All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஸ்ரீயின் " உணர்ந்தேன் உன்னாலே" கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ந்தேன் உன்னாலே 5 :

13786


கேள்விகள் எல்லாம் கத்தி போல அவளை நோக்கி பாய சூர்யாவின் அல்லக்கைகள் எல்லாம் அவனுக்கு சுட சுட செய்தியை சொல்லிக்கொண்டு இருந்தனர்…
பனிநிலவு பதில் சொல்ல ஆரம்பித்தாள் அவளுக்கா பொய்யயை அவிழ்த்துவிட தெரியாது நன்றாக வண்டை வண்டையாய் ஆரம்பித்தாள்..


“ஆமா, இவன் என்னை கட்டாயாபடுத்திதான் கல்யாணம் பண்ணான், கல்யாணம் நடக்குறதுக்கு முதல் நாளே மண்டபத்துக்கு அவனோட இருக்குற அருணை அனுப்பி மிரட்டுனான்..கல்யாணம் பண்ணா உன் குடும்பத்த கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுனான்..

நான் ஆசை பட்ட எந்த பெண்ணையும் அடையாம இருந்ததா சரித்திரமே இல்ல , கல்யாணம் உன்னை விட்டமாட்டேன் சொன்னான் அதான் நான் பயந்துகிட்டு விஷத்தை குடிச்சேன்..அப்படியும் என்ன கல்யாணம் பண்ணிட்டான் ,என் குடும்பத்தை கடத்தி..என் குடும்பம் இப்ப எப்பிடி என்ன நிலையில இருக்காங்க தெரியல,

“ உங்களை ஆசை மட்டுமே பட்டா கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லையே” என இன்னொரு நிருபர் கேட்க..

பனியோ “ அதெல்லாம் ஓட்டுக்காக நடத்துற நாடகம் , உண்மை.தெரிஞ்சா இவன் அரசியல் வாழ்க்கை என்னா ஆகுறது, இப்படி ஒரு கேவலமான பொறுக்கிக்குதான் நீங்க ஒட்டு போட போறீங்களா..இவன் எல்லாம் அமைச்சர் ஆனால் நாடு நாசமா போறது உறுதி…இவனுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க..உங்களை எல்லாம் வித்துதின்னுடுவான்”என பேசிக்கொண்டே போக


ருத்ரனின் உடல் விரைத்து முகம் உணர்ச்சிகள் தொடைத்து காணப்பட்டது..பெருமாள் “எதும் பேசாத எதும் பேசாத “என எவ்வளவோ அவளிடம் சைகையால் சொல்ல அவள் இம்மிக்கும் கேட்கவில்லை

மேலும் நிலா “ என் குடும்பம் இவன் கையில இருக்கிறதால , பணம் பலம் இருக்கிறதால,என்னால இவனை எதும் எதிர்த்து பண்ணமுடியல என்னை காப்பாத்துங்க” என இன்னும் பூம்புகார் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும் விஜயகுமாரி போல நடித்து தள்ளினாள்..அரை மணி நேரம் மூச்சிவிடாமல் பேசியதில்..


அவளுக்கு வயிற்றின் வலி வேற அதிகமா இருக்க…வயிற்றில் இருக்கும் சாப்பாட்டிற்காக பொருத்து பட்டிற்கும் டியூப் வேறு ஒரு மாறி அறுத்து அசௌகரியம் கொடுக்க பொறுத்து பொறுத்து பார்த்த ருத்ரன் “ஏன் டி இப்படி அலட்டிக்கிற, கொஞ்சம் அமைதியா பேசேன்”அவங்க இங்க தான இருக்காங்க” என அவளை ஆசுவாசபடுத்தியவன் ,


நிருபர்களை நோக்கி”உங்கள் எல்லா கேள்வியையும் அவள் உடம்பு சரி ஆனோன வச்சிகங்க,அதுவரை இப்ப உங்களுக்கு கிடைச்சி இருக்கசெய்திக்கு ஒரு கண், ஒரு காது ,ஒரு மூக்கு இல்லை ஓராயிரம் கண் காது மூக்கு வைச்சு பிளாஷ் நீயூஸா போட்டுக்கங்க”என கூற அருணை நோக்கி கண் காட்ட அவர்கள் இருவரையும் நோக்கி நொடியில் ஒரு பாதுகாப்பு வளையம் உருவாக யாரும்கிட்டவே நெருங்காதபடி ஓட்டு போட சென்றார்கள்..

