்க்க வந்தா நீ என்னனா நான் உங்களுக்கு வேண்டாம் நான் உங்களுக்கு வேண்டாம்னு தேஞ்ச ரெகார்ட் மாறி சொல்லிகிட்டே இருக்க,முதல என் உயரத்துக்கு செட் ஆகுவியா நீ ,என் இடுப்பு அளவுக்கு இருந்துட்டு உனக்கு ரொம்ப கொழுப்பு டி”,என்று இதழோர சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளை சீண்டினான்.
அவன் சொன்னவுடன் முகம் பிரகாசமாக அவனை பார்த்தவள் “ஆமா மாமா நான் உங்களுக்கு மேட்ச் இல்லை தான் “,என சந்தோசமாக சொன்னாள்.
இப்படி அவளை சீண்டினால் கோபம் வந்து தன்னிடம் திரும்பி சண்டை போடுவாள் என நினைத்துதான் அவளிடம் சொன்னான்,
ஏனென்றால் அவனுக்கு தெரிந்த அகலி அப்படிதான் செய்வாள். ஆனால் அவளோ முகம் முழுவதும் முழு சந்தோசத்துடன் அவனிடம் பதில் சொல்லவே குழம்பிவிட்டான்.
தன் யோசனையில் இருந்து வெளியே வந்தவன்,”சரி சரி அதெல்லாம் அப்பறம் பேசாலாம் ,காலையிலிருந்து நீ எதுவும் சாப்பிடல,

டேய் சந்தோஷ் போய் ஏதும் ஜூஸ் வாங்கிட்டு,அப்படியே ஜனனிய கூப்பிடுகிட்டு வா,எப்போ வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்னு கேட்கணும் ” என்று சொன்னான்.
அகலி மீண்டும் ” மாமா நான் உங்களுக்கு நிஜமாவே மேட்ச் இல்லை” என்று எதையோ நினைத்து வேதனையுடன் சொன்னவள் விஷ்வாவின் ஒரு முறைப்பில் வாயை மூடிக்கொண்டாள்.
தன் தேனுகுட்டியை அதற்கு உண்டான இடத்தில் சேர்த்துவிட்ட திருப்தியுடன் சிரிப்புடன் எழுந்து சென்றான்.
விஸ்வா அதட்டியதால் உதட்டை மடித்து அழுகையை அடக்கி கொண்டு உட்கார்ந்திருந்தவள் அருகில் சென்று அவளின் வலது கையை எடுத்து தன் இரு கைகளிலும் பொத்திக்கொண்டு “என்ன டா குட்டிமா”,முன்னாடில்லாம் மாமவ இந்த செப்புவாயல பேசி பேசியே சாகடிப்ப,ஆனால் இப்ப அழுகுறதுக்கு மட்டும்தான் வாயை திறக்குற”,என கேட்டான்.
அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் கண்களில் வழிந்த கண்ணீரையும் துடைக்காமல்,அவன் கைகளிலிருந்து தன் கையையும் விலக்கிக்கொல்லாமல் ,சுவரை வெறித்தபடி அமர்ந்துவிட்டாள்,
பட்டாமபூச்சி மாறி சுத்திகிட்டு இருந்தவளை இப்படி மாறிப்போய் இருக்க தாமே ஒரு பெரிய காரணம் ஆகிவிட்டோமே, சீக்கிரமே பழைய அகலியா உன்னை மாற்றியே தீருவேன் குட்டிமா”,எனஎன ஊமையாகவே அவளிடம் பேசிக்கொண்டான்.
சந்தோஷ் ஜூசை வாங்கிகொண்டு ,ஜனனியையும் அழைத்துக்கொண்டே வந்தான் , ஜனனி தன் முகத்தை ஏழு முழத்துக்கு தூக்கிவைத்துகொண்டே அவனுடன் வந்தாள்,
சந்தோஷ் “ தக்காளி தயவுசெய்து இப்படி கோபமா முகத்த வசிக்கதா டி,எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது“,என்றான்.
ஜனனி “போடா கருவாய“ என வேகமாக அவனுக்கு முன்னே அகலியின் ரூமை அடைந்தாள்...
ஜனனி “அகலி” என அழைக்கவும் வேகமாக தன் தலையை திருப்பியவள் ஜனனியை கண்டதும் “ஜானு நீ எங்க இங்க ,நீ இந்த ஹாஸ்பிட்டலதான் வேர்க் பண்றீங்களா. ?

