All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஶ்ரீயின் 'காதலன்' - கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25 :

நீ சுத்த ஏமாளி...
உன்னை அழகுபடுத்திக்கொள்ள நீ விலை கொடுத்து வாங்கிய அத்தனை பொருட்களும்
உன்னை கொண்டு அவைகள் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர்.

நீ எந்த உடையிலும் கவிதையியாகத்தான் இருக்கிறாய்....
ஆனால் புடவையில்தான் தலைப்புடன் கூடிய அழகிய கவிதை ஆகிறாய்....

என் இதயம் பணயமாக இருக்கட்டும்...
எனக்கு உன் காதலை கடனாக கொடு...




மறுநாள் காலையில் விஷ்வா ஆபிஸ் கிளம்பிக்கொண்டிருக்க அவன் மல்லிப்பூவை இன்னும் காணவில்லை, அவளுக்கு இன்று எந்த கிளாஸும் இல்லை.கிளாஸ் இருக்கும் நாட்களில் சரியாக கிளம்பும் போதுதான் வருவாள்.ஆனால் கிளாஸ் இல்லாத போது காலையில் அவன் முழிப்பதே அவளின் சத்தத்தில்தான்.
அவன் எங்கு வேண்டுமானாலும் நுழைத்து கொள் ஆனால் கண்டிப்பாக பெட் ரூம் பக்கம் மட்டும் வர கூடாது என்று அழாத குறையாக கேட்டுக்கொண்டான்.
( அட போப்பா அவன் உன்னை பர்ஸ்ட் பார்த்ததே அங்கதான்...சும்மா காமெடி பண்ணிக்கிட்டு)
எங்கு வேண்டுமானலும் அவளின் நெருக்கத்தை போராடி வென்றுவிடலாம் ஆனால் அங்கே ? அந்த இடம் சன்னியாசியை கூட சம்சாரியாக மாற்றிவிடுமே.. வீடே இரண்டாக போகும் அளவிற்கு சண்டை நடந்தாலும் கணவன் மனைவியை இரண்டே நிமிடத்தில் சமாதானம் படுத்திவிடும் அற்புத நீதிமன்றம் ஆயிற்றே.

அன்பை காதலாகவும், காதலை காமமாகவும் மாற்றும் அழகிய திறமைமிக்க மதபோதகர் ஆயிற்றே..அவள் அங்கே வந்தால் விஷ்வா தடுமாறி போவது சர்வ நிச்சயம் அதிலும் அவளின் மல்லிப்பூ அவளே அரியாமல் அவளை ஆலிங்கனம் செய்யும் அத்தனை தூண்டுதல் வேலைகளையும் அச்சரம் பிசராமல் செய்துமுடிப்பாள்.
அதனால் அவளுக்கு அங்கே மட்டும் நோ என்டிரி.

அகலியும் அவன் அதட்டி உருட்டி சொல்லியிருந்தால் கூட அவள் முதல் வேலையாக அதை செய்திருப்பாள். அவன் கெஞ்சி கேட்டதால் போன போகிறதென்று விட்டுவிட்டாள்.

எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டே அலுவலகம் கிளம்பி சென்றான்.அங்கு சென்றும் அவனுக்கு அவளின் நியாபகமே தன் குடும்ப பிசினஸ்,தன் வேலை செய்யும் அலுவலகம்,மற்றும் அவன் புதிதாக தொடங்க இருக்கும் கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனி என அவன் முழு நேர வேலையாக இருந்தாலும் அவன் மனம் முழுவதும் அவளின் குட்டிம்மாதான் வலம் வருவாள்.
இன்று காலை ஒருநேரம் பார்க்காததே அவனுக்கு மிகுந்த வேதனையாக இருக்க காலம் முழுவதும் எப்படி என்று அவன் யோசித்து பைத்தியம் ஆனான்.
ஒரு வழியாக வேலை முடிந்து வீட்டிற்கு வந்து இரண்டு மணிநேரங்கள் கடக்க அவள் இன்னும் வரவில்லை.இதற்கு மேல் அவனால் காத்திருக்க முடியவில்லை
சரி தானே சென்று பார்க்கலாம் என்று மேலே சென்றான்.கதவை திறந்த ராணி அக்கா “ வாங்க தம்பி” என்று வரவேற்று அமர வைத்தார்.
அவன் சந்தோஷ் வரும் போது இங்கு வந்திருக்கிறான் அவன் இல்லாத போது இங்கு வரவேமாட்டான்.வயது பெண் தனியாக இருக்கும் போது வரக்கூடாது என்ற எண்ணத்தில்.
( அவள் பண்ண வேண்டியதெல்லாம் நீ பண்ணு, உனக்கு சேர்த்துதான் உன் மல்லிப்பூ உன் வீட்டுக்கும் அவள் வீட்டுக்கும் ரோடே போட்டுவச்சிருக்காளே) ...

“ அக்கா அகலி எங்கே” என்று கேட்டான்.”அதை ஏன் தம்பி கேட்குறீங்க, நேத்து நைட் மியான் கார் பார்க்கிங்ல விளையாடிட்டு இருக்கும் போது ரிவர்ஸ் எடுக்குறேனே ஒரு கார் காரன் அது மேல ஏத்திட்டான் படுபாவி , பாவம் மியான் அங்கேயே கழுத்து நசுங்கி செத்துபோயிட்டு , பாப்பா அதைப் பார்த்த ரொம்ப வருத்தபடும்னு நானும் அவரும் தூரமா கொண்ட போதச்சிட்டு வந்தோம்,

நேத்து நைட் வந்து சொன்னதுலேந்து ஒரே அழுகை சாப்பிடல , தூங்கல தம்பி , நான் சந்தோஷ் தம்பிக்கு இப்பதான் கால் பண்ணி சொன்னேன் அது பிளைட் டிக்கெட் கிடைக்கல நைட் பஸ்ஸுக்கு வந்துறேன்னு சொல்லி இருக்கு,
பாப்பா நேத்து நைட் சாப்பிட்டது இன்னும் ஒன்னும் சாப்பிடல “ என்க

பாவம் என்று ஆகிவிட்டது அவனுக்கு “தனக்கே மியான் இறந்தது வருத்தமாக இருக்க ,”என் தம்பி”,”என் தம்பி” என்று சொல்லுபவளுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்தவன், சந்தோஷிற்கு போன் செய்து கண்டிப்பாக வந்தே தீருவேன் என்று வருந்தியவனிடம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியவன் அகலியை தேடி சென்றான்.
அங்கே கிட்சனிற்கு வலது புறமாக உள்ள சின்ன தடுப்பின் பக்கத்தில் ஒளி இழந்த நிலவாக கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிய அழுதது, தூங்காமல் இருந்தது என்று இமைகள் இரண்டும் தடித்து வீங்கி இருக்க அமர்ந்து இருந்தாள்.பக்கத்திலையே சின்னுவும் படுத்திருந்தது பாவமாக

அவன் அருகில் சென்று அகலி என்றதுதான் தாமதம் அவனை தாவி அணைத்துக்கொண்டவள் “மாமா என் தம்பி மாமா என் தம்பி மாமா , கார் பார்க்கிங் போகாதே போகாதனு அதுவும் நான் இல்லாம சுத்தமா போகாதனு அவன்கிட்ட அத்தனை தட சொன்னேன் மாமா கேட்காம இப்படி போய்ட்டான் மாமா , லாஸ்ட் அவனை நான் பார்க்ககூட இல்லையே... ஊருல இருந்தா அப்பத்தாட வம்புவளப்பான்னு நான்தான் இங்கே அழைச்சிகிட்டு வந்தேன் “ என்று ஏதோ தன் வீட்டில் உள்ளவர்களை இழந்தவள் போல் ஓ... ஓ ....என்று ஒரே அழுகை....

இவன் சமாதானங்கள் ஏதும் அவள் காதில் விழவே இல்லை அவள் சின்ன விஷயங்களுக்கு பயந்து சதாரணமாக அழுவதையே இவனால் தாங்க முடியாது..
இவளோ இப்படி கதறி அழ அவளை விட அவன் துடித்து போனான் , எப்பொழுதும் தன்னை துரத்தும் தன் மாமா ஆறுதலாக தோள் கொடுக்க இன்னும் கண்ணீர் உடைப்பெடுக்க அழுது கரைந்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத விஷ்வா அவளை விலக்கிவிட்டு “ அகலி வாயை மூடு” என்று கையை ஓங்க
“ மாமா மியான்” என வெம்ப ஓங்கியை கையை இறக்கியவன் “ உன்னை அழுகையை முழுங்குன்னு சொன்னேன் ,கையால வாயை மூடு” என்றான்.
ஒரு கையால் வாயை மூடியவளை “இரண்டு கையாளும்..ம்ம்ம்ம்.. மூடு மூச்சி வர கூடாது “ என்றவன் கிட்சன் சென்று தோசை எடுத்து வந்து அவள் மறுப்பை பொருட்படுத்தாமல் ஊட்டிவிட்டான்.

பின் சந்தோஷிடம் அவளை போனில் பேச சொல்லிவிட்டு அவளை வலுகட்டாயமாக தூங்க சொன்னான். அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மியான் தூங்கும் இடத்திலேயே கையையும் காலையும் சுருக்கிக் கொண்டு படுத்துவிட்டாள்.அவன் அதட்டியதால் வெளியே சத்தமாக அழாமல் உள்ளுக்குள் கதறிக்கொண்டிருந்தாள்.

அவனும் தன் பிளாட்டிற்கு செல்லாமல் அவளை பார்த்துக்கொண்டு சோபாவிலையே படுத்து கொண்டான். மறுநாள் அதிகம் அழுததில் காய்ச்சல் அதிகமாக விஷ்வாதான் அதிகம் துவண்டு போனான்.இப்படி ஒரு மெச்சுரிட்டி இல்லாமல் மனசு பலம் இல்லாமல் இப்படி உடம்பை கெடுத்துக்கொள்கிறாளே என்று

ஒவ்வொரு நிகழ்வும் அவள் பூ மனத்துக்காரி என்று அழுந்த படம் பிடித்து காட்ட அவன் எடுத்த முடிவில் இன்னும் உறுதியானான்.மேலும் ஏற்கனவே தன் அண்ணனால் துன்பத்தில் இருக்கும் தன் அம்மாவை இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்துவிட்டான்..
அவளை மருத்தவமனை அழைத்துச்சென்று அவளை முழு நேரமாக கவனிக்க ஆரம்பித்தான். ஆபிஸ் முடித்து நேராக இவளின் வீட்டிற்கு வருபவன் தூங்க மட்டுமே தன் இருப்பிடம் சென்றான்.
காய்ச்சல் கொஞ்சம் குறைய மீண்டும் இவள் அழுது அதிகப்படித்த அப்படி காய்ச்சல் ஏறி இறங்கி என ஒருவாரம் அவனை பாடாய்படுத்தி அழுகை காய்ச்சல் எல்லாம் ஓரளவு குறைந்து குணமாகி சரி ஆனாள் அகலி.
அன்று அவன் தோளில் சாய்ந்து கொண்டு பார்க்கில் உட்கார்ந்து இருந்தாள்.அவனாக அவளை அணைக்கவில்லை என்றாலும் அவள் சாயும் போது இவன் எதுவும் சொல்லவில்லை.இந்த ஒருவாரம் அவள் எதுவும் விஷ்வாவிடம் வம்புவளர்ப்பது இல்லை,காதல் , கல்யாணம் என எதுவும் பேசுவது இல்லை.
மியானின் இழப்பில் தன்னை,தன் மீதான காதலை மறந்துவிட்டாளோ என்று விஷ்வா வருந்தும் அளவிற்கு இருந்தது அவளின் செயல்பாடுகள்.

அப்படியே இருந்தாலும் அவளை விலக விஷ்வாவால் முடியுமா ,அவனின் உயிர் அல்லவா அவள் “ சரியான பாப்பாவை காதலிச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே “ என்று மனதில் புழுங்கிக்கொண்டே அவளுடன் இருந்தான்.

அவன் இடது மார்பில் சாய்ந்து இருந்தவள் அவனின் தாடி நிரம்பிய கன்னத்தை முத்தம் கொடுத்தாள். அவள் முத்தம் கொடுத்ததும் அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்த சிமெண்ட் பெஞ்சில் தலையை அப்படியே சாய்த்து விட்டான்.
“அப்பாடி” என்று அவனின் மனமும் ” , “ மறுபடி முதலேர்ந்து ஆரம்பிச்சிட்டாளே” என அவனின் மூளையும் வெவ்வேறு அர்த்தத்தில் குரல் கொடுக்க அவனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்கே தெரியாமல் அவள் கொடுத்த முத்தத்தில் லயிக்க ஆரம்பித்துவிட்டான்.

“ மாமா உங்க தோள்ல சாய்ந்திருக்கும் போதும் இங்க ஒரு மாறி இருக்கு என்று தன் வயிறு பகுதியை தொட்டு காட்டியவள் “ ஆனா நல்லா இருக்கு “ என்று இன்னும் சாய்ந்து கொண்டாள்.
அதே குறுகுறுப்பில் தானே அவனும் இருக்கிறான் அவளின் வார்த்தைகளுக்கு எதுவும் அவன் சொல்லவில்லை கண்களையும் திறக்கவில்லை.

ஒரு வாரம் அதன் போக்கில் செல்ல அவளின் தம்பி சின்னு அவளின் வற்புறுத்தலின் பெயரில் சந்தோஷுடன் ஊருக்கு பார்சல் செய்யபட்டான்.அவளின் பயம் புரிய அவனும் அழைத்து சென்றான்.

மறு நாள் காலையிலையே விஷ்வா சரியாக கிளம்பி ஆபிஸ் செல்ல ரூமை விட்டு வெளியில் வரும் போது அவனின் வீட்டின் ஹாலிங் பெல் விடாமல் அலறிக்கொண்டிருந்தது.

“குள்ளக்கத்தரிக்காயா இருந்தா இந்நேரம் உள்ள வந்துருப்பாளே யார இருக்கும் என்ற யோசனையுடன் கதவை திறக்க அங்கே அவனின் மல்லிப்பூ கடல் நீல நிறத்தில் தங்க நிற சரிகையில் உடல் முழுவதும் குட்டி குட்டி தங்க நிற பூக்கள் படர்ந்திருந்தே புடவை கட்டி அதே தங்க நிறத்தில் தைக்கபட்ட பிளவ்ஷில் காதில் பெரிய ஜிமிக்கி போட்டு தன் சாரை பாம்பு முடியை பின்னி மல்லிப்பூ வைத்து

முன்னே போட்டுக்கொண்டு வாசலில் நிலையில் ஒரு புறம் சாய்ந்து கொண்டு மறுபுறம் நிலையை கையை நீட்டி பிடித்துக்கொண்டு வழியை மறைத்து ஒய்யாரமாக அவனை பார்த்துக்கொண்டு நின்றாள்.

