All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஸ்ரீயின் " உணர்ந்தேன் உன்னாலே" கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிளாணி : ஹாய் டியர்ஸ்,
ரீடர்ஸ் : சொல்லி தொலை...வேலைகிடக்கு
மிளாணி : ஒரு முக்கியமான விஷயம்
ரீடர்ஸ் : என்ன இன்னைக்கு எபி இல்லையா...?
மிளாணி : இல்லை இல்லை அதெல்லாம் நாளைக்கு காலையில டிங்டாங்னு நாளைக்கு காலையில வந்துரும்... இது வேற
ரீடர்ஸ் : நீ....எபி..... டிங்டாங்னு...கருமம்
மிளாணி : அப்போர்ஸ்.... (வாடிவேலு வெர்சன்)
ரீடர்ஸ் : சரி மொக்க போடாம மேட்டர சொல்லு.

மிளாணி :இன்னொரு ஸ்டோரி எழுதலாம்னு....
ரீடர்ஸ் : நீ ஒழுங்கா ஒரு கதையமுடி...
மிளாணி : இல்லை இல்லை அந்த கதையை முடிச்சிட்டுதான் இதை எழுதுவேன்..இது சும்மா ஒரு முன்னோட்டம் மட்டும் ப்ளீஸ்...
ரீடர்ஸ் : சரி போட்டுதொலை..பொழுது போகலைனா படிச்சிட்டு “choo”,சொல்றோம்.
மிளாணி : ரொம்ப நன்றி டியர்ஸ்...
கதையோட
தலைப்பு : உணர்ந்தேன் உன்னால்.
நாயகன் : ருத்ரன்
நாயகி: பனிநிலவு

முன்னோட்டம் :
அந்த சுத்துகட்டிலுல்ல கலையாண மண்டபங்களிலே மிகவும் பெரியதும்,வாடகை அதிகம் உள்ள அந்த மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இருக்காதா பின்ன.... அந்த பகுதியன் வாழும் பெரிய தனக்காரனின் மகன் சூரியாவின் கல்யாணம் அல்லவா.
சூர்யாவும் தொழில்துறையிலும் ,கல்வித்துறையிலும் மிகுந்த சாதனை படைத்த வளரும் இளம் தொழிலதிபர் அல்லவா...அது நல்ல முறையிலா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
எப்போதடா கல்யாணம் முடியும்,மொய்யை எழுதிவிட்டு வீட்டுக்கு போகலாம் என்று நினைத்துக்கொண்டு மேடைக்கு கீழே போடப்பட்டிருக்கும் சேரில் தூரத்து சொந்தங்கள் அலுப்புடன் அமர்ந்திருக்க

, நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் கல்யாண வேலையில் சுறு சுறுப்புடன் அங்கும் இங்கும் பம்பரம் அலைந்து கொண்டு இருக்க,

மாப்பிள்ளை வீட்டு சொந்தங்களிலே நச்சென்று இருக்கும் நான்கு பெண்கள் வரவேற்பில் நின்று அனைவரையும் வரவேற்க,
"தாலி கட்டுனோன எல்லாரும் சாப்பிட வந்துடுவாங்க சீக்கிரம் சமையல் வேலையே முடிங்க" என்று சமையல் வேலை செய்யும் இடத்திலிருந்து சமையல்காரர்களை விரட்டி வேலை வாங்கி கொண்டிருந்தார் சமையல் காண்டிரக்டர்.
எல்லா வேலையும் செய்ய ஆள் இருப்பதால் மாப்பிளையின் அம்மா,அப்பா,தங்கை யாருக்கும் எந்த வேலையும் இல்லாததால் மேடையின் அருகில் நின்று இருந்தனர்.
தங்கள் பெண் பெரிய வீட்டில் வைக்கப்பட்ட போகிறாள் என பெருமிதத்துடன் வாய் முழுக்க பல்லுடன் மணமேடையின் மற்றும்மொரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர் மணமகளின் பெற்றோர்.
நம் நாயகியின் தங்கை மட்டுமே முகத்தை முழு சோகத்தில் வைத்து நின்று கொண்டிருந்தாள்.
தான் நினைத்ததை சாதித்த திமிருடன் பட்டு வேஷ்டி சட்டையில் ஆறடி ஆண் அழகனாக
(அழகு மட்டும் போதுமா)
ஐயர் சொல்லும் மந்திரங்களை ஒரு வித நிமிர்வுடன் சொல்லிகொண்டிருந்தவன் மேடை முழுவதும் சல சலவென்று சத்தம் கேட்கவே தன் பார்வையை நிமிர்த்தி பார்த்தான்.
அங்கு வானத்து தேவதையை போல முழு நிலவொலியின் வெளிச்சத்துடன் மண்டபத்தில் உள்ள அனைவரும் வாயை பிளந்து பார்த்துகொண்டிருக்க அழகின் மொத்த வந்து கொண்டிருந்தாள் நம் நாயகி பனிநிலவு.
ஏற்கனவே கொள்ளை அழகுடன் இருப்பவள் இன்று அழகு நிபுணர்களின் கைவண்ணத்தோடு பேரழகியாக அடர்ந்த பிங்க் கலர் பட்டு புடவையில் அதற்கு தகுந்தார் போல் குந்தன் செட் நகை அணிந்து வந்தாள்
வந்தவளை பார்த்த சூர்யாவே அவள் அழகில் தன்னை மறந்து பார்த்தான்.
மாப்பிளை வீட்டு பெண்கள் புடைசூழ நடந்து வந்த பனிநிலவின் கண்களில் அத்தனை சந்தோஷம் அத்தனை நிறைவு .

அந்த நிறைவும்,சந்தோசமும் தனக்கு நடக்க போகும் கல்யாணத்தால் ஒரு துளி அளவு கூட இல்லை.அனைத்தும் தன்னவனுக்கு இனி இந்த பிரச்சனையும் இல்லை,இனி அவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பதாகும்.
அந்த பகுதியின் நிசப்தத்தை கிழித்தபடி அதிவேகத்துடன் சென்று கொண்டிருந்தது கருப்பு நிற ஜாக்குவார் கார்.
அதை ஒட்டிக்கொண்டு வந்தவனின் மனநிலமையும் அந்த காரின் வேகத்திற்கு சிறிதும் குறையாமல் அனலென கொதித்து கொண்டிருந்தது.
“எப்படி இவாளால் முடிந்தது,என்னை உருகி உருகி காதலித்தது,என் பின்னால் சுற்றியது எல்லாம் கேவலம் பணத்திற்காககவா?, இன்னொரு பணக்காரன் கிடைத்ததும் என்னை உதறி தள்ள எப்படி முடிந்தது...
“விட மாட்டேன் உன்னை விட மாட்டேன் “,"இந்த கல்யாணம் நடக்க விட மாட்டேன்,உன்னை நிம்மதியாய் இருக்க விடமாட்டேன்" என்று சத்தமாக சொன்னவனின் கார் ஒரு பெரிய சத்தத்துடன் மணல்புகையை கிளப்பிக்கொண்டு ஒரு வட்டம் அடித்து அந்த மண்டபத்தின் வாசலில் நின்றது.
முக்கிய தொழிலதிபரின் கல்யாணம் என்பதால் பத்திரிகையாளர்கள்,டிவி சேனல் என அனைவரும் சூழ்ந்திருக்க காரில் இருந்து கீழே இறங்கினான்.
வெளிர் பச்சை நிற முழுக்கை சட்டையில்,கருப்ப நிற பேண்ட் அணிந்து தன் வலது கையில் உள்ள தங்கத்தால் ஆனா காப்பை மேலே ஏற்றிவிட்டு ,,தன் இரு கை சட்டையையும் முழங்கை வரை ஏற்றிவிட்டு அங்கு உள்ள யாரையும் கண்டுகொள்ளாமல் தன் வேக நடையுடன் உள்ளே சென்றான்.
தன் பெயர்க்கு கொஞ்சம் கூட குறையாமல் முழு ருத்ரமூர்த்தியாக மாறி இருந்தான் நம் நாயகன் ருத்ரன்.
உள்ளே சென்றவனின் பார்வை நேரே சென்றது மனமேடைக்குதான்.அந்த நிலையிலும் தன்னவளின் அழகை ரசித்து மீண்டது அவனின் பிரவுன் நிற கண்கள்.
அவளின் சிரித்த முகத்தை பார்த்தவனின் விழிகள் தன் இயல்பை மாற்றி இரத்தமென சிவந்திருக்க,கண்களில் உள்ள மெலிதான நரம்புகள் சிவப்பு நிற மின்னலாய் மாற,வேகமாக மேடை ஏறினான்.
ருத்ரன் உள்ளே வந்ததுமே பனிநிலவே கவனித்துவிட்டாள்.அவன் அருகே நெருங்க நெருங்க உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே நிதானமாக இருப்பவள் போல காட்டிக்கொண்டாள்.
தாலி கட்டும் நேரம் நெருங்கிவிட்டதால் அனைவரின் கண்களும் மனமேடையையே நோக்கி இருந்தது
பத்தரிக்கையாளர்களின் லேசர் கண்களை தவிர....
எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு சூர்யா தாலி கட்டபோகும் நேரம்
அவர்களை நெருங்கிய ருத்ரன் ,சூர்யாவின் நெஞ்சில் ஓங்கி ஒரு உதை உதைக்கவே தாலி ஒரு பக்கம் அவன் ஒரு பக்கம் விழவே மற்றவர்கள் சுதாரிக்கும் முன்னே தன பாக்கெட்டில் உள்ள தாலியை எடுத்து பனிநிலவின் கழுத்தில் ஒரு துளி காதல் கூட இல்லாமல் கட்டினான்.
அவன் மூன்றாவது முடிச்சு போடும் போது “புப்பா” என்ற தன் செல்ல அழைப்புடன் ஒருவித நிம்மதியுடன் அவன் மார்பிலேயே மயங்கினாள்.
அவள் தலையின் முழு கணமும் தன மார்பின் மீது இருப்பதை உணர்ந்தவன் தாலி கட்டிவிட்டு அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்கவே வாயில் நுரை தள்ளி கண்கள் சொருக மயங்கி இருந்தாள்.

ஆம் அவள் வயலுக்கு வைக்கும் பால்டாயில் மருந்தை மேடைக்கு வரும்முன்னே குடித்துவிட்டாள்..

- உணர்வான்
- மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:

அவள் மயங்கி விழுந்த ஒரு நொடிக்கு மேலே அவன் தாமதிக்கவில்லை.,வேகமாக அருகில் நின்ற பனிநிலவின் தங்கை பிரியாவின் துப்பட்டாவை பனியின் வயிற்றில் இறுக கட்டியவன்

வேகமாக மணப்பெண் அறையின் குளியலறைக்கு சென்று அங்க உள்ள துணி துவைக்கும் சோப்பை எடுத்து நசுக்கவே அது அவன் கை வலிமையில் தூள் தூளாக ஆனது,

அதை அங்கு உள்ள பக்கெட் தண்ணியில் கரைத்தவன் அதை எடுத்துகொண்டு வந்து பனியை தன் நெஞ்சின் மீது போட்டுக்கொண்டு கப்பால் அவள் வாயில் முடிந்த அளவு ஊற்றினான்.

ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவள் அவன் கொடுத்த அதிக சோப்பு தண்ணியின் விளைவாக கண்கள் விரிய வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

குடலில் உள்ள அனைத்தையும் வாந்தி எடுத்தவளை நொடி கூட தாமதிக்காமல் கையில் அள்ளியவன் கூட்டத்தில் உள்ள தன் ஆட்களை நோக்கி

கண்ணை காட்டிக்கொண்டே வேகமாக வெளியில் வந்தவன் தன் காரை நோக்கி நடக்க அவனின் விசுவாசிகள் வேகமாக சென்று காரை ஸ்டார்ட் செய்தார்கள்.

அவனுக்கு தெரியும் எப்படியும் அரைமணிநேரம் முன்னாடியே அவள் விஷம் குடித்திருப்பதால்

அவன் செய்யும் முதல் உதவியை எல்லாம் கடந்த நிலைக்கு அவள் உடல்நிலை சென்று இருக்கும் என்று.

இதை அனைத்தையும் ஊடக கேமராக்கள் அழகாக உள்வாங்கிக்கொள்ள அதனால் இனி ஏற்படும் விளைவுகள் அவனுக்கு தெரிந்தாலும் அதைவிட அவனவளை காப்பதே முக்கியம் என புறப்பட்டுவிட்டான்.

கல்யாணம் நின்றது,இன்னொருவன் தாலி கட்டியது எல்லாவற்றையும் விட பெண் விஷம் அருந்தியதே கல்யாணத்துக்கு வந்தவர்களால் பெரிதாக பேசப்பட்டது.

பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருப்பாங்க என்று சிலர் பேச,பையனுக்கு ஏதும் தீராத வியாதி இருக்கும்போல அதனால தான் பொண்ணு இப்படி பண்ணிகிட்டா என்று சிலர் பேச, ஊரு வாய அரிச்சி உலையில போட்டுகிட்ட இப்படிதான் ஒரு நல்லதும் நடக்காது என்று சிலர் பேச,

என்னதான் பணம் காசு இருந்தாலும் சூர்யாவின் குடும்பம் அனைவர் முன்நிலையிலும் கூனி குறுகி நின்றது.

தான் மறுபடி மறுபடி தோற்று போய்கொண்டிருக்கிறோம் என நினைத்த சூர்யாவின் மனம் கொலைவெறியில் குமறியது,

அவனுக்கு கிடைக்கும் ஒவ்வொரு தோல்வியும்,ஒவ்வொரு சருகலும் அவனின் மனிதத்தன்மையை மறித்து முழு மிருகமாக மாற்றிக்கொண்டிருந்தது.

ப்ரியாவோ பெரிய இடத்து சம்மந்தம் கெட்டுபோய்டே என்று அழுதுக்கொண்டு இருக்கும் தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றாள்.

தன் குடும்பத்தை எண்ணி கோபப்படுவதா இல்லை தன்அக்காவின் நிலையை நினைத்து அழுவதா என்று தெரியாமல்.

பின் சீட்டில் அவளை போட்டுக்கொண்டு அவளின் தலையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு காரை வேகமாக ஓட்டுமாறு கத்திக்கொண்டிருந்தான்.

பனிக்கோ குடித்த விஷம் வேலையை காட்ட ஆரம்பித்தது தொண்டையிலிருந்து அடிவயிறு வரை நெருப்பை பற்ற வைத்தது போல திகு திகு என்று எரிய காரிலேயே உரண்டு பிரண்டாள்,

எங்கு எரியுது என்று அவளால் உணர முடியவில்லை. தன் கைகளால் தொண்டை,நெஞ்சி ,வயிறு, என்று அழுத்திப்பிடித்தவள்,

இறுதியாக தன் இருகைகளால் தன்தலை முடியை இறுக்கி பிடித்துக்கொண்டு கத்த ஆரம்பித்துவிட்டாள்.

பனி ”புப்பா எனக்கு உடம்பெல்லாம் ரொம்ப எரியுது டா,தாங்கமுடியல கொஞ்சம் தண்ணி கொடு டா ப்ளீஸ் என அவன் நெஞ்சில் புதைத்து கேட்க,

அவனால் அவள் படும்பாட்டை பார்க்க முடியவில்லை.

அவளின் உள்பாகங்கள் எல்லாம் விசத்தின் விளைவால் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருப்பதை அவனால் உணரமுடிந்தது.,

இந்த நேரத்தில் கண்டிப்பாக வெறும் தண்ணீர் கொடுக்கவே கூடாது.

சோப்புத்தண்ணீர்,உப்புகரைசல்,புளிகரைசல் எல்லாம் வயிற்றின் உள்ளே சென்றாலும் போன வேகத்திற்கு அரித்துக்கொண்டு வந்துவிடும்.

ஆனால் வெறும் தண்ணீர் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்திவிடுமே,உடம்பில் உள்ள அனைத்து பாகத்திருக்கும் வேகமாக பரவிவிடுமே.

ருத்ரன் “ தண்ணீர் குடிக்க கூடாது டி,கொஞ்சம் பொறுத்துக்கோ ஹாஸ்பிடல் போய்டலாம்,

இதை சொல்லும் போது அவன் குரலில் கோபம்,வேதனை,இயலாமை எல்லாம் சரிவிகிதத்தில் இருந்தது.

பனி “ அத்து பிளீஸ் டா,எனக்கு எரிச்சல் தாங்க முடியல டா,கொஞ்சம் தண்ணி குடிச்ச நல்ல இருக்கும்னு தோணுது டா,”கொஞ்சம் கொடு டா உடல் முழுவதும் கொடுக்கும் எரிச்சலில் அவள் பினாத்திக்கொண்டிருந்தாள்.

ருத்ரன் “ சொன்ன புரிஞ்சிக்கடீ,இன்னும் 5 மின்ட்ஸ்ல ஹாஸ்பிடல் வந்துரும் டி ,தண்ணீர் குடிச்சா மருந்தோட வீரியம் அதிகமாயிடும் என கெஞ்ச,

அவன் சொல்வது எதுவும் அவளுக்கு புரியவில்லை,

பனி “டேய் நான் உனக்காக தான டா விஷம் குடிச்சேன், இப்படி எனக்கு கொஞ்சம் தண்ணீ கூட கொடுக்க மாட்ற.நீ எனக்கு வேண்டாம் போடா,என்றவள் அதுக்கு மேல கத்தமுடியாமல் மயங்கவே,ஹாஸ்பிடலும் வந்தது.

அவளை தூக்கிக்கொண்டு அவனின் ஹாஸ்பிடலுக்கு உள்ளே வந்தவன்,அவன் ஏற்கனவே சொன்னதன் படி எல்லா ஏற்பாட்டுகலுடன் டாக்டர்கள் தயார் நிலையில் இருக்கவே டிரீட்மென்ட் உடனே ஆரம்பிக்கப்பட்டது.

முதல்கட்டம் டாக்டர்கள் பிழைப்பதற்கான வாய்ப்பு கம்மி என்று சொன்னவுடன் முகத்தில எந்தவித சலனமும் இல்லாமல் அங்கு போடபட்ட பெஞ்சில் இருகாலையும் அகட்டி ,இருகைகளையும் முழங்காலின் மேல் வைத்துக்கொண்டு,கைகாலால் தலையை பிடித்துக்கொண்டு அமரந்தவன்

“போய்டுவாளா,என்னை விட்டு செத்து போய்டுவாளா,போகட்டும்,செத்து போகட்டும்

அந்த எமனிடம் போய் சண்டை போட்டு அவளை அழைச்சிட்டு வந்துடமாட்டேன்,என்று இக்கால சத்தியவானாக தன் சாவித்ரியை காப்பாற்ற நினைத்தான்.

மருத்துவமனை வாயிலில் பத்தரிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுவது,தன் தந்தை தன் அருகில் இரண்டுமணி நேரமாய் அமர்ந்திருப்பது,தன் தாய் தன் தலையை வருடிவிட்டு கொண்டு நிற்பது,

பனி நிலவின் குடும்பம் ஒரு ஓரத்தில அழுதுக்கொண்டு நிற்பது, என ஏதும் அவன் உணரவில்லை.அவன் அமர்ந்த நிலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லை ,

ஐந்து மணி நேரப்போரட்டத்துக்கு பிறகு பனிநிலவின் உயிர் காப்பாற்றபட்டது பல சேதாரங்களுக்கு பிறகு..

தான் படைக்க பட்டதற்கான காரணத்தை அவள் உடலில் செவ்வனே செய்து போனது அந்த விஷமருந்து.

அவளின் உள்ளுறுப்புகள் அனைத்தும் முழு புண்ணாகிபோக,அவளின் கர்ப்பபை மட்டும் சிறு சேதாரத்தோடு தப்பித்துவிட்டது.

அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனிடம் சொன்னார்கள் டாக்டர்கள். அவள் 1 வீக் மயக்கத்துலையே இருக்க வைங்க,அவளால வலி தாங்கமுடியாது என்றான்.

டாக்டர் வந்து ருத்ரனிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் அருகில் வந்த பிரியா

“மாமா அக்காக்கு என்ன ஆச்சி என்று அழுதபடி கேட்கவே,அவள் மாமாவில் அவன் கண்களில் சிறு சிரிப்பு தெரிந்தாலும் அதை இதழ்களுக்கு கொண்டுவராமல்,

டாக்டரை நோக்கி கையை நீட்டவே டாக்டர்கள் அவனிடம் சொன்னது அனைத்தையும் அவள் சிறு பெண் என்பதால் சற்று வீரியம் கம்மியாகவே சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டு தன பெற்றோரை நோக்கி சென்றவள் “இந்த சிடு மூஞ்சி மாமவ இந்த அக்கா எப்படிதான் இப்படி உருகி உருகி லவ் பண்ணுதோ” என்று நினைத்துக்கொண்டே சென்றாள்.

தன பெற்றோர்களிடம் இதை பகிர்ந்துகொள்ளவே தன பெண் பிழைத்துதுவிட்டால் என்ற சந்தோஷம் கம்மியாகவும் ,தன் பெண்ணை கல்யாணம் செய்து இருப்பதும் பெரிய தனக்கரன்தான் என்ற சந்தோஷம் அதிகமாகவும் இருந்தது அவர்களிடம்.

அவர்களை இப்பொழுது கிளம்பி இவர்களுடன்(அவனின் பணியாளர்கள்) செல்லுமாறு ருத்ரன் சொன்னதால் பனிநிலவின் குடும்பம் ருத்ரனின் திருச்சி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்ட்டனர்.

அவர்கள் சென்றதும் தன் தந்தை பக்கம் என்ன என்பது போல பார்த்து வைத்தான்.