,ஜனனியும் அவளுக்கு பதில் சொல்லி சிரித்து பேசிகொண்டிருக்க
என இருவரும் தெரிந்தவர்கள் மாறி பேசவும் விஸ்வா யோசனையுடன் “இவர்களுக்கு எப்படி பழக்கம்”,இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரே ஒரு தொடர்பு தாம்தான் ,நம்ம இவர்களுக்கு அறிமுகம் கொடுக்கவே இல்லையே” என யோசித்துக்கொண்டிருக்க சந்தோஷும் உள்ளே வந்துவிட்டான்.
“பாப்பு அகலிய உனக்கு எப்படி தெரியும்”,

,சந்தோஷும் ஜனனியும் திரு திருவென்று முழிக்கவே
அகலி “ மாமா இவங்க ஜனனி சந்தோஸ்க்கு தெரிஞ்சவங்க டாக்ட்ரா இருக்காங்க,என அவன் தங்கையையே அவனுக்கு அறிமுகப்படுத்த இப்பொழுது விஷ்வாவின் பார்வை அவர்கள் இருவரையும் சந்தேகத்தோடு பார்த்தது,
அடக்கடவுளே “தேனுகுட்டி உன் நண்பன இப்படி மாட்டிவிட்டுடயே டா,
இந்த கூர்மாயி உன் விசயத்துல மட்டும்தான சாப்ட். ,போச்சி இப்ப இவன் பங்குக்கு இவனும் என் முடிய பிடிச்சி ஆட்ட போறான் என சந்தோஷும்
“ஐயோ அண்ணன்ட இப்படி மாட்டிவிட்டுட்டாளே,இப்ப எப்படி அண்ணன டைவர்ட் பண்றது என்று யோசித்தவள் விடை கிடைத்ததன் பலனாய் முகப்பிரகாசத்துடன் அகலியை நோக்கி
”அது மட்டும் இல்லை அகலி உன் மாமனுக்கும் உனக்கும் நடக்க போற கல்யாணத்துல அவன் தாலி கட்டும் போது மூன்றாவது முடிச்சு போட போறதும் அடியவள்தான் என சொல்ல அதன் விளைவாய் விஸ்வா சிரிப்புடன் அகலியை பார்க்க,
சந்தோஷ் நடக்க இருக்கும் விபரீதம் தெரியும் ஆதலால் வேகமாக சென்று அகலியை பின்புறமாக இறுக்கி பிடிக்க

“அவன் பிடியிலிருந்து வேகமாக காலை மேல்நோக்கி தூக்கி எம்பி எம்பி குதித்தவள் “ ஐயோ வேண்டாம் விட்டுருங்க நான்தான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிட்டேனே,

கண்டிப்பா வீரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ,என்னையே விட்டுருங்க,இல்லை என்னை கொன்னுடுங்க,இப்படிலாம் பண்ணாதீங்க என்று இன்று காலை தமிழின் வீட்டில் விஷ்வாவை பார்த்து பண்ணியது போலவே செய்து கொண்டிருந்தாள்.
எவ்வளவு இறுக்க சந்தோஷ் பிடித்திருந்தாலும் அவன் பிடியிலிருந்து தன் முழு பலத்தையும் கொண்டு திமிறிக்கொண்டு வெளிய வர,