அவளை பார்த்த ஒரு நிமிடம் மூச்சிவிட மறைத்தவன் பின் வீட்டின் உள்புறம் திரும்பி மூச்சை இரண்டு முறை இழுத்துவிட்டுவிட்டு வேகமாக அவள் கையை தட்டிவிட்டுக்கொண்டு லிஃப்ட்டை நோக்கி ஓட்டமாக நடந்தான்.

ஒண்ணுமே சொல்லாமல் வேகமாக வெளியே சென்ற மாமனை “முசுடு” என்று திட்டிக்கொண்டே “ மாமா என்று கத்திக்கொண்டே அவன் பின்னே சென்றாள்.
அவன் பின்னையே சென்றவள் லிஃப்டிற்குள் ஏறிய உடன் எப்படியும் திரும்பித்தான் நிற்க வேண்டும் என்று அவள் லிஃப்டின் வாசலிலையே நின்று கொள்ள.

அவன் எங்கே திரும்பினான் உள்ளே நுழையும் போதே திரும்பாமல் கிரௌண்ட் ப்ளோரை அழுத்திவிட்டு அப்படியே நின்றுகொண்டான்.

அவன் திரும்பாமல் லிப்ட் மூடவே வேகமாக தரை வழியே இறங்கியவள் பழக்கம் இல்லாத புடவை வேறு படுத்தி எடுக்க ஒரு வழியாக அவனுக்கு முன் அவனின் காரின் அருகில் சென்றவள் காரில் சாய்ந்து நின்றாள்.” மாமா இப்ப எப்படி தப்பிக்கிறேன்னு பார்க்கிறேன் “ என்று.
வந்தவன் எங்கே நிமிர்ந்தான் கீழேயே பார்த்துக்கொண்டு வந்தவன் அவளை பார்க்காமலே காரை திறந்து காரைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.
காரில் நன்றாக சாய்ந்து கொண்டு நின்றவள் அவன் காரை நகர்த்தியதும் தொப்பென்று கீழே விழ எழ முடியாமல் எழுந்தவள் காலை தாங்கி தாங்கி நடந்துகொண்டே “ வளர்ந்து கெட்டவன் கொஞ்சம் கூட மதிக்கவே மாட்றான்” என்று திட்டிக்கொண்டே மேலே சென்றாள்,படி வழியே.
கொஞ்ச தூரம் சென்ற விஷ்வா காரை நிறுத்திவிட்டு ஷ்டேரிங்கில் தலைய வைத்து அப்படியே படுத்து விட்டான்.
உணர்வுகளை கட்டுப்படுத்தியதால் கைகள் நடுங்க , மூச்சி வேக வேகமாக வாங்க, வேர்த்து வலிய முடியவில்லை அவனால்.எப்பொழுதும் அவளை தொழ தொழ உடையிலையே பார்த்தவன் இன்று புடவையில் பார்க்கவும் எல்லா புலன்களும் பேயாட்டம் போட அவன் எப்படி அவளை விட்டுவிட்டு வந்தான் என்று அவனுக்கே புரியவில்லை..

குள்ளச்சி, ஒல்லிக்குச்சி, வெள்ளெளி என்றவளிடம் இப்படி ஒரு செதுக்கிய அழகை அவன் எதிர் பார்க்கவில்லை.

உடம்பை சுற்றி இறுக்கி பிடித்திருந்த அந்த புடவை பிரம்மன் அவனவளுக்கு கொடுக்க வேண்டியதை தாராளமாகவே கொடுத்திருப்பதை அப்பட்டமாக காட்டியது .
அதுவும் அவள் வாசலில் வளைந்து நிற்கும் போது தும்பை பூ கலரில் அவளின் இடுப்பு பகுதி வேறு தரிசனம் கொடுக்க இன்னும் ஒரு நிமிடம் அங்கு இருந்தாலும் அவளை தூக்கிக்கொண்டு ரூமிற்கு சென்று இருப்பான் அதற்கு பயந்தே இப்படி துண்டை காணும் துணியை காணும் என்று அவன் ஓடிவந்தது.
ஓரளவு அவன் மனம் அவன் கட்டுக்குவரவே ஆபிஸ் சென்றான்.அன்று மாலை பயந்து கொண்டே வீட்டிற்கு வந்தவனை இரவு உடையில் தூக்கி போட்ட கொண்டையுடன் முகத்தை தூக்கி வைத்து கொண்டு வரவேற்றாள் அவளின் மல்லிப்பூ.

அவனுக்கு அப்பாடி என்று இருந்தது இப்பொழுதுதான் அவனுக்கு மூச்சி சீரானது.அவளின் முகத்திருப்பலை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அவன் நடமாட கெஞ்ச நேரம் பொறுத்து பார்த்தவள்
“மாமா” என்று அவன் பின்னே சென்றுவிட்டாள்.”நீ ஏன் இப்படி இருக்க நீ என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டேனு சொன்ன காரணத்துல 2 வது என்னை பார்த்த உனக்கு பொண்ணு பீல் வரல அப்படின்றதுதான்”

(ரைட்டு அதுக்குத்தான் இவ்வளோ அலப்பரையா)

2 நாளா யோசிச்சி யோசிச்சி அப்பறம்தான் “ பொண்ணா அடக்க ஒடக்கமா புடவை கட்டிக்க டி” அப்படின்னு அப்பத்தா சொன்னது நியாபகம் வர நான் ராணி அக்காட்ட கஷ்டப்பட்டு கட்டிக்கிட்டு வந்தா நீ கண்டுக்கவே இல்லை” என்று புலம்ப

அவனுக்குத்தான் சிரிப்பாக வந்தது அன்னைக்கே ஏதோ வாயில் வந்ததை அவன் சொல்ல அதை பிடித்துக்கொண்டு சுற்றுகிறாளே என்று.பின் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு “ ஓ அகலி நீதான அது நான் கவனிக்கவே இல்லையே சரியா , ஆனா பாரு சாரில கூட நீ ஸ்கூல் காம்பிடேஷன்ல பேன்சி ட்ரஸ் போட்ட ஸ்கூல் கோயிங் பாப்பா மாறித்தான் இருந்த” என்றான்
( காலையில எப்படி தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிட்டு எப்படி புழுவுது பாருங்க பக்கி)

“ அப்படியா “ என்றவள் “ உன்னை எப்படி கரெக்ட் பண்றதுனே எனக்கு தெரியல மாமா “ என்று சோகமாக சொன்னவள் சென்று சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

விஷ்வாவிற்கு பாவாக ஆகிவிட்டது . இவள் இன்னும் ஏதாவது கலாட்டா செய்து தன்னை ஒரு வழி செய்துவிடுவாள் என்று அவள் அருகில் சென்றவன். “ இங்க பாரு அகலி , நீ என்ன பண்ணாலும் நான் உன்னை காதலிக்க மாட்டேன் ,என் அம்மாவிற்கு அதெல்லாம் பிடிக்காது ,உன்னை எனக்கு பிடிக்கும் அது மட்டும் உண்மை அதானால சமத்தா இரண்டு வருஷம் படிச்சிட்டு ஊருக்கு போகணும் “என்றான்.
அவன் சொன்னதை பிற்பாதியை டீலில் விட்டவள் “ ஓ அப்படியா ,இப்ப புரிஞ்சது” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் சிட்டாக பறந்துவிட்டாள்.

“ என்னத்த புரிஞ்சாதே போ “ என்றவன் சிரித்துக்கொண்டே வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.

இங்கு ருக்குவிற்கோ நாளுக்கு நாள் சுந்தரியின் கொடுமைகள் அதிகமாகி கொண்டிருந்தது.அவளுக்கு சாப்பாடு ஒழுங்காக தருவது இல்லை , ஒரு நாள் ஒரு வேளை மட்டுமே அதுவும் சில நாட்கள் இல்லை ,ஒரு கிளாஸ் பால், இல்லை எப்பொழுதாவது தன் கணவனுடன் சாப்பிடுவது கண்ணன் இருக்கும் போது அவர் எதுவும் சொல்வது இல்லை அதனால்.
வீட்டில உள்ள அனைத்து வேலைகாரர்களையும் நிறுத்திவிட்டு அந்த அரண்மனை போன்ற பெரிய வீட்டில் அவளையே எல்லாம் வேலைகளையும் செய்ய சொன்னார்.அவள் இந்த சில மாதங்களில் நிம்மதியாக இருப்பது கண்ணனின் அணைப்பிலும் , கோவிலிலும்தான்

அதனால் கோவிலுக்கு செல்பவள் அங்கயே வெகுநேரம் இருந்துவிட்டுத்தான் வீட்டிற்கு வருவாள்.அதற்கும் சுந்தரி “ எவனை பார்த்துட்டு வர “ என்று ஏக வசனத்தில் திட்டுவார்.
கண்ணனுக்கோ அம்மா ருக்குவை காயப்படுத்துவார்கள் என்று தெரியும் ஆனால் இந்த அளவிற்கு என்று அவன் எதிர்பார்க்கவில்லை,
ருக்குவும் புன்னகை முகமாய் வலம் வருவதால் அவன் இன்னம் கொஞ்ச நாட்களில் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் முடிந்த அளவு தன் மனைவியுடன் நேரத்தை செலவு செய்தான்,சுந்தரி அவனுடன் கொஞ்சம் இயல்பாக பேச தொழிலில் கவனத்தை செலுத்தினான்.

நான் சொல்லாமல் சாப்பிட கூடாது என்று சுந்தரி சொல்லி இருப்பதால் கண்ணன் எப்போதாவது சாப்பிட கூப்பிட்டால் கூட விரதம் என்று சொல்லி நழுவிவிடுவாள்.சுந்தரியின் மனநிலைமையும் ருக்குவிற்கு புரிந்தே இருந்தது .தன் மாமனாருக்கு அடிப்பட்டு இன்னும் நடக்க முடியாமல் இருக்க தன்னை மாமி வீட்டில் அனுமதிப்பதே பெரிதாக தோன்றியது அவளுக்கு .

அவரின் நிலைமையில் யாராக இருந்தாலும் இப்படிதான் நடந்து கொள்வார்கள் என்று நினைத்தாள். சுந்தரிக்கோ அடிப்பட்டுகிடக்கும் தன் கணவருக்கு இனி எதுவும் ஆவதற்குள் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதையே இலக்காக நினைத்து செயல்பட்டார்.
ஜனனிக்கும், விஷ்வ்வாவிற்கும் அவர்களின் அம்மா செய்வது தெரிந்தாலும் ருக்கு எல்லாம் சரி ஆகிவிடும் என்று அவர்களை சமாதான படுத்திவிட்டாள். ருக்குவின் அன்பும்,அடக்கமும் விஷ்வாவிற்கும், ஜனனிக்கும் அவ்வளவு பிடித்துவிட்டது. அவர்கள் இருவரும் மனமார அண்ணியாக ஏற்றுக்கொண்டனர் அவளை .

முருகன் தன் மனைவி செய்வது தெரிந்தாலும் கண்டும் காணாமல் இருந்தார்.

இவ்வளவு நாட்கள் கடந்த நிலையில் தன் மாமனின் பிராஜெக்ட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் ஆகாமல் இருக்க..
அகலி “அகலி ஒரு வேளை நீ அதுக்கு சரி வர மாட்டியோ” என்று தனக்கு தானே யோசித்து கொண்டவள் 10 நாட்கள் அவனை டன் கணக்கில் டார்ச்சர் செய்தவள் 11ம் நாளில் டார்ச்சர்களின் உச்சபட்சமாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அவனை தேடிக்கொண்டு சென்றாள்.
ஏதோ கை வேலையாக திரும்பி வேலை செய்துகொண்டிருந்தவனை “ மாம்ஸ்” என்று ஆர்ப்பாட்டமாக பின்னே கட்டிக்கொண்டவள்.” இவளோட ஒரே இம்சை” என்று அவளை இறக்கிவிட்டவன் “ தொட்டு பேசாத அகலி” என்றான்.

அவன் சொல்வதை என்று அவள் காதில் வாங்கி இருக்கிறாள் “ மாமா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம்” என்று சொன்னவள் பின் அவன் சொன்னதை திரும்பி யோசித்தவள் “ டேய் மாமா என்னை ஏன் நீ அகலி அகலினு கூப்பிடுற எனக்கு செல்லமா ஒரு பேரு வைக்க முயற்சி செய்ய கூடாது” என்று வந்த வேலையை மறந்து அதிமுக்கியமாக அவனுக்கு அறிவுரை வழங்கினாள்.

அவள் வீட்டில் எல்லோரும் சாமி,பாப்பா, கண்ணு,தேனுக்குட்டி, தேனு, குட்டிபிசாசு,குலசாமி என்று அவள் பெயரை தவிர அனைத்து பெயரையும் கூப்பிடுவார்கள்.
“ எனக்கு ஏன் அப்பா அகலினு பேரு வச்சீங்க,யாராவது கூப்பிடுறங்களா, எனக்கு என் பேரை சொல்லி கூப்பிட சொல்லுங்க,எனக்கு என் பேரே மறந்துடும் போல” என்று மூர்த்தியிடம் சண்டை போட்டவள்
இன்று இவன் அகலி அகலி என்று ஏலம்போடுவதை பார்த்து கடுப்பாகிவிட்டாள் தனக்கு மாமா ஒரு செல்ல பெயர் கூட வைக்க வில்லையே என்று
அவனா அவளுக்கு பெயர் வைக்கவில்லை மல்லிப்பூ, குள்ளவாத்து,குள்ளக்கத்தரிக்காய்,குட்டிமா,அம்முக்குட்டி,செல்லம்மா இன்னும் எது ஏதோ...
இதை ஏதாவது ஒன்றை சொன்னால் கூட தன்னை இழுத்து கொண்டு போய் தாலி கட்டவைத்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள் அவனவள்.

மேலும் அவளின் பெயர் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். வித்யாசமான ,தனித்தன்மை உள்ள அழகான பெயர்

. “மாமா நமக்கு ஏதோ பேரு யோசிக்குது போல என்று ஆர்வமுடன் தன்னை பார்த்தவளை உள்ளே சிரிப்புடன் நோக்கியவன்.
“ உன் வாய் ஓயவே ஓயாத ஏதோ சொல்லவந்ததை விட்டிட்டு நொய் நொய்னு” என்று நகரப்போக

“ ஆமால்ல என்று அசடு வழித்தவள் பெயர் பிரச்சனையை தற்காலிமாக தள்ளி வைத்துவிட்டு அவனை இழுத்துக்கொண்டு சோபாவின் மேல் உட்கார்ந்தவள் “ மாமா அத்தம்மாக்கு லவ்வெல்லாம் பிடிக்காதுல அதனால நான் ஒரு சூப்பர் பிளான் யோசிச்சி வச்சிருக்கேன்” என்று குதித்தாள்.