ஒட்டு போட சென்றவள் வெளியே அவனை கழுவி ஊற்றியதன் எந்த அடையாளங்களும் இன்றி அவனின் சின்னத்திற்கு ஓட்டை போட்டு விட்டு அங்கு இருக்கும் அவனின் போட்டோவிற்கு ஒரு பறக்கும் முத்ததை கொடுத்தவள் இழித்தபடியே வெளியே வந்தாள்..


அதற்குள் பத்திரிக்கைகாரர்கள் ருத்ரன் சொன்னது போல பனிநிலவின் வார்த்தைகளுக்கு ஓராயிரம் யூகங்கள் வகுத்து செய்தியை கடத்த , சூர்யா எதிர் பார்த்தது போல அவை ஓட்டு பதிவுகளை கொஞ்சமே பாதிக்கவே ஆரம்பித்தது…


ஓட்டு பதிவு முடியவே அருண், பெருமாள், ருத்ரன் பனிநிலவு என அனைவரும் ருத்ரனின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.. கல்யாணதிற்கு முன் அந்த வீட்டின் மூலை முடுக்கு வரை அவள் சுற்றிவந்தாலும் கல்யாணம் முடிந்து முதல் முதலாக அங்கே செல்கிறாள், அவனுக்கு எதிராகவே அத்தனையும் செய்து இப்படி அவனுடனே வருவதை அவர்கள் வீட்டார்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ தெரியவில்லை..

அதுவும் ருத்ரனின் அம்மா அப்படியே முதல் மரியாதை வடிக்கரசி கேரக்டரை ஒத்தவர்கள், ருத்ரனின் அப்பா பெரிய்யாவை சமாளித்துவிடலாம், எதார்த்தத்தை புரிந்துகொள்ளும் மனிதன்..


அவளின் தங்கை நந்து சின்ன பெண் ,ருத்ரனின் 15 வயதில் பிறந்தவள், பெண்ணப்பிள்ளை வேண்டும் என்று வரம் இருந்து பிறந்தவள் ,இப்பொழுதுதான் பத்தாம்வகுபு செல்ல போகிறாள். அண்ணி என சொல்ல சொன்னாலும் “பனி அக்கா பனி அக்கா” என அவளையே சுற்றிவருபவள்

அவன் அம்மாவை தவிர எல்லாரையும் சமாளித்துவிடலாம் எனவே தோன்றியது.. பனி நிலவிற்கு,

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வாழ்க்கையே,இன்னும் சூர்யா என்னென்ன மிரட்டல்கள் இடப்போகிறானோ..அதற்குள் என் அத்துவிடம் ஆதி அந்தமாய் கலந்துவிட்ட வேண்டும் என யோசித்த படியே வந்தாள்..

பனி நிலவுக்கு இப்பொழுது நிருபர்களிடம் சொன்னதை பற்றி எந்த கவலையும் இல்லை, ருத்ரனை பற்றி முழுதாக தெரிந்தவர்கள் யாரும் இவள் வாய் வார்த்தையாய் சொன்ன எதையும் தக்க ஆதராம் இன்றி நம்பமாட்டார்கள்..பத்தில் மூன்று பேர் நம்ம வாய்ப்பு உள்ளது ,அது பெரிதாக ஒன்றும் ஓட்டை பாதிக்காது என்று நினைத்தாள்..

சூர்யாவின் திட்டம் எல்லாம் விரலுக்கு இறைத்த நீர் என்று அவனுக்கு புரியவில்லை, “இந்த முறை நீ நிச்சயம் என்னிடம் தோற்றுபோவாய் ருத்ரன்” என கொக்கரித்து கொண்டு இருந்தான் அவனின் அறையில்..


எதை எதையோ யோசித்தபடியே வந்த பனி நிலவுக்கு தன் குடும்பத்தின் நியாபகம் வர அதை கேட்க ருத்ரனின் பக்கம் திரும்ப அப்பொழுதுதான் அவர்களின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்..

அருண் “ அண்ணா , பனி பண்ணி வச்சி இருக்க வேலைக்கு,கண்டிப்பா பூலிங் சஃபர் ஆகும் அண்ணா, இப்பதான் நம்ம ஆளுங்க கால் பண்ணாங்க , உங்க நியூஷ்தான் டாக் ஆப் தே மீடியாவாம்,ஹை டி.ஆர். பி “ என கூற..