விஸ்வா அவளை “ குட்டிமா “ என மீண்டும் பிடிக்க முயல அவன் பிடியிலிருந்தும் வெளியே வந்தவள் கண்ணில் அங்கே உள்ள மெடிக்கல் கிட்டில் உள்ள கத்தி படவே அதை எடுத்து கையின் நரம்பை சடாரென்று அறுத்துக்கொண்டாள்.
அவள் எண்ணமெல்லாம் இந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் அது மரணம் என்றாலும் பரவாயில்லை ,எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மாமனக்கு எதுவும் ஆகக்கூடாது,அது மட்டுமே அவள் மனம் முழுவதும் ஆக்கிரமிக்க கையை அறுத்துக்கொண்டாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்ததால் நடந்ததை யாராலும் தடுக்க முடியவில்லை,ஏற்கனவே பூஞ்சை உடலில் இருப்பவள் ,நேற்று விஷ்வாவை பார்த்ததிலிருந்து மேலும் மேலும் அவளின் உடலும் உள்ளமும் வேதனையில் சோர்ந்து போக கையை அறுத்த அடுத்த வினாடி மயங்கி விழுந்தாள்
இரத்தம் நிற்காமல் வெளிவந்துகொண்டு இருக்க சந்தோஷ் நின்ற இடத்திலேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்தான்
“கடவுளே என் குழந்தைக்கு இன்னும் எவளோ சோதனையாதான் கொடுப்பா,உனக்கு மனசாட்சியே ??