(சூப்பர் பிளான்தான நீ தானா எங்களுக்குதான் தெரியுமே நீ சொல்லு சொல்லு)

“ரைட்டு” என்று மனதில் யோசித்தவன் கதை கேட்க சுவாரசியமாக அமர்ந்து “ ஓ அப்படியா எங்க சொல்லு” என்றான்.

“ அது என்னான நான் உன்னை ரேப் பண்ணிடுறேன் நீ அழுதுகிட்டே அத்தம்மாட போய் நான் உன்னை ரேப் பண்ணிட்டேன்னு சொல்லு ,அத்தம்மாவும் எதும் சொல்லாமல் நமக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க எப்படி ஏன் ஐடியா” என்றாள்

( அடக்குள்ள கொரங்கே உன்னை சின்ன புள்ளைன்னு நாங்க சொன்ன எவ்வளவு பெரிய வேலை செய்ய பாக்குற,,டேய் விச்சு இருக்கியா இல்ல மர்கயாவா...ஹா ஹா...பாவம் டா நீ..)
அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே இவனுக்கு இங்கே மூச்சி நின்றுவிட்டது.” தன்னை மூச்சடைக்க செய்யவதையே முழுநேர வேலையாக செய்வாள் போல,அவள் ரேப் செய்வதை கற்பனையில் நினைத்து பார்த்தவன் வேர்த்து விருவிருத்து போனான்.
2 நிமிடத்தில் தன்னை நிலைநிறுத்தி கொண்டவன் அவளை வம்புவளக்கும் பொருட்டு “ சின் சானும்,டோரா புஜ்ஜி,சோட்டா பீம் பார்க்கிற உனக்கு ரேப்லாம் பண்ண தெரியுமா என்றான் சிரிப்பை இதழுக்குள் ஒளித்து கொண்டு...
“ஆமால்லா” என்று யோசித்தவள் “ நான் ஜக்குகிட்ட கேட்கிறேன் என்றாள்.விஷ்வாவோ “ அய்யோ யாரு அவன் “ பதற “ என் போனோட பேரு மாமா,அவன்கிட்ட கேட்டா அவன் கூகுள் ஆண்டர்வர்ட்ட கேட்டு சொல்லுவான்” என்றவள்

( கொய்ய....ல).

“ how to make rape” என்று சத்தமாக சொன்னவள் அதை மொபைலில் டைப் செய்ய ஆரம்பித்துவிட்டாள்...

வருவாள்

மிளாணி..

 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலன் அடுத்த எபி போட்டச்சி படிச்சிட்டு எப்படி இருக்குனு கமெண்ட்ஸ்ல ஒரு சூ சொல்லுங்க..
லாஸ்ட் எபிக்கு chho சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள். உங்கள் கமெண்ட்ஸ்தான் என் எழுதுகோலின் மை என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்..

கவிதை உபயம் : தபூசங்கர்

அவர்களுக்கு என் நன்றிகள்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நான்தான் உங்க மிளாகுட்டி.அத நாங்க சொல்லனும்னு நீங்க மைன்ட் வாய்ஸ்ல கேவலமா திட்டுறது எனக்கு தெரிகிறது...

இப்ப நான் எதுக்கு வந்தேனே " காதலன் " கதையோட அடுத்த அத்தியாயம் சண்டே காலையில் டிங் டாங் என்று வந்துவிடும் என்று தாழ்ந்து பணிந்து வணங்கி கேட்டுக்கொள்கிறேன்...

இதை கேட்டுவிட்டு என்னை நான்கு பக்கங்களிலிருந்து காரி துப்பினாலும் அடியவள் அன்போடு ஏத்துக்கொள்கிறேன்.

ஏன்னா என் குருநாதர் "நாஞ்சில் சம்பத்தின்" கொள்கையின் படி " துப்புனா தொடச்சிக்கிவேன் "

இல்லை "குழந்தை ( தேடாதீங்க...தேடாதீங்க... நான் தான் அந்த குழந்தை) போன வாரம் முழுக்க விடாமல் 7 எபிசோட் கொடுத்ததே" என்று என்னை பெரிய மனதுபன்னி மன்னித்தாலும் எனக்கு சந்தோஷமே....

அதிகபட்சம் இன்னும் 1 இல்லை 2 எபி ல பிளாஷ் பேக் முடிஞ்சிடும் .அதுக்கு அப்பறம் கரண்ட் எபி தான் .எப்படி பார்த்தாலும் அதிகபட்சம் 8 எபில ஸ்டோரி முடிஞ்சிடும்...

இதற்கிடையில் இது என்னோட முதல் கதை அப்டின்றதால இன்னும் நான் மாற்றிக்கொள்ள வேண்டிய விசயங்கள், என் நிறை குறைகள் அனைத்தையும் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்

எனக்கு தெரிஞ்சி என் பெரிய மைனஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் 10 தடவை படிச்சி எடிட் பண்ணி போட்டாலும் அங்க அங்க மிஸ்டேக் இருக்கு அதை தவிர நான் மாற்றிக்கொள்ள வேண்டிய வற்றை சொல்லவும் .

பின் குறிப்பு: என் எல்லா எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்து உற்சாக படுத்தும் nisa perumal,arasu arasu, anjali suresh, haritha , saranya rajkumar, nandhu sathis,bharathi,mary,meera vikraman,saroja gopalakrishnan ,indhu karthik,sivakami priya,kavitha subramani,

இவர்கள் எல்லோரும் அக்கா ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்த 9.50 காசுவை லஞ்சமாக வைத்துக்கொண்டு அக்காவை புகழோ புகழ் என்று புகழந்து தள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.......


யார் பெயராவது தவறி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 26

என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என் காதலியாக வேண்டும்...
கடைசிவரை வராமல் போனால் கூட பரவாயில்லை..

நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது நீதானா....
தொட்டால் சிணுங்குவதில்லை...
முத்தம் கேட்டால் வெட்கம் தருவதில்லையே..நீயா..
கவிதை சொன்னால் நெஞ்சில் சாய்வதில்லையே நீயா...
இவ்வளவு அருகில் இருந்தும் உன் வாசம் இல்லையே நீயா.....
வேண்டாம் நீயே வைத்துக்கொள்...
புகைப்படத்திலெல்லாம் நீ இருக்க முடியாது...




அவள் அதை டைப் செய்து அது லோட் ஆகிக்கொண்டிருக்க , அவள் நெட்வோர்க்கை திட்டிக்கொண்டடே மொபைலை பார்த்துக்கொண்டிருந்தாள் ,அது லோட் ஆவதற்குள் அதை பிடிங்கி கையை பின்னால் மறைத்தான்.

பின்னே அவனின் மல்லிப்பூ மொபைலில் டைப் செய்த வார்த்தைகளுக்கு கூகுள் ஆண்டவர் கொடுக்கும் பதில்களை அறிந்தவன் ஆயிற்றே....


“ ஏய் எழுந்து வீட்டுக்கு போ நீ என்ன பண்ணாலும் உன்னை நான் கட்டிக்க மாட்டேன் “ என்றான்.அவனை எழுந்து வேக மூச்சிகளுடன் முறைத்துவிட்டு “ அதுக்கு ஏன்டா ஜக்குவ ஹார்ஸா ஹேண்டில் பண்ற, அவனை கொடு நான் போறேன்.

“ஏய் போடி நொய் நொய்ங்காம தட்டு ,டம்ளர்கெல்லாம் பேரு வச்சிக்கிட்டு ,எனக்கு ஒரு கால் பண்ணனும் பேசிட்டு தரேன் “ என்று அவளை நிற்கவிடாமல் துரத்தினான்.

அவள் சென்றவுடன் அவள் மொபைலில் ஹிஸ்டிரியை டெலிட் செய்தவனுக்கு அப்பாடி என்று இருந்தது.”இந்த அடாவடி ரங்கம்மா தன்னை ஒரு வழி செய்யாமல் விடமாட்டா போலவே” என்று பெருமூச்சி விட்டுக்கொண்டே மொபைலை எடுத்துக்கொண்டு அவளின் வீட்டிற்கு விரைந்தான்.

அங்கே தன்னை தலையால் தண்ணி குடிக்க வைத்த அவனின் ரௌடி ரங்கம்மா அங்கே உள்ள பொடுசுகளுடன் பூஸ்ட் விளையாடிக்கொண்டிருந்தாள்.

“அங்க எவளோ பெரிய வேலைய பண்ண பார்த்துட்டு இங்கே பாப்பா மாறி விளையாடுறாள் பாரேன் என்று எண்ணியவன் ,இவள் எல்லாத்தையும் அர்த்தம் உணர்ந்து ,புரிஞ்சி பண்ணுவாளா இல்லை குழந்தைதனமா பண்ணுவாளா தெரியலையே” என்று குழம்பி போனான்.

மொபைலை கொடுக்க வந்தவனை பிடித்து உட்காரவைத்து அவனை அடுத்த ஒரு மணிநேரம் ஸ்கோர் எழுத வைத்துவிட்டாள் அவனின் மல்லிப்பூ.இன்னும் 10 தினங்களில் புது கட்டுமான நிறுவனத்தின் அனைத்துமாய் அமரப்போகுபவனை அகலி அல்லக்கையாய் மாற்றியிருந்தாள். ஆம் அவன் சொந்தமாக ஆரம்பிக்கும் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி எல்லா வேலைகளும் முடிந்த தயாராக திறப்பு விழா மட்டும் என்று நிலையில் இருக்கிறது. ஒரு மருத்துவமனை கட்டும் ஒப்பந்தமும் கையேழுத்துகிவிட்டது.

தன்னால் தனியாக நிர்வகிக்க முடியாது என்று சந்தோஷையும் தன்னுடன் பார்ட்னராக்க முடிவு செய்து அவனிடம் சொன்னதற்கு” என் பங்கிற்கான தொகையை தருவதாக இருந்தால் தான் இல்லையென்றால் “working partner “ வேலை செய்வதாக கூறிவிட்டான்.

அவன் பெங்களூரில் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் பிராஜெக்ட் இன்னும் 15 நாட்களில் முடியபோவதாகவும் அதன் பின் சிங்கப்பூரில் நடக்கும் ஒரு கான்பிரென்ஸ் முடித்துவிட்டு விஷ்வாவின் கம்பெனிக்கு வருவதாக கூறினான். விஷ்வாவும் தன் தன்மான சிங்கத்தின் குணம் அறிந்து சரி என்று ஒத்துக்கொண்டான்.

6 அடியில் உள்ள விஸ்வா ஒரு மணிநேரம் காலை மடக்கி கீழே உட்கார்ந்ததால் கால் எல்லாம் மரத்து போய் வலிக்க தான் தோற்று போனதால் எல்லாரும் தன்னை ஏமாற்றி ஜெயித்துவிட்டதாக தன்னை விட 15 ,20 வயது சின்ன பசங்களிடம் சரிக்கு சமமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் தன் மல்லிப்பூவின் மேல் அவள் ஸ்கோர் எழுத கொடுத்த போனாவையும் நோட்டையும் போட்டவன் காலை தாங்கிக் கொண்டே வந்து தன் வீட்டின் சோபாவில் காலை நீட்டி படுத்துவிட்டான்.

அவன் கண்களை மூடிய 2 நிமிடத்திற்குள் “ மாமா” என்ற கூவளுடன் ஓடிவந்தவள் அவனின் அருகில் வந்தவள் “ மாமா ஏன் காலை தாங்கி தாங்கி வந்த”என்க.

“ச்ச்சு “என்று அழுத்தவன் “எனக்கு கால வலிக்குது கொஞ்சம் வாய மூடிக்கிட்டு போறியா” என்க..

( எப்படி கேட்பா பாரு உன் பேச்சை).

“காலை வலிக்குதா” என்று கேட்டவள் அவன் அவன் காலிற்கு கீழே அமர்ந்து கொண்டு அவன் காலை மெதுவாக பிடித்துவிட்டாள்.” மாமா நீ கொஞ்ச நேரம் தூங்கு ,நான் கால் அமுக்கி விடுகிறேன்’ என்றாள்.
அவனா வேண்டாம் என்று சொல்வான் அவனாக தொடவில்லை என்றாலும் அவளின் ஒவ்வொரு தீண்டலையும் அவன் ஓராயிரம் முறை எதிர்பார்ப்பவன் அல்லவா ,அவன் வாயை தவிர அவனின் அனைத்து உறுப்புகளும் அவளின் மல்லிப்பூக்கு அடிமையல்லவா அவன் நல்ல வாகாக படுத்துக்கொண்டு அவளை பார்க்க இல்லை சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டான்.

எல்லாமே அவனவளுக்கு அம்சமாக அமைந்திருந்தது.அதுவும் பொட்டு மேக்கப் இல்லாமல் ,

கடுகளவு கருப்பு பொட்டு மட்டுமே அவள் முகத்தில் எக்ஸ்ட்ராவா இருப்பது.ஆனாலும் அவள் அவ்வளவு அழகு கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கும் அவளின் பிஞ்சி முகம் பார்க்க பார்க்க அவனுக்கு மட்டும் அல்ல யார்க்கும் தெவிட்டாது.

“ஏன் அகலி ஒரு த்ரெட்டிங் கூட பண்ண மாற்ற” என்று கேட்டான்.

“ அய்யோ மாமா அது ரொம்ப வலிக்கும் ,அப்பறம் ஒரு தட பண்ணிட்டோம்னா அதுவே பழக்கமா போயிடும், நம்மால பார்லர்க்கெல்லாம் அலைய முடியாது,

பேசிக்காவே நான் ஒரு வாழபழ சோம்பேறி,நான் காலையில எழுந்து பல்லு விலக்கி ,குளிக்குறதுக்குள்ள நான் அப்பத்தாட 1000 தட திட்டுவங்குவேன் மாமா, அப்பறம் அன்னைக்கு கூட அப்பத்தா” என்று ஆரம்பிக்க

“ கொஞ்சம் வாய மூடுறிய ஒரு கேள்வி கேட்டா ஒரு மணி நேரம் பேசுவ,இதுக்குதான் உன்ட பேசுறதே இல்ல” என்று கூற.

“முசுடு,இவன் கேட்டதுக்குதான பதில் சொன்னேன் என்று மனசுக்குள் முணு முணுத்தவள் வாயை இறுக்க மூடிகொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

கொஞ்ச நேரம் அனுமார் மாதிரி வாயை வைத்துக்கொண்டு காலை பிடித்துத்துக்கொண்டிருக்கும் அகலியை சிரிப்பு போங்க பார்த்தவன் “ ஏய் வாலு ,நாளைக்கு உன் கருவாயன் வரான் போல எங்க ஊர் சுத்த போற” என்றான்.