பெருமாளோ கோபமாக பனியின் தலையில் வலிக்க கொட்டியவன் ” கழுசட கழுசட மில்லி கிராம் அளவாவது உனக்கு அறிவு இருக்கா,உனக்கு அவர் மேல எதும் கோபம் இருந்தா வீட்டில வச்சி திட்டு, இப்படியா அவன் இவனு பப்பிள்கா திட்டி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லுவ ” என அவளை நோக்கி திட்டியன்


“எல்லோரும் சொல்ற மாறி பணத்துக்காகத்தான் எல்லாம் பண்ற போல”என வார்த்தையை விட

சொன்ன செய்தியை விட சொன்னது பெருமாள் என்றது அவளுக்கு அதிக காயத்தை ஏற்படுத்த அது அவளது கோபத்தை அதிகபடுத்த “ஆமாடா பணத்துக்காகத்தான் பன்றேன், இன்னும் பண்ணுவேன், பணம் கொடுத்து இவனை கொலை பண்ண சொன்னா கூட பண்ணுவேன்டா குட்டி யானை என்ன பண்ணுவா “ என கத்தியவள் ,


கத்தியாதால் குடல் பகுதி வலி எடுக்கவே “ ஸ்ஸ்..”என தாங்க முடியாமல் இயலாமை பொங்க”விஷம் குடிச்சிட்டு பிழைச்சி இருக்கக்வே வேண்டியது இல்லை, ஒரே அடியா செத்து இருக்கலாம், ஒவ்வொரு நிமிசமும் நரகமா இருக்கு “ என எல்லாவற்றயும் யோசித்து சொன்னவள் காரின் ஓரமாய் சுருங்கி போனாள்..


ருத்ரனோ “ ஏண்டா “என பெருமாளை கடிந்தவன் அவளை அள்ளி நெஞ்சோடு போட்டுக்கொண்டு “ உனக்கு என்னை கொல்லனுனாலும் தாராளமா கொன்னுக்கோ, இன்னும் என் பேர அசிங்கபடுத்தனுனாலும் படுத்திக்கோ, , தயவு செய்து கத்தி பேசாதா, காயம் சுத்தமா குணம்.ஆக ஆறு மாசம் ஆகுமாம் உன்னை நீயே வருத்திகாதடி பிளீஸ்” என அவள் தலையையும் வயிரையும் இதமாக தடவிக்கொடுக்க எதும் சொல்லாமல் அவனுள்அமிழ்ந்து போனாள்..


பெருமாளுக்கு மிகவும் வருத்தம் ஆகிவிட்டது அவளை பற்றி எல்லாம் தெரிந்தும் இப்படி பேசி விட்டோமே என்று..அருணை நோக்கி ருத்ரன் “தேர்தல் தோற்று போனாலும் எனக்கு பிரச்சனை இல்லைடா, மக்களுக்கு நல்லது செய்ய கூடுதல் பவரும்,அடையாளம் தேவை பட்டது, அதுவும் நீ அப்பா எல்லாம் போர்ஷ் பண்ணினதாலத்தான் நான் சரி சொன்னேன் , இல்லனாலும் என் சக்தி முடிந்த நல்லதை நான் மக்களுக்கு செய்றேன், தோற்ற தோத்துட்டு போறேன் விடு.


ஆனால் இதை காரணமாவச்சி இனி யாரும் நிலாவை திட்டவே ,குறை சொல்லவோ கூடாது என சாதரணாமாக ஆரம்பித்து கோபமாக முடித்தான்…பனி நிலவோ சொகுசாக அவனின் வருடலில் தூங்கிகொண்டு வந்தாள்..


ருத்ரனுக்கு அவள் செய்வதன் பின்னணியில் பெரிதான காரணம் எதும் இருக்கும் என்றோ, நல்லத்துக்காகத்தான் இருக்கும் என்றோ, எதையும் யோசிக்கவில்லை,மாறாக அவள் மேல் உள்ள காதல் அவள் கொலையே செய்தாலும் தன்னுடன் இருந்து தன்னை செய்யட்டும் என ஒரு அசாதரான காதலனாக மட்டுமே யோசிக்க வைத்தது,

தன் உயிரை காப்பாற்றிக்கொண்டு அவளை இன்னொருவனின் மனைவியாக பார்ப்பதெல்லாம் அவனால் அறவே முடியாது..என்ன நடந்தாலும் நடக்கட்டும் சமாளிப்போம் என்றே இருந்தான்..