தேனுகுட்டி மாறி இந்த உலகத்துல சந்தோஷமா குழந்தைதனம் மாறாம யாருமே இல்லைன்னு நினைச்சுட்டு இருந்தேனே....எல்லாத்துக்கும் சேர்த்து இந்த 2 வருசமா அவள இந்த பாடு படுத்துறியே உனக்கு இன்னும் விட மனசு இல்லையா ?,என அழுது மடிய
விஸ்வா வேகமாக அவளின் அருகே சென்று அவளை கைகளால் அள்ளி ,அதிர்ந்து நின்ற ஜனனியிடம் அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லி சொல்ல உடம்பில் பலம் இல்லாதவள் கிழித்ததாள் காயம் ஆழம் இல்லை அதனால் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகலி தூங்கியதும் சந்தோஷின் அருகில் வந்தவன் “இந்த 2 வருசத்துல இன்னும் எனென்னதான்டா நடந்தது என்று கேட்டான்.
“விஸ்வா அவள் லாஸ்டா உன்னிடம் பேசிட்டு வந்ததுக்கு அப்பறம் எனக்கு போன் பண்ணாள், “என்னை 1 வீக் டிஸ்டர்ப் பண்ணாத டா,வீட்டில எதாவது சொல்லி சமாளிசிக்கனு சொல்லி போஃன வைச்சிட்டா”,நானும் அவளை தொல்லை பண்ண வேண்டாம்னு நினைச்சி ,வீட்லயும் சொல்லிட்டு நானும் பேசல
ஆனால் 1 வீக் ஆகியும் அவள் திரும்பி பேசல,போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்தது, எனக்கு டிக்கட் உடனே கிடைக்கல மறுநாள் இங்கு வந்து பார்த்தா அவள் எதையோ பறிகொடுத்த மாறி இருந்தாள்,ஒரு வார்த்தை கூட பேசல,
நான் எவளோ முயற்சி செய்தும் அவளை என்னால பேச வைக்க முடியல, குழந்தை மனசோட இருந்தவளுக்கு உன்னோட நிராகரிப்பு தாங்கமுடியலன்னு நானா நினைச்சிகிட்டு,அவளை வீட்டுக்கு அழைச்சிகிட்டு போய்ட்டேன் ,வீட்டில உள்ளவங்கள்ட்ட ஏதோ சொல்லி சமாளிச்சேன்.
கொஞ்சநாள் அப்படியே இருந்தவள், நாங்கள் எல்லாம் அவளை பார்த்து வருத்தப்படுறது பிடிக்காம எங்கள் எல்லார்டையும் ஒரு ஒரு வார்த்தை மட்டும் பேசுவா.
நைட்டெல்லாம் தூங்கவே மாட்டாள் அப்படியே என்னைக்காவது அசந்து தூங்கிட்டானா “ஏதோ ஒரு கனவில கண்ணை முழிச்சு உடம்பெல்லாம் நடுங்க ,வியர்த்து வலிய, சுவற்றோடு ஒட்டிப்போய் உட்கர்ந்திருப்பாள்,
அப்படியே கொஞ்சநாள் போக வீட்டில எதாவது நல்லகாரியம் பண்ண வீட்ட பிடிச்சிருக்க தோஷம் போகும்னு ஜோசியக்காரர் சொல்ல தமிழுக்கும்,காவியாக்கும் கல்யாணம் பண்ணலாம்னு கல்யாணம் பண்றத தாலி வாங்குறதெல்லாம் பத்தி பேசிட்டு இருந்தப்ப தேனு அதைக்கேட்டு இன்னைக்கு நடந்துட்ட மாறிதான் நடந்துகிட்டாள்.
ஹாஸ்பிடல 1 வாரம் வச்சிருந்தோம்.தமிழோட கல்யாணத்துக்குகூட நாங்கள் அவளை அழைச்சிட்டு போகல,தமிழும் அகலி இல்லாம ஆடம்பரமா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு சிம்பிளா கோவிலா பண்ணிகிட்டான்.
அதுக்கு அப்பறம் நாங்க யாரும் அகலி முன்னாடி கல்யாணம்பத்தி பேசுறது இல்லை.
நானும் அவளை நினைச்சி ரொம்ப வருத்தப்படுறதால நான் எவ்வளோ சொல்லியும் கேட்காம என்னை மறுபடியும் சிங்கபூர்க்கு அனுப்பி வைச்சிட்டாள்.
மாசம் மாசம் நான் 2 நாள் லீவுல வந்து பாரத்துட்டுபோவேன்,நாங்கள் எல்லாம் எவளோ முயன்றும் அவளை பழைய படி மாத்தமுடியல. என்று தனக்கு தெரிந்த வரை அனைத்தையும் சொன்னவன்
பின் விஷ்வாவின் முகத்தை பார்த்து “என் தேனுகுட்டிக்கு என்ன டா ஆனது” என்று கேட்க ,விஷ்வாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவனுக்கும் எதுவும் புரியவில்லை தான் அன்று பேசியதன் விளைவு இவ்வளவு தூரம் தன்னை வாழ் கொண்டு அறுக்கும் என்று அவன் யோசிக்கவில்லை.
இருந்தாலும் அவளின் புலம்பலிலும், அழுகையிலும் அவன் புரிந்து கொண்டது அவள் கல்யாணத்தை வெறுப்பதும் தன்னை கல்யாணம் பண்ணிக்கொண்டாள் தனக்கு எதுவும் ஆபத்து வரும் என்பதை அவள் ஆள் மனது முழுதாக நம்பியதையும்
ஒரு முடிவுடன் “ உன் தேனுகுட்டிய பழைய படி உன்னிடம் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு எனக்கு கொஞ்சா நாள் மட்டும் டைம் கொடு ‘ என்றான்.
நேற்றிலிருந்து அவன் முகத்தில் உள்ள இதம் காணமல் போக அவன் முகம் இருகிய பாறை போல ஆனது.
ஒரு முடிவுடன் எழுந்தவன் தன தங்கையை நோக்கி “பாப்பு சந்தோசையும் குட்டிமாவையும் கவனமா பாத்துக்க,டேய் சந்தோஷ் ஊருல உள்ள உங்க வீட்டு அட்ரஸ் கொடு” என்று வாங்கி கொண்டவன்,அவர்கள் என்ன ஏதோ என்று கேட்பதற்குள் புயலென தன் வீட்டை நோக்கி சென்றான்.
ஏற்கனவே ஜனனி மூலம் ஓரளவு விஷயம் தெரிந்து முருகன் சந்தோசமான மனநிலமையோடும்,சுந்தரி இவனும் எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்க போறானா,இருக்கட்டும் அவன் வரட்டும் இன்னைக்கு இருக்கு ,என பொருமிக்கொண்டே அமர்ந்திருந்தார்கள்.