“ தெரியல மாமா , வந்ததுக்கு அப்பறம்தான் முடிவு பண்ணனும் ,அப்பறம் போறீங்க இல்லை, போறோம், நீயும் வரணும்”என்று சோர்வான குரலில் சொன்னவள் நீட்டி இருக்கும் அவன் காலை கட்டிக்கொண்டு அப்படியே சோபாவின் கீழே உட்கார்ந்த படியே தூங்கி போனாள் .

அவள் காலை கட்டிபிடித்து இருப்பதால் அவளின் பாடாத இடம் பட்டி அவனை இம்சிக்க அவள் அசந்து தூங்கும் வரை பொறுமையை இழுத்து பிடித்தவன் அவளிடமிருந்து காலை மெதுவாக விலக்கியவன் அவளுக்கு எதிரில் உட்கார்ந்து அவளை பார்த்தான்.

அவளின் கன்னத்தில் மெதுவாக கை வைத்தவனின் கைகள் உணர்ச்சி வேகத்தில் நடுங்கியது அவனுக்கு தெரிந்த அவளுக்கு என்றுமே தெரிய போகாத அவனின் காதலான முதல் தொடுகை.

“ சரியான சோவை டி , 5 நிமிஷம் கால் அமுக்குறதுக்கு இப்படி சோர்ந்து போற” என்று அவளை கொஞ்சியவன்

“ நீ இல்லாமல் நான் எப்படி டா இருப்பேன்,அந்த வாழ்க்கை எனக்கு நரகம் ஆகிடும் ,நொடிக்கு நொடி செத்து போவேன்,நிம்மதி இல்லாமல் அலையுவேன், சுயம் தொலைப்பேன் ஆனால் என் சுயநலத்துக்காக உன்னை நான் எப்படி கஷ்டப்படுத்துவேன் ,என்னை விட 2 வயசு அதிகம் உள்ள என் அண்ணியே என் அம்மாகிட்ட அவ்வளோ கஷ்டப்படுறாங்க,ஆனால் உனக்கு வயசு மட்டும்தான் ஆகிருக்கு மற்றபடி குழந்தைதான்,அங்க வந்தா நீ எப்படி தாங்குவ, உன் குணம் குறையாம,இதே வெள்ளை மனசோடு கடைசி வரைக்கும் இருக்கணும், உன் கருவாயன் என்னை விட எல்லாவற்றிலும் உயர்வான ராஜா குமாரனை இல்லை இல்லை அதை விட சிறந்த ஒருத்தனை உனக்காக தேடி கண்டுபுடிச்சி தருவான், உன்னை கொண்டாடுவான்,ஏனோ அவளை இன்னொருவனுடன் இணைத்து பேசும் போது அவனுக்கு தொண்டை கமரியது.


எனக்கு நீ கொடுத்த இந்த நினைவுகள் மட்டும் போதும்டா என் ஆயுள் முழுக்க” என்று கூறியவனின் கண்களை தாண்டி கண்ணீர் வடிந்தது.

அவள் நெற்றியில் அழுந்த முத்தம் கொடுத்தான்.அந்த முத்தத்தில் எல்லா உணர்வுகளையும் தாண்டி அவள் கிடைக்காத வலியே அதிகம் இருந்தது.

அசௌகரியமாக படுத்திருந்தவளை தூக்கி சோபாவில் படுக்கவைத்தவன் அவள் எழுவதற்கு லேசாக சினுங்கும் வரை அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் அவள் விழிக்கும் நேரம் அங்கிருந்து நகர்ந்தான்.

மறுநாள் வீட்டுக்குள் ஆர்ப்பாட்டமாக “ மாமா,மாமா” என்று ஏலம் போட்டுக்கொண்டே தனியே நுழைந்தவளை “ உன்னிட்ட எத்தனை தட சொல்றது இப்படி சத்தம் போட கூடாது ,குதிக்க கூடாதுன்னு ,சந்தோஷ் எங்க “ என்றான்.

“ வவ்வ்வ்வவ்வே” என்று அவனுக்கு ஒழுங்கு காண்பித்தவள் “ கருவாயனுக்கு வேற எதோ வேலை இருக்காம், ஒரு 2 மணி நேரத்துக்கு அப்பறம் ஜாயின் பண்ணிக்கிறானா போற இடத்தை பிங் பண்ண சொன்னான்” என்றவள் அவன் கையைபிடித்து இழுத்துக்கொண்டு வெளியே செல்ல

அவள் இழுத்த இழுப்பிற்கு வெளியே சென்றாலும் “ தன்னிடம் சொல்லாமல்,தனக்கு தெரியாமல் எங்கே போயிருப்பான்” என்று யோசித்தவன் சந்தோஷிற்கு கால் செய்ய போகவே அவன் மொபைலை பறித்தவள்” அந்த அற மண்டயனுக்கு அப்புறமா கால் பண்ணிக்கலாம் நீ வா” என்று முதுகில் இரண்டு கையை வைத்து அவளை லிஃட்டின் பக்கம் தள்ளினாள்.

(உனக்கு சொல்லாமல் அவன் எங்க போவான். உன் தங்கச்சியை டாவு அடிக்கதான் போவான்)


அவனும் “சரி சரி” என்று சிரித்துக்கொண்டே அவள் தள்ளும் பக்கம் சென்றான்.

ஜனனியை பார்க்க சென்ற சந்தோஷ் எப்பொழுதும் கையை மட்டும் பிடித்துக்கொள்பவன் இன்று அவள் அருகில் அமர்ந்து தோளை சுற்றி கையை போட்டுக்கொண்டான்.எப்பொழுதும் ஒரு வித எச்சரிக்கை உணர்வோடு இருக்கும் தன் பிளாக்கி இன்று இத்தனை பேர் பார்க்க பீச்சில் தன் மேல் கையை போட்டிருப்பது ஜனனிக்கு ஆச்சரியமே..

அவளும் வாய்ப்பை விடாமல் அவனோடு நன்கு உரசிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.இருவருக்கும் உள்ளுணர்வு ஏதோ சொல்ல எதுவும் புரியாமல் அமைதியாக களித்தனர் அரை மணி நேரத்தை.
(அது உங்களுக்கு புரிஞ்சா எனக்கு வேலையே இல்லையே இந்த உள்ளுனர்வின் பெயர் இது தான் உங்களின் கடைசி சந்திப்பு என்பதே என்று சிரித்தது விதி )

பின் அவள் கையை அழுந்த பிடித்துக்கொண்டு “ தக்காளி இனி உன்னை பார்க்க சிங்கப்பூர் போய் அந்த கான்பிரென்ஸ் முடிஞ்சத்துக்கு அப்பறம்தான் முடியும் ,அதுவரைக்கும் டாக்டர் அம்மா ஒழுங்கா எல்லாருக்கும் ஊசி போட்டுட்டு பத்தரமா ,சரியா” என்றான்.

அவளும் அவனை பிரிய போகிறோம் என்று கண்களில் கண்ணீர் மல்க வார்த்தை வராமல் வெறும் தலையாட்டினாள்.இருவரும் காதலர்கள் என்றுதான் பெயர்.ஆனால் அதிகம் பார்த்து கொள்வது இல்லை,போனில் அதிகம் பேசிக்கொள்வது இல்லை,எந்த அழகிய வரம்பு மீறலும் இல்லை ஆனாலும் இருவர் மனதிலும் டன் கணக்கில் காதல் நிரம்பி வழிந்தது.

இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க 1 மணி நேரம் கழித்து சந்தோஷ் கிளம்பினான். மனமே இல்லாமல் அவனுக்கு விடைகொடுத்தாள் அவன் 10 அடி செல்லும் வரை அவன் முதுகை பார்த்து கொண்டு நின்றவள் அதற்கு மேல் தாங்காமல் ஓடிச்சென்று அவன் பின்னால் அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவனுக்கும் அதே நிலைமைதான் அவளை தன்னிடமிருந்து பிரித்து முன்னே கொண்டுவந்தவன் “ இங்க பாரு தக்காளி இன்னும் அதிகபட்சம் 1 மாசம்தான் அதுக்குள்ள நானே உன் அண்ணகிட்ட உன்னை பொண்ணு கேட்பேன் அப்படியே அவன் கொடுகமாட்டேன் அப்படி சொன்னாலும் அத்தான் உன்னை அலேக்கா தூக்கிட்டு போயிடுவேன் அதனால வருத்தபடாம இருக்கணும் ,அப்பறம் இப்படி பூசணிக்காய் மாறி இருந்த அத்தானுக்கு தூக்கிட்டு ஓடுறது ரொம்ப கஷ்டம்,அதனால கொஞ்சம் உடம்பை குறைக்கனும் சரியா” என்று அதை இதை கூறி அவளை சிரிக்க வைத்துவிட்டே சென்றான்.

போகும் போது அவன் யோசனையெல்லாம் தேனுக்குட்டி விஷ்வாவை இன்னும் 1 மாதத்தில் சரி கட்டிவிடுவாள என்பதுதான் அவளின் செய்கைக்கு அவனிடம் எந்த கோபமும் இல்லை என்றாலும் அவளுக்கு பாசிடிவாகவும் எதுவும் அவன் செய்யவில்லை.

ஆனால் அவனுக்கு தேனுக்குட்டியின் கள்ளம் கபடம் இல்லாத அன்பின் மீது அபார நம்பிக்கை இருந்தது.அது எப்படியும் தன் நண்பனை மாற்றிவிடும் என்று.

அங்கே விஷ்வா அவளை “snow land” அழைத்துக்கொண்டு சென்றான்.அங்கே பனியில் விளையாடும் அகலியை காதல் பொங்க பார்த்துக்கொணடிருந்தான் .

பிளாக் கலர் ஸ்கர்ட் வைட் கலர் செமி காலர் ஷர்ட் போட்டுக்கொண்டு அங்கே குழந்தையோடு குழந்தையாக விளையாடும் தன் வளர்ந்த குழந்தையை விழி வேர்க்க பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரே ஈரமாக இருக்கும் அந்த இடத்தில் குதித்து குதித்து விளையாடிக்கொணடிருந்தவள் கால் வழுக்கி விழவே பதறி அடித்துக்கொண்டு அருகில் சென்றான்.

அதற்குள் முட்டிக்கையில் அடிப்பட்டு லேசாக ரத்தம் வர மிருதுவான கைகள் ஆதலால் கை முழுவதும் சிவந்து போக அழுகைக்கு தயாராக இருந்தவளை ஓடிச்சென்று தாங்கிக்கொண்டான்.

“ ஏன்மா இப்படி உன்னை நீயே புண்ணாக்கிகிற எவளோ டைம் சொல்றேன் குதிக்காத குதிக்காதனு பாரு ரத்தம் வருது” என்றவன் அவளை அருகில் உள்ள கிளினிக்கிற்குஅழைத்து சென்று முதலுதவி செய்து அழைத்து வந்தான்.


நம் நாயகிக்கு 5 நிமிடம் தானே வலி,கோபம் எல்லாம், ஒரு 5 நிமிடம் ஓவென அழுதவள் அடுத்து 6 வது நிமிடத்தில் அவனை வேறு எங்கயாவது அழைத்து செல்ல சொல்லி டார்ச்சர் செய்ய. ஆரம்பித்துவிட்டாள் .

விஷ்வாவிற்கு அந்த சின்ன காயத்திற்கே முகம் முழுவதும் சிவந்த நிற்கும் தன் குழந்தையை பார்க்க பார்க்க வேதனை அதிகமானது.

அவள்படுத்தி எடுக்கவே அதே மாலில் உள்ள இண்டோர் கேமில் உள்ள டேபிள் டென்னிஸ் விளையாட சொன்னவன் அவளை பார்த்தபடி அமர்ந்துவிட்டான்.

விஷ்வா அவளை snow land ல் காதல் போங்க பார்த்தது அவளிற்கு அடிப்பட்டதும் உயிர் தெறிக்க ஓடி அவளை தாங்கியது அதன் பின் நடந்த அனைத்தையும் இரு கண்கள் படம் பிடித்தது.

சிறிது நேரம் செல்ல தன் அருகில் யாரோ அமரும் அரவம் கேட்டு தலையை திருப்பி பார்த்தான்.அங்கே மினி ஸ்கர்ட் ,கிராப் டாப் அணிந்து கொண்டு எதையெல்லாம் காட்டக்கூடாதோ அதை எல்லாம் காட்டிக்கொண்டு அமர்ந்தாள் ரீனா.

அவள் அருகில் அமர்ந்ததும் ஏதோ அசிங்கத்தை கண்டது போல் முகத்தை சுழித்து கொண்டு எழுந்து தூரமாக நின்று அவளின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினான் .

அன்று ரீனா அவளிடம் கேட்டதிலிருந்து அவன் அவளை காணவில்லை .அதன் பின் அவளை பற்றி கல்லூரியின் வாயிலாக அறிந்தவனுக்கு ஒவ்வாமை அதிகரித்தது.ச்சி என்றானது அவளை நினைக்கும் போதே.

ஆனால் அவனுக்கு தெரியவில்லை அவளை அசிங்க படுத்திய அன்றிலிருந்து இன்று வரை அவன் மட்டும் அல்லாது அவன் குடும்பம் முழுவதும் அவளால் கண்காணிக்கப்படுவதும்.கண்ணனின் கல்யாணம்,ஜனனியின் காதல் என அனைத்தும்.

இன்று கூட விஷ்வா கொஞ்ச நாட்களாக அவன் ஒரு பெண்ணுடன் சுற்றிவதும் இன்று அவளுடன் வெளியில் வந்திருப்பது என அனைத்தும் .

அவனின் முகப்பாவனையை கண்டவளின் கோபம் பலமடங்கு எகிற எப்பொழுதும் தன்னை பார்ப்பவர்களின் கண்களில் பயம் இல்லை தன் மேனியை மொய்க்கும் அந்த ரசனை பார்வை ,இல்லை ஒதுங்கி போகும் பாவனையை மட்டுமே பார்த்தவளுக்கு இவனின் இந்த பார்வை எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல் ஆனது.

“ யாரு அந்த பொண்ணு நீ லவ் பண்ற பொண்ணா” என்றாள்.

ரீனா அகலியை பற்றி சொன்னதும் நொடியில் அவனின் முகம் மென்மையை கடன் வாங்கி தன்னவளை ஆசையோடு பருகியது.அவனின் ஒவ்வொரு செய்கையும் அவளின் கோபத்தை அதிகப்படுத்தியது என்றால் மிகை இல்லை.தன்னை பார்க்கும் போது அருவருக்கும் முகம் அவளை பார்க்கும் போது மட்டும் பிராகாசிக்குதே என்று.