“பெரியவனே இன்னும் ஒரு 10 நாளுள தேர்தல வச்சிக்கிட்டு இப்படி பண்ணிவச்சிருக்கியே டா” என்க,

“ஓ இதுக்குதான் பத்துநாளா என்னை ஊருக்கு வரவிடமா பெங்களூர்,சென்னைனு வேலை கொடுத்துட்டு இருந்தீங்களோ,

நான் இத்தனை நாள் நான் செஞ்ச நல்லது ஏதும் நியாபகம் இல்லாம , இன்னைக்கு ஒரு நாள் நான் செஞ்சதை வைத்து இந்த மக்கள் எனக்கு ஒட்டு போடாம நான் தோற்று போனேனா எனக்கு ரொம்ப சந்தோஷம் ,ஆனால் என் மக்கள் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு , என்றவன்

ஒரு ரெண்டு நாள் என்னால பிரச்சாரத்துக்கு வரமுடியாது நீங்க கொஞ்ச அட்ஜசேஷ் பண்ணிகோங்க..” என்றான்,

அவன் தந்தை “ருத்.....” என ஆரம்பிக்கவே கையை நீட்டி தடுத்தவன்.

“அப்பா எனக்குன்னு சில “பெர்சினல் ஸ்பேஸ்”, இருக்கு அங்க நான் யாருமே இல்லை,எல்லோரும் மாறி சாதரண வாழ்க்கை வாழ நினைக்கும் மனுஷன்,எல்லாத்தையும் நான் பாத்துகிறேன் ,நீங்க அம்மாவை

கூப்பிட்டுகிட்டு கிளம்புங்க “ என்றான்.

இதற்கு மேல் எதுவும் பேசுவதற்கு இல்லை என்று தன் மனையாளை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

ஒருவாரம் கடந்த நிலையில் மயக்கத்திலிருந்து தெளிந்த பனிநிலவு கண்விழித்தது இறுகியா முகத்துடன் மொபைலை நோண்டி கொண்டிருக்கும் ருத்ரனைதான்.

இந்த ஒருவாரத்தில் இரண்டு நாட்கள் அவள் அருகிலே இருந்தவன்,

மூன்றாம் நாள் முதல்தான் தன் பகுதி மக்களிடம் பிரச்சாரத்திற்கு சென்றான்.அவன் நினைத்தது போலவே அவன் தொகுதி மக்கள் அவனிடம் எந்த முக சுனக்கத்தையும் கட்டாமல் அவனை நன்றாகவே வரவேற்றனர்.

அவன் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றவன் எனக்கு ஒட்டு போடுங்கள் என்று ஒரு வார்த்தை கூட கேட்டது கிடையாது,

பெரிய படைபலம் எதுவும் இல்லாமல் ஓபென் சீப்பில் ஒரு ஐந்து பெயரோடு மட்டும் தான் சொல்லுவான்.

அப்படி செல்லும் போது அந்த பகுதியில் மேம்படுத்த வேண்டிய விசயங்களை மட்டுமே பேசுவான்,

அடிப்படை தேவைகள்,அடிப்படை கல்வி,சுகாதாரம் என்பதை பற்றியே அவனுடைய பேச்சுகள் இருக்கும்.

இதுவரை அவனால் முடிந்த அனைத்து நல்லதையும் செய்துவிட்டான் ,இனியும் செய்வான் அவன் தேர்தலில் தோற்றாலும்,ஜெயித்தாலும் என்ற நம்பிக்கையை அவன் போட்டியிடும் தொகுதி மக்களிடம் ஆழமாக கொடுத்திருந்தான்.

அதனால் பனிநிலவின் விஷயம் அவனின் தனிப்பட்ட விசயமாகவே தெரிந்தது.அவன் செல்லும் ஊரெல்லாம் அவனை கொண்டாடினார்கள் என்றால் அது மிகை இல்லை,

இருப்பினும் பத்திரிக்கையாளர்கள்,டிவி சேனல்கள் எல்லாம் அவர்களின் TRP க்காக அந்த விசயங்களுக்கு பலகோணங்கள் கொடுத்து அவனை விவாத பொருள்கள் ஆக்கி இருந்தனர்.

எதிர்கட்சியில் உள்ளவர்களும் தங்கள் IT டீமை பயன்படுத்தி சமூக வலைதளிங்களில் அவனின் பெயரை நாரடித்துக்கொன்டிருந்தனர்.

வெளியில் இருந்து பார்பவர்கள் எல்லோருக்கும் அவன் கண்டிப்பாக தோற்பது போலதான் தெரியும்.

ஆனால் பிச்சரில் இருப்பவர்களுக்கே உண்மை நிலவரம் தெரியும்.எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு பிரச்சாரமும் இன்றுடன் முடிந்த நிலையில் தான்.பிரச்சாரத்திற்கு செல்லும் போது அணிந்த வேஷ்டி சட்டையோடு வந்திருந்தான்.

வெள்ளை அரைக்கை சட்டையில் ,முன் பட்டன் இரண்டும் திறந்து இருக்க ,எப்பொழும் அவன் சட்டைக்குள் ஒழிந்துகிடக்கும் , ஒற்றை புலிப்பல் வைத்த தங்க செயின் வெளியில் தெரிய கீழுதட்டை பற்களால் கடித்தபடி தன் மொபைலை நொண்டி கொண்டிருந்தவனை நன்றாக சைட் அடித்துக்கொண்டிருந்தாள்.

(வயத்துல டுயூப் போட்டு வெறும் தண்ணியா சாப்பிட்டுகிட்டு இருக்கும்போது உனக்கு இதெல்லாம் தேவையாமா)

ஏதோ உருத்த நிமிர்ந்து பார்த்தவன் அவள் தன்னை பார்ப்பது தெரியவே “என்ன டி,எதுவும் வேணுமா " என்று அவள் அருகில் செல்லவே, அதுவும் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டே,

அவள் ஏதோ சொல்ல வருவதை போல முயற்சி செய்ய அவள் வாயருகோ தன் காதை வைத்தான்.

அவளோ தன் கழுத்தில் அவன் கட்டிய தாலியை இறுக பிடித்துக்கொண்டு “I LOVE YOU அத்து" என்றாள்.

(அட கருமத்த)

இவளை எந்த வகையில் சேர்ப்பது என்பதை போல் அவளை ஒரு பார்வை பார்த்தவன்,மீண்டும் தன் இடத்தில் வந்து இறுக்கமாக அமைந்து கொண்டான்.

உணர்வான்..

மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,

நீங்க எல்லோரும் “உணர்ந்தேன் உன்னாலே “ கதைக்கு கொடுத்த வரவேற்புல நான் ரொம்ப சந்தோசத்துல இருக்கேன்.

என் சந்தோசத்த பகிர்ந்துக்க வார்த்தையே இல்லை,

ஒரே டைம்ல 10 பூஸ்ட் சாப்பிட்ட மாறி தெம்பா இருக்கேன்.உங்களோட சப்போர்ட் மட்டும் எனக்கு தொடர்ந்து கொடுங்க .

அடியவளுக்கு வேற ஏதும் தேவை இல்லை..

அந்த தெம்புல முதல் எபி போட்டுருக்கேன் படிச்சிட்டு ஒரு choo சொல்லுங்க



முன்னோட்டத்துக்கு “choo” சொன்ன எல்லோருக்கும் என் நன்றிகள்..

காதலன் எபியோட நாளைக்கு மாலை வந்து சந்திக்கிறேன்.

எப்படியும் சின்ன எபியா இருக்குன்னு திட்டுவீங்க

அதுக்கு ஒரு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2:

தேர்தல் நாளைக்கு என்று நிலையில் ஆளும் கட்சியின் முக்கியமான உறுப்பினரும், கல்வி மற்றும் மருத்துவ துறை அமைச்சராக இருக்கும் துறை முருகனை நிற்கும் அவர் தொகுதியில் அவரை எதிர்த்து எந்த ஒரு கட்சியின் கூட்டும் இல்லாமல் சுயேச்சையாக நிற்கும் நம் கதாநாயகன் ருத்ரன் தன் மனைவியின் நீள முடியை சீவிக்கொண்டிருந்தான்.

( உனக்கு எவளோ பில்ட்டப் கொடுக்கிறேன் , இப்படி தேவை இல்லாத ஆணியைபுடிங்கிக்கிட்டு இருக்கியே ருத்து குட்டி சோ சேட்)

பனிநிலவின் முடியை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு வரும் ஒரே சந்தேகம் இது நிஜ முடிதானா என்பதுதான்.

ஆம் அவன் காலேஜ் படித்தது சென்னையில் என்றாலும் பிறந்தது முதல் தன் பள்ளி படிப்பு வரை கிராமத்தில் தான்.அவன் முடி அதிகம் உள்ள அதிக பெண்களை பார்த்திருக்கிறான்தான்.

அவையெல்லாம் ஆரம்பத்தில் அடர்த்தியாக ஆரம்பித்து இறுதியில் அடர்த்தி கம்மியாகவே முடியும்.
ஆனால் இவளின் முடி அடியிலிருந்து முனிவரை ஒரே அடர்த்திதான்.அதுவும் அடர் கருப்பு நிற சாரபாம்பை போல அப்படி ஒரு நிறம்...

இவ்வளவிருக்கும் அவள் சாப்பிட்ட விஷம்,அவளுக்கு கொடுக்கும் மருந்துகள் என அவள் முடி பாதிக்கு மேல் கொட்டி இருக்க இப்பொழுதும் கூட அவள் முடியை அவனால் ஒரு கையால் பிடிக்க முடியவில்லை.

அதுவும் அவள் வேலை சுமை அதிகமாக இருக்கும் போது முடியை கொண்டை போடும் அழகே அலாதிதான்.

அதை வெறிக்க வெறிக்க சைட் அடித்ததன் விளைவாய் அதே போல் அவளுக்கு தூக்கி கொண்டை போட்டுவிட்டு

அவள் முகத்தை ஈர துணியால் துடைத்து கொண்டிருந்தான்.

அவள் வயிற்றில் சாப்பாடு கொடுக்க துளை போட்டிருப்பதால் குளிப்பது 3 நாட்களுக்கு ஒருமுறைதான்.
நன்கு துடைத்துவிட்டு சிவப்பு நிற சற்று பெரிய பொட்டை அவள் நெற்றியில் வைத்துவிட்டு நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்துவிட்டு,

அவள் கைவிரல்கலில் சொடுக்கு எடுத்து விட்டு கொண்டிருந்தான்.

இவை எல்லாவற்றையும் அவளால் மெது மெதுவாக செய்ய முடியும்தான்.ஆனால் சொகுசாக தன் புருஷனை வேலை வாங்கிக்கிக்கொண்டிருந்தாள் நம்ம நாயகி.

“ புப்பா கன்னத்துல அரிக்குது கொஞ்சம் சொறிஞ்சி விடு,ட்ரிப்ஸ் போடுறது கையெல்லாம் வலிக்குது என்பாள்,

அவன் செய்து முடிக்க காத்திருப்பவள் போல்,

” புப்பா கையெல்லாம் வலிக்குது கொஞ்சம் அமுக்கிவிடு” என்பாள்.