வீட்டில் உள்ளே நுழைந்தவன் அங்கே ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்த தன பெற்றோர்களின் அருகே சென்றவன்.,சுந்தரியின் காலுக்கு அடியில் அமர்ந்து அவரின் மடியில் தலை வைத்து, சுந்தரியின் கையை எடுத்து அவனின் தலையில் வைக்க
தன் மகனின் பலவருடங்களுக்கு பிறகான இணக்கமான செயலில் மனம்கனிந்து தன் கோபம் மறைந்து அவன் தலையை இதமாக வருடிக்கொடுத்தார் சுந்தரி.
சில நிமிடங்களுக்கு பிறகு அவனின் கண்ணீர் சுந்தரியின் மடியை நனைக்க
சுந்தரி “ விச்சு கண்ணா என்னாச்சி” என கேட்க
அவரின் கையை பிடித்துக்கொண்டே “அம்மா எனக்கு அகலினு ஒரு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு,அவள் இல்லைனா எனக்கு இந்த வாழ்கையே நரகம்மா,

என்னால அவ நிறைய கஷ்டபட்டுடா, என ஆதி முதல் அந்தம் வரை அவள் காதலை சொன்னது , தான் அதை மறுத்ததிற்க்கான காரணம், பின் அவள் வாழ்கையில் நடந்தது ,இந்த இரண்டு வருடமாக தான் சுயம் தொலைந்து அலைந்தது என அனைத்தையும் சொன்னவன் ஆறுதல் தேடும் குழந்தை என தன் தாயின் முகம் பார்த்தான்
தன் கையில் விழுந்து கதறும் தன் மகனை பார்க்கும்போது தான்,தன் கோபத்தாலும்,தன் பிடிவாதத்தாலும்,தன் பழமை வாய்ந்த எண்ணங்களாலும் தன் பிள்ளைகளின் எதிர்காலங்கள் ஒண்ணுமே இல்லாமல் ஆனதை மிகவும் தாமதமாக உணர்ந்தார்.
வாழ்கையை தொலைத்துவிட்டு வாழவேண்டிய வயதில், தன் அறையே உலகமென இருக்கும் தன் பெரிய மகனையும்,தன் வாழ்கையை காப்பாற்ற போராடிக்கொண்டு இருக்கும் தன் சின்ன மகனையும்,
அதை எல்லாவற்றையும் விட உயிருடன் நரக வேதனையை அனுபவிக்கும் யாரென்றே தெரியாத அந்த பெண்னையும், இவை எல்லாவற்றையும் பார்பவருக்கு தன் தவறின் வீரியம் புரிந்தது.
தன் பதிலுக்காக காத்திருக்கும் தன் மகனை நோக்கி கண்களில் மன்னிப்பை தாங்கி “என்ன ஆனாலும்,என் மருமகளோட கடந்த காலத்துல என்ன நடந்துருந்தாலும் அவள்தான் உன் மனைவி கண்ணா”,என்று அவனை அணைத்து தன் சம்மதத்தை கூறினார்.முருகனுக்கும் தன் மனைவியின் சம்மதம் சந்தோசமே
தன் அன்னையின் சம்மதம் கிடைத்த உடனே ,” தன் பொற்றோரை அழைத்துக்கொண்டு அழகூரை நோக்கி சென்றான்.
தன்னவளின் வீட்டை அடைந்ததும்தான் அவன் காரின் வேகம் மட்டுப்பட்டது. எட்டு மணி நேரத்தில் வர வேண்டிய ஊரை நான்கே மணி நேரத்தில் வந்தடைந்தான்.
தன் வீட்டை நோக்கி யாரோ வருவதை பார்த்த காமாட்சி அவர்களின் அருகே சென்று “ யாரு சாமி நீங்க யார பாக்கணும்” என்று கேட்டார்.
அகலியின் அப்பா பெயரை சொல்லி “ ரத்தினம் அங்கிள பார்க்கணும் பாட்டி “ என்றான்.அவர்களை அழைத்துக்கொண்டு ஹாலில் உள்ள சோபாவில் அமர வைத்துவிட்டு,அடுக்கலையை நோக்கி விரைத்தார்.
ஒரு படுக்கை அறை என்றாலும் மிகவும் விசாலமாக தன் சென்னை அபார்ட்மென்ட் அளவிற்கு விரிந்துகிடக்கும் வீட்டை பார்த்தான்.மிகவும் நேர்த்தியுடன் ஹாலில் உள்ள சுவரு முழுவதும் தன் மல்லிபூவின் போட்டாக்களே நிறைந்திருக்க,
பிறந்த உடனே எடுத்த அவள் பிஞ்சி பாதங்களில் ஆரம்பித்து அவளின் அனைத்து சேட்டைகளுடன் நிறைந்து இருந்தது.அதை சரி பாதி வேதனையுடனும் ஆசையுடனும் வருடிகொடுத்தன விஷ்வாவின் விழிகள்.
முருகனும்,சுந்தரியும் தங்கள் மருமகளின் அழகில் லயித்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் ரத்தினம் அவர்களை நோக்கி வந்து விஷ்வாவை கண்டதும் “தம்பி எப்படி இருக்கீங்க”,என்ன இவ்வளோ தூரம்” என விசாரித்தார்.
அன்று ஏன் தன் மனது அவர்களுக்கு உதவ சொல்லி உந்தியது என புரிந்துகொண்ட மகிழ்வுடன் “அங்கிள் இது என் அம்மா அப்பா,நாங்க அகலியை பொண்ணு கேட்டு வந்துருக்கோம்” என்றான்.
அகலி என்றதும் அவளின் ஒட்டுமொத்த குடும்பமும் ஆஜர் ஆகியது.அவர்கள் அனைவரையும் பார்த்த சுந்தரிக்கே சற்று ஜர்க்காகிவிட்டது.