கொதிக்கும் மனதை அடக்கி ” கேட்கிறேனே “ என்று அவள் உரும

அவள் உறுமல் கூட தன்னவளை மெய் மறந்து பார்ப்பதில் அவன் காதில் சாதரணமாக விழ தன் மல்லிப்பூவை பார்த்துக்கொண்டு “ ஆமா இவள் தான் என் காதலி,என் மனைவி,என் குழந்தை ,என் குலசாமி,என் உயிர்,என் உயிர்ப்பு,என் சந்தோசம் என யாரிடமும் கூறாத தன் காதலை கூறக்கூடாத நபரிடம் ஆழமாக கூறினான்.

அவன் இத்தனை நாட்களாக மனதில் ஆழமாக உருப்போட்டது அகலியிடம் மட்டும் தன் காதலை சொல்லக்கூடாது என்பதே.

அதற்கேற்ப அவனின் மனதும் மூளையும் அருகில் இருப்பது அகலி இல்லை என்று கிரீன் சிக்னல் கொடுக்க இது வரை யாரிடமும் சொல்லாமல் மூச்சி முட்ட யாரிடமாவது சொல்லலாம் என்று நிலையில் இருந்தவன் தன்னிலை மறந்து இவளிடம் கூறிவிட்டான்.


“ ஓ” என்று குரோதமாக சொன்னவள் அவளை வேணுனா கல்யாணம் பண்ணிக்க அதுக்கு முன்னாடி “ என்றவளின் அர்த்தம் புரிய அவளை கோபமாக பார்த்தான்.

ரீனா முடிவு செய்துவிட்டாள் எப்படியும் அவனின் அழிவு நிச்சயம் அது அவன் உயிர் எடுத்து அல்ல அவனின் மல்லிப்பூவின் உயிரை எடுத்து அதற்கு முன் அவன் வேண்டும் ரீனாவிற்கு முதல் தடவை அவன் அழகின் மேல் உள்ள ஆசையை போல் அல்லாமல் இப்பொழுது தான் நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்ற தன் அகங்காரத்தால்.தான் நினைத்தது நடக்காமல் போனால் எவ்வளவு அசிங்கம் என்பதால்.

அவளின் முக்கால் வாசி செயல்கள் இப்படியே தீர்மானிக்கபடுகின்றன நினைப்பிற்கும்,விருப்பத்துக்கும், வேண்டும் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இவள் நினைப்பு மட்டுமே இவளை அதலபாதளத்தில் தள்ளியது.

அவளின் வார்த்தையில் கோபமாக அவளை நோக்கி திரும்பியவன் “ உன்னை அடிக்கிறதுக்கு தொட்ட கூட பாவம், நீயெல்லம் இந்த பிறப்பு எடுத்து வாழ்றதுக்கு நாண்டுகிட்டு சாகலாம், அகலியை பார்த்து அந்த மாறி தேவதை பெண்கள் வாழும் இந்த பூமியில் உன்னை எல்லாம் ஏன் இந்த கடவுள் படைத்தானு அவன் மேல கோபம் கோபமா வருது, சீ நீயெல்லம் பெண்ணா என்று அவளின் ஒட்டு மொத்த கோபத்தையும் ஒரே நேரத்தில் இன்னும் ஏதெதோ பேசி அதிக்கப்படுத்திவிட்டான்.

ரீனா முடிவெடுத்து விட்டாள் தன்னை பெண்ணா என்று கேட்பவன் வாழ்க்கையில் இனி எந்த பெண்ணும் இருக்க கூடாது,தன் தொடுகையை அருவருப்பாக பார்ப்பவன் எந்த பெண்ணையும் தொடக்கூடாது, தன்னை திருமணத்திற்கு தகுதி இல்லாதவள் என்று சொன்னவன் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது,அவனை காதலாக,இல்லை கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு பார்க்கும் பெண்களுக்கு அந்த நினைப்பே இருக்க கூடாது என்று.

தன் மாமா யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் விளையாடுவதை விட்டுவிட்டு ஓடி வந்து அவன் கைகளில் தொங்கிக்கொண்டு “ மாமா யாரு இவங்க” என்றாள்.

ரீனாவின் மேல் அடங்காத கோபம்,அருவருப்பு இருந்த போதும் அகலி கையை பிடிக்கும் போது அவன் முகம் மென்மையாக மாறியதை ரீனா கவனித்தாள்.

அவன் கோபமாக பதில் பேசாமல் நிற்கவே இந்த “மாமா நமக்கு என்னைக்கு பதில் சொல்லியிருக்கு முசுடு” என்ற மனதிற்குள் யோசித்தவள் ரீனாவிடம்” ஹாய் அக்கா நான் அகலி வீர் மாமாவோட லவ்வாங்கி” என அவனை பார்த்து கண்ணடித்தாள்.

விஷ்வாவோ” இவள் அடங்கவே மாட்டாள் “ என்று இவளோ நேரம் இருந்த கோபம் ஆத்திரம் எல்லாம் பனிபோல் விலக சிரித்து கொண்டே அவள் தலையில் குட்டியவன் “ வாய அடக்கு அகலி” என்றான்.

( அப்படியே அவள் கேட்டுட்டாலும்)

அக்கா நீங்க மாமா கூட படிச்சவங்களா,இல்லை வேலை பாக்குறீங்களா உங்க பேர் என்ன ,இந்த ட்ரெஸ்ல நீங்க பார்பி டால் மாதிரி அழகா இருக்கீங்க, என்று அவள் பாட்டுக்கும் ரீனாவின் கையை பிடித்துக்கொண்டு வழ வழ என போசிக்கொண்டே போக அப்பொழுதுதான் ரீனாவின் உடையை கவனித்தான் உண்மையில் அவனின் மல்லிப்பூ சொல்வது போல அவள் பார்பி மாதிரிதான் இருந்தாள். அவள் உடையிலும், தோற்றத்திலும் உள்ள குறைமட்டும் நம் கண்ணுக்கு தெரிய இவளுக்கு மட்டும் எப்படி

இவள் கண்ணுக்கு நல்லவைகள் மட்டும்தான் தெரியும் போல, வரம் வாங்கி வந்தவள் என் தேவதை என்று எண்ணிக்கொண்டான்.

“மாமா நான் இவளோ பேசுறேன் அந்த அக்கா எதுமே பேசாமல் போய்ட்டாங்க,உன் கூட இருக்குறவங்க எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களா உன்னை மாறியே அந்த அக்கா பேரு என்ன சொல்லு சொல்லு என்று அவனை ஒரு வழி பண்ணியவள் தெரிந்தே பின்னே அவனைவிட்டாள்.

பாவம் அவளின் வாழ்க்கையை புரட்டி போடும் பூகம்பம் தான் அது என்று அவளுக்கும் தெரியவில்லை அவனுக்கும் தெரியவில்லை .
ரீனா ஏதாவது செய்கையால்,பார்வையால் உணர்த்தி இருந்தால் கூட அவன் தன்னவளை அடை காத்திருப்பான்.அவள் சாதரணமாக இருக்கவும் இவளால் அகலிக்கு பிரச்சனை வரும் என்று அவனுக்கு ஒரு அறிகுறி கூட அப்பொழுது தெரியவில்லை.


அதன் பின் இருவரும் சந்தோஷை தேடி சென்றார்கள் அதன் பின் அவன் வாலை பிடித்துக்கொண்டே சுற்றினாள்.

“அவளோட கருவாயன் வந்தா மட்டும் நாம அவ கண்ணுக்கே தெரியமாட்டோம்” என்று அவன் செல்லமாக அழுத்துக்கொண்டான்.

அவனுக்கு எங்கே தெரிய போகிறது டன் கணக்கில் புருஷன் மீது காதல் இருந்தாலும் பொறந்த வீட்டில் இருந்த வரும் போது அவர்களுக்கு ஓடி ஆடி வேலை செய்து அவர்கள் கூட இருக்கும் சுகம்.

எல்லாம் முடிந்து வீட்டிற்கு சென்றனர்.தன் வீட்டில் சிறுது நேரம் ஓய்வு எடுத்தவன் புது ஆபிஸ் பற்றி பேச சந்தோஷை காண அங்கு சென்றான்.அங்கே அவன் ரெடியாகி கொண்டு இருப்பதை பார்த்தவன் “ எங்கடா கிளம்புற நாளைக்கும் உனக்கு லீவ்தான “ என்க

சந்தோஷ் “நாளைக்கு லீவு தான் விஷ்வா ஆனால் தேனுக்குட்டிய இன்னைக்கு கொண்ட ஊருல விடனும் அதான் இன்னைக்கு கிளம்புனாதான் பாப்பாவ வீட்டில விட்டுட்டு கிளம்ப சரியா இருக்கும்” என்றான்.

“ நீ எவளோ அலைவடா எங்க உன் பாப்பா “ ,அகலி” என்று அழைத்தவன் “ ஏற்கனவே அவன் உனக்காக வாரம் வாரம் இங்கேயும் அங்கேயும் அலையுறான் இதுல அவன் உன்னை ஊருல விட வேற வரனுமா” என்று அதட்டவே

“நான் தனியா பஸ்ல போறேன்னுதான் மாமா சொன்னான் சந்தோஷ்தான் கேட்க மாட்றான் “ என்க

“தனியாவா” என நினைத்தவன் அவளின் மாமாவை கோட்டைவிட்டான்.சிறிது நேரம் யோசித்தவன் “நாளைக்கு எனக்கு புதுகோட்டை போற வேலை இருக்கு நான் அகலியை தஞ்சாவூரில் இறக்கிவிடுறேன் அங்கேர்ந்து ராஜா வந்து அழைச்சுப்பான் இப்ப நீ போய் தூங்கு என்று அசதியாக நிற்கும் சந்தோஷை விரட்டினான்.அவனும் உடனே சென்று சுருண்டு தூக்கிவிட்டான்.பாவம் அவனுக்கும் வேலை நெட்டு கலண்டது

“ ஐ மாமா நீ வாரியா ஜாலி ஜாலி என்று அவன் கன்னத்தை வழித்துவாயில் போட்டுக்கொண்டாள்.

மறுநாள் முழுவதும் அவளின் அடாவடித்தனத்தில் பொழுது கழிய சந்தோஷ் பெங்களூர் புறப்பட்டான். இவர்களும் ஊருக்கு செல்ல அகலியை அழைக்க விஷ்வா வர அவனவள் அவனுக்கு முன் கோயம்பேடு சென்று இரண்டு டிக்கெட் எடுத்து கொண்டு அவனுக்கு கால் செய்துவிட்டாள் ” மாமா நான் டிக்கெட் எடுத்துட்டேன் நீ பாஸ்டான்ட் வந்துடு “ என்று.


உன்னை யாரு பஸ்ல கூப்பிட்டுகிட்டு போறேன்னு சொன்னா” என்பதற்குள் அவள் லைனை கட் செய்துவிட்டாள்.குள்ளவாத்து என்னை படுத்துறதுக்கே இந்த பிறவி எடுத்திருக்காள் போல” என்று திட்டிக்கொண்டே காரை கேயம்பேடு விரட்டினான்.

அங்கே உள்ள பஸ்சில் அமர்ந்து “subway surf” கேம் விளையாடிக்கொண்டிருந்தவளை அகலி வா காருல போகலாம் 10 மணிநேரம் பஸ் ட்ராவல்லாம் என்னால முடியாது” என்றான்.

“அப்ப நீ காருல வா நான் இதுல வரேன் என்றவள் மீண்டும் விளையாட தொடங்கிவிட்டாள்.உன்னை என்று பல்லைக்கடித்தவன் வேறு வழி இல்லாமல் அவன்தான் இறங்கி வரவேண்டியதாயிற்று.

டிரைவருக்கு கால் செய்து காரை எடுத்துக்கொண்டு காலையில் தஞ்சாவூருக்கு வருமாறு சொல்லிவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

அடுத்த 3 மணிநேரம் அவனிடம் தொன தொணத்தவள் அவன் கை சந்தில் ஒரு கையை விட்டு அவனின் ஒரு கையை பிடித்து கொண்டு அவன் தோள்பட்டையில் சாய்ந்து கொண்டு மறுகையால் அவனின் இடுப்பை பிடித்துக்கொண்டு தூங்கிப்போனாள்.

அவளின் தூக்கம் கலையாமல் அவளின் தோளை சுற்றி கைகளால் வலைத்தவன் தஞ்சாவூர் வரும் வரை சிறுது அசைவு இல்லாமல் அமர்ந்து இருந்தான்.

அதன் பின் அவளை ராஜாவிடம் ஒப்படைத்துவிட்டு அவன் தன் வேலையை முடித்துக்கொண்டு ஊர் வரவே அகலியும் ராஜாவுடன் சென்னை வந்து சேர்ந்தாள்.

நாட்கள் அதன் போக்கில் வேகமாக செல்ல விஷ்வாவும் புது கம்பெனி திறப்புவிழா முடிந்து 10 நாட்கள் ஆக சந்தோஷ் கான்பிரேன்ஸ் விஷயமாக சிங்கப்பூர் செல்வது 10 நாட்கள் முன்னாடி செல்ல வேண்டும் என்று ரீசேடுல்(reschedule) ஆக அவனால் வரமுடியாமல் போனது.

அகலியை அழைத்தற்கு “நீ எனக்கு லவ்க்கு ok சொன்னதான் வருவேன்” என்று முருக்கிக்கொண்டு செல்ல “ நீ வரவே வேண்டாம் “ என்று அவனும் நமட்டு சிரிப்புடன் சென்றுவிட்டான்.

“முசுடு இன்னொரு முறை கூப்பிடுகிறான பாரு “ என அவள் தான் புஸ் புஷ் என்று மூச்சி வாங்கிக்கொண்டு திரிந்தாள். அதுவும் அன்று மாலை வரையே அதன் பின் மீண்டும் மாமா புராணம்தான்.
இப்படியே நாட்கள் செல்ல அண்ணனும் அண்ணியும் நல்லாத்தான இருக்காங்க அம்மாவும் ஓரளவுக்கு ஒகே நம்ப மல்லிப்பூபற்றி அம்மாவிடம் பேசி பார்க்கலாமா என்று அவன் யோசித்து முடிப்பதற்குள் அவன் போன் ,ருக்கு இரண்டு மாத கர்ப்பிணியாக லாரியில் அடிப்பட்டு இறந்துவிட்டாள்,கண்ணன் சுயம் தொலைத்து அமர்ந்து இருக்கிறான் என்ற செய்தியை தாங்கி வந்து அவன் தலையில் இடியை இறக்கி வைத்து சென்றது.