அது செய்து முடித்ததும் “ அத்து கொஞ்ச தூரம் என்னை நடக்க கூப்பிட்டுகிட்டு போ” என்பாள்.



அவனும் “ சரி டி” வா என்று அவள் ஒரு கையை தன் இடுப்பில் படரவிட்டு தன் வலது கையால் அவள் தோளை அணைத்த மாறி பிடித்துக்கொண்டு மருத்துவமனை வராண்டாவில் நடக்க அழைத்து செல்வான்.

அவன் வார்த்தையில் இருக்கும் உரிமை அவன் முகத்தில் கிஞ்சத்திற்கும் இருக்காது...

அவன் செயல்களில் “நீ என்ன சொன்னாலும் நான் செய்கிறேன்” என்ற பதில் தான் இருக்கும்.

அதற்கெல்லாம் அசறுபவளா நம் பனிநிலவு அவள் ஆயிரம் யானைகளை கொண்டு வந்து நெஞ்சின் மீது நிற்க வைத்தாலும் அசையாத அழுத்தம் பிடித்தவள்...
தான் தன் குடும்பத்தால் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தும் அதை துளி கூட தன் செயலில்,வார்த்தையில் காட்டாமல் தன் 18 வயதிலிருந்து தன் குடும்பத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறவள்,
குறையாத அழகும் நிறைவான அறிவும் அதையும் தாண்டி வெளி நாட்டில் சில வருடங்கள் வேலை செய்தாலும் ஒழுக்கத்தை உயர்வாக நினைப்பவள்.

தனக்கானவர்களுக்காக எதையும் செய்வாள்.அதற்காக அவள் செய்யும் செயல் அவர்களிடம் கெட்ட பெயரை வாங்கி கொடுக்கும் நிலை வந்தாலும் அதிலிருந்து ஒரு பொழுதும் பின் வாங்கமாட்டாள்.
பணக்கார பயனுக்கு ஏழை பெண்கள் மேல் காதல் வரலாம், ஆனால் வசதி குறைந்த பெண்களுக்கு பணக்கார பையன்களிடம் காதல் வந்தால் அது பணத்திற்காக தான் வரும் என்பவர்களிடம்

பணத்திற்கும் காதலுக்கும் என்ன சம்மந்தம் என்று தன் காதலை ருத்ரனிடம் உரக்க சொல்லி ஒரு மாதம் முன் வரை இது வரை கேட்காத வார்தைகளிலெல்லாம் பச்சை பச்சையாக அவனிடம் வசை வாங்கியவள்,

( அது மட்டுமா டியர்ஸ் அது இன்னும் ஹெவி வேலையெல்லாம் பண்ணிருக்கு போக போக சொல்றேன்)


அவள் சூர்யாவுடனான கல்யாணத்துக்கு சம்மதித்தது தன் அத்துவிற்காக,

அவள் விஷம் குடித்ததும் தன் அத்துவிற்காக.....
வாழ்க்கைக்கு பயந்து அவள் விஷம் குடிக்கவில்லை தன்னவனை தவிர யாருடன் வாழ்ந்ததாலும் அது அழுகிய பிண வாழ்வே என்று தெரிந்து முழு விருப்பத்தோடு மரணத்தை ஏற்றுக்கொண்டவள்.

இப்பொழுது கூட உடல் முழுதும் வெந்து போயிருக்க தாங்க முடியாத ரனம் இருந்தாலும் தன் அத்துவின் கையால் தாலி வாங்கி முழு நிறைவுடன் அவன் கைவளைவில் நடந்து கொண்டிருக்கிறாள்.

சூர்யாவுடனான கல்யாணம் முடிந்து தான் இப்படி காப்பற்றப்பட்டாலும் சுயநினைவு வந்த அடுத்து நொடி தன்னை அழித்துக்கொண்டிருப்பாள்.

“சொல் செய்கிறேன்” என்ற மனநிலமையோடு வந்தவனோடு ஒரு சின்ன சிரிப்புடன் “ அத்து இங்க ஒரு முத்தம் கொடு” என்று தான் இதழ்களை காட்ட

அவனும் கட்டளைக்கு உடன் பட்டவன் போல் வேகமாக அவள் இதழ்களில் இதழ் பதித்தான்.


(நந்தாம்மா பனிநிலவு நீ கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்க மறுபடி விஷத்தை கொடுத்து படுக்க போட்டுருவேன் பாத்துக்க...)

முதல் முத்தம் அழுத்திய நொடி அவன் செல்கள் பூ பூக்க அவள் இதழில் தன் இதழை அழுத்தமாக பதித்து மட்டும் கொண்டான்.

அவளும் இளக்கமாக நிற்க அதன் பிறகே அவளின் வேலையை அவன் மூளை உணர்ந்து அவளை விட்டு விலகி நின்று “ நீ ரொம்ப ஓவர பண்ற டி” என்றான்.


அவன் சொல்வதெல்லாம் அசட்டை செய்யாமல் அவன் முத்தத்தை நிறுத்தியதில் காண்டாகியவள்

“ என்னால திரும்பியெல்லாம் நடக்க முடியாது புப்பா, என்னை தூக்கிகிட்டு போய் பெட்ல விடு” என்றாள்.

“இவளுக்கு இருக்க கொழுப்பு” என்று நினைத்தவன் அவளை தூக்கிக்கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

தங்கள் முதலாளி கண்ணசைவில் கட்டளை பிறப்பிப்பவன், நடையிலும் பேச்சிலும் வேகமும் அதே சமயம் நிதானமும் அதிகம் உள்ளவன்.

தன் தந்தையின் சொத்தை பலமடங்காக்கி அத்தனையும் நேர்மையான முறையில் இன்று உயர்ந்த நிலையில் இருப்பவன் ,

ஏதுவாக இருந்தாலும் என் நாட்டு மக்களுக்கு போக மீதி இருந்தால் மட்டுமே அடுத்த நாட்டிற்கு என்று கொள்கை உடையவன்.

அவனின் டையிரி கம்பெனியில் ஆரம்பித்து அவனின் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் அங்கே தயாரிக்க படும் A1 பொருள்கள் அனைத்தும் இந்தியாவிற்கு மட்டுமே அதன் பின்னே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

அது மட்டும் இல்லாமல் சென்னைக்கு நிகரான அனைத்து வசதிகளையும் கொண்ட பெரிய மருத்துவமனை ஒன்றை திருச்சியில் அமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் கொடுப்பவன்,

இருப்பவர்களிடம் வாங்கிக்கொண்டு இல்லாதவர்களுக்கு கொடுக்கும்” ராபின் உட்”டாக வாழ்பவன்.

கண்டிப்பாக அந்த ராபின் உட்டை போல் கொள்ளை அடித்து மட்டும் இல்லை.



மேலும் அவன் கிராமத்திற்கு அருகிலேயே CBSE பாடத்திட்டத்தோடு ஒன்றாம் வகுப்பில் ஆரம்பித்து பால் டேக்னிக்,பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என அனைத்தையும் ஒரே இடத்தில் கட்டி குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்குபவன்,

மருத்துவ கல்லூரியும் அமைக்க போராட்டிக்கொண்டிருப்பவன்..
இதில் இவனின் உழைப்பு மட்டுமே என்று சொல்ல முடியாது...

பணம் தருகிறோம் வேறு உதவி செய்ய முடியாது என்பவர்களும், இடம் தருகிறோம் வேறு எந்த உதவியும் செய்ய முடியாதுஎன்பவர்களும்,


உடல் உழைப்பை தருகிறோம் வேறு ஏதும் முடியாது என்பவர்களும், இலவசமாக பாடம் எடுக்கிறோம் ,மருத்துவம் செய்கிறோம், மருந்து தருகிறோம், பாடபுத்தங்கம் தருகிறோம் என்று கை நிறைய உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கும் சரிபாதி பங்கு உள்ளது.

அதை அவன் அனைத்து இடங்களிலும் அடிக்கோடிட்டும் காண்பித்தும் விடுவான்...


அவனின் வரலாற்றில் தப்பிற்கு தண்டனை மட்டுமே அதுவும் தப்பு செய்த்தவர்கள் திருந்துவதாக மட்டுமே இருக்கும்,

அந்த தண்டனையால் தப்பு செய்தவர்களின் குடும்பத்திற்க்கோ , அவர்களை சார்ந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் கண்டிப்பாக இருக்காது..

பெண்களை தங்கள் அருகிலேயே சேர்க்காதவன்.

(அப்படியா நம்ம முடியலேயே...கதை முடியும் போது தெரியும் தம்பி பாப்போம்)

பெண்களின் மீது அதிக மரியாதை வைத்திருப்பவன் , தாசிப்பெண் என்றாலும் அவர்களின் இந்த நிலைமைக்கு நியாயமான காரணம் இருக்கும் என்று முழுமையாக நம்புவன்.

அனைத்து அழகிகளும் தன் பின்னே சுற்றி சுற்றி வந்தாலும் சின்ன சிரிப்புடன் அனவைரயும் கடந்து வந்துவிடுபவன்.



அப்படியாபத்த தங்கள் முதலாளி தன்னிடம் BA வாக வேலை செய்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு இப்படி 10 நாட்களாக அவளின் அருகிலேயே தேவுடு காப்பது அதிசயமே


அவன் கைகளில் அழுங்காமல் குழுங்காமல் வருபவள் “ அத்து எலக்சன் வேலையெல்லாம் என்ன ஆச்சு டா” என்றாள்.

அவளை ஒரு முறை முறைத்தவன் “ புருஷன்ற மரியாதையும் இல்லை முன்னாள் முதலாளின்ற மரியாதையும் இல்லை, இன்னொரு ஒரு தடை டா சொன்ன இப்படியே கிழே போட்டுருவேன்“ என்றான்.


கீழே போட்ட உனக்கு தான் தம்பி நஷ்டம்...இப்பயவாது அப்ப அப்ப தூக்க சொல்றேன், அப்பறம் எப்போதுமே தூக்க சொல்லுவேன் பாத்துக்க....

நீ நாளைக்கே இந்த நாட்டுக்கே CM ஆனாலும் நான் இப்படித்தான் கேட்பேன் டா”


( ஏன் பனி உடம்பு முடியத்தப்பயே எங்க “ருத்து”வ இந்த பாடு படுத்துரியே, அதுக்கு முன்ன என்ன பாடு படுத்திருப்ப)


என்றவள் கேட்ட கேள்விக்கு பதில் என்பதை போல் அவளை பார்த்தும் வைத்தாள்.


அவனாள் இவளிடம் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது தன் கோபத்திற்கு இவளிடம் மட்டுமே எப்பொழுதும் பதில் இல்லாமல் போய் விடுகிறது...

அப்படியே கை நீட்டும் அளவில் எதுவும் செய்து விட்டாலும் ஒரு வாரத்திற்கு பேசியே சாகடித்துவிடுவாள்.

என்று யோசித்தவன் அவளிடம் நடந்ததை சொல்லிக்கொண்டிருந்தான்.