வீடு வர வலியால் இப்பொழுதுதான் கண் அயர்ந்தவளை எழுப்ப மனமின்றி தூக்கியபடியே வர ஏற்கனவே அருணின் அறிவிப்புபடி, சந்திரா, பழனிசாமி,நந்து, பனிநிலவின் பெரியப்பா என அனைவரும் வாசலில் ஆரத்தியுடன் காத்திருக்க..

சந்திராவிக்கோ தன் பையனின் செய்கையை பார்த்து ஏகத்திற்கும் கோபம் “ அடேய் மவனே இந்த பொண்டாட்டியையே இந்ததாங்கு தாங்குற ,கொஞ்ச.நல்லவளா இருந்தா அவ்வளோதான் “என ஆரத்தி எடுக்க ருத்ரன் சிரித்தபடியே நின்றான்..

சந்திரா கொஞ்சம் பட படவென்று மனதில் பட்டதை பேசிவிடும் ரகம்..எதையும் தூக்கி சுமப்பது கிடையாது,கொஞ்சம் முன் கோபம் வரும், நல்லவர், கெட்டவர் என என எந்த வகையிலும் சேர்க்க முடியாதவர் அவர்,

ஆர்த்தி எடுத்துவிட்டு இருவர் நெற்றியிலும் பொட்டை வைத்தவர் ஆர்த்தியை வெளியில் கொட்ட சென்றுகொண்டே “ பெரியவனே முதல் தர கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம வீட்டுக்குவறாள் , உன் பொண்டாடியை சுமந்தபடியே போகாம, ஊர்வலத்தை செத்த நிறுத்திட்டு எழுப்பி வலது காலை உள்ள வச்சி, சாமி விளக்கேத்திட்டு தூக்கிட்டு போ “என நொடித்துவிட்டு செல்ல..


ருத்ரன் சிரித்துக்கொண்டே அவளை எழுப்பியவன் தாய் சொன்னபடி செய்ய சொல்ல உச்ச தூக்கத்தில் என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம், யார் இருக்கிறார்கள் என எதையும் கவனிக்காமல் ருத்ரன் செய்ததை பொம்மையென செய்தவள் அவன் காட்டிய அறையில் மீண்டும் சுருண்டு கொண்டாள்..


பெருமாள் ,தங்கராசு என இருவரும் வீட்டுக்கு கிளம்ப அருண் மட்டும் காரணமே இல்லாமல் ருத்ரனின் வீட்டைசுற்றி வந்தான், இந்த அண்ணன் நம்மளோட ட்ரங்கு பெட்டியை எங்க வச்சி இருப்பாரு,நானும் 10 நாளா அலசுறேன் ,,இந்த குண்டூச பார்க்கவே முடியல “ என மனத்துக்குள் பேசிக்கொண்டே வீட்டை அலசிக்கொண்டே வர ருத்ரனின் கண்ணின் மாட்டிவிட்டான்…

“என்ன டா,வெளில அவ்வளோ வேலை இருக்கு, இங்க சுத்திட்டு இருக்க என அவன் என்ன தேடுகிறான் என தெரிந்தே கேட்க “ஒன்னும் இல்லை அண்ணன் இதோ போறேன்”என ஒரே ஒட்டமாய் மறைந்து போனான்.. ருத்ரனுக்கு சிரித்து கொண்டே தன் மனைவியின் தூங்கும் அழகை ரசிக்க சென்றுவிட்டான்

அந்த பெரிய வீட்டின் வட மூலையில் உள்ளதுதான் மீராவின் அறை,தாய் தந்தைக்கு ஒற்றை மகள், பெரிதாக சொத்து வசதி இல்லை என்றாலும் இருக்கும் சொத்து இவள் ஒருத்திக்கு கொஞ்சம் அளவிற்கு அதிகமானதுதான்..வாய் இல்லாத பூச்சி, அடித்தால் கூட வாங்கி கொண்டுவரும் ரகம் ,பத்து வார்த்தை பேசினால் ஒரு வார்த்தையில் தேவையான பதிலை தந்து நகர்ந்துவிடுவாள்…