அந்த வெள்ளந்தி மனிதர்களோடு பேசும் போது அவர்களை மிகவும் பிடித்துவிட்டது முருகன் தம்பதியினருக்கு.
விஸ்வா முதலில் “பொண்ணு கேட்டு வந்திருக்கோம்” என்று சொன்னதோடு சரி அதன் பின் அந்த வேலையை தனதாக்கி கொண்டார் சுந்தரி.

அவர்கள் அனைவரிடமும் பக்குவமாய் பேசி தனக்கு விஸ்வா சொன்ன அனைத்தையும் சொன்னவர்.
அங்கு உள்ள ஆண்கள் அனைவரும் விஷ்வாவை கோபமாக பார்க்க உடனே சுந்தரி “இந்தமாறி நடந்ததற்கு முழு காரணமும் நான்தான்,

விஸ்வா உங்க பொண்ண வேண்டாம்னு சொன்னது கூட அவள் மீள் உள்ள அதீத காதலினால்தான்”,உங்க பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு என் புள்ளையும் சந்தோசமா இல்லங்க ,தயவுசெய்து உங்க பொண்ண என் வீட்டுக்கு அனுப்புங்க நான் என் சொந்த பொண்ணு மாதிரி பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
தங்கள் மகளுக்கு இப்பொழுது இந்த கல்யாணம் எவ்வளவு முக்கியம் என்பதை அங்கு உள்ள அனைவரும் உணர்ந்தே இருந்தனர்.