அவனின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு அளிக்கப்பட்டு இருந்தது .

அந்த மனுவில் தன் தொகுதிக்கு வாக்கெடுப்பு, வாக்கு சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் இல்லை இயந்திரத்தில் தான் எடுக்க வேண்டும் என்றால் கீழ் கண்ட முறையில் அந்த இயந்திரம் அனைவர் முன்னிலையிலும் சோதனைக்கு உள்ளாக்கப்படவேண்டும் என்றும்

அப்படி நடத்தாவிட்டால் நாங்கள் அனைவரும் எங்கள் குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு தேர்தலை புறக்கணிப்போம் என்று

அவன் போட்டியிடும் நாகப்பட்டினத்தின் 90% சதவிகித மக்களால் சுயமாக கையெழுத்து இடப்பட்டு, அவர்களின் அடையாள அட்டைகள் இணைக்கப்பட்டு சமர்பிக்கப்பட்டு இருந்தது.

மற்ற தொகுதி மக்கள் யாவும் அதை செய்யவில்லை பாவம் அவர்களுக்கு கிடைக்கும் நிரந்தர தீர்வை விட எந்த உழைப்பும் இல்லாமல் ஒரே நாளில் வீட்டுக்கு ஐம்பதாயிரம் கிடைப்பது பெரிதென பட

அந்த பணத்தை விட பலநூறு மடங்கு சக்தியுள்ள தங்கள் ஓட்டை விற்று அந்த பணத்தை LED டிவி களாகவும், பைக்குகளாகவும், பிற ஆடம்பர பொருட்களாக மாற்றிக்கொண்டிருக்க

ருத்ரனின் ஊர் மக்கள் மட்டும் தங்கள் பவரை சரியாக பயன்படுத்தி உண்மையான உரிமையையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் உணர்ந்து செயல்பட்டு இருந்தனர்.
ஆளும் கட்சியிடம் லம்பாபா ஆட்டையை போட்ட தேர்தல் அதிகாரிகளும் , ஆளும் கட்சியும் விழி பிதுங்கி நிற்க மற்ற பகுதி மக்களுக்கும் இதற்கான நியாயம் பரவுவதற்குள் இதற்கு ஒத்துக்கொண்டனர்.

அதன் படி அனைத்து கட்சி போட்டியாளர்கள், உயர் நீதிமன்ற நீதிபதி ,தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் ஊரின் முக்கிய மக்கள் என அனைவரும் திரண்டு இருக்க அந்த அந்த வாக்கு சாவடிகளில் உள்ள இயந்திரங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன

அதன் படி எல்லா கட்சியின் சின்னங்களுக்கும் 50து 50து நபர்களால் பகிரங்கமாக அனைவர் முன்னிலையிலும் வாக்களிக்கப்பட்டுஅதில் உள்ள குளறுபடிகள் களையபட்டு இயந்திரங்கள் அந்த ஊர் மெய்க்காவலர்களால் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை பாதுகாக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
ருத்ரனின் ஊர் மக்களால் ஒரு வாக்காளரின் நேர்மையான கடமை நிறைவேற்ற பட்டது.
அதோடு மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளின் முதற் எதிரி ஆகிப்போனான் ருத்ரன்.


இவை எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே அவளை பெட்டில் இறக்கிவிட்டவனை “ அத்துனா அத்துக்குட்டிதான் “ என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினாள் பனி.
அதில் ருத்ரனும் கொஞ்சம் சிரிக்க அவள் குஷியாகி அவன் காதை கடித்து வைத்துவிட்டாள்.
( என்னம்மா இந்த பொம்பளை புள்ளைகலாம் இப்படி பண்றீங்களேமா,,,)
“ புப்பா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வயித்துலயே சாப்பாடு கொடுகப்போறாங்க...

(ம்ம்ம் உன் வாய நீ கொறைக்குற வரைக்கும், புள்ளைய பெக்கா சொன்ன 50 கிலோ தொல்லையை பெத்து வச்சிக்கிட்டு)

எனக்கு மருந்தெல்லாம் கொடுத்து கொடுத்து வாயெல்லாம் ஒரு மாறி இருக்கு , குடிச்ச விசத்தோட நெடி வேற வந்துகிட்டே இருக்கு, நீ முத்தம் கொடுக்கும் போது நல்ல இருந்தது...நான் கேட்டாலும் இனி நீ கொடுக்க மாட்ட

( அட கோப்புறானே கொப்பந்தன்னானே...நானும் பாக்குறேன்)

அதானால எனக்கு ஒரு ஜூஸாவது குடிக்கணும் டாக்டர்ட கேளு” என்றாள்.

அவள் சொல்வதை கவலையாக கேட்டுக்கொண்டிருந்தவன் அவள் சொன்ன முத்தத்தில் “ இவலையெல்லாம் திருத்தவே முடியாது” என்று கோபம் வருவதற்கு பதில் சிரிப்பு வர அவள் அருகில் சென்றவன்

அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து” ஈவ்னிங் வர பொறுத்துக்கோ நான் டாக்டர்ட்ட கேட்கிறேன்” என்றவன்.
வெளியில் சென்று ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்றவன் 2 மணி நேரத்திற்கு பிறகு வந்தான்

வந்தவன் “ நர்ஸ் , டாக்டர் என புடை சூழ்ந்து தன் மனையாளை தடுப்பதை கண்டான்.
“நான் போகணும்” என்றவளிடம் “ சார் வந்தா எங்களை திட்டுவாங்க மேடம் பிளீஸ் “ என்று டாக்டர் கெஞ்சி கொண்டிருக்க

அவன் வந்தால் என்னை செல்ல அனுமதிக்க மாட்டானே அவன் வருவதற்க்குள் தான் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வழுக்க வேகமாக எழுந்தவள்” நீங்க ஏதாவது சொல்லிகோங்க நான் போறேன்” என்று வாசலை நோக்கி வந்தாள்
சத்தமாக பேசியதாலும் ,வேகமாக எழுந்தாலும் அவள் உள்ளுறுப்புகள் எரிய “ஸ்ஸ்....” என்று சத்தத்துடன் அறைக்கதவை ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஒருகையால் தொண்டையிலிருந்து அடிவயிறு வரை வேகமாக கையை அலைய விட்டாள்.
அவளின் அருகே வேகமாக வந்த ருத்ரன் “ அவளை கை வளைவில் தாங்கியபடி “ எங்கே போகணும் “ என்று அவள் கண்களை பார்த்து அழுத்தமாக கேட்டான்.
அவளும் குறையாத அழுத்தத்துடன் “ எங்கேயோ போகணும் , இங்க ,உன்கிட்ட ,உன்னோடு இருக்க முடியாது” என்றாள்.

“தான் செல்லும் வரை நல்லா தானா இருந்தாள் அதுக்குள்ள என்ன ஆனது” என்று யோசித்தவனின் கைகள் அவளிடமிருந்து சிறிதும் விலகவில்லை

உறுதியான அதே சமயம் அவள் உடம்பிற்கு வலிக்காத மென்மையுடன் பிடித்து இருந்தான்.

- உணர்வான்.
மிளாணி
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ் உணர்ந்தேன் உன்னாலே நெக்ஸ்ட் எபி போட்டுட்டேன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு ஒரு “choo” சொல்லிட்டு போங்க..

கடைசி எபிக்கு choo சொன்ன எல்லோருக்கும் என் நன்றிகள்..

அப்பறம் நம்ம காதநாயகியோட பெயர் பனிநிலவு சில தோழிகள் கமெண்ட்ஸ்ல பனிமலர்னு சொல்லிருக்கீங்க அதான் சொல்லாம்ன்னு

நாளைக்கு காதலன் எபியோட வந்து சந்திக்கிறேன்..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ந்தேன் உன்னாலே 3:

13614



எங்கயோ போகணும் , இங்க உன்கிட்ட உன்னோட இருக்க முடியாது “ என்று பனிநிலவு சொன்னதை கேட்டவனுக்கு கட்டுக்கு அடங்காத கோபம் வந்தாலும் அதை அவளிடம் காட்ட முடியாமல் அவள் உடல்நிலை தடுக்கவே என்னவாயிற்று இவளுக்கு என யோசனையாக நின்றான்…


அவனுக்கு எங்கே தெரியும் அவனின் தொழில் எதிரி, சூர்யா எதை காட்டி, எதை சொல்லி, பனியை கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்தானே அதையே இன்றும் மருத்துவ மனையில் வந்து சொல்லி,காட்டி அவளை பீதியாக்கி சென்றதை..


ருத்ரனின் கைகள் மென்மையாக அவளை பற்றி இருந்தாலும் அவளால் அடி கூட நகர முடியவில்லை, பற்கலை நர நரவென்று கடிக்கவே அதன் அழுத்தத்தில் வயிறு வலிக்க “ தடி மாட்டு பயலே கையை விடுடா ,நான் போகணும்,நீ யார் என்னை தடுக்க, என ஒட்டு மொத்த ஸ்டாப்களையும் வைத்துக்கொண்டு அவனை பார்த்து கத்த..


அவளை ஒரு முறை முறைத்தவன் அங்கு உள்ளவர்களை பார்த்து கண் அசைக்க அவர்கள் எல்லாம் வெளியே செல்ல அந்த விஐபி அறை காலி ஆனது..

வலியால் முகம் சுருங்கி , வந்துவிட்டானே என கோபத்துடன் நின்றவளை மெதுவாக அங்கே உள்ள சோபாவில் அமர வைத்தவன் அவளை நோக்கி அழுத்தமான குரலில் “ உன் இஷ்ட கூந்தலுக்கு பண்றதுக்கு நீ ஒன்னும் மோகனோட இரண்டாவது பொண்டாட்டிக்கு பொறந்த பொண்ணு இல்லை ,சற்று இடைவெளி விட்டவன் பொண்டாட்டிக்கு பொறந்த பொண்ணுதானே இல்லை என்று சற்று இளக்காரத்தை தெளித்தவன்

பின் “ இப்ப நீ ருத்ரன் , ருத்தரனோட பொண்டாட்டி , என் அனுமதி இல்லாமல் நீ உன் விரல் நகத்தை கூட அசைக்க முடியாது புரிஞ்சதா,புரியலனா கழுத்துல தொங்குற தாலியை கேளு அது சொல்லும்” என்க..

( ஆமா அந்த திமிர் பிடிச்சவள்ட கழட்டி எரியுறதுக்கு எதுவா கழுத்துல தாலியை பாரு கையில வளையலை பாருன்னு சொல்லு மட்டி)

தன் அம்மாவை பற்றி தவறாக பேசுபவன் மேல் கோபம் வந்தாலும் அவளின் ருத்துவை தவறாக என்ன முடியாமல் மேலும் நாளைக்கு தேர்தல் என்ற நிலையில் அந்த கடன்காரன் சூர்யா சொல்லி சொன்ற செய்தியின் வீரியம் அதிகமாய் இருக்க இப்பொழுது இவனைவிட்டு புரிவதே சரி என்று தோன்ற..