இப்பொழுது கையில் தன் காதலனின் போட்டவை வைத்து அதை ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறாள்,இவள் அந்த சீதைக்கு நிகரான கற்பொழுக்கம் உள்ளவள்தான்..ஆனால் அவள் கையில் வைத்திருக்கும் அவள் காதலன் ஸ்ரீ ராமனா என்றால் நூறு சதவிகிதம் இல்லை,இது மீராவிற்கே தெரியும் இருந்தும் காதல் கொண்ட மனம் இதை எல்லாம் எங்கே கேட்பேன் என்கிறது அவனையே உயிர் என உருக செய்கிறது..

இப்பொழுது கூட இவள் காதலை சொன்னாள் ஒரு இரவிற்கு வேண்டுமானால் காதலியாய் இரு என கூசாமல் கேட்பான்..அந்த கேடுகெட்டவனுக்காகதான் இந்த மீரா காத்துக்கொண்டுஇருக்கிறாள்..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ந்தேன் உன்னாலே 6 :

13905




தேர்தல் எல்லாம் முடிந்து ஊரே நல்ல அமைதி…சல சல என்ற பிரச்சாரங்கள் முடிந்து…இருட்டுகுள்ளும் , யாருக்கும் தெரியாமலும், வீட்டின் கொல்லை புறங்களிலும் , நடந்த பட்டுவடாக்கள் எல்லாம் முடிந்து , மேலிடம் கொடுத்த ஓட்டுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் ஒரு ஒருவர் ஒருவரிடமாக தரவுமாறி ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்த தரவுகாரரர்கள்( அதாங்க கட்சியின் அல்லக்ககைகள்) எல்லாம் தங்களிரிக்கான லாப கணக்கை சரிபார்த்து கொண்டு இருக்க , மின்னணு பெட்டிகள் எல்லாம் அதற்கான இடத்திற்கு புலம் பெயர்ந்து கொண்டு இருந்தது…


ஓட்டு போட்டுவிட்டு வந்து படுத்து தூங்கிய நிலா பொழுது மங்கி நன்றாக விளக்கு வைக்கும் நேரம்தான் சிறிது முண்டினாள்…சிறிது நேரம் அப்படியும் இப்படியும் புரண்டுபடுத்தவள் மெத்தையின் அதீத மென்மையில் கண் முழித்து பார்கையில்தான் நினைவே வந்தது அவள் ருத்ரனின் அறையில் இருப்பதை..

வெடுக்கென்று எழுந்து அமர்ந்து ருத்ரனை தேட அவனின் சுவடு எதுவும் தெரியவில்லை ..நமக்கு வாய்த்த ஒரு அடிமையும் இல்லையே என மனம் நொந்து போக, யோசித்து கொண்டே அரைமணி நேரம் அமர்ந்து இருந்தாள்…
அவனுக்கு கால் செய்யலாம் என்றால் அதற்கும் வழி நிலை இல்லை

இந்த வீட்டிற்கு வராதவள் இல்லை திருட்டுத்தனமாக தூங்கும் ருத்ரனுக்கு கோடி முத்தங்கள் தராதவள் இல்லை.. உரிமை இல்லாமல் இருந்ததை விட ,இந்த உரிமை உள்ள தன்மை அதிக அசௌகர்யத்தை கொடுத்தது..
வெளியில் சென்றால் மெட்டி ஒலி நாடகத்தில் வரும் ராஜத்தை ஒத்த அத்தையிடம் வேறு மல்லுக்கு நிற்கு வேண்டும் இறைவா வலிமை கொடு என கடவுளை வேண்டிக்கொண்டவள்..

இன்னும் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருப்பது என சற்று முகம் கழுவி விட்டு வெளியில் செல்லலாம் என தோன்ற ,மெதுவாக சென்று ருத்ரனின் கப்போர்டை திறந்து துண்டு எடுக்க சென்றவள் அங்கு இருக்கும் தன் ஆடைகளை கண்டு மகிழ்ந்து போனாள்.. “ அத்து குட்டி”என கட்சி ஆபிசில் இருக்கும் அவனுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்தவள் சற்று தொழ தொழவென்று இருக்கும் ஒரு நைட்டியை முகம் கழுவி மாற்றிக்கொண்டு மெதுவாக வெளியில் செல்ல