வருவாள்

மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலன் அடுத்த எபி போட்டுட்டேன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..
கடைசி எபிக்கு cho சொன்ன எல்லோருக்கும் எம் நன்றிகள்..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 27:

ருக்கு அன்று மிகவும் அசதியாக உணர்ந்தாள் அவளால் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை கடந்த ஒரு
மாதமாய் அவளுக்கு சோர்வும் தலை சுற்றலும் அளவிற்கு அதிகமாக இருந்தது அவளுக்கு மாதவிடாய் பிரச்சனை இருப்பதால் குழந்தை உண்டாகி இருக்கும் என்று எண்ண முடியவில்லை இருந்தாலும் அதன் அறிகுறிகள் அதிகமாக இருப்பதால் கர்ப்பத்தை உறுதி செய்யும் அந்த அந்த கிட்டை வாங்க சோதிக்கவே அது பாசிடிவாக காட்டியது..

ருக்குவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை தன் கண்ணன் கார் இருளில் காட்டிய காதல், அன்பு கொடுத்த அளவரியாத முத்தங்கள் எல்லாம் குட்டி குட்டி கை கால்கள் முளைத்து தன் வயிற்றுக்குள்ளே என பூரித்து போனாள்..

இனி தன் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை தன் குழந்தை அவளின் பாட்டியின் கோபத்தை கண்டிப்பாக குறைக்கும் என முழுதாக நம்பினாள் அப்பேதை பெண்..

ருக்குவின் குடும்பம் அவளின் திருமணத்திற்கு பின் அந்த ஊரிலிருந்து சென்றுவிட்டார்கள் எங்கே சென்றார்கள் என்ற விவரம் கூட அவளுக்கு தெரியாது இருந்தாலும் அந்த கஷ்டம் எல்லாம் கண்ணனின் குடும்பத்தார் காட்டிய அன்பில் தொலைந்து போனது நிஜம்.

அவளின் அத்தையை தவிர அனைவரும் பாசமுடனே இருப்பார்கள் முருகனும் தன் மனைவியை தடுக்க வில்லை என்றாலும் அவளிடம் எந்த முகசுணக்கமும் காட்டியது இல்லை .

தான் கருவுற்றுக்கும் செய்தியை தன் கணவனிடம் கூட செல்லாமல் தன் மாமியிடம் சொல்ல போனாள்

ருக்குவின் வீட்டில் அனைவரும் வெளியில் சென்று இருப்பதால் சுந்தரி மட்டுமே வீட்டில் இருந்தார்.

சமையலறையில் இருக்கும் சுந்தரியின் காலில் சென்று விழுந்தவள் முகம் முழுவதும் சந்தோசத்துடன் “ மாமி நான் குழந்தை உண்டாகி இருக்கேன்” என்று கூறி சாக்லேட் கேட்கும் குழந்தையின் முக பாவத்துடன் அவரின் முகம் பார்த்தாள்.

சுந்தரியோ அவளை குத்தி கிழிக்கும் வெறியிடன் “ யாருக்கு “ என்ற ஒத்த வார்த்தையில் அவளின் உலகை நிறுத்தினார்.அவளின் அதிர்ந்த தோற்றத்தை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் “ என் புள்ள வீடே தங்குறது இல்லை ,அப்பறம் எங்கேர்ந்து வந்தது இந்த குழந்தை ,கோவிலுக்கு கோவிலுக்குனு மணி கணக்கா போனியே அது இதுக்குதான என இன்னும் ஏக வசனங்களில் அவளை திட்டி தீர்த்தார்.

அவருக்கு நன்றாக தெரியும் இது அவரின் பேரக்குழந்தைதான் என்று இருந்தும் தனக்கு பிறந்ததிலிருந்து போதிக்கபட்ட விஷயத்திலிருந்து அவரால் எளிதாக பின்ன வாங்கவோ அவளை ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை ,ஏற்கனவே தன் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவளிடம் நன்றாக பழக ஏன் தன் மனமே சில நேரம் அவளின் பால் சாயும் வேலையில் இந்த குழந்தை வேறு வந்தால் அவளின் இருப்பு இங்கு உறுதியாகிவிடுமே தன் தாலிக்கு ஆபத்தாகிவிடுமே என்று முடிந்த அளவு அவளை இங்கிருந்து அப்புறப்படுத்தவே நினைத்தார்.

அவள் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று நினைத்தாரோ தவிர அவள் சாக வேண்டும் என்று நினைக்கவில்லை.

அதனால் கடும் சொற்களை வேண்டும் என்றே அவளை நோக்கி எய்தவர் அங்கிருந்து நகர்ந்தார்

அவரின் முதன் வார்த்தையிலையே மூர்ச்சையாகிவிட்டாள் ருக்கு ,தன்னை எவ்வளவு அலட்சியபடுத்திய போதும் அமைதியாக கடந்தவளால் இதை முடியவில்லை.தன்னை தன் கற்பை சந்தேகிக்க எப்படி முடிந்தது இவரால் இதற்கு மேல் தான் உயிர் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க போவது.என்ன முயன்றும் தன் கணவன்,இன்னும் முழு உருவம் கூட அடையாத தன் 2 மாத கரு தன்னை இன்னொரு தாயை போல் பார்க்கும் தன் கணவனின் உடன்பிறப்புகள் யாருகாகவாவது உயிர் வாழ முடியுமா என என்ன யோசித்தும் அவளால் முடியவில்லை .

வெறித்த கண்களுடன் வீட்டை விட்டு வெளியேரியவள் கால்கள் போகும் பாதை சென்றாள்.

அவள் நடந்து சென்ற கொஞ்ச தூரத்தில் கண்ணன் காரில் அவளை கிராஸ் செய்தவன் அவளை பார்த்துவிட்டான் நடு ரோட்டில் காரை பார்க் செய்ய முடியாததால் கொஞ்ச தூரம் சென்று காரை நிறுத்தியவன் அவளை “ ருக்கு” ருக்கு என கூப்பிட்டுக்கொண்டே பின் தொடர்ந்தான்.

அவள் நடந்து சென்றது நடைபாதையில் கண்ணனுக்கும் அவளுக்கும் 50 அடி தூரம் இருக்கும் அவனின் குரல் அவளை தீண்டவே இல்லை அவளை தீண்டியது என்னவோ “ யாருக்கு “ என்று சுந்தரி கேட்ட கடைசி வார்த்தை மட்டுமே .

ரோட்டில் யாரும் இல்லை என்ற நினைப்பில் லாரியை அசட்டையாக மிகவும் வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தான் அந்த லாரி டிரைவர். ருக்குவிருக்கும் லாரிக்கும் 5 அடி மட்டுமே தூரம் இருக்க ருக்கு வேகமாக நடைபாதையில் இருந்து இறங்கி லாரியில் பாய்ந்தாள் திடிரென்று ஒரு பெண் குறுக்கே வந்தவுடன் அவனால் என்ன முயன்றும் லாரியின் வேகத்தை குறைக்க முடியவில்லை லாரியின் வேகத்தில் ருக்கு தூக்கி எறியப்பட்டாள்.

என்ன செய்கிறாள் இவள் என கண்ணன் யோசிப்பதற்குள் தூக்கி வீசப்பட்ட ருக்கு கண்ணனின் மீது மோதி அவன் காலடியில் விழுந்தாள்.
விரிந்த விழிகளுடன் தன் ஆசை காதலி தன் அன்பு மனைவி ரத்த வெள்ளத்தில் மிதக்க அவள் அருகில் அமர்ந்தான்.
எங்கே தன் கணவனை காணாமலே சென்று விடுவோமோ என்ற நினைத்த ருக்குவின் கண்கள் தன் கணவனை கண்களால் நிரப்பி கொண்டு அடுத்த நொடி மூடியது.

ருக்குவின் சடலத்திற்கு அருகே அமர்ந்த கண்ணனின் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.அங்கே கூடிய கூட்டம் அவர்கள் கேட்ட கேள்வி,போலீஸ் வந்த கேட்ட கேள்வி அவன் பதில் சொல்லாததால் அவனின் விசிட்டிங் கார்டில் இருந்து வீட்டிற்கு போனில் அழைத்து தகவல் சொல்லியதும் முருகனும் ஜனனியும் வந்து எல்லா பார்மாலிட்டிஷும் முடித்து வீட்டிற்கு வந்தது ஜனனி தகவல் சொல்லி விஷ்வா வந்தது ,தன் மனைவிக்கு நடக்கும் இரங்கல் கூடல் ,தன் தம்பி அழுதுக்கொண்டே தன் கையை பிடித்துக்கொண்டு ருக்குவின் இறுதி சடங்கை செய்ய வைப்பது ,தான் கொள்ளிவைத்தது என எதுவும் அவன் நினைவில் இல்லை சிரித்துக்கொண்டே ரத்தம கோலத்துடன் கண்கள் மூடிய தன் மனைவியின் முகத்துடன் முடித்துக்கொண்டான் தன் சுயத்தை..

எல்லாம் சடங்குகளும் செய்து முடிந்த நிலையில் கண்ணனை யாராலும் இயல்பிற்கு கொண்டு வர முடியவில்லை டாக்டர்களிடம் கேட்டதற்கு அதிர்ச்சி இலகுவான சூழலை கொடுங்கள் சரி ஆகிவிடுவார் என்று கூறிவிட்டார்.

கண்ணனின் ரூமில் கிடைத்த ‘ pragerancy kit’ கண்டு ருக்குவின் கருவை உறுதி செய்து சுந்தரியிடம் கேட்டதற்கு அவரும் ஆதங்கத்துடன் நடந்ததை கூற ருக்கு வேண்டும் என்றேதான் தன் உயிரை மாய்த்து கொண்டதை முடிவு செய்தனர்.அன்றிலிருந்து விஷ்வா தன் பெற்றோர்களுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.ஜனனியும் என்ன ஏது என்ற பேச்சுகள் மட்டுமே .முருகனுக்கு தன் மனைவி செய்தது தப்பு என்றாலும் அவள் தன்னை நம்பி வந்தவள் ஆயிற்றே தன்னை பொறுத்தே தன் உயிரை பொறுத்தே சுந்தரி அப்படி நடந்து கொண்டதால் அவரை வெறுக்க முடியவில்லை . கண்ணனோ தன் சுயத்தை தொலைத்து ரூமில் அடைப்பட்டான்.



சந்தோஷால் ருக்குவின் இறப்பிற்கு வர முடியவில்லை அவன் வேலையை வேகமாக செய்து முடிக்கும் அவசரத்தில் அகலியிடம் சொல்ல முடியவில்லை.

சொல்லலாம் என்று நினைக்கும் போது விஷ்வா தடுத்து விட்டான். “ மாமா எங்கே என்ற கேள்விக்கு வேலை விஷயமாக வெளியூர் சென்று இருக்கிறான் “ என்று சந்தோஷால் பொய் உரைக்கபட்டது.

சந்தோஷ் ஒரு மாதமாக அவனின் அபார்ட்மெண்டிற்கு செல்லவில்லை மல்லிப்பூ என்று பெயரை சுமந்து வரும்100 அலைபேசி அழைப்புகளையும் எடுக்கவில்லை.

அவன் கண்களுக்கு ரத்தத்தில் மிதந்த ருக்குவின் முகத்திற்கு பதிலாக அவளின் மல்லிப்பூவின் முகமே வந்து போனது..அவனை தூங்க விடாமல் தொல்லை செய்தது.மாமா என்ற அழைப்புடன் ரத்தம் நனைந்த கைகள் அவன் கன்னங்களை வருடுவது போல இரவில் கண்விழித்தவன் பித்தாகினான் கண்ணன் சுய நினைவின்றி பித்தனான் ,விச்சு சுயநினைவோடு பித்தனான்.

ருக்குவிற்கு சுந் தரிக்கும் நடக்கும் அனைத்து சம்பவங்களை அகலிக்கும் சுந்தரிக்கும் நடந்தது போல என் மல்லிப்பூ எப்படி இவளோ கஷ்டங்களை தங்குவாள் என நினைத்து நினைத்து நொறுங்கி போனான் விஷ்வா.

என்னென்னவோ யோசித்து கடைசியில் சந்தோஷிற்கு போன் செய்து தன் நடிப்பு வேலையை செவ்வனே செய்தான்.

சந்தோஷிற்கு கால் செய்து முயன்று வரவழைத்த சாதரண குரலில் அவனின் வேலையை பற்றி விசாரித்தவன் பின் “ சந்தோஷ் வீட்ல என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க டா,அண்ணனுக்கு அண்ணிக்கும் இப்படி ஆனதால இனி அந்த மாறி எதும் நடக்க கூடாதுன்னு பயந்துகிட்டு ,நான் எங்க லவ் பண்ணிடுவோனோன்னு பயந்துகிட்டு கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க , ஒரு 4 5 போட்டோ கூட காட்டனாங்க“ என்று கூறி முயன்று சிரித்தவன் “ உனக்கு தான் தெரியுமே எனக்கு லவ்வெல்லாம் பிடிகாதுன்னு”

நானும் சரின்னு சொல்லிட்டேன் ஒரு பொண்ணோட போட்டோ கூட ஒகே பண்ணிட்டேன் ,கல்யாணம் மட்டும் 6 மாசத்துக்கு அப்பறம் பண்ணிக்கிறேன் நல்லா பழகி புரிஞ்சிக்கிறோம்னு சொல்லிருக்கேன் டா” என்றான்.

அவன் குரலின் குதுகலத்தை மட்டுமே உணர்ந்த சந்தோஷால் போனின் அந்த புறம் கண்களில் கண்ணீர் கொட்டும் விச்சுவின் முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடைசி முயற்சியாக அகலியை பற்றி பேசி பார்க்காலம் என்று சந்தோஷ் “ அகலி” என்று தொடங்குவதற்குள் விஷ்வா” ஆமா சந்தோஷ் அகலியை இனி என்னால பார்த்துக்க முடியாது நான் என் அபார்ட்மெண்ட சேல் பண்ண போறேன் இங்க அம்மா அப்பா கூட இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் அப்பறம் என் பியன்ஸி வீடு இங்க என் வீட்டுக்கு பக்கமாதான் இருக்கு அதான் , அப்பறம் அகலி இனி சாமளிச்சுக்குவா ,அவன் ரொம்ப குழந்தைடா ,சூது வாதே தெரியாது,அவளை பத்தரமா பார்த்துக்க,நல்ல பையனா பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணிவை டா” என்று கடைசி 2 வார்த்தையை சொல்லும் போது விஷ்வாவின் குரலும் அழுகையை கடன் வாங்கி கரகரத்தது.