தன் மகளின் வாழ்கையில் கல்யாணம் நடக்குமா என்று இருந்தவர்களுக்கு இந்த செய்தி மிகவும் சந்தோசமே,இருந்தாலும்
மூர்த்தி “தம்பி பாப்பாவ உங்களுக்கு கல்யாணம் பண்ணிகொடுக்க எங்க எல்லோருக்கும் முழு சம்மதம் இருந்தாலும் பாப்பாக்கு என்று ஆரம்பித்தவரின் இடையில் புகுந்த விஸ்வா
“எல்லாம் எனக்கு தெரியும் அங்கிள் சந்தோஷ் சொல்லிட்டான்”என்று அதற்கான திட்டத்தை விளக்கினான்.இது எந்த அளவுக்கு ஒத்துவரும் என அவனுக்கும் தெரியவில்லை,அவர்களுக்கும் தெரியவில்லை.
அவர்கள் அனைவரையும் உடனே கிளம்ப சொல்லிவிட்டு சிறுதுநேரம் அமர்ந்தவனின் அருகில் தட்டுடன் அமர்ந்தார் காமாட்சி.
“ சாமி ரொம்ப களைச்சி போய் தெரியிற, 2 வேளையா சாப்பிடாம இருக்கேனு நல்ல தெரியுது,தயிர் சாதம் எடுத்துகிட்டு வந்துருக்கேன் 2 வாய் வாங்கிக்கப்பா” என்றார்.
அப்பொழுதுதான் தான் நேற்று காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என உணர்ந்தான். இந்த மனிதர்களை பார்க்கும் போதுதான் தன் மல்லிபூ எப்படி தேவதை பெண்ணாய் வளர்ந்தாள் என்று தெரிந்து கொண்டான்.
அப்பொழுதும் கூட சந்தோஷிற்கு போன் செய்து அவள் ஜூஸ் குடித்துவிட்டு துங்கிக்கொண்டிருக்கிறாள் என்ற தெரிந்தவுடன்தான் அவன் உணவை வாயில் வாங்கினான்.
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு மீண்டும் சென்னை நோக்கி பயணமானான்.

காரில் செல்லும்போதே அனைத்து ஏற்பாட்டையும் செய்தவன் சந்தோஷிற்க்கும் தன் முடிவை தெளிவுபடுத்தினான்.

மறுநாள் விடியும் வேலையில் ஹாஸ்பிடலை அடைந்தனர் அனைவரும்,
அவர்கள் அனைவரையும் ஹாஸ்பிடலில் இறக்கிவிட்டவன் சிறு வேலை என்று திரும்பி வந்துவிட்டான்,

அகலியின் அறையை கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவர்களின் கண்ணில் அங்கே உள்ள சோபாவில் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்தபடி தூங்கும் சந்தோஷும் ஜனனியுமே கண்ணில்பட்டனர்.

அகலியின் உடல் நிலைக்கு முன் அவர்களின் நெருக்கம் பின்னுக்கு தள்ள “பாப்பா” என்று அனைவரும் அகலியின் அருகில் சென்றனர்.

அவர்களின் சத்தத்தில் தூக்கம் கலைந்தவர்கள் அவசரமாக பிரிந்து அமர்ந்து கொண்டனர்.

தூங்கிக்கிக்கொண்டு இருக்கும் தங்கள் குழந்தையை பார்த்து அழுது கொண்டிருந்தனர்...

நன்கு விடிந்ததும் தன் குடும்பத்தாரை பார்த்தவள் தன் உடம்பு முடியவில்லை என்பதற்காக பார்க்க வந்திருக்கிறார்கள் என நினைத்து கொண்டு எதுவும் கேட்கவில்லை...

ஒரு 11 மணி அளவில் தன் பெற்றோருடன் உள்ளே வந்த விஷ்வாவின் முகத்தில் அப்படி ஒரு கலவரம்...

கொஞ்ச நேரத்தில் விஸ்வா சந்தோஷை நோக்கி கண்ணை காட்டவே
சந்தோஷ் “ தேனு குட்டி அப்பா உன் பெயருல ஒரு முதியவர் மற்றும் குழந்தைகள் நலகாப்பாகம் ஆரம்பிக்கிறாங்க.

. டாக்குமெண்ட்ஸல நீ ஸைன் பண்ணனும்...வக்கீல் வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்காங்க “எனவும்

அவள் “வர சொல்லு சந்தோஷ் “என்று சொல்லி இவர்கள் யார் என்பதை போல விஸ்வாவின் பெற்றோரை பார்க்க...