ருத்ரனின் தங்கை, மாமனார் மாமியார் என மூவரும் வீட்டு காலில் அமர்ந்து இருக்க மெதுவாக அடி வயிற்றை பிடித்துக்கொண்டு அவர்கள் அருகில் செல்ல ருத்ரனின் தங்கை “ ஏய் பனி அக்கா” என அவளின் அருகில் சென்று கையை பிடித்துக்கொள்ள நொடித்து கொண்டு திரும்பிய சந்திராவோ “இன்னும் என்னடி அக்கா,அதன் உன் அண்ணன் கையால தாலி வாங்கி அவனுக்கே வேட்டு வைக்க பாக்குறாளே, அண்ணினே கூப்பிடு”என அதட்ட


நந்துவும் அவரின் அதட்டலில் மிரண்டு “ ம்ம்ம்ம்” , என்றவள் “வாங்க அண்ணி”என்னும் போதே தொண்டை கமரி அழுகையே வந்துவிட்டது நந்தினிக்கு ..அப்படி ஒரு குரல் அவருக்கு ,நந்தினியை அணைத்து பிடித்தபடியே மெதுவாக வந்து சோபாவில் அமர, சந்திராவோ நொடித்து கொண்டு எழுந்து சமையல் அறை செல்ல” இது எல்லாம் எனக்கு எம்மாத்திரம் “என்பது போல அமர்ந்து இருந்தாள் நிலா,

பழனிசாமியோ “ இப்ப உடம்பு எப்பட்டிம்மா இருக்கு”என கேட்க.”.பரவாயில்ல பெரியய்யா”..என

“உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியலமா, உனக்கு ருத்ரனா எவளோ இஷ்டம்னு எனக்கு தெரியும், ஏன் சூர்யாவோட கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட, அன்னைக்கு வந்து ஏன் ருத்ரனா பத்து நாள் வெளியூர் அனுப்ப சொன்ன எனக்கு எதும் புரியல..

ஆனால் ஏதோ காரணம் இருக்குன்னு புரியுது..எதா இருந்தாலும் ருத்ரன் கூட மனசுவிட்டு பேசுமா அவனால சரி செய்ய முடியாதது எதும் இல்லை பக்குவமா பார்த்துப்பான் என கூற “சரி” என்பதாய் தலையை ஆட்டிவிட்டி அமைதியாக அமர்ந்து இருந்தாள் ,அவள் மண்டை ஆட்டுவதை பார்க்கும் போதே தெரிந்தது அவள் இதை கேட்க போவது இல்லை”என்று..இதற்கு மேல் அவளிடம் எதும் பேசமுடியாமல் அமைதியாக இருக்க.

.நந்தினியிடம் “நந்து கிச்சன் போகலாமா எனக்கு டீ சாப்பிடணும் போல இருக்கு”என ..”எதுக்கு உன் புருஷன் வந்து என் பொண்டாட்டி உடம்பு முடியாதவை அவளுக்கு எதுக்கு டீ கொடுத்தீங்கன்னு எங்களை கத்தவா “என கட்டை குரலுடன் பாலுடன் வந்து சேர்ந்தார் சந்திரா..”வயிறு முழுக்க புண்ணு இருக்குறவ டீ லா சாப்பிட கூடாது ,இந்தா இந்த தேங்காய் பாலை குடி” என கொடுத்தார்..அவரின் அன்பு பாசம் கூட இப்படி அதட்டல் வழியில்தான் இருக்கும்..
“ இல்லை மேடம் வேண்டாம் ,நானே போய் டீ எடுத்துக்குறேன்” என நகர போக..” ,”இன்னும் எதுக்கு மேடம் சொல்ற ,உனக்கு இங்க நான் என்ன கூட்டுற வேலையா கொடுத்து இருக்கேன், அப்படியே கொடுத்தாலும் நீ பார்த்துட்டுவியா என்ன, எனக்கு பிடிக்கலானாலும் பரவாயில்லை , அத்தைன்னு கூப்பிட்டு, “ என பிடிக்கவில்லை என்றாலும் மருமகளாய் ஏற்று கொண்டதை கோபமாகவே சொன்னார்..பழனிச்சாமி அர்த்தமாய் சிரிக்க

பனிக்கு அதெல்லாம் புரியவில்லை “இல்லை நான் மேடம்னே கூப்பிடுறேன், இன்னும் ஒருவாரம் கூட நான் இங்கே இருக்கமாட்டேன்,அதுக்கு அத்தை சொன்னா என்ன மேடம் சொன்னா என்ன, உங்க பையன் என்னை கட்டாய படுத்தி கூப்பிட்டு வந்து இருக்கான்” என..