எப்படி என் தேனுக்குட்டி தாங்கிப்பா என்ற சந்தோஷின் யோசனையில் அவனால் எதையும் இனம் கண்டுகொள்ள முடியவில்லை.
ஏதோ மனப்பாடம் செய்வது போல் தன்னை பேசவிடாமல் ஒப்பிக்கும் தன் நண்பன் , ஒரு உடை வாங்கவே தன் ஒப்பினியனை கேட்கும் தன் நண்பன் எப்படி தன்னை கேட்காமல் ஒரு பெண்ணை முடிவு செய்தான்.ஒரு மரணம் நடந்து ஒரு மாத காலத்தில் கல் மனம் கொண்டவர்கள் கூட கல்யாண ஏற்பாடு செய்யமாட்டார்கள் அப்படி இருக்க அனைவருக்கும் நல்லதே நினைக்கும் தன் நண்பன் எப்படி இப்படி சுயநலமாக யோசிக்க முடியும் ,இல்லை அப்படி ஏதாவது இருந்தால் ஜனனியாவது கண்டிப்பாக தன்னிடம் சொல்வாளே என எந்த நினைப்பும் இல்லாமல் இதை எப்படி அகலியிடம் சொல்ல போகிறோம் என்ற எண்ணத்திலையே உழன்றான் .

அங்கே போனை வைத்த விஷ்வாவோ சென்னையிலுள்ள ஒரு ஹோட்டலில் முதன் முறையாக தண்ணி அடித்தான் , ரத்த வெள்ளத்தில் மிதக்கும் தன் மல்லிப்பூவின் மதி முகமே நியாபகம் வரை அளவிற்கு அதிகமாக குடித்து தன்னிலை மறந்து “ என் குட்டிமா மாமா உனக்கு வேணாம் டா”நீ உயிரோட எங்கயாவது நல்லா இரு நான் உனக்கு வேண்டாம் என்று பிதற்றிய படியே மயங்கினான் அதிபோதையில்.
இங்கு சந்தோஷின் காலை பார்த்ததும் ஆனந்தம் அடைந்த அகலி” கருவாயா மாமா எப்ப வரும் ஒரு மாசம் ஆகுது சொல்லு சொல்லு “ என நச்சரிக்க

அடைத்த தொண்டையை சரி செய்த படி சொல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இனியும் அவள் மனதில் ஆசையை வளர்க்க விரும்பாமல் இவனும் ஒரு திரைக்கதை எழுதி அவள் வாழ்க்கையை சூனியம் ஆக்கினான்.

” அவ... அவனுக்கு...வீட்ல கல்யாணதுக்கு பொண்ணு பார்த்து முடிவு பண்ண போனங்கலாம் முடிவு ஆகிட்டான் டா தேனு குட்டி ,அவன் உன்னை குழந்தை மாதிரி தான் பார்த்து இருக்கின்றான் அதான் உன்மேல ரொம்ப பாசமா இருக்குறான் ,அதனால நீ சமத்து புள்ளையா அவனை தொல்லை பண்ண கூடாது உன் மனசுல ஆசை வளருறதுக்கு அவன் எந்த வகையிலும் காரணம் ஆக மாட்டான், இனி அவனுக்கு கால் பண்ணாத, ஒருத்தவங்களோட விருப்பம் அவங்கள லவ் பண்ண சொல்லி தொல்லை பண்ண கூடாது” என்றான்.
அகலி” இல்லை இல்லை சந்தோஷ் மாமன் உன்னிடம் சும்மா விளையாட்டு பண்ணிருக்கும் மாமாக்கு என்னை ரொம்ப பிடிக்கும் “ என்று அவள் சமளித்தாலும் அவள் இதயக்கண்ணாடியில் கல் விழுந்தது.

சந்தோஷ் “இப்பவும் அவனுக்கு உன்னை பிடிகாதுன்னு நான் சொல்லல டா, பிடிக்குறது வேற காதல் கல்யாணம் வேற டா தேனு” என்றான்.

அகலி“இல்லை சந்தோஷ் மாமக்கு என்னை காதலாதான் பிடிக்கும் என்று என்னை யோசித்தும் காதலுக்கும் அன்பிற்கும் உள்ள வித்தியாசம் அவளுக்கு புரியவில்லை,அவள் மாமனும் புரிய வைக்கவில்லை அந்த வளர்ந்த குழந்தைக்கு.
சந்தோஷ் அவளுக்கு என்னை வித விதமாக அவளுக்கு விளக்கம் சொல்லியும் “ இல்லை இல்லை” என்று தேம்பி தேம்பி அழும் அவனின் தேனுக்குட்டியை சமாதானம் செய்யமுடியவில்லை சந்தோஷால்.
“நான் கிளம்பி வரவா டா”என்று அவன் இறுதியாக கேட்க அந்த அழுகையிலும் அவனின் வேலை அறிந்து அவன் இல்லாமல் அந்த வேலையை முடிக்க முடியாது என உணர்ந்து “நான் நல்லா இருக்கேன் நீ வர வேண்டாம் ராணி அக்கா இருக்காங்க நீ கவலை படாத சந்தோஷ் “என போனை வைத்தவள் விட்ட அழுகையை மீண்டும் தொடர்ந்தாள்.
சன்தோஷும் வேலையை சீக்கரம் முடித்து தன் தேனுக்குட்டியை பார்க்க போக வேண்டும் என்று இரவு பகல் பாராமல் வேலை முடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்தான்.

அவள் உயிரை காப்பற்ற எண்ணியவன் அவளின் உணர்வுகளை வதைக்கிறான்..எப்பொழுதட விடியும் என்று விடிந்ததும் விஷ்வாவின் ஆபிஷிற்கு சென்றாள்.
அங்கே அறைக்கதவை வேகமாக திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

அங்கே விஷ்வா...


"எனக்கென அழ ஒருபோதும் நினைக்கவில்லை.. எனக்கென வாழ ஒருபோதும் நினைக்கவில்லை.
என்னவோ தெரியவில்லை உனக்கென வாழவும் அழவும் ஆசைப்படுகிறேன்
"


என தன் காதலை ஆழமாகவும் அழுத்தமாகவும் தன்னை பார்த்த பத்தாவது நாளிலே சொன்ன தன் அம்முகுட்டியின் காதலுக்கு தன்னை கொஞ்சம் கூட தகுதி இல்லாமல் படைத்த கடவுளை ஆயிரமாவது முறையாக திட்டி தீர்த்தான் நம் கதையின் நாயகன் விஷ்வேந்திரன்...,

அவனோட அம்முகுட்டிக்கு மட்டும் எப்போதும் மாமாதான் .அதை நினைக்கும் போதே அவன் இதழ்கள் கோடென அழகாய் பிரிந்தது.
.அடர்ந்த சிகை அலை அலையாய் அவன் நெற்றி முழுவதையும் மறைக்க கண்மூடி தான் சந்தோஷிடம் பேசியதை இல்லை இல்லை நடித்ததை
யோசித்துக்கொண்டிருந்தான்..

ஏதோ உறுத்த கண்களை திறந்து பார்த்தான் அங்கே தன் அலுவலக அறை வாசலிலே அவனின் அம்முகுட்டி, அவனின் தேவதை,அவனின் மல்லி பூ..கிழிந்த நாறாய் நின்றாள்.

கடைசியாய் ஒருமுறை பார்க்கபோகிறோமே என சந்தோசப்படுவதா.இல்லை அவளை காயப்படுத்த போகிறோமே என வருத்தபடுவதா என முதல் முறையா அந்த 6 அடி 5 அங்குல மனிதன் கலங்கி நின்றான்.

அழுது அழுது வீங்கிய கண்களுடனும்.இரவும் சாப்பிடவில்லை,காலையும் சாப்பிடவில்லை என அவள் கலைந்த தோற்றமே சொல்ல தன் உயிர் ரணப்படுவதை தாங்கமுடியாமல் எழுந்து ஜன்னல் பக்கமாய் திரும்பி நின்றான்.

அந்த வளர்ந்த குழந்தை தன் மாமனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏற்கனவே பேபி பிங்க் கலரில் இருப்பவள் நைட் முழவதும் அழுததால் முகமெல்லாம் இரத்தமென சிவந்திருக்க தன் மாமானை நோக்கி "மாமா சந்தோஷ் சொல்வதெல்லாம் உண்மையா " இதை சொல்வதற்குள்ளே அவள் உயிர் ஒருமுறை பிரிந்து மீண்டும் வந்தது...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#காதலன்

காதலன் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ஸ்ல ஒரு choo சொல்லுங்க..

அடுத்த அத்தியாயம் நாளைக்கு காலையில் இல்ல மாலையில் தரேன் .
மொத்தம்மா pdf ah கொடுக்கலாம்னு பார்த்தேன் உள்பேட்டியில் என் சகோதரிகள் ரொம்ப ரொம்ப மரியாதையா கேட்டாதால இப்பவே கொடுத்தித்துட்டேன்..

( நீங்க யோசிக்கிறதா பார்த்த அவங்க என்னை கேவலமா திட்டின மாதிர்ல இருக்கு)
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 28:

ஜன்னலின் புறம் திரும்பி நின்று தன்னை சமன் படுத்தியவன் அவள் அழுதது அவள் ஓய்ந்த தோற்றம் என எதையும் கண்டு கொள்ளாதவன் போல திரும்பி “ வா அகலி என்ன ஆபிஸ் வரைக்கும் வந்துருக்க” என்றான்.

அவளுக்கு எதுவும் கவனிக்கும் நிலையில் இல்லை அவன் வாயிலிருந்து வரும் ஒற்றை வார்த்தைக்கு தவம் இருந்தவள் போல “ மாமா மாமா உங்களுக்கு கல்யா....கல்யாணம்ன்னு பொய்தானா சொன்னீங்க “ ,ஆமாம் என்று சொல்லிவிடு என்று தன் கண்களில் உயிர்தாங்கி கேட்டாள்.

அவன் எங்கே அதையெல்லாம் கவனித்தான் அவள் உள்ளே வரும் போதே அவன் அனைத்து புலன்களுக்கும் கண்களை கட்டிவிட்டான் இயந்திர கதியில் அவன் மனப்பாடம் செய்ததை சொல்ல அவன் மூளைக்கு தொடர்ந்து கட்டளைகள் விதித்து கொண்டே அதில் வெற்றியும் கொண்டான் ,

“ இல்லை அகலி உண்மைதான் எனக்கு கல்யாணம் முடிவாயிருக்குறது” என்றான் முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டு..

அவன் உண்மை என்று சொன்னதிலே அடித்தளம் ஆட்டம் காண இன்னும் மயக்கம் கூட வராத....பூமி பிளந்து தான் உள்ளே போகாத நிலையே அறவே வெறுத்தவள் “மாமா நான் என்...காதல் ...கல்யாணம்...நீங்க.... என பலவீனமான குரலில் என்ன பேச என்ன செய்ய புரியாமல் அவள் உளற

அவளின் நிலையே அவனுக்கு அங்கே 1000 ஊசிகளை இதயத்தில் குத்தி குத்தி எடுக்க இருப்பினும் அவள் உயிர் காக்க அவன் நொடியும் தன் நிலையில் தன் முடிவிலிருந்து இருந்து பின்வாங்கவில்லை.

பாவம் அந்த முட்டாளுக்கு தெரியவில்லை சொர்க்கத்தில் ஒரு நாள் வாழ்ந்து உயிர் விட்டாலும் நிம்மதியே “ஆயினும் அவன் நரகத்தில் ஆயுள் முழுவதும் அவளை வாழவைக்க வழி வகுக்க போகிறோம் என்று...

“என்ன காதல் அது இதுன்னு உளறுர நான் எப்போ அதெல்லாம் உன்னிடம் சொன்னேன், ஒரு பார்வை ஒரு வார்த்தை நான் அப்படி நடந்து இருக்கேனா ,பைத்தியம் மாறி பேசம

நீ கிளம்பு இனி எனக்கு கால் பண்ணாத ,என் உட்பி ரொம்ப போசசிவ்” என இல்லாத ஒருத்தியை பற்றி கூறினான்.

அவளுக்கு புரிந்தது எப்பொழுதும் தன்னை மிரட்டும் ,திட்டும்,தன் மாமனின் பேச்சிகலிருந்து இந்த திட்டும் மிரட்டலும் சற்றே வித்யாசம் என்று .இருந்தும் கடைசி வாய்ப்பாக அவன் அருகே சென்று அவன் கன்னங்களில் கையை வைத்து “ மாமா எனக்கு தெரியும் நீ எதுக்கோ பொய் சொல்ற என்னை உங்களுக்கு பிடிக்கும் நான் இல்லாம உங்களால இருக்க முடியாது” அவன் கண்களில் கண்ட காதல் அவன் திட்டும் போது அதில் உள்ள உரிமை ,அவளை குழந்தை போல அவன் பார்த்து கொண்டது,அவளின் சிறு காயத்திற்கு கூட இவன் துடித்தது என அவனிடம் இவள் உணர்ந்த காதலை கூட அவளுக்கு உணர்த்த தெரியவில்லை அவனிடம்

தன் காதலையே அதீத பிடித்தம் என்ற வரையறைக்குள் வைத்திருக்கும் அப்பெண்ணால்.

அவள் உள்ளங்கையின் குளுமையில் தன்னை மறந்து ஒரு நிமிடம் கண்களை மூடி அனுபவித்தவன் “ ஆமா டா எனக்கு உன்னைத்தான் பிடிக்கும் உன்னை மட்டும்தான் பிடிக்கும் நீ இல்லன்னா என் வாழ்வு நடைப்பிணம்” என்று மனத்திற்குள்ளே கூறியவனின் கை அவளை அணைக்க தன்னாலே உயர ஒரு நிமிடத்தில் சுதாரித்தவன் கோபம் தலைக்கேற அவளை வேகமாக தள்ளிவிட்டவன் திரும்பி நின்ற கண்ணீரை உள்ளே இழுத்து தன்னை சமன் செய்தவன் அகலியை நோக்கி திரும்பினான் அவள் விழுந்த இடத்திலிருந்து விஷ்வாவையே பார்த்து கொண்டிருந்தாள் கண்களில் அதிரிச்சியுடன்.

“ எனக்கு உன்னை சுத்தமா பிடிக்காது சந்தோஷுக்காக தான் உன்னை நான் பொறுத்துகிட்டேன்.பொன்னுதான ...நீ.. எப்ப பார்த்தாலும் மேல மேல வந்து ஒரசிக்கிட்டு உனக்கு ஆம்பள வேணும்னா நான் தான் கிடைச்சனா...வேற யாரையாவது பாரு அதுக்கு நான் ஆள் இல்லை

(அவள் பார்க்கும் பார்வையிலே அவனின் பூ குட்டிக்கு அது புரியவில்லை என்று உணர்ந்தே இருந்தான்)

அறிவில்லே..பிடிக்கல பிடிக்கலன்னு சொல்றேன் நீ பேசுனதையே பேசிட்டு இருக்க ...நான் திரும்பி வரும்போது நீ இங்க இருக்க கூடாது” என்று கர்ஜித்தவன் இங்கே இனி ஒரு நிமிடம் இருந்தாலும் அவளை நோக்கி தான் இழுக்கபடுவோம் என்று உணர்ந்தவன் வேகமாக வெளியேறிவிட்டான்.