“பொண்டாட்டியா ,என சத்தமாக சிரித்தவள் “எனக்கு வலுக்கட்டாயமா தாலி கட்டி இருக்கீங்க ருத்ரன் , நான் இன்னொருதனை கல்யாணம் பண்ணிக்க போறதை தடுத்து, சட்டப்படி இந்த கல்யாணமே செல்லாது..இதில் பொண்டாடியா பொண்டாட்டி” என்றவள் வேகமாக அந்த தாலியை கழட்ட செல்ல அதைவிட வேகமாக அவள் கழுத்தில் தாலியை அழுத்திபிடித்தவன்


“ இந்த தாலி எப்ப உன் கழுத்துலேந்து கழட்றியோ அப்ப உன் தலையும் உன் உடம்புலேந்து கழண்ட்டுரும் mind it , எனக்கு கொலை செய்றதுல்லாம் சதரணம்ன்னு உனக்கே தெரியும் என கோபமாக சொல்ல ..

அப்படியாவது எனக்கு விமோட்சணம் கொடு என்று மனத்துக்குள் சொல்லி கொண்டவள் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு “ எனக்கு உன்னை பிடிக்கல, என்னை கட்டாயபடுத்தி ஏன் இருக்க வைக்கிற , நான் போலீஸ்கிட்ட போவேன்..என சொல்ல ருத்ரனுக்கு வாய் கொள்ளாத சிரிப்பு இருந்தாலும் அடக்கி கொண்டு அவளை முறைத்து நின்றான்..


பின்னே சுற்றி உள்ள நான்கு மாவட்டங்களிலும் உள்ள காவலர்கள் ருத்ரனை கண்டால் எழுந்து நின்று மரியாதை கொடுப்பார்கள் ,அந்த அளவுக்கு மரியாதை ஆனவன்…இவனை பற்றி கம்பிளைண்ட் செய்தால் கொடுப்பவருக்குதான் நிச்சயம் லாடம்…


“ஏன் ஒரு வாரமா என்னை ஒரசிகிட்டு நல்லாதானே இருந்த இந்த 2 மணி நேரத்துல வேற எந்த பணக்காரனும் கிடைச்சிட்டானா என்னை விட அதிகமா பணம் உள்ளவன் எவனும் “ என யோசிப்பது போல வார்த்தையில் விஷம் தெளிக்க ..


( உரசிகிட்டு மட்டுமா இருந்தா, அத்து முத்தும் கொடு,அத்து சொரிந்து விடு, அத்து பல்லு விலக்கிவிடுன்னு நல்லா கேளு குட்டி நீ)


அந்த பாதிப்பு அவளுக்கு ஏதும் இல்லை போலும்.அவள் மனதுக்குள் அவனை வருத்துக்கொண்டு இருந்தாள் ” அப்படியே ஒரசவிட்டுட்டாலும் ஒரு முத்தம் வாங்கவே ஒரு நாள் பிளான் பண்ண வேண்டியதா இருக்கு “ என கவுண்டர் கொடுத்துக்கொண்டு..
அவனை நோக்கி “ஆமா இன்னொருத்தன் கிடைச்சி இருக்கான் உன்னை விட எல்லாத்துலையும் பெஸ்ட்டா “ என்றாள்..


பனி அப்படித்தான் அவள் காரியம் ஆகவேண்டும் என்றால் அவள் நிலை எப்படி தாழ்ந்தாலும் அதை பற்றி கருத்தில் கொள்ளாமல் கொக்குக்கு இரை ஒன்றே மதி என்பது போல எதிரில் உள்ளவர்களை சுழற்றி அடிப்பாள், அதுவும் ருத்ரனுக்கு என்னும் போது இன்னும் கொஞ்சம் அதிகம் ..


இந்த விஷயத்தை அவனிடம் சொன்னால் ஒரு நிமிடத்தில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவான். ஏன் அவளே பிரச்சனையில் இருந்து கொஞ்சம் வெளியில் இருந்து யோசித்தால் சரியான தீர்வை கண்டுகொள்வாள்..பாவம் காதல் கொண்ட மனம் எதையும் நினைக்க முடியாமல் அவனின் மானம் காப்பதாய் நினைத்து ஆகாயத்திற்கு தன் மாராப்பு கொண்டு பாதுகாப்பு வழங்க நினைப்பது வேடிக்கைதான்..

எவ்வளவு பெரிய மனப்பக்குவம் உள்ளவள் தன் தாய்க்கு தகாத முறையில் பிறந்தோம் என ஊர் தூற்றினாலும் ஒரு போதும் சட்டை செய்யாதவள்,

பணத்துக்காக ருத்ரன் பின்னாடி போன இப்ப இன்னொரு பணக்காரன் வந்தோனா அவனை கல்யாணம் பண்ணிக்க நிக்கிற என காது பட பேசினாலும் “ஆஹாம்” என வடிவேலு பாணியில் கடந்து செல்பவள் இதோ இந்த பொல்லாத காதலில் திசை தெரியாமல் நிற்கிறாள்..




அவளின் பெரிய பெரிய மனபக்குவம் எல்லாம் பிரியமான அவனின் முன் மண்ணாகாட்டி ஆகிவிடுகிறது...,

இவள் எத்தனை தூரம் சென்றாலும், எத்தனை கரடுமுரடான பாதையை கடந்து வந்தாலும்,காது கிழிய அடுத்தவர்களிடம் விஞ்ஞானம் பேசினாலும்.அவனுக்கு முன் நாய்குட்டியென வாலாட்டாவே பிரியப்படுகிறது இந்த பொல்லாத உள்ளம்...

"அச்" என்று தும்மினால் உயிர் போகாதுதான் இருந்தும் " அச்சோ என்டி நீ" என சொல்லி புரடியில் ஈரம் தொடைக்கும் அவனின் பேரின்ப நேசத்தை எதிர்பார்த்து தொப்பல் தலையுடன் அலுவலகம் சென்ற நாட்கள்தான் எத்தனை..


( அது கடைசி வரை நடக்கலா அது வேற விஷயம்)

வலிக்காத காயம் என்றாலும் அவனிடம் காட்டினால் " ஒன்னும் இல்ல செல்லம் " என நெஞ்சோடு அணைக்க அன்றாடம் அவள் செய்த விழுப்புண்கள் தான் எத்தனை அது நடக்கவில்லை என்றால் தாய் பாசம் இல்லாத குழந்தை என உதடு பிதிங்கியே அழுகி கரைந்து போகும் அவள் இதயம்...

அவன் சொன்னால் காக்காவால் பேச முடியும், வாடாமல்லிக்கு அப்படி ஒரு வாசமுண்டு,அம்மாவாசையில் கூட நிலா தெரியும் என்பதுதான் அவளின் அகராதியின் அச்சு பிசாரத அர்த்தங்கள்..அவனிடம் அவள் விழுந்து கிடப்பதெல்லாம் பேரின்பம் , பெரும் போதை, சொல்ல முடியா உவகை... நரகத்தில் கிடைக்கும் சிறு சொர்க்கம்.சொர்க்கத்தில் கிடைக்கும் பெரும் நரகம்.. முரணுக்கெல்லாம் முதல் நிலைஇங்கான்றும் அவள் மாட்டிக்கொண்டு திரியும் மனப்பக்குவ பலகை எல்லாம் மற்றவருக்கு மட்டுமே..



இதையெல்லாம் யோசித்து அவள் வார்த்தையை கொஞ்சம் அதிகமாகவிட அந்த வார்த்தையின் வீரியத்தில் “என்னடி சொன்ன” அவளின் கழுத்தை இறுக்கி பிடிக்க

கதவின் புறம் இருந்து “ சார்”…”ருத்ரன்”என இரு வேறு குரல்கள் திரும்பி பார்த்தவன் இன்னும் அழுத்து போனான் “ஏற்கனவே இவள் ஆடோ ஆடுன்னு ஆடுற இதுல சலங்கை கட்ட வேற இவனுங்க வந்துட்டானுவ “ என நொந்து போய் அவளுக்கு அருகே தொப்பென்று அமர்ந்தான்..

வந்து இருப்பது ஒருவன் பெருமாள் ,ருத்ரனின் கல்லூரி நிறுவனத்தில் அக்கவவுண்ட் டிப்பார்ட்மென்டில் வேலை பார்ப்பவன் வயது 38 ஆனால் பார்ப்பதற்கு நன்கு வயசான தோற்றம்,தொப்பையும் தொந்தியுமாக இருப்பான்


அதற்கு முழு காரணம் நம் பனிநிலவு என்றால் மிகை இல்லை அவனை இழுத்து கொண்டு சாட் ஐடெம்மில் ஆரம்பித்து கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள அனைத்து தீனிகளையும் வாங்கி தின்பது.. இந்த பாம்பு உடம்புகாரிக்கு அது எதும் ஆகது அவனுக்கு பொது பொது என்று உடம்பு போட்டுவிடும்


இப்பொழுது இரு வருடம் முன்புதான் கல்யாணம் ஆகி ஒரு ஆண்குழந்தை இருக்கிறது, பனிநிலவின் கிரைம் பார்ட்னர் , எல்லா வேலைக்கும் அவனைத்தான் கூப்பிட்டு கொண்டு சுற்றுவாள், அவனும் வயது வித்தியாசம் பார்க்காமல் தங்கச்சி தங்கச்சி என அவளை கூட்டி கொண்டு சுற்றுவான்..ட்ரெஸ் எடுப்பதில் ஆரம்பித்து அதை தைத்து வாங்கி கொண்டு வருவது வரை அனைத்தும் அவனுடன்தான்..கூட பிறக்காத குறைதான் அவ்வளவு செல்லம் கொஞ்சுவான் பனியை பெருமாள், ருத்ரனால் பனியின் அனுமன் என்று அழைக்கபடுபவன்..

மற்றும் ஒருவன் பனிநிலவின் பெரியப்பா தங்கராஜ் அவளின் மேல் கொள்ளை பிரியம் வைத்து இருப்பவர், தன் தம்பி செய்த தவறில் முளைத்த செந்தமரையாய் அவளை பார்ப்பவர் , இன்னும் சொல்ல போனால் அவளின் படிப்பு முழுவதும் அவர் கொடுத்ததே, அந்த நன்றியோடு சேர்த்து பாசமும் அவரின் மேல் அதிகம் பனிநிலவுக்கு..
ருத்ரனால் பனி நிலவின் ஜிங் ஜாங் என அழைக்கப்படும் நடுத்தர விவசாயி


அவள் வாழ்வில் உயிர்ப்புடன் இருக்க உதவி செய்யும் மூன்று ஆண்களும் இவர்கள்தான்..அதை இல்லாமல் அவளின் குட்டி தங்கை..இவர்கள் நால்வர்தான் இவளின் உயிர்ப்பான உலகம்..