“ எங்க ராசாவை அவன் இவன்னு சொன்ன பள்ளு எகிறிடும்” என சந்திராவின் அம்மா , ருத்ரனின் அம்மாச்சி அவரின் அறையில் இருந்து வர..பனிக்கு இந்த கொடுமையிலும் கூட ஒரே சிரிப்பாக இருந்தது ..அவன் இவன் சொன்னதுக்கே இந்த கிழவி இப்படி பேசுது நம்ம அவனை படுத்துற பாடு தெரிந்தா.. என மனதில் நினைத்தவள் அமைதியாக நின்று கொண்டாள்…



சந்திராவோ “ நீ ஒரு வாரம் இருந்தாலும், ஒரு வருஷம் இருந்தாலும் என் புள்ளை நினைச்சாதான் நீ அவனைவிட்டு போகமுடியும், இப்ப இந்த பாலை குடிச்சிட்டு ரூம்ல போய் ரெஸ்ட் எடு, என வழு கட்டாயமாக அவளுக்கு பாலை கொடுத்தவர்..அவ்விடம் விட்டு அகன்றார்..

பழனிச்சாமி,சந்திரா இருவருக்குமே படிப்பறிவு இல்லை, பழனிச்சாமிக்காவது வெளியுலக அறிவு கொட்டி கடக்க, சந்திராவிக்கு குடும்பம் மட்டுமே எல்லாம், அவர் குடும்பம் செய்யும் நாசுக்கு , எல்லோரையும் தன் சொல் பேச்சை கேட்கவைக்கும் ஆளுமை,குடும்ப சூழ்நிலையை கையாளும் விதம் என அவரின் அனுபவ அறிவிற்க்கு முன் எல்லாம் பழனிசாமியின் உலக அறிவு, ருத்ரனின் ஊராளும் திறமை எல்லாம் பூஜ்ஜியம்தான்..



அருண் ருத்ரனின் திருச்சி வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.”.இந்த அண்ணன் வரை வரை என்னை டிரைவர் வேலை பார்க்க வைக்குது , வேர யாராவது அனுப்பி அழைச்சிக்கிட்டு வர சொன்னா என்ன ,அப்படி யாரு அந்த முக்கியமானவங்க, “ என முனகி கொண்டே அந்த வீட்டிற்குள் நுழைய ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்த பனி நிலவின் அப்பாவும் ராதகிருஷ்ணனும்,அவளின் தாய் , அதாவது வளர்ப்பு தாய் மாதவியும் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க அருணிற்கு செல் எல்லாம் பூ பூக்க “ அய்யா நம்ம குண்டூஷ் இங்கதான் இருக்காளா,” என குதுகளித்தவன் சற்று முன் வரை திட்டிக்கொண்டு வந்த ருத்ரனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு கொண்டான்…



அவர்களை பார்த்து வந்த விஷயத்தை சொன்னவன் “ பார்வையில் வீடு முழுவதும் அலசினான் அவனின் குண்டம்மாவை,”நம்ம ஆளு இருக்குற சைசுக்கு எங்க நின்னாலும் துண்டா தெரியனுமே “ என கண்கள் அலைபாய


மாதவியே “ சரி தம்பி, போகலாம், கல்பனா கோவிலுக்கு போய் இருக்கா, வந்ததும் கிளம்பலாம், ஆமா ட்ரைவர் தம்பி நல்லா பெரிய கார் தான எடுத்துட்டு வந்து இருக்க”என அருணை பார்த்து கேட்க



“ உனக்கெல்லாம் வந்து வாழ்வு என்னை ட்ரைவர் சொல்ற”என வாய் வரை வந்து செய்தியை கண் முழுவதும் இல்லை முகம் காது மூக்கு என நிரம்பி வழியும் தன் குண்டூசுக்காக முழுங்கியவன் ஆம் என்று மண்டையை ஆட்டி வைத்துவிட்டு..