சந்தோஷிற்கு ஒரு மெஸேஜை அனுப்பிவிட்டு அதில் எதையும் வெளிப்படையாக சொல்லாமல் அகலி வந்தாள் கோபத்தில திட்டிட்டேன் பார்த்துக்கொள்” என்பதை தாங்கி மட்டும் சென்றது.

தன் காரில் உள்ள ட்ரிங்ஸை எடுத்து ராவாக குடித்தான் ஒரு நிமிடம் கூட தான் சுயநினைவோடு இருக்க கூடாது என்று, ஒன்று இரண்டு மூன்று என்று 5 நிமிடத்தில் 3 பாட்டில்களை வாயில் சரித்தவன் அப்படியே கார் சீட்டிலையே மயங்கினான்.

அவன் “ உனக்கு ஆம்பள வேணும்னா நான்தான் கிடைச்சனா “ என்று அவன் பேசியதற்கு அர்த்தம் அவளுக்கு எதுவும் புரியவில்லை

அந்த நல்லதையே கேட்டு நல்லவர்களுடனே வாழ்ந்த அந்த பூ பெண்ணிற்கு ப

கால் போன போக்கில் இறங்கி வீதியில் வந்தவளின் போனிற்கு சந்தோஷ் அடிக்க அதை எடுத்து இயந்திர கதியில் நான் வீட்டில் இருக்கேன் என்னை ஒரு வாரம் யாரையும் தொல்லை செய்யாமல் பார்த்துக்கொள்” என்று அவனிடம் கூறியவள் ரோட்டை நோக்கி நடந்தாள்.

காலையில் ராணியும் அவள் கணவனும் தன் மகளுக்கு உடம்பு முடியவில்லை என்று ஊருக்கு கிளம்பிவிட அகலி மட்டுமே தனியாக இருக்க வேண்டும்.
வீட்டில் உள்ள யாரையும் சென்னை வர சொல்லலாம் என்றாள் அவளின் இந்த நிலையை பார்த்து வருந்த கூடும் என்பதால் இன்னும் ஒரு ஒருவாரத்தில் தான் சென்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து வீட்டில் அவளிற்கு எக்ஸாம் அவளை தொல்லை செய்ய வேண்டாம் நாம் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தன் வேலைகளை முடிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

அவள் தவறான முடிவு எடுப்பாள் என்றேல்லாம் அவன் நினைக்கவில்லை “ அவளுக்கு தங்கள் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பது சந்தோஷ் அறிந்ததே

அதே போல் அவளை கொஞ்சம் யோசிக்க வைத்திருந்தால் கூட இன்னொரு கல்யாணம் என்று யோசித்திருக்க மாட்டாள்.ஆனால் கடைசி வரை தன் குடும்பத்தோடு குடும்பத்திற்காக வாழ்ந்திருப்பாள்.

ஆனால் விதி அவள் ரோடை கிராஸ் செய்யும் போது ரீனாவின் 4 ராட்சசர்கள் வடிவில் அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தியது.

ஒரு இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தவள் ஒரு நார்காலியோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தாள்.கண்களை சுற்றும் முற்றும் பார்க்க அங்கே அவளின் எதிரில் நான்கு தடியர்களும் ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் அடிவாங்கிய அடையாளங்களுடன் நின்று இருந்தான்.

நெஞ்செல்லாம் பயம் கவ்வ கண்கள் இருள “ யாரு அண்ணா நீங்க எனக்கு பயமா இருக்கு என்னை விடுங்க பிளீஸ், என்று அழ,

அந்த தடியனோ “ பாரு டா அண்ணனா” என சிரிக்க “ ஏய் குட்டி நீ விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்க போறியாமே “ என்க அவள் பயத்தில் அதை கவனிக்காமல் மருண்ட பார்வையுடன் அவர்களை பார்த்தாள்.

இன்னொரு தடியனோ “ அப்ப முதல இவனை கல்யாணம் பண்ணிக்கோ அப்பறம் போய் நீ அந்த விஷ்வாவையே கல்யாணம் பண்ணிக்கோ” என்க அங்கே அடிவாங்கி நின்று கொண்டிருந்த அந்த ஆணின் கையில் கட்டாயமாக ஒரு மஞ்சள் பொன் தாலி கொடுக்கபட அவளை நோக்கி அவனை தள்ளிவிட்டனர்.

வேணாம் சார் பாவம் சார் அந்த பொண்ணு என அவன் கெஞ்ச,

நீ அவளுக்கு தாலி கட்டுனா தான் நீ இங்கிருந்து உயிரோட போக முடியும் என அவனை மிரட்ட அவனும் உயிருக்கு பயந்து அகலியின் கத்தல் , கதறல் என எதையும் பொருட்படுத்தாமல் கண்களை மூடிக்கொண்டு அவள் கழுத்தில் கட்டிவிட்டான் அவன் கட்டியவுடன் அகலி மயங்கி சரிய அவளை தெளிய வைத்து அவளின் முன்னே அவளுக்கு தாலி காட்டியவனை காட்டு அடியாக அடிக்க “ அய்யோ அவரை அடிகாதிங்க என தான் கட்ட பட்ட நிலையிலேயே தடுக்க அது தனக்கு தாலி கட்டியவனை அடிக்கிறார்கள் என்பதற்கு அல்ல ஒரு சகமனிதன் என்பதாகவே

அடியாட்களில் ஒருவனோ “ அது எப்படி உன்னை கல்யாணம் பண்ணிட்டு இவன் உயிருடன் இருப்பான் “ உன் கழுத்துல தாலி கட்டுற யாருக்கும் இந்த நிலைமை தான் ,அந்த விஷ்வாவிற்கும் இதே நிலைமைதான்” என அவளின் முன்னே அந்த ஆணின் குடல் கத்தியால் குத்தி அறுக்கப்பட அவன் அவ்விடத்திலேயே உயிர்விட்டான்.

ஒரு பூனையின் மரணத்திற்கு கூட ஒரு வாரம் அழுதவள்,ஒரு லிப்ட் நின்றதற்கு கூட கத்தி கதறியவளின் பிள்ளை மனதை நோக செய்கின்றனர்.தன் மாமனின் நிராகரிப்பே உயிர் வலி எனும் போது இதை எந்த வலியில் சேர்க்க தெரியவில்லை.முதன் முதலாக இவ்வளவு கஷ்டம் இவளுக்கு அதிகமோ என விதியே கண்ணீர் விடும் தருணம் .
குழந்தை குழந்தை என செல்லமாக வளர்க்கப்பட்ட 4 குடும்பங்களின் செல்லமா காப்பாற்ற யாருமின்றி குதரப்பட்டாள்.

அது இன்னும் முடியவில்லை என்க மீண்டும் அவளுக்கு ஒரு விதவை பெண்ணின் மூலம் தாலி அறுக்கும் சடங்கு செய்யபட்டது.

அது அன்றோடும் முடியாமல் தொடர்ந்து வந்த 5 நாட்களும் வேறு ஆண்களை அவர்கள் அழைத்து வருவதும் அவளுக்கு அதே போல “விஸ்வாவை கல்யாணம் செய்து கொள்ள போகிறாயா அதுக்கு முன் இவனை கல்யாணம் செய்து கொள் என அவளுக்கு தாலி கட்ட வைக்க ,உன் கழுத்தில் தாலி கட்டிட்டு இவன் எப்படி உயிரோடு இருப்பான் என அவளின் முன்னே அவர்களை கொன்று அதே சடங்கை திரும்பி அவளுக்கு செய்து..

இப்படியாக 10 பேர்களை அவளின் முன்னே கொன்று சாய்க்க அவளின் ஆள் மனதில் தனக்கு தாலி கட்டினால் அவர்கள் கொல்ல படுவார்கள் என்றும் மேலும் தன் மாமனிற்கும் இதே நிலைமைதான் என்றும் முழுதாக நினைக்க வைக்கும் வரை அந்த கொடுமையை நடத்தினர் மனசாட்ச்சியை கொன்று புதைத்த ரீனாவும் அவளின் அடியாட்களும்.

அவர்கள் கொன்ற அனைவரும் கே.ஆர் ஆல் கொல்வதற்காக பணம் வாங்க பட்டவர்கள் .அவன் பணத்தை வாங்கிக்கொண்டு தன் அடியாட்களிடம் சொல்ல ரீனா தன் அண்ணனிருக்கு தெரியாமல் அவர்களை பயன்படுத்தி கொண்டாள்.

அவளுக்கு வலுக்கட்டாயமாக சாப்பாடு கொடுத்து சுயநினைவோடு அவளை வைத்து என்னை கொன்றுவிடுங்கள் என அவளின் கதறலை கூட பொருட்படுத்தாமல் அன்று “ விஷ்வாவை கல்யாணம் செய்து கொள்ள நினைக்கும் பெண்களுக்கு அந்த நினைப்பு வர கூடாது “ என்று மனதில் நினைத்ததை இன்று நிறைவேற்றிவிட்டாள் ரீனா.

அதில் மூவர் கொஞ்சம் வயதானவர்கள் அதில் ஒருவர் நான் செத்தாலும் இதை செய்ய மாட்டேன் என தாலி கட்டாமலே உயிர் விட,,,இருவர் கட்டி உயிர் விட்டனர்.

நான் வீர கல்யாணம் செய்ய மாட்டேன் ,யாரையும் பண்ண மாட்டேன் அவங்கள கொலை பண்ணாதிங்க “ என அவள் கதறலை செவி மடுக்க ஆள் இல்லை அங்கே..


ரீனா இந்த இடத்திற்கு வராமல் போகவே அவளை அகலிக்கு தெரிய வாய்ப்பில்லை.

5 நாட்களின் இறுதியில் மனம் செத்து அழுகி புழுக்க உணர்ச்சி உணர்வு என அனைத்தும் கொடுரமாக கொல்லப்பட உடம்பில்,உயிரில் மட்டில் எந்த சேதரமும் இல்லாமல் அவளின் அபார்ட்மென்டின் வாசலில் விடப்பட்டாள் அப்பூஞ்சிட்டு.

இதை தெரியாத விஷ்வா நொடி கூட தெளியமல் போதையில் மிதக்க ,சந்தோஸோ சீக்கிரம் வேலையை முடிக்க பார்த்து கொண்டிருந்தான்.

ஒருவாரம் கழிந்த நிலையில் சந்தோஷ் அகலிக்கு போன் செய்யவே அது அணைத்து வைக்க பட்டிருக்க கிடைத்த பிளைட்டில் அவசரமாக வந்து பார்த்தால் “ விட்டதை வெறித்த படி அமர்ந்திருந்தாள் அவனின் தேனுக்குட்டி .

அவனின் அத்துணை கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லாமல் போகவே அவளை அழகூருக்குக்கு அழைத்து சென்றான்.
உயிரை கொடுக்க மொத்த குடும்பம் அவள் மாமன் என அத்துணை பேர் இருந்தும் அனாதையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது அகலியின் மகிழ்ச்சி,குறும்பு என அனைத்தும்

அதன் பின் தமிழின் கல்யாணத்தில் அவள் உடல் நிலை சரி இல்லாமல் போனது ,அவளுக்கு அடிக்கடி வரும் கனவு என நொந்து போனான் சந்தோஷ்.

தன் தேனுக்குட்டியை இவ்வளவு தூரம் கொண்டுவந்து விட்ட விஷ்வாவை அறவே வெறுத்தான். ஜனனியிடம் கூட பேசுவதை நிறுத்திவிட்டான்.

விஷ்வாவோ அவளை பேசி சென்ற அன்றிலிருந்து விடாமல் குடித்தவன் ஒரு மாதம் கழித்து அவள் இல்லை என்று உறுதி செய்து கொண்டு அவனின் அபார்ட்மென்டில் அவனின் மல்லிப்பூவின் நினைவுகளோடு வாழ தொடங்கிவிட்டான். இனி அவளின் வாழ்வை அவள் கருவாயன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கையில்.

பகல் முழுவதும் தொழில் தொழில் என அதில் தன் இயலாமையை காட்ட இரவு முழுவதும் குடிக்கு அடிமையானன் .கண்ணனின் மன மாற்றத்திற்காக முருகனின் குடும்பம் முழுவதும் அபார்ட்மெண்ட்டிற்கே வர விஷ்வா தடுக்கவும் இல்லை அவர்களுடன் பேச முயற்சிக்கவும் இல்லை .ஜனனியோ தன் குடும்பதின் பிரச்சனை தன்னவன் தன்னிடம் பேசாதது என அவள் சுருங்கி போனாள்.

அதன் பின் இரண்டு வருடங்களுக்கு பிறகு கவியை பார்க்க அகலியின் குடும்பம் சென்னை வர எதிர் பாரத விதமாக அகலி விஷ்வா சந்தித்திக்கொள்ள இனி இவளை விட்டு தன்னால் இருக்கு முடியாது என்ற நிலையில் விஷ்வா முடிவெடுக்க அதை அறியாத சந்தோஷ் அவனை ஆபிசில் சந்தோசமாக கண்டதும் அடித்து துவைத்துவிட்டான்.

வருவாள்

மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#காதலன்

காதலன் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு choo சொல்லிட்டு போங்க தங்கங்கால..
இதோட பிளாஷ்பேக் முடிஞ்சிட்டு இனி கரண்டா நடக்குறதுதான்...நெக்ஸ்ட் இன்னும் 2 டேஸ்ல தரேன்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#காதலன்

எபிசோட் இல்லை டியர்ஸ்...

பிளாஷ்பேக் கரண்ட் எபின்னு மாத்தி மாத்தி கொடுத்து கதை எந்த இடத்துல இருக்குனு புரிஞ்சிக்க முடியாதுல

அதனால் இதுவரை உள்ள எல்லா எபியும் கான்சாலிடெட் பண்ணி order படி கீழ உள்ள லிங்கில pdf கொடுத்து இருக்கேன் .

அப்பதான் இனி வரும் எபில குழப்பம் இல்லாம புரியும்

எதும் மாறி இருந்தா சொல்லுங்க

படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. பொறுமையா படிக்கிறவங்க யாராவது ஏதாவது எழுத்து பிழை இருந்தா சொல்லுங்க...

நான் finala கரெக்ட் பண்ணிக்கிறேன்.. tanqq al of ur support நான் இவளோ லேட் பண்ணாலும் என் கதையை சந்தோசமா வரவேற்ததுக்கு

( உங்க mind voice கதையை மட்டும்தான் உன்னையெல்லாம் இல்லைன்னு சொல்றது எனக்கு நல்லா கேட்குது☺☺😊😊)

அப்பறம் ஒரு help இந்த pdf ல download option வந்தா டவுன்லோடு பண்ணாம sisy சொல்லிடனும் சரியா

My first baby....,,😭😭

மிளாணி

லிங்க்


காதலன் finaldd.pdf
 
Status
Not open for further replies.
Top