விஸ்வா“ என்னோட அம்மா அப்பா” என்றான்.

தன் மாமானின் அம்மா அப்பா என்று தெரிந்ததும் துள்ளிக்குதித்துக்கொண்டு கட்டிலை விட்டு இறங்கியவள் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி..
எப்படி இருக்கீங்க அத்தம்மா ,அப்பா என்று சுந்தரியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ..

அவளின் செய்கையில் சந்தோசம் அடைந்த பெரியவர்கள் “நாங்க நல்லா இருக்கோம் டா, நீ உடல் ஆரோக்கியத்தோடு சந்தோசமா இருக்கணும் என்று ஆசிர்வாதம் செய்தார்கள்..

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த வக்கீல் சில பத்திரங்களை எடுத்து அவளிடம் நீட்ட

முன்பே பேசியபடி அவர்கள் எல்லோரும் அவளிடம் பேச்சி கொடுக்க அவளும் அவர்களுக்கு அமைதியாக பதில் கொடுத்துக்கொண்டே அதில் எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டாள்

போட்டவள்... ஏற்கனவே விஷ்வா ஸைன் பண்ணிவைத்திருந்த பதிவு திருமணத்திற்கான டாக்குமெண்ட்ஸ்லயும் ஸைன் செய்துவிட்டாள்.
அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட.. வக்கீல் அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்து காமாட்சி “ ஆத்தா நீ போட்டுருந்த செயின் அறுந்து போய்ட்டு அப்பா உனக்கு வேற வாங்கிட்டு வந்துருக்கான் “ என விஸ்வா கொடுத்த ஹார்ட் வடிவில் சற்று பெரிய சைஸுடன் இருந்த பாலர் வைத்த செய்யினை அவளுக்கு போட அங்கு உள்ள சேரில் இருந்து எழுத்தார்..

விஸ்வா “ பாட்டி என்னிடம் கொடுங்கள் நான் போடுறேன் நீங்க உட்காருங்கள்” என்று அந்த செயினை வாங்கி அகலியின் கழுத்தில் போட்டு,

ஐயர் இல்லாமல்,மந்திரம் இல்லாமல்,நாதஸ்வர முழக்கம் இல்லாமல், ,அக்னி சாட்சி இல்லாமல்,மண்டபம் நிறைந்து வழியும் சொந்தங்கள் இல்லாமல் , 16 வகை கரியிடன் தடபுடலாக விருந்து இல்லாமல்.அர்சதை தூவாமல், ஆசி வழங்காமல், அவளை அவளுக்கு தெரியாமலே அவனின் மனைவி ஆக்கிக்கொண்டான்

ஆம் அந்த செயினில் உள்ள ஹார்ட் வடிவ லாக்கெட் டைப்பில் உள்ள டாலரின் உள்ளே சிறிய அளவிலான எடை குறைந்த மாங்கல்யம் உள்புறமாக கோர்க்கப்பட்டு அந்த ஹார்ட் வடிவ டாலரால் மூடப்பட்டு இருந்தது.

அவன் நினைத்தது போலவே அந்த மஞ்ச கயிறும் மங்கல்யமும் மட்டுமே அவளின் நினைவில் கல்யாணமாக பதிந்து போனது..

ஆனால் விஸ்வாவின் குல வழக்கப்படி தாலி சரடு போடும் வழக்கம் இருக்கு என்பதால் அவனுக்கு இது தன் இரு வீட்டார்கள் முன்னிலையில் நடந்த ஆத்மார்த்தமான திருமணமாகவே தெரிந்தது..

எப்படி எப்படியோ தங்கள் பெண்ணின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தவர்கள்...கடைசியில் அகலியின் விருப்பம் போலவே மிகவும் எளிமையாக நடந்தது..
அனைவரும் கண்களில் கண்ணீரோடு தங்கள் பெண்ணை பார்த்து கொண்டிருந்தனர்..

வருவாள்...
மிளாணி
 
Status
Not open for further replies.
Top