நீங்க ரெடியாகுங்க நான் போய் அவங்களை கூப்பிட்டு வரேன் என வெளியேறிவிட்டான்..ஒரு கிலோமீட்டர் தொலைவில் இரண்டு மூன்று கோவில் இருக்க “ எந்த கோவிலுக்கு போய் இருப்பா இந்த புளி மூட்டை “ என குத்து மதிப்பாக ஒரு கோவிலுக்குள் நுழைய அங்கே கல்பனா கோவில் பிரகார்த்தை சுற்றி கொண்டு இருக்க..அவளை பார்த்த படி அமர்ந்தான்..,"தெரியும் கோவில் அதிரும் போதே நீ இங்கதான் இருப்ப "என்று நினைத்துக்கொண்டு, கல்பனாவும் இவனை பார்த்துவிட்டாள்..



கல்பனா கொஞ்சம் இல்லை ,கொஞ்சம்.அதிகமான குண்டான உடல் அமைப்பை கொண்டவள் நன்றாக வாட்டர் பெட் மாதிரி எக்ஸ்ட்ரா லார்ஜ் உடை அணியும் அளவு உள்ளவள்..ஆனால் முகம் குழந்தை தனம் மாறாது அப்படியே இருக்கும்..அவளின் செயல்களும் அப்படித்தான்..அருணின் காதல் எல்லாம் அவள் காதில் கூட ஏறியது இல்லை,


அவளை பொறுத்த வரை அருண் படிக்காமல் ,அடி தடி என சுத்திக் கொண்டிருக்கும் ஒரு ரௌடி பய அவ்வளவே கூடவே ருத்ரன் உடன் இருக்கிறான் என தெரியும் அதை தாண்டி சில விஷயங்கள் பதிந்தாலும் அதை கண்டு கொள்ளா மாட்டாள்…


வழிபாட்டை முடித்துவிட்டு வர” “ஹாய் காக்காபி…” என அவளிடம் வம்பை ஆரம்பிக்க, “என் பேரு காக்க பீ இல்லை கல்பி, கல்பனா” என ஆயிரமாவது முறையாக சொல்ல “சரிடிகுண்டூஸ், உங்க மாமா உங்களை எல்லா வீட்டிற்கு அழைச்சிக்கிட்டு வர சொன்னார் “ என..

அக்காவை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் அவனின் குண்டூஷ் அடிபட்டு போக “ஏய் சூப்பர் வா வா, சீக்கிரம் போலாம் “ என அவன் கையை பிடித்து கொண்டு இழுத்து கொண்டு ஓடினாள்.. அருணோ “இன்னைக்கு உனக்கு நல்ல வாழ்வுதான் போ,கொடுத்து வச்ச நீ “என தன் கையிற்கு பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டே அவர்களை அழைத்து கொண்டு ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தான்..

இங்கே சூர்யாவோ அவனின் அலுவலக அறையிலிருந்து பத்தாவது முறையாக பனி நிலவின் செல்லிற்கு முயற்சி செய்து கொண்டு இருந்தான் போகவில்லை,அவள்தான் ஒட்டு போட்டு திரும்பி வந்து கொண்டு இருக்கும் போதே சிம்மை கழட்டி,சிம், போன் இரண்டையும் குப்பை தொட்டியில் போட்டு வந்துவிட்டாளே…ருத்ரனின் வீட்டிற்கும் அடிக்க முடியாது, அவனின் வீட்டிற்கு வரும் அனைத்து தொலைபேசிகளும் அவன் கட்டுப்பாட்டிற்கு கீழேவே..கோபம் தலைக்கு ஏற ,போனை போட்டு உடைத்தவன் தலைவலியில் சூழல் நாற்காலியில் அப்படியே அமர்ந்துவிட்டான்..




இப்பொழுது இருக்கும் மன நிலைக்கு அவனுக்கு மதுவின் மாதுவின் உச்ச பச்சை போதை தேவை பட, யாரை அழைக்கலாம் என யோசித்து கொண்டு இருக்க..

அனுமதி கேட்டு உள்ளே வந்தாள் மீரா, சூர்யாவை ஒரு தலையாக உயிராக காதலிக்கும் அபலை, அவன் துட்சாதனன்,அரக்கன் என தெரிந்தும் அவன் மேல் உள்ள காதலை குறைக்க முடியாமல் தடுமாறுபவள்…
 

Attachments

Status
Not open for further replies.
Top