அவர்களை பார்த்ததும் கோப மூடெல்லாம் மாறி கொஞ்சல் மூடுக்கு மாறி “ பெரு குட்டி என்ன கொலை பண்ண பாக்குறான் இவன்” என ருத்துவை கை காட்ட பெருமாளுக்கு எல்லா விஷயமும் ஓரளவு தெரியும் என்பதால் “ கொலை பண்ற அளவு நீ என்ன பண்ண “என பாயிண்டை பிடிக்க..முகத்தை சுருக்கி கொண்டு கோபமாக தலையை குனிந்து கொண்டாள்..


இவனிடம் இருந்து தப்பிக்கும் மார்க்கமே இல்லையா, இன்று இப்படி இவளோ செய்பவன் அன்று பார்த்து கொஞ்சம் சூதானமாக இருந்து இருந்தால் இன்று இப்படி நான் புலம்பி நின்று இருக்கமாட்டேனே “ என உள்ளே புழுங்கி நின்றாள்..

( …ம்ம்ம்..உன் செய்தி..தான்…தெரியுமே இந்நேரம் பர்ஸ்ட் நைட்ட முடிச்சு அவனை கர்ப்பம் ஆக்கி இருப்ப)

அவளின் பெரியப்பாவோ “அவள் என்ன பண்ணி இருந்தாலும் உடம்பு முடியாத புள்ளைய கழுத்த நெறிக்குறது தப்புன்னு உன் முதலாளிகிட்ட சொல்லு என்றவர் “ ஏண்டா கண்ணு அப்பா இல்லாம கல்யாணம் பண்ற அளவு பெரிய மனுஷி ஆகிட்டியா “ என கண்ணீருடன் கேட்க

“ நீங்க இருந்தா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டீங்களே பெரியப்பா “ என நினைத்தவள் வாயை திறந்து ஏதும் சொல்லவில்லை..பெருமாள் கோபத்தோடு “ அப்ப பிளான் பண்ணிதான் எல்லாம் பண்ற , என்னையும் இதுக்குத்தான் 1 மாதம் குடும்பத்தோட மாமியார் வீட்டுக்கு அனுப்புனியா “என்க..


“ஆமா ,ஆமா நீங்க யாரும் இருந்தா எனக்கு சூர்யாவ கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கமாட்டீங்க ,எனக்கு அவனைத்தான் புடிச்சி இருக்கு இவனை பிடிக்கல” என சொல்ல வந்தவள் ருத்ரனின் கோப பார்வையில் பின் செய்தியை அப்படியே விழுங்கிவிட்டு…வேகமாக சென்று யாரையும் பார்க்காமல் கட்டிலில் படுத்துகொண்டாள்..


பின் பெருமாளும் அவளின் பெரியப்பாவும் ஏதோ அவனிடம் பேச “இப்ப நான் பேசுற மனநிலையில இல்லை பிளீஸ்” என வாசலை நோக்கி கை காட்ட ,பெருமாள் பனியின் மீது உள்ள கோபத்திலும் , தங்கராசு ருத்ரனின் மேல் உள்ள கோபத்திலும் வெளியே சென்றனர்..


அடுத்த ஒரு மணி நேரத்தில் இவ்வளவு நேரம் பேசியது, மருந்தின் வீரியம் என பனிநிலவு ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல மெல்ல அவள் அருகே சென்று அவள் வலது கையை எடுத்து ட் கன்னத்தில் புதைத்து கொண்டான் அந்த கத கதப்பில் அவன் கண் மூடி இருக்க , அந்த தூக்கத்திலும் அவன் ஸ்பரிசம் உணர்ந்தவள் “அத்து ஒரே ஒரே இங்கிலீஷ் கிஸ் கொடேன்..நானும் 2 வருசமா கேட்குறேன் மதிக்கவே மாற்ற” என கனவில் என நினைவுலகத்தில் பேச..

ருத்ரனுக்கு நிறைய சிரிப்பு , நெஞ்சு கொள்ளாத காதல் அவள் மேல் பொங்கியது..


“ என் நிலா குட்டி" என செல்லம் கொஞ்சி அவளை பார்த்து இருந்தான் “


உணர்வான்…
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்..

செல்லம்ஸ்..

ரொம்ப நாளா எழுதாம இருந்த உணர்ந்தேன் உன்னாலே கதையும் தூசி தட்டி எழுத ஆரம்பிச்சிட்டேன்..

இதோ அடுத்த அத்தியாயம்..படிச்சிட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ல ஒரு சூ சொல்லிட்டு போங்க..

இந்த கதையோட அத்தியாமும் வாரம் ஒரு முறை பதிவு செய்யப்படும்..

காதல் இல்லா காதல்,உணந்தேன் உன்னாலே கதை இரண்டும் எழுத எடுத்தாச்சி..

எந்த தடங்கலும் வராமல் எழுதனுன்னும் ,கற்பனைக்கும் எந்த பங்கமும் வர கூடாதுன்னு நான் கடவுளை வேண்டுகிறேன்.. நீங்களும் உங்க இஷ்ட தெய்வத்தை எனக்காக வேண்டிகோங்க

இப்படிக்கு

மிளாணிஸ்ரீ
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ந்தேன் உன்னாலே 4 :


13701


மறுநாள் காலை தேர்தல் நாள் நாடே சுறுசுறுப்பாக காணப்பட்டது…அதும் நாகப்பட்டினம் தொகுதி இன்னும் சற்று கூடுதல் பரபரப்புடன் காணப்பட்டது.. வாக்கு சாவடிகளும் ,வாக்கு இயந்திரங்களும் மக்கள் கூட்டத்தால் விழி பிதுங்கி நின்றது…சாவடிகளில் இருந்து 100 மீட்டர் இடவெளியிலே மக்கள் தடுக்கப்பட்டு வரிசையில் அனுப்பப்பட்டனர்..


ஊரின் இளசுகள் ,பெருசுகள் என அனைவரும் வெள்ளை வேட்டி சட்டையில் தங்கள் கட்சியின் சின்னத்தை குத்திக்கொண்டு வரும் போகும் மக்களை எல்லாம்” ……..சின்னதுல போட்டுடுங்க பெரியப்பா”, “அத்தாச்சி மறக்காம அண்ணன் சின்னதுல ஒட்டி போட்டுடுங்க” , “மதனி நம்ம தான் மறுபடியும் ஆளும் கட்சி பார்த்து எல்லாம் செஞ்சிக்கலாம் நம்ம தலைவருக்கு ஒட்டு போட்டுடுங்க” என ஒவ்வொரு 100 மீட்டர் தொலைவில் உள்ள மூலைகளும் சத்ததால் அலறியது…


ஒரு பக்கம் ஆண் குடிமகன்களுக்கு எல்லாம் சரக்குக்கான டோக்கன் வழங்கப்பட்டது , இன்னொரு மூளையில் இளசுகளுக்கு மொபைல் போனிற்கு 6 மாத ஆன்லிமிட்டேட் ரீசார்ச் செயப்பட்டு கொண்டு இருந்தது, ஊரின் பெண்களுக்கு ஏற்க்கனவே தங்க நாணயம் கொடுக்கப்பட்ட லஞ்சதற்கான எல்லா வேலைகளையும் சகஜோதியாக நடந்து கொண்டு இருந்தது…எல்லாமே ருத்ரனை எதிர்த்து போட்டி போடும் ஆளும் கட்சி மந்திரியின் வேலையே…ருத்ரனின் பக்கத்திலிருந்து ஓட்டுக்கு என்று ஒரு ரூபாய் செய்யவில்லை..அவனின் பட்டுவடாக்கள் எல்லாம் , அந்த சுற்று பட்ட ஊரில் பள்ளிகூடங்களாகவும் , நூலகங்களாகவும், எண்ணில் அடங்கா ஏழை திருமணங்களாகவும் ,எண்ணற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பாகவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது..


ருத்ரன் தொகுதி மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்றுதான் இருந்தார்கள் ,ஆனால் ருத்ரனின் வலது கை அருண்தான்” எல்லாம் நம்ம காசுதான் பணத்தை வாங்கிக்கிட்டு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு ஒட்டு போடுங்க” என “ எப்படிப்பா பசுபால்ல சத்யம் வாங்குறனுவோ, வாங்கிட்டு மாத்தி ஒட்டு போட்டா,சாமி குத்தம் ஆகாதா” என்க ,


“அட அப்பாயி ,அவனுங்க எல்லாம் அவளோ யோக்கியம் இல்லை அவனுக்களுக்கு உண்மை சத்யம் பண்ண, சத்யம் சக்கரை பொங்கலு ன்னு எத்துணை வேணா பண்ணலாம் அதெல்லாம் நம்ம ஆத்தா மகமாயி கோபபடமாட்டாள், “ என அதை இதை சொல்லி எல்லா இலவசங்களையும் வாங்க செய்துவிட்டான்..


அருண் ,ருத்ரனின் மெய்காப்பாளன், அவனைவிட இரண்டு வயது சிறியவன், அப்படியே கிராமத்து கலையில் கரு கரு கருவென்று அம்சமாக இருப்பவன் ருத்ரனை விட ஒரு பிடி உயரம் குறைவு..ருத்ரன் எள் என்று சொன்னால் எண்ணெயாய் மட்டும் இல்லாமல் சுட்டு போண்டா வடையாய் எடுத்து கொண்டுவரும் ரகம்..ருத்ரன் மருத்துவமனையில் பனியுடன் இருக்க தேர்தலில் முக்கால்வாசி வேலைகளை இவனே தான் செய்வான்..

பெரிதாக.எந்த ஆசையும் இல்லாதவன் இவனின் அதிகபட்ச எதிர்பார்ப்பெல்லாம் பத்தாவது மட்டுமே படித்த தன்னை அவனின் குண்டு கல்பனா MCA திரும்பி பார்ப்பதே..அந்த கதை ஒரு பெரும் கதை அப்பறம் பார்க்கலாம்..


ஆளும்கட்சியும் வெற்றி பெற்று விடலாம் என மிதப்பில் இருக்க ஆனால் ஒட்டு முழுவதும் என்னவோ ருத்ரனுக்குதான் விழுந்தது…சூர்யாவும் தன் பங்கிற்கு காலையிலேயே பனிநிலவிடம் சில வேலைகளை செய்துவிட்டதாலும்.ஆளும் தரப்பு நிம்மதியாக இருந்தது…

சூர்யாவிற்கு தெரியும் நாம் பனிநிலவிடம் மிரட்டிக்கொண்டு இருக்கும் விஷயம் ருத்ரனுக்கு ஒரே பொருட்டே இல்லை என்று ,இருந்தும் பனியை வைத்து முடிந்து அளவு அவன் நிம்மதியை குழைக்க நினைத்தான்..


ஏன் என்று தெரியாத வெறுப்பு ருத்ரனின் மேல் சூர்யாவிற்கு, அழகு,படிப்பு, திறமை, மரியாதை, பணம் எல்லாம்வற்றிலும் ஒரு மடங்கு அவன் அதிகம் என்பதில் நிலைகொள்ள ஆத்திரம் அதுவும் தான் விரும்பிய பெண்ணும் அவன் மேல் பித்தென சுற்றி திரிவது அவனை கொலைவெறிக்கே ஆள் ஆக்கியது…


இங்கு ஒட்டு மொத்த தொகுதி மக்களின் வாயில் நல்லப்படியாவும், எதிர் கட்சி,ஆளும் கட்சி என அனைவர் வாயிலையும் திட்டியபடியும் அரைப்படும் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ கேண்டிடேட் ருத்ரன் MBA MS மருத்துவமனை கட்டிலில் தூங்கிகொண்டிருந்தான்..


இரவு அவளை பார்த்தபடியே வெகுநேரம் அமர்ந்து இருந்த ருத்ரன் கால் மறத்து போகவே அங்கு உள்ள சோபாவில் படுக்கலாம் என்று நினைத்தவன் பின் என்ன நினைத்தானே நிலாவை சற்று தள்ளி படுக்க வைத்துவிட்டு அவளுடன் கட்டிலிலே படுத்துவிட்டான்..விவரம் தெரிந்த நாள் முதலே இப்படி யாருடன் படுத்து இல்லை, மிகவும் பிரைவசி பார்ப்பவன், ஒரே ஒரு முறை, ஒரு வருடத்திற்கு முன் பனிநிலாவால் கடத்த பட்டபோது அவளுடன் ஒரு அறையில் தங்கி இருக்கிறான்..அதன் பின் இப்பொழுதுதான்…


அவளை தொட்டு ஆள பார்க்க முதல் நாளிலிருந்து மனம் ஆளாய் பறந்தாலும் அவளின் காதலை சோதிக்கவே நினைத்தான்..காதலை பெண்கள் சொன்னால் காலம் காலாமாக ஆண் சமூகம் இப்படிதானே செய்யும் அதனால் இரண்டு வருடமாக சோதியோ சோதி சோதித்து கொண்டு இருந்தான்..அதில் இவனின் ஆண்மையை அதிகம் பாதிப்புக்குள்ளாகும்..அப்படி ஒரசோ ஒரசு என்று ஒரசியோ தீ மூட்டிவிடுவாள்…


இப்பொழுது ஒன்னும் தெரியாத பிள்ளை போல் முகத்தை வைத்துகொண்டு எங்கே அசைந்தால் காயம் எல்லாம் வலிக்குமோ என்று ரோபோ போல் உறங்கிக்கொண்டு இருந்தாள்..

அவள் கன்னத்தை கிள்ளி வாயில் போட்டுக்கொண்டவன் “என் ஜிலேபி” என அவள் கன்னத்தை தடவியபடி தூங்கிப்போனான் எல்லாவற்றையும் மறந்து..


மறுநாள் காலை 8 மணிக்கு சுருங்கி படுத்து இருப்பதால் எதோ வலி எடுக்க பனிநிலவின் தூக்கம் கலைந்து போக ,முழித்து பார்த்தால் ருத்ரனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்..


அவளுக்கு கண்ணே கலங்கிவிட்டது ..இது எல்லாம் அவள் வாழ்க்கையில் மிகவும் எதிர்பார்த்த பொக்கிஷ தருணங்கள் ,சூர்யா என்று ஒருவன் குறுக்கே வராமல் இருந்த வரையில் இவையெல்லாம் எப்படியும் நடத்தியே முடித்து இருப்பாள்,அந்த நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது,

என்று சூர்யாவை பார்த்து,அவனின் சொல்லிற்கு பணிந்து அவனை கல்யாணம் செய்ய முடிவு எடுத்தத்திலிருந்து இதெல்லாம் கானல்நீர்தான்..


இந்த இதத்தை சுகமாக அனுபவித்தவள் அவனின் நெற்றிவருடி “ அத்து ஒரு டேர்ட்டி கிஸ் கொடுடா” என்க ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பனுக்கு அவள் எங்கோ கிணற்றில் இருந்து பேசுவது போல தோன்ற புருவம் சுருக்கி தூங்கி போனான்..

இதமான சிரிப்புடன் அவன் நெற்றியில் முத்தம் வைக்க போக கரடியென அவளின் போன் அலறியது,அவனின் தூக்கம் கெடாமல் அதை எடுத்த அணைக்க போனவள் அதில் ஒளிரும் நம்பரை பார்த்து அதிர்ந்து போனாள்..

போன் செய்து இருந்தது சூர்யா
அதன் பின்னே பனிநிலவிற்கு நேற்று நடந்தது எல்லாம் நியாபகம் வர நிம்மதி.,இதம் எல்லாம் எங்கோ பறிபோனது.. அந்த பக்கம் சூர்யாவோ “ என்ன திருமதி பனிநிலவு ருத்ரன் நேத்து நான் சொன்னதெல்லாம் மறந்து போச்சி போல, சுகமா இருக்க மாறி இருக்கு என இடியென சிரித்தவன் , சில விசயங்களை சொல்லி “ இன்னைக்கு இதை நீ பண்ணல,நான் நேத்து என்ன சொன்னனோ அது நடக்கும் “ என போனை அணைக்க அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க அங்கே ருத்ரன் நிம்மதியாக தூங்க காண்டாகியவள்

“இங்க ஒருத்தி இவனுக்காக படாத பாடு பட்டா நீ தூங்கிட்டா இருக்க “ என அவனின் இடுப்பை நோக்கி ஒரு உதை உதைக்க ருத்ரன் உருண்டு கொண்டு தரையில் பொத்தென்று விழுந்து அலறி அடித்துக்கொண்டு எழ நெற்றியில் அடிப்பட்டதால் தேய்த்து கொண்டே “என்னடி அரைகிறுக்கி “ என கத்த

“யாரு கேட்டுடா என் பக்கத்தில வந்துபடுத்த பன்னி “என அவளும் கத்த..”சரி சரி ரொம்ப சீனா போடாத ,நாளைக்கு வேணும்னா நீ பார்த்து வச்சு இருக்கியே என்ன விட எல்லாத்துலையும் பெஸ்ட்டா ஒருத்தனா அவனை வந்து படுக்க சொல்றேன் “ என சொல்ல


அவள் அதுக்கும் அவனை ஏகத்துக்கு முறைக்க “முறைக்காம போடி போய் பிரஷ் ஆகிட்டு வா , வெளிய போகணும்,நான் என் ரூமில் போய் குளிச்சிட்டு வரேன்” என அவள் அருகில் சென்று அவள் கையை பிடிக்க செல்ல

“ நான் எங்கையும் வரல “ என்றும் அவளும் அசையாமல் அமர்ந்து இருக்க பனிநிலவை அலேக்காக அப்படியே தூக்கியவன் “ ரொம்ப முறுக்காம போ, புருஷன் எலெக்சன்ல நிக்கிறேன் , வந்து அத்தான் பேருல ஒரு ஓட்ட போடுவியா “ என அவளை பாத்ரூமில் இறக்கிவிட்டு கதவடைத்தான்…



பின் வெளியில் இருந்து “ அப்படியே எங்கும் ஓடலானு பார்க்காத , வெளி கதவு பூட்டி சாவி என்கிட்டதான் இருக்கு என சத்தமாக சொல்லி சென்றான்..”எருமை மாடு பன்னி, குரங்கு என அவனை திட்டி கொண்டே கிளம்பினாள்..பனிநிலவு..


ஒருவழியாக அவன் வெள்ளை வேஷ்டி சட்டையில் கிளம்பி வந்து கதவை திறக்க வெள்ளை நிற லூசான டாப், சிவப்பு நிற பல்லாசோ பேண்ட் என அவன் கட்டிய தாலியை மட்டும் அணிந்து அழகியென அமர்ந்து இருந்தாள் பனி நிலவு, பனி நிலவோ தன்னவனின் நிறைந்த ஆண்மை கலந்த அந்த கம்பீர அழகை விழி கொட்டாமல் ரசித்து கொண்டு இருந்தாள் அவன் அருகில் வருவது கூட தெரியாமல் அருகில் வந்தவன் போகலாமா என கையை நீட்ட அதில் சிந்தை கலைந்தவள்

“ அழகா இருக்க அத்து “ என இரு கைகளாலும் நெட்டி முறிக்க “ “அப்படியா “என அவள் நெற்றி முட்டியவன் “ நீயும் தான் நிலாகுட்டி “என அவள் நெற்றியில் இதழ் குவித்தான்..

போட்டுகொண்டு இருக்கும் சண்டையெல்லாம் இருவருக்கும் மறந்து போக இதமான மன நிலையில் அவன் நெஞ்சில் சாய்ந்து காருக்கு நடந்து போனாள்.. வெளியே சென்றவுடன் ருத்ரனின் படைபலம் சேர 5 காருடன் தன் ஏரியா வாக்கு சாவடிக்கு சென்றான். தன் பொண்டாட்டி செய்ய போகும் கிருக்குதனம் தெரியாமல்..


சிறிது தூரம் காரில் சென்றவுடன் “ ருத்து ரொம்ப நேரம் வயிறு சுருக்கி உட்கார முடியலடா,உன் மடில படுத்துகிறேன் “ என அவள் மடி சாய இளகி போனது அவன் மனம் “ சாரிடி, உன்னை அங்கவிட்டுட்டு நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோன்னு என்னால நிம்மதியா இருக்க முடியாது இங்க, ரொம்ப படுத்துறேனா” என வருத்ததுடன் கேட்க..

“ஆமா “ என விழி கலங்களுடன் தலை அசைத்தவள் கண்மூடி கொண்டாள் ,அவள் சொன்னது ஒரு அர்த்தத்தில்,அவன் புரிந்து கொண்டது ஒரு அர்த்தத்தில்..


40 சதவிகித ஓட்டு பதிவு முடிந்து இருக்க ருத்ரனின் காரு வாக்கு சாவடியில் நுழைய அங்கு உள்ள மீடியா மொத்தமும் அவன் காரை ஆக்கிரமிக்க பனிநிலவை மெதுவாக கை பிடித்து இறக்கி தன் தோளோடு பிடித்துக்கொண்டு அவர்களின் கேள்விகளுக்கு தயாராக, ஆனால் கேள்வி என்னவோ பனிநிலவிற்குத்தான்..



“மேடம் , ருத்ரன் உங்களை கட்டாய கல்யாணம் பண்ணிகிட்டதா சொல்றாங்க நிஜமா..,உங்க குடும்பத்தை கடத்திவச்சிக்கிட்டு மிரட்டுறதாவும் சொல்றாங்க நிஜமா,நீங்க தொழிலதிபர் சூர்யாவதா விரும்புறதா சொல்லறாங்க “ மாறி மாறி அவளை கேள்விகேட்க அவள் பதில் சொல்ல தயாரானாள்,


ருத்ரன் அவளை தாங்கி பிடித்து இருந்த கையை எடுக்கவும் இல்லை,அங்கு இருந்து நகரவும்மில்லை.. அவளை திருப்பி பார்க்கவும் இல்லை.ஒட்டு மொத்த சென்னல்களிலும் லைவ் ஓடி கொண்டிருக்க..பனி நிலவு வாயை திறந்தாள்…

உணர்வான்..
 
Status
Not open for further replies.
Top